category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | பந்தலூரில் கொடியேற்று நிகழ்ச்சி | பந்தலூர் : அகில இந்திய பாரத அனுமன் சேனா இந்து மக்கள் கட்சி சார்பில், பந்தலூர் உப்பட்டியில் கொடியேற்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலர்கள் காமராஜ், புஷ்பராஜ், மாவட்ட துணை செயலர் மகேஷ், இளைஞரணி செயலர் பாலன், பந்தலூர் ஒன்றிய தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாநில துணை ச... |
தமிழகம் | பொதுத் தேர்வில் சாதனை : வியாபாரிகள் சங்கம் பரிசு | மஞ்சூர் : மஞ்சூர் வியாபாரிகள் சங்கம் சார்பில், தேர்வில் சாதித்த மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மஞ்சூர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி சதம் பெற்றது. மாணவி காயத்ரி, மாவட்ட அரசுப் பள்ளி அளவில் முதலிடம், அபர்ணா 3ம் இடம் பிடித்து பெருமை சேர்த்தனர். காயத்ரி, அபர்ணா, பள்ளியில் 2ம் ... |
தமிழகம் | நுகர்வோர் குறைதீர் கூட்டம் : தாலுகா மக்களுக்கு வாய்ப்பு | ஊட்டி : பொது வினியோகத் திட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆறு தாலுகாக்களில் நாளை நடத்தப்படுகிறது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டம் சிறப்பாக செயல்படவும், நுகர்வோர் குறைகளை களையவும், நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், 11ம் ... |
தமிழகம் | காட்டெருமைகள் உலா : தொழிலாளர்கள் அச்சம் | மஞ்சூர் : மஞ்சூர் அருகே மைனலை மட்டம் தேயிலைத் தோட்டத்தில் உலா வரும் காட்டெருமைகளால், தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் - ஊட்டி சாலைக்கு இடைப்பட்ட மைனலை மட்டம் பகுதியில், அடர்ந்த தேயிலைத் தோட்டம் உள்ளது. இப்பகுதியில், சில மாதங்களாக காட்டெருமைகள் முகாமிட்டுள்ளன. தோட்டத்தில் பசுந்தேயிலை பறிக்க செல்... |
தமிழகம் | மின்தடையால் குடிநீர் பற்றாக்குறை பல கிராம பொதுமக்கள் அவதி ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை | சோழவந்தான்: மின்தடை அடிக்கடி ஏற்படுவதால் சோழவந்தான் பகுதியில் உள்ள 10 ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகின்றனர். சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் கிணறுகள், போர்வெல்களில் மின் மோட்டார் பம்பு செட் மூலம் மேல் நிலைத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும். காலை, மாலை தல... |
தமிழகம் | கோவில் குளம் சீரமைப்பு : ரூ.2 லட்சத்தில் பணி துவக்கம் | கூடலூர் : கூடலூர் நம்பாலக்கோட்டை வேட்டைகொருமகன் கோவிலுக்கு சொந்தமான பழமையான குளம், ரூ.2 லட்சம் மதிப்பில் தூர்வாரி சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. கூடலூர் அடுத்துள்ள வேட்டைகொருமகன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது; கோவிலுக்கு சொந்தமான குளம், கோவிலிருந்து 200 மீ., தொலைவில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், இந்த குளத்தில் பக... |
தமிழகம் | ஹோட்டலுக்குள் புகுந்த அரசு பஸ்: 4 பேர் காயம் | ஓசூர்: ஓசூரில், ஹோட்டலுக்குள் அரசு பஸ் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.ஓசூர் தற்காலிக பஸ்ஸ்டாண்ட்டில் இருந்து அரசு பஸ் ஒன்று கிருஷ்ணகிரி வழியாக திருவண்ணாமலை சென்றது. பஸ்சை பாப்பாரப்பட்டியை சேர்ந்த சசிக்குமார்(38) ஓட்டினார். கண்டக்டராக தர்மபுரியை சேர்ந்த ராஜேந்திரன் இருந்தார். பஸ்சில் மொத்... |
தமிழகம் | கராத்தே சங்கக் கூட்டம் | குன்னூர் : நீலகிரி மாவட்ட கராத்தே சங்கக் கூட்டம், குன்னூர் கராத்தே சங்க அலுவலகத்தில் நடத்தப்பட்டது. சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட அளவிலான 15வது கராத்தே போட்டிகள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட அளவிலான கராத்தே போட்டியை, நடப்பாண்டு கோத்தகிரியில் நடத்த முடிவெடுக்கப்பட்டது. சங்கத் துணைத் தலை... |
தமிழகம் | திருப்பரங்குன்றம் - அழகர்கோவில் டவுன் பஸ் மீண்டும் இயக்கப்படுமா? | திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினம் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்களில் வெளியூர்களில் இருந்து வருபவர்கள், திருப்பரங் குன்றத்தில் சுவாமி தரிசனம் முடித்து அழகர் கோவிலுக்கு செல்கின்றனர். பக்தர்கள் தவிர, திருப்பரங்குன்றத்தில் இருப்பவர்களும் மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டு சென்று அங்கிர... |
தமிழகம் | நிர்வாகிகள் தேர்தல் | செக்கானூரணி: மதுரை மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி நிர்வாகிகள் தேர்தல் செக்கானூரணியில் நடந்தது. மாநில மாணவரணி செயலாளர் உதயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயராமன், எம்.எல்.ஏ.க்கள் துரைராஜ், சாமி, போஸ், மகேந்திரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர்-1, துணைத்தலைவர்-2, செயலாளர்-1, இணைச் செயலாளர்-2, துணைச் செயலாளர்-2, பொ... |
தமிழகம் | காமன்வெல்த் செஸ் மதுரை மாணவிகள் வெற்றி | மதுரை: டில்லியில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான காமன்வெல்த் செஸ் போட்டியில் மதுரை மாணவிகள் வெற்றி பெற்றனர்.தியாகராஜர் பொறியியல் கல்லூரி மாணவி ஆர். பிரீத்தி, லேடிடோக் கல்லூரி மாணவி ஏ. சீதாலட்சுமி இருவரும் 11 சுற்றுப் போட்டிகளில் 6.5 புள்ளிகள் எடுத்து தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றனர். இம்மாணவிகள் மதுரை டால்பின் பள்ளி... |
