category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | திருட்டு | தேனி: தேனி என்.ஆர்.டி., நகர் பகுதியில் ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த எட்டு கார்களை உடைத்து கும்பல் டேப்களை திருடிச் சென்றது. போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
தமிழகம் | ரத்ததான முகாம் | தேனி: தேனி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் ரத்ததான முகாமை கோட்ட பொறியாளர் விஜயேந்திரன் ரத்ததானம் வழங்கி தொடங்கி வைத்தார். டாக்டர் ஜெயச் சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். |
தமிழகம் | அரசு மருத்துவமனைக்கு நிதி: ராக், சிறுதுளி, வர்த்தக சபை வரவேற்பு | கோவை : உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முன்னிட்டு, கோவை அரசு மருத்துவமனையை மேம்படுத்த 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசுக்கு, இந்திய தொழில் வர்த்தகசபை, ராக் மற்றும் சிறுதுளி உள்ளிட்ட அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்திய தொழில் வர்த்தகசபை தலைவர் மகேந்திர ராம்தாஸ், "ராக்' தலைவர் சுவாமிநாதன் மற்றும் "சிறு... |
தமிழகம் | பன்றிக்காய்ச்சலை தடுக்க கேரள எல்லையில் சோதனை.., | தேனி: கேரளாவில் இருந்து பன்றிக்காய்ச்சல் தேனி மாவட்டத்திற்குள் ஊடுவுவதை தடுக்க எல்லைகளில் மருத்துவ முகாம் அமைந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் பன்றிக் காய்ச்சல் நோய் பரவி பலர் பலியாகி உள்ளனர். இந் நோய் மற்ற மாவட் டங்களில் ஊடுறுவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் மூன்று மருத்து... |
தமிழகம் | 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் | பொள்ளாச்சி : பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்கள் பதிவு செய்ய இரண்டு இடங்களில், மையம் அமைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 26ம் தேதி வெளியானது. நேற்று முதல் பள்ளிகளில், மாணவர்களுக்கு மதிப்பெண் சான்ற... |
தமிழகம் | மனைவி, குழந்தைகளை கவனிக்காதவர் மீது வழக்கு | தேனி:வீட்டுச் செலவுக்கு பணம் தராமல் மனைவி, குழந்தைகளை பட்டினி போட்டவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சின்னமனூர் பட்டா ளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பழனியம்மாள் (36). இவரது கணவர் பாலகிருஷ்ணன் (41). இவர்களுக்கு திருமணம் ஆகி 16 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கும், சின்னம... |
தமிழகம் | அரசு கல்லூரி ஜூன் 28ல் துவங்கும் | வால்பாறை : உலக தமிழ்ச்செம்மொழி மாநாட்டையொட்டி வால்பாறை அரசு கலைக்கல்லூரி வரும் 28ம் தேதி முதல் செயல்படும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.வால்பாறை பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், புதியதாக சேரவுள்ள மாணவர்களுக்கான "கவுன்சிலிங் கடந்த 10ம்தேதி முதல் சின்கோனா அரசு கலைக்கல்லூரியில் நடந்தது.கோட... |
தமிழகம் | கொப்பரை ஏலம்: கிலோ ரூ.32.90 | பொள்ளாச்சி : நெகமத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில் ஒரு கிலோவுக்கு அதிகபட்சமாக 32.90 ரூபாய் விலை கிடைத்தது.நெகமம் சுற்றுப்பகுதி விவசாயிகள் 15 பேர், ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்திற்கு 78 மூட்டை கொப்பரையை கொண்டு வந்தனர். மொத்தம் நான்கு வியாபாரிகள் கொப்பரையை தரம் பிரித்து ஏலம் கூறினர். ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ... |
