text stringlengths 11 513 |
|---|
நம்பப்படுகின்றது. இதன் பயனாக , இடர்பாடுகள் ஏற்படுகின்றன. நாடுகளுக்கிடையே பொருளாதார இடைவெளி விரிவடைகின்றது. ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் உலக வணிகத்தில் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்திருக்கின்றன. அவை தேசிய பாதுகாப்பிற்காக அதிகமாக செலவிடுவதில்லை. எனவே நாடுகளின் பொருளாதார முன்னேற்றம் சந்தை நடுக்கத்திற்கு காரணமாக அமைகின... |
நாடுகளுக்கிடையே தடையில்லா வாணிகத்தை வளரச் செய்ய பல கட்டப் பேச்சு வார்த்தைகள் நடை பெற்றன. உருகுவே மாநாட்டுப் பேச்சு வார்த்தை 1986 இல் துவங்கி 1994 இல் முடிந்தது. இந்தப் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பலதரப்பட்ட நாடுகள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் பின்னர் அதன் ‘ காட் ’ தலைவர் டங்கல... |
அமைப்பாக விளங்கும் என அறிவிக்கப்பட்டது. டங்கல் ஒப்பந்தத்தின் படி கையொப்பமிட்ட நாடுகள் அயல்நாட்டு இறக்குமதி மீதுள்ள கட்டுபாடுகளையும் தடைகளையும் நீக்க வேண்டும். விவசாய உற்பத்திச் செலவை குறைப்பதற்காக கொடுக்கப்பட்ட மானியத் தொகையை நிறுத்த வேண்டும். ஆராய்ச்சியின் மூலமாக கலப்பின வகைகளை மேம்படுத்தும் அமைப்புகள் , தங்கள் வசமுள்... |
விதைகளை வாங்க வேண்டும். இதைப் போலவே மருந்துகள் மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகளை அனைத்து நாடுகளும் மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். I. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அனைத்து நாடுகளும் , இந்த ஒப்பந்தம் எல்லா நாடுகளிலும் நிறைவேற்றப்படும் பொழுது தமது தனிநபர் பொருளாதாரத்தினின்று விடுபட்டு ஒருங்கிணைந்த பொ... |
இரண்டுமே காணப்படுகின்றன. இந்த டங்கல் ஒப்பந்தம் வரையறுக்கப்பட்ட ஒப்பந்தமாகக் கருதப்படுகின்றது. ஆனால் டங்கல் அறிக்கையின் படி ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உலகெங்கிலும் தடைகளின்றி விற்க முடியும். உலக மேலாண்மைக்கு வழிவகுக்கும் ஒரு ஒருங்கிணைந்த அங்காடியாக உலகம் திகழந்து மேம்படும் என்று நம்புவோம். கற்றல் அடைவுக... |
பயிற்சிகள் கோடிட்ட இடங்களை நிரப்புக. 1. பண்டைய காலத்தில் வணிகம் 2. ஒரு நாட்டின் நாணய மதிப்பு அந்நாட்டின் 3. ஒரு நாட்டின் எல்லைக்குள் நிகழ்கின்ற வணிகம் 4. உலகின் பல நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம் எனப்படும். 5. வளர்ச்சி குன்றிய நாடுகள் வணிகத்தின் மூலம் ஏழ்மைக்குத் தள்ளப்படுவதை என்கிறோம். முறையில் நடைபெற்றது. சரியான விட... |
வணிகம் 7. ஒரு நாட்டிற்குத் தேவையான பொருளை ஏற்றுமதி செய்துவிட்டு , அந்த நாட்டிடமிருந்து பெற்ற வருமானத்தைக் கொண்டு மற்றொரு நாட்டிடம் தனக்குத் தேவையான பொருளைப் பெற்றுக் கொள்ளுதல். ஆ ) பல்கிளை வணிகம் ஈ ) உள்நாட்டு வணிகம் குறிப்பிட்ட பண்டத்தைக் கொடுத்து அதற்கு ஈடாக வேறு பண்டத்தை வாங்குவது அ ) பண்டமாற்று முறை வணிகச் சமநிலை த... |
வணிகம் IV. பத்தியில் விடையளி 10. நாள்தோறும் அல்லது குறிப்பிட்ட நாட்களில் உள்ளூரில் நடைபெறும் வணிகம். அ ) ஊரக வணிகம் ஆ ) தல வணிகம் இ ) உள்நாட்டு வணிகம் ஈ ) நேரிணை வணிகம் ஆ ) சிறப்பு எடுப்பு உரிமை ஈ ) டங்கல் ஒப்பந்தம் 16. ஐரோப்பியப் பொருளாதாரச் சமுதாயம் 17. தென்கிழக்காசியக் குழுமம் 18. 19. வணிகச் சமநிலை 20. வணிகப் பொறி V... |
பயிற்சி 23. வணிகக் குழுமங்களால் ஏற்படும் பயன்கள் பற்றி கலந்துரையாடுக. 24. உங்கள் ஊரில் நடைபெறும் வணிகம் எந்த வகையினைச் சார்ந்துள்ளது என்பதை விவரங்கள் சேகரிப்பதை அடிப்படையாகக் கொண்டு அறிக்கை தயார் செய்க. 25. தென் கிழக்காசிய குழுமத்தில் அடங்கியுள்ள நாடுகளை உலக நிலவரை படத்தில் காட்டுக. 26. இந்தியா பன்னாட்டு வணிகத்தில் எவ்... |
தயார் செய்க. அலகு 3 மனித இயற்தொகுதிகள் – II பாடம் 6 போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு கற்றல் நோக்கங்கள் 1. மாணவர்கள் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் தொகுதியின் தன்மைகளை அறிதல். 2. மாணவர்கள் இன்றைய வாழ்க்கை முறையில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளல். நம் அன்றாட வாழ்வ... |
செல்லும்பொழுதும் மற்றும் செய்திகள் அல்லது தகவல்களை பரிமாறிக் கொள்ளும் பொழுதும் சில அடிப்படையான கருத்துகள் வெளிப்படுகின்றன. போக்குவரத்தின் முக்கியக் கூறுகளான தொலைவு , நேரம் மற்றும் செலவு ஆகியவற்றைப் பொறுத்து மேற்கூறிய செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன. நாம் பயணம் மற்றும் இடப்பெயர்ச்சியின் மூலம் பரப்பிடையே ஏற்படும் தொடர்பு... |
உணராவண்ணம் குறைத்துக் கொண்டு வருகின்றன. சிறப்பு வாய்ந்த கான்கார்ட் விமானம் இலண்டன் – நியூயார்க் நகரங்களுக்கு இடையிலான 6000 கி.மீ தொலைவினை சுமார் 3 மணி 30 நிமிடத்தில் கடக்கிறது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் லையான்ஸ் ( Paris - Lyons ) நகரங்களுக்கிடையே காணப்படும் 462 கிலோ மீட்டர் தொலைவினை மின்னல் வேக இரயில் வண்டி டி.... |
