category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
General | 2 ஆண்டுகளில் ஓய்வு : சானியா | பிர்மிங்காம் : இன்னும் 2 ஆண்டுகளில் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் கிளாசிக் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் தைவான் வீராங்கனை யங் ஜானை, சானியா மிர்சா வென்றார். போட்டிக்குப்பிறகு பத்திரிகையா... |
தமிழகம் | ஆபத்து பயணம் அவசியமா | எத்தனை தான் அவசர <உலகம் என்றாலும், நம்மவர்களுக்கு உயிர்ப்பிரச்னையில் இத்தனை அலட்சியம் கூடாது. அவசரம், அலட்சியம், சிக்கனம் என ஏதேதோ காரணங்களுக்காக வாகனங்களில் அதிகம் பேர் பயணிக்கின்றனர். கொள்ளளவை மீறி கூடுதலாக செல்வதால் வாகனத்தை கட்டுப்படுத்தவோ, வளைவுகளில் திருப்பவோ சிரமப்படும் போது "வாழ்க்கை பயணம்' வழியை நோக்கி செல்லாம... |
தமிழகம் | பெரம்பலூரில் ஆன் லைன் மூலம் லட்சக்கணக்கில் மோசடி | பெரம்பலூர் : பெரம்பலூரில் ஆன்லைன் மூலம் மோசடி நடந்துள்ளது. பெரம்பலூரில் ஆன்லைன் மூலம் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களிடம் லட்சக் கணக்கில் பண மோசடி செய்தது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பெரம்பலூரைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார், வாலீஸ்வரன், திருச்சியை சேர்ந்தவர் கார்த்திக். இவர்க... |
தமிழகம் | மின்வெட்டை கண்டித்து கள்ளக்குறிச்சியில் வியாபாரிகள் போராட்டம் | விழுப்புரம் : மின்வெட்டை கண்டித்து கள்ளக்குறிச்சியில் வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சியில் பல்வேறு பகுதிகளில் தினமும் பல மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. இதனை கண்டித்து அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
இந்தியா | ராஜஸ்தானில் வெள்ளம் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு | ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் மேற்கு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேற்கு பகுதி மாவட்ட கலெக்டர்களுக்கு நிவாரணப் பணி்களை முடுக்கி விடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | தர்மபுரியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் | தர்மபுரி : தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காலை 10 மணிக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். "ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணியை காலதாமதம் செய்து, பாதுகாப்பான குடிநீர் வ... |
தமிழகம் | ராஜபக்ஷேவுடன் தமிழக எம்.பி.,க்கள் சந்திப்பு | சென்னை : டில்லியில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவை தமிழக எம்.பி.,க்கள் சந்தித்து, முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீள்குடியேறறம் செய்வது குறித்து ஆலோசனை செய்வர் என தி.மு.க., வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம் | சென்னை : தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி வருவாய்த்துறையில் ஜாயின்ட் கமிஷ்னராக இருந்த வி.பழனிகுமார் பொதுப்பணித்துறையில் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி கலெக்டராக இருந்த விகே சண்முகம் விருதுநகர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். வி அருண்ராய் கி... |
தமிழகம் | போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை: 5 பேர் மீது வழக்கு | தேனி : போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை செய்து 8 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த ரீச் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாகி ஜேக்கப், தேனி அருகே கோட்டூரில் குழந்தைகள் பள்ளி நடத்தி வருகிறார். இந்த பள்ளி கட்டடம் 1989 ல் கட்டப்பட்டது.இங்கு ஆம்புரோஸ், தே... |
தமிழகம் | கே.ஏ.கே., உருவப்படத்தை ஜெ., திறந்து வைத்தார் | சென்னை : மறைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமியின் உருவப்படத்தை அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா திறந்து வைத்தார். அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச்செயலர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக பணியாற்றியவர் கே.ஏ.கிருஷ்ணசாமி. இவர் அ.தி.மு.க.,வில் எம்.ஜி.ஆருக்கு அடுத்த உறுப்பினராக சேர்ந்தவர... |
இந்தியா | கசாபுக்கு ஆதரவாக வாதாட வழக்கறிஞர்கள் நியமனம் | மும்பை : மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கசாபின் மேல்முறையிட்டு மனுவுக்கு ஆதரவாக வாதாட இரண்டு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்ட... |
தமிழகம் | பொள்ளாச்சியில் கார் மோதல் : பனியன் கம்பெனி அதிபர்கள் பலி | பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே கார் விபத்துக்குள்ளானதில் பனியன் கம்பெனி நடத்தி வரும் 3 பேர் பலியானார்கள். கிணத்துக்கடவை சேர்ந்தவர் நாகராஜ் இவர் டெலிபோன் எச்ஸ்சேஞ்சில் ஆபரேட்டராக பணிபுரிகிறார். திருப்பூரை சேர்ந்தவர்கள் ராமசாமி, பாலகிருஷ்ணன், மகேஷ்வரன். இவர்கள் 4 பேரும் தனித்தனியாக திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வருகி... |
இந்தியா | போபால் விஷவாயு வழக்கு தீர்ப்பு திருப்தியளிக்கவில்லை : ஜெய்ராம் ரமேஷ் | புதுடில்லி : கடந்த 26 ஆண்டுகளுக்கு முன் நடந்த போபால் விஷவாயு வழக்கு கசிவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டவர்களுக்க போதிய தண்டனை கிடைக்கவில்லை என பல தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஜெ... |
தமிழகம் | இணையதள கோரிக்கைக்கு ஸ்டாலின் பரிந்துரை : மாணவியின் படிப்பு செலவை ஏற்றார் அமைச்சர் | திருநெல்வேலி : தந்தையை இழந்த மாணவிக்கு இன்ஜினியரிங் கல்லூரி படிக்க ஆகும் செலவை தமிழக அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.பாளையங்கோட்டை, கொக்கிரகுளத்தை சேர்ந்த சிவகாமிநாதன் மகள் முத்துலட்சுமி. இவரது தந்தை ஓட்டலில் சப்ளையராக வேலைபார்த்துவந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். தாய் வேலம்மாள், பீடிக்கு தாள்... |
General | இலங்கை அரசுக்கு பொன்சேகா எச்சரிக்கை | கொழும்பு : இலங்கையில் உள்ள முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை விரைவில் அவர்களை விடுதலை செய்து மறுகுடியேற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால் இலங்கை அரசு மற்றொரு கடுமையான சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கும் என்று இலங்கை பார்லிமென்டில் முன்னாள் இலங்கை ராணுவ தளபதியும், எம்.பி.,யுமான சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும... |
தமிழகம் | தபால் அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை | திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தபால் அலுவலகத்தில் கலர் ஜெராக்ஸ் நூறு ரூபாயை கட்டிய பெண்ணிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.திண்டுக்கல் நாகல் நகர் ஒத்தக்கண் பாலத்தை சேர்ந்தவர் கலா(46). இவர் நாகல் நகர் தபால் அலுவலகத்தில் கலர் ஜெராக்ஸ் எடுத்த 17 நூறு ரூபாயை தனது சிறுசேமிப்பு கணக்கில் கட்டினார். இதை கண்டுபிடித்... |
தமிழகம் | போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஐ.ஜி.,யிடம் ஆசிரியை புகார் | மதுரை : கொடைக்கானல் பகுதியில் தனக்குச் சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் பிரெயின் ஜென்கின் கைப்பற்ற முயற்சிப்பதாகவும், இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி உடந்தையாக இருப்பதாகவும் தென்மண்டல ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தியிடம் கொடைக்கானல் பள்ளி ஆசிரியை சாந்தி புகார் செய்தார்.
