category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
ஒரு டன் மாம்பழம் பறிமுதல்
விருதுநகர்: விருதுநகரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், பெரிய கருப்பன் தெருவில் கண்ணன் என்பவரின் குடோனில் ஆய்வு செய்தனர். அங்கு கார்பைடு கற்களால் பழுக்க வைத்திருந்த ஒரு டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
தமிழகம்
குறைந்த கூலி பெண்கள் புகார்
விருதுநகர்: குல்லூர் சந்தை ஊராட்சியில் வேலை உறுதி திட்டத்தில் 30 முதல் 40 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுவதாகவும், பசுமை போர்த்தும் திட்டத்திற்கு மரக்கன்றுகள் நட குழி தோண்டும் பணியிலும் குறைந்த கூலி வழங்கியதாக கூறி 200க்கும் மேற்பட்ட பெண்கள், கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இது குறித்து கலெக்டர்(பொறுப்பு...
தமிழகம்
பச்சப்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சேலம்: சேலம் பச்சப்பட்டி மாரியம்மன் கோவிலில் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். சேலம் பச்சப்பட்டி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்ப ஹோமம் ஜூன்4ல் துவங்கி நடந்து வந்தது. இதில் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலையில் நான்காம் ...
தமிழகம்
காணைகுப்பத்தில் குளம் ஆக்ரமிப்பு அகற்றம்
விழுப்புரம் : விழுப்புரம் அருகே குளத்து புறம்போக்கில் வீடுகள் கட்டி ஆக்ரமிப் புகள் செய்ததை நேற்று அதிகாரிகள் அகற்றினர்.விழுப்புரம் அடுத்த காணைகுப்பம் குளம் புறம்போக்கு இடத்தை ஆக்ரமித்து அதே பகுதியைச் சேர்ந்த கண்ணகி, கோவிந்தன், நந்தன், தங்கராஜ் உள்ளிட்ட  ஒன்பது குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வந்தனர். பலமுறை அதிகாரிகள...
தமிழகம்
திருக்கோவிலூரில் ஜமாபந்தி கலெக்டர் பழனிசாமி பங்கேற்பு
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நேற்று ஜமாபந்தி துவங்கியது.திருக்கோவிலூர் தாலுகாவிற்கான  ஜமாபந்தி முகாம் நேற்று காலை துவங்கியது. தாசில்தார் பாமா வரவேற்றார். கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.சித்தலிங்கமடம், வடக்கு நெமிலி, அத்தண்டமருதூ...
தமிழகம்
வீடு புகுந்து 2.50 லட்சம் பணம் கொள்ளை வாடகைக்கு விட்ட வீட்டில் 34 பவுன் நகை கண்டுபிடிப்பு
சேலம்: சேலத்தில் வீடு புகுந்து பீரோவில் இருந்த 2.5 லட்சம் ரூபாய், 34 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. வாடகைக்கு விட்ட வீட்டில் தங்க நகை மட்டும் கிடைத்ததால், அதில் குடியிருந்த வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர். சேலம் சூரமங்கலம் திருவாகவுண்டனூர் பை-பாஸ் ரோடு அம்மாசி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயசந்திரன். இவர் மேட்டூர் ...
தமிழகம்
உருக்காலையில் சுற்று சூழல் தினம் கடைப்பிடிப்பு
சேலம்: சேலம் உருக்காலையில் உலக சுற்று சூழல் தினம் கொண்டாடப்பட்டது.இத்தினத்தை முன்னிட்டு ஆலை அலுவலக வளாகத்தில் உருக்காலை நிர்வாக இயக்குனர் பங்கஜ் கவுதம் சுற்று சூழல் தினம் கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது: இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சுற்று சூழல் திட்டம் 2010 ம் ஆண்டுக்கு "பல்வேறு உயிரினங்கள், ஒரு பூமி, ஒரு எதிர்காலம் என்ற ...
தமிழகம்
மகளிர் பள்ளி கூடுதல் கட்டடப் பணி: அமைச்சர் பொன்முடி ஆய்வு
விழுப்புரம் : விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  4.61 கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் கட்டட பணியை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டார். விழுப்புரம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் இட நெருக்கடியை போக்க 4.61 கோடி ரூபாய் செலவில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் 84 வகுப்பறைகள் கொண்ட இரு கட்டடங்கள் அமைக்கப்படுகிறது. பள்...
தமிழகம்
பெண் கற்பழிப்பு ஆசாமிக்கு வலை
சங்ககிரி: சங்ககிரியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழித்தவரை போலீஸார் தேடிவருகின்றனர்.தேவூர் அருகே உள்ள புள்ளாங்கவுண்டன்பட்டி சியாங்காட்டை சேர்ந்த செங்கோடன் மனைவி அம்மாசி(45). கணவனை பிரிந்த அம்மாசி அண்ணனுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தேவூர் கொடாரம்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி(50) என்பவர் வீட்டில் தனியாக இ...
தமிழகம்
தீவிபத்தில் பாதித்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே தீவிபத்தில் பாதித்த குடும்பங்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார்.உளுந்தூர்பேட்டை அடுத்த பள்ளியந்தாங்கல் கிராமத்தில் நேற்று முன் தினம் இரவு ஏற்பட்ட தீவிபத்தில் 9 வீடுகள் சாம்பலாகின. திருநாவலூர்  எம்.எல்.ஏ., குமரகுரு தனது சொந்த செலவில்  பாதித்த 9 குடும்பங்களுக் கும் தலா 1...
தமிழகம்
ஆட்டோ கவிழ்ந்து 4 மாணவர்கள் காயம்
அருப்புக்கோட்டை இ.பி. காலனியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் மதன்குமார் (15) மற்றும் தினேஷ்மூர்த்தி (13), அபிஷேக் (12), அரவிந்தராஜ்(12) ஆகியோர் அங்குள்ள தனியார் பள்ளியில் படிக்கின்றனர். இவர்கள் நேற்று காலை 8.45 மணியளவில் ஆட்டோவில் பள்ளிக்குச் சென்றனர். மதுரை ரோட்டில் உள்ள மேம்பாலத்தில் ஆட்டோ சென்ற போது எதிரே வந்த வாக...
தமிழகம்
மனைவி கொலை: கணவன் கைது
வத்திராயிருப்பு: கான்சாபுரம் ஆர்.சி. தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி செபஸ்தியான்(40). மனைவி மோட்சியம் (35) நடத்தையில் இவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. நேற்றுகாலை மோட்சியத்தை விறகு பொறுக்க அத்திகோயில் மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்ற செபஸ்தியான், அங்குள்ள ஒரு தோப்பின் மறைவு பகுதிக்கு...
தமிழகம்
திரைப்பட தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் :  சென்னை தரமணியில் உள்ள அரசு திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறுவனத்தில் பட்டய படிப்பில் சேர விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து கலெக்டர் (பொறுப்பு) வெங்கடாஜலம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை கட்டுப்பாட்டில் சென்னை தரமணியில் உள்ள அரசு திரைப்படம் ...
தமிழகம்
குறைதீர் கூட்டம் நடத்தக்கோரி அரவாணிகள் கலெக்டரிடம் மனு
சேலம்: இலவச வீட்டு மனைப்பட்டா, குறைதீர் கூட்டம் நடத்தக்கோரி அரவாணிகள் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். சேலம் மாநகர பகுதியில் குகை, ஐந்து ரோடு, ரெட்டியூர், அஸ்தம்பட்டி, ஓமலூர் உள்ளிட்டப் பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட அரவாணிகள் வசிக்கின்றனர். தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், மாதந்தோறும் குறைதீர் கூட்டம் ...
தமிழகம்
மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 முடித்தவர்கள் வேலைவாய்ப்பிற்கு பதிய வேண்டுகோள்
விழுப்புரம் : தனியார் மற்றும் மெட் ரிக் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர் கள் வேலை வாய்ப்பிற்கு பதிந்து கொள் ளுமாறு வேண்டுகோள் விடுக்கப் பட்டுள் ளது.இது குறித்து சி.இ.ஓ., குப்புசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டு மாணவர்களின்  தனி மதிப்பெண் பட்டியல் 26...
தமிழகம்
மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு புகார்
சேலம்: உதவித்தொகை வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர்கள் மணிகண்டன், மாது, விஜயா, சுசீலா. மாற்றுத்திறனாளிகளான இவர்கள் உதவித்தொகை கேட்டு நான்கு மாதங்களுக்கு முன் மனு அளித்தனர். அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பலமுற...
தமிழகம்
ஊரணியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
விருதுநகர்: குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்த மாயழகு மகன் மோகன்பாபு (9). நான்காவது வகுப்பு படித்தார். இவரும், சமயன் மகன் கணேசபாண்டியனும்(8) அங்குள்ள ஊரணியில்நேற்று மாலையில் குளித்தனர். ஆழமான பகுதியில் சென்ற போது நீரில் மூழ்கி இறந்தனர். தீயணைப்பு படையினர் சிறுவர்களின் உடலை மீட்டனர். ஆமத்தூர் போலீசார் விசாரித்தனர்.
தமிழகம்
மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அங்கவை சங்கவை மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு ஆதிசங்கர் எம்.பி., பரிசுத் தொகை வழங்கினார். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் திருக்கோவிலூர் அங்கவை சங்கவை மகளிர் மேல் நிலைப் பள்ளி மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெற்றது. திருக்கோவிலூர் ஒன்றிய தி.மு.க., சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை ஆதி...
தமிழகம்
கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
உளுந்தூர்பேட்டை : கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.உளுந்தூர்பேட்டை அடுத்த ஏ.குரும்பூர் கிராமத்தை சேர்ந்த இளங்கோ மகன் அறவாழி(20). உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.,யில் படித்து வருகிறார்.  இவர் கடந்த 4ம் தேதி காலை அரசு டவுன் பஸ்சில் படியில் நின்றிருந்த போது காட்டுநெமிலியை சேர்ந்த தேவேந்திரன் ம...
தமிழகம்
ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ்
தலைவாசல்: தலைவாசல் அருகே ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில் நில ஆக்கிரமிப்பில் உள்ள 13 கடைகளை 15 நாட்களுக்குள் காலி செய்யும் படி, இந்து அறநிலையத்துறையும், மின் இணைப்பை துண்டிப்பதாக மின்வாரியமும் நோட்டீஸ் வழங்கியுள்ளன. தலைவாசல் அருகே ஆறகளூரில் பிரசித்தி பெற்ற காமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. அக்கோவிலுக்கு சொந்தமான 64 சென்ட் நிலத்...
தமிழகம்
திருக்கோவிலூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
திருக்கோவிலூர் : திருக்கோவிலூரில் மின் வெட்டினை கண் டித்து வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.திருக்கோவிலூர் உரிமையியல் நீதிமன்றம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத் திற்கு சங்க தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். வக்கீல்கள் செல்வராஜ், லட்சுமிகுமார், ரஜினிகாந்த், சத்தியமூர்த்தி, ரங்கநாதன் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்ட...
தமிழகம்
வருஷாபிஷேகம்
ராஜபாளையம்: ராஜபாளையம் பெரிய சுரைக்காய்ப்பட்டித் தெரு வேணுகான பஜனாலயத்தில் வருஷாபிஷேகம் நடந்தது. ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட் டன. கணபதி ஹோமம், அஷ்டபதி மற்றும் திவ்ய நாம பஜனைகள் நடந்தன. அதன் பின், ராதா கல்யாண மகோத்ஸவமும், ஆஞ்சநேயர் உற்சவமும் நடந்தன. கோலாட்டம், திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள்...
தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, பேனா
விழுப்புரம் : முதல்வர் பிறந்த நாளை முன் னிட்டு மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு வழங்கப் பட்டது.விழுப்புரம் 36வது வட்ட தி.மு.க., சார்பில்  நடந்த விழாவிற்கு கிளை செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாலாஜி, பொருளாளர் கற்பகமூர்த்தி, துணை செயலா ளர் புரு÷ஷாத்தமன் முன் னிலை வகித்தனர். தளபதி நற்பணி மன்ற தலைவர் கவ...
தமிழகம்
பாராட்டு விழா
சிவகாசி: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில்ஆய்வக உதவியாளராகபணியாற்றி நிறைவு பெறும் பி. மனோகரனுக்கு தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.சங்கத்தின் தலைவர் கே. ராஜூ தலைமை வகித்தார். இணைச் செயலாளர் எஸ்.பாலகண்ணன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் ஆர். ஸ்டீபன் ராஜ், மண்டலச் செ...
தமிழகம்
விமானப்படையில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்திய விமானப் படையில் சேர்ந்து பயன் பெறலாம் என  கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து கலெக்டர் (பொறுப்பு) வெங்கடா ஜலம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருமண மாகாத இளைஞர்கள் 1.1.1990 முதல் 28.2.1994ம் தேதிக்குள் பிறந்தவர்கள் ...
தமிழகம்
பூம்புகார் விற்பனை நிலையத்தில் மர அலங்கார பொருள் கண்காட்சி
சேலம்: சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில் பித்தளை மற்றும் மர அலங்கார பரிசு பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று துவங்கியது. சேலம் வள்ளுவர் சிலை அருகில் செயல்பட்டு வரும் தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையத்தில் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக விழாக்கால நிகழ்ச்சிகளாக விநாயகர் சதுர...
