category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
நங்கநல்லூர் கோவில் குளம் ரூ.18 லட்சத்தில் சீரமைப்பு
நங்கநல்லூர்: நங்கநல்லூரில் உள்ள பழமையான அர்த்தநாரீஸ்வரர் கோவில் குளம், 18 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்படுகிறது. நங்கநல்லூரில் கிராம தேவதை பிடாரி முனிச்சியம்மன் கோவில் உள்ளது.  இக்கோவிலுக்கு ஐந்து ஏக்கர் பரப்பளவுக்கு இடம் இருந்தது. முனிச்சியம்மன் கோவிலுக்கு அருகில் புதிதாக அர்த்தநாரீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது.  இக்க...
தமிழகம்
சேலத்தில் டிரைவரை மடக்கி கார் கடத்தல்
சேலம்: சேலத்தில் டிரைவரை மடக்கி காரை கடத்திச்சென்ற கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர்.திருப்பத்தூர், துரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்(23). வாடகைக்கு கார் ஓட்டிவரும் இவர், நேற்று திருப்பத்தூரில் இருந்து பயணிகள் சிலரை சேலத்திற்கு அழைத்து வந்தார். சேலத்தில் அவர்களை இறக்கிவிட்ட மோகன், சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் ச...
தமிழகம்
கோவில் விழா மோதல்:இருவர் கைது
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள வாலம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடா சலபதி (37); லாரி டிரைவர்.வாலம்பட்டி ஊராட்சி உறுப்பினராகவும் உள்ளார். அங்குள்ள கருப்பசாமி கோவில் கொடையை, கடந்த ஆண்டு இவர் முன்னின்று நடத்தியுள்ளார்.இந்த ஆண்டு கொடையை புதிய குழுவினர் நடத்தினர்.விழா அழைப்பிதழில் முன்னாள் தலைவர் என வெ...
தமிழகம்
தொடர் மின் நிறுத்தத்தால் நெல் அரவை தொழில் பாதிப்பு
தர்மபுரி:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரவை முகவர்கள் சம்மேளன மாநில கருத்தரங்கு தர்ம புரியில் நடந்தது. மாநில தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். பின்னர் சின்னசாமி, நிருபர்களிடம் கூறிய தாவது:தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட அரவை ஆலைகள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள...
தமிழகம்
சித்த மருத்துவ நலவாரியம் அமைக்க அரசுக்குகோரிக்கை
திருச்சி:திருச்சியில் நிருபர்களிடம் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க நிறுவன தலைவர் சுப்பையா கூறிய தாவது:தமிழகத்தின் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள் உள்ளனர். அவர்கள் அனுபவ ரீதியான பரம்பரை சித்த வைத்தியர்கள். தமிழகத்தின் மண்ணின் மருத்துவமான தமிழ் மருத்துவம், சித்த மருத்து வம் அழியா வண்ணம், அதை பாதுகாக்கும்...
தமிழகம்
கையில் புலிச்சின்னத்துடன் வாலிபர் வெட்டிக் கொலை
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் குருவிகுளம் அருகே காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில், 35 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் கிடந்தது. கை, கால்கள் வெட்டப்பட்டு, உடல் பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீசப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.துர்நாற்றம் வீசுவதால் கொலை நடந்து நான்கு நாட்களுக்கு மேல் இருக்கல...
தமிழகம்
திண்டுக்கல்லில் சாலைவிபத்து : 3 பேர் பலி
திண்டுக்கல்: ஓட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தயத்தில் காலையில் ஏற்பட்ட விபத்தில் அரசு பஸ் மினி லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள் 3 பேர் யமடைந்தனர்.மேலும் 4 பேர் காயமடைந்தனர்.   இந்த விபத்து குறித்து கள்ளிமந்தயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம்
பறவைக்காய்ச்சல் நோய் : 12 பேர் பலி
மும்பை:இந்தியாவில் கடந்த ஒரு வார காலங்களில் தென் இந்தியா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பறவைக்காய்ச்சலினால் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 47 பேர் பறவைக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் மகாராஷ்டிரா, கேரள மாநிலங்களில் 4 பேரும், கர...
இந்தியா
ஜார்கண்டில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் மாநில போலீசார், மத்திய ரிசர்வ் போலீசார், சிறப்பு அதிரடி படையினர் இணைந்து நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 10 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். 8 நக்சல் கூடாரங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. 35 கண்ணி வெடிகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. ஆபரேஷன் க்ரீன் ஹ...
தமிழகம்
நீலகிரியில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நீலகிரியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம்
மும்பை : இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்தில் முடிந்திருக்கிறது. வர்த்தக நேர முடிவின் போது : மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 273.22 புள்ளிகள் அதிகரித்து 17338.17 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீ்‌ட்டு எண் நிப்டி 78 புள்ளிகள் அதிகரித்து 5197.70 ஆக இர...
General
தாலிபன்களுடன் ஐ.எஸ்.ஐ., கூட்டு : ஹார்வார்டு பல்கலை., ஆய்வறிக்கை
லண்டன் : தாலிபன் பயங்கரவாதிகளுடன் ஐ.எஸ்.ஐ., உளவாளிகளுக்கு நெருங்கிய ‌தொடர்பு இருப்பதாக ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. தாலிபன் தற்கொலைப் படை பயங்கரவாதிகளின் குடும்பத்தாருக்கு 2 லட்சம் பாகிஸ்தானிய ரூபாய், ஐ.எஸ்.ஐ., சார்பில் நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ளது அந்த ஆய்வறிக்கையில் ஆதாரத்துடன் குறிப்பி‌டப்பட்...
தமிழகம்
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் மீனவர்களுக்கு , கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் , மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா
நாகலாந்துக்கு மத்திய படைகள் : உள்துறை செயலர் அறிவிப்பு
புதுடில்லி : மணிப்பூரில் இருந்து நாகலாந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையை நாகா ஆர்ப்பாட்டக்காரர்கள் 50 நாட்களுக்கு மேலாக மறித்துள்ளனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்தை சீரமைக்க மத்திய படைகளை நாகலாந்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள் துறை செயலர் ஜி.கே. பிள்ளை அறிவித்துள்ளார். இதற்கிடையில் நாகலாந்த...
