text
stringlengths 11
513
|
|---|
தேக்கத்தை விற்றுத்தீர்க்க தள்ளுபடியை விற்பனையாளர்கள் அறிவிப்பார்கள். தள்ளுபடியை ஒரு விற்பனையாளர் அறிவித்தவுடன் மற்றவர்களும் அதைப்பின்பற்றி விலையைக் குறைப்பர். மிகை அளிப்பு விற்றுத் தீர்த்து சந்தைச் சமநிலையை ( D = S ) அடையும் வரை விலை குறைந்து கொண்டே வரும். அதேபோல் , விலையானது சமநிலை விலையை ( PE ) விட குறைவாக இருக்கும் பொழுது மிகைத் தேவை ( D > S ) காணப்படும். அளிப்பு குறைவாக இருக்கும்பொழுது வாங்குபவர்களிடையே ஏற்படும் போட்டியானது , விலையை உயர்த்தும். இது விற்பனையாளர்கள் அளிப்பை அதிகரிக்க ஊக்கப்படுத்தும்.
|
உதாரணமாக திரை அரங்கிற்கு வெளியே காட்சிக்கான சீட்டுகளை அதிக விலை கொடுத்து வாங்க முற்படுகிறோம். இந்த இரு நிலைகளிலும் , வாங்குபவர் விற்பவர்களிடையே ஏற்படும் போட்டி நடவடிக்கைகள் விலையை கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்து மிகை அளிப்பையும் , மிகைத் தேவையையும் மறையச் செய்கிறது. இந்த நடவடிக்கைகள் , தேவையையும் , அளிப்பையும் சமன்படுத்தி சந்தைச் சமநிலை அடையச் செய்கிறது. சந்தை சமநிலையில் , விலையையோ , அளவையோ மாற்றவேண்டிய போக்கு ( தேவை ) ஏற்படாது. படம் 5.1 ல் தேவை அளிப்பு இடையேயான சமநிலையில் ஏற்படும் சந்தைச் சமநிலையை
|
விளக்குகிறது. சந்தைச் சமநிலை விலையில் ஏதாவது மாற்றம் ஏற்படின் , விலை மாற்றத்தின் போக்கை அம்புக்குறி மூலம் காட்டப்பட்டுள்ளது. மிகை அளிப்பு காணப்படும் பொழுது விலை படம் 5.2 ல் DD என்பது தேவைக்கோடு. OP என்ற விலையில் சமநிலை அடைகிறது. விற்பவரும் வாங்குவோரும் , 0Q அளவில் சமநிலை அடைகின்றனர். தேவையைத் தீர்மானிக்கும் காரணிகளான வருமானம் , சுவையில் எற்படும் மாற்றம் தேவைக்கோட்டை இடம் பெயரச் செய்யும் ( உம் ) நுகர்வோனின் வருமானம் குறையும்பொழுது தேவைக்கோடு DD யிலிருந்து D1D1 க்கு இடம் பெறுகிறது. புதிய சமநிலை E1 ஆகும்.
|
அதேபோல நுகர்வோனின் வருமானம் அதிகரிக்கும் பொழுது தேவைக்கோடு D1D1- யிலிருந்து D2D2- க்கு இடம் பெயருகிறது. தற்பொழுது புதிய சமநிலை E1 யிலிருந்து E2 க்கு இடம் பெயருகின்றது. தேவையின் மாற்றத்திற்கும் தேவையின் அளவில் ஏற்படும் மாற்றத்திற்கும் உள்ள வேறுபாட்டை இங்கு உணருதல் முக்கியம். விலை மாறுபடும்பொழுது தான் தேவையின் அளவு மாறும். விலை மாற்றமும் அதற்கு ஏற்ப மாறும் தேவையின் அளவையும் கொண்ட தேவைப்பட்டியலின் தேவைக்கோட்டின் மேல் உள்ள இடப்பெயர்ச்சியைக் குறிக்கும். ஆனால் வருமானம் , சுவை , பதிலிப் பண்டங்களின் விலை போன்ற
|
தேவையைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஏற்படும் மாற்றம் தேவைக்கோட்டை இடம் பெயரச் செய்யும். அளிப்பில் மாற்றம் ( Shift in Supply ) மற்றவை மாறாதிருக்கும்பொழுது விலைக்கும் , அளிப்பின் அளவிற்கும் உள்ள தொடர்பை அளிப்புக்கோடு விளக்குகிறது என்று பார்த்தோம். சந்தையில் அளிப்பவர் அல்லது விற்போரின் எண்ணிக்கை உற்பத்திக் காரணிகளின் விலை போன்றவை அளிப்பை பாதிக்கும் காரணிகளில் அடங்கும். இக்காரணிகள் விலையில் மாற்றம் ஏற்படாவிட்டாலும் அளிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும். விலைதான் அளிப்பைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும். ஆனாலும் ,
|
உற்பத்திக் காரணிகளான நிலம் , உழைப்பு ஆகியவற்றின் விலை குறையும்பொழுது உற்பத்திச் செலவும் குறையும் , இது நிறுவனங்கள் அளிப்பை அதிகரிக்க ஊக்கமளிக்கும். இது அளிப்புக் கோட்டை SS- யிலிருந்து S , S , க்கு இடம் பெயரச் செய்யும். அதற்கு மாறாக உற்பத்திக் காரணிகளின் விலை ஏற்றம் உற்பத்திச் செலவை அதிகரித்து , அளிப்புக்கோட்டை SS- யிலிருந்து S , S2 க்கு இடம் பெயரச் செய்யும் இரண்டு நிலைகளிலும் சமநிலை E- யிலிருந்து , முறையே E , அல்லது E , க்கு இடம் பெயருகிறது. தேவையைப் போலவே , அளிப்பின் மாற்றத்திற்கும் , அளிப்பின் அளவு
|
மாற்றத்திற்கும் உள்ள வேறுபாட்டை உணருதல் அவசியம். விலை மாற்றத்தினால்தான் அளிப்பின் அளவில் மாற்றம் ஏற்படுகின்றது. ஆனால் அளிப்பைத் தீர்மானிக்கும் காரணிகள் ஏற்படும் மாற்றம் அளிப்புக் கோட்டை இடம் பெயரச் செய்து புதிய சமநிலையை அடைகிறது. இந்த இடப்பெயர்ச்சி விலை தவிர பிற காரணி மாற்றத்தால் ஏற்படுகிறது. காலகட்டம் மற்றும் விலை நிர்ணயம் காலகட்டம் பொருளியலில் காலம் ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. நவீன பொருளியல் அறிஞர்கள் கால கட்டத்தை குறுகிய காலம் நீண்டகாலம் என வகைப்படுத்துகின்றனர். மேற்கண்ட சமநிலை விலையானது ஒரு
|
குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மட்டும் பொருந்தும். ஒரு கால கட்டத்திற்கு மேல் தேவை மற்றும் அளிப்பில் ஏற்படுகின்ற மாற்றம் , தேவை அளிப்புக் கோடுகளை மாற்றி அமைத்து வேறொரு சமநிலையை அடையும். ( எ.கா. ) ஒரு நிறுவனத்தின் நெகிழ்வு தன்மையானது ( தேவைக்கேற்ப தனது உற்பத்தியை சரி செய்துக் கொள்ள ) அந்நிறுவனத்தின் உள்ளீடு பொருள்கள் தன்மை சார்ந்தது. உள்ளீடுப் பொருள்கள் இருவகைப்படும். ( 1 ) மாறா உள்ளீடுப் பொருள்கள் 2 மாறும் உள்ளீடுப் பொருள்கள். மாறா உள்ளீடு என்பது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் அதனளவை மாற்ற இயலாது. கனரக
|
இயந்திரங்கள் , கட்டடங்கள் , முதலீட்டுக் கருவிகள் போன்ற இத்தகைய மாறா உள்ளீடு அமைப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும். எனினும் மாறும் உள்ளீடுப் பொருள்களாகிய உழைப்பு , கச்சாப் பொருள்கள் , மின்சாரம் போன்றவை முழு தொழில் திறன் பெறும்வரை மாற்றியமைக்கலாம். இப்பொழுது குறுகிய மற்றும் நீண்டகாலங்களை வெவ்வெறாக வகைப்படுத்த முடியும். ஒரு நிறுவனத்தின் குறகிய காலம் என்பது உள்ளீடுப் பொருள்களில் ஏதேனும் ஒன்றை மாறாத உள்ளீடாக வைத்துக் கொள்ளும் கால அளவை குறிக்கும். நீண்ட காலம் எனப்படுவது அனைத்து உள்ளீட்டுப் பொருள்களையும் மாற்றிக்
|
கொள்ளக்கூடிய காலக் கட்டத்தை குறிக்கும். குறுகிய மற்றும் நீண்ட காலத்தின் குறிப்பிட்ட அளவானது நிறுவனத்திற்கு நிறுவனம் வேறுபடும். சாலையோரங்களில் ஒரு சிறிய போண்டா கடையில் ஒரே நாளில் உள்ளீடுப் பொருள்களில் வேண்டிய மாற்றத்தை எற்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில் உள்ளீடுப் பொருள்கள் அனைத்தும் எளிதில் மாறக்கூடியவை. இவ்விற்பனையாளன் வேறொரு கடையை துவங்கி , அதிக எண்ணெய் மற்றும் தேவையான பொருள்களை பயன்படுத்தி திடீரென அதிகரிக்கும் தேவையை இவ்வாறுசெய்வதன் மூலம் சந்திக்கலாம். எனவே அவனுக்கு நீண்ட கால அளவு என்பது ஒரே ஒரு நாளைக்
|
குறிக்கும். இதற்கு மாறாக பிரத்தியேகமான கருவிகளை சென்னை அண்ணா சாலையிலுள்ள மௌண்ட் ரோட்டில் சரவண பவன் ஒட்டல் நிறுவுவதற்கு பல வருடங்கள் ஆகும். ஏனெனில் உற்பத்தி துவங்குவதற்கு நீண்டகாலம் தேவைப்படும். சமநிலை விலைக்கு மேல் அ. S < D ஆ. S > D தேவையின் அளவில் மாற்றம் எற்படும் அ. விலை மட்டும் மாறும் பொழுது இ. மேற்கூரிய இரண்டும் 12. மிகைத்தேவை 13. இ. S = D சமநிலை விலையில் காலத்தின் பங்கை அறிமுகப்படுத்தியவர் அ. J.R. ஹிக்ஸ் ஆ. J.M. கீன்ஸ் இ. ஆல்பிரட் மார்ஷல் ஈ. J.S. மில் நீண்ட காலத்தில் அ. எல்லா காரணிகளும் மாறும் ஆ. மாறும்
|