தமிழகம் | பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது | கூடலூர்: பெரியாறு அணை நீர்பிடிப்பில் இரண்டு தினங்களுக்கு முன் பெய்த கன மழையால் நீர்வரத்து அதிரடியாக உயர்ந்து நேற்று முன்தினம் 4545 கன அடியாக இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வந்தது. இந்நிலையில், நேற்று நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்து நீர்வரத்து 1386 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 114.... |
தமிழகம் | கம்பம் வீரப்பநாயக்கன் குளத்தில் மரம் வெட்டி கடத்தல் தொடர்கிறது | கம்பம்: கம்பம் வீரப்பநாயக்கன் குளக்கரையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகிறது. மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்பம் வீரப்ப நாயக்கன் குளம் 36 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின் மேற்கு மற்றும் வடக்கு நீர் பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு ... |
தமிழகம் | பணி நியமனம் கோரி தொழிலாளர் உண்ணாவிரதம் | கோவை : ஐகோர்ட் உத்தரவுக்குப் பிறகும் பணி நியமனம் வழங்காததை கண்டித்து முன்னாள் தொழிலாளர்கள் நேற்று கோவையில் உண்ணாவிரதம் மேற் கொண்டனர்.அரசு போக்குவரத்துக்கழகத்தில் 1998 - 99ம் ஆண்டில் டிரைவர், கண்டக்டர்கள் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சில மாதங்களுக்குப் பின் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து பணி நீ... |
தமிழகம் | மூன்று கடைகளை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு | வால்பாறை : வால்பாறை டவுன் பகுதியில் மூன்று கடைகளை உடைத்து, பொருள் மற்றும் பணத்தை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வால்பாறை டவுன் பகுதியில் சமீபகாலமாக திருடர்களின் கைவரிசை அதிகமாக இருந்து வருகிறது.கடந்த மூன்று மாதங்களில் வளையல் கடை வீதி, புது மார்க்கெட், வைகுண்டா மளிகை கடை உட்பட 5 கடைகளில் நள்ளிரவில் திருடர்கள் உ... |
தமிழகம் | அறிவிக்கப்படாத மின்வெட்டு: மக்கள் தவிப்பு | வால்பாறை : வால்பாறையில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அய்யர்பாடி துணை மின் நிலையத்தின் சார்பில் வால்பாறை டவுன் மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. வால்பாறையில் காடம்பாறை நீரேற்று மின் திட்டத்தின் மூலம் நாள் தோறும் 400 மெகாவாட் மின்சாரமும், சோலையாறு அணை நீரேற்று ம... |
தமிழகம் | காப்பீட்டு திட்ட அடையாள அட்டை | பொள்ளாச்சி : சின்னாம்பாளையம் ஊராட்சியில் 480 பயனாளிகளுக்கு அரசு காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னாம்பாளையம் ஊராட்சியில் அரசு காப்பீட்டு திட்ட டையாள அட்டை வழங்குவதற்கு 1,414 பயனாளிகளை போட்டே எடுத்தனர். அதில், 914 பேருக்கு அடையாள அட்டை வந்துள்ளன. காப்பீட்டு திட்ட அ... |
தமிழகம் | கழுகு குஞ்சுக்கு சிகிச்சை | கூடலூர்: கீழே விழுந்து காயமடைந்த கழுகு குஞ்சுக்கு தேக்கடி வன அலுவலகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தேக்கடிக்கு அருகில் வல்லாரங்குன்னு என்ற இடத்தில் ஒன்றரை மாத வயதுடைய கழுகு குஞ்சு மரத்தில் இருந்து கீழே விழுந்து காலில் காயம் ஏற்பட்டது. தேக்கடி வனத்துறையினர் இதனை பிடித்து வன அலுவலகத்தில் வைத்து சிகிச்சை அளித்து வர... |
