text
stringlengths 11
513
|
|---|
அளவினால் , வேலைநிலை , வருமானம் , சேமிப்பு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றத்தை இக்கோட்பாடு புறக்கணித்துவிட்டது. கீன்சின் நீர்மை விருப்பக் கோட்பாடு ( Keynesian Liquidity Preference Theory of Interest ) பொதுவாக , மக்கள் தங்களது சொத்தின் ஒரு பகுதியை ரொக்கமாக வைத்திருக்க விரும்புவர். ரொக்கம் என்பது நீர்மைத் தன்மையுடைய சொத்து ஆகும். " ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ரொக்கமாக வைத்திருப்பதைக் தவிர்ப்பதற்காகக் கொடுக்கப்படும் வெகுமதியே வட்டி " என்று கீன்சு கூறுகின்றார். வட்டி என்பது பணத்தைப் பதுக்காமல் இருப்பதற்காக
|
கொடுக்கப்படும் வெகுமதியாகும். மூன்று நோக்கங்களுக்காக மக்கள் பணத்தை ரொக்கமாக வைத்திருக்க விரும்புவர் என்று கீன்சு கூறுகின்றார். அவைகள் 1. பரிமாற்ற நோக்கம் ( Transaction Motive ) 2. முன்னெச்சரிக்கை நோக்கம் ( Precautionary Motive ) 3. ஊக வாணிப நோக்கம் ( Speculative Motive ) பரிமாற்ற நோக்கம் என்பது அன்றாடச் செலவுகளை மேற்கொள்ள வைத்திருக்கும் ரொக்க பணமாகும். எதிர்பாரா செலவுகளைச் சமாளிக்க மக்கள் ரொக்கமாக பணத்தை வைத்திருக்க விரும்புவர். இதுவே முன்னெச்சரிக்கை நோக்க பணமாகும். சுந்தையில் எதிர்காலத்தில் , என்ன நடக்கும்
|
என்பதை ஊகித்தறிந்து , இலாப நோக்கத்திற்காகச் Page 4 2 of 236 மொத்த இலாபம் ( Gross Profit ) பண்டங்களை உற்பத்தி செய்வதற்கு ஆகும் மொத்த செலவிற்கும் அப்பண்டங்களை விற்பதால் கிடைக்கும் மொத்த வருவாய்க்கும் உள்ள வேறுபாடே பொதுவாக இலாபம் என்று நாம் கூறுகிறோம். இது மொத்த இலாபம் ஆகும். மொத்த இலாபமும் நிகர இலாபமும் மொத்த இலாபம் என்பது நிகர இலாபத்துடன் முதலுக்கான வட்டி , நிலத்துக்கான வாரம் , மேலாண்மைக்கு கிடைக்கும் ஊதியம் , முற்றுரிமையின் காரணமாக நிறுவனத்திற்கு கிடைக்கும் உபரி இலாபமும் சேர்ந்ததாகும். திடீரென்று தோன்றும்
|
வாய்ப்பினால் கிடைக்கும் வருமானமும் இதில் அடங்கம் ( Windfall Profit ) காற்றடித்து விழுந்த இலாபம். நிகர அல்லது தூய இலாபத்தைக் பெறுவதற்கு , மேற்கண்ட வருமானத்தை மொத்த இலாபத்திலிருந்து கழிக்க வேண்டும். இடர்பாடுகளை ஏற்பதற்கும் , நிச்சயமற்ற தன்மையைத் தாங்கிக் கொள்வதற்கும் கொடுக்கப்படும் வெகுமதியே நிகர இலாபம் ஆகும். தொழில் முனைவோருக்கு இதுவே முக்கிய பணியாகும். பதிலீட்டு பண்டங்கள் இல்லாத ஒரு பண்டத்தை விற்பனை செய்யும் ஒரே விற்பனையாளரே முற்றுரிமையாளர் ஆவார். அளிப்பை அவர் கட்டுப்படுத்த முடிவதால் மிகை இலாபத்தை அவர் பெற
|
முடியும். இதுவே முற்றுரிமை இலாபம் என்று அழைக்கப்படுகிறது. தூய இலாபம் ( அ ) நிகர இலாபம் இதை இயல்பு இலாபம் ( Normal Profit ) , மிகை இலாபம் ( Super Normal Profit ) என்று இரண்டாகப் பிரிக்கலாம். நிச்சயமற்ற தன்மையை ஏற்று நிறுவனத்தை தொடர்ந்து நடத்த உத்தரவாதத்தைத் தரும் குறைந்தபட்ச இலாபமே இயல்பு லாபமாகும். இயல்பு இலாபத்தை விட அதிகமாக அல்லது உபரியாக அல்லது மிகையாக கிடைக்கும் இலாபம் , தூய இலாபத்தின் ஒரு பகுதியாகும். நிறைவுப் போட்டியில் ஒரு நிறுவனம் குறுகிய காலத்தில் உபரி இலாபத்தைப் பெற்றாலும் , நீண்டகாலத்தில் இது
|
மறைந்துவிடும். முற்றுரிமை மட்டுமே மிகை இலாபத்தை தொடர்ச்சியாகப் பெறமுடியும். முதலீட்டாளரும் , தொழில் முனைவோரும் ஒருவரே என்று கருதுவதால் , பழைமைப் பொருளியல் அறிஞர்கள் வட்டியையும் , இலாபத்தையும் வேறுபடுத்தவில்லை. தொழில் முனைவோர் முதலீட்டுக்குச் சொந்தக்காரராக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. தொழில்முனைவோர் முதலீட்டுக்குச் சொந்தக்காரராக இருப்பதைவிட , தொழிலுக்குத் தலைமை தாங்குவதே முக்கியப் பணியாகும். தொழில் அமைப்பு தன்னிகரற்ற உற்பத்தி காரணியாக இன்று விளங்குகிறது. மற்ற வருமானங்களைவிட இலாபம் மூன்று வழிகளில்
|
வேறுபடுகிறது. 1. இது எச்ச வருமானம் ( residual income ). 2. இலாபம் பரந்த ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டது. சில நேரங்களில் இது எதிர்மறையாக இருக்கும். அதாவது நட்டங்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. கூலி எதிர்மறையாக இருப்பதை நினைத்துப் பார்க்கவும் முடியாது. 3. இலாபம் நிலையற்றது. இலாபக் கோட்பாடுகள் : முக்கிய இலாபக்கோட்பாடுகளாவன : 1. இலாப வாரக் கோட்பாடு ( Rent Theory of Profit ). 2. இறுதிநிலை உற்பத்தித் திறன் இலாபக் கோட்பாடு ( The Marginal Productivity theory of Profit ) 3. இலாபக்கூலிக் கோட்பாடு ( Wages Theory of Profit )
|
4. இயங்குநிலை இலாபக் கோட்பாடு ( The Dynamic Theory of Profits ).5. புத்தாக்க இலாபக் கோட்பாடு ( The Innovation Theory of Profits ). 6. இடர்ப்பாட்டு இலாபக் கோட்பாடு ( The Risk Theory of Profits ). 7. நிலையற்ற தன்மையைத் தாங்கும் இலாபக் கோட்பாடு ( Uncertainity bearing Theory of Profits ). 1. இலாப வாரக் கோட்பாடு இக்கோட்பாட்டினை உருவாக்கியவர் பேராசிரியர் வாக்கர் ( Prof. Walker ) ஆவார். இவரது கருத்துப்படி இலாபம் என்பது திறமைக்கான வாரம் ( Rent of Ability ) ஆகும். இலாபம் வாரத்தைப் போன்றதே. நிலத்தின் செழுமையால்
|
எற்படும் வேறுபாட்டின் காரணமாக வாரம் தோன்றுகிறது. அதே போல திறமையின் வேறுபாட்டால் தோன்றுவது இலாபமாகும். ஆகவேதான் இது திறமைக்கான வாரம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோட்பாட்டின் முக்கியக் குறைபாடு என்னவெனில் இது இலாபத்தில் உள்ள வேறுபாடுகளை மட்டுமே விளக்குகிறது. இலாபம் ஏன் ஏற்படுகிறது ? என்ற கேள்விக்கு இது பதில் கூறவில்லை. 2. இறுதிநிலை உற்பத்தித் திறன் இலாபக் கோட்பாடு : இறுதிநிலை உற்பத்தித் திறன் பகிர்வுக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. நிறைவுப் போட்டியில் , தொழில் அமைப்பின் இறுதிநிலை உற்பத்தியின்
|
மதிப்பிற்குச் சமமானதே இலாபம் என்று இக்கோட்பாடு கூறகிறது. இறுதிநிலை உற்பத்தித் திறன் கோட்பாட்டின் அனைத்து குறைபாடுகளும் இதற்கும் இக்கோட்பாடு , பொருந்தும். 3. கூலி இலாபக் கோட்பாடு இலாபமானது கூலியிலிருந்து வேறுபட்டது அல்ல என்று பேராசிரியர் டாசிக் கூறுகிறார். தொழில் அமைப்பாளரின் தனித் திறமைக்கான கூலியே இலாபம் ஆகும். இதனுடைய குறைபாடாக எதிர்மறை இலாபத்தைப் பற்றி நாம் கூறலாம். ஆனால் எதிர்மறை கூலியைப் பற்றி நாம் கூற முடியாது. தொழில் அமைப்பு என்பது தனித் தன்மை வாய்ந்த உற்பத்திக் காரணியாகும். ஆனால் இது உழைப்பிலிருந்து
|
மாறுபட்டது. 4. இயங்குநிலை இலாபக் கோட்பாடு பேராசிரியர் கிளார்க் ( Prof. Clark ) இக்கோட்பாட்டின் ஆசிரியர் ஆவார். சமுதாயத்தில் ஏற்படும் முக்கிய மாற்றத்தின் ( dynamic changes ) விளைவாகத் தோன்றுவதே இலாபம் ஆகும். பண்டங்களின் உற்பத்திச் செலவைவிடக் கூடுதலாக வாங்கும் விலையே இலாபம் ஆகும். மக்கள் தொகை அளவு , மூலதனத்தின் அளிப்பின் அளவு , தொழில்நுட்பம் , தொழில் அமைப்பு மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாகத் தோன்றுவதே இலாபம் ஆகும். நவீன கோட்பாடுகளில் ஒன்றான இது குறுகிய காலத்தில் எதிர்பார்க்கும்
|
மற்றும் எதிர்பார்க்க முடியாத மாற்றங்களின் வேறுபாட்டைப் புறக்கணித்துவிட்டது. 5. புத்தாக்க இலாபக் கோட்பாடு புத்தாக்கம் புனைவதற்கான வெகுமதியே இலாபம் என்று கம்பீட்டர் ( Schumpeter ) கருதுகின்றனர். புத்தாக்கம் புனைதல் என்பது புதிய கண்டுபிடிப்பை விட சிறந்ததாகும். புதிய கண்டுபிடிப்புகள் தொழில் நடவடிக்கைகளில் புகுத்தப்படும் பொழுது புத்தாக்கமாக மாறுகிறது. புதிய பொருட்களை அறிமுகப்படுத்துதல் , அல்லது புதிய உற்பத்தி முறைகளை அறிமுகப்படுத்துதல் , புதிய சந்தையை உருவாக்குதல் முதலியன புத்தாக்கத்தில் அடங்கும். தொழில்முனைவோர்
|
