text
stringlengths
11
513
Selective Credit Control Measures ). கடன் நிதி அளவு கட்டுப்பாட்டு முறைகளில் ( வங்கி ) வட்டி வீதம் , ரொக்க இருப்பு வீதம் , வெளிச்சந்தை நடவடிக்கைகள் ஆகியன அடங்கும். 1. வங்கி வட்டி வீதம் ( Bank Rate ) மற்ற வணிக வங்கிகளுக்கு மைய வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கும் வட்டி வீதமாகும். பொருளாதாரத்தில் அதிகப்படியான பணப்புழக்கம் ஏ...
வசூலிக்கும் வட்டி வீதமும் அதிகரிக்கும். இவ்வாறு வட்டி வீதம் அதிகரிப்பதால் ( முதலீட்டாளர்கள் ) கடன்பெறும் ஆர்வம் வணிகர்களிடையே குறைந்து விடுகிறது. மேலும் உற்பத்தியாளர்களும் முதலீட்டிற்காக பெறும் கடன் தொகையின் அளவைக் குறைப்பர். பொதுவாக பணவீக்கத்தைக் குறைக்க மைய வங்கியானது வங்கி வட்டி வீதத்தை உயர்த்தும். 2. ரொக்க இருப்பு ...
உண்டு. பணவீக்க காலத்தில் பொருட்களின் விலை உயர்வை தடுக்கவும் கடன் அளவை கட்டுப்படுத்தவும் இக்கருவியை பயன்படுத்துகிறது. 2. வெளிச்சந்தை நடவடிக்கைகள் ( Open Market Operations ) மைய , மாநில அரசுகளின் கடன் பத்திரங்களை வாங்கி விற்பதன் மூலம் வெளிச்சந்தை நடவடிக்கை நடைபெறுகிறது. கடன் அளிப்பை கட்டுப்படுத்தும் கருவியாக வெளிச்சந்தை ...
Securities ). 3. வணிக வங்கிகள் ரொக்க இருப்பு வீதத்தை நிலையாக வைத்திருக்கும் திறமை. இந்தியாவில் அதிக அளவில் இந்நிலை காணப்படவில்லை. எனவே வெளிச்சந்தை நடவடிக்கைகள் ஒரு நல்ல கடன் அளவைக் கட்டுப்படுத்தும் கருவியாக செயல்படவில்லை. கடன் அளவைக் கட்டுப்படுத்துவதைவிட , அரசு கடன் பெறும் நடவடிக்கைகளுக்கு இது அதிகமாக பயன்படுத்தப்படுகி...
கடன் அளவு கட்டுப்பாட்டு முறைகளைவிட தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் கட்டுப்பாட்டுக் கருவியானது , வணிக வங்கிகளின் எல்லா வகையான கடன்களையும் கட்டுப்படுத்துகிறது. இது தேவையற்ற இனங்களில் கடன் அளவைக் குறைத்து பயனுள்ள இனங்களில் கடன் அளவு செல்லுமாறு வழி நடத்துகிறது. 1955 முதல் மைய வங்கியானது இம்முறையை பயன்படுத்துகிறது. தேர்ந்தெடுக்கப்...
உணவு தானியங்களும் கச்சாப் பொருள்களும் அதாவது கடன் பத்திரங்களை வாங்கும் பொழுது செலுத்து விலையில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தை ரொக்கமாக செலுத்துதல். பொது பணக்கட்டுபாடு போல அல்லாது , தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் கட்டுப்பாடானது விரும்பத்தகாத கடன் விரிவாக்கத்தை ( கடன் ஏற்றத்தை ) தடுக்க மைய வங்கி உதவுகிறது ( உம் ) கடன் பத்திரங்களை ...
விதிக்கப்படுகிறது. நமது நாட்டில் , கடைசி கருவியாக இது பயன்படுகிறது. ( உம் ) ஏற்றுமதியை ஊக்கப்படுத்தவும் , வேளாண்மை உற்பத்தியையும் , சிறுதொழில் குடிசைத் தொழில் உற்பத்தியையும் ஊக்கப்படுத்தவும் இது பயன்படுகிறது. மைய வங்கியானது சில விதிகளை அல்லது கொள்கைகளைப் பின்பற்றுமாறு வணிக வங்கிகளை கேட்டுக் கொள்ளுதல் அல்லது அறிவுறுத்து...
வீழ்ச்சியையும் பற்றாக்குறையான மொத்த தேவையையும் கொண்ட மோசமான வாணிப நிலையை சரி செய்ய ( tackle ) இயங்கக்கூடிய வலிமையான ஒரு நிதிநிலைக் கொள்கையை பரிந்துரை செய்தார். 1970 லிருந்து தேக்கநிலை பணவீக்கம் ( Stagflation ) காணப்பட்டது. ஒருபுறம் தேக்கமும் , தேவைக்குறையும் மறுபுறம் பணவீக்கமும் காணப்பட்டது. இந்த தேக்க நிலை பணவீக்க கால...
கொள்வதுமான வருமான கொள்கை நிதிக் கொள்கைக்கும் , பணக்கொள்கைக்கும் மாற்றாக பரிந்துரை செய்யப்பட்டது. நமது நாட்டில் , வழக்கமான கடன் அளவு கட்டுப்பாட்டுக் கருவி சிறப்பான முறையில் செயல்படவில்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை சிறந்த முறையில் Page 283 of 236 கருதுகின்றனர். மூலதன இருப்பு , பண அளிப்பு , அரசுக் கடன் ( அரசு க...
உடையது. பெயரளவிற்கு பண அளிப்பு கூடினால் விலை மாறாது இருக்கும் பொழுது , உண்மைப் பண அளிப்பு கூடும். ஆகவே இது நிகர தனியார் சொத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் செல்வம் அதிகரிக்கும். அதனால் நுகர்வும் அதிகரிக்கும். நுகர்வு அதிகரிப்பதால் மொத்த தேவையும் அதிகரிக்கும் சமநிலை வருமானமும் அதிகரிக்கும். வட்டி வீதத்திற்கு எவ்வித , மாற்ற...
நீர்மைத் தடை என்பது பண அளிப்பு அதிகரித்தாலும் வட்டி வீதத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது என்பதைக் குறிக்கும். அருமைப் பணம் ( Dear Money ) பண வீக்கம் நிலவும் பொழுது மைய வங்கியானது அருமைப் பணம் கொள்கையைப் பயன்படுத்தி பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயலும் ‘ அருமைப் பணம் ' என்பது வட்டி வீதம் அதிகமாக இருப்பதையும் பண அளிப்பு கு...
முதலீடு செய்வதற்கு ஊக்கப்படுத்தவும் , பண அளிப்பை அதிகரிப்பதற்கும் மலிவுப் பணக் கொள்கையைப் பின்பற்றும். பணத்தின் மதிப்பு பணத்தின் மதிப்பு என்பது அதனுடைய வாங்கும் சக்தியைக் குறிக்கும் பணத்தின் வாங்கும் சக்தியானது விலை மட்டத்தைப் பொறுத்தது. பொது விலையேற்றம் , பண மதிப்பு குறைவதைக் காட்டும். பொது விலையிறக்கம் பணமதிப்பை அதிக...