தமிழகம் | அரசு பஸ் திடீர் நிறுத்தம்: மக்கள் திண்டாட்டம் | வால்பாறை : வால்பாறை - ஹைபாரஸ்ட் எஸ்டேட் செல்லும் அரசு பஸ் திடீர் நிறுத்தம் செய்யப்பட்டதால் பள்ளி மாணவர்களும், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.வால்பாறை அடுத்துள்ளது முடீஸ் ஹைபாரஸ்ட் எஸ்டேட். நல்லமுடி வழியாக ஹைபாரஸ்ட் எஸ்டேட் செல்லும் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள ரோடு கரடு முரடாகவும், குண்டும் குழியுமாக இருப்பதாலும் வாகனங்கள் சென்... |
தமிழகம் | குடிநீர் பிரச்னை தீர்க்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்த முடிவு | அன்னூர் : ஓராண்டாக குடிநீர் கிடைக்காததால் வடவள்ளி ஊராட்சி மக்கள் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.வடவள்ளி ஊராட்சியில் பெரியபுத்தூர், சின்னப்புத்தூர், ரங்கப்ப கவுண்டன்புதூர், வடவள்ளி, வேப்பம்பள்ளம்புதூர், கெச்சங்கிணறு, தாத்தம்பாளையம், முகாசிசெம்சம்பட்டி, மொண்டிகாளிபுதூர், மூணுகட்டிய... |
தமிழகம் | செம்மொழி மாநாடு அனைத்துக்கட்சி கூட்டம் | அன்னூர் : செம்மொழி மாநாட்டை முன்னிட்டு அன்னூரில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. இம்மாநாட்டில் பல நாடுகளிலிருந்து பல லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். மாநாட்டின்போது கோவை மாவட்டத்தில் பிரச்னைகள் ஏதும் ஏற்படாதவண்ணம் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுக... |
தமிழகம் | வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்க மாநாட்டு வரவேற்பு குழுவுக்கு பயிற்சி | கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்பது குறித்து பாரதியார் பல்கலை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வரும் தமிழறிஞர்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டவர்களை விமான நிலையம் மற்றும் ரயில்வே ஸ்டேஷனில் வரவேற்று, மா... |
தமிழகம் | மக்கள்தொகை கணக்கெடுப்பு | மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்ய, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மக்கள்தொகை கணக் கெடுப்பு பணியை ஆய்வு செய்த நகராட்சி கமிஷனர் சுந்தரம், மேற்பார் வையாளர்கள், நகராட்சி வருவாய் உதவியாளர்களுடன் ஆலோசனைக் கூட்... |
தமிழகம் | கபினி அணையின் நீர்வரத்து 9,000 கனஅடியாக அதிகரிப்பு | மேட்டூர்:கேரளா-கர்நாடகா எல்லையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் கபினி அணை நீர்வரத்து நேற்று விநாடிக்கு 9,000 கனஅடியாக அதிகரித்தது.கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ்., அணை நிரம்பினால் உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படும். கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கபினி அணை நீர்பிடிப்பு பகுதி உள்ளது. கேரளா-கர்நாடக... |
தமிழகம் | மாணவர்களின் வருகைப்பதிவேடுக்கு சங்கரா கல்லூரியில் புது சாப்ட்வேர் | கோவை : மாணவ, மாணவியரின் வருகைப்பதிவு, மதிப்பெண் மற்றும் கல்லூரியின் செயல்பாடுகளை, பெற்றோர் அறிந்து கொள்ள சங்கரா கல்வி நிறுவனத்தில் புதிய சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
சங்கரா கல்வி நிறுவனங்களின் நிர்வாகி ராமசந்திரன் கூறியதாவது:மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்க வாழ்க்கை முறை கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கால... |
தமிழகம் | செம்மொழி மாநாடு நாட்களில் மதுக்கடை மூட வக்கீல்கள் மனு | கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நெருங்கி வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டு நாட்களில் அரசின் தடையை மீறி, கள் விற்பனை செய்யப்போவதாக சில அமைப்புகள் அறிவித்துள்ளன. இதை தடுப்பதற்கான வேலைகளில் காவல்துறை இறங்கியுள்ளது.
