category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
தெருக்களில் சுற்றித்திரியும் மனநோயாளிகள் நலம் வாழ இந்திய மனநல மருத்துவர் சங்கம் உதவிக்கரம்
கோவை : உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டிகோவை யில் நடைபாதைகள் அழகு படுத்தப்படுகின்றன.  ஆனால், நடைபாதைகளை  ஆக்கிரமித்துக் கொள்ளும் மனநோயாளிகளை தவிர்க்க வழியில் லாமல் திணறுகிறது மாவட்ட நிர்வாகம். இவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து குணமாக்க, இந்திய மனநல மருத்துவர் சங்கம் முன் வந் துள்ளது. கோவை உட்பட தமிழகம் முழுவதும் ஏரா...
தமிழகம்
இன்று ஓட்டு எண்ணிக்கை
தர்மபுரி:பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் இன்று நடக்கிறது.பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் இன்பசேகரன், அ.தி.மு.க., அன்பழகன், பா.ம.க., தமிழ்குமரன், தே.மு.தி.க., காவேரிவர்மன் மற்றும் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேச்சைகள் உள்ளிட்ட 3...
தமிழகம்
தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவராக சோனியா நியமனம்
புதுடில்லி:காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2004ம் ஆண்டு தேசிய ஆலோசனை கவுன்சில் அமைக்கப்பட்ட போது அதன் தலைவராக சோனியா நியமிக்கப்பட்டார். "ஒரே நபர் ஆதாயம் தரும் இரு பதவிகளை வகிக்கக்கூடாது' என்ற பிரச்னை எழுந்ததால், 2006ம் ஆண்டு மார்ச்சில் இந்த பதவியை...
தமிழகம்
விதித்த வரியை டில்லி அரசு வாபஸ் பெற்றது
புதுடில்லி: டீ, காபி, பாத்திரங்கள் மற்றும் சமையல் எரிவாயு மீது விதிக்க திட்டமிட்டிருந்த வரி விதிப்பை, டில்லி அரசு நேற்று வாபஸ் பெற்றது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து, முதல்வர் ஷீலா தீட்சித் அரசு இந்த அதிரடி முடிவை எடுத்தது.டில்லி சட்டசபையில் 2010-11ம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்த விவாதம் கடந்த சில நாட்களாக நட...
இந்தியா
காங்கிரஸ் சேவா தளத்தையும் கவனிப்பார் ராகுல்
புதுடில்லி:காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், தற்போது இளைஞர் காங்கிரசுக்கு முக்கியத்துவம் அளிப்பதைப் போல், சேவா தளத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பார் என்ற கருத்து எழுந்திருக்கிறது.டில்லியில், காங்கிரஸ் கட்சியின் "சேவா தள'த்தின் மாநாட்டில் அக்கட்சித் தலைவர் சோனியா கலந்து கொண்டார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவு...
General
மெட்ரோ ரயில்களில் பயங்கர குண்டு வெடிப்பு: பலி 37:ரஷ்யாவில் பெண் தற்கொலைப்படை கைவரிசை
மாஸ்கோ:மாஸ்கோவில் மெட்ரோ ரயில்களில் பெண் தற்கொலைப் படையினர் நேற்று நடத்திய இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில், 37 பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவில் ஆறு ஆண்டுகளுக்கு பின் நடந்த பெரிய தாக்குதல் இது என்பதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பயணிகள் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருப்பது மெட்ரோ ரயில் போக்கு...
General
ஆப்கனுக்கு ஒபாமா ரகசிய பயணம்: கர்சாய் அரசு ஊழலை ஆதரிக்கவில்லை
காபூல்:அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆப்கானிஸ்தானுக்கு திடீரென ரகசிய பயணம் மேற்கொண்டார். தலிபான்களை ஒடுக்குவதில் முன்னுரிமை காட்டவும், கர்சாய் அரசில் ஊழல் குறைய வேண்டும் என்பதை வலியுறுத்துவதிலும் அக்கறை காட்டினார் ஒபாமா.அமெரிக்க அதிபர் ஒபாமா அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்னர் செனட் உறுப்பினராக இருந்த போது, கடந்த 2008ம் ஆண்டு ஆப...
தமிழகம்
விவசாயிகளுக்கு பயிற்சி
திருமானூர்:திருமானூர் வட்டார வேளாண் துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் பயறு வகை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் குலமாணிக்கத்தில் நடந்தது.வேளாண் துணை இயக்குனர் சிவகுமார் வரவேற்றார். ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர் வில்பர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் மாவட்ட கலெக்டர்(பொ) பி...
தமிழகம்
ஜெயங்கொண்டம் பகுதியில் மின்தடை நேரம் மாற்றி அமைப்பு
ஜெயங்கொண்டம்:ஜெயங்கொண்டம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் தா.பழூர், உட்கோட்டை, தென்னவநல்லூர் ஆகிய பகுதிகளில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரையும், இரவு 3 மணிமுதல் காலை 6 மணிவரையும் மும்முனை மின்சாரம் விநியோகம் செய்யப்படும். கல்லாத்தூர், உடையார்பாளையம், மேலணிக்குழி, ஸ்ரீபுரந்தான், சோழமாதேவி ஆகிய பகு...
இந்தியா
tஞுண்tttt
sdfsdfsdfsdfsdfsd
இந்தியா
சொல்கிறார்கள்
நல்லவங்க மட்டும் தான் ரோட்ல நடமாடணும் : தஞ்சை எஸ்.பி., செந்தில்வேலன்: எனக்கு சொந்த ஊர் மதுரை. என் அப்பா, தனியார் நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரி, அம்மா ஆசிரியை. எங்கள் வீட்டில், நான் தான் கடைசி பையன். என் தாத்தா போலீசா இருந்தவர். நானும் போலீஸ் ஆகணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, என் அப்பா டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டார். முத...
தமிழகம்
உலகில் நீளமான புத்தக தலைப்பு: கின்னஸ் சாதனைக்கு ஸ்ரீவி., தொழிலாளி முயற்சி
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் செட்டியக்குடி நகை தொழிலாளி மணிகண்டன், கின்னஸ் சாதனைக்காக, புத்தக தலைப்பை 330 வார்த்தைகளில் அமைத்துள்ளார்.நகை தொழிலாளியான இவர், தனது தொழிலோடு கின்னஸ் சாதனை நிகழ்ச்சியிலும், தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். 2007ல் 24 மி.மீ., அகலம், நீளத்தில் செஸ் போர்டை வடிவமைத...
தமிழகம்
பென்னாகரத்திலும் தி.மு.க., அமோகம் : இரண்டாவது இடத்தை பிடித்தது பா.ம.க., : டிபாசிட்டை இழந்தன அ.தி.மு.க.,- தே.மு.தி.க.,
சென்னை : மதுரை மத்தி இடைத்தேர்தலில் ஆரம்பித்து, தொடர்ச்சியாக இடைத்தேர்தல் நடந்த 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதோடு, 11வதாக நடந்த பென்னாகரம் இடைத்தேர்லிலும் தி.மு.க., அமோகமாக வெற்றி பெற்றது. இரண்டாம் இடம் யாருக்கு என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளிவிட்டு, அந்த இடத்தை பா.ம.க., பிடித்த...
