text stringlengths 0 2.93k |
|---|
சுத்தி சுழலும் போதும் |
அக்கரைக்கு போகத்தானே அல்லாடும் |
எத்தனையோ புயலும் கண்டு |
கொட்டும் மழையில் பொறுமையும் கொண்டு |
தொலை தூரம் சேரத்தானே தள்ளாடும் |
தன்னோட வழி எல்லாம் தன்னைத்தவிர துணையுண்டா |
திசையெல்லாம் வழியாகும் ஒருவழிதான் உனக்காகும் |
எப்போது கரையைச்சேரும் ஓடம் ஓடம்? |
விளையாட்டா படகோட்டி |
விளையாடும் பருவம் போய் |
நெசமான ஓடம் போல் நாமானோம். |
கட்டுமரம் என்றால் என்ன |
வெட்டுப்பட்ட மரங்கள்தானே |
கஷ்டப்படும் நீயும் நானும் அது போலே |
பட்டபாடு அலைகள் போலே |
விட்டு விட்டு மோதிப்பார்க்கும் |
எட்டி நிற்கத் திரும்பத்திரும்ப விளையாடும் |
கடலிருந்தும் கட்டுமரம் ஆழத்தை அறியாது |
கடல்சேரும் நதியெல்லாம் திரும்பித்தான் போகாது |
முடிவில்லா முடிவுக்கேது முடிவு முடிவு? |
விளையாட்டா படகோட்டி |
விளையாடும் பருவம் போய் |
நெசமான ஓடம் போல் நாமானோம். |
கரை காணா கடல் மேலே நீயும் நானும் |
தடுமாறும் ஓடம் போல் தாவிப்பார்த்தோம் |
என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா |
விளையாட்டா படகோட்டி |
விளையாடும் பருவம் போய் |
நெசமான ஓடம் போல் நாமானோம் |
விழிகளில் ஒரு வானவில் |
இமைகளை தொட்டு பேசுதே |
இது என்ன புது வானிலை |
மழை வெயில் தரும் |
உன்னிடம் பார்கிறேன்... நான் பார்கிறேன்... |
என் தாய்முகம் அன்பே... |
உன்னிடம் தோற்கிறேன்... நான் தோற்கிறேன்... |
என்னாகுமோ இங்கே... |
முதன் முதலாய் மயங்குகிறேன்... |
கண்ணாடி போல தோன்றினாய் |
என் முன்பு என்னை காட்டினாய் |
கனா எங்கும் வினா... |
விழிகளில் ஒரு வானவில் |
இமைகளை தொட்டு பேசுதே |
இது என்ன புது வானிலை |
மழை வெயில் தரும் |
நீ வந்தாய் என் வாழ்விலே |
பூ பூத்தாய் என் வேரிலே |
நாளையே நீ போகலாம் |
என் ஞாபகம் நீ ஆகலாம் |
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ... |
யார் இவன்... யார் இவன்... |
ஒர் மாயவன் மெய்யானவன் அன்பில்.. |
யார் இவன்.. யார் இவன் |
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில் |
இனம் புரியா உறவிதுவோ |
என் தீவில் பூத்த பூவிது |
என் நெஞ்சில் வாசம் தூவுது |
மனம் எங்கும் மனம் |
விழிகளில் ஒரு வானவில் |
இமைகளை தொட்டு பேசுதே |
இது என்ன புது வானிலை |
மழை வெயில் தரும் |
நான் உனக்காக பேசினேன் |
யார் எனக்காக பேசுவார் |
மௌனமாய் நான் பேசினேன் |
கைகளில் மை பூசினேன் |
நீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினேன் |
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால் |
மீன் ஆகிறேன் அன்பே |
உன் முன்பு தானடா இப்போது நான் |
பெண்ணாகிறேன் இங்கே |
தயக்கங்களால் திணறுகிறேன் |
நில்லென்று சொன்ன போதிலும் |
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே |
இதோ உந்தன் வழி |
வினா வினா ஒரே வினா |
விடாமலே எழும் வினா |
நிறைவுறா ஒரே கனா |
இறைவனா மனிதனா |
ஆற்றில் செல்லும் நீரில் |
நேற்றின் வெள்ளம் எது |
நேற்றெல்லாம் மாயையே |
சூறை காற்றின் ஊடாய் |
சாயா நாணற் காடாய் |
வேண்டும் ஓர் மேன்மையே |
பூபாளம் கேட்காதோ |
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.