category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
மானபங்க முயற்சி : 2 பேர் கைது
பாலக்கோடு: மாரண்டஹள்ளி அருகே பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர். மாரண்டஹள்ளியை அடுத்த கென்டியானயள்ளியை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் தனியாக படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன், கமலேசன் ஆகியோர் சேர்ந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றனர். அப்பெண் கூச்சல் போட்டார். அக்கம், பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் அவர்கள் இருவர் அங்கிருந்து தப்பினர். மாரண்டஹள்ளி போலீஸார் விசாரித்து, ஜெயராமன், கமலேசன் ஆகியோரை கைது செய்தனர்.
தமிழகம்
வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை மீட்ட போலீஸார்
பாலக்கோடு: பாலக்கோடு அருகே வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை போலீஸார் மீட்டனர். பாலக்கோடு அடுத்த சோமனஅள்ளி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மாரி. இவரது மனைவி சிந்து (20). இவர்களுக்கு கடந்த இரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 11ம் தேதி ஏற்பட்ட தகராறில் சிந்து கணவரிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார். உறவினர்கள் வீடுகளில் தேடியும் சிந்து கிடைக்காததால், மாரி பாலக்கோடு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், மாயமான சிந்து கோவையில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. பாலக்கோடு போலீஸார் கோவைக்கு விரைந்து சென்று விசாரித்து சிந்துவை மீட்டு, அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.
தமிழகம்
போர்மேன், இளநிலை உதவியாளர் பணி: சான்று சரி பார்க்க அழைப்பு
தர்மபுரி: சென்னை டான்சி நிறுவனத்தில் போர்மேன் பணி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கு தர்மபுரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் சான்றிதழ் சரி பார்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தால், சென்னை டான்சி நிறுவனத்தில் போர்மேன் நிலை இரண்டு மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் தகுதியான நபர்கள் பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போர்மேன் நிலை இரண்டுக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 40 வயதுக்குள்ளும் மிகவும் பிற்பட்ட, பிற்பட்ட வகுப்பினர் 37 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மேற்குரிய கல்வி தகுதியுடைய முன்னுரிமை பதிவுதார்கள் மற்றும் பெண்கள் அனைவரும் மற்றம் முன்னுரிமையற்றவர்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கடந்த 1995ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி பதிவு செய்தவர்களும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர், இதர வகுப்பினர் 1996ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரையில் பதிவு செய்வதர்கள் தங்கள் பதிவுகளை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து சரி பார்த்து கொள்ள வேண்டும். இளநிலை உதவியாளர் பணிக்கு பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 58 வயதுக்குள் இருக்க வேண்டும்.தகுதியுடைய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் முன்னுரிமை பதிவுதாரர்கள் அனைவரும் மற்றும் முன்னுரிமை அற்ற தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்கள் 2002ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வரையில் பதிவு செய்தவர்கள், தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்கள் முன்னுரிமையற்ற பதிவுதாரர்கள் 1995ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரையில் பதிவு செய்தவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து தங்கள் பதிவுகளை சரி பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம்
பருத்தி சாகுபடி கருத்தரங்கு
தர்மபுரி: நல்லம்பள்ளி யூனியன் லளிகம் கிராமத்தில் மான்சாண்டோ நிறுவனம் சார்பில் போல்கார்டு -2 பருத்தி சாகுபடி குறித்த கருத்தரங்கு நடந்தது. மண்டல உறுப்பினர் வடிவேல் தலைமை வகித்தார். மான்சாண்டோ நிறுவன மேலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பருத்தி சாகுபடி மூலம் அதிக லாபம் பெறும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது. பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான விவசாயிகள் கலந்து கொண்டு பருத்தி சாகுபடி குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனர்.
தமிழகம்
கிரிக்கெட் போட்டி
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அடுத்த ஜெகதாப்பில் பெப்சி அணி சார்பில் 10ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரையில் நடக்கிறது. மூன்று நாட்கள் நடக்கும் இப்போட்டிகளின் இறுதி போட்டி வரும் 30ம் தேதி நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு 5,005 ரூபாயும், இரண்டாம் பரிசு 4,004, மூன்றாம் பரிசு 3,003, நான்காம் பரிசு 2,002, ஐந்தாம் பரிசு 1,001, ஆறுதல் பரிசு 501 ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை காமராஜ், பெப்சி அணி தலைவர் ராஜா, சங்கர், கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
தமிழகம்
மீன் பிடிக்க அனுமதி கலெக்டரிடம் வலியுறுத்தல்
ஈரோடு: பவானி ஆற்றில் மீன் பிடிக்க அனுமதி வழங்கக்கோரி மீன் பிடி தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். பவானி மீனவர் வீதி, கிழக்கு வீதியில் 250க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் பவானியாற்றில் மீன் பிடித்து விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக மீன் பிடிக்க அனுமதி மறுக்கப்படுவதால், இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. நேற்று இவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அவர்கள் கூறியதாவது: நாங்கள் வசிக்கும் பகுதியில் காவிரி ஆறு ஓடுகிறது. பரிசலில் இங்கு மீன் பிடித்து வந்தோம். 250க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மீன் பிடிக்கும் வேலையே பிரதானம். தற்போது காவிரி ஆற்றில் நச்சுத்தன்மையுள்ள கெமிக்கல் கழிவு நீர் கலந்து ஓடுகிறது. இதனால் தண்ணீர் மாசுபட்டு, மீன் வளர்ச்சி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. பல மீன்கள் இறந்து விட்டன. முன்பெல்லாம் ஒரு நாளைக்கு பரிசலில் செல்லும் இருவர் சராசரியாக 25 கிலோ மீன்களை எடுத்து வருவர். தற்போது ஐந்து கிலோ மீன் கிடைப்பதே அரிதாகி வருகிறது. சாயக்கழிவு, தோல் கழிவுகளால் மீன்கள் சிறிதாக இருக்கும் போதே இறந்து விடுகிறது. மற்ற இடங்களில் மீன் பிடிக்க நாங்கள் சென்றால், அப்பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி மறுக்கின்றனர். பவானி ஆற்றில் கூடுதுறையில் இருந்து பவானிசாகர் முடுக்கன்துறை வரையுள்ள 60 கிலோ மீட்டர் தூரம் வரை மீன் பிடித்துக் கொள்ள மீன்வளத்துறை அனுமதி வழங்க வேண்டும். பவானி ஆற்றில் மீன் பிடிக்க மீனவளத்துறை சார்பில் அனுமதி சீட்டு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழகம்
குடிசை அமைக்க அனுமதி கீரமடை கிராமத்தினர் கலெக்டரிடம் மனு
ஈரோடு: குடிசைகளுக்கு தீவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மீண்டும் அதே இடத்தில் குடிசை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கீரமடை மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மொடக்குறிச்சி அருகே ஈஞ்சம்பள்ளி கீரமடை கிராமம் அரிஜன நகரை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: அரிஜன நகரில் மூன்று ஆண்டாக 16 குடும்பங்கள் வசித்து வருகிறோம். ரேஷன் கார்டு, வீட்டு வரி ரசீது போன்றவை உள்ளன. நாங்கள் குடியிருந்து வந்த இடம் புறம்போக்கு நிலம். அந்த இடத்தில் இருந்து எங்களை அகற்றும் எண்ணும் சிலரால் 2009 முதல் பல வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறோம். சமீபத்தில் சிலர் குடிசைகளுக்கு தீவைத்து அழித்துவிட்டனர். சென்ற 23ம் தேதி மீண்டும் அதே இடத்தில் குடிசைகள் அமைக்க முயன்ற போது, ஈஞ்சம்பள்ளி வி.ஏ.ஓ., மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட ஐந்து பேர், "யாரும் இங்கு குடிசை போடக்கூடாது, மீறி குடிசை அமைத்தால் கைது செய்வோம்' என்று மிரட்டுகின்றனர். அங்கு குடிசை அமைக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம்
கொல்லம்பாளையத்தில் மீண்டும் இருவர் காயம்
ஈரோடு: ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே மேம்பாலத்தில் மொபெட் மீது பஸ் மோதிய விபத்தில் இரு பெண்கள் படுகாயம் அடைந்தனர். ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரைக்கு சென்ற அரசு பஸ் கொல்லம்பாளையம் ரயில்வே மேம்பாலத்துக்கு கீழ் உள்ள சாலையில் சென்றபோது, எதிரே மூதாட்டி, ஒரு பெண் இருவரும் சென்று கொண்டிருந்த மொபெட் மீது மோதியது. மூதாட்டிக்கு கால் நசுங்கியது. பெண்ணுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து காரணமாக இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஈரோட்டில் இருந்து செல்லும் வாகனங்கள் காளைமாட்டு சிலை வரையும், கரூர் சாலையில் லோட்டஸ் மருத்துமனை வரையும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சூரம்பட்டி போலீஸார் விபத்தில் காயம் அடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் மேம்பாலத்துக்கு கீழ் உள்ள சாலை வழியாக வருவதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக உள்ளது. இதன்காரணமாக அடிக்கடி இப்பகுதியில் விபத்து ஏற்படுகிறது. சென்ற சில நாட்களுக்கு முன் இதே இடத்தில் லாரி ஒன்று மொபெட்டில் மோதிய விபத்தில், மொபெட் எரிந்து முன்னாள் கவுன்சிலர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம்
விசைத்தறிகள் ஒரு வாரம் ஸ்டிரைக் ஆரம்பம்
ஈரோடு: நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறியாளர்கள் நேற்று முதல் ஒரு வார காலத்துக்கு வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர். ஜவுளி உற்பத்திக்கு விசைத்தறிகள் மூலம் நெய்யப்படும் காடாத் துணி முக்கியத்துவம் வாய்ந்தது. ஈரோடு மாவட்டத்தை சுற்றியுள்ள தறிபட்டறைகளுக்கு திண்டுக்கல், கோவையிலிருந்து நூல் கொண்டு வரப்படுகிறது. வெளிநாடுகளுக்கு பஞ்சு, நூல் ஏற்றுமதியால் நூல் விலை உயர்ந்துள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு விசைத்தறியில் 40 முதல் 60 மீட்டர் வரை காடாத்துணி உற்பத்தி செய்யப்படுகிறது. மின் தட்டுப்பாடால் பத்து மீட்டர் துணி உற்பத்தி குறைந்துள்ளது. நூல்விலை உயர்வு, மின்தட்டுப்பாடு காரணமாக ஒரு மீட்டர் காடா துணி 10 முதல் 30 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதனால், தொழில் நடத்த முடியாமல் தறிப்பட்டறை உரிமையாளர்கள் தவிக்கின்றனர். ஈரோடு, வீரப்பன்சத்திரம், லக்காபுரம், சித்தோடு, பகுதியில் 4000 மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 50 ஆயிரம் விசைத்தறிகள் உள்ளன. நூல் விலை உயர்வு மற்றும் மின்தட்டுப்பாட்டை கண்டித்து ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விசைத்தறிகள் ஒரு வாரத்துக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளன. இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 30 லட்சம் மீட்டர் காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சார்பு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஈரோடு வீரப்பன்சத்திரம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ""நூல் ஏற்றுமதி செய்யப்படுவதால் நூல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால், காடாதுணி உற்பத்தி செய்ய முடியவில்லை. மின்வெட்டு காரணமாக தறி ஒன்றுக்கு பத்து மீட்டர் துணி உற்பத்தி குறைந்துள்ளது. நூல்விலையை குறைக்க வேண்டும், சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரி வருகிறோம். வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள துணி உற்பத்தி பாதிக்கபட்டுள்ளது. மத்திய, மாநில அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.
தமிழகம்
வேளாண் கூட்டுறவு வங்கியில் முகாம்
ஈரோடு: ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில் உறுப்பினர் கல்வித்திட்ட முகாம் பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்தது. முகாமில் கூட்டுறவு ஒன்றிய தனி அலுவலர் சோமகாந்தன், உறுப்பினர்களின் கடமை, பொறுப்பு, கூட்டுப்பொறுப்பு, பொதுசேவை, அக்ரி கிளினிக் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு சங்கம் சார்பில் அளிக்கப்படும் சேவை குறித்து கூறினார். நடராஜன் சத்தியராஜ், குழு ஊக்குனர் மணிமேகலை பேசினர். முகாமில் அகர்வால் கண்மருத்துவமனை சார்பில் கண்பரிசோதனை முகாம் நடந்தது. இதில் 56 உறுப்பினர்கள் பயனடைந்தனர். சங்க செயலாளர் சதாசிவம் வரவேற்றார். சங்க எழுத்தர் ஜோதி நன்றி கூறினார்.
தமிழகம்
எதிர்கட்சிகள் இன்று பந்த் வீதி வீதியாக ஆதரவு கேட்பு
ஈரோடு: விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில், இன்று பொதுவேலை நிறுத்தம் நடக்கிறது. பந்த்துக்கு ஆதரவு கேட்டு  நேற்று வீதிவீதியாக எதிர்க்கட்சியினர் ஊர்வலம் சென்றனர். இந்தியா முழுவதும் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட எட்டு முக்கிய எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்கு அ.தி.மு.க., முழு ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்தத்தில் அ.தி.மு.க., - கம்யூனிஸ்ட்- மார்க்சிஸ்ட் - ம.தி.மு.க., - ஃபார்வர்டு பிளாக் ஆகிய எதிர்க்கட்சிகள் பங்கேற்கின்றன. இதில், பா.ம.க., பங்கேற்வில்லை. ஈரோடு மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தம் செய்வது தொடர்பாக அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள், இரண்டு முறை ஆலோசனை நடத்தினர். விலைவாசி உயர்வு, தமிழகத்தில் மின்வெட்டு, நூல்விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், பெட்ரோல் விலையை குறைக்கக் கோரியும் இன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடக்கிறது. இப்போராட்டத்தில் அனைத்து வணிகர்கள், போக்குவரத்து பஸ், லாரி, டெம்போ, ஆட்டோ, கார் உரிமையாளர், டிரைவர்கள், தொழிலாளர்கள், ஜவுளி தயாரிப்பு தொடர்பான அனைத்து உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழக பட்ஜெட்டை கண்டித்து 22, 23, 24 ஆகிய தேதிகளில் அனைத்து ஒன்றியங்களிலும் அ.தி.மு.க., சார்பில் பிரச்சாரம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.பொதுவேலை நிறுத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடந்தது. அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், ம.தி.மு.க., சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பூங்கொடி சாமிநாதன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வீதிவீதியாக சென்று ஆதரவு தரும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டனர். துண்டு பிரசுரங்கள் கொடுத்து, ஆதரவு திரட்டினர்.
தமிழகம்
நடவடிக்கை என்ன? கள் இயக்கம் கேட்கிறது
ஈரோடு: கள் குறித்து, நால்வர் குழுவும், தமிழக முதல்வரும் தெளிவான பதிலை தர வேண்டும் என கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது: தமிழகத்தில் கள்ளுக்கு விதித்திருக்கும் 23 ஆண்டு கால தடையை நீக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையிலான நால்வர் குழுவை கடந்தாண்டு மே 31ம் தேதி அரசு நியமித்தது. இக்குழு ஆறு மாதத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்யும் என முதல்வர் கூறினார். இந்த காலக்கெடு முடிந்து ஐந்து மாதமாகியும் இதுவரை முடிவு அறிவிக்கப்படவில்லை. அறிக்கை தாக்கல் செய்து மூன்று மாதமாகி விட்டதாக குழு தலைவர் தரப்பில் கூறப்படுகிறது. அதே நேரத்தில் குழு இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என சட்டசபையில் முதல்வர் கூறியுள்ளார். இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.குழுவின் தலைவரும், தமிழக முதல்வரும் இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதையும், அறிக்கை வெளியிடுவதில் ஏற்பட்டிருக்கும் காலதாமத்துக்கு காரணம் என்ன என்பதையும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம்
ஏ.ஐ.டி.யு.சி., கூட்டம்
ஈரோடு: ஈரோடு ஏ.ஐ.டி.யு.சி., மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் முனியப்பன் தலைமை வகித்தார். கம்யூனிஸ்ட் செயலாளர் குணசேகரன், ஏ.ஐ.டி.யு.சி., பொது செயலாளர் சின்னசாமி ஆகியோர் பேசினர். விலைவாசி உயர்வை கண்டித்தும், அதற்கு காரணமான ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்ய வேண்டும். பெட்ரோல், டீஸல் விலையை குறைக்க வேண்டும். விலை உயர்வை கட்டுப்படுத்த பொது விநியோகத்திட்டத்தை அனைத்து மக்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஈரோடு மாவட்ட தொழிலாளர்கள் பயனடையும் வகையில் வருங்கால வைப்புநிதி துணை மண்டல அலுவலகம் ஈரோட்டில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம்
மக்கள் குறைதீர் கூட்டம்
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சுடலைகண்ணன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மாயகிருஷ்ண ன் முன்னிலை வகித்தார். 61 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தமிழகம்
இருள்சூழ்ந்த கள்ளிப்பட்டி புதிய பாலம்
கோபிசெட்டிபாளையம்: கோபியில் இருந்து கள்ளிப்பட்டிக்கு செல்ல பவானியாற்றில் கட்டப்படும் புதிய பாலத்தில் தெருவிளக்கு வசதி இல்லாததால், இரவில் அவ்வழியே செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். கள்ளிப்பட்டி - கோபி பகுதியை இணைக்கும் வகையில் நஞ்ச கவுண்டன்பாளையம் பகுதியில் பவானியாற்றின் குறுக்கே இரண்டு கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய உயர்மட்ட பாலம் பல சிரமங்களுக்கு இடையே கட்டப்பட்டது. புதிய பாலத்தை கடந்த 4ம் தேதி நெடுஞ்சாலை துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். தற்போது அந்த பாலத்தின் வழியாக கணக்கம்பாளையம், துறையம்பாளையம் மற்றும் கள்ளிப்பட்டியில் இருந்து கோபி வரும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் தெருவிளக்கு வசதி இல்லை. மேலும், நஞ்ச கவுண்டன்பாளையத்தில் இருந்து பாலத்தின் வரை உள்ள ஐந்து கிலோ மீட்டர் தூர ரோட்டிலும் தெருவிளக்கு வசதி கிடையாது. இருபுறமும் வாய்க்கால்கள் மற்றும் விளைநிலங்கள் உள்ளதால், பகல் நேரத்தில் கூட இந்த ரோட்டில் கொடிய விஷமுள்ள பாம்புகள் நடமாட்டத்தை காண  முடியும். இதனால், இரவு நேரங்களில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்ல பொதுமக்கள் அஞ்சுகின்றனர். கள்ளிப்பட்டி மற்றும் கோபியை சேர்ந்த மக்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் தெருவிளக்கு வசதி இல்லாததால் மாலை 5 மணிக்கு மேல் அந்த வழியாக வாகனங்கள் அதிகளவில் செல்வதில்லை. குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் நஞ்சை புளியம்பட்டி மற்றும் பங்களாபுதூர் வழியாக 12 கி.மீ., வரை சுற்றித்தான் கள்ளிப்பட்டிக்கு செல்கின்றனர். கள்ளிப்பட்டி பகுதியில் இருந்து கோபி நகருக்குள் செல்லும் நஞ்சகவுண்டன்பாளையம் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளதால் லாரி உள்ளிட்ட வாகனங்கள் மிகவும் திணறியபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. கள்ளிப்பட்டி-கோபி பகுதி மக்கள் நீண்டகாலமாக விடுத்த கோரிக்கையால் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை இரவிலும் பயன்படுத்த ஏதுவாக பாலத்திலும், நஞ்சகவுண்டன்பாளையம் பகுதியிலும் தெருவிளக்கு வசதி செய்ய வேண்டும்.  குண்டும் குழியுமாக உள்ள ரோடுகளையும் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம்
அத்தாணியில் சூறாவளி மழை : முறிந்து விழுந்தன பனைமரங்கள்
அந்தியூர்: அந்தியூர், அத்தாணி சுற்றுவட்டாரத்தில் வீசிய பலத்த சூறாவளி காற்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பனை மரங்கள் முறிந்து விழுந்தன. நெல் அறுவடை நிறைவு பெற்றதால், சேதம் ஏதுமில்லை. கோடை வெயில் மட்டுமல்ல, சூறாவளி காற்றும் பலமாக வீசி வருகிறது. வெயிலுக்கு பயந்து வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களை, அடிக்கடி "கட்டாகும்' மின்சாரமும் ஒரு வகையில் துன்புறுத்துகிறது. கிராமப்புறங்களிலும், நகரங்களை மிஞ்சும் அளவுக்கு வெப்பம் வீசி மரங்களை கருகச் செய்கிறது. ஆங்காங்கே சிறிய அளவில் பெய்யும் மழையால் குளிர்ச்சி ஏற்படினும், பலமாக வீசும் சூறாவளிக் காற்று, வாழை மரங்கள், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால், விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளனர். அந்தியூரை அடுத்த அத்தாணி சுற்றுவட்டாரப் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன் இரவில், பயங்கர இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது. தொடர்ந்து இடி, மின்னல், மழையை மிஞ்சும் வகையிலும், மிரட்டும் வகையிலும் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. கூரை வீடுகளில் உள்ளவர்கள் பயந்தபடியே இருந்தனர். கால்நடைகள் சத்தம் எழுப்பிய வண்ணம் இருந்தன. இதில், சவுண்டப்பூர், மேவாணி பிரிவு அருகில் உள்ள வாய்க்கால் ஓரங்களில் இருந்த பனை மரங்கள் முறிந்து விழுந்தன. ஒரு சில மரங்கள் அடியோடு பெயர்ந்தன. சில தென்னை மரங்களும் பலத்த காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், முறிந்து விழுந்தன. மரங்கள் ஒடிந்து விழுந்த வயல்களில், ஏற்கனவே நெல் அறுவடை முடிந்து விட்டதால் பயிருக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை.
