text stringlengths 11 513 |
|---|
உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக மேம்படுத்தப்பட்ட மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. மேலும் இடங்களை அடையாளம் காணுதல் புவியின் மேற்பரப்பில் உள்ள நீரை சேமித்தல் நிலத்தடிநீர் புதுப்பித்தல் அணைகள் மற்றும் தாவரங்களைக் கொண்டு மண் பாதுகாப்பு செய்தல் மாட்டுத் தீவனத்திற்காக பயிர்கள் செய்தல் சமை... |
மற்றும் விலங்கினங்களை தக்கவைத்துக் கொள்ளவும் தீட்டப்படும் திட்டங்களாக உள்ளன. இச்செயல் திட்டங்கள் சம்பந்தப்பட்ட அரசாங்கத் துறைகளுடனும். வட்டார தொலை நுண்ணுணர்வு மையங்களுடனும் , பல்கலைக்கழகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. தேசிய இயற்கை வள தகவல் தொகுதி ( National Natural Resources In... |
துரிதமாகவும் , தேசிய வட்டார மாநில மற்றும் மாவட்ட அளவில் செய்து வருபவர்களுக்கு உதவி புரிகின்றது. தேசிய இயற்கை வளத் தகவல் தொகுப்பானது பரப்பு சார்ந்த மற்றும் பரப்பு – சாரா புள்ளி விவரங்களையும் கொடுக்கின்றது. உயிரின பன்மையின் தன்மை தொலை நுண்ணுணர்வு மற்றும் புவியியல் தகவல் தொகுப்பினை பயன்படுத்தி உயிரின மண்டல நிலவரைப்படம் தய... |
தேவையான புள்ளி விவரங்களை அளிக்கின்றன. வேளாண் காலநிலைத் திட்டம் மற்றும் தகவல் வங்கி ( Agro - Climatic Planning and information Bank - APIB ) தென்இந்தியாவிலுள்ள கர்நாடகா மாநிலமானது வேளாண் காலநிலைத் திட்டம் மற்றும் தகவல் வங்கி என்ற ஒரு முதன்மை ஆய்வினைத் தொடங்கி உள்ளது. இது வேளாண்மை வளர்ச்சிக்காகத் தேவைப்படும் புள்ளி விவரங... |
தேவைப்படும் அனைத்துத் தகவல்களையும் அளித்து அங்குள்ள விவசாயி தானே யாருடைய உதவியும் இல்லாமல் அதனைப் பயன்படுத்தி விவசாயம் செய்தலே ஆகும். இந்த வங்கி தகவல் மற்றும் புள்ளி விவர வங்கியாக மட்டும் செயல்படாமல் வளர்ச்சித் திட்டங்களைத் தயார் செய்பவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் செயல்படுகிறது. ராஜீவ் காந்தி தேசிய குடிநீர் சேவை ( R... |
வட்டார தொலை நுண்ணுர்வு தொகுதி மையங்கள் 1 : 50.000 என்ற அளவில் கேரளா. கர்நாடகம். ஆந்திரப் பிரதேசம் மத்தியப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காணப்படும் நிலத்தடி நீரின் உற்பத்தி அளவு மற்றும் நிலத்தடிநீரின் எதிர்காலம் ஆகியவை காட்டும் வகையில் நில வரைப்படங்கள் தயாரிப்பதில் ஈடுபட்டு வருகின்றன. ஏக்கர் அளவிலான பயி... |
முன்பாகவே ஏக்கருக்கு எவ்வளவு விளைச்சல் கிடைக்கும் என்பதை மதிப்பிடுகின்றது. புறவெளி பயன்பாட்டு மையம் ( Space Application Centre ) அகமதாபாத் உடன் ஆர். ஆர். எஸ். எஸ். சி இணைந்து கேப் ஓர்க்ஸ் என்ற மென்பொருள் கட்டுகளை அளித்துள்ளது. இந்த மென்பொருளை அனைத்து ஐ.எஸ்.ஆர்.ஒ. மையங்கள் மற்றும் மாநில தொலை நுண்ணுணர்வு மையங்கள் ஆகியவை ... |
நீர்ப்பயன்பாட்டுப் பகுதியின் முன்னேற்றத்திற்காக ஆர்.ஆர்.எஸ்.எஸ். மையங்கள் விறுவிறுப்பாகச் செயல்பட்டு வருவதுடன் , நீர்ப்பயன்பாட்டினை கண்காணித்தும் , மதிப்பிட்டும் வருகின்றன. ஐ.எம்.எஸ்.டி திட்டம் நிலத்தின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காகவும் மற்றும் நீர்ப்பயன்பாட்டு பகுதியில் உள்ள நீரின் வளத்தை அதிகரிக்கவும் , அறிவியல் ... |
ஆர்.ஆர்.எஸ்.எஸ் என்ற வட்டார மையமானது , வெள்ளப்பெருக்கு மற்றும் சூறாவளியினால் ஏற்படும் சீரழிவின் தகவல்களை உடனுக்குடன் அளிக்கின்றது. இது தொலை நுண்ணுணர்வு நுட்பங்கள் மற்றும் புவியியல் தகவல் தொகுப்பினை ( ஜி.ஐ.எஸ் ) பயன்படுத்தி இத்தகவல்களை நமக்கு அளிக்கின்றது. அஸ்ஸாமில் ஏற்படும் அழிவினை சீர்படுத்துதல் போன்றவற்றிற்கான புள்ளி... |
( Study of Potential and actual area under sericulture through remote sensing ) தொலை நுண்ணுணர்வு நுட்பமானது மல்பெரி வளரும் பகுதியினை அடையாளம் காட்டுவதால் நாட்டில் பட்டு வளர்ப்புத் தொழில் வெற்றிகரமாக நடந்து வருகின்றது. ஆர்.ஆர். எஸ்.எஸ். மையங்களும் தேசிய இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. பதிமத்தை முறைப்படுத்துதல... |
( Geometric ) மற்றும் அலைவியல் சரிசெய்தல் மின்னியல் புள்ளிகளை வகைப்படுத்துதல் மற்றும் நவீன வகை நுட்பங்கள் பகுப்பாய்வு போன்ற அடிப்படைப் பணிகளை ஆர்.ஆர்.எஸ்.எஸ் மையங்கள் செய்து வருகின்றன. மென்பொருள் தீர்வு ( Software Solution ) மென்பொருள் முன்னேற்றம் மற்றும் சரியான தீர்வு காணுதல் ஆகிய முக்கிய சேவையினை ஆர்.ஆர். எஸ்.எஸ் மைய... |
தகவல்களை சேகரித்து அளிப்பதில் சிறந்து விளங்குகின்றன. மேலும் பதிமங்களை முறைப்படுத்துதல் மற்றும் புவியியல் தகவல் தொகுதி ஆகியவைகளுக்குத் தேவைப்படும் மென் பொருள்களை ஆர்.ஆர். எஸ்.எஸ். மையங்கள் தான் தயாரித்து வருகின்றன. புவியியல் தகவல் தொகுதித் தீர்வு ( GIS Solutions ) ஆர்.ஆர்.எஸ்.எஸ் மையங்கள் பல்வேறு சூழ்நிலையில் எழுகின்ற ப... |
கண்டுபிடிப்பு மேலாண்மை மற்றும் கண்காணித்தல் , நிலம் மற்றும் நீர் வள வளர்ச்சி திட்டமிடுதல் , நகர மற்றும் வட்டார திட்டமிடுதல் , அடிப்படைத் தேவைகளை மேலாண்மை செய்தல் , ஆலோசனை வழங்குதல் போன்றவைகள் புவியியல் தகவல் தொகுப்பின் சில சீரிய பணிகளாகும். கற்றல் அடைவுகள் மற்றும் இல் இருந்து எடுக்கப்பட்டன. 7. என்.ஆர்.ஐ.எஸ் ஆனது அமைத்த... |
