category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | மக்காச்சோள சாகுபடிக்கு மானியம் | மதுரை: வாடிப்பட்டி வட்டாரத்தில் மக்காச்சோள சாகுபடி பரப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 150 எக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது. அதையடுத்து இந்த ஆண்டு மக்காச்சோள சாகுபடியாளர்களுக்கு விவசாயத் துறை சார்பில் ஐசோபாம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பெரு விளக்கப் பண்ணைக... |
தமிழகம் | காந்தியச் சிந்தனை பட்டயப் படிப்பு | மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள காந்தியச் சிந்தனை மற்றும் ஆய்வு நிறுவனத்தின் சார்பில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. பன்னிரெண்டாம் வகுப்பு தேறியவர்கள் யோகா பட்டயப் படிப்பிற்கும், டிகிரி முடித்தோர் யோகா முதுநிலை படிப்பிற்கும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்ற 18 வயது நிரம்பியவர்கள் காந்திய சிந்தனை படிப்பிற்கும் விண்ணப... |
தமிழகம் | உழவாரப் பணி | மதுரை: காப்போம் மதுரை ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் சார்பில் மஸ்தான் பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி வளாகத்தை, பக்தர்கள் சுத்தம் செய்தனர். கல்விக்கான சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அன்னதானம் வழங்கப் பட்டது. இயக்கச் செயலாளர் சரளா ஏற்பாடுகளைச் செய்திருந்தார். |
தமிழகம் | நிர்வாகிகள் தேர்வு | மதுரை: மதுரை கே.கே.நகரில், நடையாளர் கழக நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக தியாகராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக சுப்புராம், பொருளாளராக ரவிக்குமார், துணைத் தலைவராக பெரியண்ணன், குருசாமி, இணைச் செயலாளராக சொக்கலிங்கம், முகமது தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
தமிழகம் | மாணவர்கள்ஆர்ப்பாட்டம் | திருச்சி: சட்டக்கல்லூரிகளில் படிப்பு முடித்த மாணவர், பார் கவுன்சிலில் பதிவு செய்வதுக்கு நுழைவுத்தேர்வு எழுதவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு தமிழகசட்டக்கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்கமான முறையிலேயே பார் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்ட... |
தமிழகம் | திருச்சியில் மகளிர் தொழில் முனைவோர் மாநாடு இருநாள் கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு | திருச்சி: திருச்சியில் நடைபெறும் மகளிர் தொழில் முனைவோருக்கான சிறு, குறுந்தொழில் வாய்ப்பு குறித்த கருத்தரங்கில் பங்கேற்க தொழில் முனைவோர்களுக்கு தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. பாரதிதாசன் பல்கலை மகளிரியல் துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கத்தின் நான்காவது மாநாடு "மகளிர் தொழில்... |
தமிழகம் | நிலத்தகராறில் விவசாயி கொலை: டிரைவர் கைது மகன் தலைமறைவு | மணப்பாறை: வையம்பட்டி அருகே நிலத்தகராறு காரணமாக விவசாயியை செங்கலால் அடித்துக்கொன்ற லாரி டிரைவரை போலீஸார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே கருமகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி செல்லன்(60). இவருக்கு பாக்யா, செல்லம்மாள் என்ற இருமனைவிகள் உள்ளனர். குழந்தைகள் இல்லை என்பதால் செல்லனின் பூர்வீக சொத்துக்களை அ... |
தமிழகம் | ஜூன் 18 முதல் 20 வரைமாவட்ட டேபிள் டென்னிஸ் | மதுரை: மதுரை எல்லீஸ் டேபிள் டென்னிஸ் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள், ஜூன் 18 முதல் 20 வரை நடக்கிறது.மதுரை தினமலர் அவென்யூவில் உள்ள வி.கே.கே., பிளேகுரூப் மெட்ரிக் பள்ளியில், மினி கேடட் ஆடவர், கேடட் ஆடவர், சப்-ஜூனியர் ஆடவர், ஜூனிய... |
தமிழகம் | காங்., எம்.எல்.ஏ., தம்பி மகனை மீட்டது எப்படி? தனிப்படை போலீஸாரின் பரபரப்பு தகவல் | திருச்சி: அரியலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., தம்பி மகனை கடத்தல்காரர்களிடம் இருந்து போலீஸார் பத்திரமாக மீட்டனர். கார் ரேஸில் கலந்து கொள்ளும் ஆசையால், எம்.எல்.ஏ., வீட்டில் டிரைவராக இருந்தவரே, கடத்தலில் ஈடுபட்டு, 50 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியது தெரியவந்துள்ளது. திருச்சி டி.ஐ.ஜி., அமல்ராஜ், எஸ்.பி.,க்கள் கலியமூர்த்தி, நஜ்மல் ... |
தமிழகம் | தண்ணீரில் மூழ்கி கிளீனர் பரிதாப பலி | மண்ணச்சநல்லூர்: வாத்தலை அருகே மணல் குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி கிளீனர் பலியானார். நீலகிரி மாவட்டம் பைக்காராவைச் சேர்ந்தவர் ஆனந்தன்(18). லாரி கிளீனராக இருந்த இவர் நேற்று முன்தினம் வாத்தலை அருகே மணல் குவாரிக்கு மணல் ஏற்ற வந்திருந்தார். மணல் அள்ளிய குழியில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்தார். நீச்சல் தெரியாத... |
தமிழகம் | மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் | மதுரை: திருமங்கலம், மைக்குடி நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ஊராட்சித் தலைவர் பெரியகருப்பன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஆசிரியைகள் சுபா, எலிசபெத், பரிமளா, ஜோதிலட்சுமி கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார். |
