text
stringlengths
11
513
நுகர்வு ' ( Consumption ) என்று அழைக்கப்படுகிறது. ( விருப்பங்களின் தன்மைக்கும் தேவையின் பண்புக்கும் இடையே உள்ள தொடர்புகளை நுகர்வு விளக்குகிறது ). விருப்பங்களின் இயல்புகள் 1. விருப்பங்கள் எண்ணற்றவை ஒவ்வொரு மனிதரும் விருப்பங்களின் தொகுப்பாக உள்ளார். மனித விருப்பங்கள் எல்லையற்றவையாகும். ( Wants are unlimited ) ஒரு விருப்ப...
Wants are satiable ) விருப்பங்களும் பொதுவாக விருப்பங்கள் எண்ணற்றவை. அனைத்து நிறைவேறக்கூடியவை அல்ல. ஆனால் ஒரு தனிப்பட்ட அல்லது குறிப்பிட்ட விருப்பம் நிறைவு பெறக்கூடியதாகும். ஒரு தனிப்பட்ட விருப்பத்தை முழுவதுமாக நிறைவு செய்ய முடியும். பசி எடுக்கும் போது , அவனுக்கு உணவு தேவைப்படுகிறது. சிறிதளவு பணத்தைச் செலவு செய்வதன் மூல...
நிறைவு செய்ய முடியாது. எனவே விருப்பங்களை நிறைவு செய்ய முயலும் போது அவை ஒன்றோடொன்று போட்டியிடுகின்றன. முதலில் தெரிவு செய்ய வேண்டிய , இணை விருப்பங்கள் மற்றொரு இணை விருப்பங்களோடு போட்டியிடுகின்றன ( உம். ) ராஜீ ரூ.20 வைத்திருப்பதாகக் கொள்வோம். இந்த ரூ.20 ஐ பயன்படுத்தி சினிமாவிற்குச் செல்வதா , பத்திரிக்கை வாங்குவதா , அல்லது...
வருமானத்தைப் பல பண்டங்களில் மீதும் பகிர்ந்தளிப்பர். 4. விருப்பங்கள் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன சில விருப்பங்கள் சார்புத் தன்மை கொண்டவை. அதாவது அவற்றை ஒன்றாகவே நிறைவு செய்ய வேண்டும். விருப்பம் தனிப்பட்ட ஒன்றாக இருந்தாலும் , அதை நிறைவு செய்ய பல பண்டங்களும் , பணிகளும் தேவைப்படுகின்றன. ' எழுத வேண்டும் ' என்ற விருப்பம் , எழுத...
உழைப்பிற்குப் பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்த முடியும். ஆனால் உழைப்பின் உதவியின்றி இயந்திரத்தை பயன்படுத்த முடியாது. 5. விருப்பங்கள் மாற்றுப் பொருளால் நிறைவு பெறுபவை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பண்டங்களாலும் , இரண்டு அல்லது மேற்பட்ட முறைகளாலும் ஒரு விருப்பத்தை நிறைவு செய்யலாம். சூடான பானம் அருந்த விரும்பினால் காபி அல...
பண்டங்கள் அல்லது மாற்றுமுறைகள் ‘ பதிலிகள் ’ ( Substitutes ) என்று அழைக்கப்படுகின்றன. 6. விருப்பங்கள் நேரத்தால் , இடத்தால் , மனிதனுக்கு தகுந்தாற்போல் மாற்றக்கூடியவை விருப்பங்கள் நிலையான தன்மை உடையன அல்ல. அவை இடம் , காலம் , மனிதர்களுக்குத் தகுந்தாற்போல் மாறக்கூடியவை. குளிர்காலத்தில் நாம் சூடான பானமும் , கோடைகாலத்தில் குள...
ஆந்திர பிரதேசத்தில் உள்ள கிராமவாசிகளின் விருப்பம் மும்பையில் உள்ள தொழில் அதிபரின் விருப்பத்திலிருந்து மாறுபட்டது. தலைமுறையினரின் விருப்பம் புதிய தலைமுறையினரின் விருப்பத்திலிருந்து எனவே விருப்பங்கள் , தலைமுறை , பண்பாடு , சமுதாயம் , புவியியல் அமைப்பு , பொருளாதார முன்னேற்றம் இவற்றைப் பொருத்து வேறுபடும். பழைய வேறுபட்டது. 7...
மணி நேரங்களில் மீண்டும் இவ்விருப்பம் தோன்றும். எனவே , விருப்பங்கள் மீளத்தோன்றம் இயல்புடையவை என்று கூறுகிறோம். 8. விருப்பங்கள் விளம்பரங்களின் மூலம் தோன்றக்கூடியவை தாக்கத்தை ஏற்படுத்தும் , சினிமா , பத்திரிக்கைகள் , வானொலி , தொலைக்காட்சிகளில் தோன்றும் விளம்பரங்கள் மூலம் புதிய விருப்பங்கள் தோன்றுகின்றன ஏற்கனவே உள்ள விருப்ப...
வழக்கங்களாகவும் மாறக்கூடியவை ஒரு குறிப்பிட்ட விருப்பம் தொடர்ந்து ஒரு பண்டத்தால் நிறைவேற்றப்படுமானால் அது பழக்கமாக மாறிவிடுகிறது ( உம். ) காபி , தேனீர் அருந்துதல் போன்ற விருப்பங்கள் பழக்கங்களாக மாறுகின்றன. பழக்கங்களும் விருப்பம் ஏற்படக் காரணமாகின்றன. விருப்பங்களின் வகைகள் பொருளியலில் விருப்பங்கள் மூன்று வகையாகப் பிரிக்க...
பண்டங்கள் இன்றியமையாத பண்டங்களாகும். மனித வாழ்க்கைக்குச் சில அடிப்படைப் பண்டங்கள் தேவைப்படுகின்றன. உணவு , உடை , இருப்பிடம் , முதலியன மனிதன் விரும்பும்அடிப்படைப் பண்டங்களாகும். இவையின்றி மனிதன் வாழமுடியாது. 2. வசதிப் பண்டங்கள் ( Comforts ) வசதிப் பண்டங்கள் என்பது மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவைப்படும் பண்டங்களும் பணிகள...
மகிழ்ச்சிப்படுத்தும் ( உம் ) பழங்களை உண்ணுதல் , பால் குடித்தல் போன்றவை வசதிகள் திறமையையும் ஊக்குவிக்கின்றன. 3. ஆடம்பரப் பண்டங்கள் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை காட்ட உதவும் பண்டங்கள் ( உம் ) வைர நகைகள். இன்றியமையாத , வசதி , ஆடம்பரப் பண்டங்களின் முக்கியத்துவம் பண்டங்களையும் பணிகளையும் மேற்கண்டவாறு வகைப்படுத்தினாலும் அவை ஒன்...
மருத்துவர்களுக்கும் , சிற்றுந்து என்பது அவசியமான ஒன்று. அதுவே மாணவர்களுக்கு ஆடம்பரப் பண்டமாகும். நகரத்தில் வாழ்பவருக்கு அவசியமான பண்டம் கிராமத்தில் வாழ்பவருக்கு ஆடம்பரப் பண்டமாகும். விருப்பங்களை வகைப்படுத்துதல் என்பது மனிதர்களடைய வருமானம் , சமுதாய நிலை , சுவைகளின் பாங்குகள் ஆகியவற்றைப் பொறுத்தது. மார்ஷலின் நுகர்வோர் தே...
என்று பெயர். தேவைக் கோட்பாட்டில் பயன்பாட்டு அணுகுமுறையை முதலில் புகுத்தியவர் மார்ஷல் ஆவார். இதற்கு இயல்பெண் பயன்பாட்டு ஆய்வு அல்லது இறுதிநிலை பயன்பாட்டு ஆய்வு அல்லது மார்ஷல் பயன்பாட்டு ஆய்வு என்று பெயர். இரண்டாவது அணுகுமுறை சமநோக்கு வளைகோட்டு ஆய்வு ஆகும். இது பயன்பாடுகளை ஒப்பிடும் கருத்தைப் பயன்படுத்துகிறது. இதற்கு தரவ...