தமிழகம் | ஓய்வூதியர் கூட்டம் | மதுரை: அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. தலைவர் சக்ரபாணி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பஞ்சரத்தினம் வரவேற்றார். பொருளாளர் பழனியப்பன் அறிக்கை வாசித்தார். ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்தல்; விடுபட்ட சலுகைகளை வழங்குதல் என்பன உட்பட பல்வேறு தீர்ம... |
தமிழகம் | சுகாதாரமற்ற குளிர்பானங்கள் நடைபாதை கடைகளில் விற்பனை | மதுரை: மதுரையில் நடைபாதை கடைகளில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் குளிர்பானங்கள் அமோகமாக விற்கப்படுகின்றன. இக்கடைகள் பத்தடி தூரத்துக்கு ஒன்றாக காணப்படுகிறது. அதிக முதலீடு தேவைப்படாத இக் கடைகளில் கரும்பு,ஆரஞ்சு ஜூஸ், ஐஸ்மோர் கம்பங்கூழ் போன்றவை விற்கப்படுகின்றன. விலை குறைவு என்ற காரணத்தினால், பாதசாரிகள் இப்பானங்களை ... |
தமிழகம் | நோட்டு புத்தகம் வழங்கும் விழா | மதுரை: மதுரை கண்ணதாசன் மன்றம் சார்பில், 22 ஆம் ஆண்டு நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா நடந்தது. மன்ற உறுப்பினர் முருகேசன் வரவேற்றார். தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கம்பன் கழக புரவலர் சீத்தாராமன் நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில், ஸ்கேல், வழங்கினார். பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மயான ஊழியரின் மகன் தனசேகர... |
தமிழகம் | ஆண்டு விழா | மதுரை: மதுரை மீனாட்சி நகர், ராஜிவ் தெரு மற்றும் அதன் கிழக்குப் பகுதி குடியிருப்போர் பொது நலச் சங்க ஆண்டு விழா நடந்தது. தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் சேகர், துணைச் செயலாளர் ராஜ்குமார், துணைத் தலைவர் ஜீவானந்தம், பொருளாளர் ராஜமாணிக்கம், பேராசிரியர் விஷ்ணுராம் பங்கேற்றனர். விளையாட்டு போட்டியில் வெற்றி ... |
தமிழகம் | கள்ளந்திரியில் அமிலம் கலந்த குடிநீர் | அழகர்கோவில்: அமிலம் கலந்த தண்ணீரை குடிப்பதால் பொதுமக்களை நோய் தாக்கும் அபாயம் ஏற்படும் என சுகாதார துறை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள முனி கோயில் அருகில் பழமையான கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து கள்ளந்திரி கிராம மக்களுக்கு குடிநீர் வழங் கப்படுகிறது... |
தமிழகம் | மேலூர், கொட்டாம்பட்டி ரோட்டை சீரமைக்க ரூ.10 கோடி | மதுரை: மதுரை ஒத்தக்கடை, மேலூர், கொட்டாம்பட்டி ரோட்டை ரூ.10 கோடியில் சீரமைக்கவும், அகலப்படுத்தவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தங்கநாற்கரச்சாலை திட்டத்தின்கீழ், மதுரை - துவரங்குறிச்சி வரை ரூ.214.98 கோடியில் நான்குவழிச்சாலை அமைக்கப் பட்டது. இன்னும் சில இடங்களில் இப்பணி நடக்கிறது. இதனால் ஏற்கனவே பயன்படு... |
தமிழகம் | பயிற்சிகளால் பரிதவிக்கும் ஆசிரிய, ஆசிரியைகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி பாதிக்கும் அபாயம் | திருநெல்வேலி : மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் மாலையில் ஒரு மணி நேரம் பெரும்பாலான பள்ளிகளில் இப்பணிக்காக ஆசிரிய, ஆசிரியைகள் விடுவிக்கப்படுகின்றனர். எனினும், ஒரு சில பள்ளிகளில் இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனு... |
தமிழகம் | செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா | மோகனூர்: எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நடந்த தூக்குத்தேர் நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஸ்வாமியை வழிபட்டனர். மோகனூர் யூனியன் எஸ்.வாழவந்தியில் உள்ள பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா கடந்த 3ம் தேதி காலை 6 மணிக்கு காப்புகட்டுதலுடன் துவங்கியது. ... |
தமிழகம் | சிறிய ஊஞ்சல் சேர்கள் வாங்க மக்கள் ஆர்வம் | நாமக்கல்: நாமக்கல் பகுதியில் விற்பனைக்கு வந்துள்ள ஊஞ்சல் சேர்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.நாமக்கல் நகரப் பகுதியில் வெளி மாவட்டம், மாநிலங்களை சேர்ந்தோர் மூக்கு கண்ணாடி, தொப்பி உள்ளிட்டவற்றை சாலையோரத்தில் போட்டு விற்பனை செய்கின்றனர். குழந்தைகள் அமர்ந்து ஊஞ்சலாடும் வகையில் நைலான் கயிறுடன் கூடிய புதிய சிறிய ர... |
தமிழகம் | பணியாட்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனையில் அவலம் | நாமக்கல்: தேசிய தரச்சான்று பெற்ற அரசு தலைமை மருத்துவமனையில் இருதயம் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் இல்லாததால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தனியார் மருத்துவமனையை நாடிச்செல்லும் அவலம் நீடிக்கிறது. நாமக்கல் மோகனூர் சாலையில் அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு புறநோயாளிகள் பிரிவு, குழந்தைகள் வார்டு, பிரசவ வா... |
தமிழகம் | மகால் ஒளி-ஒலி காட்சியில் குடிநீர், கழிப்பறை வசதி மோசம் | மதுரை: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் மகாலில் குடிநீர், கழிப்பறை வசதி இன்மை மற்றும் கொசுத் தொல்லையால், ஒளி-ஒலி காட்சியைக் காண வரும் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர். புதுப்பிக்கப் பட்ட ஒளி-ஒலிக்காட்சி 2009 செப்.,12 ல் துவங்கியது. இதை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பராமரிக்கிறது. பெரியவர்களுக்கு 50, மாணவர்களுக்கு ... |
தமிழகம் | ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல் | நாமக்கல்: நாமக்கல் டவுன் பஸ் ஸ்டாண்டை ஒட்டியுள்ள சாலையை ஆக்கிரமித்து கடைகள் விரித்துள்ளதால், அப்பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். நாமக்கல் டவுன் பஸ் ஸ்டாண்டை ஒட்டி சேந்தமங்கலம் இணைப்பு சாலை உள்ளது. அந்த சாலையில் பல்வேறு கடைகள் நிறைந்துள்ளன. அதனால் அப்பகுதியில் நாள் முழுவதும் மக்கள் க... |
