category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
ரேஷனில் ஊழியர் பற்றாக்குறை பொருள் வழங்குவதில் சிக்கல்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் விற்பனையாளர் பற்றாக்குறையால் பெரும்பாலான ரேஷன் கடைகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இயங்குகின்றன. இதனால் மக்கள், பொருள் வாங்க அலைய வேண்டியுள்ளது.அருப்புக்கோட்டையில் 11 ரேஷன் கடைகளும், புளியம்பட்டி கூட்டுறவு பண்டக சாலையின் கீழ் 12 கடைகளும் உள்ளன. சில ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் இல்லாதத...
தமிழகம்
ஸ்ரீவி.,யில் தேரோட்டத்திற்கு முன் ரதவீதிகளை செப்பனிட வலியுறுத்தல்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் தேரோட்டத்திற்கு முன், வடக்கு ரதவீதியை செப்பனிட வேண்டுமென இந்து முன்னணியினர் வலியுறுத்தி உள்ளனர். ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயிலில் இந்து முன்னணி கூட்டம் நடந் தது. நகர தலைவர் சண்முக நாதன் தலைமை வகித் தார். ஒன்றிய தலைவர் லட்சுமணன் முன்னிலை வகித்தனர். ஆண்டாள் கோயிலின் ஆடி தேரோட...
தமிழகம்
நாமக்கல்லில் 7 போலி டாக்டர்கள் கைது
நாமக்கல் : நாமக்கல்லில் 7 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் சேத்தமங்கலம் அருகே பியுசி மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்த்த துரைசாமி என்பவரை ஜமலாபுரம் போலீசார் கைது செய்தனர். எருமைபட்டி அருகே வரகூர் என்ற இடத்தில் பி.ஏ., படித்து விட்டு பாஸ்கரன் என்பவர் மருந்து கடை வைத்து மருத்துவம் பார்த்தது தெர...
தமிழகம்
ஸ்ரீவி., அருகே போலி குளிர்பானங்கள் தயாரித்த இருவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி.,யில் போலி குளிர்பானங்கள் தயாரித்த இருவரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவி., கம்மாப்பட்டியில் சிறிய அறையில் இயங்கி வந்த குளிர்பான ஆலையை, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். பிரபல குளிர்பான கம்பெனிகளின் காலி பாட்டில்களில் இங்கு தயாரிக்கப்பட்ட குளிர்பானங்களை அ...
தமிழகம்
தொண்டு நிறுவனத்தினரை சிறைபிடித்த மகளிர் சுயஉதவிக்குழு: போலீஸ் மீட்பு
தளவாய்புரம்: வங்கிக் கடன் வாங்கியவர்களிடம் எல்.ஐ.சி., நோட்டீஸ் அனுப்பியதால் தளவாய்புரம் அருகே தொண்டு நிறுவனத்தினரை மகளிர் சுயஉதவிக்குழுவினர் சிறைபிடித்தனர். நக்கனேரியில் ஐந்து மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு தலா 3 லட்சம் வீதம், நிறைமதி தொண்டு நிறுவனம் சார்பில் ராஜபாளையம் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா 15 லட்ச ரூபாய் கடன் வ...
தமிழகம்
குற்றால சீசனுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா
ராஜபாளையம்: குற்றால சீசன் துவங்கியுள்ள நிலையில், கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூனிலிருந்து ஆகஸ்ட் வரை குற்றால சீசன் களை கட்டியிருக்கும். நடப்பாண்டில் சற்று தாமதமாக குற்றால சீசன் துவங்கியுள்ளது. தென்காசியில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் குற்றாலம் உள்ளது. இதனால் சென்னை, விழுப்புரம், ...
தமிழகம்
ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பல்லடம் : அடிப்படை வசதி செய்து தரக்கோரி, தியாகி ரத்தினசாமி நகர் பொதுமக்கள், பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தியாகி ரத்தினசாமி நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆறு ஆண்டுகளாக சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி உள்...
தமிழகம்
பூட்டியிருந்த வீட்டில் 12 பவுன் நகை திருட்டு
திருப்பூர் : திருப்பூரை அடுத்துள்ள பாரப்பாளையத்தில் பூட்டியிருந்த வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், 12 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் பாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். நேற்று காலை இவரது குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால், மகேந்திரனும், அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு குழந்...
தமிழகம்
மன்னார் வளைகுடாவில் பலத்த காற்று கடல் சீற்றத்தால் மீனவர்கள் அச்சம்
கீழக்கரை:மன்னார் வளைகுடாவில் நேற்று மாலை பலத்த காற்று வீசியதால், கடல் சீற்றம் ஏற்பட்டது.பருவமழை தொடங்கிய நிலையில், தென்மாவட்டங்களில் பரவலான மழை இருந்தும், கடலோர ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து அனல் காற்று வீசியது.நேற்று மாறுதலாக மதியம் முதல் குளிர்ந்த காற்று வீசியது. மன்னார் வளைகுடாவில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்...
தமிழகம்
ஆய்வு
காரியாபட்டி: காரியாபட்டியில் பணிக்குறிப்பு பாலம், அல்லிக்குளம், தர்மாபுரம் தார் ரோடு, வக்கணாங்குண்டு கிராமத்தில் நூலகம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை ஊரக வளர்ச்சித்துறை மாநில கண்காணிப்பு பொறியாளர் கோபால்சங்கர் ஆய்வு செய்தார். செயற்பொறியாளர் அருண், உதவி செயற்பொறியாளர் மாரியப்பன், பி.டி.ஓ.,க்கள் லலிதா, பாலசுப்பிரமணியன், யூன...
தமிழகம்
வர்த்தக சங்கம் கோரிக்கை
சாத்தூர்: சாத்தூர் வர்த்தக சங்க பொது செயலாளர் பி.டி.கே. பாலசுப்பிரமணியன் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு அனுப்பிய மனு: பி.எஸ்.என்.எல்., தரைவழி சேவை போன்களுக்கு வாடகையை குறைத்து, இலவச அழைப்புகளை அதிகரிக்கவும், மொபைல் போன் தொடர்பு கிடைப்பதில் உள்ள நடைமுறை சிக்கலை தீர்க்க வேண்டும். இவ்வாறு கோரியுள்ளார்.
தமிழகம்
அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் ரூ.70.70 லட்சத்தில் அமைகிறது
அவிநாசி : அவிநாசி வட்டார பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கையான பிரேத பரிசோதனை கூடம், விரைவில் அமைக்கப்பட உள்ளது.அவிநாசியில் சேவூர் ரோட்டில் அரசு மருத்துவமனை உள்ளது. 42 படுக்கை வசதி, அவசர சிகிச்சைப் பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு, காசநோய் பிரிவு, மகளிர் மருத்துவம் ஆகிய வசதிகளுடன் செயல்பட்டு வரும் இம்மருத்துவமனையில் தினமும்...
தமிழகம்
நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
விருதுநகர்: அண்ணா தொழிற் சங்க நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் விருதுநகரில் நடந்தது. மாவட்ட தொழிற் சங்கத் தலைவர் ஜி. பெருமாள் சாமி தலைமை வகித்தார். செயலாளர் கே.கே. பாண்டியன் முன்னிலை வகித்தார்.பொருளாளர் பூவிழிராஜா வரவேற்றார். மத்திய அமைச்சர் ராஜாவை பதவி நீக்கம் செய்யக்கோரி விருதுநகர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் வரும் 1...
தமிழகம்
மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வினியோகம்
திருப்பூர் : நல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், இரண்டாம் கட்டமாக வரும் 14, 15ம் தேதிகளில் அடையாள அட்டை வினியோகிக்கும் பணி நடக்கிறது.உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீடு அடையாள அட்டை வினியோகிக்கும் பணி, இரண்டாம் கட்டமாக நல்லூரில் துவங்கியுள்ளது. முதல்கட்டமாக, 4,000 அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக...
தமிழகம்
ஆலோசனை கூட்டம்
சத்திரப்பட்டி: சங்கரபாண்டியபுரத்தில் சாலியர் இளைஞர் பேரவை, கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைவர் முருகபூபதி தலைமை வகித்தார். அறக்கட்டளை பொறுப்பாளர் கதிர்வேல் முன்னிலை வகித்தார். வரும் 13ம் தேதி ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், எழுதுபொருட்களை இலவசமாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. உறுப...
தமிழகம்
இலவச நோட்டு புத்தகம் வழங்கல்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகர முத்தரையர் உறவின் முறை டிரஸ்டின் மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது. மகளிர் குழு நிர்வாகி லதா, குத்து விளக்கேற்றினார். அமைப்பாளர் ஜெயக்கொடி வரவேற்றார். நிறுவனர் சின்னகருப்பன் வரவு, செலவு கணக்கு வாசித்தார். தேர்தல் அலுவலர் ராமச்சந்திரன், துணை தலைவர் குரு...
தமிழகம்
வர்த்தக நோக்கில் செயல்படும் மாநகராட்சி
திருப்பூர் : கலை நிகழ்ச்சி, கல்வி தொடர்பான நிகழ்வுகள், பயனுள்ள பொழுதுபோக்கு அம்சங்களை நடத்துவதற்காக, இலவசமாக வழங்கப்பட்ட டவுன்ஹால் பகுதியை மாநகராட்சி நிர்வாகம், வர்த்தக நோக்கில் பயன்படுத்தி வருகிறது. அதை மாற்றி, இலக்கிய நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ம...
தமிழகம்
தொடர்கிறது, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கட்டட இடிபாடுகளை அகற்ற தாமதம்
அவிநாசி : அவிநாசி கடை வீதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் பணி இரண்டாம் நாளாக நேற்றும் தொடர்ந்தது. இடிக்கப்பட்ட கட்டுமான பொருட்களை அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.அவிநாசி வழியே தேசிய நெடுஞ்சாலை எண்: 47 செல்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், இவ்வழியாக கடந்து செல்வதால், அடிக்கடி போக்க...
தமிழகம்
தண்ணீரில் மிளகாய் மாசு மக்கள் புகார்
விருதுநகர்: விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு பகுதி மக்கள் நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு மாசு கலந்த தண்ணீருடன் வந்தனர். சாஸ்திரி நகரில் உள்ள வீடுகளில் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டுள்ளது. மஞ்சள் கலரில் மிளகாய் நெடியுடன் தண்ணீர் வருகிறது. மேலும் பலர், மிளகாய் வத்தல் நெடியால் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு காரணம் அ...
தமிழகம்
தலைமை அரசு மருத்துவமனை முன் ஆக்கிரமிப்பு அகற்றியும் பயனில்லை
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனை முன்பிருந்த ஆக்கிரமிப்பை நெடுஞ்சாலைத் துறை அகற்றியது; அப்பகுதியை ஆக்கிரமித்து ஆம்புலன்ஸ் நிறுத்தப்படுவதால், தாராபுரம் ரோட்டில் மீண்டும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.பெரிச்சிபாளையத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை உள்ளது. மருத்துவமனையின் முன்பகுதியில் செல்லு...
தமிழகம்
காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
விருதுநகர்: மாவட்டத்தில் சமையல் காஸ் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் ஜூன் 19ல் நடக்கவுள்ளது. முகவர்களிடம் நுகர்வோர்கள் சிலிண்டர் பதிவு செய்வதில் மெத்தனப்போக்கு, முறைகேடுகள், சப்ளையில் தாமதம் குறித்த புகார்களை முகவர்களிடம் நேரடியாக விளக்கம் பெற்று குறைகள் களையப்படவுள்ளது. நுகர்வோர்கள் கலந்து கொண்...
தமிழகம்
குடிமங்கலம் பகுதியில் வறட்சியால் தென்னை மரங்கள் காயும் பரிதாபம்
உடுமலை : பருவ மழை தாமதித்து வருவதால் குடிமங்கலம் பகுதியில் வறட்சி அதிகரித்து, போதிய தண்ணீர் கிடைக்காமல் தென்னை மரங்கள் காயும் நிலை ஏற்பட்டுள்ளது. காய்கறி சாகுபடி முற்றிலுமாக குறைந்துள்ளது. குடிமங்கலம் பகுதியில் பிரதானமாக உள்ள விவசாய சாகுபடிக்கு தென்மேற்கு பருவமழை உதவுகிறது. ஆண்டுதோறும் மே மாத இறுதியில் துவங்கும் இந்த ம...
தமிழகம்
விதிமுறை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து
வால்பாறை : வால்பாறையில் விதிமுறையை மீறி சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து புதிய பஸ் ஸ்டாண்டு வரை சாலையோரத்தின் இருபுறமும் போக்குவரத்து விதிமுறையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் வால்பாறை காந்திசிலை வளாகத்திலிருந்து ஸ்டேன்மோர் சந்திப்ப...
தமிழகம்
காரியாபட்டியில் கூடுதல் வங்கி கிளைகள் தேவை
காரியாபட்டி: காரியாபட்டியில் கூடுதலாக அரசுடமையாக்கப் பட்ட வங்கிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரியாபட்டியில் ஸ்டேட் வங்கி, பாண்டியன் கிராம வங்கி உள்ளன. எப்போதும் வாடிக்கையாளர் கூட்டம் அதிக அளவில் உள்ளது. ஸ்டேட்வங்கி ஏ.டி. எம்.ல் சம்பளம் எடுப்பதால் நீண்ட நேரம் வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். தற்போது கிராமப்...
தமிழகம்
தவிப்பு! போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் கரைப்புதூர் ஊராட்சியில் மக்கள் அவதி
பல்லடம் : கரைப்புதூர் ஊராட்சியில் குடிநீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது; போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல், அவ்வூராட்சி மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், 30 ஆயிரம் மக்களுக்கு ஒரே ஒரு துப்புரவு பணியாளர், ஆறு குடிநீர் வினியோகிப்பாளர்கள் மட்டும் உள்ளதால், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற டியாமல் தவியாய், தவிக்கிறது, ஊராட்சி ...
தமிழகம்
சாமளாபுரத்தில் மறியல்
சோமனூர் : காளிபாளையத்தில் முறையாக குடிநீர் கிடைக்காமல் தவித்த பொதுமக்கள், சாமளாபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சாமளாபுரம் பேரூராட்சி எட்டு மற்றும் 10 வது வார்டு காளிபாளையம் கிராமத்தில் பல நாட்களாக அத்திக்கடவு குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட காளிபாளையத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்ற...
தமிழகம்
கண் தானம் செய்த 102 வயது மூதாட்டி
திருப்பூர் : உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு வயது தடையில்லை என்பதை, 102 வயது மூதாட்டி அலமேலு அம்மாள் உணர்த்தியுள்ளார்.திருப்பூர், அமராவதிபாளையத்தைச் சேர்ந்தவர் திருவேங்கடம்; விவசாயி. இவரது மனைவி அலமேலு அம்மாள்; திருவேங்கடம், கடந்த 1947ல் இறந்தார். அதன்பின், அலமேலு அம்மாள், கொங்கு நகர் நான்காவது வீதியில் உள்ள, தனது பேர...
தமிழகம்
வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு மா.கம்யூ., தர்ணா போராட்டம்
திருப்பூர் : வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் பூலவாரி சுகுமார் நகரில் மா.கம்யூ., சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது; மா.கம்யூ., கிளை செயலாளர் சையத் முஸ்தபா தலைமை வகித்தார்.பூலவாரி சுகுமார் நகர், சத்யா நகர், காயிதே மில்லத் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆண்டுகளாக வசித்து வரும்...
தமிழகம்
விபத்தில் இருவர் பலி, பஸ் டிரைவருக்கு சிறை
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே தோணுகாலைச் சேர்ந்தவர் சீனிவாசன் (25). அங்குள்ள தனியார் நூற்பு மில்லில் பஸ் டிரைவராக இருக்கிறார். இவர் 2008 மே 21ம் தேதி அதிகாலை 5 மணிக்கு மில் வேலைக்கு பஸ்சில் ஆட்களை ஏற்றிக் கொண்டு கோபாலபுரம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து வந்த பாலையம்பட்டி செல்வரா...
தமிழகம்
பிளஸ் 2 உடனடி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி... உயர்கல்வியை தொடர வாய்ப்பு அளிக்கிறது க
விருதுநகர்: பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இலவசமாக சிறப்பு பயிற்சி அளிக்க மாவட்ட கல்வி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 213 பேர் தேர்வு எழுதினர். 23 ஆயிரத்து 342 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் கணிதத்தில் 427 பேர், வணிகவியலில் 119, கணக்கு பதிவியியலில் 42, வேதியி...
தமிழகம்
இலவச தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
விருதுநகர்: மாவட்டத்தில் 2009-10 ம் ஆண்டிற்கான தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மற்றும் மதம் மாறிய ஆததிராவிட கிறிஸ்தவர் இனத்தை சார்ந்தவர்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஏ.சி., மெக்கானிக், டீசல் மெக்கானிக் படிப்பிற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தோல்வியடைந்தவர்களுக்கு 12 மாத பயிற்சி அளிக்கப்படும். ...
தமிழகம்
நில ஆர்ஜித வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் ஸ்ரீவி., தாசில்தார் அலுவலகம் ஜப்தி !
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி.,யில் நில ஆர்ஜித வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் தாசில்தார் அலுவலகம் ஜப்தி செய்யப்பட்டது. ராஜபாளையத்தை சேர்ந்தவர் அங்காள ராஜா. இவருக்கு சம்மந்தபுரம் கிராமத்தில் 0.26 எக்டேர் நிலம் இருந்தது. இதை, ஆதி திராவிடர்களுக்கான காலனி கட்ட 1993ல் அரசு கையகப்படுத்தியது. அப்போது ஏக்கருக்கு 15 ஆயிரம் வீதம் வழ...
தமிழகம்
தொழிலதிபரிடம் ரூ.6 லட்சம் மோசடி
சாத்தூர்: சாத்தூர் பைபாஸ் ரோட்டில் கெமிக்கல் நிறுவனம் நடத்தி வருபவர் கோவிந்தராஜன் மகன் மகேந்திரன் (25). இவரிடம் குளோரைடு வாங்கி தருவதாக கூறி சிவகாசி முத்துராமன், இவரது மனைவி சாரதாதேவி, மற்றும் சின்னகுட்டி ஆகியோர் வங்கி காசோலைகள் 6 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் வாங்கி ஏமாற்றினர். பணத்தை திருப்பி கேட்டபோது வேலையாட்கள் மூலம் க...
தமிழகம்
மனைவி கடத்தல்: கணவர் புகார்
விருதுநகர்: விருதுநகர் அல்லம்பட்டி பாரதிநகரை சேர்ந்தவர் பாலமுருகன்(39). இவரது மனைவி பரமேஸ்வரி(30). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு கேரளா குமுளி, முருக்கடி பகுதியை சேர்ந்த ரமேஷ் பிட்டராக வேலை பார்த்து வந்தார். ரமேஷ், பரமேஸவரியை கடத்தி சென்றுவிட்டதாக பால...
தமிழகம்
தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம்
விருதுநகர்: விருதுநகரில் மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம் ஜூன் 13 காலை 10 மணிக்கு நடக்கிறது. மாவட்ட அவைத் தலைவர் கே.பி.எஸ். பாண்டியன் தலைமை வகிக்கிறார். இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு பேசுகின்றனர்.
தமிழகம்
விழிப்புணர்வு ஊர்வலம்
காரியாபட்டி: தோனுகால் அசேபா பள்ளியில் சுற்று சூழல் விழிப்புணர்வு ஊர்வலத்தை தலைமை ஆசிரியை அமிர்த கவுரி துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.மல்லாங்கிணர்: மல்லாங்கிணர் எம்.எஸ்.பி.,செந்தில்குமார நாடார் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தேவசகாயம் முன்னிலையில், பரிபாலனசபை தலைவர் தங்கையா துவக்கி வைத்தார். மரக்...
