category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
ஜூன் 1ல் வீடு வீடாக பணி ஆரம்பம்:மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு உபகரணங்கள் வழங்கல்
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணியாளர்களுக்கு விண்ணப்பம் உள்பட 13 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஜூன் 1 தேதி முதல் கணக்கெடுப்பு பணி துவக்கப்பட உள்ளது. இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புபணி ஜூன் 1ம் தேதி துவங்கி ஜூலை 15 வரை நடக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணியாளர்களுக்கு மூன்று க...
தமிழகம்
விபத்தில் 19 பேர் காயம்
இளையான்குடி: சூராணம் அருகே காஞ்சரத்தை சேர்ந்த மாயழகுக்கும், திருவள்ளூரை சேர்ந்த சுதாவிற்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. மணமக்கள் ஒரு சுமோ காரிலும், பெண் வீட்டார், சரக்கு வேனிலும் காஞ்சிரத்திற்கு சென்றனர். மாலை 4 மணிக்கு சோதுகுடி அருகே வேன் கவிழ்ந்தது. வேனில் சென்ற 19 பேர் காயம் அடைந்தனர். மணமகளின் தந்தை குப்பழக...
தமிழகம்
கும்பாபிஷேகம்
பாகனேரி: பாகனேரி ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 22 ம் தேதி யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை 7 மணிக்கு ஐயப் பன், கன்னி மூல கணபதி கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.
தமிழகம்
பவானி கோவில் திருட்டில் அடுத்த நடவடிக்கை என்ன? இணை ஆணையருக்கு கோவில் நிர்வாகம் கடிதம்
ஈரோடு: பவானி செல்லியாண்டியம்மன் கோவிலில் நடந்த உண்டியல் திருட்டு குறித்து மேல் நடவடிக்கை எடுக்க, இணை ஆணையருக்கு கோவில் நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது. பவானி செல்லியாண்டியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அறநிலையத்துறையோடு இணைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதம் நடக்கும் பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சியான சேறு ப...
தமிழகம்
பாதயாத்திரை
காரைக்குடி: உலக நலனுக்காக ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு, ஒரு குழுவினர் பாதயாத்திரை துவக்கியுள் ளனர். வலையபட்டி பச்சை காவடி குருக்கள் தலைமையில் 16 பேர், கடந்த 18 ம் தேதி ராமேஸ் வரத்தில் இருந்து யாத் திரை துவக்கினர். நேற்று காலை காரைக்குடி செஞ்சை கற்பக விநாயகர் கோயிலுக்கு வந்தனர். பிறகு, பிள்ளையார்பட்டி, நெற்குப்பை வழி...
தமிழகம்
யூனியன் விட்டு யூனியன் ஆசிரியர் இடமாறுதல்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான யூனியன் விட்டு யூனியன் இடமாறுதலுக்கான கவுன்சிலிங் நேற்று நடந்தது. ஆசிரியர்கள் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப காலியாக உள்ள காலிப் பணியிடங்களை தேர்வு செய்து பணியாற்றும் வகையில் தமிழக அரசு கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் கலந்தாய்வு பொதுமாறுதல் ந...
தமிழகம்
ஆசிரியர்கள் பற்றாக்குறை: கல்வித்தரம் பாதிப்பு
திருப்புத்தூர்: கடந்த 2001 க்கு முன் தரம் உயர்ந்த நடுநிலைப்பள்ளிகளில், போதிய ஆசிரியர்கள் இன்றி கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது. அதற்கு பின் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகள், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் கணித, ஆங்கில, அறிவியல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால், ...
தமிழகம்
கல்லல் அருகே மினி வேன் கவிழ்ந்து 24 பேர் காயம்
கல்லல்:கல்லல் அருகே புளியங்குடிபட்டியில் மினி வேன் (டாடா ஏஸ்) கவிழ்ந்து, 24 பெண்கள் காயமுற்றனர்.அரண்மனை சிறுவயல் பெரிய கண்மாயில், வேலை உறுதியளிப்பு திட்டத்தில், தூர் வாரும் பணி நடக்கிறது. இதற்காக குருங்காழிபட்டியை சேர்ந்த செல்வமணி (37), வீராயி (50), அமலோற்பவம் (57), அந்தோணி யம்மாள் (60), இருதயமேரி (59) உட்பட 24 பெண்கள்...
தமிழகம்
சேவுக பெருமாள் கோயில் தேரோட்டம்
சிங்கம்புணரி:சேவுக பெருமாள் அய்யனார் கோயிலில், வைகாசி விசாக தேரோட்டம் நேற்று நடந்தது. கடந்த 16 ம் தேதி விழா துவங்கியது. தினமும், மண்டகப்படியில் சுவாமி அருள்பாலித்தார். ஒன்பதாம் நாளான நேற்று காலை தேரடி பூஜைகள் நடந்தன. சுற்றுப்புற கிராமத்தினர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், புதுக் கோட்டை மாவட்டத்தினர் நேர்த்தி செலுத்தினர...
தமிழகம்
ரேஷன் கார்டிற்கு பொருள் நிறுத்தம்போலீசார் புலம்பல்
தேவகோட்டை:தேவகோட்டை சப் டிவிஷனில் உள்ள நகர், தாலுகா, ஆறாவயல் போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசார் நகரில் பல்வேறு இடங்களில் வசிக்கின்றனர். போலி ரேஷன் கார்டை பிடிக்க, நடத்தப்பட்ட ஆய்விற்கு பின், ராம்நகர் ரேஷன் கடையில் மாதந்தோறும் பொருள் வாங்கிய போலீசாரின் குடும்பங்களின் ரேஷன் கார்டுகளை ரத்து செய்துவிட்டனர். இது போன்ற...
தமிழகம்
ஓராண்டாக பூட்டியுள்ள என்.ஹெச்., அலுவலகம்
வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் தேசிய நெடுஞ்சாலை அலுவலகம் ஓராண்டாக பூட்டியே கிடக்கிறது. பூட்டிக் கிடக்கும் அலுவலகத்துக்குள் தபால்காரர் தினமும் தபால்களை போட்டுச் செல்வதால், அவை குவிந்துள்ளன. வெள்ளகோவில் வழியாக கோவை - திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்-67 செல்கிறது. இந்த ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்றும் மணி துவங்கியுள்...
தமிழகம்
தமிழில் கையெழுத்து போட மறுக்கும் அரசு அலுவலர்கள்
சிவகங்கை: சிவகங்கையில் அரசு ஊழியர்கள், ஆங்கிலத்தில் கையெழுத்திடுவதை வழக்கமாக கொண்டு ள்ளனர். அரசு அலுவலர், ஊழியர்கள் பொதுவாக அரசு கோப்புகளில், தமிழில் தான் கையெழுத்திடவேண்டும். ஆங்கிலத்தில் கையெழுத்திடக்கூடாது என உத்தரவு உள்ளது. ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான ஆசிரியர், அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்து போடுவதி...