மதுரையில் அவர் அளித்த பு... |
தமிழகம் | அம்பத்தூர் தொழிற்சாலையில் தீவிபத்து | அம்பத்தூர் : அம்பத்தூரில் தனியார் பெயின்ட் தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. தீயணைப்பு துணையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும்பணியில் ஈடுபட்டனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | சேலம் நகர குடிநீர் வடிகால் வாரியஉதவிபொறியாளர் பணி நீக்கம் | மதுரை : தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சேலம் நகர கோட்ட உதவிபொறியாளர் எஸ். ரவிச்சந்திரன், தொடர்ந்து பணிக்கு வராததால், பணி நீக்கம் செய்யப்பட்டார்.கோவை மேற்கு மண்டல தலைமை பொறியாளர் என். ரவிச்சந்திரன் கூறியதாவது: உதவி பொறியாளர் எஸ். ரவிச்சந்திரன், கடந்த 1992, அக். 14 முதல் 1993, ஜன., 1ம் தேதி வரை குடும்ப அலுவல் காரணமாக ஈ... |
தமிழகம் | மாணவர்களை விரட்டிய சிறுத்தை : வால்பாறை அருகே பரபரப்பு | வால்பாறை : பள்ளி மாணவர்களை சிறுத்தை விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம், வால்பாறை அருகே சோலையார் முதல் பிரிவிலுள்ள அரசு உதவி பெறும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 60 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் போதிய கழிப்பிட வசதி இல்லாததால் பள்ளியை சுற்றியுள்ள தேயிலைத் தோட்டத்தை திறந்தவெளி... |
தமிழகம் | கண்மாய், குளங்களை பாதுகாப்பது அரசின் கடமை : ஐகோர்ட் கிளை உத்தரவு | மதுரை : கண்மாய், குளங்கள் போன்ற நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என குறிப்பிட்ட மதுரை ஐகோர்ட் கிளை, குமரி மாவட்டம் நரிக்குளத்திற்கு பாதிப்பின்றி சாலை பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டது.
குமரி மாவட்ட இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் லால்மோகன் உட்பட நால்வர் தாக்கல் செய்த பொது நல வழக்... |
தமிழகம் | ஆறாம் வகுப்பில் மாணவனை பெயில் ஆக்கியது செல்லாது : மெட்ரிக் இயக்குனர் சுற்றறிக்கையை ரத்து | சென்னை : ஆறு, ஏழு, எட்டு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதில் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என, மெட்ரிகுலேஷன் பள்ளி கல்வி இயக்குனர் பிறப்பித்த சுற்றறிக்கை செல்லாது என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவனை பெயில் ஆக்கியது செல்லாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
சென்னைய... |
தமிழகம் | இன்ஜினியரிங் மாணவருக்கு கல்விக்கடன் : ஐ.ஓ.பி.,க்கு ஐகோர்ட் கிளை உத்தரவு | மதுரை : சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவருக்கு ஒரு மாதத்திற்குள் கல்விக் கடன் 1.84 லட்சம் ரூபாயை வழங்கும்படி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
காளையார்கோவில் அருகே முத்தூரை சேர்ந்த அசோக்குமார் தாக்கல் செய்த ரிட் மனு: நான் 2008ல் பி.இ., வகுப்பில் சேர்ந்தேன். இரண்டாம்... |
தமிழகம் | பாஸ்கரன் கொலை வழக்கு விசாரணை | திண்டுக்கல் : திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கடந்தாண்டு ஏப்ரல் 30ல் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கார்த்திகேயன், இவரது காதலி மஞ்சுபார்கவி, முகிலன், துரைப்பாண்டி, உமர் முக்தார், சபீர், விவேக், ராஜ்குமார், சங்கர் ஆகிய ஒன்பது பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு மாவட்ட கோர்ட்டில் இருந்து விரைவு கோர்ட... |
தமிழகம் | ஐ.ஏ.எஸ்.,அதிகாரி சாட்சியம் | மதுரை : முன்னாள் அமைச்சர்கள் செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சம்பத் மற்றும் அசோக், மோகன் மீது தொடரப்பட்ட இவ்வழக்கு, மதுரை சி.பி.ஐ., கோர்ட்டில் நடக்கிறது. இதில் சம்பத் விடுதலை செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள், சம்பத்தை விசாரிக்க வேண்டும், என மனு செய்யப் பட்டது. நீதிபதி ஜெகநாதன் முன், நேற்று சம்பத் ... |
இந்தியா | குழந்தை கடத்தல் வழக்கில் கைதான பெண் வீட்டில் புதுச்சேரி சமூக நலத்துறை அதிகாரிகள் சோதனை | புதுச்சேரி : குழந்தை கடத்தல் வழக்கில், கைது செய்யப்பட்ட மனித உரிமை அமைப்பு தலைவி வீட்டில் மேலும், இரண்டு குழந்தைகள் இருப்பது குறித்து, சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, லலிதாவின் வீட்டில் நேற்று புதுச்சேரி சமூக நலத்துறை உதவி இயக்குனர் சாந்தி, கள அதிகா... |
இந்தியா | மகளுக்காக குழந்தைகளை வயிற்றில் சுமக்கும் தாய் | ராஜ்கோட் : மகளைப் பெற்றெடுத்த தாய், அவளுக்கென வாடகைத் தாயாகவும் செயல்படத் துணிந்து விட்டார். இப்போது, மகளின் கருவின் உதவியால் உருவான மூன்று குழந்தைகளை வயிற்றில் சுமந்து வருகிறார்.
