category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
பெரியாறு கால்வாயில் இருந்து கண்மாய்க்கு நீர் எடுக்க கோரிக்கை
வத்தலக்குண்டு: பெரியாறு கால்வாயில் இருந்து கண்மாய்க்கு நீர்பாசன வசதி செய்து தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பழையவத்தலக் குண் டில் உள்ள இரு கண்மாய் கள் மூலமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. கண்மாய்களுக்கு மஞ் சளாறு அணை நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. மழை காலம் மற்றும் அணையில் நீர் இருந்தால் தான...
தமிழகம்
மின்தடையால் பால் கறக்க முடியாமல் தவிப்பு:விவசாயிகள் சோகம்
ஆத்தூர்: ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், பால் பண்ணைகளில் காலை, மாலை நேரத்தில் மின் இயந்திரத்தில் பால் கறக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, வாழப்பாடி பகுதிகளில் விவசாயம், விவசாயத்தின் உப தொழிலாக கால்நடை வளர்ப்பும் அதிகளவில் உள்ளது. விவசாயிகளின் ந...
தமிழகம்
கால்வாயாக மாறிய சின்னகாவூர் ரோடு:தண்ணீரில் நடந்து செல்லும் தொழிலாளர்கள்
மேட்டூர்: மேட்டூர் அடுத்த சின்னகாவூரில் உள்ள மண்ரோடு, கால்வாயாக மாறியுள்ளது. புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணிக்காக ஓடை நீரில் தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவல நிலை நீடிக்கிறது.மேட்டூர் அருகே, பி.என்.பட்டி டவுன் பஞ்.,4வது வார்டு சின்னகாவூரில் இருந்து அருகிலுள்ள சாம்பல் ஏரிக்கு செல்ல் மண்ரோடு உள்ளத...
தமிழகம்
திண்டுக்கல்-பழநி ரோட்டில் மேம்பாலம் தேவை; விபத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஒட்டன்சத்திரம்:தற்போது நடந்து வரும் அகல ரயில் பாதை பணிகளுடன் சேர்த்து போக்குவரத்து நிறைந்த திண்டுக்கல்-பழநி தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே கிராசிங்களிலும் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம்,பழநி, பொள்ளாச்சி வழியாக தேசிய நெடுஞ்சாலை எண் 209 செல்கிறது.தேசிய நெடுஞ்சாலையாக மாற்றம்...
தமிழகம்
நிர்வாகிகள் தேர்வுக்கு விண்ணப்பம் வழங்கல்
சேலம்: சேலம் மாநகர், மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மாநகரில் உள்ள 60 வார்டு மற்றும் நான்கு பகுதிகளில் மாணவரணி நிர்வாகிகள் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தற்போது, தேர்தலுக்கான உறுப்பினர் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகர், மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாணவர் அணி செயலாளர் சக்திவேல் ஆகியோர் விண்ணப்பங்களை வழங்கி...
இந்தியா
பீகாரில் ரயில் நிலையம் மீது மாவோயிஸ்ட் தாக்குதல்
கயா: பீகாரில் ரயில் நிலையத்தின் மீது மாவோயிஸ்ட் தாக்குதல் நடத்தி சென்று விட்டனர். பீகார் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் இன்று பந்த் விடுத்துள்ளனர். இந்நிலையில் பீகார் மாநிலம் கயா அருகே உள்ள இஸ்லாம்பூர் ரயில் நிலையத்தில் புகுந்த மாவோயிஸ்ட்கள் அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட மூன்று ரயில்வே ஊழியர்களை கடத்தி...
தமிழகம்
தி.மு.க., விளக்கக் கூட்டம்
தாண்டிக்குடி: கோவை செம்மொழி மாநாட்டு விளக்க கூட்டம் தாண்டிக்குடியில் நடந்தது. கொடைக்கானல் ஒன்றிய செயலாளர் கருமலைப்பாண்டி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் அப்துல்ரசாக் முன் னிலை வகித்தார். பண் ணைக் காடு, தாண்டிக்குடி, பாச்சலூர், காமனூர், பூலத்தூர் உள்ளிட்ட இடங் களில் கூட்டங்கள் நடந்தது. கூட் டத்தில் அரசின் சாதனை மற்றும் ச...
தமிழகம்
வேலம்பாளையத்தில் அமைச்சர் ஆய்வு
திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் சமயமூர்த்தி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சியில் ரூ.75 லட்சம் மதிப்பில் புதிய நகராட்சி கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது; 90 சதவீத பணிகள் முடிந்த...
தமிழகம்
மரங்களை வீழ்த்தியது மாநகராட்சி
திருப்பூர் : மகளிர் தொழிற்பயிற்சிக்கூடம் அமைக்க, பள்ளி வளாகத்தில் இருந்த 30 மரங்களை மாநகராட்சி நிர்வாகம் வெட்டி, வீழ்த்தியுள்ளது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே முத்துப் புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இவ்வளாகத்தில் இருந்த 30க்கும் அதிகமான மரங்கள் நேற்று முன்தினம் வெட்டப்பட்டது. மாநகராட்சி எல்லைப்பகுத...
தமிழகம்
விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
பல்லடம் : சின்ன வடுகபாளையம் செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.பல்லடம் சின்ன வடுகபாளையம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், கடந்த 12ம் தேதி காலை 10.30 மணிக்கு மூத்த பிள்ளையார் வழிபாடு நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று காலை 5.00 மணிக்கு நான்காம் கால வேள்வி, மலர் வழிபாடு, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிப...
தமிழகம்
பட்டமளிப்பு விழா
திண்டுக்கல்: திண்டுக்கல் அம்மன் கல்வியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழா தாளாளர் உமாவதிகண்ணன் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு கல்வியியல் பல்கலை., துணை வேந்தர் பத்மநாபன் பட்டங்களை வழங்கினார். முதல்வர் நாகராஜன் வரவேற்றார். காந்திகிராமம் லட்சுமி கல் வியியல் கல்லூரி கோகிலதங்கசாமி, அம்மன் கலை அறிவியல் கல்லூரி முத...
தமிழகம்
பெற்றோரை இழந்த சிறுவனுக்கு நிதியுதவி
லம்: தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தின் வாரிசுக்கு, முதல்வர் நிவாரண நிதியாக ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டது. சேலம் பழைய நாட்டாண்மைக்கழக கட்டிடத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர்(பொறுப்பு) கலையரசி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, உடல் ஊனமுற்றோர் உதவித்தொகை, பட்டாமாறுதல், இலவச வீ...