தமிழகம்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்
சிவகங்கை: பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிய வசதியாக, இரண்டு இடங்களில் சிறப்பு பதிவு முகாம் நடக்கிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுப்பிரமணியன் அறிக்கை: சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி தாலுகாவை சேர்ந்தவர்களுக்கு, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கும். காரைக்குடி, தேவகோட்டை, ...
தமிழகம்
அவசியம் காலி இடம், சாலை ஓரங்களில் மரங்கள் : புவி வெப்பமாவதை சமாளிக்க இது தான் வழி
சிவகங்கை:மதுரை அருகே சோளங்குருணி கிராமத்தினர், மரம் வளர்ப்பு திட்டத்தில் முன்மாதிரியாக திகழ்கின்றனர். இதே போல இம்மாவட்டத்திலும், மக்கள் தாமாக முன் வந்து மரக்கன்றுகளை நட வேண்டும். புவி வெப்பமாதல் என்ற பெரும் சவாலை, மரம் வளர்ப்பின் மூலம் எளிதில் சமாளிக்கலாம். ஆங்கிலேயர் காலத்தில் சாலை ஓரங்களில், மரங்கள் வளர்க்கப்பட்டன. ஆ...
தமிழகம்
கூடைப்பந்து போட்டிக்கு வீராங்கனைகள் தேர்வு
ஈரோடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், ஈரோடு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் மாநில அளவிலான விடுதி வீராங்கனைகள் தேர்வு நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, அதலெடிக்ஸ் உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கான தேர்வு மாநிலம் முழுவதும் மதுரை, திருநெல்வேலி, ...
தமிழகம்
மத்திய விற்பனை வரியை ஒரு சதமாக குறைக்க மனு
ஈரோடு: மத்திய விற்பனை வரியை 2 சதவீதத்திலிருந்து ஒரு சதவீதமாக குறைக்க கோரி, தமிழக வணிகவரித்துறை அமைச்சருக்கு, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவநேசன் மனு அனுப்பியுள்ளார். மனுவில் கூறியுள்ளதாவது: மதிப்பு கூடுதல் வரியில் நான்கு சதவீதம் மற்றும் 12.5 சதவீதம் இடையில் எட்டு சதவீதம் வரி விதிப...
தமிழகம்
சேதம் அடைந்த ரோடுகள்
திருப்புத்தூர்: திருப்புத்தூரில், சேதம் அடைந்த ரோடுகளால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். பெரம்பலூர் - மானாமதுரை, மதுரை - தேவகோட்டை, திண்டுக்கல் - காரைக்குடி, திருப்புத்தூர் - கல்லல் இடையே நான்கு முக்கிய ரோடுகள், திருப் புத்தூர் நகர் வழியாக செல்கின்றன. சந்திப்பு நகரமாக இருப்பதால்,வாகனங்களின் வருகைக்கு ஏற்ப நகரில் ரோடுகள் ...
தமிழகம்
கூட்டுறவு சங்கங்களில் வேளாண் சேவை மையம்
ஈரோடு: வேளாண் பணியில் ஆள் பற்றாக்குறையை தீர்க்க முதல் கட்டமாக எட்டு வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாய விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்தாலும், விவசாயப் பணியில் ஈடுபட கூலியாட்கள் கிடைப்பதில்லை. தமிழக அரசு நவீன விவசாய கருவிகளான டிராக்டர், மினி டிராக்டர், டில்லர், பவர்வீடர், ...
தமிழகம்
விடாதே, பிடி! விரட்டுது லஞ்ச ஒழிப்பு துறை ஓராண்டில் 12 பேர் கைது
கோவை மற்றும் திருப்பூரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஓராண்டில் நடத்திய வேட்டையில் 12 அதிகாரிகள், ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள்,செக்போஸ்ட்களில் நடந்த திடீர் சோதனையில் 13 லட்சம் ரூபாய் பறி முதல் செய்யப்பட்டது. லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கையில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க அழைப்பு விடுத...
தமிழகம்
தி.மு.க., சார்பில் கிரிக்கெட் போட்டி
வெள்ளகோவில்: வெள்ளகோவிலருகே சு.க.வலசு செந்தலையாம்பாளையம் பிரிவில் தி.மு.க., இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது. அமைச்சர் சாமிநாதன் துவக்கிவைத்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். வீரசோழபுரம் பஞ்சாயத்து தலைவர் பாலசுப்பிரமணியம், நகர தி.மு.க., செயலாளர் மோகனசெல்வம், முத்தூர் இளைஞரணி அமைப்...
தமிழகம்
மாஜி வங்கி ஊழியர் வீட்டில் நகைகள் திருட்டு
கும்பகோணம்: கும்பகோணத்தில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கும்பகோணம் வட்டிபிள்ளையார் கோவில் செந்தில்நாதன் நகரைச் சேர்ந்தவர் ராஜன் (64). இவர் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஐந்து பெண்கள் உ...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
வெள்ளகோவில்: சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் வெள்ளகோவில் சுற்றுலாப் பயணியர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக்குழு இரண்டாவது நிலுவைத்தொகை வழங்க மார்ச் மாதம் தமிழக அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தாராபுரம் கோட்ட சாலைப் பணியாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தப்பட்டது. சங்க ...
தமிழகம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கக் கூட்டம்
பட்டுக்கோட்டை: தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க செயற்குழு கூட்டம் பட்டுக்கோட்டையில் நடந்தது. இதில், மாநில தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ராஜா கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார். மாநில பொருளாளர் குளஞ்சியப்பன், செயலாளர் திவேல், சட்டச் செயலாளர் கனகராஜ், மாவட்ட தலைவர...
தமிழகம்
சிறந்த வீரர்களுக்கு இலவச கல்வி
சென்னிமலை: மாநில, மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்க்கு சென்னிமலை மைலாடி ஸ்ரீராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச கல்வி அளிக்கப்படுகிறது. தடகளம், கைப்பந்து, கால்பந்து, கோ-கோ, கபடி ஆகிய போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியர் இலவச கல்வி பெறலாம். வெளியூர் மாணவ, மாணவியர்க்கு ...
தமிழகம்
நடுரோட்டில் பெண் தவிப்பு
கோவை : இரு குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பெண், கணவரை கைது செய்ய வலியுறுத்தி தர்ணா செய்தார். கோவை, சுக்ரவார்பேட்டை, பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தேவி(28). இரண்டு குழந்தைகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தவர், கேட் அருகே அமர்ந்து அழத்தொடங்கினார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் அவர் அளி...
தமிழகம்
சக்தி விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
நாமக்கல்: தொட்டிப்பட்டி சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை (மே 26ம் தேதி) நடக்கிறது. நாமக்கல் அடுத்த தொட்டிப்பட்டியில் புதிதாக சக்தி விநாயகர் கோவில் அமைக்கும் திருப்பணி சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. திருப்பணி அனைத்தும் முடிவுற்ற நிலையில் மே 26ம் தேதி (நாளை) கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று கா...
