category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | நிதி ஒதுக்க கமிஷன் கேட்பதாக தி.மு.க., எம்.பி., மீது புகார் | தூத்துக்குடி : ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் கட்ட தன்னுடைய நிதியை ஒதுக்க அதில் 25 சதவீதம் கமிஷன் கேட்பதாக, தூத்துக்குடி தி.மு.க., எம்.பி.,ஜெயதுரை மீது புகார் கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ளது ராஜாவின்கோவில் ஊராட்சி. இங்கு, சமுதாய நலக்கூட்டம் கட்ட, 10 லட்சம் ரூபாயை எம்.பி., தொகுதி வள... |
தமிழகம் | திருச்செந்தூரில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி | திருச்செந்தூர் : திருச்செந்தூரில் விஷம் குடித்த காதல் ஜோடிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது; நீலகிரி மாவட்டம் கூடலூர் எம்ஜிஆர்., நகரைச் சேர்ந்தவர் அழகுபாண்டி மகன் அசோக்(19). இவர் கம்ப்யூட்டர் பயின்று வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் சாந்தி(18) பிளஸ் 2 படித்து... |
தமிழகம் | வைப்பாற்றில் மணல் கொள்ளை குடிநீர் விநியோகம் பாதிப்பு | விளாத்திகுளம் : விளாத்திகுளம் பகுதியில் உள்ள வைப்பாற்றில் மணல் கொள்ளை நடப்பதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வள்ளிநாயகிபுரம் பஞ்., தலைவர் புகார் தெரிவித்துள்ளார்.இது குறித்து வள்ளிநாயகிபுரம் பஞ்., தலைவர் பட்டுராஜ் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விளாத்திகுளம் யூனியனி... |
தமிழகம் | சாத்தை., புதிய கவுன்சிலர் பதவியேற்பு | சாத்தான்குளம் : சாத்தான்குளம் டவுன் பஞ்., இடைத்தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட கலைச்செல்வி உறுப்பினராகப் பதவியேற்றார்.சாத்தான்குளம் டவுன் பஞ்., 9வது வார்டு உறுப்பினர் சாந்தி இறந்ததால் காலியாக இருந்த இடத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் சாத்தான்குளம் பண்டாரஞ்செட்டிவிளை செட்டியார் நடுத்தெருவைச் சேர்... |
தமிழகம் | கணவரை கண்டுபிடித்து தரக்கோரி போலீஸ் ஸ்டேஷன் முன் பெண் தர்ணா | சிதம்பரம் : கணவரை கண்டு பிடித்துத் தரக்கோரி கொடுத்த புகாரை போலீசார் வாங்க மறுத்ததால், போலீஸ் ஸ்டேஷன் முன், பெண் தர்ணாவில் ஈடுபட்டார். சிதம்பரம் கொள்ளுமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி. இவரது மனைவி பாப்பாத்தி என்கிற பாத்திமா (24). இவர்களுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது... |
தமிழகம் | காமராஜர் பிறந்தநாள் விழா | தூத்துக்குடி : காட்டுநாயக்கன் பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் விஜயராகவன் தலைமை வகித்தார். விழாவில் மாணவ மாணவிகள் காமராஜர் பற்றிய சொற்பொழிவு கள், காமராஜரின் தொண்டுகள் பற்றிய பாடல்கள், தமிழ் மொழியின் செம்மொழிப்பாடல், நடனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெ... |
தமிழகம் | பேய்க்குளத்தில் ஆழ்வை.,ஒன்றிய குழு கூட்டம் | பேய்க்குளம் : பேய்க்குளத்தில் தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் ஆழ்வை., ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநிலத் தலைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். ஆழ்வை., யூனியன் செயலாளர் சிங்கராஜ் முன்னிலை வகித்தார். ஆழ்வை., யூனியன் அமைப்பாளர் மருதநாயகம் வரவேற்றார்.
கூட்டத்தில் வரும் ஆகஸ்ட் மாத... |
தமிழகம் | பொது இடத்தில் "தம்' 11 பேருக்கு அபராதம் | திசையன்விளை:திசையன்விளையில் பொது இடத்தில் புகைபிடித்த 11 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.நெல்லை சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீராமுகைதீன் உத்தரவின்பேரில் திசையன்விளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரவீன் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சாகுல்ஹமீது முன்னிலையில் சுகாதார ஆய்வாளர்கள் பெலிக்சன், சிதம்பர... |
தமிழகம் | சாத்தை.,யில் வரும் 31ல் மாணவர் திருவிழா : எம்.பி., எம்.எல்.ஏ., பங்கேற்பு | சாத்தான்குளம் : சாத்தான்குளம் காமராஜர் நினைவாலய கமிட்டி சார்பில் மாணவர் திருவிழா வரும் 31ம் தேதி நடக்கிறது. எம்.பி., ராமசுப்பு, எம்.எல். ஏ., ராணி வெங்கடேசன் கலந்து கொள்கின்றனர்.சாத்தான்குளம் காமராஜர் நினைவாலய கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் காமராஜர் பிறந்த நாள் விழாவை மாணவ, மாணவியர் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். இந்... |
தமிழகம் | காருகுறிச்சி கோயில் கொடை விழா | வீரவநல்லூர்:காருகுறிச்சி சுடலைமாடசுவாமி கோயிலில் கொடைவிழா நடந்தது.காருகுறிச்சி சேனைத்தலைவர் சமுதாய சுடலைமாட சுவாமி கோயில் கொடைவிழா இரண்டு நாட்கள் நடந்தது. முதல்நாள் குடிஅழைப்பு, தாமிரபரணி ஆற்றிலிருந்து கும்பநீர் எடுத்து வருதல், அத்தாளநல்லூர் ஆற்றிலிருந்து கும்பநீர் எடுத்து வருதல் மற்றும் வில்லிசை நடந்தது.இரண்டாம் நாள் ... |
தமிழகம் | செந்தூரில் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு ஓவியப் போட்டி | ஆறுமுகநேரி : திருச்செந்தூரில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே ஓவியப் போட்டி நடக்கிறது.இது குறித்து சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் சங்க தலைவர் தவசிமுத்து தெரிவித்துள்ளதாவது,
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுக... |
தமிழகம் | இலவச நோட்டுகள் வழங்கும் விழா | நாசரேத் : சாத்தான்குளம் யூனியன் பூவுடையார்புரம் நடுநிலைப்பள்ளியில் இலவச நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது.சாத்தான்குளம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மீனாட்சி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் நோபுள்துரை முன்னிலை வகித்தார். மாணவர் சிவா வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள், ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழ... |
தமிழகம் | கீழப்பாவூரில் உபவாச ஜெபம் | பாவூர்சத்திரம்:கீழப்பாவூரில் உபவாச ஜெபம் நடந்தது.கீழப்பாவூரில் கர்த்தரின் பாதத்தில் ஒர்நாள் சிறப்பு உபவாச ஜெபம் நல்ல சமாரியன் ஊழிய வளாகத்தில் நடந்தது. சுரண்டை இயேசுவே தெய்வம் ஊழியங்கள் பாஸ்கர் உபவாச ஜெபத்தை நடத்தினார். கீழப்பாவூர் வட்டார ஜெப ஐக்கியம் அமைப்பாளர் சோபனா மனோகரன் ஜெப வழிபாடுகளை விளக்கம் செய்தார்.ஏற்பாடுகளை ... |
