text
stringlengths
0
2.93k
(ஆலெ ஆலெ)
விழிகளின் அருகினில்
என்னருமைக் காதலிக்கு
தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே
என்ன சத்தம் இந்த
மஞ்சள் வெயில்
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே கூடக்கூட வந்தாய்
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திரப் பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்
மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே
தயக்கங்கள் விலகுதே தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன என்றேதான் தேடுதே
(வெண்ணிலவே)
பூலோகத்தின் கடைசிநாள் இன்றுதானோ என்பதுபோல்
பேசிப்பேசித் தீர்த்தபின்னும் ஏதோ ஒன்று குறையுதே
உள்ளே ஒரு சின்னஞ்சிறு மரகத மாற்றம்வந்து
குறுகுறு மின்னலென குறுக்கே ஓடுதே
(வெண்ணிலவே)
(மஞ்சள் வெயில்)
(தயக்கங்கள் விலகுதே)
வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில் சிலர் நடக்கிறார் நடக்கிறார்
மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்யுது பெய்யுது மழை நனைகிறார் நனைகிறார்
யாரோ யாரோ யாரோ அவள்
ஹே யாரோ யாரொ யாரோ அவன்
ஒரு காலும் காலும் வெட்டிக்கொள்ள
இருதண்டவாளம் ஒட்டிச்செல்ல
(வெண்ணிலவே)
இன்னும் கொஞ்சம் நீளவேணும்
இந்த நொடி இந்த நொடி
எத்தனையொ காலம் தள்ளி
நெஞ்சோரம் பனித்துளி
நின்றுபார்க்க நேரமின்றி
சென்றுகொண்டே இருந்தேனே
நிற்கவைத்தாள் பேசவைத்தாள்
நெஞ்சோரம் பனித்துளி
அடடா அடடா
என்ன சொல்ல, ஏது சொல்ல...
மின்னல்கள் கூத்தாடும்
கண்கள் இரண்டால்
பார்த்த முதல்நாளே
பார்த்த முதல்நாளே உன்னை பார்த்த முதல்நாளே
காட்சிப்பிழைபோலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறிப் பின் எனை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய
உன் முகம் உன் முகம்
என்றும் மறையாதே
காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே
கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை பார்த்தே கடந்தேன் பகல் இரவை
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழையானேன்
காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்
தேடிப்பிடிப்பதுந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசிக் காட்சிக்குள்
நிற்பதும் உன் முகமே
எனைப்பற்றி எனக்கே தெரியாத பலவும்
நீ அறிந்து நடப்பதை வியப்பேன்
உனை ஏதும் கேட்காமல்
உனதாசை அனைத்தும்
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்
போகின்றேன் என நீ பலநூறு முறைகள்
விடைபெற்றும் போகாமல் இருப்பாய்
சரி என்று சரி என்று உனைப் போகச்சொல்லி
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்
(காட்டிக் கொடுக்கிறதே)
(ஓர் அலையாய்)
உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்
தூங்காமல் அதைக்கண்டு ரசித்தேன்
தூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் காட்சி
கனவாக வந்தது என்று நினைத்தேன்
யாரும் மானிடரே இல்லாத இடத்தில்
சிறுவீடு கட்டிக்கொள்ளத் தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை
மரந்தோறும் செதுக்கிட வேண்டும்
கண்பார்த்துக் கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்
கண்கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
(பார்த்த முதல்)
(ஓர் அலையாய்)
மெல்லினமே மெல்லினமே