தமிழகம்
மோசடி கும்பலிடம் மீட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க முடிவு
விழுப்புரம் : விழுப்புரத்தில் மோசடி கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட வாகனங்கள் உரிமையாளர்களிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது.விழுப்புரத்தைச் சேர்ந்த கார், வேன் உரிமையாளர்களிடமிருந்து கடந்த மார்ச் மாதம் 23 வாகனங்களை திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் அரசு பஸ் டிரைவர் ரவி ஒப்பந்தம் போட்டு எடுத்துச் சென்றார். டிராவல்ஸ் உரிமையாளர் ஜே...
தமிழகம்
வளைகாப்பு
சாத்தூர்: உப்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடந்தது. டாக்டர்கள் மலர்விழி,பிரேமா, ஆனந்தஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகம்
உளுந்தூர்பேட்டையில் நிலக்கரி கண்டுபிடிப்பு
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர் பேட்டை பகுதியில், இந்திய புவியியல் நிறுவனம் நடத் திய ஆய்வில், பழுப்பு நிலக்கரி இருப்பது கண் டுபிடிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட் டம்,   உளுந்தூர் பேட்டை தாலுகாவில் சேந்தமங்கலம், வண் டிப்பாளையம்,  ஆரிநத் தம், கூட்டடி, கூ.கள்ளக் குறிச்சி, செங்குறிச்சி, பாதூர் ஆகிய கிராமங்களில், மூன்று மாதங்...
தமிழகம்
மனைவியை கொடுமைப்படுத்திய கணவன், மாமியாருக்கு 7 ஆண்டு சிறை
சேலம்: மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய, கணவன் மற்றும் மாமியாருக்கு தலா ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த பால்ராஜ் மகள் நாராயணி(28). இவருக்கும் ஈரோடு மூலப்பாளையம் என்.ஜி.ஜி.ஓ., நகர் பகுதியை சேர்ந்த பத்மாவதி(55) மகன் ரகுபதி(36) என்பவருக்கும...
தமிழகம்
திண்டிவனம் அரசு நிதியுதவி முஸ்லிம் பள்ளியில் ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
திண்டிவனம்  : திண்டிவனம் முஸ்லிம் அரசு நிதியுதவி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் முஸ்லிம் அரசு நிதியுதவி நடுநிலைப் பள்ளி செயல் பட்டு வருகிறது. கடந்த 1937ம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பள்ளியில்  1981ம் ஆண்டு நிர்வாக மாற் றத்தின் போத...
தமிழகம்
அரசின் புதிய திட்டங்களை நிறைவேற்ற புதிய அமைப்பு
சேலம்: மத்திய, மாநில அரசின் திட்டங்களை நிறைவேற்ற, சேலம் மாவட்டத்திற்கு புதிய உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுயவேலை வாய்ப்பு திட்டத்தில், இளைஞர்கள் அதிக அளவில் தொழிற்சாலைகள் துவங்க மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, ராஜீவ் காந்தி தொழில் மு...
தமிழகம்
கொலை செய்யப்பட்டவர் யார்? போலீசார் தீவிர விசாரணை
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே காட்டுப்பகுதியில் தலையில் கருங்கல்லை போட்டு கொலை செய் யப்பட்ட நிலையில் இருந்த ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சிக் குட்பட்ட பகுதியில் கார் மாங்குடி காடு உள்ளது. இப்பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலையில் கருங்கல்லை போட்...
தமிழகம்
பொதுக் குழு கூட்டம்
விருதுநகர்: தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் விருதுநகரில் நடந்தது. மாவட்டச் செயலாளர் கே. முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் நாகசாமி வரவேற்றார். மாநில அமைப்புக் குழு தலைவர் ஏ.எஸ். ராஜேந்திரபிரசாத், உறுப்பினர் குலாம் ரபீக், பாலசுப்பிரமணியம், ஏ. கோவிந்தன் உட்...
தமிழகம்
கணவன், மனைவி மர்ம சாவு போலீஸார் தீவிர விசாரணை
சேலம்: சேலம் பள்ளிப்பட்டி பகுதியில் கணவன், மனைவி இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தால் நேற்றிரவு பரபரப்பு ஏற்பட்டது. சேலம் பள்ளிப்பட்டி ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் கோபால்(63), விவசாயியான இவர் மனைவி வெள்ளையம்மாள்(60) உடன் நேற்று மாலை வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றார். இரவு வெகு நேரமாகியும் இர...
தமிழகம்
மரக்கன்றுகள் நடும் விழா
நரிக்குடி: உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சுழி ஸ்டேட் வங்கி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன்னுத்தம்பி, மாவட்ட கவுன்சிலர் போஸ் மரக்கன்றுகளை நட்டனர். வங்கி மேலாளர் அனந்தசயனன், ஊராட்சி தலைவர் பாஸ்கரன், வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியா
நகராட்சி ஊழியர்கள் உண்ணாவிரதம்
புதுச்சேரி : கோரிக்கைகளை வலியுறுத்தி உழவர்கரை முனிசிபல் ஒர்க்கர்ஸ் யூனியன் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டனர்.பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் டி.எஸ். மற்றும் தினக்கூலி, பகுதிநேர ஊழியர்கள் அனைவரையும் ரெகுலர் செய்ய வேண்டும். 6வது ஊதியக்குழு நிலுவைத் தொகை 60 சதவீதத்தை ...
இந்தியா
மின்துறை ஊழியர்கள் மீது தாக்குதல் கண்டித்து திடீர் வேலை நிறுத்தம்
புதுச்சேரி : மின் துறை அலுவலரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் வேலையை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.லாஸ்பேட்டை மின் துறை அலுவலகத்தில் இளைநிலை பொறியாளராக பணியாற்றி வரும் காங்கேயன் என்பவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு பணி முடித்து வீட்டிற்கு செல்லும்போது மர்ம நபர்கள் 3 பேரால் தா...
இந்தியா
சிறையில் கைதிகள் மோதல் இரண்டு அறைகள் மூடல்
காலாப்பட்டு : ஆயுள் தண்டனை கைதி மர்டர் மணிகண்டன் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, காலாப்பட்டு சிறையில் உள்ள 2 அறைகளை சிறை அதிகாரிகள் இழுத்து பூட்டினர்.காலாப்பட்டு சிறையில் ஆயுள் தண்டனை கைதி மர்டர் மணிகண்டனை தாக்கிய தண்டனை கைதிகள் சானிக்குமார், ஜெகன், பாஸ்கர் மீது காலாப்பட்டு போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய் துள்...
தமிழகம்
பயிற்சி சான்று மாற்றி தர கோரும் நர்ஸ் உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு
சேலம்: சேலம் மாவட்ட மகளிர் திட்டம் மூலம், தனியார் கல்லூரியில் நர்ஸ் உதவியாளர் பயிற்சி பெற்றவர்கள், தங்களது சான்றிதழை மாற்றியமைத்து தருமாறு கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்ட மகளிர் திட்டம் மூலம், இளைஞர் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் தொழில்திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. த...
