category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | கிராண்ட் பிரிக்ஸ் பாட்மின்டன் : இறுதிப்போட்டியில் நுழைந்தார் செய்னா | சென்னை : இந்திய கிராண்ட் பிரிக்ஸ் பாட்மின்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு செய்னா நேவால் தகுதி பெற்றார். இன்று நடந்த அரையிறுதிப்போட்டியில், அவர் இந்தோனேஷியாவின் அப்ரிலியா யூஸ்வான்டாரியை 21-17, 21-11 என்ற நேர் செட்டில் வென்று இறுதிப்போட்டியில் நுழைந்தார். |
தமிழகம் | குற்றாலத்தில் சீசன் களை கட்டியது | திருநெல்வேலி : குற்றாலத்தில் இன்று குளுகுளு சீசன் நிலவியது. அருவிகளில் போதுமான அளவு தண்ணீர் விழுந்தது. திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்திலேயே குளுகுளு சீசன் களை கட்டிவிடும். இந்த முறை தென்மேற்கு பருவமழையின் தாமதமான துவக்கத்தால் இன்னமும் சீசன் முழுமையாக களை கட்டாத நிலை உள்ளது. நேற்று மால... |
தமிழகம் | சி.பி.சி.ஐ.டி., வழக்குகள் ஒரே கோர்ட்டில் தாக்கல் | திண்டுக்கல் : தமிழகத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குகளை அந்தந்த மாவட்டத்திலுள்ள ஒரே கோர்ட்டில்(ஜே.எம்.,கோர்ட்) தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில கொலை,கொள்ளை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.இந்த வழக்குகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட் 1, 2, 3 என... |
தமிழகம் | நார்வே நாட்டு கூண்டு மீன்பிடி குறித்து மீனவர்களுக்கு பயிற்சி | ராமேஸ்வரம் : நார்வே நாட்டு நவீன கூண்டு மீன்பிடிப்பு முறை குறித்து ராமேஸ்வரம் மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதியில் நார்வே நாட்டில் பயன்படுத்தப்படும் நவீன கூண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மீன்பிடிப்பு தொழில்நுட்ப பயிற்சி மையம் மற்றும் டாடா நிறுவ... |
இந்தியா | சொல்கிறார்கள் | வாழ்க்கையில் தோல்வி; அரசியலில் வெற்றி! சென்னை மாநகர மேயர் சுப்ரமணியன்: வாணியம்பாடி அருகில் ஒரு சின்னக் கிராமம் என் சொந்த ஊர். என் சின்ன வயசுலேயே அம்மா இறந்துட்டாங்க. அப்பாவிற்கு ஏரி, குளங்களில் மீன் பிடிக்கிற வேலை. பல நாட்கள் சாப்பாட்டிற்கே கஷ்டமா இருக்கும். ஐந்தாம் வகுப்பு வரை ஊர்ல படித்தேன். பின், சென்னையில் உள்ள அக்... |
தமிழகம் | இது உங்கள் இடம் | ஊழலற்ற பெண் முதல்வர் வரட்டும்! அ.குணா, புவனகிரியிலிருந்து எழுதுகிறார்: ஜோதிபாசு முதல்வர் பதவியை விட்டு என்று ஒதுங்கினாரோ, அன்றே மேற்கு வங்கத்தில் கொஞ்சம், கொஞ்சமாக தனது வலிமையை இழக்கத் தொடங்கியது மார்க்சிஸ்ட். தொடர்ந்து, மேற்கு வங்கத்தை 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டு வரும் இடதுசாரிகளுக்கு, என்றும் சிம்ம சொப்பனமாக இருந்து ... |
General | உலககோப்பை கால்பந்து போட்டி: அர்ஜென்டினா வெற்றி | ஜொகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் 19 வது உலக கோப்பை போட்டி தொடரில் அர்ஜென்டினா-நைஜீரியா இடையேயான ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. |
தமிழகம் | செம்மொழி மாநாடு பாதுகாப்புக்கு 40 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் | உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பாதுகாப்பு திட்ட ஆய்வு மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டம், தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் கோவையில் நேற்று நடந்தது. பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் 40 ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பணி பொறுப்புகள் வரையறுக்கப்பட்டு, முன்னேற்பாடு நடவடிக்கைகள் அங்குலம், அங்குலமாக அலசி ஆராயப்... |
தமிழகம் | ராமேஸ்வரத்தில் வைகாசி அமாவாசை | ராமேஸ்வரம் : வைகாசி அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில், பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி, நேற்று அதிகாலையில் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள், நீண்ட கியூவில் காத்திருந்து, கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி, ராமநாதசுவாமி, பர்வதவர்த்தனி அம்பாளை தரிசனம் செ... |
தமிழகம் | பெருகிவரும் ஏ.டி.எம்.,கள் - தீருமா குளறுபடிகள்? | அரசு வங்கிகளும், தனியார் வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு, புற்றீசல்போல் ஏ.டி.எம்., மையங்களை நிறுவி வருகின்றன. வேகமான இன்றைய வாழ்க்கைச் சூழலில், ஏ.டி.எம்., மையங்கள் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் வசதியை ஏற்படுத்தி வந்தாலும், இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதையும் மறுக்க முடியாது.
அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங... |
தமிழகம் | பைக் மீது வேன் மோதி 2 பேர் பலி | திருநெல்வேலி : அம்பாசமுத்திரம் அருகே வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பலியாயினர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் உள்ளது கீழஆம்பூர். இந்த ஊரைச்சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் குமார்(23) ஸ்டாலின்(26) சுப்பிரமணியன்(21). இவர்களில் ஒருவருக்கு மொபைல் போன் வாங்குவதற்காக ... |
தமிழகம் | இஸ்ரேல் தொழில் நுட்பத்தில் உற்பத்தியாகும் கொய்மலர்கள் | தாண்டிக்குடி : இஸ்ரேல் தொழில் நுட்பத்தில் அமைந்த பசுமைக்குடிலில், கொய்மலர் நாற்று நடவு பணி துவங்கியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில், இஸ்ரேல் நாட்டில் வடிவமைக்கப்பட்ட பசுமைக்குடில்களின் உதவியுடன் , அந்நாட்டு தொழில் நுட்பத்தில் கொய்மலர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் தரமான கொய்மலர்கள் கிடைக்கின்றன.
