text stringlengths 0 2.93k |
|---|
மறைந்து போன |
பாத சுவடை |
புதுப்பிக்கின்றேன் |
நீ தொடர்வாயென |
பல நேரங்களில் |
ஒளியாய் |
சில நேரங்களில் |
தூசியாய் |
என் விழிகளில் |
மாற்றத்தை |
ஏற்படுத்துகிறாய் |
உன் பார்வை |
வெப்பத்தில் |
நானுமொரு |
மெல்ல உருகும் |
மெழுகுதான் |
தனிமையின் |
கொடுமையும் |
இனிமையானது |
நீ தென்றலாய் |
மனதை தீண்ட |
பிரிவுகூட சுகமே |
நீயும் எனைக்காண |
தவித்திருக்கும் போது |
நினைத்தாலே இனிக்கும் |
உன் நினைவில் |
அவ்வப்போது |
சிக்கி கொள்கிறது |
என் நாணமும் |
பொய்யுரைக்கா |
உன் விழிகளை |
கண்டு |
மையும் கரைகிறது |
சந்தோஷ துளிகளாய் |
கப்பலில்லா |
துறைமுகத்தில் |
பயண கைதியானேன் |
வந்தாய் நீயும் |
கரைசேர்க்க |
வாழ்க்கை படகாய் |
கொல்லும் இருளில் |
மெல்ல துளிர்விடுகிறது |
உன் நினைவு |
விடியலை நோக்கி |
ஒரு விழிக்கு |
தடை போட்டாலும் |
மறு விழியில் |
ரசிப்பேன் |
இருவரி கவிதையாய் |
உன் விழிகளை |
ஓசையில்லா |
பாஷையில்லா |
நீண்ட மௌனமும் |
பிடித்துதானிருக்கு |
உன் சுவாச |
தீண்டலில் |
தொடர்பில் |
உன் குரல் |
ஓய்ந்ததும் |
செயலற்ற |
செல்போனாய் மனம் |
மீண்டும் |
உன் அழைப்பு |
வரும் வரை |
எனை ஆளும் |
அன்பு நீயென்றால் |
ஆயுள் முழுதும் |
அடிமையே |
நான் உனக்கு |
உறங்கும் போது |
கனவிலும் |
விடிந்தவுடன் |
நினைவிலும் |
வாழும் வரை |
உயிரிலும் நீயே.. |
(இப்படிக்கு உன்னவள்) |
நீ |
வானவில்லாய் |
இரு நான் |
அதில் இருக்கும் |
ஏழு நிறமாய் |
இருப்பேன்..! |
என்றும் |
இணைப்பிரியாமல்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.