category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
கஸ்டம்ஸ் ஏஜன்ட் வீட்டில் நகைகள் திருட்டு
வண்ணாரப்பேட்டை : வெளியூர் சென்ற கஸ்டம்ஸ் ஏஜன்ட் வீட்டிலிருந்த, 15 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.கடலூரை சேர்ந் தவர் திலக்ராஜ் (27). கஸ்டம்ஸ் ஏஜன்ட். சென்னை புதுவண்ணாரப்பேட்டை, வெங்கடேச முதலி தெருவில், வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் காலை கடலூர் சென்ற திலக்ராஜ், நேற்று காலை வீடு திரும்பினா...
இந்தியா
தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை: பிரதமர் மன்மோகன் பதில்
புதுடில்லி : தமிழகம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னையில் மத்திய அரசு ஒரு பார்வையாளராகவே உள்ளது என்ற முதல்வர் கருணாநிதியின் கருத்தை, பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துள்ளார். நிருபர்களிடம் நேற்று பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதில், மத்த...
தமிழகம்
விடாதே, பிடி : விரட்டுது லஞ்ச ஒழிப்பு துறை : ஓராண்டில் 12 பேர் கைது
கோவை மற்றும் திருப்பூரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஓராண்டில் நடத்திய வேட்டையில் 12 அதிகாரிகள், ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள்,செக்போஸ்ட்களில் நடந்த திடீர் சோதனையில் 13 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கையில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க அழைப்பு விடுத்...
தமிழகம்
ஆவடி கோட்டத்தில் புதிய மின் கட்டண முறை
சென்னை : ஆவடி கோட்டத்தின் கீழ் உள்ள 18 பிரிவு அலுவலகங்களில் மின் கட்டண கணக்கீடு மற்றும் வசூல் செய்வதில் புதிய திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:குறைந்த மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு மின் கட்டண கணக்கீடு மற்றும் வசூல் செய்வதில் தற்போது உள்ள முறையில் மாற்றம் செய்து, மாத...
தமிழகம்
விமரிசையாக நடந்த வடபழனி கோவில் தேரோட்டம்
வடபழனி : வைகாசி விசாகத்தை முன்னிட்டு, வடபழனி கோவில் தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது.வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்ட திருவிழா, நேற்று காலை 6 மணிக்கு துவங்கியது.அறங்காவலர் குழுத் தலைவர் சீர்காழி சிவசிதம்பரம், துணை ஆணையர் காவே...
தமிழகம்
சொத்து ஜாமீனின்றி கல்விக் கடன் தர வங்கி மறுப்பு
கடலூர் : பல்வேறு கனவுகளோடு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ஏழை விவசாயி மகளுக்கு, வங்கியில் கல்விக் கடன் கிடைக்காததால், கல்லூரியில் சேர்ந்தும் படிப்பை தொடர முடியாமல், கூலி வேலை செய்து வருகிறார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழிருப்பு கிராமம் அருகே உள்ள நடுக்காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் - மல்லிகா ஏழை வி...
இந்தியா
ஏமாற்றம் அளிக்கும் ஓராண்டு: பா.ஜ., மதிப்பீடு
புதுடில்லி : ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசின் இந்த ஓராண்டுக் கால ஆட்சி,   விலைவாசி உயர்வு, சி.பி.ஐ.,யைத் தவறாகப் பயன்படுத்தியது போன்ற செயல்களால் ஏமாற்றம் அளிப்பதாக பா.ஜ., கூறியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டுக் காலம் முடிவடையும் ...
இந்தியா
ஜோதிடர் போல் பேசுகிறார் : பிரதமர் மீது இடதுசாரிகள் சாடல்
புதுடில்லி : இரண்டாவது முறை ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாம் ஆண்டு ஆட்சி ஏமாற்றம் அளித்துள்ளது என, இடதுசாரி கட்சிகள் குறை கூறியுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ...
தமிழகம்
கல்லூரி மாணவி கருகி பலி
மாமல்லபுரம் : கல்லூரி மாணவி தீயில் கருகி இறந்தார்.சதுரங்கப்பட்டினம் அடுத்த நெய்குப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகள் பூஷ்ணம்(22). கேளம்பாக்கம் தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த 22ம் தேதி இரவு 7 மணிக்கு வீட்டில் சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ் பற்ற வைத்தார். அப்போது அவரத...
தமிழகம்
மதுராந்தகம் அருகே மீண்டும் வயிற்றுப்போக்கு10 பேர் மருத்துவமனையில் அனுமதி
மதுராந்தகம் : மதுராந்தகம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் மீண்டும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்ட 10 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மதுராந்தகம் அருகே சரவம்பாக்கம் ஊராட்சிக் குட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் கடந்த 22ம் தேதி 15 பேர் திடீர் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டனர். அனைவரும் நல்லாமூர் ஆரம்ப சுகாதார நிலைய...
தமிழகம்
கம்பெனியில் திருட்டு5 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் : மொபைல் போன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள, செம்பு கம்பிகளை திருடிய ஐந்து பேரைப் போலீசார் கைது செய்தனர்.ஒரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் மொபைல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு குளிரூட்டும் சாதனம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதற்கா...
தமிழகம்
எட்டு வயது மகனை வெட்டிய தந்தை கைது
ஸ்ரீபெரும்புதூர் : எட்டு வயது மகனை கத்தியால் வெட்டிய தந்தையை, போலீசார் கைது செய்தனர்.சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி(48). இவருக்கும், சோமங்கலம் அடுத்த மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதிலட்சுமிக்கும் 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின், சோமங்கலம் இந்திரா நகரில் ...
தமிழகம்
சாலை விபத்துகளில் ஒரே நாளில் ஏழு பேர் பலி : காஞ்சிபுரம் சாலைகளில் பரிதாபம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்த, வெவ்வேறு சாலை விபத்துகளில், மூதாட்டி உட்பட ஏழு பேர் உடல் நசுங்கி இறந்தனர்.காஞ்சிபுரம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் நாராயணன் (70). சிவானந்தம் (20) என்பவருடன், 22ம் தேதி காலை 9:30 மணிக்கு ஒலிமுகமது பேட்டையில், சாலையை கடந்தார். அப்போது அவ்வழியே வந்த, ஹீரோ ஹோண்டா பை...
தமிழகம்
ஒரே எண்ணில் ஓடிய இரு லாரிகள் பறிமுதல்
ஸ்ரீபெரும்புதூர் : ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு லாரிகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டை சிப்காட் வளாகத்தில், 250க்கும் மேற்பட்ட, தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழிற்சாலைகளிலுள்ள இரும்பு பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள், தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விற்கப்படுகிறது.இந்த கழிவுப்பொருட்களை, ஏற...