குஜராத், ராஜ்கோட்டை சேர்ந்தவர் ஷோபனா சாவ்தா(47). நான்கு குழந்தைகள் பெற்றவர். இந்த நால்வரில் ஒருவர், பாவிகா(26); கர்ப்பப் பை இல்லாமல் பிறந்தவ... |
இந்தியா | பிரிட்டன் ஆசாமி நுழைந்தார்: புரி கோவிலில் பரபரப்பு | புரி : ஒரிசா, புரி ஜெகன்நாதர் கோவிலுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பிரிட்டனை சேர்ந்த வாலிபரை, போலீசார் மடக்கிப் பிடித்தனர். இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரிசாவில் உள்ள புரி ஜெகன்நாதர் கோவில் உலக புகழ்பெற்றது. இக்கோவில் சூரிய பகவானுக்கு உரிய தலமாகும். கட்டடக் கலையின் மாண்பை பறைசாற்றும் வகையில் க... |
இந்தியா | இறந்தவர் சடலத்தை எரித்து பார்சி குடும்பத்தினர் புரட்சி | சூரத் : சூரத்தை சேர்ந்த பார்சி மதத்தை பின்பற்றும் குடும்பத்தினர் மத வழக்கங்களை மாற்றி இறந்தவரின் உடலை தகனம் செதுள்ளனர். இது காலம் காலமாக செயப்படும் வழக்கத்திலிருந்து மாறுபட்ட செயலாகும்.
பார்சி இன வழக்கத்தின்படி ஒருவர் இறந்துவிட்டால், இறந்தவர்களின் உடல்களை புதைக்கவோ அல்லது தகனம் செய்யவோ மாட்டார்கள். இதற்கு மாறாக இறந்தவர... |
இந்தியா | லைசென்ஸ் இன்றி துப்பாக்கிகள் : ஜார்க்கண்டில் 17 பேர் கைது | ஆதித்யபூர் : ஜார்க்கண்ட் மாநிலத்தில் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்த தனியார் நிறுவன செக்யூரிட்டிகள் 17 பேர் கைது செயப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட்டின் சராகேளா-கர்ஸ்வான் மாவட்டத்தை சேர்ந்த, தனியார் நிறுவன பாதுகாப்பு அதிகாரி ஜஸ்வந்த், உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது தொடர்பாக சமீபத்தில் கைது செயப்பட்டார்.
இவரி... |
இந்தியா | ஒரே வாரத்தில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது | அதிரப்பள்ளி : ஒரே வாரத்தில் மேலும் ஒரு சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி அருகே மலக்குப்பாறா வனத்தில் இரு சிறுவர்களை கொன்ற சிறுத்தையால், கிராம மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. தமிழக கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில் அடிக்கடி சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம்.
இதை அடுத்து,... |
தமிழகம் | கே.ஏ.கே., உருவப்படத்தைஜெ., திறந்து வைத்தார் | சென்னை:மறைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமியின் உருவப்படத்தை அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச்செயலர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக பணியாற்றியவர் கே.ஏ.கிருஷ்ணசாமி. இவர் அ.தி.மு.க.,வில் எம்.ஜி.ஆருக்கு அடுத்த உறுப்பினராக சேர்ந... |
தமிழகம் | கோவை செம்மொழி மாநாடு முழு நிகழ்ச்சிகள்: முதல்வர் தகவல் | சென்னை:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார்.கோவையில் வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அமைக்கப்படும் பொது அரங்கில், ஒவ்வொரு நாளும் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றிய, நிகழ்ச்சி நிரல் புத்தகத்தை முதல்வர் கருணாநிதி நேற்று வெளியி... |
தமிழகம் | ராஜ்யசபா தேர்தல்: 4 சுயேச்சைகள் மனு தள்ளுபடி | சென்னை:ராஜ்யசபா தேர்தலுக்கான மனுக்கள் பரிசீலனை நேற்று நடந்தது. சுயேச்சைகள் நான்கு பேரின் மனுக்கள் தள்ளுபடி செயப்பட்டதால், அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஆறு பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியானது.ராஜ்யசபாவில் காலியாகும் ஆறு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில், பத்து பேர் மனு தாக்கல் செதிருந்தனர். மனுக்கள் மீதான... |
தமிழகம் | பழநி உண்டியல் வசூல் ஒரு கோடியை தாண்டியது | பழநி : பழநி கோயில் உண்டியல் வசூல் ரூ.1 கோடியை தாண்டியது.பழநி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைகோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. ரொக்கம் ரூ.1 கோடியை தாண்டியது. தங்கத்தினால் ஆன வேல், காவடி, செயின், திருமாங்கல்யம், மோதிரம், வளையல், மயில், முருகனின் திருஉருவம், வெள்ளியால் ஆன வேல், பாதம், காவடி, பாம்பு, மணி, ஊஞ... |
இந்தியா | லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய ஆர்.ஐ., கைது | சிவகாசி : சிவகாசி வருவாய் ஆய்வாளர்(ஆர்.ஐ.,) பாலசுப்பிரமணியம். இவர், பிடிபடும் திருட்டு மணல் லாரிகளை விடுவிப்பதற்காகவும் மற்றும் வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களில் கையெழுத்து போட பணம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் மெயின் ரோட்டில் உள்ள ஆர்.ஐ., அலுவலகத்திற்கு ... |
தமிழகம் | ஜெனரேட்டர் பொருத்துவதில் தாமதம் : மின் உற்பத்தி இழப்பு | கூடலூர் :லோயர்கேம்ப் நீர்மின்நிலையத்தில் புதிய ஜெனரேட்டர் பொருத்தும் பணியில் ஏற்படும் காலதாமதத்தால் மின் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின்நிலையத்தில் நான்கு ஜெனரேட்டர்கள் உள்ளன.
பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு திறக்கப்படும் நீரின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஜெனரேட... |
தமிழகம் | ராஜபக்ஷேயை எதிர்த்து ஆர்ப்பாட்டம்:வைகோ உட்பட பலர் சென்னையில் கைது | சென்னை:இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் இந்திய வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, டி.ராஜேந்தர் உள்ளிட்ட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.இலங்கை அதிபர் ராஜபக்ஷே மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இவரது வருகையை, தமிழகத்தில் உள்ள தமிழர் அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.பா.ம.க.... |
தமிழகம் | சீனாவிற்கு செம்மரங்கள் கடத்தல் : நடுக்கடலில் மடக்கிப் பறிமுதல் | சென்னை : பர்னீச்சர் பொருட்கள் என்ற பெயரில் சென்னையில் இருந்து, சீனாவிற்கு கன்டெய்னர் மூலம் கப்பலில் கடத்தப்பட்ட 4.68 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை, மத்திய சுங்கத்துறை புலனாய்வுப் பிரிவினர் நடுக்கடலில் மடக்கி பறிமுதல் செய்தனர். இதில், கடத்தல்காரர்கள் யாரும் சிக்கவில்லை.
விலை உயர்ந்த இசைக்கருவிகள் செய்யப் பயன்ப... |
தமிழகம் | கோவையில் கொண்டாட்டம் : திருப்பூரில் திண்டாட்டம் | அதீத கற்பனையா, அச்சமா, ஆரூடமா என்னவென்று அதைச் சொல்ல முடிய வில்லை; இப்போதுள்ள நிலை தொடர்ந்தால், தீபாவளிக்குள் திருப்பூரே பாதி காலியாகி விடும் என்கிறார்கள். இதற்கு முன்னாலும் இப்படிப்பட்ட சோதனைகளை சந்தித்து, அதிலிருந்து மீண்டு வந்த அனுபவம், திருப்பூருக்கு இருக்கிறது.ஆனால், புயல், சுனாமி, சூறாவளி எல்லாமே சேர்ந்து வந்ததைப... |
தமிழகம் | தூத்துக்குடி தீ விபத்தில் 100 குடிசைகள் சாம்பல் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலி | தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இரவு மீனவர்கள் வசிக்கும் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 100 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. தாய், இருமகள்கள், ஒருமகன் என, ஒரே குடும்பத்தில் நால்வர், உடல் கருகி பலியாயினர்.
தூத்துக்குடி தெற்கு பீச்ரோட்டில் உள்ள மீனவ பகுதியான இனிகோ நகரில், நேற்று முன்தினம் இரவு 10.30... |
இந்தியா | டில்லியில் ராஜபக்ஷே சோனியாவை சந்திக்கிறார் | இலங்கையில் புனரமைப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென்று இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை தமிழக எம்.பி.,க்கள் சந்தித்து வலியுறுத்தவுள்ளனர். தவிர, டில்லியில் சோனியாவை, ராஜபக்ஷே சந்தித்துப் பேசவுள்ளார்.
கோவையில் நடக்கவுள்ள செம்மொழி மாநாட்டிற்கான அழைப்பிதழை மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் அழகிரி, ட... |
இந்தியா | போலி என்கவுன்டர்:பிரதமரிடம் புகார் | ஸ்ரீநகர்:காஷ்மீரில் மாச்சில் என்ற இடத்தில் நடந்த போலி என்கவுன்டர் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகார் தெரிவித்துள்ளன. காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியையொட்டிய மாச்சில் என்ற இடத்தில், ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிகள் மூன்று பேர் பலியாயினர். இச்சம்பவத்தில் ... |
தமிழகம் | போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஐ.ஜி.,யிடம் ஆசிரியை புகார் | மதுரை : கொடைக்கானல் பகுதியில் தனக்குச் சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் பிரெயின் ஜென்கின் கைப்பற்ற முயற்சிப்பதாகவும், இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி உடந்தையாக இருப்பதாகவும் தென்மண்டல ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தியிடம் கொடைக்கானல் பள்ளி ஆசிரியை சாந்தி புகார் செய்தார்.
மதுரையில் நேற்று அவர் அள... |
இந்தியா | மன்மோகன் - சசிதரூர் பேசியது என்ன?வெளியுறவு அமைச்சகம் திகைப்பு | புதுடில்லி:அமைச்சர் பதவியை ராஜினாமா செவதற்கு முன், பிரதமர் மன்மோகன் சிங்குடன், சசிதரூர் மேற்கொண்ட சந்திப்பு விவரங்களை, மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு தர, பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது.இதனால், வெளியுறவு அமைச்சகம் செய்வதறியாது திகைத்துள்ளது.ஐ.பி.எல்., கொச்சி அணி ஏல விவகாரத்தில், மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசிதரூர்... |
General | பாக்., அரசுடன் சமரசப் பேச்சு:20 தலிபான்கள் விடுதலை | இஸ்லாமாபாத்:ராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை திரும்ப பெற்றுக்கொண்டு, 20 தலிபான் பயங்கரவாதிகளை பாகிஸ்தானிய அதிகாரிகள் விடுதலை செய்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகள், பல்வேறு குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும... |
இந்தியா | முடிவு எடுப்பதில் பா.ம.க., திணறல் : தி.மு.க.,வை உதறவும் தயக்கம் | சென்னை : தி.மு.க., கூட்டணியில் இடம்பெறுவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க முடியாமல், பா.ம.க., திணறி வருகிறது. அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன், ராமதாஸ் நேற்று சென்னையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. அதே நேரத்தில், தி.மு.க.,வை உதறவும் அக்கட்சி தயங்கி வருகிறது.