தமிழகம்
தியான பீட தலைவர் பதவி நித்யானந்தா விலகினார்
சென்னை : நடிகையுடன் தொடர்புள்ளதாக சர்ச்சைக்குள்ளான சாமியார் நித்யானந்தா, தியான பீட தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தா, கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமத்தை ஏற்படுத்தி, தியானம் உள்ளிட்ட யோகா கலைகளை போதித்து வந்தார். இந்த ஆசிரமத்தின் தியான மையங்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் உள்...
தமிழகம்
தென்மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியது தமிழகம்
கடந்த 2008-09ம் ஆண்டு கணக்கீட்டின்படி, தென்மாநிலங்களிலேயே பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக தமிழகம் ஆகியுள்ளது. மேலும், தொழில் துறையில் ஒரே 1 சதவீதம் மட்டுமே வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்நிலையில், வரும் 7ம் தேதியன்று தமிழகத்துக்கான நிதி பங்கீட்டை பெறுவதற்கு, முதல்வர் கருணாநிதி டில்லி வரவுள்ளார்.அனைத்து ...
தமிழகம்
டிபாசிட் இழப்பின் பின்னணியில் சதி : கருணாநிதி மீது ஜெ., குற்றச்சாட்டு
சென்னை : பென்னாகரம் தேர்தலில் தி.மு.க., வென்றதன் பின்னணியில் மிகப் பெரிய சதி நடந்திருப்பதாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டி உள்ளார்.அவரது அறிக்கை:ஓட்டுக்கு பணம் கொடுத்து, ஜனநாயகத்தை பாழாக்காதீர்கள் என்றார் அண்ணாதுரை. இதற்கு முற்றிலும் முரணான வகையில், மக்களாட்சியின் மாண்பையே அழிக்கும் போக்கில் செயல்பட்...
தமிழகம்
கழிப்பறை கட்டுமான பணியில் மாணவர்கள் *பெற்றோர்கள் அதிருப்தி
ராமநாதபுரம் :  ராமநாதபுரம் அருகே பள்ளி கழிப்பறை கட்டுமான பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதால் பெற்றோர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி துறை மூலம் இடைநிலை கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் துவங்கியதிலிருந்தே பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் ,பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்து குழ...
தமிழகம்
ஹெட்லி கூட்டாளி ராணா வழக்கை சந்திக்க தயார்
சிகாகோ : மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு சதித் திட்டம் தீட்டிய ஹெட்லியின் கூட்டாளி தகவுர் ஹுசைன் ராணா மீதான விசாரணை, செப்டம்பர் மாதம் அமெரிக்க கோர்ட்டில் நடைபெற உள்ளது.மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர...
தமிழகம்
சென்னை கிங்ஸ் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?
சென்னை : ஐ.பி.எல்., தொடர் அறிமுகமானபோது சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு ரசிகர்களிடம் இருந்த வரவேற்பும் ஆதரவும், தற்போது குறையத்துவங்கியுள்ளது. மற்ற ஏழு அணிகளுடன் ஒப்பிடும்போது, சென்னை அணிதான் மிக மோசமாக இருக்கிறது. இதற்குகாரணம் என்ன? கிரிக்கெட் புக்கிகளால் மிகைப்படுத்தபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் முதலாம் ஆண்டு பைனல் வரை வந்...
தமிழகம்
இலங்கை செல்ல முயன்ற அகதிகள் 4ம் மணல் தீடையில் தத்தளிப்பு :கடலோர காவற்படை மீட்பு
மண்டபம் : இலங்கை தப்பிச்செல்ல முயன்று மூன்று நாட்களாக நான்காம் மணல் தீடையில் தத்தளித்த ஆறு அகதிகளை, இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு மண்டபம் கொண்டு வந்தனர். பவானி சாகர் முகாமிலிருந்து அகதிகள் வீரவிஜயன்(29), ஜெயராஜ்(30), காந்தகுமார்(36), ஆஞ்சோன்(21), கரூர் முகாமிலிருந்து தர்மா(38), திருச்சி முகாமிலிருந்து இளஞ்செழியன்(3...
இந்தியா
சோயப் மாலிக் மீது வழக்கு பதிவு
ஐதராபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் மீது போலீஸ் ஸ்டேசனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சானியா  மிர்சாவுக்கும்,  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தனக்கும், சோயப்பிற்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாக ஐதராபாத்தை சேர்ந்த  ஆயிஷா என்பவர் தெரி...
தமிழகம்
தொடக்க கூட்டுறவு கடன் சங்க வளர்ச்சி நிதியாக ரூ.65 கோடி
சிவகங்கை : சிவகங்கை உட்பட ஆறு மாவட்டங்களுக்கு தொடக்க கூட்டுறவு வங்கிகளுக்கான வளர்ச்சி நிதியாக 65 கோடி ரூபாயை அரசு வழங்கியுள்ளது.தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கடன்களை வழங்கவும், கூட்டுறவு நிறுவன வளர்ச்சிக்கு என ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் படி, தொடக்க கூட்டுறவு வளர்ச்சி நிதியாக ஒவ்வொரு ஆண்டு...
தமிழகம்
உசிலம்பட்டி அருகே வேன் உருண்டு இரண்டு பெண்கள் பலி, 20 பேர் காயம்
உசிலம்பட்டி : தேனி மாவட்டம் பழனிசெட்டிய பட்டியில் இருந்து உசிலம்பட்டியில் பெண் பார்ப்பதற்காக சந்திரசேகர்(62), மதுரை வீரன்(61) குடும்பத்தினர்கள் மகேந்திரா வேனில் வந்தனர். பெண் பார்த்து விட்டுபழனிசெட்டியபட்டி திரும்பினர். பகல் 1.50 மணியளவில் வேன், தேனி ரோட்டில் வாடிகருப்புகோயில் அருகே சென்றபோது திடீரென ரோட்டில் உருண்டது....
தமிழகம்
பழநி அருகே மீண்டும் காட்டுயானைக் கூட்டம் : வனத்திற்குள் விரட்ட விடிய விடிய போராட்டம்
பழநி : பழநி அருகே மீண்டும் காட்டுயானைகள் வருகை தொடர்கிறது. நேற்று தேக்கந்தோட்டம் பகுதிக்குள் வந்த யானைகள் நீண்ட போராட்டத்திற்கு பின் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்குள் ஏராளமான காட்டுயானைகள் உள்ளன. இவை பட்டா நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்க...
