category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
இந்தியா
பக்தர்களின் வசதிக்காக திருமலையில் சுரங்கப்பாதை
நகரி : சாலையை கடக்கும் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. திருமலையில் சப்தகிரி சத்திரம் அமைந்துள்ள  பகுதியில் அதிக அளவில் பக்தர்கள் நடமாட்டம் உள்ளது. இந்த இடத்தில் வாகன போக்குவரத்தும் அதிகம் உள்ளதால், சாலையில் செல்லும் வாகனங்களால் சில நேரங்களில் பக்தர்களுக்கு ஆபத்து நேரிடுகிறது. இதை  தவிர்...
தமிழகம்
தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு:நெல்லையில் துரையரசன் தகவல்
திருநெல்வேலி:சட்டசபைத்தேர்தலில் தேவேந்திரகுல அமைப்புகள் அதிமுகவுடன் இணைந்து செயல்படும் என மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் தலைவர் துரையரசன் தெரிவித்தார்.நெல்லையில் மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் தலைவர் துரையரசன் கூறியதாவது:தேவேந்திரகுல மக்களின் 52 சதவீத ஓட்டுக்களை பெற்று ஆட்சிக்கு வந்த திமுக அம்மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தி...
இந்தியா
நக்சல் ஒழிப்பு தொடரும் டைரக்டர் ஜெனரல் பேட்டி
புதுடில்லி : நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் மாநில போலீசாருடன் இணைந்து செயல்படுவோம் என்று மத்திய பாதுகாப்புப் படை  டைரக்டர் ஜெனரல் விக்ரம் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: காஷ்மீர் பள்ளத்தாக்கில் அண்மையில் நடைபெற்ற சம்பவங்களில், மத்திய பாதுகாப்புப் படையினர் திறமையாக  பணியாற்றினர். காஷ்மீர் பள்ளத...
இந்தியா
சபரிமலையில் நிறைபுத்தரி பூஜை
சபரிமலை :  சபரிமலையில் நடைபெற்ற நிறைக்கதிர் பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.  ஆடி மாதம் அமாவாசை முடிந்து, நிறைபுத்தரி பூஜையை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விளைந்த நெற்கதிர்களை பக்தர்கள் நேற்று அதிகாலை சபரிமலை 18ம் படிக்கு முன், சமர்ப்பித்தனர். தந்திரி கண்டரரு மகேஸ்வரரு, புண்ணிய தீர்த்தம் தெளித்து சுத்தி...
தமிழகம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க : 27 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை : வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது, இம்மாதம் 16ம் தேதி வரை, புதிதாக பெயர் சேர்க்க 27 லட்சத்து 30 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியதாவது: தற்போது நடந்து வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், புதிதாக பெயர் சேர்க்க இம்மாதம் 16ம் தேதி வரை 27 லட்சத்து 30 ஆயிரத்த...
தமிழகம்
பொறியியல் கவுன்சிலிங்கில் பிடிபட்ட 21 சான்றிதழ்கள் போலி என உறுதி
சென்னை : பொறியியல் கவுன்சிலிங்கில் சந்தேகத்திற்கிடமான பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களை அரசு தேர்வுத்துறை ஆய்வு செய்ததில், 21 சான்றிதழ்கள் போலியானவை என தெரிய வந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடந்து வருகிறது. இந்த கவுன்சிலிங்கின் ப...
தமிழகம்
மேட்டூர் அணை 28ம் தேதி திறப்பு
சென்னை : மேட்டூர் அணை, வரும் 28ம் தேதி திறந்து விடப்படுகிறது. விவசாயிகளின் சாகுபடி பணிக்காக, ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.  அணையின் நீர்மட்டம் போதுமான அளவு இல்லாததால், கடந்த மாதம் 12ம் தேதி அணை திறக்கப்படவில்லை; "அடுத்த வாரம் அணை திறக்கப்படும்' என, வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுக...
இந்தியா
இன்டர்நெட்டில் மூழ்கியிருக்கும் குழந்தைகளை கவனிக்கிறீர்களா?
புதுடில்லி : பிள்ளைகள் ஆன்-லைன் பயன்படுத்தும் நடவடிக்கையை, 27 சதவீத பெற்றோர் மட்டுமே கண்காணிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.பிள்ளைகள் ஆன்-லைன் பயன்படுத்துவது குறித்து, பிரேசில், சீனா, இந்தியா, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  சர்வதேச அளவில், 62 சதவீத குழந்தைகள் இணையதளத்தை ...
இந்தியா
"ஏர் சஸ்பென்ஷன், குஷன் ஸ்பிரிங்' தான் ரயில் விபத்துக்கு காரணம்
மும்பை : புறநகர் ரயில்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்ப வசதிகளின் காரணமாக, அவை அடிக்கடி தடம் புரளுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் இயங்கும் புறநகர் ரயில்கள், சமீபகாலமாக அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன; குறிப்பாக, தடம் புரளுகின்றன. சமீபத்தில் விரார் - சர்ச்கேட் இடையே இயக்கப்படும் அதிவேக ரயில், டிராக் மா...
இந்தியா
தலித் சமையலர்களுக்கு உ.பி.,யில் எதிர்ப்பு
கான்பூர் : உத்தரப் பிரதேச மாநிலத்தில், பள்ளிக்கூடத்தில் தலித் சமையலர் உணவு சமைக்க, உயர்ஜாதி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் டெகாத், கனோஜ் மற்றும் அரையா ஆகிய மாவட்டங்களில்,  சில மாதங்களுக்கு முன் ஊராட்சி தேர்தல் நடைபெற்றது.  இதையடுத்து, அங்கு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் நடைபெறும் 2...
தமிழகம்
மெட்ரோ ரயில் பணிகளுக்காக மாநகராட்சி பூங்காக்கள் ஆர்ஜிதம்
சென்னை : மெட்ரோ ரயில் பணிகளுக்காக நேரு பூங்கா, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா, திரு.வி.க., பூங்கா உள்ளிட்டவை ஆர்ஜிதம் செய்யப்படவுள்ளன. மெட்ரோ ரயில் பணிகளுக்கான வழித் தடங்களை அமைத்தபின், இந்த பூங்காக்கள் வழக்கம் போல், பொதுமகள் பயன்பாட்டிற்கு வந்து விடும். சென்னையில் உள்ள மெட்ரோ ரயிலுக்கான ஒரு வழித்தடம் பூந்தம...