தமிழகம் | பூலாங்குளம் பள்ளியில் செயல் திட்ட பயிற்சி | பாவூர்சத்திரம்:பூலாங்குளம் யூனியன் துவக்கப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு சமூக அமைப்பு சார்ந்த பிரதிநிதிகளுக்கு செயல் திட்டப் பயிற்சி ஒருநாள் நடந்தது.பயிற்சிக்கு பனை தொழிலாளர் சங்க தலைவர் ராமசாமி நாடார் தலைமை வகித்தார். ஜெயலட்சுமி வரவேற்றார். நவஜீவன் டிரஸ்ட் இயக்குனர் நளன் பயிற்சியை துவக்கி வைத்து பேசினர். தீபம... |
தமிழகம் | கொடிக்குறிச்சி பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா | தென்காசி:கொடிக்குறிச்சி இந்து மறவர் நடுநிலைப் பள்ளியில் கிராம கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த இவ்விழாவிற்கு பஞ்.,தலைவர் செல்லத்துரை தலைமை வகித்தார். தலைமையாசிரியர் மாணிக்கவாசகம் வரவேற்றார். பேச்சு போட்டி, ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.ஆசிரியைகள் தமிழ... |
தமிழகம் | கல்வி வளர்ச்சி நாள் | நாசரேத் : நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினர் நாசரேத் துரை தலைமை வகித்து காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். தலைமை ஆசிரியை ஜெயபாக்கியம் வரவேற்றார். தாளாளர் மெற்றில்டா முன்னிலை வகித்தார்... |
தமிழகம் | ஸ்பெக்ட்ரம் பள்ளியில் பாராட்டு விழா | தென்காசி:இலத்தூர் விலக்கு ஸ்பெக்ட்ரம் பள்ளியில் ஆசிரியைகளுக்கு பாராட்டு விழா நடந்தது.இலத்தூர் விலக்கு கதிர்காந்தம் ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆசிரியைகளுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் திருமாறன் தலைமை வகித்தார். ஆசிரியைகள் சந்திரா, சொர்ணம், சண்முகப்பிரியா, அருணாதேவி, ஜெயசெல்வி, பாலசெல்வி, ... |
தமிழகம் | போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் மாஜி தலைமையாசிரியர் வீட்டில் சோதனை | திருவண்ணாமலை : போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்பு விவகாரத்தில், கைதான ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திருவேங்கடத்தை போலீசார் கைது செய்தனர். இவரிடம் விசாரணை நடத்த கு... |
தமிழகம் | உடன்குடி இசக்கியம்மன் கோயிலில் வரும் 26ல் ஆடிக் கொடைவிழா | உடன்குடி : உடன்குடி இசக்கியம்மன் கோயில் ஆடிக் கொடை விழா வரும் 26ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.உடன்குடி இசக்கியம்மன் நகர் இசக்கி அம்மன் கோயில் அப்பகுதியில் பிரசித்தி பெற்றது. கோயில் கொடைவிழா வரும் 26ம் தேதி மாலை 6 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் துவங்குகிறது. இரவு 7 மணிக்கு மழை வேண்டி சிறப்பு திருவிளக்கு பூஜை, இரவ... |
தமிழகம் | செந்தூரில் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம் | திருச்செந்தூர்: இந்து மாணவர்களுக்கும் கல்வி கட்டணச் சலுகை அளிக்க வலியுறுத்தி திருச்செந்தூரில் பா.ஜ.,சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. இந்து மாணவர்களுக்கும் பிற மதத்தினரைப் போல் கல்வி கட்டணச் சலுகை மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டும் என பா.ஜ.,நாடு முழுவதும் வலியுறுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூ... |
தமிழகம் | செந்தூரில் அன்னதானம் | திருச்செந்தூர்: காமராஜர் பிறந்தநாளில் திருச்செந்தூரில் விஜயசீலன் அன்னதானத்தை துவக்கி வைத்தார். காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூரில் நடந்த விழாவிற்கு மத்திய, மாநில சென்சார் போர்டு உறுப்பினர் ஜெயசேகர் தலைமை வகித்தார். வட்டார மாணவர் காங்., தலைவர் காளிமுத்து முன்னிலை வகித்தார். விழாவில் விஜயசீலன் கலந்து கொண்டு... |
தமிழகம் | சாத்தை.,யில் வாலிபால் போட்டி யூனிவர்சல் அணிக்கு முதல் பரிசு | சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் நடந்த காமராஜர் பிறந்த தினவிழா வாலிபால் போட்டியில் யூனிவர்சல் அணி முதல் பரிசு பெற்றது.சாத்தான்குளம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் வாலிபால் போட்டி புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. வர்த்தக சங்க கௌரவத் தலைவர் திருமால் தலைமை வகித்தார். வர்த்தக சங்கத் தலைவர் சுந்தரானந்... |
தமிழகம் | சுரண்டையில் இருபெரும் விழா | சுரண்டை:சுரண்டையில் ச.ம.க.சார்பில் இருபெரும் விழா நடந்தது.சுரண்டையில் ச.ம.க., தலைவர் சரத்குமார் 56வது பிறந்த நாள் விழா, காமராஜரின் 108வது பிறந்த நாள் விழா ஆகிய இருபெரும் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு முக்கிய பகுதிகளில் ச.ம.க., கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. நகர செயலாளர் செல்வராஜ் இனிப்பு வழங்கினார். மாவட்ட ம... |
தமிழகம் | பல்சமய மன்ற விழா | தூத்துக்குடி : தூத்துக்குடி புனித அலாய்சியஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பல்சமய மன்ற விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி பானுமதி ஆஸ்பத்திரி இயக்குநர் விஜயரங்கன் தலைமை வகித்தார். ஆசிரியர் எழிலன் வரவேற்றார். மதநல்லிணக்கம் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மார்ச் 2010ல் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் விலங்கியல் பாடத்தில் மாநி... |
தமிழகம் | பேய்க்குளம் கோயிலில் திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி | பேய்க்குளம் : பேய்க்குளம் சங்கரநயினார்புரம் சங்கரலிங்கசுவாமி உடனுறை கோமதி அம்பாள் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி நடக்கிறது.வெங்கடேஸ்வரபுரம் சங்கரலிங்கசுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோயிலில் வரும் 25ம் தேதி ஆடித்தபசு திருவிழா நடக்கிறது. கடந்த 15ம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா ... |