தமிழகம்
மாவட்டம் இரண்டானதால் பொங்கலூருக்கு திண்டாட்டம்
அன்னூர் : கோவை, திருப்பூர் என இரு மாவட்டங்களுக்கு இடையில் சிக்கித்தவிக்கின்றனர். பொங்கலூர் ஊராட்சி மக்கள். அன்னூரிலிருந்து சத்தி செல்லும் ரோட்டில் 7 கி.மீட்டரில் பொங்கலூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் பெத்தநாயக்கன்பாளையம், பொங்கலூர், தாசராபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் மூவாயிரம் பேர் வசிக்கின்...
தமிழகம்
கிரிக்கெட் சங்க பரிசளிப்பு விழா
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய லீக் போட்டி பரிசளிப்பு விழா மற்றும் கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது. கிரிக்கெட் சங்க மாவட்ட துணை தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். ரத்தினவேல் வரவேற்றார். பாலசுப்பிரமணியம் டி.ஆர்.ஒ., பரிசு வழங்கினார். செயலாளர் மாரீஸ்வரன், மாவட்ட விளையாட்டு அலுவலர்...
தமிழகம்
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் புதிய காவலர்? மாஜி ராணுவத்தினர் கலெக்டரிடம் புகார்
தஞ்சாவூர்: பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் காவலர்களாக பணி செய்து வரும் முன்னாள் ராணுவத்தினருக்கு பதில் புதிய காவலர்களை நியமிக்க முயற்சிகள் நடப்பதை தடுத்து, தாங்கள் பணியில் தொடர நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் ராணுவத்தினர் கலெக்டர் (பொறுப்பு) பிச்சையாவிடம் மனுக்கொடுத்தனர். முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் பி.எஸ்.என்.எல்....
தமிழகம்
காங்., வக்கீல் பிரிவு நிர்வாகிகள் கூட்டம்
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் சட்டம் மற்றும் மனித உரிமை காங்., அமைப்பின் சார்பில் வக்கீல்கள் ஆய்வு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அன்புசெழியன் வரவேற்றார். ஹசன்அலி எம்.எல்.ஏ., மாநில செயலாளர் மலேசியா பாண்டியன், இளைஞர் காங்., மாநில துணை தலைவர் வரதராஜன், ரமேஷ்பாபு முன்னிலை வகித்தனர். ...
தமிழகம்
ராமநாதபுரத்தில் டாக்டர் வீட்டில் 20 பவுன் திருட்டு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் டாக்டர் வீட்டில் இரண்டு லட்சம் மதிப்புள்ள 20 பவுன் நகை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் சேதுபதிநகரை சேர்ந்தவர் டாக்டர் சீனிவாசன். இவரது மனைவி ஷர்மிளா .இவரும் டாக்டராக பணியாற்றுகிறார். இவர்கள் வீட்டு பீரோ நகை பெட்டியில் நகையை வைத்துள்ளனர். மே 22ல் பீரோவில் வேறு நகையை வைக்க ப...
தமிழகம்
ரோட்டோர குப்பைகளால் தொற்றுநோய் அபாயம் பார்த்திபனூரில் அவலம்
பார்த்திபனூர்:பார்த்திபனூரில் ரோட்டோரங்களில் கொட்டப்படும் குப்பபைகளை அப்புறப்படுத்தாமல், பல நாள்கள் தேங்கி கிடப்பதால், தொற்றுநோய் பீதியில் மக்கள் உள்ளனர். பார்த்திபனூர் ஊராட்சியில் பெரும்பாலான தெருக்களில் கொட் டப்டும் குப்பைகளை பேரூராட்சியினர் சுத்தப்படுத்துவதில்லை. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு, ரோடுகளில் பொதுமக்கள் செல...
தமிழகம்
பஞ்சாப் வங்கி அனுமதி கடிதம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் பிளஸ் 2 ல் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் ஹரிஹரன், பஞ்சாப் தேசிய வங்கி சார்பில் கல்வி கடன் பெறுவதற்கான உத்தரவும் பரிசும் வழங்கினார். பாலசுப்பிரமணியம் டி.ஆர்.ஒ., தனி துணை கலெக்டர் பிரபாகரன், பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் அன்பு உட்பட பலர் ...
தமிழகம்
பிரம்மேஷ்வர் கோவில் கும்பாபிஷேகம்: 40 அடியில் திரிசூலம் அமைப்பு
மேட்டுப்பாளையம் : கல்லாறில் 40 அடி உயரத்துக்கு திரிசூலம் அமைத்து, புதியதாக கட்டிய பிரம்மேஷ்வர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. மேட்டுப்பாளையம் - ஊட்டி மெயின் ரோடு கல்லாறில், புதியதாக பிரம்மேஷ்வர் கோவிலும், 40 அடி உயரத்தில் திரிசூலமும் அமைக்கப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகம் விழா மே 21ம் தேதி பிள்ளையார் வழிப்பாட்...
தமிழகம்
கமுதியில் ஊர்க்காவல் படையினர் இல்லை இரவு பாதுகாப்பில் தொய்வு
கமுதி: கமுதி பகுதியில் ஊர்க்கவல் படையினர் செயல்படாததால் இரவு பாதுகாப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது.கமுதி யில் 2004ல் 30 , 2006 ல் 30 பேர் என 60,பேர் ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஊக்கதொகையாக மாதம் 250 ரூபாய் பெற்று வந்தனர். கமுதி பகுதியில் நடக்கும் திருவிழா, கோயில் விழாக்களுக்கு தனியாக பணியாற்றி சிறப்பு ஊக்க தொ...
தமிழகம்
மண்டல கூடைப்பந்து: பிரண்ட்ஸ் கிளப் சாம்பியன்
கோவை : மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் பிரண்ட்ஸ் கூடைப்பந்து கிளப் சாம்பியன் பட்டம் வென்றன. கோவை பிரண்ட்ஸ் கூடைப்பந்து கிளப் சார்பில் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி வ.உ.சி.,மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் நடந்தது. பிரண்ட்ஸ் கூடைப்பந்து கிளப், ஒண்டிப்புதூர் கூடைப்பந்து கிளப், ரயில்வே கிளப், திருப்பூர் கூடைப்பந...
தமிழகம்
ஊராட்சி அலுவலக கட்டடம் சேதம் பதிவேடுகள் பராமரிப்பில் சிக்கல்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே காத்தாகுளத்தில் ஊராட்சி அலுவலக கட்டடம் சேதமடைந்து, இடியும் தருவாயில் உள்ளதால் ஊராட்சி பதிவேடுகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. ஊராட்சியில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையால், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி பகுதிகளில் கான்ட்ராக் டர்கள் ...
தமிழகம்
ஸ்தல வரலாறு புத்தகம் இல்லை 5 ஆண்டாக பக்தர்கள் ஏமாற்றம்
ராமநாதபுரம்: உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள நிலையில் கோயில் ஸ்தலவரலாறு புத்தகம் கிடைக்காமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயில் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கோயில்வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள், கோயில் ஸ்த...