தமிழகம்
விருதுநகரில் தண்டவாளத்தை கடக்க முயற்சி ! ரயிலில் சிக்கி குழந்தை உட்பட மூவர் பலி..
விருதுநகர்: விருதுநகரில் மூடிய ரயில்வே கேட்டை தாண்டி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் சிக்கி குழந்தை உட்பட மூன்று பேர் பலியாகினர். விருதுநகர் தந்திமரத் தெருவில் உள்ள ரயில்வே கேட் நேற்று பகல் 12.35 மணிக்கு மூடப்பட்டது. அப்போது மதுரை-செங்கோட்டை ரயில், இந்த கேட் பகுதியை கடந்து சென்றது. இந்த ரயில் சென்ற அடுத்த நொடியில...
தமிழகம்
தமிழ் செம்மொழி மாநாடு பணி அலுவலர்களுக்கு பயணப்படி
விருதுநகர்: தமிழ் செம்மொழி மாநாடு பணிகளுக்கு செல்லும் போலீசார், அரசு அதிகாரிகளுக்கு பயணப்படி, உணவுக்கட்டணம், தினப்படி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23 முதல் 28 வரை கோவையில் நடக்கிறது. பாதுகாப்பு பணிக்காக பல மாவட்டங்களில் இருந்து போலீசார், தீயணைப்புத் துறையினர் கோவை வரவழைக்கப்பட்டுள்ளனர். இதே ப...
தமிழகம்
நுகர்வோர் மண்டல அலுவலர்கள் பணி விண்ணப்பிக்க யாருக்கும் ஆர்வமில்லை, கடைசி தேதியை நீட்டித்து உத்தரவு!
விருதுநகர்: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் நுகர்வோர் மன்றங்களை வலுப்படுத்த நுகர்வோர் மண்டல அலுவலர், ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க யாரும் ஆர்வம் காட்டாததால், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்கு மண்டலங்களாக பிரித்து சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய பகுதிக...
தமிழகம்
சிவகாசி அருகே போலி டாக்டர்கள் மூவர் கைது: 4 பேர் தப்பி ஓட்டம்!
சிவகாசி: சிவகாசி சுகாதார மாவட்டத்தில் போலி டாக்டர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். நான்கு பேர் தப்பியோடி விட்டனர். சிவகாசி பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் ஆலோசனைபடி சிவகாசி, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியங்களில் சோதனை நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்குளத்தை சேர்ந்தவர் ரவீந்திரன்(46). ...
தமிழகம்
பட்டப்பகலில் பெட்ரோல் பங்க்கில் கொள்ளை
அவனியாபுரம்: பெட்ரோல் பங்க்கில் பட்டப்பகலில் கொள்ளையடித்த நபர்களை மதுரை அவனியாபுரம் போலீசார் தேடிவருகின்றனர். மதுரை அவனியாபுரம் அருகே மீனாட்சிநகர் பஸ்ஸ்டாப் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் கேஷியராக இருப்பவர் பாலமுருகன்(27). நேற்று மதியம் 2.30 மணிக்கு மூன்று நபர்கள் பைக்கில் பெட்ரோல் போட பங்க் வந்தனர். அங்கு ஐநூறு ரூபாய் ...
தமிழகம்
மதுரை ரயில்வே ஸ்டேஷன் குடியிருப்பு பகுதியில் தீ !
மதுரை: மதுரை ரயில்வே குடியிருப்பு பகுதியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினரின் துரித நடவடிக்கையால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. மதுரை ரயில்வே ஸ்டேஷன் கிழக்கு நுழைவு வாயிலின் இடதுபுறம் ரயில்வே தபால் அலுவலகம் உள்ளது. இதனருகே ரயில்வேயின் பழைய வீடுகள் பயன்படுத்தப்படாமல் பூட்டப்பட்டன. சில வீடுகளில் ஊழிய...
தமிழகம்
வீடு புகுந்து திருட்டு
மேலூர்: தனியாமங்கலத்தை சேர்ந்தவர் செல்வம் மனைவி வசந்தா(32). செல்வம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தனது மகனின் படிப்பிற்காக வசந்தா மேலூர் காந்தி நகரில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வாசற்கதவு மற்றும் பீரோவை உடைத்து இரண்டரை பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாயை யாரோ த...
தமிழகம்
குற்றால சீசன் நிலவரம்
குற்றாலம் : குற்றாலத்தில் நேற்று காலை 9 மணியளவில் பலத்த சாரலுடன் சுமார் 20 நிமிடங்கள் மழை பெய்தது. தொடர்ந்து இதமான தென்றல் காற்று வீசியது. மதியம் 12 மணியளவில் மீண்டும் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. மாலையில் அருவிக்கு மேலே கருமேக கூட்டங்கள் ஒன்றுதிரண்டு அவ்வப்போது சாரல் மழை பொழிந்தது. மெயின் அருவியில் மிதமாக தண்ணீர...
தமிழகம்
ஐகோர்ட் கிளை முன் வக்கீல்கள் மறியல்
மதுரை: மதுரை ஐகோர்ட் கிளையில், தமிழை ஐகோர்ட் அலுவல் மொழியாக்க வலியுறுத்தி வக்கீல்கள் நேற்று மூன்றாவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். அவர்களுக்கு ஆதரவாக வக்கீல்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. ஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி வக்கீல் பகத் சிங் தலைமையில் ஆறு பேர் காலவர...
தமிழகம்
திருமணத்திற்கு பிறகும் தொல்லை கொடுத்ததால் கொன்றோம் : கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம்
ஆலங்குளம் : திருமணத்திற்கு பிறகும் எனது பெண்ணிற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் பூலாங்குளம் ஆட்டோ டிரைவரை அடித்துக் கொன்றதாக கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த 10ம் தேதி அதிகாலை ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளத்தில் ஆட்டோ டிரைவர் மாடக்கண்ணு என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பூலாங...
தமிழகம்
சாலை விபத்து ஒருவர் பலி
சமயநல்லூர்: தேனூரை சேர்ந்தவர் கருப்பணமணியம் (65). இவர் நேற்று காலை தேனூர் சேம்பர் அருகே சென்றபோது, அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார்.சமயநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
வாகன விபத்து ஒருவர் பலி
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே கட்டகுளம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (32). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிகிறார். நேற்று டூவீலரில் கட்டகுளம் பிரிவு பகுதியில் வரும் போது, அடையாளம் தெரியாத வாகனம் டூவீலரில் மோதியது. லோகநாதன் (ஹெல்மெட் அணியவில்லை) தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். வாடிப்பட்...