தான் புத்தாக்கத்தை அறிமுகப்படுத்துகிறார். இவருடைய புத்தாக்க நடவடிக்கைகளால் , பொருளாதார முன்னேற்றமும் சமுதாய மாற்றங்களும் ஏற்படுகின்றன. எனவே புத்தாக்கத்திற்கு இலாபத்தைப் பெறுகிறார். இலாபம் தோன்றுவதற்குப் புத்தாக்கம் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் , இது ஒன்று மட்டுமே காரணமல்ல. இது இடர் தாங்கும் பணியைப் புறக்கணித்துவிட்டது. இதுவே இதன் முக்கிய குறைபாடு. 6. இடர்தாங்கும் இலாபக் கோட்பாடு தொழில் முனைவோரின் இடர்தாங்கும் திறமைக்காக அளிக்கப்படும்வெகுமதியே இலாபம் என்று பேராசிரியர் ( Prof. Hawley ) கூறுகின்றார். இடர்
|
தாங்குதல் என்பது தொழில் முனைவோரின் முக்கியப் பணியாகும். இடர் தாங்குதலும் இலாபம் ஈட்டுதலும் ஒருங்கிணைந்து செல்லும் இக்கோட்பாட்டின் முக்கிய குறைபாடு , தெரிந்த இடர்ப்பாடுகள் , தெரியாத இடர்ப்பாடுகளுக்கிடையேயான தொடர்பை இது வேறுபடுத்தவில்லை. தெரிந்த இடர்பாடுகளுக்கு ( உம். ) திருட்டு , தீ விபத்து காப்பீட்டு செய்து கொள்ள முடியும். தெரியாத இடர்களை ஏற்றுக் கொள்வதற்குக் கிடைக்கும் வெகுமதியே இலாபம். இவ்விடர்பாடுகள் அதிக நிலையற்ற தன்மை கொண்டவையாகும். 7. நிலையற்றதன்மையைத் தாங்கும் இலாபக் கோட்பாடு : பேராசிரியர் நைட் (
|
Prof. Knight ) என்பவர் இக்கோட்பாட்டின் ஆசிரியர் ஆவார். இவருடைய கருத்துப்படி , இலாபம் என்பது இடர் தாங்கும் பணிக்காகக் கொடுக்கப்படுவதில்லை. நிலையற்ற தன்மையை ஏற்கும் பணிக்காக வழங்கப்படும் வெகுமதியே ஆகும் என்று பேராசிரியர் நைட் கூறுகின்றார். எதிர்காலம் நிலையற்றதாக இருப்பதால் இடர்பாடுகளை ஏற்கவேண்டியுள்ளது என்பது இவரது முக்கிய கருத்தாகும். நிலையற்ற தன்மையை ஏற்பதே தொழில் முனைவோரின் முக்கிய பணியாகும். தெரியும் இடர்பாடுகளுக்கு காப்பீடு செய்ய முடியும். ஆனால் தெரியாத இடர்ப்பாடுகளைக் ( போட்டி இடர்ப்பாடுகள் , அரசு
|
தலையீடு இடர்ப்பாடுகள் ) காப்பீடு செய்ய முடியாது. தொழில் முனைவோர் இந்த நிலையற்ற தன்மையை ஏற்பதால் இலாபம் ஈட்டுகிறார். இந்த நிலையற்ற தன்மையை ஏற்பது மட்டுமே தொழில் முனைவோரின் பணி அன்று என்பது முக்கிய குறைபாடாகும். முடிவுரை மேலே கூறப்பட்ட கோட்பாடுகளின் முக்கிய குறைபாடு யாதெனில் , இவை அனைத்தும் தொழில் முனைவோரின் ஒரிரு பணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துள்ளன. இடர் தாங்கும் பணி , நிலையற்ற தன்மையைத் தாங்கும் பணிகளுடன் மற்றும் பல பணிகளையும் தொழில் முயல்வோர் மேற்கொள்ளுகிறார். எனவே இலாபம் என்ற வெகுமதியை ஏற்க
|
தகுதியுடையவராகிறார். பாடம் 10 வருமான – நிர்ணயம் – எளிய கோட்பாடு ஆடம் ஸ்மித் ( 1723–90 ) , தாமஸ் ராபர்ட் மால்தஸ் ( 1766-1834 ) , டேவிட் ரிக்கார்டோ ( 1772-1823 ) மற்றும் J.B. சே இவர்கள் மிகவும் பிரபலமான தொன்மையான பொருளாதார அறிஞர்கள் ( வல்லுநர்கள் ) ஆவார்கள். 18 மற்றம் 19 ம் நுாற்றாண்டுகளில் நிலவிய பேரியல் பிரச்சனைகளுக்கு ( வருமானம் மற்றும் வேலையின்மை ) முழுவடிவம் கொடுத்தார்கள். ஆனால் இவர்களுடைய கருத்துக்களை நவீன பொருளாதார வல்லுநர்களும் பின்பற்றினர். வேலையில்லா பிரச்சனைக்கு தடையில்லா வாணிபம் அளிக்கும் தீர்வு
|
குறித்த இவர்களுடைய கருத்துக்கள் 1930 ல் பெரும் பொருளாதார மந்தம் ஏற்பட்ட வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன. ‘ பெருமந்தம் ’ காரணமாகத் தடையில்லா வாணிபப் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அதிக வேலை இன்மையினாலும் ( unemployment ) மற்றும் அதிக உற்பத்தியினாலும் ( Glut ) சந்தைகள் முடங்கிப் போயின. ஜே.எம். கீன்சு ( 1883-1964 ) உலகப் பெருமந்தத்தை ஆய்வு செய்து அவரது கட்டுரைகள் / புத்தகங்கள் மூலமாக பேரியல் பொருளாதாரத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். அவரது கருத்துக்கள் வேலையின்மையைப் போக்க அரசுக்கு
|
பெரும் உதவியாக இருந்தன. தற்கால பேரியல் பொருளியல் கோட்பாடுகள் அனைத்தும் இவரதுகருத்துக்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. தொன்மைப் பொருளாதாரத்தின் முழு வேலைவாய்ப்புக் கோட்பாடு ( Classical Theory of Full Employment ) எவ்வளவு உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதை ஒரு நாட்டின் உற்பத்தித் திறன் தீர்மானிப்பதாகத் தொன்மைப் பொருளியலறிஞர்கள் கருதினார்கள். ஒரு நாட்டின் பொருளாதாரம் அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கு உற்பத்தி செய்கிறது. அங்கு ' முழு வேலை வாய்ப்பு ’ நிலவுதாகக் கருதப்படுகிறது. எந்த ஒரு உற்பத்திக்காரணியும் (
|
குறிப்பாக உழைப்பு ) வேலையின்றி இருக்காது என்று இக்கோட்பாடு கருதுகிறது. அதிகமாகவோ , குறைவாகவோ உற்பத்தி செய்யவோ அல்லது விற்கவோ ஜே.பி. சே என்ற பொருளியலறிஞரின் விதியின்படி சந்தை உற்பத்தி செய்த பண்டங்கள் அனைத்தையும் விற்பனை செய்துவிடுகிறது ஜே.பி. சே அங்காடி விதிப்படி , ஒரு தடையிலா பொருளாதாரத்தில் அதிக உற்பத்தியோ , பெருமளவு வேலையின்மையோ , ஒட்டுமொத்த தேவையில் பற்றாக்குறையோ காணப்படாது. ஜே.பி. சேயின் அங்காடி விதி : பிரெஞ்சு நாட்டின் பொருளியலறிஞரான ஜே.பி. சே. ஏன்பவர் 1803 ஆம் ஆண்டு எழுதிய “ அரசியல் பொருளாதார
|
ஆய்வுக்கட்டுரை ” ( Treatise on Political Economy ) என்ற அவரது நுாலில் அங்காடி விதிகளைப் , பற்றி எடுத்துரைத்துள்ளார். அதாவது , ‘ அளிப்பு அதற்கான தேவையை தானே ஏற்படுத்திக் கொள்கிறது ' ( Supply creats its own demand ) , ஒவ்வொரு பண்ட உற்பத்தியும் போதிய அளவு வருமானத்தைப் பெருக்கி அதன் மூலம் அப்பண்டங்களின் விற்பனையை உறுதி செய்கிறது என்பது இதன் பொருளாகும். ஒவ்வொரு உற்பத்திப் பண்டமும் சந்தைக்கு கொண்டுவரப்படும் காரணம் அவற்றிக்குப் பதிலாக வேறொன்றை ( பண்டத்தை ) பெறுவதற்கே ஆகும். உற்பத்தி வெளியீடு எவ்வளவு இருப்பினும் ,
|
அதனால் உருவாக்கப்பட்ட வருமானம் செலவுக்கு சமமாக இருப்பின் மொத்தத் தேவையில் பற்றாக்குறை எழாது. எனவே , அதிக உற்பத்தியோ , வேலையின்மையோ இருக்கும் என்ற கூற்றை ‘ சே ’ ஏற்றுக்கொள்ளவில்லை. பொருளாதாரத்தில் முழு வேலை வாய்ப்பு நிலை ” இருக்கும். இதற்கு கீழ்க்காணும் எடுகோள்களை அவர் கையாண்டார். 1. இல்லங்களின் அனைத்து வருமானங்களும் பண்டங்கள் மற்றும் பணிகளின் நுகர்விற்கே செலவிடப்படுகிறது. 2. அங்கே அரசின் செயல்பாடுகள் ஏதும் இல்லை ( வரிவிதிப்பு இல்லை , அரசின் செலவினமேதுமில்லை , விலைக்கட்டுப்பாடு போன்றவை இல்லை ). 3. அது ஒரு
|
அடைக்கப்பட்டபொருளாதாரம் ( Closed economy ) அதாவது வேறு பொருளாதாரங்களுக்கிடையே எவ்விதத் தொடர்பும் இல்லை. உற்பத்தி எதுவாயினும் வேறொரு பண்டத்தின் தேவையை அது உணர்த்துகிறது. கூடுதல் அளிப்பு கூடுதல் தேவையாகும். இவ்வாறு ' சே ' யின் பகுப்பாய்வு முறை பண்டமாற்று ( Barter ) முறையில் செயல்படுகிறது. ஆயினும் பண அறிமுகம் இவ்வழிமுறையைப் பாதிக்காது. உண்மையில் பண்ட மாற்றுமுறையைக் காட்டிலும் பணத்தின் அடிப்படையிலான பொருளாதாரம் மிகவும் திறன் வாய்ந்தது. தவறான வழியில் செலுத்தப்பட்ட உற்பத்தி , தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட தொழிலில் ,
|
குறிப்பிட்ட பொருளில் அதிக அளிப்பை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை. பொருளியலறிஞர் ‘ சே ’ இவ்வுண்மையை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆயினும் , இச்சமமின்மை ( disequiibrium ) சந்தை சக்திகளின் ( தானே சரிசெய்து கொள்ளும் ) தன்மை காரணமாக மறைந்துவிடுகிறது. ஆனால் ‘ சே ’ கூற்றுப்படி அதிக உற்பத்தி ( Over Production ) அல்லது வேலையின்மை இங்கு இருக்க முடியாது பொருளியலறிஞர் ‘ சே’யின் முக்கியக் கூறுகளை கீழ்கண்டவாறு தொகுத்தறியலாம். 1. பொருளாதாரம் தன்னைத் தானே சரி செய்து கொள்கிறது. 3. 4. 2. பொதுவான அதிக உற்பத்தியோ அல்லது
|