தமிழகம்
சாலை விபத்துகளில் ஒரே நாளில்...சிங்கபெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
செங்கல்பட்டு : சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள பாடலாத்ரி நரசிம்ம சுவாமி கோவில் தேர் திருவிழாவில், 35 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் பகுதியில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடக்கும்ம். ஏழா...
தமிழகம்
வியாக்ரபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
உத்திரமேரூர் : திருப்புலிவனம் கிராமத் தில் உள்ள வியாக்ரபுரீஸ் வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத் தில் அருள்மிகு அமிர்தகுஜாம்மாள் உடனுறை வியாக்ரபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக் கோவில் சமீபத்தில் புதுப் பிக்கப்பட்டது. திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய...
தமிழகம்
நெல்லை கலெக்டர் மகன் திருமண விழா
திருநெல்வேலி:நெல்லை கலெக்டர் மகன் திருமண விழா பாளை.,யில் நடந்தது.நெல்லை கலெக்டர் ஜெயராமன்-உமாராணி தம்பதியரின் மகன் டாக்டர் ஜெயப்பிரகாஷ், டாக்டர் சீனிவாசன்-டாக்டர் சந்திரா தம்பதியரின் மகள் டாக்டர் ஐஸ்வர்யா திருமண வைபவம் பாளை., ராஜகோபால சுவாமி கோயிலில் நடந்தது. அதைத் தொடர்ந்து மகராசி மகாலில் திருமண விருந்து நடந்தது. இத...
தமிழகம்
மாற்றுத்திறனுடையோருக்கானஉதவித்தொகை கேட்டு மனு
திருநெல்வேலி:மாற்றுத் திறனுடையோருக்கான உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என டி.ஆர்.ஓவிடம் தென்காசி 9வது வார்டு உறுப்பினர் முகமது ராசப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தென்காசி மாலிக் நகரைச் சேர்ந்தவர் முகம்மதுஉசேன். இவர் குழந்தையாக இருக்கும் போதே ஒன்றரை வயதில் ப...
தமிழகம்
கல்லூரி படிப்புக்கு வசதியில்லாமல்தவிக்கும் கொக்கிரகுளம் ஏழை மாணவி
திருநெல்வேலி:பிளஸ் 2 தேர்வில் 1091 மார்க் பெற்ற தந்தையை இழந்த மாணவி மேற் படிப்புக்கு வழியில்லாமல் தவிக்கிறார்.நெல்லை கொக்கிரகுளம் இளங்கோவடிகள் தெருவைச் சேர்ந்தவர் முத்துலெட்சுமி. இவர் பாளை., மேரிசார்ஜென்ட் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். தமிழில் 179, ஆங்கிலம் 165, இயற்பியல் 179, வேதியியல் 196, கம்ப்யூட்டர் சயின்ஸ் 192, கண...
தமிழகம்
ஐ.சி.ஐ.அரசு பள்ளிமாவட்ட அளவில் 2ம் இடம்
தென்காசி:தென்காசி ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.தென்காசி ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 82 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவர் முகமது யாசின் 1149 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடமும், மாவட்...
தமிழகம்
கடப்போகத்தி சாலை சீரமைப்பில்தாமதம்; பொதுமக்கள் அவதி
தென்காசி:கடப்போகத்தி சாலை சீரமைப்பில் காலதாதமம் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.தென்காசி அருகே கடப்போகத்தி கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு தென்காசி-நெல்லை ரோட்டில் இருந்து பிரிந்து செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இத...
தமிழகம்
குற்றாலத்தில் சீசன் அறிகுறி
தென்காசி:குற்றாலத்தில் விரைவில் சீசன் துவங்குவதற்கான அறிகுறி ஏற்பட்டுள்ளது.குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் சீசன் துவங்கும். இலங்கை, கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கி விட்டால் குற்றாலத்தில் சீசன் துவங்கி விடும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்காள விரிகுடாவில் லைலா புயல் மையம் கொண்டிருந்த காரணத்தினால் வட மாவட...
தமிழகம்
கீழாம்பூரில் சிவசைலபதி - பரமகல்யாணி அம்பாள் வசந்த அழைப்பு விழா நடந்தது.
ஆழ்வார்குறிச்சி:கீழாம்பூரில் சிவசைலபதி பரமகல்யாணி அம்பாள் வசந்த அழைப்பு விழா துவங்கியது.சிவசைலத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது சிவசைலபதி பரமகல்யாணி அம்பாள் கோயில். பங்குனி மாதம் கடைசிநாள் ஆழ்வார்குறிச்சியில் தேர்திருவிழா நடக்கும். பரமகல்யாணி அம்பாள் ஆம்பூர் அக்ரஹாரம் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. எனவ...
இந்தியா
சிபு சோரன் அரசுக்கு பா.ஜ., அளித்த ஆதரவு வாபஸ் : அடுத்ததாக ஆதரவு தர காங்கிரஸ் மும்முரம்
ராஞ்சி : ஜார்க்கண்டில் சிபு சோரன் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, பா.ஜ., நேற்று வாபஸ் பெற்றது. இதையடுத்து, சிபு சோரன் அரசு பெரும் பான்மையை இழந்துள்ளது. ஒரு வாரத்துக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி சிபு சோரனுக்கு, கவர்னர் பரூக் உத்தரவிட்டுள்ளார். இந்த பரபரப்பு திருப்பத்தை அடுத்து, புதிய அரசு அமைப...
தமிழகம்
இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்:பாளை.யில் போலீசார் மீது வழக்கு
திருநெல்வேலி:பாளை.யில் இளம்பெண்ணை திருணம் செய்வதாக கூறி ஏமாற்றி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த 2009ம் ஆண்டு பாளை.அண்ணா ஸ்டேடியத்தில் போலீஸ் தேர்வு நடந்தது. தேர்வின் போது பாளை.மணப்படை வீடு கிராமத்தை சேர்ந்த நடேசன்(28) என்பவருக்கும், நான்குநேரி அருகேயுள்ள மறுகால்குறிச்...
தமிழகம்
மின்சாரம் தாக்கி ஒன்பது கறவைமாடுகள் பலி: ஒருவர் காயம்
திருவள்ளூர் : வயல்வெளியில் மேய்த்து கொண்டிருந்த மாடுகள் மீது, மின்சார கம்பி அறுந்து விழுந்ததில், ஒன்பது கறவை மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது. ஒருவர் காயமடைந்தார்.திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த, புலியூர் கண்டிகை கிராமத்தை சேர்ந்த, நாகப்பன் மகன் வெங்கடேசன் (40). இவரிடம் ஒன்பது கறவை மாடுகள் உள்ளன. தினமும் காலை மாடு...