பணத்தின் அளவு இரு மடங்கானால் , விலையும் இரு மடங்காகும் பணத்தின் அளவு பாதியாகக் குறையும் பொழுது விலையும் அதன் உண்மை நிலையிலிருந்து பாதியாகக் குறையும் ". பண அளிப்புக் கோட்பாட்டின் மையக் கருத்தின்படி “ பண அளிப்பின் அளவு மாற்றமடையும்போது விலையும் மாற்றமடையும் ". பரிமாற்ற சமன்பாடு ( Equation of Exchange ) பண அளவுக் கோட்பாட்...
அளிப்பையும் V என்பது பணப் புழக்கத்தையும் , P என்பது விலை மட்டத்தையும் , T என்பது மொத்தம் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் Page 285 of 236 பணிகளையும் குறிக்கின்றன. ஃ MV = PT PT = MV ( or ) MV P = T இது பரிமாற்ற சமன்பாடு என்று அழைக்கப்படும் பணப் புழக்கம் ( V ) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் பணம் எத்தனை முறை கைமாறுகிறது எ...
M ) பண அளிப்பு இரட்டிப்பாகும் பொழுது ( P ) விலையும் இரட்டிப்பாகும். இன்றைய நாட்களில் , பண அளிப்பின் பெரும்பகுதி காசோலைகள் , மாற்றுச் சீட்டுக்கள் ( Bills ) மற்றும் ஏனைய கடன் கருவிகளும் அடங்கும். எனவே பணத்தின் அளவைக் கணக்கிடும் பொழுது , மேற்கூறிய பண வகைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சில பொருளியல் அறிஞர்க...
புழக்கத்திலுள்ள மற்ற கடன் கருவிகள் அடங்கும். V1 என்பது M1 ( கடன் கருவிகள் ) ன்னின் பணப் புழக்கம். இப்பண அளவுக் கோட்பாட்டின் முக்கிய குறைபாடு , முழுவேலை நிலையை எடுகோளாக கொண்டுள்ளதே ஆகும். முழு வேலை நிலை இல்லையெனில் , முழுமையாகப் பயன்படுத்தப்படாத வளங்கள் இருக்குமானால் பண அளவு கூடினாலும் விலை உயராது. பொருளாதார மந்த காலத்த...
பணத்தின் அளவிற்கும் உள்ள தொடர்பை குறுகிய கண்ணோட்டத்தில் விளக்குகிறது. அளவு தவிர மற்ற காரணங்களாலும் விலை மட்டமானது பாதிக்கப்படும் அவையாவன அரசின் பணக்கொள்கை , நிதியியல் கொள்கை , குறிப்பிட்ட காலத்தில் பண்டங்களின் அளிப்பு / நடைபெறும் வாணிபத்தின் அளவு வருமானத்தில் ஏற்படும் மாற்றம் , / பண்டங்களுக்கான உறுதித் தேவை முதலியன ஆகு...
Crowther ) எளிமையான பயனுள்ள வரையறையை கொடுத்துள்ளார். பணத்தின் மதிப்பு குறைவதும் விலைகள் உயர்ந்து கொண்டுசெல்வதுமான ஒரு நிலையை பணவீக்கம் என்று கிரௌத்தர் வரையறுத்துள்ளார். பொதுவாக பணவீக்க காலத்தில் விலை மட்டம் உயரும். அதிகப்படியான பணம் மிகக்குறைந்த பண்டங்களைத் துரத்தும் நிலையை இது குறிப்பிடுகின்றது. இது அளவுக்கு அதிகமான (...
ஜான்சன் ( Harry Johnson ) பணவீக்கத்தை வரையறுக்கிறார். ஆயினும் விலைமட்டம் உயராமலேயே பணவீக்கம் தோன்றும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம் ( Repressed inflation ) என்று பெயர். போர்க் காலங்களிலேயே இது தோன்றும். இக்காலங்களில் , பல கட்டுப்பாடுகளும் , உணவுப் பண்டங்களை பங்கீடு செய்வதின் ...
) இலாபத்தின் தோற்றமே பணவீக்கமாகும் தொழிலதிபர்களும் உற்பத்தியாளர்களும் அளவுக்கு அதிகமான இலாபத்தை ஈட்டும் அறிகுறியே பணவீக்கமாகும். பண வீக்கத்தின் வகைகள் ( Types of Inflation ) 1. தேவை இழுப்பு பண வீக்கம் ( Demand Pull ) : அதிகப்படியான பணம் மிகக் குறைந்த பண்டங்களை துரத்துவது பணவீக்கம் என்று கூறப்படுகிறது. கொடுக்கப்பட்ட வில...
முடிவுக்கு வந்ததிலிருந்து ( 1945 லிருந்து ) விலையும் கூலியும் ஒன்றை ஒன்று மேல்நோக்கி உயர்த்தும் நிலையை தவழும் பணவீக்கம் என்று கூறுகிறோம். ஓடும் ( அ ) தாவும் ( அ ) மிகை வேகப் பணவீக்கம் மிகைவேகப் பணவீக்கம் ( Hyper Inflation ) : ஒவ்வொரு நாளும் விலைமட்டம் வரம்பின்றி உயர்ந்து கொண்டே செல்வத்தை மிகைவேகப் பணவீக்கம் என்று கூறலா...
உயர்ந்து கொண்டே சென்றது. மலிவுப் பண்டங்களுக்குப் கூட அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது. பணம் பயனற்றதாகவும் , புதிய பணம் அறிமுகப்படுத்த வேண்டிய நிலை வந்தது. இதற்கு மிகை வேகப் பணவீக்கம் என்று பெயர். 2. செலவு உந்து பணவீக்கம் ( Cost Push Inflation ) ஊற்பத்திச் செலவு அதிகரிப்பு செலவு உந்து பணவீக்கம் , செலவு உயர்வதால் ஏற்படு...
காரணிகளால் ஏற்படும் பணவீக்கத்தை கூலி உந்து பணவீக்கம் , விலை உந்து பணவீக்கம் என்றும் கூறுகின்றோம். நெருக்கடி அல்லது உற்பத்தி வளர்ச்சித் தடை பணவீக்கம் ( Bottleneck Inflation ) முழு வேலைவாய்ப்பு உற்பத்தி நிலை அடையும் பொழுது , சில பற்றாக்குறை நிலையும் , Page 287 of 236 சமனற்ற நிலையும் மற்றும் இறுதிநிலைச் செலவில் உயர்வும் ஏ...
சில சில்லோர் முற்றரிமையாளர்களும் , அதிகரிக்கும் உற்பத்திச் செலவை உள்ளடக்கி , உச்ச இலாபத்தை ஈட்டுவதற்காக , அளவுக்கதிகமாக விலையை உயர்த்துவர். இதற்கு இலாப உந்து பணவீக்கம் என்று பெயர். பொதுவாக போர்க்காலங்களிலும் , அதற்கு பின்பும் பணவீக்கம் ஏற்படக்கூடும். போர்க்காலங்களில் மக்களின் வருமானம் அதிகரித்தும் , அதற்கேற்ப பொருட்கள்...
எல்லாவகையான பொருட்களுக்கும் அதிகவேகமாக தேவை அதிகரிக்கும். ஆனால் அதே வேகத்தில் அளிப்பு அதிகரிப்பதில்லை. இதனால் பணவீக்கம் ஏற்படுகிறது. போரில் வெற்றியடைய அரசு விரும்புவதால் , அதிலும் தற்கால போர்கள் அதிக செலவுடையதாக இருப்பதால் , இதனை சந்திக்க அரசு பற்றாக்குறை நிதியாக்கத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது மேலும் , மேலும் பணவீக...
