text stringlengths 0 2.93k |
|---|
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே. |
ஓடும் நதியில் இலையைப் போலே நாட்கள் நகர்கிறதே |
இலையின் மீது நிறமின் ஒளியோ சூடாய் பொழிகிறதே. |
கனாபமே எனைக் கீறினாய் |
மழை மேகமே பிழையாகினாய். |
என் வாசலில் சுவராகினாய் |
மீண்டும் மறுத் தூண்டில் இடவாத் தோன்றினாய். |
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே |
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே. |
உலா உலா கல்லூரி மண்ணிலா |
உன் தீண்டல் ஒவ்வொன்றும் |
எனை கொய்யும் தென்றலா. |
முயல் இடை திரை நீங்கும் போதெல்லாம் |
சிறு மோகம் வந்ததோ. |
வெட்டவெளி வானம் எங்கும் |
வட்டமுகம் கண்டேன் கண்டேன். |
நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில் |
யுத்தம்மிடும் காதல் கொண்டேன். |
காலமதை தீர்ந்தால் கூட |
காதல் அது வாழும் என்றேன். |
பாவை நீ பிரியும் போது |
பாதியில் கனவை கொன்றேன். |
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே |
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே. |
தனியாக நடமாடும் பிடிவாதம் உனது |
நிழலோடும் உரசாத தன்மானம் எனது. |
இணையில்லா பொருளல்ல |
அடி காதல் மனதில். |
அகலாத ஒரு நினைவு |
அது மலையின் அலகு. |
ஆண்ட கதையில் கூட |
அநியாய தூரம் தொல்லை. |
உன் இதயம் அறியாது அழகே |
என் இதயம் எழுதும் சொல்லை. |
மௌனமாய் தூரம் நின்றால் |
மடியிலே பாரம் இல்லை. |
மீண்டும் ஒரு காதல்செய்ய |
கண்களில் ஈரம் இல்லை. |
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே |
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே |
விளம்பர இடைவெளி மாலையில் |
விழி மூடி யோசித்தால் |
இது வரை இல்லாத உணர்விது.... |
என்ன சத்தம் இந்த |
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய் |
பாடல் : கண்ணை விட்டு கன்னம் பட்டு |
படம் : இருமுகன் |
வரிகள் : மதன் கார்கி |
இசை : ஹரிஷ் ஜெயராஜ் |
பாடியவர் : திப்பு |
+++++++++++88888888888888+++++++++++ |
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய் |
என் கண்ணீரே என் கண்ணீரே… |
வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய் |
என் கண்ணீரே என் கண்ணீரே… |
மழையாய் அன்று பிழையாய் இன்று |
நின்றாய் நின்றாய் பெண்ணே |
இசையாய் அன்று கசையாய் இன்று |
கொன்றாய் கொன்றாய் பின்னே |
இன்னும்இன்னும் என்னை என்ன செய்வாய் அன்பே |
உன் விழியோடு நான் புதைவேனா |
காதல்இன்றி ஈரம் இன்றி போனாய் அன்பே |
உன் மனதோடு நான் நுழைப்பேனா |
செதிலாய் செதிலாய் இதயம் உதிர |
உள்ளே உள்ளே நீயே |
துகளாய் துகளாய் நினைவோ சிதற |
நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே |
தனி உலகினில் உனக்கென நானும் |
ஓர் உறவென உனக்கென நீயும் |
அழகாய் பூத்திடும் என் வானமாய் |
நீயே தெரிந்தாயே |
உன் விழி இனி எனதெனக் கண்டேன் |
என் உயிர் இனி நீ எனக் கொண்டேன் |
நான் கண் இமைக்கும் நொடியினில் பிரிந்தாயே |
பிணமாய் தூங்கினேன் |
ஏன் எழுப்பி நீ கொன்றாய் அன்பே |
கனவில் இனித்த நீ |
ஏன் நிஜத்தினில் கசந்தாய் பின்பே |
யார் யாரோ போலே நாமும் இன்கே |
நம்முன் பூத்த காதல் எங்கே |
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய் |
வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய் |
மழையாய் அன்று பிழையாய் இன்று |
நின்றாய் நின்றாய் பெண்ணே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.