பசு... |
தமிழகம் | வால்பாறையில் கன மழை | வால்பாறை : வால்பாறையில் நேற்று முன் தினம் இரவு முழுவதும் பெய்த கன மழையால், பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
வால்பாறையில் நேற்று முன் தினம் இரவு,பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால், பொள்ளாச்சி-வால்பாறை மெயின் ரோட்டில் வாட்டர்பால் பகுதியில் ... |
இந்தியா | முல்லை பெரியாறு அணை பிரச்னை :போராட்டக்குழு - விவசாயிகள் சந்திப்பு | தேக்கடி : முல்லைப் பெரியாறு அணை சம்பந்தமாக தமிழக - கேரள மக்களிடையே நிலவி வரும் தவறான எண்ணங்களை களையவும், பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், போராட்டக் குழுவினரும், தமிழக மூத்த விவசாயிகளும் நாளை மறுநாள் சந்தித்து பேச, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக - கேரள எல்லையில், கேரளாவில் தேக்கடி அருகே முல்லைப் பெரியாறு அணை உள்ளது.... |
இந்தியா | சபரிமலை நடை நாளை திறப்பு | சபரிமலை : சபரிமலை அய்யப்பசுவாமி நடை நாளை (14ம் தேதி) மாலை திறக்கப்படும். ஆனி மாத பூஜைகளுக்கு பின் 19ம் தேதி இரவு அடைக்கப்படும்.சபரிமலை அய்யப்ப சுவாமி கோவில் நடை, மாதாந்திர பூஜைக்காக, மாத முதல் நாட்களில் திறக்கப்படுவது வழக்கம். அதேபோல், ஆனி மாத பூஜைகளுக்காக நாளை மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். கோவில் தந்திரி கண்டரர... |
இந்தியா | மோடி- நிதீஷ் இணைந்த போட்டோ பிரசுரம்; விளம்பர ஏஜென்சி ஆபீசில் ரெய்டு | பாட்னா: குஜராத் மாநில அரசின் விளம்பரத்தில், மோடி - நிதீஷ் ஆகியோர் இணைந்திருப்பதாக போட்டோ பிரசுரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரம் தயார் செய்து கொடுத்த விளம்பர நிறுவன அலுவலகத்தில் போலீசார் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் விளம்பரம் தொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். தனது புகைப்படம் பயன்படுத்தப்பட்டதற்கு பீகார் முதல... |
இந்தியா | ரகசிய தகவல்கள் கசிகிறதா? ஊழியர்களை கண்காணியுங்கள் | மும்பை : உங்கள் கம்பெனி கம்ப்யூட்டர்களில் பதிவு செய்யப்பட்டுள்ள, ரகசிய தகவல்கள் திருடப்படுகின்றனவா? அப்படியானால், உங்கள் நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில், வேலை பார்க்கும் ஊழியர்களைக் கண்காணியுங்கள் இப்படி ஓர் ஆய்வு கூறுகிறது.
மென்பொருள் வடிவமைப்பில் புகழ் பெற்ற நிறுவனமான, "சிமென்டெக் இந்தியா', நாடு முழுவதும் உள்ள தொலைத... |
இந்தியா | சாமியார் நித்யானந்தா ஜாமீனில் விடுதலை : 44 நாட்களுக்கு பின் வெளியே வந்தார் | பெங்களூரு : கடந்த 44 நாட்கள் சிறையிலிருந்த சாமியார் நித்யானந்தா நேற்று மாலை ஜாமீனில் விடுதலையானார். ஆசிரம வாயிலில் போலீசாருக்கும், ஆசிரம நிர்வாகிகளுக்கும் இடையே பெரும் வாக்குவாதத்திற்கு இடையே, நித்யானந்தா ஆசிரமத்திற்குள் சென்றார்.
நடிகை ரஞ்சிதா - சாமியார் நித்யானந்தா வீடியோ காட்சிகள் பரபரப்பை உருவாக்கியது. இதை தொடர்ந்த... |
இந்தியா | வார்த்தைகளை அளந்து பேசுங்கள்: சுப்ரீம் கோர்ட் அறிவுரை | புதுடில்லி : ஐகோர்ட் நீதிபதிகள், தங்களுக்கு கீழுள்ள நீதிபதிகளையும், அவர்களின் பணிகளை பற்றியும் கருத்து தெரிவிக்கும் போது மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டுமென, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
நீதித்துறையிலும், லஞ்ச ஊழல் விவகாரங்கள் நுழைந்துவிட்டதாக சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அ... |
தமிழகம் | பட்டாசு கடைகளை மாற்றக் கோரிய வழக்கில் 10 ஆயிரம் ரூபாய் வழக்குச் செலவு விதிப்பு | சென்னை : பாரிமுனையில் உள்ள தெருக்களில் இருந்து தீவுத் திடலுக்கு பட்டாசு வியாபாரத்தை மாற்றக் கோரி, மீண்டும் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. மனுத் தாக்கல் செய்த "டிராபிக்' ராமசாமிக்கு 10 ஆயிரம் வழக்குச் செலவுத் தொகையும் விதிக்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த "டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த மனுவில், "வி... |
தமிழகம் | வழக்கு பதியாத இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு | மதுரை : தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் மாணவி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யாத இன்ஸ் பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும்படி எஸ்.பி.,க்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
பட்டுக்கோட்டையை சேர்ந்த கோவிந்தராஜ் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு:என் மகள், சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும... |
இந்தியா | காங்கிரஸ் தலைவர் சோனியா மீது காஷ்மீர் பழங்குடி மக்கள் கோபம்: பாரபட்சம் காட்டுவதாக புகார் | ஸ்ரீநகர்: காஷ்மீரில் வசிக்கும் பாக்ரி என்ற பிரிவைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், காங்கிரஸ் மீதும், அதன் தலைவர் சோனியா மீதும் கடும் கோபம் கொண்டுள்ளனர். தங்களிடம், காங்கிரஸ் பாரபட்சமாக நடந்து கொள்வதாக அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இதில், குஜ்ஜார் என்ற பிரிவைச் சேர... |
தமிழகம் | ரயிலை நிறுத்திய நான்கு பேருக்கு ரூ.5,000 ரொக்கப் பரிசு | சென்னை : மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்காமல், சாதுர்யமாக தடுத்து நிறுத்த காரணமாக இருந்த ரயில்வே கார்டு உட்பட நான்கு பேருக்கு 5,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் கார்டு ராஜசேகரன், டிரைவர் கோபிநாத், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் உதவி டிரைவர் ராஜ்குமார், முண்டியம்பாக்கம் ரயி... |
தமிழகம் | போலி டாக்டர்களை களையெடுக்கும் பணி தீவிரம்: 2வது நாளாக சோதனை | சென்னை : தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை களையெடுக்கும் பணி நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட போலிகள் சிக்கியுள்ளனர். கைது நடவடிக்கையை தொடர்ந்து, பல போலிகள் தங்கள் முகாம்களை காலி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் மருத்துவமனை... |
தமிழகம் | குண்டு வெடிப்பால் ரயில்கள் ஏழு மணி நேரம் தாமதம் | சென்னை : விழுப்புரம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து சென்னைக்கு வந்து சேர வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஏழு மணி நேரம் தாமதமாக வந்தடைந்தன.