தமிழகம்
விபத்தில் தப்பினார் மத்திய மந்திரி
பரூச்(குஜராத்) : மத்திய பழங்குடியின விவகாரத்துறை இணையமைச்சர் துஷார் சவுத்ரி, நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இருப்பினும் சிறிய அளவில் அவருக்கு காயம் ஏற்பட்டது.மத்திய பழங்குடியின விவகாரத்துறை இணையமைச்சர் துஷார் சவுத்ரி, குஜராத்தில் நர்மதை ஆற்றின் மீது அமைந்துள்ள சர்தார் படேல் பாலத்தில் தனது காரில...
தமிழகம்
கோவில்பட்டியில் சிக்கிய ஆண் மிளா..!
தூத்துக்குடி : கோவில்பட்டி வனப்பகுதியில் இருந்து தப்பிய மிளா ஊருக்குள் பிடிபட்டது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள குருமலை, ஊத்துமலை ஆகிய வனப்பகுதியில் மயில், மான், மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன.தற்போதைய வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் குடிநீருக்காக அலைந்து திரியும் வனவிலங்குகள் அருகில் மக்க...
தமிழகம்
விக்கிரவாண்டியில் லாரி மோதி எஸ்.பி., மகள், மருமகன் பலி
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் கார் மீது லாரி மோதிய விபத்தில் எஸ்.பி., மகள், மருமகன் பலியாகினர். சென்னையில் செக்யூரிட்டி கன்ட்ரோல் பிரிவில்  எஸ்.பி.,யாக பணிபுரிபவர்  கருணாநிதி. இவரது மகள் ஆர்த்திபிரியா(35) .இவரது கணவர் குளித்தலையை சேர்ந்த உதயகுமார்.  ஆர்த்தி பிரியா, உதயகுமார் இருவரும் குளித்தலையில் இருந்து சென்னை நோ...
தமிழகம்
விக்கிரவாண்டியில் தேனீ கொட்டி 12 பேர் மருத்துவமனையில் அனுமதி
விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சவ ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது தேனீ கொட்டியது. இதனால் 12 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா
முறையாகச் செயல்படுத்தப்படுமா கல்வி உரிமைச் சட்டம்?கல்வியாளர்கள் சந்தேகம்
புதுடில்லி :   நடைமுறைக்கு வந்துள்ள, கல்வி அடிப்படை உரிமைச் சட்டம், முறையாகச் செயல்படுத்தப்படுமா அல்லது பிற சட்டங்களைப் போல கோப்பிலேயே, இருந்து விடுமா என்று கல்வியாளர்களிடையே, சந்தேகம் எழுந்துள்ளது.ஆறு வயது தொடங்கி 14 வயது வரையுள்ள, குழந்தைகள் அனைவரும் கல்வி பெறுவதை உறுதி செய்யும், "கல்வி அடிப்படை உரிமைச் சட்டம்' கொண்ட...
தமிழகம்
நோபல் வென்ற எளிமை மனிதர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
இந்த ஆண்டின் பத்ம விருது பெற்றவர்களில் மிக உயர்ந்த சிறப்புடையவராக நோபல் பரிசை வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் திகழ்ந்தபோதும், ஜனாதிபதி மாளிகையில் கடந்த புதன் கிழமை மாலை நடந்த விழாவில் அவர் எளிமையாக காட்சியளித்தார்.நீண்ட பிங் கலர் குர்தாவும், கரிய நிற கீழங்கியும் அணிந்த 58 வயதான  அவரை, அவரது குடும்பத்தினரும், நண்பர்களும...
இந்தியா
வேண்டாம் இனி பூமி வெப்பமயமாதல் : விடை கொடுக்கும் இன்போசிஸ் நிறுவனம்
பூமி வெப்பமயமாதலை குறைக்கும் உலகளாவிய முயற்சியில் தன் பங்காக பெங்களூரு இன்போசிஸ் சாப்ட்வேர் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து. மற்ற தொழில் நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது."உலகில் வளர்ந்து வரும் முன்னணி நிறுவனம், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் நிறுவனம்' என மற்ற நாடுகளால் மதிக்கப்படுவது, இன்போசிஸ் நிறுவ...
இந்தியா
அகலப்பாதை திட்டங்கள் மந்தம்: போதிய ஒதுக்கீடு இல்லாததே காரணம்
தமிழகத்தில்   பதினோரு அகலபாதை ரயில் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கு  ஒவ்வொரு ஆண்டும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. தமிழகத்தின் அகலப்பாதை மாற்றும் திட்டங்களுக்கு மொத்தம் 3 ஆயிரம் கோடி வரை தேவைப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு ரூ.355 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழக ரயில...
இந்தியா
காத்திருக்கும் ஐந்து தமிழக ரயில் திட்டங்களுக்கு திட்டக்கமிஷனில் நாளை விடிவு கிடைக்குமா?
தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்த திட்டக்கமிஷனின் ஆய்வுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இதில், ஏற்கனவே முக்கிய கோரிக்கையாக இருந்து வரும் ஐந்து ரயில் பாதை திட்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தவிர, ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட ரயில் பாதை திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்குமா என்ற எதிர்...
தமிழகம்
அனைத்து பல்கலை, கல்லூரிகளில் ஒரே நாளில் தேர்வு : தன்னாட்சி கல்லூரிகள் கலக்கம்
ஒரே சமயத்தில் அனைத்து பல்கலை மற்றும் கல்லூரிகளில் தேர்வு நடத்தினால், மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்கள் இன்றி, ஏராளமான குளறுபடிகள் ஏற்படுமென தன்னாட்சி கல்லூரி முதல்வர்கள் கருதுகின்றனர்.தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட பல்கலை வாயிலாக 550க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. அவற்றில், 10 சதவீதத்துக்க...
இந்தியா
வறுமையை துணிச்சலோடு எதிர்கொண்டு தீப்பெட்டி விற்கும் தன்னம்பிக்கை பெண்
திண்டுக்கல் : வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் திடீரென உருவான வறுமையை எதிர்கொள்ள, தன்னம்பிக்கையோடு செயல்பட்டு திண்டுக்கல் ரோட்டோரத்தில் தீப்பெட்டி விற்று வாழ்க்கை நடத்தி வருகிறார். மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த நாராயணன் மகள் குணசுந்தரி (28). வறுமை தெரியாமல் வசதியாக வாழ்ந்தவர். இவரது கணவர் திருப்பதிக்கு மணம் முடித...
இந்தியா
சோயப் மாலிக் மீது மோசடி வழக்கு!சானியா திருமணத்தில் சிக்கல்
ஐதராபாத் : ஆயிஷா குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் சோயப் மாலிக் மீது மோசடி, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை அடுத்து மாலிக்-சானியா திருமணத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து பிரச்னைகள் ஏற்படுவதால், இவர்களது திருமணத்தை முன்கூட்டியே நடத்தவும் வாய்ப்...
