text
stringlengths
0
2.93k
என் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே
(மின்னலே............)
கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே - உன்
கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே - இங்கு
சிதறிப்போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீவளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்
காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
(மின்னலே............)
பால்மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா - ஒரு
பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா - நான்
காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீவளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்
காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
(மின்னலே.........)
ரகசிய கனவுகள்
இவன் பேரை சொல்லும் போது- எந்திரன்
சின்ன சின்ன தூரல் வந்து
என்னை பந்தாடப்
காதல் வந்தால் சொல்லி
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி
(சுட்ட)
கண்ணீர் கலந்து, கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டும் கூடுதடி
(காதல் வந்தால்...........)
உயிரைத் தவிர சொந்தம் இல்லையே
காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே
காதல் வந்த பின்பு
சாவை அழைத்துக் கடிதம் போட்டேன்
காதலிக்கும் முன்பு
ஒரு சாவைப் புதைக்க சக்தி கேட்கிறேன்
காதல் வந்த பின்பு
உன்னால் என் கடல் அலை உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை
கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரைக் கொல்லுதடி.. கொல்லுதடி
(காதல் வந்தால்..............)
பிறந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் கண்ட பின்பு
அன்னை தந்தை கண்டதில்லை நான்
கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்
உன்னைக் கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை...
அதற்குள் அது முடிவதா? விளங்கவே இல்லை..
நான் கரையாவதும், இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும், உன் சொல்லில் உள்ளதடி...
உன் இறுக்கம் தான் என் உயிரைக் கொல்லுதடி... கொல்லுதடி
என்னவளே அடி
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதல் என்றால் பெரும் அவஸ்தையென்று
உன்னைக் கண்டதும் கண்டுகொண்டேன்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்
(என்னவளே.................)
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா
ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி