text
stringlengths
11
513
மூலமும் நாட்டு வருமானத்தை அதிகரிக்கச் செய்வதே திட்டமிடுதலின் முக்கிய நோக்கமாகும். அரசின் முகவராக ( Agency ) செயல்படும் திட்டக்குழு இதில் முக்கியப் பங்காற்றுகிறது. தேசிய மயமாக்குதல் ( Nationalization ) , தனியார் மயமாக்குதல் ( Privatization ) , மதுவிலக்கு ( Prohibition ) ஆகியவை பொருளியலும் அரசியலிலும் மிக முக்கியமான பகுத...
இருப்பதால் தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் இதை அரசியல் பொருளாதாரம் என்றே அழைத்தனர். அனேக நாடுகள் , பொருளாதார பிரச்சினைகளை மையமாக வைத்து தேர்தலை சந்தித்துள்ளன. சில சமயங்களில் அரசியல் கருத்துக்களும் அரசியல் அமைப்புகளும் உருவாக முக்கிய காரணம் பொருளியல் சூழ்நிலையே ஆகும். இங்கிலாந்தில் தொழிற்புரட்சி காலத்தில் பொருளியல் ஏற்றத்த...
வரலாறும் ( Economics and History ) பொருளியலும் வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையது. வரலாறு கடந்தகால நிகழ்வுகளின் பதிவேடாகும். கடந்தகால மக்களின் சமூக பொருளாதார , அரசியல் நிலைப் பற்றிகூறுவது வரலாறு ஒரு வரலாற்று மாணவனுக்கு மொகலாய மன்னர்களின் மதக் கொள்கைகள் , அரசின் நிகழ்வுகள் எல்லாம் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் கடந்தக்க...
பொருளியல் மாணவனுக்கு முக்கித்துவம் வாய்ந்ததாகும். வரலாற்று விபரங்களைப் பயன்படுத்தி பொருளியல் விதிகளை உருவாக்குகின்றோம். கடந்த கால மக்களின் பொருளாதார நிலையை அறிந்து கொள்ள வரலாறு பயன்படுகிறது. இதற்கு “ வரலாற்றுப் பொருளியல் ” ( Economics History ) என்ற தனிப்பிரிவு உள்ளது. வரலாற்றுக்கும் பொருளியலுக்கும் உள்ள தொடர்பை பின்வர...
பொருளியலும் அறஇயலும் ( Economics and Ethics ) அறஇயல் ஒரு சமூக அறிவியல். இது ஒழுக்க நெறிகளைப் பற்றி கூறகிறது. சரி , எது தவறு என்று சுட்டிக்காட்டுகிறது. இது மனிதனது நல்வாழ்வைக் குறிக்கோளாக கொண்டுள்ளது. பொருளியலுக்கும் அறஇயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மக்களின் பருப்பொருள் நலத்தை மேம்படுத்துவதே பொருளியல் என்று மார்ஷல்...
ஏற்படுத்திடினும் , அறஒழுக்கத்திற்காக அரசு மதுவிலக்கை ( Prohibition ) அமுல்படுத்துகிறது. பொருளியல் பிரச்சனைகளை ஆராயும்பொழுது ஒழுக்கநெறி ( அல்லது ) அறநெறிகளைப் பற்றி கருத்தில் கொள்ளவேண்டியது இல்லை என்று இராபின்சன் கூறுகின்றார். ஆனால் இவருடைய கருத்தை பிற பொருளியல் அறிஞர்கள் எற்றுக் கொள்ளவில்லை. பொருளியலை அறவியலிருந்து பிர...
( Economics and Jurisprudence ) சட்ட இயல் என்பது ஒரு சட்ட அறிவியலாகும். பொருளாதார வளர்ச்சி நாட்டின் சட்டதிட்டங்களைப் பொறுத்து அமையும். நல்ல சட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும். தவறான சட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் ( உம். ) கடந்த காலங்களில் அயல்நாட்டு முதலீட்டாளர்களை நாம் வரவேற்றபோது , நமது...
தொழிலாளர் நலச் சட்டங்களும் தேவை. பொருளியலும் உளவியலும் ( Economics and Psychology ) உளவியல் என்பது மனிதனது மன நிலையை ஆராயும் அறிவயலாகும். குழந்தைகள் உளவியல் ( Child Psychology ) , மக்கள் திரன் ( Mob Psychology ) உளவியல் , தொழில் சார்ந்த உளவியல் ( Industrial Psychology ) , குற்றவியல் உளவியல் ( Criminal Psychology ) என உ...
அறிவு அவசியமானது. தொழிலாளர் பிரச்சனைகளை ஆராய , தொழில் சார்ந்த உளவியல் அறிவு அவசியமானது. ஒரு நல்ல விற்பனையாளன் , தன்னுடைய பண்டங்களின் விலையை மாற்ற விரும்புபோது வாங்குபவரின் மனநிலையை நன்கு அறிந்திருத்தல் அவசியமாகும். பல முக்கியமான பொருளியல் விதிகள் உளவியலை அடிப்படையாக கொண்டே அமைந்துள்ளன. ( உம் ) குறைந்து செல் இறுதி நிலைப...
Mathematics and Statistics ) மற்ற அறிவியல்களைப் போலவே , பொருளியல் கணிதவியலோடும் , புள்ளியலோடும் தொடர்புடையது. புள்ளியல் என்பது ‘ சராசரி ’ பற்றிய , ‘ எண்ணிக்கை ’ பற்றிய அறிவியலாகும். பொருளியலில் நாம் பயன்படுத்தும் அட்டவணைகளும் , வரைபடங்களும் புள்ளியியலை அடிப்படையாகக் கொண்டவை. கணிதவியல் முறைகள் நவீன பொருளதாரத்தில் அதிக அ...
உருவாக்கப்பட்டது. அளவியல் முதல் நோபல் பரிசு ஜான் டின்பெரின் ( Jan Timbergen ) மற்றும் இராக்னர் ஃபிரிஷ் ( Ragnar Frisch ) ஆகியோருக்கு , அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது. இயங்குநிலையும் இயங்காநிலையும் ( Dynamic and Static Concepts ) பொருளாதாரச் செயல்பாட்டை அறிந்து கொள்வதற்கு காலத்தின் பங்கு இன்றியமையாதது. இரண...
மாற்றங்கள் என்று நாம் அனுமானிக்கிறோம். மாற்றங்கள் ஏற்படாத குறுகிய காலத்தைப் பற்றி ஆராயும் அணுகுமுறை ஒப்பீட்டு மாறாச் சமநிலை ( Compartive static ) ஆகும். ( உம் ) ஒப்பீட்டு மாறா சமநிலையில் , ஒரு காலக்கட்டத்தில் உள்ள பொருளாதார நிலையையும் வேறு ஒரு காலகட்டத்தில் உள்ள பொருளாதார நிலையையும் ஒப்பீட்டு பார்க்கிறோம். மார்ஷலின் ' ...
பங்கு இன்றியமையாதது. இயங்கு நிலையில் மாற்றம் என்பது மையக்கருத்தாகும். ( உம் ) முந்தைய காலத்தின் வட்டி வீதத்தைப் பொறுத்து இன்றைய முதலீடு அமையும் வணிகக் சுழல் ( Trade Cycle ) இதற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டாகும். இருப்பும் செலவும் ரொக்கமும் ( Stocks and Flows ) இருப்பும் , பொருளியலின் அடிப்படைக் கருத்தமைவாகும். இருப்பை ஒ...
