category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
இந்தியா
பள்ளிகளில் தேவையான விரிவுரையாளர்களை நியமிக்க தே.மு.தி.க., வலியுறுத்தல்
புதுச்சேரி : தோல்வி சதவீதம் அதிகரிப்பது கல்வித்துறையின் அலட்சியப் போக்கை காட்டுகிறது என தே.மு.தி.க., குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் (மேற்கு) தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 6.86 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். தோல்வி சதவீதம் அதிகரிப...
இந்தியா
இலவச காஸ் அடுப்பு கந்தசாமி வழங்கினார்
புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் தொகுதிக்குட்பட்ட ஜவகர் நகர் சமுதாய நலக் கூடத் தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 600 குடும்பங் களுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைச்சர் கந்தசாமி, பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்புகளை வழங்கினார். கவுன்சிலர் நந்தகுமார், பாப்ஸ்கோ ...
தமிழகம்
உரக்கடைகளின் உரிமம் ரத்து
தேனி: தேனியில் உள்ள பி.எஸ்.வேலுச்சாமி கவுடர் அன் சன், மற்றும் விஜயா ஏஜன்ஸியில் விவசாய தரக் கட்டுப்பாடு உதவி இயக்குனர் சுந்தரம், விவசாய அலுவலர் ராஜ்மனோகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இங்கு உரமூடைகள் அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. இந்த உரக்கடைகளின் உர உரிமம் தற் காலிகமாக ரத்து செய்யப்பட்டு மேல்நடவடிக்கை தொடரப்பட் டுள்ள...
இந்தியா
தமிழ்ச் சங்கத்தில் சிலப்பதிகார விழா
புதுச்சேரி : புதுச்சேரி தமிழ் சங்கத்தின் 116வது மாத நிகழ்ச்சியாக சிலப்பதிகார விழா நடந்தது. தமிழ்ச் சங்கத் தலைவர் சீனு ராமச்சந்திரன் வரவேற்றார். சங்க செயலர் வேலவதாசன் தலைமை தாங்கினார். "சிலப்பதிகாரத்தில் மிகவும் விஞ்சி நிற்பது, அரசியல் உணர்வா? அல்லது இலக்கிய உணர்வா?' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. "அரசியல் உணர்வே வ...
இந்தியா
நலத்திட்ட உதவிகள்: புஸ்சி ஆனந்து பெருமிதம்
புதுச்சேரி : புஸ்சி தொகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளதாக புஸ்சி ஆனந்து எம்.எல்.ஏ., தெரிவித்தார். புஸ்சி தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகள் செய்த பணிகளை புத்தக மாக புஸ்சி ஆனந்து எம்.எல்.ஏ., வெளியிட் டார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 9 ஆண்டுகளாக புஸ்சி தொகுதியில் ஊழி யர்களை கொண...
தமிழகம்
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் புகார் செயயலாம்
தேனி: உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் விவசாயிகள் புகார் செய்யலாம் என கலெக்டர் முத்துவீரன் தெரிவித்தார். அவர் கூறுகையில், உரங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். உரங்களை என்ன விலைக்கு விற்க வேண்டும் என மூடையிலேயே விலை அச்சிடப்பட்டு உள்ளது. கூடுதல் விலைக்கு யாராவது விற்றால் அவர்களை ...
இந்தியா
அடுக்குமாடி குடியிருப்பு பணி அனந்தராமன் எம்.எல்.ஏ., ஆய்வு
புதுச்சேரி : ராதாகிருஷ்ணன் நகரில் சலவை தொழிலாளர்களுக்கு கட்டப்படும் அடுக்கு மாடி குடியிருப்புகளை அனந்தராமன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். அரியாங்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட ராதாகிருஷ் ணன் நகரில் சலவை தொழிலாளர்களுக்கு 38 லட்சம் ரூபாய் செலவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நடந்து வருகிறது. இப்பணியை தொகுதி எம்.எல்.ஏ....
இந்தியா
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மக்கள் நல நற்பணி இயக்கம் கோரிக்கை
புதுச்சேரி : விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பிரெஞ்சிந்திய புதுச்சேரி விடுதலைக் கால மக்கள் நல நற்பணி இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரெஞ்சிந்திய புதுச்சேரி விடுதலைக் கால மக்கள் நல நற்பணி இயக்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. வெங்கட்டா நகர் தமிழ்ச்சங்கத்தில் நடந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் இளங்கோ வரவேற்றார். இயக்க தலைவர் ச...
இந்தியா
நியமனம்
புதுச்சேரி : புதுச்சேரி பா.ஜ.,வில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பா.ஜ., மாநில தலைவர் தாமோதர் வெளியிட் டுள்ள அறிக்கை: பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரி ஒப்புதலுடன், தமிழ்நாடு மற்றும் புதுச் சேரி மாநில அமைப்பு பொதுச்செயலாளர் மோகன்ராஜூலு ஆலோசனையின்படி, புதுச்சேரி மாநிலத்திற்கு புதிய நிர் வாகிகள் நியமிக்கப...
இந்தியா
தேசிய தேக்வாண்டோ போட்டி: புதுச்சேரி வீரர்கள் அபாரம்
புதுச்சேரி : தேசிய அளவில் நடந்த தேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் முன்னாள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர். குஜராத் மாநிலம் சூரத்தில் தேக்வாண்டோ பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக நான்காவது தேசிய தேக்வாண்டோ பூம்சே சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் புதுச்சேரியிலிருந்து கலந்து கொண்ட மனோரஞ்சினி, மஞ்சுளா...
இந்தியா
பெண்களுக்கு பெண்களே கொடுமை செய்கின்றனர் : நாராயணசாமி வேதனை
புதுச்சேரி : பெண்களுக்கு பெண்களே கொடுமைகளை விளைவிக்கின்றனர் என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேசினார். புதுச்சேரி மகளிர் ஆணையம் சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருமணப்பதிவு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நேற்று நடந் தது. மகளிர் ஆணையத் தலைவி கமலினி வரவேற்றார். அமைச்சர் கந்தசாமி வாழ்த்தி...
இந்தியா
பிரெஞ்சு வம்சா வழி மக்களுக்கு மனைப்பட்டா வழங்க கோரிக்கை
புதுச்சேரி : பிரெஞ்சு வம்சா வழி வந்த புதுச்சேரி மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண் டும் என்று பிரெஞ்சிந்திய புதுச்சேரி பூர்வீக முதியோர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. பிரெஞ்சிந்திய புதுச்சேரி பூர்வீக முதியோர் சங்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்கத் தலைவர் முனிசாமி தலைமை தாங்கினார். செயலாளர் மணிவண்ணன...