காரணி மட்டும் மாறும் இ. மாறா காரணி மட்டும் மாறும் ஈ. மாறும் மற்றும் மாறா காரணிகள் நிலையாக இருக்கும் கோடிட்ட இடங்களை நிரப்புக ஆ. சுவையில் மாற்றம் ஏற்படும் பொழுது ஈ. எதுவுமில்லை அளிப்பைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும். வேளாண்மை , தொழில் , வளர்ச்சி மற்றும் பகிர்வு போன்றவை பிற நவீன பொருளியல் வல்லுநர் காலத்தை அங்காடிக் காலத்தில் அளிப்புக் கோடு பொருத்துக சமநிலை ஈ. ஏதுமில்லை ஆகும். விலையில் , எந்த சக்தியும் விலையையோ அளவையோ மாற்ற முடியாது. பிரித்தனர். மற்றும் a. ஆண்டு இருப்பை விற்றுத் தீர்க்க b. அதிக
|
நெகிழ்ச்சியுடையது தள்ளுபடி விலை ( அல்லது ) கழிவு விலை நீண்டகால அளிப்புக்கோடு குறுகிய கால விலை ஒரிரு வார்த்தைகளில் விடையளிக்கவும் 16. பொது சமநிலை என்றால் என்ன ? 17. தேவைக்கோட்டினை இடம் பெயரச் செய்யும் காரணிகள் யாவை ? C. விலை மற்றும் அளவின் இணை d. D > S e. தேவையும் அளிப்பும் 18. காலத்தின் பங்கிணை அறிமுகப்படுத்தியவர் யார் ? 19. நிலையான முதலீட்டிற்கு ஒரு உதாரணம் கொடு ? 20. அங்காடிக் காலத்தில் அளிப்பு நிலையானதா ? பகுதி – ஆ பின்வரும் வினாக்களுக்கு நான்கு அல்லது ஐந்து வரிகளில் விடையளிக்கவும். 21. சமநிலை விலை
|
என்றால் என்ன ? 22. தேவையில் மாற்றம் , தேவைக்கோடு இடம் பெயர்தல் வேற்றுமைப்படுத்துக. அளிப்புக்கோடு இடம்பெயர்தலுக்கான காரணிகள் யாவை ? 24. நீண்டகாலம் , குறுகிய காலம் வேறுபடுத்துக. 23. 25. அங்காடிக் காலம் சிறுகுறிப்பு வரைக. பகுதி – இ பின்வரும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளிக்கவும். 26. தேவைக்கோடு இடம் பெயர்தலை வரைபடத்துடன் விளக்குக. அளிப்புக்கோடு இடம் பெயர்தலை வரைபடத்துடன் விளக்குக. அங்காடிக் காலத்தில் சமநிலை விலை எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது ? குறுகிய காலத்தில் தேவைக்கோடும் அளிப்புக்கோடும் எவ்வாறு
|
விலையைத் தீர்மானிக்கிறது என்பதை வரைபடத்துடன் விளக்குக. 30. நீண்டகால தட்டை அளிப்புக் கோட்டை விளக்குக. பகுதி – ஈ பின்வரும் வினாக்களுக்கு மூன்று பக்க அளவில் விடையளிக்கவும். 31. சமநிலை விலை எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதை வரைபடத்துடன் விளக்குக. 32. வரைபடத்துடன் விளக்குக. a. சந்தைக்கால விலை b. குறுகியகால விலை C. நீண்டகால விலை பாடம் 6 உற்பத்தி ( Production ) உற்பத்தி ’ என்பதன் பொருள் பொருளியலில் உற்பத்தி என்பது மாற்று மதிப்புடைய பண்டங்கள் மற்றும் பணிகள் ஆகியவற்றின் உற்பத்தியை பெருக்குவது ஆகும். உற்பத்தி
|
என்பது பயன்பாட்டை உருவாக்குவதாகும். இவைகளாவன , வடிவப் பயன்பாடு , காலப்பயன்பாடு , இடப்பயன்பாடு மற்றும் உடைமைப் பயன்பாடு இத்தகைய பயன்பாடுகளை உருவாக்குவதால் உற்பத்தி அதிகரித்து பண்டங்களும் பணிகளும் மறு பகிர்வு செய்யப்படுகின்றன. ஒரு பொருளின் பயன்பாடு பல காரணங்களால் அதிகரிக்கக் கூடும். வடிவப் பயன்பாடு போது ஒரு பொருளின் அமைப்பை மாற்றும் போது அதன் பயன்பாடு அதிகரிக்கக்கூடும். எடுத்துக்காட்டாக பருத்தியின் பயன்பாடு அதனைத் துணியாக மாற்றும் அதிகரிக்கக்கூடும். வேறுசில எடுத்துக் காட்டுக்களாவன , நெல்லானது அரிசியாகவும் ,
|
கோதுமை மாவாகவும் , வெண்ணெய் நெய்யாகவும் மாற்றப்படுதல். இடப் பயன்பாடு ஒரு பண்டமானது ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்வதால் அதன் பயன்பாடு அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக அரிசி தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டால் அதன் பயன்பாடு அதிகரிக்கும். காலப் பயன்பாடு பண்டமானது எதிர்காலப் பயன்பாட்டிற்காக சேர்த்து வைக்கப்படும்போது அதன் பயன்பாடு உயர்கிறது. மழைக் காலத்தில் தண்ணீரை நீர்த்தேக்கத்தில் சேமித்து வைத்து அதனைப் பின்வரும் காலத்திற்குப் பயன்படுத்துகிறோம். தேக்கிவைத்த தண்ணீரின்
|
பயன்பாடு இதனால் கூடுகிறது. வேளாண் பண்டங்களான அரிசி , நெல் , கோதுமை , எண்ணெய் வித்துக்கள் , பருப்பு வகைகள் போன்றவை நுகர்வோரின் அன்றாடப் பயன்பாட்டிற்காக ஆண்டு முழுவதும் பாதுகாக்கப்படுகிறது. உடைமைப் பயன்பாடு பண்டங்கள் வாணிக நடவடிக்கையின் பொருட்டு ஒருவரிடமிருந்து வேறொருவருக்கு மாறுகிறது. பண்டங்கள் உற்பத்தியாளர்களிடமிருக்கும் போது அதற்கென கொஞ்சம் பயன்பாடு உண்டு. மேலும் அதுவே நுகர்வோருக்கு வணிகர்கள் மூலமாக சென்றடையும்போது அவற்றின் பயன்பாடு உயர்கின்றது. உடைமை அல்லது பண்டங்களின் உடைமை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு
|
மாறுவதை ‘ உடைமைப் பயன்பாடு ’ ஆகும். எடுத்துக்காட்டாக உற்பத்தியாளர்களான உழவர்களிடம் நெல் இருக்கும்போது உள்ள பயன்பாடானது நுகர்வோரிடம் அரிசி இருக்கும் போது உள்ள பயன்பாட்டை விட குறைவாக இருக்கும். உற்பத்தி காரணிகள் மனிதச் செயல்பாடுகளை , உற்பத்தி செய்தல் மற்றும் நுகர்தல் என இருவகையாகப் பிரிக்கலாம். உற்பத்தி செய்யும் போது பண்டங்களில் உருமாற்றம் ஏற்படுகிறது. உள்ளீடுப்பண்டங்கள் வெளியீடுப் பண்டங்களாக மாற்றப்படுகின்றன. உள்ளீடு ( Input ) பண்டங்கள் நிலம் , உழைப்பு மற்றும் மூலதனம் என்று வகைப்படுத்தி உணர்த்தப்படுகிறது.
|
மொத்தத்தில் உள்ளீடுகள் உற்பத்திக் காரணிகள் என அழைக்கப்படுகிறது. ஏதேனும் ஒன்றை உற்பத்தி செய்வதற்கு உற்பத்திக் காரணிகளை ஒன்றிணைக்கும் போது நான்காவது ஒரு காரணி தேவைப்படுகிறது , பண்டங்களும் பணிகளும் அவற்றுக்குள் தானாகவே உற்பத்தி செய்யாது. ஆனால் உணர்வுப்பூர்வமான சிந்தனை வழியே உற்பத்தி திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதுவே தொழில் முனைவு அல்லது தொழிலமைப்பு ( entrepreneurship ) என்றழைக்கப்படுகிறது. உற்பத்தி வழிமுறைக்கு உதவிபுரியக்கூடிய பண்டங்கள் மற்றும் பணிகள் உற்பத்திக் காரணிகள் என்றழைக்கப்படுகிறது.
|
உற்பத்திக் காரணிகளின் வகைகள் பொதுவாக உற்பத்திக் காரணிகள் முதன்மைக் காரணிகள் ( Primary ) மற்றும் தருவிக்கப்பட்ட ( Derived ) காரணிகள் என இருவகைப்படும். பண்டங்கள் , பணிகள் மற்றும் செல்வம் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்காக மனிதன் இயற்கை வளங்களைப் பயன்படுத்துகிறான். நிலம் , உழைப்பு ஆகிய இருகாரணிகளும் ( Land and Labour ) இயற்கையாகப் படைக்கப்பட்டவை இவையின்றி பண்டங்களை உற்பத்தி செய்ய இயலாது. இவற்றை முதன்மைக் காரணிகள் என்றழைக்கிறோம். மூலதனம் மற்றும் தொழில் அமைப்பு முதன்மைக் காரணிகளிடமிருந்து தருவிக்கப்பட்டதால் அவற்றை
|
தருவிக்கப்பட்ட உற்பத்திக் காரணிகள் என்றழைக்கிறோம். இத்தகைய தருவிக்கப்பட்ட உற்பத்திக் காரணிகளோடு முதன்மைக் காரணிகள் இணைந்து செயல்படும் போது மொத்த உற்பத்தி அதிகரிக்கிறது. பழைய பிரிவின்படி உற்பத்திக் காரணிகள் நான்கு வகைப்படும். அவையாவன. நிலம் , உழைப்பு , மூலதனம் மற்றும் தொழிலமைப்பு எனப்படும். நிலம் உற்பத்திக் காரணியான ‘ நிலம் ’ இயற்கை வளங்கள் அனைத்தையும் அல்லது இயற்கை மனிதனுக்கு இலவசமாக கொடுத்திருக்கும் கொடை அனைத்தையும் குறிப்பதாகும். நிலப்பரப்பு , நீர் , காற்று , கனிமவளங்கள் , காடுகள் , ஆறுகள் , ஏரிகள் ,
|
கடல்கள் , மலைகள் , சீதோஷ்ணம் மற்றும் காலநிலை ஆகிய அனைத்தும் ‘ நிலம் ’ என்பதன் பொருள் ஆகும். எனவே , மனிதனால் உருவாக்கப்படாத அனைத்துப் பொருட்களும் நிலத்தில் அடங்கும். நிலத்தின் சிறப்பியல்புகள் i ) நிலம் இயற்கையின் கொடை ஆகும். ii ) நிலத்தின் அளிப்பு நிலையானது iii ) நிலம் அழிவில்லாதது iv ) நிலம் அசைவற்றது v ) நிலம் செழிப்புத்தன்மை மற்றும் இடவமைப்புகளில் மாறுபடும் தன்மையுடையது vi ) நிலம் செயப்பாட்டு ( Passive ) உற்பத்திக் காரணியாகும். இயற்கையின் கொடையாக நிலம் இருப்பதால் நிலத்தின் அளிப்புவிலை ‘ பூஜ்யம் ’ ஆகும்.