தமிழகம் | டி.எஸ்.பி.,க்கு கூடுதல் பொறுப்பு | மதுரை: மதுரை லஞ்சஒழிப்புத் துறை டி.எஸ்.பி.,யாக இருந்த குலோத்துங்கபாண்யன், கூடுதல் எஸ்.பி.,யாக விருதுநகர் மதுவிலக்கு பிரிவுக்கு மாற்றப்பட்டார். நேற்று காலை பொறுப் பேற்றுக் கொண்டார். இதைதொடர்ந்து விருதுநகர் லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி., சியாமளாதேவி கூடுதல் பொறுப்பாக மதுரையை கவனித்து வருகிறார். |
தமிழகம் | சங்கக் கூட்டம் | மதுரை: மதுரை வலையங் குளத்தில், விவசாயக் கூலி தொழிலாளர்கள்சங்கத்தின் கூட்டம் நடந்தது. சங்க செயலாளர் சின்னம்மாள் தலைமை வகித்தார். பொருளாளர் சட்டவைரன் மற்றும் கோடாங்கி முன்னிலை வகித்தனர். நூறுநாள் வேலை திட்டத்தில் மருத்துவ வசதி, குழந்தை காப்பக வசதிகளை உறுதிப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஆலோசகர் புஷ்பம், அமைப்பாளர்... |
தமிழகம் | யோகா பயிற்சிமுகாம் | மதுரை: மதுரை புதுப்பட்டியில் தமிழ்நாடு உடற்பயிற்சியியல் மற்றும் விளையாட்டு பல்கலை சார்பில் இலவச யோகா பயிற்சி முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். காந்தி மியூசிய இயக்குனர் ரவிச்சந்திரன் மற்றும் கங்காதரன், ஊராட்சி துணைத் தலைவர் ராஜேந்திரன், கோமதியம்மாள் பங்கேற்றனர். சரஸ்வதி, செந்தில் பாபு, பாலமுருகன்,... |
தமிழகம் | மனு நீதி நாள் முகாம் | அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே கள்வேலிபட்டியில் வரும் 16ம்தேதி ஆர்.டி.ஓ., சுகுமாரன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடக்கவுள்ளது. அதற்கென தாசில்தார் நூர்ஜஹான் பேகம் தலைமையில் முன்னோடி மனுநீதிநாள் முகாம் நடந் தது. ஊராட்சி தலைவர் பானுமதி முன்னிலை வகித்தார். |
தமிழகம் | கோழிவளர்ப்பு பயிற்சி | மதுரை: திருப்பரங்குன்றம் தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் நவீன முறையில் கோழி, நாட்டுக்கோழி, காடை, வான்கோழி வளர்ப்பு பயிற்சி இலவசமாக நடைபெற உள்ளது. 2 நாள் நடைபெறும் இப்பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 0452- 248 3903 ல் தொடர்பு கொள்ளலாம். |
தமிழகம் | தியாகராஜநகர் டுண்டி விநாயகருக்குகும் பிஷேக பூஜைகள் நாளை துவக்கம் | திருநெல்வேலி:பாளை., தியாகராஜநகர் டுண்டி விநாயகர் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் 17ம் தேதி நடக்கிறது.பாளை., தியாகராஜநகர் எல்.ஐ.சி.காலனியில் டுண்டி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கன்னி மூல விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், தட்சணாமூர்த்தி, ஆஞ்சநேயர், நவக்கிரஹங்கள் அமைந்துள்ளது. கும்பாபி... |
தமிழகம் | மாநகராட்சியில் பொதுமக்கள் குறைகளைதெரிவிக்க 24 மணி நேர சேவை மையம் | திருநெல்வேலி:பொதுமக்கள் சேவை குறித்த புகார்களை தெரிவிக்க நெல்லை மாநகராட்சியில் 24 மணி நேர இலவச சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது.நெல்லை மாநகராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் குடிநீர், சுகாதாரம் மற்றும் இதர பிரச்னைகள் குறித்த புகார்களை தெரிவிக்கும் வகையில் நெல்லை மாநகராட்சியில் 24 மணி நேர இலவச சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. மை... |
தமிழகம் | சுரண்டை அரசு டாக்டர் மீதுகலெக்டரிடம் பா.ஜ., புகார் | திருநெல்வேலி:சுரண்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மீது கீழப்பாவூர் ஒன்றிய பா.ஜ., செயலாளர் வேலுச்சாமி புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:வி.கே.புதூர் தாலுகா சுரண்டை டவுன் பஞ்., அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் ஒருவர் முறையாக பணிக்கு வருவதில்லை. சில நாட்களில் சீக்கிரமே பணிக்கு வந்துவிட்டு சென... |
தமிழகம் | தென்காசியில் மாணவர்சேர்க்கை பேரணி | தென்காசி:தென்காசியில் மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது.தென்காசி ஆர்.சி.துவக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் கல்வி விழிப்புணர்வு முகாமை முன்னிட்டு மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் எட்வர்ட் தேவநாதன் தலைமை வகித்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்றது."கம்ப்யூட்டர் வழி கற்ப... |
தமிழகம் | கரும்பு பயிருக்கு தேவைசொட்டு நீர் பாசனம் | தென்காசி:கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பதன் அவசியம் குறித்து வாசுதேவநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் கரும்பு பயிர் அதிக பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. மழை இல்லாத காரணத்தால் கிணறுகளில் நீர் குற... |
தமிழகம் | ஆரம்ப பள்ளிகளில் போதிய வசதிகள் இல்லை விளம்பரத்துக்காக கவர்ச்சிகரமான ஊர்வலம் | திருவாடானை: ஆரம்பள்ளிகளில் போதிய வசதியில்லாத நிலையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் மாணவர்களின் பள்ளி சேர்க்கை ஊர்வலம் நடத்தி விளம்பரம் செய்வது பெற் றோர் கள் மத்தியில் அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது. திருவாடானை, தொண்டி பகுதியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தற்போது மாணவர்கள் சேர்... |
தமிழகம் | அதிக கல்வி கட்டண கொள்ளையால் மக்கள் பாதிப்பு:பாளை.,யில் 5 மெட்ரிக்.,பள்ளிகளுக்கு நோட்டீஸ் | திருநெல்வேலி:அதிக கல்வி கட்டண கொள்ளை புகார்களை தொடர்ந்து பாளை.,யில் 5 மெட்ரிக்., பள்ளிகளில் அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். அதிக பணம் வசூலிக்கப்பட்ட பள்ளியில் இருந்து பெற்றோர்களுக்கு பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.நெல்லை மாவட்டத்தில் பல்வேறு தனியார், மெட்ரிக் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக க... |