தமிழகம்
மானிய கோரிக்கையை எதிர்பார்க்கும் 100 வயது கால்நடை மருத்துவமனை
ஈரோடு: நூறாண்டுகள் பழமை வாய்ந்த ஈரோடு கால்நடை பெரு மருத்துவமனை கட்டிடத்துக்கு, மே 4ல் சட்டசபையில் நடக்கும் மானியக் கோரிக்கையில் புத்துயிர் கிடைக்குமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 48 கால்நடை மருந்தகங்கள், 42 கிளை நிலையங்கள், 20 தரம் உயர்த்தப்பட்ட கிளை நிலையங்கள், இரண்டு கால்நடை பெரு மருத்துவமனை, ஆறு கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. மாவட்டத்தில் ஈரோடு, கோபி ஆகிய பகுதிகளில் கால்நடை பெரு மருத்துவமனைகள் உள்ளன. ஈரோட்டில் உள்ள கால்நடை பெருமருத்துவமனை 1915ம் ஆண்டு 2.08 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. 1981ல் கால்நடை பெரு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இவ்வளாகத்தில் கால்நடை மண்டல இணை இயக்குநர் அலுவலகம், துணை இயக்குநர் அலுவலகம், நோய் புலனாய்வு பிரிவு, கோழி நோய் ஆராய்ச்சிக் கூடம், உதவி இயக்குநர் அலுவலகங்களும் உள்ளன. மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரதம மருத்துவமனை அலுவலக கட்டிடம் 1982ல் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டிடத்தில் கால்நடைகளின் உள் மற்றும் வெளி சிகிச்சை கூடம், பண்டக வைப்பறை ஆகியவை உள்ளன. ஈரோடு மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கால்நடைகளை இங்கு கொண்டு வருகின்றனர். கால்நடைகள், செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை, ஆடு, பசு, எருமை ஆகியவற்றுக்கு கருவூட்டல், சினை பரிசோதனையும் செய்யப்படுகிறது. கால்நடை பிரதம மருத்துவமனையில் தற்போது ஒரு தலைமை டாக்டர், இரு உதவி டாக்டர்கள், இரு இன்ஸ்பெக்டர்கள், மூன்று உதவியாளர்கள், ஒரு இளநிலை உதவியாளர் ஆகியோர் பணியில் உள்ளனர். மாலை 5 மணிக்கு மேல் இவர்கள் பணி முடிந்து சென்று விடுகின்றனர். அதன் பின், பிராணிகளை எடுத்து வருவோர் பெருத்த ஏமாற்றமடைகின்றனர். தமிழகத்தில் சேலம், சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் 24 மணி நேர கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மாவட்டங்களில் கூடுதல் மருத்துவரும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். அதுபோல், ஈரோடு மாவட்ட கால்நடை மருத்துவமனையையும் 24 மணி நேர மருத்துவமனையாக மாற்றினால் பயனுள்ளதாக அமையும். கால்நடை பெரு மருத்துவமனையின் உட்பகுதி மற்றும் மாடி அறைகள் முற்றிலும் பழுதடைந்துள்ளன. இவை எப்போதும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. மருத்துவமனையின் பின்பகுதியில் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. மருத்துவமனையை புதுப்பிக்க பொதுப் பணித்துறைக்கு பரிந்துறை செய்யப்பட்டு ஓராண்டாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழக சட்டசபையில் மே 4, 5ம் தேதிகளில் கால்நடை பரமரிப்பு துறை மானியக் கோரிக்கை நடக்கிறது. அப்போதாவது ஈரோடு மாவட்ட கால்நடை பெருமருத்துவமனை பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழகம்
ஒகேனக்கல் திட்டத்துக்கு எதிர்ப்பு தமிழக எல்லையில் கன்னட அமைப்பு சாலை மறியல்
சத்தியமங்கலம்: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை துவங்குவதற்கு முன், முதலில் இப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதை கண்டறிய ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, நேற்று தமிழக எல்லையில் மறியல் நடத்துவதாக கஸ்தூரி கர்நாடக ஜனபிரசிய வேதிகே அமைப்பினர் அறிவித்தனர். தலைவர் ரமேஷ்கவுடா தலைமையில் 200 பேர் தமிழக எல்லைப்பகுதியான கர்நாடகாவுக்கு உட்பட்ட புளிஞ்சூர் வந்தனர். நேற்று காலை 11.45 மணியில் இருந்து 12.15 மணி வரை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சாம்ராஜ்நகர் மாவட்ட எஸ்.பி., பிரகாஷ் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். மறியல் காரணமாக ஈரோடு மாவட்டம் திம்பம், ஆசனூர் வழியாக கர்நாடகா செல்லும் வாகனங்கள், சத்தி அருகேயுள்ள பண்ணாரியில் காலை 9 மணி முதலே நிறுத்தப்பட்டன. சத்தி டி.எஸ்.பி., சுந்தரராஜன் மற்றும் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். புளிஞ்சூரியில் மறியல் நிறைவுற்ற தகவலுக்கு பின், வாகனங்கள் கர்நாடகா செல்ல அனுமதிக்கப்பட்டன. மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த திடீர் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம்
மாரியம்மன் கோவில் குண்டம் 1,000 பக்தர்கள் நேர்த்திக்கடன்
மோகனூர்: மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மோகனூரில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏப்ரல் 13ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. தினமும் பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்தில் ஊற்றி ஸ்வாமியை வழிபட்டனர். நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வடிசோறு படையல் வைக்கப்பட்டது. நேற்று காலை பூக்குழி பூஜை போடப்பட்டது. மாலை 3 மணிக்கு காவிரி ஆற்றுக்கு சென்ற 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி, ஊர்வலமாக வந்து கோவில் முன் இருந்த குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். மாலை 7 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று (ஏப்., 27) காலை கிடா வெட்டு நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும்  மாரியம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். தொடர்ந்து மாலை பொங்கல், மாவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை (ஏப்., 28) அதிகாலை கம்பம் பிடிங்கி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.
தமிழகம்
தண்ணீர் பந்தல் திறப்பு
ராசிபுரம்: ராசிபுரம் சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில், பழைய பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. தொகுதி பொது செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். நகராட்சி கவுன்சிலர் சீரங்கன் முன்னிலை வகித்தார்.  நாமக்கல் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் செல்வக்குமார் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, மக்களுக்கு நீர்மோர் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட துணை தலைவர் சுந்தரம், செயலாளர்கள்  இளங்கோ, சுப்ரமணியம், நிர்வாகிகள் அருணாசலம், நாகலிங்கம், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
தமிழகம்
இலவச கண் சிகிச்சை முகாம்
நாமக்கல்: மாதிரி கிராமம் அக்கரைப்பட்டியில், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மற்றும் சோழமண்டலம் எம்எஸ் இன்சூரன்ஸ் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இன்சூரன்ஸ் அதிகாரி கண்ணன் தலைமை வகித்தார். முகாமில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் சுவபன்குமார் மாகாபத்ரா, சுகன்யா, கவுதமன் ஆகியோர் கண் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர் முகாமில் 150 பேர் சிகிச்சை பெற்றனர்.  தனி அலுவலர் விவேகானந்தன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தனி அலுவலர் மணி, செயலாளர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழகம்
ஆன்-லைனில் வரி செலுத்தும் வசதி துவக்கம்
ப.வேலூர்: ப.வேலூர் டவுன் பஞ்சாயத்தில், ஆன்-லைன் மூலம் சொத்து வரி செலுத்தும் வசதி துவக்க விழா நடந்தது.டவுன் பஞ்சாயத்து சேர்மன் மணிமாரப்பன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் குருராஜன், கவுன்சிலர் ராமகிருஷ்ணன், துணை சேர்மன் சிவக்குமார், துப்புரவு ஆய்வாளர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆன்லைன் வசதியை பயன்படுத்தி, டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மக்கள் நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டிய வரியை எங்கிருந்து வேண்டுமானாலும் செலுத்தலாம்.
தமிழகம்
தொலைதூர கல்வி பயில விண்ணப்பம் விநியோகம்
நாமக்கல்: அண்ணாமலை பல்கலை தொலைத்தூர கல்வி மையத்தில் 2010-11ம் ஆண்டுக்கான பட்டப்படிப்புகளுக்கு சேர்க்கை படிவம், கையேடு வெளியிடப்பட்டுள்ளது. சேந்தமங்கலத்தில் மலைவாழ் மக்கள் கல்வி வளர்ச்சி மேம்பாட்டுக்காக அண்ணாமலை பல்கலை தொலைதூர கல்வி மையம் துவங்கப்பட்டுள்ளது. அதில், 2010-11ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் மற்றும் கையேடு வெளியிடும் விழா நடந்தது. ஏ.இ.இ.ஓ., ராஜவேல் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, முதல் விண்ணப்பத்தை வெளியிட்டார். மைய தலைமை அலுவலர் பரத்குமார், அலுவலர்கள் செந்தில்குமார், சரவணன், சிவக்குமார், லட்சுமி, செந்தில், செல்வக்குமார், சதீஷ்குமார், கோபாலகிருஷ்ணன், யுவராஜ், பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர். ப.வேலூர் அண்ணாமலை பல்கலை தொலைதூர கல்வி மையத்தில் நடந்த விழாவில், கந்தசாமி கவுண்டர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அலமேலு விண்ணப்பம் மற்றும் கையேட்டை வெளியிட்டார். மைய பொறுப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகம்
பொன்வரதராஜ பெருமாள் கோவிலில் 29ல் தேரோட்டம்
ராசிபுரம்: ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை தேர் திருவிழா, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் (20ம் தேதி) துவங்கி ஏப்ரல் 25ம் தேதி வரை தினமும் கருடன், அனுமந்தன், அன்னம், சிம்மம், கஜலட்சுமி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பொன்வரதராஜ பெருமாள் ஸ்வாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, புஷ்ப விமானம் ஊர்வலம் நடந்தது. வரும் 28ம் தேதி குதிரை வாகனத்தில் ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது. ஏப்ரல் 29ம் தேதி காலை அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு ஸ்வாமி எழுந்தருளுகிறார். மாலை 3 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.30ம் தேதி திருத்தேர் நிலை வந்தடைகிறது. மே 1ம் தேதி மாலை தீர்த்தவாரி உற்சவமும், சத்தாபரண நிகழ்ச்சியும் நடக்கிறது.
தமிழகம்
கொந்தளம் மாரியம்மனுக்கு நாளை பால்குட அபிஷேகம்
நாமக்கல்: ப.வேலூர் அடுத்த கொந்தளம் மகாமாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி தினத்தன்று லட்சார்ச்சனை, 108 வலம்புரி, 108 இடம்புரி சங்காபிஷேகம், 1,008 பால்குட அபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, இன்று காலை 5.55 முதல் லட்சார்ச்சனை, சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து மகா தீபாராதனை நடக்கிறது.நாளை (ஏப்., 28) அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6.30 மணிக்கு சங்கு ஸ்தாபனம், வேதபாராயணம், அன்னபூரணி, மகா சரஸ்வதி ஹோமம் நடக்கிறது. காலை 9.15 மணிக்கு பால்குடங்கள் காவிரி ஆற்றுக்கு புறப்படுகிறது.காலை 10 மணிக்கு 1,008 பால்குட அபிஷேகம், 108 வலம்புரி, 108 இடம்புரி சங்காபிஷேகம் நடக்கிறது. மாலை 4.55 மணிக்கு திருஊஞ்சல் உற்சவம, வெள்ளிக்கவசம் அலங்கார நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
தமிழகம்
தென்னை மரத்தில் மதுரை வீரன் : ப.வேலூரில் பரபரப்பு
ப.வேலூர்: பில்லூர் கிராமத்தில் உள்ள தென்னை மரத்தில் மதுரை வீரன் ஸ்வாமி இறங்கியதாக கூறி, மரத்துக்கு கிராம மக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ப.வேலூர் அருகே பில்லூர் கிராமத்தை சேர்ந்த சரசு (50) என்பவருக்கு தச்சன்தோட்டம் பகுதியில் விவசாய நிலம் உள்ளது. நேற்று முன்தினம் சரசுவின் தோட்டத்திற்கு கணக்கெடுப்புக்கு வந்த பெண் பாப்பாத்தி என்பவர் சாமியாட துவங்கினார். அப்போது, அந்த கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலனி மதுரை வீரன் ஸ்வாமி என் மீது இறங்கியுள்ளது. அந்த கோவிலில் பில்லி சூனியம் இருப்பதால், கோவில் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் தென்னை மரம் ஒன்றில் இறங்கியிருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.  கிராமம் முழுவதும் இந்த தகவல் பரவியதையடுத்து, தோட்டத்தில் உள்ள தென்னை மரத்திற்கு கிராம மக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர். பூஜையின்போது, மக்கள் கூடியிருந்த இடத்தில் பாம்பு புகுந்து சென்றது. ஸ்வாமி தான் பாம்பு வடிவில் சென்றதாக கருதி, மக்கள் வணங்கினர். வேப்பமரத்தில் பால்வடிதல், பிள்ளையார் பால் குடித்தார் என்பது போல், தென்னை மரத்தில் ஸ்வாமி இறங்கியதாக கூறி கிராம மக்கள் வழிபாடு நடத்திய சம்பவம் ப.வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம்
இன்ஜினியரிங் கல்லூரியில் புவி நாள் விழா
ராசிபுரம்: ராசிபுரம் ஞானமணி இன்ஜினியரிங் மற்றும் மேலாண் கல்லூரி சார்பில், புவி நாள் விழா நடந்தது. கல்வி நிறுவன தலைவர் அரங்கண்ணல் தலைமை வகித்தார். மாணவர் பிரபு வரவேற்றார். முதன்மை செயல் அலுவலர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். தாளாளர் மாலாலீனா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்லூரி நிர்வாக அலுவலர் பிரேம்குமார், முதல்வர் டென்சிங், மேலாண் துறைத்தலைவர் அசோக்குமார் ஆகியோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இளைஞர்கள் கடமை, உலகம் வெப்ப மயமாதலுக்கு காரணம், மரம் நடுதலின் அவசியம் குறித்து விளக்கினர். கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
தமிழகம்
தமிழகம், கேரளாவில் முட்டை விலை 228 காசு
நாமக்கல்: தமிழகம், கேரளாவில் முட்டை விலை 228 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.  முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். தொடர்ந்து, 225 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை 3 காசு உயர்த்தி 228 காசாக நிர்ணயிக்கப்பட்டது. சில வாரங்களாக முட்டை விலையில் எந்த மாற்றம் இல்லாத நிலையில், நேற்று 3 காசு உயர்ந்திருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை விபரம் வருமாறு: ஹைதராபாத் 200 காசு, விஜயவாடா, தனுகு 197 காசு,  சென்னை 230 காசு, மைசூர் 225 காசு, பெங்களூரு 200 காசு, மும்பை 223 காசு, டில்லி 205 காசு, கோல்கத்தா 226 காசு. நாமக்கல்லில் நேற்று நடந்த பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டைக்கோழி விலை ஒரு ரூபாய்  உயர்த்தி 42 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், கறிக்கோழி விலை 60 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.
தமிழகம்
கண்களை கட்டி மனு அளித்த மக்கள்
சேலம்: சேலம் கலெக்டர் குறை தீர் கூட்டத்துக்கு கண்களை கட்டியபடி, பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர். ஒடுக்கப்பட்ட பெண்கள் உரிமை இயக்கம் சார்பில் கண்களை கட்டியபடி, பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடந்த சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்துக்கு வந்தனர். அங்கு மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: குகை ஆற்றோரம் கிழக்கு தெருவை சேர்ந்த சரசு என்பவருக்கும் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே  பொதுக்குழாயில் குடிநீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க கூடாது என்று சரசு மற்றும் அவருக்கு ஆதரவாக வந்தவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இது சம்பந்தமாக செவ்வாய்ப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்யவில்லை. மக்கள் விரோத போக்கை கடை பிடிக்கும் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழகம்
தேசிய சாப்ட் டென்னிஸ்: தமிழக வீரர்கள் பங்கேற்பு
சேலம்: தேசிய சப்-ஜூனியருக்கான ஐந்தாவது சாப்ட் டென்னிஸ் போட்டி சண்டிகாரில் வரும் 29ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து சேலம் மாணவர்கள் சிபி, விகாஸ், விஜய்கிருஷ்ணன், சூர்யா, கரூரைச் சேர்ந்த ஆதித்யா, நாமக்கல்லைச் சார்ந்த மகாதேவராஜன், திருச்சியைச் சேர்ந்த சிவபாலன், ஈரோட்டைச் சார்ந்த நகுல், சிற்பி, மாணவியர் பிரிவில் சேலம் மாணவி அனிஷா, கரூர் மாணவி அபிமித்ரா மற்றும் டீன் மேனேஜர்கள் கிரிராம், பூபதி, ரம்யா ஆகியோர் சண்டிகர் புறப்பட்டுச் சென்றனர். தமிழ்நாடு மாநில சாப்ட் டென்னிஸ் சங்க செயலாளர் மவுனீஸ்வரி, நாமக்கல் சங்க தலைவர் முத்துகிருஷ்ணன், செங்குந்தர் பள்ளி முதல்வர் இருதயபுஷ்பராஜ், சேலம் சங்க செயலாளர் செம்பண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழகம்
சங்ககிரியில் சூறாவளியுடன் மழை: டோல்கேட் அமைக்கும் பணி பாதிப்பு
சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு, சங்ககிரி அருகே சேலம் - குமாரபாளையம் இடையிலான தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் அமைக்கப்பட்டிருந்த டோல்கேட் மேற்கூரை டெக்கரேசன் இரையானதால் டோல்கேட் அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. உக்கிரத்தை தணிக்கும் வகையில் நேற்று முன்தினம் சூறாவளியுடன் மழை பெய்தது.பலத்த காற்றால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வாகன ஓட்டிகளும், மக்களும் பாதிக்கப்பட்டனர். சூறாவளிக்கு சாலையோர மரங்கள் வேருடன் சாய்ந்தன. சங்ககிரி அருகே சேலம்- குமாரபாளையம் இடையிலான நான்கு வழிச்சாலைக்கான டோல்கேட் அமைக்கும் பணி பாதிக்கப்பட்டது. பல மாதங்களாக சங்ககிரி அருகே டோல்கேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. டோல்கேட்டின் அழகிற்காக மேற்கூரையில் சீலிங் தகட்டில் டெக்கரேசன் செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் சூறாவளியுடன் பெய்த மழைக்கு டோல்கேட் ஊழியர்கள் அமைத்த சீலிங் டெக்கரேசன் காற்றில் பறந்தது. டெக்கரேசன் பணி பாதிக்கப்பட்டதால் ஊழியர்கள் பெருத்த ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்தனர். தேசிய நெடுஞ்சாலை ஆணைய சேலம் திட்ட இயக்குனர் பொன்னையா கூறியதாவது: சேலம் கொண்டலாம்பட்டி பை-பாஸில் இருந்து குமாரபாளையம் வரை 53 கிலோ மீட்டருக்கு தனியார் நிறுவனம் மூலம் சாலைப்பணிகள், பாலம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் 470 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. செலவினை ஈடு செய்யும் வகையில், சங்ககிரி அருகே டோல்கேட் அமைத்து சாலை உபயோகிப்பாளர் கட்டணம் வசூலிக்க முடிவெடுக்கப்பட்டது. அதற்கான பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. காற்றுடன் பெய்த பலத்த மழையால் டோல்கேட் மேற்கூரையில் செய்யப்பட்டிருந்த டெக்கரேசன் பறந்தது. டோல்கேட் அமைக்கும் பணியில் சிறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் டோல்கேட் அமைக்கும் பணியில் ஊழியர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர். வரும் மே மாதம் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. அந்த மாத இறுதியில் டோல்கேட் திறக்கப்பட்டு, சாலை உபயோகிப்பாளர் கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம்
வில் வித்தை பயிற்சி துவக்கம்
சேலம்: சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று மாவட்ட அளவிலான இலவச கோடைக்கால  வில்வித்தை பயிற்சி முகாம் துவங்கியது. சேலம் மாவட்ட வில் வித்தை கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து மாவட்ட அளவிலான கோடைகால வில்வித்தை பயிற்சி முகாமை நடத்துகின்றன.வில்வித்தை பயிற்சி முகாம் காலை 6.30 மணியில் இருந்து 9.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் நடத்தப்படுகிறது. சப்ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் மாற்றுத்திறன் உடையோர் இலவசமாக இப்பயிற்சியை பெறலாம். பயிற்சி முகாம் மே 16ம் தேதி வரை 21 நாள் நடக்கிறது.நற்று சேலம் காந்தி ஸ்டேடியத்தில் பயிற்சி முகாமை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார்.  மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) ரகுநாதன், சேலம் வில் வித்தை கழக துணை தலைவர் கார்த்தி, செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகம்
அனல் மின் நிலையத்தில் விபத்து தொழிலாளி பலி: இருவர் படுகாயம்
மேட்டூர்: மேட்டூர் புதிய அனல் மின்நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் நேற்று மாலை தவறி கீழே விழுந்தனர். அதில் ஒருவர் பலியானார். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். மேட்டூரில் 3,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 600 மெகாவாட் அனல்மின்நிலையம் கட்டுமான பணி நடக்கிறது. சென்னை பி.ஜி.ஆர்., எனர்ஜி சிஸ்டம் லிமிடெட் என்ற நிறுவனம் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் மேட்டூரில் தங்கி புதிய அனல்மின்நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளனர். புதிய அனல்மின் நிலையத்தில் எரிக்கப்படும் நிலக்கரி சாம்பலை வெளியேற்றுவதற்காக 275 மீட்டர் உயரமுள்ள மெகா சிம்னி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிம்னியில் மேற்பகுதியில் வேலை செய்வதற்காக தொழிலாளர்கள் மூன்று பேர் நேற்று மாலை லிப்டில் சிம்னியின் மேற்பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது லிப்ட் மேலே சென்று சுவரில் இடித்ததில் மூன்று பேருக்கும் தலையில் அடிபட்டுள்ளது. தலைநசுங்கிய யாதவ் பர்மன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த மேட்டூர் பி.ஜி.ஆர்., சிஸ்டம் தொழிலாளர் குடியிருப்பை சேர்ந்த பிரசாந்த் ஜித் பிஸ்வாஸ் (23), அமர்பால் (28) இருவரும் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின், அமர்பால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தமிழகம்
தேர்த்திருவிழா
தலைவாசல்: தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி மறுவாழ்வு மைய மாரியம்மன் கோவில்,  தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியில் அரசு மறுவாழ்வு மையம் உள்ளது. அங்குள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத தேர்திருவிழா நேற்று நடந்தது. மாரியம்மனுக்கு  பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மாலை 6 மணியளவில் தேர் வடம் பிடித்து இழுத்தனர். மழைவேண்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.
தமிழகம்
மூதாட்டி சாவு
ஆத்தூர்: ஆத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், இறந்து கிடந்த மூதாட்டி குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். ஆத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று இரவு 7 மணியளவில், சுமார்  75 வயது மதிக்க தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். யார், எந்த ஊர் என்ற விபரங்கள்  தெரியவில்லை. போலீஸார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
ஏரி காவலருக்கு கொலை மிரட்டல் ஒருவர் கைது 10 பேருக்கு வலை
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஏரி காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒருவரை பனமரத்துப்பட்டி போலீஸார் கைது செய்தனர். மேலும், பத்து பேரை தேடி வருகின்றனர். சேலம்  மாநகர் மக்களின் குடிநீர் தேவைக்கு 1911ல் பனமரத்துப்பட்டி ஏரி அமைக்கப்பட்டது. 2,700 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை சேலம் மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 20ம் தேதி குரால்நத்தம் பிடாரி அம்மன் கோவில் ஏரி பகுதியில் ஏரி காவலர்கள் சின்னதுரை, சரவணன், மதி ஆகியோர் சென்றனர். அப்போது, "ஏரி மாநகராட்சிக்கு சொந்தம் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது. பல ஆண்டுகளா விவசாயம் செய்து வந்த எங்களுக்கு தான் ஏரி சொந்தம். இனி நீங்கள் ஏரிக்குள்  வரக்கூடாது' என்று மஞ்சமுத்து உள்ளிட்ட சிலர்  ஏரி காவலர்களை மிரட்டி உள்ளனர். இது குறித்து சேலம் மாநகராட்சி உதவி கமிஷனர்  தங்கவேல், பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் திருநீலகண்டன், எஸ்.ஐ., தமிழரசி  விசாரித்து அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஏரிக்குள் காவலர்களை விடாமல் மறித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மஞ்சமுத்துவை கைது செய்தனர். மேலும், பத்து பேரை தேடி வருகின்றனர்.