தமிழகம்
குடியிருப்புகளுக்கு நடுவில் "டாஸ்மாக்' குடிமகன்கள் கும்மாளம்
வேளச்சேரி : வேளச்சேரி பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவில் செயல் பட்டு வரும் டாஸ்மாக் கடை மற்றும் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள துரித உணவகம் ஆகியவற்றால், அப்பகுதி பொதுமக்கள் கடும் பாதிப்படைகின்றனர். வேளச்சேரி, கணேஷ் நகர், நேதாஜி சாலையில் குடியிருப்புகளுக்கு நடுவே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு செல்லும்...
தமிழகம்
தனியார் பள்ளியின் வாடகை வாகனங்களால் சிக்கல்
வேளச்சேரி : வேளச்சேரியில் தனியார் பள்ளியின் வாடகை வாகனங்கள் போக்குவரத்திற்கு வழியின்றி சாலையில் அணிவகுப்பது, பூங்காவை ஆக்கிர மித்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது போன்ற காரணங்களால் சீதாராம் நகர் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வேளச்சேரி ரயில் நிலையம் அடுத்துள்ளது சீதாராம் நகர். இந்நகரில் நூற்றுக்கணக்...
தமிழகம்
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மோசம்: திருப்பதி, திருத்தணி பக்தர்களுக்கு விபத்து ஆபத்து
நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாலும், முறையான பராமரிப்பில்லாததாலும், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. தினசரி இச்சாலையில் விபத்து கள் நடந்து வரும் நிலையில், பெரிய அளவில் உயிர் பலி ஏற்படுவதற்குள் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்ட...
தமிழகம்
சங்கரன் கோவிலில் தேரோட்டம்
திருநெல்வேலி :  சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி  கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் ஆடித்தபசு விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு அபிசேகம், ஆராதனை, வீதி உலா நடந்தது. நேற்று காலை 10.45 மணிக்கு துவங்கிய தேரோட்டம் நான்கு ரதவீதிகளையும் கடந்து பிற்பகல் 1.45 மணிக்கு நிலையை அடைந்தது. விழா...
தமிழகம்
109 கூட்டுறவு மருந்துக்கடைகள்:ஆகஸ்ட்டில் துவக்கம்
மதுரை : தமிழகத்தில் புதிதாக 109 கூட்டுறவு மருந்துக்கடைகளை, ஆக., 15ம் தேதிக்குள் துவங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் 17 கடைகள், கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, விருதுநகர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா ஒரு கடை, கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்க...
தமிழகம்
ஊரக திறனாய்வு தேர்வு செப்.19ல் நடக்கிறது
தேனி : ஊரக பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் திறமை மிக்கோர் திறனாய்வு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்க ஆண்டுக்கு, தலா ஆயிரம் ரூபாய் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாவட்டத்திற்கு 50 மாணவர்களும், 50 மாண...
தமிழகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் சலுகை
சிவகங்கை : அசம்பாவிதங்களால் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு, நிதி மற்றும் சட்ட உதவி அளிக்கும் திட்டத்தை, அரசு செயல்படுத்த உள்ளது.  மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஓதுக்கீடு, போக்குவரத்து வசதி உள்ளிட்ட சலுகைகளை, அரசு வழங்கியுள்ளது. இவர்களின் மீது நடக்கும் தாக்குதல், பாலியல் பலாத்காரத்தால் பலர் உயிர்...
இந்தியா
சோனியாவுடன் பிரதமர் ஆலோசனை
புதுடில்லி: மழைக்கால கூட்டத்தொடர் வரும் 26-ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் பெட்ரோல் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வு, காஷ்மீர் விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனர். எதிர்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளை சமாளிக்கும் விதம் குறித்து ஆலோசனை நடத்த சோனியா,பிரதமர் மற்றும்...
தமிழகம்
விருது வழங்கும் விழா
மதுரை: அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாநகராட்சி பள்ளி ஆசிரியைகளுக்கு, யாகப்பா கல்வி சமூக அறக்கட்டளை அறங்காவலர் திலகா விருது வழங்கினார்.
தமிழகம்
பெண் தற்கொலை
கவுந்தப்பாடி: கவுந்தப்பாடி சத்தி ரோட்டை சேர்ந்தவர் நவநீதிகிருஷ்ணன் (35); இருமபுக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி கார்த்திகா; ஐந்தாண்டுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் இரவு கார்த்திகா தீக்காயத்துடன், ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தை இல்லாததால் தீக்குளித்ததாக போலீஸாரிடம் ...
தமிழகம்
மது விற்ற இருவர் கைது
பெருந்துறை: பெருந்துறை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் அனுமதியின்றி மது விற்றதாக, மதுரை மேலூர் மேலவளவைச் சேர்ந்த ஆறுச்சாமி (34), அசோக் (33) ஆகிய இருவரை பெருந்துறை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 167 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தமிழகம்
தமிழ் இலக்கிய பேரவை விழா
ஈரோடு: ஈரோடு தமிழ் இலக்கிய பேரவை அறக்கட்டளை 77ம் ஆண்டு விழா, எஸ்.கே.எம்., இலக்கிய விருது வழங்கும் விழா, நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா கிளப் மேலாஞ் ஹோட்டலில் நாளை நடக்கிறது. தமிழ் இலக்கிய பேரவை அறக்கட்டளை தலைவர் மயிலானந்தன் தலைமை வகிக்கிறார். செயலாளர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்கிறார்.. துணை செயலாளர் கண்ணையன் ...
தமிழகம்
அண்ணாதுரை சமாதியில் முதல்வரால் பரபரப்பு
சென்னை: முதல்வர் கருணாநிதி நேற்று இரவு, திடீரென அண்ணாதுரை  சமாதியில் ஒரு மணி நேரம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதிய தலைமைச் செயலகத்தின் கட்டடப் பணிகளை நேற்று பார்வையிட்ட முதல்வர் கருணாநிதி, இரவு 7.45 மணியளவில் திடீரென கடற்கரைச் சாலையில் உள்ள அண்ணா துரை  சமாதிக்குச் சென்றார். இரவு 8.45 மணி வரை அங்கே யே இருந்தார். அவ...
