text stringlengths 11 513 |
|---|
ஆண்டில் இந்து ஆங்கில நாளிதழில் வாரம் ஒரு கதையாக 27 சிறுகதைகளை எழுதினார். பின்பு இக்கதைகள் 1912 இல் Kusika's Short Stories என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்தன. பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 1924 இல் , இக்கதைகளில் பதினாறை , மாதவையாவே தமிழில் மொழிபெயர்த்து , குசிகர் குட்டிக் கதைகள் என்ற பெயரில் இரு தொகுதிகளாக வெளியிட்ட... |
பரிகாரம் என்ற கதை வரதட்சணைக் கொடுமையையும் பேசின. மாதவையா , தாம் ஆசிரியராக இருந்து வெளியிட்ட பஞ்சாமிர்தம் இதழிலும் தமிழில் பல சிறுகதைகள் எழுதியுள்ளார். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் பல சிறுகதைகளைப் படைத்துள்ளார். நவதந்திரக் கதைகள் , வேணுமுதலி சரித்திரம் , மன்மத ராணி , பூலோக ரம்பை , ஆவணி அவிட்டம் , ஸ்வர்ண குமாரி , ஆறில்... |
குறிப்பிடுகின்றார். வ.வே.சு. ஐயர் 1912 ஆம் ஆண்டு , கம்ப நிலையம் என்ற பதிப்பகத்தின் மூலம் மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் என்ற ஐந்து கதைகள் அடங்கிய தொகுதியை வெளியிட்டார். மங்கையர்க்கரசியின் காதல் , காங்கேயன் , கமல் விஜயன் , அழேன் ழக்கே , குளத்தங்கரை அரசமரம் என்ற ஐந்து கதைகளில் குளத்தங்கரை கதையே தமிழின் முதல் சிறு... |
அரசமரம் என்ற 257 வரதட்சணைக் கொடுமை இக்கதையின் கருப்பொருளாகும். ருக்மணி என்ற பெண்ணுக்குத் திருமணம் ஆகிறது. வரதட்சணைப் பிரச்சினை காரணமாக , சாந்தி முகூர்த்தம் தடைபட்டு , கணவனுக்கு வேறு திருமணம் நிச்சயமாகியது. இதனால் ருக்மணி தற்கொலை செய்து கொள்கிறாள். தன் தவற்றை உணர்ந்த கணவன் துறவு பூணுகிறான். ஒரு மரம் இக்கதையைச் சொன்னதாக ... |
போன்றவர்கள் துரைக்கண்ணன் சமுதாயப் பிரச்சினைகளைப் பேசும் கதைகள் பல எழுதியுள்ளார். 1915 இல் தொடங்கி , சுமார் 60 ஆண்டுகள் வரை எழுத்துப் பணியில் இருந்தார் அவர். தி.ஜ.ர.வின் முதல் சிறுகதை சந்தனக் இவருடைய புகழ் ஊனமுற்ற ஒரு பெண் , எவரும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று உணர்ந்த பின் எடுக்கும் புரட்சிகரமான முடிவ... |
இவர் எழுதியுள்ளார். இவ்வாறு மாதவையா , பாரதியார் , வ.வே.சு. அய்யர் போன்றோர் தமிழில் சிறுகதை முன்னோடிகளாகப் போற்றப்படுகிறார்கள். 2.2.2 இரண்டாம் காலக் கட்டம் ( 1926-1945 ) நாரண மௌனி லா.ச.ரா மு.வரதராசனார் அகிலன் அண்ணா இக்காலக் கட்டம் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் சிறப்பான காலக் கட்டம் ந.பிச்சமூர்த்தி , பி.எஸ்.ராமையா , எனலாம்.... |
நவசக்தி , விமோசனம் , ஆனந்த விகடன் போன்ற இதழ்களிலும் , பின்பு கல்கி இதழிலும் எழுதியுள்ளார்.அவர் , அதிர்ஷ்ட சக்கரம் , கவர்னர் விஜயம் , காங்கிரஸ் ஸ்பெஷல் , கோர சம்பவம் , சாரதையின் தந்திரம் , டெலிவிஷன் , திருவழுந்தூர் சிவக்கொழுந்து என்று பல சிறுகதைகளை 258 எழுதியுள்ளார். கதர் இயக்கம் , தீண்டாமை அகற்றுதல் , உப்புச் சத்தியாகி... |
வகிக்கிறது. அவர் எழுதிய வரலாற்று நாவல்களைப் போல இச்சிறுகதைகள் இலக்கியத் தகுதியைப் பெறவில்லை என்றாலும் சிறுகதை வளர்ச்சியில் கல்கியின் பங்கு முக்கியமான ஒன்றாக இருந்திருக்கின்றது என்பதை மறுக்க இயலாது. கல்கி எழுதியவை , வெகுஜன இதழுக்கு ஏற்ப அமைய , அவருடைய காலக் கட்டத்தில் எழுதிய புதுமைப்பித்தன் கதைகள் வடிவம் , உத்தி , உள்ளட... |
என்ற மிகச்சிறந்த புதுமைப்பித்தன் பத்திரிகையுடன் தொடர்பு கொண்டு படைப்பு முயற்சியில் ஈடுபட்டார். மேல்நாட்டுச் சிறுகதை ஆசிரியர்களின் படைப்பாக்கத்தை நன்கு அறிந்த அவர் , அவற்றை உள்வாங்கிக் கொண்டு , தமது சொந்தப் படைப்பாளுமையைக் கொண்டு அற்புதமான சிறுகதைகளைப் படைத்துள்ளார். புதுமைப்பித்தன் கேலிக்கதைகள் , புராணக் கதைகள் , தத்து... |
சாபவிமோசனம் , அகல்யை அன்றிரவு போன்ற கதைகளையும் , தத்துவ நோக்கோடு கயிற்றரவு , மகாமசானம் , ஞானக் குகை போன்ற கந்தசாமிப் முதன்மையானவர் கதைகளையும் , வேடிக்கை வினோதக் கதையாகக் கடவுளும் பிள்ளையும் என்ற கதையையும் , நாட்டுப்புறக் கதைப் பாங்கோடு சங்குத்தேவனின் 6075 GLIGOND தர்மம் , வேதாளம் சொன்ன கதை போன்ற கதைகளையும் எழுதியுள்ளார... |
இலக்கியக் கருவூலத்திற்கு வளம் சேர்த்துள்ளார். ந.பிச்சமூர்த்தியின் கதைகளிலும் சிறுகதையின் வடிவமும் உத்தியும் சிறப்பாக அமைந்துள்ளன. மனித மன ஆழத்தை அவர் தம் கதைகளில் சிறப்பாக வடித்துள்ளார். பதினெட்டாம் பெருக்கு , தாய் , வானம்பாடி , மண்ணாசை , விழிப்பு , பஞ்சகல்யாணி போன்ற பல இலக்கியத் தரமான கதைகளைப் படைத்துள்ளார் அவர். கு.ப... |
ஆபாசமாகவோ உணர்ச்சியைத் தூண்டிவிடும் வகையிலோ இல்லாமல் , ஆக்கப் பூர்வமாக அணுகிப் பார்த்துள்ளார். திரை , சிறிது வெளிச்சம் , மூன்று உள்ளங்கள் , ஆற்றாமை , விடியுமா , நூருன்னிசா , தாயாரின் திருப்தி போன்ற இவருடைய கதைகளும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கனவாகும். மௌனி , இக்காலக் கட்டத்தைச் சேர்ந்த மற்றொரு சிறந்த படைப்பாளி சிறுகதை வ... |
இவருடைய தமிழ்நடையும் அசாதாரணமானது. ஏன் ? இவருடைய முதல் கதையாகும். இவருடைய சிறுகதைகள் அனைத்தும் அழியாச் சுடர் , மௌனியின் கதைகள் என்ற பெயர்களில் இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 5 பதித்துள்ளார். இந்தக் காலக்கட்டத்தில் எழுதிய மற்றொரு எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம். இவர் கதை சொல்லும் நடையும் வித்தியாசமானதாகும். இவர் , மந்திர உச்... |