தோற்றம் மற்றும் தேசிய வள மேலாண்மைத் தொகுதியினை ஏற்படுத்த இந்திய அரசாங்கத்தில் துறையானது ஒரு மத்திய துறையாக இருந்து செயல்பட்டு வருகின்றது. மையங்களானது நிலத்தடிநீரின் சரியான உற்பத்தி அளவினையும் அவற்றின் எதிர்காலம் பற்றியும் விவரிக்கும் நிலப்படங்களையும் தருகின்றன. ஆகும். 10. தொலை நுண்ணுணர்வு நுட்பங்களைப் பயன்படுத்தி அறுவட... |
ஐ.எஸ்.ஆர்.ஓ / எப்.ஏ.ஓ. 12. தொலை நுண்ணுணர்வு புள்ளி விவரங்கள் முறைப்படுத்தும் கட்டு பதிம முறைப்படுத்துதல் மென்பொருள் கட்டு / மாநில கலைக்கட்டு 13.தேசிய வள மேலாண்மைக்காக இந்திய அரசாங்கம் அமைத்த தொகுதி. என்.என்.ஆர்.எம்.எஸ் / ஆர்.ஆர்.எஸ்.எஸ்.சி 14. புவிப் பொருட்களின் விவரங்களை தூரத்திலிருந்து சேகரிக்கும் உணர்விகள் மற்றும் க... |
செயற்கைக்கோள் 16. காமா கதிர்கள் முதல் வானொலி அலைகள் வரை கொண்டுள்ள ஒரு ஒளி கற்றை சூரியனிடமிருந்து வெளியேறுதல் III. குறுகிய விடையளி மின் காந்த கதிர்வீசல் / அல்பிடா 17. உணர்விகள் 18 சூரியனைச் சார்ந்த செயற்கைக் கோள் 19. புவி நிலையங்கள் 20. மின்னியல் புள்ளி எண்கள் 21. தொலை நுண்ணுணர்வு மேடை IV. ஒரு பத்தியில் விடை தருக 22. வட... |
தொலை நுண்ணுணர்வு 27. புவி கதிர் வீசல் 28. புவி செயற்கைக்கோள் 29. வட்டாரத் தொலை நுண்ணுணர்வு சேவை மையங்களின் நோக்கங்கள் மற்றும் பணிகள். 30. மென்பொருள் தீர்வுகள் 31. சீற்ற மேலாண்மை தொகுதி – வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தல். VI. செய்முறைப் பயிற்சிகள் 32. தொலை நுண்ணுணர்வின் பயன்களை வகுப்பில் கலந்துரை செய்க. 33. செயற்கைக்கோள்... |
மையத்திற்கு சென்று அதன் செயல்பாடுகளை அறிந்து கொள்க. கற்றல் நோக்கங்கள் 1. மாணவர் நீரின் ஆதாரங்கள் , நீரின் தேவை , நீரின் பற்றாக்குறை , அதன் முக்கியத்துவம் பற்றி அறிதல். 3. அலகு 4 சுற்றுச் சூழல் சீரழிவுகள் பாடம் 8 உலகின் நன்னீர் 2. மாணவர் நீரின் அளவு , தரம் , நீர் அறம் அதன் பொருளாதார நோக்கத்தை அறிந்து கொள்ளல். 5. மாணவர் ... |
தெரிந்து கொள்ளுதல். மாணவர் நீர் அளிப்பு மற்றும் சுகாதாரம் சார்ந்த அணுகுமுறையில் சமூகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த தீர்வுகளைக் காணல். நீர் நமது வாழ்வு ( Water is life ) புவியானது பல்வேறு வளங்களைக் கொண்டுள்ளது. மனிதன் எவ்வாறு வளங்களைப் பயன்படுத்த அறிந்திருக்கின்றானோ அதனைப்பொறுத்தே அவனின் வாழ்க்கை அமைகின்றது. புவியில் உள... |
வருகின்றோமா ? இதனைப்பற்றி என்ன நாம் நினைக்கின்றோம் ? நாம் எவ்வாறு நினைக்கின்றோம் ? நம்முடைய முன்னோர்களுக்கு நீர் ஒரு புனிதமானது. அவர்கள் தாய்க்கு மேலாக நீரை மதித்து வந்தனர். “ தாயைப் பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே ” என்பது பழைய வழக்கில் இருக்கும் பழமொழியாகும். ஆனால் இன்றைய சமுதாயத்தில் நீரின் முக்கியத்துவம் மற்றும் அதன்... |
விந்தை அளிக்கக்கூடிய சில எண்ணங்கள் மனதில் தோன்றுகின்றன. எனவேதான் , ஒவ்வொருவரும் தன் சொந்த தேவைகள் மற்றும் வளர்ச்சியில் அக்கறை காட்டுகின்றனர். வாழ்க்கை , வாழ்க்கை மதிப்பு மற்றும் வாழ்க்கை பயன்கள் ஆகியவைகளின் உண்மையான மற்றும் ஆழமான பொருளை உணர்ந்து செயல்படாமல் இவைகளை தூக்கி எறிந்துவிட்டு தன்பொருளாதார முன்னேற்றத்தில் தான் ... |
என்று நினைப்பீர்கள். நீரை பொருத்தவரை , மிகக் குறைவான சிந்தனையே நம்மிடத்தில் நிலவி வருகின்றது. இதற்குக் காரணம் நீர் , பணச்செலவு இல்லாமல் இலவசமாக கிடைப்பதே. எனவேதான் நம்முடைய விருப்பதற்கு ஏற்ப நீரை தாராளமாக செலவு செய்து வருகின்றோம். உலகத்தில் நீரை பயன்படுத்துபவர்கள் நீரினை மிகக் குறைவான அளவிலேயே மதிப்பிடுகின்றனர். தன் சொ... |
வேகமாக குறைந்து வருகின்றது. நீர் , ஒரு மதிப்பு மிக்க வளம் ( Water , a valuable Resource ) நீரானது , ஒரு வாங்கி விற்கும் பொருள் அல்ல. அது நம் வாழ்க்கை / உயிர் இதை பயன்படுத்தும் பொழுது குறுகிய மனப்பான்மையுடன் தான் மட்டும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கக் கூடாது. பரந்த மனப்பான்மையும் மற்றும் நீர் வள பாதுகாப்பும் செய்ய வேண்டு... |
blood of the earth ) என்று நினைக்க வேண்டும். எனவே நீரானது ஒரு திரவம். கீழ்கண்டவைகன களை மனதில் கொண்டு அதற்கு முழு பாதுகாப்பு கொடுக்கவேண்டும். நீர் ஒரு மதிப்புள்ள வளம் ; இது இலவசமாகக் கிடைத்தாலும் இதன் பொருளாதார மதிப்பு அதிகம் ; இதை பயன்படுத்துவதில் , சுயநலம் , அகங்காரம் மற்றும் குறுகிய மனப்பான்மையோடு அணுகுதல் ஆகியவைகளுக... |
நினைக்கிறார்கள் என்பதை புரிந்து நீர் வள மேம்பாடு செய்வது நலம். ஆகவே , நீரானது மதிப்புள்ள ஒரு குறிப்பிடத்தக்க வளமாகும் என்பதை அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். 2. நீரின் ஆதாரங்கள் ( Sources of water ) புவியின் மேற்பரப்பில் நீர் தோன்றிய விதத்தினைப் பற்றி இரண்டு கருத்துக்களை புவியியலார் தெரிவிக்கின்றனர். 1. பல மில்லியன் வ... |