தமிழகம் | தகவல் அறியும் உரிமை சட்டம் தகவல் பலகையில் எழுத உத்தரவு | புதூர் : தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பள்ளி தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளி தகவல் பலகையில் நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்வி கட்டண விபரங்களை எழுதி வைக்க வேண்டும். லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். மீறி வாங்குவோர் குறித்து புகார் தெரிவிக்க வேண்டும் என எழுதி வைக்... |
தமிழகம் | சிவகுருநாதபுரம் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் | சுரண்டை:சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பழனிநாடார் தலைமை வகித்தார். சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டியினர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை மாரியம்மாள் வரவேற்றார். இப்பள்ளியில் பயின்று 12ம் வகுப்பு அரசு தேர்வில்... |
தமிழகம் | கோரிக்கையை வலியுறுத்தி ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்பாட்டம் | தூத்துக்குடி : 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஓட்டபிடாரத்தில் கோரிக்கை ஆர்பாட்டம் நடத்தினர்.சமச்சீர் கல்வி முறையில் 1ம் வகுப்பிற்கு தரமான பாடப்புத்தகங்களை கொடுத்துவிட்டு அட்டைகளையும் கொடுத்து குழப்புவதை கைவிட வேண்டும், ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30 என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும்,... |
தமிழகம் | காமராஜர் பிறந்த நாள் விழா | தென்காசி:அணைந்தநாடார்பட்டி பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.அணைந்தநாடார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சண்முகநாடார் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். பேச்சு போட்டி, கட... |
தமிழகம் | எட்டயபுரம் அருகே பஸ், பைக் மோதல்:ஒருவர் பலி | எட்டயபுரம் : எட்டயபுரம் அருகே அரசு பஸ், பைக் மோதலில் பைக்கில் சென்ற ரெடிமேட் துணி வியாபாரி பலியானார்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது; புதியம்புத்தூரில் வசிக்கும் குருசாமி மகன் பொன்னுச்சாமி(45). இவர் புதியம்புத்தூரிலிருந்து கட்பீஸ் துணிகளை வாங்கி வந்து எட்டயபுரத்தில் ரெடிமேட் ஆடைகள் தைத்து விற்பனை செய்வாராம். ... |
தமிழகம் | உடன்குடி அருகே ரேஷன்கடையைபொதுமக்கள் முற்றுகை | உடன்குடி : உடன்குடி அருகே ரெங்கநாதபுரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றாததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து கடையை முற்றுகையிட்டனர். இதனால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.உடன்குடி அருகே ரெங்கநாதபுரத்தில் மண்ணெண்ணெய் சிறு வணிகர் ஏஜென்சி எடுத்து செல்லத்துரை என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ரெங்கநாதபுரத்தில்... |
தமிழகம் | ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா : வரும் 31ல் கொடியேற்றம் | ஏரல் : ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு வரும் 31ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. ஆடிஅமாவாசை திருவிழா வரும் ஆக.9ம் தேதி நடக்கிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடக்கும். இந்த ... |
தமிழகம் | கீழப்புலியூர் பள்ளியில்கல்வி குழு விழா | தென்காசி:கீழப்புலியூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் கிராம கல்வி குழு விழா நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த இவ்விழாவிற்கு ஆசிரியர் பாண்டியன் தலைமை வகித்தார். ஆசிரியர் கணேசமூர்த்தி வரவேற்றார். ஆசிரியர் முத்தையா செயல் வழிக்கற்றல் பற்றி விளக்கினார். ஆசிரியை சிங்கம்மாள் கணித பாடத்தை செயல் வழிக் கற்றல் முறையில் கற்று கொடுத்தார்.... |
தமிழகம் | சாத்தை., நூலகத்தில் இருபெரும் விழா | சாத்தான்குளம் : சாத்தான்குளம் அரசு நூலகத்தில் 108 மாணவர்களுக்கு இலவசமாக உறுப்பினராக சேர்த்தல் விழா மற்றும் கோடை கால குழந்தைகள் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.சாத்தான்குளம் கோபாலகிருஷ்ணபிள்ளை நினைவு இலவச அரசு நூலகத்தில் காமராஜரின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு 108 மாணவர்களை நூலக உறுப்பினராக சேர்க்கும் விழா நடந்தது. நூலகப... |
தமிழகம் | மனைவி மாயம் :கணவர் போலீசில் புகார் | ஆறுமுகநேரி: காயல்பட்டணத்தில் மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, காயல்பட்டணம் வண்டிமலைச்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆண்டி(37). இவர் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அனிதா(34). இவர் ... |
தமிழகம் | தென்காசி கோயில்களில் பிரதோஷ வழிபாடு | தென்காசி:தென்காசி கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் நந்திக்கு எண்ணெய் காப்பு சாத்தப்பட்டது. பின்னர் மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந... |
தமிழகம் | வருமுன் காப்போம் மருத்துவ முகாம் | பெரியதாழை : தட்டார்மடம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பு கிராமத்தில் அரசின் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் நடந்தது.கொம்மடிக்கோட்டை பஞ்., தலைவர் தாமஸ் தலைமை வகித்து, முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் ரத்த சோகை, மூக்கு, தொண்டை, கண் போன்ற நோய்களுக்கும் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கும் சிறப்பு டா... |
தமிழகம் | ஆட்டோ ஓட்டுநர் சங்க ஆண்டு விழா | நாசரேத் : நாசரேத்தில் காமராஜர் ஆட்டோ ஓட்டுநர் முன்னேற்ற சங்க 12வது ஆண்டுவிழா நடந்தது.சங்க தலைவர் வெஸ்லி ஜோயல் தலைமை வகித்தார். சங்க காப்பாளர் ராஜேஷ், நகர பஞ்., தலைவர் மாமல்லன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஆட்டோ பென்னி வரவேற்றார். நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சங்க சட்ட ஆலோ... |
தமிழகம் | ஆறுமுகநேரியில் வி.ஏ.ஓ., தேர்வுக்கு இலவச பயிற்சி | ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி இளம் முன்னோடிகள் சங்கத்தின் சார்பில் வி.ஏ.ஓ., தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் நாளை முதல் நடக்கிறது. ஆறுமுகநேரி இளம் முன்னோடிகள் சங்கத்தின் சார்பில் கடந்த முறை நடந்த வி.ஏ.ஓ., தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களில் 10 பேர் தற்போ து வி.ஏ.ஓ.,க்களாக தேர்வு செய்யப்பட்டு பணி செய்து வருக... |