இந்தியா
இது உங்கள் இடம்
கை அசைத்து போஸ்... : எஸ்.சிங்கராயர், வீரபாண்டி, திருப்பூரிலிருந்து எழுதுகிறார்: உ.பி., மாநிலத்தில் பகுஜன்  சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு நடந்த புகழாரத்தை, நாம் ஒவ்வொருவரும் பார்த்தோம்.கரன்சி மாலையைப் பார்த்து வெம்பி, கொதித்து போய்விட்டனர். ஒவ்வொரு நாளும் நம் அரசியல்வாதிகள், நம் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கின்றனர்....
இந்தியா
டீ கடை பெஞ்ச்
ஜெ., அறையில் பெருமாள், முருகன், லட்சுமி, சரஸ்வதி...! ''நேத்து ஒரு விவகாரத்தை சொல்ல மறந்துட் டேன் ஓய்...!'' என்றபடியே பெஞ்சில் வந்து அமர்ந்தார் குப்பண்ணா.''எதை மறந்தீங்க...?'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''புதிய சட்டசபை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் பூஜையறையும் வைச்சிருக்கா ஓய்... சமையலறைக்கு பக்கத்தில இரு...
இந்தியா
டவுட் தனபாலு
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு:  காங்கிரஸ் கட்சியின் 125ம் ஆண்டு விழாவையொட்டி, உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை நடக்கிறது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஊர்களின் வழியே சென்று வேதாரண்யத்தில் முடிகிறது. அந்தந்த மாவட்ட காங்கிரஸ் தொண் டர்கள் குறைந்தபட்சம் 125 பேர் யாத்திரையில் கலந்து ...
இந்தியா
மீண்டும் புகை கக்குகிறது எரிமலை : விமானம் இப்போதைக்கு ஓடாது; பல கோடி நஷ்டம்
லண்டன்: கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெடித்து சிதறிய எரிமலை மீண்டும் தீயை கக்கியது. இதனால் ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே விமான இயக்கம் இல்லாமல் வெளி நாடுகளில் சிக்கிய பயணிகள் கப்பல் மூலம் ஐரோப்பா திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கடந்த வாரம் 14 ம் தேதி ஐஸ்லாந...
இந்தியா
ச்ண்ஞீ
asdasdasd asd asdadasdasdasd
இந்தியா
பரிதாபமாக காட்சியளிக்கும் மறைமலையடிகள் இல்லம் : தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு முன் பொலிவு பெறு�
தமிழ் மொழி மீது தீராத பற்று கொண்டுள்ள முதல்வர் கருணாநிதி தமிழ் அறிஞர்களை கவுரவிப்ப திலும், தமிழ் அறிஞர்களின் நூல் களை அரசுடமையாக்குவதிலும் எப்போதும் தனி அக்கறை கொண்டவர். இதற்கு முத்தாய்ப்பாக, உலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வரும் ஜூன் மாதம் கோவைய...
தமிழகம்
முட்டையிட்டு இனபெருக்கம் செய்யும் சங்குகள் : கழிவுகள், இழுவலையால் பாதிப்பு
ராமநாதபுரம்: முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்ட சங்குகள், தமிழகத்தில் அதிகமாகக் காணப்பட்டாலும், கழிவுகள், இழுவலையால் இதற்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. மெல்லுடலிகள் எனும் விலங்கினப் பிரிவில் வெண்சங்குகளுக்கு தனிச்சிறப்பு உண்டு .இறை பக்தி கொண்ட இந்தியாவில், சங்குகளை புனிதப் பொருளாகக் கருதி வருகின்றனர். இந்திய...
தமிழகம்
மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான்
நாகர்கோவில்:  கோவையில் நடைபெற உள்ள செம்மொழி மாநாட்டின் முன்னோடியாக கன்னியாகுமரியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.  இந்த ஓட்டத்தில் குமரி மாவட்டத்தில் 23 கல்லூரிகளை சேர்ந்த ஐந்தாயிரம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான மாரத்தான் கொட்டாரத்தில் இருந்து தொட...
தமிழகம்
காரைக்கால் - பேரளம் மார்க்கத்தில் ரயில் சேவை மீண்டும் துவக்கப்படுமா?
காரைக்கால்:காரைக்கால் - திருநள்ளார் - பேரளம் இடையே புதிய அகல ரயில் பாதை அமைத்து, மீண்டும் ரயில் சேவையை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்காலில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. திருநள்ளாரில் உள்ள சனீஸ்வர பகவானை தரிசிப்பதற்காகவும், காரைக்கால் அடுத்த நாகூர் தர்கா, வேள...
தமிழகம்
நெய்வேலியில் எம்.ஜி.ஆர்., சிலை: ஜெ., திறப்பு
நெய்வேலி:நெய்வேலியில் நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர்., சிலையை 19 ஆண்டிற்கு பிறகு ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.நெய்வேலி வட்டம் 9ல் கடந்த 1991ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., சிலை நிறுவப்பட்டது. பல்வேறு சிக்கல் காரணமாக சிலை திறக்கப்படாமல், மூடி வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை திறக்க கடந்த மாதம் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையொட்டி நேற்று...
இந்தியா
சொல்கிறார்கள்
ஊனம் ஒரு குறையல்ல : மாற்றுத்திறனுடைய 600 பேருக்கெனத் தொண்டு நிறுவனம் நடத்தும் ஜான் பாட்ஷா: என் சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு வலது கால் வலுவிழந்தது. வெயிலிலும், மழையிலும் குடிசை வீட்டில் நாட்கள் நகர்ந்தது. ஆனால், படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை மட்டும் விடவில்லை. பி.ஏ., இரண்டாம் ஆண்டு வரை படித்தாலும் தொடர்ந்து படி...
தமிழகம்
இறுதிப் போட்டி முடிந்ததும்
டச்டி ச்டூடூ ணூ ஞூடிணஞு ஞ.. ஞிணிணதிஞுதூ ட்தூ ணூஞுஞ்ச்ணூஞீண் tணி ணீச்ணூஞுணtண்
இந்தியா
டவுட் தனபாலு
முதல்வர் கருணாநிதி: பிரபாகரனின் தாயார் தமிழகத்தில் வைத்திய வசதி செய்து கொள்ள விரும்புகிறேன் என்று அறிவித்தால், அதைப் பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு அதுபற்றி எழுத தயாராக உள்ளோம்.டவுட் தனபாலு: இலங்கைப் போரில் பிரபாகரன் தோற்றால், அவரை போரஸ் மன்னனைப் போல் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தீர்களே... மன்னனின் தாயாருக்க...
தமிழகம்
இறுதிப் போட்டி முடிந்ததும் முடிந்ததும்
தீடதூசt ச்ணூஞு த ஞீணிடிணஞ் ணணிதீ....
இந்தியா
ஐ.பி.எல்., கிரிக்கெட்டை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி : மகாராஷ்டிரா டி.ஜி.பி.,
மும்பை:மும்பையில் முக்கிய இடங்களை, குண்டு வைத்து பயங்கரவாதிகள் தாக்கப்போவதாக வந்த தகவலையடுத்து, மும்பை நகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.மும்பை விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தாக்க, பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, மத்திய புலனாய்வுத் துறை மற்றும் டில்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, ம...
