text
stringlengths
0
2.93k
கொட்டும் மழையிலும்
சுட்டெரிக்கிறது
உன் சுவாசக்காற்று
அணைத்துவிடு
கொஞ்சம் நனைத்து
முத்த மழையில்
நீ சேயாகும்
போதெல்லாம்
நானும் தாயாகின்றேன்
உன் உறக்கத்தை
ரசித்தபடி
மழை
நின்ற பின்னும்
இலையில்
ஒட்டியிருக்கும்
நீர் துளிகளாய்
நீ சென்ற
பின்னும்
மனதை நனைக்கின்றது
நினைவு துளிகள்
கண்களில்
கலந்தாய்
காதலில்
கரைந்தேன்
கூட்டத்தில்
இருந்தாலும்
கூண்டு கிளியாய்
அடைபட்டு
விடுகிறேன் உன்னுள்
மலராய் மலர்ந்தாய்
மனதில் மகிழ்வானது
மண வாழ்க்கையும்
அசைப்போடும்
நினைவுகளோடு
அசையாது காத்திருக்கு
விழிகளும்
பல ஆசைகள் கொண்டு
ஆவலோடு உனக்காக
யாரோ இருவர்
கரங்களை கோர்த்தபடி
எனை கடக்கயில்
நாமிணைந்து
பயணித்த பயணங்கள்
தொடர்கிறது
என் மனதிலும்
உன்னோடு உரையாட
சேர்த்து வைத்த
வார்த்தைகளை
எல்லாம் உளறி
நிலவோடு
ஒரு ஒத்திகை
நீ வரும்
வரை
சுகமான
உன் நினைவு
தான் சுமையாகி
கனக்கின்றது
உனை காணாத
போது
உன் தாமதத்தில்
திட்டி தீர்க்கிறேன்
கடிகார முட்களை
மெதுவாக நகர்வதாய்
உனை திட்ட
மனமின்றி
கடத்துகிறாய்
காந்த கண்களால்
நழுவுகிறது
இதயமும்
உன் பக்கம்
உறங்காமல்
ஒரு கனவு
உன் அன்பின்
துளிகளை
பஞ்சணையாக்கி
உனை ரசித்தே
என் விழிகளும்
அழகானது
மனதோடு நீ
மகிழ்வோடு நான்
உன்னை முந்தி கொண்டு
ஓடோடி வந்து
விடுகிறது
என்னை தொல்லை