தமிழகம் | இலவச கான்கீரிட் வீடுகள் வேண்டும்:பாத்திர விற்பனையாளர்கள் ஆசை | திருநெல்வேலி:இலவச கான்கீரிட் வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று பாத்திர விற்பனையாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் நெல்லை லைன் பாத்திர விற்பனையாளர் சங்கத்தினர் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:நாங்கள் சைக்கிளில் சென்று வீடுகளில் கழிவுகளாக ச... |
தமிழகம் | இருதய சிகிச்சைக்கு ஏங்கும்10 மாத பெண் குழந்தை | திருநெல்வேலி:10 மாத பெண் குழந்தைக்கு இருதய சிகிச்சை செய்ய அரசு நிதி வழங்க வேண்டும் என்று பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் நெல்லை ஜங்ஷன் கைலாசபுரம் தெற்கு தெரு மாரியப்பன் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:நான் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி ... |
தமிழகம் | காதல் கணவருடன் சேர்த்து வைக்காவிட்டால்:சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு:நெல்லையில் கர்ப்பிணி கண் | திருநெல்வேலி:காதல் கணவருடன் சேர்த்து வைக்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருப்பேன் என்று கலெக்டரிடம் நிறைமாத கர்ப்பிணி தெரிவித்தார்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் சடையப்பபுரம் விஜயஜோதி மற்றும் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஆண்டு ஊத்துமலையில் எனத... |
தமிழகம் | சுடுகாட்டிற்கு புதிய பாதை தேவை:சிவந்திபுரம் மக்கள் வேண்டுகோள் | திருநெல்வேலி:சுடுகாட்டிற்கு புதிய பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று சிவந்திபுரம் மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் சிவந்திபுரம் தேவேந்திர குல சமுதாய ஊர் நல கமிட்டி தலைவர் வண்ணமுத்து மற்றும் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:எங்கள் பகுத... |
தமிழகம் | துவரை சாகுபடி பரப்பை மேம்படுத்தவிவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல் | திருநெல்வேலி:துவரை சாகுபடி பரப்பை மேம்படுத்த விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது.தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் துவரை சாகுபடி பரப்பை மேம்படுத்துவதற்காக ஒரு எக்டேர் செயல் விளக்க திடல்கள் அமைக்க வேளாண்மைத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.செயல் விளக்க திடல்களுக்கான இடு பொருட்களான அதிக விளைச்... |
தமிழகம் | அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் பணியிடம்:சீனியாரிட்டி பெயர் பட்டியல் வெப்சைட்டில் வெளியீடு | திருநெல்வேலி:அரசு போக்குவரத்து கழகத்தில் 200 கண்டக்டர் பணியிடங்களுக்கு உத்தேச சீனியாரிட்டி பெயர் பட்டியல் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை பொது மேலாளரால் அறிவிக்கப்பட்டுள்ள கண்டக்டர் பணிக்காலியிடங்களுக்கு உத்தேச சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி, வயது:>கல்வி... |
தமிழகம் | புன்னகை புரிந்து அருள்பாலிக்கும்புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி | நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து ராஜபாளையம் செல்லும் வழித்தடத்தில் உள்ள ஊர் புளியங்குடி. இவ்வூர் ஆதியில் புளியங்காட்டிடையே குடி இருக்கும் ஊராக அமைந்ததால் இவ்வூருக்கு புளியங்குடி என்று பெயர் வந்ததாக கூறுவர். இவ்வூருக்கு பெருமை சேர்ப்பது இங்குள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலும், பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலும் ஆகும்... |
தமிழகம் | பூரண மதுவிலக்கை அமல்படுத்தகோரிபாஜ.,சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம்: செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் | திருநெல்வேலி:தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தகோரி நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மேலப்பாளையம் மண்டல பாஜ.,செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மேலப்பாளையம் மண்டல பாஜ., செயற்குழு கூட்டம், மேலநத்தம் அணைக்கட்டி சாஸ்தா கோயிலில் நடந்தது. மண்டல தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் பகவதி சங்கரபா... |
தமிழகம் | ஓவர்லோடு லாரி டிரைவர்களுக்குரூ.65 ஆயிரம் அபராதம் | திருநெல்வேலி:அரசு அனுமதித்த எடையை விட அதிகமாக லோடு ஏற்றிச்சென்ற லாரி டிரைவர்களுக்கு ரூ.65 ஆயிரத்து 300 அபராதம் விதித்து நெல்லை கோர்ட் உத்தரவிட்டது.தாழையூத்து பஜார் பகுதியில் கடந்த 9ம் தேதி போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை போலீசார் வழிமறித்து சோதனை நடத்திய போது, அரசு அனுமதித்த எடையை ... |
தமிழகம் | கிரேடு ஊதிய மாற்றம் அளிக்க வலியுறுத்திநாடு முழுவதும் ரயில் நிறுத்தப்போராட்டம் | திருநெல்வேலி:பணிநேரக்குறைப்பு, கிரேடு ஊதிய மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடு முழுவதும் ரயில் நிறுத்தப்போராட்டம் நடக்கும் என அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர் கழகம் அறிவித்தது.