தமிழகம்
ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆத்தூர்: ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் ஆக்கிரமிப்பு  அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.சேலம் - உளுந்தூர்பேட்டை வரையிலான நான்கு வழிச்சாலைபணிகள், சேலம் - காட்டுக்கோட்டை, காட்டுக்கோட்டை - உளுந்தூர்பேட்டை என இரண்டு கட்டங்களாக நடந்து வருகின்றன.  சேலம் - ஆத்தூர் வழிப்பாதையில் நான்கு வழிச்சாலை பணியையொட்டி சாலையோர மரங்களை அப்புறப்படுத்தி, சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணி நடந்து வருகிறது.  சாலை அமைவிடம் வரை உள்ள கட்டிடங்கள், வீடுகள், போன்றவற்றை இடித்து, புதிய தார் சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம்
உறவினர்களால் தாக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை மறுப்பு
சேலம்: உறவினர்களால் தாக்கப்பட்ட சிறுவனுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது. சேலம் அருகே குப்பனூர் காட்டு வளவை சேர்ந்தவர் குழந்தைக் கவுண்டர். அவரது மனைவி ராஜாமணி, மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். மூன்று பேர் திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர். கடைசி மகனான ஈஸ்வரன் (12) அவர்களுடன் வசித்து வருகிறான். குழந்தை கவுண்டர் சகோதரர் கோடுவான் வீட்டில் சில தினங்களுக்கு முன் 1,500 ரூபாய் திருடு போய் உள்ளது.ஆத்திரமடைந்த கோடுவான், அவரது சகோதரர் செட்டியார், தங்கராஜ், சின்னபையன், ரத்னவேல், சுந்தர்ராஜ் ஆகியோர் ஈஸ்வரனை கம்பு மற்றும் கம்பியால் தாக்கி, வாயில் சூடு வைத்துள்ளனர். அவனுக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.ஈஸ்வரனை உறவினர்கள் நேற்று சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஈஸ்வரன் தந்தை குழந்தை கவுண்டர், நுழைவு சீட்டுடன் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றார். அங்கு பணியில் இருந்த டாக்டர், குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு செல்லும் படி கூறினர். குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு சென்ற அவர்களிடம் பணியில் இருந்த டாக்டர்கள், "சிகிச்சை அளிக்க வேண்டும் எனில் நீங்கள் குடியிருக்கும் பகுதிக்கு உட்பட பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் இருந்து எம்.ஓ., வாங்கி வரவேண்டும்' என, கூறினர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஆர்.எம்.ஓ., அலுவலகத்துக்கு சென்று, அங்கு பணியில் இருந்த உதவி ஆர்.எம்.ஓ.,விடம் விளக்கம் கேட்டனர். குழந்தைகள் நலப்பிரிவில் காட்டும்படி உதவி ஆர்.எம்.ஓ., பரிந்துரை செய்தார். ஆனால், அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், "சிகிச்சை அளிக்க முடியாது' என்றனர். சிகிச்சை பெற முடியாமல் மருத்துவமனை வளாகத்தில் நீண்ட நேரம் காத்து இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பிற நோயாளிகள், சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கும் படி மருத்துவமனை டீன் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னரே சிகிச்சை அளிக்கப்பட்டது.இது குறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், "இந்த சிறுவனுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாம். உண்மை நிலையை அறிய சைல்டு லைன் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிறுவனுக்கு உதவி புரிய வேண்டும். சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
தமிழகம்
நாளை சித்ரா பவுர்ணமி விழா கோவில்களில் சிறப்பு வழிபாடு
சேலம்: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நாளை சேலம் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில், கோட்டை அழகிரிநாதர் கோவில், ராஜகணபதி கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் நாளை சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில், சீரகாபாடி 1008 சிவன் கோவில், சேலம் ஐயப்பா ஆஸ்ரமம் ஆகிய இடங்களில் நாளை மாலை சிறப்பு பூஜை நடக்கிறது.* சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பால்குட ஊர்வலம், சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடக்கிறது. இரவில் 1,008 திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோட்டை மாரியம்மன் திருவிளக்கு பூஜை விழா குழுவினர் செய்து உள்ளனர்.* சேலம் அயோத்தியாபட்டணம் கோதண்டராமர் கோவிலில் நாளை காலை சுதர்ஸன ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், திருவிளக்கு பூஜை, மூலவருக்கு விசேஷ அபிஷேகம், உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. மாலையில் ஸ்வாமி உள்புறப்பாடு நடக்கிறது.
தமிழகம்
மாணவி கொலை வழக்கு சாட்சி விசாரணை நிறைவு
சேலம்: சங்ககிரி மோரூர் பகுதியை சேர்ந்த பழனிவேலு, மீனா தம்பதி மகள் மோனிஷா(8). அவர் சங்ககிரி கிரேட்சன் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். 2008 நவம்பர் 1ல் பள்ளிக்கு சென்ற மோனிஷா வீடு திரும்பாததால், போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 5ல் பள்ளிக்கு பின்பகுதியில் உள்ள குன்றில் மோனிஷா பிணமாக கண்டெடுக்கப்பட்டாள். விசாரணையில் அப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த தரணிசெல்வன்(33) என்பவரே இக்கொலையை செய்திருப்பது தெரியவந்தது. தனது கள்ளத்தொடர்பை கண்டித்து, வேலை நீக்கம் செய்த பள்ளி நிர்வாகத்தை பழிவாங்க மாணவியை கொலை செய்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.இவ்வழக்கு சேலம் மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பள்ளி தாளாளர் பூங்கோதை செல்லதுரை உள்பட 30 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். நேற்று நடந்த சாட்சி விசாரணையில், வழக்கை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதியிடம் குறுக்கு விசாரணை நடந்தது. ஐந்து மணி நேரம் நடந்த இவ்விசாரணையுடன், இவ்வழக்கின் சாட்சி விசாரணை நிறைவடைந்துள்ளது. வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
தமிழகம்
துணை கமிஷனர் பொறுப்பேற்பு
சேலம்: சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) நேற்று பொறுப்பேற்று கொண்டார். சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனராக ஜெயந்தி பொறுப்பு வகித்து வந்தார். அவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.பி., ரவீந்திரன் சேலம் போலீஸ் துணை கமிஷனராக (குற்றம் மற்றும் போக்குவரத்து) இடமாற்றம் செய்யப்பட்டார். ஜெயந்தி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார். சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனராக ரவீந்திரன் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
தமிழகம்
திருவிழாவில் தகராறு தேடப்பட்டவர்கள் கோர்ட்டில் சரண்
ஆத்தூர்: ஆத்தூர் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், தேடப்பட்ட அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் உள்பட இருவர் ஆத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆத்தூர் அருகே கல்லாநத்தம் கிராமத்தில் கடந்த 11ம் தேதி மழை வேண்டி வருண பகவானுக்கு திருவிழா நடந்தது. தொடர்ந்து ஸ்வாமி வீதியுலா நடந்தது.அப்போது, துக்க நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட பந்தலை அகற்ற சலவை தொழிலாளி சின்னபையன் மறுத்தார். ஆத்திரம் அடைந்த  அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் கர்ணன், பால்சுப்ரமணி உள்ளிட்டோர் சின்னபையன் தாக்கினர். அவர், ஆத்தூர் போலீஸில் புகார் செய்தார். அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் கர்ணன், பால் சுப்ரமணி, பூமாலை, சங்கர், ஜெயபால் ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, பால் சுப்ரமணி, பூமாலை, சங்கர் ஆகிய மூன்றுபேர் கைது செய்யப்பட்டனர். இருவரை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் கர்ணன், ஜெயபால் ஆகிய இருவரும் நேற்று ஆத்தூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
தமிழகம்
கள்ளக்காதலை கண்டித்தவர் கொலை பெண் உட்பட ஐந்து பேருக்கு ஆயுள்
சேலம்: ஆத்தூர் அருகே நடந்த கள்ளக்காதல் கொலையில் பெண் உட்பட ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் முதலாவது விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பைத்தூர் ரோட்டை சேர்ந்தவர் குப்புசாமி(48). அவரது சகோதரர் கணேசன். அவரது மனைவி உமா (36). கணேசன் இருதய நோயால் இறந்து விட்டார். உமாவுக்கு சொந்தமான விவசாய நிலத்தை அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (25) பயிரிட்டு வந்துள்ளார். அதில், முருகேசனுக்கும், உமாவுக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டது. அவரது காதலை கணேசனின் சகோதரர் குப்புசாமி கண்டித்துள்ளார். மீறியும் அவர்கள் தங்களது கள்ளக்காதலை தொடர்ந்தனர். குப்புசாமி, மற்றொரு சகோதரர் சின்னதுரை  ஆகியோருக்கும் முருகேசனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. அதன் காரணமாக 2007 ஜூன் 9ல் குப்புசாமி, தனது தம்பி கணேசன் மகன் வானவில்லை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.ஆத்தூர் அருகே கோரையார் என்ற இடத்தில் அவர்கள் வந்த போது, முருகேசன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட கும்பல் குப்புசாமியை சரமாரியாக வெட்டியது. சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.ஆத்தூர் போலீஸார் விசாரித்து முருகேசன் (25), செந்தில்குமார் (23), சுரேஷ்(19), சின்னதுரை (29), உமா(36) ஆகியோரை கைது செய்தனர். கொலை வழக்கு சேலம் முதலாவது விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி கலைவாணி விசாரித்து குப்புசாமியை கொலை செய்த குற்றத்துக்காக முருகேசன், உமா ஆகியோருக்கு மூன்று ஆயுள் தண்டனை மற்றும் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும், செந்தில்குமார், சுரேஷ் ஆகியோருக்கு இரண்டு ஆயுள் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம், சின்னதுரைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
தமிழகம்
கரூர் கிளைச்சிறையில் நீதிபதி திடீர் ஆய்வு
கரூர்: கரூர் கிளை சிறைச்சாலையில் நீதிபதிகள் திடீர் ஆய்வு நடத்தினர். கரூர் கிளை சிறைச்சாலையில் கரூர் மாவட்ட நீதிபதி ராமமூர்த்தி, தலைமை குற்றவியல் நீதிபதி இளங்கோ ஆகியோர் நேற்று மாலை திடீர் ஆய்வு நடத்தினர்.பின்னர் நீதிபதி ராமமூர்த்தி கூறியதாவது: மாதந்தோறும் சிறைச்சாலையில் ஆய்வு செய்து பதிவு செய்யப்படுவது வழக்கம். கரூர் கிளை சிறைச்சாலையில் தற்போது 11 கைதிகள் உள்ளனர்.இவர்களுக்கு உணவு உள்ளிட்ட பொரு ட்கள் வழங்கப்படுவதில் திருப்தியாக உள்ளது. கைதிகளுக்கு வக்கீல் வசதி அளித்தல் குறித்தும், மனித உரி மை மீறல் குறித்தும் எந்த பிரச்னையும் இல்லை.  சிறைச்சாலையில் யோகா பயிற்சி அளிக்க உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது. இங்கும், கைதிகள் விரும்பினால் ஏற்பாடு செய்யப்படும். சிறிய வழக்குகளில் அபராதம் செலுத்தினால் வழக்கு முடிக்க உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிறிய வழக்குகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழகம்
பழையஜெயங்கொண்டத்தில் சாலை ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் அவதி
லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அடுத்துள்ள பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. மக்கள் சாலையில் செல்ல அவதிப்படுகின்றனர்.பழைய ஜெயங்கொண்டம் பகுதியானது மிகவும் பரபரப்பாக மக்கள் இயங்கும் பகுதியாக உள்ளது. பஞ்சாயத்து அலுவலகம், கடைவீதி மற்றும் பள்ளிகள், சமுதாய கூடம், வாரச்சந்தை என அனைத்தும் இப்பகுதியில் உள்ளது. மேலும், சுற்றியுள்ள மகாதானபுரம், ஓமந்தூர், குப்புரெட்டிப்பட்டி, லட்சுமணப்பட்டி  கிராம மக்களும் தினசரி பல்வேறு தேவைக்கு வருகின்றனர். குறிப்பாக மகாதானபுரம் - பஞ்சப்பட்டி சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாகவே காணப்படுகிறது. பழைய ஜெயங்கொண்டம் காந்திசிலை அருகிலிருந்து லட்சுமணப்பட்டி சாலை, கடைவீதி பகுதி வரை கடைகள் சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், போக்குவரத்து  நெரிசலுக்கு தீர்வு காணமுடியாமல் உள்ளது. இப்பகுதியில் சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளை, ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தமிழகம்
அய்யர்மலை சித்திரை தேர் திருவிழா
குளித்தலை: குளித்தலை அரு கே அய்யர்மலையில் சித்திரை பெருவிழாவையொட்டி தேர் வ டம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 18ம்தேதி துவங்கி வரும் 29ம்தேதி வரை நடக்கிறது.ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக அதிகாலை ஐந்து மணிக்கு தேர் ஏறும் ஸ்வாமிக்கு அபிஷேகம் நடந்தது. காலை 7.25 மணிக்கு ரிஷப வாகனத்தில் ரதாரோகண ம் திருத்தேர் வடம்பிடித்தல் நிக ழ்ச்சி நடந்தது.  அறங்காவலர் குழு த்தலைவர் முருக கணபதி தலைமை வகித்தார். அறங்காவலர்கள் சுப்பிரமணியன், கல்யா ணி, தங்கராஜ், கோவில் ஈ.ஓ., அ ருண்பாண்டியன், சத்தியமங்கல ம் பஞ்சாயத்து தலைவர் பிச்சை ஆகியோர் முன்னிலையில் தேர்வடம் பிடித்து துவக்கி வைத்தனர். சித்திரை திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியில் கோவில் குடிப்பாட்டுகாரர்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். கடந்த ஆண்டை விட பக்தர்கள் சார்பில் அமைக்கப்படும்  அன்னதானம், நீர்மோர் மற் றும் பொட்டல சாப்பாடு அதிகமாக காணப்பட்டது. விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த தானியங்களான நெல், கடலை, மிளகாய், வெங்காயம், பருப்பு போன்றவையை தேர் சக்கரத்தில் போட்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.  குளித்தலை யூனியன் தலைவர் வனிதா, துணை தலைவர் கந்தசாமி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் சந்திரன், முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம், மக்கள் பிரதிநிதிகள், கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர். விழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழகம்
வக்கீலை போலீஸ் தாக்கிய சம்பவம் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம்
கரூர்: கரூரில் வக்கீலை தாக்கிய போக்குவரத்து போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் வக்கீல் செங்கோட்டையன்(26).  நேற்று முன்தினம் மாலை ஈரோடு சாலையில் ஹோண்டா டூவீலரில் சென்ற போது, வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து எஸ்.ஐ., பார்த்தசாரதி, வக்கீலை தரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.வக்கீல் பார்த்தசாரதி, கரூர் அமராவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு உள்நோயாளியாக சேர்ந்தார். தொடர்ந்து வக்கீல் சங்க தலைவர் மாரப்பன் தலைமையில் நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் டவுன் டி.எஸ்.பி., ஞானசிவக்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் தள்ளிவைக்கப்பட்டது. "வக்கீல் புகார் அடிப்படையில், சம்மந்தப்பட்ட எஸ்.ஐ., மீது துறை நடவடிக்கை எடுக்க' டி.எஸ்.பி., உறுதியளித்தார். இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: வரும் 28ம் தேதிக்குள் எஸ்.ஐ., பார்த்தசாரதி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால், 29ம் தேதி வக்கீல் சங்க கூட்டத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும். வக்கீல் தாக்கப்பட்டதை கண்டித்து 26ம் தேதி ஒரு நாள் மட்டும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படுவதுடன், காயமடைந்த வக்கீலை சிகிச்சைக்கு அனுமதிக்காமல் ஒரு மணிநேரம் காத்திருக்க வைத்த கரூர் அமராவதி தனியார் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இத்தீர்மான நகல் இந்திய மெடிக்கல் கவுன்சிலுக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.சங்க தலைவர் மாரப்பன், செயலாளர் நடேசன், பொருளாளர் ராஜேந்திரன், துணை தலைவர்கள் திருமூர்த்தி, ரமேஷ், இணை செயலாளர் பி.ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தியா
முன்னாள் கவர்னர் திவாரி மனு : ஏற்க மறுத்தது சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி : உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரி தான் எனது தந்தை என, ரோகித் சேகர் என்பவர் டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்கக்கூடாது என கோரும் மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. ஆந்திர முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி தான் எனது தந்தை என, ரோகித் சேகர் என்பவர் நீண்ட நாட்களாக கோரி வருகிறார். ஆனால், இதை திவாரி மறுத்து வருகிறார். "என்னுடைய தந்தை திவாரி தான் என்பதற்கு ஆதாரமாக அவரது மரபணுவையும், என்னுடைய மரபணுவையும் பரிசோதிக்க உத்தரவிடவேண்டும்' எனக் கோரி, டில்லி ஐகோர்ட்டில் ரோகித் சேகர் மனு செய்தார். இந்த மனுவை, ஒரு நீதிபதி கொண்ட பெஞ்ச் தள்ளுபடி செய்து விட்டது. அதன் பின், டிவிஷன் பெஞ்ச் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ரோகித் சேகர், திவாரிக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ஷெர்சிங்கின் மகள் உஜ்வாலா சர்மாவுக்கும் பிறந்தவர், என கூறப்படுகிறது. இது குறித்து மரபணு சோதனைக்குட்படுத்துவது குறித்த கருத்தை தெரிவிக்கும் படி திவாரிக்கு, ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை எதிர்த்து திவாரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளார். "ரோகித் சேகரின் மனுவை டில்லி ஐகோர்ட் விசாரிக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்' என, திவாரி தனது மனுவில் கூறியிருந்தார். ஆனால், டில்லி ஐகோர்ட்டின் விஷயத்தில் தாங்கள் தலையிட விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது, திவாரியின் மனுவை விரைந்து பரிசீலிக்க வேண்டிய அவசியமும் இல்லை, எனக் கூறி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தெரிவித்துள்ளது.
தமிழகம்
ஆவி அமுதாவுக்கு முன் ஜாமீன்
சென்னை : மிரட்டல் வழக்கில் ஆவி அமுதாவுக்கு, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் முன்ஜாமீன் வழங்கியது. அடியாட்களை வைத்து மிரட்டுவதாக ஆவி அமுதாவுக்கு எதிராக, அபிராமபுரம் போலீசில் நடிகை கனகா புகார் கொடுத்தார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் ஆவி அமுதா மனுத்தாக்கல் செய்தார். மனுவில், "நடிகை கனகா ஏற்கனவே என் மீது புகார் கூறியிருந்தார். தற்போது வேண்டுமென்றே பொய் புகார் கூறியுள்ளார். எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்' என கோரியிருந்தார். இம்மனுவை நீதிபதி தேவதாஸ் விசாரித்தார். ஆவி அமுதாவுக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி தேவதாஸ், விசாரணைக்கு தேவைப்படும் போது, போலீசில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்தார்.
தமிழகம்
சோளிங்கர் அருகே பயங்கரம் வாலிபர் மீது ஆசிட் வீச்சு
சோளிங்கர்: சோளிங்கர் அருகே முன் விரோதம் காரணமாக முகத்தில் ஆசிட் வீசியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சோளிங்கர் அருகே சோமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு மகன் பிரபு. வேன் டிரைவர் . இவர் இங்குள்ள தனியார் நிறுவனத்தில் கான்டிராக்ட்டில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் அடிக்கடி விபத்து ஏற்படுத்தியதால் டிரைவர் வேலையை விட்டு நிறுத்தி விட்டனர். பின்னர் கோனேரி கிராமத்தை சேர்ந்த உதயகுமார் (23) வேன் டிரைவராக புதியதாக பணியமர்த்தப்பட்டார்.இதனால் இவர்கள் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று மாலை 4 மணிக்கு சோளிங்கர்-அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் அருகே நின்று கொண்டிருந்த உதயகுமாரை சோமசமுத்திரம் காலனியை சேர்ந்த பிரபு அவரது நண்பர்கள் ராஜ்குமார், ஜேம்ஸ் ஆகிய 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை செய்வதாக மிரட்டியும் அவர்கள் கையில் வைத்திருந்த ஆசிட் எடுத்து முகத்தில் ஊற்றினர். இதில் படுகாயம் அடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் கொடுத்த வாக்கு மூலத்தின் பேரில் சோளிங்கர் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமணி, ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிட்டை ஊற்றிய 3 பேரையும் சோளிங்கர் போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகம்
கார் மோதி சிறுவன் பலி
குடியாத்தம்: குடியாத்தம் தரணம்பேட்டையை சேர்ந்தவர் யாசின். ஷû கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சாதிக்பாஷா (4). நேற்று முன்தினம் மாலை வீட்டருகே உள்ள ரோட்டோரம் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, அந்த வழியாக வந்த கார் சிறுவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் அதே இடத்தில் இறந்தான். குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
தமிழகம்
போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு நெமிலி அதிமுகவினர் நோட்டீஸ்
அரக்கோணம்: கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு நெமிலி அதிமுக நிர்வாகிகள் நேற்று ஆதரவு நோட்டீஸ் வினியோகித்தனர்.எதிர்கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு மற்றும் பொது வேலை நிறுத்தம் நடக்கிறது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு நெமிலியில் உள்ள எல்லா கடைகளுக்கும் அரக்கோணம் சட்டமன்ற தொகுதி இணை செயலாளரும், முன்னாள் ஒன்றிய செயலாளருமான வக்கீல் சு.ரவி நோட்டீஸ் தந்து ஆதரவு கேட்டார்.இதில் நெமிலி பேரூராட்சி அதிமுக செயலாளர் செல்வம், மதிமுக செயலாளர் தனஞ்செழியன், கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வெங்கடேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன், மாவட்ட பிரதிநிதி சிதம்பரம், சிறுணமல்லி பஞ்., தலைவர் மணிவண்ணன், நெமிலி அவைத்தலைவர் சத்தியமூர்த்தி, பேரவை செயலாளர் அசோகன், முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் குமார், ஏழுமலை, பேரவை தலைவர் அருள், இளைஞர் பாசறை இணை செயலாளர் வசந்த்ஜெயின், பஞ்., செயலாளர் ஆறுமுகம், மாசிலாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்புஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு
வாணியம்பாடி: வாணியம்பாடியில் மக்கள் தொகை கணக்கெடுப்பது பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. வாணியம்பாடி தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு இசுலாமியா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. தாசில்தார் சாவித்திரி தலைமை வகித்தார். மண்டல துணை தாசில்தார் பாக்கியலட்சுமி முன்னிலை வகித்தார். இதில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பிரசாந்த், தாசில்தார் சாவித்திரி மற்றும் அலுவலர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பது பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பினை நடத்தினர். பயிற்சி வகுப்பில் 50க்கும் அதிகமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன், உதவியாளர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகம்
புள்ளி மான் மீட்பு
திருவண்ணாமலை: கண்ணமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்கப்பட்டது. கண்ணமங்கலம் அடுத்த இரும்புலி செங்குளம் கிராமத்திற்குள் நேற்று அதிகாலை புள்ளி மான் ஒன்று வழி தவறி வந்தது. தெரு நாய்கள் மானை துரத்தின. தப்பியோடிய மான், பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்தது. சந்தவாசல் வனத்துறை அதிகாரிகள், மானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மீண்டும் ஜவ்வாதுமலை காட்டுப்பகுதியில் விட்டனர்.