தமிழகம் | சிவகிரியில் இந்தி கம்யூ.,ஆர்ப்பாட்டம் | சிவகிரி:சிவகிரியில் இந்திய கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சிவகிரி 10வது வார்டை சேர்ந்தவர் குட்டிதம்பி. இவர் சென்னையில் உள்ள செங்கல் சூளையில் மேஸ்திரியாக வேலைபார்த்து வந்தார். மேலும் சிவகிரியில் இருந்து 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை சம்பளத்திற்கு அழைத்து சென்று அந்த கம்பெனியில் வேலைக்கு சேர்த்துள்ளார். அந்த... |
தமிழகம் | ரூ.30 லட்சம் மதிப்பு எரிசாராயம் அழிப்பு | தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்த 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 14,490 லிட்டர் எரிசாராயம் நேற்று அழிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில், கடந்த ஜன., மாதம் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒரு காரில் தலா 35 லிட்டர் வீதம், 10 கேன்களில் கடத்தி வரப்பட்ட, 350 லிட்டர் எ... |
தமிழகம் | உடன்குடி பஞ்., யூனியன் 2வது வார்டு திமுக., வெற்றிக்கான சான்றிதழ் | உடன்குடி : உடன்குடி பஞ்., யூனியன் 2வது வார்டில் திமுக., வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் எம்எல்ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.உடன்குடி பஞ்., யூனியன் 2வது வார்டிற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக., சார்பில் ஜெஸிபொன்ராணியும், சுயேட்சையாக விஜயாவும் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக... |
தமிழகம் | ரத்தினாபுரி கோயிலில் சிறப்பு பூஜை | காயல்பட்டணம் : காயல்பட்டணம் தென்திருப்பதி அழகிய மணவாளபெருமாள் கோயிலில் அனுஷம் நட்சத்திரத்தின் சிறப்பு பூஜை நடந்தது.காயல்பட்டண ரத்தினாபுரியில் அமைந்துள்ள தென்திருப்பதி மணவாள பெருமாள் கோயில் பாலாஜி அய்யாங்கர், நாகமணி, லெட்சுமி நாராயணன் சிறப்பு பூஜை நடந்தது. பூஜையில் பாரத உழவர் பணி குழு தலைவர் அகிலன், பண்டாரம் ஆன்மிகத் தல... |
தமிழகம் | லயன்ஸ் கிளப் துணை ஆளுநர், அமைச்சரவையினர் 25ம் தேதி தூத்துக்குடியில் பதவி ஏற்கின்றனர் | தூத்துக்குடி : லயன்ஸ் சங்கத்தின் மாவட்ட ஆளுநர்கள், துணை ஆளுநர்கள் மற்றும் மாவட்ட அமைச்சரவை பதவி ஏற்பு விழா நாளை நடக்கிறது.இது குறித்து லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் ராமசாமி கூறியதாவது; லயன்ஸ் சங்கத்தின் 324 பி4 லயன்ஸ் மாவட்டம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து ரெவின்யூ மாவ... |
தமிழகம் | தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மண்மாதிரி முகாம் | ஓட்டப்பிடாரம் : தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஏ3பி திட்டம் செயல்படுத்திட ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் மலைப்பட்டி கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மைத்துறை மூலம் இக்கிராமத்தில் முதற்கட்டமாக மண்மாதிரி முகாம் நடந்தது.முகாமில் தூத்துக்குடி மாவட்ட இணை இயக்குநர் லூயிஸ் ராஜரத்தினம் கலந்து கொண்டு தேசிய உணவுப... |
தமிழகம் | பழநி கல்லூரியில் எம்.பில்., நிறுத்தம் மாணவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் | பழநி : பழநியாண்டவர் கல்லூரியில் நிறுத்தப்பட்ட எம்.பில்., படிப்பை, மீண்டும் கொண்டு வர வலியுறுத்தி மாணவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் துவக்கியுள்ளனர். பழநி பழநியாண்டவர் கலைக்கல்லூரியில், 1986-87 கல்வியாண்டில் தமிழ் பாடத்திற்கான எம்.பில்.,படிப்பு துவக்கப்பட்டது. குறைந்த கட்டணத்தில் இப்படிப்பு வசதி கிடைத்தது. இந்நிலையில் தற்போத... |
தமிழகம் | குலசை முத்தாரம்மன் கோயிலில் ஆகஸ்ட் 2ல் ஆடிக் கொடைவிழா | உடன்குடி : குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் ஆடிக் கொடை விழா வரும் ஆகஸ்ட் 2ம் தேதி துவங்குகிறது.குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. தசரா திருவிழாவின் போது தமிழகம் முழுவதிலிருந்தும் 20 லட்சம் பக்தர்கள் வருகை தருவர். இச்சிறப்புமிக்க ஆலயத்தின் ஆடிக் கொடை விழா வரும் ஆகஸ்ட... |
தமிழகம் | அரசு பஸ் ஜப்தி | தூத்துக்குடி : மெஞ்ஞானபுரம் அருகே நடந்த விபத்தில் பலியான வாலிபர் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால் அரசு பஸ்சை தூத்துக்குடி முதலாவது விரைவு நீதிமன்றம் அதிரடியாக ஜப்தி செய்தது.தூத்துக்குடி பிரையண்ட்நகர் 12வது தெருப் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் முனியசாமி(20). இவர் கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்கு... |
தமிழகம் | மன இறுக்கம், விரக்தியை போக்க பூவரசிக்கு சிறையில் கவுன்சிலிங் | சென்னை : பூவரசிக்கு மன இறுக்கம், பதட்டத்தை தணிக்கும் வகையில் டாக்டர்கள் கண்காணிப்பில், தனியார் தொண்டு நிறுவனத்தினர் கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர். கள்ளக் காதலனின் மகனை கொன்று சூட்கேசில் வைத்து நாகப்பட்டினத்திற்கு அனுப்பி வைத்து, காணாமல் போனதாக நாடகமாடி இறுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பூவரசி தற்போது புழல் பெ... |
தமிழகம் | ரெங்கநாதபுரம் விநாயகர் கோயில் அரச மரத்தில் பாம்பு வடிவிலான வேர் | உடன்குடி : உடன்குடி ரெங்கநாதபுரத்தில் விநாயகர் கோயில் அரச மரத்தில் பாம்பு வடிவிலான வேர் தோன்றியது. ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் பார்த்துச் சென்றனர்.உடன்குடி ரெங்கநாதபுரத்தில் சுமார் 13 வருடங்களுக்கு முன்பு விநாயகர் கோயில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது கோயிலின் பின்புறம் அரசமரம் சிறியதாக நடப்பட்டது. தற்போ... |
தமிழகம் | குற்றால சீசன் நிலவரம் | குற்றாலம்:குற்றால அருவிகளில் நேற்று பரவலாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குதூகலமாக குளித்து சென்றனர்.குற்றாலம் மெயின் அருவியில் நேற்று பரவலாக தண்ணீர் விழுந்தது. இங்கு சுற்றுலா பயணிகள் காலையில் வரிசையில் நின்று குளித்தனர். பின்னர் கூட்டம் சுமாராக காணப்பட்டதால் வரிசை முறை இல்லாமல் அனைவரும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்... |