|
எனினும் , உற்பத்திக்குப் பயன்படும் போது அதில் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே , ஏற்ற ஒரு விலையை அது பெறுகிறது. உழைப்பு ( Labour ) உற்பத்திப் பாதையில் உழைப்பு என்பது மனித இடுபொருள் ஆகும். “ ஒரு பணியை ஒருவர் செய்திடுவதால் , அவருக்குக் கிடைக்கும் மனநிறைவோடு மட்டுமின்றி அதனை செய்வதற்காக கைமாறு எதிர்பார்த்து மனிதன் தன் உடல் அல்லது அறிவை முழுமையாகவோ பகுதியாகவோ பயன்படுத்தி மேற்கொள்ளும் கடும் முயற்சியே உழைப்பாகும். “ என ஆல்பிரட் மார்ஷல் கூறகிறார். உழைப்பின் சிறப்பியல்புகள் i ) உழைப்பு அழியக்கூடியது. ii ) உழைப்பு
|
உற்பத்தியின் முக்கிய காரணியாகும். நிலமோ அல்லது மூலதனமோ உழைப்பின்றி அதிக உற்பத்தியை விளைவிக்க இயலாது உழைப்பு ஒரே சீரானதல்ல ( not homogeneous ) திறமையும் தேர்ச்சியும் நபருக்கு நபர் மாறுபடுகின்றது. iii ) iv ) உழைப்பை ' உழைப்பாளரிடமிருந்து ‘ பிரிக்க இயலாது. v ) உழைப்பு இடம் பெயரக்கூடியது. குறைவான ஊதியம் பெறும் தொழிலிருந்து அதிகமான ஊதியம் பெறும் தொழிலுக்கு மனிதர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்கிறார்கள். vi ) தனி உழைப்பாளரின் பேரம் பேசும் ஆற்றல் குறைவு , தொழிலதிபரிடம் ( employer ) அதிக
|
ஊதியத்திற்காகவோ அல்லது நல்ல மேம்பட்ட பணிநிலைக்காகவோ அவர் போராட இயலாது. எனினும் பணியாளர்கள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து தொழிற் சங்கம் அமைத்து போராடுவதன் மூலம் அவர்களின் பேரம் பேசும் ஆற்றல் அதிகரிக்கிறது. உழைப்பு பலதரப்பட்டது. சாதாரண உழைப்பு என்பது பூமியை தோண்டுதல் , கல் உடைத்தல் , சுமை துாக்குதல் போன்றவை. ஆனால் உழைப்பு அதிக திறன்பெற்ற , மேலாளர்கள் , பொறியாளர்கள் , தொழில் நுட்ப வல்லுநர்கள் போன்றவர்களையும் உள்ளடக்கியதாகும். வேலைப் பகுப்பு முறை ஆதம் ஸ்மித் ‘ வேலைப் பகுப்பு முறையை ’ தனது ' நாடுகளின் செல்வம் ' என்ற
|
நுாலின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். வேலைபகுப்பு முறையின் பொருள் ஒரு உற்பத்திமுறையை நன்கு வரையறுக்கப்பட்ட வெவ்வேறு உட்பிரிவுகளாகப் பிரித்து அந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவினரிடம் ஒப்படைத்தலே வேலைப் பகுப்பு முறை எனப்படும். எடுத்தக்காட்டாக , ஒரு தையல்காரர் ஒரு சட்டையினையே முழுமையாகத் தைக்கிறார் ‘ ஆயத்த ஆடைகள் ’ செய்யும் ஏற்றுமதியாளர் துணிகளை வெட்டுதல் , உடல் பகுதிகளுக்கான துணிகளைத் தைத்தல் , கைப்பகுதிகளைத் தைத்தல் , கழுத்துப் பகுதிகளைத் தைத்தல் என்று
|
ஒவ்வொரு பணியும் தனித்தனி உழைப்பாளர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இறுதியாக அனைத்தையும் இணைத்து ஒரு சிலர் தைக்கின்றனர். இந்நிலைகள் முடிவடையும்போது அத்துணியானது , ஒரு ஆடையாக உருவாகிறது. ஒரு சட்டையை ஒரே ஒரு தையல்காரர் தைக்க முற்பட்டால் ஒரு நாளைக்கு நான்கு சட்டைகள் மட்டுமே தைக்க முடியும். ஏற்றுமதி ஆடை உற்பதி செய்யும் ஓர் நிறுவனத்தில் , ஒரு நாளைக்கு 100 சட்டைகள் கூட தைத்திட இயலும். இதன் மூலம் ' வேலைப் பகுப்பு முறை ’ உற்பத்தியினை உயர்த்தும் என்பது தெளிவாகின்றது. வேலைப்பகுப்பு முறையும் அங்காடியும் ஓர் அங்காடியின்
|
விரிவு வேலைப்பகுப்பு முறையின் அளவை தீர்மானிக்கின்றது. ஒரு பண்டத்துக்கான அங்காடி உள்ளுர் அங்காடியிலிருந்து தேசிய அங்காடியாகவும் , பன்னாட்டு அங்காடியாகவும் விரிவடைகிறது. அதனால் உற்பத்தி வழிமுறையானது பல சிறு சிறு முறைகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு சிறு வழிமுறையும் , அத்தொழில் முறைக்குரிய சிறப்பு தேர்ச்சி பெற்ற ஓர் உழைப்பாளிக்கு அளிக்கப்படுகிறது. இதனால் உற்பத்தி மிக அதிகமாக உயருகின்றது. வேலைப்பகுப்பு முறையின் நன்மைகள் 1. ஒரு தொழிலாளி மீண்டும் மீண்டும் ஒன்றை மட்டும் செய்வதால் , அத்தொழில் முறையில் அவருடைய திறமை
|
அதிகரிக்கின்றது. வேலைப் பகுப்பு முறை நவீன இயந்திரங்களை உற்பத்தியில் அதிகமாக பயன்படுத்தவதற்கு வழி வகுக்கிறது. உதாரணமாக கம்பியில்லாதத் தந்தியின் கண்டுபிடிப்பு. 3. காலமும் , மூலப்பொருட்களும் மிகத் திறமையாகப் பயன்படுத்தப்படுகின்றன. வேலைப் பகுப்பு முறையின் தீமைகள் 1. ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வதால் சுவையற்ற , களிப்பற்ற வேலை தன்மையைத் தான் , அவன் அடைகிறான். இது மனிதத் தன்மையை அழிக்கின்றது. ஒரு பகுதி பணியை மட்டும் செய்வதில் மிகவும் தேர்ச்சிப் பெற்ற தொழிலாளி உண்மையில் ஒரு குறுகிய தேர்ச்சியை மட்டும் பெற்றவனாகி
|
விடுகிறான். இதன் விளைவாக , வேலை வாய்ப்பின்மை பெருகிடும் நிலை ஏற்படுகிறது. கைவினைப் பொருட்கள் வளர்ச்சியினை , வேலைப் பகுப்புமுறை அழிக்கிறது. ஒரு பொருளை முழுமையாக உருவாக்கிய மனநிறைவினை , ஒரு தொழிலாளி அடைவதில்லை. மூலதனம் மூலதனம் என்பது வேறு பல பண்டங்களை உற்பத்தி செய்திட மனித முயற்சிகளால் உருவாக்கப்பட்டது. சாதாரணமாக மூலதனம் என்பது செல்வத்தைக் குறிக்கும். செல்வத்தை மேலும் உற்பத்தி செய்வதற்கென ஒதுக்கப்பட்ட செல்வம் என்று மூலதனத்தை கூறலாம். இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம் அளிக்கக்கூடிய பிற வகைச் செல்வங்களே மூலதனம்
|
என மார்ஷல் இலக்கணம் கூறியுள்ளார். மூலதனமும் செல்வமும் ஒரே பொருள் உடையதல்ல. இதிலிருந்து எல்லா செல்வங்களும் மூலதனம் அன்று , ஆனால் , எல்லா மூலதனமும் செல்வம் என்று கூறப்படுகிறது. மூலதனத்தின் வடிவங்கள் 1. பருமப் பொருள் மூலதனம் ( அ ) பொருட்சார் மூலதனம். 2. பணமூலதனம் ( அ ) பணவியல் வளங்கள் / ஆதாரங்கள் 3. மனித மூலதனம் ( அ ) மனிதத் திறன் வளங்கள் 1. பருமப் பொருள் மூலதனம் இயந்திரங்கள் , கருவிகள் , கட்டிடங்கள் , சாலைகள் , அணைக்கட்டுகள் , செய்தித் தொடர்பு சாதனங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்ட பருமப்பொருள் மூலதனமாகும்.
|
பருமப்பொருள் மூலதனத்தின் தன்மைகள் 1. பருமப் பொருள் மூலதனம் என்பது ஒரு சொத்து. இது குறிப்பிட்ட ஆண்டுகள் வரை மட்டுமே வாழ்நாள் கொண்டதாகும். 2. பருமப் பொருள் மூலதனத்தை உற்பத்திக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் , தேய்மானம் ஏற்படுகின்றது. 3. உற்பத்தியில் பருமப் பொருள் மூலதனத்தை ஈடுபடுத்துவதால் , ஒவ்வொரு ஆண்டும் வருமானத்தைத் தொடர்ச்சியாக தருகின்றது. இதனை ஆண்டுத் தொகை ( annuities ) என்று கூறுகிறோம். பருமப் பொருள் மூலதனத்தை , மேலும் மேலும் உற்பத்தி செய்து , அதன் மொத்த அளிப்பினை அதிகமாக்கிடுவதே , பருமப் பொருள்
|
மூலதன ஆக்கமாகும். 2. பண மூலதனம் பண வடிவில் அல்லது பணமாற்று பத்திரங்களாக அனைத்து முதலீடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு குடும்பமானது , தன்னுடைய வருமானத்தின் ஒரு பகுதியினை , வங்கி இருப்பாக , பங்கு பத்திரங்களாக ( அ ) வேறு பண மாற்று பத்திரங்கள் மூலமாக சேமிக்கின்றது. இதுவே ‘ பண மூலதனம் ' என்று கூறப்படுகிறது. 3. மனித மூலதனம் மனித மூலதனம் என்பது உழைப்பு வளத்தின் தரத்தைக் குறிக்கும். அது கல்வியாலும் , பயிற்சியாலும் உடல் நலத்திற்காகவும் கொடுக்கப்படும் முதலீடுஆகும். மனித மூலதனத்தில் முதலீட்டினை அதிகரிக்கும்போது ,
|
உற்பத்தி மேம்படுகிறது. மூலதனத்தின் சிறப்பியல்புகள் 1. மூலதனம் ஒரு செயலற்ற உற்பத்தி காரணி ஆகும். மூலதனம் மனித முயற்சியால் உருவாக்கப்பட்டது. 2. 3. மூலதனம் ஒரு இன்றியமையாத உற்பத்தி காரணி இல்லை. மூலதனம் இல்லாமல் உற்பத்தி நடைபெறும். 4. மூலதனம் அதிகம் இயங்கும் தன்மை கொண்டது. 5. மூலதனம் அளிப்பு நெகிழுந்தன்மையுள்ளது. 6. மூலதனம் ஆக்கமுடையது. 7. மூலதனம் பல ஆண்டுகள் நீடிக்கும். ஒரு உற்பத்தி நிறுவனம் பல ஆண்டுகள் உற்பத்தியில் ஈடுபடலாம். மூலதனத்தைத் திரட்டுவதன் நோக்கம் எதிர்காலத்தில் வருமானம் பெற வேண்டு மென்பதேயாகும்.
