text stringlengths 11 513 |
|---|
மக்கள் தொகைப் பெருக்கம் நாட்டின் தலையாய பிரச்சனையாகவும் , அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி ஏழை - பணக்காரர் என பிரிவினை உண்டாக்கக் கூடியதாகவும் உள்ளது என தெளிவுப்படுத்தினார். இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் , ஏழ்மை , உடல் நலக்குறைவு போன்ற பிரச்சனைகள் எழக்கூடும் என வலியுறுத்தினார். கீழ்க்காணும் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டு... |
அவசியமானது. 4. பெண் மற்றும் ஆண் இனங்களிடையே நெருங்கிய உறவுமுறை தவிர்க்க முடியாதது. மேற்கூறிய அனுமானங்களை மால்தஸ் விரிவாக விளக்கியுள்ளார். மனித வாழ்க்கையில் பிறப்பு , இறப்பு என்பது இயற்கை நியதி. பிறப்பினை தடுப்பது கடினமான ஒரு செயல். உலகில் மக்கள்தொகை பெருக்கம் எளிதான ஒன்று. ஆனால் மக்களுக்குத் தேவையான உணவுப் பெருக்கம் செ... |
உற்பத்தி 4 மடங்காக இருந்தால் மக்கள் தொகை வளர்ச்சி 8 மடங்காக இருக்கும் என மால்தஸ் விளக்கியுள்ளார். எனவே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல் சார்பான தடைகள் எனக் கூறி அவற்றை இரு வகையாகப் பிரித்துள்ளார். அவையாவன : 1. இயற்கைத் தடைகள் 2 ) மனிதச் செயல்தடைகள். இயற்கைத் தடைகள் வறட்சி , கொள்ளை நோய்கள் போன்ற இயற்கைத் தடைகளே மக்கள் ... |
நீங்கள் பாதிப்புக்குள்ளானவர் முடிவனாய் உணர்பவர் நீங்கள் இன்று ஏற்பதும் தவிர்ப்பதும் உம்மை வடிவமைக்கும் நீங்கள் நேற்றால் இன்றையவர் செயல்களால் நாளையவர் ! மனிதச் செயல்தடைகள் ஏழ்மை , உணவு பற்றாக்குறை , குழந்தை பராமரிப்பின்மை , உலகப்போர்கள் ஆகியவை மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். கீழ்க்காணும் இரு முறைகளின் மூலம் மக... |
குழந்தை பிறப்பினை ஊக்கமளிக்க வேண்டும். எனவே சுயக்கட்டுப்பாடு , மற்றும் பிறப்பினை குறைக்க மனித முயற்சி தேவை என மால்தஸ் குறிப்பிட்டுள்ளார். “ பிறப்பு தடுப்பு முறை ” யின் அவசியத்தை அதிகமாக வலியுறுத்தியுள்ளார். உங்களுக்குத் தெரியுமா ? மக்கள் தொகை கடிகாரம் ஒவ்வொரு வினாடியும் சராசரியாக 4 5 குழந்தைகள் பிறக்கின்றன : 2 பேர்கள் ... |
மார்க்ஸின் மக்கள் தொகை கருத்து ஜெர்மானிய சமூக - தத்துவ அறிஞரான மார்க்ஸ் நவீன கம்யூனிசத்தின் தந்தை என அழைக்கப்பட்டார். இவர் மால்தஸ் கூறியபடி மக்கள்தொகை எண்ணிக்கையே துயரங்களுக்குக் காரணம் என்ற கருத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக , வளங்களின் சீர்க்கேடு , மற்றும் முதலாளித்துவ தீமைகளில் உருவாகும் சீர்கேடான சமுதாயமே துன்பங்... |
என்ற கருத்தினை வலியுறுத்திக் கூறுகிறார். மால்தஸ் , மார்க்ஸ் இருவரின் கோட்பாடுகளும் மக்கள் தொகைப் பெருக்கம் , வளங்களின் சீரற்ற பரவல் , சமுதாய சீர்கேடுகள் நாடுகளின் பின்தங்கிய நிலைமைக்குக் காரணங்களாகின்றன எனக் குறிப்பிடுகின்றன. கற்றல் அடைவுகள் 1. மாணவர்கள் மனித திறன்பாட்டினை , மனிதப்பரிணாம வளர்ச்சி , பரவல் மற்றும் உலக அட... |
ஆப்பிரிக்கக் காடுகளில் வாழ்ந்த அறிவார்ந்த மனிதர்கள் கருவிகளையும் , ஆசியாவில் வாழ்ந்தவர்கள் பயன்படுத்தினர். பயிற்சிகள் 2. மத்திய ஆசியாவிலிருந்து வெளியேறிய நாடோடிகள் மாற்றி அமைத்தனர். 7. 4. பணித் திறன்பாட்டினைப் புரிந்து கொள்ள 5. ஆப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் பிரச்சனைகளாக இருந்து வருகின்றன. 8. 3. பணித்திறன் ... |
வயது பிரமிடு 12. இடைப்பட்ட வயது பிரமிடு 13. மால்தஸின் கோட்பாடு ஆ ) அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஈ ) ஜப்பான் முன்னேறியப் பொருளாதாரம் சரியும் பொருளாதாரம் மக்கட் பெருக்கம் முதலாளித்துவம் மற்றும் வளங்களின் சீர்கேடு வளரும் பொருளாதாரம் 14. மார்க்ஸின் கருத்து IV. சுருக்கமாக விடையளி 15. மக்கள் தொகைப் பரவல் சீரற்றிருக்க காரணங்கள் யா... |
பிரிவுகளாகப் பிரிக்கலாம் ? அவை யாவை ? 19. சென்ற 400 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சியடைய முக்கியக் காரணம் யாது ? ஒரு பத்தியில் விடையளி. 20. நாகரீகங்கள் எவ்வாறு தோன்றி வளர்ச்சியடைந்தன ? 21. பதினாராம் நூற்றாண்டிற்குப்பின் நாகரீகங்களின் முன்னேற்றம் எவ்வாறு இருந்தது ? 22. மனிதப் பரிணாம வளர்ச்சியில் புதிய கருத்துக்களாகக் கூறப... |
பற்றியும் , பின்னடையும் வயதுப் பிரமிடு பற்றியும் விளக்குக. 27. மால்தஸின் மக்கள் தொகைக் கோட்பாட்டினை விளக்கமாக எழுதுக. அலகு 2 மனித இயற்தொகுதிகள் பாடம் 3 குடியிருப்புகள் கற்றல் நோக்கங்கள் மாணவர்கள் மனித இயற்தொகுதிகளில் உள்ள மனித குடியிருப்புகளை அடையாளம் காணுதல் மற்றும் புவியியல் பண்புகளை அறிந்து கொள்ளல். நாம் நகரத்தின் உ... |
குடியிருப்பின் வடிவமைப்பை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது. விளக்குகளின் வெளிச்சம் பரவலாக இருப்பின் அது பெரிய நகரமாக இருக்கும். வெளிச்சங்கள் பரவலாகத் தெரியாப் பகுதிகள் கிராமங்களாகவோ , திறந்த வெளிகளாகவோ அல்லது வயல்வெளிகளாகவோ அமையும். பொதுவாக இந்த விளக்குகளின் ஒளி ஏதோ ஒருவித அமைப்பைக் கொண்டதாகக் காணப்படும். இத்தகைய அமைப்பி... |