தமிழகம்
ரயில் போக்குவரத்தில் நாளை மாற்றம்
மதுரை,: மதுரை-திருப்பரங்குன்றம் இடையே டி.வி.எஸ்.நகர் ரயில்வே பாலம் அமைக்கும் பணியையொட்டி, நாளை கீழ்க்கண்டவாறு ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை-மதுரை (786) பயணிகள் ரயில் விருதுநகர்- மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை-செங்கோட்டை ( 787) ரயில் மதுரை- விருதுநகர் இடையே ரத்து செய்யப்...
தமிழகம்
கொள்ளையர்களிடம் 39 பவுன் நகை மீட்பு
மதுரை: மதுரை ரயிலார் நகரை சேர்ந்தவர் மாயக்கண்ணன் (22), ஆனையூர் அகதிகள் முகாம் பாபு (26), கீழமுத்துப்பட்டி நாராயணன் (28), ஆறுமுகம் (29). இவர்கள் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை சமயநல்லூர் டி.எஸ்.பி.,சுருளிராஜன், கூடல்புதூர் இன்ஸ்பெக்டர் ஜெயக் கொடி, எஸ்.ஐ.,பாலம...
தமிழகம்
ரூ.72 லட்சத்தில் தங்க அங்கி அறிமுகம்
மதுரை: மதுரை கீழவெளிவீதி டாடா நிறுவனத்தின் தனிஷ்க் தங்க நகை கடையில், சிறுவர், சிறுமியருக்கான 72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க அங்கி அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது.கடை மேலாளர் ஷீலா கூறியதாவது :ஆண்டுதோறும் நகை வடிவமைப்பில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகிறோம். இந்தாண்டு சிறுவர், சிறுமியருக்கான தங்க அங்கி அறிமுகம் செய்துள்ளோ...
தமிழகம்
மாநகராட்சி ஏலத்தை எதிர்த்த மனுக்கள் ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் கழிப்பறை மற்றும் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் மாநகராட்சியின் ஏல அறிவிப்பை எதிர்த்து தாக்கலான மனுக்களை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.மதுரை செல்லூரை சேர்ந்த ரவி தாக்கல் செய்த ரிட் மனு: மீனாட்சிகோயில் அருகே சென்ட்ரல் மார்க்கெட்டில் 2007-2008 வரை வாகன நிறுத்த கட்டணம் ...
தமிழகம்
பேரிடர் மேலாண்மை கருத்தரங்கு
மதுரை,: மதுரையில் இந்திய செஞ்சிலுவை சங்க மாநில மற்றும் மதுரை கிளை சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி கருத்தரங்கு நேற்று துவங்கியது.செயலாளர் வி.எம். ஜோஸ் வரவேற்றார். கலெக்டர் சி.காமராஜ் தலைமை வகித்தார். டாக்டர் புகழகிரி முன்னிலை வகித்தார். ரயில்வே கோட்ட மேலாளர் டி.வெங்கடசுப்ரமணியன் துவக்கி வைத்தார். அவைத் தலைவர் எம்.எம்....
தமிழகம்
மாநில பேட்மிட்டன் போட்டிக்கு தேர்வு
மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸில், மண்டல அளவிலான பேட்மிட்டன் போட்டி நாளை வரை நடைபெறுகிறது. மதுரை மாவட்ட விளையாட்டுத்துறை உதவி இயக்குனர் கிருபா துவக்கி வைத்தார். இப்போட்டியில் 13 வயதுக்குட்பட்டவர்கள், 16லிருந்து 19 வயதுக்குட்பட்டவர்கள், ஆண், பெண் என்ற வயது பிரிவுகளில் நேற்று தகுதி சுற்று நடந்தது. தேர்வானவர்கள் நேரடி போட்டியில் ...
தமிழகம்
இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்
மதுரை: மதுரையில் பல இடங்களில் இன்று காலை 9 முதல் மாலை 6 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.மின்தடை பகுதிகள்: தெப்பக்குளம், அனுப்பானடி, பகலவன்நகர், மீனாட்சிநகர், அழகர்நகர், குருவிக்காரன்சாலை, காமராஜர்சாலை ஒரு பகுதி, பங்கஜம் காலனி, திருமகன் நகர், மீனாட்சி அவென்யூ, ஏ.ஏ.ரோடு, டி.டி.ரோடு, சி.எம்.ஆர்.,ரோடு, இந்திராநகர், பழைய கு...
தமிழகம்
தாமிரபரணி நினைவு தினம்: கட்சிகள் அஞ்சலி
திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கோரி 1999ம் ஆண்டு ஜூலை 23ல் நெல்லையில் புதிய தமிழகம், மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியினர் ஊர்வலம் சென்றனர். ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் பலியாயின...
தமிழகம்
பிளாட்ஃபாரம் மாறி நின்ற ரயிலால் பரபரப்பு : பயணிகள் இடிபாடுகளில் சிக்கி தவிப்பு
சேலம்: சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று காலை பிளாட்ஃபாரம் மாறி ரயில் நின்றதால், பயணிகளிடையே அதிர்ச்சி ஏற்பட்டது. ரயிலில் ஏற பயணிகள் ஓட்டம் பிடித்ததால், இடிபாடுகளில் சிக்கி தவித்தனர். சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் மூன்றாவது பிளாட்ஃபாரத்தில் இருந்து விருத்தாசலத்துக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. தினமும் காலை 8.40 ...
தமிழகம்
ரயில்வே ஊழியர் பலி
மதுரை: மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(30). காரைக்குடி அருகே புதுவயலில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்தார். நேற்று அதிகாலை 2.45 மணிக்கு, ஆண்டாள்புரம் பாலத்தில் டூவீலரில் வந்துகொண்டிருந்தார். ஹெல்மெட் அணியவில்லை. அவ்வழியே வந்த கார் மோதியதில் தலை, முகத்தில் காயம் ஏற்பட்டு இறந்தார். கரிமேடு போலீசார் விசாரிக்க...