வளிமண்டலத்தினுள் வால் நட்சத்திரங்கள் தொடர்ந்து நுழைந்த வண்ணம் இருந்தன. இவை சுமந்து வந்த பனி ஆவியாகி நீராகப் புவிப்பரப்பின் மேல் விழுந்தது. Page 182 of 204 பனிக்கவிப்புகள் மற்றும் பனியாறுகள் ( Icecaps and Glaciers ) உலகின் நன்னீரில் 77 விழுக்காடு பனிக்கவிப்புகளாக , உறுதியான திடநிலையில் உள்ளன. துருவங்கள் பனிக்கவிப்புகளால... |
மீட்டர் தடிமனுக்கு துருவங்களிலேயே உறைந்து கிடக்கின்றது. இப்பகுதியில் மழையும் பனியாகப் பொழிகின்றது. கோடைக் காலத்திலும் உருகும் நிலை இல்லாததினால் பனி இறுகிப் பனி கற்களாகவும் , பனிப்பாறைகளாகவும் மாறுகின்றன. கிட்டத்தட்ட 29 மில்லியன் கன கிலோமீட்டர் நீர் பனியாக இருக்கின்றது. வடஅமெரிக்கா மற்றும் சைபீரியாவின் ஏரிகள் நன்னீரின் ... |
மழைநீர் தற்காலிகமாக பனி உருகும் அல்லது வசந்த காலத்தில் நிலத்தின் மேற்பரப்பில் நீராக ஓடுகின்றன. உலகின் மொத்த புவிப்பரப்பில் 60 விழுக்காடு ஆற்று வடிநிலங்களாக உள்ளன. நில நடுக்கோட்டு மண்டலத்தில் அமேசான் , காங்கோ போன்ற மிகப்பெரிய ஆறுகள் பாய்கின்றன. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் சிந்து , கங்கை , ஹீவாங்கோ , ஐரா... |
காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக , தேம்ஸ் , ரைன் , வோல்கா ஆகியவற்றைக் கூறலாம். அயன மண்டலப் பாலைநிலங்களில் குறிப்பிட்ட சில தலக் காரணங்களால் பல வருடங்களுக்கு ஒருமுறை ஓடும் ஓடைகள் உருவாகின்றன. ஆற்று நீரைச் சார்ந்தே பெரும்பான்மையான மக்கள் வாழ்கின்றனர். ஆனால் ஆற்றுநீரின் அளவு பருவக் காலங்களுக்கு ஏற்ப மாறுபடக் கூடியது. இதனா... |
வெப்பமண்டலக் காடுகள் மற்றும் டைகா போன்ற காட்டுப்பகுதிகளில் நிலத்தடி நீர் காணப்படுகின்றது. அரைப்பாலை நிலங்களிலும் , மழைநீர் நிலத்தடி நீராகச் சேகரிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக , ஆஸ்திரேலியாவில் நிலத்தடிநீர் சேகரிக்கும் நீர் கொள் பாறை அமைப்பு குவின்ஸ்லாந்து , நியூசவுத்வேல்ஸ் , விக்டோரியா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்ற... |
பெருமளவில் மக்களுக்குப் பயன்படுகின்றது. நிலத்தடிநீர் பெருமளவில் உறிஞ்சப்படுவதினால் கடல்நீர் அதனடியில் உட்புகுந்து விடுகின்றது. இதன் விளைவாக கடற்கரை ஓரங்களில் நிலத்தடிநீரை அதிகம் உறிஞ்சுவதால் கிணறுகள் உவர்நீராக மாறுகின்றன. சென்னை நகரில் பெரும்பாலான பகுதிகளில் இத்தகைய நிலையே காணப்படுகின்றது. மேற்கூறிய நன்னீர் நிலைகள் அனை... |
நிலைகளில் அளவு குறையும் போது நீர் பற்றாக்குறை உருவாகின்றது. பற்றாக்குறையினால் நீரின் தரம் நாளடைவில் சீரழிய ஏதுவாகின்றது. குறிப்பாக , அசுத்தம் மற்றும் மாசடைதல் என நன்னீர் தரம் இழக்கின்றது. நீரின் தரம் ( Quality of Water ) நன்னீரின் தரம் எவ்வாறு குறைகின்றது. இதற்கு முக்கிய காரணங்கள் யாவை ? இந்தக் கேள்விகளை கூர்ந்து கவனிப... |
மற்றும் நகர்புறத் தேவைகளுக்காக நன்னீர் ஆதாரங்கள் அதிக அளவில் தேவைப்பட்டன. காலநிலை மாற்றங்களால் மழை வீழ்ச்சியின் அளவும் பொதுவாக குறைந்து வருகின்றது. இவற்றைத் தவிர கரிமக்கசிவு , நீர்ப்பாசன முறைகளில் உப்புபடிதல் ஆகியனவும் இவற்றை போன்ற வேறு பல நிகழ்ச்சிகளும் தரத்தினைக் குறைக்கின்றன. இத்துடன் தற்சமயம் தொழிற்சாலைகளிலிருந்து ... |
, கடற்கரை நீரில் உயிர்க்காற்று குறைதல் ஆகியன எதிர்க்காலத்தில் நீரின் தரத்தில் பெரும் சிக்கலை உருவாக்கக்கூடும் என்றும் கருதப்படுகின்றது. நீரின் தரம் பல்வேறு காரணங்களினால் குறைந்து வருவதை இதுவரை கண்டறிந்தோம். இதன் பாதுகாப்பில் தான் நமது வாழ்க்கையும் பின்னிக்கிடக்கின்றது. உலகச் சுற்றுச் சூழல் கண்காணிப்பு கவுன்சில் சமீபத்த... |
சுட்டிக்காட்டியுள்ளது. உலகளவில் நன்னீர் தரம் மற்றும் கண்காணிப்பு ஆகியன இன்றளவும் போதாத ஒன்றாகவே இருக்கின்றன. கட்டுப்பாடுகளும் பலவீனமாகவே உள்ளன. நீர்த்தரத்தினைப் போலவே , அளவும் உலகெங்கிலும் ஒரு பெரும் சிக்கலாகத் தலை தூக்கியுள்ளது. வளர்ந்து வரும் மக்களின் தேவைகள் மேலும் இச்சிக்கலை கடினமாக்குகின்றன. எதிர்காலத்தில் நீர்ப் ... |
சிக்கலாகக் கருதப்படுவது : 1. அளவில் போதுமான சுத்த நீர் கிடைக்க வகைச்செய்தல் 2. தீமை விளைவிக்கா வண்ணம் கழிவுப் பொருட்களின் வெளி ஏற்றம் ஆகியவை. ஆனால் இவற்றை பூர்த்தி செய்ய வகையில்லா நிலையில் இந்நாடுகள் இருக்கின்றன. ஆறுகள் , ஏரிகள் மற்றும் குளங்கள் நன்னீரின் ஆதாரமாகவும் அதே நேரத்தில் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படு... |
அன்றாடக் காட்சிகளாகிவிட்டன. இந்நீர் நிலைகளே மக்களுக்குத் தேவையான குடிநீர் அளிக்கும் இடங்களாகவும் இருக்கின்றன. அகில உலக சுகாதார இயக்கம் நீரால் வருகின்ற அல்லது நீருடன் தொடர்புடைய 5 வகை நோய்கள் எவை என பட்டியலிட்டு கூறியுள்ளது. முதல் நான்கு நோய்களும் நீரினைச் சார்ந்தும் 5 ஆவது சுகாதாரமின்மையாலும் ஏற்படுகின்றன. நோய் வகை 1. ... |
ஈக்கள் ஆற்றுக்குருடு என்ற நோயைப் பரப்புகின்றன. 2. கழிவு நீரால் எழும் நோய்கள் சொறி , படைகள் , தொழுநோய் , கண்வலி போன்ற நோய்கள் தோலினையும் , கண்களையும் தாக்குகின்றன. இவை தனிப்பட்ட மனிதரின் சுகாதாரத்திற்குத் தேவையான நீர் பற்றாமையினால் பரவுகின்றன. 3. நீர் தொடர்பாக எழும் நோய்கள் எலும்பில்லாத உயிர்களினால் பரவக்கூடிய நோய்கள் இ... |
மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் இந்த வகையைச் சார்ந்தவை. 5. சுகாதாரமின்மையால் எழும் நோய்கள் குடல் சம்பந்தமான புழுக்களைப் பரவச் செய்கின்றது. மனிதக் கழிவில் முட்டைகள் வெளியேற்றப் படுகின்றன. அதன் வழியே தொற்றுநோய் பரவ வழி ஏற்படுகின்றது. தாக்கம் கொசுக்களினால் பரவும் மலேரியா சராசரியாக 160 மில்லியன் மக்களை தாக்குகின்றது... |
ஏற்படுகின்றது. உலகில் 500 மில்லியன் மக்கள் இந்நோயினால் அவதியுறுகின்றனர். நோய் நீர்ப்பாசன கால்வாய்களும் , அணைகளும் நத்தைகளுக்கு ஏற்ற வாழ்விடங்களாகும். வயிற்றுப்புழு நத்தைகளின் மூலமாக ஊடுருவுகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளியும் 600-1000 வேலைநாட்களை இழக்க நேரிடுகின்றது. வயிற்றுப்போக்கு ஒவ்வொரு வருடமும் 6 மில்லி... |
லார்வாக்கள் கால்கள் வழியாக மனித உடலில் நுழைகின்றன. மிகவும் அதிகமான கொக்கிப் புழுக்களின் ஊடுருவல் குழந்தைகளின் இறப்பில் முடியும் வாய்ப்புள்ளது. நீர்ப்பற்றாக்குறை , இந்நூற்றாண்டில் பெரும் சிக்கலாக உருவாகத் தொடங்கி உள்ளது. நீர்ப்பற்றாக் குறைக்கு மக்கட்தொகை வளர்ச்சி மட்டுமே காரணமாக தோன்றினாலும் , நீர்நிலைகளின் பரவலும் இதற்... |
பற்றாக்குறைக்கு வழிவகுக்கின்றது. இதன் பரவல் மற்றும் நீரிற்கானத் தேவையும் ஒன்றையொன்று சார்ந்து அமையவில்லை. எனவே தான் , சில பகுதிகளில் மக்கள் தங்களின் வாழ்க்கை முழுவதும் வெள்ளத்துடன் போராடும் இக்கட்டில் இருக்கும்போது மற்றவர்கள் வறட்சியில் அவதிப்படுகின்றனர். நகர்ப்புற பகுதிகளில் குழாய்களிலிருந்து வரும் நீர் வறண்டு விடின் ... |
கடைப்பகுதிகளில் , சிக்கலை எதிர்கொள்வதாகின்றது. பொருளாதாரத் துறைகள் சிலவற்றில் நன்னீர் இடுபொருள் , நீர்த்தேவையில் , நீர்ப்பாசனத்துறை மற்ற துறைகளுக்கு முன்னோடியாக உள்ளது. வீடு மற்றும் தொழிற்துறைகளில் எதிர்காலத்தில் நீர்த்தேவை அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக வளர்ந்துவிட்ட நாடுகளில் வீட்டுப் பயன்பாட்டிற்கு ... |
போதுமானது. ஆனால் நமது இன்றைய நாகரீக வாழ்க்கை நன்னீர் மற்றும் உயர்நிலைத் தேவைகளின் அடிப்படையில் தான் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் அளிக்கப்படும் நீரின் அளவைக் கணக்கிட்டால் அமெரிக்க ஐக்கிய நாடுகளில்தான் அதிகமான நீர் அளிப்பு காணப்படுகின்றது. இந்நாட்டில் நீர் , பெருமளவில் தொழிலகங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்க ஐக்கி... |
water Scarcity ) குடிநீர்ப்பற்றாக்குறை தனிநபருக்குக் கிடைக்கும் நீரின் அளவினை மட்டுமின்றி நீரினைப் பெறுவதில் உள்ள சிரமங்களையும் மறைமுகமாக எடுத்துக்காட்டுகின்றது. வளர்ந்து விட்ட மற்றும் தொழில் மயமான நாடுகளில் அதிகஅளவில் குழாய்நீர் வழங்கப்படுகின்றது. ஆனால் வளரும் நாடுகளில் நீர் ஆதாரங்களை நாடி அடைய குறைந்தது 2 கி.மீ தூரம்... |
கிராமம் நகரமாகவும் , நகரங்கள் பெருநகரங்களாகவும் மாறுகின்றன என்பதனை முன்னரே கண்டோம். இதன் விளைவாக கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களை நோக்கி நகர்வுகள் ஏற்படுகின்றன. எனவே , நகர மக்களின் அடிப்படைத் தேவைகள் அதிகரிக்கின்றன. இயற்கை வளர்ச்சியுடன் , ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு மக்களின் இடப்பெயர்வு , குறிப்பாக நகரங்கள்... |
அதிகரிக்கச் செய்கின்றது. நீர் அளிப்பின் நிலைமை சீர்செய்யப்படாமல் இருப்பதும் , ஏனைய பிரச்சினைகளுடன் சேர்ந்து நீர்ப்பற்றாக்குறை அதிகரிக்கின்றதும் குறிப்பாக குடிநீர்ப் பிரச்சனை பெரும் சிக்கலாகின்றது. உலகளவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே நீர் ஆதாரங்கள் மற்றும் பரவல் , அதன் வளர்ச்சியை ஒத்தமைகின்றன. திட்டங்கள் வகுக்கப்பட்டு ,... |
பற்றாக்குறையும் பெருகியுள்ளது. சேகரிக்கப்படும் நீரின் அளவில் தேவைப்படும் நீர்மட்ட நிலையை பராமரிக்க இயலாத நிலையும் குடிநீர் பற்றாக்குறைக்கு மற்றுமொரு காரணம். சென்னைக்குத் தேவையான குடிநீர் , புறநகர் ஏரிகளான செம்பரபாக்கம் , புழல் மற்றும் ஏனைய ஆதாரங்களில் சேகரிக்கப்படுகின்றன. ஆனால் சென்னைக்குத் தேவைப்படும் அளவான நீரினை இந்... |
பொழிவுகள் உருவாகும் போது மேல் வழிவு நீர் , வேகமாகக் கடலைச் சென்றடைகின்றது. இதனால் தொலைதூரத்திலிருக்கும் நெய்வேலிபோன்ற ஊரிலிருந்து லாரிகள் மற்றும் இரயில்கள் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய தொலை தூரத்திலிருந்து நீரைக் கொண்டு வர சென்ற ஆண்டுகளில் , ஆண்டொன்றிற்கு ரூபாய் 1,000 மில்லியனுக்கு மேல் செ... |
பற்றாக்குறையினால் நகரங்களை நோக்கி வரும் மக்கள் அலை , கிடைத்த இடங்களில் குடியேறுகின்றனர். நீர் அளிப்பில் பற்றாக்குறையும் , ஏற்கனவே உள்ள அடிப்படை வசதிகளில் அழுத்தத்தையும் , ஏற்படுத்துவதினால் மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். நகரங்களில் காணப்படும் நெரிசலினால் நல்ல மேம்பாட்டுத்திட்டங்கள் கூட போதுமான நீர் விநியோகத்தினை தர இயலவ... |
ஆதாரங்கள் உள்ளன. ஆசிய நாடுகள் பலவற்றில் தனிப்பட்ட வீடுகளுக்கு வீட்டுப் பயன்பாட்டிற்கான நீர் அளிப்போ அல்லது குடிநீர் அளிப்போ இல்லை. மழைக் காலங்களில் ஆற்றில் பாயும் நீரே இந்த இரண்டிற்கும் ஆதாரமாக உள்ளது. ஆறுகள் வறண்டுவிடும் பொழுது , கிணறு , குட்டை மற்றும் குளம் ஆகியவைகளும் வறண்டு விடுகின்றன. எனவே அடுத்த மழைக் காலம் வரை ப... |
காலங்களில் அணைகளிலிருந்து நீர் ஆறுகளுக்கு விடப்படுகின்றது. பருவக்காற்று காலங்களில் அணைகளும் வறண்டு விடுகின்றன. நீரின் பற்றாக்குறை அதன் தரத்தினை குறைக்கின்றது. தொழில் மயமாதல் மற்றும் அதன் தொடர்பான முன்னேற்றங்கள் நன்னீர் ஆதாரங்களை மாசடையச் செய்கின்றன. தொழில் பெருக்கம் ( Industrialisation ) கிராமங்கள் அல்லது நகரங்கள் எதுவ... |
குளிர்விப்பானாக மற்றும் உற்பத்தியின் வள ஆதாரமாக தொழிலகங்களில் பயன்படுத்தப்படுவதன் மூலம் நீரின் தேவையும் அதிகரிக்கின்றது. தொழிலகத் தேவைகள் அதிகரிப்பதனால் நகரங்களிலும் பெருநகரங்களிலும் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு நீர் அளிப்பு குறைந்து விடுகிறது. நகர பற்றாக்குறைக்கு அவைகளில் நீரைச் சேமிப்பதற்கு குறைவான வாய்ப்பே இருப்... |
பகுதிகளும் அதிகமிருப்பின் அங்கு அளிப்பு ஆதாரங்கள் வறட்சியாகவோ சதுப்பாகவோ மாறிவிடுகின்றன. இதனால் தூரப் பகுதிகளிலிருந்து நீரைப் பெற வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இத்தகைய வெளி ஆதாரங்கள் பராமரிக்கப் படுவதில்லையாதலால் நீர் தரமுடையதாக இருப்பதில்லை. நிலம் நீர் மாசடைதல் ( Land and water pollution ) குட்டைகள் , குளங்கள் , ஆறுகள் ... |
, நிலத்தையும் மாசடையச் செய்து அதன் தரத்தினையும் குறைக்கின்றது. நீர் மாசடைதல் ஏன் ? எவ்வாறு நிலத்தின் தரத்தினைக் குறைக்கின்றது ? என்பதை இப்போது பார்ப்போம். நீர் மாசடைதல் நீர் மாசடைதல் உலகின் மிகச் சிக்கலான பிரச்சனையாக உள்ளது. நீர் மாசடைதலுக்கு பல காரணங்கள் உள்ளன. அவை : 1. விவசாய நிலத்திலிருந்து வெளியேறும் நீர் இரசாயன மா... |
வெப்ப வெளியீடு. 5. கடல் மாசுக்கள் நீர் மாசடைதலுக்கு மனிதச் செயற்பாடுகளே முதற்காரணமாக உள்ளன. பாகுபாடின்றி கழிவுகளைக் கொட்டுவதாலும் , இயற்கையாக நிகழும் வடிநிலக்கழிவு நீரும் நீர் நிலைகளை அதிகமாக மாசுப்படுத்துகின்றன. வேளாண் கழிவுநீர் இன்றைய நவீன வேளாண் தொழிலில் இரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி மருந்துகளு... |
மாசுக்கள் மனித நடவடிக்கையால் ஏற்படுகின்றன. நகரங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் ( Urban Waste Waters ) நகரமயமாதலின் காரணமாக வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நகரங்களில் செயல்பாடுகளினால் உருவாகும் கழிவு நீரை வெளியேற்ற எந்த ஒரு திட்டமும் காணப்படவில்லை. இக்குறைபாட்டினால் , கழிவு ... |
இந்நீர்நிலைகளை அசுத்தப்படுவதுடன் நகரத்தினை நாற்றமெடுக்க வைக்கின்றன. நகரங்களில் ஒரு காலத்தில் நல்ல நீர்நிலைகளாக இருந்தவை இன்று பெரும் சாக்கடைகளாகக் காட்சியளிக்கின்றன. இலண்டனின் தேம்ஸ்நதி , பாரிஸ் நகரின் சீன் நதி ஒரு காலத்தில் மிகவும் மோசமான சாக்கடைகளாக இருந்து தற்போது திரும்பவும் நல்ல நீர்நிலைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதுப... |
தாங்கியே செல்கின்றன. இக்கழிவுநீரில் கரைந்தும் கரையாமலும் தாங்கிச் செல்லப்படும் நச்சு இரசாயனப் பொருட்கள் கடலில் கலக்க அங்கும் மாசடைதல் வெகுவாக நிகழ்கின்றது. தொழிற்சாலை கழிவு நீர் ( Industrial Waste Waters ) தொழிலகங்களிலிருந்து வெளியேறும் நச்சுத் தன்மை நிறைந்த கழிவுநீரும் ஆறுகள் மூலம் கடலை அடைகின்றது. இதன் பயனாக நீர்ச் ச... |
இருப்பது கவலைக்குரிய ஒரு நிகழ்ச்சியாகும். உணவுக் கழிவுகள் , கன உலோகங்கள் , இரசாயனக் கழிவுகள் யாவும் எளிதில் உயிரினச் சிதைவிற்கு உட்படுபவை அல்ல. எனவே இக்கழிவுகளின் படிவுகள் பல்லாண்டுகளாக அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற நீர்நிலைகளுக்கு மாற்றப்படும் அணு இயக்கக் கழிவுகளும் அவற்றின் அதிக வெப்பமும் கவலை தருபவையாய் உள்ளன. அணுக... |
உப்புச் சதுப்பு நிலங்களிலும் கழிமுகங்களிலும் கொட்டுகின்றனர். இதனால் கடல் நீரின் வெப்பமும் உயருகின்றது. தரமும் குறைகின்றது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்து ஆண்டொன்றுக்கு 20,000 டன்களுக்கு சமமான எண்ணெய் இழப்பும் அதன் ஒழுகலும் நீர் நிலைகளை அடைகின்றன. நீர் நிலைகளில் கொட்டப்படும் எண்ணெயின் தாக்கம் நீர் வாழினங்களை வெகுவ... |
சுத்திகரிக்கப்படாமலே வெளியேற்றப்படுகின்றன. தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் 100 கிலோ கிராம் தோலினைப் பதப்படுத்த சுமார் 3000 லிட்டர் நன்னீர் தேவைப்படுகின்றது. இந்நீர் தோலினை இரசாயானக் கலவையில் ஊற வைக்கவும் , மற்ற எல்லாவித பதப்படுத்தும் முறைகளுக்கும் பயன்படுகின்றது. இவ்வாறு பயன்படுத்தப்பட்ட நீர் முழுவதும் கழிவு நீராக வெளியே... |
சுத்திகரிக்கப்படாமலேயே நீர்நிலைகளில் கொட்டப்படுகின்றன. இவை வெளிப்படையாக பாலாற்றில் கலக்கின்றன. இதனால் பாலாற்றின் மூலம் நீர்பாசனம் பெறும் நிலங்களும் அதனை அடுத்துள்ள நிலங்களும் மாசடைகின்றன. இம்மாவட்டத்திலுள்ள சில கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மின்சக்தி குறைவினாலும் அதிக அசுத்த நீரின் பாய்ச்சலாலும் தொடர்ந்து இயங்க இயலாத ... |
எங்கெல்லாம் நீர்நிலைகள் கழிவு நீரை தாங்கிச் செல்கின்றனவோ எங்கெல்லாம் சாக்கடைகள் அடைபட்டு , உடைபட்டுக் கிடைக்கின்றனவோ அங்கெல்லாம் நிலச்சீர் குலைவு ஏற்படுகின்றது. நகர்புறங்களில் திடக்கழிவுகளும் , சாக்கடை நீரும் வெட்ட வெளிகளில் கொட்டப்படுவதினால் நிலவளம் குறைகின்றது. தமிழ்நாட்டில் சென்னை , திருச்சி , சேலம் போன்ற நகரங்களில்... |
வேறு வகைகளில் நிலச்சீர்குலைவு காணப்படுகின்றது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு முழுவதும் மணல் குன்றுகளாலும் மணல் பரவலாலும் மூடப்பட்டுள்ளது. இம்மணல் “ தேரிமணல் ” எனப்படுகின்றது. இதனால் சுமார் 120 ச.கி.மீ. பரப்பளவு நிலம் சீர்குலைந்துள்ளது. கிணறுகள் , ஆறுகள் , கால்வாய்களிலிருந்... |
கிராமப்புறங்களில் மிகக் குறைவு. கிராம மக்களும் , விவசாயிகளும் கூட இதனைப் பற்றிய விழிப்புணர்வு பெறவில்லை. இப்பிரதேசங்களில் மாசடைதலின் அளவினைப் பற்றி நுணுக்கமான அளவீடுகள் மூலம் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எடுத்துக்காட்டாக , மாசு நிறைந்த நீர்நிலைகளிலிருந்து பாசனம் பெறும் நிலங்களின் மகசூல் குறைந்து வருவதாகக் கணக்கிடப்ப... |
Negative impacts ) மேலெழுந்துள்ளன எனத் தெரிய வந்துள்ளது. இவையே நம்மை நீர்ப் பாதுகாப்பு , மற்றும் மேலாண்மை நோக்கி செயலாற்றவும் வைத்துள்ளன. எனவே “ பேணத்தகுந்த ஒரு எதிர்காலம் என்பது சரியான சூழல் மற்றும் விலங்குகளின் மேலாண்மையைப் பொறுத்தே அமைதல் வேண்டும். ” நிலம் மற்றும் நீரை பொறுத்தவரை , ஒருங்கிணைந்த மேலாண்மையும் , நல்லறம... |
மேம்பாட்டிற்காக பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகின்றது. நீர் , பொருளாதார நோக்கிற்காக பயன்படுத்தப்படுவதன் விளைவாக பற்றாக்குறையும் தரக்குறைவும் ஏற்படுகின்றது. அதிக தேவைகள் , முறையற்ற நீர்ப் பயன்பாடு மற்றும் வளர்ந்து வரும் மக்கள் தொகை ஆகியன , நீர்ப்பற்றாக்குறைக்கும் மற்றும் தரக்குறைவிற்கான மறைமுகக் காரணிகளாக இருக்கின்றன ... |
நடவடிக்கைகளில் நமக்கு அதிக அளவு பயன்படும் நீரினை , நாம் பயன்படுத்தும் போது கடைபிடிக்கவேண்டிய ஒரு சில ‘ நியாய உணர்வுகளே ’ நீர் அறம் எனப்படுகின்றது. நீர் அறவழிப் பயனை எவ்வாறு அனுமானித்து கடைபிடிப்பது ? நீர் அறத்தினை இருவழிகளில் அனுமானம் செய்து அதை கடைபிடிக்கலாம். 2. நீர் சுலபமாக அதிக அளவில் கிடைக்கக் கூடிய ஒன்று. இதனைக் ... |
மட்டும் பயன்படுத்துவது மிக அவசியம். நம்மைப் போன்றே மற்றவர்களின் தேவைகளுக்கும் நீர் பயன்படவேண்டும் என்ற அக்கறை நமக்கு இருக்க வேண்டும். எனவே , நீரின் பயன் ஒரு நியாயத்தின் அடிப்படையில் இருப்பதே ஒரு நல்ல நீர் அறமாகும். நீர் அசுத்தமடைவதில் நாம் ஒரு குற்றவாளியாகவோ ( அ ) மற்றவர்கள் நீர் அறத்தினை மீறும் போது மௌனமான பார்வையாளர்... |
நன்கு செயலாற்ற முடியும். வளரும் நீர்த் தேவை ( Increasing Water Demand ) நீர் புதுப்பிக்கப்படக் கூடிய ஓர் வளம். ஆனால் அடுத்துவரும் 15 வருடங்களில் உலகில் 30 நாடுகளில் பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கும். மேலும் சென்ற நூற்றாண்டின் இறுதியில் 1980 ஆம் ஆண்டின் தேவையைவிட இரண்டு ( அ ) மூன்று மடங்கு கொள்ளளவு நீர் தேவைப்பட்டது என ... |
செய்யக்கூடிய திறன்பாடு ஏற்படும். உங்களுக்குத் தெரியுமா ? உலக மருத்துவ மனைகளில் சேர்க்கப்படும் நோயாளிகளில் பாதிக்கு மேல் நீர் சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். நீர் அறம் மற்றும் நீர்ப்பாசனம் நீரினைப் பயன்படுத்துவோரில் மிக முக்கியமானவர்கள் நீர்ப்பாசனத்துறையினர். உலகளவில் காணப்படும் நீரின் பயன்பாட்டில் 70 ... |
உள்ளன. இதன் விளைவாக வரும் காலங்களில் நீர்ப்பாசன பயன்பாட்டிற்கான தேவைகளும் அதிகரிக்கும் என இதன் மூலம் தெளிவாகிறது. ஒரு நாட்டின் நீரின் பயன்பாடு அந்நீர்ப் பயன்படும் திறன் பாட்டினைப் பொறுத்து அமைகின்றது. அதிக நுட்ப வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட 30 விழுக்காடு நீர்ப்பாசனத் திறன்பாடு தான் காணப்படுகின்றது. அமெரிக்க ஐக்கிய நாடு... |
அடைந்தவர்களாக இருக்கின்றனர். எ.கா. இஸ்ரேலிலும் , கலிபோர்னியாவிலும் சொட்டு நீர்ப்பாசனம் முழுத்திறனுடன் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. விவசாயிகளும் தோட்டப்பயிர் செய்பவர்களும் நீரினை பயிர்ச் செடிகள் வேர்களின் அருகாமையில் சொட்டு சொட்டாக விழும்படி செய்கின்றனர். இத்தகைய நீர்ப்பாசன முறை இந்தியாவில் கூட பயன்பாட்டிற்கு வந்து விட... |
இஸ்ரேல் நாடு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இந்நாட்டின் நீர்வளத்தில் 95 விழுக்காடு பயன்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் பாலைவனம் பயிர்நிலமாக வளம் பெற்றுள்ளது. தொழிற்சாலைகளிலும் வீடுகளிலும் பயன்படுத்தப்படும் நீரில் ஐந்தில் ஒரு பங்கு சுத்திரிக்கப்பட்டு விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது. 1962 -இல்... |