தமிழகம்
ஊராட்சி நிதி ரூ.8 லட்சம் மோசடி தலைவர் கைது
திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் , அம்பாசமுத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது வெள்ளங்குழி ஊராட்சி தலைவராக இருப்பவர் காந்திமதி(51). இங்குள்ள கிளார்க் கமலக்கண்ணன் மூலம், பொதுமக்களிடம் வசூலித்த பணம் முறையாக வரவு வைக்கப் படாமலும், செக் கொடுத்ததில் மோசடியாகவும் 8 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்துள்ளார். கிளார்க்கிற்கு, தலை...
தமிழகம்
தேனிலவுக்கு சென்ற புதுமண தம்பதி ராமநத்தம் அருகே விபத்தில் பலி
ராமநத்தம்:தேனிலவுக்கு, புதுமண தம்பதி சென்ற மாருதி கார் ராமநத்தம் அருகே லாரியில் மோதி விபத்துக்குள் ளான தில் பரிதாபமாக இறந்தனர். இருவர் படுகாய மடைந்தனர்.கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்தவர் காத்தவ ராயன். என்.எல்.சி.,யில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் மணிமேகலை (24). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் ...
இந்தியா
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கிரிமினல்: அமைச்சர் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு
ஆலப்புழா: 'கேரளத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கிரிமினல் உள்ளனர். இதுபோன்ற நிலைமைக்கு கேரளா மாறிவிட்டது' என, மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் ஜி.திவாகரன் தெரிவித்தார்.அறிவொளி இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் திவாகரன் பேசியதாவது:கேரள மாநிலம் கல்வி அறிவு படைத்த முழுமை அடைந்த மாநிலமாக வளர்ச்சி அடைந்து வரும் ...
இந்தியா
மருந்து சாப்பிட்டால் நோய் வரும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கிண்டல்
சென்னை : ''மருந்து சாப்பிட்டால் நோய் வரும் நிலை இந்த ஆட்சியில் நிச்சயம் நடக்கும்,'' என்று, அ.தி.மு.க., உறுப்பினர் பிரேமா தெரிவித்தார்.சுகாதாரத் துறைக்கான மானியக் கோரிக்கை மீது சட்டசபையில் நடந்த விவாதம்:பிரேமா - அ.தி.மு.க: உடலில் போலி என்றால் டாக்டரிடம் செல்லலாம். டாக்டர் போலி என்றால் யாரிடம் செல்வது. போலி டாக்டர்கள் அத...
General
1 மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான்
1 மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான் 1 மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான் 1 மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான்மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான்மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியா...
தமிழகம்
புது சீடருடன் செக்ஸ் சாமியார் நித்யானந்தா சிக்கினார் : இமாசல பிரதேசத்தில் போலீஸ் சுற்றிவளைப்பு
பெங்களூரு : ஐம்பது நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சாமியார் நித்யானந்தா, இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். குடிசை வீட்டிலிருந்த அவரும், அவரது சீடர் ஒருவரும் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து மூன்று லட்சம் ரூபாய் பணம், 7,000 அமெரிக்க டாலர், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன், சா...
தமிழகம்
மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான்
மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான் 1 மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான் மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான் 1 மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியாகுமரியில் செம்மொழி மாரத்தான் மனோன்மணியம் பல்கலைகழகம் சார்பில் கன்னியா...
தமிழகம்
முட்டையிட்டு இனபெருக்கம் செய்யும் சங்குகள் : கழிவுகள், இழுவலையால் பாதிப்பு
ராமநாதபுரம்: முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்ட சங்குகள், தமிழகத்தில் அதிகமாகக் காணப்பட்டாலும், கழிவுகள், இழுவலையால் இதற்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. மெல்லுடலிகள் எனும் விலங்கினப் பிரிவில் வெண்சங்குகளுக்கு தனிச்சிறப்பு உண்டு .இறை பக்தி கொண்ட இந்தியாவில், சங்குகளை புனிதப் பொருளாகக் கருதி வருகின்றனர். இந்திய...
தமிழகம்
மதுரையில் ரூ.2500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது
மதுரை : கட்டடத்தின் அருகே செல்லும் மின் வயர்களில் பாதுகாப்பிற்காக பி.வி.சி., பைப்களை பொருத்த, 2500 ரூபாய் லஞ்சம் வாங்கிய, மதுரை மாகாளிப்பட்டி மின்வாரிய இளநிலை பொறியாளர் முருகனை போலீசார் கைது செய்தார். மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(43). கத்தாரில் வேலை பார்த்து, சில மாதங்களுக்கு முன் இங்கு வந்தார். கீரைத...
தமிழகம்
மொபைல் போனில் கனடாவுக்கு பேசிய நளினி : லண்டனில் உள்ள மகளிடமும் பேசியது அம்பலம்
வேலூர் :  ராஜிவ் கொலையாளி நளினியிடம் பறிமுதல் செய்த மொபைல் போனில் இருந்து அதிகளவு கனடா நாட்டுக்கு பேசியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளி நளினியிடம் இருந்து மொபைல் போன், இரண்டு சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் இருந்து சிறைத்துறை உயர் அதிகாரிகள்,...
இந்தியா
அரசு ஊழியர்களுக்கு எதிராக மூன்று மாதத்தில் 200 வழக்குகள்
புதுடில்லி : லஞ்ச ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கடந்த ஜனவரி மற்றும் மார்ச் மாத  காலகட்டத்தில் அரசு  ஊழியர்கள்  மீது  சி.பி.ஐ., போலீசார் 200 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்  என, மத்திய  அமைச்சர் பிருதிவிராஜ் சவான்  லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.  மக்கள் குறைகள், ஓய்வூதியம்  மற்றும் பணியாளர்  நலத் துறை  அமைச்சர்  பிர...
தமிழகம்
மின் பற்றாக்குறையால் தவிக்கும் திருப்பூர்
தினமும் மூன்று மணி நேரம் கட்டாய மின்வெட்டு; மாதம் ஒருமுறை காலை முதல் மாலை வரை, பராமரிப்பு பணிக்காக மின்தடை; இதுதவிர, அவ்வப்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு என, கோடையுடன் சேர்ந்து மின்வாரியம் மக்களை பாடாய்படுத்துகிறது. மின் உற்பத்தி குறைந்ததால், மக்களுக்கு தேவையான மின்சாரத்தை வினியோகிக்க முடியாமல் மின்வாரியம் திணறிக் கொண்...