தமிழகம் | பாவூர்சத்திரம் அரசு டெக்ஸ்டைல்சில் பரிசு திருவிழா துவக்கம் | பாவூர்சத்திரம்:பாவூர்சத்திரம் அரசு டெக்ஸ்டைல்சில் பரிசு திருவிழா துவங்கியது.பாவூர்சத்திரம் அரசு டெக்ஸ்டைல்சில் ஆடி தள்ளுபடி விற்பனையில் இருந்து வரும் ஜனவரி 14 தேதி விற்பனை வரை பரிசு கூப்பன் வழங்கப்படுகிறது. ஆடித்தள்ளுபடி விற்பனையில் 5 முதல் 50 சதவீதம் வரை அதிரடிவிலை குறைப்புடன் விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரம் ரூபாய்க்க... |
தமிழகம் | பொது மக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா | ஏரல் : பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் அளிக்கும் முகாம் மாவட்ட கலெக்டர் பிரகாஷ் தலைமையில் ஏரலில் நடந்தது.வாழவல்லான் பகுதியில் கடந்த மாதம் நடந்த மனுநீதிநாள் முகாமில் பொதுமக்களிடம் இருந்து ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களுக்கு பதில் அளிக்கும் வகையிலும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் ஏரலில... |
தமிழகம் | துணை முதல்வர் பங்கேற்கும் விழா பந்தலுக்கு கால்கோள் விழா | தூத்துக்குடி :தூத்துக்குடியில் துணை முதல்வர் பங்கேற்கும் விழா பந்தல் அமைக்கும் பணிக்கான கால் கோள் விழா நேற்று நடந்தது. தூத்துக்குடியில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிந்த கட்டட பணிகளுக்கான திறப்பு விழா போன்ற பிரமாண்ட விழா புதிய பஸ் ஸ்டாண்ட் மைத... |
தமிழகம் | தூத்துக்குடி மாவட்டத்திற்கு அரசு 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு | தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் பள்ளிகளுக்கு மானியம், பராமரிப்பு மானியம், தளவாட பொருட்கள் மானியம் வழங்கவும், கட்டட பணிகள் மேற்கொள்ளவும் அரசு 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் நேற்று கண்காணிப்பு குழு கூட்டத்தில் அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆபிசில் நேற்று ... |
தமிழகம் | குற்றாலம் கார்பார்க்கிங்கில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூல்:சுற்றுலா பயணிகள் பாராட்டு | குற்றாலம்:குற்றாலம் கார்பார்க்கிங்கில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படுவதால் டவுன் பஞ்., நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு சுற்றுலா பயணிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.தமிழக சுற்றுலா ஸ்தலங்களில் புதுமை பெற்ற ஸ்தலமாக குற்றாலம் விளங்கி வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகளின் நலன்கருதி மாவட்ட நிர்வாகம் மற்றும் டவுன் பஞ்., நிர... |
தமிழகம் | கல்லிடை பள்ளியில் முப்பெரும் விழா | அம்பாசமுத்திரம்:கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா நடந்தது.கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் திலகர் ஜெயந்தி விழா, கல்வியில் முதன்மை பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி.,) சார்பில் 7.5 லட்சம் ரூபாய் செலவில் அமைக... |
தமிழகம் | நெல்லை பல்கலை., படிப்பு:நாதன் கல்வி மையம் அழைப்பு | அம்பாசமுத்திரம்:நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தொலை தூர கல்வி மூலம் பயில்வதற்கான அட்மிஷன் தேதி நீடிக்கப்பட்டுள்ளதையடுத்து, அம்பாசமுத்திரம் நாதன் கல்வி மையத்தில் அட்மிஷன்கள் நடந்து வருவதாக இம்மைய ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அம்பாசமுத்திரம் நாதன் கல்வி நிலைய ஒருங்கிணைப்பாளர் மீனா ராம... |
தமிழகம் | பெருமாள்புரம் முதல் தெருவில்கழிவு நீர் தேக்கம்:சுகாதார சீர்கேட்டால் மக்கள் அச்சம் | திருநெல்வேலி:பெருமாள்புரம் முதல் தெருவில் உள்ள குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் குட்டைபோல் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.பெருமாள்புரத்தில் மத்திய சிறைக்காவலர்களுக்கான குடியிருப்பில் ஏ முதல் ஹெச் பிரிவு வரை உள்ள கட்டடத்தில் மொத்தம் 50 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் உள்ள கழிவு நீர் வாறுகால் மூலம் முதல் த... |
இந்தியா | இமாச்சலத்தில் புதிய பல்கலை., கிடையாது | சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் புதிய தனியார் பல்லை கழகங்களுக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என மாநில அரசு முடிவு செய்துள்ளது என மாநில அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மாநில அரசுக்கு பல்வேறு தரப்பிலிருந்து குறிப்பாக மாணவர் அமைப்பான ஏபிவிபியிடம் இருந்து வந்த தொடர் அழுத்தம் காரணமாக அரசு இம் முடிவை எடுத்துள்ளது... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேச்சு: தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நீரின்றி பயிர்கள் பாதிக்கப்படுவதாகவும், கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். அவர் முன்னாள் முதல்வர் தானா என்ற சந்தேகம் வருகிறது. முன்னாள் முதல்வராக இருந்தா... |
தமிழகம் | பேட்டை நகர் நல மையத்தில் மருத்துவ உபகரணங்கள் இல்லே:டாக்டர்கள் பற்றாக்குறை | திருநெல்வேலி:பேட்டை நகர் நல மையத்தில் பிரசவம் பார்ப்பதற்கான நவீன மருத்துவ உபகரணங்கள் இல்லாதததோடு, டாக்டர்கள் பற்றாக்குறையும் உள்ளது.பேட்டையில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த 1956ம் ஆண்டு நகர் நல மையம் துவங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இங்கு பேட்டை, கல்லூர், பட்டன் கல்லூர், கோடகநல்லூர், அரிகேசவநல்லூர், நரசிங்கநல்... |
தமிழகம் | நெல்லை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில்பட்டபடிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு | திருநெல்வேலி:நெல்லை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டப்படிப்புகளில் சேர்ந்து பயிலுவதற்கு விண்ணப்பிக்க வருகிற ஆகஸ்ட் மாதம் 15ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.நெல்லை என்.ஜி.ஓ நியூ காலனி உதயா நகரில் மேடை தளவாய் கூட்டுறவு மேலாண்மை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஆண்டிலிருந்து பி.காம்., பி.பி.ஏ., பி.எ... |