இந்தியா
உழந்தை கீரப்பாளையத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி
புதுச்சேரி : உழந்தை கீரப்பாளையத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் சார்பில் முதலியார்பேட்டை தொகுதி உழந்தை கீரப் பாளையம் வண்ணான் குளத்தில் நகர்ப்புற சுற்றுச் சூழல் மேம்பாட்டு திட் டத்தின் கீழ், 4 லட...
இந்தியா
வேலை வாய்ப்பு முகாமில் 110 பேருக்கு பணி நியமன ஆணை
புதுச்சேரி : தொழிலாளர் துறை வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்ற 110 பேருக்கு பி.பி.ஓ., கன்சல்டன்சி நிறுவனத்தில் வேலை கிடைத்ததுள்ளது. தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள 550 பதவிகளை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு முகாம், புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 22ம் தேதி துவங்கியது. புதுச்சேரி ஸ்பார்ஸ் பி.பி.ஓ. நிறுவனம் நடத்திய நேர...
இந்தியா
பா.ஜ., நிர்வாகிகள் நியமனம்
புதுச்சேரி : முத்தியால்பேட்டை தொகுதியில் பா.ஜ., நிர்வாகிகள் நியமிக்கப்பட் டுள்ளனர். இதுகுறித்து பா.ஜ., நகர மாவட்ட பொதுச் செயலர் கிருஷ்ணகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி மாநில பா.ஜ., தலைவர் தாமோதர், செயலர், நகர மாவட்ட பொறுப்பாளர் துரைகணேசன், தலைவர் செல்வம் அனுமதியுடன் முத்தியால் பேட்டை தொகுதி தலைவர் மூர்த்தி, அத...
இந்தியா
பிளாஸ்டிக் தடை சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி : சுற்றுச்சூழல் துறை துணையுடன் சுற்றுச்சூழல் மற்றும் சதுப்புநிலக் காடுகள் பாதுகாப்பு அபிவிருத்தி சங்கம் சார்பில் மெல்லிய பிளாஸ்டிக் தடை சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி முதலியார் பேட்டை தபால் நிலையம் அருகில் நேற்று நடந்தது. கவுன்சிலர்கள் செல்வகணபதி, மஞ்சினி, தேவேந் திரகுமார் தலைமை தாங்கினார். சங்க தலைவர...
இந்தியா
கதிர்வேல் சுவாமி கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்
புதுச்சேரி : கதிர்காமம் கதிர்வேல், முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. கதிர்காமத்தில் கெங்கையம்மன், முத்து மாரியம் மன், கதிர்வேல் ஆகிய சுவாமிகளுக்கு தனித்தனி கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கெங்கையம்மன் மற்றும் பரிவார மூர்த்தி...
இந்தியா
கருணாநிதி பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் : தி.மு.க.,வினருக்கு ஜானகிராமன் வேண்டுகோள்
புதுச்சேரி : தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுமாறு மாநில தி.மு.க., அமைப்பாளர் கட்சி நிர்வாகி களை கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து மாநில தி.மு.க., அமைப்பாளர் ஜானகிராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா, வரும் ஜூன் 3ம் த...
இந்தியா
வழுதாவூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரி : கதிர்காமம் கோவில் கும்பாபிஷேகத்தை முன் னிட்டு இன்று வழுதாவூர் சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து எஸ்.பி., பழனிவேலு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு: கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு இன்று (24ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனால் புதுச்சேரி பஸ் நிலைய...
இந்தியா
வரதராஜ பெருமாளுக்கு தங்க யானை வாகனம்
புதுச்சேரி : வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன் னிட்டு, இன்று தங்க யானை வாகன வீதியுலா நடக்கிறது. புதுச்சேரி காந்தி வீதி வரதராஜப் பெருமாள் கோவிலில் ஆன்மிக சபை மூலம் 26 ஆண்டுகளாக பிரம்மோற்சவத் தின் 6ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு, மரத்தால் ஆன யானை வாகனத்தில் வரதராஜப் பெருமாள் நான்கு மாட வீதி புறப்பாடு நடந்து வ...
இந்தியா
கருத்தரங்கம்
புதுச்சேரி : உப்பளம் சையன்தாலஜி வாலண்டியர் தொண்டு நிறு வனம் சார்பில் கற்றலின் இனிமைக் கருத்தரங்கம் நடந்தது. கண்டமங்கலம் கலைம கள் பாரா மெடிக்கல் கல் லூரியில் நடந்த கருத்தரங் கிற்கு கல்லூரி முதல்வர் ஆனந்து தலைமை தாங்கி னார். தன்னார்வலர் பிரியங்கா வரவேற்றார். கல்வி பயிலும் போது, மனம் மற்றும் உடலளவில் ஏற்படக்கூடிய பிரச்னைக...
தமிழகம்
தேனி பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் நெரிசல் டவுன் பஸ்களுக்கு தனி இடம் தேவை
தேனி:தேனி பஸ்ஸ்டாண்டில் அதிகரித்து வரும் நெரிசலை குறைக்க, டவுன் பஸ்களுக்கு புதிய பஸ்ஸ்டாண்ட் இடம் ஒதுக்க வேண்டும்.தேனி பஸ்ஸ்டாண்ட் ஒண்ணரை ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கு தினமும் 400 அரசு பஸ்கள், 80 தனியார் பஸ்கள் மொத்தம் 1500 முறை வந்து செல்கின்றன. அதேபோல் 48 டவுன் பஸ்கள் 341 முறை வந்து செல்கின்றன. இந்த பஸ்கள் வந்...
இந்தியா
கடலோரக் காவல் நிலையப் பணி மல்லாடி கிருஷ்ணாராவ் ஆய்வு
புதுச்சேரி : புதுச்சேரியில் கடலோரக் காவல் நிலையம் அமைப்பதற்காக நவீன ரோந்துப்படகு வெள் ளோட்ட நிகழ்ச்சி நடந்தது. காரைக்காலில் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடலோரக் காவல் நிலையம் (கோஸ்டல் போலீஸ் ஸ்டேஷன்) அமைக்கப்பட் டுள்ளது. அடுத்த கட்டமாக புதுச்சேரி, மாகி, ஏனாம் கடலோரப் பகுதிகளில் மத்திய அரசு நிதி உதவியுடன் விரை...
