text stringlengths 11 513 |
|---|
விலையின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. இயல்புகளும் , நிபந்தனைகளும். 1. எண்ணற்ற வாங்குவோர் , விற்போர் இவ்வகை அங்காடியில் வாங்குவோரும் விற்போரும் எண்ணற்ற அளவில் உள்ளனர். இங்கு விலையின் மீது எவரும் ஆதிக்கம் செலுத்த முடியாது. விலையானது அங்காடியின் இரண்டு சக்திகளாகிய தேவை மற்றும் அளிப்பினால் தீர்மானிக்கப்படுகிறது. இங்கு ஒ... |
ஏற்பவராக இருக்கிறார். 2. ஒத்த தன்மையுடைய பண்டங்கள் எல்லா விற்பனையாளர்களும் , உற்பத்தி செய்யப்படும் அனைத்து பண்டங்களும் ஒத்தாக , ஒருமை தன்மையும் , தரமும் கொண்டவையாக இருக்க வேண்டும். அதாவது பொருளின் தரம் , அளவு , சுவை ஒரேத் தன்மையுடையதாக இருத்தல் வேண்டும். அந்நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பண்டங்கள் ஒன்றுக்கொன்று முழுமையா... |
விலையை அளிக்கவோ ( அல்லது ) விற்பனையாளர் குறைந்த விலையைப் பெற்றுக் கொள்ளவோ மாட்டார்கள். 4. உட்புகுதலும் , வெளியேறுதலும் – தடையில்லை தொழில்சாலைக்குள் புதிய நிறுவனங்கள் உட்புகுதலுக்கும் , இருக்கின்ற நிறுவனங்கள் , வெளியேறுதலுக்கும் தடையேதுமில்லை. அதிக லாபம் பெறும் வாய்ப்பு இருக்கும்போது புது நிறுவனங்கள் உற்பத்தி செய்ய உள்ள... |
ஏனெனில் குறுகிய காலத்தில் தொழில் நிறுவனங்களின் அளவினை மாற்ற இயலாது. 5. உற்பத்தி காரணிகள் இடம் பெயரும் உற்பத்திக் காரணிகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மிகவும் எளிதாக இடம் பெயறுகின்றன. அதிகமான வருமானம் கிடைக்கும்போது ஒரு தொழிற்சாலையிலிருந்து மற்றொரு தொழிற்சாலைக்கு இடம் மாறும். 6. போக்குவரத்து செலவு இல்லை அங்காடி ... |
மந்தன கூட்டின்மை உற்பத்தி மற்றும் விலையை , அரசு தலையிட்டு கட்டுப்படுத்த இயலாது. நுகர்வோர் , விற்போரிடையே கூட்டுத்தன்மை இல்லை. அங்காடியில் நிலவும் விலையானது தேவை , அளிப்புக்கு ஏற்ப தானாகவே மாற்றிக் கொள்ளும். வருவாய் வளைக்கோட்டின் தன்மை நிறைவுப்போட்டியில் அங்காடி விலையானது தேவை , அளிப்பு ஆகிய இரண்டு அங்காடி சக்திகளால் தீ... |
நெகிழ்ச்சியுடையது. ஆகவே சராசரி வளைகோடானாது X அச்சிக்கு இணையாக அமைந்துள்ளது. சராசரி வருவாய் வளைக்கோடு நிலையாக இருப்பதால் இறுதிநிலை வருவாய் வளைக்கோடு நிலையானதாகவும் , சராசரி வருவாய் வளைவுக் கோட்டோடு இணைந்து செல்கிறது. சராசரி வருவாய் வளைக்கோடு நிறுவனத்தின் தேவைக்கோட்டை குறிக்கிறது. நிறைவுப் போட்டியில் குறுகிய காலத்தில் வி... |
உற்பத்தியாளனுக்கும் உச்ச இலாபம் அடைவதே அவனது நோக்கமாகும். குறுகிய காலத்தில் நிறுவனத்தின் எண்ணிக்கை மற்றும் தொழிற்சாலையின் அளவு மாறாமல் இருக்கும். இக்காலத்தில் மாறும் உள்ளீடுகளை பெருக்கி நிறுவனம் அதிகமாக உற்பத்தி செய்யும். குறுகிய காலத்தில் புதிய நிறுவனங்கள் உள்ளே நுழைவதோ அல்லது பழைய நிறுவனங்கள் வெளியேறுவதோ சாத்தியமில்ல... |
கூடுதலாகும் போது அந்நிறுவனம் உச்ச இலாபத்தை அடைகிறது. இதனை பின்வரும் வரைபடம் 8.1 மூலம் விளக்கலாம். வருவாய் , விலை மற்றும் செலவு வரைப்படம் 8.1 ல் உற்பத்தி x அச்சிலும் , விலை / வருவாய் / செலவு y அச்சிலும் குறிக்கப்பட்டுள்ளது. OP என்பது அங்காடியில் நிலவும் விலையாகும். PL என்பது சராசரி வருவாய் அல்லது தேவை வளைகோடு மற்றும் இற... |
வளைக்கோடு , இறுதிநிலை வருவாய் கோட்டை கீழிருந்து அடிமட்ட புள்ளியில் வெட்டுகின்றது. இந்நிலையில் அந்நிறுவனம் OM அளவு உற்பத்தியை மேற்கொள்ளும். OM அளவு உற்பத்தியில் , ME என்பது சராசரி வருவாய் , MF என்பது சராசரி செலவாகும். இலாபம் என்பது வருவாய்க்கும் செலவுக்கும் உள்ள வேறுபாடு ( ME - MF = FE ) ஒரு பொருளுக்கான இலாப என்பது FE ஆ... |
உற்பத்தி ( Total Profit ) = ( E , F , ) x ( O.M. or HF ) ( மொத்த உற்பத்தி ) ( HF , OM ற்கு இணையானது ) இங்கு மொத்த இலாபமானது HFEP. அதாவது கோடிட்டுள்ள செவ்வகப் பகுதியாகும். HFEP என்பது நிறுவனம் ஈட்டும் உச்ச இலாபமாகும். நீண்ட காலத்தில் விலை , பண்டத்தின் உற்பத்தி நிர்ணயித்தல் நீண்ட காலத்தில் அனைத்துக் காரணிகளும் மாறக் கூடி... |
நிறுவனங்கள் தொழில்சாலையை விட்டு வெளியேறவும் கூடும். இதன் விளைவாக இயக்கத்தில் உள்ள நிறுவனங்களில் , நீண்ட காலத்தில் , இயல்பு இலாபமே Page 444 of 236 கிடைக்கும். இதன் விளைவாக உற்பத்தி பெருகுகிறது. உற்பத்தி பெருக்கத்தின் காரணமாக உற்பத்தி காரணிகளுக்கான தேவை அதிகரிக்கிறது. இதனால் உற்பத்தி காரணிகளுக்கான விலை அதிகரிக்கின்றது. இ... |
எனவே சராசரி விலையில் இறக்கம் ஏற்படுகிறது. சராசரி வருவாய் குறைவும் , சராசரி செலவின் ஏற்றமும் இரண்டும் ஒன்றோடொன்று சமமாகும்வரை அதே நிலை ஏற்படும். இந்நிலையில் அனைத்து நிறுவனங்களும் , நீண்டகாலத்தில் , இயல்பான இலாபத்தையே அடையும். வருவாய் , விலை மற்றும் செலவு வரைப்பட விளக்கம் வரைப்படம் 8.2 ல் நீண்டகால சமநிலை விளக்கப்பட்டுள்ள... |