விலையை உயர்த்தும். இவ்வாறாக ஒரு ‘ நச்சுச் சுழல் ' உருவாக்கப்படுகிறத. கூலி விலையேற்றத்தை ஏற்படுத்துகிறது. விலையேற்றம் கூலியை உயர்த்துகிறது. இதுவே பணவீக்க சுழற்சி எனப்படுகிறது- பற்றாக்குறை நிதியாக்கம் பணவீக்கத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும். திட்டமிடுதலை கொண்ட வளர்ச்சி குறைந்த நாடுகளில் இத்தகைய பணவீக்கத்தைக் காணலாம். வணிக...
சீர்குலைந்தது. எனவே ஒவ்வொரு அரசும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றலாம். 1. வரி விதிப்பு ( விகிதத்தை ) அதிகப்படுத்தலாம். 2. மூலதன திட்டங்களின் ( Project ) மீதான அரசு செலவை குறைத்தல் ( பணவீக்கத்தை குறைக்க இம்முறை பரிந்துரைக்கப்பட...
நேரங்களில் கூலியை நிலை நிறுத்திவைத்து ( Freeze ) பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்டது. இக்காலக்கட்டத்தில் , தொழிலாளர்களின் கூலியை உயர்த்தக் கோர வேண்டாம் என தொழிற்சங்கங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன வீக்கத்தைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட முறைகளின் வெற்றியானது , அரசாங்கம் இக்கொள்கைகளை அமுல்படுத்தும் திறமையைப் பொறுத்...
மாற்றத்தைக் குறிக்கும். பணவாட்டம் என்பது பணவீக்கத்திற்கு எதிரிடையானது. பொதுவாக பணவீக்கம் என்பது வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளின் காலத்தைக் குறிக்கும். பண வாட்ட காலத்தில் , மந்தமான வாணிப நிலையையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் குறிக்கும். பணவாட்ட காலத்தில் விலையானது செலவைவிட வேகமாகக் குறைவத...
திண்டாட்டத்துக்கு அடிகோலும் , பணவீக்கம் பணவாட்டம் இரண்டுமே தீமையானவை. இரண்டில் ஒன்றை தெரிவு செய்ய இயலாது. அரசின் பணவியல் கொள்கை மூலமாக விலையேற்றத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தலாம். இது பணவாட்ட காலத்தில் விலை மட்டத்தை உயர்த்த உதவுகிறது. எனவே தான் தற்கால பொருளியல் அறிஞர்கள் பொருளாதார செயல்பாடுகளில் அரசு முக்கிய பங்காற்றவே...
சமயங்களில் கருதப்படுகிறது. ஆனால் இது சரியான தீர்வு அல்ல. நிலைமையை மேலும் நலிவடையச் செய்யும். விலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் விலைமாற்றமானது சமுதாயத்தின் பல பிரிவினரையும் பல வழிகளில் பாதிக்கிறது. அது உற்பத்தியையும் , பகிர்வையும் பாதிக்கிறது. உற்பத்தியில் எற்படும் விளைவு விலையேற்றம் உற்பத்தியை அதிகரிக்கத் தூண்டும். ம...
உற்பத்தியாளர்களும் , தொழில் அதிபர்களும் பணவீக்க காலத்தில் பயனடை டைவார்கள். இக்காலத்தில் உற்பத்திச் செலவைவிட விலை வேகமாக அதிகரிப்பதால் உற்பத்தியாளர்கள் பயனடைகிறார்கள். எனவே அவர்கள் அதிக இலாபத்தை அடைகிறார்கள். பணவீக்கம் , மிகை வேக பணவீக்கமாக மாறினால் வாணிபம் நொடித்து அழிவில் முடியும். பணத்தின் மதிப்பு வேகமாக குறையுமானால்...
நட்டத்தை அடைவார்கள். விலையானது உற்பத்திச் செலவைவிட வேகமாக குறைவதால் வணிகர்கள் அதிக கடுமையான நட்டத்தை அடைவார்கள். முதலீட்டிற்கு வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கும். இது பேரளவிலான வேலையில்லா திண்டாட்டத்திற்கு வழி வகுக்கும். இதனால் வாணிப மந்தம் ஏற்படும். பணவாட்ட காலத்தில் பணம் எளிதாகக் கிடைக்கும். பண்டங்களின் விலை குறைவாக...
வருணிக்கப்படுகின்றது. இதற்கு 1930 ல் எற்பட்ட பொருளாதார பெருமந்தம் நல்ல உதாரணமாகும். பகிர்வில் ஏற்படும் விளைவு 1. வணிகர்கள்- பணவீக்க காலத்தில் வணிகர்களும் உற்பத்தியாளர்களும் அதிக இலாபத்தை ஈட்டுவார்கள் , பணவாட்ட காலத்தில் அவர்கள் அதிக நட்டத்தை அடைவார்கள். 2. நிலையான வருமானம் பெறுபவர்கள்- நிலையான வருமானம் உள்ளவர்கள் பண வீ...
வேகமாக அதிகரிக்காது. பணவீக்க காலத்தில் ஒய்வூதியம் பெறுபவர்களும் பாதிக்கப்படுவார்கள். கூலி பெறுபவர்களும் , மாத ஊதியம் பெறுபவர்களும் விலை இறக்க காலத்தில் பயனடைவார்கள். இக்காலத்தில் பணம் மதிப்பை இழக்க நேரிடுவதால் இது ஒருஉண்மையான பயன் அல்ல. வேலையில்லாத திண்டாட்டமானது விலையேற்றத்தைவிட மோசமானது. 3. முதலீட்டாளர்கள் அரசு பத்தி...
செய்திருப்பவர்கள் விலையேற்ற காலத்தில் அதிக இலாபத்தையும் விலையிறக்க காலத்தில் அதிக இழப்பையும் அடைவார்கள். பணவீக்க ஜெர்மனியில் ஆயிரக்கணக்கான நடுத்தரக் குடும்பங்கள் காலத்தில் அழிந்துவிட்டன. அவர்கள் வாழ்நாள் முழுவதும் சேமித்த பணம் மதிப்பிழந்து இதற்கு விலையேற்றமே காரணமாகும். பணத்தின் மதிப்பு தொடர்ந்து குறையுமானால் மதிப்பின்...
அடைவார்கள். பணவாட்ட காலத்தில் அடையும் பயன் தற்காலிகமானதாகும். மேற்கண்ட விளக்கத்திலிருந்து விலையில் ஏற்படும் கடுமையான மாற்றம் தீமையானது என்று அறிந்து கொள்ளலாம். பணவீக்கமும் , பண் வாட்டமும் அதிகத் தீமையானவையே. பணவீக்கம் அநீதியானது. பணவாட்டம் தீமையானது ஆகும் சில பொருளியல் வல்லுனர்கள் இவ்விரண்டில் பணவாட்டமே மிகவும் தீமையான...
உகந்தது என்று பொதுவாக கருதப்படுகிறது. பணமானது மனித இனத்திற்கு பலவழியிலும் நன்மை பயக்கக்கூடியதே. ஆனால் பணம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் , மனித அழிவிற்கும் , குழப்பத்திற்கும் வழிவகுக்கும் ' என்று இராபர்ட்சன் கூறுவதுஅனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே ஆகும். பயிற்சி பகுதி – அ அ. செலவு உந்து பணவீக்கம் இ. நிலைத்தன்மை பணவீக்கம்...