தமிழகம்
அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பள்ளிப்பட்டு : கனகவள்ளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பள்ளிப்பட்டு அடுத்த பொம்மராஜூபேட்டை கிராமத்தில் கனகவள்ளி அம்மன் கோவில் உள்ளது. சிதிலமடைந்து கிடந்த இக்கோவில் புதுப்பிக்கப் பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை 4 மணி முதல் யாகசாலையில் வேதபண்டிதர்கள் வேதம் ஓத யாகசா...
தமிழகம்
வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பணி வழங்க டயர் கம்பெனி தொழிலாளர்கள் குவிந்தனர்
திருநெல்வேலி:வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பணி வழங்க கோரி நெல்லையில் கங்கைகொண்டான் டயர் கம்பெனி தொழிலாளர்கள் குவிந்தனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு தலைவர் ராஜாங்கம் தலைமையில் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:கங்கைகொண்டான் சிப்காட் வ...
தமிழகம்
தேசிய ஊரக பணி செய்த பெண் பலி
திருவள்ளூர் : தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்த பெண் தொழிலாளி மயங்கி விழுந்து பலியானார்.திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் குளம் தூர்வாரி ஆழப்படுத்தல், நீர்வரத்து கால்வாய் சீரமைத்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது.கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூரை சேர்ந்த கிருஷ்ணன்...
தமிழகம்
ரகுமானியாபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு:காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை
திருநெல்வேலி:ரகுமானியாபுரத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் செங்கோட்டை வடகரை பகுதி பெண்கள் பலர் கவுன்சிலர் சேக் உசேன் பீவி தலைமையில் காலி குடங்களுடன் குவிந்தனர். தொடர்ந்து அளித்த மனுவில் தெரி...
தமிழகம்
ஏழை மாணவ, மாணவியருக்குஅமெரிக்க நிபுணர்கள் பயிற்சி
திருவள்ளூர் : சேவாலயா பள்ளியில் பயிலும் ஏழை மாணவ, மாணவியருக்கு, அமெரிக்க நிபுணர்கள் நடனம், ஓவியம், இசைப் பயிற்சி அளிக்க வந்துள்ளனர். இதில் ஆர்வமிக்க மாணவ, மாணவியருக்கு ஐந்தாண்டுகள் இலவசமாக முழு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே கசுவா கிராமத்தில், சேவாலயா அறக்கட்டளை சார்பில் மகாகவி பாரதி...
தமிழகம்
மழை நீர் சேகரிப்பை ஊக்குவிக்க விருதுகள்: ஜூன் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
திருநெல்வேலி:மழை நீர் சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் விருதுகளை பெற வரும் ஜூன் மாதம் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.நில நீர் சேமிப்பை ஊக்குவிப்பதற்கு மத்திய நீர் வளத் துறை நில நீர் செறிவூட்டும் விருது மற்றும் தேசிய நீர் வள விருது ஆகியவற்றை வழங்க முடிவு செய்துள்ளதுநெல்லை மாவட்டத்தில் மழை நீர் சேகரிபபு மற்...
தமிழகம்
உலக தைராய்டு தினம்
இந்தியாவில் தைராய்டு நோயால் சுமார் 4 கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களைக காட்டிலும் பெண்களுக்கு எட்டு மடங்கு அதிகமாக தைராய்டு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவது மிகவும் அவசியம். தைராய்டு பிரச்சனையாவது மிகவும் பொதுவானதாகவும், இந்நோய் பாதித்துள்ளது என்பதை எளிதில் அறிந்துக் கொள்ள...
தமிழகம்
தென்காசியில் 28ம் தேதி திருக்குறள் விழா துவக்கம்
தென்காசி:தென்காசியில் வரும் 28ம் தேதி திருக்குறள் வார விழா துவங்கி ஜூன் 1ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது.தென்காசி திருவள்ளுவர் கழகம் சார்பில் 83வது திருக்குறள் வார விழா வரும் 28ம் தேதி துவங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு திருக்குறள் முற்றோதுதலுடன் நிகழ்ச்சிகள் துவங்குகிறது. கசேந்திரன் முன்னிலை வகிக்கிறார். காசிவிசுந...
தமிழகம்
தென்காசி அரசு நூலகத்தில்நாளை தேர்வு முடிவுகள்
தென்காசி:தென்காசி வ.உ.சி.நினைவு அரசு பொது நூலகத்தில் நாளை (26ம் தேதி) எஸ்.எஸ்.எல்.சி.,மெட்ரிக் தேர்வு முடிகள் இலவசமாக அறிவிக்கப்படுகிறது.தமிழத்தில் எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் மெட்ரிக் தேர்வு முடிவுகள் நாளை (26ம் தேதி) வெளியிடப்படுகிறது. தென்காசி பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் தங்கள் மதிப்பெண்களை அறிந்து கொள்ளும் வசதி தென்கா...
தமிழகம்
செங்கோட்டை பகுதியில் செம்மை நெல் சாகுபடி முகாம்
தென்காசி:செங்கோட்டை பகுதியில் கார் பருவ செம்மை நெல் சாகுபடி முகாம் நடந்தது.செங்கோட்டை வட்டாரம் செங்கோட்டை, புளியரை, தாட்கோநகர், மூன்று வாய்க்கால் பகுதி விவசாயிகளுக்கு கார் பருவ செம்மை நெல் சாகுபடி முகாம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடந்த இம்முகாமிற்கு நீர் பாசன சங்க தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார்.மு...
தமிழகம்
பந்தப்புள்ளி மாரியம்மன் கோயிலில் இன்று கொடை விழா;போலீஸ் குவிப்பு:எதிர்ப்பு தெரிவித்த 7 சமுதாய மக்கள்
திருவேங்கடம்:பந்தப்புளி கண்ணநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஒரு பிரிவினர் இன்று கொடைவிழா நடத்துவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொடைவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து எட்டிசேரி மலையில் தஞ்சமடைந்துள்ள 7 சமுதாய மக்கள் நேற்று 2வது நாளாக மலையிலேயே சமையல் செய்து சாப்பிட்டு தங்கியுள்ளனர்.நெல்லை மாவட்டம் சங்கர...
இந்தியா
நிவாரணத்தில் ஹமீத் அலி உயர்ந்து நிற்கிறார் மாமனிதர்
மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூரில் நடந்த விமான விபத்தின் போது, முஸ்லிம் முதியவர் ஒருவர் இரண்டு நாட்களாக ஓய்வின்றி சடலங்களை மீட்க உதவியுள்ளார். மங்களூரு எல்லைப் பகுதியில் உள்ளது மஞ்சேஷ்வர். இந்த பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஹமீத் அலி(60). ஆறு குழந்தைகளுக்கு தந்தையான இவர், விமான விபத்தின் போது வீட்டில் படுத்திருந்தார்....