தமிழகம் | போலீஸ் தேர்விற்கான ஹால் டிக்கெட் ஸ்டேஷனில் வழங்க ஏற்பாடு | திண்டுக்கல் : போலீஸ் தேர்விற்கான ஹால் டிக்கெட்டை விண்ணப்பித்தவர்களுக்கு தபாலில் அனுப்பாமல், அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2ம் நிலை போலீசாருக்கான எழுத்து தேர்வு வரும் ஆக., 8ல் நடக்கிறது. தேர்விற்கான கடிதங்கள் வழக்கமாக தபாலில் அனுப்பப்படும். சீருடை பணியா... |
தமிழகம் | ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் உத்தரவில் குழப்பம் | விருதுநகர் : ஆசிரியர்கள் பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் வழங்கப்பட்ட மாறுதல் உத்தரவில் குழப்பம் நிலவுகிறது. பள்ளி கல்வித்துறையால், கடந்த மே மாதம் 18, 19ம் தேதிகளில் மாவட்டம் தோறும் பொது இட மாறுதலுக்கான கவுன்சிலிங் நடத்தப்பட்டது. தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் இருப்பதால், பண... |
தமிழகம் | நெல்லையில் டி.ஆர்.இ.யு.,நினைவஞ்சலி கூட்டம் | திருநெல்வேலி:நெல்லையில் டி.ஆர்.இ.யு.,சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடந்தது.நெல்லை டி.ஆர்.இ.யு., சார்பில் மறைந்த முன்னாள் டிவிசன் உதவி தலைவர் ராக்கமுத்துவிற்கு நினைவஞ்சலி மற்றும் கோரிக்கை விளக்க கூட்டம் நெல்லை ரயில்வே ஸ்டேஷன் முன்பு நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நெல்லை கிளை தலைவர் டேவிட்சன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜூ,... |
தமிழகம் | டி.ஆர்.இ.யு.,பொதுசெயலாளர் ஜானகிராமன் சிறப்புரையாற்றினார். | தீர்மானம்:மத்திய அரசு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும். ஆர்.ஆர்.சி.,யில் உள்ள 6 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ரயில்வே துறையில் இந்தியா முழுவதிலும் உள்ள 2 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கான்ட்ராக்டர் முறையை ரத்து செய்யவேண்டும் போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
தமிழகம் | நடிகர் சிங்கமுத்து மீது 60 பக்க குற்றப்பத்திரிகை : 27ம் தேதி ஆஜராக உத்தரவு | சென்னை :நடிகர் வடிவேலுவிற்கு நிலம் வாங்கித் தந்து மோசடி செய்த வழக்கில், சிங்கமுத்து மீது 60 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் 27ம் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை, தாம்பரம் அடுத்த முடிச்சூர் ரோட்டைச் சேர்ந்தவர் ராமச்சந்திர ரெட்டி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்... |
தமிழகம் | தென்னை, எள், உளுந்திற்குசந்தை விலை நிலவரம் கணிப்பு | தென்காசி:தென்னை, எள், சூரியகாந்தி, உளுந்திற்கு சந்தை விலை நிலவரம் கணிக்கப்பட்டுள்ளது.இதுபற்றி தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் ஐரிஷ்சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தென்காசி வட்டாரத்தில் தென்னை பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. சூரியகாந்தி சுந்தரபாண்டியபுரம், மத்தளம்பாறையிலும், எள் மானாவாரியாக வடகரை உள்ளிட்ட க... |
தமிழகம் | பாலியல் தொந்தரவு தவிர்க்க பள்ளிகளுக்கு அறிவுரை | கொடைக்கானல் : பாலியல் தொந்தரவு உட்பட பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகும் மாணவியரின், அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி வைத்து,தரமான கல்வி வழங்க பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானல் பப்ளிக் பள்ளி தாளாளர் பிரைட், பூடான் நாட்டு மாணவி ஒருவரிடம் தவறாக நடந்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. தற்போது வெளி மாநில மாணவர்க... |
தமிழகம் | திசையன்விளை லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு | திசையன்விளை:திசையன்விளை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.திசையன்விளை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. திருவடிமுத்து தலைமை வகித்தார். விசுவாசம் முன்னிலை வகித்தார். லயன்ஸ் முன்னாள் கவர்னர் சுயம்புராஜன் வரவேற்றார். ஜெயசிங் இறைவணக்கம் வாசித்தார். ஜோதீஸ்கு... |
தமிழகம் | ராமேஸ்வரம் கோயிலை சுற்றிய கட்டடங்களை அகற்ற திட்டம் | ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், கோயில் மதிலை சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்களை அகற்ற, உயர்மட்ட பாதுகாப்பு துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தீவிரவாதிகள் அச்சுறுத்தல், அதிகளவில் வந்து செல்லும் பக்தர்களை கண்காணிப்பதற்கு வசதியாக கோயில் பாதுகாப்பை பலப்படுத்த அரசு மு... |
தமிழகம் | கங்கைகொண்டான் பள்ளியில் கருத்தரங்கம் | திருநெல்வேலி:கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கம் நடந்தது.கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடந்தது. நிகழ்ச்சி கங்கைகொண்டான் பஞ்.,தலைவர் ரவி தலைமையில் உக்கிரன்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் கலா அறி... |
தமிழகம் | சிவகுருநாதபுரத்தில்முப்பெரும் விழா | சுரண்டை:சுரண்டை சிவகுருநாதபுரத்தில் முப்பெரும் விழா நடந்தது.சுரண்டை சிவகுருநாதபுரம் காமராஜர் சிலை அருகில் காமராஜர் பிறந்த தினவிழா, ஆர்.சுப்பிரமணியநாடார் - சிதம்பரவடிவு அறக்கட்டளை துவக்க விழா, அரசு மேல்நிலைப்பள்ளி முதன்மை மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.விழாவிற்கு மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்... |
தமிழகம் | மதுரையில் சி.இ.ஓ., க்கள் கூட்டம் | சிவகங்கை : முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம், வரும் 30ம் தேதி மதுரையில் நடக்கிறது. பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தலைமையில், விரகனூர் வேலம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியில் கூட்டம் நடக்கும். மாணவர்கள் சேர்க்கை குறைவுக்கான காரணம், தேர்ச்சி விகிதம், இலவச சைக்கிள் வினியோகம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சலுகைக... |