இந்நிலையில், கள் மற்றும் போதை எதிர்ப்பு அணி என்ற அமைப்பின் பெயரி... |
தமிழகம் | செம்மொழி மாநாடு இறுதிக்கட்ட பணிகள்: ஸ்டாலின் ஆய்வு | கோவை : செம்மொழி மாநாடு இறுதிக்கட்ட பணிகளை நேற்று ஸ்டாலின் பார்வையிட்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகளைப் பார்வையிட துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை கோவை வந்தார். மேட்டுப்பாளையம் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்தார்... |
தமிழகம் | ஜனாதிபதி 22ம் தேதி வருகை | கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், வரும் 22ம் தேதி கோவை வருகிறார். இதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன் னேற்பாடுகளை உளவுத்துறை மற்றும் பாதுகாப் புப் பிரிவு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
கோவையில், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது... |
தமிழகம் | பெண்கள் பள்ளி வழியில் காட்டு கருவவேல மரங்கள், மாணவிகள் அச்சம்! | சாயல்குடி: சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் வழியில் வேலிக்கருவல் சூழ்ந்துள்ளளதால், மாணவிகள் மத்தியில் அச்சம் கொண்டுள்ளனர். சாயல்குடியில் கொலையிருப்பன் கண்மாய்க்குள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 700 மாணவிகளுக்கு மேல் படித்து வருகின்றனர். பள்ளிக்கூடத்தை சுற்றி வேலிக்கருவலும், சுடுகாட... |
தமிழகம் | பஸ் கவிழ்ந்து 18 பேர் படுகாயம்! | பரமக்குடி: ராமநாதபுரத்தில் இருந்து குன்றத்தூருக்கு 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பஸ், சிறுவயல் அருகே வந்த போது நிலை குலைந்து கவிழ்ந்தது. இதில் பயணம் செய்தவர்களில் டிரைவர் உட்பட 18பேர் பலத்த காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இருபதுக்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் தப்பினர். க... |
தமிழகம் | பளபளக்கும் பஸ் ஸ்டாண்ட்; திறந்து வைத்தார் ஸ்டாலின் இன்று முதல் பஸ் இயக்க ஏற்பாடு | கோவை : கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பளபளக்கும் பஸ் ஸ்டாண்டை துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், மாநகராட்சி சார்பில் ஏழு கோடி ரூபாய் செலவில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் செல்லும் அனைத்து பஸ்களு... |
தமிழகம் | விழிப்புணர்வு ஊர்வலம் | சாயல்குடி: கடலாடியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கடலாடி ஒன்றிய தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். வட்ட வள மையம் மேற்பார்வையாளர் (பொறுப்பு) கூடலிங்கம் , குரு வள மையம் பயிற்றுனர் அருணா , குரு வள மைய ஒருங்கினைப்பாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் ராஜசேகர் , துணை ஒருங்கினைப்பாளர் சிவகனி,... |
தமிழகம் | திருச்சி சாலை அகலப்படுத்தும் பணி; துணை முதல்வர் ஆய்வு | கோவை : செம்மொழி மாநாட்டுக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள, உயர் கோபுர மின் விளக்குகளை துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.செம்மொழி மாநாட்டுக்கான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக நேற்று கோவை வந்த துணை முதல்வர் ஸ்டாலின், அலங்கார ஊர்திகள் தயாரிக்கும் பணியை பார்வையிட்டார். என்.எச்.67ல், திருச்சி சாலை பங்குச் சந்தையிலிர... |
தமிழகம் | கவுண்டம்பாளையம்- வடவள்ளி குடிநீர் திட்டம்: துவக்கி வைத்தார் துணை முதல்வர் | பெ.நா.பாளையம் : கவுண்டம்பாளையம் - வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தை நேற்று துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தால் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் பயன் பெறுவர்.