தமிழகம்
சத்தணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சத்துணவு ஊழியர் சங்க சார்பில் பாலின பாகுபாடு இன்றி பதவி உயர்வு வழங்க கேட்டு மாவட்டசமூக நலத்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. துணைத்தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.முருகேசன் உட்பட பலர் பேசினர். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,அரசு ஊழியர் போன்று ஜிபிஎப் ஐ அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற க...
தமிழகம்
இலவச மருத்துவ முகாம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மறுமலர்ச்சி டிரஸ்ட் ,சக்கரகோட்டை ஜமாத், அரோக்யா மருத்துமனை , இணைந்து சக்கரகோட் டையில் இலவச மருத்துவ முகாம் நடத்தியது.ஜமாத் தலைவர் சிராஜூதீன் தலைமை வகித் தார். செயலாளர் அப்துல் நாசர், துணைத்தலைவர் துங்கு அப்துல் ரகுமான், முன் னிலை வகித்தனர். டாக் டர் பரணி குமார் ஆலோசனை வழங்கினார்.
தமிழகம்
எட்டு உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு பாண்டுகுடி, சாத்தான் குளம், பாம்பூர், மஞ்சூர், டி.மாரியூர், தினைக்குளம், ராமசாமிபட்டி, செல்வநாயகபுரம் ஆகிய ஊர்களிலுள்ள உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாகவும், வழிமறிச்சான், பெருமாள்கோவில், செவ்வூர், வேளானூர், கும்பரன் ஆகிய நடுநிலை பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாகவும் தரம் உய...
தமிழகம்
எஸ்.என்.எஸ்., கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாடு பயிற்சி
கோவை : தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்களுக்கான இரண்டு வார திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் கோவை, வழியாம்பாளையத்திலுள்ள எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று துவங்கியது. துவக்க விழாவில், கல்லூரியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜி., துறை தலைவர் கார்த்திக் வரவேற்றார். கல்லூரி நிறுவனர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முதல்வர...
தமிழகம்
வீட்டு மனை நிலத்தில் மண் கடத்திய டிராக்டர்கள் சிறை
ப.வேலூர்: இலவச வீட்டுமனை நிலத்தில் மண் அள்ள முயன்ற நான்கு டிராக்டர், ஜே.சி.பி., இயந்திரத்தை மக்கள் சிறைபிடித்தனர். அதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சென்ற தாசில்தாரையும் மக்கள் முற்றுகையிட்டனர்.ப.வேலூர் அருகே சேளூர் செல்லப்பம்பாளையத்தில் 500க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். 10 ஆண்டுக்கு முன் அப்ப...
தமிழகம்
வேன் மோதி 12 ஆடுகள் பலி
சாயல்குடி: சாயல்குடி அருகே தனிச்சயம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் தணிக்கோடி. இவர் தனது ஆடுகளை தரைக்குடி பகுதியில் மேய்த்து விட்டு ஊர் திரும்பினார். , சாயல்குடி அடுத்த கடுகுசந்தை கிழக்கு கடற்கரைச்சாலையில் அதிகாலை 5மணிக்கு வரும்போது ,எதிரே வந்த மகேந்திர வேன் மோதியதில் 12 ஆடுகள் இறந்தன. 15 ஆடுகள் காயமடைந்தன. சாயல்குடி போலீச...
தமிழகம்
பாம்பனில் பல்லுயிர் பெருக்க தினவிழா கண்ணாடி படகு சவாரி துவக்கம்
ராமநாதபுரம்: சர்வதேச பல்லுயிர் பெருக்க தினவிழாவை முன்னிட்டு பாம்பன் பாலம் பூங்காவில் உள்ள கண்ணாடி படகு சவாரி துவக்கப்பட்டுள்ளது. இதை துவக்கி வைத்து கலெக்டர் ஹரிஹரன் பேசியதாவது:ஒவ்வொரு ஆண்டும் மே 22ல் சர்வதேச உயிரின பன்மிய நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழ் நாட்டில் நீலகிரி உயிர் கோள காப்பகம் மற்றும் ராமநாதபுரம் மன்னார் வளை...
தமிழகம்
விவாகரத்து கேட்பு வழக்குகளை தொடர்ந்து அதிகரிக்கும் குடும்ப வன்முறை வழக்குகள்
கோவை : விவாகரத்து வழக்குகளைத் தொடர்ந்து கோவை கோர்ட்களில் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் தொடரப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. கணவன்,மனைவியிடையே ஏற்படும் சிறு கருத்து வேறுபாடு, பூதாகரமாக்கப்பட்டு,விவாகரத்து வரை செல்கிறது. இதனால், கோவை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்...
தமிழகம்
அதலபாதாளத்தில் செல்லும் கூட்டுறவு வங்கிகள் வங்கி பணியாளர்களுக்கு கஞ்சி தொட்டி திறக்கும் நிலை
ராமநாதபுரம்: கூட்டுறவு வங்கிகள் நாட்டின் முதுகெலும்பாக இருந்த நிலை மாறி, இன்று செயல்படுவதற்கே திணறும் நிலையில் அதலபாதாளத்தை நோக்கி செல்கின்றன. வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களோ ஆண்டு கணக்கில் சம்பளம் எடுக்க முடியாத நிலையில் பட்டினியால் அல்லாடும் நிலை சத்தமின்றி அரங்கேறி வருகிறது. தமிழகத்தில் ஒருகாலத்தில் கூட்டுறவு வங்...
தமிழகம்
அகில இந்திய கபடி போட்டி: திண்டுக்கல் கல்சுரல் அணி வெற்றி
ராசிபுரம்: அகில இந்திய அளவிலான கபடி போட்டியில் முதல் நாள் திண்டுக்கல் கல்சுரல் அகாடமி அணி வெற்றி பெற்றது. ராசிபுரத்தில் அகில இந்திய அளவிலான கபடி போட்டிகள் துவங்கியுள்ளது. இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியாவில் உள்ள தலைசிறந்த அணிகள் விளையாடுகின்றன. துவக்க விழாவுக்கு நாமக்கல் மாவட்ட எஸ்.பி., பாரி தலைமை...
தமிழகம்
பார்வையற்றோர் பள்ளியில் மாணவியர் சேர்க்கை
திருச்சி: திருச்சி மாநகராட்சி புத்தூரில் இயங்கி வரும் பார்வையற்ற மகளிருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல் வகுப்பிலிருந்து ப்ளஸ் 1 வகுப்பு வரை மாணவியர் சேர்க்கை நடக்கிறது. இதுகுறித்து திருச்சி கலெக்டர் சவுண்டையா வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் திருச்சி மாநகராட்...
தமிழகம்
சுட்டெரிக்கும் வெயிலில் சிறுமியின்ற உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை
திருவாடானை: திருவாடானையில் சுட்டெரிக்கும் வெயில் மூன்று வயது சிறுமியை ரோட்டில் படுக்க வைத்து, கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். திருவாடானை பஸ்ஸ்டாண்டில் சுட்டெரிக்கும் வெயிலில் மூன்று வயது சிறுமி படுக்க வைத்து , அவரது உடலில் கத்தியால் கீறி ரத்தத்தை சிந்த வைத்து தாய் ,தந...