இந்தியா
மாரியம்மன் கோவிலில் சங்காபிஷேகம்
புதுச்சேரி : புதுச்சேரி மனோன்மணி மாரியம்மன் கோவிலில், 12ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம் நடந்தது. புதுச்சேரி கேண்டீன் வீதியில் மனோன்மணி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து 12வது ஆண்டின் நிறைவு மற்றும் லட் சார்ச்சனை விழா கடந்த 21ம் தேதி கணபதி ஹோமம், லட்சர்ச்சனையுடன் துவங்கிய...
தமிழகம்
ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் விண்ணப்பங்கள் வழங்கல்
தேனி:ஆண்டிபட்டி எஸ்.ரெங்கநாதபுரத்தில் உள்ள அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய சேர்க்கைக்கான விண்ணப் பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி நிலையத்தில் ஓராண்டிற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.கம்ப்யூட்டர் பிரிவுகளான கோபா (டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர்), டீடிபிஓ பிரிவுகளுக்கு பிளஸ் 2 தேர்ச்சியும், தையல் பயிற்சிக...
இந்தியா
தூய சகாய அன்னை ஆலயத்தில் தேர்பவனி
காரைக்கால் : காரைக்கால் கோட்டுச் சேரி தூய சகாய அன்னை ஆலயத்தில் தேர்பவனி திருவிழா நடந்தது. காரைக்கால் கோட்டுச் சேரி தூய சகாய அன்னை ஆலயத்தில் கடந்த 14ம் தேதி சகாய அன்னை கொடி பவனி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. பின், தேவநற்கருணை ஆசீர்வாதம் நிகழ்ச்சி நடந்தது. 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை தினந்தோறும் சிறிய தேர்பவனி,...
தமிழகம்
இலவச சீருடை பணி 50% நிறைவு ஜூன் இறுதிக்குள் முடிக்க உத்தரவு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இலவச சீருடை பணி 50 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது. ஜூன் மாத இறுதிக்குள் சீருடை உற்பத்தி செய்ய சங்கங்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச சீருடை வழங்கப்படுகிறது. கோ-ஆப்...
தமிழகம்
போடி சவுடாம்பிகை கோயில் கும்பாபிஷேகம்
போடி:போடி மேலத்தெரு ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.ராமலிங்க சவுடாம் பிகை அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த நான்கு நாட்களாக விக்னேஸ்வர பூஜை, மூலமந்திர ஜபம், குபேரலட்சுமி பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி பூஜை,ஹோமம், தீபாராதனைகள் நடந்தன. தேவாங்கர் ஜெகத் குரு தயானந்தபுரி சுவா...
தமிழகம்
விபத்தில் ஒருவர் பலி
தேவதானப்பட்டி,:சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பயணிகள் டெம்போ வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர். டம்டம் பாறைக்கு கீழே 2 கி.மீ., தொலைவில் மலையில் வரும் போது வேனின் முன்புற இடது பக்க டயர் வெடித்து வேன் பாறையில் மோதியது. இதில் பயணம் செய்த சேகர் (50) இறந்தார். டிரைவர் மணிகண்டன் (29), ரேவதி (29), பாவனா (3) ...
தமிழகம்
அந்தியூர் பகுதியில் பருத்தி பயிர் சாகுபடி அதிக விலையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
அந்தியூர்: மஞ்சள் அறுவடை முடிந்த நிலையில், அந்தியூர் மற்றும் அத்தாணி பகுதியில் பருத்தி சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. சென்றாண்டு பருத்தி குறைவான விலைக்கு ஏலம் போனதாக கூறும் விவசாயிகள், நடப்பாண்டு அதிக விலைக்கு விற்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.அந்தியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான புதுப்பாளையம், புதுக்காடு,...
தமிழகம்
வேலை வாங்கித்தருவதாக மோசடி: 4 பேர் மீது வழக்கு
தேனி:அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அல்லிநகரம் பாத்திமா தியேட்டர் ரோட்டை சேர்ந் தவர் பாபுராஜ் (30). இவர் ஆதிபட்டியை சேர்ந்த அழகுபாண்டியன் (33), அல்லிநகரத்தை சேர்ந்த போத்திராஜ், ஆண்டிபட்டி புள்ளிமான் கோம்பையை சேர்ந்த அங்கம்மாள் ஆகியோரிடம் வேலை வாங்கித...
தமிழகம்
மாவட்ட அளவில் கேரம் எம்.சி.சி., அணி வெற்றி
ஈரோடு: ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான கேரம் போட்டியில், மூத்தோர் பிரிவில் ஈரோடு எம்.சி.சி., அகாடமி மாணவர் முதலிடம் பெற்றார். ஈரோட்டில் ஈரோடு மாவட்ட கேரம் கழகத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடந்தது. 12,14,18 வயதுக்குட்பட்டோர், மூத்தோர் பிரிவுகளில் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக போட்டி நடந்தன. 12 வயதுக்குட்பட்ட...
தமிழகம்
ஆந்திர மாநில தொழிலாளி மர்மமான முறையில் ஈரோட்டில் கொலை
ஈரோடு: ஈரோடு எஸ்.பி., அலுவலகம் அருகே கட்டிட தொழிலாளி ஒருவர் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆந்திர மாநிலம், நந்திகிராம் தாலூகாவுக்குட்பட்ட ரவுத்துபுரம் பகுதியை சேர்ந்தவர் பொட்டையன் (50). கடந்த இரு மாதத்துக்கு முன், ஈரோடு எஸ்.பி., அலுவலகம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் தாய் சேய் நல வி...
தமிழகம்
கஞ்சா விற்ற பெண் கைது
வருஷநாடு:ரண்மனைப்புதூர் கிராமத்தை சேர்ந்த காக்காயன் மனைவி தேனம்மாள் (60). இவர் கஞ்சா விற்றதாக போலீசார் கைது செய்து, இவரிடம் இருந்து ஒண் ணரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
General
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சோம்தேவ் தோல்வி
பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ், ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் போராடி தோல்வியடைந்தார். பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று துவங்கியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், சுவிட்சர்லாந்தின் மார்கோ சியுடிநெல்லியை சந்தித்தார்...
தமிழகம்
மாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கம் பால்குட ஊர்வலம்
ஈரோடு: பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில், பன்னீர்செல்வம் பூங்கா மேம்பாலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ம் தேதி 1,008 பால்குட ஊர்வலம் நடக்கிறது. ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா அருகே மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. மேம்பாலம் அமையும் போது பாலத்துக்கு அடியில் மாரியம்மன் கோவில் அமையும். இதனால் பல்வ...