இந்தியா
கார்பைடு கற்களால் பழுத்த மாம்பழங்கள் விற்பனை ஜோர்
காரைக்கால் : காரைக்காலில் கார்பைடு கல்லால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.காரைக்காலில் மாம்பழம் சீசன் தற்போது துவங்கி உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் மாம்பழ விளைச்சல் குறைவு என்பதால், குறைவான அளவிலே மாம்பழங்கள் வரத் துவங்கி உள்ளன. பங்கனப்பள்ளி, செந்தூரா, ஒட்டு, மல்கோவா உள்ளிட்ட பல வ...
தமிழகம்
விஸ்வநத்தம் உயர்நிலைப் பள்ளியில் நெருக்கடி... புதிய கட்டடம் கட்டுவது எப்போது!
சிவகாசி: விஸ்வநத்தம் உயர்நிலைப் பள்ளியில் இடநெருக்கடி உள்ள நிலையில் பழுதடைந்த கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும். விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இக் கல்வி ஆண்டு முதல், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் மூலம், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இப் பள்ளியில் கடந்த ஆண்டில் எட...
இந்தியா
இறகு பந்து போட்டி பரிசளிப்பு
புதுச்சேரி : மாநில ஜூனியர் ரேங்க் இறகு பந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சபாநாயகர் பரிசுகளை வழங்கினார். சாஸ்தா இறகுப்பந்து மன்றம் சார்பில் சாந்தி நகரிலுள்ள குருவாலயா விளையாட்டு அரங்கில் கடந்த 4ம் தேதி முதல் மாநில ஜூனியர் ரேங்கிங் போட்டிகள் துவங்கியது. ஆச்சாரியா, பேட்ரிக், குருவாலயா உட்பட பல்வேறு பயிற்சி மையங்களை...
இந்தியா
நகை அடகு கடைக்காரர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு
புதுச்சேரி : வட்டி சதவீதத்தை உயர்த்தக் கோரி நகை அடகு கடைக்காரர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.புதுச்சேரி பகுதிகளில் உள்ள ஒரு சில நகை அடகு கடைகளில், மீட்கப்படாத நகைகளை பழைய விலைக்கே கேட்டு ஒரு கும்பல் மிரட்டுவதாகவும், நெல்லித்தோப்பு பகுதியிலுள்ள நகை கடைகளில்  நகைகளை தராத கடைக்காரர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப...
தமிழகம்
பழுது நீக்கிய நவீன படகில் ரோந்து பணி துவக்கம்
காரைக்கால் : காரைக்காலில் பழுதடைந்த நவீன ரோந்து படகை ஐதராபாத் எஸ்மேரியா நிறுவன வல்லுனர்கள் சரிசெய்தனர்.காரைக்கால் கடலோரப் பகுதியை கண்காணிப்பதற்காக, கடலோர போலீஸ் நிலையத்திற்கு 1.5 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த ஆண்டு நவீன ரோந்து படகினை மத்திய அரசு வழங்கியது. இதில், கடலின் ஆழத்தை கண்டறியும் எக்கோ சவுண்டு, இடத்தை கண்டறியும் ...
தமிழகம்
நரிக்குடி-திருப்புவனம் இடையே கூடுதல் பஸ் இயக்க வேண்டும்
நரிக்குடி: நரிக்குடியிலிருந்து திருப்புவனத்திற்கு கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும். நரிக்குடி திருப்புவனத்திற்கு இடையே சாலை இலுப்பைகுளம், ஆண்டுகொண்டான், நாலூர், அழகாபுரி, ஏ.முக்குளம், புல்வாய்க்கரை, பிள்ளையார்குளம், எஸ்.நாங்கூர் உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் நரிக்குடி, திருப்புவனம் செல்ல ...
இந்தியா
முன் விரோத தாக்குதல்: நான்கு பேர் காயம்
வில்லியனூர் : வில்லியனூரில் முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில்  4 பேர் காயமடைந்தனர்.ராமநாதபுரம் பகுதியில் வசிப்பவர் சுரேஷ்குமார்(29). இவர், என்.ஆர்.பேரவையில் உள்ளார்.  இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் ஹரி கோஷ்டியினருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் இரு தரப்பின...
இந்தியா
ஊர்க்காவல் படை வீரர்கள் போலீசில் சேர உடற்தகுதி தேர்வு
புதுச்சேரி : ஊர்க்காவல் படை வீரர்களை, போலீஸ் பணியில் சேர்ப்பதற்கான உடற்தகுதி தேர்வு நேற்று நடந்தது.புதுச்சேரி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர்களில் 12 ஆண்டுகள் முடித்தவர்களை போலீசாராக தரம் உயர்த்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,160 ஊர்க்காவல் படை வீரர்கள் போலீசாராக தரம் உயர்த்த முடிவு செய்யப்ப...
இந்தியா
தனியார் பொறியியல் கல்லூரி கல்விக் கட்டணம் நிர்ணயம்
புதுச்சேரி : உயர் கல்விக்கான கட்டண நிர்ணய கூட்டத்தில் இரண்டு தனியார் பொறியியல் கல்லூரிக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உயர் கல்விக்கான  கட்டண நிர்ணய கூட்டம் குழு தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான  சம்பத்குமார் தலைமையில் நேற்று கல்வித் துறை வளாகத்தில் நடந்தது. உயர்கல்வித் துறை சார்பு செயலர் தாமோதரன், சுகாதாரத்...
தமிழகம்
சிரத்தையுடன் மரம் வளர்ப்போருக்கு தங்க நாணயம் பரிசு முன்னோடி திட்டத்தை முன்வைத்த கான்சாபுரம் கிராமம்
வத்திராயிருப்பு: உலக வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகள் கடும் முயற்சி எடுத்துவரும் நிலையில் அவற்றை செயல்படுத்த முன்னோடி திட்டத்தை வகுத்துக்கொடுத்து அதை தானும் செயல்படுத்தி வருகிறது கான்சாபுரம் கிராமம். சிறந்த முறையில் மரம் வளர்ப்பவர்களுக்கு தங்க நாணயம் பரிசு வழங்க ஊராட்சி முடிவு செய்துள்ளது. வத்திராயிருப்பு யூனியனை சேர்ந்...
இந்தியா
பி.ஆர்.டி.சி., சொகுசு பஸ்சில் கவர்னர் இக்பால் சிங் பயணம்
புதுச்சேரி : பி.ஆர்.டி.சி., சொகுசு பஸ்சில் கவர்னர் இக்பால் சிங் பயணம் செய்தார்.புதுச்சேரி அரசு நிறுவனமான புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் (பி.ஆர்.டி.சி.,) சார்பில் 20 புதிய சொகுசு பஸ்கள் நேற்று இயக்கி வைக்கப் பட்டன. ஏ.எப்.டி., மைதானத்தில் நடந்த விழாவில் பி.ஆர்.டி.சி., சேர்மன்  மாரிமுத்து எம்.எல்.ஏ., வரவேற்றார். அமை...
