text stringlengths 11 513 |
|---|
என்னோடு அமைதியாக உட்கார்ந்து கொண்டிருப்பான். அவன் எப்பொழுதுமே குறும்பு பண்ணமாட்டான் ; விளையாடமாட்டான் ; மற்ற குழந்தைகள் எல்லாரும் ஒருவிதம். அவன் ஒரு விதம். என்னிடத்தில் பயபக்தியோடு நடந்து கொள்ளும் சிறுவன் அவன் ஒருவன்தான் ' என்று அவன் மற்ற குழந்தைகளிலிருந்து வித்தியாசமானவன் என்று எடுத்துக்காட்டுகிறார். 16 இக்கதையில் , எ... |
என்று ஏக்கமாகப் பார்க்கிறான். அவன் , வாய்விட்டு எழுத்தாளரிடம் தனக்கும் அன்பளிப்பு வேண்டும் என்று கேட்கவில்லை. ஆனால் , அவன் தானே டைரி ஒன்றை வாங்கி வந்து , அதை அவரிடம் கொடுத்து ' எழுதுங்கள் ' என்கிறான். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ' என்ன எழுத ? ' என்று கேட்டார் எழுத்தாளர். ' என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு என்று... |
எழுத்தாளர் அன்பளிப்புத் 283 அன்பளிப்பு தானாக அன்பளிப்பாகப் தரவில்லை என்பதை மனத்தில் குறையாக வைத்துக் கொண்டு , அக்குறையைத் தீர்க்கத் தானே டைரி வாங்கிக் கொண்டு வந்து அவரிடம் எழுதச் சொல்லும்போது , அது எந்த அளவுக்கு அவன் மனத்தைப் பாதித்துள்ளது என்பதை விளங்க வைத்துள்ளார். மனமுவந்து ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பதாகும். இக்கதை... |
விடுவது எந்த அளவு குழந்தையின் மனத்தைப் பாதிக்கும் என்பதைக் கு.அழகிரிசாமி உணர்த்தியுள்ளார். எல்லாக் குழந்தைகளும் ஒரே நோக்குடையவர்கள் அல்லர். ஒருசில குழந்தைகள் அன்பளிப்புப் பெறாததைப் பொருட்படுத்தவில்லை என்றாலும் , ஒருசில குழந்தைகள் அதை மனத்திற்குள் வைத்துக் கொண்டு வருந்துவதும் உண்டு என்பதை இக்கதை மூலம் நன்கு விளக்கியுள்ள... |
வாழ்பவன் போலவும் , நாமும் அவனிடம் கடன் கொடுத்து ஏமாந்தது போலவும் தோன்றும் விதத்தில் படைத்துள்ளார். ஏனெனில் , நம் வாழ்க்கையில் நாள்தோறும் காணும் பாத்திரம் கல்யாண கிருஷ்ணன். வாழ நகப் பின் இக்கதை கல்யாண எகயா , கிருஷ்ணனிடம் 37 ரூபாய் கடன் கொடுத்து , ஏமாந்த ஒருவர் கூறுவதாக அமைந்துள்ளது. ' வேறொருவர் காணாமல் உலகத்தில் உலாவலாம... |
எனக்குத் தட்டுப்படாமல் அவனால் எப்படி உலாவ முடிந்தது ? என் கண்ணில் கோளாறா ? இல்லை , திடீரென்று மறையும் அபூர்வ சக்தி ஏதாவது கல்யாண கிருஷ்ணனிடம் இருந்ததா ? அதை எல்லாம் யோசித்து இப்பொழுது மண்டையை உடைத்துக் கொள்ளுவானேன் ? ' என்று தாம் ஏமாந்த கதையைத் தொடங்குகிறார் அவர் , பணம் போனதை விடத் தம்மை ஏமாற்றிவிட்டானே அவன் என்ற ஆதங்க... |
ஒருவர் 284 இருப்பதை அறிகிறார். அவன் கிடைத்துவிட்டான் என்று மகிழும் தருணத்தில் அவர் வேறு ஆள் என்று தெரிகிறது. அதுமட்டுமல்ல , அவர் பார்த்த மனிதரும் கல்யாண கிருஷ்ணனுக்குக் கடன் கொடுத்துவிட்டுத் தேடிக் கொண்டிருப்பதையும் அறிகிறார். இப்படி முடிகிறது கதை. அன்றாட வாழ்க்கையில் நாம் பல சந்தித்திருப்போம். பெயர் மாறியிருக்கும் அன்... |
மிகுந்த பற்றுடையவர். தம் தாயையே அவர் சில கதைகளில் பாத்திரமாக்கியுள்ளார். ராஜா வந்திருக்கிறார் கதையில் தம் தாயார் தாயம்மாவை மிகப் போற்றியுள்ளார். பாலம்மாவின் கதை என்பது , அவருடைய தாயாரின் கதையே. அழகம்மாள் கதையிலும் அவரை ஒரு பாத்திரமாகப் பார்க்கலாம். இரண்டு ஆண்கள் கதையில் , தம் தாய்மாமா ஒருவரையே கதாபாத்திரமாய்ப் படைத்துக... |
கதைகளில் பாத்திரங்களாக்கியுள்ளார். வினாக்கள் யாது ? கல்யாண அவ்வளவே. இப்படி கிருஷ்ணன்களைச் கு.அழகிரிசாமி எந்தெந்தப் பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார் ? கு.அழகிரிசாமி எந்த நூலுக்காகச் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார் ? கு.அழகிரிசாமி மலேசியா வாழ் தமிழர்களுக்காகத் தொடங்கிய அமைப்பின் பெயர் கு.அழகிரிசாமியின் பிரபலமா இரு ... |
எழுத்துத் திறனுக்கும் ஏற்பப் பல படைப்பாக்க உத்திகளைக் கையாளுகின்றனர். ஆனால் , எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர் இவ்வுத்தி முறைகளில் வேறுபாடுகளைக் காண முடியும். அந்த விதத்தில் கு.அழகிரிசாமியின் படைப்பாக்க உத்தி முறைகளைத் தனித்து இனம் காண இயலும். 285 கதை கூறும் முறை ( Point of View ) கு. அழகிரிசாமியின் கதைகளில் பல , ஆசிரியரே ... |
விட்டேன் " என்று அன்பளிப்புக் கதை , தன்கூற்றில் தொடங்குகிறது. ‘ எனக்குக் கல்யாணம் ஆகாதிருந்த சமயத்தில் நடந்த பல ரசமான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று ' என்று இரண்டு பெண்கள் கதை தொடங்குகிறது. ' முதன் முதலாகக் கோலாலம்பூருக்குப் போன நாளிலிருந்தே நான் அவளைத் தேடிக் கொண்டிருந்தேன் ' என்று கண்ணம்மா கதை தொடங்குகிறது. சில கதைகள் ... |
கொண்டிருந்தாலும் தண்ணீர் வற்றவே வற்றாது. எப்பொழுதும் ஊறிக் கொண்டுதான் இருக்கும் இப்படி இ வர்ணனையுடன் தொடங்குகிறது முருங்கைமரம் மோகினி என்னும் கதை. சில கதைகள் பாத்திர அறிமுகமாக , பாத்திரம் பற்றிய வர்ணனையுடன் தொடங்குகின்றன. ' கோமதிநாயகத்துக்கு கண் வயது முப்பத்தைந்து. கல்யாணமாகி ஐந்து குழந்தைகளும் இருக்கிறார்கள். கோமதி நா... |
ஐம்பதினாயிரம் பெறுமதிப்புள்ள சொத்துக்கு இவன் அதிபதியானதும் தன் வாழ்வில் மாறுதல்கள் நிகழ்வதைக் கண்டான். முன்னால் , ' என்னப்பா , யோ என்று சொல்லித் தோளில் கைபோட்டுப் பேசியவர்கள் , இப்போது அவனை முதலாளி என்று கூப்பிட ஆரம்பித்தார்கள்- இவ்வாறு சாப்பிட்ட கடன் என்ற கதை கோமதி நாயகம் என்ற பாத்திரத்தின் அறிமுகமாகத் தொடங்குகிறது. க... |
நின்று நிதானமாக ஆற்றோட்டமாக வர்ணித்துச் சொல்வது அவரது வழக்கம். இடத்தைப் பற்றி என்றாலும் , பாத்திரங்களைப் பற்றி என்றாலும் , ஒரு 286 நிகழ்ச்சி பற்றி என்றாலும் ஒரு விவரிப்புப் பாங்கு அவரது நடையில் இடம்பெறும். ‘ அந்தப் பசுக்கள் அந்த வீட்டில் குடியிருக்கும் எந்தக் குடித்தனத்துக்கும் சொந்தமானவை அல்ல. அதற்கும் இரண்டு வீடுகளுக... |
தொழுவாக்கி விட்டான். மழைக் காலத்தில் பசுக்களை அவிழ்த்து , அதே வீட்டின் குறுகலான வராந்தாவிலேயே ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தி வைப்பான் " என்று தேவ ஜீவனம் என்ற கதையில் பிரச்சனைக்குரிய இடத்தை விவரிக்கிறார். ' இரவு நேரம் ; நிலா புறப்பட்டு ட்டது. மாளிகையின் பின்புறத்திலே , ஆம்பல் இதழ் அவிழ்த்த தடாகத்தின் ஓரத்தில் ஒரு பொன்னூசல்... |
களிக்கிறார்கள் ' என்று திரிவேணி கதையில் ராமர் சீதை பொன்னூஞ்சல் ஆடுவதை வர்ணிக்கிறார். பல இடங்களில் அவரது நடையில் இலக்கியப் போக்கு அமைந்திருக்கும். ' வீட்டுக்குள்ளே போகும் போது ரோஜாச் செடியின் குச்சியைப் போல் போனேன். வெளியே வரும்போது பூத்துக்குலுங்கும் ரோஜாச் செடியாக வந்தேன் ' என்ற கதை வரிகள் இதற்குத் தக்க சான்றாகும். பா... |
கிட்டிவிடுமா ? " ( தவப்பயன் ) என்று சில இடங்களில் இவரது நடையில் தத்துவப் பாங்கு தெரிகிறது. குழந்தைகளைப் படைத்துக் காட்டும் பொழுது அவர்களுக்கான மொழியைச் சிறு சிறு உரையாடல் டுவந்திருக் ' என்ன புத்தகம் கொண்டு வந்திருக்கிறீர்கள் ? என்று கேட்டார்கள். ' ஒரு புத்தகமும் கொண்டு வரவில்லை ! ' பொய் , பொய் , சும்மா சொல்கிறீர்கள் ! ... |
வந்திருந்தால் தான் வந்திருப்பேனே ' கொண்டு 287 சூரியனுக்கு முன்னால் மின்மினிப் பூச்சிகள் பிரகாசிக்குமா ?, ஆரமுது உண்ணுதற்கு ஆசை கொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ ? ' இப்படி உவமை நடை ஆங்காங்கே காணப்படுகிறது. அவர் மிகச் சில இடங்களில் ஆங்கிலச் சொற்களையும் கையாண்டுள்ளார். ஆனால் , பொதுவாக இவரது நடையைப் பற்றிச் சொல்ல வேண்... |
கொண்டுள்ளார். இன்னும் சிறப்பாகச் சொல்லப் போனால் இவரது நடை வாசகர்களுக்கு அலுப்புத் தட்டாத விதத்தில் அமைந்துள்ள எளிய இனிய தமிழ் நடையாகும். உத்தி பட கு.அழகிரிசாமி தகப்பனும் மகளும் கதையில் இந்தப் பட உத்தி முறையைக் வந கையாண்டுள்ளார். இது. சிறுகதையைப் பொறுத்தவரை புதிய உத்தி என்பது குறிப்பிடத் தக்கதாகும். இவருக்கு முன்னும் , ... |
வண்டிப் பெட்டி ஒன்றின் உட்புறத்தின் பிளானாகும். பிளானைப் பார்த்துக் கொண்டீர்களா ? இனிமேல் விபரத்தைப் பாருங்கள் : 1. கதாநாயகி உட்கார்ந்திருந்த இடம். 4. உத்து 2. கதாநாயகியின் தங்கை உட்கார்ந்திருந்த இடம். 3. என் நண்பர் கோபாலன் உட்கார்ந்திருந்த இடம். ( இவரையும் என்னையும் கதாநாயகர்களாக கதாநாயகியின் கடும் பிரயாசைப்பட்டார் தக... |
பேர்வழிகள் 8. நான் உட்கார்ந்திருந்த இடம். 9. கதாநாயகியின் தகப்பனார் உட்கார்ந்திருந்த இடம். கதாநாயகரும் இவரே. 10 , 11 , 12 , 13 , 14 இந்த ஐந்தும் கூடக் கதைக்கு நேரடியான சம்பந்தமில்லாத பேர்வழிகள் உட்கார்ந்திருந்த இடங்களே. 288 ஜ , ஜ இந்த இரண்டு எழுத்துகளும் முறையே ஜன்னல் , ஜன்னல் என்ற வார்த்தைகளைக் குறிக்கும். x , × = கதா... |
காட்சிப்படுத்தி வாசகர்களை அக்கதையோடு ஒன்ற வைத்துள்ளார். சமுதாயப் பார்வை கு. அழகிரிசாமி இலக்கிய ரசனையும் , மனித நேயப் பண்புகளும் , எதையும் கூர்ந்து உற்று நோக்கும் கூர்த்த மதியும் உடையவர். அவர் , வாழ்க்கையில் தாம் பெற்ற அனுபவங்களையும் , கண்ட காட்சிகளையும் தம் படைப்புகளுக்கு அடிப்படையாக அமைத்துக் கொண்டுள்ளார். நகர வாழ்விய... |
நாகரிகம் என்ற பெயரில் , ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வது கூடக் கிடையாது. இதைத் தம் கதையில் , ‘ அந்தக் குடித்தனக்காரர் இரவு பத்து மணிக்குத் திடீரென்று செத்துப் போய்விடவே , அவருடைய மனைவி வேறு துணையின்றி அழுதுகொண்டே இரவைக் கழித்தாளாம். ஆனால் , அழுகைச் சத்தம் காதில் விழுந்தும் , வேலைக்காரன் வந்து மரணச் செய்தியை குடும்ப ... |
கீழே இறங்கி வரவில்லையாம். இப்படிப்பட்ட வீட்டுக்காரர் கிடைத்தது ஒரு வகையில் “ மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும் ' ( இரண்டு பெண்கள் ) என்று எள்ளலாகச் சுட்டிக் காட்டியுள்ளார். ' சென்னைக்கு வந்து , சிரமத்துக்கு மேலே சிரமப்பட்டு , சிபாரிசுக்கு மேல் சிபாரிசு வைத்து , அப்புறம் சிபாரிசு செய்தவர்களினால் ஏற்பட்ட சிரமங்களையும் சகித்துக... |
முற்றம் , ஒரே ஒரு வாசல் ஆனால் பத்து வீடுகள் , நூறு ஆட்கள் , ஆயிரம் 289 சண்டைகள் என்ற கணக்கில் கட்டப்பட்ட இருட்டுக் கொட்டடிகளில் ஒன்றல்ல அந்த வீடு ' என்று சென்னையில் ஒண்டுக் குடித்தன அனுபவத்தை விவரித்துள்ளார் அவர். ஆண் பெண் நட்பு இந்தச் சமூகம் ஆணாதிக்கச் சமூகம். எனவே , இச்சமூகம் ஆண் - பெண் நட்புறவை , எந்த வயதாக இருந்தால... |