தமிழகம்
புத்தகம் வழங்கல்
ரெட்டியார்சத்திரம்: ரெட்டியார்சத்திரம் கட்டச்சின்னான்பட்டியில் ஏழை மாணவர்களுக்கு ஜோதி முருகானந்த அடிகளார் அறக்கட்டளை சார் பில் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பழனிச்சாமி தலைமை வகித்தார். ராதாசாமி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அய் யாச்சாமி, அறக்கட் டளை நிதி அறங்காவலர் சச்சிதானந்தம், ஊர் ...
தமிழகம்
அரசு கலை கல்லூரியில் 16ல் மாணவர் சேர்க்கை
திருப்பூர் : அரசு கலை கல்லூரிகளில் நடப்பு கல்வியாண் டுக்கான மாணவர் சேர்க் கை வரும் 16ம் தேதி துவங்குகிறது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில், 2010-11ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 16ம் தேதி துவங்குகிறது. 16ம் தேதி உடல் ஊனமுற்றோர், விளையாட்டு வீரர்கள், எஸ்.டி., மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட சிறப்பு ஒத...
தமிழகம்
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பள்ளிகளில் வினியோகம்
திருப்பூர் : பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ், பள்ளிகளில் இன்று முதல் வினியோகிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 23 முதல் ஏப்., 9 வரை நடந்தது. திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 13 ஆயிரத்து 831 மாணவர்கள், 14 ஆயிரத்து 275 மாணவியர் ...
தமிழகம்
மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள்... கண்காணிக்கப்படுமா? விபத்தினை தடுக்க நடவடிக்கை அவசியம்
கடலூர் : பள்ளி மாணவ, மாணவிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபரீதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிராமங்கள் தோறும் அரசு பள்ளிகளை துவங்கினாலும், ஒவ்வொரு பெற்றோரும் தங் களது பிள்ளைகள் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசையில் நகர பகுதிகளில் உள்ள நர்சரி மற்றும் மெட்...
தமிழகம்
தங்க காசு தள்ளுபடி விற்பனை இன்றே கடைசி
திருப்பூர் : அஞ்சலகத்தில் தள்ளுபடி விலையில் தங்க காசு விற்கப்படுகிறது; இன்று கடைசி நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.அஞ்சல் துறை சார்பில், 24 காரட் தங்க காசு விற்கப் படுகிறது; அதில், இந் தாண்டு முதல் அஞ்சலக முத்திரை பொறிக்கப்பட் டுள்ளது. அட்சய திருதியை முன்னிட்டு, கடந்த மாதம் முதல் ஆறு சதவீத தள்ளுபடி அளித்து விற்கப்பட்டு வரு...
தமிழகம்
தேர்பவனி
கடலூர் : கடலூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி நடந்தது.கடலூர் சொரக்கால் பட்டில் உள்ள புனித அந் தோணியார் ஆலய திருவிழா கடந்த 1ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மாலை 6 மணிக்கு திருப் பலி நடந்தது. 12ம் தேதி மாலை திருப்பலியும் அதனைத் தொடர்ந்து சிறிய தேர்பவனி நடந்தது.விழாவின் இறுதி நாளான 13ம் தேதி...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி ஜரூர்
பல்லடம் : பல்லடம் தாலுகாவில் கடந்த 13 நாட்களில் 12 ஆயிரத்து 838 வீடுகளில் மக்கள் தொகை கணக் கெடுக்கப்பட்டுள்ளது.பல்லடம் வட்டத்தில் வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுக்கும் பணி, கடந்த 1ம் தேதி துவங்கியது. ஒன்றிய பகுதி களில் கணக்கெடுக்கும் பணியில் 371 கணக் கெடுப் பாளர்கள், 60...
தமிழகம்
பிளஸ் 2 உடனடி தேர்வு வரும் 29ல் துவங்குகிறது
திருப்பூர் : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு உடனடி தேர்வு, வரும் 29ம் தேதி துவங்குகிறது.பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர் களுக்கு சிறப்பு உடனடி தேர்வு நடைபெற உள்ளது. ஜூன் 29ம் தேதி மொழிப்பாட முதல் தாள்; 30ம் தேதி மொழிப்பாட இரண்டாம் தாள்; ஜூலை 1ம் தேதி ஆங்கில முதல் தாள்; 2ம் தேதி ஆங்கில...
தமிழகம்
மனு கொடுத்த அரை மணி நேரத்தில் உதவி கலெக்டரின் அதிரடியால் மாணவர் மகிழ்ச்சி
கடலூர் : தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவருக்கு மனு கொடுத்த அரை மணி நேரத்தில் மடிப்பு சக்கர நாற்காலியை கலெக்டர் சீத்தாராமன் வழங்கினார்.காட்டுமன்னார்கோவில் வட்டம் மதகளிர் மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜகன்நாதன் மகன் வினோத் (12) ஏழாம் வகுப்பு மாணவர். இவர் தசை சிதைவு நோய் காரணமாக இரண்டு கால்களும் செயலிழந்து நடக்...
தமிழகம்
முன்னாள் எம்.பி., கார் முற்றுகை
சிறுபாக்கம் : சிறுபாக்கம் பொதுமக்கள் அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் முன்னாள் எம்.பி., காரை முற்றுகையிட்டனர்.முன்னாள் எம்.பி.,யும், மாவட்ட தி.மு.க., துணை செயலாளருமான கணேசன் சிறுபாக்கம் வழியாக விருத்தாசலத்திற்கு காரில் சென்றார். அப்போது சிறுபாக்கம் அரசு மேல்நிலை பள்ளி அருகே அப்பகுதியை சேர்ந்த பொத...
தமிழகம்
அரிய வகை ரத்தம் தானமாக பெற பெயர் பதிவு
திருப்பூர் : ரத்த நன்கொடையாளர் தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் ரத்தம் தானம் செய்த அமைப்புகளுக்கு பாராட்டு தெரிவித்து, சான் றிதழ் வழங்கப்பட்டது.திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அவ்விழா நடந்தது. அவசர காலத்தில் நோயாளிகளுக்கு ரத்தம் வழங்கி உதவிய முயற்சி மக்கள் அமைப்பு, மகாராஜா பிருத்வி கல்வி நிறுவனம், முஸ்லிம்...
தமிழகம்
சிதம்பரத்தில் தொழிலாளர் தினம்
சிதம்பரம் : சிதம்பரத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.சிதம்பரம் தில்லை மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவிற்கு தொழிலாளர் நல உதவி ஆய் வாளர் விஜயா தலைமை தாங்கினார். ரோட்டரி மிட் டவுன் சங்க இயக்குனர் செந்தில்குமார், ஜேசிஸ் சங்க துணைத் தலைவர் சிவராமசேது, கோயில் நகர அரிமா சங்க பொருளாளர் (தேர்வு) ...
தமிழகம்
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
நடுவீரப்பட்டு : பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன் னிட்டு பள்ளியின் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ஊர்வலத்தை தலைமை ஆசிரியை மல்லிகா துவக்கி வைத்தார். பெற் றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். ஊர்வலம் முக்கிய வீ...
தமிழகம்
பொம்மையசாமி கோவில் கும்பாபிஷேகம்
உடுமலை : உடுமலை அருகேயுள்ள பொன்னேரியில் பொம்மையசாமி, பொம்மம்மாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.கிராமத்திலிருந்த பழமையான கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா 13 ம் தேதி துவங்கியது. புண்ணிய தலங்களிலிருந்து தீர்த்தம் கொண்டு வருதல், யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.கும்பாபிஷேக விழா கொழுக்கட்டை பூஜையுடன் நேற்று துவ...
தமிழகம்
நாளை முதல் தற்காலிக கட்டடத்தில் உடுமலை போலீஸ் ஸ்டேஷன்
உடுமலை : உடுமலை போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டடம் கட்டுவதற்காக, நகராட்சி பூங்கா அருகில் தற்காலிக கட்டடத்தில் போலீஸ் ஸ்டேஷன் நாளை முதல் செயல்பட உள்ளது.உடுமலையில், 1934 ஜன.,19 ம் தேதி, 32 சென்ட் நிலத்தில் உடுமலை போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. பழைய உடுமலை நகரில், பள்ளிவாசல், பெரியகடை வீதி, நகை கடை வீதி, குடியிருப்புகளுக்கு மத்...
தமிழகம்
எட்டு மையங்களில் ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு
உடுமலை : கோவை, திருப்பூர் மாவட்டத்தில், எட்டு மையங்களில் முதலாமாண்டு ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வினை எழுதினர்.கோவை, திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட முதலாமாண்டு ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு, திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், உடுமலை அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மே...
தமிழகம்
நடுவீரப்பட்டு உயர்மட்ட பாலம் நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ., ஆய்வு
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு - சி.என். பாளையம் இடையே கட் டப்பட்ட புதிய உயர்மட்ட பாலத்தை எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் கிராம சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைதுறை சார்பில் புதிய உயர்மட்ட பாலம் கட்டப் பட்டது. இந்த பாலத்தை நெல்லி...
தமிழகம்
தே.மு.தி.க., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
சேத்தியாத்தோப்பு : புவனகிரி தொகுதி தே.மு.தி.க., நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம் சேத்தியாத்தோப் பில் நடந்தது.மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராஜா ஸ்டாலின், ராஜவன்னியன் முன்னிலை வகித்தனர். சேத்தியாத்தோப்பு நகர தே.மு.தி.க., செயலாளர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து நிர்வாகிகளை...
தமிழகம்
கலந்தாய்வு கூட்டம்
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் வணிகவரித்துறை சார்பில் வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.வணிகவரித்துறை உதவி ஆணையர் சமரசம் தலைமை தாங்கினார். உதவி முதன்மை அலுவலர் பாண்டுரங்கன், கூடுதல் அலுவலர் ராஜாராம் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் வணிகத் துறை சார்பில் மாதாந்திர நமுனா இணைப்பு படிவம் 1 மற்றும் 2ல் மாற்றம் குறித் தும...
தமிழகம்
உடுமலை அருகே விவசாய நிலத்தில் ஐம்பொன் அம்மன் சிலை கண்டுபிடிப்பு
உடுமலை : உடுமலை அருகே விவசாய நிலம் பண்படுத்தும்போது, கலை வேலைப்பாடுகளுடன் கூடிய ஐம்பொன்னாலான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. உடுமலை அருகே கணபதிபாளையத்தில் இருந்து புக்குளம் செல்லும் ரோட்டில், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத விவசாய நிலம் இருந்தது. முட்காடுகள் நிரம்பிய இந்நிலத்தை பண்படுத்தும் பணிகள் நடந்து வந்தன. முட்புதரு...
தமிழகம்
மடத்துக்குளத்தில் மறியல்
மடத்துக்குளம் : குடிநீர் பிரச்னை குறித்து நடவடிக்கை மேற்கொள் ளாத பேரூராட்சி நிர்வாகத்தினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மடத்துக்குளம் பேரூராட்சி 6 ,8வது வார்டுகளுக்கு கடந்த நான்கு நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்துக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக் கையும் ...
தமிழகம்
புலிவலம் கோவிலில் கும்பாபிஷேகம்
திட்டக்குடி : திட்டக்குடி அருகே புதியதாக கட்டப்பட்ட முத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபி÷<ஷகம் நடந்தது.திட்டக்குடி அடுத்த புலிவலம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட முத்து மாரியம்மன், காத்தவராயன் வகையறா சுவாமிகளுக்கு நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி 12ம் தேதி காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், விசேஷ பூஜைகள் நடந்தத...
தமிழகம்
உடுமலையில் அதிகாரிகள் ரெய்டு போலி டாக்டர்கள் தலைமறைவு?
உடுமலை : உடுமலையில், நீண்ட இழுபறிக்குப்பிறகு நேற்று போலி டாக்டர்களை பிடிக்க களம் இறங்கிய போலீசார் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவிடம் யாரும் பிடிபடவில்லை.தமிழகம் முழுவதும் மூன்று நாட்களாக போலி டாக்டர்களை பிடித்து வருகின்றனர். உடுமலை , மடத்துக்குளம் தாலுகாவில் 36 போலி டாக்டர்கள் உள்ளதாகவும், உரிய சான்றிதழ்...
தமிழகம்
மடத்துக்குளத்தில் பொதுமக்கள் மறியல்
மடத்துக்குளம் : குடிநீர் பிரச்னை குறித்து நடவடிக்கை மேற்கொள் ளாத பேரூராட்சி நிர்வாகத்தினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மடத்துக்குளம் பேரூராட்சி 6 ,8வது வார்டுகளுக்கு கடந்த நான்கு நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்துக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக் கையும் ...
தமிழகம்
கடலூர் - விருத்தாசலம் சாலை போக்குவரத்து மாற்றம்
கடலூர் : கடலூர் - விருத்தாசலம் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருவதால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் மாற்றுப் பாதையில் செல்ல கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடலூர் - விருத்தாசலம் சாலையில் பச்சையாங் குப்பம் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி துவங்கி நடந்து வ...