தமிழகம்
பச்சப்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சேலம்: சேலம் பச்சப்பட்டி மாரியம்மன் கோவிலில் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். சேலம் பச்சப்பட்டி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்ப ஹோமம் ஜூன்4ல் துவங்கி நடந்து வந்தது. இதில் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலையில் நான்காம் ...
இந்தியா
குழப்பம்! அரசு ஒதுக்கீடு விபரம் தெரியாததால்... விரைவில் அறிவிக்க நடவடிக்கை தேவை
தனியார் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள் குறித்த விபரங்கள் அறிவிக்கப்படாததால் மாணவ மாணவிகள் குழப்பத்தில் உள்ளனர். புதுச்சேரியில் மாநிலத்தில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளும், 9  தனியார் பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. இந்த கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டிற்கு 50 சதவீத இடங்களை வழங்க வேண்டும் என...
தமிழகம்
பயணியர் நிழற்குடையில் போக்குவரத்து கழக அலுவலகம்: பயணிகளுக்கு இடையூறு
காரியாபட்டி: நிழற்குடையில் போக்குவரத்து கழக அலுவலகம் செயல்படுவதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் போதிய அடிப்படை வசதிகள் இன்றி, பயணிகள் நிற்கக் கூட இடம் இல்லாமல் இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு இங்குள்ள பழைய கடைகளை இடித்துவிட்டு அந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இங்கு வரக்கூடிய ...
தமிழகம்
சேலத்தில் மஞ்சள் நிற குடிநீர் விநியோகம் கழிவு நீர் கலந்து வருவதாக மக்கள் குற்றச்சாட்டு பொறுத்துக் கொ
சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் மஞ்சள் நிறத்திலும், ஒருவித துர்நாற்றத்துடனும் வருகிறது. குழந்தைகள், முதியோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். சேலம் மாநகராட்சிப் பகுதியில் 10 லட்சத்துக்கும்...
இந்தியா
பட்டப்பகலில் சிறுமி கடத்தல் பைக்கில் வந்த வாலிபர்களுக்கு வலை
புதுச்சேரி : லாஸ்பேட்டையில், பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்து சிறுமியை கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளை  கடத்தி விற்பனை செய்யும் கும் பலை, தமிழக போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். கடத்தல் தொடர்பாக புதுச் சேரியை சேர்ந்த லலிதா என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டார். கு...
தமிழகம்
சேலத்தில் ஆட்டோ எண்ணிக்கை நாளுக்கு நாள்...அதிகரிப்பு: பர்மிட் கேட்டு 1,800 விண்ணப்பங்கள் வருகை
சேலம்: சேலத்தில் மேலும் 1, 800க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு பர்மிட் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் சேலம் மக்கள், ஆட்டோக்களின் அதிகரிப்பால், போக்குவரத்தில் பெரும் சிக்கலை சந்திக்க போவது உறுதியாகியுள்ளது. சேலத்தில் 4, 700 ஆட்டோக்களுக்கு ஏற்கனவே பர்மிட் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரு...
தமிழகம்
தண்ணீரா! மூச்..!
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்த வளர்ச்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் செயல்படவில்லை. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது என கூறத்துவங்கினர். அதற்கு அமைச்சர், "தண்ணீர் பிரச்னை எங்கு தான் இல்லை. தீர்வு மழை மட்டும் த...
தமிழகம்
தமிழகத்தில் நர்ஸ் பயிற்சி கல்லூரி மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் துவக்கம்
சேலம்: தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நடப்பு 2010 - 2011ம் ஆண்டுக்கான நர்ஸ் பயிற்சி கல்லூரி மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் நேற்று துவங்கியது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உட்பட 21 மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் செயல்பட்டு வரும் நர்ஸ் பயிற்சி கல்லூரி பட்டயப் படிப்புக்கு 201...
தமிழகம்
பணியாளர்கள் பற்றாக்குறையால் தவிப்பில் மாற்றுத்திறனாளிகள் துறை
விருதுநகர்: முதல்வர் கருணாநிதி பொறுப்பில் உள்ள மாற்றுத்திறனாளிகள் துறை, பணியாளர்கள் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. மாவட்டம் தோறும் சமூக நலத்துறை பொறுப்பில் இயங்கி வந்த ஊனமுற்றோர் நலத்துறை முதல்வர் கருணாநிதி பொறுப்பில் உள்ளது. இத்துறை "மாற்று திறனாளிகள் துறை' என பெயர் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. ஊனமுற்றோருக்கு நலத்த...
தமிழகம்
வீடு புகுந்து ரூ.2.50 லட்சம் கொள்ளை
சேலம்: சேலத்தில் வீடு புகுந்து பீரோவில் இருந்த 2.5 லட்சம் ரூபாய், 34 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. சேலம் சூரமங்கலம் திருவாகவுண்டனூர் பை-பாஸ் ரோடு அம்மாசி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயசந்திரன். இவர் மேட்டூர் கெம்பிளாஸ்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மனைவி வசந்தாவுடன் மேட்டூரில் ஜெயசந்திரன் வசித்து வருகிறா...
தமிழகம்
அரசு கையகப்படுத்திய நிலத்தை வழங்க கோரி கண்மாயில் குடிபுகுந்து போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., அருகே அரசு கையகப்படுத்திய நிலத்தை மீண்டும் வழங்க கோரி, அத்திக்குளம் கிராமத்தினர் கண்மாயில் குடிபுகுந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்திக்குளத்தில் பத்திரகாளியம்மன் கோயில் அருகே உள்ள ஊரணி, நிலம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த இரு பிரிவினரிடையே சில ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. இந்நிலையில் அந்த...
தமிழகம்
இன்ஜினியரிங்க்கு தடையாக குடும்ப வறுமை... நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள மாணவி !
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி.,யில் அதிக மார்க் எடுத்த மாணவி படிக்க வசதியில்லாததால் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஊரணிபட்டி தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் தபால்துறையில் தினக்கூலி அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் குருலட்சுமி. பிளஸ் 2 தேர்வில் தமிழ் 182, ஆங்கிலம் 160, இயற்பியல் 173, வேதியியல் 193, கம்...
தமிழகம்
சுந்தன மர வேரை வெட்டி கடத்திய வாலிபர் கைது
ஆத்தூர்: ஆத்தூர் அருகே கல்வராயன்மலை பகுதியில் 15 கிலோ சந்தன மர வேர் வெட்டி கடத்திய நபர் கைது செய்யப்பட்டார். சேலம் ஆத்தூர் கல்வராயன் மலை பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏராளமான சந்தன மரங்கள் இருந்தன. அந்த மரங்களை கடத்தல் கும்பலை சேர்ந்த நபர்கள் வெட்டி கடத்தி விட்டனர். தற்போது குறைந்தளவில் மட்டுமே சந்தன மரம் இருப...