கவுண்டம்பாளையம் நகராட்சி, வடவள்ளி பேரூராட்சிக்கு சிறுவாணி மற்றும் பில்லூர் திட்டம் வாயிலாக குடிநீர் பெறப்பட்டு, வினியோகம் செய்யப்பட்டு வந்தது. நாள்... |
தமிழகம் | அரிவாள் வெட்டு,போலீசார் பாதுகாப்பு ! | பரமக்குடி: பரமக்குடியில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் தங்கம் என்பவரை அரிவாளால் வெட்டியதைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படுள்ளது. பரமக்குடியில் உள்ள விவசாயப் பண்ணை அருகே காட்டுப்பரமக்குடியைச் சார்ந்த பெருமாள் மகன் தங்கம்(23) என்பவர் சென்று கொண்டிருந்தார். பரமக்குடி அரசு கலைக் கல்ல... |
தமிழகம் | சவுராஷ்ட்ரா கல்விக் குழு பாராட்டு விழா. | பரமக்குடி: பரமக்குடி சவுராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளி மாணவன் பிரதீப்குமார் பத்தாம் வகுப்பில் 493மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம், மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். மாணவனுக்கு பள்ளியின் கல்விக்குழு மற்றும் சபையின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. சபைத் தலைவர் பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளியின... |
தமிழகம் | ரேமா நர்சிங் பயிற்சி மைய ஆண்டு விழா | பரமக்குடி: பரமக்குடிரேமா நர்சிங் பயிற்சி மையத்தின் ஐந்தாம் ஆண்டு விழா முதல்வர் ஷீபாசாந்தி முன்னிலையில் நடைபெற்றது. இயக்குனர் ஜோசப்தேவகுமார் வரவேற்றார். மாவட்டத்தின் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மேலாளர் ஜோசப்ஆனந்த்ராஜ் பரிசுகள் வழங்கினார். கடந்த கல்வியாண்டில் சிறந்த மாணவிக்கான பரிசு ராஜகுமாரிக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ... |
தமிழகம் | மாணவர் சேர்க்கை ஊர்வலம் | முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் ஒன்றிய கல்விக்குழு வட்டார வள மையத்தின் சார்பில் மாணவர் சேர்க்கை ஊர்வலம் காந்திசிலை முன் தாசில்தார் செல்வராஜ் தலைமையிலும், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞானதாஸ் முன்னிலையிலும் நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் நூருல்நவாஷ் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் சசிவர்ணம், உதவி தொடக்க கல்வ... |
தமிழகம் | 10 ஆயிரம் யூனிட் ரத்தம் தானம் செய்ய இலக்கு: களமிறங்கியது முயற்சி மக்கள் அமைப்பு | திருப்பூர் : முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் கடந்தாண்டு 1,000 யூனிட் ரத்தம் தானமாக பெறப் பட்டு, திருப்பூர் அரசு மருத்துவ மனைக்கு வழங்கப்பட்டுள்ளது; நடப்பாண்டில் 3,000 யூனிட் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரம் யூனிட் சேகரித்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூன் முதல் ஒவ்வ... |
தமிழகம் | கத்தரிக்காய், பீட்ரூட் விலை உச்சம்; கொத்தமல்லி ஆறுதல் | திருப்பூர் : கத்தரிக்காய், பீட்ரூட் விலை தொடர்ந்து உச்சத்தில் இருக்கிறது; கொத்தமல்லி விலை கட்டுக்கு 15 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில், தரமான பீட்ரூட் 30 கிலோ சிற்பம் 500 ரூபாய் வரை விற்கிறது. வெயில் பாதிப்பால் தரமான பீட்ரூட் கிடைப்பதில்லை. 20 கிலோ கத்தரிக்காய் சிற்பம் 500 ரூபாய் வரை... |
தமிழகம் | பெருமாள் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் | அவிநாசி : திருமுருகன்பூண்டி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. திருமுருகன்பூண்டியில் உள்ள ஸ்ரீபூமி நீளாதேவி சமேத கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் கடந்த இரண்டு ஆண்டாக திருப்பணி நடந்தது. கோவில் முழுமையாக புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா துவங்கியுள்ளது. கோவிலருகே அமைக்கப்பட்ட யாகசாலையில் தினமும் கால... |
தமிழகம் | கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் | திருப்பூர் : கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய, கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரையை கட்டாயமாக்குவதை கண்டித்து, கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் தொழிலாளர் நல அலுவலகம் (சமூக பாதுகாப்பு திட்டம்) முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் கனகராஜ் தலை... |
தமிழகம் | தயார் நிலையில் ஆம்புலன்ஸ், மீட்பு வாகனங்கள்: திருப்பூர் மாவட்ட போலீஸ் உஷார் நடவடிக்கை | திருப்பூர் : கோவையில் நடைபெற உள்ள செம்மொழி மாநாட்டுக்கு செல்லும் வாகனங்கள் விபத்து மற்றும் நெரிசலில் சிக்கினால், உதவும் வகையில் ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு வாகனங்களை, திருப்பூர் மாவட்ட போலீஸ் தயார் நிலையில் வைத்திருக்க முடிவு செய்துள்ளது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் வரும் 23 முதல் 27 வரை நடைபெற உள்ளது. திருப... |
தமிழகம் | குடிநீர் திட்டத்துக்கு ரூ.3.25 கோடி அரசு ஒதுக்கீடு | பல்லடம் : பல்லடம் நகராட்சி பகுதியில் இரண்டாவது அத்திக்கடவு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற, ரூ.3.25 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.பல்லடம் நகராட்சி அவசர கூட்டம், நேற்று நடந்தது; தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்; செயல் அலுவலர் பெஞ்சமின் குணசிங் முன்னிலை வகித்தார்.