செய்யும் பண்டங்கள் , பணிகளின் சக்தியே பயன்பாடு எனப்படும். பயன்பாடு என்பது உளவியல் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரே பண்டம் அல்லது பணி பல்வேறுபட்ட மக்களுக்கு பல்வேறு விதமான பயன்பாட்டைக் குறிக்கும். சைவ உணவு உட்கொள்பவருக்கு ஆட்டு இறைச்சி பயன்பாட்டைக் கொடுக்காது. வெப்பமான நாடுகளில் வாழும் மக்களுக்கு கம்பளி ஆடைகள் குறைந்த...
பயன்பாட்டின் கூடுதலே மொத்தப்பயன்பாடு ஆகும். ஒரு நுகர்வோர் பத்து ரொட்டித்துண்டுகளை நுகரும்பொழுது கிடைக்கும் மொத்த மனநிறைவை மொத்தப்பயன்பாடு என்று கூறுகிறோம். அதாவது ஒரு பண்டத்தின் பல அலகுகளைத் தொடர்ந்து , இடைவிடாமல் நுகரும்பொழுது , நுகர்வோருக்குக் கிடைக்கக்கூடிய பயன்பாடுகளின் கூட்டுத் தொகையே மொத்த பயன்பாடாகும். இறுதிநிலை...
பத்தாவது ரொட்டி துண்டிலிருந்து கிடைக்கும் பயன்பாடு இறுதி நிலைப் பயன்பாடு ஆகும். 10 அலகு ரொட்டித் துண்டுகளிலிருந்து கிடைக்கும் பயன்பாட்டிலிருந்து 9 அலகு ரொட்டித் துண்டுகளிலிருந்து கிடைக்கும் பயன்பாட்டினைக் கழித்தால் கிடைப்பது இறுதிநிலைப் பயன்பாடாகும். MU = TU – TU ( n - 1 ) nth பண்டத்திலிருந்து கிடைக்கும் இறுதிநிலைப் பய...
குறையும் பூஜ்ஜியம் எதிர்மறை குறைந்துசெல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி ( Law of Diminishing Marginal Utility ) 3. மொத்தப் பயன்பாடு அதிகரிக்கும் உச்ச நிலையை அடையும் குறையும் குறைந்துசெல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி நுகர்வோரின் சாதாரண அனுபவத்தை விளக்குகிறது. நுகர்வோர் மேலும் மேலும் ஒரு பண்டத்தை நுகர்வதால் , அதிலிருந்து கிட...
மொத்தப் பயன்பாடானது குறைவான வேகத்தில் அதிகரிக்கும். காசன் ( Gossen ) , பெந்தம் ( Bentham ) ஜிவான்ஸ் ( Jevons ) , கார்ல் மங்கர் ( Karl Menger ) முதலானோர் இக்கருத்து தோன்றுவதற்கு முதல் காரணகர்த்தர் ஆவர். ஆனால் ஆல்பிரட் மார்ஷல் தான் இக்கருத்தை ஒரு விதியாக மாற்றினார். இவ்விதிக்கு காசன்விதி என்ற பெயரும் உண்டு. “ ஒருவரிடம் உ...
பண்டத்தின் அளவு ஏற்றுக் கொள்ளத்தக்க தரமான அளவிடப்பட்டிருக்க வேண்டும். ஒரு குவளை தேனீர் , ஒரு அலகு குளிர்பானம். அலகுகளால் 2. நுகரப்படும் பண்டத்தின் எல்லா அலகுகளும் ஒத்த தன்மை கொண்டவை , ஒரே மாதிரியானவை. அனைத்தும் ஒரே தரமானவையாக இருக்க வேண்டும். பண்டங்களை நுகரும் பொழுது கால இடைவெளியின்றி தொடர்ந்து நுகரவேண்டும் என்பது இவ்வ...
நுகரும் பண்டங்கள் மற்றும் அதன் பதிலீட்டுப்பண்டங்களின் விலைகள் மாறாது நிலையாக இருக்க வேண்டும். மொத்த , இறுதிநிலைப் பயன்பாட்டுக் கோடு. 3.1 பட்டியல் மொத்தப் பயன்பாட்டிற்கும் இறுதிநிலைப் பயன்பாட்டிற்கும் உள்ள குறைந்து தொடர்பினை விளக்குகிறது. பட்டியலிலிருந்து , இறுதிநிலைப் பயன்பாடானது கொண்டே செல்கிறது என்பது தெளிவாகிறது முத...
ஐந்தாவது பழத்திலிருந்து கிடைக்கும் இறுதிநிலைப் பயன்பாடு பூஜ்யத்திற்கு செல்கிறது. ஆறு , ஏழு பழங்களை தொடர்ந்து நுகர்ந்தால் , இறுதிநிலைப் பயன்பாடு எதிர்கணியத்திற்கு செல்கிறது ( Negative ). இவ்வாறு நுகர்வோர் தொடர்ச்சியாகப் பண்டங்களை நுகரும்பொழுது இறுதிநிலைப் பயன்பாடு முதலில் குறைந்து , பின் பூஜ்யத்திற்குச் சென்று , அதன் பி...
போது மொத்தப் பயன்பாடு அதிகரிக்கும். ஆகவே முதல் நான்கு அலகு பழங்களில் , மொத்தப் பயன்பாடு 20 அலகுலிருந்து 50 அலகுகளாக அதிகரிக்கிறது. இறுதிநிலைப் பயன்பாடு பூஜ்யமாக இருக்கும் பொழுது மொத்தப்பயன்பாடு உச்சத்தை அடைகிறது ( 50 அலகு ). இறுதிநிலைப் பயன்பாடு எதிர்கணியத்திற்கு செல்லும் பொழுது ( 6 , 7 அலகுகள் ) மொத்தப் பயன் பாடானது 5...
இறுதிநிலைப் பயன்பாட்டு விதியின் செயல்பாட்டினால் தோன்றியதாகும். ஒரு பண்டத்தை மேலும் மேலும் தொடர்ச்சியாக நுகரும் பொழுது அதன் ஒவ்வொரு அலகிலிருந்து கிடைக்கும் இறுதிநிலைப் பயன்பாடானது குறைந்து கொண்டே செல்லும். இது இறுதிநிலைப்பயன் பாட்டுவிதியின் செயல்பாட்டினால் தேன்றுவதாகும். பயன்பாடு குறைவதால் நுகர்வோர் குறைவான விலையையே கொட...
சென்றால் பணத்தின் இறுதிநிலைப் பயன்பாடு குறையும். ஆனால் பணத்தின் இறுதிநிலைப் பயன்பாடு மாறாது நிலையாக இருக்கும் என்று மார்ஷல் கருதுகிறார். 3. இவ்விதி பணக்காரர்களுக்கு அதிக வரிவிதிக்க ஒரு ஆயுதமாக நிதி அமைச்சருக்கு உதவுகிறது. 4. இவ்வித உற்பத்தியாளர்களுக்கு அவர்கள் அறியாமலேயே வழிகாட்டியாக செயல்படுகிறது. அவ்வவ்போது தாங்கள் உ...
நுகருவதாக கருதுவர். இதனால் இச்சூழ்நிலையில் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி நுகர்வோரின் மனதில் செயல்படுகிறது. ஆகவே அத்தகையப் பண்டங்களின் தேவை குறையும். திறனாய்வு 2. இறுதிநிலைப் பயன்பாட்டு விதியின் குறைபாடுகளாவன என்பது 1. ஒரு பொருளை நுகர்வதால் கிடைக்கும் பயன்பாடு அவரது உள்ளத்தைச் சார்ந்த அனுபவமாகும். X- என்ற பண்டத்தின் ஒரு அ...
