text
stringlengths
0
2.93k
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர்வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்
(நானாக)
மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்
நீயின்றி நான் காண வேறில்லை
(நானாக)
கண்டேன் கண்டேன்
பெண்: கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்
இரு விழியினிலே அவன் அழகுகளை
மிக அருகினிலே அவன் இனிமைகளை
தின்றேன் தின்றேன்
தெவிட்டாமல் நான் தின்றேன்...
பெண்: கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்
ஆண்: நீ வளையல் அணியும் கரும்பு
நான் அழகை பழகும் எறும்பு
பெண்: ஆ, நீ தழுவும் பொழுதில் உடும்பு
நாள் முழுதும் தொடரும் குறும்பு
ஆண்: சுடிதாரை சூடிச்செல்லும் பூக்காடு
தொடும் போது தூறல் சிந்தும் மார்போடு
பெண்: பகல் வேஷம் தேவையில்லை பாய்போடு
ப- ஆடு நானும் இல்லை தேன்கூடு
ஆண்: ஒரு விழி எரிமலை
மறு விழி அடைமழை பரவசம் உயிரோடு
பெண்: மேல் இமைகள் விரதம் இருக்க
கீழ் இமைகள் பசியில் துடிக்க..
ஆண்: கால் விர-ல் கலைகள் வசிக்க
கை விர-ல் கலகம் பிறக்க
பெண்: எனை மோதி போகும் தென்றல் தீ மூட்ட
இமையோரம் கோடி மின்னல் நீ காட்ட
ஆண்: தணியாத தாகம் உன்னை தாழ்பூட்ட
கனவோடு நீயும் வந்து போர் மீட்ட
பெண்: ஜனனமும் மரணமும்
பலமுறை வரும் - என்
தலையணை நினைவூட்ட
பெண்: கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்
இரு விழியினிலே அவன் அழகுகளை
மிக அருகினிலே அவன் இனிமைகளை
தின்றேன் தின்றேன்
தெவிட்டாமல் நான் தின்றேன்...
வாசமில்லா மலரிது
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி
ஏதேதோ எண்ணங்கள்
அதோ மேக ஊர்வலம்
அதோ மேக ஊர்வலம்,
அதோ மின்னல் தோரணம், அங்கே!
இதோ காதல் ஊர்வலம்,
இதோ காமன் உற்சவம், இங்கே!
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்,
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா!
(அதோ...........)
உனது பாதம் அடடடா இலவம் பஞ்சு!
நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு!
இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம்!
நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்!
தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே!
ஆடை என்ன வேண்டுமா? நாணம் என்ன வா வா!
(அதோ............)
குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்!
முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்!
தென்னன் பாண்டி முத்தைப் போல், தேவி புன்னகை!
பந்து ஆடச் சொல்லுமே செண்டு மல்லிகை!
உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான்!
காதல் பிச்சை வாங்குவான், இன்னும் என்ன சொல்ல...?
(அதோ..........)
என் வீட்டுத் தோட்டத்தில்
ஒரு காதல் தேவதை
முகத்தை எப்போதும்
தாலியே தேவ இல்ல