அது போன்று , பெண்கள் தங்களைக் கவனிக்கத் தொடங்கி விட்டாலே , தாங்கள் மாப்பிள்ளை ஆகிவிட்டது போல் ஆண்கள் மகிழ்ச்சி கொள்வதும் உண்டு என்பதை , " இப்படி ஒரு பெண்ணின் கவனத்திற்கு ஆளாகியிருக்கிறோம் என்பதை முட்டாள் தனமாகக் கவனிக்காமல் இருந்து விட்டோமே ! ' ஐயோ , நான் தலைவாரிக் கொள்ளாமலும் , முகக்ஷவரம் செய்து தெரு வழியாகச் சில தடவை... |
பழைய செருப்பைக் கழற்றி அறைக்குள் எறிந்து விட்டு , புதுச்செருப்பு வாங்கினேன். முகப்பவுடர் , ஸ்னோ , க்ரீம் , செண்ட் முதலியவையும் வாங்கிக் கொண்டேன். அதன் பிறகு தினந்தோறும் எதிர் வீட்டுப் பெண்ணுக்கும் , எந்த வீட்டுப் பெண்ணுக்கும் நான் சுந்தர புருஷனாகக் காட்சியளிப்பதில் பெரிதும் கவனம் செலுத்தி வரலானேன் " என்று படைத்துக் காட... |
என்பதைக் ' கருப்புப் பெண்ணின் வீட்டுக்குப் போய்க் குலாவிவிட்டு வந்தது தப்பில்லை ; அழகான பெண்ணின் வீட்டுக்கு வெறுமனே போய் வந்தது பெரும் குற்றம். இது என்ன விசித்திரமடா ! " என்று சுட்டிக் காட்டியுள்ளார். இவ்வாறு சமூகத்தில் ஆண் - பெண் நட்பு என்பது ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியுள்ளார். பொதுவ... |
பெற்றுப் படித்தறிந்தார். பொதுவுடமைக் கருத்துகள் எழுத்தாளரை ஈர்த்ததால் , அவற்றை நன்கு உள்வாங்கிக் கொண்டார். அதைத் கதைகள் சிலவற்றிலும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாகத் திரிபுரம் , ராஜா வந்திருக்கிறார் , அழகம்மாள் , பாலம்மாள் ஆகிய பொதுவுடைமைப் பின்னணியோடு தம் படைப்புகளையும் படைத்துள்ளார். ராஜா வந்திருக்கிறார் கதையில் , ... |
வீட்டிற்கு வந்த ராஜாவும் என்பதைப் பொதுவுடைமைப் பார்வையில் ஒன்றுபடுத்துகிறார். திரிபுரம் கதையில் , ஏழ்மையில் கெட்டுப் போகும் தாயையும் மகளையும் பற்றிப் பேசுகிறார். பசியாலும் பட்டினியாலும் மயங்கிக் கிடக்கும் மகளும் , பசியால் இரவில் தெருவில் கீழே கிடக்கும் வெள்ளரிக்காயைத் தேடிச் செல்லும் தாயும் அவலத்தில் ஒன்றுபட்டு நிற்கிற... |
சிரிக்கிறாள். ' எளிதாக இவ்வளவு பெரிய தொகை கிடைத்து விட்டது என்பதை நினைக்கும்போது அ. அவளால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை , உரக்கச் சிரித்து சிரித்தாள். விட்டு விட்டுப் பலமுறை சிரித்து விட்டாள். அந்தச் சிரிப்பு எதற்கு என்று அவளுக்கே புரியவில்லை. பாண்டியனிடம் சிவபிரான் வாங்கிய பொற்பிரம்படியைப் போல் , அவள் சிரித்த சிரிப்... |
சிரித்தாள். பணக்காரர்களை , ஏழைகளை , ஆண்களை , பெண்களை , பஞ்சத்தை இப்படி 4 எத்தனையோ அடங்கிய உலகத்தையே நோக்கிச் சிரித்தாள்... ’ ‘ சிவன் சிரித்துத் திரிபுரத்தை எரித்தான். இவள் சிரிப்பு என்ன செய்யப் போகிறதோ ? ' என்று கூறிக் கதையை முடிக்கிறார். புதுமைப்பித்தன் பொன்னகரம் கதையில் பேசியது போல , கற்பு என்று கதைப்பதெல்லாம் , ஏழைக... |
எடுத்துரைக்கின்றார். இவ்வாறு அவர் கதைகளில் சில பார்வையினவாக அமைந்துள்ளதைக் காண முடிகிறது. பொதுவுடமைப் 291 தொகுப்புரை மீது ஒட்டு மொத்தமாக , எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் கதைகளை மதிப்பிடும் போது , அவரது கதைகள் அடுக்கடுக்கான சம்பவங்கள் மீது கட்டப்படவில்லை. மெல்லிய அசைவுகள் , சலனங்கள் , நடத்தைகள் ஆகியவற்றின் கட்டப்பட்டுள்ள... |
ஜாலங்களும் , சம்பவ ஏற்றத் தாழ்வுகளும் இல்லாதவை. நிஜமான வாழ்க்கையோடும் மனிதர்களோடும் சம்பந்தப்பட்டிருப்பவை. அவை படித்து அனுபவிப்பதற்கு உகந்த கதைகள். முதன் முதலில் , சாகித்ய அக்காதமியின் பரிசினைப் பெற்ற தமிழ் எழுத்தாளர் என்ற பெருமை கு.அழகிரிசாமிக்கு உண்டு. வினாக்கள் நகரவாழ்வு பற்றிப் பேசும் கதை ஒன்றின் பெயரினைக் கூறுக. ப... |
முதல் தமிழ் எழுத்தாளர் யார் ? ஜெயகாந்தன் - அறிமுகம் வாய் பல்லும் தமிழ் மக்களின் இலக்கிய ரசனையையும் சிந்தனையையும் பாதித்த எழுத்தாளர்களுள் ஜெயகாந்தனும் ஒருவர். இவர் நவீன இலக்கியம் , அரசியல் , கலை மற்றும் பத்திரிகை உலகில் கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர். தமிழ்ச் சிறுகதை உலகில் , இன்றுள்ள கட்டத்தை ஜெ... |
கடலூரில் மஞ்சக்குப்பம் என்ற ஊரில் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் பிறந்தார். ஜெயகாந்தனின் தந்தை பெயர் தண்டபாணிப் தாயார் மகாலெட்சுமி அம்மாள். பத்து வயதுச் சிறுவனாக இருக்கும் போதே மூவர்ணக் கொடி பிடித்து , பாரதியாரின் தேசிய எழுச்சி மிக்க பாடல்களைப் பாடிக்கொண்டு தெருவில் சென்றவர் அவர். ஜெயகாந்தன் பள்ளி சென்று கல்வி பயின்... |
, தமிழ்ப் புலவர் க.சொக்கலிங்கத்திடம் முறையாகப் பாடம் கேட்டுத் தம் மொழியறிவை வளர்த்துக் கொண்டார். கரிச்சான் குஞ்சு என்ற புனைபெயரில் கதைகள் எழுதும் மன்னார்குடி நாராயணசாமி என்ற வைதீக பிராமணரிடம் பழகிப் பிராமண மொழியைக் கையாளுவதில் வல்லமை பெற்றார். ஜெயகாந்தன் சிறுவனாக இருக்கும் போதே கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவராக இரு... |
நடத்திய பத்திரிகை ஆகும். பின்பு தொடர்ந்து வசந்தம் என்ற இதழிலும் , விந்தன் நடத்திய மனிதன் இதழிலும் , இஸ்மத் பாஷா ஆசிரியராக இருந்த சமரன் என்ற இதழிலும் , மாஜினி பாஸ்கரன் பின்னர் விஜய நடத்திய தமிழன் இதழிலும் , நடத்திய சரஸ்வதி இதழிலும் தொடர்ந்து எழுதினார். சரஸ்வதி இதழில் எழுதும் பொழுதுதான் இவர் எழுத்தாற்றல் வெளியுலகிற்குத் ... |
பரிசோதனை முயற்சிகளாகவும் அமைந்தன. சரஸ்வதியில் வெளியான கதைகள் பாலுணர்ச்சி பற்றிப் பேசுவன. கண்ணம்மா , போர்வை , சாளரம் , தாம்பத்தியம் , தர்க்கம் போன்ற கதைகள் இதற்குத் தக்க சான்றுகளாகும். இவை தரமானவை என்றாலும் ஜனரஞ்சகமாக அமையவில்லை. அதற்கு அடுத்து வந்த காலக் 293 கட்டத்தில் , அவர் தம் எழுத்துகளை ஜனரஞ்சகமாக அமைத்துக் கொண்டார... |
தமிழ்ப்பண்ணை பதிப்பகம் அதை வெளியிட்டது. தி.ஜ.ர. அத்தொகுப்பிற்கு முன்னுரை வழங்கியுள்ளார். அத்தொகுதிக்குக் கண்ணதாசன் கவிதையில் புகழாரம் சிறுகதைப் சூட்டியுள்ளார். சிறுகதை மன்னன் என்று சுட்டும் அளவிற்கு , படைப்புகளில் தன் திறமையை வெளிக்காட்டிக் கொண்டுள்ளார் ஜெயகாந்தன். “ தமிழ்நாட்டில் இன்றுவ தோன்றியுள்ள மிகச் சிறந்த எழுத்த... |
காட்டலானார். ஆனாலும் கூட , அவர் படைத்த சிறுகதைகள் இன்றும் அவர் புகழ்பாடிக் கொண்டிருக்கின்றன. கையாண்ட இலக்கிய வகைகள் ஜெயகாந்தன் சிறுகதை , குறுநாவல் , நாவல் என்ற இலக்கிய வடிவங்களைப் படைத்ததுடன் நின்றுவிடாமல் , சுவை ததும்பும் கட்டுரைகளையும் , ஆழமான சுயவிமரிசனக் அறிவுபூர்வமான - கட்டுரைகளையும் படைத்துள்ளார். அவற்றில் சுயதரி... |
எழுதியுள்ளார். திரைப்படக் கதாசிரியராகவும் , பாடலாசிரியராகவும் , வசனகர்த்தாவாகவும் , இயக்குநராகவும் , தயாரிப்பாளராகவும் சிறந்துள்ளார். ஜெயகாந்தன் சிறந்த மொழி பெயர்ப்புப் பணிகளையும் செய்துள்ளார். ராமன் ரோலண்ட் எழுதிய ாலை மகாத்மா என்ற பெயரிலும் , புஷ்கின் எழுதிய நூலைக் கேப்டன் மகள் என்ற பெயரிலும் தமிழில் மொழியாக்கம் செய்த... |
தொகுப்புகளுக்கும் நாவலுக்கும் எழுதிய முன்னுரைகள் விமர்சனப் பார்வையில் அமைந்து சிறந்தன. அனைத்தும் ஜெயகாந்தன் முன்னுரைகள் என்ற பெயரில் நூலாகத் வெளிவந்தன. ஜெயபேரிகை என்ற இலக்கிய இதழ்களிலும் அவை தொகுக்கப்பட்டு நாளிதழிலும் , ஞானரதம் , 1978 இல் கல்பனா என்ற 294 இறுதியாக நவசக்தி நாளிதழிலும் ஆசிரியராகப் பணியாற்றிய இவருக்கு உண்ட... |
மயக்கம் ( 1962 ) , சுமை கரிப்பும் ( 1960 ) , தேவன் வருவாரா ? ( 1961 ) , மாலை தாங்கி ( 1962 ) , யுகசந்தி ( 1963 ) , உண்மை சுடும் ( 1964 ) , புதிய வார்ப்புகள் ( 1965 ) , சுய தரிசனம் ( 1967 ) , இறந்த காலங்கள் ( 1969 ) , குருபீடம் ( 1971 ) , சக்கரம் நிற்பதில்லை ( 1975 ) , புகை நடுவினிலே ( 1990 ) , உதயம் ( 1996 ) ஆகியன ஜெயக... |
மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு , 1973 இல் வெளியாகின. அதூரே மனுஷ்யா ( 1989 ) என்ற பெயரில் இந்தி மொழியில் இவருடைய மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைத் தொகுதி வெளியாகி உள்ளது. வாழ்க்கை அழைக்கிறது ஜெயகாந்தனின் முதல் நாவலாகும். பாரிஸுக்குப் போ , சில நேரங்களில் சில மனிதர்கள் , ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் , ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு... |
வீட்டிற்குள்ளே வைத்து போன்றவை இவருடைய குறுநாவல்களுள் இலக்கியவாதியின் விழுதுகள் , யாருக்காக சினிமாவுக்குப் போன பெண்ணைப் பூட்டி அரசியல் ஓர் சிலவாகும். ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் , ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள் , ஒரு பிரஜையின் குரல் , யோசிக்கும் வேளையில் என்பன இவருடைய கட்டுரை நூல்களுள் சிலவாகும். தன... |
மார்க்சிய அரசியல் பார்வை உடையவராக இருந்தாலும் காங்கிரசையும் விரும்பியுள்ளார். லெனினைப் போற்றும் இவர் , காமராஜரையும் போற்றுகிறார். பாரதி , காந்தி , விவேகானந்தர் ஆகியோர் எழுத்துகளில் நல்ல பரிச்சயம் உடையவர். ஓங்கூர் சாமியார் என்பவரோடு தொடர்பு கொண்டு , சிலகாலம் சித்தர் மரபில் பிடிப்புக் 295 கொண்டிருந்தார். திரைப்படத் துறைய... |
பெற்று விளங்குகிறார். ஜெயகாந்தனின் ஆளுமையின் பெரும் பகுதி அவருடைய புற உலகத் தொடர்பால் கிடைத்தது. ஜெயகாந்தன் , ஒரு முற்போக்கு எழுத்தாளராவார். மனிதனுக்கு மனிதன் கொண்டிருக்கும் நேசம் , உள நெகிழ்வு , வாழ்க்கையில் ஒருவனுக்கு இருக்கும் பற்று , ஒருவரின் துயர் போக்க மற்றொருவர் பாடுபடுவது -இதுவே முற்போக்கு எழுத்துக்கு இலக்கணம் ... |
இலக்கானவர் இவர்தான். பரிசுகளும் விருதுகளும் பொருத்தமானவராகத் 1964 இல் ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் இந்திய ஜனாதிபதியின் விருதினைப் பெற்றது. 1972 ஆம் ஆண்டு சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் சாகித்திய அக்காதெமி விருதினைப் பெற்றது. 1978 இல் அது திரைப்படமாக வெளிவந்தபோது சிறந்த திரைக்கதைக்கான தமிழக அரசின் விர... |
அரசு விருதினைப் பெற்றது. 1986 இல் ஜெய ஜெய சங்கர நாவலுக்குத் தமிழ்நாடு அரசின் சிறந்த நாவலுக்கான விருதும் , சுந்தரகாண்டம் நாவலுக்குத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ராஜராஜ சோழன் விருதும் கிடைத்தன. கடந்த ஓரிரு ஆண்டுகளாக சாகித்திய அக்காதெமியின் உயர் சிறப்பிற்குரிய பெல்லோசிப் என்ற இடத்தையும் பெற்றுள்ளார். ராக ஞானபீட விரு... |