தமிழகம்
பைக் மீது கார் மோதி இருவர் பரிதாப பலி
திருவண்ணாமலை: வந்தவாசி அருகே பைக் மீது கார் மோதியதில், சென்னையை சேர்ந்த இருவர் பலியாகினர். சென்னை ஆவடியை சேர்ந்தவர் காளிமுத்து (42). அவரது மைத்துனர் குமார் (40). இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டுவில் உறவினர் இல்ல திருமண விழாவில் நேற்று முன் தினம் கலந்து கொண்டனர். நேற்று காலை 10 மணிக்கு அங்கிருந்து பைக்கில் புறப்பட்டு சென்னை சென்றனர். ஏந்தல் கூட்டு சாலை அருகே, வந்தவாசியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த "அம்பாசிடர்' கார், பைக் மீது மோதியது. காளிமுத்து சம்பவ இடத்தில் இறந்தார். படுகாயமடைந்த குமார், வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். வடவணக்கம்பாடி போலீஸார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
அ.தி.மு.க பொதுக்கூட்டம்
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டில் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது.சேத்துப்பட்டு - வந்தவாசி ரோட்டில் உள்ள காமராஜர் சிலை அருகே, விலைவாசி உயர்வை கண்டித்து ஒன்றிய, நகர அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் அரிக்குமார் தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் அர்ஜுனன், துணைச்செயலாளர் முகமது அனீப், போளூர் தொகுதி செயலாளர் முருகன், மணி, இஸ்மாயில், கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.கூட்டத்தில், பேச்சாளர் பாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சின்னக்குழந்தை, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணி, முன்னாள் பொருளாளர் தனசேகரன், தெற்குமேடு ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூ., வெங்கடேசன், ம.தி.மு.க ஷாஜகான், ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.மாவட்ட பொறுப்பாளர்கள், பஞ்., தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், பிற அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலவை பிரதிநிதி பாபு நன்றி கூறினார்.
தமிழகம்
புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி : கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அணுமின் நிலையத் திற்கு வெளியே காமராஜர் சிலைமுன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். அவர் கூறுகையில், ""தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. கூடங்குளம் அணுஉலையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் தமிழக மக்களைத்தான் பாதிக்கும்.  மின் தட்டுப்பாடுள்ள தமிழகத்திற்கு இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் வழங்க வேண்டும்,'' என்றார்.
தமிழகம்
ஓடும் ரயிலில் தவறி விழுந்து பெண் படுகாயம்
தூத்துக்குடி : கோவில்பட்டி, புதுக்கிராமம் சிந்தாமணி நகர், குருசாமி மனைவி முத்துராணி (25). இவர், குடும்பத்தினருடன் நேற்று பகல் 11 மணியளவில், கோவில்பட்டியிலிருந்து மணியாச்சிக்கு, சென்னை - தூத்துக்குடி சிறப்பு ரயிலில் பயணம் செய்தார். குமாரபுரம் பகுதியில் ரயில் சென்றபோது,அந்த பெட்டியிலிருந்த குழாயில், முத்துராணி முகம் கழுவச்சென்றார். அங்கு ஒரு வளைவில் ரயில் திரும்பியபோது, நிலைதடுமாறிய முத்துராணி, ரயிலுக்குள் இருந்து வாசல் கதவு வழியாக தரையில் கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை, ரயில்வே ஊழியர்கள் மீட்டனர். ரயில், கடம்பூர் ஸ்டேஷனில் நின்றவுடன், முத்துராணி உறவினர்கள் அதிலிருந்து இறங்கி வந்து அவரை பார்த்தனர். அவர் நெல்லை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகம்
மின்னல் தாக்கி விவசாயி பலி
தூத்துக்குடி : கோவில்பட்டி, நாலாட்டின்புத்தூரைச் சேர்ந்தவர் செல்லத்துரை(52). விவசாயியான இவர், நேற்று மதியம் 2.30 மணியளவில், அங்குள்ள இவரது தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென மழை பெய்யவே, கொய்யா மரத்தின் கீழ் சென்று நின்றார். அப்போது ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் செல்லத்துரை, படுகாயமடைந்து அங்கேயே இறந்தார். 15 ஆடுகள் சாவு: நாலாட்டின்புத்தூரைச் சேர்ந்தவர் முத்துச்சாமி(45), நேற்று மதியம் அங்குள்ள மலைப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். மழையின் போது மின்னல் தாக்கியதில், 15 ஆடுகள் இறந்தன. நாலாட்டின்புத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
கொலையான போலீஸ்காரர் வலது கையை காணோம்
திருநெல்வேலி : களக்காடு அருகே கொலை செய்யப்பட்ட போலீஸ்காரரின் வலது கையை கொலை செய்தவர்கள் எடுத்துச் சென்று விட்டனர். திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்தவர் பன்னீர்(59). ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ.,வான இவரது மகன்கள் ஜெயப்பிரகாஷ்(19), கோபாலகிருஷ்ணன்(30). 2008 ல் கலந்தபனை என்ற ஊரில் நடந்த கோயில் விழாவில், ஜெயப்பிரகாசிற்கும் மற்றொரு கோஷ்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் எதிர்தரப்பினர் பன்னீரை வெட்டினர். அவர் உயிர் தப்பினார். இதற்கு பழிக்கு பழியாக கோபாலகிருஷ்ணன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் எதிர்தரப்பை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரை 2009ல் கொலை செய்தனர். போலீஸ்காரராக இருந்த கோபால கிருஷ்ணன், கொலை வழக்கில் சிக்கியதால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், முத்துராமலிங்கம் தரப்பினர் நேற்றுமுன்தினம் கோபாலகிருஷ்ணனின் வலது கையை வெட்டி, துண்டித்து கொலை செய்தனர். மேலும் அந்த கையை எடுத்துச்சென்று விட்டனர். அந்த கை கிடைக்காத நிலையில், நேற்று கோபாலகிருஷ்ணனின் உடல் அடக்கம் சாலைப்புதூரில் நடந்தது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.
தமிழகம்
போதை பயணி விமானத்தில் ரகளை
திரிசூலம்: பிராங்பர்ட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த போதை பயணி ஒருவர் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது ரகளை செய்தார். சென்னையில் விமானம் தரையிறங்கியதும் அவரை பிடித்த போலீசார், விசாரணைக்கு பின் எச்சரித்து அனுப்பினர். ஹாலந்து நாட்டைச் சேர்ந்தவர் ஜரேஸ்லேன்(32). இவர், பிராங்க்பர்ட்டில் இருந்து, நேற்று முன்தினம் புறப்பட்ட லுப்தான்சா விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். விமான பயணத்தின் போது வழங்கப்பட்ட, மதுவை அளவுக்கு அதிகமாக அருந்தினார். இதனால், போதை தலைக்கேறிய நிலையில், சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டார். தனது இருக்கைக்கு முன் அமர்ந்திருந்த ஒரு குழந்தையின் தலையில் அடித்தார். இதை தட்டிக்கேட்ட அக்குழந்தையின் தாயிடமும் தகராறு செய்தார். போதை உச்சத்தில் இருந்த அவரை விமான ஊழியர்கள் சமாதானப்படுத்த முயன்றனர். இதையடுத்து, ஜரேஸ்லேன் குறித்தும், அவர் விமானம் பறந்த போது செய்த ரகளை குறித்தும், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் அளித்தார். இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த சி.ஐ.எஸ்.எப்., போலீசார், ஜரேஸ்லேன் விமானத்தில் இருந்து இறங்கியதும் அவரை மடக்கினர். போலீசாரை கண்டதும், போதை இறங்கிய நிலையில், தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதாக ஜரேஸ்லேன் கூறினார். இதைத் தொடர்ந்து, சக பயணிகளிடம் அவர் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து, போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.
தமிழகம்
வழிப்பறியில் இழந்த 40 சவரன் மீட்பு : திருட்டு வழக்கில் 12 பேர் கைது
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கச் சங்கிலி பறிப்பு வழக்கில் ஈடுபட்ட, 12 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து, 40 சவரன் தங்க நகைகளையும் மீட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில், பெண்களை பைக்கில் தொடர்ந்து வந்து தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து செல்வது, தொடர் கதையாகி வந்தது. இதையடுத்து திருவள்ளூர் எஸ்.பி.,வனிதா உத்தரவின்பேரில், குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி., மகேஸ்வரன் தலைமையில், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள் திருவள்ளூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, பைக்கில் வேகமாக வந்த திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த ராஜேஷ் (22) சிக்கினார். விசாரணையில், அவர் ஊத்துக்கோட்டை அடுத்த என்.எம்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த ராஜாவுடன் சேர்ந்து, திருவள்ளூரில் மூன்று செயின் பறிப்பு வழக்கிலும், பெரியபாளையத்தில் வீடு புகுந்து வழிப்பறி செய்த வழக்கிலும், கார் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. இவர்களிடமிருந்து, இருபது சவரன் நகைகள், ஒரு குவாலிஸ் கார், மூன்று பைக்குகள், இரண்டு டி.வி.டி பிளேயர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். திருத்தணியில் நான்கு பைக்குகளில் வந்த அம்பத்தூர் பீட்டர் (37), காவேரிப்பாக்கம் சரவணன் (24), அரியூர் செல்வம் (26), வேளச்சேரி ரமேஷ்குமார் (38), வேலூர் லோகநாதன் (25), பானாவரம் நித்தியானந்தம் (24), கொண்டபாளையம் தசரதன் (23) ஆகிய ஏழு பேரை சந்தேகத்தின் பேரில், கைது செய்து போலீசார் விசாரித்தனர். இவர்கள் அனைவரும் திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் வழிப்பறி, செயின் பறிப்பு, பைக் திருட்டு ஆகியவற்றில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்களிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 10 சவரன் நகைகள், 6 பைக்குகள், இரண்டு மொபைல் போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஊத்துக்கோட்டை பகுதியில் வாணியன்சத்திரம் அருகே, பைக்கில் வந்த புழல் அடுத்த காவாங்கரை பகுதியை சேர்ந்த விஜி (23), ராஜேஷ் (23), ரூபன் (22) ஆகிய மூவரையும் சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில், இவர்கள் அனைவரும் ஊத்துக்கோட்டை, ஆரணி, வெங்கல், சோழவரம் ஆகிய பகுதிகளில் செயின் பறிப்பு வழக்கில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்களிடமிருந்து 10 சவரன் நகைகள், ஒரு பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவ்வாறு மாவட்டத்தில் மொத்தம் 40 சவரன் நகைகள், ரொக்கம் ரூபாய் ஒரு லட்சம், ஒரு குவாலிஸ் கார், 10 பைக்குகள், 2 டிவிடி பிளேயர்கள், 2 மொபைல் போன்கள் மற்றும் 2 வாட்சுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 16 லட்சம் ரூபாய். இவ்வாறு மாவட்டத்தில் தொடர் வழிப்பறி, செயின் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட 12 குற்றவாளிகளையும் கைது செய்த போலீசார் குற்றவாளிகளை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழகம்
லாரி மீது பஸ் மோதி மூவர் பலி
மண்ணச்சநல்லூர் : திருச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது, அரசு பஸ் மோதியதில், மூன்று பேர் பலியாயினர். ஏழு பேர் காயமடைந்தனர். நேற்று முன்தினம் இரவு, சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து, தூத்துக்குடிக்கு தமிழ்நாடு அரசு விரைவு பஸ் புறப்பட்டது. இதில், இரண்டு குழந்தைகள் உட்பட, 38 பேர் பயணம் செய்தனர். தூத்துக்குடியை சேர்ந்த டிரைவர் அன்னராஜ் (30) பஸ்சை ஓட்டினார். நேற்று அதிகாலை 3 மணியளவில், திருச்சி சிறுகனூர் எம்.ஏ.எம்., இன்ஜினியரிங் கல்லூரி அருகே பஸ் சென்றபோது, ரோட்டின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த, ஜல்லி லோடு ஏற்றிய லாரி மீது பஸ் மோதியது. இதில், சென்னை வேப்பம்பட்டைச் சேர்ந்த பெண் ஜெபகனி (60) சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் சென்று இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தூத்துக்குடியைச் சேர்ந்த பிச்சை தேவர் (80),பேராவூரணியைச் சேர்ந்த வின்சென்ட் ராஜ் (45) இருவரும் உயிரிழந்தனர். காயமடைந்த ஏழு பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ் டிரைவர் கண் அயர்ந்ததே, விபத்துக்கு காரணம் என்பது, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.
தமிழகம்
10 ரூபாய் தரமறுத்தவருக்கு அடிஉதை
தூத்துக்குடி : தூத்துக்குடி, துரைக்கனி நகரைச் சேர்ந்தவர் கோயில்பிச்சை(39). நேற்று முன்தினம் மாலை இவரை, அப்பகுதியைச் சேர்ந்த அய்யம்பெருமாள், கார்த்திக், சிவன்பாண்டி, செல்வக்குமார் ஆகிய நால்வர் சந்தித்து, வினாயகர் கோவில் பூஜை செலவுக்கு, வாரம் 10 ரூபாய் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு, கோயில் பிச்சை மறுப்பு தெரிவித்துள்ளார். அதனால், ஆத்திரமடைந்த அவர்கள் கை, கம்பு, இரும்பு கம்பியால் கோயில் பிச்சையை தாக்கி அடித்து உதைத்தனர். அதில் அவர் பலத்த காயமடைந்தார். சம்பவம் தொடர்பாக கார்த்திக்(23), செல்வக்குமார்(24) கைது செய்யப்பட்டனர். அய்யம்பெருமாள், சிவன்பாண்டியை, சிப்காட் போலீசார் தேடிவருகின்றனர்.
தமிழகம்
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு : கன்னட அமைப்பினர் மறியல் போராட்டம்
சத்தியமங்கலம் : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை துவங்குவதற்கு முன், முதலில் இப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதை கண்டறிய ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழக எல்லையில் நேற்று மறியல் நடத்துவதாக கஸ்தூரி கர்நாடக ஜனபிரசிய வேதிகே அமைப்பினர் அறிவித்தனர். அமைப்பின் தலைவர் ரமேஷ்கவுடா தலைமையில் 200 பேர், தமிழக எல்லைப் பகுதியான கர்நாடகாவுக்கு உட்பட்ட புளிஞ்சூர் வந்தனர். நேற்று காலை 11.45 மணியில் இருந்து 12.15 மணி வரை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, சாம்ராஜ்நகர் மாவட்ட எஸ்.பி., பிரகாஷ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மறியல் காரணமாக ஈரோடு மாவட்டம் திம்பம், ஆசனூர் வழியாக கர்நாடகா செல்லும் வாகனங்கள், சத்தி அருகேயுள்ள பண்ணாரியில் காலை 9 மணி முதலே நிறுத்தப்பட்டன. புளிஞ்சூரில் மறியல் நிறைவுற்ற தகவலுக்கு பின், வாகனங்கள் கர்நாடகா செல்ல அனுமதிக்கப்பட்டன. மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகம்
பைக் மீது கார் மோதிய விபத்து : சென்னையை சேர்ந்த 2 பேர் பலி
திருவண்ணாமலை : வந்தவாசி அருகே பைக் மீது கார் மோதியதில், சென்னையை சேர்ந்த இருவர் பலியாகினர். சென்னை ஆவடியை சேர்ந்தவர் காளிமுத்து (42). அவரது மைத்துனர் குமார் (40). இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டுவில் உறவினர் இல்ல திருமண விழாவில் நேற்று முன் தினம் கலந்து கொண்டனர். நேற்று காலை 10 மணிக்கு அங்கிருந்து பைக்கில் சென்னைக்கு புறப்பட்டனர். ஏந்தல் கூட்டு சாலை அருகே வந்தபோது, வந்தவாசியிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த "அம்பாசிடர்' கார், பைக் மீது மோதியது. காளிமுத்து சம்பவ இடத்தில் இறந்தார். படுகாயமடைந்த குமார், வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். வடவணக்கம்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
ஐ.பி.எல்., லலித் மோடி சஸ்பெண்டை அடுத்து புதிய தலைவர் தேர்வு : ஆவணங்களும் மாயம் என்று சஷாங் புகார்
மும்பை : ஐ.பி.எல்., தலைவர் பதவியில் இருந்து லலித் மோடி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து, இடைக்கால தலைவராக சிரயு அமீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆலோசனை கூற குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. தவிரவும் முக்கிய ஆவணங்கள் மாயம் என்றும், ஏலம் விட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒரு பிரிவான இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில், "டுவென்டி-20' கிரிக்கெட் போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றன. அணிகள் ஏலம் எடுக்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து, ஐ.பி.எல்., அலுவலகத்தில் நடந்த வருமானவரித் துறை சோதனையில், ஏராளமான நிதி முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு ஐ.பி.எல்., இறுதிப் போட்டி முடிந்த அடுத்த சில மணி நேரத்திலேயே, ஐ.பி.எல்., தலைவர் பதவியில் இருந்து, லலித் மோடியை சஸ்பெண்ட் செய்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும்படியும், அவருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. பெரும் பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் இடையே மும்பையில் நேற்று ஐ.பி.எல்., நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சஷாங் மனோகர் மற்றும் துணைத் தலைவர்கள், செயலர், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், லலித் மோடி மீதான குற்றச்சாட்டுகள், ஐ.பி.எல்., சர்ச்சை ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதற்கு பின், சஷாங் மனோகர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: லலித் மோடி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து, ஐ.பி.எல்., இடைக்கால தலைவராக பரோடா கிரிக்கெட் சங்க தலைவர் சிரயு அமீன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆலோசனை கூறுவதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, பட்டோடி ஆகியோரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐ.பி.எல்., தொடரை நடத் தும் விவகாரங்களை இந்த குழு கண்காணிக்கும். ஐ.பி.எல்., விவகாரத்தில், மத்திய அமைச்சர் சரத் பவாருக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ எந்த தொடர்பும் இல்லை. ஆவணங்கள் மாயம்: ஐ.பி.எல்., போட்டிகளுக்கான அணிகள் ஏலம் எடுக்கப்பட்டது தொடர்பான முக்கிய ஆவணங்களை காணவில்லை. இது தொடர்பாக வருமானவரித் துறையினர் தினமும் எங்களிடம் தகவல்கள் கேட்கின்றனர். போட்டிகளை ஒளிபரப்ப சோனி நிறுவனத்துக்கு உரிமம் அளிக்கப்பட்டதற்கான முக்கிய ஆவணங்களை காணவில்லை. ஆவணங்கள் மாயமான விவகாரம் குறித்து ரத்னாகர் ஷெட்டி விசாரணை நடத்தவுள்ளார். ஏலம் விட்டதில் முறைகேடு: கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஏலம் எடுக்கப்பட்டதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பங்குகள் இரண்டு பேருக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், பின், அவை குறிப்பிட்ட தனி நபருக்கும், தனி நிறுவனத்துக்கும் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த அணியின் பங்குதாரர்களாக கூறப்படும் ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா ஆகியோரின் பெயர்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை. இதேபோல், கிங்ஸ் லெவன் அணியின் உரிமம் ப்ரீத்தி ஜிந்தாவுக்கு தரப்பட்டுள்ளது. ஆனால், ஏலம் கொடுக்கப்பட்டபோது, அணியின் ஒட்டுமொத்த பங்குகளில் சிறிய அளவைக் கூட, அவர் வைத்திருக்கவில்லை என, தெரியவந்துள்ளது. இதுகுறித்து மோடி விளக்கம் அளிக்க வேண்டும். ஐ.பி.எல்., என்பது மிக முக்கியமான சொத்து. அது முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, இந்த விஷயத்தில் கிரிக்கெட் வாரியம் தலையிட்டது. மோடி மீதான 22 குற்றச்சாட்டுகள் நிர்வாகக் குழு கூட்டத்தில் முன் வைக்கப் பட்டன. இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நபர் மீது, எந்தவித இடையூறும் இல்லாத அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்ற காரணத்துக்காகவே லலித் மோடி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையாக கருதக் கூடாது. மோடி மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என தெரியவந்தால், அவர் மீதான விசாரணை கைவிடப்படும். இவ்வாறு சஷாங் மனோகர் கூறினார். இதுகுறித்து கம்பெனி விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், "ஐ.பி.எல்., தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளதை அடுத்து, இதில் உள்ள அணிகளின் உரிமையாளர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம்' என்றார். ஷில்பா விளக்கம்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பங்குதாரர்கள் பற்றி எழுந்துள்ள குழப்பம் குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி கூறுகையில், "ராஜஸ்தான் அணியின் பங்குதாரர்களில் என் கணவர் ராஜ் குந்த்ராவும் ஒருவர். எனக்கு அந்த அணியில் எந்த பங்கும் இல்லை. அந்த அணியின் சிறப்பு பிரதிநிதியாக மட்டுமே செயல்படுகிறேன்' என்றார். இதற்கிடையே, "ஐ.பி.எல்., தலைவர் பதவியில் நான் தொடர்கிறேன். என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது' என லலித் மோடி நேற்று இரவு தெரிவித்தார்.
தமிழகம்
ராஜஸ்தான் கவர்னர் மாரடைப்பால் மரணம்
புதுடில்லி : ராஜஸ்தான் கவர்னர் பிரபா ராவ்(75), நேற்று மாரடைப்பால் காலமானார். நேற்று முன்தினம், ஜோத்பூரில் அவர் தங்கியிருந்த வீட்டில், அவரது அறையில் அவர் உணர்வின்றிக் கிடந்தார். பின், "எய்ம்ஸ்' மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார். அங்கு, அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் நேற்று அவர் காலமானார். நேற்று மாலை அவரது உடல், ஜோத்பூர் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவர் மருத்துவமனையில் இருக்கும் போது, காங்கிரஸ் தலைவர் சோனியா நேரில் வந்து பார்த்து நலம் விசாரித்தார் . பிரபா ராவுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அவர் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக இளம் வயதில் திகழ்ந்தவர். கடந்த 2008ல் இமாச்சல பிரதேச கவர்னராகப் பணியாற்றினார். இந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதியிலிருந்து அவர் ராஜஸ்தான் கவர்னராகப் பொறுப் பேற்றிருந்தார். காங்கிரசின் அனைத் திந்திய மகளிர் அணித் தலைவராகவும் முன்பு அவர் பதவி வகித்திருக்கிறார்.