மிகவும் நன்றாக உள்ளது என்று ஒருவர் கூறினால். அதிலிருந்து அவர் பெறும் பயன்பாட்டை அளவிடமுடியாது. இருந்தாலும் அத்திரைப்படத்தைப் பார்ப்பதற்கு அவர் கொடுத்த நுழைவுக் கட்டணத்தை வைத்து மறைமுகமாக பயன்பாட்டை அளவிடலாம். இவ்விதி ( ஒரு பொருள் நுகர்வு ' என்ற அடிப்படையில் எழுந்ததாகும். ஒரு நுகர்வோர் ஒரு நேரத்தில் ஒரே ஒரு பண்டத்தை மட்...
இடைவெளியின்றி தொடர்ச்சியாகப் பண்டங்களை நுகர வேண்டும். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இது சாத்தியமாகாது. பணத்தின் இறுதி நிலைப்பயன்பாடு மாறாமல் நிலையாக இருக்கும் என்பது இவ்விதியின் எடுகோளாகும். நடைமுறை வாழ்க்கையில் பணத்தின் இறுதிநிலைப் பயன்பாடு நிலையாக இருக்காது. பயன்பாடு என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும். அதனால் பண்டங்களை ...
ஜெர்மனி நாட்டுப் பொருளியல் வல்லுநர் வெளியிட்டார். எனவே அது ‘ காசன் அவர்களின் இரண்டாம் விதி ’ எனப்படும். இவ்விதியில் பொருளியல் அறிஞர் ஆல்ஃரட் மார்ஷல் அவர்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களைத் தமது “ பொருளியல் கோட்பாடுகள் “ என்ற நூலில் வரைந்துள்ளார். ஒரு நுகர்வோர் , ஒரு பொருளுக்கு மேலாக பண்டங்களை நுகரும்போது அந்நுகர்வோரின் நட...
தனது குறைந்த வருமானத்தைப் பல பண்டங்களின் நுகர்விற்காக செலவு செய்து உச்சப் பயன்பாட்டைப் பெறுகிறார் என்று விளக்குகிறது. இவ்விதி ‘ பதிலீட்டு விதி ' என்றும் ( Law of Substitution ) , உச்ச மனநிறைவு தரும் விதி என்றும் ( Law of Maximum Satisfaction ) என்னும் இறுதிநிலை பயன்பாட்டிற்கும் விலைக்கும் இடையே உள்ள சரி விதிதாச்சாராக் ...
போது அதன் பயன்களின் இறுதிநிலைப் பயன்பாடு ஒரே அளவில் சமமாய் இருக்கும் வண்ணம் பகிர்ந்தளிப்பார் " என்று இவ்விதியை விளக்குகிறார். எடுகோள்கள் 1. நுகர்பவர் பகுத்தறிவு உள்ளவராக இருப்பதனால் உச்ச மனநிறைவு அடைய விழைகின்றார். 2. ஒவ்வொரு பொருளின் பயன்பாடும் அளவிடக் கூடியது. 3. பணத்தின் இறுதிநிலைப் பயன்பாடு மாறாமல் இருக்கிறது. 4. ந...
நுகர்வோர் X மற்றும் Y என்ற பண்டங்களின் மீது செலவிடவேண்டும். நுகர்வோர் பகுத்தறிவு திறன் வாய்ந்தவர். அவரது வருமானம் குறிப்பிட்ட அளவாக இருப்பதனால் X மற்றும் Y பண்டங்களை வாங்கி ஒவ்வொரு பண்டத்திலிருந்தும் உச்ச அளவு பயன்பாட்டு கிடைக்கும்படியாக செலவு செய்கிறார். அவ்வாறு அவர் நுகர்ந்திடும் மற்ற பண்டங்களின் தனித்தனியான இறுதிநில...
பயன்பாட்டின் அளவு இரண்டு பொருட்களிலிருந்தும் சமமாக இருக்கும் போது அவர் சமநிலையை அடைகிறார். குறியீட்டின்படி நுகர்வோரின் சமநிலையானது MUx_ MUy = MUm என்ற நிலையில் ஏற்படும். Px Py இதில் MU = X பண்டத்தின் இறுதிநிலைப் பயன்பாடு MU = Y பண்டத்தின் இறுதிநிலைப் பயன்பாடு P = X பண்டத்தின் விலை P , = Y பண்டத்தின் விலை MUm = பணத்தின்...
பண்டத்தின் 6 அலகுகளையும் Y பண்டத்தின் 5 அலகுகளையும் வாங்குவான். அவனுடைய மொத்த செலவு ( Rs.5x6 ) + ( Rs , 4x5 ) = ரூ.50.00 ( இரண்டு X , Y பொருட்களையும் வாங்குவதால் ) இந்த ரூ.50 / - செலவில் அவனுடைய மனநிறைவு உச்சகட்டத்தை அடைகிறது. எனவே அவன் சமநிலையை அடைகிறான். இந்த நுகர்வோனின் சமநிலையை வரைபடத்தைக் கொண்டு விளக்கலாம். பணத்தி...
மற்றும் Muy / Py ஆகிய இரண்டு வளைகோடுகளும் கூட கீழ்நோக்கிச் சரிந்து செல்கின்றன. நுகர்வோனின் வருமானம் மாறாததாகக் கொண்ட எடுகோளினால் அவனது பணத்தின் இறுதிநிலைப் பயன்பாடானது OM அலகுகள் என வைத்துக் கொண்டால் படம் 3.2 ல் Mux / Px = OM ( பணத்தின் இறுதி நிலைப்பயன்பாடு ) அப்பொழுது அவன் OH அளவான X பண்டத்தை வாங்கிக் கொள்கிறான். Muy ...
அளவான Y பண்டத்தையும் நுகர்ந்து சமநிலையை அடையும் இந்நுகர்வோருக்கு வேறெந்த பணச் செலவு ஒதுக்கீடும் உச்சகட்ட மனநிறைவை , பயன்பாட்டை அளிக்காது. ஒரு நுகர்வோரின் பணவருமானம் வீழ்ச்சியடைந்தால் பணத்தின் புதிய இறுதிநிலைப் பயன்பாடு OM அளவுக்கு சமமாக இருக்கும் எனவே , நுகர்வோர் பண்டம் X பண்டம் Y ஆகியவைகளின் நுகர்வினை முறையே OH , OK அ...
போன்றவற்றை சிறு பிரிவுகளாகப் பிரிக்க , பகுக்க இயலாது. இவ்வகை பொருட்களில் இவ்விதியை நடைமுறைப்படுத்த இயலாது. 2. பணத்தின் இறுதிநிலைப் பயன்பாடு நிலையானது அல்ல : இக்கோட்பாடு , பணத்தின் இறுதிநிலைப் பயன்பாடு மாறாது என்ற எடுகோளின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஆனால் , உண்மையில் அது அவ்வாறு மாறாமல் இருப்பதில்லை. 3. பயன்பாட்டை அளவி...
மறுக்கிறார்கள். இருவேறு நபர்கள் ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு ஒரே விலையை அளிக்க விரும்பினால் அவர்களிருவரும் ஒரே அளவு பயன்பாட்டைத் தான் பெறுகிறார்கள் என்று பொருளல்ல. எனவே , பயன்பாடு என்பது அகம் சார்ந்ததாக இருப்பதால் அதனை அளவிட முடியாது. 4. பயன்பாடு ஒன்றை ஒன்று சார்ந்தவை : இவ்விதியில் பொருட்களும் / அவற்றின் பயன்பாடுகளும் தன...