மற்றொரு நூதன சாதனை ஓட்டுநரின்றி கணிணியின் உதவியுடன் இரயில்கள் ஓடுகின்றன என்பதாகும். போக்குவரத்தில் இவ்வாறான வளர்ச்சிகள் தொலைவின் மதிப்பினை நாளுக்கு நாள் குறைத்துக் கொண்டே வருகின்றன. போக்குவரத்து பெரும்பாலும் சாலைகள் , இருப்புப் பாதைகள் , கடல் வழிகள் , ஆற்று வழிகள் , வான்வழிகள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் மூலமாக நடைப... |
வேறுபடுகின்றன. இச்செலவுகளைப் பொதுவாக பயணச்செலவு மற்றும் பொருள் கட்டணச் செலவு என இரு வகைப்படுத்தலாம். இக்கட்டணங்கள் நம்மை அழைத்துச் செல்வதற்கும் நமதுபொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு சேர்ப்பதற்கும் , போக்குவரத்து நிறுவனத்திற்கு செலவாகும் தொகையை ஈடுகட்டும் வகையில் வசூலிக்கப்படுகின்றன. நிறுவனச் செலவுக... |
மற்றும் 3. எரிபொருள் மற்றும் இதர இடுபொருள்களுக்கானச் செலவு. நாம் பயணம் செய்யும்போது செலுத்தும் கட்டணம் பயணச் செலவாகிறது. நம்முடன் பொருட்களை எடுத்துச் செல்லும்போது ஒரு குறிப்பிட்ட எடைக்கு மேலான எடைக்கு ஒரு கட்டணத்தையும் நாம் செலுத்துகின்றோம். இந்த இரு கட்டணங்கள் - பயணம் மற்றும் பொருளுக்கான தூரத்தைப் பொறுத்து வேறுபடும். ... |
வேறுபடும். மற்ற போக்குவரத்துச் சாதனங்களை விட இரயில்கள் மூலம் கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கு கட்டணங்கள் சற்றுக் குறைவாய் வசூலிக்கப்படுகின்றன. கட்டணத் தொகையைத் தவிர , பயணத்தின் பொழுது பயணிகளுக்கு இதர செலவுகள் பல ஏற்படும். இச்செலவு போக்குவரத்து சாதனங்களைப் பொறுத்து வேறுபடுகின்றது. பொதுவாக இச்செலவுகள் பயணத்தின் துவக்கத்... |
எடுத்துக்காட்டாக , வீட்டிலிருந்து இரயில் சந்திப்பு நிலையத்திற்கோ அல்லது பேருந்து சந்திப்பு நிலையத்திற்கோ செல்வதற்காக ஏற்படும் செலவாகும். போக்குவரத்துத் தொகுதி ( Transport Systems ) நீங்கள் வெளியூருக்கு பயணம் செய்யும்பொழுது அங்கு அமைந்துள்ள பேருந்து அல்லது இரயில் நிலையங்களில் உள்ள தகவல் பலகைகளைப் பார்த்திருப்பீர்கள். அவ... |
எளிதாக உணர்த்துகின்றன. போக்குவரத்து பெரும்பாலும் தேவை மற்றும் அளிப்பு ( Demand and supply points ) மையங்களுக்கு இடையில் செயல்படுகின்றது. ஓரிடத்தின் சமுதாய , பொருளாதார , அரசியல் கூறுகளைச் சார்ந்து அப்பகுதிகளின் போக்குவரத்து வளர்ச்சி காணப்படுகிறது. போக்குவரத்து வலையமைப்பு ( Transport Network ) புவியில் உள்ள பல்வேறு இடங்க... |
தடங்களும் உள்ளன. சந்திப்புகளும் , தடங்களும் ( Nodes and Routes ) எந்த ஒரு போக்குவரத்து வலையாக இருப்பினும் ( இரயில் சாலை ) அவைகளைப் பகுப்பாய்வு செய்ய மூன்று முதன்மைக் கூறுகள் தேவைப்படுகின்றன. 1. சந்திப்புகள் 2. தடங்கள் 3. சந்திப்புகள் துவங்கும் இடம் இணைப்புகள் முடியும் இடம் சாலைப்பயணம் பயணிகள் போக்குவரத்து மக்கள் தங்களி... |
தேவைக்கு ஏற்ப சாலைகள் மற்றும் இருப்புப்பாதைகளைப் பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் அடைந்துள்ளன. நகர நெரிசலைத் தவிர்ப்பதற்காக பல்வழிப் போக்குவரத்து ( Multiway Transport ) வட்டச்சாலைகள் ( Ring roads ) விரைவு வழிகள் ( Express ways ) தடைப்படா வழிகள் ( Free Ways ) என சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன... |
கட்டப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டு , சென்னையில் அண்ணா ( ஜெமினி ) மேம்பாலம் இத்தகைய மேம்பாலங்கள் திருநெல்வேலி , திருச்சி , கோயம்புத்தூர் , சேலம் ஆகிய நகரங்களிலும் காணபடுகின்றன. இவைகளைத் தவிர நகரங்களைச் சுற்றி வட்டசாலைகள். மாற்று வழிச் சாலைகள் , நூறடிச் சாலைகள் ( Hundred feet roads ) என சாலைகள் போடப்பட்டுள்ளன. வளர்ந்த நாடு... |
மோட்டார் பாதை M25 எனப்படும். இப்பாதை , இலண்டன் மாநகரைச் சுற்றி அமைந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இலண்டன் நகரமையம் தவிர்க்கப்படுகின்றது. இப்பாதையினால் பயண நேரம் 60 சதவீதம் குறைந்து விடுகிறது. இப்பாதை ஐக்கிய அரசிலுள்ள மூன்று முக்கிய விமான தளங்களையும் இணைக்கின்றது. ( ஹீத்ரோ , காட்வீக் மற்றும் ஸ்டான் ஸ்டெட்... |
போடப்பட்டுள்ளது. இரயில் பயணம் ( Train Travel ) சாலைகளைப் போன்றே இருப்புப் பாதைகள் மக்களின் பயணத்திற்கு பெரிதும் பயன்படுகின்றன. இவற்றில் மெதுவாகச் செல்லும் வண்டிகளும் , மிதமான வேகத்தில் செல்லும் வண்டிகளும் அதிவேகத்தில் செல்லும் வண்டிகளும் உள்ளன. சில நகரங்களுக்கிடையில் நிரந்தரமாக மற்றும் அதிவேகமாகச் செல்லக்கூடிய சிறப்பு ... |
மணி நேரத்திலிருந்து மணி நேரம் வரையிலான நீண்ட பயணங்களை மேற்கொள்கின்றன. சென்னையிலிருந்து மும்பாய் வழியாக டெல்லிக்கும் செல்லுகின்ற சில இரயில்கள் இவ்வகையைச் சார்ந்தவையாகும். இரயில் போக்குவரத்தில் சமீபத்திய ஒரு முன்னேற்றம் ‘ கடலடிக் குடைவு வழி ’ இரயில் பாதையாகும். இலண்டன் நகரத்தையும் பாரிஸ் நகரத்தையும் இணைக்கும் வகையாக ஆங்க... |
வாகனங்கள் செல்வதற்கான சாலைவழியும் , மூன்றாவதில் இவை இரண்டிற்கும் சேவைகள் தேவைப்படின் அவற்றிற்கு ஏதுவாக ஒரு சாலை வழியும் போடப்பட்டுள்ளன. இந்த இரயில் போக்குவரத்து 1994 -இல் தொடங்கியது. இந்த கடலடி இரயில் போக்குவரத்து மனிதனுடைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெருமை சேர்ப்பதாகவும் இருக்கின்றது. மாநகரங்களில் , இரயில் போக்குவரத்து ... |
