text
stringlengths
0
2.93k
மோதுவது
விழிகள் தான்
ஆனால்
உடைவதோ இதயமே
என் அத்தனை
சந்தோசத்துக்கும்
உன் ஒற்றை
புன்னகையே
போதுமானதாக
இருக்கின்றது
மலர்ந்த
ரோஜா போல்
சிரிக்கிறாய் என்றேன்
மீண்டுமொரு வெட்கச்
சிரிப்பை
உதிர்த்துச் சென்றாள்
மரணம் இல்லாமல்
வாழ ஆசை தான்
இந்த மண்ணில் அல்ல
உன் மனதில் மட்டும்
பேராசை எனக்கென்று
ஒன்றுமில்லை
என்விழி நோக்கும்
திசையனைத்தும் விடியலாய்
நீயிருந்தால் போதும்
வாழ்கிறாய்
நீ என்னுள்
நினைவுகளாய்
மௌனங்களாய்
சொற்களாய்
எழுத்துக்களாய்
மகிழ்வாய்
கண்ணீராய்
வாழ்கிறாய்
நீ என்னவனே
நீ இல்லாத
தருணங்கள் கூட
தனிமை என்பதை
யான் அறியேன்
அப்போது
உன் நினைவுகளில்
நான் மூழ்கியிருப்பேன்
காத்துக் கிடத்தலின்
சுகம் அறிகிறேன்
என் காதலே
நீ என்னை தழுவும்
நொடிகளுக்காக
மனிதம் இருக்கு
என்று நம்புங்கள்
அதை மற்றவர்களிடம்
இருந்து மட்டும்
எதிர்பார்த்து விடாதீர்கள்
மனபாரங்களால்
வீழ்ந்திடாமல்
தாங்கிக்கொள்ள
செய்கிறதே
இச்சிரிப்பு
எல்லா எதிர்பார்ப்புகளிலும்
ஏமாற்றம் என்ற பரிசும்
எல்லா ஏமாற்றத்திற்கு
பிறகும் பக்குவம்
என்ற பரிசும்
கிடைப்பதற்கு
பெயர் தான் வாழ்க்கை
மற்றவர்களை
தரம் தாழ்த்தி பேசுவதால்
ஒருபோதும் அவர்களின்
தரம் குறையப் போவதில்லை
மற்றவரோடு
நம்மை ஒப்பிட்டால்
ஒன்னு தாழ்வு
மனப்பான்மை ஏற்படும்
இல்லைனா தலைக்கணம் அதிகமாகும்
ரெண்டுமே வாழ்க்கையில
தேவையில்லாத ஆணி தான்
வெற்றி என்பது
ஒவ்வொரு முறையும்
முதல் இடத்தை
பெறுவது என்று
பொருள் அல்ல
இன்று வெற்றி
பெற்றாய் என்றால்
உன் செயல்பாடு
சென்ற முறையை
விட இம்முறை
சிறப்பாக உள்ளது
என்று மட்டுமே பொருள்