தமிழகம்
கணவன் மாயம் மனைவி புகார்
சேலம்: சேலத்தில் காணாமல் போன கணவனை கண்டு பிடித்து கொடுக்கும்படி மனைவி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(27). இவர் நகை கடை நடத்தி வந்தார். மேலும், ரியல் எஸ்டேட் தொழிலும் பார்த்து வந்தார். தொழில் விஷயமாக கடந்த 5ம் தேதி சரவணன் வீட்டை விட்டு வெளிய...
தமிழகம்
கோவில் திருவிழா தொடர்பாக மோதல்: 14 பேர் மீது வழக்கு
ஓமலூர்: ஓமலூர் அருகே கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக மோதிக்கொண்ட 14 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் காலனியில் பச்சாயிஅம்மன் கோவில் உள்ளது. பொட்டியபுரம் காலனி, காமலாபுரம் ஏர்போர்ட் காலனி பகுதியைச் சேர்ந்த ஒரு சில குடும்பத்தாருக்கும் இந்த கோவில் பொதுவாக பாத்தியப்பட்ட...
தமிழகம்
காற்றாலை மின் உற்பத்தி திருப்தி 1,000 மெகாவாட்டாக குறைந்தது தமிழக மின் பற்றாக்குறை
மேட்டூர்: இரு நாட்களாக காற்றாலை மின் உற்பத்தி திருப்தியாக இருந்த போதிலும், 1,000 மெகாவாட் மின் பற்றாக்குறை இருப்பதால் நேற்று கிராமங்களில் மட்டும் 2 மணி நேரம் மின்தடை செய்யப்பட்டது.தமிழகத்தில் மே மாத இறுதியில் காற்றாலை மின் உற்பத்தி 2,200 மெகாவாட் ஆக இருந்த நிலையில் காற்றின் வேகம் குறைந்ததால் ஜூன் 1ம் தேதி காற்றாலை மின்...
இந்தியா
பழுது நீக்கிய நவீன படகில் ரோந்து பணி துவக்கம்
காரைக்கால் : காரைக்காலில் பழுதடைந்த நவீன ரோந்து படகை ஐதராபாத் எஸ்மேரியா நிறுவன வல்லுனர்கள் சரிசெய்தனர்.காரைக்கால் கடலோரப் பகுதியை கண்காணிப்பதற்காக, கடலோர போலீஸ் நிலையத்திற்கு 1.5 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த ஆண்டு நவீன ரோந்து படகினை மத்திய அரசு வழங்கியது. இதில், கடலின் ஆழத்தை கண்டறியும் எக்கோ சவுண்டு, இடத்தை கண்டறியும் ...
தமிழகம்
இறந்தவர்கள் பெயரில் ரூ.43 லட்சம் மோசடி: நாகர்கோவில் கருவூல பெண் அலுவலர் கைது
நாகர்கோவில்: இறந்த அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு கிடைக்க வேண்டிய பணம் 43 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக, நாகர்கோவில் கருவூல பெண் அலுவலர் கைது செய்யப்பட்டார். நாகர்கோவில் அருகே புத்தேரியை சேர்ந்தவர் ஜெயதேவி (39). இவர், நாகர்கோவில் கருவூலத்தில் அக்கவுன்டன்டாக பணிபுரிகிறார். அரசு ஊழியர்கள் இறந்தால், அரசு சார்பில் உதவித்தொக...
தமிழகம்
துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
தஞ்சாவூர்: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று முன்தினம் தஞ்சை வருகை புரிந்த துணை முதல்வர் ஸ்டாலினுக்கு கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னையில் இருந்து மலைக்கோட்டை விரைவு ரயிலில் தஞ்சை வந்த துணை முதல்வரை மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் தலைமையில் வரவேற்றனர். அமைச்சர்கள் கோ.சி.மணி,...
தமிழகம்
குடந்தை காவிரி ஆற்றில் மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
கும்பகோணம்: கும்பகோணம் காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய இரண்டு மாட்டு வண்டிகளை தாசில்தார் பறிமுதல் செய்தார். காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் திருட்டு தனமாக மணல் அள்ளி வருகின்றனர். நேற்று காலை கும்பகோணம் கொட்டையூர் காவிரி ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதாக கிடைத்த ரகசிய...
தமிழகம்
மர்மநபர்கள் கைவரிசை தஞ்சை அருகே கோவிலில் 7 ஐம்பொன் சிலை திருட்டு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பழமைவாய்ந்த கோவிலுக்குள் புகுந்து ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த தில்லைஸ்தானத்தில் பழைமை வாய்ந்த நெய்யாடியப்பர் கோவில் உள்ளது. இங்கு தனியாக நடராஜர் சன்னதி உள்ளது. இக்கோவிலின் பின்புறம் நே...
தமிழகம்
தற்கொலை செய்து கொள்ள அனுமதி வேண்டும் கலெக்டர், எஸ்.பி.,யிடம் தம்பதியினர் மனு
தஞ்சாவூர்: தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்கக்கோரி தஞ்சாவூர் கலெக்டர், எஸ்.பி.,யிடம் தம்பதியினர் மனுகொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த கோட்டைத்தெரு குலாலர் தெருவைச் சேர்ந்த முருகேசன், அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோர் தஞ்சை கலெக்டர் சண்முகம், எஸ்.பி., செந்தில்வேலன் ஆகியோரிடம் கொடு...
தமிழகம்
உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தஞ்சாவூரில் மினி மராத்தான் ஓட்டப்போட்டி
ழதஞ்சாவூர்: தஞ்சாவூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு மினி மராத்தான் ஓட்டப்போட்டி நடந்தது. தஞ்சை ராஜராஜசோழன் மணிமண்டபம் வளாகத்தில் மினி மராத்தான் ஓட்டப்போட்டியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் எஸ்.ஏ.பட் கொடியசைத்து துவக்கி வைத்து, ""பொதுமக்களிடையே விழிப்புண...
தமிழகம்
என்.ஸி.ஸி., பயிற்சி முகாமில் 700 பேர் பங்கேற்பு குடியரசு தின அணி வகுப்புக்கு செல்ல ஏற்பாடு
கும்பகோணம்: ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என்.ஸி.ஸி., பயிற்சி முகாம் கும்பகோணத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.கும்பகோணம் எட்டாவது பட்டாலியன் படை பிரிவின் கீழ் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 25 பள்ளிகளும், ஒன்பது கல்லூரிகளைச் சேர்ந...