தி.மு.க.,வுடன் கூட்டணி ... |
இந்தியா | பெட்ரோல், டீசல் விலையேற்றம் எவ்வளவு?கருணாநிதியிடம் மத்திய அரசு ஆலோசனை | பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்துவது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இதன்மூலம் ஏற்கனவே திட்டமிட்டிருந்த விலையை காட்டிலும் சற்று குறைவான அளவில் விலையேற்றம் செவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செது வருகிறது.பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் வி... |
இந்தியா | 5.39 லட்சம் ரமேஷ், 2.94 லட்சம் கீதா:திரும்பிய பக்கமெல்லாம் இவர்கள் தான் | காந்திநகர்:கடந்த 2009 லோக்சபா தேர்தலின் போது, குஜராத்தில் தேர்தல் கமிஷன் நடத்திய ஓர் ஆவில் ரமேஷ் பா, பாபு பா, கீதா பென், சவிதா பென் ஆகிய பெயர்களில் லட்சக்கணக்கானோர் இருப்பது தெரிய வந்துள்ளது.கடந்த 2009 லோக்சபா தேர்தலின் போது, குஜராத் மாநில தேர்தல் கமிஷன் ஓர் ஆவு நடத்தியது. எந்தெந்த பெயர்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளன என... |
General | செவ்வாய் கிரகத்தில் பெரிய கடல்கள் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு | லண்டன் : செவ்வாய் கிரகத்தில் பெரிய கடல்கள் இருந்ததற்கான ஆதரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 4.5 மற்றும் 3.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏரிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் விஞ்ஞானிகளுக்கு கிடைத்துள்ளது. மேலும் அங்கு 2,000 கி.மீ., அகலம் 8 கி.மீ., ஆழமுடைய மிகப்பெரிய குழி இருந்ததையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். |
தமிழகம் | முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியீடு | சென்னை : முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை, சென்னை மற்றும் கோவை மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 921 முதுகலை ஆசிரியர்கள், வேலை வாப்பு அலுவலக பதிவு மூப்... |
தமிழகம் | சுங்கான்கடையில் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட ராஜேசின் உடலை போலீசார் சோதனை செய்தனர். | நாகர்கோவில்: சுங்கான்கடை அருகே கல்வி நிறுவன கட்டுமான பணி செய்து வந்த அசாம் மாநில தொழிலாளியை கல்லால் அடித்து கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய சக தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.சுங்கான்கடை அருகேயுள்ள ஒரு தனியார் இன்ஜி., கல்லூரியில் வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. கட்டுமான பணியில் குமரி மாவட்ட தொழி... |
தமிழகம் | கடையாலுமூடு அருகே காட்டுபன்றி அட்டகாசம் :படுகாயமடைந்த பெண் ஆஸ்பத்திரியில் அனுமதி | மார்த்தாண்டம்: கடையாலுமூடு அருகே காட்டுபன்றி தாக்கி பெண் படுகாயம் அடைந்தார். ஆபத்தான நிலையில் இவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் ஒருநூறம்வயல் அருகே வனவிலங்குகள் கிராம பகுதியில் நுழையாமல் இருப்பதற்கு மின்சாரவேலி உள்ளது. இருப்பினும் வனவிலங்குகள் கிராம பகுதியில் நுழைந்து வாழைகள், கிழங... |
தமிழகம் | தேசிய நெடுஞ்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது சொகுசு கார் | இரணியல்,: பார்வதிபுரம் பாலம் அருகே திடீரென சொகுசு கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து ஒரு கார் திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த நிலையில் கார் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில... |
தமிழகம் | கன்னியாகுமியில் உலக பெருங்கடல்கள் தினவிழா | கன்னியாகுமரி: உலகப் பெருங்கடல் தினவிழா கன்னியாகுமரியில் நேற்று நடந்தது. இதையொட்டி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி மற்றும் கருத்தரங்கு நடந்தது.கடல்களையும், கடல்சார் உயிரினங்களையும் பாதுகாப்பது பற்றிய விழப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஐ.நா., சபையால் சர்வதேச பெருங்கடல் தினம் நேற்று உலகமெங்கும் நடந்தது. கன்னியாகுமரி... |
தமிழகம் | முக்கடல் சங்கமம் கடற்கரையில் சீறி எழும் அலைகள் கரையில் நின்று ரசிக்கும் சுற்றுலா பயணிகள் | கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் வீசிய சூறாவளி காற்றில் ஐந்திற்கும் மேற்பட்ட விசைபடகுகள் சேதமடைந்தது.கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கத்திற்கும் மாறாக கடந்த இருதினங்களாக சூறாவளி காற்று வீசி வருகிறது. காற்றினால் ஏராளமான மரங்கள் முறிந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல கிராமங்களில் மின் கம்பங்கள் சரிந்து மின்தடை ஏற்பட்ட... |
தமிழகம் | குற்றாலத்தில் சீசன்:அருவிகளில் தண்ணீர் | திருநெல்வேலி : கேரளாவில் ஆண்டுதோறும் பெய்யும் தென்மேற்கு பருவமழையால், ஜூனில் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டும். ஆனால், இந்த ஆண்டு இன்னமும் சீசன் முழுமையாக துவங்கவில்லை. இந்நிலையில், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் நேற்று காலை, குற்றாலம் மெயின் அருவியிலும், ஐந்தருவியில் இரண்டு கிளைகளிலும் தண்ணீர் சிறிதளவு... |
தமிழகம் | சுற்றுலா பஸ்சில் ரேஷன் அரிசி கடத்தல் : இருவர் கைது | கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் சுற்றுலா வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலத்தில் இருந்து நேற்று மதியம் சுற்றுலா பஸ் ஒன்று கன்னியாகுமரி வந்தது. கன்னியாகுமரியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கும் கும்பல் சுற்றுலா பயணிகளை அணுகி 225 கிலோ ரேஷன் அரிசி இருப்பதாகவும், தேவைப்பட்டால் வாங... |
தமிழகம் | பழநி உண்டியல் வசூல் : ஒரு கோடியை தாண்டியது | பழநி : பழநி கோயில் உண்டியல் வசூல், 1 கோடி ரூபாயை தாண்டியது. பழநி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைகோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. ரொக்கம் 1 கோடி ரூபாயை தாண்டியது. தங்கத்தால் ஆன வேல், காவடி, செயின், திருமாங்கல்யம், மோதிரம், வளையல், மயில், முருகனின் உருவம், வெள்ளியால் ஆன வேல், பாதம், காவடி, பாம்பு, மணி, ஊ... |
தமிழகம் | ராஜபக்ஷே வருகையை கண்டித்து ம.தி.மு.க., வினர் சாலை மறியல் : 51 பேர் கைது | நாகர்கோவில்: ராஜபக்ஷேவின் இந்தியா வருகையை கண்டித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ம.தி.மு.க.வினர் கறுப்புக்கொடி ஏந்தி சாலைமறியல் செய்தனர். இதில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த 51 பேர் கைது செய்யப்பட்டனர்.இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வருவதை கண்டித்து தமிழகம் முழுவதும் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம... |
