text stringlengths 0 2.93k |
|---|
உலவி திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது |
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது |
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் |
மனிதரின் மொழிகள் தேவையில்லை |
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் |
மனிதர்க்கு மொழியே தேவையில்லை! |
காற்றின் மொழி... |
வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும் |
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும் |
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும் |
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும் |
ஓசை தூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும் |
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூட மொழியாகும் |
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் |
மனிதரின் மொழிகள் தேவையில்லை |
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் |
மனிதர்க்கு மொழியே தேவையில்லை! |
காற்றின் மொழி... |
உசுரே போகுதே உசுரே போகுதே ... |
முதன் முதலில் |
கரிகாலன் காலைப் போல |
முதல் மழை |
ஓ மனமே ஓ மனமே |
உள்ளிருந்து அழுவது ஏன் |
ஓ மனமே ஓ மனமே |
சில்லுசில்லாய் உடைந்தது ஏன் |
மழையைத்தானே யாசித்தோம் |
கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார் |
பூக்கள் தானே யாசித்தோம் |
கூழாங்கற்களை எறிந்தது யார் |
(ஓ மனமே) |
மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து |
வானத்தில் உறங்கிட ஆசையடி |
நம் ஆசை உடைத்து நார் நாராய்க் கிழித்து |
முள்ளுக்குள் எரிந்தது காதலடி |
கனவுக்குள்ளே காதலைத் தந்தாய் |
கணுக்கள்தோறும் முத்தம் |
கனவு கலைந்து எழுந்து பார்த்தால் |
கைகள் முழுக்க ரத்தம் |
துளைகள் இன்றி நாயனமா |
தோல்விகள் இன்றி பூரணமா |
(ஓ மனமே) |
இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து |
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை |
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து |
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை |
இன்பம் பாதி துன்பம் பாதி |
இரண்டும் வாழ்வின் அங்கம் |
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் |
நகையாய் மாறும் தங்கம் |
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி |
வெற்றிக்கு அதுவே ஏணியடி |
(ஓ மனமே) |
நேற்று முன்னிரவில் |
நேற்று முன்னிரவில் உன்னி |
நேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழைவதேனோ |
உயிர் கலந்து களித்திருந்தேன் |
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பதேனோ |
மனம் கலங்கி புலம்புகிறேன் |
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் (2) |
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி |
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே |
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள் |
செவிகொடு ஸ்னேகிதனே |
இதே அழுத்தம் அழுத்தம் |
இதே அணைப்பு அணைப்பு |
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டும் |
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டுமே |
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே |
சின்னச்சின்ன அத்துமீறல் புரிவாய் |
என் Cell எல்லாம் பூக்கள் பூக்கச்செய்வாய் |
மலர்களில் மலர்வாய் |
பூப்பரிக்கும் பக்தன்போல மெதுவாய் |
நான் தூங்கும்போது விரல்நகம் களைவாய் |
சத்தமின்றி துயில்வாய் |
ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி |
சேவைகள் செய்யவேன்டும் |
நீயழும்போது நான் அழ நேர்ந்தால் |
துடைக்கின்ற விரல் வேண்டும் |
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே |
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள் |
செவிகொடு ஸ்னேகிதனே |
(நேற்று முன்னிரவில்) |
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன் (2) |
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன் |
காதில் கூந்தல் நுழைப்பேன் |
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.