இவ்வாறு ஜெயகாந்தன் தமிழக அளவிலும் , இந்திய அளவிலும் , ஆசியக் கண்ட அளவிலும் பல விருதுகளைப் பெற்றுச் சிறந்துள்ளார். 1980 , 1983 , 1984 ஆம் ஆண்டுகளில் சோவியத் ரஷிய நாட்டின் அழைப்பின் பேரில் ரஷியப் பயணம் மேற்கொண்ட சிறப்பும் இவருக்கு உண்டு. 296 ஜெயகாந்தனின் சிறுகதைகள் ஜெயகாந்தன் சிறுகதை எழுதிய காலக் கட்டத்தை இலக்கிய விமர்சக... |
மூன்றாவது காலக் கட்டம் ஆனந்தவிகடன் போன்ற வெகுஜன இதழ்களுக்கு எழுதிய காலமாகும். முதல் காலக் கட்டம் ஜெயகாந்தன் என்ற எழுத்தாளர் தோற்றம் பெற்ற காலமாகும். அக்காலக் கட்டத்து எழுத்துகளில் ஏழை எளிய மக்கள் கதைப்பாத்திரங்களாகத் திகழ்கின்றனர். இரண்டாவது காலக் கட்டத்தில் தத்துவ நோக்கு மிகுந்துள்ள கதைகளையும் , பரிசோதனை முயற்சிகளாக அ... |
ஜெயகாந்தனின் வாழ்வியல் கண்ணோட்டத்தையும் , சித்தாந்தத்தையும் விளக்கி நிற்கின்றன. கட்டத்தில் பெரும்பாலும் நடுத்தர மக்களின் வாழ்வியலை இக்காலக் அக்கதைகள் கூறியுள்ளன. க கதைக் கருக்கள் ஜெயகாந்தன் கதைகளுள் காணப்படும் கருக்கள் போலியைச் சுட்டெரிக்கும் புதுமைகளை , வாழ்க்கையை அலசிப் பார்க்கும் நிகழ்வுகளை , சமுதாயத்தின் புற்றுநோய்... |
கருவாகக் கதையாகும். ரிக்சாக்கார பாலன் , 1956 மனிதாபிமானத்தைத் தட்டியெழுப்பும் விதத்தில் ‘ அமைந்துள்ளன. ஜெயகாந்தன் , ‘ எனது கதைகள் பொதுவாகப் பிரச்சினைகளின் பிரச்சினைகளைப் பேசுகின்றன " என்கிறார். மேலும் ' வஞ்சிக்கப்பட்டவர்களிடமும் , தண்டிக்கப்பட்டவர்களிடமும் குடிகொண்டுள்ள ஆன்மாவைக் கண்டறிந்து அதைக் கருப்பொருளாக்கிக் கொண்... |
வேலை டிரெடில் - என்ற தொல்லைகளை பிச்சைக்காரியின் கொடுத்தவர் என்ற கதைகள் உழைக்கும் 297 வர்க்கத்தின் வாழ்வியல் போராட்டங்களைக் கருவாகக் கொண்டிருந்தன. அடுத்து வந்த கதைகள் அதாவது சரஸ்வதி இதழில் வந்த கதைகளான தாம்பத்தியம் , பிரச்சினைகளைக் திரஸ்காரம் , பௌருஷம் , கருவாகக் கொண்ட காலங்கள் பால்பேதம் என்பன பாலியல் கதைகளாகும். எனவே அ... |
மறுமணம் , விவாகரத்து என்ற சமுதாயச் சிக்கல்களையும் , ஒருபிடி சோறு , உண்மை சுடும் போன்ற கதைத் தொகுதிகளில் உள்ள கதைகள் மார்க்சிய அரசியல் சித்தாந்தங்களைக் கதைக் கருக்களாகக் கொண்டுள்ளன. அதற்கு அடுத்து வந்த கதைகளில் தனிமனித வாழ்வியல் சிக்கல்கள் கருவாக அமைந்துள்ளன. இவ்வாறு ஜெயகாந்தனின் சிறுகதைக் கருக்கள் காலந்தோறும் மாறுபட்டன... |
குலத்திலே பிறந்த அம்மாசிக் கிழவனிடத்திலே ஒரு பிராமண தன் குழந்தையை ஒப்படைத்துவிட்டு மாது இறந்து விடுவதாகவும் , அம்மாசியே அவளுக்கு ஈமக் கடன்கள் செய்துவிட்டுக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும் கதை அமைகிறது. ‘ மனிதத்துவ உணர்வுகளுக்கு முன்னால் ஜாதி நிற்காது ' என்பதே இக்கதையின் கருவாகும். ஜெயகாந்தன் , மாறிவ... |
பலத்த சர்ச்சைக்குரியதாக அமைந்தன. இக்கதை , 1966 இல் ஆனந்தவிகடனில் வெளியானது. இக்கதையின் கரு புரட்சிகரமானது என்று மக்கள் மத்தியில் எண்ணம் நிலவியிருந்தது. ஆனால் , அக்கரு யதார்த்தமான உண்மையைப் பேசுவது என்கிறார் ஜெயகாந்தன். அக்கதையின் நாயகி , ‘ அவள் ’ ( பெயர் சூட்டப்படவில்லை ) ஒரு கல்லூரி மாணவி. உலகியல் அறிவு இல்லாத அவள். க... |
அவனால் அவள் சீர்குலைக்கப்படுகிறாள். வீட்டிற்கு அலங்கோலமாக , தான் ஒருவனால் கெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதைக் கூட உணர்ந்து கொள்ள முடியாத அப்பாவியாக வரும் மகளிடம் , தாய் முதலில் 298 கோபம் கொண்டாலும் , பின்பு அவளின் கள்ளமற்ற மனத்தைப் புரிந்து கொண்டு , அவளை நீராட்டித் தூய்மைப்படுத்துகிறாள். “ உன் மனசிலே ஒரு கறையுமில்லே. நீ ... |
மிதிச்சுடறோம்... அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம் ? கழுவிட்டுப் பூஜை அறைக்குக் கூடப் போறோமே ; சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறார் ? எல்லாம் மனசுதான்டி மனசு சுத்தமா இருக்கணும்... ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ ? மரோட பாததூளி பட்டு அவ புனிதமாயிட்டாள்னு சொல்லுவா , ஆனா அவமனசாலே கெட்டுப் போகலை. அதனாலே தான் ராமரோட பாததூளி அ... |
நடக்காதது போல் கல்லூரிக்குச் செல்கிறாள் என்பதோடு கதை முடிகிறது. போது இக்கதை , சமுதாயத்தில் எதிர்ப்பு அலைகளை எழுப்பிய ஜெயகாந்தன் , ' நான் தீர்க்கமாகச் சொல்கிறேன் அவள் கெட்டுப் போனவள் அல்லள் ; அவள் மனதிலே களங்கமில்லை. மனம் என்பது முதிர்ந்து எது சரி எது தப்பு என்று இதுபோன்ற காரியங்களில் தீர்மானிக்க முடியாத போது , அவளை இந்... |
தண்டிப்பது நியாயமாகாது , நாகரிகமாகாது " என்று தான் படைத்த பாத்திரத்திற்காக வாதாடுகிறார். ' பாத்திரங்களைப் படைப்பது பெரிதல்ல. அவற்றின் மீது பாசமும் பரிவு உணர்ச்சி இருப்பதால் க்கம வைத்து வதைபட காகிதத்தில்தானே கிறுக்குகிறோம் என்று பொறு பொறுப்பில்லாமல் படைக்க இயலாது. செய்யாத குற்றத்திற்குத் தண்டனையாக ஒரு பாத்திரத்தை எரித்த... |
அவளுக்கு ' மரணம்தான் தீர்வு. அ த விடுத்து ஜெயகாந்தன் அவளைத் தூய்மைப்படுத்துவதாகப் பேசுவது சரியல்ல என்று ' பிரச்சினைகளுக்கெல்லாம் மரணம்தான் , தற்கொலைதான் அல்லது தீர்வு என்றால் , பேனாவை , இலக்கியத்தை , அறிவை , சட்ட திட்டங்களை , சமூக நெறிகளை எல்லாம் தூக்கி கருத்துரைத்த போது , கொலைதான் 299 எறிந்துவிட்டு அவர்கள் அரிவாளைத் த... |