தமிழகம்
வெறிச்சோடிய கலெக்டர் அலுவலகம்
கோவை : தமிழக முதல்வர் தலைமையில் நடந்த செம்மொழி மாநாட்டு கூட்டத்தில் பங்கேற்க அரசு அதிகாரிகள் சென்றதால், கலெக்டர் ஆபீஸ் வெறிச்சோடியது. தமிழக முதல்வர் கோவை வருகையையொட்டி, அனைத்து அரசு அதிகாரிகளும் "முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் ஆஜராகியிருந்தனர். நேற்று முதல்வர் வருகையால் மக்கள் கூட்டமும் இல்லை. அதிகாரிகள் கூட்டமும் இல்லை. ...
தமிழகம்
கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல் கல்வீச்சில் 5 பேர் காயம்: போலீஸ் தடியடி
நாமக்கல்: கோவில் திருவிழா கொண்டாடுவதில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் ஐந்து பேர் காயமடைந்தனர். போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். நாமக்கல் அடுத்த பொட்டிரெட்டிப்பட்டியில் உள்ள மகா மாரியம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில் திருவிழாவில், தேர் தூக்குது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே 30 ஆண்டுகளாக பிரச்னை ...
தமிழகம்
பஞ்சாயத்து தலைவருக்கான பட்டறிவுப்பயணம் துவக்கம்
திருச்சி: திருச்சி உள்பட எட்டு மாவட்டங்களை சேர்ந்த 64 பஞ்சாயத்துத் தலைவர்களுக்கான பட்டறிவுப் பயிற்சி பயணம் துவக்க விழா நேற்று நடந்தது. திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில், பஞ்சாயத்து தலைவர்கள் சென்ற பஸ்ஸை கலெக்டர் சவுண்டையா கொடியசைத்து துவக்கி வைத்தார். அதன்பின், அவர் கூறியதாவது: ஊரக வளர்ச்சி மற்றும் ஊர...
தமிழகம்
ஆசிரியர் ஆகும் ஆசிரியர் பயிற்றுனர்கள்
கோவை : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவர் சேர்க்கை, வகுப்பறை கட்டுதல், பள்ளி செல்லா குழந்தைகளை அடையாளம் காணுதல், மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட ஏராளமான பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. இதற் கென பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பயிற்றுனராக பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தி...
தமிழகம்
முதுகுளத்தூர், கடலாடியில் குடிநீர் தட்டுப்பாடு : சைக்கிளில் அலையும் இளைஞர்கள்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், குடிநீருக்காக இளைஞர்கள் சைக்கிள்களில் அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காவிரி குடிநீர் திட்டம் அமல்படுத்தபட்டது. திட்டத்தால் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும் என்ற எண்ணத்தில் இருந்த மக்களுக்கு, ...
தமிழகம்
ரவுடி கொலை வழக்கில் குற்றவாளிகள் சரண்? திருச்சி நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் குவிப்பு
திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டதில் தொடர்புடையவர்கள் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைய உள்ளனர் என்ற தகவலால், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த வக்கீல் கார்த்திக...
தமிழகம்
தி.கோட்டில் 29ம் தேதி கண்ணகி விழா துவக்கம்
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் வைகாசி விசாக தேர் திருவிழாவையொட்டி நடக்கும் கண்ணகி விழா வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. திருச்செங்கோடு வைகாசி விசாக தேர் திருவிழாவையொட்டி நடைபெறும் கண்ணகி விழாவை மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன் துவக்கி வைக்கிறார். இதுகுறித்து நகராட்சி சேர்மன் நடேசன் தெரிவித்ததாவது: தமிழர்களின்...
தமிழகம்
கொப்பரை இருப்பு வைக்கும் பிரச்னையில் மீண்டும் இழுபறி
பொள்ளாச்சி : கொப்பரையை இருப்பு வைக்க குடோன் வசதி ஏற்படுத்துவதில் மீண்டும் இழுபறி ஏற்பட்டுள்ளதால், கொப்பரை கொள்முதலில் சிக்கல் தொடர்கிறது. இதனால் காத்திருக்கும் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மத்திய அரசின் "நேபட்' நிறுவனமும், மாநில அரசின் "டான்பேட்' நிறுவனமும் இணைந்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொப்பரை கொள்முதல் செய...
தமிழகம்
ரேஷன் கடை அமைக்க கோரிக்கை
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த மாமரத்துபட்டியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டுமென்று எம்.எல்.ஏ., ஜெயராமன் தலைமையில் பொதுமக்கள் ஜமாபந்தியில் மனு கொடுத்தனர். பொள்ளாச்சி தாசில்தார் அலுவலகத்தில் ராமபட்டிணம் உள்வட்டத் திற்கான ஜமாபந்தி நடந்தது. அப்போது, பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் தலைமையில் பொதுமக்கள் மனு கொடுக்க வந்...
தமிழகம்
ம.தி.மு.க., பொதுக்கூட்டம்
மணப்பாறை: மணப்பாறை நகர, ஒன்றிய ம.தி.மு.க., சார்பில் கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழா மற்றும் கேரள சாலை மறியல் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றியச் செயலாளர் துரைராஜ் தலைமை வகித்தார். அவைத்தலைவர் பொன்னுச்சாமி, ஜெயராமன், சாமிநாதன், பேராசிரியர் ரெத்தினவேல், வக்கீல் ராஜேந்திரன், ஐஸ்பாண்டியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிர...
தமிழகம்
அரசு மருத்துவமனையில் வீணாகும் ஜெனரேட்டர்
ப.வேலூர்: ப.வேலூர் அரசு மருத்துவமனைக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட ஜெனரேட்டர் மூன்று மாதங்களாக வெட்ட வெளியில் பாதுகாப்பின்றி வைத்து வீணடிக்கப்படுகிறது. ப.வேலூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நிகரான மருத்துவ வசதிகள் உள்ளதால், ப.வேலூர் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏராள...
தமிழகம்
முத்தாயம்மாள் கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி
ராசிபுரம்: ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியில் உணர்வு அறிவாற்றல் ஆசிரியர்களுக்கு தேவை என்ற தலைப்பிலான கருத்தரங்கு 13 நாட்கள் நடந்தது. கருத்தரங்கு நிறைவு விழாவுக்கு, கல்லூரி முதல்வர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். மேலாண்மையியல் துறை தலைவர் சரவணராஜ் வரவேற்றார். கல்லூரி தலைவர் கந்தசாமி, செயலாளர் பேராசிரியர் குணச...