தமிழகம்
கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது
கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் கடல் திடீரென உள்வாங்கியதால், அங்கு விவேகானந்தா நினைவு , வள்ளுவர் சிலைக்கு செல்லும் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது.
இந்தியா
கோவா மாஜி அமைச்சர் கோர்ட்டில் மேல்முறையீடு
பனாஜி : கோவா மாநில சுற்றுலா துறை மாஜி அமைச்சர் பெர்ணாண்டஸ் பாச்சியோ தனது தோழியில் மர்ம சாவு தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி இன்று ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்கிறார். அவரது முன்ஜாமீன் மனு செசன்ஸ் கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டது , இதனை தொடர்ந்து அவர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்கிறார்.
General
கிர்கிஸ்தான் கலவரத்தில் இந்திய மாணவர்கள் சிக்கி தவிப்பு
பிஷேக் : கிர்கிஸ்தான் கலவரத்தில் சிக்கி அந்நாட்டு ஓஷ் மற்றும் ஜலாலாபாத் பகுதியில் இருக்கும் இந்திய மாணவர்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கிர்கிஸ்தானில் க‌டந்த 5 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் இனக்கலவரத்தால், அந்த நாட்டின் பல முக்கிய நகரங்கள் போர்க்களம் போல் காட்சியளிக்கின்றன. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர அங்கு ஊரடங...
தமிழகம்
கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் : போக்குவரத்து பாதிப்பு
மாமல்லபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் எனும் இடத்தில் பொதுமக்கள் காலை 9 மணி முதல் சாலைய மறியலில் ஈடுபட்டுள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆயப்பாக்கத்தைச் சேர்ந்த ஏழுமலை மகள் ப்ரீத்தா (14). இவர் இன்று காலையில் வாயலூரில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்...
தமிழகம்
சித்த மருத்துவர்கள் துணை முதல்வரிடம் கோரிக்கை
சென்னை : தமிழகம் முழுவதும் நடந்த போலி டாக்டர்கள் தேடுதல் வேட்டையில், சித்த மருத்துவர்கள் 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சித்த மருத்துவக் கவுன்சில் உறுப்பினர்கள் இன்று காலையில் துணை முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். துணை முதல்வரிடம், சித்த மருத்துவர்களின் சான்றிதழ்களை சரி பார்த்து நடவ...
இந்தியா
உத்திரபிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து : 10 பேர் பலி
லக்னோ : உத்திரபிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உத்திரபிரதேச மாநிலம் பாலியா பகுதியில் இருந்து 70 பயணிகளுடன் நாட்டுப்படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. படகு எதிர்பாராத விதமாக ஆற்றில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்தவர்களில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிற...
General
உலக கோப்பை கால்பந்து இன்றைய போட்டிகள்
ஜோகனஸ்பெர்க் : உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது. இன்று மாலை 5 மணிக்கு இ பிரிவில் ஹால்நது - டென்மார்க் அணிகள் ‌மோதுகின்றன. மாலை 7.30 மணிக்கு ஜப்பான் - கேமரூன் அணிகளும், இரவு 12.00 மணிக்கு இத்தாலி - ‌பராகுவே அணிகளும் மோதுகின்றன.
இந்தியா
கண்ணூர் மத்திய சிறையில் இருந்து ‌கைதிகள் தப்பியோட்டம்
கண்ணூர் : ‌கேரள மாநில் கண்ணூர் மத்திய சிறையில் இருந்து இன்று அதிகாலையில் 2 கைதிகள் தப்பி ஓடினர். திருச்சூரைச் சேர்ந்த ஜெயானந்த். இவர் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதே போல் ரியாஸ் , திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். இவர்கள் இருவரும் இன்று அதி காலையில் ஜெயில் சுவர் ஏறி குதித்து தப்பித்...
இந்தியா
பணவீக்கம் அதிகரிப்பு
புதுடில்லி : நாட்டின் பணவீக்கம் 10.16 சதவீதமாக அதிகரித்துள்ளது. மே மாதத்துக்கு எடுக்கப்பட்ட கணக்கின்ப‌டி பணவீக்கம் 10.16 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவுப் பொருள் விலை ஏற்றம், எரிபொருள் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்தியா
முல்‌லைப் பெரியாறு அணை உயர்மட்ட குழு முதல் கூட்டம்
புதுடில்லி : முல்‌லைப் பெரியாறு அணை உயர்மட்ட குழு முதல் கூட்டம் இன்று நடந்தது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ள 5 பேர் கொண்ட குழுவின் முதல் உயர்மட்டக் குழுக் கூட்டம் டில்லியில் இன்று தொடங்கியது. இதன் தலைவராக சுப்ரீம்கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் உள்ளார். தமிழக...
General
மீடியா செய்திக்கு பயன் : கிர்கிஸ்தானில் சிக்கிய இந்திய மாணவர்கள் மீட்பு
மாஸ்கோ: இனக்கலவரம் நடந்து வரும் கிர்கிஸ்தானில் அங்கு மருத்துவ படிப்பிற்கு சென்ற 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருக்கும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். கிர்கிஸ்தானில் பாகியோவ் பதவி விலகியதை அடுத்து அங்கு இடைக்கால அரசு நடந்து ...
தமிழகம்
கோடநாடு பயணம் ஓய்வெடுப்பதற்காக அல்ல : ஜெ., அறிக்கை
கோடநாடு : கோடநாடு செல்வது ஓய்வெடுப்பதற்காக இல்லை என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோடநாடு சென்றாலும், சென்னையில் இருந்தாலும் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் என கூறியுள்ளார்.
தமிழகம்
குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் : போலீசார் தகவல்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த சனிக்கிழமையன்று ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், விழுப்புரத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். உளவுத்துறை ஐ.ஜி., ஜாபர் சேட் தலைமையில் ஆலோசனை கூட்டம...
இந்தியா
போபால் விவகாரம் : அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு
புதுடில்லி : போபால் விஷவாயு விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு பலத்த எதிர்ப்பு அலைகள் கிளம்பியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து உடனடியாக ஆலோசனை நடத்துமாறு பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார். இதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தும். இந்தக்குழுவின் தலைவர் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்...