நகராட்சி தலைவர் பேசியதாவது: பல்லடத்தில் அத்திக்கடவு குடி... |
தமிழகம் | பள்ளிகளுக்கு தலா 2,500 ரூபாய் நிதி ஒதுக்கீடு: சுற்றுச்சூழல் மன்றத்தை மேம்படுத்த ஏற்பாடு | திருப்பூர் : சுற்றுச்சூழல் மன்றத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாக, திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 101 பள்ளிகளுக்கு இரண்டு லட்சத்து 52 ஆயிரத்து 500 ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்... |
தமிழகம் | குடிநீர் பற்றாக்குறையை போக்க போர்வெல் அமைக்க கோரிக்கை | உடுமலை : குடிமங்கலம் ஊராட்சியில் வாரத்துக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிமங்கலம் ஊராட்சியில் குடிமங்கலம், முத்துசமுத்திரம், மசக்கவுண்டன்புதூர், பத்ரகாளிபுதூர், கொள்ளுப்பாளையம், வேலப்பநாயக்கன்புதூர் ஆகிய கிரா... |
தமிழகம் | இலவச நோட்டு வழங்கும் விழா | முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள், சீருடைகள் வழங்கும் விழா முதுகுளத்தூர் டி.எஸ்.பி., தில்லைநடராஜன் தலைமையிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சங்க மாவட்ட செயலாளர் ஆரிப்கான், நகர செயலாளர் சகுபர்சாதிக், கிளை தலைவர் (நரிப்பையூர்) ஹூமாயுன் கபிர், கிளை துணை ... |
தமிழகம் | துவக்கப்பள்ளிகள் துவக்க திட்டம் | திருப்பூர் : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், திருப்பூர் ஒன்றியத்தில் நான்கு புதிய தொடக்க பள்ளிகள் துவங்கப்பட உள்ளன.திருப்பூர் ஒன்றியத்தில் மாணவர்கள் அதிகமுள்ள பகுதிகளையும், பள்ளிகள் இல்லாத இடங்களையும் பரிசீலித்து, புதிய பள்ளிகள் துவக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிகள் தேவைப்படும் இடங் களான முதலிபா... |
தமிழகம் | மாயமான ஏர்வாடி பெண், கன்னியாகுமரியில் மீட்பு! | ஏர்வாடி: இரண்டு குழந்தைகளுடன் மாயமான இளம் பெண்ணை கன்னியாகுமரி ஆசிரமத்தில் ஏர்வாடி போலீசார் மீட்டனர். ஏர்வாடியை சேர்ந்தவர் ஜெய்னுல் ஆப்தீன்.இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரதுமனைவி பெனாசிர் பானு (22). குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 2ம் தேதி இரண்டு குழந்தைகளுடன் மாயமானார்.இவரது குடும்பத்தினர் பல இ... |
தமிழகம் | லாட்டரி விற்பனை அமோகம் | பொங்கலூர் : பொங்கலூர், கொடுவாய் பகுதியில் லாட்டரிச் சீட்டு விற்பனை அமோகமாக நடக்கிறது. ஏழை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, லாட்டரிச்சீட்டுகளை தமிழக அரசு தடை செய்துள்ளது. அருகிலுள்ள மாநிலங்களில் இருந்து லாட்டரிகளை வாங்கி வந்து, தமிழகத்தில் மறைமுகமாக விற்கின்றனர். கொடுவாய் நகர் முழுவதும் லாட்டரி விற்பனை செய்ய ஆட்கள... |