சேலத்திலிருந்து சென்னை வரும் சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ் நேற்று அதிகாலை 2.20 மணிக்கு விழுப்புரம், சித்தணியைக் கடந்து சென்னை நோக்கி வந்தது. சித்தணியை ரய... |
இந்தியா | ரயில் பயணிகளிடம் கொள்ளை : கொள்ளையர்கள் தப்பியோட்டம் | விஜயவாடா : ஆந்திராவில் சிம்ஹாபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் புகுந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், பயணிகளிடமிருந்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
செகந்திராபாத் - கூடூர் இடையே ஓடும் சிம்ஹாபுரி எக்ஸ்பிரஸ் ரயில், ஆந்திரா கம்மம் மாவட்டத்தில் உள்ள மதிரா ரயில் நிலையத்திற்கு நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ச... |
தமிழகம் | ரேஷன் அரிசி கடத்தல்: 60 பேர் கைது | சென்னை : தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்திய 60 பேரை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 63 ஆயிரத்து 50 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியை வழங்கி வருகிறது. இந்த அரிசி ரேஷன் ஊழியர்கள் உடந்தையோடு, வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருவதாக... |
தமிழகம் | மலேசியாவுக்கு ஹெராயின் கடத்த முயன்ற பெண் கைது : மார்பகத்தில் வைத்து நூதன முறையில் திட்டம் | திரிசூலம் : சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கடத்த இருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை, விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில், நூதன முறையில் மார்பகத்தில் வைத்து ஹெராயினை கடத்த முயன்ற ஆந்திர பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 1.30 மணிக்கு மலேசியா செல்லும் ஏ... |
General | இரண்டு ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முந்தைய பிரமிடு கண்டுபிடிப்பு | சியாபாஸ் (மெக்சிகோ): மெக்சிகோவின் சியாபாஸ் மாநிலத்தில் 2,700 ஆண்டுகளுக்கு முந்தைய பிரமிடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள், அப்பகுதியில் மிகச் சிறந்த நாகரிகம் ஒன்று செழித்திருந்ததை எடுத்துக்காட்டுவதாக தொல்லியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.
வட அமெரிக்க கண்டத்தின் தென்பகுதியிலுள்ள மெக்சிகோ தொ... |
தமிழகம் | புலி ஆதரவாளர்கள் கொடூர திட்டம் : விழுப்புரம் அருகே குண்டு வைத்து ரயில் தண்டவாளம் தகர்ப்பு | விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நேற்று அதிகாலையில் ரயில் தண்டவாளம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. டிரைவரின் முன்னெச்சரிக்கை அறிவிப்பால் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்திலிருந்து தப்பியது. தண்டவாளத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட துண்டு பிரசுரங்களின் மூலம், இந்தக் கொடூரத் திட்டம், புலி ஆதரவா... |
தமிழகம் | கள்ளக் காதல் விவகாரம் :வாலிபர் சுட்டுக்கொலை | திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் படுகொலை செய்யப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலை தாம்பாத்தூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (25). இவரது மனைவி சற்குணம் (23). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன.சற்குணத்துக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வரா... |
இந்தியா | மனிதர்களுக்கான மருந்து சோதனைக்கு இதுவரை 15 கோடி விலங்குகள் பலி | மனிதர்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகள், ஆபத்தானவையா இல்லையா என்பது குறித்து சோதனை நடத்த விலங்குகளே பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையில், இதுவரை 15 கோடி விலங்குகள் ஆய்விற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
மனிதனின் பாரம்பரிய அமைப்பை ஆய்வு செய்வதற்கு வசதியாக இருப்பவை எலிகளே. இதனால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் விலங்குகளில் 90... |
இந்தியா | அழியும் தமிழைக் காக்க...: உரத்த சிந்தனை, இளசை சுந்தரம் | தமிழ் மொழி, செம்மொழி அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்ற நீண்ட நாள் ஆவல், நிறைவேறி இருக்கிறது. செம்மொழி என்ற அங்கீகாரத்தை ஒரு மொழி பெற வேண்டுமானால், பல அடிப்படைத் தகுதிகள் இருக்க வேண்டும். தொன்மை, தனித்தன்மை, புதுமைப் பண்பு, நடுநிலைமை, பன்மொழிகளுக்குத் தாய்மை, பட்டறிவு இலக்கியங்களைப் பெற்றிருத்தல் தனித்தன்மை, இலக்கிய வளம்... |
தமிழகம் | போபாலில் இருந்ததை தவிர எந்த பாவமும் செய்யவில்லை : பழநி பெண்ணின் சோகம் | பழநி : போபால் விஷவாயு கசிவால், பழநியை சேர்ந்த ஒரு குடும்பமும் பாதிக்கப்பட்ட விபரம் தெரிய வந்துள்ளது. மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் கடந்த 1984 டிச. 2ம் தேதி இரவு 11.30 மணிக்கு யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் மீத்தேன் ஐசோசயனைட் விஷவாயு கசிந்து, 20 ஆயிரம் பேர் பலியாயினர். 5.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
இவ்விபத்... |
தமிழகம் | பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ | தூத்துக்குடி : தூத்துக்குடி, டூவிபுரத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ்(50). குறிஞ்சி நகரிலுள்ள இவருக்கு சொந்தமான குடோனில், பழைய பிளாஸ்டிக் கழிவுகள், இரும்பு கழிவுகள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை ஒரு மணியளவில் ,அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் 1 லட்சம் ரூபாய் மதிப்புடைய பிளாஸ்டிக், இரும்பு கழிவுகள் கருகி ... |
தமிழகம் | இந்திய தம்பதிக்கு ஒபாமா புகழாரம் | வாஷிங்டன்: திறமையால் வாழ்க்கையில் உயர்ந்து, அமெரிக்கர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக இந்திய தம்பதிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா புகழாரம் சூட்டினார். அந்த தம்பதியை தான் இருந்த மேடைக்கு அழைத்து கவுரப்படுத்தினார். வெள்ளை மாளிகையின் மதிப்புமிக்க ரோஸ்கார்டன் அரங்கில் சிறு தொழில் முனைவோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.... |
General | கிர்கிஸ்தானில் இனக்கலவரம்: 50க்கும் மேற்பட்டோர் பலி | மாஸ்கோ: கிர்கிஸ்தானில் இரண்டாவது நாளாக நேற்றும் உள்நாட்டு கலவரம் தொடர்ந்தது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த கிர்கிஸ்தானில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் ஓஷ். இங்கு வசிக்கும் கிர்கிஸ் மற்றும் உஸ்பெக் மக்களுக்கு இடையே அடிக்கடி கலவரம் நடப்பது வழக்கம்.