தமிழகம்
கடையத்தில் ராமநதி அணைக்கு செல்லும் பாதையை சரிசெய்ய கோரி புதிய தமிழகம் ஆர்பாட்டம்
ஆழ்வார்குறிச்சி:கடையத்தில் ராமநதி அணைக்கு செல்லும் பாதையை சீரமைக்க கோரி புதிய தமிழகம் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.கடையம் ஒன்றிய புதிய தமிழகம் சார்பில் கண்ட ஆர்பாட்டத்திற்கு கடையம் ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.முருகன் தலைமை வகித்தார். நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுப்பிரமணியன், கடையம் ஒன்றிய அவைத்தலைவர் செந...
தமிழகம்
நெல்லையில் உள் மாவட்ட அளவில் கவுன்சிலிங்85 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் ஆணை:இன்று நிறைவு
திருநெல்வேலி:தொடக்க கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் பாளை பிஷப் சார்ஜென்ட் ஆசிரிய பயிற்சி நிறுவனத்தில் கடந்த 20ம் தேதி முதல் நடந்து வருகிறது.நேற்று காலையில் இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல் நடந்தது. இதில் 34 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் ஆணை வழங்கப்பட்ட...
தமிழகம்
பணகுடி அருகே விபத்தில் 11 பேர் பலியான சம்பவம்:சோகத்தில் மூழ்கின மணமக்கள் வீடுகள்
வள்ளியூர்:பணகுடி அருகே தனியார் பஸ்-வேன் மோதிய விபத்தில் திருமண கோஷ்டியினர் 9 பேர் உட்பட 11 பேர் பலியானதையடுத்து மணமக்கள் வீடுகள் சோகத்தில் மூழ்கின.நாகர்கோவில் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் முகமதுஅனிபா (எ) முருகன்(44). இவர் மகள் அனிதாவிற்கும், நெல்லை டவுன் தென்பத்து நெல்லையப்பன் மகன் வடிவேல்ராஜிற்கும் நேற்றுமுன்தினம் நாகர...
தமிழகம்
கங்கைகொண்டான் சுடலைமாட சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
திருநெல்வேலி:கங்கைகொண்டான் சேனைத் தலைவர் சமுதாயம் பொது சுடலைமாட சுவாமி கோயில் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நாளை 26ம் தேதி நடக்கிறது.விழா முன்னிட்டு நேற்று (24ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பஞ்ச கவ்ய பூஜை, 6.30 மணிக்கு மகா க...
தமிழகம்
ஆய்குடியில் வாணியர் சமுதாயத் திருமண மண்டபம் திறப்பு
திருநெல்வேலி:ஆய்குடியில் வாணியர் சமுதாயத் திருமண மண்டபம் மேல்தளம் திருமண மஹால் திறப்பு விழா நடந்தது.வட்டார வாணியர் சமுதாயத் தலைவர் பட்டன் செட்டியார் தலைமை வகித்தார். பொருளாளர் அழகு செட்டியார் மற்றும் புனலூர் பாஸ்கர் முன்னிலை வகித்தனர். பண்பொழி திருமலைக்குமாரசாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருணாசலம் செட்டியார் திரு...
தமிழகம்
சிறுபான்மை மாணவர்களின் கல்வித்தரம்:நெல்லையில் 3 மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு
திருநெல்வேலி:சிறுபான்மை மாணவர்களின் கல்வித் தரம் குறித்து நெல்லையில் 3 மாவட்ட அதிகாரிகளுடன் சிறுபான்மை நலத்துறை ஆணையர் பஷீர் அகம்மது ஆய்வு செய்தார்.தமிழ்நாடு பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை ஆணையர் பஷீர் அகம்மது நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்...
தமிழகம்
மார்த்தாண்டத்தில் கனமழை: 45 மி.மீட்டர் மழை பதிவு
மார்த்தாண்டம்:மார்த்தாண்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குழித்துறையில் நேற்று காலை வரை 45 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. மார்த்தாண்டம், குழித்துறை, மேல்புறம், படந்தாலுமூடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் கடுமையான வெயில் அடித்தது. வெயிலின் காட்டமும் அதிகமாக காணப்பட்டது. கடந்த இரண...
தமிழகம்
நெஞ்சை உலுக்கியது பணக்குடி விபத்து: பலியானோர் 11; காயமடைந்தோர் 15தாய், தங்கை உடலை கண்டு மயங்கி விழுந
நாகர்கோவில்:பணக்குடி அருகே தனியார் பஸ் திருமண கோஷ்டி சென்ற வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மணமகளின் தாய் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மணமகளின் தாயும், தங்கையும் இறந்ததால் மணமகள் மயங்கி விழுந்தார். நாகர்கோவில் வட்டவிளையை சேர்ந்தவர் அனிபா என்ற முருகன். இ...
தமிழகம்
ஒரே குடும்பத்தில் மூவர் பலி
நாகர்கோவில்:பணகுடி அருகே நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். பணகுடி அருகே தனியார் சொகுசு பஸ்சும், திருமண கோஷ்டி சென்ற வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்...
தமிழகம்
குமரி முழுவதும் பரவலான மழை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
நாகர்கோவில்:குமரி மாவட்டம் முழுவதும் தற்போது பெய்து வரும் பரவலான மழையால் பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த மூன்று மாதங்களாக சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் ...
தமிழகம்
2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சோழவரம் : ஆந்திர மாநிலம் கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் அத்திப்பேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள சிவன் கோவில் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏரா...
தமிழகம்
சான்றிதழ்கள் வாங்க அல்லாடும் பொதுமக்கள் : அம்பத்தூர் தாலுகாவில் தினமும் அவதி
அம்பத்தூர் : வி.ஏ.ஓ., ஆர்.ஐ., மற்றும் தாலுகா என தனித்தனியாக அமைந்துள்ள அலுவலகங்களால் சான்றிதழ் வாங்குவதற்காக பொதுமக்கள் அலைய வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்க, அனைத்து அலுவலகங் களையும், தாலுகா அலுவலகத்திலேயே அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.அம்பத்தூர் தாலுகா மிகப்பெரிய பரப்பளவில் விரிந்து, படர்ந்திருந்தது....
தமிழகம்
ஆடுதொட்டி சுகாதார சீர்கேட்டை கண்டித்து...சென்னையில் இறைச்சிகளுக்கு தட்டுப்பாடு
புளியந்தோப்பு : புளியந்தோப்பு ஆடுதொட்டியில், பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளாததை கண்டித்து, தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னையில், இறைச்சிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.புளியந்தோப்பு, அம்பேத்கர் கல்லூரி சாலையில், 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆடு, மாடு அறுக்கும் கூடம் (தொட்டி) உள்ளது.இங்கு வார நாட...