நெல்லையில் அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர் கழக ஆலோசகர் சவுந்தரபாண்டியன் கூறியதாவது:கடந்த 12ம்தேதி அதிகாலை விழுப்புரம் - சென்ன... |
தமிழகம் | தொழிலாளிதற்கொலை | திருநெல்வேலி:மானூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.மானூர் அருகேயுள்ள கீழ பிள்ளையார்குளம் தனுஷ்கோடி நகர் அருந்ததியர் தெருவை சேர்ந்த சுடலைமாடன் மகன் முத்துவீரன்(45). கூலித்தொலாளி. இவர் மனைவி சந்தனமாரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். முத்துவீரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் மனைவி சந்தன... |
தமிழகம் | எல்.ஐ.சி., எஸ்.சி.எஸ்.டி.,ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் | திருநெல்வேலி:நெல்லையில் பின்னடைவு காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தி எல்.ஐ.சி., எஸ்.சி.எஸ்.டி., ஊழியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கடந்த 15 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள உதவியாளர், கடைநிலை ஊழியர் எஸ்.சி.எஸ்.டி., பின்னடைவு காலியிடங்களை நிரப்புவது, 30 சதவீத ஊதிய உயர்வு அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நே... |
தமிழகம் | நெல்லை மேற்கு மாவட்ட சமக.,செயற்குழு கூட்டம் | பாவூர்சத்திரம்:நெல்லை மேற்கு மாவட்ட ச.ம.க., செயல்வீரர்கள் கூட்டம் பாவூர்சத்திரம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் காளிதாசன் முன்னிலை வகித்தார். கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் கலாசாமி வரவேற்றார். தென்மண்டல அமைப்பு செயலாளர் சுந்தர், மாநில கலை இலக்கிய அ... |
தமிழகம் | மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையதற்காலிக பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம் | வள்ளியூர்:வள்ளியூர் அருகே உள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் முன் பணிநிரந்தரம் செய்யக்கோரி தொழிலாளர்கள் நேற்று உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.வள்ளியூர் அருகே காவல்கிணற்றில் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தில் 1983ம் ஆண்டு முதல் இப்பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் தற்காலிக பணியாள... |
தமிழகம் | குற்றாலம் கோயில் சமையல் கூடம்சீர்செய்ய கோரிக்கை | குற்றாலம்:குற்றாலத்தில் குப்பை கூடமாக மாறிவரும் அறநிலையத்துறைக்கு சொந்தமான சமையல் கூடத்தை சீர்செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குற்றாலத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் குற்றாலநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள சமையல் கூடத்தினை கடந்த காலங்களில் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். ... |
தமிழகம் | பாபநாசம் அணை நீர்மட்டம்மேலும் 3 அடி உயர்வு | விக்கிரமசிங்கபுரம்:காரையார் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று மேலும் சுமார் 3 அடி உயர்ந்தது.தென்மேற்கு பருவகாற்று துவங்கியதையடுத்து மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் 56.40 அடியாக இருந்த பாபநாசம் அணையின... |
தமிழகம் | வி.கே.புரம் அருகேகாங்.,கொடிக்கம்பம் மாயம் | விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரத்தில் காங்., கட்சியினரின் கொடிக்கம்பம் காணாமல் போனது குறித்து இக்கட்சியினர் விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் தெரிவித்தனர்.சிவந்திபுரம் கிராம பஞ்., பகுதி உதிரமுத்தன்பட்டியில் காங்., கட்சியினர் இரும்பு கம்பியால் ஆன கொடிக்கம்பம் ஒன்றை வைத்திருந்தனர். இந்நிலையில் நேற... |
தமிழகம் | திசையன்விளையில்சட்ட விழிப்புணர்வு முகாம் | திசையன்விளை:திசையன்விளையில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.நான்குநேரி தாலுகா சட்டபணிக்குழு சார்பில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் திசையன்விளை ரெட் பயிற்சி மையத்தில் நடந்தது. நான்குநேரி மாவட்ட நீதிதுறை நடுவர் பாண்டியராஜ், நான்குநேரி மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிபதி மகாலெட்சுமி ஆகியோர் தலைமை வகித்து சிறப்புரையா... |
தமிழகம் | கரிவலம்வந்தநல்லூரில்போலீசாரை தாக்கியவர் கைது | திருவேங்கடம்:கரிவலம்வந்தநல்லூரில் சப்-இன்ஸ்பெக்டரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தும், போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.கரிவலம்வநதநல்லூர் உத்தண்டசாமி கோவில் தெருவில் வசித்து வருபவர் முப்புடாதி கோனார் மகன் தர்மா (எ) அய்யனார். இவர் சம்பவத்தன்று இரவு அவர் குடியிருக்கும் தெருவில் அரிவாளுடன் நின... |
தமிழகம் | கரிவலம்வந்தநல்லூரில்டீக்கடைகாரரை தாக்கியவர் கைது | திருவேங்கடம்:கரிவலம்வந்தநல்லூரில் டீக்கடைகாரரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.கரிவலம்வந்தநல்லூரில் டீக்கடை நடத்தி வருபவர் சீனிச்சாமி கோனார் மகன் மகேஸ்வரன் (40). சம்பவத்தன்று இதே ஊரைச் சேர்ந்த அய்யனார் மகன் வேலுச்சாமி (30) குடிபோதையில் டீக்கடைக்கு சென்று டீ கேட்டுள்ளார். காசு கொடுத்தால் டீ தரப்படும் என டீக்கடைகாரர் க... |
தமிழகம் | கரிவலம்வந்தநல்லூர் அருகேபெண்ணை தாக்கியவர் கைது | திருவேங்கடம்:கரிவலம்வந்தநல்லூர் அருகே பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சரகம் பனையூரில் வசித்து வருபவர் பாக்கியராஜ் மனைவி பேச்சியம்மாள் (37). இவரது மகன் வெங்கடேஷ் இங்குள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். இதே ஊரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் கண்ணன். இவரது மகன் ராஜ்குமார்... |
தமிழகம் | நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்60 ஆயிரம் பேர் முன்பதிவு | தென்காசி:நெல்லை மாவட்டத்தில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமிபாண்டியன் எம்எல்ஏ தெரிவித்தார்.குற்றாலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-தமிழக முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக சார்பில் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை மாதம... |