போது என்ன நிகழும் அ. வியாபாரிகள் இலாபம் ஈட்டுவர் ஆ. ஊதியம் ஈட்டுபவர் இலாபம் பெறுவர் இ. மாத சம்பளம் பெறுபவர் இலாபம் பெறுவர் ஈ. வாடகைக்கு விடுபவர் இலாபம் பெறுவர் விலைகள் உயரும் போது உள்ள சூழ்நிலையும் , மற்றும் தேவை தேக்கமும் அழைக்கப் பெறுவது பணக்கொள்கை ஆ. பணவீக்கம் ஈ. வேலையின்மை 6. பண்டங்களைக் கொடுத்து பண்டங்களை வாங்குவத...
கட்டுப்படுத்த உதவுகிறது. என அழைக்கப்படுகிறது. III. 11. 12. 13. 14. கூலியும் விலையும் ஒன்றை ஒன்று தள்ளுகிறது 15. பணத்தின் மதிப்பு IV. ஒரிரு வார்த்தைகளில் விடையளிக்கவும் 16. நாட்டின் பணஅளிப்பைக் கட்டுப்படுத்தும் வங்கி எது ? 17. அருமைப் பணக்கொள்கை எப்பொழுது கடைப்பிடிக்கப்படுகிறது ? 18. விலையில் மாற்றமில்லாத போது ஏற்படும் ...
விடையளிக்கவும். 21. பணத்தின் இலக்கணத்தை கூறுக ? பின்வரும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளிக்கவும். பண்டமாற்று முறையில் உள்ள பிரச்சனைகளை விளக்குக. இருப்பு பணம் – சிறு குறிப்பு எழுதுக. விளக்குக ( அ ) அருமைப் பணக்கொள்கை ( ஆ ) மலிவுப் பணக்கொள்கை பரிமாற்றச் சமன்பாடு - விளக்கம் தருக. வருமானக் கொள்கை - சிறு குறிப்பு எழுத...
பணத்தின் பணிகளை விவரிக்கவும். 32. பணக்கொள்கையின் நோக்கம் மற்றும் கருவிகளை விவாதிக்கவும். 33. பண அளவின் கோட்பாடு – விவரிக்கவும். 34. பணவீக்கத்தின் காரணங்கள் , விளைவுகள் , அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளை விவரிக்கவும். 35. பண அனுப்பீட்டு முறையின் போக்குகளை வரைபடம் வரைந்து விவரிக்கவும். பாடம் – 12 நிதியியல் கொள்கை பொது ந...
பற்றிய மதிப்பீடாகும் இது அரசின் வழிமுறைகள் மற்றும் முயற்சிகளைப் பற்றி அடையாளம் கண்டு கொள்ளுதலும் ஆய்வு செய்தலுமாகும். “ பொது நிதி ” என்பது அரசின் நிதி சார்ந்த செயல்பாடுகளாகும். இது அரசின் கருவூல செயல்பாடுகளோடும் தொடர்புடையதாகும். பொது நிதி என்பது நிதிப் பொருளாதாரம் ( Fiscal Economy ) என்றும் அழைக்கப்படும். பண்டையக் கால...
இச்செயல்பாடுகளில் தலையிடவில்லை. பண்டைய கால அரசுகள் 1 உள்நாட்டு சட்ட ஒழுங்கைப் பாதுகாத்தல் 2. நாட்டைப் பாதுகாத்தல் 3. நீதி நிர்வாகம் மற்றும் 4. பொது நிர்வாகம் ஆகிய இன்றியமையாத பணிகளை மட்டுமே மேற்கொண்டன அந்த அரசுகள் காவலர் அரசுகள் ( Police States ) என அழைக்கப்பட்டன. இன்றைய நவீன அரசானது எண்ணற்ற வளர்ச்சி , முன்னேற்ற திட்டங...
செலவினங்களுக்காக நிதி ஆதாரங்களை திரட்ட வேண்டும். இன்றைய காலத்தில் நிதிப் பொருளாதாரமானது பெரிய அளவு மாற்றத்தை உருவாக்கியுள்ளது. இம்மாற்றங்களை நிதிக் கொள்கை மூலமாக அறிந்துக் கொள்ளலாம். இந்நிதிக் கொள்கை அரசின் பேரியல் பொருளாதார பணிகளோடு தொடர்புடையது. இக்கொள்கை அரசின் வரிக்கொள்கை , அரசின் செலவினம் , மற்றும் பணக் கொள்கையோடு...
பொது நிதி என்பது அரசின் வருவாய் மற்றும் செலவினங்களைப் பற்றியதாகும் , இவைகள் ஒன்றோடொன்று சரி செய்து கொள்ளும் ’ என வரையறை தந்துள்ளார். பேராசிரியர் பின்லே சிராஸ் ( Findlay Shirras ) “ பொது நிதி என்பது அரசின் செலவின கொள்கையையும் , நிதி பெருக்கத்தையும் பற்றியதே ஆகும். ’ என வரையறைதந்துள்ளார். பொது நிதியின் உள்ளடக்கங்கள் பின்...
உள்ளடக்கம் பொதுக் கடன் கூட்டாட்சி முறை மத்திய | மாநில நிதி உறவுகள் நிதி நிருவாகம் 1. பொதுச் செலவு நவீன அரசு ஒரு நல அரசு , எனவே அதிகப்பட்ச பொது நலத்தை நிலைநாட்டுவது அதனுடைய பொறுப்பாக உள்ளது. இதற்கான அரசு பல வகையான பணிகளை மேற்கொள்ளும். இதனால் அரசுக்கு அதிகமான பணச் செலவுகள் ஏற்படும். இப்பிரிவில் அரசின் அடிப்படைக் கொள்கையா...
என்பதை பற்றியும் , வரிவிதிப்பின் கொள்கைகளைப் பற்றியும் , அதனோடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் சார்ந்ததாக உள்ளது. பொதுவருவாயானது வரி வருவாய் , வரி அல்லாத வருவாயை உள்ளடக்கியதாகும். வரி வருவாய் என்பது பல வகையான வரிகள் , வரித் தாக்கம் ( Impact ) மற்றும் வரி நிகழ்வுகள் ( Incident ) பற்றியதாகும். வரியில்லாத வருவாயானது ( 1 ) ...
பொதுக் கடன் இப்பிரிவு அரசின் கடன்களை எப்படி அதிகரிப்பது என்பது பற்றியும் , அதிகரிக்கின்ற கடன்களை எப்படித் திருப்ப செலுத்துவது என்பது பற்றியும் கூறுகிறது. பொது மக்களிடமிருந்து அரசு பெறும் கடன்களுக்குப் பொதுக்கடன் என்றும் கூறுவர். நவீன அரசானது தன்னுடைய செலவினங்களை , வரிகள் , மற்றும் வரிகள் அல்லாத வருவாய்கள் மூலம் சமாளிக்...
கடன் என்பது , அரசு பொது மக்களிடமிருந்தும் வணிக வங்கிகளிடமிருந்தும் , மைய வங்கிகளிடமிருந்தும் கடன் பெறுவதாகும். மக்களிடமிருந்தும் வெளிநாட்டுக் கடன் என்பது , உலக வங்கி ( World Bank ) , பன்னாட்டு நிதி நிறுவனம் ( IMF ) மற்றும் அயல்நாடுகளிலிருநது பெறுகின்ற கடனாகும். 4. நிதி நிர்வாகம் அரசின் நிறுவனங்கள் , அரசின் பணிகள் மற்று...