இந்தியா
ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்
கொழும்பு : இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது. 24ம் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
தமிழகம்
மனைவி, குழந்தைகளை கொலை செய்த கணவருக்கு 3 ஆயுள்
திருவள்ளூர் : மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்த காணவருக்கு 3 ஆயுள் தண்டனை அளித்து மாவட்ட அமர்வு கோர்ட் தீர்ப்பளித்தது. திருப்போரூரைச் சேர்ந்தவர் ராஜூ (38). இவருக்கு கீதா என்ற மனைவியும் , ராகவ், ராஜராஜேஸ்வரி என்ற குழந்தைகளும் இருந்தனர். ராஜூவுக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மனமுடைந்தார். கணவன், மனைவிக்கு இடையே ...
இந்தியா
கருணாநிதிக்கு பிரதமர் கடிதம்
சென்னை : தமிழக முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன்சிங் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கையில் இன்னமும் முகாம்களில் இருக்கும் தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவது தொடர்பாக பிரதமர் மன்‌மோகன்சிங்குக்கு , முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்துக்கு பதில் அனுப்பியுள்ள பிரதமர் : இலங்கைத் தமிழர்களில் பலர...
தமிழகம்
காணாமல் போன எம்.எல்.ஏ., தம்பி மகன் மீட்பு
விழுப்புரம் : காணாமல் போன அரியலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., அமரமூர்த்தியின் தம்பி மகன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் செக்போஸ்ட் அருகே நின்று கொண்டிருந்த இனோவா காரில் சிறுவன் இருந்தது மீட்கப்பட்டுள்ளான். அரியலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமரமூர்த்தி. இவரது தம்பி பழனிச்சாமி. பழனிச்சாமி விவ...
தமிழகம்
உடுமலையில் ஐம்பொன் சிலை கண்‌டெடுப்பு
உடுமலைப்பேட்டை : உடுமலைப் பேட்டையில் ஐம்பொன் சிலை ஒன்று கண்‌டெடுக்கப்பட்டுள்ளது. உடுமலைப்பேட்டை கணபதிபாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் இருந்த புற்று அகற்றப்பட்டது. அப்போது புற்றுக்கு அடியில் இருந்து ஐம்பொன் சிலை ஒன்று கண்‌டெடுக்கப்பட்டது.
இந்தியா
ஜெர்மன் பேக்கரியை சீரமைக்க ரூ. 14 லட்சம் நிதியுதவி
மகாராஷ்டிரா : கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி புனேயில் ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடித்தது. இதில் 17 பேர் இறந்தனர். குண்டு வெடிப்பில் சேதமடைந்த ஜெர்மன் பேக்கரியை சீரமைக்க ரூ. 14 லட்சம் நிதியுதவி அளித்து மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா
கருணாநிதிக்கே பிரதமர் கடிதம் !
புதுடில்லி: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகை தொடர்பாக பிரதமருக்கும், அவருக்கும் இடையே நடந்த பேச்சு விவரங்களை கடிதம் மூலம் முதல்வர் கருணாநிதிக்கு மன்மோகன்சிங் அனுப்பியுள்ளார். கடந்த வாரம் இலங்கை அதிபர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இவருடைய வருகைக்கு தமிழகம் முழுவ...
இந்தியா
போபால் விஷவாயு பிரச்னை : அறிக்கை தாக்கல் செய்ய பிரதமர் உத்தரவு
புதுடில்லி : போபால் விஷவாயுவினால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவி போன்றவை குறித்து ஆய்வு நடத்திட ப.சிதம்பரம் தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழுவை பிரதமர் மன்மோகன்சிங் அமைத்துள்ளார். அக்குழுவினர் தங்களது அறிக்கையை இன்னும் 10 நாளில் கேபினெட் கூட்டத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என பி...
தமிழகம்
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 16 குறைவு
சென்னை : சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 16 குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் ஆயிரத்து 744 க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ. 16 குறைந்தது , 13 ஆயிரத்து 952 க்கு விற்கப்படுககிறது.
தமிழகம்
சிவகங்கையில் மனைவி படுகொலை : கணவருக்கு வலைவீச்சு
சிவகங்கை : சிவகங்கையில் மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக  கணவரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி , பெரிய அம்மச்சிபட்டியைச் சேர்ந்தவர் அழகு (26) . இவரது கணவர் வெள்ளக்குட்டி (36). இவர்கள் இருவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. 6 குழந்தைகள் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு ...
General
மெக்சிகோவில் விமான விபத்து : 9 பேர் பலி
மெக்சிகோ : மெக்சிகோவில் நடந்த விமான விபத்தில் 9 பேர் இறந்தனர். மெக்சிகோவில் அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் பலியாகினர்.
தமிழகம்
பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
பல்லடம் : பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை திடீர்  ரெய்டு  நடத்தினர்.  மாலை 5.15 மணிமுதல் இரவு 8.40 மணி வரை நடந்த சோதனையில் பதிவாளர் பாலகிருஷ்ணன் மேஜையிலிருந்து கணக்கில் வராத ரூ.22,300 பணத்தை கைப்பற்றினர். பணம் குறித்து பாலகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம்
திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை
திண்டுக்கல் : திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்து குதித்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி பிரான்சிஸ்(70). இவருக்கு திருமணியம்மாள் என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. இந்நிலையில் இன்று திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது ...
தமிழகம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக வருண் ராய் பொறுப்பேற்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய கலெக்டராக வருண் ராய் இன்று பதவியேற்றுக்கொண்டார். 2003ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., பிரிவைச் சேர்ந்த வருண் ராய் கேரளாவைச் சேர்ந்தவர். மேலும் தர்மபுரி மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்ட பின் பதவியேற்கும் 4வது கலெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகம்
ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் ஏற்றிய தேசியக்கொடி புதரில் கண்டெடுப்பு
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் ஏற்றிய தேசியக்கொடி மாயமான நிலையில், புதரிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பதினைந்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும், ராணுவ ஆள்சேர்ப்பு முகாம், ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் இன்று துவங்கியது. இதையொட்டி, மைதான வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்...