இருப்பாகும். வருமானம் , செலவாகும். நுண்ணியல் பொருளியல் ( Micro Economics ) பேரியல் பொருளியல் ( Macro Economics ) பொருளியல் கோட்பாடுகள் நுண்ணுயில் பொருளியல் என்றும் , பேரியல் பொருளியல் என்றும் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றன. தனி ஒரு பண்டத்தின் விலை , தனிப்பட்ட நிறுவனங்கள் அல்லது தொழில் , தனிக்குடும்பங்கள் , ஆகியவற்றைப் ...
பரிமாணத்தைப் ) அளிக்கிறது முழுவேலை வாய்ப்பு , சேமிப்பு , முதலீடு ஆகிய ஒட்டுமொத்த பொருளியல் தொகுதிகளுக்கிடையே உள்ள தொடர்பை விளக்குகிறது. வருமானக் கோட்பாடு , வேலைவாய்ப்புக் கோட்பாடு , விலைக்கோட்பாடு , பணக்கோட்பாடுகளையும் பேரியல் பொருளியல் என்று கூறலாம். பொருளியல் ஒரு அறிவியல் பொருளியல் ஒரு கலையியலா ? அல்லது அறிவியலா ? என...
உற்று நோக்குதல் , ஆய்வு செய்தல் , சோதித்தல் ஆகிய நடைமுறைகளுக்குப் பின்னரே கோட்பாடுகள் வரையறுக்கப்படுகின்றன. இதே அறிவியல் முறைகள் தான் பொருளியலிலும் பின்பற்றப்படுகின்றன. மற்ற அறிவியல்களைப் போன்றே காரணம் மற்றும் விளைவு ஆகியவற்றுக்கிடையேயான தொடர்பை விளக்குகிறது. அறிவியலானது , இயற்கை அறிவியல் ( Physical Science ) என்றும் ச...
மட்டுமே இது கூறுகிறது. மனித நடவடிக்கைள் மிகவும் சிக்கலானவை. எளிதாக இவற்றைக் கற்க இயலாது. எனவே பொருளியல் மற்றும் அறிவியலைப் ( Physical Science ) போன்று தெளிவானது. சரியானது , துல்லியமானது அன்று. சமூக அறிவியல்களான அரசியல் , வரலாற்றை விட பொருளியல் ஒரு அறிவியல் என்று கூறுவதற்கு முழுத் தகுதி படைத்தது. ஏனெனில் பொருளியலில் நாம...
நடைமுறை வாழ்க்கையில் உண்மையில்லாமல் போகலாம். மற்ற அறிவியல்களிலும் இதே போன்று ஏற்படும். சில பொருளியல் விதிகள் உண்மையில் நடைபெறாமல் போனாலும் , பொருளியல் ஒரு அவிறியல் இல்லை என்று கூறமுடியாது. பொருளியல் ஆய்வு முறைகள் ( Methods of Economic Analysis ) பொருளியலில் இருவகையான ஆய்வு முறைகள் உள்ளன. 1. பகுத்தாய்வு முறை ( Deductive...
சார்ந்தது. சில அடிப்படை எடுகோள்களிலிருந்து முடிவுகள் பெறப்படுகின்றன. கிரேக்கர்களிடையே இம்முறை மிகவும் பிரபலமானது. 1. பகுத்தாய்வு முறையானது , பொதுக்கருத்திலிருந்து தனிக் கருத்தைப் பெறுவது ஆகும். தொன்மைப் பொருளியல் அறிஞரான ரிகார்டோ பகுத்தாய்வு முறையைப் பின்பற்றினார். தொகுத்தாய்வு முறையானது ( Inductive Method ) தனிக் கருத...
முறைகளும் நிறைவு அளிக்கக்கூடியவையாக இல்லை. கோட்பாட்டினை அளித்த , புகழ்பெற்ற அறிவியில் அறிஞரான டார்வின் ( Darwin ) தொகுத்தாய்வு முறையையும் , பகுத்தாய்வு முறையையும் இணைத்து புதிய பொது விளக்கக்கோட்பாட்டை ( Hypothesis ) புகுத்தியுள்ளார் ( உருவாக்கியுள்ளார் ). பரிணாமக் டார்வினின் தொகுத்தாய்வு , பகுத்தாய்வு முறைகளின் முக்கிய...
அல்லது திருத்தி அமைத்தல் பகுத்தாய்வு முறை சிறந்ததா ? அல்லது தொகுத்தாய்வு முறை சிறந்ததா ? என்ற மிகப் பெரிய சர்ச்சை கடந்த காலத்தில் எழுந்தது. தற்பொழுது அந்த வேறுபாடு காணப்படவில்லை. வலது காலும் இடது காலும் நடப்பதற்கு எவ்வாறு அவசியமோ அதே போன்று தொகுத்தாய்வு முறையும் , பகுத்தாய்வு முறையும் அறிவியல் ஆய்வுக்குத் அவசியம் என்று...
நிபந்தனைக்குட்பட்டு , என்ன நடக்கவேண்டும் என்று கூறும் கூற்றே விதியாகும். நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் ஒரு விளைவை ஏற்படுத்தும். புவியீர்ப்பு விசையின் காரணமாகவே ஒரு பொருள் தரையில் விழுகின்றது என்பது இயற்பியல் விதியாகும். புவியீர்ப்பு விசை என்ற விதி ஒரு போக்குரைக் கூற்று Statement of Tendencies ஆகும். அதேபோன்று பொருளியல் விதி...
பொருளாகும். அதே போன்று பண்டங்களின் விலை உயரும் பொழுது குறைவாகவே வாங்குவார்கள். இவ்விதிகள் சில நிபந்தனைக்குட்பட்டே நிகழும் சூழ்நிலைகள் அல்லது நிபந்தனைகள் மாறுபட்டால் இவ்விதி செயல்படாது. இது எல்லா அறிவியலுக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. இயற்பியல் விதிகள் துல்லியத்தன்மை வாய்ந்தவையாகும். ஆனால் பொருளியல் விதிகள் இயற்பியல் விதி...
நடவடிக்களைப் பற்றியும் ஆராய்கிறோம். பரிசோதனைக் கூடத்திற்குள்ளோ அல்லது வெளியிலோ மனிதனது நடவடிக்கைகளைப் பரிசோதித்து அறிய முடியாது. ஆகவே பொருளியல் விதிகள் இயல்பியல் விதிகளைப் போன்று துல்லியத்தன்மை உடையன அல்ல. சராசரி மனித நடவடிக்கைகளைப் பற்றி நாம் ஆராய்கிறோம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பொருளியல் மனிதனைப் பற்றியும் மன...
ஒப்பிடுவதைவிட கடல் அலைகளின் விதிகளோடு ஒப்பிடலாம் ” என்று குறிப்பிட்டுள்ளார். சூரிய சந்திர ஈர்ப்பினால் அலைகள் தோன்றுகின்றன என்று அறிவியல் கூறுகிறது. பௌர்ணமியன்று அலைகள் அதிகம் தோன்ற வாய்ப்பு உள்ளது. அலைகள் அதிகம் தோன்றாமல் இருப்பதற்கும் வாய்ப்பும் உள்ளது. பொருளியல் விதிகளிலும் இத்தகைய போக்குகள் காணப்படும் ( உம். ) பணத்த...
