text
stringlengths
0
2.93k
தோழியா என்
முகத்தை எப்போதும்
கல்யாண மாலை
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி
மின்சாரம் என் மீது
மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே (2)
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே
உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே
நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்
உதடுகள் வேர்க்கும்வரை
உண்மையில் நானும் யோக்கியன்தானடி
உன்னைப் பார்க்கும்வரை
காதல் தீயே (4)
(மின்சாரம் என் மீது)
என்னைவிட இந்த உலகிலே
உன்னை மிகமிக விரும்பினேன்
உந்தன் அன்புதரும் சுகத்தினால்
இன்னும் உயிருடன் இருக்கிறேன்
தீ கூட தின்னத் தின்ன
தித்திக்கும் என்று கண்டேன்
அன்பே நீ பக்கம் வந்தாய்
புத்திக்கு ஓய்வு தந்தேன்
பெண்ணென்றால் மென்மை என்று
கவிதைகள் சொல்லி வந்தேன்
உன்னை நான் பார்த்த பின்தான்
கன்னத்தில் போட்டுக்கொண்டேன்
காதல் தீயே (4)
மெல்ல மெல்ல எந்தன் உயிரினை
மென்று தின்று இன்று சிரிக்கிறாய்
கொள்ளையடித்தது நீயேயடி
என்னைக் குற்றம் சொல்லித் திரிகிறாய்
பொல்லாத இம்சை ஒன்றில்
புரியாமல் மாட்டிகொண்டேன்
இம்சைக்கு இன்னொரு பேர்
காதல்தான் என்று கண்டேன்
அன்பே நீ அருகே வந்தால்
என் உலகம் சுருங்கக் கண்டேன்
ஒரு கோப்பை தண்ணீர் காதல்
அதில் நீந்தக் கற்றுக்கொண்டேன்
காதல் தீயே (4)
(மின்சாரம் என் மீது)
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்
கேளடி கண்மணி
இப்பவே இப்பவே
சொல்லி தரவா
நிற்பதுவே நடப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.
எனதுயிரே எனதுயிரே
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
என்னருமைக் காதலிக்கு
சாமிகிட்ட சொல்லி புட்டேன்
காதல் கவிதைகள்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும்
அமுதம் வழிந்தோடும் அழகில் கலந்தாட
இதந்தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
கைவீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
பண் பாடிடும் சந்தம் உந்நாவினில் சிந்தும்
அது மழையோ புனலோ நதியோ கடலழகோ
மேகம் ஒன்று நேரில் இன்று வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்டு பூமி நெஞ்சில் சேர்த்துக்கொண்டதடி
இது தொடரும் வளரும் மலரும்
இனி கனவும் நினைவும் உனையே
தொடர்ந்திடும்
(காதல்)