ஆடு , ஜ்வாலை என்பன இவருடைய சிறுகதைகளில் சிலவாகும். இக்காலக் கட்டத்தில் எழுதிய குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள் பி.எஸ். சுப்பிரமணியன் , டி.எஸ். பிற ராமையா , கி.ரா. என்ற கி.ராமச்சந்திரன் , சொக்கலிங்கம் , சங்கு பழையே ப்பிரமணியன் போன்றவர்கள் சிறுகதை சிதம்பர ஆவர். மூன்றாம் காலக் கட்டம் ( 1946-1970 ) தமிழ்ச் சிறுகதை வரலாற்றில... |
ரகுநாதன் , அகிலன் , நா.பா என்ற நா.பார்த்தசாரதி போன்றவர்களும் , திராவிட இயக்க எழுத்தாளர்களான அண்ணா , மு.கருணாநிதி ஆகியவர்களும் , மு.வ. என்னும் மு.வரதராசனார் , ஜெயகாந்தன் ஆகியவர்களும் சிறுகதைகள் படைத்துள்ளனர். இவர்களில் சிலர் பாலகிருஷ்ணன் , 260 சிறுகதை இலக்கியத்திலும் , சிலர் நாவல் இலக்கியத்திலும் , சிலர் இவ்விரண்டு இலக்... |
பொருளாக்கிக் கொண்டவர் ஆவார். கதைமாந்தர் படைப்பிலும் , மொழி ஆளுகையிலும் வெற்றி பெற்ற இவர் மறதிக்கு , செய்தி , முள்முடி , சிலிர்ப்பு போன்ற பல கதைகளை எழுதியுள்ளார். குறிப்பிடத்தக்கவர்கள். இக்காலக் கட்டத்தில் சிறுகதை , நாவல் என்ற இரண்டு படைப்பிலும் சிறந்து விளங்கிய எழுத்தாளர்களுள் அகிலனும் , நா.பா.வும் பதினேழு சிறுகதைத் தொ... |
வீரம் , காதல் போன்ற இலக்கியப் பொருண்மைகளும் இவருடைய கதைகளில் காணக்கிடைக்கின்றன. இவருடைய எரிமலை என்ற இக்கதை சிறுகதைத் தொகுதி தமிழ்நாடு அரசின் பரிசு பெற்றது. பின்பு அக்கதை , எங்கே போகிறோம் என்ற நாவலாக அவரால் விரித்து எழுதப்பட்டது. சகோதரர் அன்றோ , கங்காஸ்நானம் , சிசுவின் குரல் , ஏழைப் பிள்ளையார் , பெரிய மீன் , ஆண் - பெண் ... |
இலக்கியத்தை எடுத்துச் சென்றவர் நா.பா. தெய்வத்தாலாகாதெனினும் , ஆயுதம் , தகுதியும் தனிமனிதனும் , பிரதி பிம்பம் , ஒரு கவியின் உள்உலகங்கள் , மறுபடியும் ஒரு மஹிஷாசுர வதம் , அமெரிக்காவிலிருந்து பேரன் களவும் கற்று , ஒரு சர்வதேசக் கதைகளை எழுதியுள்ளார். டியும் ஒரு செல்வாக்குடன் கருத்தரங்கு போன்ற பல சிறுகதைகளை திராவிட இயக்கச் ஜெ... |
உள்ளடக்கம் , உத்தி , நடை ஆகியவற்றை முழுமையாகக் கையாண்டு படைத்தவர்களுள் அண்ணா முதன்மையானவர். சாதி சமய மறுப்பு , வறுமை. கலப்பு மணம் , பலதார மணம் , விதவை மணம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டன இவருடைய கதைகள். தஞ்சை வீழ்ச்சி , சொர்க்கத்தில் நரகம் , திருமலை கண்ட திவ்விய ஜோதி , புலி நகம் , பிடி சாம்பல் போன்ற பல கதைகளில் மத நம்... |
எழுதியவர் மு.கருணாநிதி. குப்பைத்தொட்டி , கண்டதும் காதல் ஒழிக , நளாயினி , பிரேத விசாரணை , தொத்துக் கிளி , வாழ முடியாதவர்கள் போன்ற இவருடைய சிறுதைகள் குறிப்பிடத்தக்கன. இக்காலக் கட்டத்தில் எழுதிய ஜெயகாந்தன் சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். முற்போக்கு எழுத்தாளராக அறியப்பட்ட அவர் தொடக்கத்தில் சோதனை ரீதியா... |
இவருடைய எழுத்துகள் பலரை எழுதத் தூண்டின. இவருடைய பாணியில் இன்று பலர் எழுதிக் கொண்டிருக்கின்றனர். நான்காம் காலக் கட்டம் ( 1976 முதல் இன்று வரை ) எழுபதுகளில் சா.கந்தசாமி , இந்திரா பார்த்தசாரதி , ந.முத்துசாமி , அசோகமித்திரன் , நீல பத்மநாபன் , வண்ணநிலவன் , வண்ணதாசன் , சுஜாதா , நவபாரதி , சுப்பிரமணிய ராஜு , பாலகுமாரன் போன்றவர... |
நவீனத் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் , கருத்திலும் சொல்லும் நேர்த்தியிலும் மொழியைக் கையாளும் முறையிலும் மாறுதல்களைக் கண்டுள்ளது. இச்சிறுகதைகள் தமிழ் மக்களின் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் பிரதிபலித்துக் காட்டுகின்றன. - சிறுகதைப் படைப்பே விமர்சன ரீதியாக எழுதப்பட்டது. அதனால் தேவையற்ற சொல் அலங்காரம் , தேவையில்லாத வர்ணனைகள் ... |
இதழ்கள் என்ற புதுவகை இதழ்கள் தோற்றம் பெற்றன. அவற்றில் உலகத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் ஒருங்கே இடம் பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்த காஞ்சனா தாமோதரன் , கீதா பென்னட் , இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன் போன்றவர்கள் தொடர்ந்து இவ்விதழ்க... |
செல்லும் என்பதில் ஐயமில்லை. சிறுகதை வளர்ச்சியில் பெண் எழுத்தாளர்களின் பங்கு தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் பெண் எழுத்தாளர்களின் பங்கு தொடக்கம் முதல் இருந்து வந்துள்ளது. தொடக்கக் காலம் ( 1975 வரை ) கு.ப.சேது அம்மாள் ( கு.ப.ரா.வின் சகோதரி ) , கமலா விருத்தாசலம் ( புதுமைப்பித்தனின் மனைவி ) , விசாலாட்சி அம்மாள் , வை.மு.கோதை ந... |
ஆங்கிலச் சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். குமுதினி , குகப்பிரியை , வசுமதி ராமசாமி , எம்.எஸ்.கமலா போன்ற எழுத்தாளர்கள் இக்காலக் கட்டத்தில் காந்தியம் , தேசியம் , விதவை மறுமணம் , பாலிய மணக் கொடுமைகள் , தேவதாசிக் கொடுமைகள் இவற்றைக் கருப் பொருளாகக் கொண்டு சிறுகதைகள் படைத்துள்ளனர். இதற்கு அடுத்த காலக் கட்டத்தின் தொ... |
பெரும்பாலும் பெண் எழுத்தாளர்களே படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ராஜம் கிருஷ்ணனின் ஊசியும் உணர்வும் , நூறு ரூபாய் நோட்டு , ஸ்ரீமதி விந்தியா எழுதிய அன்பு உள்ளம் , சூடாமணி சிறுகதைகளாகும். மனம் , 1947 இல் கல்கி இதழ் நடத்திய அறுத்தைப் பபபோ போட்டியில் அநுத்தமாவின் முதல் கதையான அங்கயற்கண்ணி இரண்டாம் பரிசினைப் பெற்... |
வந்துள்ளனர். 1960 களில் தொடங்கிச் சிவசங்கரி , சிறுகதைகள் ழந்தை பெற்ற வாஸந்தி , இந்துமதி , அனுராதா ரமணன் போன்றவர்கள் அதிகம் எழுதியுள்ளனர். இவர்களது சிறுகதைகளில் பெரும்பாலும் காதல் , காதல் மணம் , தனிக்குடித்தனம் , குழந்தையின்மை போன்றவை கருக்களாக அமைந்திருந்தன. எழுபத்தைந்துக்குப் பின் சிவசங்கரி , வாஸந்தி எழுத்துகளில் மாற்... |
தொடக்கத்திலிருந்தே சமூக உணர்வோடு சிறுகதைகள் படைத்து வருகிறார். தற்காலம் ( 1976 முதல் இன்று வரை ) இக்காலக் கட்டத்தில் பெண்களின் எழுத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. பெண் கல்வி , பொருளாதாரச் சுயசார்பு , வேலைவாய்ப்பு , வெளி உலகத் தொடர்பு இவை காரணமாகப் பெண்களின் கதைக்களம் இல்லம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து விரிந... |
ஆட்சிப் பணியில் உயர் பதவி வகிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் , காவல்துறை உயர் அதிகாரிகள் , உலகப் பயணம் மேற்கொண்டவர்கள் , சமூகச் சேவையாளர்கள் , பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டவர்கள் , பன்மொழிப் புலமை பெற்றவர்கள் என்று பலரும் கதைகள் படைத்து வருகிறார்கள். இவர்கள் , இன்றைய நடப்பியல் பிரச்சினைகளான பெண் கருவழிப்பு , பெண் சிசுக்கொலை ... |
விரிந்து பரந்துள்ளன. இக்காலக் கட்டத்தில் அம்பை , காவேரி , திலகவதி , சிவகாமி , பாமா , அனுராதா , உஷா சுப்பிரமணியன் , தமயந்தி , உமாமகேஸ்வரி , தமிழ்செல்வி போன்ற எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர். இவர்களில் , அம்பை மொழி நடையிலும் , சிறுகதையின் பெண் பொருண்மையிலும் மாறுபட்டவற்றைக் உருவத்திலும் , உ கையாண்டு சிறுகதைகளைப் ( சிறந்த... |
லட்சுமி கண்ணன் ஓசைகள் , வெண்மை போர்த்தியது போன்ற தொகுதிகளில் நவீனப் பெண்களின் பிரச்சினைகளைக் கையாண்டுள்ளார். சிவகாமி , பாமா இருவரும் தலித் பெண்ணியக் கதைகளைப் படைத்துள்ளனர். சிறுகதை வளர்ச்சியில் இதழ்களின் பங்கு சிறுகதையின் வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்டவை இதழ்கள். இதழ்கள் வாயிலாக வெளியிடப்பட்ட சிறுகதைகளும் புகழ் அடைந்தன... |
இதழ்கள் கலைமகள் , ஆனந்த விகடன் என்ற இதழ்கள் முப்பதுகளின் தொடக்கத்தில் தோற்றம் பெற்று மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தன. ஆனந்த விகடனை எஸ்.எஸ்.வாசன் 1928 இல் தொடங்கினார். சராசரி வாசகர்கள் மத்தியில் பரவலாக செல்வாக்குப் பெற்றிருந்த எழுத்தாளர் கல்கியின் எழுத்துகளால் இவ்விதழ் தமிழ் மக்களால் அறியப்பட்டுப் போற்றப்பட்டது. நல... |
மனங்களில் இடம் பெற்றிருந்தது. ஜெயகாந்தன் சரஸ்வதி போன்ற சிறு பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தாலும் , ஆனந்த விகடனில் எழுதத் தொடங்கிய போதுதான் , அவர் வெகுஜனக் கூட்டத்தால் அறியப்பட்டார். ஆனந்த விகடன் , எழுத்தாளர்களின் சோதனை முயற்சிகளுக்கும் அவ்வப்போது இடம் கொடுத்து வந்துள்ளது. 1931 முதல் 1941 வரை , பத்தாண்டுக் காலம் விகட... |
) வழங்கும் கலைமகள் இதழ் 1932 ஆம் ஆண்டு மாத இதழாகத் தோற்றம் பெற்றது. வெறும் பொழுதுபோக்குப் பத்திரிகையாக இல்லாமல் , உயர்ந்த இலக்கியத்திற்கும் , சிறப்பான சிறுகதைகளுக்கும் இடமளித்துச் செல்வாக்குப் பெற்றது. நாற்பதுகளில் மணிக்கொடி எழுத்தாளர்களும் இவ்விதழில் எழுதியுள்ளனர். பங்கிம் சந்திரர் , சரத் சந்திரர் , தாகூர் , பிரேம் சந... |
எழுத்தாளர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்தது. மணிக்கொடி இதழ் தரம் வாய்ந்தவர்களாக மணிக்கொடி இதழ் 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் கு.சீனிவாசன் , தி.ச.சொக்கலிங்கம் , வ.ரா ( வ.ராமசாமி ) இவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டது. வ.ரா ( வ.ராமசாமி ) இதன் ஆசிரியராவார். லண்டனிலிருந்து வெளியான சண்டே 265 அப்சர்வர... |
ஆகியோர் கதை எழுதியுள்ளனர். இவ்விதழில் சிறுகதை எழுதும் முறை , சிறுகதை பற்றிய கொள்கைகள் , மேனாட்டுச் சிறுகதை முயற்சிகள் இவற்றைப் பற்றிக் கட்டுரைகள் வெளியாகின. இவ்விதழ் தொடங்கிய ஒன்றரை ஆண்டுகளில் நின்று , பின்பு ராமையாவை ஆசிரியராகக் கொண்டு மீண்டும் வெளிவந்தது. சிறுகதைக்கான இவ்விதழ் , தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தை வளர்த்தெடு... |
உலகின் தரமான சிறுகதைகளைத் தமிழ் வாசகர்கள் அறிய வேண்டும் என்பதற்காக மொழிபெயர்ப்பு மற்றும் தழுவல் கதைகளை மணிக்கொடி இதழ் வெளியிட்டது. ஆங்கிலம் , பிரெஞ்சு , ஜெர்மன் , ரஷ்ய மொழி , ஜப்பான் மொழி ஆகியவைகளிலிருந்தும் , இந்திய மொழிகளான இந்தி , வங்காளி , மராத்தி மொழிகளிலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின , மணிக்கொடியில் புத்... |
கதைகளை வெளியிட்டுச் ' சிறுகதை இலக்கியத்திற்கு ஒரு சிவிகையாக ' மணிக்கொடி இதழ் தமிழ்ச் சிறுகதை இதனால் இக்காலக் சிறந்தது. கட்டத்தை மணிக்கொடிக் காலம் என்று போற்றுகின்றனர். போது அவர்களை மணிக்கொடிக் குழுவினர் என்று கட்டுகின்றார். ரகுநாதன் மணிக்கொடிப் பரம்பரையினர் என்றும் , சிட்டி , சிவபாதசுந்தரம் இருவரும் அவர்களை மணிக்கொடிக்... |
தொடக்கத்தில் விவேக சிந்தாமணி , விவேக போதினி போன்ற சிறுகதைகளை வெளியிட்டுச் சிறுகதை வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டன. அடுத்த நிலையில் மாதவையா ஆசிரியராகப் பணியாற்றிய தமிழ்நேசன் , பஞ்சாமிர்தம் 266 இதழ்கள் நல்ல சிறுகதைகளை வெளியிட்டு வந்துள்ளன. பாரதியார் காலத்தில் சக்கரவர்த்தினி இதழ் சிறுகதை ஆக்கத்திற்குத் துணை நின்றுள்ளது. சுதே... |
விகடன் , ஊழியன் , சுதந்திரச் சங்கு , காந்தி போன்ற இதழ்களில் சிறுகதைகளுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டு வந்தது. சூறாவளி ( 1939 ) , பாரத தேவி ( 1939 ) , கலாமோகினி ( 1942 ) , கிராம ஊழியன் ( 1943-1947 ) , சந்திரோதயம் ( 1954-47 ) , முல்லை ( 1946 ) , தேனீ ( 1948 ) என்ற இதழ்கள் வெளிவந்தன. அவ்வப்போது தோன்றி மறைந்த இவ்விதழ்களும்... |
கொல்லிப்பாவை , யாத்ரா , பிரக்ஞை , சுவடு , அஃ , வாசகன் , கண்ணதாசன் போன்ற இதழ்கள் அவ்வப்போது தோன்றின. அவற்றில் சில மறைந்தன. தீபம் , கணையாழி , கண்ணதாசன் இதழ்கள் சிறுகதை வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பின்னர் எழுபதுகளிலும் , எண்பதுகளிலும் குங்குமம் , குமுதம் , கல்கி , தாய் , சாவி , இதயம் பேசுகிறது போன்ற வார இதழ்... |
இதழ்களான மங்கை , மங்கையர் மலர் , அவள் சிநேகிதி போன்ற இதழ்களும் சிறுகதை வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன. மொத்தத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் இதழ்கள் தலையாய இடத்தைப் பெற்றுள்ளன எனலாம். வாரப் பதிப்புகளும் சிறுகதைகளை இதழ்களும் இவை தவிர விகடன் , பெண்மணி , தொகுப்புரை பார்வை , சிறுகதை மகளிர் தமிழ்ச் சிறுகதைகளின் மூலவர்களா... |
சுட்டப்படும் அளவிற்குத் தரமான நல்ல கதைகள் படைத்துள்ளனர். சிறுகதை வளர்ச்சியில் இதழ்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். 267 தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் பெண் எழுத்தாளர்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். தமிழ்நாட்டிற்கு வெளியேயும் தமிழ்ச் சிறுகதை குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. இணைய இதழ்கள் மூலம் ... |
தமிழில் முதல் சிறுகதைப் போட்டியை எந்தப் பத்திரிகை எந்த ஆண்டு சிறுகதை இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் அமைப்புகள் இரண்டின் SE புதுமை. குறிப்பிடுக. நடத்தியது ? பெயரினைக் கூறுக. புதுமைப்பித்தனின் படைப்புலக வாழ்வு புதுமைப்பித்தனின் சிறுகதைகளைப் பற்றி அறியும் முன்னர் அவரது படைப்புச் சார்பான வாழ்வை அறிந்த கொள்வது மிக இன்றியமையாத... |
அப்படியே பதிவு செய்துள்ளார். அவை வெளிப்படுகின்றன. சமுதாய 3.1.1 பிறப்பும் வளர்ப்பும் மையே வெசன 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் நாள் சொக்கலிங்கம் பிள்ளைக்கும் பர்வதம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்த விமரிசனமாக க பிறந்தார். திருநெல்வேலி , பெற்றோர் அவருக்கு விருத்தாசலம். எட்டு வயதிலேயே விருத்தாசலம் ஊர் பெயர் இழந்த மாற்றாந்தாயி... |
இருபத்தைந்தாவது வயதில் பி.ஏ. பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும் பொழுது இட்ட தாயை 268 ஆங்கில நாவல்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். நாள்தோறும் புதிது புதிதான துப்பறியும் நாவல்களை விரும்பிப் படித்தார். இரவு நெடுநேரம் வரை கண்விழித்துப் படிக்கும் பழக்கம் உள்ள அவர் , தாமும் கதை எழுத வேண்டும் என்ற உந்துதலைப் ... |
திருமணத்திற்குப் பின்னரும் புதுமைப்பித்தன் பொறுப்பில்லாமல் இருந்து வந்தார். ஆனால் நூல்களைத் தேடிப் படிப்பதில் இருந்த ஆர்வம் அவருக்குச் சற்றும் குறையவில்லை. வேலை இல்லாததாலும் அதற்கான முயற்சி இல்லாததாலும் தம் தந்தையின் கோபத்திற்கும் மாற்றாந்தாயின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆட்பட்டார். அதனால் மனைவியைப் பிறந்தகத்துக்கு அனுப... |
புகுந்தார். 1946 இல் அவ்வையார் படத்திற்கு வசனம் எழுதினார். பின்பு வேறு சில படங்களுக்கு வசனம் எழுதியவர் , திரைப்படத் தயாரிப்புத் துறையில் எடுத்து நட்டமடைந்தார். இறங்கினார். வசந்தவல்லி என்ற படம் 1947 இல் ராஜமுக்தி என்ற வசனம் எழுதுவதற்காகப் சென்ற போது காசநோயால் திரைப்படத்திற்கு படத்தயாரிப்புக் குழுவினருடன் புனா நகருக்குச்... |
இவற்றின் பிடியில் சிக்கித் தவித்த அவர் நம்பிக்கை வறட்சி , நிராசை , விரக்தி என்று மனத்தாலும் பாதிக்கப்பட்டிருந்தார். எழுத்து அவரை வாழவைக்கவில்லை என்பதே உண்மை. எழுத்துலக நுழைவு சென்னையில் டி.எஸ்.சொக்கலிங்கமும் , வ. ராமசாமி என்னும் வ.ரா.வும் மணிக்கொடி என்ற இதழை நடத்திக் கொண்டிருந்தனர். அப்பத்திரிகைக்குப் புதுமைப்பித்தன் க... |
பணியை விட்டு விட்டு மீண்டும் சென்னை வந்தார். சமயத்தில் வார இதழாக அந்தச் வந்து கொண்டிருந்த மணிக்கொடி பொருளாதார நெருக்கடியால் , மாதமிருமுறை வரும் கதை இதழாக வெளிவரத் தொடங்கியது. பி.எஸ்.ராமையா மணிக்கொடியின் ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றிருந்தார். அப்பொழுது மணிக்கொடி இதழின் வளர்ச்சிக்குப் புதுமைப்பித்தனும் துணை நின்றார். இதழ் ம... |