தமிழகம் | செம்மொழி மாநாடு; செங்கோட்டையில்இருந்து சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை | கடையநல்லூர்:கோவை செம்மொழி மாநாட்டிற்கு கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுவதை போல செங்கோட்டையில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டுமென பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.கோவையில் தமிழ் செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி துவங்குகிறது. இதற்கான விழிப்புணர்வு பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு... |
தமிழகம் | தென்னைக்கு காப்பீடு திட்டம்:வேளாண் அதிகாரி விளக்கம் | தென்காசி:தென்னைக்கு காப்பீடு திட்டம் குறித்து வாசுதேவநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:வாசுதேவநல்லூர் வட்டார பகுதியில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தென்னை காப்பீடு திட்டம் நடப்பு ஆண்டில் அறிமுகப்படுத்தப்... |
தமிழகம் | ஆய்க்குடி கோயிலில்இன்று திருவிளக்கு பூஜை | தென்காசி:ஆய்க்குடி சிவன் கோயிலில் இன்று (15ம் தேதி) திருவிளக்கு பூஜை நடக்கிறது.ஆய்க்குடி சவுந்திர நாயகி சமேத காளகண்டேஸ்வரர் (சிவன்) கோயிலில் தமிழ் மாதம் முதல் தேதியன்று திருவிளக்கு பூஜை நடக்கிறது. இன்று (15ம் தேதி) ஆனி மாதம் முதல் தேதியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடக்கிறது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு... |
தமிழகம் | கடையம் வட்டார கல்விக்குழு கூட்டம் | ஆழ்வார்குறிச்சி:கடையம் வட்டார கல்விக்குழு கூட்டம் நடந்தது.அனைவருக்கும் கல்வி இயக்கம் கடையம் வட்டார வளைமையம் சார்பில் வட்டார கல்விக்குழு கூட்டம் யூனியன் சேர்மன் செல்வி சங்குகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. கடையம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் ராஜேந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் கடையம் உதவி தொடக்க கல்வி அலுவலர் ராஜ்குமார்... |
தமிழகம் | முதலியார்பட்டி பள்ளியில்முப்பெரும் விழா | ஆழ்வார்குறிச்சி;முதலியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.முதலியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசளிப்பு விழா, ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, மேல்நிலைப்பள்ளி முதலாமாண்டு துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.விழாவிற்கு முதலியார் ஜமாத் தலைவர... |
தமிழகம் | சிவசைலம் கோயிலில் இன்றுவருஷாபிஷேக விழா | ஆழ்வார்குறிச்சி:சிவசைலம் சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் கோயிலில் இன்று (15ம் தேதி) வருஷாபிஷேக விழா நடக்கிறது.சிவசைலம் சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் கோயிலில் கடந்த 1997ம் ஆண்டு ஜூலை மாதம் 6ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பபாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து வரும் 21ம் தேதி மீண்டும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது... |
தமிழகம் | தென்காசியில் ரயிலில்அடிபட்டு வாலிபர் பலி | தென்காசி:தென்காசியில் ரயிலில் அடிபட்டு வாலிபர் உடல் துண்டு, துண்டாகி பரிதாபமாக இறந்தார்.தென்காசியிலிருந்து விருதுநகர் செல்லும் ரயில் பாதையில் ஆய்க்குடி ரோடு ரயில்வே கேட் வடபகுதியில் அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க ஆண் ரயிலில் அடிபட்டு உடல் துண்டு, துண்டாகி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இறந்த நபர் சிகப்பு ... |
தமிழகம் | திருக்குறள் வார விழா | தென்காசி:தென்காசியில் திருக்குறள் வார விழா நடந்தது.தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் திருக்குறள் வார விழா நடந்தது. திருமலையப்பன் தமிழ் மறை ஓதினார். ஆசிரியர் மாடசாமி தலைமை வகித்தார். திருவள்ளுவர் கழக செயலாளர் சிவராமகிருஷ்ணன் வரவேற்றார். மாணவர் அஜய் கள்ளபிரான் திருக்குறள் மனனம் செய்தார்.வசையென்ப...குறள் பற்றி முத்தையாவும்,... |
தமிழகம் | தென்காசி ரயில்வே மேம்பாலபணியை விரைவுபடுத்த வேண்டும்: ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல் | தென்காசி:தென்காசி ரயில்வே மேம்பால பணியை விரைவுபடுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசு ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.மேலகரம் மத்திய, மாநில அரசு ஓய்வூதியர் சங்க 24வது ஆண்டு நிறைவு விழா நடந்தது. விழாவிற்கு சங்க தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சாமி, இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் அருணகிரிநாத... |
தமிழகம் | பள்ளி தொகுப்பு கருத்தாய்வு கூட்டம் | தென்காசி:தென்காசியில் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய கூட்டம் நடந்தது.தென்காசி 9வது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய கூட்டம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியை செல்வலட்சுமி முன்னிலை வகித்தார். முதல் வகுப்பு சமச்சீர் கல்வி பாடங்களை செயல்வழி கற்றல் மூலம் கற்பிப்பது பற்றி வட்டார வளமைய ஆசிரிய பயி... |
தமிழகம் | மின்சாரம் தாக்கி ஒருவர் பலி | மதுரை: மதுரை காமராஜர் புரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (47). நேற்று முன் தினம் இரவு வீட்டு மாடியில் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக கால் தவறி, குறுக்கே சென்ற வயர் மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி பலியானார். |
தமிழகம் | விழிப்புணர்வு ஊர்வலம் | திருமங்கலம்: திருமங்கலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை மனோகர் எஸ்.பி.,தலைமை வகித்து, துவக்கி வைத்தார். வக்கீல் சங்க தலைவர் ராமசாமி, விஜயரகுநாதன்டி.எஸ்.பி., முன்னிலை வகித்தனர். 800 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். |
தமிழகம் | உண்மை பேசினால் என்ன பயன்: முரளீதர சர்மா விளக்கம்... | மதுரை: மதுரை மதனகோபால சுவாமி கோயிலில் நடந்து வரும் ஆன்மிக தொடர் சொற்பொழிவில், முரளீதர சர்மா பேசியதாவது: உலக காரியங்களால் நாம் இறைவனை மறந்து விடுகிறோம். இறை நாமத்தில் கவனம் செலுத்தும் நேரம் தான் மனிதனுக்கு உண்மையான மகிழ்ச்சியின் நேரம். இறைவனிடம் பிரேம சம்பந்தம், ஆத்ம சம்பந்தம் வைக்க வேண்டும். ஒவ்வொருவரும் மகான்களின் சுல... |
தமிழகம் | திறப்பு விழா | மதுரை: மதுரை தெற்காவணி மூலவீதியில் ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விரிவுபடுத்தப்பட்ட கிளை திறப்புவிழா நடந்தது. காந்தி அழகிரி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தங்கமயில் ஜூவல்லரி லிமிட்டெட் நிர்வாக இயக்குனர் பலராம கோவிந்ததாஸ், புதுக்கணக்கு எழுதி வியாபாரத்தை துவக்கி வைத்தார். நிறுவன நிர்வாக இயக... |