தமிழகம்
மயூரா ஆற்றின் மணல் குவாரியை ரத்து செய்ய கலெக்டரிடம் மனு
கடலூர் : விருத்தாசலம் அடுத்த நகர் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத் தில் மீண்டும் அனுமதி வழங்கிய மணல் குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத் துள்ளனர்.மனுவின் விவரம் வருமாறு:விருத்தாசலம் அடுத்த நகர் கிராமத்தில் 4,000க்கும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இ...
தமிழகம்
சாராயம் விற்ற வாலிபர் கைது
ராமநத்தம் : ராமநத்தம் அருகே ஏரிக்கரையில் சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கோவிந்தம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் செல்வராஜ் (29). இவர் ராமநத்தம் அடுத்த வள்ளிமதுரம் ஏரிக்கரையில் சாராயத்தை பாலித்தீன் கவரில் அடைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.இதுகுறித்த தகவலின் பேரில் ரா...
தமிழகம்
குடும்பத் தகராறு: வாலிபர் தற்கொலை
கடலூர் : குடும்பத் தகராறில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சேத்தியாத்தோப்பை அடுத்த பெருங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் மகன் காத்தான் என்கிற முருகேந்திரன் (27). இவரது மனைவி ஜமுனாராணி. இவர்களுக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த காத்தான் அய்யனூர் கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் தூக்கு...
தமிழகம்
மரம் வெட்டியவர் மீது வழக்கு
ராமநத்தம் : ராமநத்தம் அருகே ஓடை புறம்போக்கு நிலத்தில் இருந்த கருவேலி மரத்தை வெட்டிவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.ராமநத்தத்தைச் சேர்ந்தவர் முத்துவேல். இவர் தனது நிலத்துக்கு அருகே அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு நிலத்தில் காற்றில் சாய்ந்திருந்த கருவேலி மரத்தை வெட்டினார்.இதுகுறித்து தகவலறிந்த ரா...
தமிழகம்
பாலத்திலிருந்து விழுந்த முதியவர் சாவு
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டில் பாலத்திலிருந்து தவறி விழுந்து முதியவர் இறந்தார்.நடுவீரப்பட்டு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி ராமலிங்கம் (65). இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பருடன் அதே பகுதியில் உள்ள உயர்மட்ட பாலத்தின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி பாலத்திலிருந்து ஓடைய...
தமிழகம்
திருக்கோவிலூர் பகுதி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
திருக்கோவிலூ : திருக்கோவிலூர் பகுதி யில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.மணலூர்பேட்டை அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடந்த பேர ணியை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தெய்வசிகாமணி துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் ராஜேஷ்வரன் மற்றும் பலர் பங்கேற்றனர். ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியர...
தமிழகம்
திண்டிவனத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி
திண்டிவனம் : திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி துவங்கியது.நிகழ்ச்சியில் சப் கலெக்டர் மஞ்சுளா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.இந்நிகழ்ச்சியில் சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவீந்திரநாயர், திண்டிவனம் தாசில்தார் வேலாயுதன்பிள்ளை, மண்டல துணை தாசில்தார் மதியழகன், வருவாய் ஆய்வாளர் ராதா மணாளன், த...
தமிழகம்
பரவனாற்றில் மூழ்கி இரு மாணவிகள் பலி
பரங்கிப்பேட்டை : சிதம்பரம் அருகே பரவனாற்றில் மூழ்கி இரண்டு மாணவிகள் இறந்தனர்.சிதம்பரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது கள் பிரேமலதா (13). அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகள் சத்தியா (13). இருவரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று முன்தினம்...
தமிழகம்
அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு
உளுந்தூர்பேட்டை : பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம்வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் பாவாணன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எல்.ஏ., திருநாவுக்...
தமிழகம்
நடராசா நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஊர்வலம்
விழுப்புரம் : விழுப்புரம் நாப்பாளையத்தெரு நடராசா நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை வார விழா நடந்தது. விழாவிற்கு நிர்வாகி கோவிந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகாலட்சுமி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் விஸ்வநாதன், ஆசிரிய பயிற்றுநர் ஆனி, கவுன்சிலர் சிவசங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மாணவர் சே...
தமிழகம்
மகள் சாவில் சந்தேகம்: தாய் புகார்
புவனகிரி : புவனகிரி அருகே மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மகள் வனிதா (23). இவருக்கும் புவனகிரி அருகே கோட்டைமேட்டுத்தெருவை சேர்ந்த மாரியப்பனுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது...
தமிழகம்
செஞ்சி அரிமா சங்கத்தின் நிர்வாகிகள் பதவியேற்பு
செஞ்சி : செஞ்சி அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. முன்னாள் தலைவர் கணேசன் தலைமை தாங் கினார். ஆலோசகர்கள் கண்ணன், மணிவண் ணன், பரமசிவம் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் அருண் பிரகாஷ் வரவேற்றார்.மாவட்ட துணை ஆளுநர் கல்யாணகுமார் நிர் வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாவட்ட தலைவர் பொன்னுராம், கணேஷ் மூக...
தமிழகம்
வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
புவனகிரி : சகோதரியின் திருமணத்தை நிறுத்தியதை தட் டிக் கேட்ட அண்ணனை தாக்கிய தந்தை, மகன் கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி அருகே வடக்குத்திட்டையைச் சேர்ந் தவர் வெங்கடேசன். இவரது தங்கை விஜயலட்சுமிக்கு வரும் 16ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சபரிநாதன் (20) என்ற வாலிபர், ம...
தமிழகம்
பூச்சி மருந்து குடித்து இளம்பெண் சாவு
விழுப்புரம் : கண்டமங்கலம் அருகே இளம்பெண் பூச்சி மருந்து குடித்து இறந்தார். கண்டமங்கலம் அடுத்த ரஜபுத்திரபாளை யத்தை சேர்ந்த ஜெயபால் மனைவி ஜெயலட்சுமி (45). இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஜெயலட்சுமி பேச்சை அவரது பிள்ளைகள் மதிக்காமல் இருந் துள்ளனர். இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி கடந்த 12ம் த...
தமிழகம்
குடிநீர் வாரிய அதிகாரி மரணம்
கடலூர் : கடலூரில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக உதவி பொறியாளர் வீட்டில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (52). இவர் விழுப்புரம் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக உதவி பொறியாளராக பணி புரிந்து வந்தார். தற்போது கடலூர் மஞ்சக்குப் பத்தில் தங்கியிருந்த...
தமிழகம்
மாணவி விஷம் குடித்து தற்கொலை
கடலூர் : தீராத வயிற்று வலியால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கடலூர் அடுத்த சிங்காரத்தோப்பைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் பானுப்பிரியா (18). இவர் கடலூர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு படித்தார்.பானுப்பிரியாவிற்கு தீராத வயிற்று வலி இருந்தது. இந்நிலையில் நேற்று வலி அதிகமாக இருந்...