|
தொழிலமைப்பு ( அல்லது ) தொழில் முனைவோர் தொழில்முனைவோர் எனப்படுபவர் பல்வேறு உற்பத்திக் காரணிகளை ஒருங்கிணைத்து , செயல்படுபவர் ஆவார். ( நிலம் , உழைப்பு , மூலதனம் ). மேலும் , அக்காரணிகளை சரியான அளவிலும் , சரியான முறையிலும் தொடங்கி இடர்பாடுகளை ஏற்று உற்பத்தியைப் பெருக்க செயல்படுபவரே தொழில் முனைவோர் ஆவார்.தொழில் முனைவோர் ‘ தொழில் அமைப்பாளர் ’ எனவும் அழைக்கப்படுகிறார். ' தொழில் துணிவு ’ என்பது இடர்ப்பாடுகளை ஏற்று பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்வதற்கு நிர்வாகம் மற்றும் அமைப்பு ஆற்றல் பெறுவதன் மூலம் இலாபம்
|
ஈட்டுவதாகும். தொழில் முனைவோர் சமுதாயம் மாற்றம் காணும் முகவர் என அழைக்கப்படுகிறார். அவர் சமுதாய விருப்பமுள்ள உற்பத்தியை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாய நலம் மேம்படவும் காரணமானவர் ஆவார். தொழில் முனைவோரின் பணிகள் 1. இலாபகரமான முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளம் கண்டு தேர்ந்தெடுத்தல். தொழில் முனைவோரின் முதன்மைப் பணியானது அங்காடியில் நிலவிடும் புதிய கருத்துக்களையும் , சவால்களையும் ஏற்று இலாபகரமாகப் பயன்படுத்திக் கொள்வது எவ்வாறு ? என்பதை ஆராய்வதாகும். இதுவே இலாபகரமான முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் கண்டு
|
தேர்ந்தெடுத்தல் ஆகும். 2. உற்பத்தி அலகின் அளவைத் தீர்மானித்தல் ஒரு தொழில் முனைவோன் உற்பத்தி அலகின் அளவை தீர்மானிக்கிறார் - சந்தையில் போட்டியின் அளவைப் பொருத்தும் , உற்பத்தியின் இயல்பைப் பொருத்தும் பெரியதாகவோ சிறியதாகவோ உள்ளதாக தீர்மானிப்பார். Page 408 of 236 3. உற்பத்தி அலகின் இடத்தைத் தேர்ந்தெடுத்தல் ஒரு சிறந்த தொழில் முனைவோர் தனது உற்பத்தி செய்யும் இடத்தை காரணிச் சந்தைக்கும் ( factor market ) இறுதி நிலை சந்தைக்கும் ( end use market ) அருகிலேயே தேர்ந்தெடுப்பார். உற்பத்தி மற்றும் பகிர்வில் காலதாமதம்
|
ஏற்படுவதைத் தவிர்க்கவும் , இருப்புநிலை மற்றும் போக்குவரத்துச் செலவைக் குறைக்கவும் இது அவசியமாகிறது. 4. உற்பத்திக் காரணிகளின் உத்தம ஒருங்கிணைப்பைக் கண்டறிதல் தொழில் முயல்வோர் ஒரு புது தொழிலைத் தொடங்கத் தீர்மானித்த நிலையில் , அவர் உற்பத்திக் காரணிகளை உற்பத்தியில் ஈடுபடுத்தும் பணியினை தொடங்குகிறார். மேலும் இக்காரணிகளை எந்த விதத்தில் இணைத்து குறைந்த செலவில் அதிக உற்பத்தியைப் பெற இயலும் என தீர்மானிக்கிறார். 5. புத்தாக்கப் பணி அடிப்படையில் புது அங்காடிகளைக் கண்டறிதலும் , புது தொழில் நுட்பங்களைக் கையாள்வதுமே தொழில்
|
முனைவோரின் புத்தாக்கப் பணி என பேராசிரியர் ஷும்பீட்டர் கூறுகிறார். ஒரு புது அங்காடி விற்பனை அளவைக் கூட்டுவதோடு , புதிய உற்பத்தி செலவைக் குறைக்கும் யுக்தி , பொருளை மலிவாகக் கிடைக்கச் செய்யும். இதனால் விற்பனைக் கூடும். இலாபம் அதிகரிக்கும். 6. வெகுமதிச் செலவைத் தீர்மானித்தல் உற்பத்திக்குப் பயன்படும் காரணிகளாவது அதன் உற்பத்திக்கு ஏற்ப வெகுமதியைப் பெறுகிறது. உற்பத்திக் காரணிகளின் உற்பத்தியை அளவிடுதலும் மற்றும் அதன் வெகுமதியளிப்பும் தொழில் முயல்வோரின் தீர்வுக்குரிய பணியாகும். 7. இடர்ப்பாடுகளை ஏற்றல் ,
|
நிச்சயமின்மையை எதிர்கொள்ளல் ஹாலே. நிச்சயத்துவமில்லாதது. ‘ வாணிபம் ’ என்பது இடர்பாடுகளின் கட்டு ( bundle of risks ) என்கிறார் பொருள்கள் எதிர்காலத் தேவைக்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. எதிர்காலம் முதலீடுகள் நிகழ்காலத்தில் இடப்படுகின்றன. உற்பத்தியில் இது மிகப்பெரும் இடர்ப்பாடு. இடர்பாடுகளை ஏற்கும் ஒருவர் வெற்றிகரமான ‘ தொழில் முனைவோர் ’ ஆவார். ஒரு விவேகமுள்ள தொழில் முனைவோர் , அறிவியல் ரீதியில் எதிர்கால இடர்பாடுகளை ஏற்று , அதற்கான சரியான தீர்வுகளின் மூலம் இடர்பாடுகளிலிருந்து மீள்வது ஆகும். நைட் Knight என்ற
|
அறிஞரின் கூற்றுப்படி வாணியத்தில் உறுதியற்ற தன்மைகளை பொறுத்துக் கொள்ளல் ஒரு தொழில் முயல்வோரின் தலையாய பணி என்பதாகும். உற்பத்திச் சார்பு ( Production Function ) உற்பத்திச் சார்பு என்பது ஒரு நிறுவனத்தின் உள்ளீடு வெளியீடுகளுக்கு இடையே உள்ள இயல்பான தொடர்பாகும். உள்ளீடு என்பது உற்பத்திக்கும் பயன்படும் நிலம் , உழைப்பு , மூலதனம் , தொழிலமைப்பு ஆகிய ஆக்கப் பணிகளாகும். வெளியீடு என்பது உற்பத்தியின் மொத்த அளவைக் குறிக்கிறது கொடுக்கப்பட்ட நிபந்தனையில் உற்பத்திச் சார்பு என்பது கொஞ்சம் உள்ளீடுகளைப் பயன்படுத்தி அதன் விளைவாக
|
உற்பத்தி செய்யப்படும் வெளியீடுகளே ஆகும். உற்பத்திச் சார்பு என்பது Q = f ( x1 , x2 , x3..... xn ) இதில் Q ‘ என்பது ’ குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அளவாகும். ( x1 , x2 , x3..... xn ) ஆகியவை உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு காரணிகள் ஆகும். ஒரு குறிப்பிட்ட அளவில் பல்வகை உள்ளீடு பொருள்களைப் பயன்படுத்தினால் எவ்வளவு வெளியீடு பொருள்கள் கிடைக்கும் என்பதே உற்பத்தி சார்பு எனலாம். உற்பத்தி சார்பு என்பதை இருவகைகளாக பிரிக்கலாம். உற்பத்திச் சார்பின் பலவேறு நிலைகளைப் புரிந்து கொள்ளல் ( i ) இறுதிநிலை
|
உற்பத்தி மற்றும் மொத்த உற்பத்தி ( ii ) இறுதிநிலை உற்பத்தி மற்றும் சராசரி உற்பத்தி இவற்றிற்கு இடையேயான தொடர்பினைப் பற்றி புரிந்து கொள்வது அவசியம் ஆகும். ( i ) இறுதி நிலை உற்பத்தி நேர்கணியமாக இருக்கும் போது மொத்த உற்பத்தி அதிகரிக்கும். ( அ ) இறுதி நிலை உற்பத்தி அதிகரிக்கும் போது , மொத்த உற்பத்தி உயர் வீதத்தில் அதிகரிக்கும். ( ஆ ) இறுதி நிலை உற்பத்தி நிலையாக இருக்கும் போது , மொத்த உற்பத்தி நிலையான வீதத்தில் அதிகரிக்கும். ( இ ) இறுதி நிலை உற்பத்தி குறையத் தொடங்கி ஆனால் நேர்கணியத்தில் இருக்கும் போது , மொத்த
|
உற்பத்தி குறையும் வீதத்தில் அதிகரிக்கும். ( ii ) இறுதி நிலை உற்பத்தி பூஜ்ஜியமாக இருக்கும் போது , மொத்த உற்பத்தி குறையும் வீதத்தில் அதிகரிக்கும். ( iii ) இறுதி நிலை உற்பத்தி எதிர்கணியத்தில் இருக்கும் போது , மொத்த உற்பத்தி குறையத் தொடங்கும். 1. குறுகிய கால உற்பத்திச் சார்பு மற்றும் விகித விளைவு விதி என்பதன் மூலம் அறியலாம். 2. நீண்ட கால உற்பத்திச் சார்பு என்பது மாறா விளைவு விதி என்பதன் மூலம் அறியலாம். குறுகிய கால உற்பத்திச் சார்பு மாறும் விகித விளைவு விதி ஓர் உற்பத்திக் காரணி நிலையாக இருக்கும் போது , ஏனைய
|
உற்பத்திக் காரணிகளின் அளவை மாற்றினால் மாறும் விகித விளைவு விதி ஏற்படுகிறது. இலக்கணம் ‘ ஓர் உற்பத்தி காரணி மாறாமலிருக்கும் போது மற்றைய உற்பத்திக் காரணிகளின் அளவு மாறினால் ஆரம்பத்தில் இறுதிநிலை விளைவு அதிகரிக்கும். பின்பு மாறாமலிருக்கும் , இறுதியில் உற்பத்தி குறைந்து செல்லும். எடுகோள்கள் 1. ஒரே ஒரு உற்பத்திக் காரணி மட்டும் மாறும் போது ஏனைய உற்பத்தி காரணிகள் மாறாமல் இருக்கும். 2. ஒரு வேளை எல்லா உற்பத்திக் காரணிகளும் ஒரே விகிதத்தில் மாறுபட்டால் இவ்விதி பொருந்தாது. அதாவது ஒரு பொருளின் உற்பத்தியைப் பெறுவதற்கு
|
உற்பத்திக் காரணிகளை மாறாத விகிதத்தில் பயன்படுத்தப்படுதல் வேண்டும். நிலையையும் தேர்ந்தெடுக்கமாட்டார். அவர் இரண்டாம் நிலையை மட்டுமே தேர்ந்தெடுப்பார். ஏனெனில் மாறும் மற்றும் மாறா காரணிகளின் இறுதி நிலை உற்பத்தி இயல்பானவையே ஆகும். இந்த நிலையில் மொத்த உற்பத்தி உச்ச நிலையை அடைகிறது. இந்த நிலையில் உற்பத்தியாளர் ஒரு விசேஷமான நிலையில் உற்பத்தி காரணியின் விலையை பொருத்து உற்பத்தியை மேற்கொள்வார். இரண்டாவது நிலை நியாயமான உற்பத்தியாளரின் முடிவுகளை குறிப்பதாகும். நீண்ட கால உற்பத்தி சார்பு – விகித அளவு விளைவு விதி நீண்ட
|
காலத்தில் அனைத்து உற்பத்திக் காரணிகளும் மாறக்கூடியது அனைத்து உற்பத்திக் காரணிகளும் அல்லது உள்ளீடுகளும் ( Inputs ) மாறும்போது வெளியீட்டில் ஏற்படும் மாற்றமே விகித அளவு விளைவு விதியாகும். உயரும் அளவு ( an Increase in Scale ) என்பது அனைத்து உள்ளீடுகளும் அல்லதுகாரணிகளும் ஒரு சேர அதிகரிப்பதேயாகும். விகித அளவு விளைவு விதியின் மூன்று நிலைகள் விகித அளவில் ஏற்படும் மாற்றங்களினால் வெளியீடுகளில் ஏற்படும்மாற்றத்தை வெளியீட்டை மூன்று நிலைகளாகக் கூறலாம். அவையாவன. i ) வளர்ந்து செல் விகித அளவு விளைவு விதி ii ) மாறாத விகித
|
அளவு விளைவு விதி iii ) குறைந்துசெல் விகித அளவு விளைவு விதி வளர்ந்து செல் விகித அளவு விளைவு விதி அனைத்து உற்பத்திக் காரணிகளை உயத்தும்போது அந்த விகித அளவிற்கு மேலாக உற்பத்தி பெருகுகின்றது. இதுவே , வளர்ந்து செல் விகித அளவு விளைவு விதியாகும். எடுத்துக்காட்டாக அனைத்து உள்ளீடுகளும் 5 விழுக்காடு உயரும்போது வெளியீடுகள் 5 விழுக்காடுகளுக்கு மேல் உயர்கிறது. அதாவது 10 விழுக்காடாகும். இந்நிலையில் இறுதிநிலை உற்பத்தி அதிகரிக்கும். மாறா விகித அளவு விளைவு விதி கொடுக்கப்பட்ட விகித அளவில் அனைத்துக் காரணிகளையும் உயர்த்தும்போது
|
, வெளியீடும் அதே விகிதத்தில் உயரும். அதாவது 5 விழுக்காடு அனைத்து உற்பத்திக் காரணிகளும் உயரும் போது அதே அளவு 5 விழுக்காடு சமவிகிதஅளவில் வெளியீடுகளும் உயரும். இங்கே இறுதி நிலை உற்பத்தி மாறாததாகும். குறைந்து செல் விகித அளவு விளைவு விதி அனைத்து உற்பத்தி காரணிகளையும் உயர்த்தும்போது அதே விகித அளவைவிட குறைவாக உற்பத்திப் பெருகினால் , அதுவே குறைந்து செல் விகித அளவு விளைவு விதியாகும். அதாவது அனைத்து உற்பத்திக் காரணிகளும் 5 விழுக்காடு உயரும் போது வெளியீடுகள் 5 விழுக்காட்டிற்கு குறைவாக உயர்கிறது அதாவது 3 விழுக்காடு.