தமிழகம் | ஏர்வாடியில் ஆர்ப்பாட்டம் | ஏர்வாடி:ஏர்வாடியில் த.மு.மு.க.,வினர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக பொய் வழக்கு போட்ட போலீசாரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஏர்வாடி த.மு.மு.க., மற்றும் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த 10 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர் என்று த.மு.மு.க., சார்பில் நேற்று கண்டன ஆர்பாட்டம் நடந்தது. ஏர... |
தமிழகம் | உமாசங்கர் வழக்கு: அரசுக்கு நோட்டீஸ் | சென்னை :லஞ்ச ஒழிப்புத் துறையின் கையேட்டை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்ட... |
தமிழகம் | வாசக்டமி சிகிச்சைக்கு வந்த 70ஐ திருப்பி அனுப்பிய டாக்டர்கள் | திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நடந்த ஆண்களுக்கான குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு வந்த 70 வயது முதியவரை டாக்டர்கள் திருப்பி அனுப்பினர். திண்டுக்கல்,பழநி தலைமை அரசு மருத்துவமனையில், மாதம்தோறும் ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையான வாசக்டமி செய்து கொள்வதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது... |
தமிழகம் | கடையநல்லூர் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் | கடையநல்லூர்:கடையநல்லூர் குமந்தாபுரம் கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.குமந்தாபுரம் கிங் யுனிவர்ஸ் பள்ளி வளாகத்தில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவிற்கு பள்ளியின் தாளாளரும், முதல்வருமான ராஜாமுத்துக்குமார் தலைமை வகித்து காமராஜர் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். பள்ளி மாணவ, மா... |
தமிழகம் | கடையநல்லூரில் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் | கடையநல்லூர்:கடையநல்லூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடந்தது.கடையநல்லூர் லயன்ஸ் சங்கம், மும்பை புளூ கிராஸ் பார்மா லிமிடெட் கம்பெனி மற்றும் டாக்டர் சஞ்சீவி பிரின்ஸ் ஆஸ்பத்திரி ஆகியன இணைந்து கடையநல்லூர் பிரின்ஸ் ஆஸ்பத்திரியில் இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாமை நடத்தியது.முகாமை பிரின்ஸ்... |
தமிழகம் | ஆய்வு செய்த ரேஷன் கார்டுகளும் ரத்து : கவனக்குறைவால் குளறுபடி | சிவகங்கை : நூறு சதவீத ஆய்வுக்கு பின், உண்மையான ரேஷன் கார்டுகள் பட்டியல் தயாரிக்கும் பணியில், பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால், பல கார்டுகள் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. போலி ரேஷன் கார்டுகளை கண்டறிவதற்காக, 100 சதவீத ஆய்வு பணி, கடந்த நவ., முதல் ஜன., வரை நடந்தது. இதில் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்டுகள் போலியென பட... |
தமிழகம் | சேலம் ரயில் நிலையத்தில் பெரும் குழப்பம் ரயில்வே ஊழியர்களின் கவனக்குறைவு அம்பலம் | சேலம் : சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று காலை பிளாட்பாரம் மாறி ரயில் நின்றதால், பயணிகளிடையே அதிர்ச்சி ஏற்பட்டது. ரயிலில் ஏற பயணிகள் ஓட்டம் பிடித்ததால், இடிபாடுகளில் சிக்கித் தவித்தனர். சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் மூன்றாவது பிளாட்பாரத்தில் இருந்து விருத்தாசலத்துக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. தினமும் காலை 8.40... |
தமிழகம் | குற்றாலத்தில் சாரல் திருவிழா:இன்று துவக்கம் | குற்றாலம்:குற்றாலத்தில் சாரல் திருவிழா இன்று (24ம் தேதி) துவங்கி 10 நாட்கள் நடக்கிறது.குற்றாலத்தில் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் மற்றும் டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில் சாரல் திருவிழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு சாரல் திருவிழா இன்று (24ம் தேதி) துவங்குகிறது.குற்றாலம் கலைவாணர் கலையரங்கில்... |
தமிழகம் | மராத்தி மொழியில் வந்த தேசிய மக்கள் தொகை பதிவேடு படிவம் | தேனி : தேனி மாவட்டத்திற்கு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான படிவங்கள், மராத்தி மொழியில் வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணியாக வீடுகள் கணக்கெடுப்பு மற்றும் வீட்டு பட்டியல் தயாரிப்பு பணிகளும், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணிகளும் நடந்து வந்தன. ஜூன் முதல்... |
தமிழகம் | வார இதழ் ஆசிரியர் சொத்துக்களை பறிமுதல் செய்யக் கோரி போலீஸ் அதிகாரி மனு தாக்கல் | சென்னை :அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் நஷ்டஈட்டுத் தொகையை தராததால், வார இதழ் ஆசிரியரின் சொத்துக்களை பறிமுதல் செய்து விற்க உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை புறநகர் போலீஸ் கமிஷனராக ஜாங்கிட் உள்ளார். இவருக்கு எதிராக அவதூறான கட்டுரை, "நவீன... |
தமிழகம் | நெல்லையில் ரயில்வே பாதுகாப்பு படை "அதிரடி':டிக்கெட் புரோக்கர்கள் 4 பேர் கைது | திருநெல்வேலி:நெல்லை, பாளையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 4 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 ஆயிரத்து 166 மதிப்புள்ள முன்பதிவு டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன.நெல்லை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் புரோக்கர்கள் மூலமாக மொத்தமாக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்... |
தமிழகம் | பத்திரப்பதிவு அலுவலகங்களில் வெப்கேமரா வசதி | மதுரை : தமிழகத்திலுள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில், நாளை மறுதினம் முதல் வெப்கேமரா வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால், அதற்கேற்ப எந்த முன்னேற்பாடும் செய்யப்படவில்லை. போலியாக பத்திரப்பதிவு செய்வதை தடுக்க, "ஹாலோகிராம்' உட்பட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மறுதினம் முதல் வெப்கேமரா வசதி அறிமு... |
தமிழகம் | குண்டர் சட்டத்தில் இரு வாலிபர்கள் கைது | திருநெல்வேலி:பாளை.யில் இரண்டு வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.திம்மராஜபுரம் கோட்டூரை சேர்ந்தவர் செல்வம்(27). இவர் மீது ஜங்ஷன், பாளை.போன்ற போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கொலை மிரட்டல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர ப... |