இந்தியா
சாதித்து காட்டியது சச்சின் அணி!பைனலில் சூப்பராக நுழைந்தது வெளியேறியது கும்ளே அணி
மும்பை : ஐ.பி.எல்., தொடரின் பைன லுக்கு சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த பரபரப்பான அரையிறுதி போட்டியில் கும்ளேவின் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 35 ரன்கள் வித்தி யாசத்தில் வீழ்த்தியது. கடந்த முறை பைனலுக்கு தகுதி பெற்ற பெங்களூரு அணி, இம்முறை அரையிறுதியுடன் வெளி யேறியது. மும்பை அ...
தமிழகம்
தேய்ந்து வரும் தேசிய விளையாட்டு : கைதூக்கி விடுமா அரசு
மதுரை : இந்தியாவின் பாரம்பரிய, தேசிய விளையாட்டான ஹாக்கி, தமிழகத்தில் சங்கங்களின் உட்பூசல், போட்டியால் தேய்கிறது. இந்த பின்னணியில், கடந்த ஆறு ஆண்டுகளாக தேசிய போட்டிகள் முடக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தில் ஏற்பட்ட உட்கட்சி அரசியலால், புதிய தமிழ்நாடு ஹாக்கி, யுனிபைடு ஹாக்கி, ஹாக்கி தமிழ்நாடு, ஹாக்கி யூனிட்ஸ் ஆப...
தமிழகம்
பேரூராட்சி இடைத்தேர்தல் தி.மு.க., - காங்., வெற்றி
திருவாரூர்:திருவாரூரில் கொரடாச்சேரி பேரூராட்சிக்கு நடந்த இடைத்தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் தி.மு.க., - காங்., வெற்றி பெற்றது. அ.தி.மு.க., ஐந்து வார்டுகளிலும், மா. கம்யூ., ஒரு வார்டிலும் டிபாசிட் இழந்ததால் அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பேரூராட்சியல் கடந்த 19ம் தேதி, 15 வார...
தமிழகம்
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது உரிமைமீறல் சட்டசபையில் அ.தி.மு.க., காரசார விவாதம்
சென்னை:அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக, அ.தி.மு.க.,வினர் கொண்டு வந்த உரிமைமீறல் பிரச்னை மீது நேற்று காரசார விவாதம் நடந்தது. அப்போது அமைச்சர் பரிதி இளம்வழுதி பேசிய கருத்துக்கு அ.திமு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.செங்கோட்டையன்-அ.தி.மு.க: கடந்த ஏப்ரல் 12ம் தேதி அ.தி.மு.க., உற...
இந்தியா
பேச்சு, பேட்டி, அறிக்கை
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: பூகம்பமே வந்தாலும் முல்லைப் பெரியாறு அணை உடைய வாய்ப்பு இல்லை. ஆனால், கேரளா உடைத்து விடுமானால், 65 லட்சம் மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் மதுரை உள்ளிட்ட தென் தமிழகம் முழுவதும் சகாரா பாலைவனமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.கதர் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு: முதல்வர் கர...
இந்தியா
பெட்ரோல், டீசல் விலை உயர்வைவாபஸ் பெற 27ல் வெட்டுத் தீர்மானம்
புதுடில்லி:பெட்ரோல், டீசல் மற்றும் உர விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 27ம் தேதி, பார்லிமென்டில் வெட்டுத் தீர்மானம் கொண்டுவர இடதுசாரிகள் உட்பட 13 கட்சிகள் தீர்மானித்துள்ளன. அத்துடன் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி நேற்...
General
ஐ.பி.எல்., 2ல் மேட்ச் பிக்சிங் : மோடிக்கும் தொடர்பு?
புதுடில்லி : ஐ.பி.எல்.,லில் ஏற்பட்ட லலித் மோடிக்கும்-சசிதரூருக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வருமான வரித்துறையினர் பல இடங்களில் சோதனை  மேற்கொண்டனர். பலரிடம் விசாரித்தனர். இந்நிலையில் வருமான வரித்துறையினர் இது தொடர்பான அறிக்கையை மத்திய நிதியமைச்சகத்துக்கு அனுப்பினர். அந்தஅறிக்கையில், தென் ஆப்பிரிக்காவில் நடந்த 2வது ஐ.பி....
இந்தியா
ஐ.பி.எல்., விவகாரத்தில் பார்லி., கூட்டுக்குழு விசாரணை நடத்தினால் கவலையில்லை : சரத்பவார்
புதுடில்லி : ஐ.பி.எல்., லில்  மத்திய அமைச்சர் சரத்பவார் குடும்பத்தினரும், மத்திய அமைச்சர் பிரபுல் படேலும் ஆதாயம் அடைந்ததாக  தகவல் வெளியானது. இந்நிலையில் ஐ.பி.எல்., விவகாரம் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பார்லிமென்டில் எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து கருத்து தெர...
தமிழகம்
கூடங்குளத்தில் அணுமின்நிலையத்தில் டிசம்பரில் மின்சார உற்பத்தி துவங்கும்
திருநெல்வேலி : கூடங்குளம் அணுமின்நிலையத்தில் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அணுமின் உற்பத்திக்கான மாதிரி எரிபொருள் செலுத்தும்பணி துவங்கியது. வரும் டிச., மாதத்தில மின்உற்பத்தி துவங்கும் என இந்திய அணுமின் கழக தலைவர் எஸ்.கே.ஜெயின் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடற்கரையில் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவி...
தமிழகம்
மின்சார பற்றாக்குறையால் மூடுவிழாவை நோக்கி சிறு ஆலைகள் : பணியாளர் கிடைப்பதிலும் சிக்கல்
சிவகங்கை :மின்சாரம், பணியாளர் பற்றாக்குறையால் ராமநாதபுரம்,சிவகங்கை மாவட்டங்களில், சிறு தொழில் நிறுவனங்கள் முடங்கி வருகின்றன.இம்மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழில் களே அதிகம். இது தவிர நூற்பாலை, அதை சார்ந்த சிறு தொழில்கள், செங்கல் சூளை என, 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருந்தன. இவற்றின் மூலம் ஏராளமானோர் வேலைவ...
இந்தியா
சொத்து விவரம் தராத 51 எம்.பி.,க்கள்: சபாநாயகர் எச்சரிக்கை
புதுடில்லி : விரைவில் தங்கள் சொத்துக்கள் குறித்த விவரங்களை எம்.பி.,க்கள் சமர்ப்பிக்கவில்லையென்றால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் எச்சரித்துள்ளார். பார்லிமென்ட் எம்.பி.,யாக ஒருவர் பதவியேற்றவுடன், 90 நாட்களுக்குள் தன் சொத்துக்கள் பற் றிய கணக்குகளை ஒப்படைக்க வேண்டும். ஆனால், 15வது ...
தமிழகம்
ஓடத் துவங்கியது விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில்
சென்னை : விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அகல ரயில் பாதையில், நேற்று மாலை முதல் ரயில் போக்குவரத்து துவங்கியது. இன்று முதல், சென்னை எழும்பூரிலிருந்து நாகூருக்கு எக்ஸ்பிரஸ் ரயிலும், 26ம் தேதி முதல், சென்னை எழும்பூர் - திருச்சி இடையே தினசரி பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட மூன்று பாசஞ்சர் ரயில்களும், 12 எக்ஸ்பிரஸ் ரயில்களும...