' என்பது நீண்டகால சமநிலை உற்பத்தி. அந்நிறுவனம் இயல்பு இலாபத்தையே பெறுகிறது. OP என்பது சமநிலை விலையாகும். நிறுவனத்தின் விலை OP- யை விட அதிகரிக்கும்போது உச்ச இலாபம் கிடைப்பதனால் புதிய நிறுவனங்கள் கவரப்படுகின்றன. ஆனால் , OP யைவிட விலை குறையும்போது , நிறுவனம் இழப்பு அடைவதால் ஏற்கனவே உள்ள சில நிறுவனங்கள் தொழிலில் இருந்து வி... |
அடையும். போட்டியிடும் நிறுவனங்கள் நீண்ட கால சராசரி வளைகோட்டின் ( LAC ) அடிமட்ட புள்ளியிலேயே சமநிலைப் பெறும். இந்த புள்ளியில் அந்நிறுவனமானது ON அளவு உற்பத்த செய்ய மிக குறைந்த பட்ச செலவினங்களையே மேற்கொள்கிறது. நிறைவுப் போட்டியின் நன்மைகள் 1. நிறைவுப் போட்டியில் நுகர்வோரே அரசராவார். அந்நுகர்வோர் பகுத்தாயும் திறன் படைத்தவர... |
பயனடைகின்றார். பண்டங்கள் ஒருமை தன்மையானதாக உள்ளதால் அங்காடியில் உருவாகும் விலையை ஏற்று கொள்வதாக நிறுவனம் உள்ளது. இதனால் விற்பனையை உயர்த்த விளம்பரமோ , பிற செலவுகளோ எதிர்கொள்ள வேண்டியதில்லை. இதனால் வளங்கள் வீணாவதை தடுக்க முடிகிறது. நீண்ட காலத்தில் நிறைவுப்போட்டியில் ஒரு நிறுவனம் உத்தம நிலையில் செயல்படுகிறது. இதனால் , உற்... |
விற்பனை செய்தால் அது முற்றுரிமை எனப்படும். இந்த உற்பத்தி பண்டத்திற்கு மிகவும் நெருக்கமான பதிலீட்டுப் பண்டங்கள் இல்லை. இதனால் புதிய நிறுவனங்கள் உள்ளே நுழைவதற்கு தடைகள் உள்ளன முற்றுரிமையின் இயல்புகள் பண்புகள் 1. ஒரே விற்பனையாளர் இங்கு ஒரே ஒரு விற்பனையாளர் இருப்பதால் அவர் பொருளின் அளிப்பை ( அல்லது ) விலையை கட்டுப்படுத்த ம... |
பண்டங்கள் முற்றுரிமையில் இல்லை. இதனால் வாங்குபவருக்கு தெரிவுச் செய்யும் வாய்ப்பு இல்லை. இதனால் விற்கப்படும் பண்டத்தை அவர் வாங்கவேண்டும் ( அல்லது ) வாங்காமல் இருக்க வேண்டும். 3. விலை முற்றுரிமையாளர் அளிப்பைக் கட்டுபடுத்தி விலையை உயர்த்துகிறார். சில நேரங்களில் விலைபேத உத்தியை கையாளுகிறார். பல்வேறு வகை நுகர்வோருக்கு , பல்... |
பெற்றுள்ளதால் பிற உற்பத்தியாளர்கள் அங்காடியில் நுழைவதற்கு வாய்ப்பில்லை. காரணம் தடைகள் பெரியதாகவும் வலிமையுள்ளதாகவும் உள்ளதால் தொழிலில் புகுவதை தடுக்க சட்டங்கள் , தொழில்நுட்பம் , பொருளாதார மற்றும் இயற்கை தடைகள் போன்றவை ஏராளமாக உள்ளது. 5. நிறுவனம் , தொழிற்சாலை முற்றுரிமையில் நிறுவனத்திற்கும் , தொழிற்சாலைக்கும் வேறுபாடு இ... |
தேவை நெகிழ்ச்சி , பூஜ்ஜியமாக உள்ளது. முற்றுரிமைக்கான காரணங்கள் 1. இயற்கை சில இயற்கை காரணங்களால் முற்றுரிமை தோன்றுகின்றது. சில புவி அமைப்பு பகுதிகளில்தான் சில கணிம வளங்கள் கிடைக்கின்றன. ( எ.கா. ) வைர உற்பத்தியில் தென் ஆப்பிரிக்கா முற்றுரிமை பெறுகிறது. நிக்கல் உற்பத்தியில் கனடாவும் , எண்ணெய் உற்பத்தியில் மத்திய கிழக்கு ந... |
, அறிவியல் இரகசியங்கள் மற்றும் சூழ்ச்சி முறைகள் போன்றவற்றின் மீது ஒரு நிறுவனம் கொண்டுள்ள கட்டுப்பாடு முற்றுரிமை நிறுவனத்திற்கு ஆற்றலை பெற்று தருகிறது. ( எ.கா. ) கொக்கோ கோலா பொருளை வடிவமைக்கும் உரிமை , வணிக வழக்காற்றும் பெயர் , வணிக உரிமை அடையாளங்கள் வாயிலாக உற்பத்தியாளருக்கு முற்றுரிமை சக்தி கிடைக்கின்றது. இது சட்ட முற... |
முதலீடு என்பது முற்றுரிமை தோன்ற வாய்ப்பளிக்கிறது. ( எ.கா. ) இரும்பு எஃகு தொழிற்சாலை , இருப்புப் பாதை சில பண்டங்களை உற்பத்தி செய்து , விற்கும் தனிப்பட்ட உரிமை அரசு மட்டுமே பெற்றுள்ளது. இந்த உரிமை அரசின் முற்றுரிமை எனப்படுகிறது. ( எ.கா. ) மின்சார உற்பத்தி , இருப்புப் பாதை , போக்குவரத்து , சமையல் எரிவாயு முதலியன பொது பயன்... |
வளைக்கோட்டை எதிர்கொள்கின்றது. இது அந்நிறுவனத்தின் சராசரி வருவாய் வளைக்கோடாகும். விலையை குறைத்தால் மட்டுமே ஒரு முற்றுரிமையாளர் அதிகம் விற்கமுடியும் என்பதை தேவை வளைக்கோடு தெரிவிக்கிறது. இறுதிநிலை வருவாய் வளைகோடு , சராசரி வருவாய் வளைகோட்டிற்குக் கீழே அமைந்துள்ளது. முற்றுரிமை நிறுவனத்தின் சராசரி செலவு வளைக்கோடு ‘ U ’ வடிவத... |
MR ) கீழ் இருந்து மேல்நோக்கி செல்லும் போது அடி மட்டத்தில் வெட்டுகின்றது. செலவு மற்றும் வருவாய் வரைபட விளக்கம் மேற்காணும் வரைபடம் 8.3 ல் AR என்பது சராசரி வருவாய் வளைக்கோடாகும். MR என்பது இறுதிநிலை வருவாய் வளைக்கோடாகும். சராசரி வருவாய் வளைக்கோடு AR கீழ்நோக்கி செல்கிறது. இறுதிநிலை வருவாய் வளைக்கோடும் கீழ்நோக்கி செல்கிறது.... |
உற்பத்தி செய்து , OP அளவு விலையை நிர்ணயிக்கிறான். இந்த OM அளவு உற்பத்தியில் சராசரி வருவாய் MS ஆகவும் சராசரி செலவு MT ஆகவும் எற்படுகிறது. ஒரு பொருளுக்கான இலாபம் என்பது சராசரி வருவாய்க்கும் , சராசரி செலவுக்கும் உள்ள வேறுபாடாகும். ஆகவே MS- • என்பது சராசரி வருவாய் MT – என்பது சராசரி செலவு ஒரு பொருளுக்கான இலாபம் என்பது MS –... |
கோடிடப்பட்ட செவ்வக பகுதியே நிறுவனத்தின் இலாபமாகும். மேலும் முற்றுரிமையாளரின் விலையானது இறுதி நிலை வருவாய் , மற்றும் இறுதிநிலை செலவைவிட அதிகமாக உள்ளது. முற்றுரிமையின் பயன்கள் 1. முற்றுரிமை நிறுவனங்கள் பேரளவு உற்பத்தி வாய்ப்பு பெற்றுள்ளதால் , அகச் சிக்கனங்களும் , புறச்சிக்கனங்களும் தோன்றியுள்ளன. இதன் விளைவாக உற்பத்தி செல... |