தமிழகம்
மதுரையில் கோலாகலமாக நடந்த சித்திரை தேரோட்டம் : பக்தர்கள் பரவசம்
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் 11ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு, உச்சிக்கால பூஜை வரையுள்ள அனைத்து பூஜைகளும் அதிகாலை 3 மணிக்குள் செய்யப்பட்டன. எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கவும், தேர்களை புனிதப்படுத்தவும் அதிகாலை 4 மணிக்கு தேர்களுக்கு ரதரோஹணம் பூஜை செய்யப்பட்டது. தேர்களை பாதுகாக்கும் தேரடி கருப்பு சுவாமிக்கு அதிகாலை 5 மணிக்கு பூஜை செய்து சுவாமியை பெரிய தேரிலும், அம்மனை சிறிய தேரிலும் எழுந்தருள செய்தனர். சக்கரங்களுக்கு பூசணிக்காய் பலி கொடுத்து, "ஹர ஹர சங்கரா... சிவ சிவ சங்கரா...' என்ற பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே சுவாமி தேர் காலை 6.05 மணிக்கு புறப்பட்டது. மாசி வீதிகளில் வலம் வந்து, காலை 11.45 மணிக்கு பெரிய தேரும், 11.50 மணிக்கு சிறிய தேரும் அடுத்தடுத்து நிலைக்கு வந்தன. பிற்பகல் 3 மணிக்கு மேல் கோவிலில் இருந்து சகல மரியாதைகளுடன் கீரிடம் மற்றும் தங்க நகைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, தேர்களில் வீற்றிருந்த சுவாமிக்கும், அம்மனுக்கும் அணிவித்து, கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒரே நேரத்தில் பக்தர்கள் தங்களை தரிசிக்க வேண்டும் என்பதற்காக நேற்றிரவு 7.30 மணிக்கு சப்தாவர்ணச் சப்பரத்தில் அம்மனும், சுவாமியும் உலா வந்தனர். கோவிலுக்கு திரும்பிய பின் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று கோவில் பொற்றாமரைக் குளத்தில் தேவேந்திர பூஜையுடன் 12 நாள் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது. அண்டாவை தேடி ஓடிய யானை: தேரோட்டத்தின் போது, தனியார் யானைகள் பல, விளம்பர பேனர்களையும், பதாகைகளையும் சுமந்துக் கொண்டு வலம் வந்தன. வடக்குமாசி - கீழமாசிவீதி சந்திப்பில், அண்டாவில் கூல்டிரிங்ஸ் கொடுக்கப்பட்டது. தாகத்தில் இருந்த யானை ஒன்று, நேராக அண்டாவிற்குள் "தும்பிக்கையை' விட்டு உறிஞ்ச துவங்கியது. ஆத்திரமடைந்த பாகன், அங்குசத்தால் யானையை கண்ட இடங்களில் குத்த, யானை மிரண்டு சில அடி தூரம் ஓடியது. இதனால், பக்தர்களும் ஓட்டம் பிடித்தனர்.
தமிழகம்
மதுரை சித்திரை திருவிழா - 12
மதுரையில் இன்று மாலையில், மீனாட்சியம்மனும், சொக்கநாதர், பிரியாவிடையும் மாசி வீதிகளில் ரிஷப வாகனத்தில் பவனி வருவார்கள். ஏற்கனவே ஆறாம் திருநாளில் இதே வாகனத்தில் இவர்கள் பவனி வந்தனர். கிடைத்தற்கரிய இந்தக்காட்சி இன்றும் பக்தர்களுக்கு கிடைத்திருக்கிறது. புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே இந்த தரிசனம் கிடைக்கும் என்பது ஐதீகம். இன்று காலையில் கள்ளழகருக்கு எதிர்சேவையும் நடத்தப்படும். கள்ளழகரை செங்குந்த முதலியார் வம்சாவழி பரம்பரையினரே தலைமுறை தலைமுறையாக சுமந்து வருகின்றனர். ஏறத்தாழ 450 ஆண்டுகளாக இவரைச் சுமக்கும் பாக்கியம் இவர்களுக்கு கிடைத்துள்ளது. இதை சுவாமிக்கு சேவையாகவே செய்கின்றனர். இதுபற்றி சீர்பாதங்கள் அகுதார் குணசேகரன் கூறியதாவது: பாண்டியர் காலத்தில் சோழவந்தான் அருகில் தேனூரில்தான் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின் திருமலை நாயக்கர் மன்னர் மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாவையும், அழகர்கோயில் திருவிழாவையும் ஒன்றாக நடத்தினார். அப்போது, சிவாலயங்களில் ஏற்றப்படும் கொடி சேலைகளை எங்கள் மூதாதையர்களே நெய்து கொடுத்தனர். வாகன வசதி இல்லாத அந்த காலத்தில் தோள் சுமையாக பல நாட்கள் அழகரை சுமக்க வேண்டும் என்பதால் யாரும் முன்வரவில்லை. அதனால் திருமலை நாயக்கர் எங்கள் முன்னோரிடம் திருவிழா காலங்களில் சுவாமியை சுமந்து வரும்படி கேட்டுக் கொண்டார். அவர்களும் தெய்வத்தை சுமக்கும் பெரும்பாக்கியம் கிடைத்ததே என அழகரை ஊர்வலமாக சுமந்து வந்தனர். இதற்காக திருமலை நாயக்கர் எங்களுக்கு 18 கிராமங்களை பரிசாக வழங்கினார். அன்று முதல் இன்று வரை எங்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்களே அழகர்கோயில், மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில்களில் சுவாமிகளை சுமக்கும் பணியை செய்து வருகின்றனர்.ஒவ்வொரு கோயிலிலும் நான்கு கரை அகுதார்கள் உள்ளோம். ஆண்டிற்கு ஒரு அகுதார் என சுழற்சி முறையில் இந்த பணியைச் செய்து வருகிறோம்,'' என்றார். காவல் தெய்வம் கருப்பண்ணசுவாமி: ""தென்னவன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்'" என திருவேங்கடமலைக்கு (திருப்பதி) இணையாக சங்க நூல்களால் பாடப்பெற்றது அழகர்மலை. இங்கு அருள்பாலிக்கும் சுந்தரராஜ பெருமாளை ஆண்டாள் மணமுடித்தாள். காவல் தெய்வம் கருப்பணசுவாமிக்கும், அழகருக்கும் தொடர்பு உண்டு. அழகான தோற்றம் கொண்ட இந்தப் பெருமாளை கவர்ந்து செல்ல கேரள மந்திரவாதிகள் 18 பேர், கருப்பசுவாமியுடன் அழகர்கோவில் வந்தனர். இங்கு வந்த கருப்பசுவாமியிடம், தான் இங்கேயே இருக்க விரும்புவதாக சுவாமி சொல்லவே, அவரது உத்தரவுக்கு கட்டுப்பட்ட கருப்பசுவாமி தன்னை அழைத்து வ்நத மந்திரவாதிகளைப் படிகளாக்கி அவர்களை அடக்கி வைத்தார். அத்துடன், காவல் தெய்வமாக ராஜகோபுர வாயிலில் தங்கினார். இவருக்கு தான் முதலில் நைவேத்யம் செய்யப்படும். அதிகாலையில் நூபுரகங்கையில் இருந்து கொண்டுவரப்படும் தீர்த்தத்தை இங்கு வைத்து பூஜை செய்த பிறகே, பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும். மூலவருக்கு அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு பெருமாள் அணிந்திருக்கும் மாலைகளை கருப்பண்ணசுவாமிக்கு அணிவித்து, கோயில் நடை அடைக்கப்பட்டதை தெரிவிப்பார்கள். மதுரைக்கு அழகர் புறப்படும் முன்பு, கருப்பண்ண சுவாமி சன்னதியில் சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்படும். ஆடித்திருவிழாவின்போது 18ம் படி கருப்பண்ண சுவாமி சன்னதி வழியாக, சுவாமி எழுந்தருளி தேரடி வீதியை வலம் வருவார்.
தமிழகம்
தமிழகத்தில் தான் அங்கீகாரம் கிடைக்கிறது : அரவாணிகள் பெருமிதம்
விழுப்புரம் : தமிழகத்தில் தான் உரிய அங்கீகாரம் கிடைப்பதாக அரவாணிகள் பெருமிதத்துடன் கூறினர். விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழாவையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வந்து அரவாணிகள் பலர் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர். இவர்களுக்காக, மிஸ் கூவாகம் போட்டி, தனித்திறன் போட்டிகளும், முழு உடல் பரிசோதனை முகாம்களும், எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் இன்று நடக்கிறது. இதில், பங்கேற்பதற்காக சென்னை, மும்பை, கோல்கட்டா, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், தமிழகத்தைச் சேர்ந்த சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான அரவாணிகள் குவிந்துள்ளதால் விழுப்புரம் நகரம் களைகட்டியுள்ளது. விழாவில் பங்கேற்க வந்த அரவாணிகளின் வாழ்க்கை முறை பற்றி குறும்படம் எடுத்து வரும் சென்னை அரவாணி கல்கி கூறியதாவது: திருநங்கைகளின்(அரவாணிகள்) சமுதாய முன்னேற்றத்திற்காக சகோதரி என்ற அமைப்பை வைத்து செயல்படுத்தி வருகிறேன். அவர்களின் வாழ்க்கை நிலை குறித்து குறும்படங்களை எடுத்து வெளியிட்டும், திருநங்கைகள் பலருக்கும், பயிற்சிகளை வழங்கி என்னுடன் இணைத்து பணியாற்றி வருகிறேன். அவர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான வழிகாட்டுதல்களை கொடுத்து வருகிறோம். என்னுடன் வந்துள்ள சென்னையைச் சேர்ந்த சந்தியா, முதியவர்களின் வாழ்க்கை நிலை குறித்து குறும்படம் எடுக்கிறார். தமிழக அரசு நலவாரியம் அமைத்து அரவாணிகள் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. தொழில் துவங்க 20 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. நிறைய பேருக்கு இந்த திட்டங்கள் பற்றி தெரியவில்லை. தெரியப்படுத்த வேண்டும். முறைகேடுகளை தடுக்க தொண்டு நிறுவனங்களை தவிர்த்து நேரடியாக அரவாணிகளுக்கு அரசு உதவிகளை செய்ய வேண்டும். அரவாணிகளுக்கு தமிழகத்தில் தான் அங்கீகாரம் கிடைக்கிறது. கேரளா, மும்பை போன்ற பகுதிகளில் இந்தளவு மதிப்பதில்லை. இவ்வாறு அரவாணி கல்கி கூறினார்.
தமிழகம்
நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி
ஈரோடு : நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடத்த இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு, அண்ணா பல்கலை அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. கடந்த 2008 முதல், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இன்ஜினியரிங் கல்லூரியில், 65 சதவீத இடம் அரசு ஒதுக்கீட்டுக்கும், மீதமுள்ள 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல், மேலாண்மை படிப்புக்கு அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடுக்கு தலா 50 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீடுக்கான மாணவர் சேர்க்கையை, தமிழ்நாடு சுயநிதி மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு நடத்தி வந்தது. நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நடக்கும் மாணவர் சேர்க்கையை கண்காணிக்க, நீதிபதி தலைமையிலான மேற்பார்வை குழு ஒன்றை அரசு நியமித்தது. முறைகேடு இருந்தால், அதன்மீது நடவடிக்கை எடுக்க இக்குழு பரிந்துரை செய்யும். "நடப்பாண்டு நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கையை நடத்த, தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்' என்று, கோவை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை கல்லூரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது. கோரிக்கையை ஏற்ற மேற்பார்வை குழு நீதிபதி ரவிராஜபாண்டியன், மாணவர் சேர்க்கையை துவக்க அனுமதி வழங்கினார். இதுகுறித்து, கோவை அண்ணா பல்கலையுடன் இணைவு பெற்ற இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை கல்லூரிகள் சங்க கூட்டமைப்பு தலைவரும், ஈரோடு செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான சுத்தானந்தன், ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: இன்ஜினியரிங் கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டின் அடிப்படையில், 35 சதவீதம் மாணவர் சேர்க்கையை நடத்த, எங்கள் கூட்டமைப்புக்கு நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு அனுமதி வழங்கியுள்ளது. இனி, மேற்கு மண்டலத்தில் மாணவர் சேர்க்கையை எங்கள் கூட்டமைப்பு நடத்தும். கடந்தாண்டுகளில் அக்டோபர் மாதம் வரை நடந்த மாணவர் சேர்க்கை, நடப்பாண்டு ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும். இவ்வாறு சுத்தானந்தன் கூறினார்.
தமிழகம்
குடியேற்றத் துறையின் கிடுக்கிப்பிடியால் வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை குறைகிறது
சென்னை : வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் தரகர்கள் மற்றும் ஏஜன்டுகள் மீது, குடியேற்றத் துறையின் பிடி இறுகியிருப்பதால், 2008-09 ஐ விட, 2009-10ல் வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில், சென்னையிலுள்ள குடியேற்றத் துறை அதிகாரி சேகர், அவரது ஐந்து உதவியாளர்களுடன் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். அதன் பிறகு, வெளிநாடுகளுக்கு வேலைக்காக தொழிலாளர்களை போலி ஆவணங்களைத் தயாரித்து அனுப்பி வைக்கும் தரகர்கள் மற்றும் ஏஜன்டுகள் மீதான குடியேற்றத் துறையின் பிடி இறுகியிருக்கிறது. தற்போது, அத்துறையின் தலைவராக இருக்கும் ஜெய்சங்கர் கூறுகையில், "தொழிலாளர்களில் பெரும்பாலோர் தாங்கள் போகும் நாடு எது என்பதைக் கூட அறிந்திருப்பதில்லை. அவர்களுக்கு இது குறித்து முழு விவரங்களையும் இப்போது அளித்து வருகிறோம். "இதற்காக தனியாக ஒரு கவுன்சிலிங் நிகழ்ச்சி நடத்துகிறோம். தொழிலாளர்களை அழைக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம், மருத்துவ வசதிகள் மற்றும் இலவச விமான டிக்கெட் இவை கொடுத்தாக வேண்டும் என்பது அடிப்படை விதி. இவற்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் நாங்கள் அனுமதி அளிப்பதில்லை' என்று தெரிவித்தார். தற்போது சென்னையில் 200 பதிவு செய்யப்பட்ட ஏஜன்டுகள் இயங்கி வருகின்றனர். சமீபகாலம் வரை, அவர்கள் முறையான சோதனை செய்யாமல், தினசரி 400 பாஸ்போர்ட்டுகளுக்கு அனுமதி வாங்கி வந்தனர். ஆனால், தற்போது புதிய விதிமுறைகள் மூலம் அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், 2008-09ல் குவைத்துக்கு 21 ஆயிரத்து 203 பேர் அனுப்பப்பட்டனர். ஆனால், முறையான சோதனைகளுக்குப் பின் 2009-10ல் 9,550 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்பவர்களில் முதலிடத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் தான் உள்ளனர். இதையடுத்து, மதுரை, ராமநாதபுரம், திருவாரூர் மற்றும் சென்னை இடம் பெற்றுள்ளன. வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வோர் அந்நாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, புதிய குடியேற்ற சட்டத்தின் படி அவர்கள் அரசில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவுக்குச் செல்பவர்கள் இதைப் பின்பற்ற வேண்டும்.
தமிழகம்
நூல் விலை உயர்வு : ஈரோட்டில் கடையடைப்பு
ஈரோடு : நூல் விலை உயர்வை கண்டித்து, கைத்தறி ஜவுளி உற்பத்தி சங்கம் மற்றும் 45 சங்கங்களின் சார்பில் ஈரோட்டில் இன்றும், நாளையும் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. நாளை உண்ணாவிரதம் நடக்கிறது. நூல் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், ஜவுளி தொழில் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. கைத்தறி, விசைத்தறி கூடங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நூல் விலையை குறைக்கக் கோரி, கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்கம், சலவை, காலண்டரிங், சைசிங், மடி தொழிலாளர்கள் உட்பட ஜவுளித்துறையைச் சேர்ந்த 45 சங்கங்கள் சார்பில் இன்றும், நாளையும் ஈரோட்டில் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. நாளை ஈரோடு மின்வாரிய அலுவலகம் முன் உண்ணாவிரதம் நடக்கிறது. ஈரோடு, பள்ளிபாளையம், திருப்பூர், பல்லடம், சோமனூர் பகுதிகளிலிருந்து ஜவுளித் தொழில் சார்ந்த அனைத்து சங்கத்தினர் பங்கேற்கின்றனர். உண்ணாவிரதத்தை, ஈரோடு செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சுத்தானந்தன் துவக்கி வைக்கிறார். மாலை, சென்னை சில்க்ஸ் பரஞ்ஜோதி முடித்து வைக்கிறார்.
தமிழகம்
கண்ணகி கோவிலில் நாளை சித்ராபவுர்ணமி விழா
கூடலூர் : மங்கலதேவி கண்ணகி கோவிலில், நாளை சித்ராபவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில், சித்ராபவுர்ணமி விழா நாளை அதிகாலை 4 மணிக்கு துவங்குகிறது. காலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. கண்ணகிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இக்கோவிலுக்கு தமிழக வனப்பகுதி வழியாக, பக்தர்கள் செல்வதற்கு கூடலூரில் இருந்து, பளியன்குடி வரை தமிழக அரசு பஸ் வசதி செய்துள்ளது. பளியன்குடியில் இருந்து, 6 கி.மீ., தூரம் தமிழக வனப்பகுதி வழியாக நடந்து சென்றால், கோவிலை அடைந்து விடலாம். இதற்காக, பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதை சீரமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். நடந்து செல்லும் பாதையில், பக்தர்களின் வசதிக்காக குடிநீர் வசதியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. நடந்து செல்ல முடியாத பக்தர்களுக்கு, குமுளியில் இருந்து கோவில் வரைக்கும் ஜீப் வசதி உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாலித்தீன் பொருட்களை கொண்டுவரக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை கோவிலில் வழிபட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், குமுளியில் உள்ள செக்போஸ்ட் வழியாக, பகல் 2.30 மணிக்கு மேல் கோவிலுக்கு செல்ல அனுமதியில்லை.
தமிழகம்
கள்ளழகருக்கு ஆண்டாள் சூடிய மாலை : ஸ்ரீவி.,யிலிருந்து மதுரைக்கு அனுப்பப்பட்டது
ஸ்ரீவில்லிபுத்தூர் : மதுரை சித்திரை திருவிழாவில், நாளை வைகையாற்றில் இறங்கும் கள்ளழகருக்கு அணிவிக்கப்படும் ஆண்டாள் சூடிய மாலை, கிளி,வஸ்திரம் ஆகியவை ஸ்ரீவி.,யிலிருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் சூடிய மாலை, கிளி, வஸ்திரம் ஆகியவை திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்ஸவத்தில் கருட சேவையன்று வெங்கடாசலபதிக்கும், திருச்சி ஸ்ரீரங்கத்தில் ரெங்கராஜ பெருமாளுக்கும், மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகருக்கும் சாற்றப்படுவது வழக்கம். இந்தாண்டு மதுரை சித்திரை திருவிழாவில், வைகையாற்றில் இறங்கும் கள்ளழகருக்கு சாற்றப்படும் மாலை, கிளி, வஸ்திரம் ஆகியவை ஆண்டாளுக்கு நேற்று மாலை சாற்றப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டது. பின், அவை மாட வீதி, கந்தாடை வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அவற்றை ஸ்தானிகர்கள் ரமேஷ், சத்யன், சுதர்சனம் ஆகியோர் மதுரைக்கு கொண்டு சென்றனர். இம்மாலை, தல்லாக்குளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலுக்கு இன்று இரவு கொண்டு செல்லப்படும். அங்கு, நள்ளிரவு 12 மணிக்கு சுந்தரராஜபெருமாளுக்கு திருமஞ்சனம் செய்த பின், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, வஸ்திரங்கள் சாற்றப்படும். பின், அவற்றுடன் கள்ளழகராக வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
தமிழகம்
மானியத்திற்காக கலைக்கப்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் கண்காணிப்பு தேவை
விருதுநகர் : மானியத்திற்காக ஐந்தாண்டுகளுக்கு பின் கலைக்கப்பட்டு, உறுப்பினர்கள் சிலரை மாற்றி, மறுபெயரில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களை அரசு கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் ஆண்டுதோறும் 25 ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழுக்களை துவக்க வேண்டும் என அரசால் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. புதிய குழுக்களை துவக்க வேண்டிய கட்டாயத்தில் அலுவலர்கள் உள்ளனர். தர மதிப்பீடு: ஒரு குழுவிற்கு 10 முதல் 20 வரை உறுப்பினர்கள் உள்ளனர். புதிதாக துவங்கிய குழு, ஆறு மாதங்களுக்கு முழுமையாக இயங்கினால் போதுமானது. கூட்டம் நடத்துதல், மாதாந்திர சேமிப்பு, உறுப்பினர்களுக்குள் கடன் வழங்கி வசூலித்தல் போன்ற செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. குழுவின் ஆவணங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு தர மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. மானிய உதவி: இந்த மதிப்பெண்களை வைத்து, ஒரு குழுவிற்கு மானியமாக 10 ஆயிரம் ரூபாய், வங்கிக் கடனாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பின் குழுவின் செயல்பாடுகள், பொருள்கள் உற்பத்தியை பொறுத்து தொழில் தொடங்க 5 லட்ச ரூபாய் வரை வங்கி கடன்கள் வழங்கப்படுகின்றன. இதில் 1.25 லட்சம் ரூபாய் வரை அரசு மானியம் வழங்கப்படுகிறது. சலுகைகள் முடிந்தவுடன் கலைப்பு: குழுக்கள் துவக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்ற பின், அரசின் சுழல்நிதி வழங்கப்படுவதில்லை. இதன் பின் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தன்னிச்சையாக மாதம் 2 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்பது தான் இத்திட்டத்தின் நோக்கம். ஆனால் சுழல் நிதி, வங்கிக்கடனில் மானியம் பெறுவதையே நோக்கமாக உள்ள பல குழுக்கள், தங்கள் செயல்பாட்டை நிறுத்திக்கொண்டு குழுவை கலைத்து விடுகின்றன. புதிய குழு அமைப்பு: ஒரு சில உறுப்பினர்களை மட்டும் மாற்றி, வேறு பெயரில் துவங்கி செயல்படும் சுய உதவிக்குழுக்களை, அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இப்படி சுழற்சி முறையில் இயங்குவதால், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அரசின் மானியம் கிடைக்கிறது. இது போன்று கலைக்கப்படும் குழுக்களை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம்
பி.சி., - எம்.பி.சி.,மாணவர்களுக்கு புதிய விடுதிகள்
சென்னை:பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கு 25 விடுதிகளும், இஸ்லாமிய மாணவர்களுக்கு ஒரு விடுதியும் புதிதாக திறக்கப்படுமென அமைச்சர் அறிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இந்த ஆண்டு செயல்படுத்த உள்ள புதிய திட்டங்கள் குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு: * கள்ளர் சீரமைப்பு திட்டத்தின் இரு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். * பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கு 25 விடுதிகளும், இஸ்லாமிய மாணவர்களுக்கு ஒரு விடுதியும் என மொத்தம் 26 புதிய விடுதிகள் இந்த ஆண்டு திறக்கப்படும். * பொறியியல் படிக்கும் ஆயிரம் மாணவர்களுக்கு, கணினி மென்பொருள் மற்றும் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி அளிக்கப்படும். * பட்டயக் கணக்கர் (சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்), செலவு மற்றும் தொழில் கணக்கீட்டாளர், நிறுவனச் செயலர் (கம்பெனி செகரட்டரி) ஆகிய படிப்புகளில் சேருவதற்காக, நூறு மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படும். * நடப்பு ஆண்டில், 45 லட்சம் ரூபாய் செலவில், 60 விடுதிகளுக்கு தலா இரண்டு கணினி வழங்கப்படும்.