தமிழகம்
மாநகராட்சிகளுக்கு அரசு உத்தரவு
மதுரை: பிளாட்பாரங்களில் படுக்கும் பிச்சைக்காரர்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, அவர்களுக்கு உறைவிடங்கள் ஏற்படுத்தித் தருமாறு மாநகராட்சிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னையில் சில மாதங்களுக்கு முன், ரோட்டில் படுத்திருந்தவர்கள் அவ்வப்போது கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாததால் போலீசாருக்கு...
தமிழகம்
ரேஷன் அரிசி கடத்தல் 40 மூடை பறிமுதல்
மதுரை: மதுரையில் சிவில் சப்ளை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் ரேஷன் அரிசி கடத்திய மினி லாரி, 40 மூடை அரிசி பறிமுதல் செய்யப்பட்டன. உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏட்டு சுப்பிரமணி, வருவாய் ஆய்வாளர் தெய்வேந்திரன் மற்றும் அலுவலர்கள் சிந்தாமணியில் மாலை 6 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் வந்த மினி லா...
தமிழகம்
தமிழகத்தில் காங்., ஆட்சி அமைந்திட இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் : மதுரை மேற்கு எம்எல்ஏ., பேச்சு
தென்காசி : தமிழகத்தில் காங்., தலைமையிலான ஆட்சி அமைவதற்கு ராகுல் எடுக்கும் முயற்சிக்கும் உழைப்பிற்கும் இளைஞர்கள் ஒத்துழைப்பு தரவேண்டுமென மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ., ராஜேந்திரன் தெரிவித்தார். கடையநல்லூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., சார்பில் தொகுதி எம்எல்ஏ., பீட்டர் அல்போன்ஸ் 60வது பிறந்த தினவிழாவை முன்னிட்டு நலத்திட்ட...
தமிழகம்
அலங்காநல்லூரில் மூன்று போலி டாக்டர் ; ஆறு மருந்து கடை உரிமையாளர்கள் கைது!
அலங்காநல்லூர்: சித்த மருத்துவம் படித்து விட்டு ஊசி போட்டு வந்த மூன்று போலி டாக்டர் உட்பட ஆறு மருந்து கடை உரிமையாளர்களை போலீசார் கைது செய்தனர். டாக்டர்கள் ரத்னசுந்தரம், வேல்முருகன், தனசேகரன், மீனாட்சி சுந்தரம், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், பவுன், எஸ்.ஐ., ரவிச்சந்திரன் உட்பட மருத்துவ துறை இன்ஸ்பெக்டர் அடங்கிய குழுவினர் மர...
தமிழகம்
கோர்ட் அவமதிப்பு வழக்கில் பதிலளிக்க, பள்ளி செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவு!
மதுரை: கோர்ட் உத்தரவை அமல்படுத்தாதமைக்காக சோழவந்தான் காமராஜ் நடுநிலை பள்ளி செயலாளர் பதிலளிக்கும் படி, மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அனுப்பியது. இப்பள்ளி தலைமையாசிரியை மணிமேகலை தாக்கல் செய்த கோர்ட் அவமதிப்பு வழக்கு: மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அனுமதியுடன் தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட்டேன் பள்ளி செயலாளர் சுந்தரபாண்டியன் ...
தமிழகம்
விவசாய பயிர்களுக்கு நிவாரணம் இல்லை !
மதுரை: வறட்சி, வெள்ளத்தில் பாதிப்பு போன்ற இயற்கை சீற்றங்களால் விவசாயப் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது, அரசு நிவாரணம் இனிமேல் வழங்காது. அனைத்து பயிர்களுக்கு காப்பீடு செய்ய, அரசு மானியம் தருகிறது. அது தவிர குறைந்தளவு பிரீமியம் செலுத்தினால் போதும். பயிர்க் காப்பீடு செய்தால், இழப்பு ஏற்படும் போது பயிருக்குரிய தொகையை இ...
தமிழகம்
மூதாட்டி கொலை
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஒன்றியம் வஞ்சிப்பட்டியைச் சேர்ந்த கஸ்தூரியின் மனைவி லட்சுமி(70). இவரது மகன்கள் இருவரும் திருமணமாகி மதுரையில் வசித்தனர். சில ஆண்டுகளுக்கு முன் கஸ்தூரி இறந்துவிட ,வஞ்சிப்பட்டியில் உள்ள வீட்டில் லட்சுமி தனியாக வசித்தார். நேற்று காலை 11 மணி வரை அவர் வீட்டை விட்டு வெளியே வராததால், அருகில் வசிப்ப...
தமிழகம்
காதுகேட்கும் திறன் அறியும் முகாம்
மதுரை: மதுரை அண்ணாநகர் குப்தா ஆடிட்டோரியம் அருகில் உள்ள ஏ.எச்.ஏ.பி., சென்டர் சார்பில், இன்று இலவச காது கேட்கும் திறன் அறியும் பரிசோதனை முகாம் நடக்கிறது. காது கேட்பதில் பிரச்னை உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம். விபரங்களுக்கு 0452-253 3568 ல் தொடர்பு கொள்ளலாம்.
தமிழகம்
மனு நீதி முகாம்
மதுரை: மதுரை வடக்கு தாலுகா சமயநல்லூர் அருகே தேனூரில் ஜூலை 14 ல் கலெக்டர் தலைமையில் மனு நீதி முகாம் நடக்க உள்ளது. இதை ஒட்டி ஜூன் 15 ல் தேனூரில் முன் மனு நீதி முகாம் நடக்கிறது. இதில் பட்டா மாறுதல், பட்டா புத்தகம், இலவச வீட்டுமனை, நில ஒப்படைப்பு, ரோடு, குடிநீர் உட்பட பல்வேறு உதவிகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம் என, தாசில்...
தமிழகம்
தினமலர் செய்தி எதிரொலி: பாலம் அகலப்படுத்தும் பணி!
மதுரை: மதுரை எஸ்.எஸ். காலனி வடக்கு வாசல் அருகே தேனி தேசிய நெடுஞ்சாலையில் குறுகிய பாலம் அமைந்துள்ளது. இப்பாலத்தால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி "தினமலர்' செய்தி வெளியிட்டது. இப்பாலத்தை அகலப்படுத்த தேசிய நெடுஞ்சாலை நடவடிக்கை எடுக்காததால், மாநகராட்சியே இப்பணியை...
தமிழகம்
கிளம்பிய ரயிலில் இருந்து குதித்த மூதாட்டி பலி
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் கழிவறையை மூதாட்டி ஒருவர் பயன்படுத்தி கொண்டிருந்தார். அப்போது ரயில் கிளம்பியதால் பயத்தில் கீழே குதித்தார். இதில் ரயிலில் சிக்கி பலியானார். மதுரை ரயில்வே ஸ்டேஷன் எட்டாவது பிளாட் பாரத்தில் ராஜஸ்தானை சேர்ந்த சிலர் தங்கியுள்ளனர். கைக்குழந்தைகளுடன் சென்று பிச்சை எடுத...