கிர்கிஸ்... |
தமிழகம் | அமெரிக்காவில் ஆற்றில் விழுந்து இந்திய மாணவன் பலி | வாஷிங்டன்: ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அமெரிக்காவில் ஆற்றில் மூழ்கி பலியானார். ஆந்திராவைச் சேர்ந்தவர் சசி சேகர் குன்டா(26). இவர் அமெரிக்காவில் புர்லிங்டன் நகரத்தில், வினூஸ்கி ஆற்றில் தன் நண்பர்களுடன் குளித்துள்ளார். குளித்து முடித்த பின், அவரைத் தவிர பிறர் கரையேறியுள்ளனர். இச்சம்பவம் ஜூன் 5ம் தேதியன்று நடந்துள... |
தமிழகம் | வாழ்நாள் முழுவதும் வேலை கையிலிருப்பதால் மருத்துவப் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் | சென்னை : கடந்த ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்த மாணவர்கள் பலர், அப்படிப்பை கைவிட்டு பொறியியல் படிப்பில் சேர்ந்த நிலை மாறி, இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர பல மாணவர்கள் ஆர்வமுடன் உள்ளனர். இதனால், மருத்துவப் படிப்பிற்கான போட்டி கடுமையாகியுள்ளது.
மருத்துவக் கவுன்சிலிங்கிற்கான தரவரிசைப் பட்டியில் நேற்... |
தமிழகம் | சி.பி.சி.ஐ.டி., வழக்குகள் ஒரே கோர்ட்டில் தாக்கல் | திண்டுக்கல் : தமிழகத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குகளை அந்தந்த மாவட்டத்திலுள்ள ஒரே கோர்ட்டில்(ஜே.எம்.,கோர்ட்) தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த வழக்குகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட் 1, 2, 3 ... |
தமிழகம் | சர்ச்சை! ஆசிரியர் தேர்வு வாரியத்தில் குளறுபடி : முறைகேடுகள் தொடர்வதாக புகார் | ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சமீபத்திய செயல்பாடுகள், அதன் வெளிப்படைத் தன்மையில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 1,064 ஆசிரியர் பயிற்றுனர் தேர்வு முடிவில், ஏராளமானோருக்கு குறைந்த மதிப்பெண்களை வழங்கி பெரும் குளறுபடி செய்தது, முதலில் வெளியிட்ட முடிவுகளை திருத்தி, இரண்டாவதாக மீண்டும் ஒரு முறை முடிவுகளை வெளியிட்டது போன்றவற்றால், ... |
தமிழகம் | வீட்டு விலங்குகளால் வனவிலங்குகளுக்கு அபாயம் | கூடலூர் : தேக்கடி குடியிருப்பு பகுதியில் உள்ள வளர்ப்பு கால்நடைகள் மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு செல்வதால், வனவிலங்குகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தேக்கடி வனப்பகுதியை ஒட்டி குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
இங்குள்ள பசுக்கள், எருமைகள், ஆடுகள் அருகில் உள்ள படகு நிறுத்தப்பகுதி, இடையர்பாளையம் உள்ளிட்ட வனப்பகுதி வரை ... |
தமிழகம் | ஐந்து அங்குல ரேக்ளா வண்டி | பொள்ளாச்சி : கோவை மாவட்டம், பொள்ளாச்சி செல்லாண்டி கவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் விவசாயி தர்மலிங்கம் (57); மாற்றுத் திறனாளி. இவர், குழந்தைப் பருவத்திலேயே இளம்பிள்ளைவாத நோயால் பாதிக்கப்பட்டவர்.
கைவினைப் பொருட்களை தயாரிப்பதில் ஆர்வமுடையவர். இவர் தயாரித்துள்ள ஐந்து அங்குல அளவிலான ரேக்ளா வண்டி, கிராம மக்களிடம் அதிக வரவேற்பு... |
தமிழகம் | சிறப்பு ரயில் நீட்டிப்பு | சென்னை : பெங்களூரு - திருச்சி இடையே தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில், ஜூலை 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில், திருச்சியிலிருந்து பெங்களூருக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்.0669) ஜூலை 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சியிலிருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகால... |
தமிழகம் | குழந்தைகள் கடத்தல் லலிதா குண்டர் சட்டத்தின் கீழ் கைது | கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி குழந்தைகள் கடத்தல் வழக்கில் கைதான புதுச்சேரி மனித உரிமை கழகத்தின் தலைவி லலிதா, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த கிருஷ்ணகிரி தனலட்சுமி, சென்னை கிரிஜா அவரது கணவர் சிவா மற்றும் பாதிரியார்கள் அல்போன்ஸ் சேவியர், செல்வம் ஆக... |
தமிழகம் | மக்கள் தொகை இயக்குனர் நெல்லையில் ஆய்வு | திருநெல்வேலி : தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, இதுவரையிலும் 20 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக, கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் நெல்லையில் தெரிவித்தார். நெல்லையில் கணக்கெடுப்பு பணிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ரமண சரஸ்வதி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வில் ஈடுபட்டார். பின், அவர் கூறியதாவது:ஜூன் முதல் தேதி துவங்... |
தமிழகம் | எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., தேர்வுக்கான விண்ணப்பம் | மதுரை : மதுரை காமராஜர் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்கக எம்.பி.ஏ., எம்.சி.ஏ., நான் செமஸ்டர் தேர்வுக்கான விண்ணப்பத்தை, ஜூன் 30க்குள் அபராதமின்றி செலுத்தலாம். மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது. www.mkudde.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பெறலாம். தனித் தேர்வர்கள், கூடுதல் தேர்வாணையர் அலுவலகத... |
தமிழகம் | தேய்ந்து வரும் சிறப்பு பள்ளிகளின் கல்வித்தரம் :மாற்று திறனாளிகளின் எதிர்காலம் கேள்விக்குறி | பள்ளிக் கல்வியில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக உள்ளது. மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் பயனாகவே ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகள் இருப்பினும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நெல்லையைச் சேர்ந்த மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின் போன்றவர்கள் சாதித்துக் கா... |