வழக்கத்தில் உள்ளன. கனடாவின் பெருநகரமான டோராண்டோவிலும் இவ்வகை இரயில்கள் உண்டு. இவை சாலைப் போக்குவரத்துடன் இன்னொரு போக்குவரத்தாகவும் அமைகின்றன. இந்தியாவின் பெரும் நகரங்களில் ‘ புறநகர் ’ இரயில் போக்குவரத்து நகர மையங்களை புறநகரங்களுடன் இணைக்கிறது. சென்னையில் மட்டும் இந்த இரயில்கள் நாளொன்றுக்கு சுமார் இரண்டு மில்லியன் பயணிக... |
தொலைவிற்கு குறைவான நேரத்தில் பயணம் செய்வதற்கு விமானங்கள் பயன்படுகின்றன. இன்று மணிக்கு 6,000 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய விமானங்கள் உள்ளன. இதே போன்று நிறைய பயணிகளை ஏற்றிச் செல்லும் ‘ வானப்பேருந்து ' என்ற பெரிய விமானங்களும் உள்ளன. சில சிறப்பு சேவைகளின் போது அதிகம் பயன்படுவது இவ்வகை விமானங்களே. குறிப்பாக , இராணுவம்... |
மற்றும் இரயில் ) கடக்க இயலாத பகுதிகளையும் வான்வழி இணைக்கிறது. எடுத்துக்காட்டாக , அமேசான் போன்ற அடர்ந்த காட்டுப்பகுதிகளையும் , அந்தமான் நிக்கோபார் தீவுகள் போன்ற தொலைதூரப்பகுதிகளுக்கும் சென்றடைய எளிதான வாகனமாக விமானங்கள் உதவுகின்றன. உலகில் செறிந்த விமானப் போக்குவரத்து அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்திலிருந்து நியூயார்... |
சிங்கப்பூர் , மலேசியா ஆகிய நாடுகளுக்கும் அதிக எண்ணிக்கையில் மக்கள் பயணம் செய்கின்றனர். சமீப காலங்களில் வான்வழிப் போக்குவரத்தில் குறைவான கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் , நிறைய மக்கள் தங்கள் பயணத்தை வான்வழிப் போக்குவரத்துக்கு மாற்றிக் கொண்டுள்ளனர். பன்னாட்டு விமானப் போக்குவரத்திலும் போட்டிகள் அதிகரித்து உள்ளதால் அவ... |
போன்ற ) குறைத்து உள்ளதால் அவற்றை நாம் பணம் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. இந்தப் புதிய வான் வழி நிறுவனங்கள் தேவைப்படும் பயணிகளுக்கு தேவையான சேவைகளை செய்கின்றது. அதற்குண்டாகும் செலவுகளை பயணிகள் தனியாகச் செலுத்தவேண்டும். கடல் பயணம் ( Sea Travel ) பலவருடங்களுக்கு முன் கப்பல்வழிப்போக்குவரத்து மிகவும் குறைந்த அளவிலேயே இருந்த... |
பயணம் என்பது பெரும்பாலும் உல்லாசத்திற்காகவும் , தனிப்பட்டவர்களின் வசதிக்காகவும் நிகழ்கின்றது. கடல் பயணங்களில் ஈடுபட்டுள்ள கப்பல்கள் அமைப்பு மற்றும் கொள்ளளவு சார்ந்து முக்கியத்துவம் பெறும். அவைகள் உண்மையில் மிதக்கும் உணவு விடுதிகள் , அவைகளில் நீந்துவதற்குரிய நீர்நிலைகளும் , நடன அறைகளும் , வசதிகள் மிகுந்த தனித்த அறைகளும்... |
மணிக்கு 50 கிலோ மீட்டர் முதல் 100 கி.மீ வரை செல்லக்கூடிய கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. இன்றைய அளவில் , கப்பல் போக்குவரத்து உல்லாச / சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. வடஅமெரிக்காவிலும் தீவுகள் நிறைந்த ஐரோப்பிய நாடுகளிலும் கப்பல் பயணங்கள் வெகுவாக மேற்கொள்ளப்படுகின்றன. மற்றபடி சரக்கு கப்பல்களே இன்று ம... |
பொறுத்து அவற்றை ஏற்றிச் செல்லும் சாதனங்கள் வேறுபடுகின்றன. இலேசான , அழுகும் தன்மை கொண்ட சரக்குகள் , விமானங்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. எடுத்துக்காட்டாக , ஈரோடு , தருமபுரி மாவட்டங்களில் பயிரிடப்படும் மல்லிகைப் பூக்கள் , சரக்கு லாரிகள் மூலமாக அருகிலுள்ள பெங்களூருக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கிருந்து அரேபிய ந... |
அதிகமான , பொருட்கள் , சாலைகள் , நீர்வழிகள் மூலமாகவும் , திரவ மற்றும் வாயு நிலையிலிருக்கும் பொருட்கள் குழாய்கள் மூலமாகவும் கொண்டு செல்லப்படுகின்றன. சரக்குகளுக்கு ஏற்றவாறு அவைகளை எடுத்துச்செல்லும் வாகனங்களின் வடிவங்கள் அமைக்கப்பெற்றுள்ளன. சரக்குகள் பெரும்பாலும் கொள்கலன்களிலும் ( tankers ) பெட்டகங்களிலும் ( Containers ) ப... |
பெட்டகங்களில் வைத்து அனுப்புகிறார்கள். இப்பெட்டகங்களை ஏற்றிக்கொண்டு பெரிய லாரிகள் சாலைகளில் செல்வதைப் பார்த்திருப்பீர்கள். இத்தகைய பெட்டகங்களில் பெரும்பாலும் உற்பத்திப் பொருட்களும் , நுகர்ப்பொருட்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன. துறைமுக நகரங்களிலிருந்தும் கூட வெளிநாட்டிற்கு ஏற்றுமதி , இறக்குமதி செய்யவும் இச்சரக்குப் ப... |
வேண்டிய இடத்திற்கு அனுப்புகின்றனர். இம்முறையில் , ஒரு பெட்டகத்திலேயே பலருடைய பொருட்கள் ஏற்றப்படும். பின்னர் பெட்டகம் மூடப்பட்டு , முத்திரை வைக்கப்பட்டு இரயில்கள் அல்லது லாரிகள் மூலமாகத் துறைமுகங்களுக்கு அனுப்பப்படும். அங்கிருந்து அவை அப்படியே வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும். அதேபோல் , இறக்குமதி செய்யும் பொழுதும் பெட்டகங்... |
ஒப்படைப்பர். இந்த போக்குவரத்துச் சேவை மூலம் பல நன்மைகள் ஏற்படுகின்றன. 1. பொருட்கள் பாதுகாப்பாக உள்நாட்டு நகரங்களிலிருந்து துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. 2. ஒரே பெட்டகத்தில் பலருடைய பொருட்கள் செல்வதால் போக்குவரத்துச் செலவும் குறைகிறது. 3. இறக்குமதி , ஏற்றுமதி செய்பவர் துறைமுக நகரங்களுக்கு செல்லாமலேயே அவரவர... |
கப்பலில் பெட்டகங்களை ஏற்றுவதும் , இறக்குவதும் எளிதாகவும் விரைவாகவும் முடிகின்றது. திரவப்பொருட்களான பால் , தண்ணீர் , பெட்ரோல் போன்றவை வண்டிகளில் உருளை வடிவங்களில் பொருத்தப்பட்டுள்ள ‘ கொள்கலன்களில் ' எடுத்துச் செல்லப்படுகின்றன. வை சாலைகள் , இருப்புப் பாதைகள் மூலமாக பல இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. பெட்ரோலியம் , ... |
