text
stringlengths
0
2.93k
உனைப் பார்க்காத நாள்
பேசாத நாள்…
என் வாழ்வில்
வீண் ஆகின்ற நாள்..!
தினம் நீ வந்ததால்… தோள் தந்ததால்…
ஆனேன் நான்
ஆனந்தப் பெண்பால்..!
உயிரே ..!
எதுவரை போகலாம்..?
என்று நீ
சொல்ல வேண்டும்
என்றுதான்
விடாமல் கேட்கிறேன்…
தேன் முத்தங்கள்
மட்டுமே போதும்
என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்..
உன்போன்ற
இளைஞனை…
மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை…!
கண்டேன் உன்
அலாதித் தூய்மையை !
என் கண்பார்த்துப் பேசும் பேராண்மையை..!
பூங்காற்றே நீ வீசாதே..! ஓ ஓ ஓ…
பூங்காற்றே நீ வீசாதே…
நான்தானிங்கே விசிறி..!
சாமிகிட்ட சொல்லி புட்டேன்
யார் இந்த பெண்தான் என்று
உப்புகல்லு தண்ணீருக்கு
கூடமேல கூட வெச்சு
விளம்பர இடைவெளி மாலையில்
பாடல் : விளம்பர இடைவெளி மாலையில் படம் : இமைக்கா நொடிகள்வரிகள் : கபிலன் வைரமுத்துஇசை : ஹிப்பாப் தமிழாபாடியவர் : கிறிஸ்டொபர் ஸ்டான்லி,ஸ்ரீனிஷா ஜெயசீலன், சுதர்சன் அசோக்
+++++++++88888888888888+++++++++++
ஒளி இல்லா உன் மொழிகள்
விடை தேடும் என் விழிகள்
இமைக்காத நம் நொடிகள்
கெடிகார தேன் துளிகள்
அடி வாயார உன் காதல் நீ சொல்லடி
வாராத நடிப்பெல்லாம் வேண்டாமடி
மின்னஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பாதடி
கண் முன்னே உந்தன் எண்ணம் கூறடி
விளம்பர இடைவெளி மாலையில்
உன் திருமுகம் திறக்கின்ற‌ வேளையில்
என் நிறமற்ற இதயத்தில் வானவில்
அடி என்ன நிலை உந்தன் மனதில்
நான் உனதே அடி நீ எனதா?
தெரியாமல் நானும் தேய்கிறேன்
இல்லை என்றே சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்...
காதல் பூவை நான் ஏற்றுக்கொண்டால்
உன் காத்திருப்பு நிறைவாகுமே
காத்திருப்பு அது தீர்ந்து விட்டால்
நம் கால் தடங்கள் அவை திசை மாறுமே...
இவளின் கனவோ... உள்ளே ஒளியும்
இரவும் பகலும்... இதயம் வழியும்
வழியும் கனவு... இதழை அடையும்
எந்த காட்சியில்... அது வார்த்தையாகிடும்...
விளம்பர இடைவெளி மாலையில்
உன் திருமுகம் திறக்கின்ற‌ வேளையில்
என் நிறமற்ற இதயத்தில் வானவில்
அடி என்ன நிலை உந்தன் மனதில்....
நிலமெல்லாம் உன் தடமே
நிலவெல்லாம் உன் படமே
நிஜமெல்லாம் உன் நிறமே
நினைவெல்லாம் உன் நயமே....
மதுரம் கொஞ்சம் இளைஞன் நீயோ
மத‌மே இல்லா இறைவன் நீயோ
வயதை கடிக்கும் குழந்தை நீயோ
வரம்பு மீறலோ என்னை தொடரும் தூறலோ
நான் உனதே அடி நீ எனதா?
தெரியாமலே நானும் தேய்கிறேன்
இல்லை என்றே சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்....
நான் உனதே அடி நீ எனதா?
தெரியாமலே நானும் தேய்கிறேன்
இல்லை என்றே சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்...