தமிழகம்
லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
கும்பகோணம்: திருநாகேஸ்வரம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் லயன்ஸ் சங்கத்தின் 2010 - 11ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருநாகேஸ்வரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. லயன்ஸ் சங்க தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் திருநாவ...
தமிழகம்
திருவிடைமருதூரில் குழாய் கிணறு மூலம் 1,500 ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடி
கும்பகோணம்: திருவிடைமருதூரில் குழாய் கிணறு மூலம் ஆயிரத்து 500 ஹெக்டேர் செம்மை நெல் சாகுபடி முறையில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் குழாய் கிணறு மூலம் ஆயிரத்து 500 ஹெக்டேர் செம்மை நெல் சாகுபடி முறையில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. செம்மை நெல் சாகுபடி என்பது கு...
தமிழகம்
மக்களிடம் இருந்து புகார் மனு வாங்கும் பிரிவு ரூ.5 லட்சம் செலவில் விரிவாக்கம்
தஞ்சாவூர்: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெறப்படும் பிரிவு கணினி, பிரிண்டர்களுடன் விரைவாக ரசீது பெற வசதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்து வருகிறது. இதில், அனைத்து துறை அலுவலர்களும் ப...
தமிழகம்
பாளை., யில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுபேரணி; அமைச்சர் மைதீன்கான் துவக்கம்
திருநெல்வேலி:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தின் பசுமைக்கரங்கள் திட்டம் சார்பில் பாளை., யில் நடந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் துவக்கிவைத்தார்.பேரணியில் பாளை., கிறிஸ்துராஜா பள்ளி, சேவியர் பள்ளி, குழந்தை யேசு பள்ளி, இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளிகளின் பசுமைப்படை...
தமிழகம்
கடங்கனேரி பஞ்.சில் குடிநீர் மோட்டார்:4 ஆண்டுகளாக பழுது; கலெக்டரிடம் புகார்
திருநெல்வேலி:கடங்கனேரி பஞ்., இந்திரா புதுகாலனியில் குடிநீர் தொட்டிக்கு நீர் ஏற்றும் மோட்டார் 4 ஆண்டுகளாக பழுதடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.கடங்கனேரி பஞ்., வெங்கடேஸ்வரபுரம் 7வது வார்டு காடுவெட்டி ரோடு இந்திரா காலனி மக்கள் அளித்துள்ள மனுவில், "ஆலங்குளம் யூனியன் கடங்கனேரி பஞ்.,சிற்குட்பட...
தமிழகம்
வாந்தி, பேதிக்கு 3 பேர் பரிதாப பலி
திருவண்ணாமலை: செங்கம் அருகே வாந்தி, பேதிக்கு பெண் உள்ளிட்ட மூன்று பேர் பலியாகினர். 50 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். செங்கம் அடுத்த இளங்குன்னி கிராமத்தில் நேற்று முன் தினம் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்துள்ளது. இதை அறியாத அப்பகுதி மக்கள் அந்த நீரை பருகினர். இதனால், அக்கிராமத்தை சேர்ந்த பாவ...
தமிழகம்
மெட்ரிக் பள்ளிகளில் கட்டண அறிவிப்பு:பலகை வைக்க கலெக்டருக்கு பா.ஜ., மனு
திருநெல்வேலி:மெட்ரிக் பள்ளிகளில் அனைவருக்கும் தெரியும் படியாக கட்டண விபரங்களை அறிவிப்பு பலகை வைக்கவேண்டும் என பா.ஜ., கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து பா.ஜ., ட்ட செயலாளர் சுரேஷ் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தமிழக அரசு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி தீர்மானித்த கட்டணங்களை பள்ளிகளில் வசூலிக்கவேண்டும் எ...
தமிழகம்
முதல்வரின் 87வது பிறந்த நாள்மாணவர்களுக்கு நோட்டு வழங்கல்
திருநெல்வேலி:முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு 55வது வட்ட திமுக சார்பில் எஸ்.டி.சி.புட்டாரத்தி ஆரம்பபள்ளி மாணவ, மாணவிகளுக்கு 870 ÷õட்டுக்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு 55 வட்ட செயலாளர் அருண்குமார் தலைமை வகித்தார். எம்.எஸ்.கனகராஜ் முன்னிலை வகித்தார். மாநகராட்சி கவுன்சிலர்கள் அப்துல்வகாப், நமச்சிவாயம் (...
தமிழகம்
குடிநீர் கேட்டு மக்கள் மறியல்
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வடபாதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் மோகன்தாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியழகன், எஸ்.ஐ., ராஜேந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, ""குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என...
தமிழகம்
நேமம் வடிகால் மதகை சீரமைக்க கோரிக்ககை
சீரமைக்கக்கோரி ஜூன் 10ல் மறியல்: கிராம மக்கள் முடிவு: திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நேமம், இளநகர் ஆகிய இரண்டு கிராமங்களில் இரு கிராமங்களுக்கு பயன்படுத்தப்படும் நேமம் வடிகால் மதகை சீரமைக்கக்கோரி சாலை மறியல் நடத்த முடிவு செய்துள்ளனர். நேமம், இளநகர் ஆகிய இரண்டு கிராமங்களில் 550 ஏக்கரில் விவசாயிகள் சாகு...
தமிழகம்
கொற்கை கால்நடைப்பண்ணையில் தீவனப்புல் அறுவடை பணி தீவிரம்
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே கொற்கை கால்நடைப்பண்ணையில் தீவனப்புல் அறுவடை தீவிரமாக நடந்தது. ஒரு கிலோ புல் ஒரு ரூபாய்க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கொற்கையில் தமிழக அரசின் கால்நடைப்பண்ணை 495 ஏக்கரில் செயல்படுகிறது. இப்பண்ணையில் உள்ள 280 உம்பளச்சே...
தமிழகம்
உப்பு ஏற்படுத்தும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி
திருச்சி: உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பதால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடந்தது.தீதீதீ.ண்தஞ்ச்ணூஞணீ.ணிணூஞ் இணையதளம் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர். கிரி சார்பில், உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பேரண...
தமிழகம்
மணிமூர்த்தீஸ்வரம் விநாயகர் கோயில்பணிகள் இன்று ஆலோசனை கூட்டம்
திருநெல்வேலி:மணிமூர்த்தீஸ்வரம் விநாயகர் கோயில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லை சங்கீத சபாவில் இன்று (8ம் தேதி) நடக்கிறது.மணிமூர்த்தீஸ்வரத்தில் உச்சிஷ்ட கணபதி கோயில் அமைந்துள்ளது. 5 நிலை ராஜகோபுரத்துடன் கூடிய அமைந்துள்ள இக்கோயில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கோயிலாக போற்றப்படுகிறது. இக்கோயிலில் ரூ.9.70 லட்சம் செ...