சார்ந்ததுதான் ' என்கிறார். கதை மாந்தர்கள் ஜெயகாந்தன் கதைகளில் கூலிக்காரர்கள் , ஆலைத் தொழிலாளிகள் , சேரி மக்கள் , விபச்சாரிகள் , பிச்சைக்காரிகள் , சிறு வியாபாரிகள் என்று பெரும்பாலும் வாழ்வு மறுக்கப்பட்ட சமூகத்தினரே கதை மாந்தர்களாக அறிமுகப்படுத்தப் படுகின்றனர். கூடைக்காரி ஆண்டாளு , முறைவாசல் சோற்றுக் செய்யும் பொன்னம்மாள்... |
மருதமுத்து கருமான்கந்தன் போன்ற மிகச் சாதாரண மக்களே பாத்திரங்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். சமுதாயத்தில் கேட்பார் அற்றுக் கிடக்கும் இவர்களை ஜெயகாந்தன் உண்மையான அனுதாபத்தோடு அணுகுகின்றார். படைக்கவில்லை. பர் , விரு அவர்களை ஜெயகாந்தன் தன் ' நான் எப்படித் தரிசிக்கிறேனோ அதை அப்படியே எனது நோக்கில் உங்களுக்குக் காட்ட விரும்புகிறே... |
ஆத்திரமும் , வெட்கமும் தன்மதிப்பும் உள்ள மக்கள் அவர்கள். ஜெயகாந்தனின் அத்தனைப் பாத்திரங்களும் உயிர்ச் சித்திரங்கள். நாம் அன்றாடம் வாழ்வில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள். பேனா முனையால் அழுத்தமாகப் படைத்துக் காட்டுகிறார். இதுவரைக்கும் அலட்சியமாக அவர்களை நோக்கிய நம் கண்கள் இப்பொழுது அகல விரிந்து காண்கின்றன. தாம் கதைகள் எழு... |
ஏழைத் தொழிலாளிகள் மட்டுமன்றி பிராமணக் குடும்பத்தினரும் , பங்களாக்களில் வாழும் மேல்தட்டு மக்களும் கூடப் பாத்திரங்களாக இவருடைய பிற்காலக் கதைகளில் இடம் பெறுகின்றனர். ஜெயகாந்தனின் கதைப் பாத்திரங்கள் அதிகமாகப் பேசுகின்றன. அதாவது , பாத்திரங்கள் மூலம் ஆசிரியரே வாழ்வியலை விமர்சனம் செய்கிறார். இது சில சமயம் கதையின் கலைத் தன்மைய... |
இவருடைய படைப்புகளில் காண முடியும். வினாக்கள் ஜெயகாந்தனின் முதல் கதை வெளியான இதழ் எது ? ஜெயகாந்தன் பாலுணர்ச்சி பேசும் கதைகளை எந்தக் காலக்கட்டத்தில் எழுதினார் ? ஜெயகாந்தன் பணியாற்றிய இதழ்கள் யாவை ? ஜெயகாந்தன் பெற்ற மிகப்பெரிய விருது யாது ? ஜெயகாந்தன் சிறுககை எழுதிய காலத்தைத் திறனாய்வாளர்கள் எவ்வாறு வகைப்படுத்துவர் ? படைப... |
, சுயதரிசனம் என்ற தொகுதிகளில் உள்ள சிறுகதைப் படைப்புகளில் முக்கியமாக வாழ்வியல் போராட்டங்கள் , வர்க்க முரண்பாடுகள் எடுத்துக் காட்டப்படுகின்றன. ஏழைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் இறைவனால் உருவாக்கப்படுவன அல்ல. மனிதனால் விளைவன என்று வர்க்கப் பேதத்தைத் தம்முடைய கதைகளில் அடையாளம் காட்டுகிறார். ஜெயகாந்தன் , தம் படைப்பாக்க நோ... |
அவர் வாழ்வின் கவர்ச்சியான உணர்ச்சித் அவஸ்தைகளை முக்கியமாக அவலங்களை மனத்தில் பதியும் முறையிலே சித்திரித்துள்ளார். அதாவது , இவருடைய நடை , படிப்பவரிடத்து அவர் ஏற்படுத்த விரும்பிய உணர்வை ஏற்படுத்தி விடுகின்றது. ஜெயகாந்தன் நடை உரத்துப் பேசும் நடை. ஆனாலும் , அதில் ஓர் இனிமை இருக்கிறது. மிக வலுவாய் முடுக்கிவிட்ட தந்தியில் , க... |
தயங்கும் சொற்களைத் தம் நடையின் ஊடே அங்கங்கே எடுத்தாண்டுள்ளார். அவர் , பல இடங்களில் பேச்சுத் தமிழை எடுத்தாண்டுள்ளார். அதைப் பற்றி அவர் 301 கூறும் போது , ' பிறந்த குழந்தையின் உயிர்தான் சுத்தம் : உடம்பு அல்ல. அதுமாதிரி என்னிடம் பிறக்கிற கதைகள் இலக்கியச் சுத்தம் உடையவை. மொழிச் சுத்தம் உடையவை அல்ல. என் கதைகள் நஞ்சுக் கொடியோ... |
செய்திகளுக்கு ஒரு செறிவையும் , குவி மையத்தையும் கொடுத்து வாசகர்களைக் குறிப்பிட்ட நோக்கு நிலைக்கு இழுத்துச் செல்ல உதவுகின்றன. ஜெயகாந்தன் நடையின் மற்றொரு சிறப்பு தர்க்க வாத முறையாகும். காரண காரிய முறைப்படி அமைந்த வேகமான விவாதமும் , இடையிடையே பொறி பறப்பது போன்ற சிந்தனைகளும் , புதுமையாகப் புகுத்தப்பட்ட சொற்பிரயோகமும் ‘ இது... |
நடையிலிருந்து வேறுபட்டுள்ளது. '... புதிதாய் மலர்ந்துள்ள ஒரு புஷ்பத்தின் நினைவே வரும். அதுவும் இப்பொழுது மழையில் நனைந்து ஈரத்தில் நின்று போன்ற கால்களும் , பாதங்களும் சிலிர்த்து , நீலம் பாரித்துப் போய் , பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக்கொண்டு சின்ன உருவமாய்க் குளிரில் குறுகி ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் ந... |
இடம்பெற்றுள்ளது. பார்ப்பனக் குடும்பத்தைப் பற்றிய கதைகளில் பார்ப்பனத் தமிழ் இடம்பெற்றுள்ளது யே சில இடங்களில் ஜெயகாந்தன் நடையில் தத்துவப் பாங்கும் உள்ளது. சான்றாக ஒன்றைக் காணலாம். ' ஆயிரம் விழுதுகள் இருக்கட்டுமே , ஒரு மூலமரம் தழைக்க முடியுமா ' என்றும் , ' பாவம் மனிதர்கள் ! சாவு வரும் வரை , அதற்குள் செத்து விடமாட்டோம் என்... |
தத்துவத்தைப் பேசியுள்ளார். 302 முரண் ஜெயகாந்தன் கதைகளில் முரண் என்ற உத்தி பரவலாகக் காணப்படுகிறது. அதாவது , எந்த ஒரு வாழ்வியல் பிரச்சினையையும் உடன்பாடு , எதிர்மறை என்ற இரு நோக்குகளில் தம் கதைகள் மூலம் பார்த்துள்ளார் ஜெயகாந்தன். ஒருவருக்கு உடன்பாடாக இருக்கும் ஒன்று இன்னொருவர் வாழ்க்கைக்குப் பொருந்தாது போய்விடும். அவரவருக... |