தமிழகம் | அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை | ப.வேலூர்: பரமத்தி போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள ஆசிரியை வீட்டில் புகுந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மகும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். பரமத்தி போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள குடியிருப்பில் வசிப்பவர் செல்வம். அவர் பள்ளிபாளையம் எஸ்.பி.பி., பேப்பர் மில்லில் பணிபுரிந்து வருகிறார். அவரது மன... |
தமிழகம் | கறுப்பு நிற திராட்சை வரத்து அதிகரிப்பு | நாமக்கல்: நாமக்கல் பகுதியில் கறுப்பு நிற திராட்சை விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. தேனி, கம்பம் பகுதியில் கறுப்பு நிற திராட்சை அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும் திராட்சை மாநிலம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அப்பகுதியில் விளையும் திராட்சை சுவை மிகுந்திருப்பதால், அவற்றுக்கு ... |
தமிழகம் | விழிப்புணர்வு பேரணி | நாமக்கல்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ப.வேலூர் அடுத்த கந்தம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமையாசிரியர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி முன் துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிந்தது. பேரணியில் சுற்றுச்சூழல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வ... |
தமிழகம் | காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முற்றுகை | ராசிபுரம்: சீராக குடிநீர் வழங்காததை கண்டித்து, பெண்கள் காலி குடங்களுடன் சென்று ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ராசிபுரம் நகராட்சி பகுதியில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பூலாம்பட்டி- ராசிபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், நகரில் நான்கு பகுதிகளாக பிரித்து பத்து நாட்களுக்கு ஒரு... |
தமிழகம் | பயணிகள் நிழற்கூடம் திறப்பு | திருச்செங்கோடு: திருச்செங்கோடு லயன்ஸ் சங்கம் சார்பில், 85 கவுண்டன்பாளையத்தில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு, சங்கத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் கணேசன், பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சரவை ஆலோசனைக்குழு துணைத்தலைவரும், கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவன தாள... |
தமிழகம் | முன் விரோதத்தால் கோஷ்டி மோதல் பா.ம.க., நகர செயலாளர் உட்பட 7 பேர் கைது | ராசிபுரம்: ராசிபுரத்தில் இரு கோஷ்டிகளிடையே நடந்த மோதல் தொடர்பாக, பா.ம.க., நகரச் செயலாளர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ராசிபுரம் தேவேந்திரர் தெருவைச் சேர்ந்தவர் ஜெகன் (28). பூக்கடைவீதியில் உள்ள தங்கவேல் பூக்கடையில் வேலை பார்த்து வந்தவர்... |
தமிழகம் | பயங்கரவாதம் தலைதூக்கும் 84 இடங்கள் வனத்துறை புலனாய்வில் கண்டுபிடிப்பு | தாண்டிக்குடி: கொடைக்கானல் வனப்பகுதியில் பயங்கரவாதம் தலைதூக்கும் 84 இடங்கள் வனப்புலனாய்வில் கண்டறியப்பட்டு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கொடைக்கானல் வனப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த சோலை,பறந்து விரிந்த பகுதியாக மலை முகடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதிகளை பயங்க... |
தமிழகம் | கீழப்பாவூர் யூனியன் ஆணையாளரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் | பாவூர்சத்திரம் : பெரும்பான்மை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பொது குடிநீர் திட்டத்தை செயல்படுத்தாமல் புறக்கணித்து வரும் கீழப்பாவூர் யூனியன் ஆணையாளரை கண்டித்து யூனியன் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கீழப்பாவூர் யூனியன் ஆவுடையானூர் பஞ்.,சில் பொதுமக்களின் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக தென்காசி தொகுதி எம்.ப... |
தமிழகம் | பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ.,பிறந்த நாள் துணை முதல்வர், அமைச்சர்கள் வாழ்த்து | கடையநல்லூர் : கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் பிறந்த நாள் விழா நெல்லை மேற்கு மாவட்டம் முழுவதும் காங்கிரசாரால் இன்று (10ம் தேதி) கொண்டாடப்படுகிறது. மத்திய அமைச்சர் வாசன், துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தொலைபேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழக சட்டசபை காங்., கொறடாவும், மாநில க... |
தமிழகம் | கடையநல்லூரில் வேலைவாய்ப்பு பெயர் பதிவு முகாம் நாளை துவக்கம் | தென்காசி : நெல்லையில் வரும் 16ம் தேதி நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக செங்கோட்டை பகுதி மக்கள் நாளை (11ம் தேதி) கடையநல்லூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என செங்கோடடை நகராட்சி தலைவர் ரஹீம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- நெல்லை மாவட்ட ... |
தமிழகம் | நான்குநேரி தாலுகாவில் ஜமாபந்தி துவக்கம் | நான்குநேரி : நான்குநேரி தாலுகாவில் ஜமாபந்தி நேற்று துவங்கியது. நான்குநேரி தாலுகா ஜமாபந்தி நேற்று காலை தாலுகா அலுவலகத்தில் துவங்கியது. ஜமாபந்தியை மாவட்ட வருவாய் அதிகாரி ரமண சரஸ்வதி நடத்தினார். ஜமாபந்தியில் பொதுமக்கள், விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். நேற்று 10 கிராமங்களில் ஜமாபந்தி நடந்தது. இன்றும், நாளைய... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | மதுரை: மதுரையில் பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரூராட்சிகளில் கம்ப்யூட்டர் இயக்குபவர்களை பணிநிரந்தரம் செய்தல், கீழ்நிலை பணியாளர்களுக்கு பணி உயர்வு, தகுதியுள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துதல், துப்புரவு பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்டடம் கட்டுதல் தொடர்பான 15 அம்ச கோரிக்கைகளை ... |