தமிழகம்
வாலிபர் கைது
போடி:வலசத்துறை ரோட்டை சேர்ந்தவர் மூர்த்தி (38). இதே பகுதியை சேர்ந்த பால்பாண்டி (25) என்பவருடன் மூன்று நாட்களாக கூலி வேலைக்கு சென்றுள் ளார். இந்நிலையில் வேலை செய்ததற்கான கூலியை மூர்த்தி பால்பாண்டியிடம் கேட்டுள்ளார். தர மறுத்த தோடு அருகே இருந்த கல்லை எடுத்து அடித்து கொலை செய்ய முயன்றுள்ளார். மூர்த்தி போடி டவுன் போலீசாரிட...
தமிழகம்
மாணவி கடத்திய 8 பேர் கைது
கூடலூர்:கூடலூர் கன்னிகாளிபுரத்தைச் சேர்ந்த காமாட்சியப்பனின் மகள் தேவி (16). 10ம் வகுப்பு படித்து தேர்வு எழுதியுள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரனின் மகன் பாபு (23) என்பவர் சிலரது உதவியுடன் தேவியைக் கடத்திச் சென்று திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதிலிருந்து தப்பி வந்த தேவி கூடலூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். ...
தமிழகம்
ஈரோடு நகரில் காலாவதி பொருட்கள் அழிப்பு
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில், 1030 கிலோ, எடையுள்ள காலாவதி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக மாநகராட்சி கமிஷனர் பாலசந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:ஈரோடு மாநகராட்சி பகுதியில் காலாவதியான மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாத உணவுப்பொருட்களை கைப்பற்றி அழிக்கும் நடவடிக்கை தொடர்கிறது. சென்ற 21ம் தே...
தமிழகம்
பெண்ணை மிரட்டியவர் கைது
போடி: மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). இவருக்கு சொந்தமான வீட்டடி மனையை மகன் சரவணனுக்கு தானமாக கொடுத்துள்ளார். தானமாக பெற்ற இடத்தை இதே பகுதியை சேர்ந்த ஜெயராணி (45) என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் ஜெயராணி சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்ல முயன்ற போது ராஜேந்திரனை தடுத்து நிறுத்தியதோடு வரக்கூடாது என ...
தமிழகம்
காவிரியில் மீன்கள் செத்ததால் குடிநீரில் துர்நாற்றம்! கரையோர மக்கள் தோல் அரிப்பால் பாதிப்பு
மேட்டூர்: மேட்டூர் காவிரியாற்றில் மீன்கள் செத்து மிதந்ததால் தண்ணீர் மாசு அடைந்துள்ளது. ஒரு வாரமாக காவிரியில் குளிக்கும் மக்கள் தோல் அரிப்பு மற்றும் அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் விநியோகம் செய்யும் குடிநீரும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் விரக்தியடைந்துள்ளனர். மேட்டூரில் இருந்து ஐந்து கி.மீ., த...
தமிழகம்
பாதுகாப்பு கோரி காதல் ஜோடி தஞ்சம்
தம்மம்பட்டி: காதல் ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு தம்மம்பட்டி, கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷன்களில் தஞ்சமடைந்தனர். தம்மம்பட்டி அருகே உள்ள பச்சமலை பெரியநாகூரை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சுரேஷ் (23). துறையூர் பச்சமலை மணலோடை பகுதியை சேர்ந்த உறவினர் சின்னசாமி மகள் சின்னகிளியை (19) பெண் கேட்டார். பெண் வீட்டார் மறுத்தனர். கடந்த 14 ம் ...
தமிழகம்
கருமந்துறை இளையராமர் கோவில் தேரோட்டம்
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த சின்ன கல்ராயன்மலை கருமந்துறையில் இளையராமர் மற்றும் அண்ணாமலையார், உண்ணாமலை தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.சின்னகல்ராயன்மலை பகுதியில் அமைந்துள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குலதெய்வமாக விளங்கி வரும் இளையராமர் மற்றும் அண்ணாமலையார், உண்ணாமலை...
தமிழகம்
ஈரோட்டில் ராஜிவ் நினைவு நாள்
ஈரோடு: ஈரோட்டில் காங்கிரஸார் சார்பில் ராஜிவ்காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. ஈரோடு ஸ்வஸ்திக் கார்னரில் ராஜிவ்காந்தி பேரவை சார்பில் நடந்த விழாவில், தலைவர் செல்வம் தலைமை வகித்தார். மாநகர சிறுபான்மை பிரிவு தலைவர் ஜவகர், சட்டப்பிரிவு பிரதிநிதி முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மக்கள் ராஜன் ராஜிவ்காந்தி படத்துக்க...
தமிழகம்
கீழ்பவானி வாய்க்காலுக்கு காரை போடும் திட்டம் கைவிடக்கோரி மனு
ஈரோடு: கீழ்பவானி மெயின் வாய்க்காலுக்கு காரை போடும் திட்டத்தை கைவிட வலியுறுத்தப்பட்டுள்ளது.கீழ்பவானி பாசன வாய்க்கால் பாதுகாப்பு பேரவை கன்வீனர் துளசிமணி கலெக்டர் சுடலைக்கண்ணனிடம் அளித்த மனு: கீழ்பவானி வாய்க்கால் பாசனம் 1955ல் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு உயிர்நாடியாக இருந்து வருகிறது. தற்போது அவசர, அவசரமாக கீழ்பவானி மெயி...
தமிழகம்
சத்தியமங்கலம் தாலுகாவில் ஜமாபந்தி மனு கொடுக்க மக்களுக்கு அழைப்பு
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் தாலுகா பகுதி மக்களுக்காக, தாலுகா அலுவலகத்தில் வரும் 26 முதல் ஜூன் 9 வரை ஜமாபந்தி நடக்கிறது. சத்தியமங்கலம் தாசில்தார் சண்முகம் விடுத்துள்ள அறிக்கை:வரும் 26ம் தேதி தாளவாடி வட்டத்துக்கு உட்பட்ட மல்லன்குழி, அருள்வாடி, பனகஹள்ளி, தொட்டமுதுக்கரை, எரகணஹள்ளி, கெட்டவாடி, கொங்கஹள்ளி, மரூர், தொட்டகாஜனூ...
தமிழகம்
ஆத்தூரில் சிறுமி மீட்பு
ஆத்தூர்: ஆத்தூர் ராணிப்பேட்டை கடைவீதி, கூட்ட நெரிசலில் ஐந்து வயது சிறுமி நின்று அழுது கொண்டிருந்தார். அவ்வழியாக சென்ற வாலிபர்கள் மூவர் சிறுமியிடம் கேட்டபோது எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. சிறுமியை ஆத்தூர் போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரித்தபோது, ஆத்தூர் வ.உ.சி.,நகர் பகுதியில் வீடு உள்ளதாக குறிப்பிட்டார். ஜீப்பில...