தமிழகம் | வனப்பகுதியில் 1877 எக்டேர் ஆக்கிரமிப்பு அகற்றம் | மதுரை : தமிழக பகுதியில் வனப் பரப்பு 23 ஆயிரத்து 338 சதுர கிலோ மீட்டர். இதில் 4968 ச.கி.மீ., பரப்பில் மரங்கள் வனங்களுக்கு வெளியே அமைந்துள்ளதால், மாநிலத்தின் மொத்த வனம் மற்றும் மரப்பரப்பு 28 ஆயிரத்து 306 ச.கி.மீ., ஆக உள்ளது.இந்திய வன அளவை நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செயற்கைக்கோள் மூலம், மாநில வாரியாக வனம் மற்று... |
தமிழகம் | குறைந்த பாடங்களுடன் சமச்சீர் கல்வி புத்தகங்கள் : ஆசிரியர்கள் ஆதங்கம் | மதுரை : ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பில் அமல்படுத்தப்பட்ட சமச்சீர் கல்விப் பாடத் திட் டங்கள், கடந்தாண்டு மெட்ரிக் மற்றும் மாநில பாடத் திட்டத்தை விட தரத்தில் குறைந்தும், குறைந்த பாடங்களுடன் இருப்பதாக, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஐ.சி.எஸ்.இ., மற்றும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்களைத் தவிர, பிற பாடத் திட்டங்களை ஒன்றா... |
தமிழகம் | பெரியாறு அணை பகுதியில் மழை இல்லை : முதல்போக நெல் சாகுபடிக்கு சிக்கல் | கூடலூர் : தென்மேற்கு பருவ மழை துவங்கி பல நாட்களாகியும், பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவால் நீர்மட்டம் உயரவில்லை. இந்த ஆண்டும் கம்பம் பள்ளத்தாக்கில் நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இரு போக ந... |
தமிழகம் | நகராட்சியில் மின்சாரத்தை சேமிக்கும் திட்டம் : தேசிய மின் உற்பத்தி குழுமம் அறிமுகம் | சின்னமனூர் : நகராட்சி பகுதிகளில் தெருவிளக்கு, குடிநீர் வினியோகத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தை சேமிக்கும் திட்டம், தேசிய மின் உற்பத்திக் குழுமம் மற்றும் திறன் வள ஆதார அமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயில் 27 முதல் 34 சதவீதம் வரை, மின்சார கட்டணமாக செல்கிறது. இதனால், பல கிராம ஊராட்... |
இந்தியா | பிரதிபா பாட்டீலின் புதிய பாணி | ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்டன. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போல புகழ் பெற வேண்டும் என்பது பாட்டீலின் ஆசை. அதற்காக தன் பாணியை மாற்றிக் கொண்டுள்ளார். அடிக்கடி டூர் போகிறார். மக்களை சந்திக்கிறார்; குறிப்பாக இளைய சமுதாயத்தினரை அதிகமாக புகழ்ந்து பேசுகிறார். பிரதிபா பாட்டீலை சந்திக்க ... |
தமிழகம் | கள்ளக் காதல் விவகாரம் : வாலிபர் சுட்டுக்கொலை | திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் படுகொலை செய்யப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலை தாம்பாத்தூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (25). இவரது மனைவி சற்குணம் (23). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. சற்குணத்துக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வ... |
தமிழகம் | அறிவுத்திறன் போட்டி | குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை கிளை நூலகம் சார்பில் மாணவர்களுக்கான, கணிதம் மற்றும் ஆங்கில எழுத்து விடுதல் உள்ளிட்ட அறிவுத்திறன் போட்டி நடந்தன. பாளையம் பேரூராட்சி தலைவர் சக்திவேல் தலை மை வகித்தார். கிளை நூலகர் சுசீலா வரவேற்றார். போட்டியில் பங்கேற்ற மாணவர்களின் விடைத் தாள்கள், சென்னைக்கு அனுப்பப்பட்டன. பாளையம் துணைத்தலைவர... |
தமிழகம் | கழிப்பறை கட்டடம் நோயாளிகள் அதிருப்தி | ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கட்டி முடித்து பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டிய நிலையில் உள்ள பொது கழிப்பறை கட்டடம் சேதமடையும் நிலை உருவாகி உள்ளது.
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களுக்கும், புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுபவர்களுக்கும் என மருத்து... |
தமிழகம் | பாரத் பெட்ரோல் பங்க் திறப்பு விழா | ராமநாதபுரம் : ராமநாதபுரம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலை கோப்பேரி மடத்தில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் விற்பனை நிலையம் துவக்க விழா பாரத் பெட்ரோலிய மண்டல மேலாளர் கே.என்.சுரேஷ் முன்னிலையில் நடந்தது.
கலெக்டர் ஹரிஹரன் துவக்கி வைத்தார்.மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முனியசாமி, வக்கீல்கள் நாகராஜன், நடராஜன், முனியசாமி, ச... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | ஐ.ஜே.கே., கட்சியின் தலைவர் பச்சமுத்து பேச்சு: படித்தவர்கள் அரசியலைச் சாக்கடை என்று சொல்லி ஒதுக்கி விட்டதால் தான், இன்று எதற்கும் பயனற்றவர்கள் அரசியலுக்கு வந்து, படித்தவர்களுக்கான திட்டங்களை வகுக்கும் அவல நிலை வந்துவிட்டது.
தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: இலங்கை அதிபர் ராஜபக்ஷே, தமிழர்களை தங்கள் இடங்களில... |
தமிழகம் | தொடர் ஜோதி ஓட்டம் | சிவகங்கை : கோவை செம்மொழி மாநாட்டுக்கு, மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரியில் இருந்து தொடர் ஜோதி கொண்டு செல்லப் படுகிறது. இவ்விழா வரும் 14ம் தேதி கல்லூரியில் நடக்கிறது. |
தமிழகம் | ரோடு மறியல் 140 பேர் மீது வழக்கு | மானாமதுரை: மாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட மூங்கில் ஊரணியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியினர் நேற்று முன்தினம் காலை, இளையான்குடி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக இம்மானுவேல் சேகரன் பேரவையை சேர்ந்த சங்கர் அம்பேத்கர், காசிராஜன், மகாராஜன், அர்ச்சுணன், முர... |
தமிழகம் | கூட்டுறவு வங்கியில் ஒலித்த அபாய மணி | திருவாடானை : கூட்டுறவு வங்கியில் அதிகாலையில் அபாய மணி ஒலித்தது.திருவாடானை தெற்கு ரதவீதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில், நேற்று அதிகாலை இரண்டு மணிக்கு திடீரென அபாய மணி அலறியது. அலுவலக ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அரை மணி நேரம் மணி சத்தம் கேட்ட நிலையில் நின்றது.
