category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | மக்கள்தொகை கணக்கெடுப்பாளரை தாக்குவோர் மீது நடவடிக்கை : இயக்குனர் பேட்டி | நாகர்கோவில்: மக்கள்தொகை கணக்கெடுக்க செல்லும் அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்சஸ் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் நேற்று நாகர்கோவில் வந்தார். அவர் மக்கள்தொகை கணக்கெடுப்பு பண... |
தமிழகம் | ரயில்வே எல்லை பாதுகாப்பு படை:கண்காணிப்பு பணிகள் தீவிரம் | விக்கிரவாண்டி:ரயில்வே எல்லை பாதுகாப்புப் படை போலீசார், ரயில்வே பாதையில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே கடந்த 12ம் தேதி அதிகாலை ரயில் தண்டவாளம் மர்ம நபர்களால் வெடி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பய... |
தமிழகம் | குழந்தைகள் காப்பக விஷயத்தில் விதி மீறுவோர் மீது நடவடிக்கை : கலெக்டர் எச்சரிக்கை | நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் குழந்தைகள் காப்பகங்கள் நடத்துவோரில் விதிமுறையை மீறுவோர் மீது மதரீதியாக எந்தவித பாகுபாடுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராஜேந்திர ரத்னூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.பெந்தேகோஸ்தே சர்ச்சுகள் அமைப்பு சார்பில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நூற்றுக்கும் மேற்பட்ட பெந்தேகோஸ்தேவி... |
தமிழகம் | தமிழகத்தில் 30 உயர்நிலைப்பள்ளிகள்மேல்நிலைக்கு தரம் உயர்வு | மதுரை:தமிழகத்தில் 30 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைக்கு தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளன.சென்னை கொளத்தூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, மதுரை ஷெனாய் நகர் மாநகராட்சி பள்ளி, திருவள்ளூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, வேலூர் லத்தேரி அரசு பெண்கள் பள்ளி, தட்டப்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி, திருவண்ணாமலை அனக்காவூர், அக்கராபாளையம் அரசு உ... |
தமிழகம் | கன்னியாகுமரியில் உள்வாங்கியது கடல்இரண்டு மணிநேரம் படகுசேவை ரத்து | கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நேற்று கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக இரண்டே கால் மணிநேரம் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு கடலில் அவ்வப்போது ஏற்படும் கடல் மாற்றம் காரணமாக மீன்வளம் குறைந்து வருகிறது. மேலும் கடல் சீற்றமும், அலையின் வேகமும் அதிகரித்து வருகிறது. ... |
தமிழகம் | நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் வெடிகுண்டு சோதனை | நாகர்கோவில்: நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷனில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் தண்டவாளம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நாடுமுழுவதும் ரயில் தண்டவாளத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ... |
தமிழகம் | ரயில் பாதை தகர்ப்பு வழக்கில் முன்னேற்றம்:உளவுத்துறை ஐ.ஜி., ஜாபர்சேட் பேட்டி | விழுப்புரம்:ரயில்பாதையை குண்டு வைத்து தகர்த்த வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவர் என உளவுத்துறை ஐ.ஜி., ஜாபர்சேட் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே கடந்த 12ம் தேதி அதிகாலை, மர்ம நபர்களால் குண்டு வைத்து ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்டது. இச்சம்... |
தமிழகம் | நாகராஜா கோயில் தெப்பக்குளத்தில் வாலிபர் பலி | நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜாகோயில் தெப்பகுளத்தில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். நாகர்கோவில் நாகராஜாகோயில் தெப்பகுளத்தில் நேற்று காலை சிலர் குளித்துக்கொண்டிருந்தனர். 30வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். சிறிது நேரத்திற்கு பின் இறந்... |
தமிழகம் | எஸ்.ஐ., எழுத்து தேர்வில் 66 ஆயிரத்து 750 பேர் பங்கேற்பு: போலீசார் 9,145 பேரும் தயார் | திண்டுக்கல்:தமிழகத்தில் நடக்க உள்ள எஸ்.ஐ., எழுத்துத் தேர்வில், போலீஸ் துறையில் இருந்து 9,145 பேரும், பொதுவிண்ணப்பதாரர்கள் 57 ஆயிரத்து 605 பேரும், பெண்கள் 8,245 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.தமிழகத்தில், 2006ம் ஆண்டுக்கு பின், வரும் ஜூலை 3ல் போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களுக்கும், ஜூலை 4ல் பொது விண்ணப்பதாரர்களுக்கும் எஸ்.... |
தமிழகம் | ஆதிவாசி பள்ளியை சீரமைத்தவெளிநாட்டு மாணவர்கள் | கூடலூர்:தேக்கடிக்கு வந்த வெளிநாட்டு மாணவர்கள், தங்களது சொந்த செலவில், இங்குள்ள ஆதிவாசிகள் பள்ளியில் சீரமைப்புப் பணிகளை செய்தனர். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 13 பேர் தேக்கடிக்கு சுற்றுலா வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் கேரளாவிற்கு சுற்றுலா வரும் இப்பள்ளி மாணவர்கள் குண்டும் குழியுமாக உள்ள ரோட்டை சீரமைப்பது உட்பட... |
தமிழகம் | இலவச காஸ் இணைப்புகளை ஜூலை 31க்குள் வழங்க உத்தரவு | தேனி:தமிழகத்தில் இலவச காஸ் இணைப்புகளை ஜூலை 31க்குள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.தமிழக அரசு 2006 - 07 முதல் இலவச காஸ் இணைப்புகளை வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் தலா ஆறு லட்சம் பேருக்கு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் 2010-11 க்கு ஆறு லட்சம் பேருக்கு இணைப்பு வழங்கப்பட உள்ளது. மாவட்ட வாரியா... |
தமிழகம் | குமரியில் படகு போக்குவரத்து பாதிப்பு | நாகர்கோவில்: கேரளாவில், தென் மேற்கு பருவமழை வலுத்துள்ளதை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மழையுடன் காற்றும் வீசுகிறது.இதனால், நேற்று காலை முதல் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. சிறிது நேரத்தில் கடலின் நீர்மட்டம் குறைந்தது. திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் பாறைக்கும் படகு சர்வீஸ் நிறுத்தப்பட... |