தமிழகம் | ஐகோர்ட் கிளையில் வக்கீல்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் | மதுரை: மதுரை ஐகோர்ட் கிளை யில் தமிழை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி வக்கீல்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினர். வக்கீல்கள் பகத்சிங், ராஜா, எழிலரசு, நடரா ஜன், விஜயகுமார், பாரதி ஆகியோர் உண்ணாவிரதம் இருந்தனர். இவர்களுக்கு ஆதரவாக வக்கீல் சங்க நிர்வாகிகள் வெள்ளைச்சாமி, தர்மராஜ், ராமசாமி, தமிழ்நாடு வக்கீல்கள் தமிழ் சங்க தல... |
தமிழகம் | மத்திய சிறையில் மொபைல் போன் | மதுரை: மதுரை மத்திய சிறையில் கைதிகள் அறைப்பகுதியில் கிடந்த மொபைல் போனை காவலர்கள் கண்டெடுத்தனர். சிறை அலுவலர் தமிழ்செல்வன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். கைதிகளிடம் விசாரணை நடக்கிறது. |
தமிழகம் | லாரிகளில் திருட்டு ஆந்திரா போலீஸ் விசாரணை | திருநகர்: விக்ரமங்கலம் கொசவபட்டியை சேர்ந்தவர் கணேசன். லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளில் திருடிவந்தார். இவரை பிடித்து, ஆஸ்டின் பட்டி போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்கின்றனர். ஆந்திரா மாநிலத்தின் பல பகுதிகளிலும் லாரிகளில் நடந்த திருட்டு வழக்குகள் தொடர்பாக, நேற்று ஆந்திரா போலீசாரும் கணேசனிடம் விசாரணை நடத்தினர். |
தமிழகம் | 9 பவுன் நகைபறிப்பு | மதுரை: மதுரை கூடல்புதூர் சாந்திநகரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி(35). நேற்று முன்தினம்வீட்டருகே வந்தபோது, டூவீலரில் வந்த இருவரில் ஒருவர், 9 பவுன் நகையை பறித்துச் சென்றார்.கூடல்புதூர் போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | கவுன்சிலரை கைது செய்ய கோரி மேலூர் நகராட்சியில் போராட்டம் | மேலூர்: நகராட்சி மேலாளாரை தாக்கிய கவுன்சிலரை கைது செய்ய கோரி நேற்று நகராட்சி ஊழியர்கள் அனைவரும் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தன்னிச்சையாக ரோட்டை தோண்டி குடிநீர் குழாய் அமைத்த 23 வார்டு கவுன்சிலருக்கும் நகராட்சி அலுவலர்களுக்கும் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதில் நகராட்சி மேலாளர் கண்ணனை 23வ... |
தமிழகம் | மதுரை மத்திய சிறையில் மொபைல் போன் கண்டெடுப்பு | மதுரை: மதுரை மத்திய சிறையில் கைதிகள் அறைப்பகுதியில் கிடந்த மொபைல் போனை காவலர்கள் கண்டெடுத்தனர். இதுகுறித்து சிறை அலுவலர் தமிழ்செல்வன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். கைதிகளிடம் விசாரணை நடக்கிறது. |
தமிழகம் | சுவர் இடிந்து விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி | புதுக்கோட்டை: வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிக்கும் அதனை வேடிக்கை பார்த்த சிறுவர்கள் மீது சுவர் இடிந்து இரண்டு பேர் பலியானார்கள். புதுக்கோட்டை மாவட்டம் பொன் அமராவதியை சேர்ந்தவர் சம்சுதீன். இவர் தனது வீட்டு காம்பவுண்ட் சுவரை இயந்திரங்கள் உதவியுடன் இடித்துக்கொண்டு இருந்தார். இதனை அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் வேடிக்கை பார்... |
இந்தியா | காரக்பூர் - டாடாநகர் பகுதியில் ரயில் போக்குவரத்து சீரானது | கோல்கட்டா: மும்பை-ஹவுரா இடையே இயங்கும் அதிவேக ரயிலான துரந்தோ ரயிலை கவிழ்க்க மாவோயிஸ்ட்கள் மிரட்டல் விடுத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து காரக்பூர் - டாடா நகர் வழியில் செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ரயில்களை சுற்றி உடனடியாக துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் நிறுத்... |
இந்தியா | கொழும்பு-தூத்துக்குடி இடையே படகு போக்குவரத்து | புதுடில்லி: கொழும்பு-தூத்துக்குடி இடையே படகு போக்குவரத்து துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்ஷே, டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கொழும்பு-தூத்துக்குடி மற்றும் தலைமன்னார்-ராமேஸ்வரம் இடையே படகு போக்குவரத்து துவங்க இருநாட்டு தலைவ... |
தமிழகம் | போலீஸ் தகவல்களை பெற ஸ்டேஷனில் மனு செய்யலாம் | தேனி: தகவல் உரிமை சட்டத்தின் கீழ், போலீஸ் நிர்வாகம் பற்றியும் தகவல்களை பெறுவதற்கு போலீஸ் ஸ்டேஷனிலேயே மனு செய்யலாம். தகவல் உரிமை சட்டத்தில், போலீஸ்துறை தொடர்பான தகவல்களை பெற ஏ.டி.எஸ்.பி.,யிடம் மட்டும் மனு செய்ய வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இது பற்றி தெரியாத பலர், போலீஸ் ஸ்டேஷன்களில் மனு செய்கின்றனர். போலீசார் அந்த மனுக... |
இந்தியா | மன்மோகன் சிங்குடன் சிரஞ்சீவி சந்திப்பு | புதுடில்லி: டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, பிரஜா ராஜ்ய கட்சி தலைவர் சிரஞ்சீவி தமது கட்சியின் 14 எம்.எல்.ஏ.,க்களுடன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது தேசிய விவசாய திட்டத்தின் கீழ் ஆந்திராவின் போலாவரம், பிரணகிதா நீர்பாசன திட்டங்களை சேர்க்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினார். மேலும் ஆந்திராவில் மதுக்கடைகளால்... |