தமிழகம்
திண்டிவனம் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகள் துரிதம்
திண்டிவனம் : திண்டிவனம் அரசு கலைக்கல்லூரிக்கு எதிரே செல்லும் பைபாஸ் சாலையில் 8.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்திற் கான கட்டுமான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. திண்டிவனத்தில் உள்ள கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரிக்கு எதிரே செல்லும் பைபாஸ் சாலை, சென்னை தேசிய நெடுஞ் சாலையையும்- வந்தவாசி சாலையையும்...
தமிழகம்
மோட்டார் திருடிய மூவர் கைது
ராமநத்தம் : ராமநத்தம் அருகே வயலில் இருந்த மோட்டாரை திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.நேற்று முன்தினம் இரவு ராமநத்தம் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மா.பொடையூரில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த முத்து மகன் கட்டையன் (எ) பாலகிருஷ்ண...
தமிழகம்
சமச்சீர் கல்வியால் ஏழை, எளிய மாணவர்கள் பயன் அடைவர் வடலூரில் அமைச்சர் பேச்சு
குறிஞ்சிப்பாடி : சமச்சீர் கல்வியால் ஏழை, எளிய மாணவர்கள் பயன் அடைவார்கள் என வடலூரில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.சுத்த சன்மார்க்க நிலைய வைர விழா, சமச் சீர் கல்வி தொடக்க விழா வடலூரில் அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கம் கலையரங்கில் நடந்தது. ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். சுத்த சன்மார்க்க ந...
தமிழகம்
எப்போது கிடைக்கும்?கோவிந்தசாமிபுரம் பொதுமக்களுக்கு பட்டா.... 41 ஆண்டுகளாக உரிமைக்காக தவிக்கும் மக்கள
தியாகதுருகம் : மணிமுக்தா அணை கட்டுவதற்காக நிலம் கொடுத்தவர்களை வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் குடியமர்த்தியதால் 41 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சியில் கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி அருகே மணிமுக்தா அணைகட்டப் பட்டது. அணை கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட நீர்பிடிப்பு...
தமிழகம்
சேலையில் தீ பிடித்து பெண் பரிதாப பலி
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அடுத்த அண்ணாநகரை சேர்ந்த செல்வம் மனைவி பத்மா(32). இவர் கடந்த 6ம் தேதி சமையல் செய்ய மண்ணெண்ணெய் ஸ்டவ் பற்ற வைத்தார். அப்போது பத்மாவின் சேலையில் திடீரென தீ பிடித்து உடல் முழுவதும் பலத்த காயமடைந்தார்.சேலம் அரசு ...
General
உலககோப்பை கால்பந்து: இத்தாலி-பாரகுவே ஆட்டம் டிரா
கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவில் நடந்து வரும் உலககோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் இத்தாலியை-பாரகுவே அணி எதிர் கொண்டது. இதில் தொடக்கம் முதலே பாரகுவே அணி வீரர்கள் மிகவும் துடிப்புடன் விளையாடினர். ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் பாரகுவே அணி ஒரு கோல் அடித்தது. இதற்கு பதிலடியாக 63வது நிமிடத்தில் இத்தாலி அணி ஒரு கோல் அடித...
தமிழகம்
புதுச்சேரியில் நடந்த கொலை வழக்கில் நான்கு பேர் கள்ளக்குறிச்சியில் சரண்
கள்ளக்குறிச்சி : புதுச்சேரியில் பழைய இரும்பு கடை உரிமையாளரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்ட நான்கு பேர் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் சரணடைந்தனர்.புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த ராமஜெயம் மகன் சுந்தர்(29). கோரிமேடு அருகே பழைய இரும்பு கடை வைத்துள்ளார். கடந்த 11ம் தேதி இரவு சுந்தரை ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் வ...
தமிழகம்
அம்பேத்கர் சிலை அவமதிப்பு:சிதம்பரம் அருகே மறியல்
சிதம்பரம் : சிதம்பரம் அருகே அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவமதித்ததை கண்டித்து மறியலில் ஈடுபட்டதால் பதட்டம் நிலவியது.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குயவன்பேட்டையில் ஆறடி உயரமுள்ள பீடத்தில் இரண்டரை அடி உயரம் கொண்ட மார்பளவு அம்பேத்கர் சிலைக்கு நேற்று முன்தினம் இரவு விஷமிகள் செருப்பு மலை போட்டு அவமதித்திருந்தி...
தமிழகம்
போதையில் நண்பர்களிடையே தகராறு வாலிபர் கொலை: இருவருக்கு வலை
விக்கிரவாண்டி : விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கல்லால் குத்தி கொலை செய்த இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் மதுரா கொசப்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் கண்ணதாசன்(28). மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி. இவரது நண்பர்கள் சிந்தாமணியை சேர்ந்த...
தமிழகம்
தலைமை ஆசிரியர் யார்? 12 நாள் குழப்பம் தீர்ந்தது
விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு யார் தலைமை ஆசிரியர் என்ற குழப்பத்திற்கு நேற்று தீர்வு காணப்பட்டது.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாசம். இதே பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் முருகேசன். இவர் 10 மாதங்களுக்கு முன் தலைமை ஆசிரியராக பதவி உயர...
தமிழகம்
விழுப்புரம் ஒப்பந்த மோசடியில் பறி கொடுத்த 19 வாகனங்கள் மீட்பு
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஒப்பந்த மோசடியில் பறிபோன 19 வாகனங்களை மீட்டு போலீசார் உரிமையாளர்களிடம் ஒப்படைத் துள்ளனர். விழுப்புரத்தைச் சேர்ந்த பலரிடமிருந்து மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாய் வாடகை தருவதாக கூறி 22 வாகனங்களை திருவண் ணாமலை மாவட்டம் தெள்ளார் ரவி(44) என்பவர் கடந்த மார்ச் மாதம் எடுத்துச் சென்றார்.விழுப்புரம் டிர...
தமிழகம்
செம்மொழி மாநாடு விளம்பர பலூன் 200 அடி உயரத்தில் பறக்கும்: கலெக்டர்
விழுப்புரம் : கோவையில் நடக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டை விளம்பரம் செய்ய விழுப்புரத்தில் 200 அடி உயரத்தில் பலூன் பறக்க விடப்படுகிறது. விழுப்புரம் கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவையில் வரும் 23ம் தேதி முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடக் கிறது. இந்த நிகழ்ச்சி குறித்து தமிழக அரசு சார்பில் பல்வேறு ...