தமிழகம்
நகைக் கடையில்செயின் திருட்டு
பாலவாக்கம் : பாலவாக்கம் நகைக்கடை ஒன்றில் நகை வாங்குவது போல நடித்து, இரண்டு சவரன் தங்க நகையை திருடிச் சென்ற இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.பாலவாக்கம், கிழக்கு கடற்கரை சாலையில் நகை மற்றும் அடகு கடை நடத்தி வருபவர் ரத்தன்லால்(40). நேற்று முன்தினம் மாலை ரத்தன்லால் தனது தம்பி கவுதம் கடையில் இருந் தனர்.அப்போது, 19 வயது ...
தமிழகம்
புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணைகள் கலெக்டர் ஆய்வு
தர்மபுரி: தர்மபுரி ஒன்றிய பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம், வேளாண் பெறியியல் துறை சார்பில் செயற்கை முறை நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்து நத்தம் காலனியில் 8 லட்சத்து 43 ஆயிரம் மதிப்ப...
தமிழகம்
மலைக்கோவிலில் பிரதோஷ வழிபாடு
காரிமங்கலம்: காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் மலைக்கோவிலில் பிரதோஷ வழிபாடு இன்று (மே 25) நடக்கிறது. இதையொட்டி, இன்று மாலை 5 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன், குருக்கள் பிரகாஷ் மற்றும் பலர் செய்து வருகின்றனர். தர்மபுரி க...
இந்தியா
குருவாயூரில் வில்லனாகிய எலி பக்தர்கள் கிலி
குருவாயூர் : வங்கியில் புகுந்த எலி, அலாரத்திற்கான ஒயர்களை துவம்சம் செய்ததால், அலாரம் அடித்தது. இதனால், குருவாயூர் கோவிலில் தரிசனத்திற்காக சென்ற பக்தர்கள அலறி அடித்து ஓடினர்.குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நேற்று 150 திருமணங்களும், 700க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சோறு ஊட்டுதல் நிகழ்ச்சியும் நடந்ததால், திரளான பக்தர்கள் க...
தமிழகம்
காமாட்சியம்மன் கோவில் விழா
அரூர்: அரூரில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. உள்ளூர் மாரியம்மனுக்கு தாரை தப்பட்டை வாண வேடிக்கையுடன் கூழ் ஊற்றுதலும், 3ம் நாள் பாலகுட ஊர்வலமும் நடந்தது. அரூர் பகுதியில் மழை வேண்டியும், விவசாயம் செழிப்படையவும், உலக மக்கள் அமைதியுடன் வாழ வேண்டியும் சிறப்பு பூஜை நடந்தது. இதற்கென ஏரிக்கரையில்...
தமிழகம்
மஹாபாரத திருவிழா
தர்மபுரி: பாப்பாரப்பட்டி திரவுபதியம்மன் கோவிலில் மஹாபாரத திருவிழா நடந்து வருகிறது. பாப்பாரப்பட்டியை சுற்றியுள்ள 18 கிராமங்கள் சார்பில் நடந்து வரும் மஹாபாரத திருவிழா வரும் 31ம் தேதி வரையில் நடக்கிறது. இதையொட்டி தினம் பகல் 2 மணிக்கு இசை தொன்றல் ராமகதிர்வேல் மற்றும் தேவனூர் வெங்கடேசன் ஆகியோரின் மஹாபாரத சொற்பொழிவும், வேப்ப...
தமிழகம்
வேலூர் காங்.,எம்.எல்.ஏ., விபத்தில் காயம்
தர்மபுரி: தர்மபுரி அருகே நேற்று காலை காரும், மினி லாரியும் மோதியதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., உள்ளிட்ட எட்டு பேர் காயம் அடைந்தனர். சேலம் உடையாப்பட்டியை சேர்ந்தவர் முனுசாமி (51). மின் வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக உள்ளார். இவரது மகள் சுகுணா (21). இவருக்கும் தர்மபுரி அடுத்த நல்லம்பள்ளி காலனியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம்...
தமிழகம்
குழந்தை கடத்திய பெண் காவலில் எடுக்க முடிவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கும்பல், கோவை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் இருந்து குழந்தைகளை கடத்தி விற்பனை செய்திருக்கலாம் என, சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி பெண்ணை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரியில் இருந்து மூன்று மாத ஆண் கு...
தமிழகம்
நல வாரிய அட்டை வழங்கும் விழா
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழயைபேட்டையில் மாவட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நகர ரிக்ஷா ஓட்டுனர் முன்னேற்ற சங்க பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நலவாரிய அட்டைகள் வழங்கும் விழா நடந்தது. அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட துணை செயலாளர் பாபு தலைமை வகித்தார். ரிக்ஷா ஓட்டுனர் சங்க தலைவர்...
தமிழகம்
அரசம்பட்டியில் வாலிபால் போட்டி
கிருஷணகிரி: போச்சம்பள்ளியை அடுத்த அரசம்பட்டியில் ஏ.வி.சி., அமைச்சூர் வாலிபால் கிளப் சார்பில் மாநில அளவிலான வாலிபால் போட்டி வரும் 29 மற்றும் 30ம் தேதி நடக்கிறது. போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக 7,001 ரூபாயும், இரண்டாம் பரிசு 6,001, மூன்றாம் பரிசு 5,001, நான்காம் பரிசு 4,001 ரூபாய் மற்றும் சிறப்பு பரிசு...
தமிழகம்
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கலெக்டர் சண்முகம் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் அனைத்துதுறை மாவட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறல...
இந்தியா
விமான பயணமா இனி வேண்டாம்: தப்பித்த மயன் குட்டி பேட்டி
மங்களூரு:விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பித்த எட்டு பேர்களில், ஒருவரான மயன் குட்டி, இனி தனது வாழ்நாளில் விமானத்திலேயே ஏறுவதில்லை என்று முடிவெடுத்துள்ளார். மங்களூரில் சமீபத்தில் நடந்த விமான விபத்தில், எட்டு பேர் அதிர்ஷ்டவசமாக தப்பித்தனர். இவர்களில் கண்ணூரை சேர்ந்த மயன் குட்டி என்பவர், விமானம் இரண்டாக உடைந்த போது, அதில...
தமிழகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயிலில் வரும் 27 ம் தேதி வைகாசி விசாக திருவிழா
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயிலில் வரும் 27 ம் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. திருவிழாவில் முருகனை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர்.தமிழ்கடவுளாம் முருகப்பெருமான் பிறந்த நாளான வைகாசிவிசாகம் முருகன் குடிகொண்டுள்ள அனைத்து கோயில்களிலும் க...