தமிழகம் | நடராஜர் கோவிலில் இன்று ஆனி திருமஞ்சனம் துவக்கம் | சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன விழா இன்று துவங்குகிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா இன்று (10ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது. தினமும் காலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. 11ம் தேதி வெள்ளி ... |
இந்தியா | பாட்னாவில் 12ம் தேதி பா.ஜ., செயற்கூழு கூட்டம் | புதுடில்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் வரும் 12 மற்றும் 13ம் தேதி பாட்னாவில் நடைபெறுகிறது. மத்திய அரசின் செயல்பாடுகள், பா.ஜ., மற்றும் அதன் கூட்டனி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், ஜார்கண்ட் பிரச்சனை, நக்சலைட் பிரச்சனை, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இந்த கூட்டத்தில் வி... |
தமிழகம் | ஜயண்ட்ஸ் மாநாடு | மதுரை: ஜயண்ட்ஸ் சேவை நிறுவன மாநாடு மதுரையில் நடந்தது. அமைப்புக்குழு தலைவர் பாண்டியராஜன் வரவேற்றார். கூட்டமைப்பு தலைவர் சுகுமாரன் துவக்கி வைத்தார். மன அழுத்தத்தால் ஏற்படும் நோய்கள், அது தனி மனித வாழ்க்கை மட்டுமன்றி சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பது பற்றி டாக்டர் ராமசுப்பிரமணியன் பேசினார். உலக துணைத் தலைவர் அன்வர் தயூப், ம... |
தமிழகம் | இலவச நோட்டு புத்தகம் வழங்கல் | மதுரை: மதுரை ஞானஒளிவுபுரம் சமூகப்பணி மன்றம் சார்பில் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது. தலைவர் குழந்தைசாமி தலைமை வகித்தார். செயலாளர் சூசை ஜெயராஜ் வரவேற்றார். லயோலா தொழிற் பயிற்சி மைய முதல்வர் இக்னேஷியஸ் நோட்டு புத்தகங்களை வழங்கினார். இணைச் செயலாளர் சுவக்கின், பொருளாளர் இருதயராஜா பங்கேற்... |
தமிழகம் | நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருது | மதுரை: மாவட்ட கலை மன்றம் சார்பில் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா மதுரையில் நடந்தது. கிராமிய நடனம், குரலிசை, கரகாட்டம், ஆர்மோனியம், ஓவியம், ஒயிலாட்டம், கிராமிய பாடல்களில் சிறந்த 10 கலைஞர்களுக்கு கலை இளமணி, கலை வளர்மணி, கலைச்சுடர் மணி, கலை நன்மணி, கலை முதுமணி விருதுகளை கலெக்டர் காமராஜ் வழங்கினார். அவர்," நாட்ட... |
தமிழகம் | நினைவுப் பரிசு | மதுரை: பாரத ஸ்டேட் வங்கியில் ஓய்வு பெற்ற துணைமேலாளர் ஹரிராமுக்கு, முதன்மை மேலாளர் நரசிம்மன் நினைவுப் பரிசு வழங்கினார். |
தமிழகம் | இலவச நோட்டு புத்தகங்களை வழங்குவிழா | மதுரை: மதுரை மாடக்குளம் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி உறுப்பினர் ராமசுப்ரமணியன் இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார். உடன் தலைமையாசிரியர் ஆரோக்யராஜ். |
தமிழகம் | சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம் | மதுரை: சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினத்தில், மதுரை கோ- ஆப்டெக்ஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. |
தமிழகம் | மூலிகைகளில் கலப்படம் | மதுரை: மூலிகை சாகுபடிக்கு மத்திய,மாநில அரசுகள் மானியம் வழங்குவதாக, மதுரையில் தமிழக தொழில் மேம்பாட்டு நிறுவனம் (டேசட்) சார்பில் நடந்த, மூலிகை சாகுபடி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. இம்மைய மூத்த ஆலோசகர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: மூலிகைகளின் முக்கியத்துவத்தை தற்போது... |
தமிழகம் | சங்க கூட்டம் | மதுரை: நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுக்குழு கூட் டம் மதுரையில் நடந்தது. தலைவர் ஜெகதீஸ்வர் தலைமை வகித்தார். ஆலோசகர் டாக்டர் புகழகிரி வரவேற்றார். மதுரையில் மழை நீர் வடிகால் மற்றும் பாலம் அமைத் தல், கால்வாய் சீரமைக்கும் பணியை விரைந்து முடித் தல்; அதிக வட்டி மற்றும் கவர்ச்சித் திட்டங்களால் மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றும்... |
தமிழகம் | திருக்குறள் இசைத் தமிழ் | சென்னை: தமிழ் மையம் சார்பில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் உதவியுடன் திருக்குறள் இசைத்தமிழ் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பில் தமிழ் மையம் நிறுவனர் ஜெகத் காஸ்பர், உடன் இயக்குநர் (பொறுப்பு) மோகன் மற்றும் சுதா ரகுநாதன் உள்ளிட்ட பாடகர்கள். |
தமிழகம் | ரேண்டம் நம்பர் வெளியீடு | சென்னை: மருத்துவ படிப்பிற்கான ரேண்டம் நம்பரை மருத்துவ கல்வி இயக்குனர் விநாயகம் மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் ஷீலா ஆகியோர் நேற்று வெளியிட்டனர். |
தமிழகம் | சுய சரிதை வெளியீடு | சென்னை: வானவியல் கழக தலைவர் தேவதாஸ் தனது பிறந்த நாளை ஒட்டி சென்னை பிர்லா கோளரங்கத்தில் சுயசாரிதையை வெளியிட கொல்கத்தா பிர்லா கோளரங்க அடிப்படை ஆய்வு மையத்தின் இயக்குனர் சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். உடன் சென்னை பிர்லா கோளரங்கத்தின் செயல் இயக்குனர் அய்யம்பெருமாள். |
தமிழகம் | விழுப்புரத்தில் பஸ் மறியல் | விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் மரகதபுரம் பகுதியில் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் இன்று காலையில் அவ்வழியே வந்த அரசு பஸ் மற்றும் லாரியை சிறை பிடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
தமிழகம் | ராஜ்யசபா எம்.பி., க்கள் போட்டியின்றி தேர்வு : தேர்தல் அலுவலர் அறிவிப்பு | சென்னை : தமிழகத்தில் இருந்து போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி., களாக 6 பேர் தேர்வாகிய நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. தி.மு.க., சார்பில் தங்கவேல், ராமலிங்கம், செல்வகணபதி, காங்., சார்பில் சுதர்சனம் நாச்சியப்பன், அ.தி.மு.க., சார்பில் மனோஜ் பி.எச். பாண்டியன் மற்றும் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் ... |