தமிழகம் | தேனி டி.எப்.ஓ., மனைவியை கடத்தியதாகவனத்துறை டிரைவர் மீது போலீஸ் வழக்கு | தேனி:தனது மனைவியை வனத்துறையில் வேலை பார்க்கும் டிரைவர் கடத்திச் சென்று விட்டதாக, தேனி டி.எப்.ஓ., சீனிவாச ஆர்.ரெட்டி கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் டி.எப்.ஓ., மனைவி தேனி போலீசில் சரணடைந்து "தான் கடத்தப்படவில்லை' என வாக்குமூலம் கொடுத்துள்ளார். தேனி மாவட்ட வன அலுவலராக பணியாற்றுபவர் சீனிவ... |
தமிழகம் | செம்மொழி மாநாடு பாதுகாப்பில்4000 தென்மாவட்ட போலீசார் | மதுரை:கோவையில் நடக்கும் உலக செம்மொழி மாநாடு பாதுகாப்பு பணியில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த 4,000 போலீசார் ஈடுபடுகின்றனர்.செம்மொழி மாநாடு கோவையில், ஜூன் 23 முதல் 27 வரை நடக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 35 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தலைமையில் 12,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதில் தென்மாவட்ட போலீசாரின்... |
இந்தியா | உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாள் விடுமுறை | புதுச்சேரி : கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என, முதல்வர் வைத்திலிங்கம் கூறினார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சியால், கோவ... |
தமிழகம் | ஆர்கிடெக்சர் படிப்பிற்குநாளை முதல் விண்ணப்பம் | சென்னை:பி.ஆர்க்., படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.பி.இ., - பி.டெக்., பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம், மே 3ம் தேதி முதல் 31ம் தேதி வரை வழங்கப்பட்டன. இப்படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 560 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஐந்தாண்டு பி.ஆர்க் படிப்பிற்கான விண்ணப்பங்கள், நாளை முதல் சென்னை அண்ணா ப... |
தமிழகம் | கால்நடை ஆஸ்பத்திரியில் பணியாளர் பற்றாக்குறை | பெரியகுளம் : மாவட்டத்திலுள்ள கால்நடை ஆஸ்பத்திரிகளில் பராமரிப்பு உதவியாளர் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம், அல்லிநகரம் மற்றும் போடியில் கால்நடை ஆஸ்பத்திரிகளும், கம்பம், சின்னமனூர், தேவதானப்பட்டி, கோட்டூர் உள்ளிட்ட ஊர்களில் 20 கால்நடை மருந்தகங்களும் உள... |
தமிழகம் | ரயில் டிரைவர், கார்டு உட்படஆறு பேருக்கு ரூ.5,000 பரிசு | சென்னை:விழுப்புரம் அருகே ரயில் பாதையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது, சமயோசிதமாக செயல்பட்டு, ரயில்கள் விபத்தில் சிக்காமல் தப்பிக்க காரணமான ஆறு பேருக்கு, தெற்கு ரயில்வே பொது மேலாளர் பணப் பரிசு வழங்கி பாராட்டினார்.சென்னை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டு ராஜசேகரன், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் டிரைவர் கோபிநாத் ராவ், உதவி டிரை... |
தமிழகம் | குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு உபகரணம் | தேனி : கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங் கும் சேவை மையத்தை கலெக்டர் துவக்கி வைத்தார். வீரபாண்டி துவக்க விவசாய கூட்டுறவு வங்கி சார்பில் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் விவசாய உபகரணங்கள் வழங்கும் சேவை மையம் துவக்க விழா நடந்தது. கலெக்டர் முத்துவீரன் தலைமை வகித்து சேவை மையத்த... |
இந்தியா | மாவோயிஸ்ட் பந்த் எதிரொலி:ரயில்களின் வேகம் குறைப்பு | புதுடில்லி:ஒரிசா, உட்பட நான்கு மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால், ரயில்களின் வேகத்தைக் குறைத்து இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டந்த மே 28ல் மாவோயிஸ்ட்கள் நடத்திய பந்த்தின் போது மேற்கு வங்கம், மிட்னாபூர் மாவட்டத்தில் ரயில் பாதைகள் தகர்க்கப்பட்டதால், அந்த வழியாகச் சென்ற ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் கவிழ... |
தமிழகம் | ரயில் பாதை தகர்ப்பு வழக்கில் முன்னேற்றம்:உளவுத்துறை ஐ.ஜி., ஜாபர்சேட் பேட்டி | விழுப்புரம்:ரயில்பாதையை குண்டு வைத்து தகர்த்த வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவர் என உளவுத்துறை ஐ.ஜி., ஜாபர்சேட் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே கடந்த 12ம் தேதி அதிகாலை, மர்ம நபர்களால் குண்டு வைத்து ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்டது. இச்சம்... |
இந்தியா | குண்டு வெடிப்பில் மதானி பெயர் : கருத்து கூற அச்சுதானந்தன் மறுப்பு | பெங்களூரு : பெங்களூரு குண்டு வெடிப்பில், மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் மதானியின் பெயரை போலீசார் குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளது குறித்து கருத்து தெரிவிக்க, கேரள முதல்வர் அச்சுதானந்தன் மறுத்துவிட்டார். இந்த விவகாரத்தில், கர்நாடக போலீசாருக்கு எல்லாவிதமான உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாட... |
தமிழகம் | புதிய கல்லூரி, பாடப்பிரிவு அடையாளஎண் பெற விண்ணப்பிக்க அறிவுறுத்தல் | திண்டுக்கல்:மாணவர் கல்வி உதவித் தொகைக்கான கல்லூரி அடையாள எண் பெற, கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.இதற்கான உத்தரவில் கூறியுள்ளதாவது: இலவச கல்வி திட்டத்தின்கீழ், அரசு, அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரி பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, எவ்வித நிபந்தனையும் இல்லாமல் தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங... |
தமிழகம் | பாதியில் நிற்கும் பணிகள் சுற்றுலா பயணிகள் அவதி | பெரியகுளம் : கும்பக்கரை அருவியில் உடை மாற்றும் அறை கட்டும் பணி பாதியில் நிற்பதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி உள் ளனர்.பெரியகுளம் அருகே 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழையால் இங்குள்ள அருவிக்கு தண்ணீர் வரத்து உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் கும்பக்கரை அருவியில் கு... |