|
இந்த கட்டத்தில் இறுதிநிலை உற்பத்தி குறையும். மூலதனம் உழைப்பின் எண்ணிக்கை அளவு அடுக்கு வித அளவு உழைப்பு ( Exponent of Labour ) 1 - a = அடுக்கு வித அளவு மூலதனம் ( Exponent of Capital ) மேற்காணும் உற்பத்திச் சார்பின்படி இரு உற்பத்திக் காரணிகளும் ( உழைப்பு மற்றும் மூலதனம் ) ஒரு விழுக்காடு அதிகரிக்கும் போது வெளியீடு ( மொத்த உற்பத்தி ) அதிகரிக்கும். ஒரு விழுக்காடு உள்ளீடுகள் அதிகரிக்கும் போது வெளியீடுகளும் ஒரு விழுக்காடு உயருகிறது. இதன்மூலம் காப் - டக்லஸ் உற்பத்திச் சார்பு மாறாத விகித அளவு விளைவு விதியை மட்டும்
|
விளக்குகிறது. இதன் முக்கிய காரணம் என்னவென்றால் அடுக்கு வித அளவு மூலதனமானது. அடுக்கு வித அளவு உழைப்பை சார்ந்துள்ளது. இது எப்பொழுதும் ஒன்று என ஆகும். எடுத்துக்காட்டாக அடுக்கு விதி அளவு உழைப்பு 0.2 எனில் அடுக்கு வித அளவு மூலதனம் 0.8 ஆக இருக்கும். அதுபோல் அடுக்கு வித அளவு உழைப்பு 0.3 எனில் அடுக்கு வீத அளவு மூலதனம் 0.7 ஆகும். அடுக்கு வித அளவை சுதந்திரமாக செயல்படவிடுவதனால் இச்சமன்பாடு இவ்வாறு எழுதப்படுகிறது Q = bL * Cb மேற்காண் , உற்பத்திச் சார்பில் அடுக்குவித அளவின் கூடுதல் மாறா விகித அளவு விளைவு விதியின்
|
தரத்தைக் குறிக்கிறது. a + b > 1 : வளர்ந்து செல் விகித விளைவு விதி a + b = 1 : மாறாத விகித விளைவு விதி a + b < 1 : குறைந்து செல் விகித விளைவு விதி பேரளவு உற்பத்தி பொருளாதார சிக்கனத்தின் வகைகள் ( பொருளாதாரச் சிக்கனங்கள் ) ( Economies of Scale ) சிக்கனம் என்பது நன்மைகள். ‘ அளவு ’ என்பது அலகுகளின் அளவைக் குறிக்கும். பொருளாதாரச் சிக்கனங்கள் என்பது பேரளவு உற்பத்தியில் ஏற்படும் செலவு சார்ந்த நன்மைகள் ஆகும். உற்பத்தியின் அளவு அதிகரிக்கும்போது கட்டுமான செலவுகள் குறையத் தொடங்கும். உள்ளீடுகளை மொத்தமாக வாங்கும் போது
|
உற்பத்தியாளர் பேரம் பேசி வாங்குவதனால் சராசரி மாறும் செலவினம் கூட குறைகிறது. அனைத்து நன்மைகளும் பேரளவு உற்பத்தியினால் கிடைப்பதனால் இதனை பொருளாதாரச் சிக்கனங்கள் என அழைக்கிறோம். பொருளாதாரச் சிக்கனங்கள் இருவகைப்படும் ( அ ) அகச் சிக்கனங்கள் ( ஆ ) புறச்சிக்கனங்கள் அகச் சிக்கனங்கள் நிறுவனத்தினுள்ளேயே பெறப்படும் நன்மைகள் அகச் சிக்கனங்கள் என்றழைக்கப்படும். அவை உள்ளீடானவை ( endogenous ) பிற நிறுவனங்களின் செயல்பாடுகளினால் அல்லாமல் ஒரு தனி நிறுவனத்தின் செயல்பாட்டினால் மட்டுமே இது ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு
|
நிறுவனம் நல்ல மேலாண்மை மூலம் நன்மைகள் பலபெறும் , மற்றொன்று நவீன இயந்திரங்களைப் பெற்றிருப்பதனால் அதிக நன்மைகளை அடையலாம். அகச் சிக்கனங்கள் ஐந்து வகைப்படும். அவை யாவன. 1. தொழில்நுட்பச் சிக்கனங்கள் நிறுவனத்தின் அளவு பெரிய அளவு இருப்பதால் , கிடைக்கும் மூலதனமும் அதிகமாக இருக்கும். இதனால் , ஒரு நிறுவனம் நவீன தொழில் நுட்பங்களை புகுத்தமுடியும். எனவே இதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய முடியும். மேலும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியினால் உற்பத்தியின் தரத்தை உயர்த்த முடியும். 2. நிதிச் சிக்கனங்கள் பெரிய நிறுவனங்கள்
|
சந்தையில் பங்கு விற்பனை மூலம் மூலதனம் பெருக்கத்தை ஏற்படுத்தலாம். சிறு நிறுவனங்கள் மூலதனத்திற்காக கடன் வாங்கும் போது , பெரிய நிறுவனங்கள் மூலதனத்தைப் பெற முடியும். 3. மேலாண்மைச் சிக்கனங்கள் பேரளவு உற்பத்தியின் விளைவுதான் வேலைப் பகுப்பு முறை. வேலைப் பகுப்புமுறை இருந்தால் சரியான மனிதர்கள் சரியான துறையில் இருப்பார்கள். ஒவ்வொரு துறைக்குமான பொறுப்புணர்வை ஏற்படுத்த மேலாளருக்கு இது உதவும் , இதன்மூலம் உற்பத்தி அதிகரிக்கும். மொத்த உற்பத்தி உச்ச நிலையை எட்டும். 4. உழைப்புச் சிக்கனங்கள் பேரளவு உற்பத்தி வேலை
|
பகுப்புமுறைக்கு வழிவகுத்தது. இதனை ‘ சிறப்பு உழைப்பு ’ எனலாம். இது உழைப்பின் தரம் மற்றும் திறனை அதிகரிக்கும் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் இதனால் அதிகரிக்கும். 5. சந்தை சார்ந்த சிக்கனங்கள் உற்பத்தியில் , முதலில் மூலப்பொருள் வாங்குபவர் உற்பத்தியாளர் நிறுவனம் பேரளவு ஆக இருக்கும் போது வாங்கிய பொருளும் அதிகமாகும். இது உற்பத்தியாளருக்கு சிறந்த வாங்கும் சக்தியைத் தருகிறது. மேலும் அவர் கடன் வசதியையும் பெற இயலும். பேரளவு உற்பத்தியின் காரணமாகவே மேற்கண்ட அனைத்தும் சாத்தியமாகும். சந்தையில் வாங்குதல் முதல் நடவடிக்கை
|
எனலாம். 6. சந்தையில் தொடர்ந்திருப்பதன் சிக்கனங்கள் பெரிய நிறுவனங்கள் பல்வேறு உற்பத்திகளைக் கொண்டிருக்கலாம். ஒரு பொருளின் உற்பத்தி சந்தையில் தோல்வியுற்று நட்ட மேற்பட்டாலும் வேறொரு பொருள்களின் இலாபத்தினால் இதனை ஈடுசெய்ய முடியும். 7. புறச் சிக்கனங்கள் அதிக நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் விரிவடைந்து கொண்டிருக்கும் போது அதாவது தொழில் வளரும்போது அவை அதிக நன்மைகளைப் பெறுகிறது. இதனைப் புறச் சிக்கனங்கள் என்கிறோம். இது ஒரு நிறுவனம் மட்டுமே பெறும் நன்மையல்லாது , அமைப்பு மாற்றத்தால் அனைத்து நிறுவனங்களும் பெறும்
|
பயனாகும். அவைகளாவன. அ ) மேம்பட்ட போக்குவரத்து வசதிகள் ஆ ) வங்கி செயல்பாடு சார்ந்த வசதிகள் இ ) நாகரீக வளர்ச்சி ஈ ) தகவல் மற்றும் தொலைத்தொடர்பு வளர்ச்சி தொழிற்சார் பகுதிகளில் மேற்கண்ட வசதிகள் அனைத்தும் எளிதில் கிடைக்கின்றது. சிக்கனமின்மைகள் ( Diseconomies of Scales ) பேரளவு உற்பத்தியினால் ஒரு நிறுவனத்திற்கோ , குழு நிறுவனங்களுக்கோ எழும் தீமையே சிக்கனமின்மைகள். அகக் சிக்கனமின்மைகள். ஒரு நிறுவனம் தொடர்ந்து உத்தம நிலைக்கு மேலும் விரிவடைந்து செல்லும்போது பொருளாதாரச் சிக்கனங்கள் மறைவதுடன் சிக்கனமின்மைகள்
|
தொடங்குகிறது. எடுத்துக்காட்டாக நிறுவனத்தின் அளவு அதிகரிக்கும்போது ஒரு குறிப்பிட்ட நிலையில் மேலாண்மை இடர்பாடுகள் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஏற்படுவதால் , சராசரி உற்பத்திச் செலவு அதிகரிக்கும். இதுவே ‘ அகச்சிக்கனமின்மை ' எனப்படும். புறச்சிக்கனமின்மைகள் ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அளவுக்கதிகமான நிறுவனங்கள் ஓரிடத்தில் குவிந்து காணப்படுவதாலும் தொழிலை உள்ளூர் மயமாக்குவதாலும் உற்பத்தியில் சிக்கனமின்மை ஏற்படுகிறது. அப்பகுதியில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொதுவானது. எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட பகுதியில்
|
தொழிற்சாலைகளை விரிவாக்குவதால் அதிக வாரம் மற்றும் அதிகச் செலவு ஏற்படுகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையால் ( Industry ) அங்குள்ள அனைத்து நிறுவனங்களும் ( பயிற்சி பகுதி – அ உழைப்பு. அ. முதல் இ. இலாபம் அ. பயன்பாட்டின் அழிவு இ. மாற்று மதிப்பு நிலத்தின் ஆரம்ப அளிப்பு விலை அ. பூஜ்ஜியம் இ. ஒன்றுக்கும் குறைவானது ஆ. பயன்பாட்டை உருவாக்குதல் ஈ. ஏதுமில்லை முதலுக்கு அளிக்கப்படும் ஊதியம் அ. வட்டி இ. கூலி ஆ. ஒன்றுக்கும் அதிகமானது ஈ. ஒன்றுக்கும் சமமானது . இருந்து பிரிக்க முடியாது ஆ. உழைப்பாளரிடம் ஈ.