இந்தியா
திருச்சி பெங்களூரு சிறப்பு ரயில் நீட்டிப்பு
பெங்களூரு : திருச்சி பெங்களூரு இடையே தினமும் இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில் வரும் ஜூலை 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென் மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நெரிசலை சமாளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது. வரும் ஜூன் 16 முதல் இந்த ரயில் இயக்கப்படவுள்ளது.
General
உலக கோப்பை கால்பந்து : ஹாலந்து வெற்றி
ஜோகனஸ்பர்க் : உலக கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய குரூப் ஈ பிரிவு ஆட்டத்தில், ஹாலந்து அணி, டென்மார்க் அணியை 2-0 என்ற கோல்கணக்கில் வென்றது.
தமிழகம்
குமரியில் தென் மேற்கு பருவமழை : படகு போக்குவரத்து பாதிப்பு
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கடல் கொந்தளிப்புடன் இருப்பதால் படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுத்துள்ளதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையுடன் காற்றும் வீசுவதால் கடல் கொந்தளிப்பு...
தமிழகம்
பவானி சாகர் அணை நீர்மட்டம் உயர்வு
ஈரோடு : தென் மேற்கு பருவமழை காரணமாக, பவானி சாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பவானி சாகர் அணையின் முக்கிய நீர் ஆதாரமான நீலகிரி மாவட்டத்தில் தற்போது தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு, 6838 கன அடி நீர் வந்து...
தமிழகம்
பணத்திற்காக ஆட்டோ டிரைவர் கடத்திக் கொலை: மூவர் கைது
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே பணத்திற்காக லோடு ஆட்டோ டிரைவரை செங்கல்பட்டிலிருந்து கடத்தி கொண்டு வந்து எரித்துக்கொன்ற வழக்கில் அண்ணன்,தம்பி உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு, பெரியார் தெரு வரதராஜன் மகன் அருண்குமார்(24), சொந்தமாக லோடு ஆட்டோ வைத்துள்ளார். இவர், கடந்த மாதம் 4ம் தேதி, திருச்செந்தூர் அருகே ...
தமிழகம்
கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு
கோவில்பட்டி : கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் அதிகம் நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த ரெய்டு நடந்தது.
தமிழகம்
நெல்லையில் அதிக கட்டணத்தை திரும்ப பெற்ற பெற்றோர்
திருநெல்வேலி : நெல்லையில் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் நேரடி ஆய்வு நடத்திய கல்வி அதிகாரி அதிக கட்டணமாக வசூலித்த தொகையை திருப்பி கொடுக்க உத்தரவிட்டார். திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் அரசு அறிவித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து க...
General
உலககோப்பை கால்பந்து: ஜப்பான் வெற்றி
புளோயம்போன்டைன்: தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் உலககோப்பை கால்பந்து தொடரில் 'பி' பிரிவு ஆட்டத்தில் ஜப்பான்-காமரூன் அணிகள் மோதியது. இதில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் காமரூனை வீழ்த்தி வெற்றி பெற்றது.
தமிழகம்
இளைஞர் காங்., நிர்வாகிகளுக்கு ஈரோட்டில் பயிற்சி
ஈரோடு : தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தலைமைத்துவம் குறித்த பயிற்சி நாளை (மே 15) முதல் ஈரோட்டில் துவங்குகிறது. லோக்சபா, சட்டசபை தொகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு, முதல் கட்டமாக சென்னையில் பயிற்சி நடந்தது. இப்பயிற்சி முடித்த நிர்வாகிகள், தங்கள் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு நாட்கள் தங்கி,...
தமிழகம்
கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., சகோதரர் மகன்:கிளியனூர் அருகே பொதுமக்களால் மீட்பு
வானூர்:கடத்தப்பட்ட அரியலூர் எம்.எல்.ஏ., சகோதரர் மகன், விழுப்புரம் மாவட்டம் கிளியனூரில் தனியாக நின்றிருந்த காரில் இருந்து பொதுமக்களால் மீட்கப்பட்டான்.அரியலூர் சட்டசபை தொகுதி காங்., எம்.எல்.ஏ., அமரமூர்த்தி சகோதரர் பழனிசாமி. இவர், அரியலூர் அடுத்த பாளையம்பாடியில் வசித்து வந்தார். இவரது மகன் தர்மதுரை( 14). அரியலூர் தனியார் ...
இந்தியா
சொல்கிறார்கள்
அப்பா கஷ்டத்தை நினைத்து படித்தேன்: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 495 மார்க் எடுத்த, மாநிலத்தின் முதல் மாணவி ஜாஸ்மின்: சின்ன வயசில இருந்தே, நான் நன்றாக படிப்பேன். அப்பா, எட்டாம் வகுப்பு வரைதான் படிச்சார். அதனால, அவர் அடிக்கடி பேசும்போது, "நன்றாக படிக்கணும்மா... படித்தால்தான் குடும்பம் முன்னேற முடியும்... வேற எந்த...
தமிழகம்
இது உங்கள் இடம்
நிரந்தரமாக கோவையை கவனியுங்கள்! கு.தியாகராசன், ரத்தினபுரி, கோவையிலிருந்து எழுதுகிறார்: கோவை செம்மொழி மாநாடு நம் அனைவருக்கும் பெருமையே! அதே நேரம், கோவை மக்களின் பங்களிப்பு ஆர்வம் எந்த அளவில் உள்ளது? அதிகாரிகளும், அரசியல் அமைப்பினர் மட்டுமே ஈடுபடும் விதமாக உள்ளது. கோவை மக்களுக்கு, தொலை நோக்கில் பயன் தரும் விதமாக நகரின் உள...
தமிழகம்
மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி : பன்றி காய்ச்சல் என பீதி
நாகர்கோவில் : நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரியில் காய்ச்சலுக்கு சிகிட்சை பெற்று வந்த பெண் பலியானார். இவர் பன்றி காய்ச்சல் நோயால் இறந்ததாக பீதி ஏற்பட்டுள்ளது. கொல்லங்கோடு அருகே நீரோடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் முத்தப்பன். இவரது மனைவி வெர்ஜின்மேரி (47). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நாகர்கோவில் அர...