விதிகளைவிட துல்லியத்தன்மை வாய்தவையாகும். ஏனெனில் நாம் பணத்தைப் பயன்பாட்டை அளவிடும் அளவுகோளாகப் பயன்படுத்துகிறோம். பணம் ஒரு தோராயமான மதிப்பீடுதான் என்றாலும் அது பொருளியல் விதிகளுக்கு முழு வடிவம் கொடுக்கிறது. பொருளியல் விதிகள் அனைத்தும் சில எடுகோள்களைச் சார்ந்துள்ளன. தேவை விதியை எடுத்துக்கொண்டால் “ மற்றவை மாறாதிருக்கும் ...
இருக்க வேண்டும். 2. சுவை உணர்வு மாறக்கூடாது. 3. மற்ற பண்டங்களின் விலை நிலையாக இருக்க வேண்டும். 4. புதிய பதிலீட்டுப் பண்டங்கள் இருத்தல்கூடாது. மேற்கண்ட எடுகோள்கள் அனைத்தும் மாறாமல் இருந்தால் தான் இவ்விதி உண்மையாகும். பொருளியல் விதிகள் பலவகையான நிபந்தனைக்குட்பட்டவையாகும். ஆகவேதான் சில நிபநத்னைகளை நாம் மேற்கொள்கின்றோம். ப...
விதிகளின் சில நிபந்தனைக்குப்பட்டவை. இயற்பியல் விதிகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. ஆனால் பொருளியல் விதிகள் அனைவருக்கும் ஏற்புடையன அல்ல. இருப்பினும் சில விதிவிலக்குகள் உண்டு. குறைந்த செல் விளைவு விதி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். பொருளியல் விதிகளின் முக்கியத்துவம் பொருளியல் விதிகள் நடைமுறை வாழ்க்கைக்கு ம...
முக்கியமான விதிகளாகும். பண அளவுக்கோட்பாடு எல்லா பொருளாதார அமைப்புகளுக்கும் பொருந்தக்கூடியது என்று சில பொருளியல் அறிஞர்கள் கருதுகின்றார்கள். “ குறைந்து செல் இறுதி நிலைப் பயன்பாட்டு விதி ” உண்மை அனுபவங்களைச் சார்ந்தது. இருப்பு அதிகரிக்க , அதிகரிக்க அதை வாங்க வேண்டும் என்ற விருப்பம் குறைந்து கொண்டே செல்லும். பண்டங்களின் வ...
கிடைக்கும் பயன்பாடு குறைந்த செல்லும் என்பது தெளிவாகிறது. விலையானது இறுதி நிலைப் பயன்பாட்டோடு தொடர்புடையதால் அதன் விலையும் குறைகிறது , வளர்விகித வரி ( Progressive Taxation ) குறைந்து செல் பயன்பாட்டு விதியின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஒருவருடைய வருமானம் கூடும்பொழுது வரி விகிதத்தை உயர்த்தி செல்வந்தர்கள் அதிக வரி செலுத்து...
தியாகம் அதிகமாக இருக்காது. தேவை விதி உண்மை அனுபவத்தைஅடிப்படையாக கொண்டது. விலை குறையும் பொழுது தேவை அதிகரிப்பதை நாம் நடைமுறையில் காணலாம். அளிப்பு அதிகமாக இருந்தால் விலை குறையும். பண்டங்களின் அளிப்பு அதிகரித்தால் இறுதிநிலைப் பயன்பாடு குறையும். விற்பனையாளன் சிறிதளவு விலையைக் குறைத்துத் தான் விற்பனையை அதிகரிக்க முயல்வான். ...
தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும் ஒரு விதியாகும். உணவு உற்பத்தி அதிகரிப்பதைவிட மக்கள் தொகை வேகமாக அதிகரிக்கிறது என்று மால்தஸ்ஸின் மக்கள் தொகைக் கோட்பாடு கூறுகிறது. இது ஒரு துல்லியமான கூற்று அல்ல. ஏழை நாடுகளில் பசுமைப்புரட்சி ஏற்படும் வரை இக்கூற்று உண்மையாகும். பசுமைப்புரட்சி வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. எழை ...
அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. அடிப்படைக் கருத்துகள் ( Basic Concepts ) ஒவ்வொரு அறிவியலுக்கும் ஒரு சிறப்புத் தன்மை உண்டு. பொருளியலுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. சில பொருளியல் பதங்கள் சிறப்புக் கண்ணோட்டத்தில் பயன்படுத்தப்படுகின்றன. செல்வம் , பண்டங்கள் , வருமானம் , மதிப்பு , விலை மற்றும் சந்தை போன்ற அடிப்...
நிறைவு செய்யும் பணமதிப்புள்ள பற்றாக்குறையாயுள்ள பண்டங்கள் அனைத்தும் செல்வமாகும். பண மதிப்புள்ள அனைத்தும் பொருளியலில் செல்வமாகும். அனைத்துப் பொருளியல் பண்டங்களும் மாற்று மதிப்பு ( Value in Exchange ) ( பரிவர்த்தனை ) உடையதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருப்பில் உள்ள பண மதிப்புள்ள பண்டங்கள் அனைத்தும் செல்வங்கள் எனப்படு...
அப்பண்டங்கள் விரும்பக்கூடியவையாக இருக்க வேண்டும் என்று மார்ஷல் கூறுகின்றார். 2. பண்டங்களின் அளிப்பு வரையறைக்குட்பட்டதாக இருக்க வேண்டும். சூரிய ஒளியும் , காற்றும் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. அவை இல்லாமல் வாழமுடியாது. ஆனால் அவை அளிப்பில் ஏராளமாக உள்ளதால் செல்வமாகக் கருதப்படுவதில்லை. இவை இலவசப் பண்டங்களாகும். 3. செல்வம் ஒ...
அந்நிறுவனத்தின் புறச்செல்வமாகும். பயன்பாடு , பற்றாக்குறை மற்றும் மாற்றத்தக்க தன்மை செல்வத்தின் முக்கியப் பண்புகளாகும். செல்வத்தின் வகைகள் ( Classification of Wealth ) : 1. தனியார் செல்வம் என்பது பருப்பொருள் மற்றும் அருவப் பொருளை உள்ளடக்கியது. வீடு , நிலம் , மரச்சாமான்கள் , எந்திரங்கள் போன்றவை பருப்பொருள்களாகும். பங்குப...
பொருட்களாகும். பொது சாலைகள் , பூங்காக்கள் , பொதுக் கல்வி நிறுவனங்கள் , பொது நூலகங்கள் , அருங்காட்சியகங்கள் போன்றவை சமுதாயச் செல்வமாகும். செல்வமும் நலமும் ( Wealth and Welfare ) செல்வத்திற்கும் நலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு நாட்டு மக்களின் நலமானது அந்நாட்டின் செல்வத்தின் அளவைப் பொறுத்தது மட்டுமல்லாது , செல்வ...
கருதப்படுகிறது. பொருளியலில் பண்டங்கள் என்பது பருப்பொருள் , அருவப் பொருள்களைக் குறிக்கும் நாற்காலி அல்லது ஆப்பிள் எப்படி ஒரு பண்டமோ அதேபோல நடிகர்கள் , ஆசிரியர்கள் , இசைக்கலைஞர்கள் இவர்களின் பணிகளும் பண்டங்களாகக் கருதப்படுகின்றன. பண்டங்கள் இலவசப் பண்டங்கள் என்றும் பொருளியல் பண்டங்கள் என இருவகைப்படும் இயற்கையின் கொடைகளான ...