தமிழகம்
மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது
ஆத்தூர்: ஆத்தூர் அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். ஆத்தூர் அருகே பெரியகல்வராயன் குன்னூர் மலைகிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகள் பூமதியும், அதேபகுதியை சேர்ந்த வாலிபர் தீர்த்தமலை (18) என்பவரும் காதலித்தனர். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறின...
தமிழகம்
அமைச்சர் முன்னிலையில் தி.மு.க.,வில் 600 பேர் ஐக்கியம்
சேலம்: பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 600 பேர் தி.மு.க.,வில் இணைந்தனர். எடப்பாடி, பூலாம்பட்டி, தாரமங்கலம், செலவடை, அரியாம்பட்டி, துட்டம்பட்டி, ஆரூர்பட்டி, ராமிரெட்டிப்பட்டி, பூலாம்பட்டி, கெங்கவல்லி, தம்மம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பா.ம.க.,- அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்...
தமிழகம்
ரூ.35 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
ஆத்தூர்: ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் 1,225 குவிண்டால் பருத்தி 35 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு டி.சி.ஹெச்., ரக பருத்தி 750 மூட்டைகள், ஆர்.சி.ஹெச்., ரக பருத்தி 2...
தமிழகம்
தடையை மீறி ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணியினர் கைது
மேட்டுப்பாளையம்: தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் 37 பேரை போலீசார் கைது செய்தனர். பல்லடத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்து, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். இதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. எனினும், தடையை மீறி மாவட்ட ...
தமிழகம்
கி.புரத்தில் வெள்ளத்தால் பாதிப்பு விவசாயிக்கு நிவாரணம் வழங்கல்
லாலாப்பேட்டை: கிருஷ்ணராயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2008ல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கும் விழா கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலக ளாகத்தில் நடந்தது. தாசில்தார் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். தொலைபேசி ஆலோசனை குழு உறுப்பினர் உமாபதி, கவுன்சிலர் அம்பிகாவதி, டவுன் பஞ்சாயத்து தல...
தமிழகம்
கோஷ்டி மோதலாக மாறிய சிறுவர் சண்டை: எட்டு பேர் மீது வழக்கு
க.பரமத்தி: க.பரமத்தி அடுத்துள்ள மோளபாளையத்தில் சிறுவர்களுக்குள் ஏற்பட்ட சண்டை கோஷ்டி மோதலாக மாறியதில் எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.மோளபாளையத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் சக்திவேல்(13). இதே பகுதியை சேர்ந்த வானதி மகன் மதினேஷ்(5) விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது சக்திவேல், மதினேஷை அடித்துள்ளார். இதையறிந்த ம...
தமிழகம்
மகா மாரியம்மன் கோவில் பூக்குழி விழா
குளித்தலை: குளித்தலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி விழா நடந்தது. திருத்தேர் வடம் பிடித்தல் மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக தேர் வடம் பிடித்தலில் எம்.எல்.ஏ., மாணிக்கம், நகராட்சி தலைவர் அமுதவேல், யூனியன் துணை தலைவர் கந்தசாமி, நகராட்சி கமிஷனர் தனலட்...
தமிழகம்
பேரரசர் முத்தரையர் சதயவிழா கட்சியினர் மாலை அணிவிப்பு
திருச்சி: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,335வது சதயவிழாவையொட்டி, திருச்சியில் பல்வேறு கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,335வது சதயவிழாவையொட்டி, திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசு சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்...
தமிழகம்
நிதியுதவி வழங்கும் விழா
துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே கல்லுப்பட்டியிலுள்ள மருங்காபுரி யூனியன் அலுவலகத்தில் அரசின் திருமண உதவி தொகைத் வழங்கும் விழா நடந்தது. மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தின் மூலம் 155 பயனாளிகளுக்கு 31 லட்சம் மதிப்பிலான திருமண உதவி தொகைக்கான "செக்'குகள் வழங்கப்பட்டன. மாவ ட்ட சமூக நல அலுவலர் லட்சுமி, ...
தமிழகம்
அரசு மருத்துவமனையில் இன்று முதல் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு
மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில், நெரிசலை கட்டுப்படுத்தவும், நோயாளிகள் நலன் கருதியும், இன்று முதல் மதியம் ஒரு மணிக்கு பிறகே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை புறநோயாளிகள் பிரிவு செயல்படுவதால், மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக உள்ளது. இவர்களோடு, உள்நோயாளிகளை பார்க்க வருபவர்களின் எண்ணிக்க...
தமிழகம்
தர்மபுரி அருகே காட்டு பன்றி கடித்து பெண் உள்ளிட்ட 2 பேர் காயம்
தர்மபுரி: தர்மபுரி அடுத்த வத்தல்மலை அடிவாரத்தில் காட்டு பன்றி கடித்து பெண் உள்ளிட்ட இருவர் காயம் அடைந்தனர். தர்மபுரி அடுத்த வத்தல்மலை அடிவாரம் பூமரத்தூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மாது (49). இவர் நேற்று காலை டீ குடிக்க ஊரில் எல்லையில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது, வத்தல்மலை பகுதியில் இருந்து கூட்டமாக வந...
தமிழகம்
தினமலர் சார்பில் ரத்ததான முகாம்
மதுரை:மதுரை தினமலர் இதழ் மற்றும் அரசு மருத்துவமனை சார்பில் நேற்று நடந்த ரத்ததான முகாமில் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.அரசு மருத்துவமனையில் தினமும் 20 ஆப்பரேஷன்கள் நடக்கின்றன. இதற்கு தேவையான ரத்தம் பெரும்பாலும் கல்லூரி மாணவ, மாணவியரிடமிருந்து தானம் பெறப்படுகிறது. கோடையில் கல்லூரிகள் விடுமுறை என்பதால...
தமிழகம்
ஆதரவற்ற மகளிருக்கு உறைவிடப் பள்ளி
மதுரை:மதுரை உத்தங்குடியில், சமூக நலத்துறையால் சிறப்பு உண்டு உறைவிட பள்ளி மற்றும் அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. தையல், கணினி, தட்டச்சு, தொழிற்கல்வி சார்ந்த பயிற்சிகளும், ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிக் கல்வியும் அளிக்கப்படுகிறது. பதினாறு வயதிலிருந்து 35 வயதுக்குட்பட்ட தாய்தந்தையற்றவர், விதவைகள...
தமிழகம்
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
திருவண்ணாமலை: களம்பூர் வேணுகோபால் ஸ்வாமி கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடித்துவிட்டு அர்ச்சகர் கோவிலை பூட்டி சென்றார். நேற்று அதிகாலை வழக்கம்போல் கோவிலை அர்ச்சகர் திறக்க வந்த போது, கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்க...