தமிழகம் | பல்கலை கல்லூரி நாளை திறப்பு | மதுரை: அழகர்கோயில் ரோட்டில் உள்ள மதுரை காமராஜ் பல்கலை கல்லூரியின் இளங்கலை இரண்டு, மூன்றாம் ஆண்டு வகுப்புகள் மற்றும் முதுகலை பட்டப்படிப்பு வகுப்புகள் நாளை (ஜூன் 16) முதல் திறக்கப்படும் என முதல்வர் மதனகோபால் தெரிவித்துள்ளார். |
தமிழகம் | ரேஷன் கார்டு மேல்முறையீடு: விண்ணப்பம் வழங்க கூட்டமோ கூட்டம் | மதுரை: மதுரையில் ரேஷன் கார்டு புதுப் பித்தலுக்கு விண்ணப்பிக்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்களின் அன்றாட பிரச்னையில் தலையாய பிரச்னையாக ரேஷன் கார்டு உள்ளது. போலி ரேஷன் கார்டுகளை கண்டறியும் நடவடிக்கையில், கணக்கெடுப்பு நடந்தபோது உண்மையான கார்டுகளும் புதுப்பிக்கப்படாமல்போய்விட்டன. விடுபட்டவர்களுக்கு மேல்முறையீடு ... |
தமிழகம் | இயற்கையின் கொடையான ஈச்சமரங்களை காப்போம் விவசாயிகளுக்கு பலன் தரும் புதர் மரம் | - நமது சிறப்பு நிருபர் - மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பகுதியில் பனைமரங்கள் அதிகம் உள்ளன. அதே அளவுக்கு கள்ளிக்குடி, மேலப்பட்டி, ஓடைப்பட்டி, சென்னம்பட்டி பகுதிகளில் ஈச்சமரங்கள் மானாவாரியாக விளைந்துள்ளன. அங்கு நிலவும் தட்பவெப்பம், மணல் கலந்த நிலம் தான் அதற்கு காரணம். வறண்ட வானம் பார்த்த பூமியான இங்கு ஓடைகள், காடுகளில் தென்ன... |
தமிழகம் | அமெரிக்கா செல்லும் கள்ளிக்குடி நித்யகல்யாணி புற்றுநோய் மருந்து தயாரிக்க உதவும் அரிய தாவரம் | கள்ளிக்குடி: புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து தயாரிக்க பயன்படும் நித்ய கல்யாணி செடிகளை கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டியிலிருந்து அமெரிக் காவுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். நித்யகல்யாணி செடி வறட்சியை தாங்கி வளரும். இதன் இலை பச்சை நிறம், பூ "வயலட்' நிறத்தில் இருக்கும். இரண்டு அடி வரை வளரும். வேர் பகுதியில் "வின் கிறிஸ்பின், வ... |
தமிழகம் | கோயில் ராஜகோபுரங்கள் பாதுகாப்பாக உள்ளதா?அரசுக்கு அறிக்கை தாக்கல் | மதுரை: மதுரையில் உள்ள கோயில் ராஜகோபுரங்கள் அனைத்தும், பாதுகாப்பாகவும், வலுவாகவும் உள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. சமீபத்தில் காளஹஸ்தி கோயில் ராஜகோபுரம் திடீரென்று இடிந்து விழுந்தது. கடந்த ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்காடி வீதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மண் அரிப்பு காரணமாக விழுந்திரு... |
தமிழகம் | ஓய்வு பெற்ற மாநகராட்சி ஊழியர்கள் அவதி | மதுரை: மதுரை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், பணப்பயன் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.மாநகராட்சியில் பணியாற்றி 2008 மற்றும் 2009ல் ஓய்வு பெற்ற 442 பேருக்கு இன்னமும் பணப்பயன்கள் கிடைக்கவில்லை. இது தொடர்பாக மேயர் முதல் அரசு செயலாளர் வரை கோரிக்கை மனு அனுப்பி விட்டனர். இருப்பினும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதற்கு ... |
தமிழகம் | போதைக்கு அடிமையாகி மீண்டவர்கள் மதுரை கூட்டத்தில் உருக்கம் | புதூர்: குடிக்கு அடிமையானவர்கள், அதில் இருந்து மீண்ட அனுபவத்தை மதுரை புதூரில் நடந்த கூட்டத்தில் பகிர்ந்து கொண்டனர். குடி போதைக்கு ஆளானவர்கள், அதிலிருந்து விடுபடும் வழியை காட்டுவதற்காக "ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' அமைப்பு, பாப் மற்றும் பில் என்பவர்களால் 1935ல் உருவாக்கப்பட்டது. அதன் 75வது ஆண்டு விழா, மதுரையில் நடந்தது. பாதிர... |
தமிழகம் | மக்காச்சோள சாகுபடிக்கு மானியம் | மதுரை: வாடிப்பட்டி வட்டாரத்தில் மக்காச்சோள சாகுபடி பரப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 150 எக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது. அதையடுத்து இந்த ஆண்டு மக்காச்சோள சாகுபடியாளர்களுக்கு விவசாயத் துறை சார்பில் ஐசோபாம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பெரு விளக்கப் பண்ணைக... |
தமிழகம் | சோலையாறு நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்வு | வால்பாறை: தொடர் மழையால் சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் பதினொரு அடி உயர்ந்துள்ளது. வால்பாறையில் பெய்துவரும் கன மழையினால் பி.ஏ.பி.,பசானத்திட்டத்தின் முக்கிய அணைகளான சோலையாறு, மேல்நீராறு, கீழ்நீராறு, அப்பர் ஆழியாறு, காடம்பாறை ஆகிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. வால்பாறை டவுன் பகுதி மக்களின் க... |
தமிழகம் | பட்டமேற்பு விழா: | சென்னை சென்னை பல்கலையின் முதல் பட்டமேற்பு விழா நேற்று நடந்தது. விழாவில் பல்கலைக்கழக துறை முதுநிலை மாணவர்களுக்கு, சென்னை அமெரிக்க தூதரக அதிகாரி பிரையன் டால்டன் பட்டங்களை வழங்கினார். அருகில் பல்கலை துணைவேந்தர் திருவாசகம். |
இந்தியா | தமிழகப் பகுதிக்கு டீசல் கடத்த முயன்ற டிரைவர் கைது | புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து தமிழகப் பகுதிக்கு டீசல் கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.கரையாம்புத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சங்கராபரணி ஆற்றுப் பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். கரையாம்புத்தூர் பகுதியில் குறை... |
தமிழகம் | அஜ்மீரில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் | சென்னை: அஜ்மீரிலிருந்து சென்னை எழும்பூருக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அஜ்மீரிலிருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்.0284) இன்று இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு 17ம் தேதி மாலை 4.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். எழும்பூரிலிருந்து வரும் 18ம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்.0283) மாலை 3.15 மணிக்கு பு... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டில் தேனி வாலிபரின் காய்கறி சிற்பம் | தேனி: தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் இளஞ்செழியன்(24). கேட்டரிங் டிப்ளமோ படித்து உள்ளார்.6ஆண்டுகளாக காய்கறிகளில் சிற்பங்கள் செதுக்கி வருகிறார். இவருக்கு கோவையில் நடக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட் டில், "காய்கறிகளின் மூலம் தமிழ் அறிஞர்களின் சிற்பங்களை செதுக்குதல்' என்ற தலைப்பில் கண்காட்சி அமைக்க அனுமதி கிடைத்துள்ளது.... |