தமிழகம்
மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் ரூ.2 கோடி லஞ்சம்
புதுடில்லி : பஞ்சாபில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுப்பதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாயை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.மருத்துவத் துறையின் மிக உயர்ந்த அமைப்பு இந்திய மருத்துவக் கவுன்சில். ஒரு மருத்துவக் கல்லூரிக்கோ, மருத்துவ நிறுவனங்களுக்கு  ...
இந்தியா
டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு. திணறல்! * எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக போர்க
புதுடில்லி : சரத் பவார், நிதிஷ் குமார், பிரகாஷ் கராத் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள், மத்திய அரசால் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக போர்க்கொடி தூக்கியுள்ளதால், மத்திய அரசு திணறி வருகிறது. மேலும், பார்லிமென்...
இந்தியா
கேதன் தேசாய் மீது ரூ.2,000 கோடி ஊழல் புகார்
இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக கேதன் தேசாய் பதவிக்காலத்தில்,  40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.,)அங்கீகாரம் வழங்கி வர...
தமிழகம்
ஜெ., அணுகுமுறையில் மாற்றம் : குஷியில் கூட்டணிக் கட்சிகள்
தொண்டர் சந்திப்பு மூலம் கட்சிக்கும், இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துவதன் மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கும் உற்சாகம் ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க., தலைமையின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க.,வை பொறுத்தவரை அவ்வப்போது அதிரடி நிகழ்வுகள் நடப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் சமீபத்திய அதிரடி, தொண்டர்களிடம் இன்ப ...
இந்தியா
இந்தியன் பினாமி லீக்... : ஆதி முதல் அந்தம் வரை அனைத்திலும் ஊழல்:
இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக, வீடு, அலுவலகம், பள்ளி, கல்லூரி, கடைத் தெரு என, எங்கு பார்த்தாலும் ஐ.பி.எல்., பற்றித் தான் பேச்சு. சென்னை அணிக்கு கோப்பை கிடைக்குமா, மும்பை தான் இந்த முறை வெற்றி பெறும், சச்சின் இந்த வயதிலும் அசத்தலாக விளையாடுகிறாரே, இதுபோன்ற விஷயங்கள் தான், தற்போது அதிகம் பேசப்படுகின்றன.இந்த அள...
இந்தியா
இது யானைகளின் கதை : தொடர்வதும், முடிப்பதும் உங்கள் கையில்...
கம்பீரத்தின் அடையாளம்; காட்டுக்குள் வலம் வரும் பிரமாண்டம்; குழந்தைகளுக்கு குதூகலம்; பெரியவர்க்கு கடவுளின் மறுவுருவம்; காட்டை விளைவிக்கும் விவசாயி; உலகில் வாழும் வன உயிரினங்களில் உருவில் பெரிய மிருகம்; இத்தனை பெருமைகள் அனைத்தும் கொண்ட வன உயிரினம், வேறெது...நம்ம யானையார்தான். யானை மிதித்து ஒருவர் சாவு; மின்சாரம் தாக்கி ஆ...
இந்தியா
உரத்த சிந்தனைசுதேசிக் கல்வியே சுயகல்வி-
வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் (அனுமதி மற்றும் நடைமுறை ஒழுங்குபடுத்தும்) சட்ட வரைவை லோக்சபாவில் அறிமுகப்படுத்துவதற்கு, மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இந்த வரைவு அனேகமாக இந்த ஆண்டிலேயே, சட்டமாக இயற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த பல்கலைக் கழகங்களுக்கு, இந்தியாவில் நிறுவனங்களை...
தமிழகம்
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி : பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., கோரிக்கை
தமிழக ரயில்வே திட்டங்கள் எல்லாம், நிதி வசதி இல்லாமல் முடங்கி கிடக்கின்றன. என வே, புதிய ரயில் வழித்தடங்கள், அகலப்பாதை மாற்றம், இரட்டைப்பாதை ஆக்குதல் மற்றும் மின்மயமாதல் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீட்டை செய்ய மத்திய அரசு முன்வர வேண்டுமென, பார்லிமென்டில் தி.மு.க.,வும் அ.தி. மு.க.,வும் குரல் கொடுத்த...
இந்தியா
மாயாவதியின் சட்ட விரோத சம்பாத்தியம்: சுப்ரீம் கோர்ட்டில் நிரூபிக்க சி.பி.ஐ., தயார்
புதுடில்லி: 'உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி சட்ட விரோதமாக, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளது குறித்த ஆதாரங்கள் தயாராக உள்ளன. எந்தநேரம் வேண்டு மானாலும் அதை கோர்ட்டில் சமர்ப்பிக்கத் தயார்' என்று, சுப்ரீம் கோர்ட்டில், சி.பி.ஐ., கூறியுள்ளது.சமீபத்தில், சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., ஒரு மனு தாக்கல் செய்திருந்தது. அத...
தமிழகம்
குரூப்-2 பணியிடங்களில் தலா ஒரு இடம்: காலியாக வைத்திருக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர், நன்னடத்தை அதிகாரி பணியிடங்களில் தலா ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்த மனு: கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம், விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதன்படி, இ...
தமிழகம்
இது உங்கள் இடம்
புறந்தள்ள வேண்டும்!ச.கண்ணன், வத்தலக்குண்டிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் சட்டசபை கூட்டம் நடக்கும் போதெல்லாம், எதிர்க்கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கூட்டம் ஆரம்பித்தவுடனோ அல்லது சில மணி நேரங்களிலோ வெளிநடப்பு அல்லது வெளியில் அமர்ந்து தர்ணா என கிளம்பி விடுகின்றனர்.இவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தது எதற்காக? த...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
தமிழக வணிகர் சங்கங்களின் தலைவர் வெள்ளையன் அறிக்கை: நம் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட, விலைவாசி குறைய, வேளாண் விளைபொருட்களுக்கும், சிறு தயாரிப்பு பொருட்களுக்கும் லாபகரமான விலை கிடைக்க, தவறான பொருளாதாரக் கொள்கையிலிருந்து நாடு விடுபட வேண்டும். நாமக்கல் காங்., எம்.எல்.ஏ., ஜெயகுமார் பேச்சு: அரசியல் சாக்கடை என்ற காலம் மா...
தமிழகம்
சொல்கிறார்கள்
கற்ற கல்வி  கைகொடுக்கும் : ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயச்சந்திரன்: நாமக்கல் தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பாவின் பொது அறிவு ஆர்வமும், அம்மாவின் தமிழ்ப் பற்றும், என்னை உயர்த்தியது. என் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமானவர் என் பள்ளி ஆசிரியர் குமாரசாமி சார் தான். அவரால் தான் நான்...