இயற்கைத் தோற்றங்களைச் சார்ந்து அமைகின்றது. உலகின் எல்லாப் பகுதிகளிலும் , ஒரே மாதிரியான குடியிருப்புகளைக்காண இயலாது. அவைகள் இடத்திற்கிடம் மாறுபடுகின்றன. குடியிருப்புகள் மாறுபட்டு காணப்படுவதற்குப் பல காரணிகள் உள்ளன. இக்காரணிகளை ஆராய்வதற்கு முன்னர் , குடியிருப்புகளின் தோற்றத்திற்கான காரணங்களை நாம் தெரிந்து கொள்வது அவசியம்... |
போன்றவைகள் காரணங்களாக அமைந்தன. இறந்தவர்களை புதைப்பதற்காகவும் அவர்களுக்குரிய சடங்குகளை மேற்கொள்வதற்காகவும் , நிலையான ஒரிடத்தை ஏற்படுத்தினர். காலப்போக்கில் , அவ்விடங்கள் சமய முக்கியத்துவம் பெற்ற இடங்களாயின. ஆண்கள் உணவிற்காக இடம் விட்டு இடம் பெயரும்பொழுது , பெரியவர்களும் , பெண்களும் , குழந்தைகளும் ஓரிடத்தில் நிலையாகத் தங்... |
மற்றும் குழந்தைகள் ஆகியவர்களைக் காக்க பாதுகாப்பான சுவர்களை அமைத்தனர். வீரர்களை நியமித்து அவர்களுக்கானக் குடியிருப்புகளையும் அமைத்தனர். எனவே , அரசியல் மற்றும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த குடியிருப்புகள் முதலில் தோன்றலாயின. குடியிருப்பில் நிலையாகத் தங்க ஆரம்பித்தவர்களுக்காகவும் மனிதர்கள் உணவினைத் தேடவேண்டிய தேவை ஏற்பட்... |
நாளடைவில் பொருளாதார முக்கியத்துவம் பெற்ற குடியிருப்புகளாயின. பிறகு படிப்படியாக அனைவரும் நாடோடி வாழ்க்கையை விட்டு ஓரிடத்தில் நிலையாகத் தங்கத் துவங்கினர். இவ்வாறாகத்தான் நிரந்தரமான குடியிருப்புகள் தோன்றலாயின. குடியிருப்பு ( Settlement ) மனிதனின் வாழ்விடங்களே குடியிருப்புகள் என அழைக்கப்படுகின்றன. குடியிருப்புகள் ஒவ்வொன்று... |
குடியிருப்புக்கு ஒரு வடிவமைப்பைத் தருகின்றன. தலமும் சூழலமைவும் ( Site and Situation ) குடியிருப்பின் அமைவிடம் இரண்டு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. அவையாவன : தலம் மற்றும் சூழலமைவு. தலமும் , சூழலமைவும் கொண்ட குடியிருப்புகள் அமைப்பிலும் பண்பிலும் ஒன்றாகவே இருக்கின்றன. அமைவிடங்களின் பண்பையும் , பரவலையும் தெரிந்துகொள்ள ... |
கட்டுமானங்கள் ஆகியவைகள் குடியிருப்புகள் அமைகின்ற முக்கியத் தலங்களாகும். தலம் ( Site ) ஒரு குடியிருப்பு அமையும் இடம் ‘ தலம் ’ எனப்படும். குடியிருப்புத் தலங்களின் சிறப்பையும் அவற்றின் வசதிகளையும் அறிந்து கொண்டால் , அவைகள் அங்கு தோன்றியதற்கான காரணம் புரிந்து விடும். அக்காரணங்கள் , குடியிருப்புகள் தோன்றுவதற்கு மட்டுமே உதவி... |
வாய்ந்ததாக இருந்த ஒரு குளம் , காலப்போக்கில் மக்கள்தொகை பெருக்கத்தினால் முக்கியத்துவத்தை இழந்துவிடலாம். இருப்பினும் அக்குடியிருப்புகள் இடம் பெயர்வதில்லை. ஆனால் புதிய நீர்நிலைகளை உருவாக்கிக் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக , கிணறுகள் , குளங்கள் எனப்புதிய நீர்நிலைகள் தோன்றக்கூடும். வணிகத் தலம் ( Commercial Site ) தன்னிறைவு வ... |
தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்த தானியத்தை விற்கவேண்டி வந்தது. எனவே , தானிய மூட்டைகள் பண்ணையிலிருந்து வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இவ்வாறு பல பண்ணைகளிலிருந்து உபரி தானியங்கள் ஒரு கிராமத்தில் சேகரிக்கப்பட்டன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் முறையான வணிகம் நடைபெறும்போது , அக்கிராமம் ஒரு வணிகத் தலமாக மாறி... |
கொண்ட பல குடியிருப்புகள் தோன்றலாயின. ஆற்றங்கரை ஓரங்களிலும் பெரிய சாலை ஓரங்களிலும் , பல முக்கிய சாலைகள் கூடுமிடத்திலும் , இருப்புப் பாதைகள் இணையுமிடத்திலும் வணிகத்தை ஆதாரமாகக் கொண்டு பல குடியிருப்புகள் தோன்றலாயின. சூழலமைவு ( Situation ) சூழலமைவு என்பது குடியிருப்பைச் சுற்றியுள்ள நிலத்தின் அமைப்பு மற்றும் சூழ்நிலையைக் கு... |
அங்கு வாழும் மக்களுக்கு வெப்பம் மிகவும் தேவைப்படுகின்றது. எனவே , அவர்கள் தங்களுடைய வீடுகளை கிழக்கு நோக்கிக் கட்டிக் கொள்கிறார்கள். இந்தியா ஒரு பருவக்காற்று நாடாக இருப்பதினால் , தெற்குத் திசையை நோக்கி வீடுகள் அமைக்கப்படுகின்றன. இதேபோன்று , நீர்நிலைகளும் வீடுகள் அமையக் காரணமாக உள்ளன. இக்காலத்தில் வளர்ச்சி பெற்றுள்ள பல பெ... |
வருகின்ற காரணத்தினால் குடியிருப்புகள் அவ்விடங்களை விட்டு சற்று உயரமான இடத்தில் அமைகின்றன. எடுத்துக்காட்டாக , இந்தியாவில் யமுனை , சம்பல் நதி வெள்ளச் சமவெளிகளில் பள்ளத்தாக்குகளுக்கு இடையிலுள்ள மேட்டு நிலத்தில் குடியிருப்புகள் அமைந்துள்ளன. தலம் மற்றும் சூழலமைவு ஆகியவற்றின் தனித்தன்மையினால் குடியிருப்புகளுக்கு சிறப்புத் தோ... |
தலமும் சூழலமைவும் எவ்வாறு குடியிருப்பின் வடிவமைப்பை நிர்ணயிக்கின்றன என்பதைப் படித்தோம். இவ்வாறே , குடியிருப்பின் செயல்பணிகளை அடிப்படையாகக் கொண்டு அவைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன : நாட்டுப்புறக் குடியிருப்பு மற்றும் நகர்ப்புறக் குடியிருப்பு நாட்டுப்புறக் குடியிருப்பு - கிராமிய வடிவங்கள் நாட்டுப்புற குடியிரு... |
கிராமங்களாகும். நமது இந்தியாவும் கிராமங்கள் நிறைந்த நாடு என்பது உங்களுக்குத் தெரிந்ததே. படம் ( 3.1 & 3.2 ) கிராமங்களை அவை அமைந்திருக்கும் தலம் , சூழல் , அளவு , மற்றும் வடிவம் ஆகியவைகளைக் கொண்டு பின்வருமாறு பிரிக்கலாம். நெருக்கமான கிராமம் ( Compact Villages ) வ இந்த வகை கிராம அமைப்பில் , கட்டிடங்களும் , வீடுகளும் அருகரு... |