தமிழகம்
ஒரே இரவில் 2 வீடுகளில் திருட்டு:மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
கடலூர் : கடலூர் அருகே ஒரே இரவில் இரண்டு வீடுகளில் 1.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர் களை போலீசார் தேடி வருகின்றனர்.கடலூர் அடுத்த குட்டியாங்குப்பம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பிரபாகரன் (36). இவரது மனைவி சுதா நேற்று முன் தினம் இரவு வீட்டின் வராண்டாவில் படுத்திருந் தார். நள்ளிரவில் வீட்டின் பின்...
தமிழகம்
மூன்று வாலிபர்களை தாக்கிய 2 ஆட்டோ டிரைவர்கள் கைது
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் ஓட்டலில் மூன்று வாலிபர்களிடம் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்த 2 ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.கும்பகோணத்தை சேர்ந்தவர்கள் சக்தி(27), அய்யப்பன்(22), பிரபு(23). இவர்கள் மூவரும் நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக விழுப்புரம் மாவட்டம் எலவனாசூர்கோட் டைக்கு நேற்று முன்தி...
தமிழகம்
கடலூர் மீனவர்கள் இருவர் 5 நாளாக கடலில் தத்தளிப்பு
கடலூர் : நடுக்கடலில் படகு பழுதானதால் மீனவர்கள் இருவர் கடந்த 5 நாளாக கடலில் தத்தளித்து வருகின் றனர்.கடலூர் முதுநகர் பென் சனர் தெருவைச் சேர்ந்த சின்னவர் என்கிற கஜேந்திரன் (40), மணவெளி ராஜா (48), த்லங்கை நகர் ரகு (48), வசந்தராயன்பாளையம் தாஸ் (24). மீனவர் களான இவர்கள் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் தேவனாம்பட்டினம் சீத்தாராமன...
தமிழகம்
ரயில் பாதை தகர்ப்பு வழக்கில் முன்னேற்றம் உளவுத்துறை ஐ.ஜி., ஜாபர்சேட் பேட்டி
விழுப்புரம் : ரயில்பாதையை குண்டு வைத்து தகர்த்த வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவர் என உளவுத்துறை ஐ.ஜி., ஜாபர்சேட் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே கடந்த 12ம் தேதி அதிகாலை, மர்ம நபர்களால் குண்டு வைத்து ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்டது. இச்...
தமிழகம்
ரயில் மறியல் போராட்டம் பேச்சுவார்த்தையில் தோல்வி
கடலூர் : ரயில் மறியல் போராட் டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மா. கம்யூ., இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையொட்டி அறிவிக்கப்பட் டது போல் இன்று ரயில் மறியல் நடக்கிறது.கடலூர் லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதையை விரைவில் நிறைவேற்றவும், அனைத்து விரைவு ரயில்களும் திருப் பாதிரிப்புலியூரில் நின்று செல்ல வேண்டும் எ...
தமிழகம்
விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு வழக்கில் போலீஸ் திணறல்
விழுப்புரம் : விழுப்புரம் அருகே நடந்த ரயில் பாதை தகர்ப்பு வழக்கில் குற்றவாளிகள் சிக்காததால், போலீசார் திணறிவருகின்றனர். இதற்கிடையே மாவட் டம் முழுவதும் உள்ள வெடி மருந்து குடோன்களில் போலீசார் சோதனை நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் விக் கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே கடந்த 12ம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் ரயில்வே தண்டவாளத்தை...
தமிழகம்
திருச்சியில் 3 தர்காக்கள் இடிப்பால் பரபரப்பு : போக்குவரத்து இடையூறுக்கு முற்றுப்புள்ளி
திருச்சி: திருச்சியில் நீண்டநாள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கட்டப்பட்டிருந்த மூன்று தர்காக்களை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று இடித்து அப்புறப்படுத்தினர். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மத வழிபாட்டு தலங்களை இடிக்க உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது. அதன்படி, த...
இந்தியா
நீரிழிவு நோய்க்கு சித்த மருத்துவம் வானொலியில் இன்று விளக்கம்
புதுச்சேரி : புதுச்சேரி வானொலியில் இன்று ஒலிபரப் பாகும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் நீரிழிவு மற் றும் ரத்த அழுத் தம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.புதுச்சேரி வானொலி நிலைய இயக்குனர் கல் யாணி ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:நீரிழிவு, ரத்த அழுத்தத் திற்கு சித்த வைத்தியத்தில் தீர்வு கிடைக்கு...
இந்தியா
இலவச மனைப்பட்டா வழங்க தலித் விடுதலை பேரவை கோரிக்கை
புதுச்சேரி : விநாயகம்பட்டு பகுதிக்கு இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும் என புதுச்சேரி தலித் விடுதலை பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.மண்ணாடிப்பட்டு கொம்யூன் விநாயகம் பட்டில் தலித் விடுதலை பேரவை அறிமுகக் கூட் டம் நடந்தது. தலைவர் அருள்தாஸ் தலைமை தாங்கினார்.செயலர் குப்புசாமி, மாநில அமைப்பு செயலர் நாகராஜன், பொதுச் செயலர் ரவிச்சந்...
தமிழகம்
போலீஸாரை கண்டித்து வக்கீல்கள் உண்ணாவிரதம்
துறையூர்: மூத்த வக்கீல் விபத்தில் பலியான வழக்கில் 100 நாளாகியும் குற்றவாளியைக் கண்டுபிடிக்காத துறையூர் போலீஸாரைக் கண்டித்து வக்கீல்கள் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். துறையூர் மூத்த வக்கீல் ராஜசேகரன் கடந்த மார்ச் 5ம் தேதி அதிகாலை வாக்கிங் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் பலியானார்....
இந்தியா
போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்
வில்லியனூர் : அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி சார்பில் வில்லியனூர் போக்குவரத்து போலீசாருக்கு பேரிகார்டு வழங்குதல் மற்றும் மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. மருத்துவக் கல்லூரி இயக்குனர் டாக்டர் நித்தியானந்தன் தலைமை தாங்கினார். பொது மேலாளர் சவுந்தரராஜன் முன்னில...
இந்தியா
படைப்பாளி மக்கள் கட்சி கூட்டம்
புதுச்சேரி : புதுச்சேரி படைப்பாளி மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதையொட்டி முதல் பொதுக் கூட்டம் நடந்தது.புதுச்சேரி மாநில தலைவர் தங்கம் தலைமை தாங்கினார்.மாநில பொதுச்செயலர் சுப்ரமணியம் வரவேற்றார். சிங்காரவேலு, சொல்லின் செல்வம், நடராஜன் முன்னிலை வகித் தனர். கொள்கை பரப்பு செயலாளர் பிரேம்குமார் விளக்கவுரையா...