வேலையின்மையோ இருக்க வாய்ப்பில்லை. அனைத்து வளங்களும் முழுமையாக வேலைக்கமர்த்தப்படுகின்றன. நாடுகளிடையே பொருளாதாரம் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும். 5. பொருளாதாரத்தில் நெகிழ்ச்சியான கூலி விகிதம் நிலவும். 6. பொருளாதாரத்தில் நெகிழ்ச்சியான வட்டி வீதம் நிலவும். 7. பணம் வெறும் பொய்க் காரணம் / மறைப்புத் திரை ( Veil ). 8. பன்னாட்டு வாணிபத்திற்கு உதவுகிறது. 9. அரசின் தலையீடு அவசியமில்லை பொருளியலறிஞர் ‘ சே ’ விதியின் குறைபாடு ( Criticism of Say's Law ) ‘ சே ’ விதியின் குறைபாடுகளை ஜே.எம்.கீன்சு வெளிக் கொணர்ந்தார். 1936 ஆம்
|
ஆண்டு ‘ சே ’ விதியைக் குறை கூறி கீன்சு புரட்சிகரமான பொருளாதாரக் கோட்பாட்டினை வெளியிட்டார். 1930 ன் பொருளாதாரப் பெருமந்தம் , மற்றும் அதன் விளைவு வேலை வாய்ப்பு பற்றிய தொன்மை பொருளாதாரக் கோட்பாடுகள் தவறென்றும் , எனவே அதன் அடிப்படையிலான ‘ சே ’ விதியும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல , என்றும் கீன்சு ‘ சே ’ விதியை கடுமையாகச் சாடினார். ‘ சே ’ விதியின் முக்கியக் குறைபாடுகளாவன. 1. உலகப் பெருமந்தத்தினால் ' சே ' விதியின் புகழ் மங்கிப் போனது. 2. ஈட்டிய வருமானம் அனைத்தும் எப்போதும் நுகர்விற்கே செலவிடப்படுவதில்லை. இது போலவே ,
|
சேமிப்பு அனைத்தும் முதலீடு செய்யப்படுவதில்லை. 3. 4. இவ்விதி அங்காடி பற்றிய தவறான ஆய்வினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ‘ ஒட்டுமொத்தம் ’ ( aggregation ) என்ற தவறான கருத்தால் இது பாதிக்கப்படுகிறது. ஒட்டு மொத்த அளிப்பும் , ஒட்டு மொத்தத் தேவையும் எப்போதும் சமமாக இருப்பதில்லை. 7. வட்டி வீதம் சமப்படுத்தும் காரணியல்ல. 8. முதலாளித்துவ முறை எப்போதும் தன்னைத் தானே சரி செய்து கொள்ளாது. 5. 6. 9. ‘ நிறைவுப் போட்டி ’ என்பது உண்மையற்ற ஒரு எடுகோள் ஆகும். 10. ' பொருளாதாரத்தில் ‘ பணம் ’ ஒரு முக்கியச் சக்தியாகும். 11. இவ்விதி
|
நீண்ட காலத்திற்கு மட்டுமே பொருந்தும். 12. ' பண்ட மாற்றுப் பொருளதாரத்திற்கு மட்டுமே ‘ சே ’ விதி பொருந்தும். தற்போது ‘ சே’யின் விதி செல்லத்தக்கதோ அல்லது பயனுள்ளதோ அல்ல எனத் திறனாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள் , ‘ அளிப்பு தனக்குத் தானே தேவையை ஏற்படுத்திக் கொள்ளும் ’ என்பது எவ்வித பொருளும் உணர்த்தவில்லை. எனினும் , ஒட்டுமொத்த தேவை மற்றும் ஒட்டுமொத்த அளிப்புச் சமன்பாட்டின் காரணமாக முழுவேலை வாய்ப்பு நிலவுவதால் ‘ சே ’ யின் விதியைத் தொன்மை பொருளாதாரக் கோட்பாடு ஏற்றுக் கொள்கிறது. சுருங்கக் கூறுவதனால் ஒட்டுமொத்த
|
தேவைக்கு பற்றாக்குறை இராது. ஏதேனும் ‘ வேலையின்மை ' இருப்பினும் சந்தை ( Mechanism ) முழு வேலை வாய்ப்பைப் பெறும். கீன் சின் வருமானக் கோட்பாடு ( Keynesian Theory of Income determination ) 20 - ஆம் நூற்றாண்டில் மிகச்சிறந்த பொருளியலறிஞராக ‘ கீன்சு ’ கருதப்படுகிறார். அவர் பல நூல்களை எழுதியுள்ளார். எனினும் 1936 இல் வெளிவந்த அவரது “ வேலைவாய்ப்பு , வட்டி மற்றும் பணம் பற்றிய ஒரு பொதுக் கோட்பாடு ” ( The General Theory of Employment , Interest and Money ) என்னும் நூல் அவருக்குப் பொருளியலில் அழியாப்புகழைப் பெற்றுத்
|
தந்தது. அவரது நூல் ‘ பேரியல் பொருளாதாரத்தில் ’ ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. கீன்ஸ் பொருளாதாரம் ‘ கீன்ஸ் புரட்சி ’ என்றழைக்கப்படுகிறது. உறுதித் தேவையின் தத்துவம் ( The Principle of Effective Demand ) கீன்ஸ்சின் வேலைவாய்ப்பு கோட்பாட்டில் உறுதி தேவையின் தத்துவம் மிக முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. உறுதித் தேவை என்பது வாங்கும் திறன் மற்றும் செலவழித்தலில் நாட்டம் கொண்ட தனி மனிதர்கள். நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் பற்றியதாகும். பண்டங்கள் உற்பத்தி செய்யப்படும் அளவும் அதன் காரணமாக தோன்றக்கூடிய வேலை வாய்ப்பும்
|
சமுதாயத்தின் மொத்த செலவிடும் திறனைச் சார்ந்து உள்ளன எனக் குறிப்பிடலாம். கீன்ஸ் தனது வருமான நிர்ணயம் பற்றிய எளியக் கோட்பாட்டை ஒட்டு மொத்த தேவை மற்றும் ஒட்டு மொத்த அளிப்பு அணுகுமுறையைப் பயன்படுத்தி எடுத்து கூறியுள்ளார். ஒரு நாட்டின் பொருளாதார அமைப்பில் எல்லா விதமான பண்டங்களுக்கும் பணிகளுக்கும் ஏற்படும் தேவையே ஒட்டுமொத்த தேவை எனப்படும். ஒட்டு மொத்த அளிப்பு என்பது ஒரு நாட்டில் அளிக்கப்பட்ட மொத்த பண்டங்களாகும். ஒட்டு மொத்த அளிப்பு , மொத்தத் தேவை சார்பு மற்றும் மொத்த அளிப்பு சார்பு என்று கீன்ஸ் மேலே கூறிய காரணிகளை
|
அழைத்துள்ளார். கீன்ஸ் கூற்றுபடி பல்வேறு வேலை வாய்ப்பு அளவுகள் , என்பன அத்துடன் தொடர்பு கொண்ட பல்வேறு அளவு ஒட்டு மொத்த தேவை மற்றும் ஒட்டு மொத்த அளிப்பை பொருத்து அமையும். ஒட்டுமொத்த தேவை வளைகோடு மற்றும் ஒட்டு மொத்த அளிப்பு வளைகோடு இவற்றின் உறவைப் பொருத்தே ‘ சமநிலை வருமானம் அல்லது உற்பத்தி அமையும். உடனடி குறுகியகால பிரச்சனைகளை பற்றியே கீன்ஸ் நாட்டம் கொண்டிருந்தார். எனவே ஒட்டுமொத்த அளிப்பு சார்பு பற்றி அவர் கருத்தில் கொள்ளவில்லை. ஆனால் ஒட்டுமொத்த தேவைக்கு முக்கியத்துவம் அளித்தார். ஒட்டு மொத்த தேவை
|
பற்றாக்குறைக்கு வேலையின்மையே காரணம் என்றார். எல்லாத் தேவைகளும் உறுதித் தேவையல்ல. கீன்ஸ் கூற்றுப்படி மொத்த தேவையும் ( ADF ) மொத்த அளிப்பு ( ASF ) உறுதித் தேவையின் அளவை நிர்ணயிக்கிறது. மொத்த அளிப்பு சார்பு ( ASF ) செலவைக் குறிக்கிறது. மொத்த தேவை சார்பு ( ADF ) வருவாயைக் குறிக்கிறது. செலவு வருவாய்க்கு கூடுதலாக இருக்கலாகாது. தொழில் முயல்வோர் , வருவாய் , செலவைவிடக் குறைவாக இருக்கும் போது , புது வேலையாட்களை நியமிப்பதை நிறுத்திவிடுகின்றனர். வருவாய் செலவைவிட கூடுதலாக இருக்கும்போது அவர்கள் மென்மேலும் வேலை வாய்ப்பை
|
அதிகரித்து , அதன் மூலம் அதிக லாபம் ஈட்டுவார்கள். மேலே குறிப்பிட்டப்படி இருவளைகோடுகளும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளும் புள்ளியே அதிக அளவு வேலை வாய்ப்பைத் தரும் புள்ளியாகும். கீன்ஸ் கூற்றுபடி மொத்தத் தேவை மற்றும் வேலையின்மையைப் பொருத்து வேலைநிலை அமைகிறது. இதனால் மொத்தத் தேவையில் வீழ்ச்சி ஏற்படுகிறது. ஒட்டுமொத்தத் தேவை அதிகரிப்பதனால் வேலையின்மை தடுக்கப்படுகிறது. ஒட்டுமொத்தத் தேவை ( Aggregate Demand ) மொத்த பொருளாதாரச் செலவுகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவைகள் நுகர்வுச் செலவு ( C ) முதலீட்டுச் செலவு (
|
I ) , அரசுச் செலவு ( G ) நிகர வணிகச் செலவு ( X - M ). ஒட்டு மொத்தச் செலவு என்பது மேலே கூறப்பட்டுள்ள அனைத்துச் செலவுகளையும் குறிக்கும். எனவே ஒட்டுமொத்த தேவை சார்பு இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. AD = C + | + G + ( x - M )........ ( 1 ) இச்சார்பு ஒட்டுமொத்த தேவை என்பது நுகர்வு ( C ) , முதலீடு ( I ) , அரசுச் செலவு ( G ) மற்றும் நிகர வணிகச் செலவு ( x - m ) இவற்றின் கூடுதலுக்குச் சமமாகும் ஒட்டுமொத்தத் தேவை என்பது பொருளாதாரத்தில் வாங்குவோர் அனைவரின் திட்டமிட்ட செலவின் மொத்த மதிப்பே ஆகும். ஒரு குறிப்பிட்ட காலத்தில்
|
பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த தேவையை இது குறிக்கிறது. மேலும் ஒட்டு மொத்தத் தேவை என்பது மக்கள் வாங்க விரும்பும் ஒட்டுமொத்த பண்டங்களின் அளவே ஆகும். பொருளியலில் ஒருவரது செலவு மற்றவருக்கு வருமானமாகும். பொருளாதாரத்தில் மொத்தச் செலவு மொத்த வருமானத்திற்குச் சமமாகும். அதாவது மொத்த வருமானம் ( Y ) = மொத்தச் செலவு ( AD ). ஃ Y = AD சமன்பாடு 1 ல் இவ்வாறு எழுதலாம். Y = AD = C + I + G + ( X - M ) OrY = C + T + G + ( X - M ) ( 2 ) கீன்ஸ் அனைத்து முக்கியத்துவத்தையும் ' ஒட்டுமொத்த உற்பத்தி சார்பு ’ க்கே கொடுத்தார்.