எழுதித் தம் எழுத்துத் தாகத்தைத் தீர்த்துக் கொண்டார். ஏழரை ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு அங்கிருந்து விலகி , 1944 இல் சொக்கலிங்கம் ஆசிரியராக இருந்த தினசரி நாளிதழின் ஆசிரியர் குழுவில் இணைந்தார். பல வகைப் படைப்புகள் வகைப் படைப்புகளையும் புதுமைப்பித்தன் சிறுகதை எழுத்தாளர் மட்டும் அல்லர். புதினங்கள் , அரசியல் கட்டுரைகள் , விமரி... |
எழுதியுள்ளார். அன்னையிட்ட தீ அவரது முற்றுப் பெறாத நாவல் ஆகும். புதுமைப்பித்தன் உலகச் சிறுகதைகளை மொழி பெயர்த்துள்ளார். அவை உலகத்துச் சிறுகதைகள் என்ற பெயரில் வெளிவந்தன. இத்தாலியச் சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் வாழ்க்கை வரலாற்றை பாசிஸ்ட் ஜடாமுனி என்ற பெயரில் ஹிட்லர் வாழ்க்கை ஜெர்மானியச் சர்வாதிகாரி அடால்ப் வெளியிட்டார... |
எழுதியுள்ளார். மேலும் அவர் தம் மனைவிக்கு எழுதிய கடிதங்களும் அண்மையில் தொகுத்து என்று பல வெளியிடப்பட்டுள்ளன. இப்படி , புதுமைப்பித்தன் பல்வேறு இலக்கிய வகைகளில் பதித்துள்ளார் என்றாலும் , சிறுகதைப் படைப்புகள் தாம் பாராட்டுக்குரியவராக்கின. தடம் அவரைப் 270 புதுமைப்பித்தன் சொவி என்னும் புனைபெயரில் அரசியல் கட்டுரைகளையும் , புப... |
, சுக்ராச்சாரி என்னும் பல பெயர்களில் எழுதியுள்ளார் என்றாலும் புதுமைப்பித்தன் என்ற பெயர்தான் நிலைத்தது. ஆற்றல்கள் புதுமைப்பித்தன் உலக இலக்கியத் தேர்ச்சி பெற்றவர். அப்டன் சிங்களேர் , கால்ஸ் வொர்த்தி , இப்சன் , ப்ராங்க் ஹாரிஸ் , பெர்னார்ட்ஷா போன்ற மேனாட்டு ஆசிரியர்களை நன்கு கற்றிருந்தார். ஆன்டன் செக்காவ் , எட்கர் ஆலன்போ ,... |
இலக்கியங்களிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். பழமை புதுமை என்ற இரண்டையும் கையாண்டு எழுதும் முறையைப் புதுமைப்பித்தன் தம் பாணியாக வைத்துக் கொண்டிருந்தார். கதைக்கரு , நடை இரண்டிலும் தனித்தன்மையை நிலைநாட்டியுள்ளார். கூரிய சமூகப் பார்வை , சிந்தனை ஆழம் , தீவிரத் தன்மை வெளிப்பாடு , எதிர்க்கத் தயங்காத போர்க்குணம் , அடங்காமை.... |
புதுமைப்பித்தன் சிறுகதைகள் 1933 புதுமைப்பித்தன் 1933 -1946 வரையிலான 12 ஆண்டுகளே எழுத்துப் பணியில் இருந்தார். வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களைப் பற்றி மட்டுமே இலக்கியம் எழுத வேண்டும் என்று அதுவரை இருந்து வந்த நிலைமையை மாற்றித் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களையும் தம் கதைகளில் படைத்துக் காட்டியுள்ளார். மேலும் அவர் மக்... |
ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்வுக்கு சௌகரியம் பண்ணி வைத்திருக்கும் இன்ஷுரன்ஸ் ஏற்பாடும் அல்ல. எனக்குப் பிடிக்கிறவர்களையும் , பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன்....... " என்றும் , " இந்தக் கதைகள் யாவும் கலை ஒல்லும் 271 உத்தாரணத்திற்கு என்று கங்கணம் கட்டிக் கொண்டு செய்த சேவை அல்ல. இவை யா... |
, காண விரும்பாதது ஆகிய சம்பவக் கோவைகள்தாம் இவை. தவிரவும் பழைய கதைகளை எடுத்துக்கொண்டு அதை இஷ்டமான கோணங்களில் எல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு " என்றும் கூறியுள்ளார். புதுமைப்பித்தன் 98 கதைகளை எழுதியுள்ளார். அவர் மணிக்கொடியில் எழுதிய 29 கதைகளைப் புதுமைப்பித்தன் கதைகள் என்ற பெயரில் நவயுகப் பிரசுராலயம் வெளியிட... |
வெளியிட்டன. ஐந்திணைப் பதிப்பகம் புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகளையும் வெளியிட்டது. அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் புதுமைப்பித்தனின் அனைத்துச் சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளது. கதைக் கரு E புதுமைப்பித்தன் காதல் , சாவு , வறுமை , காமம் , பசி , பயம் , சிறுமை , சீரழிவு , சோகம் , குழப்பம் , கொந்தளிப்பு , மந்திரம் , புராணம் ... |
கதைகள் சமுதாயச் சிக்கலை மையமிட்ட கதைகள் காதலைக் கருவாகக் கொண்டவை நகர வாழ்க்கையின் போலித் தன்மைகளை வெளிக்காட்டும் கதைகள் கேலி , கிண்டல் இவற்றைக் கருவாகக் கொண்டவை. பேய் , பிசாசு , வேதாளம் இவற்றை மையமிட்ட கதைகள் வறுமையைக் காட்டியுள்ளார் கரு. முத்தையா. புதுமைப்பித்தன் கதைகளில் , என்ற கருத்தாக்கத்தைப் பேசும் பொன்னகரமும் , இ... |
சாபவிமோசனமும் பலரால் அதிகம் விமரிசிக்கப்பட்டவையாகும். பொன்னகரத்தில் வாழ்பவர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள். அது வேறு உலகம் ஐயா , அதன் தர்மமும் வேறு ' என்று அந்நகரை விவரிக்கும் புதுமைப்பித்தன் , சொந்தமாகக் குதிரை வண்டி வைத்திருக்கும் முருகேசன் , அவன் மனைவி அம்மாளு , முருகேசனின் தாயார் , தம்பி , குதிரை ஆக ஐ... |
கேட்கிறான். மில் கூலியான அம்மாளுவுக்குக் கூலிபோட இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன. வீட்டில் காசில்லை. தண்ணீர் எடுக்கச் செல்கிறாள் அம்மாளு , சந்திற்குப் பக்கத்தில் ஒருவன் அம்மாளுவின் மேல் ரொம்ப நாளாகக் ' கண் ' வைத்திருப்பவன் நிற்கிறான். அவனோடு இருளில் மறைகிறாள். “ அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்து விட்டாள். ஆம் , பு... |