போலீசார் மற்றும் ஊழியர்கள் கத... |
தமிழகம் | லாரி மோதி கொத்தனார் பலி | காரைக்குடி : கோட்டையூர், வேலங்குடியை சேர்ந்த கொத்தனார் பரமசிவம் (55). கடந்த 10 ம் தேதி காலை 8.30 மணிக்கு ராமலிங்கம் என்பவருடன் டூ வீலரில் காரைக்குடிக்கு சென்றார். (இருவரும் ஹெல்மெட் அணியவில்லை). திருச்சி ரோட்டில், பின்னால் வந்த டிப்பர் லாரி மோதி பரமசிவம் இறந்தார். இன்ஸ்பெக்டர் அண் ணாத்துரை விசாரிக்கிறார். |
தமிழகம் | சாலையோர பிளாட்பார கடைகளில் சுகாதாரமற்ற உணவுகள் | சாலையோர கடைகளில் விற்கப்படும், சுகாதாரமற்ற உணவு பொருட்களால் காலரா, வாந்தி, பேதி உட்பட பல்வேறு நோய்கள் சத்தமில்லாமல் பரவி வருகின்றன. சென்னை நகரில் வர்த்தக நிறுவனங்கள் பெருகி வருகின்றன. அதனால், சாலையோரத்தில் உள்ள பிளாட்பார கடைகளில், சாப்பிடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இடங்களில், சாலையை ஆக்கிரமித... |
தமிழகம் | பால் குட விழா | சிங்கம்புணரி : முறையூர் வடக்கு வாசல் செல்லாயி அம்மன் கோயிலில், பால் குடவிழா நடந்தது. மேல ஊரணி வரத விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். இரவு பூச்சொரிதல் நடந்தது. |
தமிழகம் | அடையாறு கரையோரம் குப்பை எரிப்பு: திருநீர்மலையில் சுகாதார சீர்கேடு | திருநீர்மலை: திருநீர்மலை பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், அடையாறு ஆற்றங்கரையோரம் கொட்டி எரிக்கப்படுவதால், அங்கு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், ஆற்றின் நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.
திருநீர்மலை பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், திருமுடிவாக்கம் செல்லும் சாலையில், அடை... |
தமிழகம் | மாற்று திறனாளிகளுக்கு விரைவில் வேலை | சென்னை: பூவிருந்தவல்லியில் உள்ள, பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கான, அரசு தொழிற்பயிற்சி மையத்தில், புத்தகம் கட்டுநர் பயிற்சி முடித்தவர்கள் 36 பேருக்கு, 2006ம் ஆண்டு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் வேலை வழங்கப்பட்டது.
அதே, தொழிற்பயிற்சி மையத்தில் படித்து பணி கிடைக்காத 38 பேர், கடந்த மாதம் 7ம் தேதி உண்ணாவிரதம் இ... |
தமிழகம் | விபத்தில் இருவர் பலி | காளையார்கோவில் : புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியை சேர்ந்தவர்கள் சின்னச்சாமி (26), முருகன் (30). பல்சர் பைக்கில், தொண்டியில் இருந்து மதுரைக்கு சென்றனர். (ஹெல்மெட் அணியவில்லை). காளையார்கோவில் அருகே அழகாபுரியில், மதியம் 3.30 மணிக்கு, எதிரே வந்த அம்பாசிடர் கார் மோதியது. காயம் அடைந்த இருவரும் மதுரை கொண்டு செல்லும் வழியி... |
தமிழகம் | ராமநவமி விழா | காரைக்குடி : ராம நவமி பொன்விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, வீணை இசை நடந்தது. வெள்ளையப்ப செட்டியார் தலைமை வகித்தார். கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். சங்கரய்யர் வரவேற்றார். தில்லை ஆச்சி வீணை, சுரேஷ் மிருதங்கம், சோலை கடம் வாசித்தனர். செயலாளர் சுந்தரராமன் நன்றி கூறினார். |
தமிழகம் | மலேசியாவுக்கு ஹெராயின் கடத்த முயன்ற பெண் கைது: மார்பகத்தில் வைத்து நூதன முறையில் திட்டம் | திரிசூலம்: சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கடத்த இருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை, விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில், நூதன முறையில் மார்பகத்தில் வைத்து ஹெராயினை கடத்த முயன்ற ஆந்திர பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 1.30 மணிக்கு மலேசியா செல்லும் ஏ... |
தமிழகம் | எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., தேர்வுக்கான விண்ணப்பம் | மதுரை : மதுரை காமராஜர் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்கக எம்.பி.ஏ., எம்.சி.ஏ., நான் செமஸ்டர் தேர்வுக்கான விண்ணப்பத்தை, ஜூன் 30க்குள் அபராதமின்றி செலுத்தலாம். மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது. www.mkudde.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பெறலாம். தனித் தேர்வர்கள், கூடுதல் தேர்வாணையர் அலுவலகத்... |
தமிழகம் | ரெப்கோ வங்கியில் இன்று சிறப்பு கடன் முகாம் | சென்னை: ரெப்கோ வங்கியில் சிறப்பு கடன் முகாம் சென்னை கிளைகளில் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து ரெப்கோ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கியின் சார்பாக சிறப்பு கடன் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரெப்கோ வங்கியின் சென்னை கிளைகளான அடையாறு, ஆழ்வார்பேட்டை,... |
தமிழகம் | திரு.வி.க., பாலத்தை சீரமைக்க நடவடிக்கை | சென்னை: திரு.வி.க., பாலத்தை 33 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடையாறு திரு.வி.க., பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்து மோசமான நிலையில் உள்ளதை, "தினமலர்' நாளிதழ் நேற்று முன்தினம் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டது. அதன் எதிரொலியாக, பாதசாரிகளின் பாதுகாப்பு கருதி, திரு.வி.... |
தமிழகம் | போலீஸ்காரர் மனைவியிடம் ஆறரை சவரன் செயின் பறிப்பு | பட்டாபிராம்: தனியாக நடந்து சென்ற போலீஸ்காரர் மனைவியிடம், பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் ஆறரை சவரன் தாலி செயினை பறித்துச் சென்றனர். பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி, முல்லை நகரைச் சேர்ந்தவர் குருநாதன். சென்னை புறநகர் ஆயுதப் படை போலீஸ்காரர். இவரது மனைவி பிரவீணா (24). நேற்று முன்தினம் மாலை, தனது குழந்தையுடன் வீட்டிற்கு அருகி... |
தமிழகம் | கண்ணகி நகர் நபர் கொலை வழக்கு: போலீஸ் காவலில் 4 பேரிடம் விசாரணை | துரைப்பாக்கம்: முன்விரோதம் காரணமாக, கண்ணகி நகரில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, கோர்ட்டில் சரணடைந்த நான்கு பேரை, மூன்று நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
துரைப்பாக்கம், கண்ணகிநகரில் வசிப்பவர் சரோஜா(50). இவரின் கணவர் அர்ச்சுனன். இவர்களுக்கு சாந்தி(28) என்ற மகளும், பழனி, செல்வம் என... |