தமிழகம்
உமரிக்காடு கோட்டைவாழ் ஐயன் கோயிலில்:நாளை கும்பாபிஷேகம்
ஏரல்: உமரிக்காடு கோட்டைவாழ் ஐயன் கோயில் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நேற்று கணபதி ஹோமத்துடன் ஆரம்பமானது. மகா கும்பாபிஷேகம் நாளை காலை நடக்கிறது.பொருநை நதியின் வடகரையில் அமைந்துள்ள உமரிக்காட்டில் அமைந்துள்ள பழம்பெரும் கோயில் கோட்டை வாழ் ஐயன் கோயிலாகும். இக்கோயிலின் கோட்டை வாழ் ஐயன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்ப...
தமிழகம்
முடிகிறது கோடை விடுமுறை பஸ்களில் பயணிகள் கூட்டம்
தூத்துக்குடி:கோடை விடுமுறை முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் குடும்பத்துடன் வெளியூருக்கு சென்ற பொதுமக்கள் தற்பொழுது சொந்த ஊருக்கு திரும்பிகொண்டிருக்கின்றனர். இதனால் பஸ்,மற்றும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ஒரு மாத கோடை விடுமுறை முன்னிட்டு மாநிலம்முழுவதும் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா...
தமிழகம்
வல்லநாடு அருகே துணிகரம்:மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்க செயின் பறிப்பு
வல்லநாடு:வல்லநாடு அருகே மூதாட்டியின் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய வாலிபரை முறப்பநாடு போலீசார் தேடி வருகின்றனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவதுவல்லநாடு அருகே உள்ள நாணல்காடு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துஆச்சி(80). இவருக்கு ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்கள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி வெளியூரில...
தமிழகம்
கோயில் கொடை விழா
பெரியதாழை: புதுக்குளம் சிவனைந்தபெருமாள் சுவாமி கோயிலின் கொடைவிழா வருகின்ற 27ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை இரண்டு நாட்கள் நடக்கிறது. 28ம் தேதியன்று சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதில் தேங்காய்க்கு பதில் கும்மிடிகாய் மற்றும் ஆடுவெட்டுவதற்கு பதில் கருப்பு கட்டெறும்பு, சுண்டெலி வெட்டியும், பூவிற்கு பதில் ஆவாரம்பூ ம...
தமிழகம்
தென்திருப்பேரை பள்ளி வளாகத்தில்ஆபத்தான மரம்; அகற்ற கோரிக்கை
ஸ்ரீவைகுண்டம்: தென்திருப்பேரையில் உள்ள பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உயிரை பலி வாங்க துடிக்கும் பட்டுபோன மரம் அகற்றப்படுமா? என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தென்திருப்பேரை ட வுன் பஞ்., அலுவலகம் அருகில் உள்ளது ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. இதன் வளாகத்தில் காய்ந்த மரம் ஒன்று இப்பவோ, அப்பவோ என ஆப...
தமிழகம்
ரேஷன் கடைகளில் பறக்கும்படை குழுவினர் அதிரடி சோதனை
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பறக்கும்படை குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளரின் உத்திரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மற்றும் ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் உள்ள 45 ரேஷன் கடைகளில் இணைப்பதிவாளர் தலைமையில் பறக்கும்படை குழுவினர் சோதனை செய்தனர். ச...
தமிழகம்
கண்டக்டர் ஊதியத்தை குறைத்ததற்கு ஐகோர்ட் இடைக்கால தடை
சென்னை:விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்களை, மீண்டும் பயணிகளுக்கு விற்றதாக கூறி, கண்டக்டரின் அடிப்படை ஊதியத்தை குறைத்து, அரசு போக்குவரத்து கழகம் பிறப்பித்த உத்தரவுக்கு, ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்களை, மீண்டும் பயணிகளுக்கு விற்பனை செய்ததாகவும், அதற்கு ஏற்றாற்போல் பதிவுகளை செய்ததாகவும்...
தமிழகம்
புதுக்கோட்டை கொலை வழக்கு : 10 பேர் சரண்
மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூரை சேர்ந்தவர் அ.தி.மு.க., வக்கீல் கார்த்திகேயன். நல்லூர் வீரம் பட்டியை சேர்ந்தவர் நாகு (எ) நாகேந்திரன் (35). இவர் ரியல் எஸ்டேட் உரிமையாளர். இவருக்கும், கார்த்திகேயனுக்கும் நிலப்பிரச்னையில் முன் விரோதம் இருந்தது. எட்டு மாதங்களுக்கு முன் கார்த்திகேயனை, நாகேந்திரன் உட்பட மூன்று பேர் வெ...
தமிழகம்
புதியம்புத்தூர் ராஜாவின் கோயில்ஓடையை தூர்வார கோரிக்கை
புதியம்புத்தூர்:புதியம்புத்தூர் ராஜாவின் கோயில் ஓடையை தூர்வார வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதியம்புத்தூர் கிழக்கு பகுதியில் விவசாயப்பகுதியின் நடுவே ஒரு பெரிய ஓடை உள்ளது. மழைக்காலங்களில் வடக்கு குளத்தின் மறுகால் நீர் ராஜாவின் கோயில் குளத்திற்கு இந்த ஓடை வழியாக செல்லும். தற்சமயம் கழிவுநீர்தான் ஓ...
தமிழகம்
கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
கோவில்பட்டி:கோவில்பட்டியில் பைக்கில் சென்ற வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த மற்றொரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,கோவில்பட்டி சாஸ்திரிநகர் முத்துசாமி மகன் சுடலைமணி (21). இவர் பைக்கில் சென்ற போது இதே பகுதியை சேர்ந்த துரைசிங்கம் மகன் வீரபாண்டி (18) என்பவர் அவதூறாக பேசியதுடன், கத்...
தமிழகம்
தென்திருப்பேரை சமுதாய நலக்கூடம்: திறப்புவிழா எப்போது?
ஸ்ரீவைகுண்டம்: தென்திருப்பேரை டவுன் பஞ்., பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்புவிழா காணாமல் உள்ளது.தென்திருப்பேரை டவுன் பஞ்.,சில் அø னத்து டவுன் பஞ்.,கள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் செலவில் கடந்த 2008ம் ஆண்டு வேலை துவங்கியது. ஆரம்ப கட்டத்தில் வே...
இந்தியா
பொது நுழைவுத் தேர்வு நடத்த வங்கிகள் திட்டம்
புதுடில்லி: பொதுத்துறை வங்கிகள், பொது நுழைவுத்தேர்வு மூலம் பணியாளர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளன. பாரத ஸ்டேட் பாங்க் (எஸ்.பி.ஐ.,) உள்ளிட்ட 27 பொதுத்துறை வங்கிகள் செயல்படுகின்றன. "எஸ்.பி.ஐ., இந்த ஆண்டு 27 ஆயிரம் ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளது. 22 ஆயிரம் இடங்கள் எழுத்தர் பணிக்கும், ஐந்தாயிரம் இடங்கள் புரோபேஷனரி அலுவலர்...