தமிழகம்
மன்னார் வளைகுடா கடல் சீற்றம்
மண்டபம்: லைலா புயலால், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதனால், மண்டபம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் சேதமடைந்தன. விசைப்படகு மீனவர்களுக்கு தடைக்காலம் என்பதால், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டது. லைலா புயலின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் நேற்று மண்ட...
தமிழகம்
சாராயம், மது விற்ற 14 பேர் அதிரடி கைது
திருவண்ணாமலை: ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸார் நேற்று முன் தினம் நடத்திய திடீர் ரெய்டின் போது, பெட்டிக்கடைகளில் மது விற்ற 14 பேரை கைது செய்தனர். ஆரணி மற்றும் கண்ணமங்கலம் பகுதிகளில் போலீஸார் நேற்று முன்தினம் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது, சென்னாத்தூர், லாடவரம் ஏரிக்கரையில் நடத்திய ரெய்டில் ராஜா (29),...
தமிழகம்
கைதிகள் இருவர் சாவு ஆர்.டி.ஓ., விசாரணை
மதுரை:மதுரை மத்திய சிறையில் கொலை வழக்கில் தண்டனை பெற்ற இரண்டு கைதிகள் உடல் நலக்குறைவால் மரணமடைந்தனர். ஆர்.டி.ஓ., விசாரிக்கிறார்.சிவகங்கை மாவட்டம் மாரநாட்டை சேர்ந்தவர் பழனி (40). கொலை வழக்கில் தண்டனை பெற்று, மதுரை மத்திய சிறையில் கடந்த மார்ச் 10ல் அடைக்கப்பட்டார். இவருக்கு நேற்று முன் தினம் மாரடைப்பு ஏற்பட்டது. அவரை அரச...
தமிழகம்
மீன் வளர்க்க மானியம்
மதுரை:மீன்வளத்துறை மூலம் மீன்உற்பத்தியை அதிகரிப்பது குறித்து மதுரை கலெக்டர் காமராஜ் வெளியிட்ட அறிக்கை : தீவிர உள்நாட்டு மீன் வளர்ப்பு மற்றும் விற்பனை திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் 176 பொதுப்பணித் துறை கண்மாய்களில், மூன்றாண்டு கால குத்தகை அடிப்படையில் மீன்வள உரிமை விடப்படுகிறது. மதுரை மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்ப...
தமிழகம்
வர்மக்கலை பயிற்சி முகாம் துவக்க விழா
வேலூர்: வேலூர் அரசு அருங்காட்சியகம், தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மஹா சங்கம் சார்பில் வர்மக் கலை பயிற்சி துவக்க விழா வேலூர் அடுத்த சத்தவாச்சாரியில் நடந்தது. அரசு அருங்காட்சியக காப்பாச்சியர் சரவணன் வரவேற்றார். தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மஹா சங்க தலைவர் இமாம் அலி முன்னிலை வகித்தார். சங்க பொதுச் செயலாளர் அர்ச்...
தமிழகம்
ரயில் தாமதம்
மதுரை:தூத்துக்குடி- சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு மீளவிட்டான் அருகே வந்தபோது, இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. வழக்கமாக இரவு 10.40 மணிக்கு மதுரைக்கு வரவேண்டிய இந்த ரயில் 2 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12.40 மணிக்கு வந்தது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
தமிழகம்
வருண ஜபம், மஹா ருத்ர யாகம்
வேலூர்: வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மழை வளம் பெருகவும், தண்ணீர் பஞ்சம் நீங்கவும், மக்கள் நலமாக வாழவும் வருண ஜபம், மஹா ருத்ர யாகம் நடந்தது. யாகத்தை ரத்தினகிரி பால முருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் துவக்கி வைத்தனர். இதையொட்டி மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கலச ஸ்தாதாபனம், ருத்ர பூஜை, வருணயாயம், தேவி மஹ...
தமிழகம்
போலீசாருடன் தகராறு ஒருவர் கைது
மதுரை: மதுரை பெருங்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பாண்டி (34). இவர் டூவீலரில் நேற்று பகல் 2.15 மணிக்கு யானைக்கல் மேம்பாலம் பகுதியில் சென்றார். எஸ்.ஐ.,தங்கமணி வாகன சோதனையில் ஈடுபட்டார். உரிய ஆவணங்கள் இல்லாமல், குடிபோதையில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். பாண்டியை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம்
மாணவர் தற்கொலை
அவனியாபுரம்:வில்லாபுரம் ஹவுசிங் போர்டை சேர்ந்த விஜயபாண்டி மகன் செல்லப் பாண்டியன் (17). ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டார். பிளஸ் 2 தேர்வில் 981 மதிப்பெண் பெற்றதால், மனமுடைந்து வீட்டிலேயே தூக்கு போட்டு இறந்தார். அவனியாபுரம் எஸ்.ஐ., கண்ணதாசன், ஏட்டுகள் சங்கையா, அருவகம் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
மாநாடு
மதுரை: முத்தரையர் புனரமைப்பு கழக தென் மண்டல மாநாடு மதுரையில் நடந்தது. விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் அழகுமலை தலைமை வகித்தார். இட ஒதுக் கீட்டில் முத்தரையர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குதல்; தனி நலவாரியம் அமைத்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறுவனர் தனுஷ்கோடி பங்கேற்றார்.
தமிழகம்
மதுரையை தூய்மையாக்கும் திட்டம் நாளை துவக்கம்
மதுரை:மதுரையை தூய்மையானதாக மாற்றும் திட்டம் நாளை துவங்கி மே 28 வரை நடக்கிறது.மாநகராட்சி உட்பட உள்ளாட்சி அமைப்புகளுக் குட்பட்ட பகுதிகளில், தொண்டு நிறுவனங்கள், நேரு யுவகேந்திரா, தானம் அறக்கட்டளை, எக்ஸ் னோரா, ரோட்டரி, லயன்ஸ் சங்கங்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் சுழற்சி முறையில் தூய்மை பணியில் ஈடுபடுகின்றனர...
தமிழகம்
காரை திருடி அரிசி கடத்திய 3 பேர் கைது
கிருஷ்ணகிரி: மத்தூர் அருகே மாருதி ஆம்னி காரை திருடி அதில் அரிசி கடத்தி வந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். மத்தூர் அடுத்த சாமல்பட்டியை சேர்ந்தவர் சிவா. இவருக்கு சொந்தமான மாருதி ஆம்னி கார் கடந்த 6ம் தேதி வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த கார் மாயமானது. பல இடங்களில் தேடியும் கார் கிடைக்காததால...