தமிழகம்
கவிழிப்பு! மாநகராட்சியில் ஒருவரைப் பற்றி மற்றவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் படும்பாடு...
மதுரை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஒருவரை மற்றவர் கவிழ்க்கும் கொடுமை, மதுரை மாநகராட்சியில் அரங்கேறுகிறது. சுய நிதி நிர்வாகம் உள்ள மற்ற அரசு துறைகளைப் போல் மதுரை மாநகராட்சியிலும் ஏகப்பட்ட "பாலிடிக்ஸ்'கள் உள்ளன. சில அதிகாரிகள், தங்களுக்கென தனி "கோஷ்டி'களை வைத்துக்கொள்கின்றனர். வேண்டப்பட்டவர்களைப் பிடித்...
தமிழகம்
ஏர்வாடியில் 14 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை மாயமான வழக்கு பைசல்; ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் 14 ஆண்டுகளுக்கு முன் மூன்று மாத குழந்தை மாயமான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, பைசல் செய்தது. குழந்தையை அடையாளம் தெரிந்து கண்டுபிடிக்க இயலாது எனவும் கருத்து தெரிவித்தது. நாகபட்டினத்தை சேர்ந்த விஜயா தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு: எனக்கு ஒரு பெண், மூன்று மாத ஆண் குழந்தை இ...
தமிழகம்
யானையின் தந்தத்தை வெட்டியதை தட்டி கேட்டவரை கொலை செய்தவருக்கு ஆயுள்.. ஐகோர்ட் கிளை உறுதி!
மதுரை: தூத்துக்குடி மாவட்டம், திருக்காளூரில் கோயில் யானை தந்தத்தை வெட்டியதை தட்டி கேட்டவரை, கொலை செய்தவருக்கு செஷன்ஸ் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை மதுரை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது.திருக்காளூரை சேர்ந்தவர் செந்தில். இவர் இங்குள்ள கோயில் யானையின் துணை பாகனாக பணிபுரிந்தார். பாகனாக பெருமாள் பணிபுரிந்தார். கோயிலுக்கு அடிக்க...
தமிழகம்
இலவச நெட் செட் பயிற்சி
மதுரை: மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில், பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதவியோடு இலவச நெட் செட் பயிற்சி நடைபெற உள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, யு.ஜி.சி நெட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். ஜூன் 14 ஆம் தேதி காலை 10 மணி முதல் 1.15 மணி வர...
தமிழகம்
கோர்ட் புறக்கணிப்பு
திருமங்கலம்: மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், தமிழில் வழக்கு நடத்த அனுமதிக்க வேண்டி மதுரை வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதற்கு ஆதரவு தெரிவித்து திருமங்கலம் வக்கீல் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் கேசவன் தலைமையில் வக்கீல்கள் நேற்று ஒருநாள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
தமிழகம்
பெங்களூரு - திருச்சி சிறப்பு ரயில் ஜூலை வரை நீட்டிப்பு
சென்னை:பெங்களூரு - திருச்சி இடையே தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில், ஜூலை 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில், திருச்சியிலிருந்து பெங்களூருக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்.0669) ஜூலை 12ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சியிலிருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை...
தமிழகம்
பாரத ஸ்டேட் வங்கிக்கு அபராதம்
சென்னை:சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த புருஷோத்தமன், திருவல்லிக்கேணியில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்திற்கு எதிராக, நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு:பாரத ஸ்டேட் வங்கி அலுவலர்களுக்கான, "ஸ்வர்ண கங்கா' குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எனக்கும், என் மனைவி விஜயலட்சுமிக்கும், "எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ...
தமிழகம்
புதுச்சேரியில் நாணயவியல் கண்காட்சி
புதுச்சேரி: தொண்டை மண்டல நாணயவியல் கழகம் சார்பில், தொல்லியல் மற்றும் நாணயவியல் கண்காட்சி துவங்கியது.புதுச்சேரி தொண்டை மண்டல நாணயவியல் கழகத்தின் சார்பில், அமைப்பின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா மற்றும் செம்மொழி மாநாட்டையொட்டி, தொல்லியல் மற்றும் நாணயங்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கண்காட்சி நாளை (13ம் தேதி) வர...
தமிழகம்
ரயில்வே பணியிடம்: 10 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்
புதுடில்லி : இரண்டாயிரம் உதவி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களை நிரப்புவதற்காக நாளை  நடக்கவுள்ள தேர்வில், 10 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். ரயில்வே ஸ்டேஷன்களில் காலியாக உள்ள 2,042 உதவி ரயில்வே ஸ்டேஷன் மாஸ் டர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு நாளை தேர்வு நடக்கிறது. நாடு முழுவதும் 1,907 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடக்...
தமிழகம்
ராஜபக்ஷேவுக்கு எதிர்ப்பு? : தமிழ் அமைப்புகளிடம் விசாரணை
விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள பேரணியில்இன்று அதிகாலையில் ரயில் தண்டவாளம் வெடி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. முதற் கட்ட விசாரணையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இச்சம்பவத்தை நிகழ்த்தி இருக்கல்லாம் என்ற அடிப்படையில் போலீசார் தமிழ் அமைப்புகளிடம் விச...
தமிழகம்
கால்நடைகளால் வனவிலங்குகளுக்கு நோய் அபாயம்
கூடலூர்: தேக்கடி வனப்பகுதியை ஒட்டி குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்குள்ள பசுக்கள், எருமைகள், ஆடுகள் அருகில் உள்ள படகு நிறுத்தப்பகுதி, இடையர்பாளையம் உள்ளிட்ட வனப்பகுதி வரை மேய்ச்சலுக்கு செல்கின்றன. இப்பகுதிகளில், யானை, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக நடமாடுகின்றன. மேய்ச்சலுக்காக செல்லும் கால்நடைகள், வனவிலங்குகளை ஒ...
தமிழகம்
சத்தியமூர்த்திபவனில் காங்., தேர்தல் அதிகாரிகள் இன்று ஆலோசனை
சென்னை:தமிழக காங்கிரசில் 43 மாவட்டத் தலைவர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலை நடத்த சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களின் பொதுக்குழு உறுப்பினர்கள் (பி.சி.சி.,)...