தமிழகம்
சுயவேலை வாய்ப்பு
மதுரை,: மதுரை மாவட்ட இந்து ஆதிதிராவிட இளைஞர்களுக்கு, தாட்கோ தனிநபர் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம், ஆட்டோ மற்றும் டாடா ஏஸ் வாகனங்களுக்கு கடன் வழங்கப்படஉள்ளது. எட்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்த ஓட்டுனர் உரிமம் பெற்ற 18க்கு மேல் 45 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பழைய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலு...
தமிழகம்
கல்வித் திருவிழா
திருநகர்: மதுரை திருநகர் வளம் சமூக சேவை, எல்.ஐ.சி., சார்பில் கல்வித் திருவிழா நடந்தது. சித்தி விநாயகர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பொன்.மனோகரன் வரவேற்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர் குலாம், திருநகர் எல்.ஐ.சி., முதுநிலை மேலாளர் கோவிந்தராஜன், பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தி,சவுதி அரேபியா தமிழ...
தமிழகம்
துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலி : காயம் அடைந்தவர் ஸ்டேஷனில் ஆஜர்
மேட்டூர்: துப்பாக்கி குண்டு குறி தவறி பாய்ந்ததால் காயம் அடைந்த வேட்டை கும்பலை சேர்ந்த பெருமாளிடம் விசாரணை செய்த போலீஸார், சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேட்டூர் தாலுகா, செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கவேலு, ராமு, கோவிந்தன், பெருமாள், நால்வரும் கடந்த 14ம் தேதி இரவு ஒர...
தமிழகம்
இலவச மருத்துவ முகாம்
மதுரை: மதுரை சர்வேயர்காலனியில் உள்ள தேவதாஸ் சிறப்பு மருத்துவமனையில் ஆஸ்துமா, இருமல், நுரையீரல் நோய்களுக்கு இலவச ஆலோசனை முகாம் நடக்கிறது.இந்த முகாமில் சிகிச்சை பெறுவோருக்கு நுரையீரல் திறனாய்வு பரிசோதனை இலவசமாகவும், எக்ஸ்ரே மற்றும் இரத்தப் பரிசோதனையும் 50 சதவீத சலுகையில் செய்யப்படுகிறது.காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச...
தமிழகம்
மின் நுகர்வோர்குறைதீர் முகாம்
மதுரை: மதுரை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் பெ.கி. அழகர்சாமி அறிவிப்பு: புதூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், அவரது தலைமையில், இன்று காலை 11 மணிக்கு, நுகர்வோர் குறைதீர் முகாம் நடக்கிறது. இதில் கிழக்கு, சமயநல்லூர், திருமங்கலம், உசிலம்பட்டி கோட்டத்தை சேர்ந்தோர், தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம் என தெரிவித்துள்...
தமிழகம்
பஸ்ஸில் கால்நடை டாக்டரிடம் ரூ.1.50 லட்சம் நூதன திருட்டு
ஆத்தூர்: வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் கால்நடை மருத்துவர் அப்போலா லெவன் (41). அவர் கடந்த 19ம் தேதி சேலத்திலிருந்து ஆத்தூருக்கு எல்.ஆர்.எஸ்., என்ற தனியார் பஸ்ஸில் வந்தார். அயோத்தியாபட்டணம் பஸ் ஸ்டாபில் ஆறு மாத கைக்குழந்தையுடன் வந்த 35 வயது பெண், கால்நடை மருத்துவர் அருகில் அமர்ந்து வந்து, வாழப்பாடியில...
தமிழகம்
மதுரை கோயில்களுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுமா?
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தை மையமாக கொண்டு மதுரை கோயில்களுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்களும், திருப்பரங்குன்றத்தில் உள்ளவர்களும் மதுரையில் உள்ள கோயில்களுக்கு செல்ல, பெரியார் பஸ் ஸ்டாண்டு சென்...
தமிழகம்
தலைமறைவான மாணவன் திருப்பூர் பனியன் கம்பெனியில் மீட்பு
ஆத்தூர்: ஆத்தூர் அருகே உள்ள வடக்குகாடு பகுதியை சேர்ந்த விவசாயி வேல் மகன் நவீன்குமார் (15). அவன் ஆத்தூர் துலுக்கனூரிலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். மாணவன் நவீன்குமார், வேறு பள்ளியில் சேர்க்கும்படி பெற்றோரிடம் தெரிவித்தான். அதே பள்ளியில் படிக்கும்படி மாணவரது பெற்றோர் கூறியுள்ளனர். மனம்...
தமிழகம்
ஆத்தூர் ஓட்டு எண்ணிக்கை மையம் முன் கட்சியினர் தகராறு
ஆத்தூர்: இரண்டு நாட்களுக்கு முன்பு ஆத்தூர் நகராட்சி 28 வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்த வார்டில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அகிலா என்பவருக்கும், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட அபிராமி என்பவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஓட்டு பெட்டிகள் ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஓட்டு எண்ணிக்கை மைய...
தமிழகம்
பத்திரப்பதிவு அலுவலகங்களில் வெப் கேமரா வசதி
மதுரை,: தமிழகத்திலுள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில், ஜூலை 26 முதல் வெப்கேமரா வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால் அதற்கேற்ப எந்த முன்னேற்பாடும் செய்யப்படவில்லை.போலியாக பத்திரப்பதிவு செய்வதை தடுக்க, "ஹாலோகிராம்' உட்பட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை 26 முதல் வெப்கேமரா வசதி அறிமுகப்படுத்தப்படு...
தமிழகம்
பேரையூரில் குழந்தை சாவு மறியல்
பேரையூர்: பேரையூர் துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்ட உமாநாச்சியார் (2) என்ற குழந்தை கை,கால்கள் செயலிழந்து இறந்தது. பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நிவாரணம் வழங்குதல், சம்பந்தப்பட்ட நர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் முருகன், மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் பேரையூர் பஸ் ஸ்டாண்ட...
தமிழகம்
உண்டியல் திருட்டு
கீழவளவு: தனியாமங்கலத்தில் உள்ளது காளிகோயில் மற்றும் பெரிய பனையன் கோயில். இங்குள்ள உண்டியலை உடைத்து பணம் திருடப் பட்டது. இது குறித்து கோயில் நிர்வாகி கிருஷ்ணன் கீழவளவு போலீசில் புகார் செய்தார். போலீசார் தனியாமங்கலத்தை சேர்ந்த முனியாண்டி மகன் சேவுக பெருமாளை(23) கைது செய்து அவரிடமிருந்து பணத்தை மீட்டனர்.
