text stringlengths 0 2.93k |
|---|
எண்ணத்தின் |
ஓசை நீயாக |
கண்களுக்குள் |
வண்ண கனவாய் |
நாமே |
சிறு இடைவெளிக்கு |
பின் சந்தித்தாலும் |
ஏனோ |
நம் முதல் |
சந்திப்பை போலவே |
நாணம் கலந்த |
தவிப்பு |
என் எல்லா |
செயல்களிலும் |
நீயே பிம்பமாகிறாய் |
நீயின்றி நானில்லை |
காற்றாய் வீசுகிறாய் |
காதோடு பேசுகிறாய் |
விழியலே |
மொழி பகிர்ந்து |
தென்றலாய் வருடியே |
விழி பேசும் |
பாஷைகளை |
மனம் அறிந்தாலும் |
மொழி வரவில்லை |
விடைகூற |
உன் சுவாச |
காற்றின் தீண்டலில் |
குறும்பு |
குழந்தையாய் துள்ளித்திரிந்த |
மனமும் ஓரிடத்தில் |
நிலைத்து விட்டது |
இதயம் உன்னிடத்தில் |
இடம்மாற |
இருளான |
இதய அறையிலும் |
ஒளி பரவியது |
நீ குடியேறியதால் |
உன் பார்வை |
மட்டுமல்ல |
நீ விட்டு |
செல்லும் |
பாத சுவடும் |
ரசிக்க தூண்டுதே |
என் மனதை |
அகலாமல் நீயிருந்தால் |
விலகாமல் நானிருப்பேன் |
என் விழி |
மூடும் காலம் |
வரை |
உறங்காத கண்களையும் |
தழுவி கொண்டது |
உறக்கம் |
உன்னன்பின் தாலாட்டில் |
உன்னிதழ் |
சுவைத்த தேனீர் |
என்னிதழை |
நனைக்க கரைந்தது |
ஊடலும் |
விடுபட நினைத்தும் |
விடைபெற முடியாமல் |
தொடர் கதையாய் |
தொடருது |
உன் நினைவு |
முடிவுரை புரியாமல் |
வலிகளை |
நீ கொடுத்தாலும் |
விழிகளில் |
உனை சுமப்பேன் |
சுகமாய் |
வாட்டம் |
என்பதும் |
ஏது நீ |
மனதோடு மலராய் |
இணைந்திருக்கும் |
போது |
சத்தமின்றி கூந்தல் |
கலைத்து செல்லும் |
காற்றாய் மனதை |
கலைத்து செல்கிறாய் |
நினைவில் தீண்டி |
உன் எதிர்பார்பில் |
யாருமிருக்கலாம் |
என் எதிர்பார்பில் |
நீ மட்டுமே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.