தமிழகம்
சிறுபான்மையினர் நல ஆணையத்துக்கு சட்ட அந்தஸ்து:சட்டசபையில் வைத்து முதல்வர் கையெழுத்திட்டார்
சென்னை:சிறுபான்மையினர் நல ஆணையத்துக்கு சட்ட ரீதியான அந்தஸ்து வழங்குவதற்கான உத்தரவில், சட்டசபையில் வைத்து முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டார்.சிறுபான்மையின ஆணையத்தை சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றித் தர வேண்டுமென, சட்டசபையில் பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை வைத்தார். இது பற்றி தனது பதிலுரையில் குறிப்பிட்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், "இது பற்றி என்னிடம் பேசிய முதல்வர், இன்றே (நேற்று) இதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.இதை விட வேகமாகச் செயல் படும் முதல்வர் வேறு யாராவது உள்ளார்களா?' என்றார்.அமைச்சர் தனது பதிலுரையை முடிக்கும் நேரத்தில், "சிறுபான்மையின ஆணையத்துக்கு சட்ட அந்தஸ்து அளிப்பதற்கான கோப்பில், முதல்வ ரிடம் மாலை நேரத்தில் கையெழுத்து வாங்கலாம் என்றிருந்தேன். ஆனால், சட்டசபைக்கே கோப்பை வரவழைத்து, இங்கேயே அவர் கையெழுத்துப் போட்டுள்ளார்' என்று தெரிவித்தார். இந்த உத்தரவு அமலுக்கு வருவதால், சிறுபான்மையின ஆணையத் துக்கு சட்ட ரீதியான அந்தஸ்து கிடைத்துள்ளது. இதுகுறித்து சிறுபான்மையின ஆணையத் தலைவர் வின்சென்ட் சின்னதுரையிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:சட்ட அந்தஸ்து கிடைத்துள்ளதால், சிறுபான்மை ஆணையம் இனி சிவில் கோர்ட் போல செயல்படும். சம்மன் செய்யலாம், எந்த கோப்பையும் வரவழைக்கலாம். இதுவரை, எந்த விஷயத்திலும் பரிந்துரை செய்யும் அமைப்பாகத் தான் இது இருந்தது.மாவட்ட நிர்வாகம் அல்லது போலீசுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்து வந்தோம். இனி நேரடியாக உத்தரவு பிறப் பிக்கலாம். கல்வித் துறையில் அடிப் படை வசதிகள், கல்லறை, தகன மேடை பிரச்னை, வேலைவாய்ப்பு போன்றவற்றில் உள்ள குறைபாடுகளில் தலையிடலாம்.இந்த ஆணையம் 1989ல் அமைக்கப் பட்டது. தற்போது, இதற்கு தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது மாதத்துக்கு 100 வழக்குகளுக்கு குறையாமல் வருகிறது. பெரும்பாலும் போலீஸ் அத்துமீறல் போன்ற வழக்குகள் வருகின்றன.இவ்வாறு வின்சென்ட் கூறினார்.
General
துப்பாக்கியுடன் ஒபாமாவை சந்திக்க முயன்றவர் கைது
ஆஷ்வில்லி:அமெரிக்க அதிபர் ஒபாமாவை, விமானநிலையத்தில் துப்பாக்கியுடன் சந்திக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிபர் ஒபாமா, வார விடுமுறை நாட்களில் ஆஷ்வில்லி பகுதியில் குடும்பத்துடன் பொழுதை கழிப்பார். கடந்த 25ம்தேதி, ஆஷ்வில்லி விமான நிலையத்தில் போலீஸ் காரில் வந்த, ஜோசப் சீன் மெக்வே(23) என்ற நபர் காரிலிருந்து இறங்கியதும், அங்கிருந்த பாதுகாப்பு படையினர் அவரை விசாரித்தனர். அதற்கு அவர் ஒபாமாவை சந்திக்க போவதாக கூறினார். அவர் கைத்துப்பாக்கி வைத்திருந்ததால், பொது மக்களை அச்சுறுத்தும் விதத்தில் நடந்து கொண்டதாக, அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஜோசப்புக்கு 120 நாட்கள் சிறை தண்டனை கிடைக்கும்.
General
படகில் வந்த 41 பேர்: கப்பற்படை விசாரணை
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அருகில் புகலிடம் தேடி கடலில் நின்று கொண்டிருந்த 41 பேரை கொண்ட படகை, அந்நாட்டு கடற்படை மீட்டு விசாரணை நடத்தி வருகிறது.மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரை அருகில் உள்ள ஆஷ்மோர் தீவு அருகில், 41 பேருடன் கூடிய படகை, ஆஸ்திரேலிய கடற்படை இடைமறித்து, விசாரணைக்காக அருகிலுள்ள கிறிஸ்துமஸ் தீவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. இதுகுறித்து, அந்நாட்டு உள்துறை அமைச்சர் பிராண்டோ ஓ கொன்னார் கூறுகையில்," அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. அனேகமாக அவர்கள் ஆப்ரிக்கர்களாகவோ அல்லது இலங்கையைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கக் கூடும். புகலிடம் கோரும் அவர்களின் கோரிக்கையை இன்னும் ஆறு மாத காலத்துக்குப் பரிசீலிக்க முடியாது' என்று தெரிவித்தார்.ஆஸ்திரேலிய அரசு, ஏப்., 9ம் தேதி முதல், ஆப்ரிக்கர்களுக்கு ஆறு மாதங்களும், இலங்கை நாட்டைச் சேர்ந்தோருக்கு மூன்று மாதங்களும் புகலிடம் கோரி வருவதைத் தடை செய்துள்ளது.
தமிழகம்
இன்று ஆற்றில் இறங்குகிறார் அழகர் : தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு
மதுரை : லட்சகணக்கான பக்தர்களின் கோவிந்தா சரண கோஷத்தினிடையே கள்ளழகர் இன்று அதிகாலை வைகையாற்றில் இறங்குகிறார். இன்று அதிகாலை தல்லாகுளம் பெருமாள் கோவிலில், கள்ளழகர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி ஒருமுறை வலம் வருகிறார். பின், தமுக்கம் கருப்பண சுவாமி கோவில் முன்பு ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.இதைத் தொடர்ந்து, தங்கக் குதிரை வாகனத்தில் புறப்படும் அழகர், காலை 7 மணி முதல் 7.30 மணிக் குள் வைகையில் இறங்குகிறார். காலை 11 மணியளவில் ராமராயர் மண்டபத் தில் அழகருக்கு தண்ணீர் பீச்சும் நிகழ்ச்சி நடக்கிறது.மாலை 5 மணிக்கு அண்ணாநகர் வழியாக அழகர் புறப்பட்டு, இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு செல்கிறார்.மாட்டு வண்டி பூட்டிக் கிட்டு...: இந்த நவீனயுகத் தில் நான்கு சக்கர வாகனங் கள் பெருகி விட்ட நிலையில், இன்னமும் மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு, வைகையாற்றில் இறங்கும் கள்ளழகரை தரிசிக்க வரும் பக்தர்களை காண முடிகிறது.மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த பலர் நேற்றும் மாட்டு வண்டிகளில் கள்ளழகரை பார்க்க திரண்டனர். கள்ளழகரை பார்த்து பக்தி பரவசத்துடன் அவர்கள் சொந்த ஊருக்குள் திரும்புவதற்கு ஒரு வாரம் கூட ஆகும். பக்தர்கள் வெள்ளத்தில் கள்ளழகர் எதிர்சேவை :.அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கடந்த 24ம் தேதி முதல் சித்திரை திருவிழா துவங்கி நடக்கிறது. மதுரை வைகை ஆற்றில் இறங்குவதற்காக, அழகர் மலையில் இருந்து 26ம் தேதி புறப்பட்டார் கள்ளழகர்.பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல், சர்வேயர் காலனி ஆகிய பகுதிகளில், பக்தர்கள் அமைத்திருந்த மண்டகபடிகளில் எழுந் தருளினார். நேற்று காலை 5.40 மணிக்கு மூன்று மாவடி வந்த கள்ளழகரை, பக்தர்கள் எதிர் கொண்டு அழைத்தனர்.அங்குள்ள புளியடி திம்மா திருக்கண் மண்டபத்தில், மேள, தாளம் முழங்க, வரவேற்பு அளித் தனர். பின், பன்னாங்கு (துணி) அவிழ்க்கப்பட்ட பல்லக்கில் அழகர் அருள்பாலித்தார். தல்லாகுளத்தில் எதிர் சேவை: தொடர்ந்து காலை 8 மணிக்கு புதூரில் நடந்த எதிர்சேவையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொரி கடலை, சர்க்கரை நிறைந்த செம்பில், மஞ்சள் துணி, பூ சுற்றி, சூடம் ஏற்றி, "கோவிந்தா...' கோஷமிட்டு வழிபட்டனர்.மாலை 5 மணிக்கு தல்லா குளம் மாரியம்மன் கோவிலில் எதிர்சேவை நடந்தது. இரவு 10.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் எழுந் தருளினார். அங்கு திருமஞ்சனம் நடந்தது.இன்று அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில், நெரிசல் ஏற்படாமல் இருப்பதற் காக, தடுப்புகள் முதன் முறையாக மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ளன.நேரடி ஒளிபரப்பு: ஆற்றுக் குள் இரு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இந்தாண்டு முதன்முறையாக "சேட்டிலைட்' மூலம், ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி, "டிவி'க்களில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு : மதுரைக்கு பெருமை சேர்க்கும், சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது. இதைக் காண, லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியை உலகெங்குமுள்ள தமிழர்கள் கண்டுகளிக்கும் வகையில், தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பாக தர இருக்கிறோம். இந்த ஒளிபரப்பு இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு துவங்கும். தினமலர் வாசகர்களுக்காக செய்யப்படும் இந்த வசதியை, தினமலர் வாசகர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறோம்.
தமிழகம்
புண்ணாகும் பாதங்கள்: பரிதவிக்கும் யானைகள்
மதுரை : கரடு முரடாக தோற்றமளிக்கும் யானையின் பாதம் உண்மையிலேயே மிருதுவானது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. தரையில் பாதத்தை வைக்கும் போது விரல்கள் விரிந்துக் கொள்ளும்; தரையிலிருந்து எடுக்கும் போது சுருங்கிக்கொள்ளும் தன்மை உடையது. மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி, திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அவ்வையார், கூடலழகர் பெருமாள் கோயில் மரகதவல்லி மற்றும் எட்டு தனியார் யானைகள் வலம் வருகின்றன. கோயில் யானைகளை பராமரிக்க, தனி இடம் உண்டு. பொதுவாக, "யானைகள் நடப்பதற்கு மண் தரைதான் ஏற்றது' என்கின்றனர் டாக்டர்கள் . பல மணி நேரம் தார்ரோட்டிலும், கல் தரையிலும் நிற்பதால், நாளடைவில் வெப்பம் தாங்காமல் கால்களில் புண் ஏற்படுகிறது. இது தொற்றுநோய்கள் ஏற்பட காரணமாகிறது. சில ஆண்டுகளுக்கு முன், வெப்பத்தின் தாக்கத்தால் மரகதவல்லி யானையின் கால்களில் புண் ஏற்பட்டது. உள்ளூர் டாக்டர்கள் மட்டுமில்லாமல், டில்லியிலிருந்து டாக்டர்கள் வந்து சிகிச்சை அளித்த பின்னரே குணமானது. மீண்டும் இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தற்போது நார் மிதியடியில் யானையை நிற்க வைக்கின்றனர். மேலும், வெப்பம் தாக்காமல் இருக்க மின்விசிறி வசதியும் செய்யப்பட்டுள்ளது.பார்வதி யானைக்கும் இதே பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மீனாட்சி கோயிலில் "மண் தரை' அமைக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும், தானாகவே தண்ணீரை எடுத்து பீய்ச்சி குளிக்கும் வகையில் மூன்று அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் தொட்டி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோயில் யானைகளுக்கு கிடைக்கும் வசதிகள், தனியார் யானைகளுக்கு கிடைப்பதில்லை என்பது உண்மை. பாகன்கள் யானையை வைத்து சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். நேற்று முன் தினம் தேரோட்டத்தின்போது, பல மணி நேரம் சுடும் தார் ரோட்டில் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்ட யானை ஒன்று, தண்ணீரை தேடி அண்டாவில் "தும்பிக்கையை' விட்டது. யானையின் தாக உணர்வை அறியாத பாகனோ, அங்குசத்தால் குத்தி காயப்படுத்தியது பக்தர்களின் மனதை காயப்படுத்தியது.இனியாவது தனியார் யானைகளை வைத்து சம்பாதிப்பதை மட்டும் குறியாக வைத்திருக்காமல், அதன் உடல் நலத்திலும் பாகன்கள் அக்கறை கொள்ள வேண்டும். இதை வனத்துறையினரும், வனஉயிரின காப்பாளர்களும், "புளூகிராஸ்' அமைப்பினரும் கண்காணித்து, யானைகளை காப்பாற்றவேண்டும். செய்வார்களா?
General
ரூ.12 கோடி பண மோசடி: இந்தியர்களுக்கு சிறை
வாஷிங்டன்: இணையதளம் மூலம் பிறருடைய பணப்பரிமாற்ற தகவல்களைத் திருடி பணமோசடி செய்ததாக, மூன்று இந்தியர்களுக்கு அமெரிக்காவில் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த ஜெய்சங்கர் மாரிமுத்து(36), திருஞானம் ராமநாதன் (37), சொக்கலிங்கம் ராமநாதன் (36) மூவரும் அமெரிக்காவில் இணையதளம் மூலமாக, "ஹேக்கிங்' என்ற முறையில், பண மோசடி செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவருமே, ஹாங்காங்கில் பிடிபட்டு பின், அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த பணமோசடி 2006 பிப்ரவரி துவங்கி, கடந்த டிசம்பர் வரை நடந்துள்ளது. இந்தப் போலி வணிகத்தில் 90 வாடிக்கையாளர்கள், அமெரிக்காவின் ஏழு தரகு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது . இவர்களின், "ஹேக்கிங்' மூலம், 12 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
General
பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திடீர் திட்டம்
துபாய்:மனித உரிமை அமைப்புகளின் நெருக்கடியை அடுத்து, பெண்களின் திருமண வயதை 16 ஆக நிர்ணயிப்பது குறித்து, சவுதி அரேபிய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.சவுதி அரேபியாவில், கடந்தாண்டு 11 வயது சிறுமிக்கு, 80 வயதான முதியவர் ஒருவரை, அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே அந்த சிறுமி, தனது கணவரை விட்டு பிரிந்து, தன் வீட்டுக்கு வந்து விட்டார். முதியவரிடமிருந்து, விவகாரத்தும் பெறப்பட்டு விட்டது. இந்த சம்பவத்தை அடுத்து, பெண்களின் திருமண வயதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை, சவுதி அரேபியாவில் வலுத்து வருகிறது. கடந்த 2005ல் சவுதி மன்னர் அப்துல்லாவால் அமைக்கப்பட்ட மனித உரிமை ஆணையமும், இதே கருத்தை தெரிவித்தது.இதைத் தொடர்ந்து, பெண்களின் திருமண வயதை 16 ஆக அதிகரித்து, அதை சட்டமாக்க, சவுதி அரேபியா அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக, மூன்று கமிட்டிகளை அரசு அமைத்துள்ளது. இந்த கமிட்டியில் இடம் பெற்றுள்ளவர்கள், குழந்தை நல மருத்துவர், மத அறிஞர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, அதன் அடிப்படையில், இதற்கான முடிவை விரைவில் அறிவிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.சவுதி அரேபியாவிலுள்ள ஒரு தரப்பினர்,"பல ஆண்டுகளுக்கு முன், குழந்தை திருமணங்கள் அதிகமாக நடந்துள்ளன. தற்போது இதற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்கின்றனர்.சவுதி அரேபியாவை சேர்ந்த ஷேக் அப்துல்லா அல்-மனே கூறுகையில், "பழங்காலத்திலிருந்த சூழ்நிலை வேறு, தற்போதுள்ள சூழ்நிலை வேறு' என்றார்.
General
பாக்., பிரதமருடன் மன்மோகன் திம்புவில்ஆலோசனை நடத்துவாரா: கிருஷ்ணா பதில்
திம்பு:சார்க் மாநாட்டில் பிரதமர் மன் மோகன் வந்து கலந்து கொண்ட பிறகு தான், பாகிஸ்தான் பிரதமருடன் அவர் விவாதிப்பாரா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என, வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.பூடானின் திம்பு நகரில், சார்க் மாநாடு இன்று துவங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், பூடான், இலங்கை, வங்கதேசம், மாலத் தீவு, ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.முன்னதாக இந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா பேசியதாவது:தெற்காசிய நாடுகளில் காணப்படும் பயங்கரவாதம், நமது சமுதாயத்தை பலவீனப்படுத்தி வருகிறது. எனவே, பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் அணி திரள வேண் டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.சார்க் கூட்டமைப்பில் உள்ள எட்டு நாடுகளிலும், வறுமை, பயங்கரவாதம், படிப்பறிவின்மை, வேலையில்லா திண் டாட்டம் போன்றவை காணப்படுகின்றன. தெளிவான இலக்கை நிர்ணயித்து ஒன்று பட்டு செயலாற்றினால், இந்த பிரச்னைகளை களைய முடியும்.போக்குவரத்து, தகவல் தொடர்பு, வர்த்தகம் ஆகிய வாய்ப்புகளை பயன்படுத்தி சார்க் நாடுகள் ஒன்றுபட்டு செயல்பட் டால், பொருளாதார ஸ்திரத் தன்மையை அடைய முடியும். இந்தியா அறிமுகப்படுத்திய தொலைதூர மருத்துவம், தொலைதூரக் கல்வி, விதை சோதனை ஆய்வகம், மழை நீர் சேகரிப்புத் திட்டம், சூரிய சக்தி மூலம் கிராமப்புறங்களுக்கு மின் வசதி போன்றவை சார்க், நாடுகளில் தற்போது பரவலாக பின்பற் றப்படுகிறது.இவ்வாறு கிருஷ்ணா பேசினார்.பாகிஸ்தான் பிரதமர் கிலானியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்த மாநாட்டில் சந்தித்து பேசுவார்களா? என நிருபர்கள் கேட்டதற்கு, "பிரதமர் மன்மோகன் சிங், திம்பு நகருக்கு வந்த பின் தான் இது குறித்து முடிவு செய்ய முடியும்' என்றார் கிருஷ்ணா.உலக வெப்பமயமாதலை தடுப்பது குறித்த முக்கிய ஒப்பந்தமும் இந்த மாநாட்டில் கையெழுத்தாக உள்ளது. சார்க் நாடுகளின் மேம்பாட்டுக்காக திரட்டப்பட்ட 1,500 கோடி ரூபாய் நிதி, இந்த மாநாட்டில் முறைப்படி செலவுக்கு துவக்கி வைக்கப்பட உள்ளது.
General
சாண்ட்விச், சாஸ் ஆகியவற்றில் உப்பு அளவை குறைக்க முடிவு
நியூயார்க்:அமெரிக்காவின் பிரபல உணவு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் உப்பின் அளவை குறைக்க ஒப்புக் கொண்டுள்ளன.உணவில் அதிக உப்பு கலப்பதால் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் எட்டு லட்சம் பேர் இந்த நோய்களால் இறக்கின்றனர். நியூயார்க்கில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 23 ஆயிரம் பேர் மேற்கண்ட பிரச்னைகளால் இறந்து விடுகின்றனர்.எனவே, உணவுகளில் உப்பின் அளவை குறைக்கும் படி நியூயார்க் மேயர் ப்ளூம்பெர்க் பல ஆண்டுகளாக பிரசாரம் செய்து வருகிறார். இந்த பிரசாரத்தின் பலனாக வீட்டு சமையலில் உப்பின் அளவை பெரும்பாலோர் குறைத்து விட்டனர். ஓட்டல்களிலும் இந்த பிரசாரத்தின் பலனாக உணவில் உப்பின் அளவு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.ஆனால், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் சுவைக்காக கூடுதலான உப்பை கலந்து விற்று வந்தன. மேயர் ப்ளூம்பெர்க்கின் உத்தரவு படி, ஸ்டார்பக், மார்ஸ்புட், சப்வே, வொயிட்ரோஸ் உள்ளிட்ட 16 நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் உணவில் உப்பின் அளவை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன.இதன் படி சான்ட்விச், கெச்சப், சாஸ் போன்ற பொருட்களில் உப்பின் அளவு குறைக்கப்பட உள்ளது.