காற்றழுத்த விசை மூலம் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று அறிவியல் மற்றும் நமது அறிவுத் திறன் பற்றி பெருமையடையும் அளவிற்கு வளர்ந்திருக்கின்றோம். அறிவியல் சார்ந்த கற்றலிலும் அதற்கு பயன்படக்கூடிய சாதன வளர்ச்சியிலும் கூட நாம் பாராட்டத்தக்க அளவில் முன்னேறியிருக்கிறோம். நாம் இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சி ... |
நன்றாகப் புரிந்து கொண்டுள்ளதால் , படிப்படியாக இத்துறையில் நல்ல முன்னேற்றத்தையும் கண்டுள்ளோம். எனவே , புதிய நுணுக்கங்களும் வெளிப்படலாயின. ஒரு குளத்தில் தாமரைகள் விரைவாக எண்ணிக்கையில் வளர்ச்சியடைவதைப்போல் , நமது அறிவும் மேலும் வளர்ச்சியடைய இச்சாதனங்கள் பயன்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் மனித அறிவின் பரவல் இதுவரை காணாத அ... |
, பத்திரிக்கைகள் , வானொலி , மற்றும் தொலைக்காட்சி போன்ற தகவல் சாதனங்கள் ஏறக்குறைய உலகில் உள்ள எல்லா மக்களையும் இன்று ஒருங்கிணைக்கின்றன. தகவல் போக்குவரத்து ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது பொருட்களின் உற்பத்தியும் அவற்றின் வணிகமும் ஆகும். இவை எளிதாகவும் , துரிதமாகவும் நடைபெற தகவல் போக்குவரத்து இன்றி... |
முக்கிய பங்கு வகிக்கும் கடிதங்கள் போன்றவை , அவை அனுப்பப்படும் இடங்களின் தொலைவிற்கு ஏற்ப சாதனங்கள் மாறுபடுகின்றன. குறைந்த தொலைவில் உள்ள இடங்களுக்கு சாலைகள் வாயிலாகவும் , சற்று தொலைவான இடங்களுக்கு இரயில்கள் மூலமாகவும் எடுத்துச் செல்லப்படுகின்றன. தொலைதூர இடங்களுக்கு கப்பல் மற்றும் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்... |
இதில் ஈடுபட்டு வருகின்றன. கடிதங்கள் வேகமாக சென்றடைய. அரசு அஞ்சல் துறை ‘ துரித அஞ்சல் ' சேவையையும் தனியார் துறைகள் ' கூரியர் சேவைகளையும் ’ நடத்தி வருகின்றனர். தகவல் பரிமாற்றங்கள் கடிதங்கள் மூலமாகவும் மின்னனு சாதனங்கள் மற்றும் செயற்கைக் கோள்கள் வழியாகவும் நடைபெறுகின்றன. மக்கள் , சரக்குகள் மற்றும் தகவல்கள் சாலை , தபால் , ... |
மூலமாகவோ இவை நடைபெறுகின்றன. இதனால் இச்சாதனங்கள் ஒன்றுக்கொன்று போட்டியாகச் செயல்படுகின்றன. அல்லது ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. எனவே , ஒன்றின் வளர்ச்சி மற்றொன்றின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்கின்றது. இதற்குக் காரணம் ஒவ்வொரு சாதனங்களுக்கும் நிறைகளும் உண்டு , குறைகளும் உண்டு. தகவல்களின் வெடிப்பு ( Information Explosion ) ... |
மேலும் அவைகளை ஆய்ந்து ( Analyse ) தெளியும் வகையாக பல புவியியல் தகவல் தொகுதிகள் ( Geograplhical information systems ) வெளிவந்துள்ளன. இவற்றின் மூலமாக பல்வேறான தகவல்களையும் அதனைச் சார்ந்த புள்ளி விவரங்களையும் எளிதாக கையாள முடிகிறது. இவ்வாறான தகவல் நுட்பமும் தகவல் புரட்சியும் “ அறிவே சக்தி ” என்ற கருத்தினை வலுப்படுத்தும் வ... |
வெடிப்பிற்கேற்ற நுட்ப வழிமுறை வளர்ச்சி நம்மைச் சுற்றியுள்ள உலகம் வேகமாக மாற்றமடைந்து வருகின்றது. இம்மாற்றம் புவியியல் மாற்றங்களை ஆய்ந்தறியும் புவியியலில் அவற்றைப் பற்றிய தெளிவு ஏற்படும் வகையாக வழிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வழிமுறைகள் புவியியலின் தத்துவார்த்த அடிப்படைகளிலே ஒரு புதுமையையும் தெளிவையையும் ஏற்படுத்திய... |
பிரச்சனைகளை தீர ஆய்ந்து தீர்வு காணலும் அன்றாடச் செயல்களாயின. இவற்றில் நிலவரைபடங்களும் அவைச் சார்பான ஆய்வுகளும் புள்ளி விவரங்கள் பயன்படுத்தும் கணித முறைகளும் வழக்கத்தில் வந்தன. 1960 - இன் தொடக்கத்தில் , இவைகளின் தாக்கமாக பல துல்லிய விளக்கவுரைகளும் , விவரங்களும் புவியியல் கருத்தாக வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த தகவ... |
மேன்மேலும் அதிகரிப்பதில் பங்கேற்றன. தகவல்களை பத்துமடங்காகி , நூறு ஆயிரம் மடங்குகளாகி இன்று பல்லாயிர மடங்குகளாக வளர்ந்துள்ளன. அவற்றைப் பயன்படுத்தும் வகையாக 1970 - 80 இல் வேறு பல முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. தொலைத்தகவல் உணர்வு என்பது வானிலிருந்து எடுக்கும் புகைப்படங்கள் வழியாக அதற்கு முன்னமேயே கிடைத்திருந்தாலும் , செயற்கைக்... |
சார்ந்த ஒரு நுணுக்கமாக முன்னேறியது. கணிணிகளே நேரடியாக களப்பணியிலிருந்து கிடைக்கும் புள்ளி விவரங்களைச் சேமித்து வைக்கும் பெட்டகங்களாக மாறின. அவ்வாறு சேமித்த புள்ளிவிவரங்களைக் கொண்டு எண்கணித தீர்வுகளையும் நிலவரைபடங்களையும் உடனுக்குடன் அச்சிட்டு வழங்குவதில் தேர்ச்சிப்பெற்றவைகளாக விளங்கின. வான்வழி மற்றும் செயற்கைக்கோள் தொல... |
புவியியல் தகவல் தொகுதி ” ( Geographical Information systems ) யினை கொடுத்துள்ளன. பல மேலைநாடுகளில் இத்தொகுதிகள் பெரும்வாரியாக வழக்கத்திற்கு வந்து விட்டன. உலகில் சுமார் 3,000 தொகுதிகள் வழக்கில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பெருமளவில் பலதுறைகளில் , முக்கியமாக வளர்ச்சி மற்றும் மேலாண்மை சார்ந்த துறைகளில் அவை வழக்கில... |
பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளும் தகவல் வெடிப்பினை ஏற்றுக் கொண்டவையாக உள்ளன. தகவல் நுட்பங்களின் முக்கியத்துவம் ( Importance of information Technology ) தகவல் நுட்பங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் இன்று “ புதிய அளவைகள் புதிய உலகங்கள் ” என்ற ஒரு கருத்து நிலவ வழிவகுத்துள்ளன. புள்ளி விவரத் தேவை அதைப் Page 78 of 204 பூர... |
தெரிகின்றன. குறிப்பாக , அவைகள் கையாளக்கூடிய புள்ளி விவரங்கள் அளவில் தகவல் நுட்பங்களின் மதிப்பு என்பது கீழ்க்காணும் சில விவரங்களைப் பொறுத்தமையும் என்பது வெளிப்படதொடங்கியுள்ளது. 1. தகவல்களின் இயல்பும் அவை உணரப்படும் வகையும். 2. அத்தகவல் எந்த அளவிற்கு பரப்பு மற்றும் காலம் ( Space and time ) சார்ந்து பாகுபாடு கொண்டமையும் எ... |
பகுத்தறிந்ததை விளக்குவதில் நம்மிடம் உள்ள திறமை. 5. தகவல்களிலிருந்து நமக்கு கிடைக்கும் தீர்ப்புகளையும் முடிவுகளையும் நமது தேவைக்கு ஏற்றாற்போல் பாகுபடுத்தி பயனுக்குக் கொண்டுவருதல். இந்த ஐந்தும் நமது உலகத்தைப் பற்றி நமக்குத் தெரிந்தவைகளில் ஒரு தெளிவைக் கொடுக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. எனினும் இவற்றின் வழியே எழுகின... |
வழக்கில் உள்ளன. இவற்றில் சில இன்றும் பெரும்பாலோருக்குக் கிடைக்காத வகையாக அவற்றின் விலைவாசி இருக்கின்றது என்பது உண்மை. எடுத்துக்காட்டாக இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் செய்தித்தாள்களைக் கிடைக்க வைப்பது எளிதல்ல. அவ்வாறே ரேடியோ , தொலைக்காட்சி பெட்டி போன்ற தகவல்கள் தரும் சாதனங்களைக் கிடைக்கச் செய்வதும் எளிதான காரியம்... |
மக்களுக்குத் தகவல்கள் தருகின்றன. தொலைக்காட்சிப் பெட்டிகள் சுமார் 70 சதவீதம் இந்தியருக்கு பயனுள்ள வகையில் செயல்படுகின்றன. இவை பொழுதுப் போக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தொலைபேசிகளும் நகரங்களில் மட்டுமல்லாது மூலை முடுக்குகளில் இருக்கின்ற கிராமங்களிலும் ஓரளவிற்குப் பணியாற்றத் தொடங்கியுள்ளன. ஆனால் மேலை நாடுகளிலோ த... |
அவற்றிற்கான சாதனங்களிலும் எவ்வாறான முன்னேற்றம் வந்துள்ளன என்பதைப் பார்ப்போம். தொடர்புப் புரட்சி ( Communication Revolution ) உலகம் ஒரு “ தொடர்பு புரட்சி ” யில் ஆட்பட்டுள்ளது என்பது பலவழிகளிலும் தெளிவான ஒரு கருத்து. இப்புரட்சியானது உலகில் நிகழ்ந்த புரட்சிகளின் “ மூன்றாம் அலை ” ( Third Wave ) யாகக் கருதப்படுகின்றது. புரட... |
இடத்திற்கு தகவல்களை அனுப்ப முடியும் என்பது சாத்தியமாகியுள்ளது. “ ஒலிபரப்புதல் ” ( Broad casting ) “ ஒலி சுருக்குதல் ” ( Narrow casting ) என்ற மாற்றத்தை அடைந்துள்ளது. இது எவ்வாறு சாத்தியமாகியது ? இதற்கான விவரத்தை சற்று விரிவாகப் பகிர்ந்து கொள்வது நற்பயன் தரும் என்பதால் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியை கீழ்க்கண்ட வகையில்... |
மனித வரலாற்றில் அவர்களின் பரவல் மற்றும் பெருக்கம் சார்ந்து அவர்கள் பேசுகின்ற மொழிகளும் பிரிந்து வளர்ச்சியுற்றன. சில சமுதாயங்கள் மொழிகளின் வழியாக அவர்களது கலாச்சாரத்தினையும் பண்புநலன்களையும் வெளியாருக்கு வழங்கிச் சிறப்பு சேர்த்தன. மொழியே தொடர்பில் ஒரு முக்கிய சாதனமாக அமைந்தது. சில மொழிகள் பேசுதல் , எழுதுதல் , அச்சிடல் எ... |
தொடங்கியுள்ளன. ஆங்கிலம் , பிரெஞ்சு , ஸ்பானியம் , ருசியம் , அரபிக் மற்றும் சைனீயம் என்ற மொழிகள் பெரும்பாலோரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறே பல வட்டார மற்றும் தல மொழிகள் ( Regional and Local dialects ) மக்களிடையானத் தொடர்பில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வெல்லா மொழிகளும் இன்று செய்தித்தாள்கள் , ரேடியோ மற்றும் தொலைக்... |
தொடர்பு கொள்வதில் பயன்படுகின்றன. ( படம் 6.2 ) முந்தையத் தொலைத் தொடர்பு ( Ancient Telecommunications ) தொலைத்தொடர்பில் செய்திகள் யாவும் குறியீடுகளாக வெளிப்படுத்தப்படுகின்றன. ஆப்பிரிக்கா நாட்டு ' மேளம் கொட்டுபவர் ’ ஒலியின் வேகத்தில் செய்திகளைப் பரப்பினார். அவ்வாறே , சில பழங்குடியினருடைய ‘ புகை அடையாளங்கள் ' ( smoke signa... |
புத்தகங்கள் தகவல்களைத் தருவதில் முதன்மைப் பெற்றதோடு , உலகின் பெரும்பாலான மக்களை அடைந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நீராவி இயக்கிய அச்சு எந்திரம் மின்சக்தியால் இயங்கும் அச்சுக் கோர்த்து , அச்சிடப்பயன்படும் இயந்திரங்களுக்கு வழிவிட்டன. பதிவெடுக்கும் சாதனங்கள் பின்னர் வழக்கில் வந்தன. நகலெடுப்பான்கள் பின்னர் புரட்சிபடைத்தன.... |
மற்றும் தொலைபேசி மின்சக்தியால் இயங்கக்கூடிய முதல் தந்தித் தொகுதி 1837 -ஆம் வருடம் வழக்கிற்கு வந்தது. தொடர்ந்து 1876 -இல் தொலைபேசி பிறந்தது. இவையிரண்டும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக செய்திகளைப் பகிர்ந்து கொள்வதில் பெரும் பங்கு வகித்து வருகின்றன. தொலைத் தொடர்பில் கணிணி மற்றும் செயற்கைகோள் ஆகியவற்றுடன் கூடி தொலைபேசி உள்நாட... |
இணையில்லாத தொடர்புச் சாதனமாக விளங்குகிறது. வானொலி தொடர்ந்த ஒலி பரப்புதல் 1922 -ஆம் வருடம் பயனுக்கு வந்தது. சமுதாய மாற்றத்தின் ஒரு முக்கியக் கூறாக வானொலி ஒரு சில வருடங்களிலேயே பெயர்பெற்றது. மூன்றாம் உலக நாடுகளின் பசுமைப்புரட்சியில் இதற்குப் பெரும் பங்கு உண்டு. அவ்வாறே மக்கள் தொகைப் பெருக்கம் குறைப்பிலும் இது ஒரு முன்னணி... |