விலை கொடுக்க வேண்டும். வேறு வழியில் கூறுவோமேயனால் இதற்கு மாற்று மதிப்பு ( Value in Exchange ) உண்டு. ஏனென்றால் தேவையோடு ஒப்பிடும்போது அவை பற்றாக்குறையானவையேயாகும். ஒரு இடத்தில் இலவசப் பண்டமாக கருதப்படுவது , வேறு ஒரு இடத்தில் பொருளியல் பண்டமாகக் கருதப்படும். பண்டங்களின் தேவை அளிப்பைப் பொறுத்தே அமையும். ( உம். ) கிராமங்க...
பொருளியல் பண்டமாகிறது. பண்டங்களை நுகர்வுப் பண்டங்கள் ( Consumer Goods ) உற்பத்திப் பண்டங்கள் ( Producers Goods ) என்று இருவகையாகப் பிரிக்கலாம். நுகர்வுப் பண்டங்கள் நமது விருப்பத்தை நேரடியாக நிறைவு செய்பவை. அவை ( 1 ) அழுகும் பண்டங்கள் ( உம். ) காய்கறி , மீன் , இறைச்சி ( 2 ) அழியாப் பொருள்கள் ( வீடு , கார் , வானொலி ) இரண...
நுகர்வுப் பொருள். ஆனால் காரை உற்பத்தி செய்ய பயன்படும் இயந்திரங்கள் மூலதனப் பண்டங்கள் அல்லது உற்பத்திப் பண்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு பண்டம் ஒரு இடத்தில் நுகர்வுப் பண்டமாகவும் வேறு ஒரு இடத்தில் உற்பத்திப் பண்டமாகவும் கருதப்படுகிறது. ( உம் ) மின்சாரம் வீடுகளில் பயன்படுத்தும்போது நுகர்வுப் பண்டமாகவும் , நிறுவனங்க...
கிடைக்கக்கூடிய மனநிறைவினைக் குறிக்கும் என்று செலிக்மென் கூறுகிறார். பண்டங்களும் செல்வமாகும் என்பது நமக்குத் தெரியும். வருமானம் கிடைக்கிறது. ( உம் ) சொந்த வீடு ஒரு செல்வமாகும். அதிலிருந்து பெறும் வாடகை வருமானமாகும். அனைத்து பொருளியல் செல்வத்திலிருந்து தான் வருமானம் இரு வகைப்படும் 1. பண வருமானம் ( Money Income ) 2. உண்மை...
அமையும். உண்மை வருமானம் பணத்தின் வாங்கும் சக்தியைப் பொறுத்தே அமையும். ஆனால் பணத்தின் வாங்கும் சக்தியானது பண்டங்களின் விலை மட்டத்தைப் பொறுத்து அமையும். பண்டங்கள் , பணிகள் மீது கொண்டுள்ள ஆதிக்கத்தைப் ( Command ) ( திறன் ) பொறுத்து உண்மை வருமானம் அமையும். பண வருமானம் அதிகரிப்பதால் மட்டுமே மக்கள் நன்றாக வாழ்வதாக கூற முடியா...
நான் ஒரு கிலோ அரிசி வாங்க முடியும் அல்லது என்னுடைய பண வருமானத்தின் மதிப்பு ஒரு கிலோ அரிசியாகும். அடுத்த மாதம் என்னுடைய பண வருமானம் ரூ.15 / - ஆக உயருகிறது , அரிசியின் விலையோ ரூ.20 / - ஆக உயர்கிறது எனக்கொள்வோம். இப்போது என்னுடைய பண வருமானத்தின் மதிப்பு 3/4 கிலோ அரிசி மட்டுமே ஆகும். எனவே , என்னுடைய பண வருமானம் உயர்ந்த போத...
பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பே நாட்டு வருமானம் ஆகும். " ஒரு நாட்டின் உழைப்பும் , முதலும் அந்நாட்டின் இயற்கை வளங்களுடன் கூடி ஓராண்டு காலத்தில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் அனைத்து வகையான பணிகள் ஆகியவற்றின் மொத்த நிகர மதிப்பு. அந்நாட்டின் உண்மையான நிகர ஆண்டு வருமானம் ( அல்லது ) நாட்டு வருமானம் அல்லது நாட்ட...
வேளாண்மை துறை ( Agriculture ) , தொழில்துறை ( Industry ) பணித்துறை ( Service Sector ) ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாட்டு வருமானத்தில் இவை அளிக்கும் பங்கு தீர்மானிக்கிறது. தலா வருமானம் நாட்டு வருமானத்தை அந்நாட்டின் மக்கள் தொகையால் வகுக்க “ தலா வருமானம் “ ( Per Capita Income ) கிடைக்கும் ( தனிநபரின் ஆண்டு வருமானம் ). நாட...
இடத்தில் , இரண்டு பொருள்களுக்கிடையேயான தொடர்புகளை வெளிப்படுத்துகிறது. மதிப்பு , பயன்பாட்டு மதிப்பு ( Value - in - use ) பரிவர்த்தனை அல்லது மாற்று மதிப்பு ( Value - in - exchange ) என இருவகைப்படும். காற்று , தண்ணீர் , சூரிய ஒளி ஆகியவற்றிற்குப் பயன்பாட்டு மதிப்பு உண்டு. பரிவர்த்தனை மதிப்புள்ள பண்டங்களுக்கு மட்டுமே பொருளி...
அனைத்து பொருளியல் பண்டங்களுக்கும் பரிவர்த்தனை மதிப்பு உண்டு. பணத்தின்மூலம் மதிப்பை அளவிடுகிறோம். மதிப்பு சார்புத்தன்மை உடையது. காலத்தைப் பொறுத்தும் , சூழ்நிலையைப் பொருத்தும் பண்டத்தின் மதிப்பு - மாறுபடும் ( உம் ) Ice Cubes குளிர்காலத்தைவிட கோடையில் அதிக மதிப்புடையது. விலை பண்டங்களின் மதிப்பைப் பணத்தால் குறிப்பிட்டால் அ...
அங்காடியில் பொருளுக்கு நாம் கொடுக்கும் விலை சில்லரை விலை ( Retail ) எனப்படும். நிலம் , உழைப்பு , மூலதனம் ஆகியவற்றிற்கு நாம் கொடுக்கும் விலை வாரம் , கூலி , Page 25 of 236 வட்டியாகும். முதலாளித்துவப் பொருளாதாரத்தில் விலை அமைப்பு முக்கியப் பங்காற்றுகிறது. வாங்குபவர்கள் தங்கள் விருப்பத்தை விலையின் மூலமாகத் தெரிவிப்பார். ஒர...
வாங்குவதும் விற்பதும் நடைபெறும் ஒரு இடமே அங்காடியாகும். சென்னையில் உள்ள கோயம்பேடு அங்காடி , காய்கறி விற்கும் ஒரு இடமாகும். பொருளியலின் அங்காடி என்பது பண்டங்களை வாங்கும் - விற்கும் ஒரு குறிப்பிட்ட இடம் அல்ல. “ நேரடியாகவோ அல்லது முகவர்கள் மூலமாகவோ , வாங்குபவரும் , விற்பவரும சந்திக்கும் ஓர் இடமே அங்காடியாகும். எடுத்துக்கா...