தமிழகம்
ஜாக்கெட் கிழிந்ததாக அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ.,புகார்
சென்னை : சட்டசபையில் பேச வாய்ப்பு கேட்டு அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். சபையில் இருந்து வெளியேற்றும்போது, சபைக் காவலர்கள் தங்களை தாக்கியதாக ஆண் எல்.எல்.ஏ.,க்களும், பெண் எம்.எல்.ஏ., ஒருவரின் ஜாக்கெட் கிழிந்ததாகவும் புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டசபையில் நேற்று காலை கேள்வி நேரம் துவங்கியதும், காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயகுமாரின் கேள்விக்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பதில் அளிக்கத் துவங்கினார். அப்போது, அ.தி.மு.க., - ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்று  தங்களை பேச அனுமதிக்குமாறு தொடர்ந்து குரல் எழுப்பினர்.அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் இருக்கை முன்பாக ஒன்று திரண்டு விலைவாசி உயர்வைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்களும் முன்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர்.  இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த கோஷங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயகுமாரின் கேள்விக்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பதில் அளித்த வண்ணம் இருந்தார். "நீங்களாக சபையில் இருந்து வெளியேறினால் மீண்டும் உள்ளே வரலாம். நானாக, வெளியேற்றினால் திரும்ப உள்ளே வர முடியாது' என அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை, சபாநாயகர் எச்சரித்தார்.இதன் பிறகும் கோஷங்களை எழுப்புவதை அ.தி.மு.க.,வினர் தொடர்ந்தனர். பொள்ளாச்சி ஜெயராமன் கோஷங்களை படிக்க, அதை அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் திரும்ப கூறினர். " கேள்வி நேரம் முடிந்ததும் உங்களுக்கு நேரம் ஒதுக்கித் தருகிறேன். சபை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்' என, சபாநாயகர் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். அப்போது, நிதியமைச்சர் அன்பழகன் பேசும்போது, " கேள்வி நேரம் முடிந்ததும், எந்தவொரு எம்.எல்.ஏ.,வோ, கட்சித் தலைவரோ தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும், அரசை கண்டித்துப் பேசவும் உரிமை உண்டு. கேள்வி நேரம் என்பது அவையில் உரிமை. அதை மாற்ற முடியாது. இப்போது எழுந்து நின்று குரல் எழுப்புவது அவை நடவடிக்கைகளை தடுப்பதாக பொருள்படும்' என்றார். "சபை நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் செயல்படும் இவர்களை வெளியேற்ற வேண்டும்' என, அமைச்சர் துரைமுருகன் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார்.எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றும் பணியில் சபைக்காவலர்கள் ஈடுபட்டனர். அப்போது, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமனின் கையைப் பிடித்து இழுத்து வெளியேற்ற, காவலர் ஒருவர் முயற்சித்தார். இதை தடுத்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செ.ம.வேலுச்சாமி, காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இருவரையும் சபைக்காவலர்கள், "நகர்த்தி' வெளியேற்றினர். அதே போல், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சி.வி. சண்முகத்தை வெளியேற்றும்போது, தள்ளுமுள்ளு நடந்தது. அவரது ஒரு செருப்பு சபைக்குள் மாட்டிக் கொண்ட நிலையில், ஒற்றை செருப்புடன் சபையில் இருந்து வெளியேறினார். பின், அதையும் சபைக்கு வெளியே விட்டு விட்டு வெளிநடப்பில் பங்கேற்றார். சபைக்கு வெளியே எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், கொறடா செங்கோட்டையன் ஆகியோர் கூறும்போது, "முக்கியப் பிரச்னைகளின் போது, கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து பேச சபையில் வாய்ப்பு கொடுத்துள்ளனர். விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று, "பந்த்' நடக்கும் நிலையில், அது பற்றி சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டது.தொடர்ந்து பேச முற்பட்டபோது, எங்களை வெளியேற்றியுள்ளனர். நாங்களாக வெளியேறும்முன், சபைக் காவலர்களை வைத்து எங்களை தர, தர என இழுத்து வெளியேற்றினர். இது போன்ற சம்பவத்தை சபாநாயகரும் வேடிக்கை பார்க்கிறார்' என்றனர்.எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரை சபைக் காவலர்கள் வயிற்றில் குத்தியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. பெண் எம்.எல்.ஏ.,க்கள் புகார்: அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ., பதர் சயீது கூறும்போது,""நாங்கள் வெளியேற வந்தபோது, வலுக்கட்டாயமாக இழுத்ததோடு, சபைக் காவலர்கள் என் வயிற்றில் குத்தினர். நான் வெளியில் போகவில்லை என்றால், தூக்கித்தான் செல்ல வேண்டும். அடிக்க இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது' என்றார். இளமதி சுப்பிரமணியம் எம்.எல்.ஏ., கூறும்போது, "பெண் காவலர்கள் சேலையை பிடித்து இழுத்தனர். இதனால், எனது ஜாக்கெட் கிழிந்து விட்டது' என்றார்.
தமிழகம்
அழகரின்அபூர்வ வரலாறு
ஒரு காலத்தில் இந்த உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஏனெனில் யாரும் தவறு செய்வதே கிடையாது. இருந்தும் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதற்காக துரத்தி வரும் போது அங்கு வந்த தர்மதேவன் அவனை ஒரே அடியில் வீழ்த்தினார். இந்த விஷயத்தை கேள்விப் பட்ட சிவன், உலகில் தர்ம,நியாயம் அழிந்து விடக்கூடாது. அதை பாதுகாப்பது உன் பொறுப்பு. எனவே அதற்குரிய உருவத்தை உனக்கு தருகிறேன் என கூறி தர்மதேவனுக்கு, பற்கள் வெளியே தெரியும் படி ஒரு கொடூரமான உருவத்தை வழங்கி விட்டார். இதைக்கண்ட உயிர்கள் நாம் தப்பு செய்தால் தர்மதேவன் அழித்து விடுவான் என்று பயம் கொண்டன. நல்லது செய்யப்போய் நமது உருவம் இப்படி ஆகி விட்டதே என கவலை கொண்டான் தர்மதேவன். சரி! நமது உருவம் தான் இப்படி ஆகி விட்டது. நாம் தினமும் எழுந்தவுடன் விழிக்கும் முகமாகவது மிகவும் அழகாக இருக்க வேண்டும் என இந்த அழகர்கோவில் மலையில் தவம் இருந்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த அழகின் தெய்வமான விஷ்ணு, இவனுக்கு காட்சி கொடுத்து ""வேண்டியதை கேள்'' என்று கூறினார். அதற்கு தர்மதேவன், நான் இந்த மலையில் தவம் செய்த போது காட்சி கொடுத்தீர்கள். எனவே நீங்கள் நிரந்தரமாக இங்கேயே எழுந்தருளவேண்டும். அத்துடன் தினமும் ஒரு முறையாவது உங்களுக்கு பூஜை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும் என்றான். தர்மதேவனின் வேண்டுகோளின் படி மகாவிஷ்ணு சுந்தரராஜப்பெருமாளாக இந்த மலையில் எழுந்தருளினார். சுந்தரம் என்றால் "அழகு'. எனவே அழகர் என்ற பெயரே நிலைத்து விட்டது. அத்துடன் தர்மதேவனுக்கு காட்சி கொடுத்த மலை அழகர் மலை என்றானது. இன்றும் கூட அழகர்கோவிலில் அர்த்தஜாம பூஜையை தர்மதேவனே செய்வதாக ஐதீகம். தல சிறப்பு  : பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஸ்ரீரங்கம் முதலிடத்தையும், காஞ்சிபுரம் அடுத்த இடத்தையும் மூன்றாவது இடத்தை அழகர்கோவிலும் பெற்றுள்ளன. இத்தலத்தை பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ் வார், திருமங்கையாழ்வார், ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர். பீஷ்மரும், பஞ்சபாண்டவர்களும் இத்தல பெருமாளை தரிசித்து பலனடைந்துள்ளனர். கள்ளழகர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது : அழகர்கோவில் மூலவர் பரமசாமி. ஸ்ரீதேவி,பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். மகாவிஷ்ணுவின் திருக்கோலங்களிலேயேஅழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப்பெருமாள் தான் பெயருக் கேற்றாற் போல் மிகவும் அழகாக இருப்பார். தர்மதேவனுக்கு காட்சி தர பெருமாள் வந்ததால் வைகுண்டத்தில் பெருமாளை காணாமல் மகாலட்சுமி பெருமாளைத்தேடி இங்கு வந்துவிட்டாள். மகாவிஷ்ணுவை விட மிக அழகான லட்சுமியைக்கண்ட தர்மதேவன், மகாலட்சுமியும் பெருமாளுக்கு அருகில் இங்கேயே தங்க வேண்டும் என அடம் பிடித்தார்.  இவனது வேண்டுகோளின் படி மகாலட்சுமி பெருமாளை கைப்பிடித்து அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் இங்கு வீற்றிருக்கிறாள். இப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக்கொண்டது. மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் "கள்ளழகர்' ஆனார். இதனாலேயே இந்த பெருமாளை நம்மாழ்வார், "வஞ்சக்கள்வன் மாமாயன்' என்கிறார். தேனூர் மண்டபத்தில் நடந்த விழா :  மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக அழகர் கோயிலிலிருந்து மதுரைக்கு வரும் அழகர், தேனூர் மண்டபத்தில் சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் காட்சி தரும் சித்திரை திருவிழா ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது.  அதே போல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு வரை மாசிமாதம் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வந்தது. இப்படி சைவத்திற்கு தனிவிழா, வைணவத்திற்கு தனி விழா என மதுரையில் கொண்டாடப்பட்டு வந்ததை திருமலை நாயக்கர் இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சைவ, வைணவ ஒற்றுமை திருவிழாவாக ஆக்கி விட்டார். வைகை தோன்றியது எப்படி : மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண விருந்து சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. தங்கள் வீட்டு விருந்தைப் பற்றி பெருமையுடன் சிவனிடம் பெண் வீட்டார் பேசினர். ""தங்களுடன் வந்துள்ள அனைவரும் உடனடியாக சாப்பிடச்சொல்லுங்கள். இங்கே உணவுவகை கொட்டிக் கிடக்கிறது. சாப்பிடாமல் இருந்தால் வீணாக அல்லவா போய் விடும்?'' என்றனர். சிவன் அவர்களிடம், ""இப்போது யாருமே பசியில்லை என்கிறார்கள். இதோ, எனது கணங்களில் ஒருவனான இந்த குண்டோதரனுக்கு முதலில் விருந்து வையுங்கள். மற்றவர்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்,'' என்றார். விருந்தை மருந்தைப் போல ஒரே வாயில் போட்டு மென்று விட்டான் குண்டோதரன். பெண் வீட்டார் திகைத்தனர்.""மற்றவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம். இந்த குண்டோதரன் இப்போது தின்றது போதாதென்று இன்னும் கேட்கிறானே,'' என வெட்கி நின்ற அவர்கள் அந்த இறைவனையே சரணடைந்தனர். திருமண வீட்டில் பெருமை பேசக்கூடாது என்பது இதனால் தான். அரண்மனைவாசிகளாயினும் அகந்தை கூடாது என்பது இச்சம்பவம் தரும் தத்துவம். சிவன் அன்னபூரணியை அழைத்தார். அவள் கொடுத்த உணவை சாப்பிட்டு விட்டு ஆறு, குளம், குட்டை, வாய்க்கால், ஏரி இவைகளில் உள்ள தண்ணீர் எல்லாம் குடித்து முடித்தான் குண்டோதரன்.அப்படியும் தாகம் தீராததால் ஈசனிடம் வந்து முறையிட்டான். ஈசன் தன் சடை முடியிலிருந்த கங்கையிடம், "" மதுரை நகருக்கு உடனே தண்ணீர் தேவைப்படுகிறது. உடனே அங்கு பாய்ந்தோடு,'' என கட்டளையிட்டார். குண்டோதரனிடம், "" நீர் வரும் திசைநோக்கி கை வை. அந்த நீரை குடித்து உன் தாகத்தை தீர்த்து கொள்,'' என்றார். இதுவே "வைகை' ஆனது.  கங்கை பாய்ந்ததால் வைகையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. எனவே அது புண்ணிய நதியாக மாறியது. இப்படி கங்கையையும் வைகையையும் இணைக்கும் திட்டத்தை சிவன் அன்றே உருவாக்கி வைத்திருக்கிறார். இந்த நதி காற்றை விட வேகமாக வந்ததால் "வேகவதி' எனப்பட்டது.வைகையை பாழடித்து விட்ட நாம், அழகரையே வாய்க்கால் கட்டி இறக்கி விட்டிருக்கும் நாம், அவரிடம் பாவங்களுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு, மழை பொழிய வேண்டுவோம். அழகர்கோவிலின் சிறப்பம்சம் :கருப்பண்ணசுவாமி:  இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்.பதினெட்டாம்படியான் என்று பக்தர்கள் மிகவும் பயபக்தியோடு அழைக்கப்படுகிறார்.இவரை கும்பிட்டால் நினைத்த காரி யங்கள் கைகூடும். கோட்டை: விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாக செலுத்துவார்கள். அழகர் கோயில் தோசை: காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது. நூபுர கங்கை :  சிலம்பாறு - ராக்காயி அம்மன் கோயில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் இருந்து வற்றாத ஜீவ நதியாக வந்து கொண்டிருக்கிறது * மூலவர் மானிட பிரதிஷ்டை இல்லை. தெய்வ பிரதிஷ்டை. * பெருமாள் சப்தரி ஷிகள் சப்த கன்னிகள் பிரம்மா விக்னேஷ்வர் ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார். * 6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம் * சக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார். * மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் உற்சவராக உட்கார்ந்திருக்கிறார். மண்டூக முனிவருக்கு  விமோசனம் தந்த விழா : முன்னொரு காலத்தில் மகாவிஷ்ணு இந்த உலகை அளக்க தனது திருவடியை தூக்கினார். அப்போது பிரம்மன், திருமாலின் தூக்கிய திருவடியை கழுவி பூஜை செய்தார். அப்படி கழுவிய போது திருமாலின் கால்சிலம்பு(நூபுரம்) அசைந்து அதிலிருந்து நீர்த்துளி பூமியிலுள்ள அழகர்மலை மீது விழுந்தது. கங்கையை விட புண்ணியமான இந்த தீர்த்தமே, நூபுர கங்கை என்ற பெயரில் இன்னும் அழகர் கோவில் மலையில் வந்து கொண்டிருக்கிறது.இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் சுபதஸ் என்ற முனிவர் அமர்ந்து பெருமாளை நினைத்து தியானம் செய்து கொண்டிருந் தார். அப்போது அவரைக்காண கோபக்கார முனிவரான துர்வாசர் அங்கு வந்தார். பெருமாளின் நினைப்பிலேயே இருந்த சுபதஸ் முனிவர், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை. இதனால் கோபமடைந்து துர்வாசர், ""மண்டூக பவ'' அதாவது, மண்டூகமான நீ மண்டூகமாகவே (தவளை) போ என சாபமிட்டார். இந்த சாபத்தினால் பதறிய சுபதஸ் முனிவர், துர்வாசரே, பெருமாளின் நினைப்பில் இருந்ததினால் உங்களை சரியாக உபசரிக்க முடியவில்லை, எனவே எனக்கு சாபவிமோசனம் தந்தருள வேண்டும் என வேண்டினார்.அதற்கு துர்வாசர், வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய். அப்போது அழகர்கோவிலிலிருந்து வரும் பெருமாளால் உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என கூறி செல்கிறார். சித்திரை திருவிழாவிற்காக அழகர்கோவிலிலிருந்து கிளம்பும் பெருமாள்,மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூட்டிக்கொண்டு குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.அழகர்கோவிலில் இருந்து பல்லக்கில் கிளம்பும் அழகர் பின் குதிரை வாகனம், சேஷவாகனம் என மாறுகிறார். சித்ராபவுர்ணமிக்கு மறுநாள், தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார். இதன் பின் ராமராயர் மண்டகப்படியில் தசாவதாரம் எடுக்கிறார். நேர்த்திக்கடன் : தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொடுத்த அழகருக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை தருகின்றனர். எடைக்கு எடை நாணயம், எடைக்கு எடை தானியங்கள் ஆகியவற்றை தருகின்றனர். இத்தலத்தில் துலாபாரம் மிகவும் சிறப்பு.பெருமாளுக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம்.ஊதுவத்தி, வெண்ணெய் சிறு விளக்குகள் துளசி தளங்கள் பூக்கள் பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து அழகருக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.இது தவிர கோயிலுக்கு வரும்  பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
தமிழகம்
எதிர்க்கட்சிகள் சிதறின: வெட்டுத் தீர்மானம் படுதோல்வி
புதுடில்லி : எதிர்க்கட்சிகள்  சிதறலால் மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக  கொண்டுவரப்பட்ட   வெட்டுத் தீர்மானம் நேற்று தோல்வி அடைந்தது. குறிப்பாக பெட்ரோலிய விலை உயர்வை எதிர்த்த வெட்டுத் தீர்மானத்தில்,  அரசுக்கு ஆதரவாக 289 ஓட்டுகளும், எதிர்ப்பாக 201  ஓட்டுகளும் விழுந்தன.  முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக வெட்டுத் தீர்மானம் கொண்டுவர தீர்மானித்தது பரபரப்பாக பேசப்பட்டது.இந்நிலையில் நேற்று லோக்சபா கூடியதும், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் எழுந்து, ஐ.பி.எல்., தொடர்பான பிரச்னையை கிளப்பினார். ஐ.பி.எல்., ஊழல் குறித்து பார்லிமென்டின் கூட்டுக்குழு அமைத்திட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரி வரும் நிலையில், அவையில் பதில் சொல்லாமல், வெளியில் இதுகுறித்து பிரதமர் பதில் அளித்துள்ளது அவை உரிமை மீறல் ஆகும் என்று குற்றம் சாட்டினார்.  நேற்று லோக்சபாவும், ராஜ்யசபாவும்  தொடர்ந்து அமளி காரணமாக நடக்கவில்லை.மாலை 6 மணிக்கு லோக்சபா மீண்டும் கூடும்  என்று அறிவிக்கப்பட்டது. தர்ணா: முன்னதாக காலையில் 10 மணிக்கு பார்லிமென்டின் பிரதான வாயிலில் இடதுசாரிகள், அ.தி.மு.க., - ம.தி.மு.க., - தெலுங்குதேசம், பிஜு ஜனதாதளம்  உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஒன்றாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஆனால் முலாயமும், லாலுவும் தனியாக காந்தி சிலை முன்பாக நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆனால், கடந்த இருநாட்களாக  பகுஜன் கட்சி, அரசுக்கு ஆதரவு தரும் என்ற கருத்து பேசப்பட்டது, காரணம் மாயாவதி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சி.பி.ஐ., மேற்கொண்ட நடவடிக்கையை வாபஸ் பெறும் நிலையை ஏற்படுத்திய செயலாகும். அதே போல நேற்று காலையில் லக்னோவில் உ.பி., முதல்வர் மாயாவதி "வெட்டுத் தீர்மானத்தில் அரசை நாங்கள் ஆதரிப்போம்' என்று அறிவித்து  21 எம்.பி.,க்கள் ஆதரவை வெளிப்படுத்தினார். இந்த எம்.பி.,க்கள்  ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தனர். இடதுசாரியுடன் செயல்பட்ட  ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலு, மற்றும் சமாஜ்வாடி தலைவர்  முலாயம் சிங் ஆகிய இருவரும் வெட்டுத் தீர்மான விஷயத்தில் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டனர். நேற்று காலையில் எதிர்க்கட்சிகள்  ஆர்ப்பாட்டத்தில்  பங்கேற்ற லாலு பிரசாத்,  பின்பு நிருபர்களிடம் "எங்கள் கட்சி எம்.பி.,க்களுக்கு கொறடா உத்தரவு  கிடையாது' என்று கூறி, எதிர்க்கட்சிகள்  ஒற்றுமை இல்லை என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.  சமாஜ்வாடி தலைவர் முலாயமோ, "மதவாத பா.ஜ., முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவு இல்லை, விலைவாசி உயர்வை எதிர்க்கிறோம், ஆனால் அரசு தோற்க விரும்பவில்லை' என்று கூறி இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.ஆகவே, நேற்று மதியத்திற்குள் ஆளும் கூட்டணிக்கு  சபையில் அதிக ஆதரவு இருப்பது வெளிப்படையானது. அதை,  காங்கிரஸ் கட்சி தகவல்தொடர்பாளர் மணீஷ் திவாரி, "வெட்டுத் தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் தோற்கும்' என்றே குறிப்பிட்டார். அனைத்து எதிர்க்கட்சிகளும் வெட்டுத் தீர்மானத்தில் உண்மையான அக்கறையுடன் இருக்கும் என்று எதிர்பார்த்த பா.ஜ., வட்டாரமோ பெரும் ஏமாற்றம் அடைந்தது. ஓட்டெடுப்பு :நேற்று மாலையில்  6 மணிக்கு  லோக்சபா கூடியதும், வெட்டுத் தீர்மானங்களை அனுமதித்தார் சபாநாயகர். ஆனால், தனித் தனியாக கட்சிகள் விருப்பப்படி  டிவிஷனில் ஓட்டளிக்க அனுமதித்த அவர்,  வெட்டுத் தீர்மான ஓட்டெடுப்பு முடிந்ததும்,  மானியக் கோரிக்கைகள் மீது  குரல் ஓட்டெடுப்பில் நிறைவேற்றப்படும் என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார்.முடிவில் பரபரப்புடன் எதிர்பார்த்த  வெட்டுத் தீர்மானம்  பிசுபிசுத்தது.  முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., கொண்டு வந்த வெட்டுத் தீர்மானத்திற்கு ஆதரவாக 162 ஓட்டுகளும், எதிராக 246  ஓட்டுகளும் விழுந்தன. முடிவில் 46 லட்சத்து 61 ஆயிரத்து 38  கோடி ரூபாய்க்கான  மானியக் கோரிக்கைகள்  விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன.  பல்வேறு அமைச்சகங்களின் மானியக் கோரிக்கைகள்  விவாதமின்றி முடிந்தன. கணக்குப்படி பார்த்தால் பா.ஜ.,வும் இடதுசாரிகளும் சேர்ந்து 222 எம்.பி.,க்கள். ஆனால், அதிக பட்சமாக விழுந்த ஒட்டுகள் 201 மட்டுமே என்பதை முடிவில் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பன்சால் குறிப்பிட்டார். பல புதுமைகள்... : நேற்று பல்வேறு கட்சிகள்  கோரிக்கைகளின் படி கொண்டுவரப்பட்ட வெட்டுத் தீர்மானங்கள் மீதான ஓட்டெடுப்பில்  ஒரு தடவை மட்டும் கணக்கெடுப்பு இயந்திரம் செயல்பட்டது.  மற்ற தடவைகளில்  சீட்டுகள் தந்து  கணக்கெடுப்பை லோக்சபா செயலகம் மேற்கொண்டது. இயந்திரத்தில் கோளாறு என்று அறிவிக்கப்பட்ட போது, சபாநாயகர் உட்பட பலரும் வியப்புடன் பார்த்தனர்.கம்யூனிஸ்ட் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா  கொண்டு வந்த வெட்டுத் தீர்மானத்திற்கு ஆதரவு 201  ஓட்டுகள். எதிர்த்து விழுந்தது 289 ஓட்டுகள்.  பா.ஜ., தலைவர் சுஷ்மா,  வெட்டுத் தீர்மானத்திற்கு ஆதரவாக 162, எதிர்த்த ஓட்டுகள் 246. மேலும் மற்றொரு புதுமையாக  பா.ஜ., ஆதரவு பெற்ற ஜார்க்கண்ட் முதல்வரும், எம்.பி.,யுமான சிபுசோரன், அரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டார். மொத்தம் 90 நிமிடங்கள் நடந்த பரபரப்பின் போது ஆளும் கட்சி எம்.பி.,க்கள் ஆரவாரம் இன்றி அமைதியாக இருந்தனர். விவாதம் நடக்காத  மானிய கோரிக்கைகள் மீதும் வெட்டுத் தீர்மானம் கொண்டுவர  சபாநாயகர்  அனுமதித்து முதல் தடவையாகும்.