தமிழகம் | பள்ளிகளிலேயே தேர்வு முடிவுகளை பதிவு செய்து கொள்ளலாம் | சென்னை: மாணவ, மாணவியர், தாங்கள் படித்த பள்ளிகளிலேயே 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பதிவுச் செய்துக் கொள்ளலாம் என, அரசு தெரிவித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று வழங்கப்படுகின்றன. இதையொட்டி, மாணவ, மாணவியர், தங்கள் கல்வித் தேர்வு முடிவுகளை, அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்... |
தமிழகம் | ஜனாதிபதி ஊட்டி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் | ஊட்டி: ஜனாதிபதியின் ஊட்டி வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகின்றன. கோவையில் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படுகிறது; ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் துவக்கி வைக்கிறார். மாநாடுக்கு முன்னதாக, 19ம் தேதி கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வருகிறார... |
தமிழகம் | தண்டவாளத்தை கண்காணிக்க குழு: டி.ஜி.பி., உத்தரவு | சிவகங்கை: விழுப்புரம் வெடிகுண்டு சம்பவத்தையடுத்து, தண்டவாளங்களை கண்காணிக்க குழுக்களை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே சித்தணியில், கடந்த 12ம் தேதி, வெடிகுண்டு வைத்து தண்டவாளம் தகர்க்கப்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை கண்டித்து, விடுதலைப்புலி ஆதரவாளர்கள் வெடிகுண்டு வைத்திருக்கலாம் என தெரியவந... |
இந்தியா | ஆந்திராவில் சுவர் இடிந்து 9பேர் பலி | மெகபூப்நகர்: ஆந்திராவின் மெகபூப்நகரில் உள்ள கத்வாலில் பழைய காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக மார்க்கெட்டில் உள்ள கடைகளின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் மூன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். |
General | ஆசிய கோப்பை கிரிக்கெட் : இலங்கை வெற்றி | தம்புலா: ஆசிய கோப்பை தொடரின் பாகிஸ்தானுக்கெதிரான ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றது.இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஒவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி வீரர் மேத்தீவ்ஸ் ஆட்டமிழக்காமல் 5... |
இந்தியா | பீகாரில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம் : வங்கி தகர்ப்பு | பாட்னா : பீகார் மாநிலம் ஜம்முயி மாவட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை இருக்கிறது. இந்த வங்கிக்குள் நேற்றிரவு நுழைந்த ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள் வங்கியை சூறையாடினர். வங்கியை தகர்த்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நீடிக்கிறது. மாவோயிஸ்டு தாக்குதலை தொடர்ந்து ஜம்முயி மாவட்டத்தில் தேடுதல் வேட்டை முடுக்கி வி... |
General | உலக கோப்பை கால்பந்து : பிரேசில் - வடகொரியா இன்று மோதல் | ஜோகனஸ்பார்க் : தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஜோகனஸ்பர்க், எல்லீஸ் பார்க் மைதானத்தில் இன்று இரவு நடக்கும் "ஜி' பிரிவு போட்டியில், "நம்பர்-1' அணியான பிரேசில், தரவரிசையில் 105 வது இடத்திலுள்ள, பலவீனமான வட கொரியா அணியை சந்திக்கிறது. ... |
இந்தியா | கடல் சீற்றம் : மும்பைவாசிகளுக்கு எச்சரிக்கை | மும்பை : மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில் வருகிற 17ம் தேதி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது. 4. 70 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுப்ப வாய்ப்பிருக்கிறது என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் 13ம் தேதி முதல்... |
General | பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் எச்சரிக்கை | புதுடில்லி : இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை தூண்டி விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான நம்பிக்கை பற்றாக்குறையை சரி செய்ய இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து வருகிற 25ம் தேதி... |
தமிழகம் | வடசென்னையில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா | சென்னை : வடசென்னையில் நாளை அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : வடசென்னையில் ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும் என்பதையும், குடிசை மாற்று வாரிய நிலம் முறைகேடாக விற்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆர்ப்ப... |
தமிழகம் | தமிழ் வக்கீல்கள் சங்கத்தினர் அமைச்சர் அழகிரியுடன் சந்திப்பு | மதுரை : ஐகோர்ட்டில் தமிழில் வாதாட அனுமதி வேண்டும் என கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து 5வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் சிலர், இன்று காலையில் மத்திய உரம் மற்றும் ரசாயன துறை அமைச்சர் அழகிரியை அவரது வீட்டில் சந்தித்து மன... |
தமிழகம் | 'பூனைக்கு யார் மணி கட்டுவது' | திண்டுக்கல் மாவட்டத்தில் வீதியையும், பிளாட்பாரத்தையும் ஆக்கிரமித்து வியாபாரம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. சிமென்ட் தளம் அமைத்து வாகனங்கள் செல்லக் கூடாது என்று தடுப்பு கற்கள் அமைத்தாலும் விதிமுறைகளை மீறிச் செல்வது தொடர்கிறது. பழநியில் பக்தர்களுக்காக பல லட்ச ரூபாய் செலவில் பிளாட்பாரங்கள் அமைத்தாலும... |
தமிழகம் | நாமக்கல் வருவாய் அலுவலர்கள் ஒட்டுமொத்த விடு்ப்பு | நாமக்கல் : நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலக ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்துள்ளதால் அங்கு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நாமக்கல் வருவாய் துறை அலுவலர்களை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டுப் பட்டிருந்தன. அலுவலர்களை இழிவு படுத்தும் வகையில் போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அலுவலர்கள் ஒட்டுமெ... |
இந்தியா | அர்ஜூன்சிங் மீது போபால் கோர்ட்டில் புகார் பதிவு | போபால் : அர்ஜூன்சிங் மீது போபால் உள்ளூர் கோர்ட்டில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1984ம் ஆண்டு போபால் விஷவாயு கசிவுக்குப் பிறகு, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய சி.இ.ஓ., வாரன் ஆண்டர்சனை முறைகேடாக விடுவித்ததாக கூறி அர்ஜூன் சிங் மீது அந்த கோர்ட்டில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