இந்தியா
தூக்கு போட்டு மீனவர் தற்கொலை
புதுச்சேரி : வீராம்பட்டினம் சிவாஜி நகரில் வசித்தவர் மோகன் ராஜ் (35), மீனவர். இவர் கடந்த நான்கு நாட்களாக வேலைக்கு போகாததால் வீட்டில் தகராறு ஏற்பட்டது.இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் பிற்பகல் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியாங்குப்பம் போலீ சார் வழக்கு பதிந்துள்ள னர்.
இந்தியா
இலவச திட்டங்களால் வாழ்க்கைத் தரம் உயராது நாகை எம்.எல்.ஏ., பாய்ச்சல்
காரைக்கால் : புதுச்சேரி அரசின் இலவச கவர்ச்சி திட்டங்கள், வாழ்க்கைத் தரம் வளர வழி வகுக்காது என மா.கம்யூ., நாகை எம்.எல்.ஏ., மாரிமுத்து பேசினார்.காரைக்கால் மாவட்ட மா.கம்யூ., கட்சியின் அரசியல் விளக்க பொதுக் கூட்டம் கோட்டுச்சேரியில் நேற்று முன் தினம் இரவு நடந்தது. கிளை செயலாளர் பிச்சையன் தலைமை தாங்கினார். சூசைராஜ், தியாகராஜ...
இந்தியா
தார் சாலை அமைக்கும் பணி: நாஜிம் துவக்கி வைத்தார்
காரைக்கால் : காரைக்கால் வடக்கு தொகுதியில் 37 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கும் பணியை எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் துவக்கி வைத்தார்.காரைக்கால் நகராட்சி சார்பில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி யிலிருந்து நித்தீஸ்வரம் தெருவில் 8.82 லட்சம் ரூபாய் செலவில் அங்காடி கட்டு தல், ராஜாஜி நகரில் 10.50 லட்சம் ரூபாய் செலவில...
இந்தியா
திப்புராயப்பேட்டையில் கள்ளு, சாராயக் கடை அகற்றக் கோரி கலெக்டரிடம் கவுன்சிலர் மனு
புதுச்சேரி : திப்புராயப்பேட்டையில் சாராயக் கடைக்கான ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என கவுன்சிலர் மனு அளித்துள்ளார்.வம்பா கீரப்பாளையம் கவுன்சிலர் குமாரி, அப்பகுதி மக்களுடன் கலெக்டர் ராகேஷ் சந்திராவை சந்தித்து மனு அளித்தார். அன்பழகன் எம்.எல்.ஏ., உடனிருந்தார். மனுவில் கூறியிருப்பதாவது: வம்பா கீரப்பாளையம், திப்புராயப்பேட்டையி...
இந்தியா
தமிழகப் பகுதிக்கு டீசல் கடத்த முயன்ற டிரைவர் கைது
புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து தமிழகப் பகுதிக்கு டீசல் கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.கரையாம்புத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு சங்கராபரணி ஆற்றுப் பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண் டனர். கரை...
இந்தியா
சுப்பையா நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி
புதுச்சேரி : சுப்பையா நூற்றாண்டு விழாவையொட்டி கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி நடக்க உள்ளது.பெருமன்ற பொதுச்செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி விடுதலை இயக்கத் தலைவர் சுப்பையா நூற்றாண்டு விழாவையொட்டி மாநில கலை இலக்கிய பெருமன்றம், நெல்லித்தோப்பு எல்லோரா ஓவியப்பள்ளியுடன் ...
இந்தியா
தர்ணா நடத்த சிறை துறை ஊழியர்கள் முடிவு
புதுச்சேரி : கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடத்தப் போவதாக அரசு ஊழியர் சங்கங் களின் சம்மேளனத் தலைவர் ஆனந்தராசன் கூறினார்.இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரி மத்திய சிறையில் கடந்த 6ம் தேதி கைதி மணிகண்டன் சக கைதிகளால் தாக்கப்பட்ட சம்பவம், சிறை நிர்வாகம் சீர்கெட்டுள்ளதை வெளிப்படுத்துகிறது. கடந்த கால...
இந்தியா
ரிசர்வ் பட்டாலியன் போலீசாருக்கு கமாண்டோ பயிற்சி
புதுச்சேரி : இந்திய ரிசர்வ் பட்டாலியன் போலீசாருக்கு கமாண்டோ பயிற்சி துவக்க விழா நேற்று நடந்தது.இந்திய ரிசர்வ் பட்டாலியன் முகாம் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ளது.  இங்குள்ள ரிசர்வ் பட்டாலியன் போலீசாருக்கு கமாண்டோ பயிற்சி அளிக்குமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி 60 போலீசாருக்கு தமிழகத்தில் கமாண்டோ பயிற்சி ...
இந்தியா
ஆன்லைன் பதிவு இன்று முடிவு
காலாப்பட்டு : சென்டாக் மூலம் தொழில் படிப்புகளுக்கான ஆன் லைன் விண்ணப்பங்கள் பதிவு இன்றுடன் முடிவடைகிறது.எம்.பி.பி.எஸ்., பி.டெக்., பி.டி.எஸ்., பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கான சென்டாக் விண் ணப்பங்கள் விற்பனை கடந்த 27ம் தேதி துவங்கியது. விண்ணப்ப விற்பனை புதுச்சேரி பொறியியல் கல்லூரி கூட்டுறவு சங்கம் உள்பட அனைத்து தபால் ந...
இந்தியா
கிடப்பில் போடப்பட்ட நல்லம்பல் ஏரி திட்டம் பணியை துரிதப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
காரைக்கால் : காரைக்காலில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முன்னோடி திட்டமாக துவங்கப்பட்ட நல்லம்பல் ஏரி திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. ஏரி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண் டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரைக்கால் மாவட்டத் திற்கு அரசலாறு அகலம் கண்ணு, ராயன்பாளையம் ஆகிய இடங்களில் இருந்து குழாய் மூலம் ...
இந்தியா
வலம்புரி விநாயகர் கோவிலில் மகா கணபதி ஹோமம்
புதுச்சேரி : லாஸ்பேட்டை வலம்புரி விநாயகர் கோவிலில் மகா கணபதி ஹோமம் நேற்று நடந்தது.லாஸ்பேட்டை, சாந்தி நகரில் வலம்புரி வெற்றி விநாயகர் கோவில் கருவறையில் புதிதாக பித்தளை தகடுகள் பொருத்தப் பட்டதை முன்னிட்டு, நேற்று காலை 9 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது.9.30 மணிக்கு புண்யாஹ வாசனம், 10 மணிக்கு மகா கணபதி வேள்வி, 11.30க்கு பூர்ணா...