என்பதைத் தம் சில படைப்புகளின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார் ஜெயகாந்தன். இருளைத் தேடி என்ற கதையில் இருவேறு பெண்களைப் படைத்துள்ளார். ஒரு பெண் இருளில் தொழில் நடத்துபவள். மற்றொரு பெண் இருளில் , ஒளி நிறைந்த மின் விளக்கு முன்னால் நிர்வாணமாக நிற்பவள். அவளைப் பார்த்துப் பல ஆண்கள் சித்திரம் வரைவர். இதை அவள் ஒரு தொழிலாக மட்டுமன்... |
பாத்திரங்களாகும். அடுத்தடுத்துப் படிக்கும். வாசகர்கள் , ஆசிரியர் எக்கருத்துத் ஜெயகாந்தன் இரு மாறுபட்ட அல்லது முரண்பட்ட கதைக் கருக்களைத் தேர்ந்தெடுத்துக் கதைப்படுத்துவதும் உண்டு. அதற்கு யுகசந்தி , உடன்கட்டை , ஆளுகை , பிம்பம் என்ற கதைகளைச் சான்றுகளாகச் சுட்டலாம். யுகசந்தி கதையில் , விதவை மறுமணத்தை வற்புறுத்தும் ஜெயகாந்தன... |
திணறுவர். யாருக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை அப்படியே செய்ய விடுவதுதான் நல்லது. கணவனை இழந்த பெண் மறுமணம் செய்ய விரும்பினாலும் கைம்மைக் கோலம் பூண்டாலும் அது அவளுடைய தனிப்பட்ட அல்லது மனம் சம்பந்தப்பட்ட விஷயமாகும். சமூகம் , அவர்கள் மீது தன் கருத்தைத் திணிக்கக் கூடாது என்பதே ஜெயகாந்தனின் வாதம் , அதேபோல் , பிம்பம் , ஆளு... |
மாதத்தில் மறுமணம் 303 செய்து கொள்வதும் சுட்டப்படுகிறது. இதுவும் அவரவர் மனப்பக்குவத்தையும் தேவையையும் குறித்த ஒன்று என்று ஜெயகாந்தன் சுட்டிக் காட்டுகிறார். இப்படி வாழ்வியல் முரண்களை , முரண் உத்தியாகத் தம் கதைகளில் அவர் பதிவு செய்துள்ளார். ஜெயகாந்தனின் சமுதாயப் பார்வை ஜெயகாந்தன் மக்களுக்காக மக்களைப் பற்றி எழுதுபவர். இவரு... |
சொல்வது போல சமுதாயத்தை வெளிப்படுத்திக் காட்டும் கருவியாய் , கண்ணாடியாய் , ஓவியமாய் , கேலிச் சித்திரமாய் அமைந்திருக்கின்றன. சமுதாயத்தில் அடக்கப்பட்டவர்கள் , சுரண்டப் பட்டவர்கள் , அநீதிக்கு உள்ளானவர்கள் ஆகியோர் பக்கம் சார்ந்து தன் படைப்புகளைத் தந்துள்ளார் ஜெயகாந்தன். இவர்களையெல்லாம் தம் கதைப்பாத்திரங்களாகப் படைத்து , அவர... |
முட்டுக்கட்டையாக உள்ள கருத்துகளையும் வன்மையாகத் தன் கதைகள் மூலம் கண்டித்துள்ளார். மனித நேயம் ஜெயகாந்தனின் மனிதநேயம் பரந்துபட்டது. ஆண்மை நீக்கப்பட்ட காளை மாடுகளையும் , நகராட்சி வண்டியில் பிடித்துச் செல்லப்பட்ட தெரு நாயையும் தம் மனித எழுத்தில் அழியாத வியமாய்ப் காட்டியுள்ளார். பால்பேதம் , ஒரு இதோக வியா கதை என்பவை மாட்டைப்... |
கருத முடியாது. அவற்றை விடக் கேடான நிலையில் வாழும் மனிதனைப் பற்றியே பேசியுள்ளார். டிரெடில் என்ற கதையின் நாயகன் விநாயக மூர்த்தி ஓர் அச்சகத் தொழிலாளி. அவன் இயந்திரத்திடம் பழகிப் பழகி இயந்திர கதியிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறான். அவன் தன் உடல்நலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அச்சகமே தன் உறைவிடமாக , உயிர் மூச்சாகக் கொண்டிருக்கி... |
விடுகிறது. இக்கதையில் , ஜெயகாந்தன் ஒரு தொழிலாளியின் அந்தரங்கப் பிரச்சினையை மனித நேயத்தோடு கண்டு உணர்ந்து எழுதியுள்ளார். போர்வை என்ற மற்றொரு கதையில் வரும் கோபாலன் மன வக்கிரம் பிடித்தவன். அவன் ராஜம் என்ற பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தான். சரசா என்ற பெண் குளிக்கும் போது ரகசியமாகப் பார்க்கிறான். இப்படிப்பட்ட கீழ்மையான உடை... |
இருக்கிறது என்று காட்டுகிறார் ஜெயகாந்தன். இதுபோன்றே , ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில் , எத்தனைக் கோணம் எத்தனைப் பார்வை என்ற கதைகளையும் மனிதாபிமானத்தை மையமாக வைத்துப் படைத்துள்ளார். பெண் விடுதலை பெண்களைப் பற்றிய ஜெயகாந்தன் சிந்தனைகளை அவரது படைப்புகள் முழுவதிலும் பார்க்க முடியும். ஜெயகாந்தன் பார்வையில் இந்தியப் பெண்கள்... |
கொண்டு , அதன் வழியே இப்பக்கம் அப்பக்கம் திரும்பாமல் நடந்து செல்ல அவள் அனுமதிக்கப்படுகிறாள். கொஞ்சம் சுயேச்சையாக அவள் விலகி நடந்தாலும் அந்த முட்கம்பிகள் அவள் மீது கீறிவிடும். கீறிவிடும் என்ற பயமுறுத்தல் சதா சர்வகாலமும் அவளை நடுங்க கீறிக்கொண்டு விட்டால் இந்தச் சமூகமாகட்டும் , க் கொண்டிருக்கிறது. பெண் குணம் சார்ந்த குடும்... |
ஒப்புக் அவள் தனக்குள் சிதைந்து , விடுதலைக்கு வழியில்லாமல் , இடையில் கிடைக்கும் சிறு விடுதலையையும் பிறர் தட்டிப் பறிக்க , இறுதியில் புனித கங்கையில் தன்னை மூழ்கடித்துக் கொள்கிறாள் ( சில நேரங்களில் மனிதர்கள் , போகிறாள் ஆகிய கொள்ளவில்லை. எனவே சில கங்கை எங்கே நாவல்கள் ). அக்கினிப் பிரவேசம் தொடங்கி வைத்த பிரச்சினைகள் பெண் சா... |
ஆளுகை என்ற கதைகள் மூலம் ஜெயகாந்தன் நிறுவியுள்ளார். பெண்களைச் சுய சிந்தனை உடையவர்களாக , தமக்குச் சரி என்று பட்டதைத் தைரியமாகச் செய்பவர்களாக , அறிவாற்றல் உடை டையவர்களாக வேறு சில சிறுகதைகளில் படைத்துள்ளார். கட்டிப் பௌருஷம் என்ற கதையில் , முறைப் பெண்ணைத் தாலி பட்டணத்துக்கு அழைத்துச் சென்ற ரிக்சாக்காரக் கணவன் , மனைவியை விபச... |
அவன் ஆம்பிளையா இருந்தா இல்லே அவனுக்கு நான் பொண்டாட்டியா இருக்க ? ” என்று ஆவேசத்தோடு கூறுகிறாள். கற்பு நிலை என்ற கதையில் , ராஜம் என்ற பெண்ணை மணந்த சங்கரன் , வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொள்கிறான். அவன் , நெடுநாள் கழித்து ராஜம் வீட்டிற்குத் திரும்பி வரும்போது , அவளுடைய தங்கை மீனா , திருமணம் ஆகாமலே விதவைக் கோலத்தில் இருப்பதை... |