|
உற்பத்தி அமைப்பு ஆ. இலாபம் ஈ. வாடகை ஏற்கும் ஒருவரே வெற்றிகரமான “ தொழில் முனைவோர் ” ஆவார். அ. புத்தாக்கம் புனைதல் ஆ. இடர்பாடுகளை இ. உற்பத்தி அலகின் இடத்தைத் தேர்ந்தெடுத்தல் ஈ. ஏதுமில்லை கோடிட்ட இடங்களை நிரப்புக நிலமும் , உழைப்பும் உற்பத்திக் காரணிகள் ஆகும். நாடுகளின் செல்வமும் அதை உருவாக்குகின்ற காரணிகளைப் பற்றிய ஆய்வு என்ற நூலை எழுதியவர் ஓர் அங்காடியின் விரிவு உருவாக்கப்பட்டது முறையின் அளவை தீர்மானிக்கிறது. என்பது வேறு பல பண்டங்களை உற்பத்தி செய்திட மனித முயற்சிகளால் என்பது ஒரு நிறுவனத்தின் உள்ளீடு
|
வெளியீடுகளுக்கு இடையே உள்ள இயல்பான தொடர்பாகும். பொருத்துக 11. தொழில்முனைவோர் ஓர் புத்தாக்கப்பணி செய்பவர் 12. வேலைப்பகுப்பு முறை உற்பத்தி சார்பு 13. 14. இடர்பாடுகளின் தொகுப்பு 15. உடல் உழைப்பு அல்லது அறிவு உழைப்பு ஒரிரு வார்த்தைகளில் விடையளிக்கவும் சமுதாய மாற்றம் காணும் முகவர் யார் ? காப்டக்லஸ் ஹாலே பேராசிரியர் சும்பீட்டர் மார்ஷல் 20. காப் - டக்லஸ் உற்பத்தி சார்பினைக் கூறு. ஆடம் சுமித் 17. அகச்சிக்கனங்கள் எவ்வாறு தோன்றுகிறது ? 18. சமஅளவு உற்பத்திக் கோட்டிற்கு வேறு பெயர் யாது ? 19. உற்பத்தியாளர் சமநிலையை அடைய
|
நிபந்தனை யாது ? பகுதி – ஆ பின்வரும் வினாக்களுக்கு நான்கு அல்லது ஐந்து வரிகளில் விடையளிக்கவும். 21. பயன்பாட்டின் வகைகளைக் கூறு ? 22. உழைப்பு என்றால் என்ன ? 23. வேலைப்பகுப்பு முறை என்பதன் பொருள் யாது ? 24. மூலதனத்தின் வடிவங்கள் யாவை ? 25. உற்பத்தி சார்பு என்றால் என்ன ? வகைப்படுத்துக. பகுதி - இ பின்வரும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளிக்கவும். 26. வேலைப் பகுப்பு முறையின் சிறப்புகளையும் , குறைகளையும் விளக்குக. 27. மூலதனத்தின் பண்புகளை வரிசைப்படுத்தி விளக்குக. 28. தொழில் முனைவோரின் பணிகள் யாவை ? 29. விகித
|
அளவு விளைவு விதியையும் மாறும் விகித அளவு விளைவு விதியையும் ஒற்றுமைகளையும் , வேற்றுமைகளையும் விளக்குக. 30. உற்பத்தியாளர் சமநிலையை சமஅளவு உற்பத்திக் கோடுகளைக் கொண்டு விளக்குக. பகுதி – ஈ பின்வரும் வினாக்ககுக்கு மூன்று பக்க அளவில் விடையளிக்கவும். 31. நிலம் என்றால் என்ன ? நிலத்தின் சிறப்பியல்புகளை விளக்குக. 32. உழைப்பு என்றால் என்ன ? உழைப்பின் இயல்புகளை விளக்குக. 33. விகித அளவு உற்பத்தியின் மூன்று நிலைகளை விளக்குக. 34. காப் - டக்லஸ்ஸின் உற்பத்தி சார்பை விளக்குக. 35. மாறும் விகித விளைவு விதியைக் கூறி விளக்குக. 36.
|
சமஅளவு உற்பத்திக் கோடுகள் என்றால் என்ன ? அதன் இயல்புகளை விளக்குக 37. பொருளாதார சிக்கனங்களின் வகைகளை விளக்குக. செலவு பாடம் – 7 செலவும் வருவாயும் ஒரு பொருளை உற்பத்தி செய்யும் போது ஏற்படுகின்ற பலவகையான செலவினங்கள் ‘ உற்பத்திச் செலவு ’ ( Cost of Productions ) என்று அழைக்கப்படும். இது அப்பொருளை உற்பத்தி செய்யும் பொழுது செலவு செய்யப்படும் பணத்தை குறிக்கும். இந்த உற்பத்திச் செலவினை தொழிலின் அளவு , உற்பத்தி நிலை , தொழில் நுட்பத்தின் தன்மை , உள்ளீடு பொருட்களின் அளவு , உழைப்பு மற்றும் மேலாண்மையின் திறன் போன்ற காரணிகள்
|
தீர்மானிக்கின்றன. இவ்வாறு ஒரு பொருளின் உற்பத்திச் செலவு என்பது உற்பத்திக் காரணிகளுக்கு செலுத்தப்படுகிற ' மொத்த விலையே ' ( Aggregate Price ) ஆகும். செலவுச் சார்பு செலவுச் சார்பு என்பது மொத்த செலவினங்களுக்கும் மற்றும் உற்பத்திக்கும் இடையே உள்ள தொடர்பினை ( Functional Relationship ) வெளிப்படுத்துகிறது. குறியீட்டுருவாக செலவுச் சார்பு என்பது. C = f ( Q ) ஆகும். இங்கு C என்பது செலவுக்குச் சமம் ( C = Cost ) Q என்பது உற்பத்திக்குச் சமம் ( Q = Output ) செலவு மற்றும் செலவினங்கள் பணச்செலவு மற்றும் உண்மைச் செலவு ( Money
|
Cost and Real Cost ) ஒரு தொழில் நிறுவனம் ஒரு பொருளை உற்பத்தி செய்ய பணமாகச் செலவிடுகின்ற அனைத்துத் தொகையையுமே பணச் செலவு என்று அழைக்கிறோம். இது 1 ) மூலப்பொருளுக்கானச் செலவு ii ) உழைப்பிற்கான கூலி , மற்றும் சம்பளம் iii ) இயந்திரங்களுக்கும் கருவிகளுக்காகும் செலவு iv ) இயந்திரங்கள் , கட்டடங்கள் போன்ற மூலதனப் பொருட்களை பழுதுபார்க்கும் செலவு. v ) மூலதனத்திற்கான வட்டி vi ) விளம்பரச் செலவு , காப்பீட்டுச் செலவு vii ) தொழில் முனைவோருக்கான இலாபம் போன்ற செலவினங்களை உள்ளடக்கும். உண்மைச் செலவு என்பது தன் உள்ளுணர்வு
|
சார்ந்த கருத்தாகும். ( Subjective Concept ) ஒரு பொருளை உற்பத்தி செய்வதில் ஏற்படும் துன்பம் மற்றும் தியாகத்தை இது குறிக்கும். உற்பத்திக் காரணிகளைப் பெற்று அவற்றை உற்பத்தியில் ஈடுபடுத்த ஆகும் ஊதியங்களின் மொத்தம் பணச்செலவு எனப்படும். ஆனால் உண்மைச் செலவு என்பது பணத்தை சேமித்து முதலீடு செய்வதில் ஏற்படுகிறதான முயற்சியையும் தியாகத்தையும் , உழைப்பாளிகள் விட்டுக்கொடுக்கும் அவர்களது ஓய்வு நேரத்தையும் , கடும் முயற்சியையும் , உடலுழைப்பையும் நிலஉரிமையாளர்களின் ஊக்கத்தையும் மனநிறைவு , நிறைவற்ற மனநிலைகளையும் குறிக்கும்.
|
பிறவாய்ப்புச் செலவு ஒரு பண்டத்தின் சிறந்த பயன்பாடு தேர்ந்தெடுக்கப்படுவதால் , அதனுடைய அடுத்த சிறந்த பயன்பாடு விட்டுக் கொடுக்கப்பட வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக , கோதுமையை பயரிடும் உழவர் தன்னிடமுள்ள அதே உற்பத்திக் காரணிகளைப் பயன்படுத்தி உருளைக் கிழங்கை சாகுபடி செய்யலாம். ஒரு குவிண்டால் கோதுமையின் பிறவாய்ப்புச் செலவுயாதெனில் விட்டுத்தந்த உருளைக்கிழங்கின் உற்பத்தி அளவேயாகும். பேரேட்டு செலவு / வெளியுறுச் செலவு ( Accounting Cost or Explicit Cost ) ஒரு பண்டத்தை உற்பத்தி செய்ய ஒரு தொழில்முனைவோர் உற்பத்திக்
|
காரணிகளுக்கு அளிக்கும் ஊதியங்கள் மற்றும் கட்டணங்களுமே வெளியுறு செலவுகள் எனப்படும். கணக்கிடும் செலவு ( கணக்கீட்டுச் செலவு ) என்பது உற்பத்தியாளன் நேரடியாக செலுத்தும் ( அ ) அவரே கணக்கிடும் நியமிக்கப்பட்ட உழைப்பாளரின் கூலி , பெறப்பட்ட முதலீடு பண்டங்களின் விலைகள் , எரிபொருள் மற்றும் மின்சார செலவுகள் , உற்பத்தி வேலைகளுக்கான வாடகைக்குக் கொள்ளப்பட்ட கட்டிடத்திற்கான வாடகை , கடன் வாங்கப்பட்ட மூலதனத் திற்கான வட்டி வீதம் மற்றும் செலுத்தப்பட்ட வரிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பொருளாதாரச் செலவு ( Economic Cost )
|
வெளியுறு செலவுகள் ( Explicit Cost ) மட்டுமின்றி உள்ளார்ந்த செலவுகளையும் சேர்ந்த மொத்தத் தொகையே பொருளாதாரச் செலவாகும். தன்னுடைய சுய உழைப்பு , முயற்சி , சிந்தனை மற்றும் தனக்குச் சொந்தமான காரணிகளை ஒரு தொழில் முனைவோர் உற்பத்தியில் பயன்படுத்துவதால் அச்சுய சேவைக்கான வெகுமதியே உள்ளார்ந்த செலவாகும். இதற்கு மறைந்திருக்கும் செலவு ( Imputed Cost ) என்ற பெயரும் உண்டு. தன் சொந்தத் தொழிலில் தனது பணத்தையே முதலீடாகப் போட்டு , தனது சுய உற்பத்திப் பணிகளுக்காக கூலி மற்றும் சம்பளத்தை பெற்று , தனக்கு சொந்தமான நிலத்தையும்
|
இடத்தையும் பயன்படுத்தி அதற்கான வாரத்தையும் பெற்றுக் கொண்டால் அவற்றையே உள்ளார்ந்த செலவுகள் என்று கணக்கிடப்படும். இவ்வாறாக பொருளாதாரச் செலவு = வெளியுறு செலவுகள் + உள்ளார்ந்த செலவுகள் தொழில் நிறுவனம் இலாபம் ஈட்ட வேண்டுமாயின் தான் ஈட்டும் வருவாய் உற்பத்தி செலவைவிட கூடுதலாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார இலாபம் = மொத்த வருவாய் - பொருளாதாரச் செலவு தனியார்ச் செலவு மற்றும் சமூகச் செலவு தனியார் துறை நிறுவனத்தில் உற்பத்திக்காகும் செலவு தனியார் செலவு ஆகும். இந்நிறுவனத்தின் வெளியுறு செலவுகள் மற்றும்
|
உள்ளார்ந்த செலவுகளின் கூட்டுத் தொகையே தனியார் செலவாகும். சமூகச் செலவு என்பது உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்திச் செலவு அன்று. அது சமுதாயத்தில் இருக்கும் மற்ற மக்களுக்கு ஏற்பட்ட செலவாகும். எடுத்துக்காட்டாக ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வெளியேற்றும் கழிவுப் பொருட்கள் ஆற்று நீருடன் கலந்து அதில் தூாய்மைக் கேடு ஏற்படுத்தி , அதன் விளைவாக சமூகத்தின் சுகநலம் பாதிக்கப்படும். அது அச்சமூகத்தில் ஒரு செலவினத்தை ஏற்படுத்தும். அச்சமுதாயம் அச்செலவினை மேற்கொள்ள முற்படும். மாறாச் செலவும் மாறும் செலவும் செலவுகளும் , காலப்போக்கில்
|
இவ்விரு பல்வேறு உற்பத்தி நிலைகளில் செலவினங்களின் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ளப் பெரிதும் பயன்படுகிறது. மாறாக் காரணிகள் மாறும் காரணிகள் மற்றும் செலவுகள் மாறா காரணிகள் மற்றும் மாறும் காரணிகள் குறுகியகால உற்பத்தியில் மட்டுமே சார்ந்திருக்கக்கூடியவை. குறுகியகாலத்தில் சில உற்பத்திக் காரணிகளை மாற்ற இயலாது. இக்காரணிகள் மாறாக் காரணிகள் ( Fixed Factors ) என்று அழைக்கப்படுகின்றன. மாறா உற்பத்திக் காரணிகளுக்கு ஆகும் செலவு மாறாச் செலவு ( Fixed Cost ) என்று அழைக்கப்படுகின்றது. குறுகிய காலத்தில் உற்பத்திக் காரணிகளின் அளவை