பொன்னகரத்தில் கற்பு படும் பாட்டை எரிமலையாகக் கொட்டுகிறார். ஒருபக்கம் , கற்பு , கற்பு என்று கூக்குரலிடும் பணக்காரச் சமுதாயம் , மறுபக்கம் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி நாள்தோறும் வாழ்வுக்குப் போராடும் சமூகம். பொருளாதாரம் என்ற கருவிதான் ' கற்பை ' நிர்ணயிப்பது. சுகமாக வாழ்பவர்களுக்குக் கற்பு ஒரு பெரிய விஷயம். வறுமையின் ப... |
உணர்த்தியிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஜகா இன்னொரு விதமாகவும் இக்கதையை விமரிசிக்கலாம். கற்பு என்பது பதிவிரதா தர்மம். இக்கதையில் , தன் பதிக்காகத் ( கணவருக்காக ) தான் அம்மாளு உடலை விற்கிறாள். எனவே இதைக் கற்பு என்று கொண்டாடப் போகிறீர்களா ? கற்பு போயிற்று என்று தூற்றப் போகிறீர்களா ? என்று சமூகத்தை நோக்கி வினவியுள்ளார... |
சிந்தனைகளைத் தூண்டியுள்ள கதைதான் பொன்னகரம். 273 சாபவிமோசனம் கதையில் , அகலிகையின் புராண வரலாற்றை எடுத்துக் செய்துள்ளார் சமுதாய விமரிசனத்தைச் கொண்டு புதுமைப்பித்தன். அகலிகை இந்திரனால் உடல் மாசுபட்டாள் ; அதற்காகக் கணவன் கௌதமனின் சாபம் பெற்று மனத்தால் பாதிக்கப்பட்டாள் ; இராமனின் பாத தூசிபட்டுச் சாப விடைக்குப் பின் , அவன் ஒ... |
இராமனின் நிலைப்பாடு அவளுக்குப் புரிகிறது. தானே தன்னை மீண்டும் கற்சிலையாக்கிக் கொள்கிறாள். அதாவது , சாபவிமோசனம் பெற்றும் பாவ விமோசனம் பெறாத உலகில் அவள் வாழ விரும்பவில்லை என்பதைக் காட்டுவதுடன் கதை முடிகிறது. அகலிகைக்கு ஒரு நீதி , அவனுக்கு ஒரு நீதியா ? ஏமாற்றா ? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா ? நீதி அவ அகலிகை மீண்டும... |
வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றம் , வெறுப்பு , துன்பம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ; உலக வாழ்வின் மீது நம்பிக்கை இழந்தவர்கள் ; நண்பர்களை நம்பி மோசம் போனவர்கள் ; காதலால் தோல்வியடைந்தவர்கள் ; வாயில்லாப் பூச்சிகள் ; எதிர்த்துத் தோல்வியடைந்தவர்கள் ; எதிர்க்கத் தெம்பில்லாதவர்கள் ; சமயப் போர்வையில் உலா வரும் சாத்தான்கள் ; மனத்த... |
கோபால ஐயங்கார் மனைவி என்ற கதையில் , கோபால ஐயங்கார் டெப்டி கலெக்டர் ; பிராமணர் ; அவர் மனைவி மீனாட்சி வீட்டுப் பணிப்பெண் ; படிப்பறிவு இல்லாதவள் ; இடையர் குலப் பெண். அவளைப் புதுமைப்பித்தன் கீழ்க்கண்டவாறு வருணிக்கிறார். “ மீனாட்சி பணிப்பெண். அதிலும் பயந்த பெண். மருண்ட பார்வை. கணவன் என்ற ஸ்தானத்தில் அவரை வைக்கவில்லை. தனது த... |
அவரிடத்தில் தன்னை மறந்த பாசம். லயம் பிறந்ததே கிடையாது ”. இவ்வாறு மீனாட்சியைப் படைத்துக் காட்டிய புதுமைப்பித்தன் கோபால ஐயங்காரை , “ கோபால ஐயங்கார் ஒரு பொம்மைக்குக் காதல் உயிர் எழுப்பப் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார். அதில் தோல்வி இயல்பாகையால் மது என்ற மோகனாங்கியிடம் காதல் அதிகமாக வளர ஆரம்பித்தது " என்று காட்... |
அவர்களுக்கு இடையில் இருந்த சாதிப் பிரச்சினை அகல்கின்றது. மது போதையில் , ' ஏ , பாப்பான் ' என்று கொஞ்சுவாள் மீனாட்சி. “ என்னடி எடச்சிறுக்கி ' என்று காதல் உரை பகர்வார் அவர். இறுதியில் , மீனாட்சி பிராமணத்தி ஆவது போய்க் கோபால ஐயங்கார் இடையர் ஆனார் என்று முடித்துள்ளார் புதுமைப்பித்தன். இக்கதையில் இனம் , சாதி , பழக்க வழக்கங்க... |
புதுமைப்பித்தனின் பிற புனைபெயர்கள் யாவை ? புதுமைப்பித்தன் எழுதிய மொத்தச் சிறுகதைகள் யாவை ? புதுமைப்பித்தன் கதைகளில் அதிக விமர்சனத்திற்கு உய்மையே இரண்டினைக் கூறுக. புதுமைப்பித்தனின் புதுமைப்பித்தனின் சிறுகதைப் படைப்புத் திறனில் அவருடைய எழுத்து நடை முக்கியப் பங்கு வகிக்கிறது. கேலியும் கிண்டலும் கலந்த நகைச்சுவை நடை அது. அ... |
தொடர்ந்து வருகிறது. முழுமை பெறாத வாக்கிய அமைப்பு அவருடைய ஆவேசமான மனநிலையை எடுத்துக் காட்டுகின்றது. தன் நடையைப் பற்றிப் புதுமைப்பித்தன் , “ கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாகக் கொண்டு , தாவித் தாவிச் செல்லும் நடை ஒன்றை 275 நான் அமைத்தேன். அது நானாக வகுத்துக் கொண்ட ஒரு பாதை. அது தமி... |
வெளிப்படுகின்றன. அதாவது , புதுமைப்பித்தனின் சமூக விமரிசனங்கள் எள்ளல் , பகடி , அங்கதம் , நக்கல் என்ற வடிவங்களில் வெளிப்படுகின்றன. “ பசி ஐயா பசி ! பத்தும் பசி வந்திடப் பறந்துபோம் என்று வெகு ஒய்யாரமாக உடம்பில் பிடிக்காமல் பாடுகிறீரே ! அங்கு நீர் ஒரு நாள் இருந்தால் , உமக்கு அடி வயிற்றிலிருந்து வரும் அதன் அர்த்தம் தெரியும் ... |
நாசுக்காகக் கண்ணை மூட வேண்டாம். நீங்கள் போட்டிருக்கிறீர்களே பாப்ளின் ஷர்ட்டு , உங்கள் ஷெல் ஃப்ரேம் கண்ணாடி எல்லாம் அவர்கள் வயிற்றில் இருக்க வேண்டியதைத் திருடியதுதான் ". சொல்லாட்சி ஆராய்ந்து , தேர்ந்த சொற்களைப் புதுமைப்பித்தன் பயன்படுத்தியுள்ளார். சொற்களைப் பயன்படுத்துகின்ற விதத்தில் , அவரது அறிவும் ஆற்றலும் , மொழி ஆளும... |
; ஒரு பிராமணப் பெண். பெயருக்குத் தகுந்தது போல் இருக்க வேண்டும் என்று நினைத்தோ என்னவோ பதினேழு வயதிற்குள்ளேயே சமூகம் மனமுவந்து அளித்தது , அவள் கணவனுக்குக் காலனுடன் தோழமை ஏற்பட்டு விட்டதால். அதற்குச் சமூகம் என்ன செய்ய முடியும் ? அவளுக்கு வெள்ளைக் கலையை மனமு “ ஸரஸு ஓர் உலாவும் கவிதை. இயற்கையின் பரிபூரணக் கிருபையில் மலரும் ... |