|
பொருளியலறிஞர்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாக இக்கூறுகளை புறக்கணித்தனர். ஒட்டுமொத்தச் செலவுச் சார்பு மாறாதது என வைத்துக் கொள்வோமேயானால் , கீன்ஸ் கோட்பாடு என்னவெனில் , வேலை வாய்ப்பு என்பது ஒட்டமொத்த தேவையைப் பொருத்துள்ளது. அது கீழ்காணும் இரு காரணிகளைப் பொருத்துள்ளது. 1. நுகர்ச்சி நாட்டம் ( Propensity to Consume ) 2. முதலீட்டுத் தூண்டல் ( Inducement to Invest ) நுகர்வுச் சார்பு மக்கள் பெருவாரியான வருமானத்தை பண்ட நுகர்வுகளுக்குச் செலவிடுகின்றனர். சிலர் வருமானத்தை முழுவதுமாக செலவு செய்கின்றனர். வேறு சிலர் ஒரு
|
பகுதியைச் செலவு செய்து மீதத்தை சேமிக்கின்றனர். மொத்தத்தில் சமுதாயம் எவ்வளவு செலவு செய்கிறது ? எவ்வளவு சேமிக்கிறது ? இது வருமானத்திற்கும் நுகர்விற்கும் இடையே உள்ள தொடர்பாகும். ‘ நுகர்வுச் சார்பு ’ என்பது வருமானத்திற்கும் நுகர்வதற்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்குகிறது. நுகர்வு சார்பு என்பது இரண்டு அல்லது அதற்குமேல் உள்ள மாறிலி ( Variables ) களின் தொடர்பைக் குறிக்கும். பல்வேறு வருமான நிலைகளில் நுகர்விற்காகச் செலவிடப்பட்ட வருமானம் ‘ நுகர்ச்சி நாட்டம் ‘ ( Prospersity to consume ) ஆகும். வருமானத்திற்கும் ,
|
நுகர்விற்கும் நேரடித் தொடர்புள்ளது என்கிறார் கீன்ஸ். நுகர்வுச் சார்பு அல்லது நுகர்ச்சி நாட்டம் என்பது வருமானத்திற்கும் நுகர்ச்சிக்கும் இடையே உள்ள சார்ந்த விகிதாச்சாரமே ( Functional Relationship ) ஆகும். கணிதமுறைப்படி இத்தொடர்முறை கீழ்கண்டவாறு குறிப்பிடட்பபடுகிறது. C = a + by C = 4 + 0.8 Y மேற்படி சமன்பாடு கூறவதென்னவென்றால் நுகர்வு என்பது வருமானத்தை ( Y ) பொருத்தது. குறியீடு குறிப்பிடுவது வருமானம் உயர நுகர்வும் உயர்வடைகின்றது என்பது தெளிவு. ஆனால் , வருமானம் உயர்வடைந்த அளவிற்கு நுகர்வின் உயர்வு வீதம்
|
அதிகரிக்காது. ஏனெனில் , செலவழிக்கப்படாத வருமானத்தின் ஒரு பகுதி சேமிக்கப்படும். இவ்கூறுகள் ‘ கீன்ஸ் ’ நுகர்வுக் கோட்பாட்டில் விளக்கப்பட்டுள்ளது. “ உளவியல் ரீதியாக சமுதாயத்தில் உண்மை வருமானம் உயரும் போது ஒட்டுமொத்த நுகர்வு அதிகரிக்கும் , ஆனால் வருமானம் உயர்ந்த அளவுக்கு அல்ல ” என்கிறார் கீன்ஸ். குறுகிய காலத்தில் மக்களின் நுகர்வுப் பழக்கவழக்கங்கள் ஓரளவு மாறாமல் இருப்பதால் ‘ நுகர்ச்சி சார்பும் ’ நிலையாக இருக்கிறது என்பதை கீன்சு தெளிவுபடுத்தினார். வருமானம் மற்றும் நுகர்விற்கு இடையே உள்ள தொடர்பை மேலே உள்ள
|
வரைபடத்தின் மூலம் உணர்த்த முடியும். நிலை அல்லது செங்குத்து அச்சு நுகர்வுச் செலவை ‘ C ’ என்ற குறியீடு மூலம் உணர்த்துகிறது. கிடைமட்ட அச்சு வருமானம் அல்லது உற்பத்தியை ‘ Y ’ குறியீடு மூலம் குறிப்பிடுகிறது. நுகர்வுச் செலவு ‘ CC ’ சமன்பாட்டின் மூலம் இவ்வாறு கூறலாம். C = 4 + 0.8 Y நுகர்வு வளைகோடு CC குறுகிய கால வளைகோடாகும். வருமானம் ( O ) பூஜ்யமாக இருந்தாலும் நுகர்வு நடைபெறுகிறது. வருமானம் பூஜ்யமாக இருக்கும் போது முதல்கட்ட நுகர்வு 4 ஆகும். இது வருமானத்தால் பாதிக்கப்படாது. வருமானம் பூஜ்யமாக இருப்பினும் , கடன் பெற்றோ
|
அல்லது வெகுமதியாகவோ மக்கள் குறைந்த பட்ச அளவு செலவு செய்கின்றனர். வருமானத்தோடு தொடர்பில்லாத இந்நுகர்வு ' தன்னிச்சை நுகர்வு ' ( Autonomous Consumption ) என அழைக்கப்படுகிறது. எனவே தான் செங்குத்து அச்சில் வளைக்கோடு ‘ C ’ , புள்ளி ‘ 4’ல் தொடங்குகிறது. சமன்பாட்டில் குறிப்பிடுவது 80 விழுக்காடு கூடுதல் வருமானம் நுகர்விற்கு செலவழிக்கப்படுகிறது. இதற்கு இறுதிநிலை நுகர்வு நாட்டம் ( Marginal Prospensity to Consume ) எனப்பெயர். இறுதிநிலை நுகர்வு நாட்டம் என்பது ‘ வருமான மாற்றத்தினால் ஏற்பட்ட நுகர்வு மாற்றத்தித்தின் வீதம் ’
|
ஆகும். எனவே இறுதி நிலை நுகர்வு நாட்டம் என்பது ( MPC ) நுகர்வு மாற்றத்தில் ஏற்பட்ட வீத அளவு ஆகும். Page 185 of 236 நுகர்வு மாற்றம் வருமான மாற்றம் இறுதிநிலை நுகர்வு நாட்டம் ( MPC ) அல்லது இறுதிநிலை நுகர்வு நாட்டம் சரிவுக்கோடு = 2. 3. = AC என்பது நுகர்வில் ஏற்படும் மாற்றம் AY என்பது வருமானத்தில் ஏற்படும் மாற்றம் நுகர்வுச் சார்பு சரிவுக் கோடு அல்லது ஏதேனும் ஒரு நேர்கோடு கணக்கிடப்படுவது எவ்வாறு எனில் செங்குத்து மாற்றத்தைக் கிடைமட்ட மாற்றத்தால் வகுத்தலின் மூலம் கிடைக்கப் பெறுவதாகும். குறியீடு மாற்றத்தைக்
|
குறிக்கிறது. அல்லது சரிவுக்கோடு இவ்வாறு கணக்கிடலாம். AC AY குறுகிய காலத்தில் நுகர்ச்சி நாட்டம் நிலையாக இருப்பதாகக் கொள்வோம். வளைகோட்டின் சரிவைப் பொருத்து , கொடுக்கப்பட்ட வருமானத்தில் எவ்வளவு செலவிடப் படுகிறது எனத் தெரிய வருகிறது இவ்வாறு , நுகர்வுச் சார்பு பொதுவாக கோட்டுச் சமன்பாட்டின் மூலம் உணர்த்தப்படுகிறது. அதாவது Y = a + by இங்கு ‘ a ’ என்பது தன்னிச்சை நுகர்வினைக் குறிக்கும். சரிவுக் கோடு ‘ b ’ என்பது இறுதிநிலை நுகர்வு நாட்டம் ( MPC ) ஆகும். இறுதிநிலை நுகர்வு நாட்டம் வருமான மாற்றத்தினால் ஏற்படும் நுகர்வு
|
மாற்றத்தின் விகிதம் ஆகும். பொருளாதாரத்தில் செங்குத்து மாற்றம் கிடைமட்ட மாற்றம் இங்கே 0.8 குறிப்பிடுவது கூடுதலாக ஈட்டிய வருமானத்தில் 80 விழுக்காடு நுகர்வுக்கு செலவிடப்படுகிறது. மீதும் உள்ளதொகை சேமிக்கப்படுகிறது. சுருங்கக் கூறின் ‘ நுகர்வுச் சார்பு ’ என்பது வருமானத்தில் நுகர்வுக்காக ஆகும் செலவைக் குறிக்கும். இதனால் , பொருளாதாரத்தில் நுகர்வு என்பது வருமான அளவைப் பொருத்தது ஆகும். வருமானம் அதிகரிக்கும் போது நுகர்வும் அதிகரிக்கும். வருமானத்திற்கு தகுந்தார்போல் மக்கள் அதிகமாக செலவு செய்வதாக வைத்துக் கொண்டால்
|
அவர்களின் இறுதிநிலை நுகர்வு நாட்டம் ( MPC ) அதிகமாக இருக்கும். கீன்ஸ்சின் நுகர்வு விதி கீழ்க்காணும் மூன்று சிறப்புக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டது ‘ நுகர்வுச் சார்பு ' கீன்ஸ் சின் வருமான நிர்ணயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1. வருமான அதிகரிப்பும் , நுகர்வு அதிகரிப்பும் ஒரே விகிதத்தில் இருப்பதில்லை. ‘ வருமான அதிகரிப்பை ’ நுகர்வு மற்றும் சேமிப்பு பகிர்ந்து கொள்கின்றன. வருமான அதிகரிப்பு , நுகர்வு மற்றும் சேமிப்பு அதிகரிப்பை ஒரே நேரத்தில் ஏற்படுத்துவதில்லை. சேமிப்பு வீதம் அதிகரிக்கும் போது நுகர்வு வீதம்
|
குறையும். சேமிப்புச் சார்பு ( Saving Function ) வருமானத்தில் நுகர்வுக்கு செலவிடப்பட்டது போக மீதம் உள்ளது சேமிப்பு எனப்படும். சேமிப்பு என்பது ‘ கைவிடப்பட்ட நுகர்வு ’ ஆகும் ( Consumption foregone ). சேமிப்பு அதிகரிக்கும்போது நுகர்வு குறையும். கீன்ஸ் கூற்றுப்படி ஒரு பொருளாதாரத்தில் சேமிப்பின் அளவானது நுகர்வு போன்று வருமானத்தைத் பொருத்துள்ளது. சேமிப்பிற்கும் வருமானத்திற்கும் இடையே உள்ள தொடர்பு கணிதச் சமன்பாட்டின்படி கூறப்பட்டால் அதனை ‘ சேமிப்புச் சார்பு ’ என அழைக்கலாம். S = - a + by S = - 4 + 2y இங்கு S என்பது
|
சேமிப்பு , Y என்பது வருமானம் , a , என்பது சேமிப்பல்லாது ( dissaving ) , இறுதிநிலை சேமிப்பு நாட்டம் ( MPS ) என்பது வருமானத்தில் ஏற்படும் மாற்றத்தால் சேமிப்பில் ஏற்படும் மாற்ற விகித அளவு. இதுவே , இறுதிநிலை சேமிப்பு நாட்டத்தின் மாற்றவிகிதம் ஆகும். ( அல்லது ) AS இறுதிநிலை சேமிப்பு நாட்டம் ( MPS ) = ÀY இங்கு AS என்பது சேமிப்பில் மாற்றம் , AY என்பது வருமானத்தில் மாற்றம் , வருமானம் அதிகரிக்கும்போது இறுதிநிலை நுகர்வு நாட்டம் ( MPC ) குறையத் தொடங்கினால் , இறுதிநிலை சேமிப்பு நாட்டம் ( MPS ) அதிகரிக்கக்கூடும்.