தமிழகம்
குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை
ஸ்ரீவைகுண்டம்: தென்திருப்பேரையில் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள குடிநீர் தொட்டியை பராமரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடு த்துள்ளனர்.தென்திருப்பேரை டவுன் பஞ்., சார்பில் பஸ் ஸ்டா ண்ட் அருகே குடிநீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உள்ளது. குடிநீர் தொட்டியின் நல்லி உடைந்து தண்ணீர் எப்போதும் கசிந்து க...
தமிழகம்
வருஷாபிஷேக விழா
புதியம்புத்தூர்: புதியம்புத்தூர் அருகேயுள்ள ஜம்புலிங்கபுரம் கோயிலில் வருஷாபிஷேக விழா நடக்கிறது.ஜம்புலிங்கபுரம் துர்க்கையம்மன், சந்தனமாரியம்மன் கோயில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா 25ம் தேதி காலை நடக்கிறது. காலை 5 மணிக்கு வேதா அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், புண்ணியாகவாஜனம், கும்ப பூஜை நடக்கிறது. பின்பு துர்கா ...
தமிழகம்
97ம் ஆண்டு தேர்வான போலீசார் சம்பள உயர்வில் முரண்பாடு
தமிழகத்தில் 1997ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட போலீசாரின் ஆண்டு சம்பள உயர்வில் ஏற்பட்ட குழப்பத்தால், பல ஆயிரம் போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் ஆண்டு தோறும் 1,000க்கு மேற்பட்ட போலீசார் தேர்வு செய்யப்படுகின்றனர். இவ்வாறு தேர்வு செய்யப்படும் போலீசார், பயிற்சியில் சேர்ந்த நாள் முதல், ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை கணக்...
தமிழகம்
பைக் மோதி விபத்து: இன்ஜினியர் பலி
கோவில்பட்டி:கோவில்பட்டி அருகே இரண்டு பைக்குகள் மோதி ஏற்பட்ட விபத்தில் இன்ஜினியர் பலியானார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; கோவில்பட்டி அன்னைதெரசா நகரை சேர்ந்தவர் ஆறுமுகச்சாமி (61). மேலும் கரூர் விஜயநகரம் இரண்டாவது குறுக்குத்தெருவை சேர்ந்த முருகையா மகன் முருகையா (45). இன்ஜினியரான இவர் கரூரிலுள்ள தனியார் கம்ப...
தமிழகம்
கோவில்பட்டி சண்டிகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
கோவில்பட்டி:கோவில்பட்டியில் 31அடி உயரமுள்ள சண்டிகாளி அம்மன் சிலை பிரதிஷ்ட்டையும் மகாகும்பாபிஷேகமும் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கினர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் முதல் நாளன்று மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கோபூஜ...
தமிழகம்
தேய்பிறையாகும் ஸ்ரீவை., மின்சார வாரியம்: ஆபத்தான நிலையில் அலுவலகம்
ஸ்ரீவைகுண்டம்:ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலக வளாகத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் மின்வாரிய அலுவலகம் புதுப்பிக்க வேண்டும் என்று ஸ்ரீவை., பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆழ்வார்தோப்பு, பேரூர், பேட்மாநகரம், மீனாட்சிபட்டி, அனைவரதநல்லூர், பத்மநாபமங்க...
தமிழகம்
வேன்கவிழ்ந்து விபத்து:15 பேர் படுகாயம்
தூத்துக்குடி:தூத்துக்குடியில் இருந்து புளியம்பட்டி கோவிலுக்கு சென்று வந்த வேன் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 15 பேர் காயம் அடைந்தனர்தூத்துக்குடி பாத்திமாநகரைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு ஒரு மினிவேனில் புளியம்பட்டியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றனர். அவர்கள் நேற்று அதிகாலையில் தூத்துக்குடிக்கு திரும்பி வந்தனர். அ...
தமிழகம்
சென்செஸ் பயிற்சி வகுப்பு நேரம் மாற்றம்
தூத்துக்குடி: ஓட்டபிடாரத்தில் நாளை நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி வகுப்பில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நாடுமுழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பது குறித்து பயிற்சி நடந்து வருகிறது . தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பயிற்சிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஓட்...
தமிழகம்
தூத்துக்குடியில் நாளை எஸ்.டி.ஆர். பள்ளி திறப்பு விழா: மத்திய அமைச்சர் வாசன் பங்கேற்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் இன்டர்நேசனல் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள எஸ்டிஆர் பள்ளியை மத்திய கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர் ஜி.கே.வாசன் நாளை திறந்து வைக்கிறார்.இது குறித்து எஸ்டிஆர் ஸ்கூல் சேர்மன் எஸ்டிஆர்., விஜயசீலன் கூறியதாவது;எஸ்டிஆர்., எஜிகேசனல் டிரஸ்ட் சார்பில் தூத்துக்குடி-திருநெல்வேலி மெயின் ரோட...
தமிழகம்
மாரமங்கலம் பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை
ஏரல்: மாரமங்கலம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவிற்றிருந்த பெருமாள் கோயிலில் நான்காம் ஆண்டு புஷ்பாஞ்சலியை முன்னிட்டு நேற்று லட்சார்ச்சனை நடந்தது.ஏரல் அருகே உள்ள மாரமங்கலம் ஸ்ரீவிற்றிருந்த பெருமாள் கோயிலானது மாறவர்மன் பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். பிரசித்திபெற்ற இக்கோயிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்த...
தமிழகம்
புதுக்கோட்டை அருகே ரோட்டில் சென்ற பஸ் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்ததில் தாயும், மகனும் பலி
தூத்துக்குடி:புதுக்கோட்டை அருகே ரோட்டில் சென்ற பஸ் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்ததில் தாயும், மகனும் பலியானர்கள். இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக திருநெல்வேலி-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.திருநெல்வேலியில் இருந்து தூத்துக்க...
தமிழகம்
முதல் மாணவனுக்கு எல்ஐசி., பாராட்டு
தூத்துக்குடி:பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவன் பாண்டியனை எல்ஐசி., சார்பில் அதிகாரிகள் பாராட்டினர். பிளஸ் 2 தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவன் பாண்டியனை திருநெல்வேலி எல்ஐசி., முதுநிலை கோட்ட மேலாளர் கருப்பையா நேரில் சந்தித்து வாழ்த்து த...