தமிழகம் | திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மரக்கன்று | தூத்துக்குடி : தூத்துக்குடி புதுகிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது இல்ல திருமண விழா கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. மணமக்கள் செல்வநாயகம்- ஆர்த்தி சண்முகி ஆகியோர், திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு மா, பலா, கொய்யா, தென்னங்கன்று உள்ளிட்ட பல மரக்கன்றுகளை, தாம்பூல பைகளில் போட்டு வழங்கினர். அவற்றை தங்கள் வீடுகள... |
தமிழகம் | மார்த்தாண்டத்தில் சத்தீஸ்கர் இளைஞர்கள் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையால் பரபரப்பு | மார்த்தாண்டம்: சம்பளம் பெற்று தர கோரி சத்தீஸ்கர் மாநில இளைஞர்கள் மார்த்தாண்டம் போலீஸ் ஸ்டேஷனில் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக தொழிலாளர்கள் தட்டுபாடு உள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து ஊழியர்களை அழைத்து வந்து தொழிலாளர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்ந... |
தமிழகம் | விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை | தூத்துக்குடி : தூத்துக்குடி இனிகோ நகரில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், 100 மீனவ குடிசைகள் சாம்பலாயின. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உடல் கருகி பலியாயினர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்குச் செல்லவில்லை. அதனால், 230 விசைப்படகுகள் மீன்பிடிதுறை... |
தமிழகம் | பிளாஸ்டிக் கவரில் ஆவின் பால் : மாவட்ட நிர்வாகம் மீது அதிருப்தி | ழமார்த்தாண்டம்: அரசு சார்பில் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் ஆவின் பால் பிளாஸ்டிக் கவரில் வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் ஏன் மாற்று நடவடிக்கை எடுக்கவில்லை என்று வியாபாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் கவர்கள் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. தோட்டங்களில் பராமரிப்பு பணி... |
தமிழகம் | சூறைகாற்றால் வாழை மரங்கள் முறிந்து நாசம் குளச்சல் அருகே விவசாயிகள் சோகம் | குளச்சல்: குளச்சல் அருகே சூறைகாற்று வீசியதில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்தனர்.கடந்த சில மாதங்களாக கடும் வெயிலால் அவதியுற்ற குமரி மாவட்ட மக்களுக்கு சில வாரங்களாக பெய்த சாரல் மழை மகிழ்ச்சியை தந்தது.குமரியில் கடந்த சில நாட்களாக பலத்த சூறை காற்று வீசி வருகிறது. இதனால் ஆங்காங்க... |
தமிழகம் | தமிழக அரசை எதிர்த்து போராட்டம்: பா.ம.க., தீர்மானம் | சென்னை:வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் வைப்பதை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இருக்கிறதா, இல்லையா என்பது அந்த கட்சிகளுக்கே தெரியாத நிலையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டம், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... |
தமிழகம் | சர்வதேச பெருங்கடல் தினம் : குமரியில் மாணவர்கள் பேரணி | நாகர்கோவில் : சர்வதேச பெருங்கடல் தினத்தை ஒட்டி, கன்னியாகுமரியில் மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கடல்களையும், கடல்சார் உயிரினங்களையும் பாதுகாப்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஜூன் 8ம் தேதியை சர்வதேச பெருங்கடல் தினமாக ஐ.நா., அறிவித்தது. 2008ம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்பட்டு வர... |
தமிழகம் | நின்றுபோன ரயில்வே மேம்பால பணி : சீர்காழியில் மீண்டும் துவங்கியது | மயிலாடுதுறை : சீர்காழி புறவழிச்சாலையின் குறுக்கே அமைக்கப்படும் ரயில்வே மேம்பாலப் பணி கடந்த சில மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்பணி நேற்று மாலை மீண்டும் துவங்கப்பட்டது.
நாகை மாவட்டம் சீர்காழியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க, 2004ம் ஆண்டு, 48 கோடி ரூபாய் மதிப்பில் புறவழிச்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது. அரசூர் ம... |
தமிழகம் | டிரைவிங் ஸ்கூல் பணிகள் பாதிப்பு : கலெக்டர், எம்.எல்.ஏ.,க்களிடம் மனு | திண்டுக்கல் : டிரைவிங் ஸ்கூல் கட்டுப்பாடு பிரச்னையில், ஒன்பது நாட்களாக பணிகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. இதற்கு தீர்வு கோரி, கலெக்டர், எம்.எல்.ஏ.,க்களிடம் மனு கொடுக்க உள்ளதாக, டிரைவிங் ஸ்கூல் சம்மேளன மாநில செய்தி தொடர்பாளர் ராம்குமார் தெரிவித்தார்.
தமிழக "டிரைவிங் ஸ்கூல்' களுக்கு, 2007ல் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்... |
தமிழகம் | சேலம் நகர குடிநீர் வடிகால் வாரிய உதவிபொறியாளர் பணி நீக்கம் | மதுரை : தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சேலம் நகர கோட்ட உதவிபொறியாளர் எஸ். ரவிச்சந்திரன், தொடர்ந்து பணிக்கு வராததால், பணி நீக்கம் செய்யப்பட்டார். கோவை மேற்கு மண்டல தலைமை பொறியாளர் என். ரவிச்சந்திரன் கூறியதாவது: உதவி பொறியாளர் எஸ். ரவிச்சந்திரன், கடந்த 1992, அக். 14 முதல் 1993, ஜன., 1ம் தேதி வரை குடும்ப அலுவல் காரணமாக ... |
தமிழகம் | காதல் திருமணம் செய்த ஜோடி : எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம் | விழுப்புரம் : காதல் திருமணம் செய்த ஜோடி, விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி, தஞ்சம் அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த வி.அலம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகள் சத்யா(22). இவர் டி.டிஎட்., (ஆசிரியர் பயிற்சி) படித்துள்ளார். கடலூர் மாவட்டம், ரெட்டக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செந... |
தமிழகம் | கோவில்பட்டியில் அரசு பஸ் ஜப்தி | கோவில்பட்டி ஃ விபத்து நஷ்டஈடு வழங்காததால் கோவில்பட்டியில் அரசுபஸ் ஜப்தி செய்யப்பட்டது. கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி கிராமத்தை சேர்ந்த ஜோசப் (54) மகள் செல்வராணி (24). இவர்கள் இருவரும் கடந்த 17.02.2006 அன்று திட்டங்குளம் விலக்குரோடு அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தூத்துக்குடியில் இருந... |
தமிழகம் | கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி உண்ணாவிரதம் | கோவில்பட்டி : உயர்நீதி மன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தி கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாவது தூண் அமைப்பின் தலைவர் நேற்று ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தார்.கோவில்பட்டி அனைத்துலக அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டு கழகம் மற்றும் ஐந்தாவது தூண் சார்பில் பல... |