தமிழகம் | முப்பெரும் விழா | தேனி : பொன்னம்மாள்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது. தீவிர மாணவர் சேர்க்கை வார விழா, பெற்றோர் ஆசிரியர் கழக விழா, இலவச பேட்ஜ் மற்றும் டை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாவில் மயிலாடும்பாறை உதவி தொடக்க கல்வி அலுவலர் தமிழன் தலைமை வகித்தார். வட்டார வள மைய
மேற்பார்வையாளர் விஜயகுமார் முன்னிலை ... |
தமிழகம் | பெண்ணை நிர்வாணமாக்கி கொடூர கொலை | கும்மிடிப்பூண்டி: பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற பெண், மறுநாள் காலை சாலையோர சேற்றில் கழுத்து அறுப்பட்டு நிர்வாணமாக கிடந்தார். கொடூரமாக கொலை செய்தவர்களை, ஆந்திர போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே பூதூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமிகாந்தன் மனைவி கோவிந்தம்மாள்(52). இறந்த உறவினருக்கு ... |
தமிழகம் | பெண்ணிடம் வழிப்பறி | திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி அம்பிகா (27). இவர் பட்டறை கிராமத்திலுள்ள தனது சித்தி சவுந்தரியின் வீட்டுக்கு 10ம் தேதி சென்றார். அங்கிருந்து இரவு 9 மணிக்கு வீடு திரும்பும் போது பட்டறை பெட்ரோல் பங்க் அருகில் அடையாளம் தெரியாத மூவர் அங்குள்ள தனியார் தொழிற்சாலை அருகே அழைத்து சென்று... |
தமிழகம் | தீ விபத்து | திருத்தணி: திருத்தணி டி.வி.புரம் லட்சுமி நகரில் உள்ளது டிசைன் கிளாசிக் தொழிற்சாலை. இத்தொழிற்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு பேக்கிங் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த 180 துணிப் பெட்டிகள் எரிந்து சாம்பலாயின. அவற்றின் மதிப்பு 50 லட்ச ரூபாய். தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்... |
தமிழகம் | காலியாகவுள்ள கல்வி அலுவலர் பணியிடம் | கம்பம் : கம்பம் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடம் பலமாதங்களாக காலியாகவுள்ளது. இங்குபணியாற்றிய ராஜாமாரீஸ் பழனிக்கு மாறுதலாகி சென்றார். இதையடுத்து உத்தமபாளையம் உதவி தொடக்க கல்வி அலுவலர் பாண்டுரங்கன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். கம்பம், உத்தமபாளையம் என இரு பகுதிகளையும் ஒரே உதவி தொடக்க கல்வி அலுவலர் கண்காணிப்பது ... |
தமிழகம் | காஞ்சிபுரம், திருவள்ளூரில் போலீஸ் அதிரடி தொடர்கிறது...: ஒரு பெண் உட்பட 16 போலி டாக்டர்கள் கைது | காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்த ஒரு பெண் உட்பட 16 போலி டாக்டர்களை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்தது. அத்துடன் இரண்டாயிரத்த... |
தமிழகம் | வளாக நேர்காணல் | பெரியகுளம் : பெரியகுளம் தங்கம்-முத்து பாலிடெக்னிக் கல் லூரியில், சென்னை ரீசென் பவர்டெக் நிறுவனம் சார்பாக வளாக நேர்முகத்தேர்வு நடந்தது.கல்லூரி முதல்வர் மீனாட்சி நாதன் தலைமை வகித்தார். துணை முதல் வர் முருகன் முன்னிலை வகித்தார். கல்லூரி மாணவர்கள் 60 பேர் பங்கேற்றனர். இதில் 14 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்பாடுகளை வே... |
தமிழகம் | பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி | பேரம்பாக்கம்: பேரம்பாக்கம் அடுத்த கொண்டஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி மகன் ஏசுரத்தினம் (27). இவர் நேற்று முன்தினம் மப்பேடுவிலிருந்து கொண்டஞ்சேரி நோக்கி பைக்கில் (டிஎன் 20 பிபி 7782) சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத லாரி எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில்... |
தமிழகம் | வருடாபிஷேகம் | தேவதானப்பட்டி : ஜெயமங்கலம் ஆனையூர் பங்காளிகளுக்கு சொந்தமான அரசாமி அம்மன் கோயில் வருடாபிசேக விழா தலைவர் சுந்தரம் தலைமையில் நடந்தது. செயலாளர் மணி முன்னிலை வகித்தார். ஈசான சிவம் வீரமணி யாகம் வளர்த்து பூஜைகள் செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப் பட்டது. பொருளாளர் முத்துப்பிள்ளை நன்றி கூறினார். |
தமிழகம் | எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில் கவுன்சிலிங் துவங்கியது | செங்கல்பட்டு: எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நேற்று துவங்கியது. சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இப்பல்கலைக் கழகத்தில் பி.டெக்., - பி.ஆர்க்., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - பி.ஜி.பி.எம்., மற்றும் எம்.சி.ஏ., ஆகிய பிரிவுகளில் இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்க... |
தமிழகம் | நகராட்சி ஊழியர் சஸ்பெண்ட் | தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சியில் பொறியாளர் பிரிவில் பணியாற்றுபவர் அய்யனார். புதிய குடிநீர் குழாய் அமைக்கும் போது வசூலிக்கப்படும் சேத மதிப்பு தொகை வசூலிக்கும் பொறுப்பில் இருந்தார். இதில் பண வசூலில் சரியான கணக்கு காட்டவில்லை என இவர் மீது புகார் கூறப்பட்டது. இது குறித்து கமிஷனர் மோனி ஆய்வு செய்தபோது நீண்ட விடுப்பில் செ... |
தமிழகம் | மனைவி கண்டிப்பு: கணவர் தீக்குளிப்பு | காஞ்சிபுரம்: மனைவி குடிக்க பணம் தராததால் மனமுடைந்த கணவர் தீக்குளித்து இறந்தார். காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (45). மதுஅருந்தும் பழக்கம் உடையவர். இவர் கடந்த 10ம் தேதி காலை 10.30 மணிக்கு குடித்து விட்டு வீட்டிற்கு சென்றார். மீண்டும் குடிக்க மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் மறுத்துவிட்டு உறவினர... |
தமிழகம் | சேதமடைந்த மதகுகளை சீரமைக்க பொதுப்பணித்துறையினர் மதிப்பீடு | தேவதானப்பட்டி : வடுகபட்டி வெள்ளக்கரடு அணையில் இருந்து சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய் வரை உள்ள சேதமடைந்த மதகுகளை சரி செய்து, சிமென்ட் வாய்க்கால் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் வராகநதியில் வரும் நீரை வடுகபட்டி வெள்ளக்கரடு அணை அருகே தடுப்பணை கட்டி, ஐந்து... |