தமிழகம்
புராதனேஸ்வரர் கோவில் வெள்ளிரத ஊர்வலம்
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அடுத்த திருச்சிற்றம்பலம் புராதனேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் ஆறாவது நாளில் பொக்கன் விடுதி கிராமத்தினர் சார்பில் மேளக்கச்சேரிகள், கிராமியக்கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கைகளுடன் வெள்ளி ரத ஊர்வலம் புராதனேஸ்வரர் கோவிலை சென்றடைந்தது.பின் வெள்ளி வாகனத்த...
தமிழகம்
அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம்
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த குரவப்புலம் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலகலமாக நடந்தது. பழமை வாய்ந்த இக்கோவில் ஆயிரக்கணக்கான மருளாளிகளின் குலதெய்வமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு முன் மண்டபம், பரிவார தெய்வங்களுக்கு மகாமண்டபம், மணி மண்டபம் மற்றும் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு மே 21ம...
தமிழகம்
மர்மமான முறையில் பெண் வெட்டிக்கொலை
தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே மர்மமான முறையில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஒரத்தநாடு அடுத்த வடசேரி வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (45). கூலித்தொழிலாளி. இவருக்கு அஞ்சுகிளி (40) என்ற மனைவியும், ராஜகுமாரி (17), ராஜன் (14), ராஜமாணிக்கம் (8) என்ற குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு செல்வமும், குழந்தைகளும் வீ...
தமிழகம்
பட்டுக்கோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு கலெக்டர் உத்தரவு
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவோணம் யூனியன் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் சண்முகம் ஆய்வு செய்தார். திருவோணம் யூனியனில் கலைஞர் வீட்டுவசதி திட்டத்துக்காக குடிசைகள் கணக்கெடுப்பு விபரங்களை கணினியில் பதிவு செய்யும் பணிகள் நடக்கிறது. இதை கலெக்டர் பார்வையிட்டு, விபரங்கள் சரியாக பதிவு செய்யப்படுகிறதா என ஆய்வு செய...
தமிழகம்
திருப்பனந்தாள் காசி மடத்தில் மாகேஸ்வர பூஜை மே 30ல் ஏற்பாடு
கும்பகோணம்: திருப்பனந்தாள் காசித்திருமடத்தில் 322வது ஆண்டு மாகேஸ்வர பூஜை திருநாள் மே 30ம் தேதி நடக்கிறது. இதற்காக மே 27, 28ம் தேதிகளில் சமய சிந்தனை அரங்கம், 30ம் தேதி மாகேஸ்வர பூஜை திருநாள் விழா நடக்கிறது. துவக்க நாளில் கயிலை மாமுனிவர் திருவளர் திரு காசிவாசி எஜமான் சுவாமிகள் அருளாசி வழங்குகிறார். இணை அதிபர் ஸ்ரீமத் சுந...
தமிழகம்
வெவ்வேறு சம்பவம் 2 வாலிபர் தற்கொலை
தஞ்சாவூர்: குடந்தை அருகே வெவ்வேறு சம்பவத்தில் இரண்டு வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் ஒத்த தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன் மகன் சரவணகுமார் (25). உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர், பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால், மனமுடைந்த சரவணகுமார் விஷம் குடித்து தற்கொலை ...
தமிழகம்
ப.கோட்டைக்கு ரயில் திட்டங்கள் மனித உரிமைகள் சங்கம் வேண்டுகோள்
பட்டுக்கோட்டை: தமிழக பண்பாடு, மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மாதந்திர கூட்டம் பட்டுக்கோட்டையில் நடந்தது. பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். தலைவர் நியூட்டன் தலைமை வகித்தார். செயலாளர் நாடிமுத்து, உதவி தலைவர் முருகன், அமைப்பாளர் முருகன், இணைச் செயலாளர் சுந்தராஜன், பொருளாளர் கண்ணன...
தமிழகம்
முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாநில இறகு பந்து போட்டி ஏற்பாடு
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை சீனி பன்னீர்செல்வம் இறகு பந்து கழகம் சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதியின் 87 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிளான இறகு பந்து போட்டி நடத்த முடிவு செய்தனர். முன்னாள் நகராட்சி தலைவர் சீனி இளங்கோ தலைமையில் நடந்த கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர் ஸ்ரீதர், ராயல்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர...
தமிழகம்
இடஒதுக்கீடு வழங்க கோரி முத்தரையர் உண்ணாவிரதம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் பனகல் கட்டிடம் முன் முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கம் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். மாநில இளைஞரணி அணி செயலாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சிவனேசன், மாரிமுத்து, நகர செயலாளர் முத்துகுமார் உட்பட பலர் பேசினர். முத்தரையர்களு...
தமிழகம்
கோடை உழவு செய்து மண் வளத்தை பாதுகாக்க விவசாயிகளுக்கு அழைப்பு
புதுக்கோட்டை: கோடை உழவு செய்து மண் வளத்தை பாதுகாக்குமாறு விவசாயிகளுக்கு வேளாண்த்துறை இணை இயக்குனர் பழனியப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு மே மாதத்தில் 85 மி.மீ., மழை பெய்துள்ளது. கோடை சீசனில் மழை பெய்துள்ளதால் மானாவாரி பயிர்கள் சாகுபடி ச...
தமிழகம்
இலவச பொது மருத்துவ முகாம்
பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில், மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடந்தது. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில், செயலாளர் நீல்ராஜ், துணைத் தலைவர் கதிரவன், இயக்குநர் பூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் பானுமத...
தமிழகம்
இந்தியாவில் அதிகரித்து வரும் கல்வி வளர்ச்சி வாசன் பேட்டி
எழுமலை: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் வாசன் கூறியதாவது: மத்திய ஐ.மு.,கூட்டணி அரசு கல்விக்காக 45 ஆயிரத்து 711 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இது சென்ற முறையை விட 25 சதவீதம் அதிகம். சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு...
தமிழகம்
டி.எஸ்.பி., கார் முற்றுகை
கள்ளிக்குடி: திருமங்கலம் அருகே கள்ளிக்குடிச் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் நேற்று முன் தினம் மாலை, வில்லூரைச் சேர்ந்த அருணாசலம் என்பவர் ரோட்டை கடக்க முயன்றபோது வேகமாக வந்த கார் மோதி விட்டு, நிற்காமல் சென்றது.இதில், படுகாயமடைந்த அருணாச்சலம் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். விபத்து நடந்தபோது,அவ்வழியாக வ...