தமிழகம் | பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் : மலைக்கிராம மாணவர்கள் தவிப்பு | வருஷநாடு : பள்ளியில் பணிக்கு வராத ஆசிரியர்களால் மலைக்கிராம மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம், வருஷநாடு பகுதியில் மலை கிராமங்கள் அதிகம் உள்ளன. குமணன்தொழு அருகே உள்ளது தெய்வேந்திரபுரம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 40 பேர் படிக்கின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக இருக்கும் புகழேந்தி தேனி அர... |
தமிழகம் | பணிநிறைவு பாராட்டு விழா | தூத்துக்குடி : வேடநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முதுநிலை எழுத்தாளராக பணியாற்றியுள்ள கருப்பனுக்கு பணிநிறைவு பாராட்டுவிழா சங்க அலுவலக வளாகத்தில் நடந்தது.தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு பாங்க் அனைத்துப் பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். வேடநத்தம் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள்... |
தமிழகம் | தூத்துக்குடிக்கு அட்வான்ஸ் கார்சாகுபடிக்கு தண்ணீர் வழங்கும் நாட்கள் அதிரடி குறைப்பு | தூத்துக்குடி,: தூத்துக்குடி மாவட்டத்தில் அட்வான்ஸ் கார்சாகுபடிக்கு தண்ணீர் வழங்கும் நாட்கள் 44 குறைக்கப்பட்டுள்ளதால் பயிர்களை காப்பாற்ற முடியாத சூழ்நிலை உருவாகும். இதனால் இம் மாவட்டத்தில் அடியோடு விவசாயம் பாதிக்கப்படும் என்று கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பா... |
தமிழகம் | தமிழக மீனவர்களை தாக்கி மீன்கள் பறிப்பு : இலங்கை கடற்படையினர் அட்டகாசம் | ராமேஸ்வரம் : தமிழக மீனவர்களை நடுக்கடலில், இலங்கை கடற்படையினர் தாக்கி மீன்களை பறித்து சென்றுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம், 694 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அன்று இரவு வழக்கம் போல், இலங்கை கடல் பகுதிக்குள் மீனவர்கள் செல்ல முயன்றபோது,ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், படகுகளை தடுத்து திருப்பி அன... |
தமிழகம் | கருங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் காம்பவுண்ட் சுவர் கட்டினால் ஐ.எஸ்.ஓ., தரச்சான்று | செய்துங்கநல்லூர்: கருங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் காம்பவுண்டு சுவர் இல்லாததால் ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற கால தாமதமாகிறது என அதிகாரி தெரிவித்துள்ளார்.ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற தனியார் நிறுவனங்கள் முயற்சி செய்து வருவது போல் அரசு நிறுவனங்களும் முயற்சி செய்து வருகிறது. இதற்காக அக்மைசின் என்ற தனியார் நிறுவனம் தமிழகத்திலுள்ள 48 ஆ... |
தமிழகம் | கம்ப்யூட்டர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா | தூத்துக்குடி : தூத்துக்குடி சி.எஸ்.சி.கல்வி மையத்தின் சார்பில், கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.விழாவில் மையத்தின் நிர்வாகிகள் தனபாலன், சிவராம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு மற்றும் பயிற்சி சான்றிதழ்களை வழங்கினர். சிவராம் பேசுகையி... |
தமிழகம் | மாணவர்களை விரட்டிய சிறுத்தை : வால்பாறை அருகே பரபரப்பு | வால்பாறை : பள்ளி மாணவர்களை சிறுத்தை விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை அருகே சோலையார் முதல் பிரிவிலுள்ள அரசு உதவி பெறும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 60 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் போதிய கழிப்பிட வசதி இல்லாததால் பள்ளியை சுற்றியுள்ள தேயிலைத் தோட்டத்தை திறந்தவெள... |
தமிழகம் | குடிநீர் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | தூத்துக்குடி : ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தினர்.நீதிமன்றம் மற்றும் தொழிலாளர் துறை தீர்ப்பின்படி ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், குடிநீர் வடிகால் வாரியத்தில் பல்வேறு பதவிகள... |
தமிழகம் | தபால் அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை | திண்டுக்கல் : திண்டுக்கலில் தபால் அலுவலகத்தில், நூறு ரூபாயில் கலர் ஜெராக்ஸ் எடுத்த தாள்களை கொடுத்து மோசடியில் ஈடுபட முயன்ற பெண்ணிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.
திண்டுக்கல் நாகல் நகர் ஒத்தக்கண் பாலத்தைச் சேர்ந்தவர் கலா(46). இவர், நாகல் நகர் தபால் அலுவலகத்தில், 17 நூறு ரூபாய் நோட்டுகளின் கலர் ஜெராக்ஸ் எ... |
தமிழகம் | ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் | தூத்துக்குடி: தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் மயில் தலைமையில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் ரகுநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சத்யபாமா வரவேற்றார். கூட்டத்தில், கல்வி விழிப்புணர்வு ... |
தமிழகம் | கலியாவூர்-சீவலப்பேரி ரோட்டை சீரமைக்க வேண்டும் | செய்துங்கநல்லூர்,: கலியாவூர்-சீவலப்பேரி இணைப்பு ரோட்டை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கருங்குளம் யூனியனைச் சேர்ந்தது கலியாவூர் கிராமம். இக்கிராம மக்கள் பெரும்பாலானோர் நெல் லை மாநகரை நம்பியே உள்ளனர். நெல் லை- பாளை.,பகுதிகளில் கடையில் வேலை செய்வது, சிறு வியாபாரம் செய்வது உள்ளிட்ட கூலி வேலை செய்பவர்... |
தமிழகம் | அரசு ஆஸ்பத்திரியில் ஸ்டிரைக்கில் ஈடுபட பயிற்சி டாக்டர்கள் முடிவு | தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கட்டட பணிகளுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதால் நோயாளிகளும், பயிற்சி டாக்டர்களும் கடந்த சில நாட்களாக தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு உடனடி தீர்வு காணப்படாவிட்டால் ஸ்டிரைக்கில் ஈடுபட பயிற்சி டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.தூத்துக்குடி அரசு மர... |
தமிழகம் | தூத்துக்குடி மார்க்கெட்டில் மல்லிகை, கனகாம்பரம் விலை சரிவு | தூத்துக்குடி,: தூத்துக்குடியில் மார்கெட்டில் கடந்த வாரத்தை விட பூ விலை அப்படியே பாதியாக சரிந்தது. விலை இல்லாததால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பொதுவாக திருமண சீசன், கோயில் கொடை விழா சீசன்களில் தான் பூ விலை உச்சத்திற்கு போகும். கடந்த வாரம் தூத்துக்குடி பூ மார்கெட்டில் பூ விலை கடுமையாக இருந்தது. தற்போது அந்த பூக... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுக்கும் ஆசிரியர்களை பள்ளியில் விடுவிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் | தூத்துக்குடி,: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கும் நேரத்தை கூடுதலாக்க வேண்டும் என்று கணக்கெடுப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 4 ஆயிரத்திற்கும் மே... |