தாக்கல் செய்தல் , தணிக்கை செய்தல் , நடைமுறைப்படுத்துதுல் சட்டமன்றங்களில் ஆகியவற்றை பற்றியது. 5. கூட்டாட்சி நிதி பொதுநிதியின் ஒரு உட்பிரிவே கூட்டாட்சி நிதியாகும். கூட்டாட்சி என்பது இரண்டு ( அ ) அதற்கு மேற்பட்ட அரசுகளின் கூட்டமைப்பு. இச்கூட்டாட்சி அமைப்பில் மைய , மாநில மற்றும் உள்ளுர் அரசுகள் ஒருங்கிணைந்துள்ளன. இது , இவ்...
வருமானமாகும். ஒரு குடிமகன் ( அ ) ஒரு நிறுவனம் அரசுக்குக் கட்டாயமாகச் செலுத்தக்கூடிய ஒரு செலுத்துகையே வரி எனப்படும். வரி விதிப்பில் கட்டாயத் தன்மை காணப்படுகிறது. வரி இலக்கணம் பேராசிரியர் செலிக்மேன் ( Seligman ) “ வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்தும் , செலுத்துகை , அரசிடம் இருந்து எந்தவித நேரடி நன்மையையு...
வசதி வதி 4. சிக்கன விதி 1. சமத்துவ விதி இவ்விதியின்படி ' ஒருவன் தன் சக்திகேற்ப வரி செலுத்துவதே , இதனுடைய கொள்கையாகும். வரி விதிக்கும் போது வரி செலுத்துவோரின் , சக்திக்கேற்ப வரி விதிக்க வேண்டும். ஏழைகள் மீது குறைவாகவும் , பணக்காரர்கள் மீது அதிகமாகவும் வரி விதித்தல் வேண்டும். வரி விதிப்பானது நீதியின் அடிப்படையில் அமைய வே...
யாரிடம் செலுத்த வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். இதுவே தெளிவு / உறுதி விதியாகும். 3. வசதி விதி வரி செலுத்துதல் , வரி செலுத்துவோருக்கு வசதியாகவும் பாரம் குறைந்ததாயும் இருத்தல் வேண்டும். எ.கா. சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் வருமான வரி , பண்டங்கள் மீதான வரிகள் பொருட்களை வாங்கும்போதே பெறப்படுதல் ( உம். ) அற...
வழி முறைகள் எளிதானதாகவும் , மக்களது வருமான வரிகளைக் குறைந்த அளவில் பயன்படுத்துவதாகவும் அமைதல் வேண்டும். வரிகளின் வகைகள் வரிகளின் வகைகளைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம் , அவை யாவைன. 1. நேர்முக மற்றும் மறைமுக வரிகள் 2. விகித விரிவிதிப்புமுறை , வளர்வீதமுறை , தேய்வு வீதமுறை , மிதவளர்வீத முறை. 3. சிறப்புத் தீர்வை மற்றும் மத...
விதிக்கப்பட்டதோ , அவரே வரி செலுத்துவதாகும். மறைமுகவரி என்பது ஒருவர் மீது வரி விதிக்கப்பட்டு , மற்றொருவர் பகுதியாகவோ ( அ ) முழுமையாகவோ வரி செலுத்துவதாகும். நேர்முக வரியில் வரி செலுத்துபவரே , வரிச்சுமையைச் சுமக்க வேண்டும். ஆனால் மறைமுகவரியில் , வரி விதிக்கப்பட்டவர் வேறு , வரிச்சுமையைச் சுமப்பவர் வேறு. நேர்முகவரி எ.கா. வர...
மீது விதிக்கப்படுகிற்தோ அவரிடமிருந்தோ வசூலிக்கப்படுகிறது. இவ்வகை வரியில் வரி ஏய்ப்பு என்பது கடினமாகும். மறைமுக வரியானது பண்டங்கள் மற்றும் பணிகள் மீது விதிக்கப்படுவது ஆகும். இதில் விதிக்கப்படும் வரியின் துவக்கச் சுமை ஒருவர் மீது இருப்பினும் உண்மை வரிச் சுயைானது மற்றொருவர் மீது மாற்ற இயலும். நிகழ்வு மாற்றம் என்பது யார் வ...
சைக்கிள் விற்பனையாளர் வரிச்சுமையை துவக்கத்தில ஏற்பினும் , பொருளை வாங்குபவரே வரிச் சுமையைப் பின் ஏற்கிறார். மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரிகள் இந்தியாவின் நிதியியல் அமைப்பானது , கூட்டாட்சி அமைப்பாகும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இந்தியாவில் மத்திய , மாநில அரசுகளுக்குத் தனித்தனியாக வரிகள் விதித்து வசூலிக்க...
கீழ்காணும் இரு முறைகளில் வருமானம் கிடைக்கிறது 1. வரி சார்ந்த வருமானம் 2. வரி சாராத வருமானம் வரி சார்ந்த வருமானம் 1. வேளாண்மை வருமானம் தவிர்த்து பிற வருமானங்களின் மீதான வரிகள் 2. நிறுவனங்களின் மீதான வரிகள் 3. செலவினங்கள் மீதான வரிகள் 4. சொத்துக்கள் மீதான வரிகள் 5. அன்பளிப்பு வரிகள் 6. செல்வ வரிகள் 7. மூலதனத்தின் மீதான வ...
நிலம் , மனைகள் , கட்டிடங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் வேளாண்மை நிலம் சார்பான , வேளாண் பண்ணை வரிகள். மது வகைகள் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வைகள் ஒரு மாநிலத்திலிருந்து , பிரிதொரு மாநிலத்திற்குப் பண்டங்களைக் கொண்டுவரும் போது விதிக்கப்படும் வரிகள். 8. கனிமப் பொருள்களின் உரிமங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் 9. மின்சார நு...
வரிகள். 11. இருப்புப் பாதை , உள்நாட்டு நீர்வழி ஆகியவற்றில் கொண்டுச் செல்லும் சரக்குகள் , பயணிகளின் மீது விதிக்கப்படும் வரிகள். 12. முத்திரைத்தாள் வரிகள் , நீதிமன்ற கட்டணம் , மற்றும் பதிவுக் கட்டணங்கள். 13. பொழுதுபோக்கின் மீது விதிக்கப்படும் வரிகள் 14. விளம்பரங்கள் , செய்தித்தாள் தவிர்த்து பிற விளம்பரங்கள் மீதான வரிகள் ...
வருமானங்கள் , அதாவது பதிவுக் கட்டணம் , வருமான வரியில் ஒரு பகுதி , சுங்க வரிகள் மற்றும் கடன்கள் மீதான வரிகள். 1. விகித முறை வரிகள் 2. வளர்வீத முறை வரிகள் 3. தேய் விகித முறை வரிகள் 4. மித வளர்வீத முறை வரிகள் என நான்கு வகைப்படுத்தப்படுகின்றன. 1. விகித வரி விதிப்பு முறை ( Proportional Tax ) இவ்வகை வரிகள் மாறாது , நிலையானதா...
Tax ) இம்முறையில் வரியின் அடிப்படை தளம் அதிகரிக்கும் போது , வரிவிகிதமும் அதிகரிக்கின்றது. வருமானம் அதிகரித்தால் வரி விகிதமும் அதிகரிக்கும் ( எ.கா. ) வருமான வரி. 3. தேய்வு வீத வரிவிதிப்பு முறை ( Regressive Tax ) வருமானம் உயரும் போது , செலுத்த வேண்டிய வரி விகிதம் குறைந்தால் , அது தேய்வு வீத வரி எனப்படும். இந்த முறையில் ப...