தமிழகம் | விதைநேர்த்தி முனைப்பு கூட்டம் | பெரியகுளம் : தாமரைக்குளம், முதலக்கம்பட்டி கிராமங்களில் விதைநேர்த்தி மற்றும் மண் மாதிரி எடுக்கும் முறை குறித்து முனைப்பு இயக்க கூட்டம் நடத்தப்பட்டது. தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் பெரியசாமி, மண்மாதிரி வேளாண்மை அலுவலர் அழகுநாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிக... |
தமிழகம் | ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் ஏற்றிய தேசியக்கொடி புதரில் கண்டெடுப்பு | ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் ஏற்றிய தேசிய கொடி மாயமான நிலையில், புதரிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பதினைந்து மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கும், ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையரங்கில் நேற்று துவங்கியது. இதையொட்டி, மைதான வளாகத்தில் தேசியக்கொடி ஏற்பட்டு, இந்திய... |
இந்தியா | ஜனாதிபதி, பிரதமர் சந்திப்பு | புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமும், இதில் கலந்து கொண்டார். இச்சந்திப்பின் போது, உள்நாட்டு பாதுகாப்பு, நக்சலைட் அச்சுறுத்தல் மற்றும் அவர்களை எதிர்கொள்ள அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், ... |
தமிழகம் | கும்பக்கரை- அடுக்கம் ரோடு பணியில் 7 கோடி ரூபாய் ரோடு அமைத்தும் பலனில்லாததால் பொதுமக்கள் அவதி | பெரியகுளம் : பெரியகுளம் கும்பக்கரையில் இருந்து - அடுக்கம் வழியாக கொடைக் கானல் செல்லும் ரோடு அமைக்கும் பணிக்காக ஏழு கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பிரதம மந்திரி கிராமச்சாலைகள் அபிவிருத்தி திட்டத் தின் கீழ் கும்பக்கரையிலிருந்து- அடுக்கம்- பெருமாள்மலை வரை ரோடு அமைக்கும் பணி 7 ஆண்டுகளுக்கு முன் துவங்கப் பட... |
தமிழகம் | தென்னை நார் கழிவில் உரம் தயாரிக்க காளான் இலவசமாக விநியோகம் | கம்பம் : தென்னை நார் கழிவில் இருந்து உரம் தயாரிக்க தேவைப்படும் புளூரோட்டஸ் காளான் மற்றும் யூரியா கிட் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என்று கம்பம் உதவி விவசாயத்துறை அலுவலர் ராமராஜ் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :தென்னை நார் கழிவுகளை புளூரோட்டஸ் என்னும் காளான் கொண்டு மக்க வைப்பதால் கார்பன் அளவு குறைந்த... |
தமிழகம் | காஸ் அடுப்பு வழங்கும் விழா | தேவதானப்பட்டி : சில்வார்பட்டியில் இலவச காஸ் அடுப்பு வழங் கும் விழா ஊராட்சி தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் அன்னலட்சுமி முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் பாண்டியன் இலவச காஸ் அடுப்புகளை வழங் கினார். ஒன்றிய தி.மு.க., செயலாளர் போஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். சில்வார்பட்டி தி.மு.க., செயலாளர் முருகன் ந... |
தமிழகம் | தொழில் திறன் பயிற்சி | பெரியகுளம் : தேனி மாவட்ட மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வடுகபட்டி ராசி தொண்டு நிறுவன பயிற்சி மையத்தில் தொழில் திறன் பயிற்சி நடத்தப்பட்டது. நிறைவுவிழாவில் மகளிர் திட்ட உதவி அலுவலர் ஜான்பால் தலைமை வகித்தார். ராசி தொண்டு நிறுவன இயக்குனர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். கனராவங்கி மேலாளர் சீனிவாசன், யூனியன... |
தமிழகம் | அரசு மருத்துவக்கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் | தேனி : தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடந்தன. தடகள போட்டிகள், வாலிபால், கூடைப்பந்து, கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. நிறைவு நாள் போட்டிகளை பாலகிருஷ்ணன் எஸ்.பி., துவக்கி வைத்தார். மாலையில் நிறைவு விழா நடந்தது. ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் முனியப்பன் தலைமை வகித்தார். துணை கண்காணிப்ப... |
தமிழகம் | வாலிபர் பலி | போடி : மதுரை புட்டுத்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார் (23). எம்.பி.ஏ., படித்து வருகிறார். இவர் போடி தெற்கு தெருவில் வசிக்கும் நண்பர் கார்த்திக் (23) என்பவரது வீடு கிரகப்பிரவேசத்திற்கு போடி வந்துள்ளார். நிகழ்ச்சி முடிந்து நண்பர்களுடன் போடி அருகே உள்ள பங்காருசாமி கண்மாயில் குளிக்க சென்றுள்ளார். அங்கு அருண்குமார் சக... |
தமிழகம் | பெண் மாயம் | தேனி : ராஜபாளையம் அருகே அழகாபுரியை சேர்ந்தவர் பொன்ராஜ் (60). இவரது மகள் அஞ்சலிதேவி (32) ஆண்டிபட்டி சித்தார்பட்டியில் கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அஞ்சலிதேவி தனது மகள் அர்ச்சனா (9), மகன் யோகேஸ் (7) ஆகியோருடன் காணாமல் போய் விட்டதாக பொன்ராஜ் ஆண்டிபட்டி போலீசில் புகார் செய்துள்ளார். |
General | கிர்கிஸ்தானில் 78 இந்தியர்கள் மீட்பு | கிர்குக் : கிர்கிஸ்தான் நாட்டில் இரு பிரிவினருக்கிடையே நடந்து வரும் கலவரத்தில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். அங்கு படித்து வரும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது. இந்நிலையில், கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்களில் 77 பேரும், ஒரு பேராசிரியரும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
தமிழகம் | மூதாட்டி பலி | பெரியகுளம் : திருச்சி திலகர் நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (39), இவர், காரில் திருச்சியிலிருந்து தேனிக்கு செல்லும் போது, லட்சுமிபுரம் அருகே ரோட்டில் நடந்து சென்ற பெயர் தெரியாத 70 வயதுடைய பெண் மீது மோதியதில் இறந்தார். |
தமிழகம் | வேலைவாங்கித்தருவதாக மோசடி: 4 பேர் மீது வழக்கு | ஆண்டிபட்டி : வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக கூறி ஏமாற்றி பணம் பறித்த நான்கு பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் ராமராஜ் மகன் மோகன் ராஜ்(34). வெளிநாட்டு கம் பெனியில் வேலை பெறுவதற்காக பாஸ்போர்ட், விசா பெற்று தருவதாக கூறி, திருச்சியைச்சேர்ந்த துரை, முருகன், சின... |
தமிழகம் | காப்பீட்டு திட்ட முகாம் | சின்னமனூர் : ஓடைப்பட்டியில் மருத்துவகாப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சுப்புராஜ் தலைமை வகித்தார். முகாமில் 522 பேர் கலந்துகொண்டு பரிசோதனை செய்துகொண்டனர். 32 பேர் மேல்சிகிச்øõக தேர்வு செய்யப்பட்டனர். |