|
இறுதிநிலை நுகர்வு நாட்டம் ( MPC ) மாறாமல் இருக்கும். எனவே , வருமானம் என்பது நுகர்வு மற்றும் சேமிப்பினை உள்ளடக்கியது. எனவே Y = C + S MPC + MPS = 1 MPS = 1 MPC அல்லது MPC = 1- MPS அல்லது MPC + MPS = 1 ஒரு பொருளாதாரத்தில் தாங்கள் பெறும் கூடுதல் வருமானத்தில் குறைவாக செலவு செய்தால் இறுதிநிலை நுகர்வு நாட்டம் ( MPC ) குறைவாக இருக்கும் மற்றும் CC வளைகோடு சற்று குறைவான சரிவுடன் காணப்படும். மாறிலி ( Costant ) ' a ' என்பது ' சேமிப்பல்லாது , ( Dissaving ). ஏனெனில் இது வருமானத்திற்குத் தொடர்பில்லாத ‘ தன்னிச்சை ’ நுகர்வு
|
( Autonomous Consumption ) ஆகும். நீண்டகாலத்தில் ‘ தன்னாட்சி நுகர்வு ’ பூஜ்யம் ஆகும். நீண்ட காலத்தில் வருமானமின்றி குடும்பத்தினர் நுகர்வு செய்ய முடியாது. எனவே நீண்ட காலத்தில் ‘ நுகர்வு ’ முற்றிலும் வருமானத்தைப் பொருத்தே உள்ளது. ' C ' வளைகோடு தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்கிறது. நுகர்வை நிர்ணயிக்கும் பிற காரணிகள் நுகர்வு செய்வதற்கு வருமானம் மிக முக்கியமான காரணியாக இருப்பினும் , வேறு சில காரணிகளும் நுகர்வு நாட்டத்தை மாற்றமடையச் செய்யவல்லன. அவையாவன. 1. வருமானப் பகிர்வு 3. 2. செல்வப் பகிர்வின் அளவு மற்றும் இயல்பு
|
மக்கள் தொகையின் வயதுப் பாகுபாடு 4. பணவீக்கம் அல்லது விலை அளவு அரசின் கொள்கைகள் 5. 6. வட்டி வீதம் 7. எதிர்பார்ப்புகள் 8. விளம்பரங்கள் 9. வாழ்க்கைத்தர வளர்ச்சி 10. கலாச்சார மாற்றம் முன்னமே விவாதித்தபடி ஒட்டுமொத்த தேவை ( Aggregate Demand ) ‘ நுகர்வுச் சார்பு ’ மற்றும் ‘ உற்பத்திச் சார்பு ' என இருபகுதிகளைக் கொண்டது. எனினும் குறுகிய காலத்தில் நுகர்வுச் சார்பு அல்லது இறுதிநிலை நுகர்ச்சி நாட்டம் ( MPC ) மாறாதிருக்கும். எனவே , கீன்ஸ் முதலீட்டுச் சார்புக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். முதலீட்டுச் சார்பு
|
பொருளாதாரத்தில் ‘ முதலீடு ’ சிறப்புப் பொருளைக் கொண்டுள்ளது. அதாவது ஏற்கனவே உள்ள உற்பத்தித் திறன்களுக்கு கூடுதல் பொருள் சேர்ப்பது ( நிரந்தர முதலீடுகளின் இருப்பு சாதனங்கள் , இயந்திரங்கள் , கட்டடங்கள் , மூலப்பொருள்கள் , தேய்மானத்தால் ஏற்படும் மாற்றச் செலவுகள் போன்றவைகளாகும். இது வருங்கால உற்பத்திக்கு அடிப்படையாகும். முதலீடு என்பது ‘ மொத்த செலவு ' அல்லது ஒட்டுமொத்த செலவிற்கு முக்கிய அடிப்படைக் கூறு ( Componence ) ஆகும். கீன்ஸ்சின் கூற்றுப்படி முதலீடு என்பது ‘ நிதி முதலீடு ’ அல்ல. ஆனால் உண்மை முதலீடு ஆகும்.
|
முதலீடு என்பது உண்மை கூடுதல் முதலீட்டுச் சொத்தைக் குறிக்கும். நிதி முதலீடுகளான பத்திரங்கள் அல்லது பங்குகள் வாங்குவது இதில் அடங்காது. முதலீட்டின் தனித்தன்மையையே கீன்ஸ் தனது கோட்பாட்டிற்கு அடித்தளமாகக் கொண்டுளளார். ஒட்டுமொத்தத் தேவை அதிகரிக்கக் காரணம் முதலீட்டின் முக்கியத்துவம். இது மற்றொரு முக்கிய காரணியாக இருக்கிறது. நுகர்வு , வருமானத்தின் நிலையான சார்பு ஆகும். நுகர்வுச் செலவில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஒட்டுமொத்த தேவையில் மாற்றம் ஏற்படாது. ஏனெனில் நுகர்வுச் செலவு என்பது வருமானத்தைப் பொருத்துள்ளது. வருமான
|
அளவைப் பொருத்து தன்னாட்சிக் செலவான முதலீட்டு தீர்மானிக்கப்படுகிறது. இது வருமானம் மற்றும் வேலைவாய்ப்பில் நிலைத்தன்மையற்ற மற்றும் மாறுபாட்டிற்கு காரணமென கீன்ஸ் கண்டறிந்தார். ‘ முதலீடு வீழ்ச்சி ' 1930 ன் உலகப் பெருமந்ததிற்கு காரணமாகவும் அமைந்தது. முதலீட்டை நிர்ணயக்கும் காரணிகள் வேலை வாய்ப்பு முதலீட்டைச் சார்ந்தது என்கிறார் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதால் வேலை வாய்ப்பிலும் ஏற்றத்தாழ்வுள்ளது. அளவைத் தீர்மானிப்பதை நாம் விவாதிப்போம். முதலீட்டுச் செலவு பின்வருவனவற்றால் கீன்ஸ். முதலீட்டில் எனவே முதலீட்டு
|
தீர்மானிக்கப்படுகிறது. 1. வருங்கால இலாபம் ஈட்டுவதன் எதிர்பார்ப்பு ( அல்லது ) வியாபார நம்பிக்கை. 2. வட்டி வீதம் நிறுவனங்கள் தங்களின் இலாபத்திலிருந்தோ அல்லது கடன் வாங்கியோ முதலீடு செய்கின்றன. சேமிப்புகளைப் பெற்றிருக்கும் குடிமக்கள் ( Households ) தங்கள் பணத்தை இலாபம் பெறுவதற்காக ‘ முதலீடு’செய்வதா அல்லது வைப்பு நிதி மூலம் வட்டி பெறுவதா என்பதைத் தீர்மானிக்கிறார்கள். எதிர்பார்க்கும் இலாபம் வட்டி வீதத்தை விட உயர்வாக இருந்தால் குடிமக்கள் முதலீடு செய்வர். இல்லையெனில் தங்களின் பணத்தை ‘ வட்டிக்காக ’ வைப்பு நிதி யில்
|
செலுத்துவார்கள். நிறுவனங்கள் தங்களின் சொந்த இலாபத்தை முதலீடு செய்வதை இவ்வாறே தீர்மானிக்கின்றன. நிறுவனங்கள் முதலீட்டிற்காக கடன் பெறுவதாக வைத்துக் கொண்டால் அவை , அதற்கான வட்டியினை அளிக்க வேண்டியிருக்கும். எனவே , வட்டியையும் ஆரம்ப முதலீட்டின் செலவையும் விட எதிர்பார்க்கும் இலாபம் அதிகமாக இருந்தால் நிறுவனங்கள் கடன் வாங்கி பணத்தை முதலீடு செய்யும். இவ்வாறு மேற்காண்டவற்றுள் முதலீடு செய்ய முடிவெடுத்தல் வட்டிவீதம் மற்றும் வியாபார நம்பிக்கையைத் பொருத்தே உள்ளது. இவ்விரண்டில் வருங்கால இலாபம் ஈட்டுதலின் எதிர்பார்ப்பு (
|
அல்லது ) வியாபார நம்பிக்கையே வட்டிவீதத்தைக் காட்டிலும் முக்கியத்துவம் பெறுகிறது. இது ஏனெனில் வட்டி வீதம் குறுகிய காலத்தில் மாறாமாலிருத்தலே ஆகும். இலாபம் சார்ந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் எதிர்காலத்தில் நிச்சயித்துவமில்லாத பல தீர்மானிகளைக் கொண்டுள்ளன. தனியார் முதலீடுகள் இதனைப் பொருத்தே உள்ளது. நிச்சயமற்ற ( Bleak ) வளர்ச்சி , முதலீட்டில் வீழ்ச்சியை ஏற்படுத்தி வேலை வாய்ப்பைப் பாதிக்கும். சேமிப்பும் முதலீடும் சேமிப்பு மற்றுமொரு முக்கிய கருப்பொருள் ஆகும். இது முதலீட்டோடு நேரடி தொடர்புடையது. பொருளாதாரத்தில்
|
சேமிப்பும் முதலீடும் அடிப்படைச் செயல்பாடுகள் ஆகும். முதலீட்டுஅமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சேமிப்பு அவசியமானது. சேமிப்பு சரியான வகையில் திரட்டப்பட்டு , பங்களிக்கப்பட்டு , மூலதன இருப்பை அதிகரிக்க முதலீடு செய்யப்பட்டு உற்பத்திப் பெருக்கத்தின் மூலம் பொருளாதார செல்வம் வளர்ச்சி பெறுதலே சேமிப்பினால் ஏற்படும் பொருளாதார மேம்பாடு எனலாம். எனவே மொத்தசேமிப்பும் , முதலீடும் சமமாகும். ஆனால் , அவை எப்போதும் சமநிலையில் இருக்காது. சேமிப்பு தனக்குத்தானே முதலீடு செய்து கொள்கிறது என தொன்மைப் பொருளியல் அறிஞர்கள்
|
கருதினார்கள். சேமிக்கும் முடிவும் , முதலீடு செய்யும் முடிவும் ஒரு நபராலேயே மேற்கொள்ளப்படுகிறது என நினைத்தார்கள். ஆனால் சேமிப்பும் முதலீடும் வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு காரணங்களுக்காக , வெவ்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது என கீன்ஸ் வாதிட்டார். இதனால் , சில நேரங்களில் சேமிப்பு முதலீட்டைவிட அதிகரிக்கும்போது , ஒட்டுமொத்த தேவையில் பற்றாக்குறை ஏற்பட்டு வேலையின்மைக்கு வழி வகுக்கும். சேமிப்பு ( S ) மற்றும் முதலீட்டுக்கு ( I ) இடையேயான இடைவெளி , வரிகள் மற்றும் அரசுச் செலவுகள் போன்ற நேரடி முறையிலோ அல்லது மறைமுக
|
வழியான பணத்தின் அளிப்பை தூண்டக்கூடிய செயல்பாடுகளின் மூலமாகவோ அரசின் செலவினங்களை கூட்டுவதன் மூலம் சரி செய்யப்படுகிறது என்கிறார் கீன்ஸ். இதனால் S = | எனவே Y = C + | அல்லது Y = C + s வட்டி வீதம் ( நீர்மை விருப்பக்கோட்பாடு ) எந்த ஒரு வியாபார நோக்கமும் பணத்தின் தற்போதைய அளிப்பை தூண்டும் காரணியான வட்டியை அடிப்படையாகக் கொண்டது. ‘ ஒட்டுமொத்த முதலீட்டை ’ தீர்மானிக்கும் மற்றுமொரு காரணியாக வட்டிவீதம் உள்ளது. உண்மையில் கீன்சின் வேலைவாய்ப்புக் கோட்பாடு வட்டிவீதத்துடன் தொடங்குகிறது. வட்டி , முதலீட்டையும் வேலை வாய்ப்பையும்
|
பாதிக்கிறது. கீன்ஸ் தனது ‘ நீர்மை விருப்பக் கோட்பாட்டில் வட்டியின் அவசியம் , முக்கியத்துவம் பற்றி விளக்கினார் ’. ‘ நீர்மை விருப்பக் கோட்பாடு ’ கீன்சின் மாபெரும் சாதனையாகக் கருதப்பட்டது. கீன்ஸ் கூற்றுப்படி வட்டி வீதம் என்பது “ குறிப்பிட்ட கால அளவிற்கு பணத்தை விட்டுக் கொடுப்பதற்கான வெகுமதி “ ஆகும். நீர்மை விருப்பம் என்பது ( Liquidity Preference ) மக்களின் கையிருப்பு ( ரொக்கம் ) பணம் ஆகும். நீர்மம் என்பது ரொக்கப் பணத்தைக் குறிக்கும். மக்கள் ஏன் ‘ ரொக்கப் பணம் ’ வைத்துள்ளனர். ஏனெனில் , ரொக்கப் பணம் ஒரு நீர்மச்
|
சொத்து எனவே மக்கள் அதனை ரொக்கப் பணமாக வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். நீர்மை விருப்பத்திற்கான மூன்று காரணங்களாக ‘ கீன்ஸ் ’ கூறுவது பின்வருமாறு 1. பரிமாற்ற நோக்கம் ( Transaction Motive ) 2. முன்னெச்சரிக்கை நோக்கம் ( Precautionary Motive ) 3. ஊக வாணிக நோக்கம் ( Speculative Motive ) அன்றாடச் செலவுகளை மெற்கொள்ள வைத்திருக்கும் ரொக்கப்பணமே பரிமாற்ற நோக்கமெனப்படும். மருத்துவச் செலவுபோல எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்க ரொக்கமாக பணத்தை வைத்திருப்பர். இதுவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனப்படும். சந்தையின் நன்மைகளான
|
பத்திரங்கள் , பங்குகள் முதலியவற்றை இலாப நோக்கத்திற்காக வாங்கும் பொருட்டு ரொக்கப் பணத்தை பெற்றுள்ளதை ஊக வாணிப நோக்கம் என்றழைக்கிறோம். சந்தையில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை ஊகித்தறிந்து இலாப நோக்கத்திற்காக செயல்படுவதை ஊக வாணிப நோக்கம் என்கிறார் கீன்ஸ். நீர்மை விருப்பம் என்பது வட்டி வீதத்தைப் பொருத்தது. வட்டி வீதம் அதிகமாக இருக்கும்போது மக்கள் அதன் பயனைப் பெற ரொக்கப் பணத்தை விடுவிக்க ( முதலீடு செய்ய ) விரும்புவார். ஏனவே வட்டி வீதம் உயர்வாக இருந்தால் நீர்மை விருப்பம் குறைவாக இருக்கும். அதே நேரத்தில்
|
வட்டிவீதம் குறைவாக இருந்தால் நீர்மை விருப்பம் அதிகமாக இருக்கும். மனித பழக்க வழக்கங்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் நீர்மை விருப்பமும் ஒரே Page 496 of 236 மாதிரியானவை என்கிறார் கீன்சு. நீர்மை விருப்பம் பணத்தின் தேவையைப் பொருத்தது. மூலதனத்தின் விலையைத் தீர்மானிப்பது பணத்தின் தேவையைப் பொருத்தது. மறுபுறம் பணத்தின் அளிப்பானது அரசின் பணக் கொள்கை மற்றும் வணிக வங்கிகளினாலான கடன் எழுச்சியை ( Credit Creation ) பொருத்து அமைகிறது. சுருங்கக் கூறின் கீன்சின் முதலீட்டுச் சார்பு வட்டிவீதத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
|
வட்டி வீதம் மாறாமல் ஒரே நிலையில் இருந்தால் முதலீடு அதிகரிப்பதன் காரணம் எதிர்கால வியாபார நம்பிக்கையாகும். எளிய வருமான நிர்ணயக் கோட்பாடுகள் குறுகிய காலத்தில் நாட்டின் வருமான அளவு , வேலை வாய்ப்பில் ஏற்படும் மாற்றத்தைப் பொருத்து மாறுவதாக கீன்ஸ் குறிப்பிடுகிறார். ஒட்டுமொத்தத் தேவை மற்றும் ஒட்டுமொத்த அளிப்பை பொருத்தே வேலை வாய்ப்பளவு அமைகிறது. ஒட்டுமொத்த தேவை மற்றும் ஒட்டு மொத்த அளிப்பிற்கும் இடையே உள்ள ஒப்பீடு வருமானத்தின் சமநிலை அளவு ஆகும். இவ்விரண்டும் சமமாக இருக்கும் போது ‘ முழு வேலை வாய்ப்பு ’ நிலவுகிறது.