தமிழகம்
குளத்தில் பந்தயம்: போதை வாலிபர் பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் எள்ளு பிள்ளையார் குளம் உள்ளது. பாழடைந்து சேரும், சகதியுமாக உள்ள இந்த குளத்தில் பொதுமக்கள் யாரும் பயன்படுத்துவதில்லை. திருவவண்ணாமலை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த குப்பன் மகன் பூங்காவனம் (30), அவரது உறவினர் அர்சுணன் ஆகியோர் நேற்று மதியம் குளத்தின் கரையி...
தமிழகம்
ஏற்காட்டில் மே 29ல் நாய் கண்காட்சி: மாவட்ட கலெக்டர் தகவல்
சேலம்: ஏற்காடில் வரும் மே 29 ந் தேதி காலை 9 மணிக்கு கால்நடை கண்காட்சியும், 10.30 மணிக்கு நாய் கண்காட்சியும் நடத்தப்படுகிறது. இதில் சிறந்த கால்நடைகள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் சந்திரகுமார் வெளியிட்ட அறிக்கை: ஏற்காட்டில் வரும் மே 28 முதல் 30ந் தேதி வரை 35-வது கோடை வி...
தமிழகம்
புறக்கணிக்கப்பட்ட இடைப்பாடி 13வது வார்டு மலை போல் தேங்கியுள்ள குப்பைகள்
இடைப்பாடி: இடைப்பாடி நகராட்சி 13வது வார்டு பகுதியில் குப்பைகள் மலைபோல தேங்கியுள்ளன. ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் நகராட்சி நிர்வாகத்தால் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ள வார்டாக இந்த பகுதி உள்ளதால் மக்கள் கொதிப்பில் உள்ளனர். இடைப்பாடி நகராட்சி 13வது வார்டு பகுதியில் பவானி ரோடு, மேட்டுத்தெரு, தாவா...
தமிழகம்
பொறுப்பேற்பு
வேலூர்: வேலூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக பழனியப்பன் பொறுப்பேற்றார். இவர் ஈரோடு மாவட்டத்தில் இருந்து மாறுதலாகி வேலூர் வந்துள்ளார்.
தமிழகம்
ராஜிவ் நினைவு நாள்
வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ராஜிவ் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. கலெக்டர் ராஜேந்திரன் முன்னாள் பிரதமர் ராஜிவ் திருவுருவப்படத்துக்கு மலர் தூவிஅஞ்சலி செலுத்தினார். ஆர்.டி.ஓ., சரவண வேல் ராஜ் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். வேலூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் ராஜிவ் திருவுருவப்படத்துக்கு, யூ...
தமிழகம்
திறன் ஊக்கப் பயிற்சி முகாம் நிறைவு விழா
வேலூர்: வேலூர் அரசு அருங்காட்சியகம், ரோட்டரி சங்கம், டாட் இமேஜின் கலைக்கூடம் மற்றும் அஷ்டாங்க யோகா பயிற்சி மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு திறன் ஊக்கப் பயிற்சி முகாம் நிறைவு விழா கோட்டை அருங்காட்சியகத்தில் நடந்தது. அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் வரவேற்றார். ரோட்டரி சங்க தலைவர் பிரகாஷ் பாப்னா முன்னிலை வகித்தார். ...
தமிழகம்
கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல் கல்வீச்சில் 5 பேர் காயம்: போலீஸ் தடியடி
நாமக்கல்: கோவில் திருவிழா கொண்டாடுவதில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் ஐந்து பேர் காயமடைந்தனர். போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். நாமக்கல் அடுத்த பொட்டிரெட்டிப்பட்டியில் உள்ள மகா மாரியம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில் திருவிழாவில், தேர் தூக்குது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே 30 ஆண்டுகளாக பிரச்னை ...
தமிழகம்
மத்திய சிறையில் பீடி விற்பனை: விஜிலென்ஸ் போலீஸார் திடீர் ஆய்வு
சேலம்: சேலம் மத்திய சிறையில் நேற்று சிறைத்துறை விஜிலென்ஸ் போலீஸார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.சேலம் மத்திய சிறையில் 700 க்கும் மேற்பட்ட சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகளுக்கு பீடி, சிகரெட், பான்பராக் உள்ளிட்ட போதை வஸ்துக்கள் பல்வேறு வழிகளில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் சேலம...
தமிழகம்
சூறாவளியால் வாழைப்பயிர் பாதிப்பு : விவசாயிகளிடம் விபரம் சேகரிப்பு
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் பலத்த காற்று மழையால் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டதை வாழை, மக்காச்சோளம் சாய்ந்து விட்டது. பாதிப்பு குறித்த விவரங்களை அந்தந்தப் பகுதி வி.ஏ.ஓ.,க்கள் விவசாயிகளிடம் விபரங்கள் சேகரித்து வருகின்றனர். ஆலங்குடி, வடகாடு, கீழாத்தூர், மாங்காடு, கொத்தமங்கலம், சூரன் விடுதி, புள்ளான் வ...
தமிழகம்
மகளிர் குழுவினரை மோசடி செய்த தொண்டு நிறுவனம்:கலெக்டருக்கு அறிக்கை அனுப்பிய மேட்டூர் ஆர்.டி.ஓ.,
மேட்டூர்: கொளத்தூரை சேர்ந்த டபில்யூ.சி., டபில்யூ.சி., தொண்டு நிறுவனம் சுய உதவி குழு பெண்களிடம் பண மோசடி செய்தது, ஆர்.டி.ஓ., விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை மேட்டூர் ஆர்.டி.ஓ., மாவட்ட கலெக்டருக்கு அனுப்பினார். மேட்டூர் அடுத்த கொளத்தூர் பகுதியில் டபில்யூ.சி., டபில்யூ.சி., தொண்டு நிறுவனம் செயல்படுகிறது...
தமிழகம்
சேலம் மாநகராட்சி மேயர் பெங்களூரு பயணம்: தனியார் துப்புரவு பணி குறித்து நேரில் ஆய்வு
சேலம்: சேலம் மாநகராட்சியில் 21 வார்டு துப்புரவு பணியை தனியார் வசம் ஒப்படைப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக, மேயர் ரேகாபிரியதர்ஷினி, துணை மேயர் பன்னீர்செல்வம் ஆகியோர் பெங்களூரு சென்றுள்ளனர். சேலம் மாநகராட்சியில் 1,400 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் மாநகராட்சியின் ஒரு பகுதி துப்பு...
தமிழகம்
மணமகன் மாயம்
சேலம்: சேலத்தில் மணமகன் திடீரென மாயமானதால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன்(29); இவருக்கும், வாழப்பாடியை சேர்ந்த அம்பிகா(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று பேளூர் ஈஸ்வரன் கோவிலில் திருமணம் நடப்பதாக இருந்தது. சரவணன் திடீரென்று மாயமானத...