இரண்டும் சேர்ந்த கலவையே மிதவளர்வீத வரிவிதிப்பாகும். இதில் வருவாய் உயர , உயர வரி வீதமும் ஒரு குறிப்பிட்ட அளவு வரை உயர்ந்து பின்பு சீரான நிலையை அடைகிறது. இங்கு வருவாய் உயர்ந்தாலும் , வரி விகிதம் உயர்வதில்லை. இவ்வரிமுறையில் உயர் வருமானம் ஈட்டுபவர்கள் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களைக் காட்டிலும் குறைவான தியாகத்தையே மேற்கொள்க...
அளிக்கப்படுகின்றன. வளர்ச்சிக்கும் , திட்டம் தீட்டுதலுக்கும் வரவு செலவுத் திட்டமானது இன்றியமையாததாகும் வளர்ச்சித் திட்டங்களின் நோக்கங்களை அடைய திட்டவட்டமான கொள்கை வழிமுறைகளை இவ்வரவுச் செலவுத் திட்டம் வரைந்து தருகிறது. மேலும் வரவும் செலவும் ஒன்றிற்கொன்று இணையாக நடைபெறாததால் இந்த வரவு செலவுத் திட்டமானது அவசியமானதாக இருக்க...
மொழிச் சொல்லான ( Bougette ) என்ற பதத்திலிருந்து உருவானது. ‘ Bougette ' என்பதற்கு சிறிய பை என்று பொருள். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய இவ்வறிக்கையை ( மாநில சட்டமன்றத்திலும் ) நிதி அமைச்சர்கள் இப்பையில் வைத்துதான் கொண்டு வருவது வழக்கம். மத்திய மாநில அரசுகள் ஒவ்வொரு நிதி ஆண்டு தோறும் இவ்வறிக்கையைத் தயாரிப்பர். ...
விளக்கம் வரவு செலவுத் திட்டத்திற்கு வெவ்வேறான வரையறைகள் உருவாக்கப்பட்டன. பேராசிரியர் டிமாக் ( Dimock ) அவர்கள் குறிப்பிடும் போது “ வரவு செலவுத் திட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சமமாக கணக்கிட்ட வரவு மற்றும் செலவு " என்கிறார். மேலும் நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் முந்தைய செயல்பாட்டினைப் பதிவு செய்தல் , நிகழ்கா...
ஆனால் தனிமனிதர்களின் செழுமை மற்றும் வகுப்பினரிடையேயான உறவு மேலும் அரசின் வலிமை ஆகியவற்றின் வேர்வரை ஆயிரம் வழிகளுக்கு மேல் செல்கிறது. வரவு செலவு திட்டத்தின் வகைகள் வரவு செலவு திட்டம் , சமநிலை வரவு செலவுத் திட்டம் என்றும் சமனற்ற வரவு செலவு திட்டம் எனவும் இரண்டு வகைப்படும். 1. சமநிலை வரவு செலவு திட்டம் ( Balanced Budget )...
செலவுத் திட்டம் ( Un - Balanced Budget ) ( மிகை வரவு செலவு திட்டம் ( அ ) பற்றாக்குறை வரவு செலவுத்திட்டம் ) சமநிலையற்ற வரவு செலவுத்திட்டம் என்பது அரசின் வருவாய் , செலவை விடக் கூடினாலும் ( அல்லது ) அரசின் செலவு , வருவாயைவிட அதிகமானாலோ இரண்டுமே சமனற்ற வரவு செலவுத் திட்டம் என்றழைக்கப்படும். அரசின் வருவாயும் , செலவும் சமமாக...
இருந்தால் அது “ பற்றாக்குறை வரவு செலவு திட்டம் ” என்றும் அழைக்கப்படும். தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் சமநிலை வரவு செலவு திட்டத்தை ஆதரித்தனர். ஆனால் நவீன பொருளியல் வல்லுநர்கள் சமநிலையற்ற வரவு செலவுத் திட்டமே ஒரு நாட்டின் பொருளாதாரம் சமநிலையை அடையவும் அந்நிலையைத் தொடர்ந்து நிலைநாட்டவும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று...
ஒவ்வொருநிதி ஆண்டிலும் அரசு தனது வரவினைப் பற்றியும் செலவினங்களைப் பற்றியும் தனது வரைவினை பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்காக சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். மேலும் அரசின் செலவினங்களுள் வருவாய் செலவினங்களையும் மூலதனச் செலவினங்களையும் பிற செலவினங்களிலிருந்து வேறுபடுத்தவேண்டும். எனவே தான் இத்திட்டத்தை வருவாய் பட்ஜெட் என்றும் ம...
அவற்றிலிருந்து செய்யப்படும் வருவாய் செலவுகளும் அடங்கும். சொத்தினை உருவாக்காத அனைத்து செலவினங்களும் வருவாய் செலவினம் என்று அழைக்கப்படும். ( எ.கா. ) அரசுத்துறைகள் சார்பான செலவுகள் – நடப்பு வருவாயும் ( Current Revenue ) நடப்பு செலவினங்களும் அரசின் பொதுக் கடன் மீதான வட்டி மற்றும் வளர்ச்சி சாரா செலவினங்கள் ) 2. மூலதன வரவு ச...
ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறக்கூடிய கடன்கள் , கருவூல உண்டியல்கள் , அயல்நாட்டு அரசுகள் , நிறுவனங்கள் போன்றவற்றிலிருந்து பெறுகின்ற கடன்கள் ஆகியவை அரசின் குறிப்பிடத்தக்க மூலதன வருவாய்களாகும். அரசிற்குச் சொந்தமாக நிலம் , கட்டிடங்கள் , இயந்திரத் தளவாடங்கள் போன்றவற்றை வாங்குதல் , முதலீடுகள் மற்ற அரசு கம்பெனிகளுக்கும் மாநில அ...
முறையிலிருந்து மாறுபட்டு புதிய உத்திகளாகிய செய்திறன் நிதி நிலை அறிக்கை , காரியத் திட்டம் மற்றும் பூஜ்ஜிய நிதி நிலை அறிக்கை ( Zero based budget ) போன்றவை கையாளப்படுகின்றன. செயல்திறன் வரவு செலவுத் திட்டமானது அரசாங்கத்தின் பொது செலவினங்களைச் சார்ந்த , பணிகள் , காரியங்கள் , செயல்வடிவங்கள் , நடவடிக்கைகள் , திட்டங்கள் ஆகியவற...
உத்தியைக் கொண்ட வரவு செலவுத் திட்டமாகும். இதில் ஒவ்வொரு ஆண்டும் , ஒரு புதிய ஆண்டாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கடந்த சிலநிகழ்வுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இத்திட்டம் பூஜ்ஜியத்தை அடிப்படையாகக் புதிதானதாகவும் எடுத்துக் முழுமையானதாகவும் , கொள்ளப்படுகிறது. கொண்டு , நிதியியல் கொள்கை ( Fiscal Poliy ) நிதியியல் கொள்கைய...