|
இவ்வாறு , வருமான நிர்ணயம் , உற்பத்தி நிர்ணயம் மற்றும் வேலை வாய்ப்பு நிர்ணயம் ஆகியவற்றுக்கு இது பயன்படுகிறது. எடுகோள்கள் வருமான நிர்ணயத்தை விளக்க கீழ்காணும் எடுகோள்களை கீன்சு பயன்படுத்துகிறார். இரு பிரிவினரே உள்ளனர். நுகர்வோர் ( C ) மற்றும் நிறுவனங்கள் ( I ). பொருளாதாரத்தில் அரசின் துாண்டுதல் ஏதும் இல்லை. ( G ) வேறுவகையில் சொல்வதானால் அரசின் செலவு ‘ பூஜ்ஜியம் ’ ஆகும். வரிகள் ஏதும் இல்லாததால் தனி நபர் வருமானம் அனைத்தும் செலவிடக் கூடிய வருமானமேயாகும். பொருளாதாரம் மூடப்பட்ட ( closed one ) பொருளாதாரம் ஆகும்.
|
அயல்நாட்டு வாணிபத்தால் தூண்டுதல் ஏதும் இல்லை ( X - M ) அதாவது ( X - M ) = பூஜ்ஜியம் ஆகும். கூலி மற்றும் விலையில் மாற்றம் ஏதும் இல்லை. ( நிலையாக இருக்கும் ). வேலைக்கு அமர்த்தப்படாத வளங்கள் இருப்பதால் ' முழுவேலை வாய்ப்பு ’ நிலையை விட குறைவான நிலையே நிலவுகிறது. வட்டி வீதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை. ‘ முதலீட்டு ’ தன்னிச்சையானது எனவே விலை மட்டத்தைப் பொருத்தோ வட்டி விதத்தைப் பொருத்தோ அது அமைவதில்லை. நுகர்வுச் செலவு ஒரே நிலையானது முதல் மூன்று எடுகோள்களின் காரணமாக அடிப்படை சமன்பாடு Y = C + I + G + ( X - M )
|
என்ற சமன்பாடு சுருக்கப்பட்டு Y = C + I ஆகிறது வாய்ப்பளவையும் ( equilibrium level of employment ) தீர்மானிக்கிறது. ‘ E ’ புள்ளியில் நாம் பெறுவது வருமானம் , உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பு சமநிலை ஆகும். ' வேலை வாய்ப்புச் சமநிலை ' ( equilibrium level of employment ) முழுவேலை வாய்ப்பை ஒத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு வருமான நிலையிலும் ஒட்டுமொத்தத் தேவையின் அதிகரிக்கும் போது AD கோடு மேல் நோக்கிச் செல்லும். எடுத்துக்காட்டாக அரசு தனது செலவுகளை அதிகரிக்கும் போது இந்நிலை ஏற்படுகிறது. இது சமநிலை வருமானம்
|
மற்றும் உற்பத்தியை உயர்த்துகிறது. இதுபோலவே , ‘ AD ' கோடு கீழ்நோக்கிச் செல்லும் எனவே சமநிலை உற்பத்தி குறையும். பெருக்கி ( Multiplier ) இது வருமானம் மற்றும் வேலை வாய்ப்பைத் தீர்மானிக்கும் காரணி ஆகும். வருமானம் மற்றும் வேலை வாய்ப்பைத் தீர்மானிக்கும் காரணிகளான ‘ நுகர்வுச் செலவு ’ மற்றும் ' முதலீட்டுச் செலவு ' களைப் பற்றி இதுவரைப் பார்த்தோம் ( C + I ) அவற்றுள் தன்னாட்சி நுகர்வு ( Autonomous Consumption ) மற்றும் முதலீடு வருமானத்துடன் தொடர்புடையதல்ல. வருமானம் மற்றும் வேலை வாய்ப்பைத் தீர்மானிக்கும் காரணிப் பெருக்கி
|
ஆகும். முதலீட்டில் ஏதேனும் உயர்வு இருந்தால் , அது பெருக்கியின் விளைவாக வருமானத்தை பன்மடங்காக உயர்த்துகிறது. ‘ பெருக்கி ’ ( Multiplier ) என்பதன் கருத்து ஆரம்ப முதலீடு மற்றும் நாட்டு வருமானத்தில் ( GNP ) இறுதி உயர்வு ஆகியவற்றிற்கிடையே உள்ள உறவை உணர்த்துகிறது. அதாவது ஆரம்ப முதலீட்டால் வருமானத்தில் ஏற்பட்ட விரிவாக்கத்தின் ஏற்படும் விளைவே ‘ பெருக்கி’யின் விளைவு ஆகும். இது வருமானச் சமநிலையினால் ஏற்படும் மாற்றத்திற்கும் செலவு மாற்றத்திற்கும் இடையே உள்ள விகிதம் ஆகும். சமநிலை விலையில் ஏற்படும் மாற்றம் செலவில்
|
ஏற்படும் மாற்றம் பெருக்கி ( K ) = அல்லது K = இங்கு AY என்பது சமநிலை விலையில் ஏற்படும் மாற்றம் ஆகும். AI என்பது செலவில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கும். எனவே K என்பது முதலீட்டில் ஏற்பட்ட உயர்வினால் எத்தனை முறை வருமானம் உயர்ந்தது என்பதன் கெழு ( Co - Efficient ) ஆகும். அரசுச் செலவு வேறொரு முறையில் K ஐ கணக்கிடுவதனால் K = | / MPS இங்கு MPS = இறுதிநிலை சேமிப்பு நாட்டம் ஆகும் ( அல்லது ) K = 1 / 1 - MPC இங்கு MPC = இறுதிநிலை நுகர்வு நாட்டம் ஆகும். எளிய வருமான நிர்ணயத்தை ‘ இருவகையான செலவு ’ மூலம் விவாதித்தோம். ஒன்று
|
நுகர்வுப் பண்டங்களை உற்பத்தி செய்வதற்காக ஆகும். நுகர்வுச் செலவு ( C ) இரண்டாவது மூலதனப் பண்டங்களை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு , முதலீட்டுச் செலவு ( I ). மூன்றாவது , பொதுச் செலவு ( G ) அரசால் செய்யப்படுவதாகும். இது பொது பணிகளான எழுத்தறிவு , பொதுச் சுகாதாரம் , சத்துணவு , சமூக நலம் மற்றும் இதுபோல பல சமுதாய நலனுக்காகச் செலவிடப்படுவதாகும். அரசு பண்ட உற்பத்தி ஏதும் செய்வதில்லை என்ற கருத்தைத் தொன்மைப் பொருளியலறிஞர்கள் கொண்டிருந்தனர். கீன்ஸ் இக்கூற்றை மறுத்ததோடு அல்லாமல் பொருளாதாரத்தில் அரசு செயல்பாடுகள் ( வரி
|
விதிப்பு மற்றம் செலவுகள் ) பெருத்த மாற்றத்தை ஏற்படுத்துகிறது என வாதிட்டார். பேரியல் நோக்கங்களான வளர்ச்சி மற்றம் பொருளாதார நிலைப்பாடு ( Economy Stability ) ஆகியவற்றிற்கு வரி விதிப்பு மற்றும் பொதுச் செலவு இவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார். இப்பயன் நிதியியல் கொள்கை ( Fiscal Policy ) எனப்படும். ‘ வீழ்ச்சி’யிலிருந்து ( Depression ) பொருளாதாரத்தை மீட்டுக் கொணரநிதியியல் கொள்கைப் பயன்படுகிறது என்பதை கீன்ஸ் நிருபணம் செய்தார். வீழ்ச்சியின் போது உறுதி தேவையை கூட்டுவதற்குப் பொதுச் செலவை பயன்படுத்திக்
|
கொள்ளலாம். பொருளாதாரத்தில் புகுத்தப்பட்ட பணம் தேவையைப் பெருக்கி அதன்மூலம் முதலீட்டையும் , வேலை வாய்ப்பையும் பெருக்குகிறது. இவ்வாறு ‘ பொது செலவு ' மீண்டும் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும். பல நாடுகள் கீன்சின் கொள்கைகளைப் பின்பற்றி 1930 ன் உலகப் பெருமந்தத்திலிருந்து தங்களை மீட்டுக் கொண்டன. இது முதல் அரசின் நிதியியல் கொள்கை பேரியல் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் பெற்றது. முடுக்கியின் கோட்பாடுகள் உயர்கிறது. பெருக்கிக் கோட்பாட்டின்படி முதலீடு அதிகரிப்பதால் வருமானம் பன்மடங்காக இவ்வாறு வருமான
|
உயர்வு ஏற்படுதலால் நுகர்வு உயர்வடைகிறது. தேவையின் உயர்வு நல்ல உந்தத்தை தருகிறது. கிடைக்கும் உற்பத்திச் சக்திகள் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. இது , தேவை அதிகரிப்பை ஈடு செய்வதற்காக அதிக முதலீட்டினை ஊக்குவிக்கிறது. தற்போது உள்ள உற்பத்திச் சக்திகள் பெருகும் தேவையை ஈடுசெய்யும் வகையில் இருக்காது என்பதால் புதிய முதலீடு மூலம் உற்பத்திச் சக்திகள் விரிவு படுத்தப்படும். எனவே , மூதலீட்டின் அளவு நுகர்வு மாற்றத்தால் ஏற்பட்ட வருமான மாற்றத்தின் விகிதத்தைப் பொருத்தது. இதுவே ‘ முடுக்கி ’ ( Accelerator ) யின் கோட்பாடு
|
ஆகும். இக்கோட்பாட்டின்படி நிகர முதலீடு வருமான மாற்றத்தோடு நேரடித் தொடர்பு உடையது ஆகும். பெருக்கிக் கோட்பாடு குறிப்பிடுவது வருமான அளவின் மீது முதலீட்டின் விளைவைப் பொருத்தது. முடுக்கிக் கோட்பாடு முதலீட்டு அளவின்மீது வருமான விளைவைப் பொருத்தது ஆகும். பணம் மற்றும் வட்டி வட்டி பற்றிய பணக்கோட்பாடு ஒன்றை கீன்ஸ் பயன்படுத்தினார். இதுவே வட்டி பற்றிய நீர்மை விருப்பக்கோட்பாடு ' எனப்படும். ( Liquidity Preference Theory of Interest ). கீன்ஸ் கூற்றுப்படி வட்டி என்பது பணத்தை பயன்படுத்திக் கொள்ள கொடுக்கப்படும் தொகை எனலாம்.