நிறுவனங்களின் மூலமாக தகவல்கள் தொடர்பில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. தொலைபேசியுடன் இணைந்து பல நாடுகளில் தனிப்பட்டவர்கள் தொடர்பிலும் புரட்சி கண்டுள்ளது. தொலைக்காட்சி ஒலி , ஒளி பரப்புதல் 1936 - ஆம் வருடம் முதன் முதலாகத் தொடங்கியது பேசும்பட நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் ‘ வரவேற்பரை புரட்சி'யை ( Reception Ro... |
நிகழ்ச்சிகளைப் பற்றிய பாவணைகளைப் பெரும்பாலும் மாற்றி வருகின்ற ஒரு சாதனம் இது என்றாலும் 80 சதவிகிதம் மக்கள் தொகையை தன்னுள்ளடக்கிய தெற்கு நாடுகளில் 20 சதவிகிதம் மக்களே தொலைக்காட்சிப் பெட்டிகளை பயன்படுத்துகின்றனர். வடக்கு நாடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள் இல்லாத இடங்களும் வீடுகளும் அரிது என்றே சொல்லலாம். ஒரு சில நாடுகனில் ... |
சினிமாவின் தாக்கம் வளர்ந்து வரும் நாடுகளில் மிகவும் அதிகமாக இருப்பதால் தொலைக்காட்சி குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஆழ்கடல் தந்தித் தொடர்புகள் தந்தி , தொலைபேசித் தொடர்புகளில் முன்னேற்றத்தில் வளர்ச்சி கண்ட தொலைத் தொடர்பு துறைகளில் ஆழ்கடல் தந்தித் தொடர்புகள் என்பதும் ஒன்று. 1980 -இல் ஒரு ஆழ்கடல் தந்தி மட்டும் சுமார்... |
செவ்வனே பயன்படுத்தவும் செய்கின்றன. செயற்கைக்கோள் சக்தி ( Satellite Power ) உலகின் முதல் செயற்கைக் கோள் ஸ்புட்னிக் 1 என்பது. இது 1957 - ல் ஏவப்பட்டது. இன்றைய கணிப்பில் 15.000 -க்கும்மேலான செயற்கைக் கோள்கள் விண்வெளியில் வலம் வந்திருக்கின்றன. பல திரும்பவும் புவியின் வளிமண்டலத்திற்குள் வந்தபோது , எரிந்து சாம்பலாயின. அமெரிக... |
ஒன்று கூட பயனற்றுப் போகவில்லை. எல்லாச் செயற்கைக்கோள்களும் அவைகளுக்கு இடப்பட்ட பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளதோடு நாட்டின் வளத்தினை மதிப்பிடலிலும் பன்னாட்டுத் தொடர்பில் மகத்தானச் சாதனைகளைப் படைத்துள்ளன. புவியியலைப் பொறுத்தவரை , இவைகளிலிருந்து கிடைக்கும் பதிமங்கள் ( Image ) இந்திய நாட்டின் வளங்களை மதிப்பிடலில் பெரும் பங்... |
காணுதல் எளிதாகின்றது. செயற்கைக்கோள்களின் இயக்கத்தில் கணிணிகள் பெரும்பங்கு வகிக்கின்றன அவைகள் இல்லாவிடில் இச்செயற்கைக் கோள்களை இயக்குவது என்பதும் , அவைகள் அனுப்பும் பதிமங்களைத் தரையில் பெற்று பகுத்தாய்வதும் இயலாத காரியமாகிவிடும். வளக்கணிப்பில் செயற்கைக்கோள்களிடமிருந்து நாம் பெறும் பதிமங்கள் பெரும் பங்கினை வகிக்கின்றன. க... |
கருதப்படுகின்றது. முதலாவது வால்வுகளைப் பயன்படுத்திற்று. இரண்டாவது டிரான்சிஸ்டர்களைப் பயன்படுத்திற்று. மூன்றாவது “ ஒருங்கிணைந்த மின்கற்றை ” ( Integreated circuit ) பயனுக்குக் கொண்டு வந்தது. நான்காவது “ நுண்ணிய துகள் ” ( Microchip ) என்ற ஒன்றைப் பயன்படுத்தி வருகின்றது. இதுவே ஐந்தாம் தலைமுறையிலும் தொடர்ந்து வருகின்றது , எ... |
பன்னாட்டுத் தகவல் தொடர்பில் , எலெக்ட்ரானிக் அஞ்சலிலும் ( E - mail ) அவ்வாறே பன்னாட்டுத் தொலைத் தொடர்பிலும் ( ( International Communication ) பங்கேற்கின்றன. ஒன்றே உலகம் , ஒருங்கிணைக்கப்பட்டனர் மனிதர்கள் இவ்வுலகம் இங்கு வாழும் தாவரங்கள் , விலங்குகள் மனிதர்கள் எல்லாம் ஒரு வகையில் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவையே. ஒன்றைச் சார... |
பயனை அறிந்துகொள்ளல். தொலை நுண்ணுணர்வு தொகுதிகள் நம்மைச்சுற்றியுள்ள புவிக் கூறுகளின் தன்மைகள் மற்றும் பண்புகள் ஆகியவற்றை அறிந்து கொள்வது இன்றியமையாததாகும். இக்கூறுகளில் சில நேரடியாக கண்டுணரக்கூடியவை , மற்றவை கண்ணுக்கெட்டா தொலைவில் உள்ளவை. எடுத்துக்காட்டாக , மண்ணுக்கடியிலும் கடலுக்கடியிலும் மற்றும் மலைக்கு அப்பாலும் மறைந... |
மனிதரால் வளர்க்கப்பட்ட அறிவியல் புவியின் வளங்களை மதிப்பிட மற்றும் அதனைச் சிறந்த முறையில் பயன்படுத்துதலை அறிய பெரிதும் உதவுகின்றது. இயற்கை வளங்களைப் பற்றிய தல ஆய்வுப் புள்ளி விவரங்கள் தேவையான அளவு கிடைக்காததால் தொலை நுண்ணுணர்வு புள்ளி விவரங்களின் மூலமாக சேகரிக்கப்பட்ட விவரங்களை பயன்படுத்த வேண்டியதாயிற்று. சென்ற காலத்தில... |
images ) வள ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ‘ தொலை நுண்ணுணர்வு ’ என்ற சொல் விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இச்சொல் , முதன் முதலில் 1960 - இல் நடைமுறைக்கு வந்தது. தொலை நுண்ணுணர்வு என்பது புவியின் பொருள்களை நேரடியாக தொடர்பு கொள்ளாமல் தொலைவில் இருந்து உணரிகளையும் ( sensors ) கேமர... |
Platforms ) பயன்படுத்தி சேகரிக்கப்படுகின்றன. உணரிகள் பொருத்தப்பட்ட செயற்கைகோள்களும் , கேமரா பொருத்தப்பட்ட விமானங்களும் , பலூன் மற்றும் உயரமான கட்டிடங்களும் இத்தகவல்கள் சேகரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக , தொலை நுண்ணுணர்வினை இரு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை , வான் தொலை நுண்ணுணர்வு ( Aerial Remote Sensing )... |
