text
stringlengths
0
2.93k
மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே
மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடி
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடி
மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடிக்குதடி
முதன்முறை என் விரல் பூக்கள்
பறித்தது தோட்டத்திலே
தலையணை உறையும் ஸ்வீட் ட்ரீம்ஸ்
பறித்தது தூக்கத்திலே
காலைத் தேநீர் குழம்பாய்
மிதந்தது சோற்றுக்குள்ளே
கிறுக்கன் என்றொரு பெயரும்
கிடைத்தது வீட்டுக்குள்ளே
காதலே ஒருவகை ஞாபக மறதி
கண்முன்னே நடப்பது மறந்திடுமே
வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித்
தலைகீழாகத் தொங்கிடுமே
ஓ உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடா
எடை குறையுதே தூக்கம் தொலையுதே
அய்யோ பைத்தியமே பிடிக்கிறதே
என் பேர் கேட்டால் உன் பேர்
சொன்னேன் பதட்டத்திலே
பக்கத்து வீட்டில் கோலம்
போட்டேன் குழப்பத்திலே
காதல் கவிதை வாங்கிப்
படித்தேன் கிறக்கத்திலே
ஓ குட்டிப் பூனைக்கு முத்தம்
கொடுத்தேன் மயக்கத்திலே
ஊ ஆ ...ஆ ஊ ஆ.... ஊ ஆ ரா....... ரா ரே
ஓ... காதலும் ஒருவகை போதைதானே
உள்ளுக்குள் வெறியேற்றும் பேய்போல
ஏனிந்தத்தொல்லை என்று தள்ளிப்போனால்
புன்னகை செய்துகொஞ்சும் தாய்போல
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடா
மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என்முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதிக்குதே உயிர் மிதக்குதே
அய்யோ இது எனக்குப் பிடிக்குதடா
எடை குறையுதே தூக்கம் தொலையுதே
அய்யோ பைத்தியமே பிடிக்குதடா
ஆ... ஆ....ஆ ஆ .. ஆ ஆ ...ஆ ஆ.....
தங்கமே உன்னத்தான்
சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்
உனக்கென்ன வேணும் சொல்லு...
உனக்காகதானே
பரபர பரபர பரபர பரபர பரபர பரபர பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட தொட பல வண்ணமாச்சி
இதுஒரு இது ஒரு ஒரு கண்ணாமூச்சி
இதயத்தினால் வானிலை அது மாறிபோச்சு...
உனக்காகதானே இந்த உயிருள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாள் என்றும் இல்லை
யாரென்ன சொன்னால் என்ன அன்பே..
உன்னோடு நானும் வருவேன்
ஒருமுரை ஒருமுரை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்..
மறுமுரை மறுமுரை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்...
உனக்காகதானே இந்த உயிருள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாள் என்றும் இல்லை
யாரென்ன சொன்னால் என்ன அன்பே..
உன்னோடு நானும் வருவேன்