தொடர்புடையனவாகும். 5. வரம்பற்ற திட்டக் காலம் ( Indefinite Budget Period ) பேராசிரியர் K.E. போல்டிங் அவர்களின் விளக்கப்படி , வரம்பற்ற திட்ட காலம் இவ்விதியின் கடைசி குறைபாடாகும். சாதாரணமாக ஒரு வருடமே திட்டக் காலமாக கருத்தில் கொள்ளப்படும். ஆனால் சில குறிப்பிட்ட பொருட்கள் பல தொடர்ச்சியான கணக்கு வைப்பு காலக் கட்டங்கள் வரை க...
செயல்படக்கூடும் சேப்மேன் அவர்கள் குறிப்பிடுகின்றபடி. “ மனிதர்கள் தங்களது வருமானத்தை ' பதிலீட்டு விதியின்படியோ ' அல்லது உச்ச மனநிறைவு தரும் விதிப்படியோ பகிர்வு செய்யப்படவேண்டும் என்பது கட்டாயம் அல்ல. இது காற்றில் உயர எறியப்படுகிற கல் எவ்வாறு பூமியை நோக்கித் திரும்ப விழுகிறதோ அவ்வண்ணமே நாமும்கூட பகுத்தறிவு நிறைந்தவர்கள் ...
பொருளியல் நடவடிக்கைகளுக்கும் பொருந்தும் என்று கூறுகிறார். பொருளாதார நடவடிக்கைகளில் மனித நடத்தைப் பற்றி விளக்குகின்ற இவ்விதி தலையாயதானதாகும். 1. நுகர்வில் இவ்விதியின் பொருத்தம் எல்லா மனிதர்களும் பகுத்தறிவு மிக்கவர்கள். குறைந்த வளங்களைக் கொண்டு நிறைவான மன நிறைவை பெற விரும்புகிறார்கள். அவர்கள் தங்களது செலவினங்களை Mux Muy ...
பெறும் நோக்கத்துடன் செயலாற்றி அவர்களது இலாபத்தைஉச்சாமாக்கச் செயல்படுவர். இதற்காக ஒரு காரணிக்கு மற்ற காரணியைப் பதிலீடு செய்வார்கள் உற்பத்திக் காரணிகளின் இறுதிநிலை உற்பத்தித்திறன் சமமாகும் வரை. MPc MP1 P1 MPn Pn என்ற நிலையில் உள்பத்தியாளர் உச்ச லாபம் அடைகிறார். 3. செலவு மற்றும் சேமிப்பில் பொருத்தம். Pc மார்ஷல் அவர்களின் ...
அவரது கடைசி ரூபாயின் இறுதிநிலைப் பயன்பாட்டோடு சமப்படுத்த முற்படுவார். 4. பகிர்வில் பொருத்தம் வருமான பகிர்வு கொள்கையில் , இப்பதிலீட்டு விதி அதிக ஈடுபாடு கொண்டுள்ளது. பகிர்வில் காரணிகளின் ஊதியமான வாரம் , கூலி , வட்டி , இலாபம் போன்றவற்றை தீர்மானிக்கும்போது ஒவ்வொரு காரணியின் இறுதிநிலைக்கு ஏற்ப அவற்றின் சம இறுதிநிலை பயன்பாட...
கொள்கையின்படி , பல திட்டங்களுக்கு செலவிடும் கடைசி அலகு செலவானது சமமான நலத்தைக் கொண்டு வரும் வகையில் அரசின் வருவாய் பகிர்ந்தளிக்க வேண்டும். அப்போது தான் சமூக நலம் உச்ச நிலையை அடையும். 6. காலப் பயன்பாட்டில் பொருத்தம் பேராசிரியர் போல்டிங் அவர்கள் மார்ஷல் அவர்களின் சம இறுதி நிலைப் பயன்பாட்டு விதியினை 24 மணி நேரத்தை செலவிடு...
வேண்டும். நுகர்வோர் எச்சம் ( CONSUMER'S SURPLUS ) நுகர்வோர் எச்சம் என்ற கருத்தை முதன் முதலாக உபயோகப்படுத்தினவர் J.A. டுபூட் ( Dupuit ). இவர் பிரான்சு நாட்டை சேர்ந்த பொறியாளர் மற்றும் பொருளியல் அறிஞர் ஆவார். இவரின் காலம் 1844 ஆகும். இக்கொள்கையின் கருத்தினை பிற்காலத்தில் A. மார்ஷல் என்பவர் எழுதிய ( பொருளாதார அடிப்படைக் க...
இப்பொருள்கள் யாவும் கொடுக்க நினைக்கும் விலைக்கும் , உண்மையில் கொடுத்து வாங்கும் விலைக்கும் உள்ள வேறுபாட்டை சார்ந்த பொருள்களாகும். அதிகபட்சமான திருப்தியையே ‘ நுகர்வோர் எச்சம் ’ என அழைப்பர். இப்பண்டங்களில் பதிலீடுகள் இல்லை. இப்பண்டங்களின் மூலம் ( உம். ) ஒரு நுகர்வோர் ரூ.250 க்கு ஒரு சட்டை வாங்க நினைக்கின்றார். ஆனால் அவர்...
எச்சம் என குறிப்பிடுகின்றோம். இலக்கணம் மார்ஷலின் இலக்கண பின்வருமாறு “ ஒரு பொருளை வாங்காமல் இருப்பதைவிட , வாங்குவதே நல்லது என்று முடிவு செய்து , கொடுக்க நினைக்கும் விலைக்கும் , நுகர்பவர் உண்மையில் கொடுத்த விலைக்கும் உள்ள வேறுபாடு நுகர்வோர் எச்சம் எனப்படும் “ என இலக்கணம் தந்துள்ளார். எடுகோள்கள் 1. பண்டங்களின் பயன்பாட்டின...
4. வருமானம் , சுவை , மாதிரிகளில் வித்தியாசம் ( மாற்றம் ) இல்லை. 5. பொருட்களும் , பயன்பாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. 6. பண்டங்களின் தேவையானது , அவற்றின் விலையை பொறுத்தே அமையும். அளவிடுதல் நுகர்வோர் எச்சத்தை கீழ்காணும் முறையில் அளவிடலாம் , அதாவது , நுகர்வோர் எச்சம் = தகுவிலை உண்மை விலை. தகுவிலை என்பது நுகர்வோர் , வா...
பயன்பாட்டின் வரிக்கோடாகும். OP என்பது விலையாகும். OM என்பது வாங்கும் பொருளின் அளவினை குறிக்கும். நுகர்வோர் OM அளவு பண்டத்தை வாங்கும்போது OAEM அளவு விலையை கொடுக்க விருப்பப்படுகின்றார். ஆனால் நுகர்வோர் OPEM அளவு பணத்தை கொடுத்தே அப்பொருளை வாங்குகின்றார். எனவே நுகர்வோர் எச்சம் என்பது OAEM- OPEM = PAE ( கோடிடப்பட்ட பகுதி ) ...
குறைபாடுகளை சுட்டிக் காட்டி உள்ளார். அவையாவன. 1. பயன்பாடு அளவிடக்கூடியது என்பது மார்ஷலின் கருத்து. ஆனால் உளவில் அடிப்படையில் பயன்பாடு இருப்பதால் பயன்பாட்டை அளவிட முடியாது. 2. பணத்தின் “ இறுதிநிலை பயன்பாடு ” நிலையானது என்று மார்ஷலின் கருத்து உண்மையற்றதாகும். நுகர்வோர் எச்சத்தின் முக்கியத்துவம் நுகர்வோர் எச்சமானது , நிதி...
எச்சமானது , பல்வேறு பகுதிகள் ( அ ) நாடுகளில் வாழு மக்களின் வாழ்க்கை தரத்தை ஒப்பீடுச் செய்வதற்கு காரணமாக உள்ளது. இவ்ஒப்பீடானது ஏழை , மற்றும் பணக்கார நாடுகளின் இருக்கும் மக்களின் நுகர்ச்சி நிலையில் உள்ள வேற்றுமைகளை காணவும் உதவுகிறது. உதாரணமாக நியூயார்க் நகரில் வாழும் நடுத்தரக் குடும்பத்தை சார்ந்த ஒருவர் சென்னையில் வாழும்...