8 கன மீட்டர் நீருக்கும் குறைவாகப் பயன்படுத்தி 100 அமெரிக்க ஐக்கிய நாட்டு டாலருக்கும் அதிகமான மதிப்புடைய பொருட்களை உற்பத்தி செய்கின்றது. உங்களுக்குத் தெரியுமா ? நீரின் மூலம் வரக்கூடிய வியாதியினால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 73 மில்லியன் வேலை நாட்கள் வீணாவதுடன் 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மருத்துவப் பரிசோதனைக்காகவும... |
அரசியல் சூழ்நிலைகள் நீர்ப்பயன்பாட்டில் அறவழிகளுக்கு எதிரானத் தன்மைகளைத் தாங்கியவைகளாக உள்ளன. உலகில் உள்ள மொத்த நாடுகளுள் ( 193 ) 75 விழுக்காட்டிற்கும் மேலான நாடுகளில் உள்ள நதிகள் இருநாடுகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படுபவைகளாக உள்ளன. ஏற்கனவே இந்தியாவிற்கும் வங்காள தேசத்திற்கும் இடையில் கங்கை குறித்த வாதமும் பிரேசிலுக்கு... |
மனித நேய அடிப்படையில் அணுகுவதே பயன்தருவதாக இருக்கும். ஓர் ஆற்று வடிநிலம் என்பது ஒரு இயல்பான இயற்கைப் பகுதி. இதில் நாட்டு எல்லைகளுக்கு இடமும் மதிப்பும் இல்லை. வளம் என்ற ஒன்றின் அடிப்படையில் மட்டுமே நீர் மதிப்பினைப் பெற்றுள்ளது. நைல் மற்றும் டான்யூப் நதிகள் பாயும் நாடுகளில் நீர் ஒரு மதிப்புமிக்க வளமாக கருதப்படுகின்றது. ந... |
உங்களுக்குத் தெரியுமா ? சரியான நேரத்தில் சரியான அளவு தண்ணீர் விடப்பட்டால் தண்ணீர் அழுத்தம் குறையவும் உற்பத்தித் திறன் அதிகமாகவும் வழி உண்டு. ஒவ்வொரு துளி நீரையும் விவசாய உற்பத்திக்கு றையாகப் பயன்படுத்தினால் குறைந்த நீரில் அதிக உணவு உற்பத்தியைப் பெறலாம். BIT GLOSUIT SOOTGOLD ( Water Management ) இன்றைய சூழ்நிலையில் உலகள... |
வளர்ந்து வருகின்றன. அதனால் ஏற்படுகின்ற பிரச்சனைக்கும் நீர்த் தேவையை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றன. முன்னர் கூறியதுபோல் 21 ஆம் நூற்றாண்டில் உலகளவில் சுமார் 30 நாடுகளில் நீர் பற்றாக்குறையின் தாக்கம் வெளிப்படும். நீரின் அளவையும் தரத்தையும் உயர்த்த நீர் மேலாண்மை அவசியமான ஒன்றாகும். இதில் குறிப்பிடத்தக்க வழிகள் முக்கியத்துவ... |
நீர்த் தேவையோ அங்குநீரினைக் கிடைக்க வகை செய்தல். ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டுவது ஒரே சமயத்தில் பல தேவைகளைப் பூர்த்தி செய்ய வழிவகை செய்யும். வெள்ளப் பெருக்கினை கட்டுப்படுத்துதல் , மின்சார உற்பத்தியை பெருக்குதல். நீர்ப்பாசனம் உள்ளடங்கிய மற்ற பல நீர் பயன்பாடுகளுக்கு வகை செய்தல் யாவும் இச்செயல்பாட்டில் அடங்கும். இதனால் அ... |
அமைந்துள்ளது. நாட்டிற்கு தேவைப்படும் மின்சக்தியில் 50 சதவிகிதமும் வெள்ளத்திலிருந்து பாதுகாப்பும் வழங்குகின்றது. இந்த அணையினால் எதிர்மறையான விளைவுகளும் உருவெடுக்கின்றன. களிமண் மற்றும் மணல் போன்ற 100 மில்லியன் டன் படிவுகள் , இந்நிலங்களில் படியவைக்கப்பட்டுள்ளன. ஆயக் கட்டில் நிலங்களை வளப்படுத்திய இந்த அணை இன்று நாசர் ஏரியி... |
மூலப்பொருட்களும் , சரியாக கிடைப்பதில்லை. முன்னர் நைல் நதியின் நீருடன் கடலில் கலந்து வந்த உணவுப் பொருட்களும் மீன்களுக்கு கிடைக்க ஏதுவற்றுப்போனது. காலப்போக்கில் , டெல்டாப் பகுதியே படிப்படியாகப் பின்னடைந்து கொண்டிருக்கின்றது. நிலம் உப்புமயமாதல் மற்றும் நீர் தேங்குதல் ஆகியவை அதிகரித்திருப்பதால் , நிலத்தின் 40 % நிலம் நீர் ... |
மேலாண்மை ( Basin Management ) கி.பி.2010 க்குள் உலகின் பாதி நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி நீரின் தேவைகளை இரட்டிப்பாக்கும். இதனால் ஏற்படும் அழுத்தங்கள் ஆற்று வடிநிலங்கள் சார்பான பிரச்சினைகளை வெகுவாக அதிகரிக்கின்றன. இதனால் மற்ற வளங்கள் சார்ந்த பிரச்சனைகளும் நமது வாழ்வினைப் பாதிக்கின்றன. இதன் காரணமாக நீர் மேலாண்மையில் ஆற... |
முனையில் நிகழும் நிகழ்ச்சி அதன் மறுமுனையில் தாக்கத்தினை ஏற்படுத்தும். ஆற்று வடிநில நீர் , மற்ற வளங்களைப் போன்றே பங்கிட்டுக் கொள்ளக் கூடியது. எனவே , பங்கேற்றல் மூலம் ஆற்றுவடிநில மேலாண்மையை மேற்கொள்ளல் , அந்த வடிநிலத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் நலம் பயக்கும். உலகின் 200 முக்கிய வடிநிலங்களில் 148 -க்கும் மேற்பட்டவற்றில் ... |
மாற்றிக்கொண்டுள்ளன. உலகளவில் ஒரு சில நாடுகளே கூட்டுறவு மற்றும் புரிந்து கொள்ளல் முறைமூலம் பிரச்சனையின் தீர்வுக்காக முயலுகின்றன. இந்த நாடுகளின் அனுபவங்கள் மற்றும் வெற்றிகளின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண சிறந்த வழியாக பங்கேற்றல் முறை வந்துள்ளது. நீர் அளிப்பும் தூய்மைபடுத்தலும் ( துப்புரவு செய்தலும் ) ஆதாரப்பூர்வமா... |
பெரும்பாலான நீரினைப் பயன்படுத்தும் நிலைமை வரக்கூடும். வேளாண் தொழில் நீர்ப் பயன்பாடு தொழிலகத்தின் நீர்ப்பயன்பாட்டிலிருந்து மாறுபட்டிருக்கும். உலகின் எதிர்காலத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு 1981-90 ஐக்கிய நாடுகள் சபை “ நீர்ச் சார்பு மற்றும் சுகாதாரச் சார்பான 10 வருடங்கள் ” என அறிவித்தது. இவ்வருடங்களில் வளர்ந்து வரும் நாட... |
சுகாதாரமும் விளங்கிற்று. ஒருங்கிணைந்த ஒரு அணுகுமுறையின் மூலம் சுகாதாரம் மற்றும் நீர்மேலாண்மை வழியாக நலவாழ்வில் முன்னேற்றம் காண்பது குறிக்கோளாக அமைந்தது. இந்த 10 வருடங்களில் நிகழ்ந்த செயற்பாடுகளின் வழியாக மூன்றாம் உலக நாடுகளின் சில அரசுகள் அந்நாட்டின் தேவை வாய்ப்பினை கூர்ந்து நோக்கி திடமான திட்டங்களை வகுத்தன. சில நாடுகள... |