தமிழகம்
குண்டு வைத்து தண்டவாளம் தகர்ப்பு ; புலி ஆதரவாளர்கள் கைவரிசை; 2 ஆயிரம் பேர் உயிர் தப்பினர்
விக்கிரவாண்டி: விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. முன்கூட்டியே தகவல் கிடைத்ததால் சென்னை சென்ற ரயில் தப்பியது. இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் வருகைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் புலி ஆதரவு அமைப்புகள் இந்த சதி வேலையை நடத்தியிருக்கின்றனர். மேற்குவங்கத்தில் மாவோ., நக்சல்கள் ரயிலை தகர்த்து ந...
தமிழகம்
தண்டவாளம் சரி செய்யப்பட்டு ரயில்கள் இயக்கம்
விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள பேரணி என்ற இடத்தில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து தடைபட்டது. தண்டவாளம் தற்காலிகமாக சரி செய்யப்பட்டு ரயில்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன.
இந்தியா
சட்டீஸ்கரில‌் போலீஸ் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்
ராய்பூர் : சட்டீஸ்கரில் போலீஸ் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் கடந்த ஏப்ரல் 6ம் தேதியன்று நடந்த நக்சல்கள் தாக்குதலில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 75 பேர் இறந்தனர். இந்த விவகாரம் குறித்து ராம் மோகன் கமிட்டி விசாரணை மேற்கொண்டது. அந்த கமிட்டியின் பரிந்துரைப்படி , போலீஸ் எஸ...
General
உலக கோப்பை கால்பந்து : தொடக்க ஆட்டத்தில் தெ.ஆப்பிரிக்கா - மெக்சிகோ டிரா
ஜோகனஸ்பர்க் : உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது .  முதலாவது ஆட்டத்தில் ஏ பிரிவில் தென்ஆப்பிரிக்கா-மெக்சிகோ அணிகள் மோதின. 55-வது நிமிடத்தில் தென்ஆப்பிரிக்கா முதலாவது கோலினை போட்டது. அடுத்து 79-வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் கேப்டன் ரபெல் மார்கிஹீஸ் பதில் கோல் அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். இதன் ...
தமிழகம்
கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி மாரத்தான் ஓட்டம்
கோவை : கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. கோவை பி.ஆர்.எஸ்., மைதானத்தில் மாரத்தான் ஓட்டம் தொடங்கியது. போட்டியை ராஜ்யசபா எம்.பி., கனிமொழி தொடங்கி வைத்தார். அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி,பாரதியார் பல்‌கலை துணை வேந்தர் சாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். மாரத்தான் ஓட்டம் அண்ணா சிலை,...
தமிழகம்
கூடலூரில் யானை தாக்கி முதியவர் பலி
கூடலூர் : கூடலூரில் யானை தாக்கி முதியவர் ஒருவர் பலியானார். கூடலூர் முதுமலை புலிகள் காப்பகம் அருகே இருக்கும் பகுதியில் இன்று காலையில் முதியவர் ஒருவரை யானை தாக்கியது. இதி்ல் அவர் பலியானார். இறந்தவர் சுப்ரமணியம் (60) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தமிழகம்
திருக்குவளை அண்ணா பல்கலை., இன்ஜி., கல்லூரிக்கு 17 கோடி ரூ. நிதியுதவி
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் கல்லூரி கட்டுமான பணிகளுக்காக தமிழக அரசு ரூ. 17 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக , அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ருக்மணி தெரிவித்தார். திருக்குவளையில் இன்று உலகத் தழி்ழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு திரள் ஓட்டம் ...
இந்தியா
ஸ்ரீநகரில் பதட்டம்
ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட கலவரத்தில் சிறுவன் ஒருவன் இறந்தான். கற்கலை வீசி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். அப்போது துபாயில் அஹமது மட்டூ என்ற சிறுவனை போலீசார் துப்பாக்கியின் பின் புறத்தால் ஓங்கி அடித்து தாக்கியதால், அவன் அதே இடத்தில் இறந்து விட்டதாக...
தமிழகம்
தங்கம் விலை சற்று உயர்ந்தது
சென்னை : இரண்டு நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூபாய் ஆயிரத்து 748 க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் 13 ஆயிரத்து 984 க்கு விற்கப்படுகிறது.
தமிழகம்
மருத்துவ மாணவர்கள் ரேங்க் பட்டியல் வெளியீடு
சென்னை : மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான மாணவர் தர வரிசைப் பட்டியல் (ரேங்க் பட்டியல்) வெளியிடப்பட்டது. 13 பேர் 200க்கு 200 பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர். அமைச்சர் பன்னீர்செல்வம் தரவரிசையைப் பட்டியலை வெளியிட்டார். மருத்துவ கல்லூரிகளில் சேர மொத்தம் 18 ஆயிரத்து 131 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். மாணவர்கள் 6 ஆய...
தமிழகம்
விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு விசாரணை க்யூ., பிராஞ்ச் போலீசுக்கு மாற்றம்
விழுப்புரம் : விழுப்புரத்தில் தண்டவாளம் தகர்க்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை க்யூ., பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. டி.ஜி.பி., லத்திகா சரண் இத்தகவலை வெளியிட்டார். தண்டவாளத்தை தகர்க்க பயன்பட்ட வெடிப்பொருள் உள்ளூரில் பயன்படுத்தும் பொருள் எனவே தண்டவாள தகர்ப்புக்கு உள்ளூர்வாசிகள் தொடர்பு இருக்கலாம் என போலீஸ் ...
தமிழகம்
போலி டாக்டர் வேட்டை இன்றும் தொடர்கிறது
சென்னை : தமிழகம் முழுவதும் போலி டாக்டர் தேடுதல் வேட்டை இன்றும் தொடர்கிறது. நேற்று மொத்தம் 171 பேர் கைது செய்யப்பட்டனர். இன்று கரூரில் 7 பேர், காஞ்சிபுரத்தில் ஒருவர், நாமக்கல்லில் 7 பேர், அரியலூரில் 5 பேர், ஈரோட்டில் 4 பேர், தஞ்சையில் 12 பேர் என மொத்தம் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம்
அணைக்கரையில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
சென்னை : தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரையில் அ.தி.மு.க., சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடை‌பெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அணைக்கரையில் கொள்ளிடம் பாலம் பழுதடைந்துள்ளது. இதனால் சென்னை - கும்பகோனம் இடையேயான போக்குவரத்து பா‌திக்கப்பட்டுள்ளது. ‌நெடுஞ்சாலைத்துறையில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டும் ப...
தமிழகம்
சென்னையில் மேலும் 24 மணி நேரத்துக்கு மழை
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் வெப்ப சலனம் காரணமாக சென்னையில் மேலும் 24 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம்
பாரிமுனை பூக்கடைகளுக்கு சீல் : வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
சென்னை : சென்னையில் இன்று காலையில் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் பாரிமுனை பந்தர் தெருவில் பூ விற்பனை செய்யக்கூடாது எனக் கூறி போலீசார் உதவியுடன் ஒரு கடைக்கு சீல்வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடை சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார...