வளர்ச்சி பெறுவன ஆகும். மையக்கருவாகக் குளம் , ஏரி , கோவில் போன்றவை அமையலாம். இம்மையத்தைச் சுற்றி சாலைகளும் , கட்டிடங்களும் மிகவும் நெருக்கமாக அமைகின்றன. பாலைவனத்தில் காணப்படும் பாலைவனச் சோலையைச் சுற்றிலும் குடியிருப்புகள் காணப்படும். இக்குடியிருப்புகளுக்கு மையக்கருவாக விளங்குவது நீர்நிலையாகும். தமிழ்நாட்டில் கோயிலை மையம... |
கோட்டை சென்னை மாநகரத்திற்கு மையக்கருவாக இருந்தது பலருக்கு தெரிந்ததே. தொகுப்பு அல்லது கொத்தாக அமைந்த கிராமம் ( Grouped or Bunched Settlement ) ஒரு கிராமத்திலிருந்து ஒரு குடும்பம் பிரிந்து சென்று வேறொரு இடத்தில் தனது குடியிருப்பை அமைக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். காலப்போக்கில் , அதன் அருகில் பல வீடுகள் உருவாகி அது ஒரு... |
இவ்வகைக் குடியிருப்புகள் குழுமியதாகக் காணப்பட்டாலும் , இரண்டு பகுதிகளாகக் காணப்படும். இவை ஒரு பாலத்தின் இரண்டு பக்கங்களிலோ அல்லது செங்குத்துச் சரிவின் மேல்பகுதி , கீழ்ப்பகுதிகளிலோ காணப்படும். சில வேளைகளில் இவைகள் தனித்தனியாக வளர்ச்சியடைந்து இருக்கும். ஒரே பெயரைக் கொண்டு இந்த இரட்டை கிராமங்கள் கீழ் , மேல் , கிழக்கு , மே... |
குடியிருப்புகளிலிருந்து மாறுபட்டவை. இவற்றில் உள்நாட்டில் முக்கியத்துவம் பெற்ற நகரங்களும் , உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற நகரங்களும் உள்ளன. பழைய நகரங்கள் , பழைய வேளாண் பகுதிகளிலிருந்து தோன்றியவை ஆகும். நவீன நகரங்கள் தொழில் வளர்ச்சியின் அடிப்படையில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றியவை. நகரங்கள் பலவிதமானப் பொருளாதார , சமூக ... |
நெருக்கமான தெருக்களையும் , உயரமானக் கட்டிடங்களையும் கொண்டதாகக் காணப்படுகின்றன. அவைகள் அதிக மக்கள் அடர்த்தியும் வேளாண்மையற்ற பிற செயல்களைக் கொண்டதாகவும் இருக்கின்றன. இருந்த போதிலும் மக்கள் பல்வேறு குழுக்களாக இணைந்து வாழ்கின்றனர். ஆனால் அவர்களிடையே நெருக்கமான சமூக உறவுகள் இல்லை. மனித நகர்வுகளும் , சமூக நிலைத்தன்மையும் , ... |
பகுதிகளுக்கும் பொருந்தக்கூடிய முறை எதுவுமில்லை. ஒவ்வொரு நாடும் தனித்தனி முறைகளைப் பின்பற்றி வகைப்படுத்துகின்றன. அவை ( 1 ) செயல்பாடுகள் , ( 2 ) மக்கள் எண்ணிக்கையின் அளவு , ( 3 ) நிர்வாக அமைப்புகள் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. இந்தியா , இஸ்ரேல் , இத்தாலிபோன்ற நாடுகளில் நகர்புறங்கள் வேளாண்மையல்லாத வேறு தொழில்களை மேற்கொண... |
ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடியிருப்புகளை நகர்ப்புறம் என்றே அழைக்கின்றனர். எனவே நகரக் குடியிருப்புகளின் வகைகளும் , வரையறைகளும் இடத்திற்கிடம் அவற்றின் செயல்பாடுகளுக்குத் தக்கவாறு மாறுபடுகின்றன. மில்லியன் நகரங்கள் ( Million Cities ) ஒரு மில்லியன் அல்லது மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களை ' மில்லியன் நகரங்கள்... |
உள்ளன. மில்லியன் நகரங்கள் பெரும்பாலும் நாட்டின் தலைநகரங்களாகவும் , வணிகத் துறைமுகங்களாகவும் , மேலும் பல செயற்பணிகளைக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன. சில குடியிருப்புகள் பழைய தலைநகரங்களாகும். எடுத்துக்காட்டாக , லெனின் கிராடு , ரியோடி ஜெனிரோ மற்றும் கொல்கத்தா. நகரத்தின் வளர்ச்சியும் பிரச்சனைகளும் ( Urban Growth and Probl... |
முதலாவதாக , இயற்கையான மனித இனப்பெருக்கம் , இரண்டாவதாக கிராமங்களில் இருந்து வரும் குடியேற்றத்தால் , மக்கள் தொகை பெருகிக் கொண்டு வருகின்றது. இதன் விளைவாக நகரின் எல்லைகளும் வெளிநோக்கி விரிவடைந்து வருகின்றன. இதனால் நகரில் வேலையில்லாத் திண்டாட்டம் , போக்குவரத்து நெரிசல் , காற்று மாசடைதல் மற்றும் சுற்றுப்புறம் மாசடைதல் என்பவ... |
நகரக்குடியேற்றம் எப்பொழுதும் பொருளாதாரத்தின் அடிப்படையில் அமைவதில்லை. இன்றைய தலைமுறையினர் கல்வி , நிர்வாகம் மற்றும் ஏனைய காரணங்களுக்காகவும் குடிபெயருகின்றனர். குறிப்பாக மேற்படிப்பிற்காகவும் , வேலைவாய்ப்பிற்காகவும் நகரத்தை நோக்கி பெரும் எண்ணிக்கையில் நகருகின்றனர். சென்னை மாநகர மக்கள் எண்ணிக்கை இவ்வாறே நாளுக்கு நாள் பெரு... |
புறநகர் ஆகியவை காற்றை மாசடையச் செய்கின்றன. தொழிற்சாலை கழிவுகளும். வீட்டுக் கழிவுகளும் , கடல் , ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் கலப்பதால் நீர் மாசடைகின்றது. மேலும் பலவிதமான வாகனங்களாலும் , தொழிற்சாலைகளாலும் ஏற்படும் ஓசைகள் அமைதியான சூழலைப் பாதிக்கின்றன. வாகனங்களிலிருந்து வரும் பல வகையான சப்தங்கள் மனித அமைதிக்கு கேடு விளைவிப்... |
ஒருசில வசதிகளையும் சேவைகளையும் தன்னுள் கொண்டதாக அமைகின்றது. ஆனால் , இம்மாதிரியான வசதிகளும் சேவைகளும் குடியிருப்பின் அளவு , மக்கள்தொகை , அவற்றின் தேவை , வருமானம் , பொருட்கள் வாங்கக் கூடிய திறன் என்பதான பல கூறுகளைச் சார்ந்து அமைகின்றன. ஒரு இடத்தின் வசதிகள் மற்றும் சேவைகள் குறித்து குடியிருப்புகள் சார்ந்த ஒரு கோட்பாடுதான்... |
மக்களுக்கும் சேவைகளைச் செய்கின்றது. இம்மையத்தின் சேவைகளாகக் கடைகள் , சந்தைகள் , நிர்வாகங்கள் , கேளிக்கைக் கூடங்கள் ஆகியவை காணப்படும். ஒரு மைய இடத்தின் சேவைகளில் வேறுபாடுகள் இருப்பினும் பெரிய குடியிருப்புகள் யாவையும் மைய இடங்கள்தான். எடுத்துக்காட்டாக , பெங்களூர் , கோயம்புத்தூர் இரண்டும் ஏறக்குறைய ஒரே அளவான நகரங்களாக இரு... |