தமிழகம்
திருவிழாவில் தாக்குதல் நடத்திய 3 பேர் கைது மூன்று பேர் தலைமறைவு
குளித்தலை: குளித்தலை மாரியம்மன் கோவில் திருவிழாவில் மாவிளக்கு மற்றும் அக்னிசட்டி எடுத்துச்சென்ற பக்தர்கள் மீது கல்வீசிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். குளித்தலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு எழுநூற்றுமங்கலத்தைச் சேர்ந்த ஒருபிரிவினர் கடந்த 18ம் தேதி இரவு மேளதாளத்துடன் மாவிளக்கு, அக்னிசட்டி ஏந்திக்கொண் ட...
தமிழகம்
எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
முசிறி: முசிறி காவிரி ஆற்றுப்பாலத்தின் கீழ் ஆண் பிணம் கிடப்பதாக வி.ஏ.ஓ., கிருஷ்ணசாமி முசிறி போலீஸில், கொடுத்த புகாரின் பேரில், முசிறி போலீஸார் சோதனையிட்டனர். முசிறி காவிரி ஆற்றுப் பாலத்தின் கீழ் உள்ள 16வது தூண் அருகில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் எலும்புக்கூடான நிலையில் கிடந்தது. இறந்தவருக்கு 50 வயது இருக்கும் எனவும், இ...
தமிழகம்
மாநாட்டு ஆய்வரங்க பணிகள்; முதல்வர் திருப்தி
கோவை : செம்மொழி மாநாட்டுப் பந்தல், கண்காட்சி அரங்கம் மற்றும் ஆய்வரங்கங்கள் அமைக்கும் பணியை முதல்வர் கருணாநிதி நேரில் பார்வையிட்டு திருப்தி தெரிவித்தார். கோவையில் வரும் ஜூனில் 23லிருந்து 27ம் தேதி வரை நடக்கவுள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட, முதல்வர் கருணாநிதி நேற்று கோவை வந்தார். நேற்று மாலை 5.30...
தமிழகம்
கத்தி முனையில் மிரட்டி நகை, பணம் கொள்ளை
ப.வேலூர்: ப.வேலூர் இரு விவசாயிகளை கத்திமுனையில் மிரட்டி பணம், இரு மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகன்றனர் ப.வேலூர் அருகே செங்கப்பள்ளியை சேர்ந்தவர் விவசாயி வேலுச்சாமி (57). அவர் மனைவி மலர்மதியடன் நேற்று முன்தினம் இரவு வீட்டு முன் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் அங்கு வந்த மர்மநபர்கள், மலர்மதியை கத்தி...
தமிழகம்
செம்மொழி மாநாடு: பெட்ரோல் இருப்பு வைக்க சுற்றறிக்கை
கோவை : செம்மொழி மாநாட்டிற்கு வருகை தருவோர் பயன்படுத்தும் வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசலை இருப்பு வைக்க பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கத்தின் சார்பில் அனைத்து பெட்ரோல் பங்க்குகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கோவை நகரில் 23 பி.பி.சி.எல்., 27 இந்தியன் ஆயில், 13 எச்.பி.,பங்குகள் உள்ளன. அவிநாசி ரோட்டில் அண்ணாச...
தமிழகம்
பெரம்பலூரில் பாதாள சாக்கடை திட்டப்பணி : மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
பெரம்பலூர்: பெரம்பலூர் நகரில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட எளம்பலூர் சாலை மற்றும் வெங்கடேசபுரம் காலனி ஆகிய பகுதிகளில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை கலெக்டர் விஜயகுமார் ஆய்வு செய்தார். கழிவுநீர் சேகரிப்ப...
தமிழகம்
உடைக்கப்பட்ட மீட்டர்கேஜ் ரயில் பெட்டி உதிரிபாகங்கள் பெங்களூரு பயணம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், உடைக்கப்பட்ட ரயில் பெட்டிகளின் உதிரி பாகங்கள் பெங்களூருக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.பொள்ளாச்சி வழித்தடத்தில் மீட்டர் கேஜ் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, இப்பகுதியில் இயக்கப்பட்ட ரயில்கள் பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பயனற்ற நிலைய...
தமிழகம்
டாஸ்மாக் கடையில் ரூ.2.69 லட்சம் மாயம்
குறிச்சி : டாஸ்மாக் அரசு மதுபானக் கடையில், இரண்டு லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மாயமானது குறித்து செட்டிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். மலுமச்சம்பட்டியை அடுத்த தண்ணீர்ப்பந்தல் பஸ் ஸ்டாப் அருகே, அரசு டாஸ்மாக் மதுபானக்கடை (எண் 1765) செயல்படுகிறது. மேற்பார்வையாளராக ராதாகிருஷ்ணனும், விற்பனையாளராக கற்பகமும் பணியாற்றுகின்றனர்...
தமிழகம்
தீராத வயிற்று வலியால் இளம்பெண் தற்கொலை
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள அய்யலூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மனைவி அகிலா (30). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதற்கு பல்வேறு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி சரியாகவில்லை. இந்நிலையில் நேற்று மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அகிலா அரளி விதையை அரைத்து குடித்தார். இது குற...
தமிழகம்
அணைகளில் நீர்மட்டம் குறைவு
மஞ்சூர்:மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட அணைகள் மின் உற்பத்திக்கு முக்கிய அணைகளாக உள்ளன. இந்த அணைகளை சுற்றி ஏராளமான நீரோடைகள் உள்ளன. வடகிழக்கு பருவமழைக்கு பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரையில் அணையில் தண்ணீர் இருப்பின் அளவை கொண்டு மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட...
தமிழகம்
என்.சி.சி., மாணவியரின் மலையேற்றபயிற்சி முகாம் இன்றுடன் நிறைவு
ஊட்டி : அகில இந்திய என்.சி.சி., மாணவியரின் மலையேற்ற பயிற்சி முகாம் இன்றுடன்(25ம் தேதி) நிறைவு பெறுகிறது.நீலகிரி மாவட்டம் அருவங்காடு அருகே உபதலை அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த 5ம் தேதி துவங்கிய அகில இந்திய என்.சி.சி., மாணவியரின் மலையேற்ற பயிற்சி முகாமில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மேற்குவங்காளம், உத்ராஞ்சல், ம...
தமிழகம்
அரசு துறைகளில் காலாவதி வாகனங்கள் வீணாகிறது! ஏலம் விடாததால் மக்கி மண்ணாகிறது
கடலூர் : அரசின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தி காலாவதியான வாகனங் களை உடனுக்குடன் ஏலம் விட நடவடிக்கை எடுக்காமல் பல ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள் ளதால் மக்கி மண்ணாகி வருகின்றன. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அரசின் திட்டங்கள் மக்களை சென்றடையவும், அதிகாரிகள அனைத்து பகுதிகளையும் நேரடியாக சென்று பார் வையி...
தமிழகம்
ஆலோசனை கூட்டம்
கிள்ளை : சி.முட்லூரில் வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநில தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சக்திவேல் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கவிதா, கீதா, சிதம்பரம் வட்ட நிர்வாகிகள் தங்க அன்பழகன், சக்திவேல் முன்னிலை வகித்தனர்.