முற்றுரிமையாக உருவாகி போட்டியை எதிர்கொள்ளலாம். இதன் மூலம் அங்காடி விரிவடையும். முற்றுரிமை நிறுவனங்கள் அதிக நிதிவசதிக் கொண்டவையாக இருப்பதனால் ஆராய்ச்சி , வளர்ச்சி மற்றும் புத்தாக்கம் புனைவதற்கு உதவுகிறது. முற்றுரிமையின் தீமைகள் 1. முற்றுரிமையாளர் எப்போதும் அதிக விலையையே நிர்ணயிக்கின்றனர். இதனால் நுகர்வோர் சுரண்டப்படுகிற... |
செயற்கை கிடைப்பருமையை ’ ( Artificial Scarcity ) உருவாக்குகின்றார். 4. முற்றுரிமையாளர் ஒரே மாதிரியான பண்டங்களுக்கு - வெவ்வேறு நுகர்வோருக்கு , வெவ்வேறு விலை விற்கிறார். விலை பேதம் காட்டி நுகர்வோரின் வாங்கும் திறமையை பொறுத்து அதிகபட்சம் விலையை வசூலிக்கின்றார். முற்றுரிமையாளர் பேரளவு உற்பத்தியையும் , அதிக அளவு வளங்களையும் ... |
செல்வம் ( சொத்து ) ஒரு சிலரிடமே குவிந்து காணப்படுகிறது. இது வருமான ஏற்றத்தாழ்விற்கு வழி வகுக்கின்றது. இது பொது உடமை கொள்கைக்கு முரண்பட்டதாகும். முற்றுரிமையை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் 1. சட்டம் இயற்றுதல் : முற்றுரிமையைக் கட்டுப்படுத்த அரசு சட்டங்களை இயற்றலாம். முற்றுரிமை தவிர்ப்பு சட்டங்கள் இயற்றப்பட்டு , முற்றுரிமையி... |
கட்டுப்படுத்துதல் : இயற்கை முற்றுரிமைகளை முறியடிக்க இந்தமுறை கையாளப்படுகிறது. இதனால் விலையையோ , பண்ட அளவையையோ அல்லது இரண்டையுமோ அரசு முடிவுச் செய்யும். வரி விதித்தல் : முற்றுரிமையின் சக்தியை குறைப்பதற்கோ , தடுப்பதற்கோ வரி விதித்தலும் கூட ஒரு கட்டுபடுத்தும் முறையாகும். முற்றுரிமையாளர் மீது அரசு கணிசமான தொகையை வரியாக வித... |
ஏற்று நடத்தலாம். 5. நுகர்வோர் சங்கங்கள் : நுகர்வோர் சங்கங்களை அமைக்க ஊக்குவிப்பதன் வாயிலாக நுகர்வோரது பேரசக்தியை அதிகப்படுத்தி அவரது உரிமையை பாதுகாத்து முற்றுரிமை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். முற்றுரிமை நிறைவுப் போட்டி - ஒப்புமை இரண்டு அங்காடிகளுமே அதிகபட்ச இலாபம் ஈட்டுவதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இரண்டு அங்க... |
சராசரி வருவாய் வளைக்கோடு ( AR ) சராசரி வருவாய் வளைக்கோடும் இறுதிநிலை X அச்சுக்கு இணையான படுக்கைக் வருவாய் வளைக்கோடும் கீழ்நோக்கி சரிந்து கோடாக அமைந்துள்ளது. இங்கு செல்கின்றன. இறுதிநிலை வருவாய் , இறுதிநிலை வருவாயும் ( MR ) , சராசரி சராசரி வருவாய் மற்றும் விலையைவிட கீழ் வருவாயும் விலைக்கு சமமாக இருக்கும். மட்டத்தில் உள்ள... |
இறுதிநிலை வருவாய் , சராசரி விலைக்கு சமமாகவும் அமைந்துள்ளது. வருவாயாகிய விலையைவிட குறைவாக ஆகவே விலை , இறுதிநிலை உற்பத்தி உள்ளது. அதாவது MC = MR < AR செலவுக்கு சமமாக உள்ளது. விலையானது , இறுதி நிலை செலவைவிட | அதிகமாக உள்ளது. 3. நிறைவுப் போட்டியில் ஒரு நிறுவனம் , முற்றுரிமையில் , ஒரு நிறுவனம் நீண்டகால நீண்டகாலத்தில் சமநிலை... |
உற்பத்தி செலவு அதிகரிக்கும்போது குறையும் போதும் , நிலையானதாக இருக்கும் மட்டுமே அடைய முடியுமே அன்றி செலவு போதும் அடையலாம். குறையும் போதோ நிலையானதாக இருக்கும் போதோ அல்ல. 5. நிறைவுப் போட்டியில் நிறுவனம் இயல்பு உச்ச இலாபமானது , குறுகிய காலத்திலும் இலாபத்தை நீண்ட காலத்தில் அடையும். மற்றும் நீண்ட காலத்திலும் அடையும். உச்ச இல... |
என்றும் வழங்கப்படுகிறது. ஒரு முற்றுரிமையாளர் ஒரே பண்டத்தை பல்வேறு நுகர்வோருக்கு பல்வேறு விலைகளில் விற்கிறார். இந்த செயலுக்கு விலைபேதம் காட்டுதல் என்று பெயர். இலக்கணம் தொழில்நுட்ப அடிப்படையில் , ஒரேத் தன்மை உடைய பண்டத்தை அதன் இறுதிநிலை செலவினைவிட , கூடுதலான விலையில் விற்பதே விலைபேதம் என்றும் கூறலாம். ( எ.கா. ) ஒரே திரைப... |
பேதம் ஏற்படும். 1. தேவையை , விலை அதிகமான அங்காடியிலிருந்து விலை குறைவான அங்காடிக்கு மாற்ற இயலாது செல்வந்தர்கள் , அதிக விலையுள்ள ஆடம்பரமான புத்தகப் பதிப்பை வாங்காமல் பிரபலமான குறைந்த விலையுள்ள புத்தகப் பதிப்பு வெளிவரும் வரை காத்திருப்பார்களானால் தனியார் பேதம் காட்டுதல் தோல்வியடையும். 2. முற்றுரிமையாளர் இரண்டு அங்காடிகளை... |
அங்காடியில் பொருட்களை விற்க முடியுமானால் , ஒரு பண்டத்திற்கு இரு விலைகள் இருப்பதற்கு வாய்ப்பில்லை. தொழில் அதிபர் அவருக்கு கிடைக்கும் மலிவான மின்சாரத்தை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தினால் , வாணிக பேதம் காட்டுதல் தோல்வியடையும். முற்றுரிமை போட்டி பேராசிரியர் E.H. சேம்பர்லின் என்பவர் முற்றுரிமை போட்டியினை அறிமுகப்படுத்தின... |
தன்மையுடையன அல்ல. ஆனால் அவை ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் பண்டங்களாகும். முற்றுரிமை போட்டிக்கு எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு : 1. ஷாம்பூ - சன்சில்க் , கிளினிக் பிளஸ் , பான்ஸ் , சிக் , வெல்வட் , ஹெட் அண்டு ஹோல்டர் , பாண்டீன் , வாட்டிகா , மீரா , கார்னியர் 2. பற்பசைகள் கோல்கேட் , குளோசப் , பினாகா , ப்ராமிஸ் , பெப்சோடன்ட் ,... |
நிறுவனங்களின் செயல்பாட்டில் அக்கறைக் காட்டாமல் தனித்து செயல்படும். அவைகள் உற்பத்தியளவு , விலை போன்றவற்றை தாமே தீர்மானிக்கின்றன. ஒரு நிறுவனத்தின் செயல்பாடு மற்ற நிறுவனங்களின் செயல்பாட்டினை பாதிக்காது. 2. பண்ட வேறுபாடு பண்டங்களை வேறுபடுத்துவது முற்றுரிமை போட்டியின் மையக்கருத்தாகும். நிறுவனங்களின் பண்டங்கள் ஒன்றுபோல் தோன்... |
பினாகா , கோல்கேட் குளோசப் மற்றும் பெப்சோடன்ட் பண்ட வேறுபாடானது அ ) பொருள் வேறுபாடு ஆ ) தர வேறுபாடு இ ) கற்பனை வேறுபாடு ஈ ) வாங்குவோர் நல வேறுபாடு எனப் பலவகைகளில் கையாளப்படலாம் வேலைத்திறன் மற்றும் நீண்ட நாள் பயன்படுத்தும் திறன் இவற்றின் வேறுபாடுகள் கூட பண்ட வேறுபாட்டினை ஏற்படுத்தும். சில நேரங்களில் நுகர்வோருக்கு செலவற்ற... |
விற்பனைச் செலவுகளை மேற்கொண்டு அதன்மூலம் தங்கள் பண்டம் வேறொரு நிறுவனத்தின் பண்டத்தினை விட உயர்ந்தது எனக் காட்டிக் கொள்ளும். விளம்பரச் செலவுகள் மிகவும் குறிப்பிடத்தக்க அடிப்படையான விற்பனைச் செலவாகும். 3. விற்பனைச் செலவு முற்றுரிமைப் போட்டியில் தனது பண்டத்தை பரவலாக்குவதற்காகவும் , புதிய நுகர்வோரைக் கவரும் வண்ணமும் உற்பத்த... |
வளைகோட்டின் வடிவத்தை மாற்றி அமைக்க செலவிடும் பணத்தின் அளவே விற்பனைச் செலவாகும் " என்கிறார். விற்பனைச் செலவானது விளம்பரச் செலவு , காட்சிப் பொருள் அமைத்தல் , பண்டங்களின் மாதிரிகளை அளித்தல் போன்ற பல்வேறு வடிவங்களில் அமைந்திருக்கும். விளம்பரம் மூலம் விற்பனையை அதிகரிப்பது விலை தவிர்த்த போட்டி ஆகும். 4. நிறுவனங்கள் உட்புகுதல... |
நிறுவனம் எளிதில் தயாரிக்க இயலும். இங்கு எந்தவித தடைகளும் இல்லை. முற்றுரிமைப் போட்டியில் சமநிலை விலை மற்றம் பண்ட அளவை நிர்ணயித்தல். முற்றுரிமைப் போட்டியில் நிறுவனம் சமநிலை அடைய இறுதிநிலை வருவாயும் , இறுதிநிலை செலவும் சமமாக இருத்தல் வேண்டும். அதாவது E = MR = MC முற்றுரிமை போட்டியில் ஒவ்வொரு நிறுவனமும் எந்த ஒரு விலையில் ,... |
வருவாய் உற்பத்தி வரைபடம் விளக்கம் மேற்கண்ட வரைபடத்தில MC , AC என்பன குறுகியகால இறுதிநிலைச் செலவு மற்றும் சராசரி செலவு வளைகோடுகளாகும். AR என்கிற சராசரி வருவாய் வளைக்கோடும் , MR என்கிற இறுதிநிலை வருவாய் வளைகோடும் கீழ்நோக்கி சரிந்து செல்கிறது. E என்ற சமநிலை புள்ளியில் MR = MC ஆக அமையும். இங்கு OM என்பது சமநிலை உற்பத்தியளவ... |
செலவு. அதாவது QM- MS = SQ. SQ என்பது ஒரு பொருளுக்கான இலாபமாகும். இந்த ஒரு பொருளுக்கான இலாபத்தை OM என்ற பண்ட உற்பத்தியின் அளவினால் பெருக்கினால் அந்நிறுவனத்திற்கு PQSR என்ற கோடிடப்பட்ட செவ்வக வடிவலான இலாபம் கிடைக்கும். இவ்வாறாகக் குறுகிய காலத்தில் அந்நிறுவனம் OM அளவு உற்பத்தி செய்து அவற்றை OP விலைக்கு விற்று அதிகபட்ச இலா... |
நீண்டகாலத்தில் தொழிற்சாலையில் உள்ள நிறுவனங்கள் உச்ச இலாபத்தை ஈட்டினால் புதிய நிறுவனங்கள் தொழிலில் நுழைந்து , இலாப அளவை குறைக்கும். சராசரி வருவாய் இதனால் குறையும். உற்பத்தி காரணிகளின் தேவை அதிகரிப்பானது உற்பத்தி செலவை அதிகரிக்கும். எனவே இலாபத்தின் அளவும் குறைந்துவிடும். நீண்ட காலத்தில் Page 149 of 236 தொழிற்சாலைக்குள் இ... |
விலை குறைய நேரிடும். இதன் விளைவாக உற்பத்திச் செலவு குறைய நேரிடும். இது இருக்கின்ற நிறுவனங்களின் இலாபத்தை அதிகரிக்கும் இம்முற்றுரிமைப் போட்டியில் இருக்கின்ற நிறுவனங்கள் இயல்பு இலாபத்தையே நீண்டகாலத்தில் ஈட்டும். நீண்டகாலம் முற்றுரிமைப் போட்டியின் வீண்செலவுகள் 1. வேலையின்மை : முற்றுரிமையாளர் போட்டியில் நிறுவனங்கள் , உத்தம... |
உற்பத்திக்கும் உள்ள வேறுபாடாகும். நீண்ட காலத்தில் இந்நிறுவனங்கள் உத்தம இந்த அளவு உற்பத்தியைவிட குறைந்த அளவு உற்பத்தியையே செய்கின்றன. உற்பத்தி குறைந்தபட்ட சராசரி செலவோடு சம்பந்தப்பட்டதாகும். இந்த உபரி சக்தி வீணாக்கப்படுவதாக இங்கு கருதப்படுகிறது. விளம்பரம் : முற்றுரிமை அங்காடி போட்டியில் உள்ள விளம்பரச் செலவு வீண் செலவாகக... |
பண்டங்கள் : முற்றுரிமை போட்டியில் பல்வேறு பண்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. தயாரிக்கப்படும் பண்டங்களின் அளவு , மாதிரி , வண்ணம் , மனம் , ஆகியவற்றை மாற்றும் போது , ஒரே விருப்பத்தை நிறைவேற்ற பல்வேறு வகையான பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதால் , இப்பதிலீட்டு பண்டங்களின் உற்பத்தி செலவு வீணாகக் கருதப்படுகிறது. ஒரு சில வகைகள... |
விதிக்கின்றன. இத்தகைய நிறுவனங்கள் தொழிலில் இருந்து அகற்றப்படல் வேண்டும். ஆனால் இந்நிறுவனத்தின் பொருள்களை வாங்குவோர் , அங்காடியில் இருப்பின் திறமையற்ற நிறவனங்கள் தொடர்ந்து தொழிலில் இருக்க வாய்ப்பு ஏற்படுகிறது. சில்லோர் முற்றுரிமை நிறைகுறை போட்டியில் மிகவும் குறிப்பிடதக்கது. சில்லோர் முற்றுரிமையாகும். மிகச் சில நிறுவனங்க... |
உற்பத்தி செய்யக்கூடும். Page 454 of 236 இயல்புகள் 1. ஒன்றையொன்று சார்ந்திருத்தல் : பிற நிறுவனங்களைச் சார்ந்து முடிவெடுத்துல் என்பது சில்லோர் முற்றுரிமையின் மிக இன்றியமையாத தனிப் பண்பாகும். இங்கு நிறுவனங்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருப்பதால் ஒன்றின் செயல்பாட்டினை மற்றொரு நிறுவனம் கூர்ந்து கண்காணிக்கின்றது. விலை , உ... |