விதவைக் கோலம் ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறாள். மேலும் , பேச்சோடு பேச்சாக அவனது தகாத செய்கையைச் சுட்டிக் காட்டுகிறாள். ' என்ன பண்றது. புருஷாளெல்லாம் உங்கள் மாதிரி இருக்கிறதாலே , பெண்களுக்கு இதுதான் கெதி. கன்னியாகவே விதவையாகிடணும் ' என்று குத்தலாகச் சொல்கிறாள். மேலும் , ' என் வாழ்க்கை வீணாகியதென்று வருத்தப்படறேளே , முப்பத்... |
சட்டமோ ஓர் ஆணின் ஒழுக்கத்தைப் பாதுகாக்கவில்லை. ஒரு பெண்ணின் ஆன்மீக வாழ்க்கைக்கும் உத்திரவாதம் இல்லை என்ற கருத்தை இக்கதை மூலம் தெரிவிக்கின்றார் ஜெயகாந்தன். இவ்வாறு , ஆணாதிக்கப் போக்கை எதிர்த்துப் பெண்களையே தம் கதைகளில் வாதிட வைத்துள்ளார். பணத்தின் ஆதிக்கம் மனித வாழ்வில் பணம் எவ்வளவு தூரம் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதையு... |
எரிகிறது , தர்க்கம் ஆகிய சிறுகதைகள் இதற்குச் சான்றுகளாகும். விளக்கு எரிகிறது என்ற சிறுகதையில் , எழுத்தாளர் மருதநாயகத்தின் கற்பனையைப் பணம் எந்த அளவு சிதைக்கிறது என்பதை நன்கு எடுத்துக் காட்டியுள்ளார். என்னை நம்பாதே என்ற சிறுகதையில் , கணவன் எப்படியும் சாகத்தான் போகிறான் என்று தெரிந்தவுடன் , அவனுக்கு மேற்கொண்டு வைத்தியம் ச... |
இப்படி , செத்துக் சிலநாள்தானே. அதனால் பணத்தையெல்லாம் மருத்துவருக்குத் தருவதைவிட , தன் அன்பு மனைவியின் பிற்கால வாழ்க்கைக்குப் பயன்படட்டும் என்று அவளுக்குத் தெரியாமல் சேர்த்து வைக்கிறான். கொண்டிருப்பவனை விட , வாழ இருப்பவளின் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவல நிலைக்கு மனிதனைப் பணம் தள்ளுகிறது என்பதை இக்கதை வழி ஜெய... |
விட்ட விமர்சன அலைகள் , அந்தக் கதையின் தொடர்ச்சியாக வெளிவந்த சில நேரங்களில் சில மனிதர்கள் , கங்கை எங்கே போகிறாள் என்ற இருபெரும் மகத்தான நாவல்களின் பிறப்பிற்கு அடிப்படை காரணமாக அமைந்த இலக்கிய அனுபவம் ஜெயகாந்தனுக்கு ஏற்பட்டது போல் வேறு எந்த எழுத்தாளருக்கும் ஏற்படவில்லை. மொத்தத்தில் , தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஜெயகாந்தன் ... |
பெயரினைக் குறிப்பிடுக. பணத்தின் ஆதிக்கம் பற்றிப் பேசும் கதை ஒன்றின் பெயரினைக் கூறுக. ஜெயகாந்தன் ' கதை கதைக்காகவே ' என்ற கோட்பாடு உரையவரா ? அல்லது ' கதை வாழ்க்கைக்காக ' என்ற கோட்பாடு உடையவரா ? 307 3.4. தமிழ் நாடக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் முன்னுரை கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல் , இசை ,... |
ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது தனிச்சிறப்பாகும். தெருக்கூத்துகளாக இருந்து , மேடைநாடகங்களாக மாறி , இலக்கிய நாடகங்களாக மலர்ச்சி பெற்ற தமிழ்நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து இக்கட்டுரை மதிப்பீடு செய்கிறது. தமிழ்நாடகத்தின் தொன்மை தொல்காப்பியர் " நாடக வழக்கினும் " என்று நாடகத்தைக் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரம் நா... |
நாடக நூல்கள் பழந்தமிழர் வழக்கில் இருந்தன என்பதனைச் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் அவர்கள் குறிப்பிட்டுச் செல்கிறார். குறவைக் கூத்து , துணங்கைக் கூத்து , ஆடிப்பாவை போன்ற கூத்துவகைகளை சங்ககாலத்தில் காணமுடிகிறது. வகையான நாடகத்தின் நாடக இலக்கியம் நாடு + அகம் விளங்குவது நாடகம் ஆகும். நாட்டப்படுவது நாடகம்... |
நாடகத்தில் உரையாடல் முதலிடம் பெறும். பங்கு பெறுவோர் கதாபாத்திரங்கள் எனப் பெறுவர். நிகழ்ச்சி நடைபெறும் இடம் , காலம் , சூழல் ஆகியனவும் குறிக்கப் பெற வேண்டும். பேசுவோருக்கேற்ற உணர்ச்சிக் குறிப்புகள் ( மெய்ப்பாடு ) வசனத்தில் ஆங்காங்கே அடைப்புக் குறிக்குள் சுட்டப் பெறுவதும் உண்டு. 308 நாடகம் , பொதுவாக , தொடக்கம் , வளர்ச்சி ... |
அமையும். இன்பியலாகவோ , துன்பியலாகவோ நாடகங்கள் முடிவு பெறும். துன்பியல் முடிவுகளே பெரும்பாலும் வரவேற்புப் பெறும். நாடகம் இத்தனை பக்கங்கள் அல்லது இவ்வளவு கால நேரம் கொண்டதாக விளங்க வேண்டும் என்றெல்லாம் நடிக்கவும் தக்க வசனத்திற்கு மேலும் மெருகூட்டிக் எந்த வரையறையும் இல்லை. படிக்கத்தக்கன , நடிக்கத்தக்கன , படிக்கவும் எனப் பல... |
எனப் பலவாகக் கலைஞரின் நிலைக்கேற்ப நாடகங்கள் புத்தம் புதியனவாகப் படைத்தளிக்கப் பெற்று வருகின்றன. மேடை நாடகம் , சென்றடைகின்றன எனலாம். G இருவகை நாடகங்கள் வேத்தியல் , பொதுவியல் என நாடகங்களை அக்காலத்திலி இருவகையாகப் பகுத்திருந்தனர். வேத்தியல் என்பது வேந்தனுக்காக நடித்துக்காட்டப்படுவதாகும் , பொதுவியல் என்பது மக்களுக்காக நடித... |
பெநாட்டின் இக்கானிதிம் மகேந்திரத் வக்கு பல்லரியின் தெதவாக்கு பிரகசனம் ” என்ற நாடகநூல் புகழ்பெற்றிருந்தது. இன்னிசைக்கூத்து , வரலாற்றுக் கூத்து என இருவகை நாடக மரபுகளும் இக்காலத்தில் இருந்தன. சோழர் கால நாடகங்கள் சோழர் காலத்தில் இராஜராஜனின் பாராட்டும் “ இராஜராஜவிஜயம் " நிகழ்த்தப்பட்டது. இதில் நடித்தவர்களுக்கு “ ராசராச நாடக... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.