கிடைக்க வகை செய்த நாடுகளாக இன்று திகழ்கின்றன. Page 11l7 of 204 1980 – இன் கடைசி வருடங்களில் நிகழ்த்தப் பெற்ற ஆய்வுகளின் வெளிப்படையாக ஒருசில முக்கிய முடிவுகள் எழுந்தன. அவற்றுள் நான்கு கருத்துக்கள் சிறப்புடையவை. 1. சுற்றுச் சூழல் , நலவாழ்வின் பாதுகாப்பு , ஒருங்கிணைந்த நீர்வளம் , திரவ , திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றினைச் ச... |
சமுதாயச் சேவைகளின் மேலாண்மை , உள்நாட்டு நிறுவனங்களை பயன்படுத்துவதிலும் , நீர் மற்றும் சுகாதாரம் சார்புடைய திட்டங்களை செயல்படுத்துவதிலும் தேவைப்படுகின்றது. 4. ஏற்புடைய நுட்பங்களின் பயன்பாடும் உள்நாட்டுச் சொத்துகளை கவனமாக பாதுகாத்து மேலாண்மை செய்தலும் அவசியமாகின்றது. முதலாவது கருத்தில் , ஒருங்கிணைந்த ஒரு அணுகுமுறையையும் ... |
முழுமையான பிரச்சனையாகக் கருதப்பட்டு ஐக்கிய நாடுகளின் கருத்தரங்கம் ஒன்றுக்கு வழிவகுத்தது. இக்கருத்தரங்கின் முடிவில் ஒரு செயல்திட்டம் நீர் பிரச்சனையின் எல்லா அலகுகளையும் உள்ளடக்கி வெளியிடப்பட்டது. சமீபத்தில் இந்த செயல்திட்டத்தின் கீழ் ஏற்று நடத்தப்பெற்ற நடவடிக்கைகளின் விளைவை மதிப்பிட்டு 1990 – க்கு ஏற்புடைய ஒரு வழிமுறையா... |
ஒருவளமாக நீர் கருதப்பட வேண்டும் என்பதில் ஐயப்பாடு எதுவுமில்லை. ஸ்டாக்ஹோம் குழுவின் ‘ இயற்கை வள மேலாண்மை ஆய்வுகள் ' என்பவற்றிலிருந்து நீர் என்பது பேணத்தக்க மேம்பாட்டின் ஒரு முக்கிய வளம் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1992 - இல் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றில் நீரின் வளத்திற்கும் மேம்பாட்... |
வெள்ளப்பெருக்குகள் , வறட்சிகள் ஆகியவற்றின் தாக்கங்கள் அனைத்தும் ஆராயப்பட்டன. இதனடிப்படையிலான நான்கு கருத்துகள் வெளியிடப்பட்டன. 1. நன்னீர் என்பது வாழ்க்கைக்கு பயன்தரக்கூடிய எல்லைக்குட்பட்ட ஒருவளம். நீர் வளத்திற்கும் மேம்பாடு , சுற்றுச்சூழல் என்ற இரண்டிற்கும் மிகுந்த தொடர்புகள் உண்டு. நீர் மேம்பாடு மற்றும் மேலாண்மை என்பவ... |
அளிப்பு , மேலாண்மை மற்றும் பாதுகாப்பு என்பவற்றில் மகளிர்க்கு ஒரு தலையாய பொறுப்பு உண்டு. இயற்கை சீரழிவுகள் கற்றல் நோக்கங்கள் மாணவர்கள் , அடிப்படை இயற்கை செயல்பாடுகள் , இயற்கை சீர்குலைவுகள் மற்றும் சீரழிவுகள் , புவியின் இயற்கைச் சூழலை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன என்றும் குறிப்பாக , மனித குலத்திற்கு இவற்றின் செயல்கள் எவ்... |
செயல்பாடுகளை ஆராய்தல். சீரழிவு , சீர்குலைவு , நொந்து போதல் , பொருள் ( Disaster , Hazard and Vulnerability , the Meaning ) சீரழிவை உருவாக்குவது என்ன ? சீர்குலைவுகளும் , சீரழிவுகளா ? நொந்து போதலை நாம் எவ்வாறு வரையறுக்கிறோம் ? தீர்வு காண இயலாத , அளவிடமுடியாத அழிவு மற்றும் பேரிழப்பே சீரழிவு எனப்படும். இது மிகப் பெரிய இழப்ப... |
கூறுகின்றனர். சீரழிவுகளை வகைப்படுத்துதல் என்பது சீர்குலைவுகளை வகைப்படுத்துதல் ஆகும். தீங்கு உண்டாக்கக் கூடிய திறனுடைய நிகழ்ச்சிகளும் காரணிகளும் இருக்கின்றன. அவையே , சீர்குலைவுகள் எனப்படும். சீர்குலைவு என்பது ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒன்றாகும். இது ஒரு தெரியாத மற்றும் முன் மதிப்பிட முடியாத ஒரு நிகழ்வாக இருக்கிறது. மேலும... |
சமுதாயம் நொந்து போகும் தன்மையுடையதாக இல்லாவிட்டால் ஒருவருக்கு அதிகச் சீரழிவு ஏற்பட வாய்ப்பில்லை. அதாவது , சமுதாயம் இதனை ஈடுசெய்வதற்கு அல்லது சரி செய்வதற்கு தகுதியாயிருந்தால் அழிவு அதிகமாயிராது. சீர்குலைவுகள் சீரழிவுகளை உண்டாக்கும் திறன்படைத்தவை. சீர்குலைவுகள் நொந்து போகும் தன்மையுடைய மக்களைக் தொடர்பு கொள்ளும்போது மட்டு... |
வறுமை , மக்கள் தொகை வளர்ச்சி நொந்து போதலை உண்டாக்கும் ஒரு முக்கிய காரணி ஆகும். ஏதாவதொரு நொந்து போக வைக்கும் காரணியையும் , சீர்குலைவையும் ஒருவர் இணைத்து , ஒரு சீரழிவு உண்டாக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக , வறுமை + நிலச்சரிவு = வீடு அழிக்கப்பட்டு , மீண்டும் அவர்களால் எந்த வகையிலும் கட்ட இயலாத நிலையி... |
ஆனால் , அதிகமிருப்பவன் முன்னேற்றத்திற்கு செலவிடுகிறான். குறைவுள்ள ஏழை மக்கள் சீரழிவினால் செத்து மடிகின்றனர். நாடுகள் முன்னேற்றத்தை ஒதுக்கி போருக்காக அதிக பணம் செலவழித்தால் , அழிவுகள் நாட்டை தாக்கும் போது , இந்த நாடுகள் ஈடுகொடுக்க முடியாது. மாறாக , நாடுகள் சீரழிவை தடுக்கும் நடவடிக்கையில் முதலீடு செய்தால் , நெருக்கடி நில... |
வயப்படக்கூடியவர்களாக இருக்கின்றனர் என அடிக்கடி கூறப்படுகிறது. எளிதில் வயப்படுதல் என்பது வெளிப்படையான ஒரு காரியமாகும். நாம் எளிதில் வயப்படுதல் , நொந்து போதல் ( susceptibility , vulnerability ) இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை அறிய வேண்டும். நாம் எளிதில் பயப்படக்கூடியவர்களாக இருக்கலாம். ஆனால் நொந்து போகிறவர்களாக இருத்தல் கூடாத... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.