இந்தியா | நக்சல்களை ஒடுக்க ராணுவம்? முடிவெடுக்காமல் முடிந்தது கூட்டம் | புதுடில்லி : நக்சலைட்டுகளை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்துவது குறித்து இன்று டில்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பாதுகாப்பு தொடர்பான கேபினட் கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. இதில் நக்சல்களுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது... |
General | ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சரிவு | சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சரிந்துள்ளது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் ஸீ ரக கச்சா எண்ணெய்யின் ஜூலை டெலிவரிக்கான விலை பேரல் ஒன்றுக்கு 48 சென்டுகள் குறைந்து 73.90 அமெரிக்க டாலராக வர்த்தகமாகியிருந்தது. பிரண்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய்யின் ஜூலை டெலிவரிக்கான விலை 52 சென்டுகள் குறைந்து 73.75 அமெரிக்... |
தமிழகம் | ஆப்கனில் தற்கொலைப் படை தாக்குதல் : 39 பேர் பலி | காபூல் : ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 39 பேர் பலியாகினர், 73 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் அர்கான்பாத் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் குண்டு வெடித்தது. இதில் 39 பேர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். 10 குழந்தைகள், மணமகன் உள்ளி்ட்ட 73 பேர் காயமடைந்தனர். இந்த கோர சம்பவத்துக்கு இது வரை எந்த ஒரு இய... |
தமிழகம் | நுண்ணுயிர் கரைசல் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி | கோவை: கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் நுண்ணுயிர் கரைசல் தயாரிக்கும் பயிற்சி சம்பரவள்ளியில் நடந்தது. இதில் விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். காரமடை கால்நடை பராமரிப்புத் துறை, அவினாசிலிங்கம் வேளாண் அறிவியல் நிலையத்துடன் இணைந்து "ஆத்மா திட்டத்தில்' திறன்மிகு நுண்ணுயிர் கரைசல் தயாரித்தல் பயிற்சி முகாம் சம்ப... |
தமிழகம் | நெல்லையில் அத்துமீறிய ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை | திருநெல்வேலி : நெல்லையில் அத்துமீறிய ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை ஆலங்குளம், பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவர் பொதுப்பணித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு உமா மகேஸ்வரி் (26) என்ற மகள் இருக்கிறார். இவருக்கு திருமணமாகிவிட்டது... |
General | உலக கோப்பை கால்பந்து போட்டி நாளை துவக்கம் | ஜோகனஸ்பர்க் : உலக கோப்பை கால்பந்து போட்டி நாளை தென்ஆப்பிரிக்காவில் தொடங்குகிறது. இது 19வது உலக கோப்பை போட்டியாகும். நாளை முதல் ஜூலை 11ம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு போட்டிகள் நடைபெறுகின்றன. ஆப்ரிக்க நாடுகளில் இது வரை உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்தது இல்லை. இதுவே முதல் முறையாகும். இதையொட்டி தென்ஆப்ரிக்க நகரமே கோ... |
இந்தியா | நலமாக இருக்கிறார் சரத்பவார் : கட்சி வட்டாரம் தகவல் | மும்பை : தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மத்திய வேளாண் துறை அமைச்சருமான சரத்பவாருக்கு நேற்று ஆபரேஷன் நடந்தது. வாய் பகுதியில் ஏற்பட்டிருந்த கிராணுலோமா என்ற கிருமி தொற்றை அகற்ற ஆபரேஷன் நடந்தது. ஆபரேஷன் நன்றாக முடிந்துள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரகா... |
தமிழகம் | நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் உண்ணாவிரதம் | திருப்பூர் : நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. நூல் விலை உயர்வு, சாய ஆலைகள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு, பஞ்சு நூல் ஏற்றுமதியை முழுமையாக, உடனடியாக நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் திருப்பூர் குமரன் சிலை பகுதியில் உண... |
General | பொருளாதார தடையால் பயந்து விட மாட்டோம் : ஈரான் ஆவேசம் | டெஹ்ரான் : தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையால் பயந்து விட மாட்டோம் என்றும். அதற்காக யுரேனியம் செறிவூட்டும் பணியை நிறுத்தி விட மாட்டோம் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அணு ஆயுதக் கொள்கைகளில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு எதிராக செயல்பட்டதற் காக, ஈரானுக்கு பொருளாதார தடை விதிக்க... |
தமிழகம் | தூத்துக்குடியில் கடையடைப்பு போராட்டம் | தூத்துக்குடி : தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பஸ்கள் நாளை முதல் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனால் பழைய பஸ் ஸ்டாண்டில் வியாபாரம் பாதிக்கப்படும் என்றும் பயணிகளு... |
இந்தியா | உணவு பணவீக்கம் அதிகரிப்பு | புதுடில்லி : உணவு பணவீக்கம் 16.74 சதவீதமாக அதிகரித்துள்ளது. மே 29ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்துக்கு எடுக்கப்பட்ட கணக்கின்படி உணவு பண வீக்கம் 16.74 சதவீதமாக அதிகரித்துள்ளது. |
General | பாகிஸ்தான் கடற்படை அலுவலகத்தில் குண்டுவெடிப்பு | இஸ்லாமபாத் : பாகிஸ்தானில் கராச்சி கடற்படை அலுவலகத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். |
தமிழகம் | தங்கம் விலை குறைந்தது | சென்னை: தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.72 குறைந்தது. ஒரு பவுன் ரூ.14 ஆயிரத்து 32-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ரூ.ஆயிரத்து 754 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி 32 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. |