கொடுக்கப்படும் விலையைப் பாதிக்கும் " என்று பென்ஹாம் கூறகின்றார். பொதுவாக , பண்டங்களின் அங்காடியை மட்டுமே அங்காடி என்று கூறுகிறோம். ஆனால் பண்டங்கள் தவிர மற்ற பொருட்களுக்கும் அங்காடி உண்டு. அவையாவன 1. தொழிலாளர் அங்காடி ( Labour Market ) அயல்நாட்டு செலாவணி அங்காடி ( Foreign Exchange Market ) மூலதன அங்காடி ( Capital Market...
, மலர்கள் 2. தேசிய அங்காடி ( National Market ) ( உம் ) புடவைகள் 3. உலக அங்காடி ( World Market ) ( உம் ) இரும்பு , பருத்தி சர்க்கரை என்று பல வகைப்படும். போட்டியின் அடிப்படையில் அங்காடியை இரு வகைகளாகப் பிரிக்கலாம் 1. நிறைவுப் போட்டி ( Perfect Competition ) 2. நிறைகுறைப் போட்டி ( Imperfect ) என்பனவாகும். காலத்தைப் பொருத்த...
பங்காற்றுகிறது. காலம் நீண்டதாக இருப்பின் ‘ அளிப்பு ’ முக்கியப் பங்காற்றுகிறது. பொருளியலின் முக்கியத்துவம் சமூக அறிவியலில் பொருளியியல் ஒரு முக்கியப் பிரிவாகும். நமது அன்றாட வாழ்க்கையிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. அறிவியலில் உண்மைக் கருத்தை அறிந்த கொள்ளவே முனைகிறோம். ஆனால் பொருளியல் , உண்மை நிலை அறிந்து கொள்ள மட்ட...
முக்கியக் குறிக்கோளாகும். பொருளியல் பிரச்சனைகளக்கு உடனடித் தீர்வு பொருளியல் அறிஞர்களிடம் கிடையாது. ஆனால் பொருளாதாரக் கொள்கைகள் மூலம் அரசுக்கு அவர்கள் உதவி செய்ய முடியும். “ பொருளாதாரக் கோட்பாடுகள் , கொள்கை முடிவிற்கு உடனடியாக ஏற்கக்கூடிய , தீர்மானிக்கப்பட்ட முடிவுகளைக் கூறுவது இல்லை. இது ஒரு வழிமுறையே , இது மனதிற்கு ஒர...
அரசின் பிரச்சனைகளில் பொருளியல் அறிஞர்கள் முக்கியப் பங்காற்றியிருக்கின்றனர். இரண்டாம் உலகப் போரின்முடிவில் ஜெர்மனியின் பொருளாதாரம் பெரும்பாலும் சீர்குலைக்கப்பட்டது. இங்கு பணவீக்கம் , பண்டங்களின் பற்றாக்குறை , மிகை வேலையின்மை ( Mass Unemployment ) நிலவியது. “ லுட்விக் ஏராட் ” ( Ludwig Erhard ) என்ற பொருளியல் அறிஞரின் அறி...
மந்தத்திலிருந்து அமெரிக்கா அரசு மீட்சி பெற J.M. கீன்சின் பொருளாதாரக் கொள்கைகள் முக்கிய பங்காற்றின. விலை , வாரம் , கூலி , வட்டி , லாபம் , வரிகள் முதலியவை பற்றி பொருளியல் கூறுகிறது. ஒவ்வொருவரையும் இது எதாவது ஒரு வழியில் பாதிக்கிறது. எனவே “ பொருளியல் அறிவு சிறிதளவேனும் இல்லாத ஒருவன் உண்மையான குடிமகனாக இருக்கமுடியாது ". என...
அறிவியல் ஆகும். தெரிவுகளைச் செய்திடுவதால் எழும் அடிப்படைப் பிரச்சினைகள் யாவை ? ஏந்த ஒரு சமுதாயமும் மூன்று முக்கிய பிரச்சினைகளை முன்வைத்தே தெரிவுகளை மேற்கொள்ளல் வேண்டும். அவைகளாவன. 1. எந்தப் பொருளை உற்பத்தி செய்வது , எவ்வளவு உற்பத்தி செய்வது ? உணவா அல்லது படைக்கலன்களா ( weapons ) , அவ்வாறெனில் , எவ்வளவுக்கு ? அதாவது அதி...
Power ) தயாரிப்பதா அல்லது நீர்மின்சக்தியால் ( Hydro Power ) தயாரிப்பதா ? 3. பண்டங்கள் யாருக்காக தயாரிக்கப்பட வேண்டும் ? ஒரு சில செல்வந்தர்கள் மற்றும் பல ஏழைகளுக்காகவா ? ( அல்லது ) பெருவாரியான மக்கள் வாழக்கையைச் செம்யைாக வாழ்வதற்காகவா ? இம்மூன்று அடிப்படைப் பிரச்சினைகளும் ஒன்றை ஒன்று சார்ந்தவை ஆகும். வளர்ச்சிப் பெற , சம...
தெரிவுகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில தெரிவின் இயல்பு பொருளாதாரத்தின் முறைகளைப் பொருத்தே அமையும். பொருளாதார முறைகள் ( Economic Systems ) ஒரு பொருளாதார முறை என்பது கீழ்க்காணும் அடிப்படை வினாக்களுக்கு விடை பகர்தல் ஆகும். பல்வேறு பொருளாதார முறைகள் , வேறுபட்ட முறைகளில் மேற்காணும் வினாக்களுக்கு வி...
என்பதே பொருளாதார முறை எனப்படும். பொருளியலின் செயல்பாடுகளுக்கிடையே , பண்டங்கள் பணிகளின் உற்பத்தி மற்றும் பகிர்வினையே இது ( பொருளாதார முறை ) குறிப்பிடுகிறது. பொருளாதார முறைகள் என்பது பல்வேறு தனிநபர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்களான வங்கி நிறுவனங்கள் , கல்வி நிறுவனங்கள் மற்றும் பொருளாதார நிறுவனங்கள் ஆகியவற்றைக் கொண்டதாக ...
Socialist Economy ) 4. கலப்புப் பொருளாதாரம் ( Mixed Economy ) 1. பழைமைப் பொருளாதாரம் பழைமைப் பொருளாதாரத்தில் , பழைமைகள் , பழக்க வழக்கங்களின் விதிகள் , மற்றும் நடத்தைக் கூறுகள் ஆகியன அடிப்படைப் பிரச்சினைகளை தீர்த்து வைக்கப்படுகின்றன. அதன் சரியான நுகர்வுத் தேவையை , அது உற்பத்தி செய்து கொள்கிறது. இது ஒரு வாழ்வு / பிழைப்பா...
2. முதலாளித்துவம் / அங்காடிப் பொருளாதாரம் முதலாளித்துவ / அங்காடிப் பொருளாதாரத்தில் " தடையில்லா சந்தை ” களின் ( Free Market ) மூலமே பண்டங்களின் உற்பத்தி மற்றும் பகிர்வு தீர்மானிக்கப்படுகிறது. எனவே , இது அங்காடிப் பொருளாதாரம் ( அல்லது ) தடையில்லா வாணிப பொருளாதாரம் என்றும் அழைக்கப்படுகிறது. உற்பத்தியாளர் , நுகர்வோர் அல்லத...
தேர்ந்தெடுத்து கொள்வதற்கும் தடையேதும் இல்லை. தனது செயல்பாடுகளுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு மைய ஒருங்கிணைப்பாளரை அங்காடிப் பொருளாதாரம் பெற்றிருக்கவில்லை. ஆனால் அங்காடிச் சக்திகளான அளிப்பு , தேவை மற்றம் விலைகள் ஆகியவைகளின் செயல்பாடுகளின் காரணமாக சுய அமைப்பு ( Self Organization ) தோன்றுகிறது. அங்காடிப் பொருளாதாரத்தின் சிறப்பம...