இடைக்காலத்தில் ( Medieval Period ) வாழ்ந்த ஒரு அரசனை காட்டிலும் அதிக அளவு நுகர்வு எச்சத்தை பெற்று அனுபவிக்கிறார் என குறிப்பிடுகின்றார். ஹிக்சின் நுகர்வோர் எச்சகோட்பாடு மார்ஷலின் பொருளியல் கோட்பாட்டினை பல்வேறு பொருளியல் அறிஞர்கள் குறைகூறினர். 1. பயன்பாடு அளவிடக்கூடியது என்பது மார்ஷலின் கருத்து. ஆனால் உளவில் அடிப்படையில்...
பொருத்து மாறுபடக்கூடியது. 3. பணத்தின் இறுதிநிலை பயன்பாடு நிலையானது என்று மார்ஷல் கெண்டிருந்த எடுகோள் உண்மையற்றதாகும். பணத்தின் இருப்பு குறையத் தொடங்கினால் , பணத்தின் இறுதிநிலைப் பயன்பாடு உயர்கிறது. சமநோக்கு வளைகோடுகள் INDIFFERENCE CURVE APPROACH மார்ஷலின் தேவைபற்றியதான பகுப்பாய்வு முறையானது , தரவரிசை பயன்பாட்டின் முறைய...
அடிப்படையிலானதாகும். வில்பிரட் பரிட்டோ , விக்ஸ்டீட் மற்றும் ஸ்லட்ஸ்கி , போன்ற பொருளியலாளர்கள் இக்கோட்பாடுகளை வளர்த்தனர். குறிப்பிடத்தக்க இரண்டு ஆங்கில பொருளாதார ஆசிரியர்களான பேராசிரியர் J.R. ஹிக்ஸ் , மற்றும் பேராசிரியர் ஆலன் போன்றோர் இக்கோட்பாட்டை மறு ஆய்வு செய்தார்கள். இவ்விருவரின் கருத்துப்படி , பயன்பாட்டை அளவிட முடி...
வளைகோட்டின் உதவியோடு விளக்கலாம். “ சமநோக்கு வளைகோடு என்பது இரண்டு பண்டங்களின் பல்வேறு இணைப்புகளின் மூலம் கிடைக்கும் மன நிறைவானது சம அளவாக உள்ளது ”. இலக்கணம் “ இரு பண்டங்களின் வெவ்வேறு அளவுகளின் ஒருமித்த நுகர்வில் சம அளவு நிறைவைத் தரும் புள்ளிகளின் குவியிடமே ” சமநோக்கு வளைக்கோடு எனப்படும். எடுகோள்கள் 1. நுகர்வோர் பகுத்த...
விலையானது , அதிலிருந்து அவர் பெறும் பயன்பாட்டைக் குறிக்கிறது. 4. அவருடைய வருமானம் மாறாததாய் இருக்கிறது. 5. அவருடைய சுவைகள் , முன்னுரிமைகள் , பழக்கவழக்கங்களில் மாற்றமில்லை. சமநிலை வளைக்கோட்டின் பட்டியல் சமநிலை வளைகோட்டின் பட்டியல் என்பது இரு பண்டங்களில் பல்வேறு வகையான இணைப்புக்களின் சமநிலையை நுகர்வோர் ஏற்றுக் கொள்ளக்கூட...
யைவிட அதிக மனநிறைவை நுகர்வோருக்கு தருகிறது. ஆனால் , C இரண்டு வளைகோடுகளுக்கும் பொதுவாக உள்ளது. இதன் பொருள் , சமமற்ற இரு வேறு மனநிறைவுப் புள்ளிகள் சமமாகிவிட்டது என்பதாகும். இது ஏற்றுக் கொள்ள முடியாதது. எனவே , சமநோக்கு வளைகோடுகள் எப்போதும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளாது. எடுகோள்களும் சமநோக்கு வளைகோடுகளின் வடிவத்தினைக் இம்ம...
பல பண்டங்களில் செலவினம் மெற்கொள்வதன் மூலம் அதிக மனநிறைவைப் பெறும் போது அவர் சமநிலையைப் பெறுகிறார். மேற்கூறிய பயன்பாட்டு பகுப்பாய்வில் ஒரு நுகர்வோர் பல பண்டங்களை வாங்குவதன் மூலம் பெறும் இறுதிநிலைப் பயன்பாடு சமமாக இருக்குபோது அவர் உச்ச அளவு மன நிறைவைப் பெறுகிறார். ஒரு நுகர்வோரின் சமநிலையை சமநோக்கு வளைகோட்டு நுட்பத்தின் ம...
இணைபொருள் , இப்படம் நுகர்வோரின் இரு பண்டங்களின் மீதான விருப்பத்தைக் குறிப்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவர் முன்னுரிமைகளின் அளவுகோல் மாறாமல் இருப்பதாகக் கொள்ளவேண்டும். ஈ. நுகர்வோர் இரு பண்டங்களுக்கிடையே செலவு செய்ய ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே பெற்றுள்ளார். அவர் இத்தொகையை செலவு செய்வாரேயன்றி சேமிக்கமாட்டார் எனக...
கொள்ளவேண்டும். ஒரு நுகர்வோரின் சமநோக்கு நிலை பண்டம் X மற்றும் பண்டம் Y படம் 3.6 கொடுக்கப்பட்டுள்ளது. இது நுகர்வோரின் இரு பண்டங்களுக்கிடையே நான்கு முன்னுரிமைகளின் அளவுகளை ( Scales of Preferences ) குறிப்பிடுகிறது. வலது பக்கம் உள்ள சமநோக்கு வளைகோடுகள் அதிக மன நிறைவைக் குறிக்கிறது. எனவே நுகர்வோர் X மற்றும் Y பண்டங்களுக்கு...
வருமானத்தைப் பொருத்து , கொடுக்கப்பட்டுள்ள விலையில் பண்டங்களை எவ்வளவு வாங்கு முடியும் என்பதை அறிய வரவு செலவுக் கோடு ( Budget Line ) பயன்படுகிறது. 1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் 1. இன்றியமையாத , வசதி , ஆடம்பர பண்டங்கள் என்பது அ. இலவச பண்டங்களை வகைப்படுத்தவது ஆ. விருப்பங்களை வகைப்படுத்துவது இ. பயன்பாட்டினை பிரிப்பது...
சமூக கருத்து ஆ. உள்ளுணர்வு சார்ந்த மற்றும் உளவியல் கருத்து அரசின் கருத்து ஈ. அறிவியல் கருத்து ஒற்றைப் பண்ட நுகர்வு எதை உணர்த்தும் அ. உற்பத்தி வாய்ப்பு வளைக்கோடு ஆ. சம - இறுதி நிலை பயன்பாட்டு விதி இ. அளிப்பு விதி ஈ. குறைந்துச் செல் இறுதிநிலை பயன்பாட்டு விதி நுகர்வோர் எச்சம் என்பது அ. தகுவிலை - உண்மை விலை ஆ. MV = TV , TV...
அணுகுமுறை என்பது. 9. இறுதிநிலைப் பயன்பாடு பூஜியமாகும் போது , மொத்த பயன்பாடு 10. சமநோக்கு வளைக்கோடு மையத்தை நோக்கி III. பொருத்துக 11. விருப்பங்கள் 12. பொருளாதாரக் கோட்பாடுகள் 13. அதிகபட்ச சமூக நன்மைகள் 14. சமநோக்கு வளைக்கோடு 15. ஆடம்பரப் பண்டங்கள் IV. ஒரிரு வார்த்தையில் விடையளிக்கவும் 16. பயன்பாட்டை வரையறு 17. சம - இறுத...