தமிழகம் | கோயில் கும்பாபிஷேக கூட்டம் | ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆயிரவைசிய மகாஜனசபை முத் தால பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்கான ஆலோசனைக்கூட்டம் அதன் தலைவர் நாராயணம் தலைமையில் நடந்தது. நிர்வாக அறங்காவலர் சாந்த மூர்த்தி முன்னிலை வகித்தார். திருப்பணி கமிட்டி பொருளாளர் மோகன் வரவேற்றார். கோயில் திருப்பணி குறித்த ஆலோசனைகள், முருகன் சன்னதியில் புது மண்டபம்... |
தமிழகம் | கோவில் கலசம் திருட்டு | அரியலூர்: குழுமூர் பெருமாள் கோவில் கலசத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, குழுமூர் கிராமத்திலுள்ள வரதராஜ பெருமாள் கோவிலின் தாயார் சன்னதியிலுள்ள கோபுர கலசம் திருட்டு போயுள்ளது. இரண்டடி உயரமும், மூன்றரை கிலோ எடையும் கொண்ட இந்த வெண்கல கலசம் திருட்டு போனது குறித்து, கோவில் நிர்வாக அலுவல... |
தமிழகம் | மாமியாரை தாக்கிய மருமகள் கைது | ஆத்தூர் : சேலம் மாவட்டம்ஆத்தூர் அருகே உள்ள தியாகனூர் பகுதியை சேர்ந்தவர் பச்சமுத்து. இவரது தாயார் பாப்பம்மாள்(70), பச்சமுத்துவின் மனைவி பாஞ்சாலை(40). கடந்த 3 நாட்களுக்கு முன் பாப்பம்மாளுக்கும், பாஞ்சாலைக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் பாஞ்சாலை பாப்பம்மாளை தாக்கி கீழே தள்ளினார். இதனையடுத்து பாப்பம்மாள் கடந்த 3 நாட்களாக உணவ... |
தமிழகம் | ஆபத்தை விலை பேசும் அசுர வாகனங்கள், இரும்பு கரம் நீட்டினால் விடை கிடைக்கும்... | ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சாலைவாசிகளை அச்சுறுத்தும் வாகனங்களை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் இரும்பு கரம் நீட்ட வேண்டும் . அலட்சியத்துக்கு பெயர் போன ராமநாதபுரத்தில் வாகனங்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு அளவில்லை. கனரக வாகனங்கள், சரக்கு லாரிகளால் சாலைவாசிகள் படும் பாடு வார்த்தையில் அடங்காதது. இதை கட்டுப்படுத்த போக்குவரத்த... |
தமிழகம் | அரியலூர் மாவட்டத்தில் நலிந்த கலைஞர்களுக்கு நிதி வழங்கல் | அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் நலிந்த கலைஞர்களுக்கான நிதி உதவியை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.அரியலூர் தாலுகா அலுவலக கூட்ட அரங்கத்தில் நடந்த, வாராந்திர பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் தலைமை வகித்த மாவட்ட கலெக்டர் ஆபிரகாம், வருவாய்த்துறையில் பணியாற்றி, பணயில் இருக்கும் போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு, கருணை அட... |
தமிழகம் | லாரி ஷெட் தகராறில் 10 பேர் மீது வழக்குப்பதிவு: ஆர்.டி.ஓ., விசாரணை | அரியலூர்: அரியலூர் சிவன் கோவில் அருகே உள்ள லாரி ஷெட் பற்றிய தகராறு காரணமாக இரண்டு தரப்பை சேர்ந்த 10 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை, அரியலூர் ஆர்.டி.ஓ., விசாரிக்கிறார். அரியலூர் ரயில்வேகேட் அருகே உள்ள காசிவிஸ்வநாதர் கோவில் முன்பகுதியில் உள்ள, கோவிலுக்கு சொந்தமான இடம் யாருக்கு அனுபவ உரிமை உள்ளது என்பது தொடர்பாக, ரயில்வேகேட்... |