கொள்ளலாம். மேலும் சொத்தை சட்டப்பூர்வமாக அவர்கள் விரும்புகின்ற வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். 2. இலாபநோக்கம் இலாபநோக்கு மட்டுமே அங்காடிப் பொருளாதாரத்தின் முக்கியச் செயல்பாடாகும். பெருமளவு இலாபங்களைத் திரட்டவேண்டுமென்பதால் தனிமனிதன் அதிக இடர்பாடுகளை மேற்கொண்டு உற்பத்தி முடிவுகளை மேற்கொள்வான். எனவே ‘ இலாபநோக்கமே ’ அங்க...
பெற்றுள்ளார். தனது பணிகளுக்கானத் தகுந்த விலையை தீர்மானித்துக் கொள்ள உற்பத்திக் காரணிகளைச் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்திக் கொள்ளலாம். அது போலவே நுகர்வோரும் தனது தேவைகளை வாங்கிக் கொள்ள முழு சுதந்திரம் பெற்றுள்ளார். 4. அங்காடிச் சக்திகள் அங்காடிச் சக்திகளான தேவை , அளிப்பு மற்றும் விலை ஆகியவை , இம்முறையை நெற...
சக்திகளைப் பொருத்தே தீர்மானிக்கப்படுகிறது. 5. அரசின் குறைந்தபட்ச செயல்பாடு பெருவாரியான பொருளாதாரப் பிரச்சினைகள் அங்காடிச் சக்திகளால் ( Market Forces ) தீர்மானிக்கப்படுகின்றன. குறைந்தபட்ச அளவாக அரசின் பங்கானது சில முக்கியமான பணிகளைச் செய்யவே வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது , அங்காடியை ஒழுங்குபடுத்துதல் , பாதுகாப்பு , அயல்...
சொத்தினைப் பெற்று , தான் விரும்பும் வழியில் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர் தன்னலத்திற்காக உற்பத்தியைப் பெருக்குகிறார். இதன் விளைவாக வருமானம் , சேமிப்பு மற்றும் முதலீடு உயருகிறது. 2. நலத்தைப் பெருக்குதல் திட்டமிடுதலின்றி , உற்பத்தி மற்றும் வளத்தைப் பயன்படுத்துதலில் திறன் ( efficiency ) மேம்படுகிறது என்று கூறப்படுகிறது. ஒ...
சரிசெய்யப்படுகிறது. இவ்வாறு “ விலையின் இயக்கத்தால் " தானாகவே அது செயல்படுகிறது. 4. அரசின் தலையீடின்மை அரசு பொருளாதாரச் செயல்பாடுகளில் குறைவான பங்கினையே பெற்றுள்ளது. தனிநபர் விருப்பத்திற்கும் சமுதாய விருப்பத்திற்கும் முரண்பாடு ஏதும் இல்லை. பொருளாதார நிறுவனங்கள் , தானாகவே அரசின் தலையீடின்றி தன்னிச்சையாகச் செயல்படுகின்றன....
தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அங்காடிப் பொருளாதாரத்தின் முக்கியக் கூறு போட்டி. இப்போட்டியானது ( Competition ) உற்பத்தியாளரைப் புத்தாக்க முறைகள் மூலம் உற்பத்தியைப் பெருக்கி , விற்பனையை அதிகமாக்கச் செய்து , வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது அங்காடிப் பொருளாதாரத்தின் தீமைகள் 1. ஏற்றத்தாழ்வுகள் ( Inequalities ) வருவாயில் ஏற்றத்த...
செல்வந்தர் பெருஞ் செல்வந்தராகவும் , ஏழைகள் மிகவும் ஏழைகளாகவும் ஆகின்றனர். வரையறுக்கப்பட்ட வழிகளே உள்ளதால் ஏழைகள் செல்வந்தரோடு போட்டியிட இயலவில்லை. இதனால் , முதலாளித்துவம் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. 2. முற்றுரிமை வளர்ச்சி ஏற்றத்தாழ்வுகள் முற்றுரிமையை வளர்ச்ச...
கூட்டு நிறுவனம் ( Trust ) அமைப்பதன்மூலம் , உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது. இறுதியாக அவை பன்னாட்டு நிறுவனங்களாக ( MNC ) உருப்பெற்று உயர்வடைகின்றன. அவை அடிக்கடி நாட்டின் நலனுகெதிராக விலையை உயர்த்துகின்றன. 3. வீழ்ச்சி / மந்தம் ( Depression ) அதிகப் போட்டியின் காரணமாகப் பொருட்கள் அளவுக்...
சந்தையில் தேக்கத்தை ஏற்படுத்துவதால் “ மந்தம் “ ஏற்படுகிறது. இது பொருளாதார நிலையின்மையை ( Economic Instability ) ஏற்படுத்துகிறது. 4. இயந்திரமயமாதல் ( Mechanisation and Automation ) அங்காடிப் பொருளாதாரம் இயந்திரமயமாதலையும் ( Mechanisation ) தானியங்கி தன்மையையும் ( Automation ) ஊக்குவிக்கிறது. இதனால் உழைப்பை அதிகமாக பெற்ற...
குறைவான லாபம் தரும் அடிப்படைப் பண்டங்களை உற்பத்தி செய்வதைப் புறக்கணிக்கின்றன. இதனால் , பொதுமக்களின் நலம் புறக்கணிக்கப்படுகிறது. 6. உழைப்பு சுரண்டப்படுதல் ( Exploitation of Labour ) இலாபம் ஈட்டுவதையே குறியாகக் கொண்டிருக்கும் முதலாளிகளுக்கெதிராக கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தொழிலாளர்களைத் தேவையென்றால் வைத்துக்கொ...
அடிப்படைச் சமூகத்தேவைகள் புறக்கணிக்கப்படுதல் பல்வேறுவகையான அடிப்படைச் சமூகத் தேவைகள் உள்ளன. முழு எழுத்தறிவு , பொதுச் சுகாதாரம் , ஏழ்மை அகற்றல் , குடிநீர் , சமூகநலம் , சமுதாயப் பாதுகாப்பு போன்றவை ஆகும். இப்பிரிவுகளில் லாபப்பங்கு குறைவாக இருப்பதால் முதலாளிகள் ( Capitalist ) முதலீடு செய்வதில்லை. எனவே பெருமளவிலான மனிதப் பி...
செயல்படுத்தியும் வருகிறது. உற்பத்தி மற்றும் பகிர்வு சார்ந்த அனைத்து முடிவுகளையும் “ மத்திய திட்டக்குழுவே ” தீர்மானிக்கிறது. எனவே பொதுவுடைமைப் பொருளாதாரம் “ திட்டமிடப்பட்ட பொருளாதார அமைப்பு ” அல்லது கட்டளைப் பொருளாதாரம் ( Command Economy ) என்றும் அழைக்கப்படுகிறது. அரசு முக்கிய பங்கு வகிக்கிறது. சமூக நலனுக்கு முக்கியத்த...
, வியட்நாம் , போன்றவை அடங்கும். கீழ்க்காண்பவை பொதுவுடைமையின் சில அடிப்படை சிறப்பம்சங்கள் ஆகும். 1. சமூக நலன் பொதுவுடைமையில் அடிப்படைக் குறிக்கோள் சமுதாய நலம் ஆகும். பொதுவுடைமையில் கொள்கை முடிவுகள் “ இலாப நோக்கத்தை ” கொண்டிராது. மக்களின் அதிகபட்ச நலன்களை மனதில் கொண்டே கொள்கை முடிவுகள் மேற்கொள்ளப்படும் இது அங்காடிப் பொரு...