இந்தியா
தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க முதல்வர் வைத்திலிங்கத்திற்கு அழைப்பு
புதுச்சேரி : உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு, புதுச்சேரி முதல்வரை தமிழக அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.கோவையில் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டிற்கான அழைப்பிதழை, தமிழக அமைச்சர் பொன்முடி புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்க...
இந்தியா
என்.ஐ.டி.,க்களில் புதுச்சேரிக்கு 45 சீட் மத்திய அமைச்சர் நாராயணசாமி நடவடிக்கை
புதுச்சேரி : புதுச்சேரி மாநில மாணவ மாணவிகளுக்கு என்.ஐ.டி.,க்களில் 45 இடங்கள் வழங்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சரிடம் நாராயண சாமி வலியுறுத்தினார்.மத்திய திட்டத் துறை இணை அமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை டில்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டு மைச்சர் கபில்சிபலை சந்தித்து பேசினார். அப்போது, காரைக்காலில் புத...
இந்தியா
கோவையில் உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாள் விடுமுறை முதல்வர் அறிவிப்பு
புதுச்சேரி : கோவையில் நடைபெற உள்ள உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என, முதல்வர் வைத்திலிங்கம் கூறினார்.அவர் நேற்று கூறியதாவது:தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சியால், கோவையில் உலக தமிழ்ச் செம்மொழி மாந...
இந்தியா
ஏனாமில் பிரமாண்ட டவர் அமைக்கும் பணி... தீவிரம்! சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை
ஏனாமில் பிரமாண்டமான டவர் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.ஏனாம் அருகில் உள்ள ஆந்திரப் பகுதியான காடிமோகாவில் ரிலையன்ஸ் நிறுவனம் இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு மையத்தை அமைத்துள்ளது. இந்த மையத்திற்கு வங்கக் கடலில் இருந்து பிரமாண்டமான குழாய்கள் மூலம் எரிவாயு எடுத்துச் செல்லப்படுகிறது.இந்த பிரமாண்டமான குழாய்கள், ஏன...
தமிழகம்
இயற்கையின் கொடையான ஈச்சமரங்களை காப்போம் விவசாயிகளுக்கு பலன் தரும் புதர் மரம்
- நமது சிறப்பு நிருபர் - மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பகுதியில் பனைமரங்கள் அதிகம் உள்ளன. அதே அளவுக்கு கள்ளிக்குடி, மேலப்பட்டி, ஓடைப்பட்டி, சென்னம்பட்டி பகுதிகளில் ஈச்சமரங்கள் மானாவாரியாக விளைந்துள்ளன. அங்கு நிலவும் தட்பவெப்பம், மணல் கலந்த நிலம் தான் அதற்கு காரணம். வறண்ட வானம் பார்த்த பூமியான இங்கு ஓடைகள், காடுகளில் தென்ன...
தமிழகம்
அமெரிக்கா செல்லும் கள்ளிக்குடி நித்யகல்யாணி புற்றுநோய் மருந்து தயாரிக்க உதவும் அரிய தாவரம்
கள்ளிக்குடி: புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து தயாரிக்க பயன்படும் நித்ய கல்யாணி செடிகளை கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டியிலிருந்து அமெரிக் காவுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். நித்யகல்யாணி செடி வறட்சியை தாங்கி வளரும். இதன் இலை பச்சை நிறம், பூ "வயலட்' நிறத்தில் இருக்கும். இரண்டு அடி வரை வளரும். வேர் பகுதியில் "வின் கிறிஸ்பின், வ...
தமிழகம்
கோயில் ராஜகோபுரங்கள் பாதுகாப்பாக உள்ளதா?அரசுக்கு அறிக்கை தாக்கல்
மதுரை: மதுரையில் உள்ள கோயில் ராஜகோபுரங்கள் அனைத்தும், பாதுகாப்பாகவும், வலுவாகவும் உள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. சமீபத்தில் காளஹஸ்தி கோயில் ராஜகோபுரம் திடீரென்று இடிந்து விழுந்தது. கடந்த ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்காடி வீதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மண் அரிப்பு காரணமாக விழுந்திரு...
தமிழகம்
மக்கள் குறைதீர் கூட்டம்
வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 523 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்த கலெக்டர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தாட்...
தமிழகம்
ஓய்வு பெற்ற மாநகராட்சி ஊழியர்கள் அவதி
மதுரை: மதுரை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், பணப்பயன் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.மாநகராட்சியில் பணியாற்றி 2008 மற்றும் 2009ல் ஓய்வு பெற்ற 442 பேருக்கு இன்னமும் பணப்பயன்கள் கிடைக்கவில்லை. இது தொடர்பாக மேயர் முதல் அரசு செயலாளர் வரை கோரிக்கை மனு அனுப்பி விட்டனர். இருப்பினும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதற்கு ...
தமிழகம்
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு ஊர்வலம், கையெழுத்து இயக்கம்
மதுரை: குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி மதுரையில் கையெழுத்து இயக்கம், ஊர்வலத்தை கலெக்டர் காமராஜ் துவக்கி வைத்தார். முதன்மை கல்விஅலுவலர் ரஜனிரத்னமாலா, கூடுதல் அலுவலர் ஸ்ரீதேவி, தொழிலாளர் துறை துணைகமிஷனர் ரவிசங்கர், உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணபாண்டியன், ஆய்வாளர் கோவிந்தன், துணை ஆய்வாளர் கருணாநிதி, நாட்டு நலப்பணித் ...
தமிழகம்
லாரி உரிமையாளர்கள் மீண்டும் மறியல்
மதுரை: மதுரையில் சுங்கவரியை எதிர்த்து, மீண்டும் லாரி உரிமையாளர்கள் மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்கிறது.லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் சாத்தையா, செயலாளர் சாகுல்ஹமீது தெரிவித்துள்ளதாவது :மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிட்டம்பட்டி அருகே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ம...
தமிழகம்
போதைக்கு அடிமையாகி மீண்டவர்கள் மதுரை கூட்டத்தில் உருக்கம்
புதூர்: குடிக்கு அடிமையானவர்கள், அதில் இருந்து மீண்ட அனுபவத்தை மதுரை புதூரில் நடந்த கூட்டத்தில் பகிர்ந்து கொண்டனர். குடி போதைக்கு ஆளானவர்கள், அதிலிருந்து விடுபடும் வழியை காட்டுவதற்காக "ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' அமைப்பு, பாப் மற்றும் பில் என்பவர்களால் 1935ல் உருவாக்கப்பட்டது. அதன் 75வது ஆண்டு விழா, மதுரையில் நடந்தது. பாதிர...