தமிழகம்
கோடை விழா கொண்டாட்டம்: விளையாட்டு வீரர்கள் திண்டாட்டம்
ஊட்டி : ஊட்டியில் நடந்த கோடை விழா நிகழ்ச்சிகளின் போது, பயன்படுத்தப்பட்ட ஆணி, கம்பி மற்றும் குண்டூசிகளை அப்படியே மைதானத்தில் போட்டு சென்றுள்ளதால் விளையாட்டு வீரர்கள் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது; ஆண்டுதோறும் இந்த பிரச்னை ஏற்பட்டு வந்தபோதும் மாவட்ட நிர்வாகம் இதனை கண்டுக்கொள்வதில்லை. ஊட்டி தாவரவியல் பூங்கா அருகேவுள...
தமிழகம்
கடலூர் அரசு இசைப் பள்ளியில் கோடை பயிற்சி நிறைவு விழா
கடலூர் : கலை பண்பாட்டுத் துறை ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் கடலூர் அரசு இசை பள்ளியில் கோடை கால கலை பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது. அரசு இசைப் பள்ளி இயக்குனர் வெங்கடேசு வரவேற்றார். தஞ்சாவூர் கலை பண்பாட்டுத் துறை மண்டல, உதவி இயக்குனர் முத்து முன்னிலை வகித்தார். வக்கீல் அருணாச்சலம் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் ...
தமிழகம்
ஆசிரமங்களை கண்காணிக்க குழு பிற்படுத்தப்பட்டோர் பேரவை கோரிக்கை
புவனகிரி : தமிழகத்தில் உள்ள ஆசிரமங்களை தீவிரமாக கண் காணிக்க குழு அமைக்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் பேரவை அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. புவனகிரி அருகே தம்பிக்கு நல்லான்பட்டிணம் தலைமை அலுவலகத்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை மாநில பொதுக் குழு கூட்டம் மாநில தலைவர் லட்சுமிகாந்தன் தலைமையில் நடந்தது. மாவட்ட ந...
தமிழகம்
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு ஒத்துழைப்பு நல்க அழைப்பு
ஊட்டி : வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் சரிபார்க்கும் பொருட்டு களப்பணியாளர்களுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளிலும் புகைப்பட வாக்காளர் பட...
தமிழகம்
பயிற்றுனர் பணிக்கு வாய்ப்பு
ஊட்டி : கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பயிற்றுனராக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:கனரா வங்கி நூற்றாண்டு ஊரக வளர்ச்சி அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் "கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்' ஊட்டி...
தமிழகம்
திட்டக்குடியில் பாசன சங்கங்கள் கூட்டமைப்பின் அவசர கூட்டம்
திட்டக்குடி : திட்டக்குடி வெலிங் டன் நீர்த்தேக்க கரை சீரமைப்பு பணியை துரிதமாக்க கோரி பாசன சங்கங் களின் கூட்டமைப்பின் அவசர கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாயில் வலுவிழந்த வெலிங்டன் நீர்த் தேக்க கரைகளை சீரமைக்க 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த ஆண்டு முதல் பணிகள் நடந்து வருகிறது. ...
தமிழகம்
மாற்றுத் திறனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்ட உதவி
கடலூர் : மாற்றுத் திறனாளிகளுக்கு கலெக்டர் சீத்தாராமன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.கடலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சீத்தாராமன் மாற்றுத் திறனாளிகள் 30 பேருக்கு ஒரு லட்சத்து 23 ஆயிரம் மதிப்பில் தலா 4,100 ரூபாய் கை மற்றும் கால்களால் இயங்கும் தையல் இயந்திரங்களை வழங்கினார். உடல் ஊனமுற்றவர்களுக்கு மொப...
தமிழகம்
பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லையேல் ஊட்டியில் போராட்டம் நடத்த முடிவு
ஊட்டி : ஊட்டி ரேஸ் கோர்ஸ் தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பாக ஜூன் 3ம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு கிடைக்கவில்லை எனில் போராட்டம் நடத்த தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.ஊட்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் சங்கத்துக்கு சொந்தமான குதிரைப்பந்தய மைதானத்தில் டிக்கெட் விற்பனை, நிர்வாக பிரிவு, பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் ...
தமிழகம்
எங்களுக்கு தெரியாமல் தீர்மானங்கள் இணைப்பு முட்டாளாக்கும் செயல்: கவுன்சிலர் வேதனை
கடலூர் : ஐந்து ஆண்டுகள் முடிவடையும் தருவாயில் எங்களுக்கு தெரியாமல் அவசரமாக தீர்மானங்கள் இணைத்து முட்டாள் களாக்கும் நிலை தொடர்கிறது என ஒன்றிய கூட்டத் தில் கவுன்சிலர் ஆதங் கத்தை வெளிப்படுத்தினார்.கடலூர் ஊராட்சி ஒன் றிய கூட்டம் நடந்தது. சேர்மன் சாந்தி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன், துணைத் தலைவர் காசி...
தமிழகம்
கல்வி திட்ட நிகழ்ச்சியில் கடன் வழங்கும் தீர்மானம்
ஊட்டி : ஊட்டி அருகே சோலூர் கிராமத்திலுள்ள சோலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கான கல்வி திட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் தனி அலுவலர் பகவதியப்பாபிள்ளை, கடன் சங்கத்தின் பணிகளை எடுத்து கூறினார். மண்டல இணைப்பதிவாளர் தயாளன் பேசுகையில்,""கடன் சங்கத்திலுள்ள அனைத்து "எ ...
தமிழகம்
குடியிருப்பு கட்டும் பணி தீவிரம்
திட்டக்குடி : பெண்ணாடத்தில் போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணி மழையிலும் தீவிரமாக நடந்து வருகின்றது.பெண்ணாடம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீசாரின் குடியிருப்புக்கு 124.82 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டது. அதன்படி போலீஸ் ஸ்டேஷனையொட்டியே விழுப்புரம் கோட்ட காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் குடியிருப்பு வளா கம், ...
தமிழகம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தலவிருட்சம் தில்லை மரம் வளர்ப்பு
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத் துறை சார்பில் கோவில் தல விருட்சம் தில்லை மரம் வளர்க்கப்படுகிறது.சிதம்பரம் நடராஜர் கோவில் தல விருட்சம் தில்லைமரம். கோவில் கீழ ராஜகோபுரம் அருகே தல விருச்சகத்திற்கென்று தனி இடம் உண்டு. ஆனால் அந்த இடத்தில் முட்புதர்கள் மண்டிக் கிடந்தது. கோவிலில் தல விருட்சம் எங்கு உள்ளது என ...
இந்தியா
சென்னை ஐகோர்ட்டில் புதுச்சேரி பிளீடராக ஸ்ரீனிவாசன் நியமனம்
சென்னை: சென்னை ஐகோர்ட்டில், புதுச்சேரி அரசு சார்பாக ஆஜராக, புதுச்சேரி அரசு பிளீடராக வக்கீல் டி.ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டில், புதுச்சேரி அரசுக்கு எதிராக தொடரப்படும் வழக்குகளில், அம்மாநில அரசு சார்பில் ஆஜராக, அரசு பிளீடராக வக்கீல் டி.ஸ்ரீனிவாசனை நியமித்து துணை நிலை கவர்னர் உத்தரவிட்டார். இவர், மூ...