, கிராமங்கள் ஆகிய குடியிருப்புகள் சேவைப்பணிகளைக் கொண்டிருப்பதில்லை. எனவே இவ்வகை குடியிருப்புகள் அருகில் உள்ள மைய டங்களைச் சார்ந்தே உள்ளன. குடியிருப்புகள் அதன் உருவத்திலும் முக்கியத்துவத்திலும் வேறுபடுகின்றன. இவ்வேறுபாடுகளைக் கண்டறிவதில் பிரச்சனைகள் உள்ளன. குடியிருப்புகளின் மக்கள் தொகையை அளவீடுகளைப் பயன்படுத்தி அறியலாம்... |
குடியிருப்புகளில் அதிக எண்ணிக்கையுள்ள பல வகையான கடைகளும் , ஏனைய சேவைகளும் , வேலை வாய்ப்புகளும் காணப்படும். குடியிருப்புகளை அவைகளின் அளவு மற்றும் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு நான்கு படி நிலைகளாக வரிசைப்படுத்தலாம். இவ்வாறாக வரிசைப்படுத்தப்படும் குடியிருப்புகளில் பெரியதும் முக்கியத்துவம் வாய்ந்த குடியிருப்புகள் ம... |
எண்ணிக்கையில் குக்கிராமங்க கிராமங்களும் அடிமட்டத்தில் ( படிநிலை நான்கு ) காணப்படும். குறைந்த எண்ணிக்கையில் நகரங்களும் பெரிய நகரங்களும் கீழ்மட்டத்தில் ( படிநிலை மூன்று ) காணப்படும். சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் மத்தியில் ( படிநிலை இரண்டு ) காணப்படும். குடியிருப்புப் படிநிலையின் மேல்மட்டத்தில் மாநகரங்கள் காணப்படும். எட... |
மக்கள்தொகையாக 200 அல்லது 300 நபர்களையே இக்குடியிருப்புகள் கொண்டமையும். இதே அடிப்படையில் அதிகபட்ச மக்கள்தொகை கொண்ட ஒரு குடியிருப்பின் சந்தைப் பரப்பு பெரியதாக இருத்தல் வேண்டும். இத்தகைய குடியிருப்பில் விற்கப்படும் பொருட்கள் தேவையானதும் விலை உயர்ந்ததுமான பொருட்களாகவும் , ஆடம்பரப் பொருட்களாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாக... |
வாங்கப்படுகின்றன. எனவே மிக முக்கியமான மேல்மட்ட குடியிருப்புகள் , கீழ்மட்ட குடியிருப்புகளுடன் ஒப்பிடும்பொழுது பல வகையான ஆடம்பரப் பொருட்களையும் சேவைகளையும் கொண்டிருப்பதுடன் , ஒரு பெரிய பரப்பைத் தனது சேவை அல்லது சந்தைப் பரப்பாகவும் கொண்டிருக்கும். எவ்வாறு ஒவ்வொரு மைய இடத்திற்கும் ஒரு குறைந்தபட்ச மக்கள் தொகை ( threshold ) ... |
போகின்றது. எடுத்துக்காட்டாக , ஒரு புறநகர் பகுதியில் இருக்கும் பெட்டிக்கடை ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் உள்ள மக்களுக்கு வேண்டிய பொருட்களை விநியோகம் செய்கின்றது. இந்த தூரம் “ குறைந்தபட்ச உள்தூரம் ” ( inner range of a good ) என்று அழைக்கப்படும். வழக்கமாக இக்கடையில் பொருள் வாங்கும் ஒருவர் கடைக்குச் சென்று தமக்கு மிகவும் வ... |
சிறிது தூரம் சென்று இன்னொரு கடையில் வாங்குவதற்கு தயங்கவில்லை எனில் அந்தப் பொருளுக்கு அது ‘ குறைந்தபட்ச வெளிதூரம் ’ ( Outer range of a good ) என்ற முடிவுக்கு நாம் வரக்கூடும். இக்கருத்து மையவிடக் கோட்பாட்டின் முக்கியக் கருத்துக்களில் ஒன்றாக அமைகின்றது. மேலும் கிரிஸ்டாலரின் கோட்பாடு , சந்தைப் பரப்பை அடிப்படையாகக் கொண்டு ,... |
காணப்படவில்லை , மேலும் நிலப்பரப்பில் பலவித நிலத்தோற்றங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக , மலை , ஆறு போன்ற இயற்கைத் தோற்றச் சூழ்நிலைகளில் மக்கள்பரவல் சீராக இருப்பதில்லை , இதுபோன்ற பல தோற்றங்களினால் கிறிஸ்டாலர் கோட்பாடு இயற்கையோடு ஒப்பிடும்போது முரண்படுகின்றது. இருப்பினும் கிறிஸ்டாலர் கோட்பாடு குடியிருப்புகளை வகைப்பட... |
) இன்னும் பிற , அதனைச் சுற்றி இரண்டாம் மட்ட நகரங்களாகக் காணப்படுகின்றன. இத்தொடரின் அடுத்த பகுதியில் எஞ்சிய கிராமங்கள் காணப்படுகின்றன. கற்றல் அடைவுகள் 1. மாணவர்கள் குடியிருப்பின் தோற்றம் அவை அமைவதற்கான காரணிகளை அறிந்து கொண்டனர். 2. மாணவர்கள் கிராமம் மற்றும் நகர குடியிருப்புகளையும் நகர வளாச்சியினால் ஏற்படும் விளைவுகளையும... |
அமைந்துள்ள மாநகரம் 5. நாட்டுப்புறக் குடியமைப்பின் முக்கிய தோற்றமாகக் காணப்படுவது , 6. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள நகரங்களை நகரங்கள் என்கிறோம். மைய இடக் கோட்பாட்டை புறநகர் வளர்ச்சிக்கு , தொழிலகத் தொகுதிகள் கற்றல் நோக்கங்கள் மாணவர்கள் , தொழிலகத் தொகுதிகளின் தன்மை , வகைகள் மற்றும் பிரிவுகள் பற்றியும் அவை... |
பயிரிடப்படுகின்றன. இது “ வேளாண் தொழில் ” எனப்படுகின்றது. அடுத்த அடிப்படைத் தேவையான உடைக்காக , பருத்தி , சணல் , பட்டு , கம்பளி போன்றவை தொழிற்சாலைகளின் மூலம் ஆடைகளாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இது ‘ நெசவுத் தொழில் ' எனப்படுகின்றது. இருப்பிடத் தேவைக்காக உற்பத்தி செய்யப்படும் கட்டுமானப் பொருட்களான செங்கல் , இரும்பு எஃகு பொ... |
அனைத்துத் தேவைகளையும் இவ்வாறாக பூர்த்தி செய்து அளிப்பது ‘ தொழில் ’ எனப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் மக்கள் தொகை மிகக் குறைவாக இருந்தது. மனிதனின் அறிவு வளர்ச்சி மற்றும் தேவைகள் குறைவாக இருந்தது. நாளடைவில் மக்கள் தொகை பெருக ஆரம்பித்தது. நாகரீக வளர்ச்சியும் அதிகரித்தது. எனவே பதினெட்டாம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி ஏற்பட்டு ... |