தமிழகம் | நெல்லையில் 27ம் தேதி ஆதிதிராவிடர்பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கவுன்சிலிங் | திருநெல்வேலி:நெல்லையில் வரும் 27ம் தேதி ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.நெல்லை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள்/காப்பாளர்கள், இடைநிலை ஆசிரியர்/ காப்பாளர்களுக்கு பொது மாறுதல் அளிப்பதற்கான கவுன்சி... |
தமிழகம் | பெரியாறு பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு | மதுரை :மதுரை மாவட்டம் கள்ளந்திரி முதல் குறிச்சிப்பட்டி வரை பெரியாறு வைகை பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீர்செய்து பாசன வசதி செய்ய கோரி, தினமலர் இதழ் செய்தியை குறிப்பிட்டு ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் தாக்கல் செய்த பொது நல வழக்கு: பெரியாறு... |
தமிழகம் | மேலப்பாளையத்தில் ரூ.1 கோடியில் குடிநீர் மேம்பாட்டு திட்டம் துவக்கம் | திருநெல்வேலி:மேலப்பாளையத்தில் 1 கோடியில் குடிநீர் மேம்பாட்டு திட்டம் துவக்கப்பட்டது.மேலப்பாளையம் மண்டலம் 30, 31, 32 மற்றும் 33 ஆகிய வார்டுகளில் குடிநீர் சப்ளையை மேம்படுத்த 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதற்காக கலெக்டரின் சிறப்பு நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் நிதி ஒது... |
தமிழகம் | விவசாயிகள் குழுக்களின் செயல்பாடு கண்டறிய நபார்டு குழுவினர் வருகை | சென்னை : தமிழகத்தில் விவசாயிகள் கூட்டுப் பொறுப்புக் குழுக்களின் செயல்பாட்டை கண்டறிய, நபார்டு வங்கியின் அதிகாரிகள் குழு வரும் 29ம் தேதி தமிழகம் வருகிறது. தமிழகத்தில் 10 ஆயிரம் விவசாயிகள் கூட்டுப் பொறுப்பு குழுக்கள் அமைக்கப்படும் என்றும், ஒரு குழுவில் 10 பேர் இடம்பெறுவர் என்றும், அதன்படி ஒரு லட்சம் விவசாயிகள் இதில் சேர்க... |
தமிழகம் | பாளை, வள்ளியூர், சேரன்மகாதேவியில் புதியதாக உழவர் சந்தைகள் | திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் 3 இடங்களில் புதியதாக உழவர் சந்தைகள் அமைக்கப்படுகிறது என்று வேளாண் விற்பனை வாரிய தலைவர் கே.பி.டி கணேசன் தெரிவித்தார்.தமிழக வேளாண் விற்பனை வாரிய தலைவர் கே.பி.டி கணேசன் நேற்று நெல்லை வந்தார். தொடர்ந்து பாளை மகராஜநகர், மேலப்பாளையம், அம்பை போன்ற இடங்களில் உள்ள உழவர் சந்தைகளில் ஆய்வு செய்தார்... |
தமிழகம் | குற்றாலத்தில் 29ம் தேதிநாய்கள் கண்காட்சி | திருநெல்வேலி:குற்றாலத்தில் வரும் 29ம் தேதி நாய்கள் கண்காட்சி நடக்கிறது.குற்றாலம் சாரல் திருவிழா இன்று (24ம் தேதி) முதல் 31ம் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு குற்றலாம் கலைவாணர் அரங்கில் 29ம் தேதியம் மதியம் 2 மணிக்கு நாய்கள் கண்காட்சி நடக்கிறது.இதில் கலந்து கொள்ள விரும்பும் நாய்களின் உரிமையாளர்கள் வரும் 26ம் தேதிக்கு... |
தமிழகம் | முழு நேர பணியாளர்களாக அறிவிக்க சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல் | திருநெல்வேலி:முழு நேர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த சத்துணவு ஊழியர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.தமிழ்நாடு சத்துணவு பணியாளர் ஒன்றிய நெல்லை மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர் ஒன்றிய மாவட்ட தலைவர் வில்லியம்ஸ், மாநில செயற்கு... |
தமிழகம் | இந்த மாதமும் ரேஷனில் கெரசின் வெட்டு; கடை ஊழியர்கள் அதிர்ச்சி | சென்னை : கடந்த மாதத்தைப் போலவே இந்த மாதமும் ரேஷனுக்கு வரவேண்டிய கெரசின் சப்ளையில், 30 சதவீத அளவுக்கு வெட்டு விழுந்துள்ளது. மாத கடைசியில் நுகர்வோருடன் மல்லுக்கட்ட வேண்டிய நிலை உள்ளதால் ரேஷன் கடை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முன்னறிவிப்பின்றி கடந்த மாதம் ரேஷனில் வழங்கப்படும் கெரசின் அளவு குறைக்கப்பட்டது. ஒரு ரேஷன் க... |
தமிழகம் | ஒகேனக்கலில் பரிசலில் செல்ல 3 மணி நேரத்திற்கு ரூ.100 கட்டணம் | தர்மபுரி : ஒகேனக்கலில் பரிசலில் செல்ல 3 மணி நேரத்துக்கு 100 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்டண உயர்வு காரணமாக பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த ஒகேனக்கலில் காவிரியின் அழகை பயணிகள் பரிசலில் சென்று ரசித்து வருகின்றனர். இதற்காக ஒகேனக்கல் காவிரியில் பரிசல் துறை அமைக்கப்... |
தமிழகம் | மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவு நாள்:நெல்லை ஆற்றில் கட்சிகள், இயக்கத்தினர் அஞ்சலி | திருநெல்வேலி:நெல்லையில் மாஞ்சோலை தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் 11ம்ஆண்டு நினைவுநாளையொட்டி புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., கம்யூ., உள்ளிட்ட கட்சிகள், அமைப்புக்களை சேர்ந்தவர்கள் ஆற்றில் அஞ்சலி செலுத்தினர்.கடந்த 99ம்ஆண்டு ஜூலை 23ம்தேதி கூலிஉயர்வு கேட்டு போராடி சிறையில் அடைக்கப்பட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலா... |
தமிழகம் | என்.எல்.சி., மின் துறை இயக்குனர் பொறுப்பேற்பு | நெய்வேலி : என்.எல்.சி., நிறுவனத்தின் மின்துறை இயக்குனராக மகிழ்ச்செல்வன் நேற்று மாலை பொறுப்பேற்றார். என்.எல்.சி., நிறுவனத்தின் மின்துறை இயக்குனராக இருந்த சேதுராமன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அனல் மின் நிலையங்கள் வடிவமைப்புத் துறையின் தலைமைப் பொது மேலாளராக இருந்த மகிழ்ச்செல்வனை மின்துறை இயக்குனராக, மத்திய அரசு நியமித்துள்... |
இந்தியா | தேசிய வளர்ச்சி கவுன்சில் இன்று ஆய்வு | புதுடில்லி : தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம், டில்லியில் இன்று நடக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய மேம்பாட்டு கவுன்சில் கூட்டம், டில்லியில் இன்று நடக்கிறது. இதில், 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் இடைக்கால முடிவுகள் குறித்த அறிக்கையை திட்டக் கமிஷன் வெளியிடுகிறது. இந்த கூட்டத்தில், பொருளாதார வளர்ச்சி குறித்த... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.