|
பணத்தின் தேவை ( நீர்மை விருப்பம் ) மற்றும் பணத்தின் அளிப்பு வட்டி வீதத்தை தீர்மானிக்கிறது. கீன்ஸ் கோட்பாடான நீர்மைத் தன்மைக் கோட்பாட்டின் சாராம்சம் என்னவெனில் “ பணத்தின் அளவு மற்றும் அதன் நீர்மைத் தன்மை நிலை வட்டி வீதத்தைத் தீர்மானிக்கிறது. ” தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் கருதியதுபோல் வட்டி என்பது சேமிப்பிற்கு அளிக்கப்படும் வெகுமதி அல்ல என்பதை கீன்ஸ் தெளிவுபடுத்தினார். வட்டிவீதம் நீர்மைத் தன்மையை குறிப்பிட்ட கால அளவிற்கு விட்டுபிரிதலுக்கு அளிக்கப்படும் வெகுமதியே ஆகும். வேறு விதமாகச் சொல்வதெனில் வட்டி வீதம்
|
மக்களின் நீர்மைத் தன்மை , அவர்களின் நீர்மை விருப்பத்தினால் ( Liquidity Preference ) ஏற்படும் மனமாற்றத்தைப் பொருத்ததாகும். 2.சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் 1. பேரியல் பொருளியல் சிந்தனையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் ஆ. J.M. கீன்ஸ் இ. மால்தஸ். நிலவுவதாக கருதுகிறது ஆ. மறைமுக வேலையின்மை ஈ. குறைவேலையின்மை அ. டேவிட் ரிகார்டோ இ. ஆடம் சுமித் தொன்மைப் பொருளியல் கோட்பாடு அ. வேலையில்லா நிலை இ. முழுவேலை நிலை பேரியல் பொருளாதாரத்தில் மையப் பிரச்சனை அ. வருமானமும் வேலைவாய்ப்பும் ஆ. விலையும் வெளியீடும் இ. வட்டியும்
|
பணமும் ஈ. ஏதுமில்லை பயிற்சி பகுதி – அ வருமான நிர்ணயம் பற்றிய எளிய கோட்பாட்டைவிளக்க கீன்சு -- பயன்படுத்தினார். அ.நுகர்வையும் முதலீட்டையும் ஆ. ஒட்டுமொத்த தேவையையும் , ஒட்டுமொத்த அளிப்பையும் இ. உற்பத்தியையும் செலவையும் ஈ. அனைத்தும் இறுதிநிலை நுகர்வு நாட்டம் அ. AS / AY இ. AP / AQ ஆ. C / Y ஈ. AC / AY மற்றும் ஆகிய இரண்டுக்கும் இடையே என்பது வருமான மாற்றுத்தினால் சேமிப்பில் ஏற்படும் மாற்ற விகிதத்தைக் 1930 ன் உலகப் பெருமந்தத்திற்கு காரணமாகவும் அமைந்தது. என்பது மக்களின் கையிருப்பு ( ரொக்கம் ) பணம் ஆகும். செங்குத்து
|
மாற்றம் / கிடைமாற்றம் C + S C + T + G + ( X - M ) நீர்மை விருப்பம் 1 / 1- MPC 19. ஒட்டுமொத்த தேவையும் , ஒட்டுமொத்த அளிப்பும் சந்திக்கும் புள்ளிக்கு என்ன பெயர் ? 20. பெருக்கியின் வாய்பாட்டை எழுதுக. கீன்சு ஒரிரு வார்த்தைகளில் விடையளிக்கவும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் தடையில்லா வாணிக பொருளாதாரத்தை முடக்கியது யாது ? J.B. சேயின் சந்தை விதியைக் கூறுக. வேலைவாய்ப்பு , வட்டி மற்றும் பணம் பற்றிய ஒரு பொதுக் கோட்பாட்டை உருவாக்கியவர் யார் ? பகுதி - ஆ பின்வரும் வினாக்களுக்கு நான்கு அல்லது ஐந்து வரிகளில்
|
விடையளிக்கவும். சந்தை விதியின் எடுகோள்களைக் கூறுக. உறுதித் தேவை என்றால் என்ன ? ஒட்டுமொத்த தேவை எந்த இரு காரணிகளைச் சார்ந்தது ? நீர்மை விருப்பக் கோட்பாட்டின் மூன்று நோக்கங்களைக் கூறுக. ‘ பெருக்கி ’ குறிப்பு வரைக. பகுதி – இ பின்வரும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளிக்கவும். 26. சேயின் அங்காடி விதியின் குறைபாடுகளைக் கூறுக. 27. கீன்சு கோட்பாட்டின் சாராம்சத்தை படம் வரைந்து விளக்குக. 28. நுகர்வுச் சார்பை வரைபடத்துடன் விளக்குக. 29. நுகர்வைத் தீர்மானிக்கும் வருமானம் தவிர பிற காரணிகளைக் கூறுக. 30. கீன்சின்
|
வருமான நிர்ணயம் பற்றிய எளிய கோட்பாட்டின் எடுகோள்களை விளக்குக. பகுதி – ஈ பின்வரும் வினாக்களுக்கு மூன்று பக்க அளவில் விடையளிக்கவும். 31. சேயின் அங்காடி விதியின் குறைகளை ஆராய்க. குறிப்பு வரைக : 1. ஒட்டுமொத்த தேவை 2. ஒட்டுமொத்த அளிப்பு 32. 33. வருமான தீர்மானம் பற்றிய எளிய கோட்பாட்டினை வரைபடத்துடன் விளக்குக. முன்னுரை பாடம் – 11 பணக் கொள்கை பணக் கொள்கையை படிப்பதற்கு முன் பணத்தின் தன்மை மற்றும் அதன் பணிகளைக் காண்போம். தற்காலப் பொருளாதாரத்தை பணப் பொருளாதாரம் என்று அழைக்கும் அளவிற்கு பணம் முக்கியத்துவம் வாய்ந்தது.
|
தற்காலப் பொருளாதாரம் பணமின்றி செயல்படாது. பொருளாதார முன்னேற்றத்தின் தொடக்க காலத்திலேயே பரிமாற்றத்திற்கான தேவை எழுந்தது. பரிமாற்றம் முதலில் பண்டமாற்று வடிவத்தில் ஏற்பட்டது. பண்ட மாற்று முறை என்பது பண்டங்களைக் கொடுத்து பண்டங்களை வாங்குதல் ஆகும். பணத்தைப் பயன்படுத்தாமல் நடைபெறும் வாணிபம் ஆகும். முற்காலத்தில் மனிதர்களின் விருப்பங்கள் எளிமையானதாகவும் மிகச் சிலவாகவும் இருந்ததால் பண்டமாற்று சிறப்பாக செயல்பட்டது. காலப்போக்கில் இது பொருந்தாத ஒன்றாக கருதப்பட்டது. இது பல சிக்கல்களை கொண்டது ( 1 ) இரட்டை தேவைப்பொருத்தம்
|
பண்டமாற்று முறைக்கு தேவைப்பட்டது. ஒரு நபர் மற்றொரு நபர் விரும்புவதை பெற்றிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக பசு வைத்திருக்கும் ஒரு நபர் குதிரை வேண்டுமென நினைத்தால் வேறு ஒரு நபர் குதிரையைக் கொடுத்து பசுவைப் பெறுபவராக இருக்க வேண்டும். இல்லை எனில் பண்டமாற்று நடைபெறாது. இது எப்போதும் சாத்தியமான ஒன்று அல்ல. நீக்கிவிட்டது. செயல்படுகிறது. பொருட்களை இருப்பு வைத்திருப்பது என்பது கடினமான ஒன்று பணம் சேமிப்புக் கொள்கலன் ஆகும். பணம் இல்லாவிட்டால் செல்வத்தைப் பண்டங்களின் வடிவத்தில் தான் இருப்பு வைத்திருக்க வேண்டும். அவைகளை
|
நீண்ட காலத்திற்கு இருப்பு வைத்திருக்க முடியாது. சில பண்டங்கள் அழுகக்கூடியவை மேலும் சில பண்டங்கள் அதன் மதிப்பை இழந்துவிடும். பணத்தின் பணிகள் பண்டமாற்று முறையில் காணப்பட்ட குறைபாடுகளை ( சிக்கல்களை ) பணம் பணம் பண்டமாற்று முறையின் சிக்கல்களைத் தீர்க்கும் ஒரு கருவியாக பண்ட பரிமாற்றத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் , அளவு கோலாகப் பயன்படுத்துவதும் , மதிப்பின் நிலைகலனாகப் பயன்படுவதும் பணமாகும் என்று கிரௌத்தர் ( Crowther ) கூறுகின்றார். பொதுவாக அனைவராலும் எற்றுக் கொள்ளப்பட்ட எதுவும் பணமாகும் என்பதே
|
இவ்விலக்கணத்தின் மையக் கருத்தாகும். நாணயங்கள் , ரூபாய் நோட்டுகள் , காசோலைகள் , உண்டியல்கள் ( Bills of Exchange ) , கடன் அட்டைகள் ( Credit Cards ) முதலியன பணத்துள் அடங்கும். பேராசிரியர் வாக்கர் ( Walker ) பணம் என்பது ' எதையெல்லாம் செய்ய வல்லதோ , அதுவே பணம் ' என கூறுகிறார். இதன் மூலம் பணத்தின் பணிகளைக் குறிப்பிடுகின்றார். தற்கால பொருளாதாரத்தில் பணம் பல பணிகளைச் செய்கிறது. பணத்தின் முக்கியப் பணிகளைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம். “ பணத்தின் பணிகள் நான்கு இடையீட்டுக் கருவி , அளவுகோல் , நிலை மதிப்பு , இருப்பின்
|
நிலைகலன் ” பணம் , பரிமாற்றக் கருவியாகவும் , மதிப்பின் அளவுகோலாகவும் , மதிப்பின் நிலைகலனாகவும் , பிற்காலச் செலுத்துகைக்கான நிலை மதிப்பாகவும் செயல்படுகிறது. 1. பரிமாற்றக் கருவி ( Medium of Exchange ) பணம் ஒரு பரிமாற்றக் கருவியாகச் செயல்படுவது முக்கியப் பணியாகும். எல்லா பண்டங்களையும் பரிமாற்றம் செய்ய பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது பணமாகும். பண்ட மாற்றுமுறை மிகவும் சிக்கலானது. பணத்தின் அறிமுகம் , பண்டமாற்றத்தில் உள்ள இன்னல்களைத் தீர்க்க உதவியது. 2. மதிப்பின் அளவுகோல் ( Measure of Value ) பணம் ஒரு
|
பொதுவான அளவுகோலாக பயன்படுகிறது. இது ஒரு கணகீட்டின் அலகு ( Unit of Account ) மற்றும் நிலை மதிப்பு அளவு ( Standard of Measurement ) ஆகும். சந்தையில் ஒரு பண்டத்தை வாங்கும் பொழுது அதன் விலையை நாம் பணமாக செலுத்துகிறோம். விலை என்பது பணத்தால் மதிப்பிடப்படும். ஆகவே பண்டத்தின் மதிப்பை அதற்கு கொடுக்கப்படும் விலை என்ற பணத்தால் அளக்க முடியும். நீள , அகலத்தை அளப்பதற்கு மீட்டரையும் , எடையை அளக்க கிலோ கிராமையும் பயன்படுத்துவது போல பண்டத்தின் மதிப்பை அளவிட பணத்தை பயன்படுத்துகிறோம். இது பொருளாதார கணக்கீட்டை எளிதாக்குகிறது.