ஸரஸுவுக்கும் ஆடையைச் கொடுத்துவிட்டதாகச் சொல்வதில் சாடலும் இருக்கிறது ; எள்ளலும் இருக்கிறது. 276 மொழி ஆளுமை புதுமைப்பித்தன் எடுத்தாளும் சொற்கள் நறுக்கென்று குத்துவது போல் இருக்கும். சாட்டையடி போல் வலிக்கும். அவரது நடை செறிவான நடை. தேவையற்ற சொல் ஒன்று கூட அதில் இடம் பெறாது. சொற்களைப் பார்த்துப் பார்த்துப் பொறுக்கிக் கையா... |
முகத்தில் விழுந்தது பொற்பிரம்பின் அடி. அவனது மார்பில் விழுந்தது. நெஞ்சில் விழுந்தது. அப்புறத்து அண்டத்தின் முகடுகளில் விழுந்தது. சுழலும் கிரகங்களின் மீது விழுந்தது. சூலுற்ற ஜீவராசிகள் மீது விழுந்தது. கருவூரில் அடைபட்ட உயிர்கள் மீது , மண்ணின் மீது , வானத்தின் மீது , மூன்று முளைத்தெழுந்த தன் மீது , முன்றிலில் விளையாடிய ச... |
தர்மதேவனுடைய வாள் மீது விழுந்தது. சாவின் மீது , பிறப்பின் மீது , மாயையின்மீது , தோற்றத்தைக் கடந்தவன் மீது , வாதவூரன் மீது , வாதவூரன் வேதனையின் மீது , அவன் வழிபட்ட ஆசையின் மீது , அவனது பக்தியின் மீது அந்த அடி விழுந்தது ! அங்கயற் கண்ணியின் மீது விழுந்தது. அவளது நெற்றித் திலகத்தின் மீது , கொங்கைக் குவட்டின் மீது அந்த அடி ... |
தமிழ்க் கவிதை உலகில் நடை , வடிவம் , உள்ளடக்கம் முதலியவற்றில் புதியன புகுத்தி இருபதாம் நூற்றாண்டின் ' எவ்வாறு " தமிழ்க் கவிதைக்குத் தலைமகனாக சிறுகதை இலக்கியத்திற்குச் சிறப்பு விளங்கினாரோ , அதே போல் தமிழ்ச் மிக்க தலைமகனாக விளங்கியவர் படைப்பாளியுமான என்று இலக்கிய புதுமைப்பித்தன் " தொ.மு.சி.ரகுநாதன் குறிப்பிட்டுள்ளார். புத... |
பாதிக்கப்பட்டு , அவருக்குப் பின் அதே விமர்சகரும் 277 பாணியில் கு , அழகிரிசாமி , ரகுநாதன் , வல்லிக்கண்ணன் , ஜெயகாந்தன் , சுந்தர ராமசாமி போன்றோர் எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். கு. அழகிரிசாமி - அறிமுகம் சக்தி இதழ் மூலம் தமிழ்ச் சிறுகதை உலகில் தடம் பதித்தவர் எழுத்தாளர் கு.அழகிரிசாமி. அவர் இன்றைய சிறுகதை எழு... |
மண்ணையும் , அவர் வாழ்ந்த கால மக்களையும் நன்கு பதிவு செய்துள்ளன. அக்கதைகளில் ஆழமான மனித நேயத்தைக் காண முடியும். அவரது கதைகள் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்த கொடை எனலாம். B பிறப்பும் வளர்ப்பும் 95 ரில் அசு எழுத்தாளர் கு.அழகிரிசாமி திருநெல்வேலி மாவட்டம் , கோவில்பட்டிக்கு அருகில் உள்ள இடைச்செவல் என்னும் ஊரில் 1923 ஆம் ஆண்ட... |
பாடல்கள் பாடுவது என்று தன்னைக் கலைப் பாங்கோடு வளர்த்துக் கொண்டவராவார். கோவில்பட்டி உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்புவரை படித்தார். பின்பு தானே முயன்று பல நூல்களைப் படித்தறிந்தும் , நூல் வல்லோரிடம் பழகியும் , தன் பிற துறை அறிவையும் வளர்த்துக் கொண்டார். தன் இலக்கிய அறிவையும் , பிற முப்பத்திரண்டாம் — வயதில் சீதாலெட... |
நூல்களைத் தந்து சென்றுள்ளது அவரின் கடும் உழைப்பிற்குச் சான்றாகும். தாம் வாழ்ந்த காலத்திற்குள் கவிமணி , வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் , ரசிகமணி டி.கே.சி. , திரு.வி.க. , பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை , வெ.சாமிநாத சர்மா , 278 தி.ஜ.ர. , வ.ரா. போன்ற தமிழ்ப் பெரியார்களுடனும் , சக்தி வை. கோவிந்தன் , தமிழ்ப் புத்தகாலய அ... |
எழுத்தாளுமையையும் வளர்த்துள்ளன. எழுத்துலக நுழைவு வல்லார்களிடம் கு.அழகிரிசாமி தொடக்கப் பள்ளி ஆசிரியராகத் தம் பணியைத் தொடங்கினார். பின்பு , சார்பதிவாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியில் அமர்ந்தார். எழுத்தாளராக , பின்னர் அதை முழுநேர பத்திரிக்கையாளராகத் தம்மை வளர்த்துக் கொண்டார். இவர் , தம் பதினாறாவது வயதில் உறக்கம் கொள்வா... |
துறையிலும் , படைப்பிலக்கியத் துறையிலும் ஒரே நேரத்தில் ஈடுபட்டவராவார். விகடன் துணை ஆசிரியராகவும் , 1946 இல் தமிழ்மணி பொறுப்பாசிரியராகவும் , 1952 ஆம் ஆண்டு வரை ஆண்டு முதல் பிரசண்ட பின்பு மலேசியா சென்று 1957 ஆம் ஆண்டு துணையாசிரியராகப் பணிபுரிந்தார். 1958 ஆம் 1943 ஆம் பணியாற்றியுள்ளார். வரை சக்தி இதழிலும் பணியாற்றினார். தம... |
கு.அழகிரிசாமி பல ல்லும் வகைகளைக் கையாண்டு , தம் இலக்கியப் படைப்பாளுமையை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். சிறுகதை ஆசிரியர் , நாவலாசிரியர் , நாடக ஆசிரியர் , மொழிபெயர்ப்பாளர் , பதிப்பாளர் , கட்டுரையாளர் , இதழாசிரியர் , உரையாசிரியர் என்று பல பரிமாணங்கள் இவருக்கு உண்டு. இவற்றைத் தவிர ஓவியம் , கவிதை , கீர்த்தனை , பதங்கள் இவற்றி... |
கொண்டவர். அவர் வாழ்வினை கொண்ட திரிவேணி என்ற அடிப்படையாகக் சிறுகதைப் படைப்பாக்கம்தான் அவர் பெயரை நிலை நாட்டியது. 279 எழுதிய நூல்கள் அழகிரிசாமி கதைகள் , அன்பளிப்பு , இரு சகோதரர்கள் , கற்பக விருட்சம் , காலகண்டி , சிரிக்கவில்லை , தவப்பயன் , தெய்வம் பிறந்தது , வரப்பிரசாதம் என்ற சிறுகதைத் தொகுதிகளை எழுதியுள்ளார். இவற்றில் , ... |
எழுதிய புதினங்களாகும். காளி வரம் , மூன்று பிள்ளைகள் என்பன கதைத் தொகுதிகளாகும். பலநாட்டுச் எழுத்தாளர்களுடைய படைப்புகளையும் கவிச்சக்கரவர்த்தி , வஞ்சமகள் என்பன அவர் அண்ணாமலை ரெட்டியாரின் எழுதிய உரையுடன் கூடிய கம்பராமாயணம் , காவடிச் சிந்து ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார். இலக்கியச் சுவை , இலக்கியத் தேன் , இலக்கிய விருந்து... |