தமிழகம்
வைகை அணை வண்டல் படிவுகளை கொட்ட 17 கிராமத்தினர் அனுமதி
தேனி: வைகை அணை வண்டல் படிவுகளை தங்களது விவசாய நிலங்களில் கொட்டலாம் என பதினேழு கிராமத்தினர், பொதுப்பணித் துறைக்கு அனுமதி அளித்துள்ளனர். தேனி மாவட்டம், வைகை அணையின் மொத்த கொள்ளளவு 6,895 மில்லியன் கன அடி. தற்போது அணையில் மண்படிவு ஏற்பட்டு 6,091 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே தேக்க முடிகிறது. அதிகபட்சம் 15 அடி ஆழம் வரை ம...
General
பாக்., கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் மிரட்டல்
கராச்சி: தன்மீது சூதாட்ட புகார் தெரிவித்த முன்னாள் பயிற்சியாளர் இன்திகாப் ஆலம், அகிப் ஜாவித் மன்னிப்பு கேட்காவிட்டால், அவர்கள் மீது வழக்குத் தொடருவேன் என, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த ஆண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அணி, மோசமாக தோல்வியடைந்தது. இதையடுத்து வீரர்...
தமிழகம்
குழந்தைகளை கடத்திய பாதிரியார்: குண்டர் சட்டத்தில் கைதுக்கு பரிந்துரை
கோவை: குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த பாதிரியாரை, போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு மண்டல ஐ.ஜி.,சிவனாண்டி நிருபர்களிடம் கூறியதாவது: குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல் இருப்பதாக தகவல் வந்ததால், கிருஷ்ணகிரி எஸ்.பி., பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கும்பலை தேடும் பணி துவங்கியது. அதன்முடிவில் பெரம்பலூர் அருக...
இந்தியா
வாகா எல்லையில் காமன்வெல்த் ஜோதி
சண்டிகர்; வரும் ஜூன் 25ல் வாகா எல்லை வந்தடையும் காமன்வெல்த் விளையாட்டு ஜோதியை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியை குறிக்கும் வகையில், தபால் தலை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 19வது காமன்வெல்த் போட்டி, வரும் அக்., 3 முதல் 14ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஜோதி, கடந்த ஏப்ரல் 19ம்...
இந்தியா
சிபுசோரன் அரசுக்கு பா.ஜ., அளித்த ஆதரவு வாபஸ்
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் சிபுசோரனுக்கு அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ., வாபஸ் பெற்றது. ஜார்கண்ட் மாநிலத்தில் சிபுசோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ட்சா கட்சி, பா.ஜ., கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் பார்லிமென்ட்டில் மத்திய அரசுக்கு எதிராக பா.ஜ., கொண்டு வந்த வெட்டு தீர்மானத்தில் சிபுசோரன் எதிராக ஓட்டளித்ததால...
General
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: கோலிங்வுட் நீக்கம்
லண்டன்; வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் இருந்து, காயம் காரணமாக கோலிங் வுட் நீக்கப் பட்டார். இங்கிலாந்து சென்றுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 27ம் தேதி துவங்குகிறது. இதற்கான 12 வீரர்கள் அடங்கிய இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உ...
இந்தியா
ரயில்வே ஊழியருக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு
சென்னை: மங்களூரு விமான விபத்தில் சிக்கி, உயிருக்கு போராடியவரை மருத்துவமனையில் சேர்த்த ரயில்வே ஊழியருக்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு அளிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வே, பாலக்காடு கோட்டத்தில், "டிராக் மேனாக' பணிபுரிபவர் சையது பிலால் அகமது. நேற்று முன்தினம் இவர், மங்களூரு விமான நிலையம் ...
இந்தியா
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது : தியோரா
சென்னை: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக பார்லிமென்ட் அமைத்த குழு உறுப்பினர்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுடன் மத்திய அமைச்சர் முரளி தியோரா சென்னையில் இன்று ஆலேசானை நடத்தினார். சென்னை நுங்கம் பாக்கம் இந்தியன் ஆயில் பவனில் 45 எம்.பி.க்கள் அடங்கிய பெட்ரோலிய பொருட்களின் விலை ஆய்வு குழுவின் கூட்டம் நடந்தது. இந்த...
இந்தியா
சோனியா 29ம் தேதி காஷ்மீர் பயணம்
புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா வரும் 29ம் தேதி ஒரு நாள் பயணமாக காஷ்மீர் செல்கிறார். அங்கு காலை முதல் மாலை வரை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டில்லி திரும்புகிறார்.
General
பெருவில் லேசான நிலநடுக்கம்
லிமா : பெரு நாட்டில் ‌லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.உள்ளூர் நேரப்படி இன்று கா‌லை 5.46 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு பெருவின் அயாகுச்சோ பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் 5.9 ஆக பதிவாகியிருந்தது.வீடுகள், கட்டடங்கள் லேசாக குலுங்கின.
இந்தியா
பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் அதிகரிப்பு
மும்பை : இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏறுமுகத்தில் காணப்படுகிறது. காலை 9.05 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 241 புள்ளிகள் அதிகரித்து 16687.12 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 72 புள்ளிகள் சரிந்து 5003.90 புள்ளிகளாக வர்த்தகமாகிய...
இந்தியா
டில்லியில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
புதுடில்லி : டில்லியில் பா.ஜ., இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. ஐ.மு., கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை காங்கிரஸ் கொண்டாடி வருகிறது , இந்நிலையில் மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பா.ஜ., வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இன்றைய தினத்தை க...
இந்தியா
டார்ஜிலிங்கில் பந்த்
சிலிகுரி : மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் 4 மணி ‌நேரம் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டார்ஜிலிங்கில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கூர்கா லீக் தலைவர் மதன் தமாங் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் கூர்கா ஜன முக்தி மோர்சா இயக்கத்தின் இளைஙர் அணி செயலர் தேடப்பட்டு வரும் நிலையில், கூர்கா ஜனமுக்...
இந்தியா
கோரக்பூரில் சூறாவளி : 13 பேர் பலி
லக்னோ : உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் பலத்த சூறாவளி காற்று வீசியது. மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் இடியுடன் கூடிய பலத்த காற்று வீசியது. இதில் பல இடங்களில் மரங்கள் மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. கோரக்பூர், குஷிநகர், மஹ்ராஜ்கஞ்ச், டியோரியா, மாதியா, ஆகிய பகுதிகளில் 13 பேர் இறந்தனர். கோரக்பூர் - வாரணாசி நெடுஞ்சாலையில் ப...