|
மாற்றி அமைக்க முடியும் , எனில் அதனை மாறும் காரணிகள் என்றும் , அதனால் எற்படும் செலவு மாறும் செலவு ( Variable Cost ) எனவும் அழைக்கப்படுகின்றது. மாறாச் செலவு பல்வேறு உற்பத்தி நிலைகளிலும் மாறாததாகவே இருக்கும். ஆனால் மாறும் செலவுகள் பல்வேறு உற்பத்தி நிலைகளிலும் மாறிக் கொண்டே இருக்கும். குறுகியக் காலத்தில் , மாறாச் செலவு என்பது உற்பத்தியைப் பொறுத்தது அன்று , அதாவது உற்பத்தி வெளியீட்டிற்கேற்ப அவை மாறுபடாதவை. உற்பத்தி குறைவாக அல்லது உயர்வாக இருந்தாலும் சில செலவுகள் மாறாதவையாக நிலையானதாக இருக்கும். எடுகா. குத்தகை (
|
வாரம் ) , மூலத்தனத்திற்காக வட்டி வீதம் , நிரந்தர பணியாளருக்கான ஊதியங்கள் , காப்பீட்டுக் கட்டணம் , வரிகள் சில. மாறும் செலவுகள் என்பன குறுகிய காலத்தில் மாற்றக்கூடிய காரணிகளை வேலைக்கு அமர்த்தி அவைகளுக்காக ஏற்பட்ட செலவாகும். மொத்த மாறும் செலவு ( TVC ) என்பது உற்பத்தி அளவோடு மாறக்கூடியது. இச்செலவு உற்பத்தி அதிகரிக்கும் போது அதிகரித்து , உற்பத்தி குறையும் போது குறையக்கூடியது. உற்பத்தி ஏதும் இல்லையெனில் மாறும் செலவும் பூஜ்ஜியமாக இருக்கும். இம் மாறும் செலவு உழைப்பிற்கு அளிக்கும் கூலி , மூலப்பொருள் எரிபொருள் ,
|
மின்சாரம் போன்றவற்றிற்கான விலையையும் போக்குவரத்து செலவையும் உட்படுத்தியது. மொத்தச் செலவு ( Total Cost ) மொத்தச் செலவு என்பது மொத்த மாறாச் செலவையும் மொத்த மாறும் செலவையும் கூட்டிய மொத்தத் தொகையாகும். TC = TFC + TVC TC மொத்தச் செலவு = மொத்த மாறாச் செலவு + மொத்த மாறும் செலவு = இவ்விடத்தில் மொத்த மாறாச் செலவு என்பது நிலையானது. அது உற்பத்தியின் அளவோடு மாறக் கூடியது அல்ல. எனவே மொத்தச் செலவில் ஏற்படும் மாற்றம் , மாறும் செலவில் மட்டுமே ஏற்பட்ட மாற்றத்தின் பாதிப்பு என்பது கருத்தில் கொள்ள வேண்டியதாகும். இறுதிநிலை
|
செலவு வளைகோடு கீழ்க்கண்ட வரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள உற்பத்தி அளவில் , ஒரு அலகு உற்பத்தி அதிகரிப்பினால் , மொத்த செலவில் எற்படும் கூடுகின்ற நிகர அளவு செலவே இறுதிநிலை செலவு என்று வரையறை செய்யப்படுகின்றது. எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் 100 அலகுகள் உற்பத்தி செய்கிறது. இறுதிநிலை செலவு என்பது 100 அலகுகள் உற்பத்தி செய்ய ஆகும் மொத்த செலவிலிருந்து 99 அலகுகள் உற்பத்தி செய்ய ஆகும் செலவினை கழித்தால் கிடைப்பதே ஆகும். அந்நிறுவனம் 99 அலகுகளை உற்பத்தி செய்ய ரூ.9,000 / - மொத்த செலவாகிறது என்று வைத்துக்
|
கொண்டால் 100 அலகுகள் உற்பத்தி செய்ய ரூ.10,000 / - செலவாகும் போது ரூ.1,000 / - இறுதிநிலை செலவாகும். அந்நிறுவனம் ஒரு அலகு பொருள் கூடுதல் உற்பத்தி செய்ய ரூ. 1000 / - செலவு செய்துள்ளது குறியீடுகளில் உற்பத்தி இறுதிநிலை செலவு வளைகோடு U வடிவத்தைக் கொண்டுள்ளது. இவ்வடிவத்தை மாறும் விகித விளைவு விதி தீர்மானிக்கிறது ( law of variable proportions ). வளர்ந்து செல் விளைவு விதியின் ( Law of increasing returns ) இயக்கத்தினால் இறுதி நிலை வளைகோடு சரிந்துவிடும். ஏனெனில் உற்பத்தி அலகுகள் கூடும்பொழுது செலவு குறைந்துவரும்.
|
குறைந்து செல் விளைவு விதி ( Law of decreasing returns ) இயங்குவதாலும் உற்பத்தி அளவில் சிக்கனமின்மையாலும் ( Diseconomics of scale ) , இறுதிநிலை வளைகோடு அதிகரிக்கிறது. ஏனெனில் வளர்ந்து செல் செலவின் காரணமாக ஏற்படுகிறது. குறுகியக் கால சராசரி வளைகோட்டிற்கும் குறுகியக்கால இறுதிநிலை செலவு வளைகோட்டிற்கும் இடையே உள்ள தொடர்பு ( Relationship between SAC & SMC ) : உற்பத்தி இவற்றின் தொடர்பினைக் கீழ்க்கண்டவாறு அளிக்கலாம். 1. இறுதிநிலை செலவு சராசரி செலவைவிட குறைவாக இருக்கும்போது , சராசரி செலவு குறைகின்றது. 2. இறுதிநிலை
|
செலவு சராசரி செலவைவிட அதிகமாக இருக்கும் போது சராசரி செலவு அதிகரிக்கின்றது. 3. இறுதி நிலை செலவு வளைகோடு சராசரி வளைகோட்டின் தாழ்ந்த ( குறைந்த ) புள்ளியில் கீழிருந்து வெட்ட வேண்டும். இவ்வாறு சராசரி செலவின் ( AC ) குறைந்த புள்ளியில் MC , AC க்கு சமமாக இருக்கும். நீண்டகால சராசரி செலவு வளைகோடு : ( LAC ) ABC உற்பத்தி நீண்ட காலத்தில் அனைத்துக் காரணிகளும் மாறாக்கூடியவை. எனவே தேவையின் மாற்றத்திற்கேற்ப , மூலதனக் கருவிகள் மற்றும் இயந்திரங்களின் அளவை அந்நிறுவனம் மாற்றிக்கொள்ளக்கூடும். நீண்டகால சராசரி செலவு வளைகோடு -
|
வெளியீடு உற்பத்திக்கும் , நீண்ட கால உற்பத்தி செலவிற்குமிடையே உள்ள தொடர்பினை விளக்குகிறது. வரைபடம் 7.5 வரைபடம் 7.6 நீண்ட காலத்தில் உற்பத்தி அளவில் ஒரு நிறுவனம் பல்வேறு பதிலிகளை கொண்டுள்ளது என்ற எடுகோளின் அடிப்படையில் நீண்ட கால சராசரி வளைகோடு அமைந்துள்ளது. ஒவ்வொரு உற்பத்தி அளவிற்கும் அல்லது நிறுவனத்தின் அளவிற்கும் , Page 432 of 236 அந்நிறுவனத்திற்கே உரித்தான குறுகிய கால சராசரி செலவு வளைகோட்டை ( SAC ) கொண்டுள்ளது. இவ்வளைகோடுகளின் வடிவம் வரைப்படம் 7.5 ல் காட்டப்பட்டுள்ளது. தொழில் நுட்ப ரீதியில் மூன்று அளவிலான ,
|
சிறிய , நடுத்தர மற்றும் பெரிய நிறுனங்கள் இருப்பதாக நாம் எடுத்துக்கொள்வோம். SAC , என்பது சிறிய அளவிலான நிறுவனத்திற்கும் SAC2 நடுத்தர அளவான நிறுவனத்திற்கும் , SAC , பெரிய அளவான நிறுவனத்திற்கும் பொருந்தும். குறுகிய காலத்தில் , தேவைப்படும் உற்பத்தி OA ஆக இருக்கும்பொழுது , அந்நிறுவனம் , குறுகிய அளவிலான உற்பத்தியை தெரிவு செய்யும் , ஆனால் உற்பத்தி அளவு OB யை காட்டிலும் அதிக அளவாக இருக்கும் பொழுது அந்நிறுவனம் நடுத்தர உற்பத்தியை தெரிவு செய்து , சராசரி செலவானது குறுகியகால அளவைவிட அதிகமாக இருக்கும் ( அதே அளவான
|
வெளியீட்டிற்கு ) OD யைக் காட்டிலும் அதிக அளவு உற்பத்தி செய்வதற்கு அந்நிறுவனமானது , பெருமளவு உற்பத்தியை தெரிவு செய்யும். ( SAC ) குறுகிய காலத்தில் நிறுவனமானது கொடுக்கப்பட்ட ஒரு தொழிலோடு இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் நீண்ட காலத்தில் அந்நிறுவனம் ஒரு தொழிற்சாலையிலிருந்து மற்றொன்றிக்கு மாறுகிறது. உற்பத்தி அளவு மாறுபடும் பொழுது , ஒரு புதிய நிறுவனம் சேர்க்கப்படுகிறது. நிறுவனத்தின் அளவு உட்பட அனைத்து உள்ளீடுகளும் மாறும் பொழுது , ஒரு குறிப்பிட்ட அளவு உற்பத்தி நிலைக்கு , நீண்டகால உற்பத்தி செலவானது குறைந்தபட்ச உற்பத்தி
|
செலவாக இருக்கும். நீண்டகால சராசரிச் செலவு வளைகோடு திட்ட வளைகோடு ( Planning curve ) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இவ்வளைகோடு ஒரு நிறுவனத்திற்கு வெவ்வேறான உற்பத்தி அளவை திட்டமிடப் பயன்படுகிறது. இது உறை வடிவ வளைகோடு எனவும் அழைக்கப்படுகின்றது. ஏனெனில் இது பல குறுகிய காலச் செலவு கோடுகளை உள்ளடக்கியுள்ளது. மேற்கண்ட வரைபடத்திலிருந்து , நீண்டகால சராசரி வளைகோடு முதலில் ஒவ்வொரு அலகு அதிக உற்பத்தியுடன் குறைந்து ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குப் பிறகு அதிகரித்து ஒரு படகு வடிவ வளைகோட்டை ஏற்படுத்துகிறது. வருவாய் ( Revenue )
|
தான் உற்பத்தி செய்தப் பண்டத்தை , ஒரு குறிப்பிட்ட விலையில் அங்காடியில் விற்பனை செய்வதன் மூலம் ஒரு நிறுவனம் பெறுகின்ற வருமானமே நிறுவனத்தின் வருவாய் எனப்படும். மொத்த வருவாய் ( Total Revenue ) மொத்த வருவாய் என்பது , தான் உற்பத்தி செய்தப் பண்டங்களை விற்று அதனால் கிடைக்கின்ற மொத்த வருமானமே மொத்த வருவாய் என்று குறிப்பிடப்படுகிறது. கணிதவாயிலாக TR = PQ. இங்கு TR என்பது மொத்த வருவாய் P என்பது விலை Q என்பது விற்பனை அளவு. ஒரு நிறுவனம் 1000 அலகு பொருட்களை விற்பதாக எடுத்துக்கொண்டு அதன் விலை ரூ.10 எனக் கொள்ளும்போது மொத்த
|
வருவாய் , 1000 × ரூ.10 = ரூ.10,000 / - என்று கணக்கிடப்படுகிறது. சராசரி வருவாய் ( Average Revenue ) சராசரி வருவாய் என்பது ஒரு பொருளை விற்பனை செய்வதினால் கிடைக்கும் வருவாயாகும். மொத்த வருவாயினை விற்பனை செய்யப்பட்ட அலகுகளின் எண்ணிக்கையால் வகுத்து சராசரி வருவாய் கணக்கிடப்படுகிறது. AR = TR / Q இதில் Page 133 of 236 |. 1. இலாபம் உச்சமயமாக்குதல் ஒரு நிறுவனம் வெவ்வேறு அளவிலான உற்பத்தியில் ஈட்டிய லாபத்தை வரைபடம் 7.9 விளக்குகிறது இதன் லாபம் OM அளவிலான உற்பத்தியில் உச்ச அளவாகஇருக்கும். இங்கு TR வளைகோட்டிற்கும் TC
|
வளைகோட்டிற்கும் உள்ள இடைவெளி அதிகபட்சமாக இருக்கும். நிறுவனம் OM அளவு உற்பத்தியையும் OH அளவு உற்பத்தியையும் செய்யும் பொழுது மொத்த வருவாயானது மொத்த செலவிற்கு சமமாக இருக்கும் ( TR = TC ) இப்புள்ளிகளில் நிறுவனத்திற்கு இலாபமும் இல்லை நஷ்டமும் இல்லை. எனவே S + Q புள்ளிகள் சமமுறிவுப் புள்ளிகள் என்றழைக்கப்படும். பயிற்சி பகுதி – அ சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் உண்மைச் செலவு என்பது அ. துன்பம் மற்றம் தியாகமும் இ. முயற்சியும் தியாகமும் பணச் செலவின் உள்ளடக்கமானது அ. உள்ளார்ந்த செலவு இ. மாறாச் செலவு ஆ. உள்ளுணர்வு ஈ.