தமிழகம்
முசிறியில் நிவாரண உதவி வழங்கல்
முசிறி: முசிறி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் திருச்சி மாவட்ட கலெக்டர் சவுண்டையா வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட பின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முசிறி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வருடாந்திர ஆண்டு தணிக்கைப் பணி மேற்கொள்ள வந்திருந்த கலெக்டர் சவுண்டையா ஆய்வு பணி மேற்கொண்டார். அப்போது முசிறி வருவாய் கோட்டத்தில் விபத்தின்...
தமிழகம்
நூற்றாண்டுவிழா நிறைவு
திருச்சி: திருச்சி அறிவாளர் பேரவை சார்பில், அண்ணாதுரை நூற்றாண்டுவிழா நிறைவுக் கூட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் அரங்கநாதன் வரவேற்றார். தொழிலதிபர் பாலகங்காதரன் தலைமை வகித்தார். தி.மு.க., பிரமுகரும், வக்கீலுமான வெங்கடாஜலம், பேராசிரியர் மீனாட்சி, மேஜர் அறாவாண்டி, பொறியாளர் பாலசுப்பிரமணியன், உயர்நீதிமன் ற வக்கீல் சபாபதி, முன...
தமிழகம்
தே.மு.தி.க., பொதுக்கூட்டம்
துறையூர்: துறையூரில் தே.மு.தி.க., பொதுக்கூட்டம் நகர செயலாளர் சங்கர் தலைமையில் நடந்தது.துறையூர் தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ., மூக்கன், மாவட்ட பொருளாளர் பாபு, மாவட்ட வக்கீல் அணி துணை செயலாளர் செல்லதுரை, மாவட்ட துணை செயலாளர் சுப்ரமணி, கேப்டன் மன்ற செயலாளர் சந்தானம், யூனியன் கவுன்சிலர்கள் ராஜா, புனிதா பாலசந்தர் ம...
தமிழகம்
சுரண்டையில் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா
சுரண்டை:சுரண்டையில் முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.சுரண்டை நகர திமுக சார்பில் முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் ஒலிப்பெருக்கி அமைத்து சுமார் 40 இடங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.நகர செயலாளர் முத்துக்குமார் தலைமையில் நகர துணை செயலாளர் பூல்பா...
தமிழகம்
கும்பாபிஷேகம்
துறையூர்: துறையூர் அருகே தவிட்டுப்பட்டியில் மிக பழமை வாய்ந்த ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ வீரமாரியம்மன் கோவில் புதிதாக புதுப்பிக்கப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது. முன்னதாக கடந்த மாதம் 30ம் தேதி மகா கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமம் செய்து காப்பு கட்டி தீபாராதனை செய்து வழிபட்டனர். கடந்த ஐந்தாம் தேதி மா...
தமிழகம்
ஜப்பானில் உயிரியல் வேறுபாடு மாநாடு திருச்சி மாணவி லாவண்யா பங்கேற்பு
திருச்சி: ஜப்பான் நாட்டில் நடக்கவிருக்கும் உயிரியல் வேறுபாடு குறித்த மாநாட்டில் கலந்து கொள்ள திருச்சியை சேர்ந்த மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் உயிரியல் வேறுபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்டாக 2010ம் ஆண்டை கொண்டாட, ஜப்பான் நாட்டில் உள்ள நகோயா நகரில், வரும் ஆகஸ்டு மாதம் மாநாடு நடக்கிறது. மாநாட்...
தமிழகம்
கீழப்பாவூர் பகுதியில்இன்று மின் தடை
தென்காசி:கீழப்பாவூர் பகுதியில் இன்று (8ம் தேதி) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்து தென்காசி மின் வினியோக செயற்பொறியாளர் பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கீழப்பாவூர் உப மின் நிலையத்தில் இன்று (8ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த உப மின் நிலையத்தில் காலை ...
தமிழகம்
அண்ணாதுரை நூற்றாண்டுவிழா நிறைவுக் கூட்டம்
ழதிருச்சி: திருச்சி அறிவாளர் பேரவை சார்பில், அண்ணாதுரை நூற்றாண்டுவிழா நிறைவுக் கூட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் அரங்கநாதன் வரவேற்றார். தொழிலதிபர் பாலகங்காதரன் தலைமை வகித்தார். தி.மு.க., பிரமுகரும், வக்கீலுமான வெங்கடாஜலம், பேராசிரியர் மீனாட்சி, சுந்தரி, மேஜர் அறாவாண்டி, பொறியாளர் பாலசுப்பிரமணியன், உயர்நீதிமன்ற வக்கீல் சப...
தமிழகம்
திருக்குறள்வார விழா
தென்காசி:தென்காசியில் திருக்குறள் வார விழா நடந்தது.தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் திருக்குறள் வார விழா நடந்தது. திருமலையப்பன் தமிழ் மறை ஓதினார். சதாசிவம் தலைமை வகித்தார். திருவள்ளுவர் கழக செயலாளர் சிவராமகிருஷ்ணன் வரவேற்று அறிக்கை வாசித்தார். மாணவர்கள் அஜய்கள்ளபிரான், சுப்பிரமணியன், லட்சுமணன் திருக்குறள் மனனம் செய்தனர்...
தமிழகம்
துவரங்குறிச்சி அருகே ஆசிரியர் தம்பதி வீட்டில் 46 பவுன் நகை கொள்ளை
துவரங்குறிச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்துள்ள பாலக்குறிச்சி பாரதியார் தெருவில் வசிப்பவர் அருள்சாமி (42). அங்குள்ள புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவரின் மனைவி கிளாராவும் (36) முத்தாழ்வார்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.நேற்று காலை வழக்கம் போல் ...
தமிழகம்
குடியிருப்பு ஆசிரமத்தில்11ம் தேதி குரு பூஜை
தென்காசி:குடியிருப்பு கூத்தர் ஆசிரமத்தில் வரும் 11ம் தேதி குருபூஜை நடக்கிறது.மேலகரம் குடியிருப்பு கூத்தர் ஆசிரமத்தில் வரும் 11ம் தேதி 28வது குரு பூஜை நடக்கிறது. அன்று காலை 9 மணிக்கு பால்குடம், 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், மதியம் சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது. பின்னர் அன்னதானம் வழங்கப்படுகிறது.மாலையில் தேவா...
தமிழகம்
குழந்தைகள் கடத்தல் கும்பல் தலைவியிடம் விசாரிக்க திருச்சி போலீஸ் முடிவு
திருச்சி: கிருஷ்ணகிரியில் மூன்று மாத குழந்தை மற்றும் மூன்று வயது ஆண் குழந்தை ஆகியோரை கடத்திய தனலட்சுமி (35) என்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் மூலம் குழந்தைகள் கடத்தலில் தொடர்புடைய சென்னை பெரம்பூரைச் சேர்ந்த கிரிஜா, அவரது கணவர் சிவா, பாதிரியார் அல்ஃபோன்ஸ், ராணி, விழுப்புரம் பாதிரியார் செல்வ...