தமிழகம்
நாம் தமிழர்கட்சியினர் மீது வழக்கு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் காங்.,தலைவர் சோனியா, தமிழக முதல்வர் கருணாநிதி மீது அவதூறு பரப்பும் வகையில் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் அனுமதியின்றி ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த செந்தில் (32), முருகன் (34), விளாச்சேரி மருது (35) மீது திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பத...
தமிழகம்
கேம்பஸ் இன்டர்வியூ
மதுரை: மதுரை கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லூரியில், காலிபர் இன்டர்கனைட் சொலுசன் பி.லிட்., சார்பில் இன்று காலை 9.30 மணிக்கு கேம்பஸ் இன்டர்வியூ நடக்கிறது. இ.இ.இ., இ.சி.இ., தேறிய அனைத்து கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம், என கல்லூரி முதல்வர் ராகவன் தெரிவித்துள்ளார். விபரங்களுக்கு 94426 46588 தொடர்பு கொள்ளலாம்.
தமிழகம்
உசிலம்பட்டி வழியாக நடைபயணத்திற்கு அனுமதி மறுத்த எஸ்.ஐ., உத்தரவு ரத்து
மதுரை: தேனி கூடலூரில் இருந்து மதுரை செல்லும் பிரமலைக்கள்ளர் முற்போக்குஇளைஞர் பேரவையின் நடைபயணம், உசிலம்பட்டி வழியாக செல்ல அனுமதி மறுத்த எஸ்.ஐ.,உத்தரவை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. பிரமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை தலைவர் ராஜபாண்டியன் தாக்கல் செய்த ரிட் மனு:பேரவை சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மா...
தமிழகம்
மழையால் ஏற்காட்டில் மண்சரிவு
சேலம்:தமிழகத்தில் முக்கிய வாசஸ்தலமாக ஏற்காடு திகழ்ந்து வருகிறது. அங்கு தென்மேற்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர் மழையால் ஏற்காட்டில் குளிர்காற்று வீச தொடங்கி இருக்கிறது. மழையால் மலைப்பாதையில் சில பகுதிகளில் அருவி போல் மழைநீர் கொட்டுவதால், அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனத்தை நிறுத்தி, அ...
தமிழகம்
காதலித்து கைவிட்டதால் நர்ஸ் தற்கொலை முயற்சி
நாகர்கோவில் : காதலித்து இரண்டு மாதம் குடித்தனம் நடத்தி விட்டு, காதலன் கைவிட்டதால் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் காப்பாற்றினார். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின் (23). நர்சிங் படித்துள்ள இவரும்,அதே பகுதியை சேர்ந்த நிஷாந்த்குமார் என்பவரும் காதலித்தனர். கடந்த இரண்டு ம...
தமிழகம்
பத்தாம் வகுப்பு மார்க் ஷீட் மிஸ்சிங் பள்ளிகளுக்கு கல்வித்துறை நோட்டீஸ்
திண்டுக்கல் : காணாமல் போன பத்தாம் வகுப்பு மார்க்ஷீட்டுடன் பள்ளிகளுக்கு, யாராவது வந்தால் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தர வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் மார்க் ஷீட் கடந்த மாதம் பட்டுவாடா செய்யப்பட்டது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள், சிலரது மார்க் ஷீட் காணாம...
இந்தியா
உ.பி.,யில் வெள்ளம்: பலி 11
லக்னோ : உத்தர பிரதேசத்தில் கனமழையால் ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் ஒன்றரை லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கங்கை, சரயூ உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோண்டா மாவட்டத...
தமிழகம்
ரேஷனில் கெரசின் வெட்டு; ஊழியர்கள் அதிர்ச்சி
சென்னை:கடந்த மாதத்தைப் போலவே இந்த மாதமும் ரேஷனுக்கு வரவேண்டிய கெரசின் சப்ளையில், 30 சதவீத அளவுக்கு வெட்டு விழுந்துள்ளது.இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு ரேஷன் கடைகள் உள்ளன. ஒரு ரூபாய் அரிசி திட்டத்...
இந்தியா
25 மணிநேரம் பயணிகள் அவதி : விமான நிலையத்தில் முடங்கினர்
ஆமதாபாத் : ஜெர்மனியின் முக்கிய நகரமான ப்ராங்புருட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஆமதாபாத் கிளம்பியது. மும்பை வழியாக ஆமதாபாத் செல்லும் இந்த விமானத்தின் பயண நேரம் 9 மணிநேரமாகும். இந்நிலையில், ஆமதபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இயந்திர கோளாறு காரணமாக இந்தூரில் இருந்து வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் ரன்வ...
இந்தியா
வெடிகுண்டு சோதனையால் கோவுர் எக்ஸ்பிரஸ் தாமதம்
கோல்கட்டா : மால்டாவில் இருந்து கோவுர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ரயில் பெட்டியில், அனாதையாக கிடந்த சூட்கேஸை கண்ட பயணிகள் ரயிலை நிறுத்தினர். செல்டா ரயில்நிலையத்தில், மோப்ப நாய்களுடன் நுழைந்த வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் சூட்கேஸை சோதனை செய்ததில் வெடிகுண்டு இல்லாதது தெரிந்தது. இறுதியில், அந்த சூட்கேஸ், டிக்கெட் பரிசோதகர...
தமிழகம்
ரயில் நிலையத்தில் ஊழியர்களின் கவனக்குறைவு அம்பலம்
சேலம்:சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் வழக்கமாக மூன்றாவது பிளாட்பாரத்தில் இருந்து விருத்தா சலத்துக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் சம்பவத்தன்று மூன்றாவது பிளாட்பாரத்தில் ரயில் இல்லாததால், பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர். அதே சமயம் அந்த ரயில் முதல் பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்தது. அப்போது ரயில்வே ஸ்டேஷனில், "மைக்' மூலம் ம...