தமிழகம் | அறுவடை இயந்திரம் அறிமுகம் | ஆண்டிபட்டி : ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலையின் சார்பில் அமெரிக்காவின் ஜான் டீர் நிறுவனத்தின் அதி நவீன கரும்பு அறுவடை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த இயந்திரம் ஒரு மணி நேரத்தில் 30 முதல் 40 டன் வீதம் 7 ஏக்கர் பரப்பு வரையில் ஒரே நாளில் அறுவடை செய்யும் திறன் கொண்டது. தற்போது நிலவும் ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க இது உதவ... |
தமிழகம் | கன மழையால் இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவு | கூடலூர் : கன மழை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கேரளாவில் நேற்று பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால், இடுக்கி மாவட்டத்தில் குட்டிக்கானத்தில் இருந்து வாகமன் செல்லும் ரோட... |
தமிழகம் | மாணவர் சேர்க்கை ஊர்வலம் | பெரியகுளம் : பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை ஊர்வலம் தலைமை ஆசிரியை ரஜியா தலைமையில் நடந் தது. மாணவர் சேர்க்கை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்கள் அடங் கிய அட்டையை ஏந்தி பெரியகுளம் பகுதியில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். ஆசிரியர்கள் பத்மினி, ஹேமாவதி, ஜெயந்தி, ஆரோக்கியம்மாள், பியூலா, ர... |
தமிழகம் | ஷாப்பர்ஸ் ஷாப் திறப்பு விழா | போடி : போடியில் சுகன்யாஸ் ஷாப்பர்ஸ் ஷாப் திறப்பு விழா தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. உரிமையாளர்கள் சுப்பிரமணி, ராஜேஸ்குமார் வரவேற்றனர். லட்சுமணன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். தாசில்தார் ராஜசேகரன், டாக்டர் வேல்ராஜ், வர்த்தகர்கள் சங்க செயலாளர் தனசேகரன், விவசாய இடுபொருள் வியாபாரிகள்... |
தமிழகம் | புது மாப்பிள்ளை தற்கொலை | தேவதானப்பட்டி : துவரங்குறிச்சி கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜா (33). இவருக்கும் தாடிக்கொம்பை சேர்ந்த விஜயலட்சுமி (23) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. திருமண பத்திரிக்கை கொடுக்க பெரியகுளம் பகுதிக்கு வந்த ராஜா, பத்திரிக்கை கொடுத்து விட்டு இருசக்கரவாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். காட்ரோடு முனிய... |
தமிழகம் | பள்ளி ஜன்னல் உடைப்பு | தேனி : தேவதானப்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத் தில் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து மையத்தின் நான்கு ஜன்னல்களை திருட்டுக்கும்பல் உடைத்து, பள்ளிக்குள் இருந்த நோட்டுகள், பதிவேடுகள், பாத்திரங்களை திருடிச் சென்று விட்டது. இந்த ஜன்னல்களை சீரமைக்காததால் ஆவணங் கள் எதையுமே உள்ளே வைக்க முடியாமல்... |
தமிழகம் | செம்மொழி மாநாடு சுடர் தொடரோட்டம் : டிஐஜி துவக்கி வைத்தார் | கோவில்பட்டி: உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு சுடர் ஏந்திய மனோன் மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் ஓடும் தொடரோட்டம் கோவில்பட்டி கேஆர் கலைக்கல்லூரி வந்தடைந்து மீண்டும் நேற்று மூன்றாம் நாள் தொடரோட்டம் துவங்கியது.கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு சுடர் தொடரோட்டம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரியில் துவங... |
தமிழகம் | விதை நேர்த்தி, மண் பரிசோதனை முகாம் | கம்பம் : கம்பம் பகுதியில் மண் பரிசோதனை செய்தல் மற்றும் விதை நேர்த்தி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. க.புதுப்பட்டியில் மண்மாதிரி எடுத்தல் மற்றும் விதைநேர்த்தி முகாம் விவசாயத்துறை சார்பில் நடந்தது. விவசாய துறை துணை இயக்குனர் செல்லத்துரை தலைமை வகித்தார். கம்பம் உதவி இயக்குனர் (பொறுப்பு) ராமராஜ் முன்னிலை வகித்தார். விவச... |
தமிழகம் | மீனவர்கள் 7 பேர் மாயம் தேடும் பணி தீவிரம் | மார்த்தாண்டம் : முட்டம் அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற இரவிபுத்தன்துறையை சேர்ந்த 7 மீனவர்கள் கரை திரும்பாததால் அவர்களை தேடும் பணி தொடர்கிறது.குளச்சல் அருகே முட்டத்தில் இருந்து இரவிபுத்தன்துறையை சேர்ந்த மினி என்பவருக்கு சொந்தமான படகில் கடந்த 31ம் தேதி இரவிபுத்தன்துறையை சேர்ந்த பிஜூ (36), பினு(26), கிளீட்டஸ்(48), ஈசாக்(... |
தமிழகம் | வேலைவாய்ப்பு அட்டையில் கூடுதல் விபரங்கள் | தூத்துக்குடி : முதல் முறையாக வேலைவாய்ப்பு அட்டையின் பின்பக்கம் அனைத்து விபரம் அடங்கிய தகவல் அச்சிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பல்வேறு துறைகளில் ஆட்கள் நியமனம் செய்யப்பட்டு வருவதால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை வழக்கத்தை விட கூடுதலாக அதிகரித்துள்ள... |
தமிழகம் | கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா | தூத்துக்குடி, : சாண்டி கல்வியியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடந்தது.சாண்டி கல்விக் குழுமத்தின் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ராபர்ட் ஜெயசிங் கனகராஜ் வரவேற்றார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டரின் துணைவியார் சிந்துஜா பிரகாஷ் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்... |
தமிழகம் | ஆதிவாசி பள்ளியை சீரமைத்த வெளிநாட்டு மாணவர்கள் | கூடலூர்: தேக்கடிக்கு வந்த வெளிநாட்டு மாணவர்கள் தங்களது சொந்த செலவில் இங்குள்ள ஆதிவாசிகள் பள்ளியில் சீரமைப்பு பணிகளை செய்தனர். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 13 பேர் தேக்கடிக்கு சுற்றுலா வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் கேரளாவிற்கு சுற்றுலா வரும் இப்பள்ளி மாணவர்கள் குண்டும் குழியுமாக உள்ள ரோட்டை சீரமைப்பது உட்பட பண... |