அ. மார்ஷல் ஆ. ஹிக்ஸ் மற்றும் டால்டன் இ. வைர ஆபரணங்கள் ஈ. விளம்பரங்கள் உ. சாதாரண தரம் பகுதி – ஆ பின்வரும் வினாக்களுக்கு நான்கு அல்லது ஐந்து வரிகளில் விடையளிக்கவும். 21. விருப்பங்களுக்கான காரணங்கள் யாவை ? 22. பண்டங்களின் வகைகள் யாவை ? 23. இறுதிநிலை பயன்பாட்டு விதியின் இலக்கணத்தை வரையறுக்கவும். 24. சமநோக்கு வளைக்கோட்டின் ...
வேறுபடுத்துக. குறைந்து செல் பயன்பாட்டு விதியின் எடுகோள்கள் யாவை ? குறைந்து செல் பயன்பாட்டு விதியின் முக்கியவத்துவத்தை எழுதுக. 27. 28. 29. சம - இறுதி நிலைப் பயன்பாடடின் வரையறைகளை குறிப்பிடுக. 30. சமநோக்கு தொகுப்பு வரைப்படம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக. பகுதி – ஈ பின்வரும் வினாக்களுக்கு மூன்று பக்க அளவில் விடைய...
திறனாய்வுகளை விளக்குக. 34. சமநோக்கு வளைக்கோட்டின் அணுகுமுறைகளை விவரிக்கவும். 35. சமநோக்கு வளைக்கோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக. பாடம் 4 தேவையும் அளிப்பும் ஒரு பொருளுக்கான ‘ தேவை ’ ( Demand ) என்பது - அப்பொருளை வாங்குவதற்கான விருப்பத்தையும் , போதிய வாங்கும் சக்தியையும் , வாங்கிவிட வேண்டும் என்ற முட...
அவரது விருப்பத்தை நிறைவு செய்துக் கொள்ள அவரிடம் போதிய வாங்கும் சக்தி இல்லை. அதே நேரத்தில் ஒரு பணக்காரர் கார் தனக்கு வாங்க வேண்டும் என்று விரும்பும்போது அது தேவை என பொருளியலில் கருதப்படும். ஏனெனில் அவரால் அந்த பொருளின் விலையை ாடுக்க முடியும். இவ்வாறு பொருளுக்கான விருப்பத்தோடு வாங்கும் சக்தியும் பின்புலமாக இருக்கும்போது ...
வருமானம் , அவரது சுவைகள் , தேர்ந்தெடுத்தல் , நுகர்வோரின் செல்வம் , போன்றவைகளாகும். எனவே தேவையைக் கீழ்கண்டவாறு எழுதலாம். Dx = F ( Px , Ps , Y , T , W ) தேவை விதி Dx என்பது X பொருளுக்கான தேவை Px -X பொருளின் விலை Ps- பதிலிகளின் விலை Y வருமானம் T சுவை மற்றும் தேர்ந்தெடுத்தல் W - நுகர்வோனின் செல்வ நிலை ஆகும் விலையும் தேவையு...
நிறைய பண்டங்களை விற்க வேண்டுமாயின் , விலை குறைவாக இருக்க வேண்டும். அவ்வாறு விலையை குறைவாக இருந்தால் தான் அப்பண்டத்தைப் பலரும் வாங்குவர். வேறு விதமாகக் கூறினால் விலை குறைவதால் விலை கூடுவதால் தேவை குறைகிறது " ஃபெர்கூசன் என்பவரின் கூற்றுப்படி “ விலையும் தேவையின் அளவும் எதிர்கணியத் தொடர்பு கொண்டுள்ளன ”. தேவைப்படும் பண்டத்த...
பண்டத்தின் விலையானது OP- யிலிருந்து OP1 ஆக உயரும்போது தேவையின் அளவானது OQ- யிலிருந்து 0Q1 ஆக உயருகிறது. ( எதிர் எதிர்மாறாக ) DD என்பது விதிவிலக்குத் தேவைக்கோடு அல்லது அசாதாரண தேவைக்கோடு எனப்படும். தேவை விதியின் விதிவிலக்குகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ( i ) வெப்ளன் விளைவு தார்ஸ்டின் வெப்ளன் என்னும் பொருளியலறிஞர் , ஒ...
கவர்ச்சிக்காக பெறுமளவில் இப்பொருள்கள் வாங்கப்படுகின்றன. பணக்காரர்கள் வைரங்களின் விலை உயரும்போது , அதிகமாக வைரங்களை வாங்குகின்றனர். அதே சமயம் இவ்வித பொருள்களின் விலை குறையும்போது , அந்த பொருள்களைப் பணக்காரர்கள் வாங்கமாட்டார்கள். கிஃபன் ( Giffen ) முரண்பாடு சர் இராபர்ட் கிஃபன் என்பவர் ஏழை , எளிய மக்கள் கீழ்நிலைப் பண்டங்க...
செழுமையிலிருக்கும்போது குறைந்த அளவில் வாங்கப்படுவதுமாகிய பண்டங்கள் கீழ்நிலைப் பண்டங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஏழை மக்கள் வருமானத்தில் பெரும்பங்கினை உயர்வகையற்ற ( கம்பு , கேழ்வரகு , சோளம் போன்றவை ) தானியங்களை வாங்கவும் , குறைந்த அளவே அரிசி வாங்கவும் செலவிடுகிறார்கள். உயர்வகையற்ற தானியங்களின் விலை உயரும் போது ஏழை மக்கள் ...
வாங்குகிறார்கள். கிஃப்பன் முரண்பாடு என்றழைக்கப்படுகிறது. இவ்வகை முரண்பாடுகள் தேவைவிதிக்கு விதிவிலக்காக உள்ளன. இதுவே Page 74 of 236 09429179 தேவையில் மாற்றம் ( தேவைப் பெருக்கம் , தேவைச் சுருக்கம் ) தேவை வளைக்கோட்டின் நிலையில் எந்தவிதமான மாற்றமும் நிகழவில்லை. ஒரு பொருளின் விலையின் அளவு குறையும் போது , அப்பொருளுக்கான தேவை...
வளைக்கோட்டின் மேலும் கீழுமாக நகர்வதைவே தேவை பெருக்கம் , மற்றும் தேவை சுருக்கம் என கூறுகின்றோம். இதனை வரைப்படம் மூலம் விளக்கலாம். வரைபட விளக்கம் மேலே உள்ள வரைபடத்தில் OP என்பது பொருளின் விலை QQ என்பது தேவை அளவு. விலையானது OP2 அளவு குறையும்போது , தேவையின் அளவு 0Q2 அளவாக அதிகரிக்கிறது. இது தேவையின் பெருக்கம் எனப்படும். மா...
என்ற பொருளாதார எடுகோளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த மற்றவை என்ற சொல்லானது வருமானம் , சுவை , மக்கள் தொகை , அரசின் கொள்கைகள் , தொழில்நுட்பம் , விலையோடு தொடர்புடைய மற்ற காரணிகளை குறிக்கும். இவ்விதமான காரணிகளின் மூலம் ஏற்படும் மாற்றம் தேவையில் உயர்வு , தேவையில் குறைவை ஏற்படுத்துகிறது இதனை படம் 4.5 - ல் காணலாம். 3. பதி...
தேனீரின் விலை மாறாமல் இருப்பதால் மக்கள் தேனிரை அதிகமாக விரும்பி வாங்குவதால் , காப்பியின் தேவை குறைகிறது. பதலீட்டுப் பண்டத்திற்கான தேவைகள் எதிர்மாறாக செயல்படுகிறது. 4. நுகர்வோரின் எண்ணிக்கை ஒரு நாட்டின் மக்கள் தொகையானது தேவையை தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணி ( எ.கா. ) பெருமளவு மக்கள் தொகை , உணவு வகைகள் , தானிய வகைகள் ப...
விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பினால் , ஒரு நுகர்வோர் தற்காலத்தில் அதிகம் பொருள்களை வாங்க முற்படுவார். ஒரு வேளை விலை குறைப்பை எதிர்பார்த்தால் , தற்போதைய அவரது தேவையை குறைத்தக் கொள்வார். 6. வருமான பகிர்வு வருமான பகிர்வு நுகர்வுத் தன்மையை மாற்றி அமைக்கிறது. எனவே பல்வேறு பண்டங்களின் தேவையானது வருமானப் பகிர்வைப் பொருத்த...
ஒரு பொருளுக்கானத் தேவை கால சிதோஷன நிலைகளுக்கேற்ப மாற்றம் பெறும் ( எ.கா. ) கோடைக் காலத்தில் குளிர் பானங்கள் , பருத்தி ஆடைகள் மற்றும் குளிர் சாதனப் பெட்டிகளின் தேவை உயரும். ஆனால் குளிர் காலத்தில் கம்பளி ஆடைகளுக்கான தேவை உயரும். 8. வாணிப நிலை செயல்பாடுகள் மிக செழிப்பாக பண்டங்கள் , வாணிப இருக்கும்போது , பணிகளுக்கானத் தேவை ...
குறைந்தால் நுகர்வோர் அப்பொருள்களுக்கு புதிய பயன்பாடுகளை கண்டுபிடித்து விடுகிறார்கள். எனவே இப்பொருட்களக்கான புதிய தேவை உருவாகின்றது. தேவை நெகிழ்ச்சி ( Elasticity of Demand ) தேவை விதியானது , விலை மாற்றத்தினால் தேவை மாறுகிறது என்று விளக்கியது. ஆனால் விலை மாற்றத்தின் விளைவாக , தேவையில் ஏற்படுகின்ற மாற்றத்தின் அளவினை அளவிட...
குறிப்பிட்ட விலை உயர்வு காரணமாக அங்காடியில் ஒரு பண்டத்திற்கானத் தேவை அதிகமாக , அல்லது குறைவாக மாறுவதை தேவை நெகிழ்ச்சி மிகையானது , அல்லது குறைவானது எனலாம் ” என கூறுகிறார். தேவை நெகிழ்ச்சியின் வகைகள் தேவை நெகிழ்ச்சியை 3 வகையாக பிரிக்கலாம் அ. விலைத் தேவை நெகிழ்ச்சி ஆ. வருமான தேவை நெகிழ்ச்சி குறுக்கு தேவை நெகிழ்ச்சி ( அ ) ...
தோன்றும் மாற்றத்தின் அப்பண்டத்தின் விலைமாற்ற விழுக்காட்டால் வகுக்க கிடைக்கும் ஈவு விழுக்காட்டினை , விலைத் தேவை நெகிழ்ச்சி என்கிறோம். இதனை கீழ்காணும் சமன் பாட்டால் விளக்கலாம். விலைத்தேவை நெகிழ்ச்சி = கணிதக் குறியீடு தேவை மாற்றத்தின் விழுக்காடு பண்டத்தின் விலை மாற்றம் விழுக்காடு முறைகளில் அளவிடப்படுகிறது. 1. விழுக்காட்டு...
மாற்றத்தால் வகுப்பதன் வாயிலாகவும் தேவை நெகிழ்ச்சியை அளவிடலாம். இதன் வாய்ப்பாடு யாதெனில் ( தேவை கோட்டின் EB என்ற பகுதியின் மைய புள்ளியாகிய D யில் ) விலைத் தேவை நெகிழ்ச்சி ‘ C ’ என்ற புள்ளியில் = ep = CB / CA = 3 / 1 = 3 ep > 1 ( தேவை கோட்டின் EA என்ற பகுதியின் மைய புள்ளியாகிய C யில் ) விலைத் தேவை நெகிழ்ச்சி ‘ B ’ என்ற ப...
பூஜ்ஜியத்தால் வகுக்கும் போது அது எல்லையற்று பெருகிச் செல்கிறது ) ஒரு பண்டத்தின் விலை குறையும் போது , அதை நுகரும் நுகர்வோரின் அப்பண்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு அல்லது அதன் மொத்தச் செலவு அதிகரித்தால் அது மிகை நெகிழ்ச்சியுள்ள தேவை எனப்படும். Ep > 1. ஒரு பண்டத்தின் விலை குறையும் போது அதனை நுகர்வோரின் அப்பண்டத்திற்கான மொத்த ...
செலவில் மாற்றம் ஏற்படாதிருந்தால் அது ஒருமைத் தேவை நெகிழ்ச்சி எனப்படும். Ep = 1. இவ்வெவ்வேறான விளைவுகளைக் கீழ்க்காணுமாறு அட்டவணைப் படுத்தலாம். தேவை அளவு X மற்றும் y பண்டங்களுக்கிடையேயான உறவு பதிலீட்டு பண்டங்களான தேனீர் மற்றும் காப்பி போன்றதாகவோ உடனுறு பண்டங்களாகிய பேனா மற்றும் மை போன்றோ இருக்கக்கூடும். இக்குறுக்கு அல்லத...
= x பண்டமும் y பண்டமும் உடனுறுப் பண்டங்களாகும். தேவை நெகிழ்ச்சியை தீர்மானிக்கும் காரணிகள் ஒரு பண்டத்தின் தேவை நெகிழ்ச்சியை கீழ்காணும் காரணிகள் தீர்மானிக்கின்றன. 1.பண்டத்தின் தன்மை 2. பண்டங்களின் பயன்படும் அளவு 3. பதிலீட்டுப் பண்டங்கள் இருத்தல் 5. தேவையை தள்ளிப்போடுதல் 5. செலவிடப்படும் பணத்தின் அளவு 6. பழக்கங்கள் 7. பொர...
பல்வேறு சந்தைகளில் நிர்ணயிப்பார். இந்த விலைப் பாகுப்பாடு விலைத்தேவை நெகிழ்ச்சியால் உண்டாவதாகும். 2. வரி விதிப்பு தேவை நெகிழ்வற்ற பண்டங்கள் மீது வரி விதித்தால் அது அரசுக்கு அதிக வருவாய் பெற்றுத் தரும். அதற்கு மாறாக அதிக நெகிழ்ச்சியுள்ள பண்டங்கள் மீது வரி விதித்தால் அரசுக்கு குறைவான வருவாய் கிடைக்கும். 3. அயல்நாடு வாணிபம...
வாணிப நிலை நிலவ வேண்டுமானால் , அந்நாட்டின் ஏற்றுமதிகளுக்கு நெகிழ்ச்சி அற்ற தேவை இருக்க வேண்டும். 4. உற்பத்தி அளவினைத் தீர்மானித்தல் பொருட்களின் தேவைக்கு ஏற்ப பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்ய வேண்டும். தேவை நெகிழ்ச்சியற்றாக இருக்கும்போது உற்பத்தியாளன் அதிக விலை பெற்றுக் கொள்ளுதலைப் பயன்படுத்தி தன் உற்பத்தியை அதிக...
நெகிழ்ச்சியற்றதாக இருந்தால் , தொழிற் சங்கங்கள் கூலி விகிதத்தை உயர்த்தும் அவர்களது முயற்சியில் வெற்றி அடைவர். அதற்கு மாறாக உழைப்பாளர்களுக்கான தேவை நெகிழ்ச்சியுடையதாக இருந்தால் கூலி விகிதத்தை உயர்த்தக் கோரும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் வெற்றிகான இயலாது. 6. செழிப்பில் ஏழ்மை விளக்கம் தேவை நெகிழ்ச்சியானது செழிப்பில் ‘ ஏழ்மை ...