இந்தியா
நாகா புரட்சி படை செயலாளர்-சிதம்பரம் சந்திப்பு
புதுடில்லி: நாகா புரட்சி படை செயலாளர் முய்வா மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து பேசினார். கடந்த புதன்கிழமை பிரதமரை சந்தித்த பின்னர் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சந்திப்பின்போது சம்பிரதயமான பேச்சுக்கள் இடம் பெற்றதாக அவர் கூறினார்.மேலும் கடந்த 97-ம் ஆண்டு முதல் 13 ஆண்டுகளாக தொடர்ந்து இரு தரப்பினரும் சுமார் 60-...
இந்தியா
ரூ.500 கோடி செலவில் மாசுகட்டுப்பாட்டு கருவி
புதுடில்லி: நாடு முழுவதும் 6 ஆயிரம் தொழிற்சாலை இடங்களில் ரூ.500 கோடி செலவில் மாசு கட்டுப்பாட்டு கருவி நிறுவப்படும் என மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம்ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மணலியில் அமைத்த கருவி நல்ல பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதே போன்ற...
இந்தியா
தகவல் அறியும் சட்டம்: 7 மாதங்களில் 8 பேர் கொலை
புதுடில்லி: தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ் தகவல் அறிய முற்பட்டவர்களில் 8 பேர் கடந்த 7 மாதங்களில் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்கிழமையன்று குஜராத் ஐ கோர்ட் அருகில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவலை பெற்றவர் கொல்லப்பட்ட பின்னர் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிரா...
இந்தியா
காமன் வெல்த் போட்டி : சீர்குலைக்க பாக்.,சதி
சண்டிகர்: புதுடில்லியில் நடைபெற உள்ள காமன் வெல்த் போட்டியை சீர் குலைக்க பாக்., தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக பஞ்சாப் உளவுத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் பெரேஸ்பூர் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட வெடி மருந்து மற்றும் தீவிரவாதியிடம் நடத்திய பஞ்சாப் போலீசார் மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளனர். இத்தாக்குதல...
இந்தியா
பள்ளி மாணவர்களுக்கு காப்பீடு திட்டம் அறிமுகம்
பாலக்காடு:பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு காப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை கேரள அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த திட்டம் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் தவிர, பள்ளிக் கட்டடத்துக்கும் காப்பீடு செய்யப்படும். தீ விபத்து போன்ற சம்பவங்கள், திருட்டு போன்றவற்றிற்கு காப்பீடு நிறுவனம் நஷ்டஈடு வழங்கும்.அரசுப் பள்ளிகள், உள் ளாட்சி...
தமிழகம்
அரசுபஸ் மோதி இன்ஜி., மாணவர் பலி
நெல்லை: தூத்துக்குடி மாவட்டம் பூபாலராயர்புரத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (எ) அருள். இவர் பாளையஙங்கோட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வந்தார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களை பார்ப்பதற்காக பாளையங்கோட்டை புது பஸ்ஸ்டாண்ட் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பா...
தமிழகம்
உள்ளாட்சி இடைத் தேர்தல்; ஆத்தூரில் தி.மு.க., வெற்றி
ஆத்தூர்: ஆத்தூர் 28வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் அகிலா 20 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நரசிங்கபுரம் 3ம் நிலை நகராட்சி 11வது வார்டில் திமுக வேட்பாளர் அழகிரி 75 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அழகிரி 279 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மீனா...
தமிழகம்
வாக்காளர் பேர் சேர்ப்பு : ஜூலை 26 வரை நீடிப்பு
சென்னை : புதிய வாக்காளர் பட்டியலில் பேர் சேர்ப்பதற்கான கடைசி தேதி ஜூலை 26ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார். பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று இம்முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை 27 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளதாகவும், ம...
தமிழகம்
தேடாவூர் தேர்தலில் திமுக தோல்வி
தேடாவூர் : சேலம் கங்காவல்லி அருகே உள்ள தேடாவூர் டவுன் பஞ்சாயத்து உள்ளாட்சி தேர்தலில் திமுக தோல்வி அடைந்துள்ளது. இப்பகுதியில் 3வது வார்டில் திமுக வேட்பாளர் ராஜாவை விட 23 ஓட்டுக்கள் அதிகம் பெற்று சுலேட்சை வேட்பாளர் பாலமுருகன் வெற்றி பெற்றுள்ளார். ராஜா 161 ஓட்டுக்களும், பாலமுருகன் 184 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.
இந்தியா
அமித் ஷா ராஜினாமா
காந்திநகர் : குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் ஒப்படைத்தார் என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும் அமித் ஷா குற்றமற்றவர் எனவும், அவர் மீதான சிபிஐ வழக்குகள் அனைத்தும் பெய்யானவை எனவும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
General
ரஷ்ய நிலக்கரி சுரங்கத்தில் விபத்து : 15 பேர் பலி
மாஸ்கோ : ரஷ்யாவில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கிமிரோவோ பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற போது சுரங்கத்தில் 67 பேர் வேலை செய்து ...
இந்தியா
காஷ்மீரில் மீண்டும் கலவரம்
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று மாலை தொழுகைக்கு பின் சிலர் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவின் உருவ பொம்மையை எரித்ததுடன், போலீசாருக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினர். மேலும் காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு மீண்டும் கலவரம் வெடித்தது. கலவரக்காரர்களை ஒடுக்க பாதுகாப்பு ப...
இந்தியா
ஐசிசி டெஸ்ட் தரவரிசை : சேவாக் முதலிடம்
புதுடில்லி : ஐசிசி டெஸ்ட் தரவரிசை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சேவாக் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார். இந்திய அணியின் மாஸ்ட் பேட்ஸ்மேன் சச்சின் ஒரு இடம் முன்னேறி 7வது இடத்தில் உள்ளார். காம்பீர் 10வது இடத்திலும், டிராவிட் 18வது இடத்திலும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி 30வது ...
தமிழகம்
ரூ.72 லட்சத்தில் தங்க அங்கி அறிமுகம்
மதுரை: மதுரை கீழவெளிவீதி டாடா நிறுவனத்தின் தனிஷ்க் தங்க நகை கடையில், சிறுவர், சிறுமியருக்கான 72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க அங்கி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.கடை மேலாளர் ஷீலா கூறியதாவது :ஆண்டுதோறும் நகை வடிவமைப்பில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகிறோம். இந்தாண்டு சிறுவர், சிறுமியருக்கான தங்க அங்கி அறிமுகம் செய்துள்ள...