சொத்துக்களும் அரசுக்கே சொந்தமானது. அதாவது சொந்தம் என்பது ஒரு கூட்டானது ( Collective ). எனவே Page 34 of 236 முதலாளித்துவ பொருளாதாரத்தில் உள்ளது போல் எந்த ஒரு தனிநபரும் அதிக அளவு சொத்து சேர்க்க இயலாது. 3. மையத்திட்டம் ( Central Planning ) பொருளியல் மேற்கொள்ளப்படுகிறது. கொள்கைமுடிவுகள் நாட்டின் மத்திய ( மைய ) திட்டக்குழுவ...
பங்கானது மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. உற்பத்தி , பண்டம் மற்றும் காரணி விலைகள் ( factor Prices ) நுகர்வு மற்றும் பகிர்வு ஆகியவை சமூக நலனையே குறிக்கோளாகக் கொண்டு திட்ட அமைப்பு செயல்படுகிறது. பொதுவுடைமைப் பொருளாதாரத்தின் நன்மைகள் 1. வளங்களைத் திறம்பட பயன்படுத்துதல் இலாப அளவைக் கணக்கில் கொள்ளாமல் வளங்களைத் திறம்...
ஏற்றாத்தாழ்விலிருந்து பொருளாதாரம் விடுபடுகின்றது. அரசு நன்கு திட்டமிடுவதாலும் , அனைத்தும் நன்றாக அளவுக்கதிகமான உற்பத்தியும் , வேலையின்ைைமயும் தவிர்க்கப்படுகிறது. மற்றும் பணிகளின் உற்பத்தி மற்றும் பகிர்வு நன்கு முறைப்படுத்தப்பட்டுள்ளதால் பொருளாதார நிலைத்தன்மை ஏற்படுகிறது. பண்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதாலும் , 3. சமுதாய ந...
கருத்தாக உள்ளது. அரசு இலவசக் கல்வியையும் , மலிவான ஆனால் சூழலுக்கு ஏற்ற வீட்டு வசதியையும் , பொது சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பையும் மக்களுக்காகச் செய்து தருகிறது. 4. முற்றுரிமையின்மை ( Absence of Monopoly ) தனியார் சொத்துரிமை மறுக்கப்படுவதால் கூட்டாண்மை மற்றும் முன்னுரிமையின் கூறுகள் அகற்றப்படுகின்றன. அரசு ஒரு முற்று...
தேவைகளான தண்ணீர் , கல்வி , உடல் நலம் , சமுதாயப் பாதுகாப்பு ஆகியவை அளிக்கப்படுகின்றன. மனிதவள மேம்பாடு பொதுவுடைமைப் பொருளாதாரத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. 6. ஏற்றத்தாழ்வின்மை ( No Extreme Inequality ) சமுதாய நலனே இறுதி நோக்கமென்பதால் செல்வம் சேர்க்கும் வாய்ப்பில்லை. பொதுவுடைமை முறையில் பெருமளவு ஏற்றத்தாழ்வு தடுக்கப்படு...
உயர் அதிகாரவர்க்கப் பயமின்றி உழைக்கிறார்கள். மக்கள் கடினமாக உழைக்கவேண்டும் என்பதற்காக எவ்விதமானச் சிறப்புப் பயிற்சியும் இங்கு கொடுக்கப்படுவதில்லை. 2. சுதந்திரமின்மை ( No Freedom ) தொழிலில் சுதந்திரம் கிடையாது. உற்பத்திக் காரணிகளின் ஒதுக்கீடு விவேகமான முறையில் நடைபெறுவதில்லை. அரசே வேலைகளை அளிக்கிறது. பணியிடமும் ( Place ...
இருப்பதற்கு வாய்ப்பில்லை. உற்பத்தி முறையில் எந்த மாற்றம் இருந்தாலும் அது அனைத்து திட்டங்களையும் மாற்றக்கூடும். ஏனவே எந்த புத்தாக்கமுறையும் ( Innovation ) எற்பட இங்கு வாய்ப்பில்லை. நெகிழ்வற்ற ( Rigid ). எனவே , தொழில்நுட்ப மாற்றம் வரையறைக்குட்பட்டது. 4. கலப்புப் பொருளாதாரம் ( Mixed Economy ) கலப்புப் பொருளாதாரத்தில் அரசு...
பின்பற்றுகிறது. என்ன உற்பத்தி செய்வது ? எப்படி ? யாருக்காக ? என்ற அனைத்து முடிவுகளும் அரசே மேற்கொள்கிறது. பண்டங்களையும் பணிகளையும் தனியார்துறை ( Private Sector ) உற்பத்தி செய்து விநியோகம் ( Distribution ) செய்கிறது. பொதுத்துறை , மக்கள் நலனுக்காக நுகர்வு மற்றும் மூலதனப் பொருட்களை உற்பத்தி செய்கிறது. கலப்புப் பொருளாதாரம்...
அமையக்கூடும். இவையனைத்தும் அரசால் ஒழுங்குப்படுத்தப்பட்டுக் கட்டுப்படுத்தப்படுகின்றன. கலப்புப் பொருளாதாரத்தின் சிறப்பம்சங்கள் 1. தனியார்துறையும் பொதுத்துறையும் உடனுறைதல் கலப்புப் பொருளாதாரத்தில் அரசுத்துறையும் தனியார்த்துறையும் முயன்று ( Initiatives ) செயல்படுகின்றன. அதிக யுக்தி நிறைந்த ( Most Strategic ) மற்றும் தேசிய ...
குறிக்கோளாகவும் கொண்டு செயல்படுகின்றன. 2. முதலாளித்துவம் மற்றும் பொதுவுடைமையின் நன்மைகள் ஒருங்கிணைப்பு கலப்புப் பொருளாதாரம் ‘ முதலாளித்துவம் ’ மற்றும் ‘ பொதுவுடைமை ’ அமைப்புகளின் நன்மைகளை மட்டுமே ஏற்றுச் செயல்படுகிறது. எடுத்துக்காட்டாக அரசுத்துறை தனியார் முதலீட்டை அனுமதிக்கும் அதே நேரத்தில் அரசு முற்றுரிமைகளைக் ( Monop...
அதிகார வரம்புகளை ( Jurisdictions ) அதன் தொடர்புடைய வகையில் நெறிப்படுத்துகிறது. கலப்புப் பொருளாதாரத்தின் நன்மைகள் 1. திறமையான வளப் பயன்பாடு பொதுவுடைமை மற்றும் முதலாளித்துவ முறைகளின் சிறப்பியல்புகள் இணைந்து செயல்படுவதால் வளங்கள் முழுவதும் திறமையான வகையில் பயன்படுத்தப்படுகின்றன. வளங்கள் சரியான வகையில் ஒதுக்கீடு செய்யப்படவ...
பண்டங்களுக்கு அரசே விலையை நிர்ணயம் செய்வதோடு அல்லாமல் நியாய விலை கடைகள் மூலம் அவற்றை வழங்குகிறது. 3. சமூக நலன் கலப்புப் பொருளாதாரத்தின் திட்டமிடல் மையப்படுத்தப்படுவதால் ஒட்டுமொத்த சமூக நலன் நிலவுகிறது. புத்தாக்கத்திற்காகப் பணியாளர்களுக்கு வெகுமதியும் , ஊக்க ஊதியமும் வழங்கப்படுகிறது. பணியாட்களுக்கு சமுதாயப் பாதுகாப்பு அ...