பற்றிய நிலையமைதியே நிதியியல் கொள்கை எனப்படும். நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் , மாற்றி அமைக்கவும் அரசு என்ன செய்யக்கூடும் என்ற கேள்விக்கு விடையை நிதிக் கொள்கை அளிக்கிறது. நாட்டின் உற்பத்தி , வேலைவாய்ப்பு மற்றும் விலை ஆகியவற்றையும் பொதுக்கடன்கள் , வரிகள் , பொதுச் செலவுகள் வாயிலாக மாற்றி அமைக்க அரசு ...
விளைவுகளை ஏற்படுத்தவும். தேவைப்படாத , எதிர்பாராத , விளைவுகளைத் தவிர்க்கவும் அரசு மேற்கொள்கின்ற அரசின் வருவாய் மற்றும் செலவு பற்றிய காரியத்திட்டமாகும். “ நிதியியல் கொள்கையின் முக்கியத்துவம் பேராசிரியர் J.M. கீன்சு அவர்கள் வெளியிட்ட “ வேலை வாய்ப்பு வட்டி மற்றும் பணத்தை சார்ந்த பொதுக் கொள்கை " என்னும் நூல் வெளியிடப்படும் ...
வரிகள் , பொதுச் செலவுகள் , பொதுக் கடன்களே நாட்டின் உற்பத்தி நிலையையும் , வேலை நிலைகளையும் மாற்றுவதற்கான சிறந்த கருவிகள் என்று விளக்கியுரைத்தார். மக்களாட்சி வழியில் இயங்கும் அரசு மக்களது பொது நலத்தில் ஈடுபாடு கொண்டதாக நடந்து கொள்ள வேண்டுமாயின் பொருளாதார வளர்ச்சித் துறைகளில் சீரியப் பணியாற்ற வேண்டும். அனேக பொதுநல வளர்ச்ச...
தலையாய நிதியியல் கொள்கைகளாகும். மேற்கூறிய பணிகளும் , சேவைகளும் அங்காடியில் விற்கப்படாதவைகளாகும். அவை நுகர்விற்காக அங்காடியில் அளிப்பாக விற்க முடியாதவைகளாகும். ஆனால் இத்தகைய பொதுப் பணிகளுக்காக வரிகளின் வடிவத்தில் இதன் பெறுமானத்தை அரசு பெற்றுக் கொள்ளலாம். Page 223 of 236 வளர்ச்சி குறைந்த நாடுகளில் பொது நிதியியலானது இன்னு...
விரும்பத்தக்கதொன்றாகும். எனவே பொது நிதியியலில் விரைந்த வளர்ச்சியையும் பொருளாதார நிலைப்படுத்துதலையும் வலியுறுத்தி அரசாங்கங்கள் பாடுபட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. நிதிக் கொள்கையின் நோக்கங்கள் நிதிக் கொள்கையின் அடிப்படையான நோக்கங்கள் பின்வருமாறு 1. வளங்களைத் திரட்டி , பொதுத் துறையின் நிதி ஆதாரங்களைப் பெருக்கச் செய்தல் 2...
ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்தல். 6. முழு வேலை வாய்ப்பை அடைதல் , மற்றும் பொருளாதார வளர்ச்சி 7. நிதிக் கொள்கையும் , மூலதன ஆக்கமும் 1. வளங்களைத் திரட்டி , பொதுத் துறையின் நிதி ஆதாரங்களைச் பெருக்கச் செய்தல் நாட்டின் வரிக் கொள்கையானது கிடைக்கும் வளங்களைச் சிறந்த முறையில் திரட்டி நாட்டின் வளர்ச்சிப் பணிக்காக பயன்படுத்தும் முறைய...
பொருளாதாரத்தில் தனியார் துறையானது முக்கிய பங்காற்றுகிறது. வளர்ச்சியில் பொதுத் துறை பங்கு அதிகரித்தாலும் தனியார் துறையின் பங்கைப் புறக்கணிக்க இயலாது. ஆகவே தனியார் துறையின் முதலீடு செய்பவருக்கு வரி விடுமுறை , வரிச் சலுகைகள் , உதவித் தொகைகள் , ஊக்கங்கள் அளித்து மூலதன திரட்சியையும் , முதலீட்டையும் தனியார் துறையில் மேம்படச்...
திரட்சியை பயன்படுத்த அவற்றை ஊக்குவிக்க வேண்டும். உற்பத்தி வளங்களை பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வழிகளில் பயன்படுத்த வேண்டும். கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களும் சமூக , மற்றும் பொருளாார வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட வேண்டும். 4. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி , பொருளாதாரத்தை நிலைப்படுத்தல் பண வீக்கத்தையும் , பண வாட்டத்தை...
வீக்கம் மற்றும் பணவாட்ட நேரங்களில் வரி முறைகளில் அவசியமான மாற்றம் ஏற்படுத்துதல் வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் பண வாட்டத்தை அடியோடு அகற்ற , வரி அமைப்பைக் காட்டிலும் , பொது செலவின் போக்கினை அதிகப் பயனுள்ளதாக ஆக்க வேண்டும். பண வீக்கக் காலங்களில் , பணவீக்க எதிர்ப்பு வரிகளான உபரி இலாப வரிகள் , மற்றும் பொதுவான , ஆடம்பர ந...
வேண்டும். வருமானம் , சொத்து மற்றும் வாய்ப்புகளால் சமநிலை ஏற்படும் போது மட்டுமே பொருளாதாரத்தில் வளர்ச்சியிலும் மற்றும் சமூக வளர்ச்சியில் ஒரு முழுமையைக் காணமுடியும். ஏழை எளிய மக்களின் நலன் கருதி வருமானமானது மறு பகிர்வு செய்யப்பட வேண்டும். வரிகள் மூலம் மட்டுமே இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மேலும் அரசானது பொதுச் செ...
அதிகரிக்கும் போது , நலிந்த மக்களது பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். 6. முழுவேலை வாய்ப்பு அடைதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி முழுவேலைவாய்ப்பு மற்றும் விலையில் நிலைத்தன்மை. ஆகியன கொள்கையின் மூலமே அடைய முடியும். பொருளாதார மந்த காலத்தில் வேலையின்மையை தீர்ப்பதில் பணக்கொள்கை வெற்றி பெறவில்லை. ஆனால் அரசின் நிதிக் கொள்கையால் மட...
திறனானது அதிகரிக்கும். ஆகவே நிதிக்கொள்கையை பயன்படுத்தி வரிகளின் வாயிலாக முதலீடுகளைபெருக்கி , நுகர்வுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் உற்பத்தியை பெருக்கலாம். தனி நபரின் வருமானம் மீதான வரியை குறைக்கும் போது , மூலதன பெருக்கம் அதிகரிக்கும். வேலைவாய்ப்புகளை அதிகரிக்க , அரசானது சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான செலவினங்களை அத...
கொள்கையும் , மூலதன ஆக்கமும் நிதிக் கொள்கைகளாகிய , வரிகள் , சுங்க ஆயத் தீர்வைகள் , மாற்றுச் செலுத்துகைகள் , வரி சலுகைகள் மற்றும் மானியங்கள் , தள்ளுபடிகள் முதலியன மூலம் மூலதன ஆக்கம் அதிகரித்து , நீண்ட கால பொருளாதார வளர்ச்சி அடையும் மூலதனமானது பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் ஒரு காரணியாகும். அதுவே பொருளாதார வளர்ச்சியி...