இந்தியா
நீதிபதி தினகரனை விமர்சித்த சக நீதிபதிக்கு எதிராக மனு
புதுடில்லி:கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி பி.டி.தினகரனை, வரம்பு மீறிய வகையில், வசை மொழியில் கடுமையாக விமர்சித்த நீதிபதி சைலேந்திர குமாருக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக் கல் செய்யப்பட்டுள்ளது.கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரன் மீது நில அபகரிப்பு புகார் கூறப்பட்டது. இதனால், அவரை சிக்கிம் மாநில ஐகோர்ட்டிற்கு மா...
தமிழகம்
தடைகளால் முடங்கியது மணிப்பூர்: தகர்க்க மத்திய அரசு நடவடிக்கை
புதுடில்லி:மணிப்பூர் மாநில அரசுக்கு எதிராக தேசிய நெடுஞ்சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி போராடி வரும் நாகா அமைப்பினரை ஒடுக்குவதற்கு, பாதுகாப்பு படையினரை அனுப்ப போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது."மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களை, நாகாலாந்துடன் இணைத்து, கிரேட்டர் நாகாலாந்தை உருவாக்க வேண்டும்' என, நாகாலாந்து தேசிய...
தமிழகம்
வேதாரண்யம் பகுதியில் சூறைக் காற்று
வேதாரண்யம் : வேதாரண்யம் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால், கடல் கொந்தளிப்பாகவும், சீற்றமாகவும் உள்ளது. கோடிக்காடு, ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மூன்றாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. அதனால், கடற்கரையில் 300 பிளாஸ்டிக் படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட...
தமிழகம்
மூன்றாண்டில் இளநிலை இரட்டை பட்டம்:சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்கிறது கமிட்டி
சென்னை:இளநிலை படிப்பில் மூன்று ஆண்டுகளில் இரண்டு பாடங்களை படித்து, இரட்டை பட்டம் பெறும் முறையை அறிமுகப்படுத்துவது குறித்து, தமிழக உயர்கல்வித் துறை ஆய்வு செய்து வருகிறது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய, ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.கலை, அறிவியல் கல்லூரிகளில் மூன்று ஆண்டுகள் படித்தால், பி.ஏ., அ...
தமிழகம்
அ.தி.மு.க.,வினர் மனுக்களை வழங்கினர்
சென்னை : அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான குழுவினரிடம், கட்சியினர் நேற்று மனுக்களை வழங்கினர். அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, கடந்த 9ம் தேதி, தலைமை அலுவலகத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கட்சியினரிடம் மனுக்களை பெற்றார். கட்சி அலுவலகத்திற்கு ஜெயலலிதா வராத நாட்களில், கட்சி நிர்வாகிகள் அடங்...
தமிழகம்
விழுப்புரத்தில் ரயில் பாதை தகர்ப்பு சம்பவம்:வெடி மருந்து குடோன்களில் தொடர் சோதனை
விழுப்புரம்:விழுப்புரம் அருகே நடந்த ரயில் பாதை தகர்ப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் சிக்காததால், சந்தேக நபர்களிடம் தொடர்ந்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, வெடி மருந்து குடோன்களில் போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே, கடந்த 12ம் தேதி அதிகாலை மர்ம நபர்க...
தமிழகம்
முதல்வர் நிதியுதவி
சென்னை : தனது பெயரிலான அறக்கட்டளை நிதியில் இருந்து கிடைத்த வட்டித் தொகையை, 32 ஏழைகளுக்கு நிதியுதவியாக முதல்வர் கருணாநிதி வழங்கியுள்ளார். தி.மு.க., தலைமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனது பெயரிலான அறக்கட்டளைக்காக, முதல்வர் கருணாநிதி, தன் சொந்தப் பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாய், வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள...
தமிழகம்
சேரில் தூக்கி வந்த 103 வயது முதியவர்:கோரிக்கையை நிறைவேற்ற எஸ்.பி., உத்தரவு
திண்டுக்கல்:திண்டுக்கல் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் சேரில் தூக்கி வந்த 103 வயது முதியவரிடம் முத்துசாமி எஸ்.பி., மனு வாங்கி, அவரது கோரிக்கையை நிறைவேற்ற போலீசாருக்கு உத்தரவிட்டார்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் வள்ளலார், முத்துசாமி எஸ்.பி., ஆகியோர் பங்கேற்றனர். இ...
தமிழகம்
துறையூர் முன்னாள் செயலர் தி.மு.க.,வில் இணைந்தார்
துறையூர் : துறையூர் ஒன்றிய அ.தி.மு.க., முன்னாள் செயலர் துரைசாமி, நேற்று திடீரென அமைச்சர் நேரு முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார். திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றிய அ.தி.மு.க., செயலராக இருந்தவர் துரைசாமி. அ.தி.மு.க., துவங்கப்பட்ட காலத்தில் இருந்து கட்சியில் தீவிரமாகப் பணியாற்றினார். ஜெயலலிதா நடத்திய கொளப்பாக்கம் நேர்க...
தமிழகம்
மாநாட்டு பணிகள்: 3 அமைச்சர்கள் ஆய்வு
கோவை : செம்மொழி மாநாட்டுப் பணிகளை, நேற்று மூன்று அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஊர்வலக் குழுவின் துணைத் தலைவரும், தமிழக வருவாய்த்துறை அமைச்சருமான பெரியசாமி, நேற்று கோவை வந்தார். கொடிசியா சாலையில் மாநாட்டு வளாகத்தில் நடந்து வரும் மாநாட்டுப் பந்தல், கண்காட்சி அரங்கம் மற்றும் ஊடக அரங்கப் பணி...
தமிழகம்
இளைஞர் காங்., நிர்வாகிகளுக்கு ஈரோட்டில் பயிற்சி
ஈரோடு : தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தலைமைத்துவம் குறித்த பயிற்சி இன்று முதல் ஈரோட்டில் துவங்குகிறது. இளைஞர் காங்கிரஸ் அமைப்புக்கு தேர்தல் நடத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகள் பெரும்பாலானோர் புதியவர்கள் என்பதால், கோஷ்டி பூசலில் சிக்காமலும், மக்களுடன் இணைந்து செயல்படும...