தமிழகம் | மருத்துவ முகாம் | கோவில்பட்டி : கோவில்பட்டி அரு கே இனாம் மணியாச்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.முகாமிற்கு இனாம் மணியாச்சி பஞ்., தலைவர் பச்சமால் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கோவி ல்பட்டி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சாத்தூரப்பன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து நடந்த முகாமில் 452 பேர் சிகிச்சை பெற்றனர். ஏற்பாடுகளை வில்... |
தமிழகம் | இலவச காஸ் இணைப்புகளை ஜூலை 31க்குள் வழங்க உத்தரவு | தேனி: தமிழகத்தில் இலவச காஸ் இணைப்புகளை ஜூலை 31க்குள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு 2006-07 முதல் இலவச காஸ் இணைப்புகளை வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் தலா ஆறு லட்சம் பேருக்கு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் 2010-11 க்கு ஆறு லட்சம் பேருக்கு இணைப்பு வழங்கப்பட உள்ளது. மாவட்ட வாரியா... |
தமிழகம் | நோட்டு புத்தகம் வழங்கும் விழா | தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தின் இந்து ஏழை மாணவர் கல்வி வளர்ச்சி கழகம் சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது.ஸ்பிக் நிறுவனத்தின் இந்து ஏழை மாணவர் கல்வி வளர்ச்சிக் கழகத்தின் 27வது இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது. ஸ்பிக் நிறுவனத் துணைத் தலைவர் முத்துமனோகரன் தலைமை வகித்தார். கழகத்தின... |
தமிழகம் | காணாமல் போன லாரி மீட்பு | தூத்துக்குடி : தூத்துக்குடி சிப்காட் பகுதியில் காணாமல் போன லாரியை போலீசார் அதிரடியாக மீட்டு தூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது; நாமக்கல் மாவட்டம் காரைக்குறிச்சியைச் சேர்ந்தவர் துரைச்சாமி மகன் கதிரவன்(23) லாரி அதிபர். இவரது லாரியில் தூத்துக்குடி பகுதியில் சரக்கு இறக்கிவிட்டு சிப்கா... |
தமிழகம் | தேனி டி.எப்.ஓ., மனைவியை கடத்தியதாக வனத்துறை டிரைவர் மீது போலீஸ் வழக்கு | தேனி: தனது மனைவியை வனத்துறையில் வேலை பார்க்கும் டிரைவர் கடத்திச் சென்று விட்டதாக தேனி டி.எப்.ஓ., சீனிவாச ஆர்.ரெட்டி கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் டி.எப்.ஓ., மனைவி தேனி போலீசில் சரணடைந்து "தான் கடத்தப்படவில்லை' என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.தேனி மாவட்ட வன அலுவலராக பணியாற்றுபவர் சீனிவா... |
தமிழகம் | முதலிடம் பெற்ற மாணவிக்கு பரிசு | தூத்துக்குடி : 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி தஸ்லிமா 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 481 மார்க்குகள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். இவர் தமிழ்-95, ஆங்கிலம்-91, கணிதம்-98, அறிவியல்-100, சமூக அறிவியல்-97 மார்க்... |
தமிழகம் | விழிப்புணர்வு பேரணி | சாத்தான்குளம்: சாத்தான்குளம் வட்டாரத்தில் கல்வி விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடந்தது.சாத்தான்குளம் அருகேயுள்ள வடக்கு அமுதுண்ணாகுடி டி.என்.டி.டி.ஏ.ஆரம்பப் பள்ளியில் கல்விக்குழு தலைவர் அப்பாத்துரை தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கல்விக்குழு உறுப்பினர் லூக்காஸ், தலைமை ஆசிரியர் செல்லப்பா, உதவி ஆசிரியர் ஜோதி மற்றும் மா... |
தமிழகம் | தமிழ்நாடு பிராமணர் சங்கத்தில் நாற்பெரும் விழா | தூத்துக்குடி : தாம்ப்ராஸ் தூத்துக்குடி நகர கிளை சார்பில் நாற்பெரும் விழா நடந்தது.இதில் மாநில இணை செயலாளர் பாலாஜி, நெல்லை ராமமூர்த்தி, லெட்சுமி ராஜமன்னார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 28 நபர்களுக்கு கிளையின் சார்பில் இலவச நோட்புத்தகம் வழங்கப்பட்டது.எஸ்.எஸ்.எல்.சி.பொது தேர்வில் (ஆங்கிலோ இந்தியன்) ஹோலிகிராஸ் பள்ளியில் ம... |
தமிழகம் | பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு | கூடலூர்: பெரியாறு அணை நீர்பிடிப்பில் பெய்து வரும் கன மழையால் கடந்த இரண்டு நாளில் 3.5 அடி நீர்மட்டம் உயர்ந்தது.தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து பெரியாறு அணை நீர்பிடிப்பில் கடந்த இரண்டு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 4545 கன அடியாக இருந்தது. இதனால் அணையி... |
தமிழகம் | கல்வி விழிப்புணர்வு பேரணி | தூத்துக்குடி : சண்முகபுரம் டி.என்.டி.டி.ஏ.பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரணியை பள்ளி தாளாளர் தமிழ்செல்வன் ஜெபித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி வார்டு 21ல் உள்ள தெருக்கள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. கல்வி விழிப்புணர்வை உண்டாக்கும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. பேரணியில் பி.டி.ஓ., தலைவர் கம... |
தமிழகம் | கல்வி விழிப்புணர்வு பேரணி | தூத்துக்குடி : தூத்துக்குடி, கால்டுவெல் தொடக்கப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு நாள் விழா நடந்தது.கல்வி விழிப்புணர்வுப் பேரணியை கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசெல்வன் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார். பேரணியில் மாணவ, மாணவிகள் கல்வி சம்பந்தமான கோஷங்களை எழுப்பினர். பேரணி பள்ளியை வந்தடைந்த பின் இலவச சீருடை வழங்... |
தமிழகம் | திருமணவிழாவில் தாம்பூலத்திற்கு பதில் மரக்கன்றுகள் வழங்கி புதுமை | ஆண்டிபட்டி: சுற்று சூழல், பசுமை பாதுகாக்கும் தொலை நோக்கு திட்டத்தை வலியுறுத்தி ஆண்டிபட்டியை சேர்ந்த ஜோடி தங்கள் திருமண விழாவிற்கு வந்த ஆயிரம் பேருக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கினர். ஆண்டிபட்டி அருகே சித்தையகவுண்டன்பட்டியை சேர்ந்த சின்னவேல்ச்சாமி மகன் வைரமுத்து. பி.டெக்.,சிவில் இன்ஜினியரிங் முடித்த இவர், தற்போது மஸ்கட்டில... |
தமிழகம் | பைக் திருடன் கைது | தூத்துக்குடி, : தூத்துக்குடி அருகே பைக் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 பைக்குகள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பல இடங்களில் திருடிய பணத்தைக் கொண்டு பெண்களுடன் உல்லாசமாக இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,தூத்துக்குடி அருகே சாத்தான்குளம் மேல நடுவக்க... |