|
3. மதிப்பின் நிலைகலன் ( Store of Value ) தனது சொத்துக்களை சேமித்து வைக்க விரும்புபவனுக்கு பணம் எளிய , வசதியான கருவியாகும். இது மதிப்பின் நிலைகலனாக விளங்குகிறது. ஒருவனின் சொத்து ஆயிரம் கால்நடைகாளாக இருப்பின் அவற்றை கால்நடைகளாகவே சேமித்து வைத்தல் கடினமாகும். ஆனால் பணமிருந்தால் கால்நடைகளை விற்று அச்சொத்தை பணமாக சேமித்து வைக்கலாம். 4. எதிர்கால செலுத்துகைக்கான நிலைமதிப்பு ( Standard of Deferred payments ) எதிர்காலச் செலுத்துகைக்கு பணம் ஒரு கருவியாகப் பயன்படுகிறது. கடன் பற்று கருவிக்கு ( Credit transactions ) இது
|
அடிப்படையாகும். தற்கால வணிபம் இக்கடன்பற்றை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகிறது. பணமே கடன்பற்றை ஊக்குவிக்கின்றது. கடன் பற்றை செலுத்துகை ( payment ) எதிர்காலத்தில் நடைபெறுவதால் , நிகழ்காலத்தில் இருப்பது போன்றே எதிர்காலத்திலும் அதே பரிமாற்ற சக்தியைக் கொண்ட ஒரு இடையீட்டுக் கருவி இருப்பது அவசியம். கடன் பரிமாற்றத்தைப் பண்டங்களின் மூலம் மேற்கொண்டால் அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அது வாணிபத்தையும் பாதிக்கும். பணம் இடையீட்டுக் கருவியாக பயன்படுத்த வேண்டுமென்றால் அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்க
|
வேண்டும். ஒரு பொருள் அனைவராலும் பணமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் அல்லது அரசு அதற்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை வழங்க வேண்டும். அடுத்த இரண்டு பணிகளான மதிப்பின் நிலைகலன் , எதிர்காலச் செலுத்துகைக்கான நிலை மதிப்பு ஆகியவற்றைச் செய்ய பணத்தின் மதிப்பு நிலையாக இருக்க வேண்டும். பணத்தின் முக்கியத்துவம் மனிதர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்று பணமாகும். ஒவ்வொரு பாடப்பிரிவிலும் ஒரு அடிப்படைக் கண்டு பிடிப்பு உண்டு. “ எந்திரவியலில் சக்கரமும் , அறிவியலில் தீயும் , அரசியலில் வாக்குச் சீட்டும் இருப்பது போல பொருளியலில் , மனித
|
சமுதாய , வாழ்க்கையில் , வாணிகத்தில் பணம் ஒரு முக்கிய கண்டுபிடிப்பாகும். மற்றவைகள் அனைத்தும் அதைச் சார்ந்தே உள்ளது ” என்று கிரௌத்தர் கூறுகின்றார். முதலாளித்துவ சமுதாயமாக இருந்தாலும் , சமதர்ம சமுதாயமாக இருந்தாலும் பணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். முதலாளித்துவத்தில் விலை முக்கிய பங்கு வகிக்கிறது. உற்பத்தி , பகிர்வு , நுகர்வு , ஆகியவற்றை தீர்மானிப்பதில் விலையின் செல்வாக்கு அதிகம். விலையானது பணத்தால் அளவிடப்படுகிறது. விலை அமைப்பு முக்கிய பங்காற்றாத சமதர்ம சமுதாயத்திலும் , பணமின்றி எதுவும் நடைபெறாது. சமதர்ம
|
வாதத்தினர் பணத்தையே சமுதாய நடவடிக்கையிலிருந்து நீக்க வேண்டும் என்று விரும்பினர். பணம் என்பது முதலாளித்துவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று என்பதே இதற்கு காரணமாகும். ஆனால் , பிற்காலத்தில் திட்டமிட்ட பொருளாதார அமைப்பிலும் , பணத்தின் உதவியில்லாமல் பொருளாதார கணக்கீடு செய்ய இயலாது என்பதை உணர்ந்தனர். நாகரீகத்தின் தொடக்க காலத்தில் பலரும் , பலவிதமான பொருட்களை பணமாக பயன்படுத்தினர். கால்நடைகள் , புகையிலை , கிளிஞ்சல்கள் , கோதுமை , தேனீர் , உப்பு கத்தி தோல் , விலங்குகளான ஆடு , குதிரை மற்றும் , எருதுகள் மேலும்
|
உலோகங்களான இரும்பு , ஈயம் , மற்றும் தாமிரம் ஆகியவற்றை பணமாக பயன்படுத்தினர். காலப் போக்கில் விலை மதிப்புள்ள உலோகங்களான தங்கம் , வெள்ளி முதலியன , இரும்பு , தாமிரம் , வெண்கலம் போன்ற உலோகங்களை விலக்கின. தற்பொழுது காகிதத்தை பணமாகப் பயன்படுத்துகிறோம். பணத்தின் இன்னொரு வடிவத்தையும் இங்கே காண்போம். ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்கு காசோலை மூலமாகச் செல்லும் வங்கி வைப்புத் தொகை பற்றியும் நாம் இங்கு காண்போம். பண அளிப்பு இந்திய ரிசர்வ் வங்கி நமது நாட்டின் மைய வங்கியாகும். இது நமது நாட்டின் பண அமைப்பை ( Monetary
|
System ) கட்டுப்படுத்துகிறது. நமது நாட்டின் பண அளிப்பை நான்கு படிவங்களாக வகைப்படுத்துகிறது. அவையாவன M1 = பொது மக்களிடம் உள்ள செலாவணி ( நாணயங்கள் + ரூபாய் நோட்டுகள் + மக்களின் கேட்பு வைப்புகள் ) ஆகியன அடங்கும். இது M1 குறுகிய பணம் என்றும் அழைக்கப்படுகிறது. M2 = M1 + அஞ்சலக சேமிப்பு வைப்புகள் M3 = M2 + வங்கியில் உள்ள பொதுமக்களின் கால வைப்புகள். M3 விரிவான பணம் அல்லது பரந்துபட்ட பணம் ( Broad Money ) என்றும் அழைக்கப்படுகிறது. M4 = M3 + அஞ்சலக மொத்த வைப்புகளும் + பல்வேறு நிதி அமைப்புகளின் சேமிப்பு வைப்புகள் (
|
குறிப்பு- அஞ்சலகத்தில் சேமிப்பு வைப்புகள் தவிர பல்வேறு முதிர்வு காலங்களைக் கொண்ட பிற நிரந்தர வைப்புகள் ) இருப்பு பணம் இருப்புப் பணம் அரசு பணமாகக் கருதப்படும். இச்சந்தர்ப்பத்தில் இந்திய ரிசர்வ் வங்கியும் அரசாக கருதப்படுகிறது. இருப்புப் பணம் என்பது பொது மக்களிடம் உள்ள இருப்புக்களையும் மற்றும் வங்கிகளின் ரொக்கங்களையும் குறிக்கும் ரொக்க இருப்பின் உட்கூறுகளாவன C = பொது மக்களிடம் உள்ள பணச் செலாவணி OD இந்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ள பிற வைப்புகள் ( பொது மக்கள் ரிசர்வ் வங்கியிடம் உள்ள வைப்புகளை ரொக்கமாகவும் ,
|
பணமாகவும் கருதுகின்றனர் ) CR = வங்கிகளின் ரொக்க முன் இருப்புகள் ரொக்க முன் இருப்புகளை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம் 1 ) வங்கிகளிடமே உள்ள ரொக்க இருப்பு 2 ) ரிசர்வ் வங்கியிடம் வைக்கப்பட்ட வங்கிகளின் ரொக்க இருப்பு இவ்வாறாக இருப்புப் பணம் ( RM ) = C + OD + CR பண அளிப்பு பற்றிய எளிய கோட்பாட்டின்படி , பண அளிப்பானது ( M ) ரொக்கப் பணம் செய்யும் அதிக பணிகளைப் பொருத்ததாகும். வேறுவகையில் கூறினால் ரொக்கப் பணம் மாற்றமடைந்தால் பண அளிப்பும் மாற்றமடையும். கட்டளைப் பணம் ( Fiat Money ) புழக்கத்திலுள்ள ரூபாய் நோட்டுக்கள்
|
கட்டளைப் பணம் எனக் குறிப்பிடப்படுகிறது. எ.கா. இந்திய அரசால் வெளியிடப்படும் ஒரு ரூபாய் நோட்டுகள் கட்டளைப் பணமாகும். ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் நோட்டுகள் வங்கி நோட்டுகள் எனப்படும். இவைகள் கடன் உறுதிப்பத்திரத்தின் ( Promissory Note ) இயல்பைக் கொண்டதாகும். பணக் கொள்கை ( Monetary Policy ) முன்னுரை பெரும்பாலான நாடுகளில் , பேரியல் பொருளாதாரக் கொள்கையின் முக்கிய அடிப்படை நோக்கங்கள் முழு வேலை வாய்ப்பு ( Full Employment ) , நிலையான விலை , விரைவான , பொருளாதார வளர்ச்சி , செலுத்து சமநிலை பொருளாதார நீதி ஆகியவை
|
ஆகும். பொருளாதார நீதி என்பது ஏற்றத்தாழ்வற்ற வருமானப் பகிர்வைக் குறிக்கும். பேரியல் பொருளாதாரக் கொள்கைகள் மூலமாக அரசு இக்குறிக்கோள்களை அடைய முயற்சிசெய்கிறது. பேரியல் பொருளாதாரக் கொள்கைளை பணவியல் கொள்கை , நிதியியல் கொள்கை என இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. தொழில் கொள்கை , வேளாண்மைக் கொள்கை காப்புவரி அல்லது சுங்கவரிக் கொள்கை போன்ற கொள்கைகளையும் அரசு பின்பற்றுகிறது. ஆனால் நாம் , பணவியல் கொள்கை மற்றும் நிதியியல் கொள்கைகளை மட்டுமே இங்கு காண்போம். இப்பாடத்தில் நமது நாட்டின் பணவியல் கொள்கை பற்றி காண்போம். ‘ பணக்
|
கொள்கை என்பது பொருளாதாரக் கொள்கையின் நோக்கங்களை அடைய பண அளிப்பு மற்றும் பணத்தை உற்பத்தி செய்ய ஆகும் செலவுகளை கட்டுப்படுத்த மைய வங்கி மேற்கொள்ளும் நடவடிக்கைகளாகும் ' என்று எட்வர்டு சாபிரோ கூறியுள்ளார் ( Edward Shapiro ). பணக் கொள்கையின் கருவிகள் பண அளிப்புக் கட்டுப்பாட்டுக் கொள்கை ( Credit Control Policy ) என்பதை பணக்கொள்கை என்றே பொதுவாகக் கூறுகிறோம். இதை இருவகையாகப் பிரிக்கலாம். 1. கடன் நிதி அளவு கட்டுப்பாட்டு முறைகள் ( Quantitative Credit Control Measures ) 2. தேர்ந்தெடுத்த கடன் கட்டுப்பாட்டு முறைகள் (
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.