நெகிழ்ச்சி அற்றதாக இருப்பின் விவசாயிகள் தங்கள் பயிர் வகைகளுக்கு நல்ல விலை கிடைக்காத காரணத்தால் ( விலை குறைப்பினால் ) பெரும் இழப்பிற்கு ஆளாவார்கள். அளிப்பு விதி ( LAW OF SUPPLY ) ஒரு குறிப்பிட்ட காலத்தில் , குறிப்பிட்ட விலையில் விற்பனை செய்யப்படும் பண்டங்களின் அளவே அளிப்பு எனப் பொருள்படும். ஒரு உற்பத்தியாளன் தான் உற்பத்...
முன்வருகிறான் என்பதை குறிக்கும். அளிப்பு விதியானது , விலைக்கும் , அளிப்புக்கும் உள்ள நேரடியானத் தொடர்பினை விளக்குகின்றது. ஒரு நிறுவனமானது விலை குறையும்போது குறைவாக உற்பத்தி செய்கிறது. அதே சமயம் விலை உயரும் போது , அதிகமான அளவில் உற்பத்தியை மேற்கொள்கிறது. “ மற்றவை மாறாத நிலையில் , ஒரு பண்டத்தின் விலை உயர்வால் அளிப்பானது ...
அளிக்கப்படுவதை காட்டும் அட்டவணையே அளிப்பு பட்டியலாகும். அளிப்பு அட்டவணை மூலம் , அளிப்புக் கோட்டை வரையலாம். தனிநபர் அளிப்பு அட்டவணை மற்றும் அளிப்புக்கோடு தனிநபர் அளிப்பு பட்டியல் என்பது விலைகள் மற்றும் விற்கப்படும் பண்டங்களின் அளவினை காட்டுகின்றது. அளிப்பு அட்டவணை 4.7 கீழ்காணும் பட்டியலின் மூலம் அளிப்பின் விதியை விளக்கல...
அதிகரிப்பினால் உற்பத்தியாளர் தனக்கு தேவையான பொருள் உற்பத்தி செய்ய முற்படுவார். இதன் விளைவாக முதன்மை பொருளின் அளிப்பு குறையும். 4. உற்பத்தியாளர் ( அ ) நிறுவனங்களின் எண்ணிக்கை நிறைய உற்பத்தியாளர்கள் தங்களுடைய உற்பத்தியின் அளவினை அதிகரிக்கும்போது , அங்காடியில் பொருள்களின் உற்பத்தி அளவில் அதிகரிப்பு ஏற்படும். 5. வருங்கால வ...
மற்றும் சலுகைகள் அரசின் வரிகள் உற்பத்திபண்டங்களின் மீது சுமத்தப்படும்போது , உற்பத்தி செலவு அதிகரிக்கும். இதன் மூலம் அளிப்பின் அளவு குறையும். ஆதே சமயம் அரசின் சலுகைகள் உற்பத்தியாளருக்கு கொடுக்கப்படும் போது , அவர்களது உற்பத்தியின் அளவானது அதிகரிக்கும். சலுகைகள் என்பது பண்டங்களின் செலவில் ஒரு பகுதியை அரசே ஏற்றுக் கொள்வதாக...
( Elasticity of Supply ) அளிப்பு விதியானது , அளிப்பின் அளவு , விலையின் மாற்றத்தை பொறுத்துள்ளது என கூறுகிறது. அளிப்பு நெகிர்ச்சி என்பது விலையில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாக அளிப்பின் அளவில் ஏற்படும் மாற்றம் என்று கூறலாம். கீழ்காணும் வாய்ப்பாட்டின் மூலம் அளிப்பு நெகிழ்ச்சியை அளவிடலாம். அளிப்பு நெகிழ்ச்சி = அளிப்பின் அளவ...
1. உற்பத்தி செலவின் மாற்றம் 2. உற்பத்தியாளர்களின் பழக்க , வழக்கங்கள் 3. உற்பத்தியை பெருக்க , கிடைக்கக்கூடிய வசதிகள் , வாய்ப்புகள் 4. குறுகிய மற்றும் நீண்டகால அளிப்பு. பயிற்சி பகுதி – அ சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் பண்டத்திற்கான தேவை இதனைச் சார்ந்தது அ. பண்டத்தின் விலை இ. வருமானம் தேவை விதி உணர்த்துவது அ. விலை , பண...
தேவை வளைக்கோடு இடம் பெயர்வது ஆ. ஒரே தேவை வளைக்கோட்டில் நகர்ந்து செல்லுதல் இ. தேவை வளைக்கோட்டின் உச்சபுள்ளி ஈ. தேவை வளைக்கோட்டின் கீழ் புள்ளி விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப தேவையின் மாற்றத்தை தோற்றுவிக்கும் அளவு அ. வருமான தேவை நெகிழ்ச்சி இ. விலை தேவை நெகிழ்ச்சி ஆ. குறுக்கு தேவை நெகிழ்ச்சி ஈ. மேற்கூரிய அனைத்தும் அள...
சேர்க்கும் போது. 8. சமுதாய அந்தஸ்துக்காக தேவைப்படும் பண்டங்கள் 9. தேவை நெகிழ்ச்சி என்ற கருத்தை அறிமுகப்படுத்தியவர் விலை மாற்றத்தால் ஏற்படும் , அளிப்பு மாற்ற வீதம் 10. III. பொருத்துக 11. விலை , தேவை நேரடியான உறவு தேனீர் மற்றும் காபி இரு புள்ளிகளுக்கிடையே உள்ள பிரிவு Ed > 1 ஆ. உற்பத்தி காரணிகளின் விலைகள் ஈ. மேற்கூரிய அனை...
ஒரிரு வார்த்தைகளில் விடையளிக்கவும் 16. பொருளாதார கோட்பாட்டின் அடிப்படை எடுக்கோள்கள் யாவை ? செழுமையின் போதும் , மந்தத்தின் போதும் தேவை எவ்வாறு மாறுபடுகிறது ? புள்ளி முறையின் வாய்பாடுகள் என்ன ? 19. வருமான தேவை நெகிழ்ச்சி என்றால் என்ன ? 20. உழைப்பின் தேவை நெகிழ்வற்றதாக இருக்கும்போது , ஒரு தொழிற்சங்கம் ஊதியத்தை உயர்த்த முட...
வருகிறது ? 24. கிஃபன் புதிரைப் பற்றி - சிறு குறிப்பு எழுதுக. 25. தேவை நெகிழ்ச்சியின் வகைகள் யாவை ? Page 97 of 236 பகுதி – இ பின்வரும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளிக்கவும். 26. தேவை மாற்றம் , மற்றும் தேவை இடம் பெயர்ச்சியை விளக்குக. 27. தேவை நெகிழ்ச்சியின் வகைகளை விவரி. 28. தேவை நெகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை கூ...
விடையளிக்கவும். 31. தேவை விதியினை விவரமாக எழுதுக. 32. விலைத் தேவை நெகிழ்ச்சியினை அளவிடும் முறைகளை விவரமாக எழுதுக. விலை பண்டங்களின் அளவு அளிப்பு தேவை சமநிலை விலை மிகைத் தேவை மிகை அளிப்பு PE D > S S > D மேற்கண்ட படம் ( 5.1 ) சமநிலைவிலையை விளக்குகிறது. PE என்பது சமநிலைவிலை PE என்னும் விலையில் தேவையின் அளவும் அளிப்பின் அளவ...
விலைக்கும் மேல் உள்ள எந்த விலையிலும் ( P ஐ ) அளிப்பானது தேவையைவிட அதிகம் ( S > D ). ஆகவே , மிகை அளிப்பு காணப்படுகிறது. விலை உயர்வாக இருக்கும்பொழுது வாங்குபவர்கள் குறைவாக வாங்க விரும்புவர். ஆனால் விற்பவர்கள் அதிகம் விற்க விரும்புவர். இது சந்தையில் மிகை அளிப்பை தோற்றுவிக்கும். இது அளிப்புக்கும் தேவைக்கும் இடையே உள்ள வேறு...