தமிழகம் | வருஷாபிஷேக விழா | சாத்தான்குளம் : சாத்தான்குளம் அழகம்மன் கோயில் வருஷாபிஷேக விழா வரும் 19ம் தேதி நடக்கிறது.சாத்தான்குளம் தேவி அழகம்மன் கோயில் வருஷாபிஷேக விழா வரும் 19ம் தேதி அதிகாலை கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகிறது. காலை 10.30 மணிக்கு விமான அபிஷேகமும், மூலாலய பரிவாரமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் மற்றும் அலங்கார அர்ச்சனை தீபாராதனையும், நண்ப... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டில் காய்கறி சிற்பம் அமைக்கும் தேனி வாலிபர் | தேனி: உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு கண்காட்சி அரங்கில் தேனியை சேர்ந்த இளைஞருக்கு காய்கறி சிற்பங்கள் அமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கூடலூர் வ.உ.சி.,தெருவை சேர்ந்தவர் இளஞ்செழியன்(24). கேட்டரிங் டிப்ளமோ படித்துள்ளார். ஆறு ஆண்டுகளாக காய்கறிகளில் சிற்பங்கள் செதுக்கி வருகிறார். இவருக்கு கோவையில் நடக்கும் உலகத்தமிழ் செம... |
தமிழகம் | மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் கற்றுக் கொடுக்க அறிவுரை | தூத்துக்குடி : மாணவர்கள் ஆர்வத்தை தூண்டம் வகையில் ஆசிரியர்கள் சிறப்பாக செயல்முறைகற்றல் மற்றும் படைப்பாற்றல் கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளை ஆய்வு செய்த அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் ஐ.ஏ.எஸ் அதிகாரி வெங்கடேசன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அனைவர... |
தமிழகம் | விருதுநகர், கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு | விருதுநகர்:விருதுநகர் மற்றும் கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். அப்போது குப்பைத் தொட்டியிலிருந்த பணம் உட்பட கணக்கில் வராத ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டது.விருதுநகர் கச்சேரி ரோட்டில் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிக முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்... |
தமிழகம் | மாற்றுதிறனாளிகளுக்கு இலவச பேட்டரி மோட்டார் பைக் | தூத்துக்குடி : தூத்துக்குடியில் மாற்றுதிறனாளிகள் 6 பேருக்கு மூன்று சக்கர பேட்டரி மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. இதனை கலெக்டர் வழங்கினார்.தூத்துக்குடி கலெக்டர் ஆபிசில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தை... |
தமிழகம் | பல்லடத்தில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு:சார்பதிவாளர் மீது வழக்கு | பல்லடம்:பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 22 ஆயிரத்து 300 ரூபாய் சிக்கியது; இது தொடர்பாக சார்பதிவாளர் மீது வழக்கு பதிந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.கோவை லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி., சண்முகப்பிரியா தலைமையில் போலீசார் நேற்று மாலை 5.15... |
தமிழகம் | தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் பாலம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி | தூத்துக்குடி,: - தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் துறைமுகம் டூ மதுரை சாலையில் பிரமாண்ட உயர்மட்ட பாலம் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கான மாதிரி வடிவம் தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் 18ம் தேதி இது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடப்பதாக கலெக்டர் பிரகாஷ் தெரிவித்தார்.தூத்துக்குடி கலெக்டர் ஆபிசில் நேற்று திங்கட்கிழமை ... |
தமிழகம் | திருச்செந்தூர் வாலிபர் கத்தாரில் மர்ம சாவு | தூத்துக்குடி:திருச்செந்தூரைச் சேர்ந்த வாலிபர், கத்தார் நாட்டில் மர்மமான முறையில் இறந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் அடுத்த ஆலந்தலை தெற்கு தெருவைச் சேர்ந்த பிரிங் பர்னாந்து மகன் ராஜேஷ்(27). இவர், மும்பை தனியார் நிறுவனம் மூலம், 2007ம் ஆண்டு கத்தார் நாட்டில் இரண்டு ... |
தமிழகம் | நெடுஞ்சாலைத்துறையில் சீரமைப்பு; 963 சார்நிலைப் பணியிடங்கள் ரத்து ! | விருதுநகர்: தமிழக நெடுஞ்சாலைத்துறையில் நிர்வாக சீரமைப்புக்காக 963 சார்நிலைப்பணியிடங்களை ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம், 2,180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலக வங்கி நிதியுதவியுடன் 2004ம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போதைய திருத்திய மதிப்பீடாக 2,442 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ள... |
தமிழகம் | வாழ்வாதார திட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: கிருஷ்ணசாமி பேட்டி | சாத்தூர்: கவர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்தாது மக்களின் வாழ்வாதார திட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். சாத்தூரில் அவர் கூறியதாவது: தென் மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவித்து குடிநீர் பிரச்னைக்கு அரசு தீர்வு காண வேண்டும். 100 ஆண்டுக்கும் மேலாக விளாத்திக்குளம், ... |
தமிழகம் | வெளிநாட்டு பைலட்கள் நியமனத்தில் நிபந்தனை தளர்வு | சென்னை:தனியார் விமானங்களில் வெளிநாட்டு பைலட்கள் நியமனத்தில் குறைந்தபட்ச அனுபவம், மருத்துவ பரிசோதனை தளர்வு நிபந்தனைகளை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய பைலட்கள் நலச் சங்கம் சார்பில் தாக்கல்... |
தமிழகம் | மதிப்பெண் பட்டியல் இன்று வினியோகம் | சென்னை:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 10 லட்சம் மாணவர்களுக்கும், இன்று அவரவர் படித்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகின்றன.எஸ்.எஸ்.எல்.சி., - மெட்ரிக் - ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வுகள், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்தன. இத்தேர்வை, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர... |
