text stringlengths 0 2.93k |
|---|
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே |
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே |
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு |
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு |
ஆரிரரோ இவர் யார் எவரோ |
பதில் சொல்வார் யாரோ |
(என்ன) |
கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ |
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ |
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ |
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ |
மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம் |
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும் |
யாரிவர்கள் இரு பூங்குயில்கள் |
இளங்காதல் மான்கள் |
(என்ன) |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
தள்ளிப் போகாதே.. |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
பச்சை வண்ண பூவே |
கல்யாண மாலை |
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே |
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் |
(கல்யாண) |
ஸ்ருதியோடு லயம் போலவே |
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே |
(கல்யாண) |
வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும் |
ஆனாலும் அன்பு மாறாதது |
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் |
பிரிவென்னும் சொல்லே அறியாதது |
அழகான மனைவி அன்பான துணைவி |
அமைந்தாலே பேரின்பமே |
மடிமீது துயில சரசங்கள் பயில |
மோகங்கள் ஆரம்பமே |
நல்ல மனையாளின் நேசமொரு கோடி |
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி |
சந்தோஷ சாம்ராஜ்யமே |
(கல்யாண) |
கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து |
பாடென்று சொன்னால் பாடாதம்மா |
சோலை மயில் தன்னைச் சிறைவைத்துப் பூட்டி |
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா |
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் |
காவல்கள் எனக்கில்லையே |
சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கு |
சிரிக்காத நாளில்லையே |
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும் |
மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே |
என் சோகம் என்னோடு தான்... |
(கல்யாண) |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
தள்ளிப் போகாதே.. |
எனக்கென யாரும் இல்லயே |
கேளடி கண்மணி |
கேளடி கண்மணி பாடகன் சங்கதி |
நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி |
ஆ...அ அ அ ஆ |
நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் |
ஓர் கதையை உனக்கென நான் கூற |
(கேளடி) |
எந்நாளும் தானே தேன் விருந்தாவது |
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான் |
இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா |
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான் |
கானல் நீரால் தீராத தாகம் |
கங்கை நீரால் தீர்ந்ததடி |
கால் போன பாதைகள் நான் போன போது |
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது |
(கேளடி) |
நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான் |
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா |
நான் வாழும் நேரம் உன் மார்போடுதான் |
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.