நிறுவனங்களின் செயல்பாடுகளையும் கூர்ந்து கவனித்தல் வேண்டும். 3. 2. குழுச் செயல்பாடு : இந்த அங்காடி முறையில் நிறுவனங்கள் அனைத்தும் தமக்குள் ஒற்றுமையுடன் கூட்டுறவாக செயல்பட வேண்டிய கட்டாயத்தை உணர்ந்திருக்கும். அவைகள் மந்தண உடன்படிக்கை செய்துக் கொள்ள முனையும் , அதே நேரத்தில் ஒவ்வொரு நிறுவனமுமே உச்ச இலாபம் அடைய துடிப்பதால் ... |
குறைத்தால் எதிராளிகள் பாதிக்கப்படுவார்கள். தனது இலாபத்தை நிறுவனம் இழக்க நேரிடும் , இதே போன்று விலை ஏற்றத்தை பின்பற்றினால் தனது வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும். எனவே சில்லோர் முற்றுரிமையில் விலைமாற்றம் முற்றிலும் கைவிடப்படுவதால் விலை மாறாமல் இருக்கிறது. சில்லோர் முற்றுரிமை முக்கியமான 19. முற்றுரிமை போட்டியின் முக்கியமான... |
அடிப்படை போட்டிகளை வகைப்படுத்துக. 23. நிறைவுப் போட்டி அங்காடியின் மூன்று நன்மைகளை எழுதுக. விலை பேதத்தின் இரண்டு நிபந்தனைகள் யாவை ? 24. 25. விலை பேதத்தினை எடுத்துக்காட்டின் மூலம் விளக்குக. பகுதி - இ பின்வரும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளிக்கவும். 26. அங்காடியின் வகைகளை சுருக்கமாக விளக்கவும். 27. நிறைவுப் போட்டிய... |
விளக்குக. தங்களுக்குள்ளே பாடம் – 9 இறுதிநிலை உற்பத்தித் திறன் பகிர்வுக் கோட்பாடு ( MARGINAL PRODUCITIVTY THEORY OF DISTRIBUTION ) இறுதிநிலை உற்பத்தித் திறன் பகிர்வுக் கோட்பாடு என்பது உற்பத்திக் காரணிகளின் பொது பகிர்வுக் கோட்பாடாகும். நிறைவுப் போட்டியில் , உற்பத்திக் காரணிகளின் ஊதியம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது. ( நி... |
விலை தீர்மானத்திற்கும் , காரணிகளின் விலைத் தீர்மானத்திற்கும் அடிப்படை வேறுபாடுகள் ஏதுமில்லை. காரணிகளின் விலை , சந்தையில் அவைகளின் தேவை மற்றும் அளிப்புகளினால் தீர்மானிக்கப்படும். பண்டங்களின் தேவை ‘ நேரடித் தேவை ’ ஆனால் காரணிகளின் தேவை ‘ பெறப்பட்ட தேவை ’ ( உம். ) வீடுகளுக்குத் தேவையிருந்தால் தான் வீடு கட்டும் தொழிலில் தொ... |
ஊதியம் பெறும். இவ்விதி அனைத்து உற்பத்திக் காரணிகளுக்கும் பொருந்துவதாக இருந்தாலும் முதலில் உழைப்பு பற்றி நாம் காண்போம். உற்பத்திக் காரணிகளின் விலை இறுதிநிலை உற்பத்தி பண்டங்களின் மதிப்புக்கு சமமாகும் வரை ஒரு நிறுவனம் உற்பத்திக் காரணிகளின் அளவைக் கூட்டிக் கொண்டே செல்லும். இறுதிநிலை உற்பத்தியின் மதிப்புக்கு சமமாகவே ஒவ்வொரு... |
உற்பத்தி இருக்கும். நாம் மற்ற உற்பத்திக் காரணிகளின் அளிப்பை நிலையாகக் கொள்கின்றோம். உழைப்பைக் கொண்டு , இறுதிநிலை உற்பத்தித் திறன் பகிர்வுக் கோட்பாட்டைப் பற்றி எளிய உதாரணம் வாயிலாகப் பார்ப்போம். இலாபத்தை உச்சமாக்குவதே ஒவ்வொரு நிறுவனத்தின் நோக்கமாகும். உற்பத்திச் செலவைவிட வருவாய் அதிகமாக இருக்கும் வரை காரணியின் நியமனத்தை... |
, இறுதியில் நியமனம் செய்யும் இறுதிநிலை காரணியினால் ஆகும் , மொத்த உற்பத்தி செலவு மொத்த வருவாய் சமமாகும் வரை உற்பத்திக் காரணியைக் கூட்டிக் கொண்டே செல்லும். இதற்குமேல் மொத்த இலாபத்தை அதிகரிக்க முடியாது. உழைப்பு சந்தையில் சமநிலை MPP = இறுதிநிலை பண்டங்கள் உற்பத்தி வளைகோடு ( உழைப்பு ) VMP = இறுதிநிலை பண்டங்கள் உற்பத்தி மதிப்... |
அனுமதிக்கப்படுகிறது ). படம் 9.2 ல் நிறுவனம் E- யில் சமநிலை அடைவதாக காட்டப்பட்டுள்ளது. L- க்கு இடதுபுறம் , ஒரு அலகு உழைப்பிற்கு கொடுக்கப்படும் ஊதியம் அது உற்பத்தி செய்யும் பண்டங்களின் மதிப்பைவிட குறைவாக உள்ளது. ( VMPL > W ). ஆகவே நிறுவனம் அதிக உழைப்பைப் பயன்படுத்தி அதிகமாக இலாபத்தைப் பெறும் L வலதுபுறம் ( VMPL < W ). உழை... |
இருக்கும். மேற்கண்ட விளக்கபடி , ஒரு நிறுவனத்தின் எந்த ஒரு மாறும் உற்பத்திக் காரணியின் ( உழைப்பு ) தேவைக்கோடும் அக்காரணியின் இறுதிநிலை உற்பத்தி மதிப்பு வளைகோடாகும். ஆகவே இறுதிநிலை உற்பத்தி காரணியின் உற்பத்திக் திறன் , அக்காரணிகள் அனைத்திற்கும் அளிக்கப்படும் ஊதியத்தை நிர்ணயிக்கும். உற்பத்தியாளர் நிலம் , உழைப்பு , முதலீடு... |
ஊதியம் நிர்ணயம் செய்யப்படும். இறுதிநிலை உற்பத்தித் திறன் பகிர்வுக் கோட்பாடு , உற்பத்திக் காரணிகளின் ஊதியம் , வாரம் , வட்டி மற்றும் இலாபத்தைத் தீர்மானிப்பதைப் பற்றி விளக்குகிறது. ஆகவே இது பொது பகிர்வுக் கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது. இறுதிநிலை உற்பத்தித் திறன் பகிர்வு கோட்பாடு கீழ்கண்ட எடுகோள்களின் அடிப்படையில் உருவான... |
ஒன்றுக்கொன்று மாற்றப்படக்கூடியவை. 4. இக்கோட்பாடு குறைந்து செல் விளைவு விதியை அடிப்படையாகக் கொண்டது. இது வாணிபத்திற்கும் பொருந்தும் , ஒரு காரணியை மேலும் மேலும் பயன்படுத்தும் போது அதிலிருந்து கிடைக்கும் இறுதிநிலை உற்பத்தி குறையும் என்று குறைந்து செல் விளைவு விதி கூறகிறது. ஒரு நிறுவனத்திற்கு ஒரு காரணியை அதிகப்படுத்துவதால்... |
கோட்பாட்டின் குறைபாடுகள் பின்வருமாறு : 1. 3. அனைத்துப் பண்டங்களும் கூட்டுப் பண்டங்கள் அப்பண்டங்களின் மதிப்பை , தனித்தனியாக உழைப்புக்கோ அல்லது முதலுக்கோ பிரித்துக் காட்ட இயலாது. சில வகையான பணிகளின் ( மருத்துவர் , வழக்கறிஞர் , ஆசிரியர்கள் ஆகியோரின் பணிகள் ) உற்பத்தி மதிப்பை அளவிடுதல் கடினமான ஒன்று. இந்த கோட்பாடு காரணிகளி... |