இந்தியா | கற்பழிப்பில் சிக்கிய விமானிக்கு ஜாமீன் | மும்பை:கற்பழிப்பு வழக்கில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிக்கு மும்பை கோர்ட் நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் துணை விமானியாக பணிபுரிந்து வந்தவர் வருண் அகர்வால்(27). இவர் மீது அதே நிறுவனத்தில் பணிபுரிந்த 22 வயது இளம் விமான பணிப்பெண் ஒருவர் கடந்த ஆண்டு பரபரப்பு புகார் கொடுத்தார். இதையடு... |
தமிழகம் | இலங்கை அமைச்சர் கைது கோரிய விவகாரம்:அரசிடம் விளக்கம் பெற ஐகோர்ட் உத்தரவு | சென்னை:இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரிய மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அரசிடம் விளக்கம் பெறுமாறு அரசு வக்கீலுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு மக்கள் உரிமை அமைப்பின் செயலரும், வக்கீலுமான புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், "இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது சென்னை கோர்ட்டுக... |
தமிழகம் | சாலைகளுக்கு தமிழ் அறிஞர் பெயர்:மேயர் தகவல் | சென்னை:சென்னை நகரில் சாலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள ஆங்கிலப் பெயர்களை நீக்கிவிட்டு, தமிழ் அறிஞர்கள் பெயர்களை வைக்க மாநகராட்சி திட்டமிட்டுளகோவையில் செம்மொழி மாநாடு நடப்பதையொட்டி, சென்னை நகரில் ஆங்கிலேயர்களின் பெயரில் உள்ள சாலைகளுக்கு, தமிழ் அறிஞர்களின் பெயர்களை வைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, மாநகராட்சியி... |
தமிழகம் | குமரியில் பருவமழை தீவிரம் | நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.கேரளாவில், தென்மேற்கு பருவமழை வலுத்துள்ளதை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. மழையுடன் காற்றும் வீசுவதால், கடல் கொந்தளிப்புடன் காணப்படுக... |
தமிழகம் | நெடுஞ்சாலைத்துறையில் 963 பணியிடங்கள் ரத்து | விருதுநகர்:தமிழக நெடுஞ்சாலைத்துறையில், நிர்வாக சீரமைப்புக்காக 963 சார்நிலைப்பணியிடங்களை ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம், 2,180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலக வங்கி நிதியுதவியுடன் 2004ம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போதைய திருத்திய மதிப்பீடாக 2,442 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்... |
தமிழகம் | ஓடிக் கொண்டிருந்த கார் தீ பிடித்து எரிந்தது | தாம்பரம்:சேலையூரை அடுத்த சந்தோஷபுரம் அருகே ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அரும்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (46). இவர், தனக்கு சொந்தமான இண்டிகா காரில், நேற்று காலை அரும்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி சாலை வழியாக சந்தோஷபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்த... |
தமிழகம் | தீப்பற்றி எரிந்த டி.ஐ.ஜி., கார் | மதுரவாயல்:குடும்பத்துடன் காரில் சென்ற டி.ஐ.ஜி.,யின் கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.தமிழக காவல் துறையின் உளவுத்துறை டி.ஐ.ஜி.,யாக பணிபுரிபவர் நல்லசிவம். நேற்று முன்தினம் தன் குடும்பத்தினருடன் காரில்(டி என் 07 பி ஜி 2345)வெளியூர் சென்றார்.டிரைவர் பரந்தாமன் காரை ஓட்டிச் சென்றார். க... |
தமிழகம் | அக்காவுடன் தகராறு செய்த மாமனைஅடித்து கொலை செய்தவர் கைது | திருமுல்லைவாயல்:அக்காவுடன் தகராறு செய்து அம்மாவையும் திட்டிய மாமனை, உருட்டுக் கட்டையால் அடித்து கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த மாமியாரும் சிக்கினார்.அம்பத்தூர் அடுத்த, அயப்பாக்கம் திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவராஜ்(40). இவரது மனைவி நிர்மலா (34). இவர்களது மகன் அஜீத்குமார் (5).மனைவி... |
தமிழகம் | உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் காய்கறிசிற்பம் அமைக்கும் தேனி வாலிபர் | தேனி:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு கண்காட்சி அரங்கில், தேனியைச் சேர்ந்த இளைஞருக்கு காய்கறி சிற்பங்கள் அமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.கூடலூர் வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் இளஞ்செழியன்(24); கேட்டரிங் டிப்ளமோ படித்துள்ளார். ஆறு ஆண்டுகளாக காய்கறிகளில் சிற்பங்கள் செதுக்கி வருகிறார். இவருக்கு கோவையில் நடக்கும் உலகத் த... |
தமிழகம் | வாசுதேவநல்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தை நவம்பர் மாதத்திற்குள் நிறைவேற்ற முயற்சி | ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி., நகராட்சி மக்களுக்காக உருவாக்கப்பட்ட வாசுதேவநல்லூர் கூட்டுகுடிநீர் திட்ட பணிகளை நவம்பர் மாதத்திற்குள் நிறைவேற்ற அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். ஸ்ரீவி., நகராட்சிக்கு செண்பகத்தோப்பு பேயனாற்று பகுதியில் இருந்து கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த தண்ணீர... |
தமிழகம் | புதிய குடிநீர் இணைப்பு பெறும் எளிய நடைமுறை இயக்குனர் உத்தரவை கண்டுகொள்ளாத நகராட்சிகள் | சிவகாசி : புதிய குடிநீர் இணைப்பு பெற எளிய நடைமுறைகளை வகுத்து அதை பின்பற்ற நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரின் உத்தரவை பல நகராட்சிகள் கண்டுகொள்வதில்லை. இதனால் குடிநீர் இணைப்பு பெறுவதில் மக்களின் சிரமம் தீரவில்லை. மாநகராட்சி, நகராட்சிகளில் வீட்டு குடிநீர் இணைப்பு பெற விரும்பினால் சீனியாரிட்டி, டெபாசிட், ரோடு கட்டிங், ஆபீஸ்... |
தமிழகம் | தொடர் மழையால் நெல் அறுவடை நிறுத்தம் விலை உயர்வுக்காக விவசாயிகள் காத்திருப்பு | வத்திராயிருப்பு : மாவட்டத்தில் சாரல் மழை தொடர்வதால் நெல் அறுவடை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நெல்லுக்கு உரிய விலை கிடைக்காததால், விலை உயர்வை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய ராஜபாளையம், சேத்தூர், தேவதானம், தளவாய்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு உள்ளிட்ட பக... |