தமிழகம் | புத்தகம் வெளியீடு | சென்னை: சென்னை மருத்துவ கல்லூரி மயக்க மருத்துவ பிரிவின் தொடர் கல்வி குறித்த புத்தகத்தை கருத்தரங்கில், சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் மோகனந்தரம் வெளியிட்டார். அதை, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் துணைவேந்தர் மயில்வாகணன் நடராஜன் பெற்றுக் கொண்டார். உடன், காதாரத்துறை செயலர் சுப்புராஜ் மற்றும் டாக்டர்கள் வெங்கடாசலம், வேண... |
தமிழகம் | இலவச சீருடை | சென்னை: பாதல் சந்த் கன் கவர் சோர்டியா பள்ளிச் சீருடை திட்டத்தின் கீழ், புதிய சீருடைகளை ராஜஸ்தான் காஸ்மோ கிளப் பவுண்டேஷன் இலவசமாக வழங்கியது. இதனை அமைச்சர் அன்பழகன் வழங்கினார். அருகில் எஸ்.என்.ஜெ., டிஸ்டில்லர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெயமுருகன், ராஜஸ்தான் காஸ்மோ கிளப் பவுண்டேஷன் தலைவர் கவுதம் கோத்தாரி, பிரசாந்த் சந்த் சோர்... |
தமிழகம் | ஒரு கோடி ரூபாய் செலவில் சித்த மருத்துவ ஆராய்ச்சி திட்டம் | சென்னை: ஒரு கோடி ரூபாய் செலவில் ரத்த கொதிப்பு, வெண்புள்ளி, தோல் நோய்களுக்கான புதிய சித்த மருத்துவ மருந்துகள் குறித்த ஆராய்ச்சியை தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மேற்கொள்கிறது. சித்த மருத்துவ மருந்துகளை உலகமயமாக்கும் நோக்கில் இந்நிறுவனம், ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதிய ஆராய்ச்சியை மேற்கொள்கிறது. ஆர... |
இந்தியா | இரட்டைக் கொலை வழக்கு : சோரன் விடுவிப்பு | ராஞ்சி : ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபுசோரன் அவர் மீதான இரட்டை கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சோரன் மீது கடந்த 1974ம் ஆண்டு 2 பேரை கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. போதிய சாட்சி இல்லாத காரணத்தால் சோரன் மீதான வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித... |
தமிழகம் | விழுப்புரத்தில் எரிசாராயம் பறிமுதல் | விழுப்புரம் : விழுப்புரத்தில் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை, ஆலத்தூர் பகுதியில் மினிலாரியில் கடத்தப்பட்ட எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் மதுவிலக்கு போலீசார் இன்று அதிகாலையில் ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் வாகன ஒன்றை நிறுத்தினர். வாகனத்தில் ... |
இந்தியா | விபத்தில் இருந்து தப்பியது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் | புதுடில்லி : இந்திய ஏர்லைன்ஸ் ஐ.சி., 133 விமானம் , டில்லி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அதன் 2 டயர்கள் வெடித்ததாக முதலில் செய்தி பரவியது. ஆனால் டயர் வெடிக்கவில்லை. காற்று வெளியேறி குறைவாக இருந்ததே காரணமாக கூறி விமானம் தரையிறக்கப்பட்டது. என ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 102 பயணிகள் விமான... |
தமிழகம் | தங்கம் விலை குறைந்தது | சென்னை : தங்கம் விலை பவுனுக்கு ரூ. 72 குறைந்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 744க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ. 13 ஆயிரத்து 880க்கு விற்கப்படுகிறது. |
தமிழகம் | திருச்சியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் | திருச்சி : திருச்சியில் ஊராட்சித் தலைவியை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊராட்சித் தலைவி சங்கீதா வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தவில்லை என கூறி அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க., - கம்யூ., கட்சியினரும் கலந்து கொண்டனர். |
இந்தியா | இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டயர் வெடித்ததா ? : டில்லி வந்த 102 பயணிகள் உயிர் பிழைத்தனர் | புதுடில்லி: டில்லி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலையில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இதனால் மற்றொரு துயர சம்பவம் தவிர்க்கப்பட்டது. துபாயில் இருந்து மங்களூரூ வந்த விமானம் தரையிறங்கியபோது எரிந்து சாம்லான துயர சம்பவத்தில் 160 கருகி பலியாயினர். இந்த சம்பவ துயர அலை நீங்குவதற்குள் மீண்டும் ஒரு இந்திய விமானம் ... |
தமிழகம் | கர்நாடகா ஐகோர்ட் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு | புதுடில்லி : கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி சைலேந்தர் குமாரை சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது. சைலேந்தர் அவரது வரம்புகளை மீறக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகா ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரன், தற்போது நீதிப் பணிகளில் ஈடுபடாவிட்டாலும், அவர் தான் கர்நாடக ஐகோர்ட்டுக்கு தலைவர் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. |
தமிழகம் | இன்ஜி., கல்லூரி ரேண்டம் எண் வெளியீடு | சென்னை : இன்ஜினியரிங் கல்லூரி ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. ரேண்டம் எண்களை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் : இன்ஜினியரிங் படிப்பில் சேர மொத்தம் 1லட்சத்து 67 ஆயிரத்து 406 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1லட்சத்து ஆயிரம் பேர் ஆண்கள், 66,000 பேர் பெண்கள் , 78 ஆயிரத... |
தமிழகம் | விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு விவகாரம் : ராமநாதபுரம் எம்.எல்.ஏ., ஹசன் அலி மீது புகார் | விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ரயில்வே தண்டவாளம் தகர்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விழுப்பரம் கோர்ட் வக்கீல் கண்ணன் , சென்னை ஐகோர்ட் வக்கீல் பாபு ஆகியோர் ராமநாதபுரம் எம்.எல்.ஏ., மீது டி.ஐ.ஜி., அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். முன்னதாக நிருபர்களுக்கு வக்கீல்கள் அளித்த பேட்டியில் : விழுப்புரம் தண்டவா... |
தமிழகம் | உயர்கிறது நானோ கார் விலை | மும்பை : உலகிலேயே மிகக் குறைந்த விலை காரான நானோ காரின் விலையை உயர்த்த டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கார் தயாரிக்க பயன்படும் உபகரணங்களின் விலை உயர்ந்துள்ள காரணத்தினால் தான் இந்த விலை உயர்வு எனவும், விலை உயர்வு 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என்றும்... |
இந்தியா | பஞ்சாப்பில் மிக் 21 ரக போர் விமானம் விபத்து | பஞ்சாப் : பஞ்சாப் மாநிலம் ஹல்வாரா அருகே மிக்-21 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.