தமிழகம்
சென்னையில் 15 கிலோ போதைப் பொருள் பறிமுதல்
சென்னை : சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 15 கிலோ கேட்டமைன் என்னும் போதைப் ‌பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கேட்டமைன் போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. போதைப் பொருள் கடத்த முயன்ற வியாசர்பாடியைச் சேர்ந்த தமிழ்மணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியா
அமர்நாத்தில் பயங்கரவாதிகள் சதி முறியடிப்பு
ஜம்மு : அமர்நாத் யாத்திரையை சீர்குலைப்பதற்காக ஸ்ரீநகர்-அமர்நாத் சாலையில் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அமர்நாத் செல்லம் பாதையில் அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம்
சென்னை தனியார் ஆலையில் விஷவாயு கசிவு
சென்னை : சென்னை அருகே உள்ள சுங்கவார்சத்திரம் பகுதியில் மொபைல் போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் திடீரென விஷவாயு கசிவு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு முறைக்கு மேலாக தொடர்ந்து விஷவாயு கசிவு ஏற்பட்டதால், ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. விஷவாயு கசிவு சரிசெய்யப்பட்ட பி...
General
இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்
ஜகர்த்தா : இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகாளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்‌த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. அடுத்தடுத்து நடைபெற்ற நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இருப்பினும் மக்கள் மத்தியில் அச்சம் ந...
இந்தியா
ஜூலை 26ல் பார்லி., மழைக்கால கூட்டத் தொடர்
புதுடில்லி : பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் (ஜூலை 26) துவங்க உள்ளது. இதில் விலைவாசி உயர்வு, குஜராத் அமைச்சர் சம்மன் உள்ளிட்ட பிரச்னைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டள்ளன. இந்த மழைக்கால கூட்டத் தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட 26 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழகம்
சென்னை அருகே கொத்தடிமைகள் மீட்பு
சென்னை : சென்னை அருகே ஒதிக்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூலை ஒன்றில் ஓராண்டிற்கும் மேலாக கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த 7 குடும்பங்களைச் ‌சேர்ந்த 24 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒதிக்காடு வட்டாட்சியர் தலைமையிலான அதிரடி சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 24 பேரும் அவர்களது சொந்த ஊரான நாவல்பா...
இந்தியா
ஆண்டு இறுதிக்குள் விலைவாசி கட்டுப்படுத்தப்படும் :பிரதமர்
புதுடில்லி : டில்லியில் நடைபெறும் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் தனது துவக்கவுரையில், வேளாண்மை திட்டங்களுக்கு மத்திய அரசில் முதலிடம் தரப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும் 12வது 5 ஆண்டு திட்டத்தில் வேளாண்மை, கிர...
இந்தியா
அமர்நாத் யாத்திரை மீண்டும் துவங்கியது
ஜம்மு : இரண்டு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அமர்நாத் புனித யாத்திரை இன்று மீண்டும் துவங்கி உள்ளது. வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் அமர்நாத் குகைக் கோயிலுக்குச் செல்லும் பாதைகள் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளதால், கடந்த இரண்டு நாட்களாக யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டது.
தமிழகம்
சென்னையில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்
சென்னை : சென்னையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் இன்று மாலை நடைபெறுகிறது. ஈசிஆர் சீக்கினாங்குப்பத்தில் நடைபெறும் ஸ்ரீநிவாச திருக்கல்யாணத்தை இலவசமாக காணலாம். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.
தமிழகம்
எஸ்.சி.,எஸ்.டி., சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
நெல்லை : ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., தொழிலாளர்கள் சங்கங்களின் சார்பில் நெல்லை மாவட்டத்தில் போஸ்ட்டர்கள் ஒட்டி கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜூலை 26ம் தேதி (திங்கட்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் கண்டன ...
தமிழகம்
குடும்ப தகராறில் குழந்தைகளை கொன்ற பெண் கைது
திருச்சி : திருச்சி அருகே உள்ள இனாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி தனம். இவர்களுக்கு சஞ்சய் குமார் (3 1/2), கணேசன்(1) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியனுக்கும், தனத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கம் போல் சுப்பிரமணியனுக்கும், தனத்திற்கும் இடையே நேற்ற...
தமிழகம்
மாயாகுளம் ஊராட்சி தேர்தல் : திமுக வெற்றி
திருப்புல்லாணி : ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாயாகுளம் ஊராட்சிமன்ற தேர்தல் ஜூலை 22ம் தேதியன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் 3 பேர் போட்டியிட்டனர். ஊராட்சி மன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 2703 ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. இதில் திமுக ஆதரவு வேட்பாள...
தமிழகம்
கேரள ஓட்டல்களில் தமிழக ரேஷன் அரிசி ரூ.5க்கு விற்பனை
சேலம்: தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டு, கேரளாவில் உள்ள ஓட்டல்களுக்கு, ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக, ரேஷன் கடைகளில் புழுங்கல் மற்றும் பச்சரிசி, ஒரு ரூபாய்க்கு தமிழக அரசால் வழங்கப்படுகிறது. கடத்தலுக்கென உள்ள ஜாம்பவான்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கவனித்து, பல்வேறு மாநிலங...
தமிழகம்
ஸ்ரீபெரும்புதூரில் தொழிலாளர்கள் பாதிப்பு
ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூரில் தனியார் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. கடந்த ஒன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த கம்பெனி, சில மாதங்களுக்கு முன் மீண்டும் திறக்கப்பட்டது. இதில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு இன்று திடீரென வாதி மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் போரூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளன...
தமிழகம்
தக்காளி விலை வீழ்ச்சி
திருப்பூர் : தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்று, தக்காளி கூடை 70 ரூபாயாக குறைந்தது.கடந்த இரு வாரங்களாக தக்காளி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் 100 ரூபாய் வரை விற்ற தக்காளி, நேற்று கூடை 70 ரூபாய் என குறைந்தது. மார்க்கெட் டுக்கு 600 கூடை வரை வரத்து இருந்தது. கொத்தமல்லி கட்டு இரண்டு ரூபாய் என விற்கப்பட்...