முதலீடுகளை அதிகரிக்க முடுக்கிவிடும் முக்கிய கருவியாக இருந்தாலும் , இதில் கீழ்க்காணும் குறைபாடுகள் உள்ளன. 1. நிதித் தீர்வுகளின் அளவு 2. வணிகச் சூழல்களைக் கட்டுப்படுத்துவதில் நிதிக் கொள்கையின் குறைந்த வெற்றி. 3. அரசு நிருவாகத்தில் காலதாமதம் 4. மற்ற குறைபாடுகள் 1. நிதித் தீர்வுகளின் அளவு நிதிநிலை அறிக்கை என்பது ஒரு சாதாரண...
இயலாது. நம் நாட்டின் பெருமளவிலான மக்கள் ஏழைகளாக இருப்பதால் , நேர்முக வரியை அதிக அளவில் நாம் பயன்படுத்த இயலவில்லை. மேலும் மொத்த வரி வருவாயானது நாட்டு வருமானத்தில் ஒரு சிறு பகுதியாக இருப்பதினால் , பெருமளவு நிதியாக்கம் தேவைப்படுகின்றது , பின் தங்கிய நிலையில் இருக்கின்ற பொருளாதாரத்தை முன்னேற்ற , இந்நிதியின் தீர்வு போதாததாக...
வளர்ச்சியை விரைவுப்படுத்த முடியாது. அரசு மேற்கொள்ளும் எல்லா செயல்பாடுகளும் அனைத்து துறைகளிலும் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி , இவ்வாறாக ஒரு துறையில் ஏற்படுகின்ற மந்தமானது மற்றொரு துறையில் விலை ஏற்றத்தை எற்படுத்தும். பற்றாக்குறை நிதியாக்கத்தின் மூலம் எற்பட்ட வாங்கும் சக்தியின் அதிகரிப்பு , 1930 ம் ஆண்டின் பெரும் மந...
நடைமுறைப்படுத்துவதில் கால தாமதமும் , நிச்சயமற்ற சூழல் மற்றும் குழப்ப நிலையும் ஏற்படக்கூடும். இதன் விளைவாக நிதிக் கொள்கையின் வலிமை செயலிழக்கக்கூடும். மற்ற குறைபாடுகள் காணப்படும் பெரும் அளவிலான வேலைக்குறைவு , பொதுமக்களிடையே ஒற்றுமையின்மை , வரி ஏய்ப்புகள் , குறைவான வரி விதிப்புக்கள் போன்றவை நிதிக் கொள்கையின் மற்ற குறைபாடு...
முன்னுரை புவியியல் , கருத்துக்களையும் பணிகளையும் விளக்கிக் கூறும் வகையாக மூன்று அணுகுமுறைகளைப் பயன்படுத்துகின்றது. பரப்புப் பகுப்பாய்வு என்பது அமைவிட வேறுபாடுகளை விளக்க உதவும் ஒரு வழி. இயற்தொகுதிப் பகுப்பாய்வு மனித – சூழல் தொடர்புகளையும். அத்தொடர்புகள் இயற்தொகுதிகளின் இயக்கங்களையும் கண்டறியப் பயன்படுகின்றன. மூன்றாவது அ...
நிகழ்வுகளையும் ஆய்ந்தறியப் பயன்படும் , முக்கியமாக இயற்தொகுதிகளை ஆய்ந்தறிகின்ற அணுகுமுறையே இயற்தொகுதிகள் பகுப்பாய்வு. இப்பாடப் புத்தகத்தின் எல்லாப் பாடங்களும் இயற்தொகுதி என்ற கருத்தினைச் சார்ந்து எழுதப் பெற்றுள்ளன. இப்புத்தகத்தில் 6 அலகுகளில் 14 பாடங்கள் ; அவற்றுள் 10 பாடங்கள் புவியியல் கோட்பாடுகளையும் , 4 பாடங்கள் புவி...
இரண்டாவது பாடம் மனிதத் திறனைப் பற்றியது ; முதலாவது பாடம் தாவர , விலங்கினத் தொகுதிகளை இணைக்கும் வகையாக அவற்றின் பல இயற்தொகுதிகளை விளக்கமாக எடுத்துக் கூறுகின்றது. இரண்டாம் பாடம் அப்படியே வளர்ச்சி , பரவல் , அடர்த்தி அமைப்பு மற்றும் கூட்டு , மேலும் மக்கட்தொகை வெடிப்பு என்பவைப் பற்றி மிகவும் விரிவாக எடுத்து சொல்லுகின்றது. அ...
மற்றும் வணிகத் தொகுதிகள் என்பவற்றை 3-5 பாடங்களாகவும் , போக்குவரத்து மற்றும் தொடர்பு மற்றும் பரப்பு நுட்பங்கள் என்பவற்றை 6-7 பாடங்களாகவும் இவ்வலகுகள் பெற்றுள்ளன. இவ்விரண்டு அலகுகளும் மனிதர்களால் உருவாக்கப்பெற்ற இயற்தொகுதிகள் எவ்வாறு இடுபொருள்- செய்முறை - வருபொருள் சார்புத் தொகுதிகளாக இயங்குகின்றன என்பது பற்றி விளக்கமாக ...
நிலச்சரிவுகள் , புவி அதிர்ச்சிகள் , எரிமலைகள் , வெள்ளப் பெருக்குகள் , வறட்சிகள் மற்றும் பாலையாதல் ) மற்றும் அவற்றினைத் தணித்து மேலாண்மை செய்தல் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை வளப்பாதுகாப்பு என்பவை பற்றியது இந்த அலகு ( பாடம் 10. நீர் மேலாண்மை. மழைநீர்ச் சேகரிப்பு மற்றும் வளங்கள் பாதுகாப்பு ) அலகு 5 நிலவரைப்படங்கள் விவரி...
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு கூடுதல் விவரங்களாக பலவிவரங்கள் இங்கே கொடுக்கப் பெற்றுள்ளன. நில அளவை செய்தல் ( பாடம் 12 ) சர்வே செய்தல் - என்பது எளிய வகையில் விவரிக்கப்பட்டுள்ளதுடன் , முப்பரிமாண காம்பஸ் மற்றும் இந்தியக் கிளைனோ மீட்டர் கொண்டு சர்வே செய்தல் வழிமுறைகள் பற்றியும் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. பாகை அள...
மாணவியர்க்கு பல புதிய புவியியல் கருத்துக்கள் / திறமைகள் பற்றி எடுத்து சொல்வது சிறப்பாகும். இச்செய்முறைகளை நேரடியாகச் செய்து பார்க்க வாய்ப்புகள் இல்லாவிடினும். இவைகளைத் தெரிந்து கொள்வது மிகவும் நலம் பயக்கும். சென்னை செப்டம்பர் – 2004 அலகு 6 புவித்தகவல் தொகுதிகள் ( Geographical Information Systems ) பற்றியது. GIS என்று ச...
மேல்நிலை இரண்டாம் வகுப்பு மாணவ - மாணவியர்களின் கைகளில் மிகவும் நவீன நுட்பங்கள் பற்றிய விவரங்களைத் தருவதுடன் , சமூக அறிவியலில் புவியியலின் நவீன. நுட்பத் திறன்கள் பற்றியும் எடுத்துச் சொல்கின்றன. புவியியல் செய்முறைகள் பற்றிய பாடங்கள் பள்ளி மாணவ - மாணவியரின் திறமைகள் மற்றும் ஆற்றல்களை மேம்படுத்தும் வகைகளில் தரப்பட்டுள்ளன. ...