தனியார் துறையும் அரசுத்துறையும் ஒருங்கிணைந்து செயல்படுதல் அரிது. உள்கட்டமைப்புக்கு ( Infrastructure ) அரசுத்துறை அதிக அளவு பொது வளங்களைச் செலவிட- நேரிடுகிறது. தனியார்துறையோ அரசுத்துறையால் ஏற்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி அதிக லாபம் பெற முயற்சிக்கின்றது. அதற்குச் சமுதாயப் பொறுப்பில்லாததன் காரணமாக , பொதுமக்கள்...
அரசுத்துறை , திறமையற்ற முறையில் செயல்பட வாய்ப்புள்ளது. வேலையில் ஊக்கமின்மையும் , கையூட்டும் ( corruption ) , நிகழ்வதோடு , உற்பத்தியைப்பற்றி முடிவெடுப்பதற்கும் , நடைமுறைப்படுத்துவதற்கும் காலதாமதத்திற்கு வழிவகுக்கிறது. இதனால் திறமையின்மை வெளிப்படுத்தப்படுவதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. 3. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கலப்...
பொருளாதாரம் விதிக்கும் எவ்வித கட்டுப்பாடுகளையும் ஏற்று செயல்படுவதில்லை. கொள்கை முடிவுகளை தனியார்த்துறையும் , பொதுத்துறையும் ஒருங்கிணைந்து ஏற்றுக் கொள்ளாததின் காரணமாக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகிறது. ஒருபுறம் , உற்பத்தி வாய்ப்புக்கள் ( Production Possibilities ) அடிப்படைப் பொருளாதார பிரச்சினையில் முக்கியமாக எழும் ...
ஆட்டத்தின் முக்கிய நிகழ்வுகளைப் ( Highlights ) பார்ப்பதா ? அல்லது கூடுதலான நேரம் படிப்பதா ? 50 ரூபாயைக் கொண்டு பாடப்புத்தகம் வாங்குவதா ? அல்லது திரைப்படம் பார்ப்பதற்கு பணத்தைச் செலவழிப்பதா ? தாயுடன் கடைக்குச் சென்று உதவுவதா ? அல்லது அந்நேரத்தில் வளைபந்து ( Hockey ) விளையாடுவதா ? கிடைப்பருமை ( Scarcity ) காரணமாகவே தெரிவ...
ஒப்பிடப்படுகிறது. வாய்ப்புச் செலவு ( Opportunity Cost ) நாம் ஒரு குறிப்பிட்டமாறுபட்ட பண்டத்தை ( Alternatives ) விரும்பும்போது அடுத்த சிறந்த மாறுபட்ட பண்டம் விடுபடுதல் வேண்டும். எடுத்துக்காட்டாக தொலைக்காட்சியில் கிரிக்கெட் ஆட்டத்தின் முக்கிய நிகழ்வுகளைப் பார்க்கவேண்டுமெனில் கூடுதலாக படிக்கும் நேரத்தை இழக்க நேரிடும். தொல...
மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பை இழக்க நேரிடுகிறது. இவ்வாறு “ வாய்ப்புப் செலவு ” என்பது சில வாய்ப்புகளை இழப்பதால் ஏற்படும் செலவாகும். அதாவது அந்த வாய்ப்புகளின் மூலம் பெற்றிருக்கக்கூடிய நன்மைகள் ஆகும். வேறு விதமாகச் சொல்வதானால் “ வாய்ப்புச் செலவு ” என்பது அடுத்த , தகுந்த மதிப்புடைய மாற்றுப் பண்டங்களின் மதிப்பையே குறிப்பிடுவ...
வாய்ப்பு வளைகோடு ( ( Production Possibility Curve ) பண்டமாற்று வளைகோடு ( Transofmration Curve ) அல்லது உற்பத்தி வாய்ப்பு எல்லைக்கோடு ( Production Possibility Frontier ) எனவும் அழைக்கப்படுகிறது. பொருளாதாரமானது ஒரு வாய்ப்பு முனையிலிருந்து வேறு வாய்ப்புக்கு செல்லும்போது இவ்வளைகோடானது ஒரு உற்பத்திப் பொருளிலிருந்து மற்றொன்ற...
இணைப்புள்ளியும் ( அதாவது ‘ U ' வைபோல் ) நாட்டின் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. உற்பத்தி வாய்ப்பு வளைகோட்டின் வெளியே எந்த இணைப்புள்ளியும் ( அதாவது ‘ L ” ) அவ்வளவு உற்பத்தி செய்வதற்குப் போதிய வளங்களைப் பெற்றிருக்கவில்லை என்பதைக் குறிக்கிறிது. ஆனால் உற்பத்தி வாய்ப்பு எல்லைக்கு வெளியே மாற்றம் ஏற்படின் அது பொருளாத...
விடையளிக்கவும். 21. எந்த ஒரு சமுதாயத்திலும் காணப்படும் அடிப்படைப் பிரச்சனைகள் யாவை ? 22. பொதுவான பொருளாதார முறைகளின் பெயர்களைக் கூறுக. 23. பொதுவுடைமையின் அடிப்படைச் சிறப்பம்சங்களைக் கூறுக. 24. இந்தியப் பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரமா ? விவரி. 25. வாய்ப்புச் செலவு என்றால் என்ன ? பகுதி - இ பின்வரும் வினாக்களுக்கு ஒரு பக...
பொருளாதாரத்தின் நன்மை தீமைகளை விவரி. 30. பிற வாய்ப்புச் செலவை உதாரணத்துடன் விளக்குக. பகுதி – ஈ பின்வரும் வினாக்களுக்கு மூன்று பக்க அளவில் விடையளிக்கவும். 31. முதலாளித்துவம் என்றால் என்ன ? அதன் நன்மைகளையும் தீமைகளையும் விளக்கவும். 32. சமதர்மத்தின் பண்புகளையும் , சிறப்புகளையும் , குறைகளையும் விளக்குக. 33. கலப்புப் பொருளா...
நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாகும். மனிதனுடைய அனைத்து ஆசைகள் , சுவைகள் , நோக்கங்கள் பொருளியலில் ‘ விருப்பங்கள் ’ ( Wants ) எனப்படுகின்றன. 1. விருப்பங்கள் எளிய உளவியல் காரணங்களால் தோன்றுகின்றன. உணவு , உடை , இருப்பிடம் ஆகியவற்றுக்கான விருப்பங்கள் உளவியல் தன்மையுடையவை. 2. விருப்பங்கள் சமூகக் காரணங்களால் தோன்றும் சமுதாயத்தி...
தொடக்கக் காலத்தில் மனித விருப்பங்கள் மிகச் சிலவாகவும் எளியனவாகவும் இருந்தன. நாகரீக வளர்ச்சி காலத்தில் விருப்பங்கள் எண்ணிலடங்காததாகவும் சிக்கலானதாகவும் மாறிவிட்டன. பொருளியல் நடவடிக்கைகளால் மனிதன் தன்னுடைய விருப்பங்களை நிறைவு செய்ய விழைகின்றான். வளங்கள் எல்லைக்கு உட்பட்டதாக இருப்பதால் முக்கியமான விருப்பங்கள் , மிக முக்கி...