இக்கோட்பாடு , நிறைவுப் போட்டி மற்றும் முழுவேலை நிலை ஆகிய எடுகோள்களை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் நடைமுறையில் நிறைகுறைப் போட்டியே உள்ளது. 4. நடைமுறையில் உற்பத்திக் காரணிகளை மாறுபட்ட வழிகளில் பயன்படுத்துதல் கடினம். 5. இக்கோட்பாடு அறநெறிக் கருத்துக்களைப் பின்பற்றவில்லை. இக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டால் , ஒரு காரணி அது உற்பத்... |
சுரண்டலே இதற்கு காரணமாகும். நடைமுறையில் காணப்படும் ஏற்றத்தாழ்வான பகிர்வை நியாயப்படுத்த இக்கோட்பாட்டை பயன்படுத்த முடியாது. மேற்கண்ட குறைபாடுகள் இருப்பினும் , காரணிகளின் விலையைத் தீர்மானிப்பதில் உற்பத்தி திறனின் பங்கினை இக்கோட்பாடு விளக்குகிறது. ' இக்கோட்பாடு ஊதியத்தைத் தீர்மானிக்கும் ஒரு காரணியை வெளிக் கொணர்ந்துள்ளது ' ... |
செலுத்துகிறோம். இந்த வாரத்திற்கு ‘ ஒப்பந்த செலுத்துகை ' என்று பெயர். இத்தொகை , நிலத்தைப் பயன்படுத்துவதற்கு நாம் செலுத்தும் விலை தவிர வீடு கட்ட முதலீடு செய்த முதலீட்டிற்கு செலுத்தும் வட்டி , கூலி , இலாபம் முதலியனவும் இதில் அடங்கும். வேளாண்மை நிலத்தைப் பயன்படுத்துவதற்கு நாம் கொடுக்கும் விலையே வாரம் என்று தொன்மைப் பொருளிய... |
தோன்றுகிறது. மற்ற நிலங்களைவிட செழுமைமிக்க நிலம் அதிக வாரத்தைப் பெறும். ரிகார்டோவின் வாரக் கோட்பாடு ரிகார்டோவின் வாரக் கோட்பாடு பழமையான கோட்பாடுகளில் ஒன்றாகும். 19 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த தொன்மைப் பொருளியல் அறிஞரான ரிகார்டோவின் பெயரால் இக்கோட்பாடு அழைக்கப்படுகிறது. ‘ வாரம் என்பது நிலத்தின் உண்மையானதும் அழிக்க முடியாதது... |
பயன்படுத்திக் கொள்வதற்கு கொடுக்கப்படுவது வாரமாகும். நிலத்தின் செழிப்புத்தன்மையின் வேறுபாட்டினாலேயே வாரம் தோன்றுகிறது என்று ரிகார்டோ நம்புகிறார். உயர்பண்புகளைக் கொண்ட நிலமே வாரத்தைப் பெறும். வாரம் என்பது எச்ச உபரியாகும். ( Rent is a Differential surplus ). மேலும் நிலம் அமைந்துள்ள இடத்தின் சிறப்புத் தன்மையைப் பொறுத்தும் ... |
அமைந்திருக்கும் இடத்தின் சிறப்பினால் வாரத்தைப் பெறும். இக்கோட்பாட்டை குடியேற்றத்தின் ( Colonization ) மூலம் ரிகார்டோ விளக்குகிறார். மக்கள் புதிய இடத்தில் குடியேறும் பொழுது , முதலில் செழுயைான நல்ல நிலத்திலேயே பயிர் செய்வர். அதிக மக்கள் அவ்விடத்தில் குடியேறும் பொழுது நிலத்தின் தேவை அதிகரிக்கும். அதனால் இரண்டாம் தர நிலத்த... |
சில காலம் சென்ற பிறகு , மக்கள் தொகை அதிகரிப்பதால் மூன்றாம் தர நிலமும் பயிர் செய்யப்படும். தற்பொழுது இரண்டாம் தர நிலமும் வாரத்தைப் பெறும். மேலும் முதல்தர நிலம் அதிக வாரத்தை பெறும். மூன்றாம் தர நிலம் எவ்வித வாரத்தையும் பெறாது. இது வாரமில்லா நிலம் என்று அழைக்கப்படும். π நிலத்தின் தரம் ரிகார்டோவின் வாரக் கோட்பாடு பற்றிய வர... |
மூன்றாம் தர நிலம் வாரம் பெறவில்லை. ஆகவே இது வாரமில்லா நிலம் என்றும் இறுதிநிலை நிலம் என்றும் அழைக்கப்படுகிறது. திறனாய்வு வாரம் இல்லா நிலம் ( 2 ) ) இறுதிநிலை நிலம் முதல் தரமான நிலத்திலேயே முதலில் பயிர் செய்யப்படுவதாக ரிகார்டோ கருதுகின்றார். ஆனால் இதற்கு எந்தவிதமான சான்றும் இல்லை. 1. நிலம் உண்மையானதும் அழிக்க முடியாததுமான... |
கருதுகின்றார். ஆனால் உழைப்பு , முதல் ஆகிய காரணிகளுக்கும் வாரம் உள்ளதாக நவீன பொருளியல் அறிஞர்கள் கருதுகின்றனர். தேவையோடு ஒப்பிடும் பொழுதும் அளிப்பின் அளவு நெகிழ்ச்சியற்றதாக இருப்பின் வாரம் தோன்றும். வாரம் விலையில் சேராது என்று ரிகார்டோ கருதுகின்றார். ஒரு நிறுவனத்தைப் பொறுத்த வரையில் வாரம் விலையோடு அடங்கும். 4. ரிகார்டோவ... |
போட்டியே நிலவுகிறது. ரிகார்டோவின் நிலவாரக் கோட்பாட்டில் பல குறைகள் காணப்பட்டாலும் , மக்கள் தொகை அழுத்தம் நிலத்தின்மேல் அதிகரிப்பதால் தரக்குறைவான நிலத்தினையும் நாம் பயிர் செய்ய வேண்டியுள்ளது. நவீன வாரக் கோட்பாடு குறைபாடான நெகிழ்ச்சியுள்ள அளிப்புக் கொண்ட உற்பத்தி காரணிகளுக்கு வழங்கப்படும் ஊதியமே வாரம் என்று நவீன வாரக் கோ... |
பொருந்தக்கூடியது அல்ல. நிலத்தின் செழுமை வேறுபடுவதை போலவே மனிதனுடைய திறமையுைம் மாறுபடும் ( உம் ). தனித்திறமை கொண்ட அறுவை சிகிச்சை மருத்துவர் அதிக வருமானத்தை ஈட்டுவார். இதில் வாரம் என்ற கருத்து காணப்படுகிறது. இதன் அடிப்படையில் இலாப கோட்பாடு , இலாபத்தின் வாரக் கோட்பாடு என்று அழைக்கப்படும். மார்ஷல் ‘ போலி வாரம் ’ என்ற கருத... |
கருதுகின்றது. தேவையோடு ஒப்பிடும் பொழுது அளிப்பின் அளவு நெகழ்ச்சியற்றதாக இருப்பின் வாரம் தோன்றும். நவீன பொருளியல் அறிஞர்கள் வாரத்தை விளக்க , ‘ மாற்று வருவாய் ' என்ற பதத்தை பயன்படுத்துகின்றனர். மாற்று வருவாய் என்பது ஒரு உற்பத்தி காரணியை , அடுத்த சிறந்த உற்பத்தியில் ஈடுபடுத்தும்பொழுது கிடைக்கும் வருவாயாகும். இது தற்போதைய ... |