தமிழகம்
முன்னாள் படைவீரர் குறை தீர்வு கடலூரில் 2ம் தேதி நடக்கிறது
கடலூர் : முன்னாள் படைவீரர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறைதீர்வு கூட்டம் வரும் 2ம் தேதி கடலூரில் நடக்கிறது.இதுகுறித்து முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவரது குடும்பத்தினர், தற் போது ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்...
தமிழகம்
கழிவுநீரை முறையாக வெளியேற்றாத 2 தொழிற்சாலைகளை மூட உத்தரவு
உடுமலை : கழிவு நீரை முறையாக வெளியேற்றாமல் இரண்டு கிராமங்களின் நிலத்தடி நீரை மாசுபடுத்திய கார்பன் தொழிற்சாலைகளை உடனடியாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குடிமங்கலம் ஒன்றியம் பெரியபட்டி ஊராட்சிக்குட்பட்ட அப்பிலியபட்டி மற்றும் ரங்கமாபாளையம் கிராமங்களில் இயங்கி வரும் இரண்டு கார்பன் உற்பத்தி தொழிற்சாலைகளால் சுற்றுபுற...
இந்தியா
சாராயம், கள்ளுக் கடைகளுக்கு ஏலம் நடத்த ஆயத்தம்! நஷ்டம் காரணமாக உரிமம் புதுப்பிப்பு மந்தம்
சாராயம் மற்றும் கள்ளுக் கடைகளுக்கு ஏலம் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் கலால் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. புதுச்சேரியில் 100 சாராயக் கடைகளும், 96 கள்ளுக் கடைகளும் அமைந்துள்ளன. அதுபோல காரைக் கால் பகுதியில் 29 சாராயக் கடைகளும், 31 கள்ளுக் கடைகளும் அமைந் துள்ளன. மொத்தம் 129 சாராயக் கடைகள், 127 கள்ளுக் கடைகளுக்கும் கலால் துறை ...
இந்தியா
விளையாட்டிற்கு தனி இயக்குனரகம் முதல்வர் உறுதி
புதுச்சேரி : விளையாட்டிற்கு தனி இயக்குனரகம் ஏற்படுத்த தயாராக உள்ளதாக முதல் வர் வைத்திலிங்கம் கூறினார். உப்பளம் ராஜிவ்காந்தி உள் விளையாட்டரங்கம் புதுப்பிப்பதற்கான அடிக் கல் நாட்டு விழாவில் அவர் பேசியதாவது: ராஜிவ்காந்தி உள் விளை யாட்டரங்கம் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது. இந்த பணியை 6 மாதத் திற...
இந்தியா
கதிர்வேல் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
புதுச்சேரி : கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கதிர்காமத்தில் கெங்கையம்மன், முத்து மாரியம்மன், கதிர்வேல் சுவாமிகளுக்கு தனித் தனி கோவில்கள் உள் ளன. இக்கோவில்களில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழாவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. கும்பாபிஷேக விழா கடந்த 17ம் தேதி ...
இந்தியா
மோட்டார் பைக் பெட்டியை உடைத்து பணம் திருட்டு சென்னை வாலிபர் கைது; குடும்பத்தினருக்கு வலை
புதுச்சேரி : புதுச்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து பணம் திருடும் சென்னை கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், பலரை தேடி வருகின்றனர்.புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர் செல்வம். ஆட்டோ டிரைவரான இவர் நேற்று ரத்னா தியேட்டர் அருகே தனது மோட்டார் பைக்கை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். அப்போது,...
தமிழகம்
ரயில்வே மேம்பால பணியை துவக்க வலியுறுத்தல்
உடுமலை : உடுமலை தளி ரோடு ரயில்வே மேம்பாலம் பணியை உடனடியாக துவக்க வேண்டும் என கோரி அ.தி.மு.க., சார்பில் போராட்டம் நடத் தப்படும் என எம்.எல்.ஏ., அறிவித்துள்ளார்.உடுமலை தளி ரோடு ரயில்வே மேம்பாலம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கியதையடுத்து, பணிகள் துவங்கியது. முதலில் ரயில்வே பகுதி பணிகள் துவக்கியது. இதனால், வாகன போக்குவரத்து மா...
இந்தியா
காலாப்பட்டு சுனாமி குடியிருப்புகளை மழை காலத்திற்கு முன் ஒப்படைக்க கோரிக்கை
புதுச்சேரி : கட்டி முடிக்கப்பட்ட சுனாமி குடியிருப்புகளை, வரும் மழைக்காலத்திற்கு முன்பாக ஒப்படைக்க வேண்டும் என பெரிய காலாப்பட்டு மீனவர் கிராம பஞ்சாயத்து கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மீனவர் பஞ்சாயத்து செயலாளர் குமார் கவர்னருக்கு அனுப்பியுள்ள மனு: சுனாமியால் பாதிக்கப்பட்ட காலாப்பட்டு உள்ளிட்ட நான்கு கிராம மக்களுக்...
தமிழகம்
பெரிய வாளவாடியில் இன்று ஜமாபந்தி
உடுமலை : உடுமலை, மடத்துக் குளம் தாலுகாவில் இன்று ஜமாபந்தி நடக்கிறது. உடுமலை தாலுகாவிற்கான ஜமாபந்தி, தாலுகா அலுவலகத்தில் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் சோமசேகரன் தலைமையில், 18ம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்று, பெரிய வாள வாடி உள் வட்டத்திற் குட் பட்ட வலையபாளையம், எரிசனம்பட்டி, கொடிங் கியம், தின்னப்பட்டி, சர்க்கார் புதூர...
இந்தியா
தொழிற்சாலைகளை காக்க அதிகாரிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் : கந்தசாமி
புதுச்சேரி : படித்தவர்கள் அரசு வேலையை நம்பி இருக்காமல் சுயதொழில் தொடங்கி பல பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் கந்தசாமி பேசினார். வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கி அமைச்சர் கந்தசாமி பேசியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் தொழிற்சாலைகள் குறைந்து கொண்டு இருக்கிற...
தமிழகம்
திருமூர்த்தி அணையில் இன்று தண்ணீர் திறப்பு
உடுமலை : பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனம், இறுதி சுற்றுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து இன்று காலை 8.00 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்திற்கு ஜன., 22ல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்குட்பட்ட 97 ஆயிரத்து 522 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. 135 நாள் ...
இந்தியா
அரசு டாக்டர்கள் உண்ணாவிரதம்
புதுச்சேரி : கோரிக்கையை வலியுறுத்தி, அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட் டம் நடத்தினர்.ஆறாவது ஊதியக்குழுவில் பரிந்துரைத்த கால முறை பதவி உயர்வுக்கு புதுச்சேரி அரசு, அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரதப் ப...