தமிழகம் | அவிநாசியில் ஆக்கரமிப்புகள் அகற்றம் | கோவை : கோவை மாவட்டம் அவிநாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கோவை அவிநாசியில் 100 ஆண்டு காலமாக அரசு நிலத்தில் ஆக்கரமித்து கட்டப்பட்ட கட்டங்கள் இடிக்கப்பட்டன. அவிநாசியில் சர்வே எண் 85 பி/2. இங்கு பல கடைகள், குடியிருப்புகள் இருந்தன. கோவையில் உலக்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறு இருப்பதால், ஆக்கரமிப்புகளை அகற்ற நடவடிக்கை ... |
தமிழகம் | கோவையில் ராஜபக்ஷே உருவ பொம்மை எரிப்பு | கோவை : கோவையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே உருவ பொம்மை எரிக்கப்பட்டது. வக்கீல்கள் சிலர் ராஜபக்ஷே உருவ பொம்மையை எரித்தனர். தமிழர்களை மீண்டும் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்துவதில் மெத்தனம் காட்டுவதாக கண்டனம் தெரிவித்து உருவ பொம்மை எரித்தனர். |
தமிழகம் | ஈரோட்டில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் | ஈரோடு : ஈரோட்டில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோட்டில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. கவுன்சிலர் கூட்டத்தில் கலந்து கொள்ள 18 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டிருந்தனர். ஆனால் 13 கவுன்சிலர்கள் மட்டுமே முதலி்ல் கூட்டத்துக்கு வந்தனர். அப்போது மேயர் குமார் முருகேஸ், தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்... |
தமிழகம் | காணாமல் போன கல்பாக்கம் விஞ்ஞானி சிறையில் இருப்பது கண்டுபிடிப்பு | சென்னை : கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 37) திடீர் என காணாமல் போனார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில், அவர் புழல் சிறையில் இருப்பது தெரியவந்துள்ளது. இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாரின் பேரில் அவர் கைது... |
General | மும்பை தாக்குதலில் பாக்., உளவுத்துறை சதி : ஹெட்லி தகவல் | சிகாகோ : மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தொடர்பு இருப்பதாக பயங்கரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளான். அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ஹெட்லியிடம் இந்திய அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தினார்கள். அவர்களிடம் ஹெட்லி பல்வேறு தகவல்களை கூறியுள்ளான். மும்பை தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தொடர்பு உ... |
இந்தியா | கோவா மாஜி அமைச்சருக்கு ஜாமீன் நிராகரிப்பு | பனாஜி : கோவா மாநில சுற்றுலா துறை மாஜி அமைச்சர் பிரான்சிஸ்கோ பாச்சியோ. அவரது தோழியின் மர்ம சாவு வழக்கி்ல் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பச்சியோ முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். |
General | ஆப்கன் அதிபருடன் பிரிட்டன் பிரதமர் சந்திப்பு | காபூல் : பிரிட்டன் பிரதமர் டேவிட் கேம்ரூன் இன்று ஆப்கானிஸ்தான் வந்தார். அவரது வருகையை ஒட்டி ஆப்கானிஸ்தானில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவரது ஆப்கன் பயணம் பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாயை சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களை சந்த... |
இந்தியா | சட்டீஸ்கரில் மாவோயிஸ்டு சுட்டுக் கொலை | ராய்ப்பூர் : சட்டீஸ்கரில் மாவோயிஸ்டு பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டான். சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை நடந்தது. இதில் பயங்கரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டு் வீழ்த்தியுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. |
இந்தியா | ஏற்றத்தில் முடிந்திருக்கிறது இந்திய பங்குச்சந்தை | மும்பை : இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று ஏற்றத்தில் முடிந்திருக்கிறது. வர்த்தக நேர முடிவின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 264 புள்ளிகள் அதிகரித்து 16 ஆயிரத்து 922 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 78 புள்ளிகள் அதிகரித்து 5ஆயிரத்து 78 ஆக வர்த்தகமாகியிருந்தது. |
இந்தியா | கோவா மாஜி அமைச்சர் மீது வழக்குப் பதிவு | பனாஜி : கோவா மாநில சுற்றுலா துறை அமைச்சர் பிரான்சிஸ்கோ பாச்சியோ மீது கோவா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 28 வயதான இளம் பெண் நாடியா டொராடோ சாவில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரான பாச்சியோ மீது சந்தேகம் எழுந்தது. இதை உறுதி படுத்துவது போல் பச்சியோ பதவியை ராஜினாமா செய்ததோடு, தலைமறைவானா... |
இந்தியா | இந்து திருமண சட்டத்தில் திருத்தம் : அமைச்சரவை ஒப்புதல் | புதுடில்லி : இந்து திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டில்லியில் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டில் அவரது தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. நிதியமைச்சர் பிரணாப், உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் இந்திய திருமண சட்டத... |
தமிழகம் | இலவச நோட்டு புத்தகம் | மதுரை: கண்ணனேந்தல் அய்யாவுத்தேவர் அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களை, ஊராட்சித் தலைவர் ஜீவானந்தம் வழங்கினார். அருகில் துணைத் தலைவர் இருளாண்டி. |