செலுத்தும் தொகையே பொருளாார வாரமாகும். ஒரு பிரபலமான தென்னிந்திய சினிமா நடிகர் சாதாரணமாக இரண்டு கோடி ரூபாய் வருமானம் பெறுகிறார். இந்திப் படத்தில் நடிக்க மூன்று கோடி ரூபாய் வருமானம் பெற்றால் அவருடைய மாற்றுப் பயன் வருவாய் ஒரு கோடியாகும். இந்திப் படத்தில் நடிப்பதற்கு அவர் பெறும் கூடுதல் வருவாயான ஒரு கோடி ரூபாய் பொருளாதார வா... |
உற்பத்திக்காக உருவாக்கப்பட்ட கருவிகளிலிருந்தும் பெறப்படும் வருமானம் போலி வாரம் எனப்படும் என்று மார்ஷல் கூறுகின்றார். சில இயந்திரங்களும் , மனிதனால் உருவாக்கப்பட்ட கருவிகளும் குறுகிய காலத்தில் தேவையோடு ஒப்பிடும்போது அளிப்பில் நெகிழ்ச்சி அற்றவை. உதாரணமாக ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் , மீன்களுக்கான தேவை அதிகரிக்கும் பொழு... |
ஈட்டுவார்கள். இதையே போலி வாரம் என்று மார்ஷல் கருதுகிறார். படகுகளின் அளிப்பு அதிகரிக்கப்படும் பொழுது இந்தப் போலி வாரம் மறைந்துவிடும். இயந்திரங்களிலிருந்தும் , கூலி ( Wages ) கூலி என்பது உழைப்பிற்கு கொடுக்கப்படும் வெகுமதியாகும். கூலி இரு வகைப்படும் 1. பணக்கூலி ( Money Wages ) 2. உண்மைக் கூலி ( Real Wages ). பணக்கூலி என்ப... |
சக்தியைப் பொருத்து அமையும். பணத்தின் வாங்கும் சக்தி , விலை பட்டத்தைப் பொறுத்து அமையும். ஒரு நாட்டில் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் அவர்களது உண்மைக் கூலியைப் பொறுத்து அமையும். பண்ணைத் தொழிலாளி மிகக் குறைவான பணக் கூலியையே பெறுவான். ஆனால் உணவும் , தங்குமிடமும் இலவசமாக பெற்றால் அதுவும் உண்மைக் கூலியில் அடங்கும். கூலி... |
Standard of Living Theory ). 3. கூலி நிதிக்கோட்பாடு ( Wage Fund Theory ) 4. எச்ச உரிமைச் கூலிக்கோட்பாடு ( The Residual Claimant Theory ) சில முக்கிய தற்காலக் கூலிக்கோட்பாடுகளாவன. 1. இறுதி நிலை உற்பத்தித் திறன் கூலிக்கோட்பாடு ( The Marginal Producitivity Theory of Wages ) 2. அங்காடி அல்லது சந்தைக் கூலிக் கோட்பாடு ( The ... |
கோட்பாடு : இக்கோட்பாட்டின்படி தொழிலாளிக்குத் கொடுக்கப்படும் கூலியானது அவரது அடிப்படைத் தேவையை மட்டுமே பூர்த்தி செய்வதாக இருக்கும். பிழைப்பு மட்டக் கூலியை விட குறைவாக வழங்கினால் , பட்டினியால் இறக்க நேரிடும். அது உழைப்பின் அளிப்பை குறைக்கும். குறைபாடு இதன் முக்கிய குறைபாடு யாதெனில் , கூலியை அதிகப்படுத்தும்பொழுது மக்கள் த... |
எடுத்துக் கொள்ளவில்லை இது ஒரு தலைபட்சமானது. தேவைப் பக்கத்தில் செயல்படும் காரணிகளை இது தவிர்த்துவிட்டது. இக்கோட்பாடு தவறான அறநெறிக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. 2. வாழ்க்கைத் தரக் கூலிக்கோட்பாடு : ( The Standard of Living Theory ) கூலியானது தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறுகின்றது.... |
காரணி , எது விளைவு என்ற கூறுவது சிறிது கடினமாகும். 3.கூலி நிதிக் கோட்பாடு ( The Wage Fund Theory ) கூலியானது மக்கள் தொகைக்கும் மூலதனத்திற்கும் இடையே உள்ள விகிதத்தைப் பொறுத்து அமையும் என்று இக்கோட்பாடு கூறுகின்றது. மூலதனம் என்பது கூலியை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி என்று பொருள். மக்கள் தொகை என்பது தொழிலாளர்களைக் குறி... |
கருதுகிறது. ஆனால் இதற்கிடையே எந்த நேரடித் தொடர்பும் இல்லை. மேலும் கூலி உயரும்பொழுது இலாபம் குறையும் என்றும் இக்கோட்பாடு கருதுகிறது. இது உண்மையல்ல. ஏனெனில் , நல்ல வாணிப நிலையில் கூலியும் இலாபமும் உயரும். 4. எச்ச உரிமைக் கூலிக்கோட்பாடு ( The Residual Claimant Theory ) ‘ கூலி என்பது மொத்த உற்பத்தியிலிருந்து , வாரம் , வட்ட... |
கூலியாகக் கொடுக்கப்படுகிறது. திறனாய்வு : ஆனால் இக்கோட்பாட்டின்படி , எஞ்சியதே கூலியாகும் என்று கூறுகின்றது. உண்மையில் கூலி என்பது முன்கூட்டியே கொடுக்கப்படும் தன்மை வாய்ந்ததாகும். ஆகவே கூலியானது முதலில் கொடுப்பதாகும். இலாபமானது , இறுதியில் கிடைப்பதாகும். நவீன கூலிக் கோட்பாடு : 1. இறுதிநிலை உற்பத்தித் திறன் கூலிக்கோட்பாடு... |
உருவாக்கப்பட்டதே ஆகும். நிறைவுப் போட்டி நிலவும் போது கூலி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதை இக்கோட்பாடு விளக்குகிறது. இறுதிநிலை உற்பத்தித் திறன் கோட்பாட்டின்படி , தொழிலாளியின் கூலி அவரால் உற்பத்தி செய்யப்பட்ட இறுதி நிலை பண்டங்களின் மதிப்புக்கு சமமாக இருக்கும். ஒரு உற்பத்தி அமைப்பு , மேலும் மேலும் உழைப்பின் அலகை அதிக... |
, உழைப்பை அதிகரித்துக் கொண்டே செல்வார். உழைப்பின் அலகுகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஆகவே இறுதிநிலை அலகின் உற்பத்தித் திறன் , எந்த விகிதத்தில் கூலி அளிக்கப்படும் என்பதை தீர்மானிக்கிறது. திறனாய்வு : ஒவ்வொரு பண்டமும் ஒரு கூட்டுப் பொருளாகும் ( Joint Product ) ஒவ்வொரு உற்பத்திக் காரணியும்... |
2. இக்கோட்பாடு நிறைவுப் போட்டியை அடிப்படையாகக் கொண்டது. நடைமுறையில் நிறைகுறைப் போட்டியே நிலவுகிறது. ஆனால் 3.முற்றுரிமையில் கூலியானது இறுதிநிலை உற்பத்தித் திறனைவிட குறைவாக உள்ளது. உழைப்பை சுரண்டுதலே இதற்கு காரணமாகும். 4. கூலி என்பது முன்பணமாக வழங்கப்படுகிறது. இம்முதலுக்கு வட்டியாக ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்த பிறகு இறு... |