தமிழகம் | வறுமையில் வாடிய மாணவிகள் படிப்பதற்கு கலெக்டர் உதவி | உத்தமபாளையம்: கிராமசபை கூட்டத்தில், தனது தங்கைகளின் படிப்பிற்கு கலெக்டர் முத்துவீரனிடம் உதவி கேட்ட சிறுமியின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. அவரின் தங்கைகள் விடுதியில் சேர்க்கப்பட்டு படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
உத்தமபாளையம் ஒன்றியம் ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் சரண்யா(15). சென்ற மாதம் அங்கு நடந்த கிராமசபை கூட்டத்தில் கல... |
தமிழகம் | கருத்தரங்கம் | சாத்தூர் : சாத்தூர் ஆயிரவைசிய மேல்நிலை பள்ளியில் சர்.சி.வி. ராமன் அறிவியல் கழகம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது. மாற்று திறனாளியான விண்வெளி விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் குறித்து நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் வரதராஜன் தலைமை வகித்தார். அறிவியல் கழக செயலர் வெங்கட்ட ராமானுஜம் பேசினார். ஆசிரியர் ராஜசேகர் வரவ... |
தமிழகம் | வருஷாபிஷேகம் | சத்திரப்பட்டி : சமுசிகாபுரம் வழிவிடு விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. நிர்வாகி ராஜேந்திரன் தலைமை வகித்தார். சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. |
தமிழகம் | சட்ட அறிவு வளர்ச்சி முகாம் | சிவகாசி : சிவகாசி எஸ்.ஆர்.வி., கல்வியியல் கல்லூரியில், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட அறிவு வளர்ச்சி முகாம் நடந்தது. நீதிபதி சுமதி தலைமை வகித்தார். வக்கீல்கள் சங்க தலைவர் சந்திரசேகர், எஸ்.எப்.ஆர்., கல்லூரி பேராசிரியை செல்வரதி முன்னிலை வகித்தனர். கல்வியியல் கல்லூரி தாளாளர் பிரதீப் வீரணன் வரவேற்றார். மூத்த வக்கீல் ... |
தமிழகம் | நலத்திட்ட உதவி வழங்கல் | வெம்பக்கோட்டை : ஆலங்குளத்தில் மனித உரிமைகள் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் ராம்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் முத்துக் கண்ணன் வரவேற்றார். மாநில தலைவர் சுந்தர், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒன்றிய தலைவர் கோவிந்தன் நன்றி கூறினார். |
தமிழகம் | உஷார் ரயில்வே ஸ்டேஷன்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம் : தண்டவாளங்களில் ரோந்து அதிகரிப்பு | விருதுநகர் : விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்க்கப் பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்கள், தண்டவாளங்களில் ரயில்வே போலீசாருடன் சேர்ந்து உள்ளூர் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் அருகே தண்டவாளம் தர்க்கப்பட்டதையொட்டி அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்... |
தமிழகம் | ஸ்ரீவி.,யில் சுவாதி திருவிழா இன்று கொடியேற்றம் | ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட வட பத்ரசாயி கோயிலில், பெரியாழ்வார் ஆனி சுவாதி திருவிழா இன்று காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூன் 21 காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 22ம் தேதி பெரியாழ்வார் திருநட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தன்று தீர்த்தவாரியும், மங்களாசனமும் நடக... |
தமிழகம் | மானபங்க முயற்சி ஒருவர் கைது | விருதுநகர் : கே.செவல்பட்டி ராதாகிருஷ்ணன் மனைவி சண்முகவள்ளி. இவர்களது வீட்டருகே உள்ள வேலுச் சாமி மகன் ராஜிவ்காந்தி, சண்முகவள்ளியை கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றார். சண்முகவள்ளி புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் ராஜிவ்காந்தியை கைது செய்து விசாரிக்கின்றனர். |
தமிழகம் | சூறை காற்றில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாழைகள் சேதம் | மார்த்தாண்டம்: நட்டாலம், ஆற்றூர், பாகோடு பகுதிகளில் காற்றில் முறிந்து பருவமடையாத நிலையில் உள்ள வாழை குலைகள் மார்த்தாண்டம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்தது. வாழைகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம் அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் திடீரென்று சூறாவளி காற்று வீச... |
தமிழகம் | கன்னியாகுமரியில் போலி டாக்டர் கைது | கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கிளினிக் நடத்திவந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். போலியான சான்றிதழ்கள் பெற்றும் முறையான மருத்துவ படிப்புகளை படிக்காமலும், மருத்துவ மனைகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு மாநிலம் முழுவதும் ஏராளமானோர் கிளிக்களை நடத்தி வருகின்றனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து ... |
தமிழகம் | பா.ஜ., ஜூலை போராட்டம்; மகளிரணி சார்பில் 10 ஆயிரம்பேர் பங்கேற்பு: மாநில மகளிரணி தலைவி தமிழரசியோகம் த | நாகர்கோவில்: அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்ககோரி, வரும் ஜூலை 25ம் தேதி பா.ஜ., சார்பில் நடைபெறும் போராட்டத்தில் மகளிரணி சார்பில் 10 ஆயிரம் பேர் பங்குபெறுகின்றனர். நிகழ்ச்சியில், தேசிய தலைவர்களில் ஒருவரான சுஷ்மா பங்கு பெறுகிறார் என நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் மாநில பா.ஜ., மகளிரணி தலைவி தமிழரசியோகம் க... |
தமிழகம் | நேசமணிக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை: பிறந்த தின விழாவில் அமைச்சர் தகவல் | நாகர்கோவில்: மார்ஷல் நேசமணிக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாகர்கோவிலில் நடந்த நேசமணி தமிழர் பேரவை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறினார். மார்ஷல் நேசமணி தமிழர் பேரவை சார்பில், நேசமணி பிறந்ததினவிழா நிகழ்ச்சி, நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஓய்... |
தமிழகம் | கோட்டார் அரசு ஆயுர்வேத கல்லூரியில் நோயாளிகள் திடீர் போராட்டம் | நாகர்கோவில்: நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் நோயாளிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி கடந்த கல்வி ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் ஏராளமான உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமீபகாலமாக இங்கு தண்ணீர், மின்சாரம் போ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.