text
stringlengths
0
2.93k
தேடும் கண் பார்வை
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க (2)
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் (2)
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...
தேடும் கண் பார்வை தவிக்க...துடிக்க...
காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம்... இணைவோம்...
இனி நீயும் நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா...
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ...
தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க...
சாமிகிட்ட சொல்லி புட்டேன்
அது ஒரு காலம் அழகிய காலம்
உன் பார்வையில்
சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு
இரு விழியின் வழியே
பெ: இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறிடும் அணை மீறும் போது காவல் ஏது (விழி
ஆ: தொட்டில் இடும் இரு தேம்மாங்கனி
என் தோளில் ஆட வேண்டுமே
பெ: கட்டில் இசும் உன் காமன் கனி மலர் மாலை சூட வேண்டுமே
ஆ: கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு சேதி ஒன்று பார்க்கின்றேன்
பெ: கொஞ்சும் கிளி மஞ்சம் இடும்
தேதி சொல்ல போகிறேன்
ஆ: கார் கால மேகம் வரும் பெ:கல்யாண ராகம் வரும்
ஆ: பாடட்டும் நாதஸ்வரம் பெ: பார்க்கட்டும் நாளும் சுகம்
ஆ: விடிகாலையும் இளமாலையும்
இடை வேளையின்றி இன்ப தரிசனம் (விழி
ஆ: உன் மேனியும் நிலக்கண்ணாடியும் ரசம் பூச என்ன காரணம்
பெ: ஒவ்வொன்றிலும் உனை நீ காணலாம்
இதை கேட்பதென்ன நாடகம்
ஆ: எங்கே எங்கே ஒரே தரம் என்னை உன்னில் பார்க்கிறேன்
பெ: இதோ இதோ ஒரே சுகம் நானும் இன்று பார்க்கிறேன்
ஆ: தென்பாண்டி முத்துக்களா பெ:நீ சிந்தும் முத்தங்களா
ஆ: நோகாமல் கொஞ்சம் கொடு
பெ: உன் மார்பில் மஞ்சம் இடு
இரு தோள்களில் ஒரு வானவில்
அது பூமி தேடி வந்த அதிசயம் (விழி
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
ஓ இந்த காதல்
என்ன சொல்ல, ஏது சொல்ல...
விழிகளில் விழிகளில்
நிற்பதுவே, நடப்பதுவே
நிற்பதுவே, நடப்பதுவே,பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்றமயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே நீங்களெல்லாம
அற்பமாயைகளோ? உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ?
வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும்காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றெ பலநினைவும்
கோலமும் பொய்களோ?அங்கு குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?
காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே -நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதிலே உறுதிகொண்டோம் காண்பதெல்லாம உறுதியில்லை
காண்பது சக்தியாம் -இந்தக் காட்சி நித்தியமாம்
பேசுகிறேன் பேசுகிறேன்
வசந்த காலங்கள் கசந்து போகுதே
விழி மூடி யோசித்தால்
தோழியா என்
பூவே செம்பூவே உன்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்