தாழ்வுகளையும் நியாயப்படுத்த பயன்படுத்தக்கூடாது. சுரண்டலினாலேயே கூலி குறைவாக உள்ளது. மேற்கண்ட குறைபாடுகள் இருப்பினும் , கூலியைத் தீர்மானிக்கும் ஒரு காரணியை வெளிக்கொணர்கிறது " என்று மார்ஷல் கூறுகின்றார். இக்கோட்பாட்டினைப் அங்காடிக் கூலிக் கோட்பாடு மற்ற இக்கோட்பாடு , கூலியை உழைப்பிற்கான விலையாகக் கருதுகின்றது. விலைகளைப் ப... |
உழைப்பிற்கு அதிக அல்லது நீண்டகால பயிற்சி தேவைப்படுகிறது. இப்பயிற்சி காலத்தில் உழைப்பாளர்கள் தங்களுடைய வருமானத்தை தியாகம் செய்ய வேண்டியுள்ளது. உழைப்புச் செலவைக் கணக்கிடும் பொழுது தியாகம் செய்த வருமானத்தையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். உழைப்பின் தேவை : உழைப்பின் தேவையானது ஒரு தருவிக்கப்பட்ட தேவையாகும். பண்டங்களின் தேவ... |
முயற்சி செய்வார். முதலீடு அதிகரிக்கும் பொழுது உழைப்பிற்கான தேவையும் அதிகரிக்கும். உழைப்பிற்கான அங்காடிப் போட்டியில் , கூலியானது உழைப்பிற்கான தேவையும் அளிப்பும் சமமாக்கும்போது சமநிலை உருவகிறது. வட்டி ( Interest ) மூலதனத்தைப் பயன்படுத்துவதற்காகக் கொடுக்கப்படும் விலை வட்டி எனப்படும். இதற்கு நிகர வட்டி அல்லது துாய வட்டி என... |
மொத்த வட்டியில் அடங்கும். இடர்ப்பாடுகள் என்பது வணிக இடர்ப்பாடுகள் மற்றும் சொந்த இடர்ப்பாடுகளும் அடங்கும். ( உம் ) இந்திய விவசாயிக்குக் கொடுக்கப்படும் கடன்களைத் திரும்பப் பெறுவதில் உள்ள இடர்ப்பாடு காரணமாக பணத்தைக் கடன் கொடுப்பவர் அதிக வட்டி வசூலிப்பார். பொதுவாக பணத்தை மக்கள் ரொக்கமாக வைத்திருக்க விரும்புவர். இதற்கு நீர்... |
இவ்வசதிக்குறைவை ஈடு செய்ய அதிகப்படியான வருமானத்தைக் கொடுக்க வேண்டும். ஆகவே மொத்த வட்டி என்பது நிகர வட்டியுடன் மேற்கூறியவை அனைத்தும் அடங்கும். வட்டிக் கோட்பாடுகள் ( Theories of Interest ) 1. துய்ப்புத் தவிர்ப்பு அல்லது காத்திருத்தல் வட்டிக் கோட்பாடு ( The Abstinence or Waiting Theory of Interest ) 2. கால விருப்பக் கோட்ப... |
Investment ) 5. கடன் நிதிக் கோட்பாடு ( Loanable Funds Theory ) 6. வட்டி பற்றிய நீர்மைக்கோட்பாடு நாசா சீனியரின் நுகர்வுத் தவிர்ப்பு கோட்பாட்டின்படி , வட்டி என்பது செல்வத்தை உடனடியாக நுகர்வதிலிருந்து விலகியிருக்கும் அல்லது காத்திருக்கும் செயலுக்குக் கொடுக்கப்படும் வெகுமதியாகும். மக்கள் சேமிக்கிறார்கள் என்றால் உடனடி நுகர்... |
காத்திருத்தல் ( Waiting ) என்று மார்ஷல் கூறகிறார். 4. ஏஜியோ கோட்பாடு மற்றும் கால விருப்பக்கோட்பாடு இக்கோட்பாட்டில் போம் போகுவர்க் கூறுவது எதிர்காலத்திற்கான நிகழ்கால ஊக்கத்தொகை மற்றும் எதிர்கால நுகர்வைவிட நிகழ்கால நுகர்வையே மக்கள் விரும்புவர் என்றும் அதற்கு ஈடு செய்யக் கொடுக்கப்படும் விலையே வட்டி ஆகும் கூறுகிறது. இர்வின... |
மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறனுக்குச் சமமாக இருக்கும் என்று கூறகிறது. தொன்மை வட்டிக் கோட்பாட்டின்படி , வட்டி வீதமானது மூலதனத்திற்கான தேவை , அளிப்பு ஆகிய சக்தியால் நிர்ணயிக்கப்படுகிறது. இக்கோட்பாடு , வட்டி வீதம் , சேமிப்பு , முதலீடு இவற்றிற்கிடையேயான நேரடித் தொடர்பு உள்ளது என்ற எடுகோளைச் சார்ந்தது. வட்டிவீதம் உயர... |
நிதிக் கோட்பாடு : K. விக்செல் மற்றும் டென்னிஸ் ராபர்ட்சன் மற்றும் பலர் இக்கோட்பாட்டை அளித்துள்ளனர். தொன்மை வட்டிக்கோட்பாட்டை விட கடன் நிதிக்கோட்பாட்டின் எல்லை விரிவானதாகும். நிகழ்கால வருமானத்திலிருந்து சேமிப்பு மட்டுமல்லாது , வங்கிக்கடன் , பதுக்கப்பட்ட முதலீட்டை வெளிக்கொணர்தல் மற்றும் முதலீடு செய்ததை மீட்டல் ஆகிய அனைத்... |
முக்கிய கடன் கருவியாகும் என்பது நமக்கு தெரியும். தொன்மைக் கோட்பாட்டின்படி , முதலீட்டுக்கு மட்டுமே சேமிப்புதேவை என்று கருதப்பட்டது. ஆனால் கடன் நிதிக் கோட்பாட்டின்படி முதலீட்டுக்கு மட்டுமல்லாமல் செல்வத்தைப் பதுக்குவதற்கும் தேவைப்படுகிறது என்று கருதுகிறது. வட்டி என்பது முதலீட்டையும் சேமிப்பையும் சார்ந்தது என்று தொன்மைக் க... |
முதலீடு முதலியவற்றில் இருந்து மீட்கப்பட்ட செல்வம் குறிக்கிறது ). S + M வளைகோடு , வேறுபட்ட வட்டி வீதத்தில் அளிக்கப்படும் மொத்த கடன்நிதியைக் குறிக்கும். தேவைப்பக்கத்தில் | வளைகோடு முதலீட்டிற்கான தேவையைக் குறிக்கும் L வளைகோடு பயனற்ற ரொக்க இருப்பு அல்லது பதுக்குவதற்கான பணத் தேவையைக் குறிக்கும். I + L வளைகோடு பல்வேறு வட்டி ... |
மொத்த தேவையும் அளிப்பும் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கும். தொன்மைக் கோட்பாட்டில் rn சாதாரண வட்டி வீதம் I மற்றும் S வளைகோடுகள் ஒன்றை ஒன்று வெட்டும் புள்ளியில் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது வட்டி வீதம் rn ஆக இருக்கும்பொழுது முதலீட்டிற்கான தேவை சேமிப்பின் அளவிற்கு ( அளிப்பிற்கு ) சமமாக இருக்கும். திறனாய்வு 1. கடன் நிதிக் கோட... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.