பெரும்பிரிவுகளாகப் 1. முதன்மை நிலைத் தொழில்கள் 2. இரண்டாம் நிலைத்தொழில்கள் 3. மூன்றாம் நிலைத் தொழில்கள் 4. நான்காம் நிலைத் தொழில்கள் முதன்மை நிலைத் தொழில்கள் இவை வேட்டையாடுதல் , மீன்பிடித்தல் , வேளாண் தொழில் மற்றும் சுரங்கத் தொழில் ஆகியவனவாகும். இவை அனைத்தும் இயற்கையிலிருந்து நேரடியாக வளங்களைப் பெறும் தொழில்களாகும். இந... |
முதன்மை நிலைத் தொழிலிருந்து பெறப்படும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி , மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற தொழில்களே இரண்டாம் நிலைத் தொழில்களாகும். எடுத்துக்காட்டாக , பருத்தியிலிருந்து ஆடை தயாரித்தல் , சுரங்கத் தொழிலிருந்து மனிதனுக்குத் தேவையான பொருட்கள் தயாரித்தல் போன்றவை ஆகும். மூன்றாம் நிலைத் தொழில்கள் முதலிரண்டு ந... |
தொழில்களாகும். நான்காம் நிலைத் தொழில்கள் இது மக்களுடன் தொடர்பு கொள்ளும் பணிகளான கல்வி , ஆராய்ச்சி , நிர்வாகம் , நிதி மேலாண்மை , வழக்காடுதல் , மருத்துவம் போன்ற தொழில்களை உள்ளடக்கியது. இத்தொழிலுக்கு உயர்தரத்திறமை , தேர்ச்சி மற்றும் சிறப்புத்தன்மை ஆகியன தேவையாகும். மேலும் இது முதல் மூன்று தொழில்களும் சிறப்புற நடைபெற உறுது... |
நிலைத் தொழில் சுரங்கத் தொழிலிருந்து இரும்புத் தாதுவும் மணற்பாறைகளும் ; இரப்பர் தோட்டத்திலிருந்து இரப்பரும் கிடைக்கின்றன. இவை எஃகு குழாய்களாகவும் , கண்ணாடிகளாகவும் , டயர்களாகவும் மாற்றப்பட்டு மிதிவண்டிகளாக இணைக்கப் படுகின்றன. போக்குவரத்து மூலம் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. நிதி , மேலாண்மை , கல்வி , மர... |
செயல்பாடுகளில் மாற்றப்படுகின்றன. இவ்வித செயல்பாடுகள் நான்கு நிலைத் தொழில்கள் மூலம் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு நடைபெறுவது ‘ செயற்பாட்டு பிணைப்பு ' எனப்படுகின்றது. அத்தியாவசியமற்ற பிணைப்புகள் : ஒரு தொழிலுக்கு மற்ற தொழில்கள் பயன்பட்டாலும் , அவைகள் நிறுத்தப்பட்டால் மாற்று வசதியுடன் உற்பத்தியைத் தொடர இயலும். எடுத்துக்காட... |
அத்தியாவசியப் பிணைப்பைப் பொறுத்தே தொழிலகங்களின் அமைவிடங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக , கப்பல்கட்டும் தொழிலை கடற்கரை பெருநகரங்களிலும் , கண்ணாடித் தொழிலை சந்தைக்கருகிலும் மட்டுமே அமைக்க முடியும். தவிர , மூன்றாம் , நான்காம் நிலைத்தொழில்கள் பெரும்பாலும் நகரங்களிலேயே அமைவிடங்களைப் பெருகின்றன. மேலும் ஒரு சில இடங்களில... |
சோட்டா நாகபுரி பீடபூமிப் பகுதியும் தொழிலக வட்டங்களாகும். அவ்வாறே ஜெர்மனியில் ரூர் , அமெரிக்கா ஐக்கிய நாட்டில் சுப்பீரியர் ஏரி பகுதிகளும் தொழிலக வட்டங்களாகும். தொழிலக அமைவிடக் காரணிகள் ஓரிடத்தில் தொழிலகங்கள் அமைக்கப்பட பல்வேறு காரணிகள் முக்கியமாகத் திகழ்கின்றன. ஏனெனில் காரணிகள் அமைவதின் அடிப்படையிலேயே தொழிலகங்களின் உற்ப... |
, மூலதனம் , போக்குவரத்து , எரிசக்தி , பணியாட்கள் , அரசாங்கம் போன்றவையும் முக்கிய காரணிகளாகும். மூலப்பொருட்கள் இயற்கை வளங்களான இரும்புத் தாது , தோல் , இரசாயனப் பொருட்கள் , மரங்கள் போன்றவை தொழிற்சாலைகளுக்கான ஒரு சில மூலப்பொருட்களாகும். இம்மூலப்பொருட்களைச் சார்ந்தே தொழிலக அமைவிடங்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. எவ்வாறெனில... |
இத்தொழிலகங்களின் உற்பத்தியும் மூலப்பொருட்களின் அளிப்பைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகின்றது. மூலப்பொருட்கள் இறக்குமதி செய்ய வேண்டி இருப்பின் , தொழிலகங்கள் துறைமுகங்களுக்கருகில் நிறுவப்படலாம். இரண்டாம் நிலைத் தொழிலகங்கள் , தாது வளங்கள் , வேளாண் , காட்டு மற்றும் விலங்குகள் , கடல் சார்ந்த பொருட்கள் போன்றவை கிடைக்கப் பெறும் இ... |
அவசியமானதொன்றாகும். மூலப்பொருட்கள் பெறுவதற்கும் இயந்திரக் கருவிகள் வாங்கவும். ஊதியம் கொடுக்கவும் மூலதனம் இன்றியமையாததொன்றாகும். போக்குவரத்து தொழிலகங்களின் இரத்தநாளம் என போக்குவரத்தைக் கூறலாம். ஏனெனில் , மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை தொழிலகங்களுக்கும் , சந்தைக்கும் கொண்டு சென்று தொழிலகம் சிறப்புற நடைபெற வழிவ... |
நிலக்கரி தவிர மற்ற எரிசக்திப் பொருட்கள் தொலைவான தூரத்திற்கும் அனுப்பக் கூடியவையானதால் , அவை உற்பத்தியாகும் இடங்களில் தொழிலகங்கள் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. பணியாட்கள் தொழிலகத்தின் உற்பத்திப் பெருக்கம் தொழிலாளர்களின் எண்ணிக்கை , நுட்பத்திறன் இவற்றையே அடிப்படையாக கொண்டுள்ளது. தொழில் நுட்பத் திறனுடைய மிகுதியான தொழிலாளர... |
தொழிற் கொள்கைகள் போன்றவை அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால் , தொழிலக அமைவிடத்தில் அரசு முக்கிய பங்கு வகிக்கின்றது. சில சமயங்களில் சில குறிப்பிட்ட காரணங்களால் தொழிற்சாலை இடமாற்றம் நேரிட்டால் தொழிலகம் மூடப்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலக அமைவிடக்கோட்பாடுகள் உலகின் தொழில் மண்டலங்களைக் கொண்டு பலர் பல ... |
செலவு குறைப்பு 2. அதிக அளவு வருவாய் சில வல்லுனர்கள் இவ்விரு வழிகளை கருத்தில் கொண்டு 1 ) குறைந்த செலவில் அமையும் அமைவிடங்கள் , 2 ) உச்ச வருவாய் அமைவிடங்கள் என இருவித தொழிலக அமைவிடக் கோட்பாடுகளை விளக்கியுள்ளனர். வெபரின் கோட்பாடு ' குறைந்த செலவு ’ அமைவிடக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு தொழிலக அமைவிட கோட்பாட்டினை வெபர்... |