தமிழகம் | நோட்டு புத்தகம் வழங்கும் விழா | மதுரை: மதுரை கண்ணதாசன் மன்றம் சார்பில், 22 ஆம் ஆண்டு நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா நடந்தது. மன்ற உறுப்பினர் முருகேசன் வரவேற்றார். தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கம்பன் கழக புரவலர் சீத்தாராமன் நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில், ஸ்கேல், வழங்கினார். பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மயான ஊழியரின் மகன் தனசேகர... |
தமிழகம் | புத்தாக்க பயிற்சி முகாம் | மதுரை: மதுரை யாதவர் கல்லூரியில் பல்கலை மானியக்குழு சார்பில் ஆசிரியர்களுக்கான மூன்று நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. முதல்வர் (பொறுப்பு) பத்மநாபன் தலைமை வகித்தார். சுயநிதி பிரிவு இயக்குனர் கண்ணன் முன்னிலை வகித்தார். நாக் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் அழகேசன் வரவேற்றார். செயலர் நவநீதிகிருஷ்ணன் பேசியதாவது: மாணவர்களுக்கு... |
தமிழகம் | தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் | மதுரை: மதுரையில் வங்கி அலுவலர்களுக்கு தேசிய வேளாண் காப்பீட்டுத்திட்ட புத்தூட்ட பயிற்சி முகாம் நடந்தது. கலெக்டர் காமராஜ் துவக்கி வைத்து பேசியதாவது: 2008-09ம் ஆண்டில் வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 95 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை மதுரை கிழக்கு, செல்லம்பட்டி, கள்ளிக்குடி,கல்லுப்பட்டி வட்டாரங்கள... |
தமிழகம் | சான்றிதழ் வழங்கு விழா | மதுரை: கலை இளமணி விருதுபெற்ற மதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவி சவுந்தர்ய ஸ்ரீ ஹரிணிக்கு, கலெக்டர் காமராஜ் சான்றிதழ் வழங்கினார். உடன் டி.ஆர்.ஓ., தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் |
தமிழகம் | கல்வி நிறுவன விழா | மதுரை: மதுரை அகரம் வாழ்வியல் கல்வி நிறுவன விழாவில், வணிகவரி துணை கமிஷனர் தேவேந்திர பூபதி, சான்றிதழ் வழங்கினார். உடன் நிறுவன இயக்குனர் டாக்டர் ஜெயக்குமார். |
தமிழகம் | சுற்றுச்சூழல் விழா | மதுரை: மதுரை டி.வி.எஸ்., சுந்தரம் அய்யங்கார் நிறுவன சுற்றுச்சூழல் விழாவில், தொழிற்சாலைகள் முதன்மை இணை இன்ஸ்பெக்டர் இஸ்மாயில் மரக்கன்றுகளை வழங்கினார். அருகில் வனச்சரகர் காளீஸ்வரமூர்த்தி. |
தமிழகம் | பணிநியமனச் சான்றிதழ் | மதுரை: மதுரை, காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி மாணவிக்கு, டாடா கன்சல்டன்சி துணைத் தலைவர் ஹேமா, பணிநியமனச் சான்றிதழ் வழங்கினார். உடன் முதல்வர் செந்தில்குமார். |
இந்தியா | ராஜ்யசபா உறுப்பினராக அம்பிகா சோனி போட்டியின்றி தேர்வு | சண்டிகர் : மத்திய அமைச்சர் அம்பிகா சோனி ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியிட்ட அம்பிகா சோனி மற்றும் சிரோண்மணி அகாலிதள பொதுச்செயலாளர் பல்விந்தர் சிங் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக, பஞ்சாப் சட்டசபை செயலாளர் வேத் பிரகாஷ் தெரிவித்தார். |
தமிழகம் | சட்டவிரோதமாக குடியேறும் தொழிலாளர்கள் : மலேசியா கவலை | சென்னை : மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்நாடு கவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள மலேசிய தூதர அதிகாரி ஒருவர் கூறுகையில், மலேசியாவில் உள்ள 20 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களில் 3 லட்சம் பேர் சட்டவிரோதமாக அங்கு குடியேறியவர்கள் என்று தெரிவித்துள்ளார். |
தமிழகம் | சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் கொடியேற்றம் | சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, இன்று நடந்த கொடியேற்று விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு, இன்று கடக லக்கினத்தில் சிற்சபை எதிரிலுள்ள கொடி மரத்தில் உற்சவ மூர்த்திகளான பஞ்ச மூர்த்திகள், உள், வெளி பிரகாரங்கள் வலம் வந... |
இந்தியா | பெட்ரோல் விலை: மத்திய குழு ஜூன் 17ல் கூடுகிறது | புதுடில்லி : பெட்ரோல் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்வது தொடர்பாக விவாதிக்க, மத்திய அதிகார குழு வரும் ஜூன் 17ம் தேதி மீண்டும் கூடுகிறது. கடந்த முறை இக்குழு கூட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து எந்த முடிவும் எடுக்காமல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. |
தமிழகம் | செம்மொழி மாநாடு : கல்லூரி, பல்கலை.,களுக்கு 3 நாள் விடுமுறை | சென்னை : கோவையில் நடக்கவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வரும் ஜூன் 23, 24 மற்றும் 25 ஆகிய 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கணேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோவையில், கோடை விடுமுறை ... |
தமிழகம் | கடலில் காணாமல் போனவர்களை கண்டறிய புதிய கருவி | சென்னை : கடலில் மீன்பிடிக்கச்சென்று காணாமல் போகும் மீனவர்களை கண்டறியும் புதிய கருவியை இஸ்ரோ கண்டுபிடித்துள்ளது. சாட்டிலைட் மூலம் இந்த கருவி அளிக்கும் சிக்னல்கள், மீன்பிடிக்கச் சென்று ஆழ்கடலில் சிக்கியிருக்கும் மீனவர்களை கண்டறிய பெரிதும் உதவும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. |
இந்தியா | நடிகையுடனான நித்யானந்தா சி.டி., உண்மையானதே : சி.ஐ.டி., | பெங்களூரு : நடிகை ஒருவருடன் சாமியார் நித்யானந்தா உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி., உண்மையானதே என கர்நாடக சி.ஐ.டி., உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் எந்த வித திருத்தங்கள் செய்யப்படவில்லை எனவும், அதில் வரும் காட்சிகள் அனைத்தும் உண்மையே எனவும் அவர் தெரிவித்துள்ளார். |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.