தமிழகம்
சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் நேரம் மாற்றம்
சென்னை : விழுப்புரத்தில் விஷமிகளால் ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்டதால் சென்னை எழும்பூருக்கு இன்று காலை ரயில்கள் தாமதமாக வந்தது. இங்கிருந்து புறப்படும் சில ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. வைகை எக்ஸ்பிரஸ் மதியம் 12.30 மணிக்கு பதில் 1.40 மணிக்கு புறப்பட்டது. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இரவு 7.15-க்கு பதில் 8.20 மணிக்கும்,...
தமிழகம்
கோவையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
சென்னை : கோவையில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏழை எளிய மக்களுக்காக கோவை அரசு பொது மருத்துவமனையில் கூடுதல் கட்டிடங்கள் கட்டித் தருதல் மற்றும் இதய அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகிய இரு பிரிவுகளை அமைத்துத் தருதல், மருந்துகள் வாங்குதல் ஆகியவற்றிற்கு உடனடியாக போதுமான நிதி ஒதுக்கித்...
தமிழகம்
மருத்துவ மாணவர் ரேங்க் பட்டியல் வெளியீடு
சென்னை : மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான மாணவர் தர வரிசைப் பட்டியல் (ரேங்க் பட்டியல்) வெளியிடப்பட்டது. 13 பேர் 200க்கு 200 பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர். அமைச்சர் பன்னீர்செல்வம் தரவரிசையைப் பட்டியலை வெளியிட்டார். மருத்துவ கல்லூரிகளில் சேர மொத்தம் 18 ஆயிரத்து 131 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். மாணவர்கள் 6 ஆய...
தமிழகம்
அமைச்சர் வாசன் வருகைக்காக காத்திருந்த குழந்தைகள்
சென்னை : சென்னையில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழாவில் அமைச்சர் வருகைக்காக குழந்தைகள் 1 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்தனர். சென்னையில், நடந்த விழாவில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்கள் மற்றும் காலணிகளை மத்திய அமைச்சர் வாசன் வழங்கினார். இதற்கான விழாவினை ஏற்பாடு செய்தவர்கள் காலை 9.30 மணி விழாவிற்க...
தமிழகம்
மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா
சென்னை: தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளிகளில் பயின்று தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு அமைச்சர் அன்பரசன் பரிசுகள் வழங்கினர். அருகில் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் திருவாசகம், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அரசு முதன்மைச் செயலர் பிரபாகர ராவ்.
தமிழகம்
பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம் துவங்கியது
பாட்னா : பா.ஜ., தேசிய செயற்குழு 2 நாள் கூட்டம் பாட்னாவில் இன்று துவங்கியது. பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி தலைமையிலான ஆ‌லோசனை கூட்டத்தில் பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி, அருண் ஜெட்லி, வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
General
16 சிறுவர்களை கத்தியால் குத்திய சீனருக்கு மரண தண்டனை
பீஜிங் : கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி ,சீனாவில் குவாங்டோங் மாநிலத்தில் உள்ள தொடக்கப்பள்ளிக்கூடத்தில் புகுந்த 33 வயதான சீனர் ஒருவர் 16 சிறுவர்களையும், ஒரு ஆசிரியரையும் கத்தியால் குத்தினார். இதில் அவர்கள் தலை, முதுகு, கைகள் ஆகிய இடங்களில் காயம் அடைந்தனர். இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்ட காங்பிங் சென் என்பவன் மீது...
தமிழகம்
டுவென்டி - 20 கிரிக்கெட் : 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
ஹராரே : இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதலாவது டுவென்டி - 20 கிரிக்கெட்  போட்டி ஹராரேயில் நடந்து வருகிறது.  டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20  ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க...
இந்தியா
பா.ஜ., தேசிய செயற்குழு விருந்து : நிதீஷ் புறக்கணிப்பு
பாட்னா : பாட்னாவில் நடந்து வரும் பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தின் விருந்து நிகழ்ச்சியை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் புறக்கணித்துள்ளார். தன்னுடன் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கைகோர்த்துள்ளது போன்ற படத்தை தனது அனுமதியின்றி வெளியிட்டுள்ளதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர் விருந்து நிகழ்ச்சியை புறக்க...
General
அமெரிக்காவில் ஆற்றில் விழுந்து இந்திய மாணவன் பலி
வாஷிங்டன் : ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அமெரிக்காவில் ஆற்றில் மூழ்கி பலியானார். ஆந்திராவைச் சேர்ந்தவர் சசி சேகர் குன்டா(26). இவர் அமெரிக்காவில் புர்லிங்டன் நகரத்தில், வினூஸ்கி ஆற்றில் தன் நண்பர்களுடன் குளித்துள்ளார். குளித்து முடித்த பின், அவரைத் தவிர பிறர் கரையேறியுள்ளனர். இச்சம்பவம் ஜூன் 5ம் தேதியன்று நடந்துள்...
தமிழகம்
ராமேஸ்வரத்தில் வைகாசி அமாவாசை
ராமேஸ்வரம் : வைகாசி அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில், பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி, இன்று அதிகாலை முதலே வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள், நீண்ட கியூவில் காத்திருந்து, கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி, ராமநாதசுவாமி, பர்வதவர்த்தனி அம்பாளை தரிசனம் ச...
தமிழகம்
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது
பெரம்பலூர் : கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தையடுத்த அத்தியூர் குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ (40). இவரது மனைவி பெரியம்மாள் (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உண்டு. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ராஜூ வெளிநாட்டு வேலைக்கு சென்றுள...
தமிழகம்
செம்மொழி மாநாடு பாதுகாப்புக்கு ஆளில்லா உளவு விமானம்
கோவை : கோவையில் நடக்கவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பாதுகாப்பு பணிக்காக, தமிழகத்தில் முதன்முறையாக, ஆளில்லா சிறியரக உளவு விமானம் பயன்படுத்தப்படவிருப்பதாக, ஏ.டி.ஜி.பி., ராதா கிருஷ்ணன் தெரிவித்தார். வரும் 19ம் தேதி முதல் இந்த உளவு விமானம் செயல்படத்துவங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகம்
அரியலூர் எம்.எல்.ஏ., அமரமூர்த்தியின் தம்பி மகன் கடத்தல்
அரியலூர் : அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தியின் தம்பி மகன், மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அரியலூர் மாவட்டம், காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தியின் தம்பி பழனிச்சாமி, திருமானூர் பாளையப்பாடியில் வசித்து வருகிறார். பழனிச்சாமியின், இளைய மகன் தர்மதுரை (14), கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், ஒன்பதாம்...