இந்தியா
மோடி தயவால் பா.ஜ.,விடம் நெருங்கிய சர்ச்சை மனிதர் : இவர், இப்படி...
பிரபல சட்ட நிபுணர் ராம்ஜெத்மலானி, ராஜ்யசபாவுக்கு பா.ஜ., சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். ஒவ்வொரு கட்சியுடன் மோதிக் கொண்ட பின் அவர் எப்படி மீண்டும் கைகோர்க்கிறார் என்ற புதிர் பெரிய விஷயம் அல்ல. "ராம்ஜெத்மலானிக்கு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நெருங்கிய நட்பு உண்டு. இதனால் தான் ஒவ்வொரு முறையும், இவர் வெவ்வேறு அரசியல் ...
தமிழகம்
வயிற்றில் பிளேடு, நகைகள்ஆபரேஷன் மூலம் நீக்கம்
ஈரோடு:கணவனை பயமுறுத்த பெண் விழுங்கிய பிளேடு, நகைகள், ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டன.ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அய்யன்காட்டை சேர்ந்த மகேந்திரன், திருப்பூர் பனியன் கம்பெனி தொழிலாளி. அவருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு நிகழும்.மகேந்திரனை பயமுறுத்துவதற்காக ஜூன் 11ம் தேதி, பிளேடு துண்டுகள், தான் அணிந்திருந்த மோதிரம்,...
General
கிர்கிஸ்தான் கலவரத்தில் 117 பேர் பலி : ஆயிரம் பேருக்கு மேல் காயம்
மாஸ்கோ : கிர்கிஸ்தானில் ஒரு வாரமாக நடக்கும் உள்நாட்டு கலவரத்தில் இதுவரை 117 பேர் பலியாகியுள்ளனர்; ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த கிர்கிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரம் ஓஷ். இங்கு வசிக்கும் கிர்கிஸ் மற்றும் உஸ்பெக் மக்களுக்கு இடையே அடிக்கடி கலவரம் நடப்பது வழக்கம். கிர்க...
தமிழகம்
10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வினியோகம்:கல்வித்தகுதி பதிவுசெய்யவும் ஏற்பாடு
மதுரை:பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மாணவர்களுக்கு இன்று வினியோகிக்கப்படுவதுடன், பள்ளியிலேயே கல்வித் தகுதியை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிக் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 26ம் தேதி வெளியிடப்பட்டன. இம்மாணவர்களுக்கு, மதிப்பெண் பட்டியல் இன்று காலை முதல் பள்ளிகளில் வினியோகிக்...
தமிழகம்
பைலட் வேலை வாங்கி தருவதாக ரூ. 21 லட்சம் மோசடி
திண்டுக்கல்:பைலட் வேலை வாங்கி தருவதாக கூறி, 21லட்ச ரூபாய் மோசடி செய்த கேரளாவை சேர்ந்தவரை கைது செய்ய கோரி ஒரு இளைஞர் முத்துச்சாமி எஸ்.பி.,யிடம் மனுக் கொடுத்தார். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் எஸ்.பி.,யிடம் கேரளாவை சேர்ந்த அலெக்ஸ் மேத்யூவ் மனுக் கொடுத்தார். இதில் அவ...
இந்தியா
காஷ்மீரில் மூன்று நாளாக மாமூல் வாழ்க்கை பாதிப்பு
ஸ்ரீநகர்:காஷ்மீரில் ஹூரியத் மாநாட்டு அமைப்பைச் சேர்ந்த பிரிவினைவாத தலைவர்கள் 12 பேரை போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் அடைத்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாக காஷ்மீரில் ஏற்பட்ட பதட்டம், அதைத் தொடர்ந்து ஸ்டிரைக் காரணமாக இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.ஸ்ரீநகரில் உள்ள சைதா கதல் என்ற இடத்தில் கடந்த வெள்ளி...
தமிழகம்
தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணம் மறு பரிசீலனை : கோரிக்கையை ஏற்றது சீரமைப்புக்குழு
சென்னை : தனியார் பள்ளிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற பள்ளிகளின் கோரிக்கையை, கட்டண சீரமைப்புக் குழு ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து, மேல் முறையீடு செய்த பள்ளிகளுக்கு விரைவில் புதிய கட்டணத்தை அறிவிக்க, கோவிந்தராஜன் குழு முடிவுஎடுத்துள்ளது. தனியார் பள்ளிகளின் கட்டணத்தை ஒழு...
இந்தியா
கோல்கொண்டா வைரம் இந்தியா திரும்புகிறது?
பெங்களூரு:கோல்கொண்டாவில் எடுக்கப்பட்டு, கடந்த 200 ஆண்டுகளாக ஐரோப்பாவில் இருக்கும் புகழ் பெற்ற வைரம் ஒன்று ஏலத்துக்கு வந்துள்ளது. கர்நாடக மாநிலம், கோல்கொண்டாவில் உள்ள சுரங்கத்தில் 17ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட வைரம், "அர்ச்டியூக் ஜோசப்' ஹங்கேரிய நாட்டு ஹேப்ஸ்பர்க் அரச வம்சத்தில் வந்தவர்தான் அர்ச்டியூக் ஜோசப் ஆகஸ்ட் (கி...
தமிழகம்
சட்டப் பல்கலையில் புதிய எம்.எல்., படிப்பு
சென்னை:தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையில், இந்த ஆண்டு முதல் புதிதாக எம்.எல்., (மனித உரிமைகள் மற்றும் கடமைகள் கல்வி) முதுநிலை பட்டப் படிப்பு துவக்கப்படுகிறது.பல்கலை துணைவேந்தர் சச்சிதானந்தம் கூறியதாவது:அம்பேத்கர் சட்டப் பல்கலையில், இந்த ஆண்டு முதல் புதிதாக எம்.எல்., (மனித உரிமைகள் மற்றும் கடமைகள் கல்வி) முதுநிலை பட்...