1902 – இல் விமானம் கண்டுபிடித்தபின் 1909 – இல் இருந்து வான்வழி புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் இப்புகைப்படங்கள் பெரிதும் உதவியாக இருந்தன. மேலும். காடுகளை ஆய்வு செய்யவும் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை ஆய்வு போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளுக்கும் அவை பயன்பட்டன. பொதுவாகவே ஒரு மாவட்டம் , ஆற்றுப்... |
பெரிய அளவை ( Large scale ) புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. நகரத்திட்டம் ( Town planning ) பயிர்த்திட்டம் ( Crop planning ) ) மற்றும் பாதுகாப்பு ( conservation ) போன்ற சிறப்பு ஆய்வுகள் நடத்தும் பொழுது 1 : 20,000 அல்லது 1 : 10,000 என்ற அளவைகளில் புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. பரந்த மாவட்டம் போன்ற நிலப்பகுதியின் பயன்பா... |
தேவைக்கு ஏற்ப , கருப்பு - வெள்ளை படச்சுருள் , வண்ணப்படச்சுருள் அல்லது சிறப்பு படச்சுருளைப் பயன்படுத்தலாம். செயற்கைக்கோள் தொலை நுண்ணுணர்வு செயற்கைக்கோளின் தன்மையினை அடிப்படையாகக் கொண்டு தொலை நுண்ணுணர்வை முப்பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம் அவை : அ ) புவிநிலைச் செயற்கைக்கோள் தொலை நுண்ணுணர்வு ஆ ) சூரியனோடு ஒத்திருக்கும் செ... |
பரப்பைப் பற்றிய தகவல்களை ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் திரட்டித்தரக்கூடியவை. இச்செயற்கைக்கோளை புவியிடைக் கோட்டிலிருந்து சுமார் 36.000 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டு , புவியின் ஒரு குறிப்பிட்ட பகுதியினை நோக்கியவாறே புவி தன்னைத்தானே சுற்றும் வேகத்திலும் , திசையிலும் செயற்கைக்கோள்களும் சுற்றி வருகின்றன. எடுத்துக்கா... |
செய்தியாக தொலைக்காட்சியில் ஒளி பரப்புகின்றார்கள். இந்தப் பதிமத்திலிருந்து திரட்டப்படும் நிலப்பரப்பு. , நீர்ப் பரப்பு , மேகமூட்டம் போன்ற தகவல்களுடன் வானிலை நிலையங்களிலிருந்து பெறப்படும் தகவல்களையும் வைத்து வானிலை முன்னறிவிப்புகள் செய்யப்படுகின்றன. இச்செயற்கைக்கோள் பதிமங்கள் , புவியின் பெரும்பரப்பைக் காட்டுவதால் சிறிய பு... |
சுமார் 600 முதல் 900 கி.மீ உயரத்திலிருந்து வடக்கு தெற்காக நகர்ந்து புவியின் செய்திகளைச் சேகரிக்கின்றன. இவை வடதுருவத்திற்கும் தென்துருவத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை சுமார் 50 நிமிடத்தில் கடக்கின்றன. இந்தச் செயற்கைக்கோள்கள் சூரியனின் ஒளியைக் கொண்டே தகவல்களை திரட்டித் தருவதாலும் காலை நேரத்தில் ஒருகுறிப்பிட்ட தல நேரத்தில் ப... |
செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. அதனைத் தொடர்ந்து 6 செயற்கைக்கோள்களைச் செலுத்தியது. 1986 -ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கம் சில ஐரோப்பிய அரசுகளின் துணையோடு ஸ்பாட் 1 என்னும் செயற்கைக்கோளை செலுத்தியது. அதனைத் தொடர்ந்து ஸ்பாட் 2 , 3 ஆகிய செயற்கைக் கோள்களையும் செலுத்தியது. இவைகளுக்கு ஈடாக 1988 -ஆம் ஆண்டு. இந்திய அரசாங்கம் ஐ.... |
ஜே.ஆர் எஸ் ( Japanese Remote sensing satellite ) ஆகியவைகள் விண்ணில் செலுத்தப்பட்டு , தற்போது அவைகள் புவியினை வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. இவ்வகைச் செயற்கைக் கோள் பதிமங்கள் புறவெளிக்காட்சி படங்களைப் போல மிகவும் துல்லியமான விவரங்களை தரக் கூடியவை. இந்தப் பதிமங்கள் நிலப்பயன்பாடு , நீர் வளங்கள் , சாலைகள் , குடியிருப்புகள்... |
திரட்ட இவ்வகைச் செயற்கைக்கோள் பயன்படுகின்றது. உளவு செயற்கைக் கோள்கள் தயாரிப்பது மிகவும் சிக்கலானது. செலவும் அதிகமாவதுடன் மிகக் குறைந்த காலமே பணி செய்யக் கூடியதாகவும் இருப்பதால் உலகில் ஒரு சில நாடுகளே இதனைக் கொண்டுள்ளன. இஸ்ரேல் உளவு செயற்கைக் கோளினை கொண்ட நாடுகளில் ஒன்றாகச் சொல்லப்படுகின்றது. தொலை நுண்ணுணர்வுத் தொகுதிகள... |
ஆற்றல் வளம் உலகின் ஆற்றல் வளம் சூரியனே. எல்லா உயிரினங்களின் செயல்பாட்டிற்கும் சூரியனே காரணமாகும். 2. சூரிய ஆற்றல் வெளிப்பாடு சூரிய ஆற்றல். கதிர்களாக புறவெளியில் பாய்கின்றது. இக்கதிர்கள் பல்வேறு மின்காந்த அலைகளாக மாறிய பின்னர் புறவெளியில் பாய்கின்றன. இவற்றுள் மிகக் குறுகிய அலை நீளம் கொண்ட காமா கதிர்கள் ( Gama Rays ) முத... |
energy with atmospheric elements ) சூரிய ஆற்றல் புவியை அடையும் பொழுது பல்வேறு கூறுகளை சந்தித்து இடைச் செயல் ( interaction ) புரிகின்றது. சூரிய ஆற்றலின் மின்காந்தத் தொகுப்பில் ஒரு பகுதியினை வளிமண்டலத்திலுள்ள கரியமில வாயு , ஓசோன் வாயு , ஈரப்பதம் மற்றும் தூசு முதலியன கிரகித்து , மீண்டும் வளிமண்டலத்திற்கே திருப்பி அனுப்புக... |
features ) சூரிய ஒளியில் உள்ள மின்காந்த அலைகள் பல்வேறு அலை நீளங்களை கொண்டவையாக இருக்கின்றன. இந்த அலை நீளங்களை அடிப்படையாகக் கொண்டு இவற்றைப் பல்வேறு பட்டைகளாக ( bands ) பிரிக்கலாம். ஒவ்வொரு பட்டையும் புவிப்பரப்பின் மேலுள்ள பொருட்களின் மீது பட்டு பிரதிபலிக்கின்றது. இப்பிரதிபலிப்பு , அலைகளின் நீளத்தைப் பொறுத்து வேறுபடுகின... |