தமிழகம் | வினாடி வினா போட்டி பங்கேற்க அழைப்பு | ராஜபாளையம் : சென்னை மாகாண முன்னாள் முதல்வர் மற்றும் ஒரிசா கவர்னராக இருந்த ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் 112வது பிறந்த நாள் விழாவையொட்டி, ஜூலை 8ம் தேதி மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டி நடக்கிறது. கல்லூரி, மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி பிரிவுகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் 10 ப... |
தமிழகம் | செயல்வழி கற்றல் பயிற்சி முகாம் | விருதுநகர் : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட குறு வள மையங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு செயல்வழிக்கற்றல் பயிற்சி நடந்தது. செயல்வழிக்கற்றல் அட்டையில் செய்யப்பட்ட மாற்றம் குறித்தும், சமச்சீர் கல்வி புத்தகங்கள் பற்றியும் விளக்கம் தரப்பட்டது. அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை... |
தமிழகம் | கலசலிங்கம் பல்கலையில் ஜூன் 26ல் நுழைவு தேர்வு | ஸ்ரீவில்லிபுத்தூர் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை துணை வேந்தர் செல்லையா தங்கராஜின் செய்திக் குறிப்பு: நடப்பு கல்வியாண்டில் முதுகலைப் பொறியியல் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ.,எம்.எஸ்சி., படிப்பிற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. எம்.டெக்., பிரிவில் ஆட்டோமொடிவ் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங், பயோ டெக்னாலஜி, எம்.காம்.... |
தமிழகம் | ஓய்வூதியர் சங்க கூட்டம் | அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ஓய்வூதியர் சங்க செயற் குழு கூட்டம் நடந்தது. தலைவர் ராமராஜன் தலைமை வகித்தார். துணை தலைவர் தங்கசாமி வரவேற்றார். செயலாளர் குருசாமி அறிக்கை வாசித்தார். பொருளாளர் புவனேசபாண்டியன் வரவு, செலவு கணக்கு வாசித்தார். மாவட்ட மாநாடு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டன. துணை செயலாளர் சவரிமுத்து நன்றி கூறினா... |
தமிழகம் | நல உதவி வழங்கல் | ஸ்ரீவில்லிபுத்தூர் : மம்சாபுரத்தில் வனத்துறை சார்பில் சுய உதவிக்குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட வன பாதுகாவலர் ராஜூ வரவேற்றார். வனத் துறை சார்பில் 87 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் துவங்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். ரேஞ்சர் பழனிராஜ், தாசில்தார் மா... |
தமிழகம் | கே.வி. சாலா சென்டினரி ஆங்கில பள்ளி திறப்பு விழா | விருதுநகர் : விருதுநகரில் கே.வி.எஸ். சென்டினரி ஆங்கிலப் பள்ளியின் திறப்பு விழா நடந்தது. வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லூரி செயலாளர் டி.கே.எஸ்.பி.ஏ. சண்முகமூர்த்தி தலைமை வகித்தார். கே.வி.எஸ். பள்ளிகளின் தலைவர் ஸ்ரீரங்கநாதன் வரவேற்றார். முன்னாள் பொருளாளர் எம்.வி.ஆர். சிவசுப்பிரமணியன் திறந்து வைத்தார். மெட்ரிக் பள்ளி முன... |
தமிழகம் | 5 பள்ளிகள் தரம் உயர்வு | விருதுநகர் : மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆனைக்குளம், பந்தல்குடி, அம்மாபட்டி, திருத்தங்கல், தும்முசின்னம்பட்டி ஆகிய அரசு உயர் நிலைப்பள்ளிகள், இந்த கல்வியாண்டு முதல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள் ளன. |
தமிழகம் | மூத்த குடிமக்கள் பேரவை நிர்வாகிகள் தேர்வு | வேதாரண்யம்: வேதாரண்யம் மூத்த குடிமக்கள் பேரவையின் நிர்வாகி தேர்தலை ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க தலைவர் குமாரசாமி தேர்தல் அலுவலராக இருந்து நடத்தினார். இதில் 2010 - 2015க்கான தலைவராக ராமகிருஷ்ணனும், செயலாளராக பக்கரிசாமியும், பொருளாளராக சீனிவாசனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் ஜுன் 20ம் தேதி நடக்கும் பொது... |
தமிழகம் | போலி டாக்டர் 2 பேர் கைது | வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் ஹோமியோபதி படித்துவிட்டு அலோபதி (ஆங்கில) மருத்துவம் பார்த்ததாக தோப்புத்துறையை சேர்ந்த சேகர், அண்காடு கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய இருவர் மீது நாகை மருத்துவத்துறை துணை இயக்குனர் சந்திரசேகரன் வேதாரண்யம் போலீஸில் புகார் செய்திருந்தார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த தோப்புத்துறை சேகர்... |
தமிழகம் | மாரியம்மன் கோயில் விழா | காரியாபட்டி : காரியாபட்டி முக்குரோட்டில் அமைந்துள்ள மாரியம்மன், கல்யாண கணபதி கோயிலில் வைகாசி விழா நடந்தது. கொடி ஏற்றத்துடன் துவங்கிய விழா, முளைப்பாரி பயறு பரப்புதல், அன்னதானம், குத்துவிளக்கு பூஜை, தீச்சட்டி எடுத்தல் முளைப் பாரி கரைத்தல், சிறப்பு அபிஷேகங்கள், விளையாட்டுப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை விழா... |
தமிழகம் | பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்வு | விக்கிரமசிங்கபுரம்: காரையார் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று மேலும் சுமார் 3 அடி உயர்ந்தது.தென்மேற்கு பருவகாற்று துவங்கியதையடுத்து மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் 56.40 அடியாக இருந்த பாபநாசம் அணையி... |
தமிழகம் | சாத்தை.,கோயிலில்நாளை மகா கும்பாபிஷேகம் | சாத்தான்குளம் : சாத்தான்குளம் காசிவிஸ்வநாதர் விசாலாட்சிஅம்மன்கோயில் யாகசாலை பூஜை துவங்கியது. நாளை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.சாத்தான்குளம் காசிவிஸ்வநாதர் சமேத விசாலாட்சி அம்பாள் கோயில் ஜீர்னோர்த்தான அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை கஜ பூஜை, கோமாதா பூஜை, நவக்கிரஹ ஹோமம் நடந்தது. இ... |
தமிழகம் | கண் பரிசோதனை மையம் துவக்கம் | காரியாபட்டி : காரியாபட்டியில் மதுரை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி சார்பாக ஆரம்ப கண் பரிசோதனை மையம் துவக்க விழா நடந்தது. குடும்ப சுகாதார வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி சேவை மைய நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி ரஹமத்துல்லா திறந்து வைத்தார். இங்கு கண் நோய்களுக்கான அனைத்து பரிசோதனைகளும் செய்து, டெலி கான்பரன்ஸ் மூலமாக அரவிந்த்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.