இவரது கோட்பாட்டில் இருந்து தெளிவாகின்றது. அனுமானங்கள் 1. சில மூலப்பொருட்கள் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கிடைக்கின்றன. எனினும் நீர் போன்ற பொருட்கள் எங்கும் பரவிக் கிடக்கின்றன. 2. குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சந்தைகள் காணப்படுகின்றன. 3. பொருட்களின் எடையையும் , தூரத்தையும் பொறுத்தே போக்குவரத்துச் செலவு கணக்கிட... |
வெபரின் குறைந்த செலவு தொழிலக அமைவிடக் கோட்பாடு இது முக்கோண அமைவிட அமைப்பை அடிப்படையாகக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது. முக்கோணத்தின் சமதள இருமுனைகள் இரு வகைமூலப்பொருட்கள் கிடைக்குமிடங்களை ( R ,, R2 ) குறிப்பனவாகவும் , மற்றொரு முனை சந்தையை ( M ) குறிப்பனவாகும் அமைக்கப்பட்டுள்ளது. P என்பது தொழிலக அமைவிடமாகும். வெபரின் தொழிலக... |
அமைவிடக் கோட்பாடு ’ வெளியிடப்பட்டுள்ளது. iv ) ஆனால் R , R , மூலப்பொருட்கள் கிடைக்கு மிடங்களுக்கும் M என்ற சந்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் P என்ற தொழிலக அமைவிடம் இருக்குமேயானால் R , R , மூலப் பொருட்களைத் தொழிலகத்திற்கு கொண்டு வரும் போக்குவரத்து செலவு சமமாகின்றது. அதுபோலவே P என்ற தொழிலகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்க... |
இவைகளுக்கு மையப்பகுதியில் P என்ற தொழிலகம் அமைவதே ஏற்புடையது என வெபர் தனது கோட்பாட்டில் விளக்குகிறார். எடை குறைந்த உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிலகங்களில் R , R2 மூலப்பொருட்களின் அருகில் P என்ற தொழிலகம் அமைந்துள்ளதால். மூலப்பொருட்களை அமைவிடத்துக்குக் கொண்டு செல்லும் செலவு குறைகின்றது. மேலும் , உற்பத்திப் பொருள் எடை... |
கருதுகின்றார். எடை அதிகரிக்கும் உற்பத்திப் பொருட்கள் எடை அதிகரிக்கும் உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிலகங்களில் R , R2 மூலப்பொருட்களின் எடை உற்பத்திப் பொருட்களின் எடையைக் காட்டிலும் குறைவாக உள்ளதால் , மூலப்பொருட்களை தொழிலகத்திற்குக் கொண்டு செல்ல ஆகும் செலவு குறைகின்றது. உற்பத்திப் பொருட்களின் எடை கூடுதலாக உள்ளதால் ,... |
செலவு தொழிலக அமைவிடக் கோட்பாடு , போக்குவரத்து செலவை அடிப்படையாகக் கொண்டுள்ளதே இதன் குறைபாடாக இருப்பினும் , மற்ற கோட்பாடுகளை விட இது சிறந்ததாகக் கருதப்படுகிறது. மாணவர்கள் வேறுபட்ட தொழிலகத் தொகுதிகள் , அமைவிடக் காரணிகள் மற்றும் புவியியலில் தொழிலக அமைவிட கோட்பாடுகள் ஆகியன பற்றி புரிந்து கொள்கின்றனர். I. கோடிட்ட இடங்களை நி... |
என்றழைக்கப்படுகிறது. 4. பொருட்களின் எடையும் கணக்கிடப்படுகின்றது. 5. எடை அதிகரிக்கும் பொருட்க அருகிலேயே பார்க்கிறோம். சரியான விடையைத் தேர்தெடுக்கவும் 6. இயற்கையிலிருந்து நேரடியாக வளங்களை பெறும் தொழில்கள் பொறுத்தே போக்குவரத்துச் செலவு -களை உற்பத்தி செய்யும் தொழிலகங்களை. அ ) முதன்மை நிலைத் தொழில்கள் ஆ ) இரண்டாம் நிலைத் தொ... |
அத்தியாவசியமற்ற பிணைப்பு தொழிலக அமைவிடக் கோட்பாடு அ ) வெபர் கோட்பாடு ஆ ) கிறிஸ்டாலர் கோட்பாடு இ ) வான்தூனன் கோட்பாடு ஈ ) மால்தஸ் கோட்பாடு 9. நான்கு நிலைத் தொழில்களும் செயற்பாடுகளால் பிணைக்கப்பட்டுள்ளன : அ ) இடுபொருள் பிணைப்பு ஆ ) வெளிபடுபொருள் பிணைப்பு இ ) செயற்பாட்டு பிணைப்பு 10. தொழில்கள் அதிகமாகக் குழுமியுள்ள பகுதிக... |
15. மூன்றாம் நிலைத் தொழில்கள் IV. ஒரு பத்தியில் விடை தருக 16. மூலப் பொருட்கள் 17. நான்காம் நிலைத் தொழில்கள் 18. செயற்பாட்டு பிணைப்பு 19. தொழிலக வட்டங்கள் 20. பணியாட்கள் விரிவான விடையளி 21. தொழிலக அமைவிட காரணிகளை விவரி. 22. வெபரின் தொழிலக அமைவிட கோட்பாட்டினை படத்துடன் விவரி. VI. செய்முறைப் பயற்சி 23. தொழிலக அமைவிட காரணி... |
அட்டவணைப்படுத்துங்கள். 26. பல்வேறு தொழிலகங்களின் படங்களைச் சேகரித்து நிலைகள் வாரியாக படத்தொகுப்பில் ஒப்பிடுக. 27. உனக்கு அருகாமையில் உள்ள தொழிற்சாலைக்கு சென்று ஆழ்ந்து நோக்கி அமைவிடக் காரணிகள் குறித்து அறிக்கை தயார் செய்க. அலகு 2 மனித இயற்தொகுதிகள் – 1 பாடம் 5 வணிகத் தொகுதிகள் கற்றல் நோக்கங்கள் மாணவர்கள் உலகமெங்கிலும் ... |
கொள்ளுதலைப் பொறுத்தே அதன் முன்னேற்றம் அமைகின்றது. ஆனால் , புவியியல் காரணிகளால் அது தன் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் போகலாம். எனவே , சில பொருட்களை அதிகமாகவும் சில பொருட்களை குறைவாகவுமே உற்பத்தி செய்யலாம். தேவைக்கு அதிகமான உற்பத்தி ‘ உபரி ’ என்றும் குறைவான உற்பத்தி ‘ பற்றாக்குறை ’ என்றும் கருதப்படுகின்றது. பற்றாக்குறைய... |
நடைபெற்றது. ஒரு பொருளை மற்றொன்றுக்கு மாற்றாகப் பெறுவதும் , கொடுப்பதுமே பண்டமாற்று முறை ஆகும். பன்னாட்டு வணிகத்தில் ஒரு நாடு மற்றொரு நாட்டிற்குத் தேவையான பொருளை வழங்க இயலாச் சூழல் ஏற்பட்ட சமயங்களில் அப்பொருளுக்குப் பதிலாக மற்றொரு பொருளை ஈடாகக் கொடுக்க அவசியம் எழுந்தது. எனவே , தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பயன்படுத்தப்... |
நடைமுறையில் சிக்கல்கள் எழுந்தன. இதனைப் போக்கவே காகித நாணயம் அறிமுகமானது. வணிகத்தில் புவியியல் காரணிகள் ( Role of Geographical Factors in Trade ) ஒரு வட்டாரம் தன் தேவைகளுக்கான உணவையோ , பொருளையோ உற்பத்தி செய்து கொள்ள இயலாமலோ அல்லது எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலாமலோ போகலாம். அப்பொழுது மற்ற பகுதியிலிருந்து வாங்க வ... |