|
மேற்கூறிய அனைத்தும் வெளியேறுச் செலவு மற்றும் ஆ. சமூக செலவு ஈ. பணச் செலவு சமூகச் செலவு என்பவை அ. நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை ஆ. சமுதாயம் ஏற்கும் செலவு இ. உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பது ஈ. மேற்காணும் அனைத்தும் சராசரி மாறாச் செலவு இதனால் வகுக்கும் போது கிடைக்கும் அ. TC / Q ஆ. TFC / Q இ. TVC / Q ஈ. எதுவுமில்லை இறுதி நிலை வருவாய் என்பது இதனுடன் சேர்த்தால் கிடைப்பது அ. சராசரி வருவாய் ஆ. மொத்த உற்பத்தி இ. மொத்த வருவாய் ஈ. எதுவுமில்லை பணச்செலவினை MC₁ இலாபம் ஒரிரு சொல்லில் விடையளிக்கவும் சராசரி வருவாய் மாறாமல்
|
இருக்கும் போது , இறுதிநிலை வருவாயின் நிலை என்ன ? இறுதிநிலை வருவாய் என்பது என்ன ? சமமுறிவுப் புள்ளி என்றால் என்ன ? உறை வடிவ வளைக்கோடு என்பது என்ன ? 20. சராசரி செலவை எவ்வாறு கணக்கிடுவாய் ? மாறாக் காரணிகள் மற்றும் மாறும் காரணிகளை மொத்த செலவு என்பது இறுதிநிலை செலவு வளைக்கோடானது பொருத்துக பொருளாதாரச் செலவு என்றால் என்ன ? 24. இறுதிநிலைச் செலவு என்றால் என்ன ? I உள்ள வேறுபாடாகும். ல் மட்டுமே வேறுபடுத்த இயலும் I வடிவத்தில் இருக்கும். அ. திட்ட வளைக்கோடு ஆ. TCn – TCn - 1 TR- TC பகுதி – ஆ பின்வரும் வினாக்களுக்கு நான்கு
|
அல்லது ஐந்து வரிகளில் விடையளிக்கவும். 21. குறுகிய மற்றும் நீண்டகாலத்திற்கு உள்ள வேறுபாடு யாது ? 22. வாய்ப்புச் செலவு என்றால் என்ன ? ஈ. ஓர் அலகு செலவு உ. TFC + TVC MC மற்றும் AC க்கும் இடையேயுள்ள உறவுகளைக் கூறுக. பகுதி – இ பின்வரும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளிக்கவும். 26. நீண்டகால சராசரிச் செலவு வளைக்கோடு பற்றி குறிப்பு வரைக. 27. AR மற்றும் MR கோடுகளின் இடையேயான உறவுகள் எழுதுக. 28. குறுகியகால சராசரி வளைவுக்கோட்டை விவரிக்கவும். 29. இறுதிநிலைச் செலவினை சரியான விளக்கத்துடன் கூறுக. 30. SAC மற்றும் SMC
|
க்கும் உள்ள உறவினை கூறுக. பகுதி FF பின்வரும் வினாக்களுக்கு மூன்று பக்க அளவில் விடையளிக்கவும். ஒரு நிறுவனம் மேற்கொள்ளும் பல்வேறு செலவுகளை விளக்குக. TC , AC , மற்றும் MC கோடுகள் பற்றி விளக்குக. TR , AR , மற்றும் MR கோடுகள் பற்றி விளக்குக. இலாபம் உச்சமாகுதல் அளவிடுதலை படம் வரைந்து விளக்கம் தருக. அங்காடி என்பதன் பொருள் மற்றும் இலக்கணம் 2. அங்காடி என்பது ஒரு இடத்தையோ ( அல்லது ) புவியியல் பகுதியையோ குறிக்கும். இங்கு கையில் பணத்துடன் பண்டங்கள் வாங்க தயார் நிலையில் இருக்கும் வாங்குவோரும் , பண்டங்களை விற்போரும் ,
|
பண்ட பரிமாற்றத்திற்காக ஒருவரையொருவர் சந்திப்பார்கள். பொருளியலில் அங்காடி என்பது பண்டங்களையும் பணிகளையும் பரிமாற்றம் செய்திட வாங்குவோரும் , விற்போரும் இணையும் இடத்தை குறிக்கும். அங்காடியின் பண்புகள் 1. பண்டங்களை வாங்குவோரும் , விற்போரும் இருப்பார்கள். வாங்குவோரும் , விற்போரும் தங்களுக்குள்ளே நேரடி தொடர்புகொள்ள வேண்டியதில்லை. இருக்கின்ற தொலைத்தொடர்பு கருவிகளான தொலைபேசிகள் , முகவர்கள் , கடித போக்குவரத்து மற்றம் இணையதளம் ( Internet ) போன்றவற்றின் வாயிலாக வர்த்தக பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம். 3. பாடம் 8
|
அங்காடி அமைப்பும் , விலை நிர்ணயமும் 4. வாங்குவோரும் , விற்போரும் ஒரே வகையான பண்டத்தையோ ( அ ) பலவகையான பண்டத்தையோ விற்கவோ ( அ ) வாங்கவோ செய்வார்கள். பொருளியலில் அங்காடி என்பது பரிமாற்றம் செய்யப்படும் பொருளைச் சார்ந்து அடையாளம் செய்யப்படுவதால் , பண்டங்கள் ஒரே மாதிரியான தன்மை உடையனவாக இருத்தல் மிகவும் அவசியமானது. அங்காடியில் விற்கப்படும் மற்றும் வாங்கப்படும் பொருள்களுக்கு ஒரு விலை இருத்தல் வேண்டும். அங்காடியின் வகைகள் அ. இடத்தைப் பொறுத்த அங்காடி அங்காடியை அது அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து உள்ளூர் , வட்டார ,
|
தேசிய மற்றும் பன்னாட்டு அங்காடி என்று வகைப்படுத்தலாம். உள்ளூர் அங்காடி உள்ளூரிலேயே கிடைக்கக்கூடிய பொருள்களை வாங்குவோரும் , விற்போரும் வர்த்தகப் பரிமாற்றம் செய்துக் கொள்வார்கள். அது ஒரு பகுதியிலோ ( or ) கிராமத்திலோ நடைபெறக்கூடும். இவ்வங்காடியில் அளிப்பும் , தேவையும் உள்ளுர் சூழ்நிலைக்கேற்ப அமையும். ( எ.கா. ) அழியும் பண்டங்களாகிய பால் மற்றும் காய்கறிகள். வட்டார அங்காடி ஒரு வட்டாரத்திற்குள் தேவைப்படும் மற்றும் அளிக்கப்படும் பொருள்களின் அளவைக் குறிப்பது வட்டார அங்காடி ஆகும். தேசிய அங்காடி ஒரு நாடு முழுவதிலும்
|
தேவைப்படும் மற்றும் அளிக்கப்படும் பொருள்களின் அளவைக் குறிப்பது தேசிய அங்காடி ஆகும். ( உம். ) கோதுமை , அரிசி. பன்னாட்டு அங்காடி உலக முழுவதும் ஒரு பண்டம் விற்று வாங்கப்படுமானால் அது உலக அங்காடி எனப்படும். ( எ.கா. ) பொன் , வெள்ளி , செல்போன்கள் , தேவை அளிப்பையும் பொறுத்து இந்த புவியியல் சார்ந்த வகைப்படுத்துதல் அமைந்துள்ளது. போக்குவரத்துவசதி மற்றும் தொலை தொடர்பு முன்னேற்றத்தினால் உள்ளூர் அங்காடிகளில் விற்கப்படும் பொருள்களும் பன்னாட்டு அங்காடியின் விற்பனை பொருள்களாகக் கூடும். ஆ. நேரம்சார் அங்காடி காலத்தினை
|
அடிப்படையாகக் கொண்டு பேராசிரியர் மார்ஷல் அங்காடியை வகைப்படுத்தியுள்ளார். காலத்தை மிக குறுகியகாலம் , குறுகிய காலம் , நீண்ட காலம் என்று மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளார். மிக குறுகியக் காலம் குறுகிய காலத்தில் ஓர் பொருளின் / பண்டத்தின் அளிப்பை மாற்ற இயலாது. எனவே குறுகிய கால அங்காடி அளிப்பு நெகிழ்ச்சியற்றது , பொருளின் விலையானது தேவையையே சார்ந்துள்ளது ( உம். ) அழியும் பண்டங்களாகிய பூக்கள் , பழங்கள். குறுகியக் காலம் இக்காலத்தில் தேவைமாற்றத்திற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் அளிப்பின் அளவு மாற்றம்
|
அடைகிறது. இக்குறுகிய காலத்தில் மாறும் காரணிகள் மாற்றம் அடையும். குறுகிய காலத்தில் அளிப்பானது நெகிழ்ச்சியுடையது. குறுகிய கால விலையானது தேவை. அளிப்பு வளைகோடுகள் சமன்படும் போது நிர்ணயிக்கப்படுகிறது. நீண்ட காலம் நீண்டகாலத்தில் அளிப்பானது புதிதாக ஏற்படும் தேவைகளை பூர்த்தி செய்கிறது. இக்காலக்கட்டத்தில் மாறும் மற்றும் மாறாத காரணிகள் யாவும் மாற்றம் அடையும். அளிப்பு வளைகோடு முற்றிலும் நெகிழ்ச்சியுள்ளது. இக்கால கட்டத்தில் விலையை தேவையே நிர்ணயம் செய்கிறது. ( இ ) போட்டியின் அடிப்படையில் அங்காடிகள் இவ்வகையான அங்காடிகள்
|
விற்பவரின் எண்ணிக்கையையும் , பொருளின் தன்மையையும் பொறுத்து / சார்ந்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. போட்டியின் அடிப்படையில் அங்காடியின் வகைகளை கீழ்காணுமாறு வகைப்படுத்தலாம். அங்காடி நிறைவுப்போட்டி அங்காடி ( எண்ணற்ற விற்பனையாளர்கள் ஒருபடித்தான பண்டங்களை விற்பனை செய்தல் ) நிறை குறைப்போட்டி அங்காடி முற்றுரிமை இருவர் முற்றுரிமை சில்லோர் முற்றுரிமை முற்றுரிமை போட்டி ( ஒருவர் ) ( இருவர் ) ( சிலர் ) ( பலர் ) நிறைவுப் போட்டி நிறைவுப் போட்டி என்பது எண்ணற்ற விற்பனையாளர்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும். எந்த ஒரு விற்பனையாளரும்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.