தமிழகம்
எஸ்.பி.,க்கள் 8 பேர் அதிரடி இட மாற்றம்
சென்னை:எட்டு எஸ்.பி.,க்களை பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்தும், மூன்று கூடுதல் எஸ்.பி.,க்களை எஸ்.பி.,க்களாக பதவி உயர்வு செய்தும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.உள்துறை செயலர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள உத்தரவு:சென்னை, சி.பி.சி.ஐ.டி., மெட்ரோ -1, பிரிவின் கூடுதல் எஸ்.பி.,யாக இருந்த சந்திரபாசு, எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிக்க...
தமிழகம்
ஜாட் போராட்டம் எதிரொலி:டில்லியில் தண்ணீர் சப்ளை பாதிப்பு
காசியாபாத்:அரசு பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், அகில பாரத ஜாட் சங்கர்ஷ சமிதியின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, டில்லிக்கு தடைபட்டிருந்த தண்ணீர் சப்ளை விரைவில் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.அரசு பணிகளில் ஜாட் சமூகத்திற்கு தனி ஒதுக்கீடு, உயர்கல்வியில் இட ஒதுக்கீடு, இந...
இந்தியா
ஒரே கோத்ர திருமணம்:எதிர்த்த மனு தள்ளுபடி
புதுடில்லி:ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வதை தடுக்கும் வகையில், இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது.அரியானா மாநிலத்தில் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வதை, ஊராட்சி அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வர...
தமிழகம்
மனைவி, இரு குழந்தைகள் கொலை:கணவனுக்கு மூன்று ஆயுள் தண்டனை
திருவள்ளூர்:மனைவி மற்றும் இரு குழந்தைகளை தலையணையால் அழுத்திக் கொலை செய்த கணவருக்கு, மூன்று ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட் தீர்ப்பளித்தது.சென்னை போரூர் சக்தி நகரில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர் நமசிவாயம் மகன் ராஜூ(எ) மோகனசுந்தரம்(38). இவர் மளிகை வியாபாரம் செய்து வந்தார். இவர...
General
லாகூரில் இஸ்ரேல் எதிர்ப்பு பேரணி : பயங்கரவாதி சயீது ஆவேசமாக பேச்சு
லாகூர் : மும்பை தாக்குதலின் முக்கிய காரண கர்த்தாவான ஹபீஸ் முகமது சயீது, லாகூரில் நடந்த இஸ்ரேல் எதிர்ப்பு பேரணியில் உரையாற்றினார். மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பரில் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துக்கு லஷ்கர்- இ -தொய்பா அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் முகமது சயீது தான் காரணம்...
தமிழகம்
உடுமலை அருகே விவசாய நிலத்தில்ஐம்பொன் அம்மன் சிலை கண்டுபிடிப்பு
உடுமலை:உடுமலை அருகே விவசாய நிலம் பண்படுத்தும் போது, கலை வேலைப்பாடுகளுடன் கூடிய ஐம்பொன்னாலான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கணபதிபாளையத்தில் இருந்து புக்குளம் செல்லும் ரோட்டில், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத விவசாய நிலம் இருந்தது. முட்காடுகள் நிரம்பிய இந்நிலத்தை பண்படுத்தும் பணிகள் நடந்...
தமிழகம்
திருவண்ணாமலை மலைப் பகுதியில்துப்பாக்கிகள், வாகனங்கள் கண்டெடுப்பு
வேலூர்:வேலூர், திருவண்ணாமலை மாவட்ட மலைப்பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மூன்று துப்பாக்கிகள், எட்டு மொபட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் மாவட்டம் சித்தணியில் ரயில் தண்டவாளத்தை மர்ம நபர்கள் சக்தி வாய்ந்த ...
தமிழகம்
இயற்கை எரிவாயு உற்பத்தி வளைகுடா நாடுகளில் சரிவு
துபாய் : எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா நாடுகளில் இயற்கை எரிவாயு உற்பத்தி கணிசமாக குறைந்து வருகிறது. இதனால், சர்வதேச அளவில் இயற்கை எரிவாயு தட்டுப்பாட்டு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. வளைகுடா நாடுகளில் எண்ணெய் வளம் அதிகம் காணப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன...
தமிழகம்
செம்மொழி மாநாடு நாட்களில்மதுக்கடை மூட வக்கீல்கள் மனு
கோவை:செம்மொழி மாநாடு முன்னிட்டு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை ஐந்து நாட்களுக்கு மூட வேண்டுமென்று வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகத்திடம் வக்கீல்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நெருங்கி வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டு நாட்களில் அ...
தமிழகம்
சிறப்பு ரயிலுக்கு வரவேற்பு
சென்னை:தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு சென்னை சென்ட்ரலிலிருந்து கோவைக்கு இயக்கப்படும் சிறப்பு சூப்பர் பாஸ்ட் ரயில்களில் அனைத்து இடங்களும் நேற்று ஒரே நாளில் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.கோவையில், வரும் 23ம் தேதியிலிருந்து 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது. இதற்கு மக்கள் செல்வதற்கு வசதியாக, தமிழகத்தின்...
தமிழகம்
முதல்வர் பற்றி அவதூறு நோட்டீஸ்:கோர்ட் அருகே வாலிபர் கைது
கோவை:கோர்ட் நுழைவாயில் அருகே முதல்வர் கருணாநிதி பற்றி அவதூறு பரப்பும் நோட்டீஸ் வினியோகித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்துக்குள் செல்லும் கேட் அருகே, வாலிபர் ஒருவர் கோர்ட்டுக்கு வரும் வக்கீல்கள், பொதுமக்களிடம் துண்டு நோட்டீஸ் வினியோகித்துக் கொண்டிருந்தார்.அதில், "ஈழத்தமிழர்களை கொன்றொழிக...
தமிழகம்
திருச்சி மத்திய சிறை கைதியிடமிருந்து, மொபைல் போன் மூலம், தி.மு.க., பிரமுகருக்கு மிரட்டல்
திருச்சி: திருச்சி எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த துரை என்கிற ரவுடி, குண்டர் சட்டத்தில் தற்போது திருச்சி மத்திய சிறையில் இருக்கிறார். அவர் புத்தூரில் உள்ள தர்மராஜ் என்ற தி.மு.க., பிரமுகரை மொபைல் போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக உறையூர் போலீசில், சிறையில் உள்ள ரவுடி துரை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சிறையில் உள்ள...