பெயரிலும் ஒரு தொகுதி வெளிவந்துள்ளது. திருக்குறளுக்கு எளிய நடையில் மிகச் சுருக்கமாக உரை எழுதியுள்ளார். மலேசியாவில் இருந்த போது இலக்கிய வட்டம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மலேசியா வாழ் தமிழர்களுக்காகப் படைப்பிலக்கியப் பயிற்சி அளித்துள்ளார். கு.அழகிரிசாமி சிறந்த இலக்கியச் சொற்பொழிவாளர் ஆவார். ஈழநாடு முழுவதும் பயணம் ச... |
தனிப்பட்ட முறையில் தகுதிப்படுத்திக் கொண்டவராவார். அவர் சிறந்த இலக்கிய ஆராய்ச்சியாளராகவும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது இலக்கியக் கட்டுரைகள் , அவரது படிப்பின் அகலத்தைக் காட்டுவதுடன் , அவரது ஆய்வுத் திறனையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. பிறமொழி இலக்கியங்களைத் தமிழ் மொழி இலக்கியங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யு... |
ஆய்வாகச் ( Multi Disciplinary Research ) சிறந்துள்ளது. சிறந்த நூல் மதிப்புரைகளையும் இவர் பத்திரிகை ஆசிரியராக இருந்த போது செய்துள்ளார். அத்துடன் , அவருடைய ஒப்பாய்வுத் 280 கு.அழகிரிசாமி சிறந்த தகவல் சேகரிப்பாளராகவும் இருந்துள்ளார். சேகரித்த தொகுப்புகளைக் குறிப்புகளுடன் பாதுகாத்துள்ளார். மலேசியாவில் , கு.அ , பரம்பரை என அட... |
வித்தியாசமானது ; சிறப்பானது. அவரை , அவரது சிறுகதைப் படைப்புகள்தாம் முதன் முதலில் தமிழ் இலக்கிய உலகிற்கு அடையாளம் காட்டின எனலாம். கதைகளில் உள்ளடக்கம் , அமைப்பு அனைத்திலுமே சிக்கலற்ற எளிமைத் தன்மை காணப்படுகிறது. இவரது கதைகளில் அடிநாதமாக ஒலிக்கின்றன. அவர் எழுதி அச்சில் வெளிவந்த சிறுகதைகள் 101 ஆகும். 1963 ஆம் ஆண்டு அழகிரிச... |
கதைகள் என்ற தொகுதியே , அன்பளிப்பு என்ற பெயரில் ஒன்றிரண்டு கதை மாற்றத்துடன் திரும்பவும் வெளியிடப்பட்டது. அவருடைய கதைகள் அனைத்தும் 1940 களிலிருந்து 1970 வரையிலான சுமார் 30 ஆண்டுக் காலத்தில் வெளிவந்தவைகளாகும். கதைக் கருக்கள் உ வெளியிடப்பட்டன. கு.அழகிரிசாமி தம் சிறுகதைகளின் கரு பற்றித் தாமே கதைக்கு ஒரு கரு என்ற தலைப்பில் 1... |
பிரபலமான கதை , நிகழ்ச்சியை அடிப்படையாகக் எழுதப்பட்டுள்ளது. ஞாபகார்த்தம் , பெரிய மனுசி , காலகண்டி , இதுவும் போச்சு , சிவசிவா என்ற கதைகள் கூட நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டவையே ஒருசில கதைகளை , கதையாகவே மனத்தில் எண்ணிப் எழுதியுள்ளார். ‘ கருவுக்குக் கதைதான் கரு ! கருவிலிருந்து கதை தோன்றுவதற்குப் பதில் கதையிலிருந்து கரு தோன்றி... |
தவப்பயன் கதைக்கு , கோவில்பட்டியில் தாம் பார்த்து ரசித்த முதன் முதலில் பார்த்து வியந்த குமாரபுரம் நந்தவனமும் , குமாரபுரம் ஸ்டேசன் கதைக்குத் தம் ஊர் அருகில் உள்ள தாம் வாழ்க்கையில் ஸ்டேசனும் , முருங்கைமரம் மோகினி கதைக்குத் தம் சொந்த ஊரில் நண்பர் ஒருவருக்குச் சொந்தமான மிளகாய்த் தோட்டத்தில் செருப்புக்கட்டித் தொங்கவிடப்பட்ட ... |
அதற்குச் சான்றுகளாகச் சிரிக்கவில்லை , கூறுகிறார். நாய் என்ற வெறும் குறிப்பிட்டுள்ளார். சில கதைகள் , பாதி அல்லது பாதிக்கு மாற்றங்களுடன் தம் சொந்த வாழ்க்கையில் , தாம் சந்தித்த நிகழ்ச்சிகளாகவே கதைகளையும் சிற்சில மேல் அமைந்துள்ளன என்கிறார் அவர். சென்னையில் அவர் வசித்த போது , ஒரு சிறுவன் தன் சொந்தக் காசு கொடுத்து ஒரு டைரி வ... |
நண்பரும் ரயில் பயணத்தில் நேரில் கண்ட நிகழ்ச்சியை அப்படியே கதைப்படுத்தியதாகக் கூறும் அவர் , தம்பி ராமையா , பாலம்மாள் என்ற கதைகள் தம் வீட்டில் நடந்த கதைகள் என்கிறார். அதுபோன்றே சந்திப்பு , உலகம் யாருக்கு ?, கார் வாங்கிய சுந்தரம் என்ற கதைகளும் முறையே சொந்தக் கிராமமான இடைச்செவலிலும் , ) கோவில்பட்டி , ) விருதுநகருக்கு இடையி... |
காலப் பிற கருக்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது இன்றியமையாததாகும். விடுதலை வேட்கை , விதவை மணம் , குழந்தை மணம் , வரதட்சணைக் கொடுமைகள் , மாமியார் மருமகள் உறவு , வறுமை , காதல் , வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவை பிறருடைய சிறுகதைகளின் கருக்களாக அமைய , கு.அழகிரிசாமியின் கதைக் கருக்கள் அவற்றிலிருந்து வேறுபட்டு அமைந்துள்ளன. அவர் வி... |
பேசியுள்ளார். வேலையில்லாத் 282 கதை மாந்தர்கள் அழகிரிசாமி பல்வேறு கதைமாந்தர்களைப் படைத்திருந்தாலும் , குழந்தைகளைப் பல கதைகளில் கதை மாந்தர்களாகப் படைத்துள்ளார். அவை அன்பளிப்பு , ராஜா வந்திருக்கிறார் , பேதமை , தெய்வம் பிறந்தது , காற்று , குமாரபுரம் ஸ்டேசன் , தம்பி ராமையா , இருவர் கண்ட ஒரே கனவு , சிரிக்கவில்லை , பெரிய மனுச... |
கொண்டு எழுதப்பட்டுள்ளது. தம் கதைகளில் உளவியல் பொதுவாக , குழந்தைகள் இடம்பெறும் கதைகளில் தாய்ப் பாசம் , குழந்தைப் பாசம் , குழந்தைகளின் விளையாட்டுத்தனம் போன்றவைகள் கருவாக அமையும். ஆனால் இவற்றிற்கு மாறாக , கு.அழகிரிசாமி தம் கதைகளில் குழந்தைகளின் விருப்பு வெறுப்பு , ஏக்கம் , எதிர்பார்ப்பு , சோகம் , சிரிப்பு , அழுகை , பயம் ப... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.