தமிழகம் | இலங்கை அதிபர் வருகைக்கு எதிர்ப்பு : தூத்துக்குடியில் கருப்புகொடி போராட்டம் | தூத்துக்குடி : தூத்துக்குடியில் இலங்கை அதிபர் இந்தியா வருகைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த கருப்புகொடி போ ராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக, கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்த 71 பேரை போலீசார் கைது செய்தனர்.இலங்கை அதிபர் ராஜபக்ஷே நேற்று இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மதிமுக சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்... |
தமிழகம் | கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து: நான்கு பேர் பலி | நாகப்பட்டினம் : நாகை அருகே, கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று நடந்த விபத்தில், பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த, ஒரே கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் மூன்று பேர் இறந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நாகையில் இருந்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, உப்பலங்காடு பகுதிக்க... |
தமிழகம் | போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை: 5 பேருக்கு வலை | தேனி : போலி ஆவணம் தயாரித்து, நிலம் விற்பனை செய்து 8 லட்சம் ரூபாய் மொசடியில் ஈடுபட்டதாக, ஐந்து பேரை போலீசார் தேடிவருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த ரீச் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாகி ஜேக்கப், தேனி அருகே கோட்டூரில் குழந்தைகள் பள்ளி நடத்தி வருகிறார். இந்த பள்ளி கட்டடம் 1989 ல் கட்டப்பட்டது. இங்கு ஆம்புரோஸ், தேவபிரகாசம்... |
தமிழகம் | தமிழகம் முழுவதும் ஒன்றே முக்கால் லட்சம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு இலவச சீருடை | தூத்துக்குடி : தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக ஒரு லட்சத்து 75 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு இலவச சீருடை வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 390 பேருக்கு இன்று புளு மற்றும் தேன் கலரில் சேலைகள் வழங்கப்படுகிறது.தமிழகத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாள... |
தமிழகம் | சிபிஐ., சார்பில் கண்டன பொதுக்கூட்டம் | தூத்துக்குடி : விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஐ., சார்பில் தூத்துக்குடியில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாளமுத்துநகர் கிளைக்கழகம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. பொதுகூட்டத்திற்கு பலவேசம் தலைமை வகித்தார். கிளை பொ ருளாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். கட்சியின... |
தமிழகம் | மாணவர்களை விரட்டிய சிறுத்தை : வால்பாறை அருகே பரபரப்பு | வால்பாறை : கோவை மாவட்டம், வால்பாறை அருகே சோலையார் முதல் பிரிவிலுள்ள அரசு உதவி பெறும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 60 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாணவர்கள் தேயிலைத் தோட்டத்திற்கு சென்றபோது, பதுங்கியிருந்த சிறுத்தை விரட்டியுள்ளது. பள்ளித் தலைமை ஆசிரியர் கென்னடி, இதுபற்றி வனத்துறை அதிகாரிகளுக... |
தமிழகம் | கார் மீது வேன் மோதல் : 14 பேர் காயம் | காஞ்சிபுரம்: கார் மீது மோதிய வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 14 பேர் பலத்த காயமடைந்தனர். காஞ்சிபுரத்திலிருந்து தனியார் கம்பெனி ஊழியர்களை ஏற்றி வந்த வேன் நேற்று பகல் 2.30 மணிக்கு பொன்னேரிக்கரை அருகே சென்றது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிரே வந்த மாருதி சிவிப்ட் கார் மீது மோதி, சாலை விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்ட பள்ள... |
தமிழகம் | மேட்டூர் அணைக்கு 8,000 கனஅடியாக நீர்வரத்து உயர்வு | மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பருவமழை காரணமாக மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று மாலை விநாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரித்தது.மேட்டூர் அணை நீர்மட்டம் ஜூன் 4ம் தேதி 76.700 அடியாகவும், நீர் இருப்பு 38.747 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. நான்கு நாட்களாக தமிழக எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவ... |
தமிழகம் | லோடு வேன் தீப்பிடித்து எரிந்ததால் ஏர்போர்ட்டில் பரபரப்பு | திரிசூலம்: ஏர் மொரிஷியஸ் விமானத்தில் சரக்குகளை இறக்குவதற்காக விமான ஓடுபாதைக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், சென்னை விமான நிலையத்தில், நேற்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொரிஷியசிலிருந்து தினமும் காலை... |
தமிழகம் | திருச்செந்தூர் செல்லும் பஸ்களை இடம் மாற்றினால் மதிமுக பஸ்மறியல் போராட்டம் நடத்த முடிவு | தூத்துக்குடி : திருச்செந்தூர் செல்லும் பஸ்களை இடமாற்றம் செய்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து தற்போது திருச்செந்தூர் செல்லும் பஸ்கள் சென்று வருகிறது. இடநெருக்கடி உள்ளிட்ட பிரச்னை காரணமாக புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் 11ம் ... |
தமிழகம் | கோவில்பட்டியில் தேவர் மண்டபம் அவமதிப்பு : திடீர் சாலை மறியல் | கோவில்பட்டி : - கோவில்பட்டியில் தேவர் சமுதாயத்திற்கு சொந்தமான மண்டப கட்டடத்தில் அவமரியாதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திடீர் சாலை மறியல் நடந்தது.கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் தேவர் சமுதாய மண்டபமும், படிப்பகமும் உள்ளது. இந்த மண்டப சுவரில் விஷமிகள் சிலர் மனித கழிவுகளை வீசி அவமரியாதை செய்ததாக கூறப்படுகிறது.... |
தமிழகம் | தூத்துக்குடியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களுக்கு வீடு: கலெக்டர் | தூத்துக்குடி : தூத்துக்குடி இனிகோ நகரில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீவிபத்தில் ஒரே குடும்பதூத்துக்குடி கடற்கரை சாலையில் ரோச் பூங்கா அருகே உள்ள இனிகோநகரில் 90 குடிசைகளில் மீனவ குடும்பங்கள் வசித்து வந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த குடிசைகளில் தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்து நடந்தவுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் து... |
தமிழகம் | இளம்பெண் தற்கொலை | திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருகே ஆசிட் குடித்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவதுதிருச்செந்தூர் அருகே உள்ள வள்ளிவிளை ஆசாரித் தெருவைச் சேர்ந்தவர் அரிராமகிருஷ்ணன் மகள் பார்வதிமுத்து(26). பார்வதிமுத்து தனது சகோதரனிடம் தனக்கு வி மாடல் செயின் செய்து தருமாறு கேட்டிருந்தார். ஆனால் ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.