General
பயங்கரவாதத்துடன் சட்ட மந்திரி கைகோர்ப்பு: பாக்.,கில் எதிர்ப்பு
லாகூர் : பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டத்துறை அமைச்சரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் முக்கியமான மாகாணமான பஞ்சாப்பின் சட்டத்துறை அமைச்சராக ராணா சனாவுல்லா இருக்கிறார். இவர், ஜாங்க் மாவட்டத்தி...
தமிழகம்
தனலட்சுமியை போலீஸ் காவலில் எடுக்ககோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
கிருஷ்ணகிரி:குழந்தை கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளியான கிருஷ்ணகிரி தனலட்சுமியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த தனலட்சுமி, கிரிஜா, சிவா, ராணி, பாதிரியார்கள் அல்போன்ஸ் சேவியர், செல்வம் மற்ற...
தமிழகம்
வேதாரண்யம் பகுதியில் சூறைக் காற்று
வேதாரண்யம்:வேதாரண்யம் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால், கடல் கொந்தளிப்பாகவும், சீற்றமாகவும் உள்ளது. கோடிக்காடு, ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மூன்றாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை.அதனால், கடற்கரையில் 300 பிளாஸ்டிக் படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
தி.மு.க.,வில் இணைந்த ஈரோடு முத்துசாமி பேச்சு: அ.தி.மு.க.,வில் இருந்து நான் வெளியேற்றப்பட்ட போது, ஒரு அனாதையைப் போல கருதினேன். என்ன செய்வது எனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தோம். அப்போது தான், தி.மு.க.,வில் இணைந்து, முதல்வரின் கையைப் பற்றிக் கொள்வது தான், பாதுகாப்பானதாக இருக்கும் என எனக்குத் தோன்றியது. பா.ம.க., தலைவர...
இந்தியா
முல்லை பெரியாறு நீர்மட்டம் அதிகரிப்பு:ஒரே நாளில் மூன்று அடி உயர்ந்தது
இடுக்கி:மாநிலத்தில் பெய்து வரும் கனத்த மழையால், இடுக்கி மற்றும் முல்லைப் பெரியாறு அணைக்கட்டுகளில் நீர் மட்டும் அதிகரித்து வருகிறது.மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வலுத்து வருகிறது. இதனால் சில தினங்களாக கனத்த மழை பெய்து வருகிறது. இதில் இடுக்கி அணைக்கட்டு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால், 11ம் தேதி 3.96 செ.மீ., மழை பத...
தமிழகம்
குமரியில் தென் மேற்கு பருவமழை:படகு போக்குவரத்து பாதிப்பு
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.கேரளாவில், தென்மேற்கு பருவமழை வலுத்துள்ளதை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. மழையுடன் காற்றும் வீசுவதால், கடல் கொந்தளிப்புடன் காணப்படுக...
தமிழகம்
வேதாரண்யேஸ்வரர் கோயில்கோபுர பொம்மைகள் இடிந்ததா?
வேதாரண்யம்:வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் கோபுரங்களில் இருந்து நேற்று மாலை பொம்மைகள் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில், பழமை வாய்ந்த ஸ்தலம். சிவபெருமான் அகத்தியருக்கு திருமணக்கோல காட்சி காட்டிய பெருமையுடையதும், திருஞானசம்மந்தர், திரு...
தமிழகம்
மீனவர்கள் 7 பேர் மாயம் தேடும் பணி தீவிரம்
மார்த்தாண்டம்: முட்டம் அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற இரவிபுத்தன்துறையை சேர்ந்த 7 மீனவர்கள் கரை திரும்பாததால் அவர்களை தேடும் பணி தொடர்கிறது.குளச்சல் அருகே முட்டத்தில் இருந்து இரவிபுத்தன்துறையை சேர்ந்த மினி என்பவருக்கு சொந்தமான படகில் கடந்த 31ம் தேதி இரவிபுத்தன்துறையை சேர்ந்த பிஜூ(36), பினு(26), கிளீட்டஸ்(48), ஈசாக்(52...
தமிழகம்
ஒட்டன்சத்திரம் அருகே மினி லாரிமீது அரசு பஸ் மோதல்: 3 பேர் பலி
கள்ளிமந்தையம்:ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையம் அருகே மினி லாரி மீது அரசு பஸ் மோதியதில், மூவர் பலியாயினர்.திருநெல்வேலி மாவட்டம் வாடியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இன்னாசிமுத்து(37); கட்டட கான்ட்ராக்டர். இவர், கலவை மெஷின் வாங்குவதற்காக, அதே ஊரைச் சேர்ந்த தன்னுடைய நண்பர்கள் அருள் அந்தோணி(40), ஜேம்ஸ் அகஸ்டின் ஆகியோருடன், கோவைக்கு...
தமிழகம்
பன்றிக்காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் பலி: நாகர்கோவிலில் பரபரப்பு...
நாகர்கோவில்: ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி பன்றி காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் திடீரென இறந்ததால் பன்றி காய்ச்சல் பீதி வேகமாக பரவுகிறது. பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என சுகாதார துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். உலகையே உலுக்கிய எச்1என்1 இன்புழுயென்சா வைரஸ் மூலம் பரவ...
தமிழகம்
கடனை வசூலிக்க கல்லூரி மாணவர் கடத்தல்
பள்ளிபாளையம்:கொடுத்த கடனை வசூலிக்க, தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவரை ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த கும்பல், காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒட்டமெத்தையைச் சேர்ந்தவர் பழவியாபாரி தங்கமணி (40); இவரது மகன் ஜெயராமன்; குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ., ஏரோநா...
தமிழகம்
தலைமை ஆசிரியர் யார்?12 நாள் குழப்பம் தீர்ந்தது
விருத்தாசலம்:விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு யார் தலைமை ஆசிரியர் என்ற குழப்பத்திற்கு நேற்று தீர்வு காணப்பட்டது.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாசம். இதே பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் முருகேசன். இவர் 10 மாதங்களுக்கு முன் தலைமை ஆசிரியராக பதவி உயர்வ...