தமிழகம்
உத்தவ் தாக்கரே ரத்ததானம் செய்து பரபரப்பு
மும்பை:சிவசேனா ஏற்பாடு செய்திருந்த ரத்த தான முகாமில் நேற்று 800க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் ரத்த தானம் செய்தனர்.மகாராஷ்டிர மாநிலம் தோன்றி 50 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, சிவசேனா சார்பில் மாபெரும் ரத்த தான முகாம், மும்பைப் புறநகர் பகுதியான கோரேகானில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பால் தாக்கரே மகனும், கட்சித் தலைவருமான ...
தமிழகம்
பகுஜன் சமாஜ் கட்சியில் முன்னாள் எம்.பி.,க்கள் நீக்கம்
லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியில், குற்றப் பின்னணி உடையவர்களைக் கட்சியிலிருந்து விலக்கும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, நேற்று இரண்டு முன்னாள் எம்.பி.,க்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.கடந்த 14ம் தேதி, அம்பேத்கர் பிறந்த நாளுக்குப் பின், குற்றப் பின்னணி உடைய கட்சிப் பிரமுகர்களை களையெடுக்கும் ...
தமிழகம்
மாஜி முதல்வர் வீட்டில் குழப்பம்: மகளுக்கும், மகனுக்கும் பனிப்போர்
கேரள மாநில முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகளுக்கும், மகனுக்கும் பனிப்போர் துவங்கியுள்ளது. இதனால் முரளிதரன், காங்கிரஸ் கட்சியில் சேரும் பகீரத முயற்சிக்கு பின்னடைவு ஏற்படும் நிலை எழுந்துள்ளது.கேரள மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கருணாகரன் இருந்து வந்தார். அவருக்கு தற்போது வயதாகி விட்டதால், தீவிர அரசியலில் இரு...
இந்தியா
எத்தனை மாவட்டங்கள் என்று தெரியாத பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
புதுடில்லி:அதிர்ச்சி அடையாதீர்கள்... நாட்டில் மொத்தம் எத்தனை மாவட்டங்கள் இருக்கின்றன என்று தெரியாத ஒரு மத்திய அமைச்சகம் இருக்கிறது. இவ்வளவுக்கும் அதன் சம்பந்தமான விவரம் தான் அது என்பது கூடுதல் அதிர்ச்சி தரும் விஷயம்.பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பற்றிய கிராம மேம்பாட்டுக்கான நிலைக் குழு, தனது அறிக்கையை பார்லிமென்டில் சமீபத்...
இந்தியா
போன் ஒட்டுக் கேட்பு: ம.பி., அரசு மீது புகார்
போபால்:என்னுடைய தொலைபேசி பேச்சை மத்திய பிரதேச அரசு ஒட்டுக்கேட்கிறது என, காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திக் விஜய்சிங் தெரிவித்துள்ளார். திக் விஜய்சிங் மேலும் கூறியதாவது:மத்திய பிரதேச அரசு என் தொலைபேசி பேச்சை ஒட்டுக் கேட்பது தெரியும். அதைபற்றி நான் கவலைப்படவில்லை. பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் சரத் பவார் ...
இந்தியா
மாவோயிஸ்ட்களின் பட்ஜெட் அம்பலம்: 3 மாநிலங்களுக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு
கோல்கட்டா : மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி பயன்படுத்திய லேப்-டாப் கம்ப்யூட்டர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், தங்களது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக, மேற்கு வங்கம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கு 12 கோடி ரூபாயை, மாவோயிஸ்ட்கள் ஒதுக்கியுள்ள தகவல் இடம் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அத...
தமிழகம்
கெட்டி மேளம் முழங்க, வேத மந்திரம் ஒலிக்க நடந்தது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
மதுரை:சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று, மதுரைமீனாட்சி கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.நேற்று காலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானை மற்றும் பவளக்கனிவாய் பெருமாள், கோவிலுக்கு வந்தனர். காலை 7 மணியளவில் சித்திரை வீதிகளில் மாப்பிள்ளை ஊர்வ லம் நடந்தது. பின், சுவா...
இந்தியா
வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றாரா நித்யானந்தா : போலீசார் விசாரணை
பெங்களூரு : அமெரிக்கா உட்பட ஏராளமான வெளிநாடுகளிலிருந்து சாமியார் நித்யானந்தா பணம் பெற்றுள்ளாரா என்பது குறித்த தகவல்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.பிடதி நித்யானந்தா தியான பீடத்தில், பறிமுதல் செய்யப்பட்ட லேப்-டாப், கம்ப்யூட்டர்கள் மூலம் கர்...
இந்தியா
வரியிலிருந்து தப்பிக்க ஐடியா சொன்ன வருமானவரித் துறை கமிஷனர் : 1.50 கோடி ரூபாய் ஊழல் :கம்பி எண்ணும் பரிதாபம்
மும்பை : ரொக்கம் 46 லட்ச ரூபாய்; பல்வேறு நாட்டுக் கரன்சியில் ஐந்து லட்ச ரூபாய்; 50 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள், வங்கிப் பணம் 35 லட்ச ரூபாய்; இவையெல்லாம் அரசியல்வாதியிடம் பறிமுதல் செய்யப்பட்டவை அல்ல; வருமானவரித் துறை கமிஷனரிடம் கைப்பற்றப்பட்டவை.மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் வருமானவரித் துறை கமிஷனர் சுமித்ரா பானர்ஜி. ...
தமிழகம்
நளினியை கண்காணிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை
வேலூர் : வேலூர் பெண்கள் சிறையில் நளினியிடம் மொபைல் போன் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், அவரை கண்காணிக்காமல் மெத்தனமாக செயல்பட்ட சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினியிடம்,  மொபைல் போன், இரண்டு சிம் கார்டுகள்  இருந்தது குறித்து கடந்த 21ம் தேதி முதல் விசாரணை நடந...
தமிழகம்
பிளஸ் 2 தேர்வில் கடினமான கேள்வியால் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் விழுமோ?
பிளஸ் 2 பொதுத்தேர்வில் இந்தாண்டு கணித தேர்வில் அனைத்து கேள்விகளும் கடினமாக இருந்ததால், ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் உத்தரவுப்படி, தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த உழைத்த ஆசிரியர்கள், தேர்ச்சி சதவீத வீழ்ச்சிக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலை வரும் என்ற கவலையில் மூழ்கியுள்ளன...
தமிழகம்
கெட்டி மேளம் முழங்க, வேத மந்திரம் ஒலிக்க நடந்தது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
மதுரை:சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று, மதுரை மீனாட்சி கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.நேற்று காலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானை மற்றும் பவளக்கனிவாய் பெருமாள், கோவிலுக்கு வந்தனர். காலை 7 மணியளவில் சித்திரை வீதிகளில் மாப்பிள்ளை ஊர்வ லம் நடந்தது. பின், சுவ...