வளர்ச்சி மற்றும் கலாச்சாரம் போன்றவைதான் வணிகத்தின் தேவையையும் , அளவையும் தீர்மானிக்கின்ற காரணிகளாகும். புவி அமைப்பியல் ( Geology ) ஒரு இடத்தின் பாறைகளது தன்மை மற்றும் கட்டமைப்பு , அவ்வட்டாரத்தின் புவி அமைப்பியலின் தன்மையைப் பொறுத்தது. அவ்வாறே புவிக்கடியிலிருந்து வெட்டியெடுக்கப்படும் தாதுப்பொருட்களும் எரிப்பொருட்களும் இ... |
உற்பத்திச் செய்யப்படுகின்றன. அவ்வாறே நில அமைப்புக்கு ஏற்றவாறு வேளாண் உற்பத்தியும் மாறுபடுகின்றது. எடுத்துக்காட்டாக , காப்பியும் தேயிலையும் உயரமான மலைச்சரிவுகளில் வளர்க்கப்படுகின்றன. தட்பவெப்பநிலை ( Climate ) ஒவ்வொரு வேளாண் பொருள் உற்பத்திக்கும் ஒரு குறிப்பிட்ட தட்பவெப்பநிலை அவசியமாகிறது. தட்பவெப்பநிலைக்கு ஏற்றாற்போல் அ... |
வளருவதில்லை என்பது தெளிவாகின்றது. மக்கட் தொகை ( Population ) ஒரு நாட்டிலே உற்பத்தியாகின்ற விளைபொருட்கள் அந்நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர் கிடைக்கும் உபரி மட்டுமே வேறு நாட்டுக்கு ஏற்றுமதியாகின்றது. எனவேதான் , மக்கள்தொகை எண்ணிக்கையைப் பொறுத்தே ஒரு விளைபொருள் உபரியாக உள்ளதா அல்லது பற்றாக்குறை ஏற்பட்டுள்ள... |
தொகையினால் குறைவான அளவு அரிசி உற்பத்தி செய்த போதும் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ளது. தொழில் நுட்ப வளர்ச்சி நிலை ( Stage of Techonological Development ) ஒரு நாட்டில் உற்பத்தியாகின்ற பொருட்களின் தரமும் , அளவும் அந்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பொறுத்தே அமைகின்றது. வளர்ச்சியடைந்த நாடுகள் உயர்தர இயந்திரங்களையும் ,... |
செய்கின்றன. இந்நாடுகள் குறைந்த வருவாயையும் ஈட்டுகின்றன. ஒரு நாட்டின் உற்பத்திப் பொருட்கள் தொழில் நுட்பத்தால் அதிகரிக்கின்றன. எடுத்துக்காட்டாக , ஜப்பானில் அரிசி , ஒரு ஹெக்டேருக்கு 6,000 கிலோ கிராமாக உள்ளபோது. இந்தியாவில் 2,000 கிலோகிராம் மட்டுமே கிடைக்கின்றது. கலாச்சாரம் ( Culture ) ஒரு வட்டாரத்தின் கலாச்சாரம் மற்றும் ம... |
பட்டுத் துணிகள் இன்னபிறப் பொருட்கள் ஆகும். எனவே , பன்னாட்டுச் சந்தைகளில் அவை தங்களுக்கே உரிய தனிச்சிறப்பை பெறுகின்றன. இவ்வாறாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தேவை மற்றும் அளிப்பு இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன. உபரியானப் பொருட்கள் , பற்றாக்குறையுள்ள இடங்களுக்கு இடம் பெயர வணிகம் காரணமாயுள்ளது. இப்படியாக , வணிகம் தேவைய... |
பொறுத்தே அமைகிறது. ஒரு நாட்டில் ஏற்றுமதியாகும் உற்பத்திப்பொருளின் பணமதிப்பிற்கும் , இறக்குமதியாகும் உற்பத்தி பொருளின் பணமதிப்பிற்கும் இடையேயான வேறுபாடே ' வணிகச் சமநிலை ’ எனப்படும். இறக்குமதிப் பொருட்களின் மதிப்பைவிட ஏற்றுமதிப் பொருட்களின் மதிப்பு அதிகரித்திருந்தால் அது சாதகமான வணிகச் சமநிலை எனப்படும் , அல்லது நேர்மாறாக... |
நாட்டின் உற்பத்திப் பொருட்கள் மறுநாட்டில் தேவைப்பட்டால் அந்நாடு அப்பொருளை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால் அந்நாட்டின் நாணய மதிப்பு மேம்படுகிறது. எடுத்துக்காட்டாக , ஜப்பானிலும் , அமெரிக்காவிலும் உற்பத்தியான இயந்திர மற்றும் நுகர் பொருட்களுக்கு ஏனைய நாடுகளில் தேவை அதிகரிக்கின்றது. பெட்ரோலிய உற்பத்தி மற்றும் ஏற்றும... |
நாட்டின் எல்லைக்குள் நிகழ்கின்ற வணிகம் ‘ உள்நாட்டு வணிகம் ’ எனப்படும். இதில் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் , உற்பத்தியாளர்களிடமிருந்து பொருட்களை வாங்கி , நுகர்வோருக்கு விற்பனை செய்கின்றனர். உள்நாட்டு வணிகம் மேலும் தல , ஊரக வணிகங்கள் என பிரிக்கப்படுகின்றது. தல வணிகம் ( Local Trade ) உள்ளூர் பகுதிகளிலேயே தினசரி மற்று... |
ஆகும். இங்கு உற்பத்தியாளர்களே நேரடியாக நுகர்வோருக்கு பொருட்களை விற்கின்றனர். மலர்கள் , கனிகள் , காய்கறிகள் போன்ற அழுகக்கூடிய இன்னபிறபொருட்கள் இவ்வகையில் வணிகம் செய்யப்படுகின்றன. ஊரக வணிகம் ( Rural Trade ) ஒரு நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் , அவசியமான எல்லாப் பொருட்களும் உற்பத்தி செய்யப்படுவதில்லை. எனவே தான் , அந்நாட்டின்... |
விற்பனையாகின்றன. பன்னாட்டு வணிகம் ( International Trade ) இது உலகின் பல நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகமாகும். எந்த நாடும் மற்ற நாடுகளின் உதவியின்றி வாழ இயலாது. தன்னால் உற்பத்தி செய்ய இயலாத பொருட்களை எப்படியாகிலும் ஒரு நாடு இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. பொதுவாக விவசாய மற்றும் தாதுப்பொருட்களை வளரும் நாடுகள் , வளர்ந்த நா... |
இருபெரும் வகைகள் உள்ளன. நேரிணை வணிகம் ( Bilateral Trade ) இவ்வகையில் ஒரு நாடு தனக்குத் தேவையான பொருட்களை வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றது. அதற்குப் பதிலாக தன்னிடம் உள்ள உபரி உற்பத்திப் பொருளை அந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்கின்றது. இதுவே ' நேரிணை வணிகம் ’ எனப்படுகின்றது. பல்கிளை வணிகம் ( Multilateral Trade ) ஒர... |