இந்தியா
இது உங்கள் இடம்
அடக்கு முறை ஜனநாயகம்!கலை அரசு, கோவையிலிருந்து எழுதுகிறார்: டில்லியில் உள்ள ராஜ்யசபா, லோக்சபாவும், மக்கள் பிரதிநிதிகள் கூடும் இடம் தான்; சென்னையில் உள்ள தமிழக சட்டசபையும், மக்கள் பிரதிநிதிகள் கூடும் இடம் தான்.லோக்சபா, ராஜ்யசபா இயங்குவதை தினமும், தொலைக்காட்சியில் பார்க்கலாம். உறுப்பினர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்களால், சபை அடிக்கடி ஒத்தி வைக்கப்படுகிறது. சபை நடவடிக்கைகளை ஒத்தி வைப்பதாகக் கூறி, சபாநாயகர் மீரா குமார் எழுந்து போய் விடுகிறார்.ஆனால், தமிழக சட்டசபையின் கதை யே வேறு. எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா சபைக்கே வருவதில்லை. அ.தி.மு.க., உறுப்பினர்களோ, சபை துவங்கிய சில நிமிடங்களிலேயே ஏதாவது காரணம் சொல்லி, வெளிநடப்பு செய்கின்றனர்.அதைவிட கொடுமை, சபாநாயகர் உத்தரவின் பேரில் பல தடவை சபைக் காவலர்கள், அ.தி.மு.க., உறுப்பினர்களைக் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியே போடுகின்றனர். காலியாக இருக்கும் சட்டசபையில், ஆளும் கட்சி உறுப்பினர்கள் தங்கள் இஷ்டம் போல, முதல்வருக்கு துதிபாடி மகிழ்கின்றனர்.ஒரு சமயம், ஐ.நா., சபையில், இந்தியாவின் பிரதிநிதியாக, கிருஷ்ணமேனன், 5 மணி நேரம் காஷ்மீர் பிரச்னை பற்றி, இடைவிடாமல் பேசி சாதனை ஏற்படுத்தினார்.எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கட்சி தாவ மட்டுமே சட்டசபையில் சுதந்திரம் உண்டு; வேறு எந்த சுதந்திரமும் இல்லை. பிரிட்டிஷ் பார்லிமென்டில் எட்மண்ட் பர்க் போன்ற எதிர்க்கட்சியினரின் பிரசங்கங்கள் சரித்திரப் பிரசித்தி பெற்றவை. தமிழக சட்டசபையில் நிலவுவது அடக்குமுறை ஜனநாயகமாக இருக்கிறதே! ஐயோ பாவம்நிலை!வி.பாலு, சென்னையிலிருந்து எழுதுகிறார்: நமது பார்லிமென்டில் உள்ள சபாநாயகர், ஆளுங்கட்சியால் தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனாலும், எதிர்க்கட்சியினருக்கு பேச வாய்ப்பளித்து, அவர்களின் கருத்துக்களை பதிய வைக்கிறார். ஆனால், நமது சட்டசபையிலோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது; எதிர்க்கட்சிகள் பேச ஆரம்பித்தாலே, "உட் கார், உனக்கு பேச அனுமதி இல்லை; வெளியே தூக்கிப் போடு...'இதுதான், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இன்றைய நிலை.ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டிக்காட்டத் தான், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை தேர்ந்தெடுத்து, சட்டசபைக்கு அனுப்புகின்றனர். ஆளுங்கட்சியினர் மட்டும் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. இதை, தமிழக சபாநாயகர் உணர வேண்டும்.பார்லிமென்ட் நிகழ்ச்சிகளை, "டிவி'யில் ஒளிபரப்புவதை போல, தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப வேண்டும். அல்லல்புரியலியே!எஸ்.குமார், தொண்டாமுத்தூர், கோவையிலிருந்து எழுதுகிறார்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் போது, வினாத்தாளை மாற்றிக் கொ டுத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ஒரு ஆசிரியை. தேர்வுகள் அனைத்தும் முடிந்த நிலையில், மாணவர்களின் விடைத்தாள்கள் கேட்பாரன்று பஸ்சிலும், ரயில் நிலையத்திலும் கிடந்ததாக செய்திகள் வந்தன.இவ்வாறான செய்திகளைக் கேள்விப்படும் போது, மாணவர்கள் அந்த பொதுத் தேர்விற்காக, படும் பாட்டை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவர்கள் மட்டுமா சிரமப்படுகின்றனர்? மொத்த குடும்பமே அந்த தேர்விற்காக, டென்ஷனுடன் செயல்பட வேண்டியுள்ளது.எத்தனை நல்லது, கெட்டதுகளை தவிர்த்து விட்டு, பெற்றோர் தம் பிள்ளைகளின் பொதுத் தேர்விற்காக அல்லல்படுகின்றனர் என் பதை அனைவரும் அறிவோம். மாணவர்களின் எதிர்காலமே, இதில் அடங்கி உள்ளதை, பொறுப்பிலுள்ளவர்கள் எப்படி மறக்கின்றனர் என்பது, அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக உள்ளது.விடைத்தாள்கள் மாயமானதும், அவை கேட்பாரின்றி கிடந்ததும், சாதாரணமான விஷயமாகி விட்டது. அதற் குள், விடுபட்ட விடைத்தாள் களுக்கு, மறுதேர்வு என் றொரு அறிவிப்பு வேறு. அல்லல்படும் மாணவ, மாணவியர்களின் மனநிலையை, யாரும் அறிந்து கொள்ளவில்லையே. போதாக்குறைக்கு, பிளஸ் 2 விடைத்தாளை திருத்திய பின், அதை கிழித்துப் போட்டு, மீண்டும் பெற்றோரின் வயிற்றெரிச்சலை வாரிக் கொட்டிக் கொண்டுள்ளார், இன்னொரு ஆசிரியை.பொறுப்பில் இருக்கும் தனி நபரின் அஜாக்கிரதை, மாணவர்களின் எதிர்காலத் தையே கேள்விக்குறியாக் கும் என்பதை, எப்போது இவர்கள் உணர்வரோ? நம்மை மிஞ்ச ஆளில்லை! ஜி.சுவாமிநாதன், அடையாறு, சென்னையிலிருந்து அனுப்பிய "இ-மெயில்' கடிதம்: கிரிக்கெட் என்ற ஜென்டில்மென் விளையாட்டு, இன்று ஒரு மிகப் பெரிய சூதாட்டம் ஆகி விட்டது. சசி தரூர் என்ற மிகப் படித்த, வசதியான குடும்பத்து அமைச்சர், இந்த சூதாட்டத்தை தன் தோழிக்காக தவறான முறையில் பயன்படுத்தியதற்காக, பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.ராஜாக்களும், அமைச்சர்களும் சூதாட்டத்தில் ஈடுபடுவது, இந்தியாவில் இன்று வந்த கலாசாரம் அல்லவே... மகாபாரத காலத்திலேயே இருந்தது தானே!பாண்டவர்கள் நல்லவர் களாகவும், மூடர்களாகவும் இருந்ததால், தங்கள் நாட்டையும், தங்களையும், தங்கள் மனைவியையும் வைத்து சூதாடினர். ஆனால், இன்று நம்முடைய அமைச்சர்கள் படித்த புத்திசாலிகள்; வெளிநாட்டு அனுபவம் உள்ளவர் கள்... அதனால் தான் திறமையாக செயல்படுகின்றனர்.தங்களை பணயம் வைக் காமல், விளையாட்டு வீரர் களை பணயம் வைத்து, தாங்களும் பணம் கண்டு, அவர்களையும் சம்பாதிக்க விடுகின்றனர்."சொல் ஒன்று, செயல் மற்றொன்று' என்பதில், இந்தியர்களை மிஞ்ச உலகில் எவரும் இல்லை என்பதையே, நாட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நிரூபிக்கிறது. வாழ்க இந்தியா; வளர்க அதன் கலாசாரம்! "தொல்ஸ்' யோசிப்பாரா? கே.அன்புதாசன், கோவையிலிருந்து எழுதுகிறார்: ஏப்., 14ம் தேதி, அம்பேத்கரின் பிறந்த நாள். அம்பேத்கர் பெயரில், தொல்.திருமாவளவன் பெரிய விழா நடத்தி, கருணாநிதிக்கு அம்பேத்கர் விருது வழங்கிப் பாராட்டி இருக்கிறார். ஆனால், அன்று அம்பேத்கர் சிலைக்கு நேரே சென்று மலர் தூவி வழிபாடு செய்தவர் ஜெயலலிதா; கருணாநிதி அல்ல.கருணாநிதி சார்பில் ஸ்டாலின் தான், அந்த வேலையைச் செய்தார். ஒரு சாதாரண மனிதர் இறந்தால் கூட, அந்த நபருக்கு மரியாதை செலுத்துபவர் கருணாநிதி. அவர் ஏன் அம்பேத் கருக்கு அஞ்சலி செலுத்த நேரில் போகவில்லை? யோசிப்பாரா தொல்ஸ்? காரணம் மிக எளிதானது.தொல்சின் ஆதரவு கருணாநிதிக்கு தேவை இல்லை; ஆனால், கருணாநிதியின் ஆதரவும், அரவணைப்பும் தொல்சின் கட்சிக்குத் தேவை.ஒரு இழவு வீட்டுக்குப் போனால் கூட, "கொல்லையிலே பாவக்கா...' என்று ஒருவர் பாட, "போகையிலே பறிச்சிக்கலாம்...' என்று இன்னொருவர் பாடுவது தானே திராவிட பண்பாடு, பாரம்பரியம்.உண்மையில், விடுதலைச் சிறுத்தைகள் பேருக்குத்தான் சிறுத் தைகள்; இவர்கள் கழுத்தில் சங்கிலி மாட்டி, கருணாநிதி அழைத்துப் போகும் பூனைகள் இவர்கள்.இரண்டு எம்.எல்.ஏ., - இரண்டு எம்.பி., சீட்டுகளுக்காக ஒரு கட்சியா? இவர் கருணாநிதி தயவால் எம்.பி., யாகி இருக்கிறார். அதற்கு நன்றிக் கடனா இந்தப் பாராட்டு விழா? இவரால் தனியாக நின்று ஜெயிக்க முடியுமா?
இந்தியா
சொல்கிறார்கள்
வாழ்வு தந்த மகளிர் சுய உதவிக் குழு!சிறந்த மகளிர் குழுவிற்கான விருது பெற்ற சவுடாம்மன் சுய உதவிக் குழுவின் தலைவர் ராமாத்தாள்: கூலி வேலை செஞ்சு ரொம்ப கம்மியான சம்பளத்துல குடும் பத்த நடத்த வேண்டி இருந் துச்சு.அதனால, கந்துவட்டிக்கு வாங்கிக் கஷ்டப்பட்டோம். பனியன் கம்பெனிக்கு டெய்லரா வேலைக்குப் போய்க்கிட்டு இருந்தோம்.அப்ப தான் ரெப்கோ பேங்க்ல, ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் மூலமா மகளிர் சுயஉதவிக் குழு ஆரம் பிக்கிறதா கேள் விப்பட்டு, 14 பொண்ணுக ஒண் ணாச் சேர்ந்து இந்தக் குழுவை ஆரம்பிச் சோம்.படிப்பை அரைகுறையாகக் கொண் டிருந்தவர்கள் அனுபவத்தை மூலதனமாக்கி வங்கியில் வாங்கிய கடன் தொகை 60 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்து ஆடைத் தயாரிப்பு தொழிலில் இறங்கினோம். அடுத்து மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, 20 பவர் மிஷின்களை வாங்கினோம். பின் நிர்வாக வசதிக்காக உறுப்பினர்களைக் கொண்டு சிறு சிறு நிர்வாகக் குழுக்கள் அமைத்தோம்.குறைந்த விலையில் உற்பத்திப் பொருட்களை வாங்க ஒரு சிறு குழு, தயாரித்த ஆடைகளை விற்பதற்கு ஒரு குழு, வரவு செலவுகளை பராமரிக்க ஒரு குழு என்று பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டு உழைக்க ஆரம்பித் தோம். எங்களின் தற் போதைய மாத நிகர லாபம் 40 ஆயிரம் ரூபாய்.இந்தக் குழு ஆரம் பிப்பதற்கு முன் நாங்க பணத்திற்கு மத்தவங்க கைய எதிர்பார்த்து நின்னுகிட்டு இருந்தோம். ஆனா, இப்ப எங்க சொந்தக் கால்ல நிக்க முடியும்கிற நம் பிக்கை இந்த குழு எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கு.
இந்தியா
பேச்சு, பேட்டி, அறிக்கை
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் மனித உரிமைகளுக்குப் பாதுகாப்பில்லை. ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. இத்தகைய காட்டுத் தர்பாரை நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர், ஜனநாயகம் பற்றி பேசுவது பித்தலாட்டம். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி பேச்சு : பாகிஸ்தான், தம் மண்ணில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும், பயங்கர வாத கட்டமைப்புகளுக்கும் ஆதரவளிக்கும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. இந்திய தேசிய லீக் பொதுச் செயலர் ஜகிருதீன் அகமது அறிக்கை: பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு, மிரட்டப்படுகின்றனர். எனவே, ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் வகையில், அவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யாராக இருந்தாலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். இதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். ஐகோர்ட் நீதிபதி ஜோதிமணி பேச்சு: கொலை வழக்குகளில் உடனே தீர்ப்பு வழங்க வேண்டும். 12 ஆண்டுகள் கழித்து, கொலை வழக்கில் விடுதலை பெற்றால் யாருக்கும் லாபம் இல்லை. சிறையில் இருந்தவருக்கு இழந்த வாழ்க்கையை திரும்பக் கொடுக்க முடியுமா? தமிழக மின் வாரியத் தலைவர் சி.பி.சிங் பேச்சு: மின் உற்பத்தியை அதிகரிக்க பல புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்தில் கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். தமிழகத்திற்கு இப்போது 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் 7,500 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி உள்ளது. கேரள திட்டக்குழு துணைத் தலைவர் பிரபாத் பட்நாயக் பேச்சு: உலகம் முழுவதும் உணவு நுகர்வில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தானிய வகைகளில் வீழ்ச்சியுள்ளது. வர்த்தக வரையறைகளும், உணவு உற்பத்திக்கு எதிராகவே உள்ளன. இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரிஸ் பேச்சு: விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் நடந்த போது, மிகக் கடுமையான சட்டப் பிரிவுகள் இருந்தன. இத்தகைய சட்டத்தின் தேவை இருந்தது; இப்போது சூழ்நிலை மாறிவிட்டது. பிற நாடுகளின் நெருக்குதலால் அவசர நிலை சட்டத்தை திரும்பப் பெற முடிவு செய்யவில்லை.
தமிழகம்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய பெண் அதிகாரி கைது
புதுடில்லி : பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இந்திய பெண் தூதரக அதிகாரி, கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில், பத்திரிகை மற்றும் தகவல் தொடர்புத் துறைச் செயலராக பணியாற்றியவர் மாதுரி குப்தா. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தியாவை பற்றிய மிக முக்கிய ரகசியங்களை இவர் சேகரித்து பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இவரது நடவடிக்கைகள் கண்காணிப்பட்டதில், இந்த உண்மை வெளிப்பட்டது. சார்க் மாநாடு தொடர்பாக விவாதிப்பதற்காக டில்லி வரும்படி இவர் அழைக்கப்பட்டார். கிழக்கு டில்லியில் உள்ள இவரது வீட்டில் போலீசார் விசாரணை நடத்தி, மாதுரியை கைது செய்தனர். பாகிஸ்தானில் யார் மூலமாக இவர் இந்திய ரகசியங்களை தெரியப்படுத்தினார் என்பது குறித்து, தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
தமிழகம்
இரண்டு தலை ஆண் குழந்தை இறந்தது
குண்டூர் : ஆந்திராவில் கடந்த வாரம், இரண்டு தலைகளுடன் பிறந்த ஆண் குழந்தை, நேற்று பரிதாபமாக இறந்தது. ஆந்திரா, குண்டூரைச் சேர்ந்தவர் அருணா. இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கடந்த வாரம், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு இரண்டு தலைகள் இருந்தன. சுவாசப் பை, முதுகு தண்டுவடம் ஆகியவையும் இரண்டு, இரண்டாக இருந்தன. இருந்த போதும் கை, கால்கள் வழக்கமாகவே இருந்தன. விசித்திரமான உடல் அமைப்புடன் பிறந்த இந்த குழந்தை, குண்டூரில் உள்ள அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டது. டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். சுவாசப் பை இயங்காததால், அந்த குழந்தை நேற்று பரிதாபமாக இறந்தது.
தமிழகம்
சென்னை வந்த விமானத்தில் கோளாறு
மும்பை : மும்பையிலிருந்து, சென்னைக்கு 87 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் - இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மீண்டும் மும்பைக்கே திரும்பி இறங்கிவிட்டது. ஏர் - இந்தியா விமானமான, ஐ.சி-572, 87 பயணிகளுடன் நேற்று காலை 6.33 மணியளவில் மும்பை சத்ரபதி சிவாஜி விமானநிலையத்திலிருந்து புறப்பட்டது. புறப்பட்ட 20 நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 6.54க்கு "முழு அவசரநிலை'யில் மும்பை விமான நிலையத்திலேயே மீண்டும் இறங்கி விட்டது. அதிலிருந்த அத்தனை பயணிகளும், பாதுகாப்பாக உள்ளதாக ஏர் - இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பின், இன்னொரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழகம்
திருவிழா கொண்டாட 144 தடை : ரேஷன் கார்டை ஒப்படைத்த மக்கள்
திண்டுக்கல் : பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்த கோயில் திருவிழாவிற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் ரேஷன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை,உழவர் அட்டை, அரசு காப்பீட்டு திட்ட அட்டைகளை திண்டுக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஒப்படைத்தனர். திண்டுக்கல் அருகேயுள்ள பெருமாள்கோவில்பட்டியில் காளியம்மன் கோயில் பிரச்னை தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் இருந்து வருகிறது. இந்த பகுதியில் தற்போது 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் கலெக்டரை சந்தித்து காளியம்மன் கோயில் திருவிழா கொண்டாடவும்,கோயிலுக்கு காம்பவுண்ட் சுவர் கட்டவும் அனுமதிக்க வேண்டும் என்றனர்.இந்த இடம் புறம்போக்கில் உள்ளது.இதனால் புதிய கட்டடம் கட்ட முடியாது.திருவிழா கொண்டாட தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, அந்த ஊர் மக்கள் சிலர் நேற்று திண்டுக்கல் ஆர்.டி.ஓ.,அலுவலகம் வந்தனர்.ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, உழவர் அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, மற்றும் கோயிலை பூட்டி சாவியை ஆர்.டி.ஓ.,அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது: எங்களது தரப்பைச் சேர்ந்த ஆண்டி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.அப்போது கலெக்டர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.தற்போது கோயிலை பூட்டி சாவியை கொடுங்கள் என்கிறார்.இந்து மதத்திற்கு அநீதி இழைக்கப்படுகிறது.பிற மதத்தினர் என்ன செய்தாலும் கண்டு கொள்வதில்லை,'' என்றனர். கலெக்டர் வள்ளலாரிடம் கேட்ட போது: திருவிழா கொண்டாட தடையுத்தரவு உள்ளது. நான் எந்த உறுதி மொழியும் அவர்களுக்கு கொடுக்கவில்லை,'' என்றார். பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து குளத்திற்கு அருகே அமர்ந்தனர். இந்த மக்கள் ஒப்படைத்த ரேஷன் கார்டுகளை வி.ஏ.ஓ., தலையாரி ஆகியோர் வீடு,வீடாக சென்று அவர்களின் வீட்டிற்குள் போட்டனர்.
தமிழகம்
மாசு கலந்த நீரை குடித்த இருவர் பலி
ஓசூர் : தளி அருகே, மாசு கலந்த நீரை குடித்த இருவர் பலியாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி யூனியன் அச்செட்டி அடுத்த பஞ்சல் துணை கிராமத்தில், நேற்று முன் தினம், சிறியவர் முதல் பெரியவர் வரை அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் அடைந்தனர். அவர்களில் 16 பேர், சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். மயக்கம் தெளிந்து சகஜ நிலைக்கு திரும்பியவர்கள், நேற்று முன்தினம் இரவு கிராமத்துக்கு திரும்பினர். எட்டு பேர் தீவிர சிகிச்சையில் இருந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், "மாசு கலந்த குடிநீரை குடித்ததால், வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது' என்று கூறினர். வீடு திரும்பிய ருத்திரப்பா (60), நேற்று முன்தினம் மீண்டும் மயங்கி விழுந்து, சிறிது நேரத்தில் இறந்தார். சிகிச்சைக்கு வராமல் வீட்டில் இருந்த பசவராஜ் (77), நேற்று காலை மயங்கி விழுந்து இறந்தார். இருவர் அடுத்தடுத்து இறந்ததால், அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். அதிர்ச்சியடைந்த தேன்கனிக்கோட்டை மருத்துவமனை நிர்வாகம், சிகிச்சை பெறும் மற்றவர்களை, "டிஸ்சார்ஜ்' செய்யாமல் தொடர்ந்து சிகிச்சை பெறுமாறு வலியுறுத்தினர். ஆனால், சிகிச்சை பெற்று வந்தவர்கள், "தெய்வக் குற்றத்தால் ஊரில் வாந்தி, மயக்கம் வந்து அடுத்தடுத்து இறந்து வருகின்றனர், அதனால் சுவாமிக்கு பரிகாரம் செய்து உயிரை காப்பாற்றி கொள்கிறோம்' எனக் கூறி, நேற்று வீடுகளுக்கு திரும்பினர்.
தமிழகம்
கள்ளக்காதலர்களால் பத்து குழந்தைகள் தவிப்பு
நாகர்கோவில் : கள்ளக்காதலில் ஏற்பட்ட காமத்தால், மூன்று கள்ளக் காதல் ஜோடிகள், குழந்தைகளைத் தவிக்க விட்டு, தலைமறைவாகி விட்டனர். இதனால் மூன்று குடும்பங்களில் பத்து குழந்தைகள் தவித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே மயிலாடிபுதூரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (42). இவரது மனைவி அம்மாபழம் (38). இவர்களுக்கு மூன்று குழந்தைகள். மயிலாடியை சேர்ந்தவர் ஹரிகோபால் (29). இவரது மனைவி விகிலா (25). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கோவில்களில் ஏடு வாசிக்க சென்ற இடத்தில் சந்திரசேகரனுக்கும், விகிலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதற்கு இரு குடும்பத்திலும் எதிர்ப்பு ஏற்பட்டதால் சந்திரசேகரனும், விகிலாவும், அவரவர் குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு மாயமாகி விட்டனர். மனைவி இல்லாமல் ஹரிகோபால் மூன்று குழந்தைகளுடன் தவிப்பதை பார்த்து, உறவினரான சந்திரன் என்பவர் அவருக்கும், குழந்தைகளுக்கும் தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்தார். இங்கு தங்கியிருந்த போது ஹரிகோபாலுக்கும், சந்திரனின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை சந்திரன் கண்டித்ததால் ஹரிகோபால், சந்திரன் மனைவியுடன் தலைமறைவாகி விட்டார். இதனால் சந்திரனின் நான்கு குழந்தைகள் தாயில்லாமல் தவிக்கின்றனர். இதுபற்றி தனித்தனியாக அளிக்கப்பட்ட புகார்கள் பற்றி அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம்
ரயிலில் இருந்து தவறி விழுந்து பெண் காயம்
நாகர்கோவில் : மதுரை சி.எஸ். காலனியை சேர்ந்தவர் மாரியம்மாள் (70). இவர்கள் கொல்லத்தில் இருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்த பயணிகள் ரயிலில் ஓடி சென்று ஏறினார். அப்போது தவறி அவர் கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவர் நாகர்கோவில் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.