இந்தியா
காஷ்மீரில் பஸ் விபத்து : 25 பேர் பலி
ஜம்மு : காஷ்மீரில் பஸ் ஒன்று ஆற்றிற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஜம்மு அருகே பொன்க மார்க் பகுதியில் வந்த போது அதிவேகம் காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. விபத்தில் 3 பேர் மட்டும் படுகாயங்களுடன் நீந்தி வந்துள்ளனர். படுகாயம் அடைந்த...
இந்தியா
விவசாய வளர்ச்சி அதிகரிக்கும் : ரங்கராஜன் நம்பிக்கை
புதுடில்லி: 'நடப்பு நிதியாண்டில் (2010-11) விவசாயத் துறையின் வளர்ச்சி 4.5 சதவீதமாக இருக்கும்' என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 2010-2011ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையை வெளியிட்ட அதன் தலைவர் ரங்கராஜன் மேலும் கூறியதாவது: நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் வறட்சி நிலவியதால், கடந்த நிதியா...
தமிழகம்
விழுப்புரத்தில் போக்குவரத்து கழக அலுவலகம் முற்றுகை
விழுப்புரம் : விழுப்பரம் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் சிஐடியூ சங்கத்தினர் கடந்த சில நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். இவர்களை சந்திக்க சங்க நிர்வாக அதிகாரி மறுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிஐடியூ சங்கத்தை சேர்ந்த 500க்கம் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தினருடன் வந்து அரசு போக்குவரத்து கழக அ...
இந்தியா
சென்னை அருகே மொபைல் போன் நிறுவனத்தில் 120 பேருக்கு மயக்கம் ; ஆஸ்பத்திரியில் அனுமதி
ஸ்ரீ பெரும் புதூர் : சென்னை அருகே மொபைல் போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் 120 தொழிலாளர்கள் வாந்தி, மயக்கத்தினால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதிக்கப்பட்ட காரணம் குறித்து தனியார் நிறுவனத்தினர் வெளியே தெரியாமல் செய்ய முயற்சிப்பதாக தெரிகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும் புதூர் ...
தமிழகம்
கன்னியாகுமரியில் எம்.பி., எம்.எல்.ஏ., கைது
கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் நெய்யாற்றில் தண்ணீர் திறந்து விடக்கோரி கேரள அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட எம்.பி., ராமசுப்பு மற்றும் எம்.எல்.ஏ., விடியல்சேகர் உட்பட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகம்
நாம் தமிழர் இயக்கத்தினர் மீது நடிகர் கருணாஸ் புகார்
சென்னை : இலங்கைக்கு செல்லக் கூடாது என நாம் தமிழர் இயக்கத்தினர் தொடர்ந்து மொபைலில் மிரட்டி வருவதாக சென்னை கமிஷ்னரிடம் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகவே தான் இலங்கை செல்ல உள்ளதாகவும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.மேலும் மிரட்டலுக்கு பயந்து தனது இலங்கை பயணத்தை ரத்து செய்ய முடியாத...
தமிழகம்
தங்கம் விலையில் சரிவு
சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று சிறிது சரிவு ஏற்பட்டள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 ம், பார் வெள்ளி ரூ.115ம் குறைந்தள்ளது. சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1704 க்கும், 24 காரட் தங்கம் ரூ.18325 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.13632 ஆக உள்ளது. இது நேற்றை விட ரூ.80 ...
தமிழகம்
உரப்பாக்கம், ஒரத்தூரில் அ.தி.மு.க., ஆதரவு வேட்பாளர் வெற்றி
செங்கல்பட்டு : காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த பஞ்சாயத்து இடைத்தேர்தலில் உரப்பாக்கம், ஒரத்தூரில் அ.தி.மு.க., ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். காட்டான்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட உரப்பாக்கம் பஞ்சாயத்து தலைவராக அ.திமு.க., ஆதரவு பெற்ற பெருமாள், தி.மு.க., வேட்பாளரை விட 72 ஓட்டுக்கள் கூடுதல் பெற்று வெற்றி பெற...
தமிழகம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் கலால் வரி ரெய்டு
தூத்துக்குடி : தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர கம்பெனியில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக வந்த புகாரின் பேரில் மத்திய கலால் வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் இந்த சோதனையில் ரூ.750 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்றுமதி இ...
தமிழகம்
மதுரையில் காணாமல் போன குழந்தை ஏர்வாடியில் கொலை
மதுரை : மதுரை தர்ஹாவில் காணாமல் போன குழந்தையின் உடல் ஏர்வாடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை அருகே உள்ள எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் ஷிரின் பாத்திமா. இவர் வேண்டுதலுக்காக மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தர்ஹாவில் தனது 1 1/4 வயது குழந்தை காதர் யூசுப்புடன் இரவு தங்கி உள்ளார். காலைய...
தமிழகம்
காரமடை ஊராட்சி தேர்தலில் குலுக்கல் முறையில் மதிமுக வெற்றி
காரமடை : மேட்டுப்பாளையம் காரமடை ஊராட்மி ஒன்றியம் இழுப்பநத்தம் ஊராட்சி தேர்தலில் திமுக மற்றும் மதிமுக வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் கருணாகரன் மற்றும் மதிமுக வேட்பாளர் ஆனந்தன் இருவரும் தலா 431 ஓட்டுக்கள் பெற்றனர். இதனால் குலுக்கல் முறையில் ஊ...
தமிழகம்
சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை : பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து சென்னையில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மெமோரியல் ஹால் அருகே நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.பொன்னைய்யன் தலைமை வகிக்கிறார். பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.
இந்தியா
உ.பி.,யில் பருவமழை தீவிரம்
லக்னோ : உத்திர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் 20 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன. சாலைகள் மற்றும் தண்டவாளங்களில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. கான்பூர், ஆமதாபாத் பகுதிகளில் கங்கை நதியில் வெள்ளம் கரை புரண்டு...
தமிழகம்
அருப்புக்கோட்டை அரசு கருவூல பணியாளருக்கு வலைவீச்சு
அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு கருவூல கணக்களராக இருப்பவர் செல்லப்பாண்டி. இவர் ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்டவற்றில் ரூ.5 லட்சம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ரூ.1 லட்சத்தை மட்டும் திருப்பி செலுத்திய நிலையில் செல்லப்பாண்டி தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வ...