பல்கிளை வணிகம் ’ எனப்படும். ஒவ்வொரு நாடும் தனது சொந்த நாணயத்தைக் கொண்டுள்ளதால் பன்னாட்டு வணிகத்தில் தொழில் நடவடிக்கையின் போது , எவ்வகை நாணயத்தை பயன்படுத்துவது என்ற பிரச்சனை எழுந்தது. தொடக்க காலத்தில் , அமெரிக்க டாலரை வைத்தோ அல்லது ஆங்கில பவுண்டாலோதான் வணிகம் நடத்தப்பட்டது. பின்னர் வளர்ச்சியடைந்த நாடுகளான ஜப்பானின் யென்... |
Special Drawing Rights or SDR ) பன்னாட்டு நிதியத்தில் சலுகையாக அனுமதிக்கும் ஐக்கிய நாடுகளின் அமைப்பின் கீழ் , ஒரு பன்னாட்டு நிதி நிறுவனம் ( International Monetary Fund or IMF ) ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இப்பன்னாட்டு நாணய நிதியத்தில் ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் தங்கள் பங்கு விகிதத்திற்கேற்றாற் போல் , தங்கள் நாட்டின் சிறப... |
நாடுகளுக்கு கடன் வழங்கி வருகின்றது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அந்நாடு ஏற்றுமதி , இறக்குமதி செய்யும் பொருட்களை வைத்தே நாம் அறிந்து கொள்ளமுடியும். எடுத்துக்காட்டாக , நாம் அறிந்துள்ளவாறு. வளரும் நாடுகள் தங்களின் மூலப்பொருட்களையும் , விவசாய உற்பத்தி பொருட்களையும் ஏற்றுமதி செய்து , விலை உயர்ந்த இயந்திர பொருட்களையும்... |
நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. எனவே ஒவ்வொரு நாடும் ஒரு சாதகமான வணிகச் சமநிலையை அடையும் வண்ணம் இறக்குமதியைக் குறைக்கவும் , ஏற்றுமதியைப் பெருக்கவும் கடினமான முயற்சிகளை மேற்கொள்ளுகின்றன. ஏற்றுமதியைக் கூட்ட வரிச் சலுகைகளையும் இறக்குமதியைக் குறைக்க சுங்க வரிகளையும் விதிக்கின்றன. இதன் விளைவாக , பன்னாட்டு வணிகம் பாதிப்புக்க... |
லக்ஸம்பர்க் போன்ற நாடுகள் , ‘ பெனலக்ஸ் ’ என்ற அமைப்பின் கீழ் ஒரு பொருளாதாரக் கூட்டமைப்பை நிறுவின. பின்னர் பிரான்ஸ் , இத்தாலி , மேற்கு ஜெர்மனி மூன்றும் இணைந்து , ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு நிறுவனம் என்ற நிறுவனத்தை தோற்றுவித்தனர். தொடக்க காலத்தில் அது குறுகிய அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும் நாளடைவில் அது ஐரோப்பியப் பொ... |
மாறுபட்டிருக்கின்றன. இது 1957 இல் ரோமானிய ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்டது. தற்போது ( 2004 ) 25 உறுப்பு நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இது அமைந்த உடனேயே இறக்குமதிக்காக தடைகள் மற்றும் சுங்க , கலால் வரிகளை நீக்கிவிடவில்லை. 1966 இல் தொழில் உற்பத்தி பொருட்களின் மீதான வர்த்தகத் தடைகளை நீக்கிவிட்டு ஒரு பொதுவான சுங்க... |
விலையைப் பெறுகின்றனர். உலக வணிக அமைப்பில் , இக்கூட்டமைப்பு மூன்றாவது நிலையில் உள்ளது. உலக வணிகத்தில் 45 சதவீதம் பொருட்களை ஐரோப்பியப் பொருளாதார சமுதாயம் உற்பத்தி செய்கின்றது. தென்கிழக்காசிய கூட்டமைப்பு ( ASEAN ) இது 1967 இல் தோற்றுவிக்கப்பட்டது. இது தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பாகும். விரைவான முன்னேற்றமடைந்து வரும... |
இக்கூட்டமைப்பினால் வணிகம் விரைவாக நடைபெறுகின்றது. சிங்கப்பூர் நீங்கலாக ஏனைய நாடுகள் , விவசாய மற்றும் கனிப் பொருட்களை மேற்கு நாடுகளுக்கும் , ஜப்பானுக்கும் ஏற்றுமதி செய்கின்றன. வணிகக் கூட்டமைப்புகளின் பயன்கள் ( Benefits from Trade Blocs ) 1. உறுப்பு நாடுகளுக்கு வரிக்குறைப்பும் , உறுப்பினரல்லாத ஏனைய நாடுகளுக்கு வணிக கட்டு... |
பெற்றுள்ளன. 3. வணிகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது ஒரு நாட்டிலிருந்து அடுத்த நாட்டிற்கு பொருட்கள் தாராளமாக வந்து குவிகின்றன. உற்பத்தி நாடுகள் விரிவான அங்காடி நலனைப் பெறுகின்றனர். எனவே அவை உறுப்பு நாடுகளுக்கு மட்டுமல்லாது பிற நாடுகளுக்கும் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகின்றன. 4. புவியியல் மற்றும் கலாச்சார பின... |
செய்யப்படுகின்றன. 5. வணிகக் கூட்டமைப்பை நிறுவுவதன் மூலமாக நாடுகளுக்கிடையே அரசியல் ஒற்றுமை வலுப்பெறுகின்றது. போர் தவிர்ப்பும் , பொருளாதார அரசியல் ஒத்துழைப்பும் சாதகமாகின்றன. வணிகப் பொறி மற்றும் சந்தை வீழ்ச்சி ( Trade Trap and the fall of markets ) வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் , நலிவுற்ற நாடுகளுக்கும் வணிகச் சமநிலை இல்லை... |
வாங்கவும். தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கும் பயன்படுத்துகின்றன. இந்த சூழ்நிலைகளில் இறக்குமதி மதிப்பு , ஏற்றுமதி மதிப்பைவிட அதிகமாகி விடும் நிலை உருவாகிவிடுகிறது. இதனால் தேவையும் அளிப்பு நிலையும் சமநிலையில் இல்லை. எனவே வணிகச் சமநிலை வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு சாதகமாகவும் , நலிவுற்ற நாடுகளுக்குப் பாதகமாகவும் உள்ளது. இந்நி... |
நடுக்கம் ( Market Tremors ) எந்த ஒரு நாடும் உலக வணிகத்தில் நிலையான இடத்தைப் பிடிக்க முடியாது. ஒரு நாட்டில் தோன்றும் பொருளாதார மாற்றங்களும் , கொள்கை மாற்றங்களும் உலக வணிகத்தில் அந்நாட்டின் இடத்தை நிலையற்றதாக்கலாம். ஆகையால் உலக வணிகச் சந்தையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஜப்பான் மற்றும் புதிதாக தொழில் மயமான நாடுகள் வளர்ச்ச... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.