பல்லாயிரக்கணக்கான வகைகளாக உள்ளது. 5. புவியின் கூறுகளிலிருந்து வெளியேறும் சக்தி ( ( Terrestrial Radiation of The Earth's Elements ) புவி கூறுகளின் மீது படும் சூரிய ஒளியும் , ஏற்கெனவே அவை சேமித்து வைத்துள்ள ஆற்றலும் வளிமண்டலத்திற்கே சென்று விடுகின்றது. 0 ° K ( −273 ° C ) வெப்பநிலைக்கு அதிகமான வெப்பம் உடைய எந்த ஒரு பொருளு... |
சேகரிப்பு ( Collection of Information / Data ) புவிப்பரப்பிலிருந்து வெளியேறும் ஆற்றலை தொலைநுண்ணுணர்வு மேடைகளிலுள்ள படக்கருவிகளும் , உணரிகளும் சேகரிக்கின்றன. படக்கருவிகள் சுருளிலும் , செயற்கைக்கோள் நுணரிகள் மின் குறியீடுகளாக மாற்றி புவி நிலையத்திற்கு அனுப்புகின்றன. 7. புவி நிலையங்களால் தகவல் சேகரிப்பு ( Data acquistion ... |
கொடுக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு புள்ளிகள் தொகுப்பே ஒரு “ செயற்கைக்கோள் பதிமம் ” எனப்படுகின்றது. 8. தொலைத் தூரத் தகவல் வழங்கல் ( Remotely sensed data supply ) செயற்கைக்கோள் பதிமங்களையும் விமானம் மூலம் எடுக்கப்படும் ஒளிப்படங்களையும் இந்தியாவில் கீழ்க்காணும் மூன்று இடங்களிலிருந்து பெறலாம். அ ) தேசிய தொலை நுண்ணுணர்வு நிற... |
தொலை நுண்ணுணர்வின் பயன்கள் பரந்து விரிந்து காணப்படும் நிலப்பரப்பையும் , கடல்பரப்பையும் அறிந்துக்கொள்ள அணுக முடியாத புவிப்பகுதியின் விவரங்களை எளிதாகவும் , வேகமாகவும் , சரியாகவும் திரட்ட பரவலாக பயன் படுத்தப்பட்டு வருவது தொலை நுண்ணுணர்வு முறையாகும். தொலை நுண்ணுணர்வின் பயன்களை பின் வருமாறு தொகுக்கலாம். 1. புவி அமைப்பியல் (... |
வானிலைக் கூறுகளின் தீவிரத்தன்மை மற்றும் கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை ஆராயவும் , முன்னறிவிப்பு செய்யவும் பயன்படுகின்றன. 3. பேராழியியல் ( Oceanography ) கடல் மேற்பரப்பின் வெப்பநிலை , கடல் நீரோட்டம் , கடல் அரிப்பு , அலை அமைப்பு மற்றும் கடல் வளங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யப்பயன்படுகின்றன. 4. நீர் மற்றும் நில வளங... |
கொள்ளும் திறன் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன. 5. நிலப்பயன்பாடு , வேளாண்மை மற்றும் காடுகள் ( Land use. Agriculture and Forestry ) தொலை நுண்ணுணர்வு , நகர மற்றும் மற்றபகுதிகளின் நிலப்பயன்பாட்டினை ஆய்வு செய்யவும் நகர வளர்ச்சி வேளாண் பயிரின் விளைச்சல் மதிப்பீடு மற்றும் பயிர்களைத் தாக்கும் நோய்களைக் கண்டறி... |
மாசு போன்ற இயற்கை மற்றும் மனிதனால் உண்டாகும் சீற்றங்களை கண்டறியவும். கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவும் தொலை நுண்ணுணர்வு பயன்படுகிறது. 7. நில அளவை மற்றும் நிலவரைப்பட நுண்கலை ( Land Survey and Cartography ) உயரங்களை அளக்கவும் தற்போது உள்ள நிலவரைப்படங்களை புதுப்பிக்கவும் வான் வழிப் புகைப்படங்கள் பெரிதும் உதவியாக உள்ளன... |
திட்டம் பல்வேறு செயல்களைக் கொண்டுள்ளது. அச்செயல்களில். புவியியலாளர்களுக்கு ஆர்வத்தை ஊட்டும் வகையில் அமைந்த ஒன்றினை பற்றிதான் கீழே விவரிக்கப்பட்டுள்ளது. இந்தியப் புறவெளி ஆராய்ச்சி அமைப்பு ( Indian Space Research Organisation - ISRO ) தொலை நுண்ணுணர்வினை பயன்படுத்தி ஏராளமான திட்டங்களை தீட்டியுள்ளது. அவைகளில் சிலவற்றினை இப... |
National Natural Resources Management System ) என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்தியது. இத் தொகுதியானது , தேசிய இயற்கை வள மேலாண்மை போதுமான அளவு இயற்கை வளங்களை பயன்படுத்தப்படுகின்ற பழைய முறைகள் மற்றும் தொலை நுண்ணுணர்வு மூலமாகப் பெறப்படும் தகவல்கள் ஆகியவைகளை ஒருங்கிணைக்கும் அணுகுமுறையாக உள்ளது. புறவெளித்துறை இந்திய அரசாங்கத்திற... |
போதுமான அளவு பயன்படுத்த வேண்டிய அவசியத்தை மனதில் கொண்டு தொலை நுண்ணுணர்வு புள்ளிவிவரங்களை பகுப்பாய்வு செய்து திட்டமிட புறவெளித் துறையானது நாட்டின் ஐந்து இடங்களில் வட்டார தொலை நுண்ணுணர்வு சேவை மையங்களை ( R.R.S.S.C ) ஏற்படுத்தியது. இம்மையங்கள் இயற்கை வளங்களைக் கண்டுப்பிடித்தல் கண்காணித்தல் மற்றும் மேலாண்மை செய்தல் போன்ற ப... |
பகுதிக்கு கோராக்பூரிலும் , மையப்பகுதிக்கு நாக்பூரிலும் மற்றும் தென் பகுதிக்கு பெங்களூரிலும் அமைந்து தன்பணியை ஆர்.ஆர்.எஸ்.எஸ்.சி மையமேலாண்மை அலுவலகம் மற்றும் ஐ.எஸ்.ஆர்.ஓ வின் தலைமையிடமான அண்டாரிக்ஸ் பவண் , பெங்களூர் ஆகியவற்றின் கீழ் செயல்பட்டு வருகின்றன. நோக்கங்கள் மற்றும் பணிகள் ( Objectives and Functions ) பதிம எண்களி... |
இருத்தல். புதிய துறைகளிலும் இந்நுட்பத்தை வளர்த்தல் தொலை நுண்ணுணர்வினை பயன்படுத்தும் முகவர்கள் , எண் நுட்பங்கள் , புவியியல் தகவல் தொகுதி மற்றும் இதனை சார்ந்த ஆய்வாளர்களுக்கு பயிற்சியளித்தல். தேசிய திட்டங்கள் மற்றும் தொலை நுண்ணுணர்வு முன்னேற்றத்திற்கு உதவுதல். செயல்பாட்டுப் பகுதிகள் ( Area of Activities ) இயற்கை வள மேளாண... |
மற்றும் அதனை வழக்கப்படுத்துதல். கல்வி மற்றும் பயிற்சியளித்தல். நாட்டின் நுட்ப முன்னேற்றத்திற்கு வல்லுநரின் ஆலோசனை பெருதல் மற்றும் கலந்தாலோசித்து செய்தல். பேணத்தகு முன்னேற்றத்திற்கான ஒருங்கிணைக்கப்பட்ட இயக்கம் ( Integrated Mission for Sustainable Development - IMSD ) இந்த இயக்கத்தின் கீழ் செயற்கைக்கோள் புள்ளி விவரங்களான... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.