தமிழகம் | அதிகமான குழந்தைகளை ஏற்றும் வாகனங்களால் விபத்து அபாயம், உறக்கத்தில் அதிகாரிகள்! | ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட் டத்தில் விதிமுறைகளை மீறி வாகனங்களில் பள்ளி குழந்தைகளை ஏற்றுவது அதிகரித்து வருவதால் விபத்து அபாயம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வாரவிழா நடத்தும் போது வட் டார போக்குவரத்து அலுவலகம், டிராபிக் போலீசார் இணைந்து வாடகை வாகன டிரைவர்கள் மற் றும் பள்ளிகளில் டிராபிக் விதிமுறைகள் குறித்த வ... |
தமிழகம் | அரியலூர் கலெக்டரின் முகாம் ஆஃபீஸ் மாற்றம் | அரியலூர்: அரியலூர் மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகம், புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் 2007 நவம்பர் 23ம் தேதி துவக்கப்பட்டது. அதைதொடர்ந்து அரியலூர் திருச்சி சாலையிலுள்ள, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த, அரியலூர் மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலம்... |
தமிழகம் | ஒப்பிலான் கிராமத்தில் தெருக்களில் கழிவுகள் | சாயல்குடி: சாயல்குடியை அடுத்த ஒப்பிலான் கிராமத்தில் தெருக்கள்தோரும் சாக்கடைக்கழிவுகள் நிறைந்து , கொடிய நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடற்கரை கிராமமான ஒப்பிலான் கிராமத்தில் தெருக்களில் கழிவுகள் தேங்கி சாக்கடை நிறைந்த குட்டைகளாக காட்சியளிக்கிறது. தெருச்சாலைகள் இல்லாமல் கரடுமுரடான கற்கள், மணலும், சகதியும் கலந்த கலவையா... |
தமிழகம் | நூல் விலை; புரியாத புதிர் பாதிப்புகளை சந்திக்கும் ஜவுளித் தொழில் | திருப்பூர் : பஞ்சு, நூல் ஏற்றுமதியால், ஜவுளித்தொழில் நிலை கொள்ளா பாதிப்புகளை சந்தித்துள்ளது. விலை றைப்புநடவடிக்கையாக, சலுகைகளை பறித்தும் கூட நூல்விலை குறையவில்லை; அதிகமானது. உலகமயமாக்கல் உடன்படிக்கை காரணமாக, நூல் ஏற்றுமதிக்கு தடைவிதிக்க முடியுமா என்பது புதிராக இருந்தாலும், நூல் ஏற்றுமதிக்கு வரிவிதிப்பதில் இவ்வளவு நிதான... |
தமிழகம் | சரக்கு வாகனங்களில் ஆட்கள் ஏற்றிய 113 பேருக்கு நோட்டீஸ் | தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் ஆட்கள் ஏற்றிய 113 வாகன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் ஆட்கள் ஏற்றி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், கோவில்கள், குடும்ப விழாக்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு சரக்கு வாகனங்களில் ஆட... |
தமிழகம் | மின்னழுத்த கோபுரம் அமைக்க சிக்கல் விவசாயிகள் எதிர்ப்பு: பேச்சு தோல்வி | பல்லடம் : பல்லடம் அருகே உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பது தொடர்பாக, விவசாயிகள் மற்றும் பவர்கிரிட் அதிகாரிகளுக்கு இடையே பிரச்னை ஏற் பட்டது. இதுதொடர்பாக நேற்று பல்லடம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முன்னிலையில் இரு தரப்பினருக்கு இடையே பேச்சு நடத்தப் பட்டது. பேச்சில் முழுமையாக சுமூக தீர்வு ஏற்படவில்லை.மத்திய அரசின் சார்பு... |
தமிழகம் | சிகிச்சை முகாமுக்கு டாக்டர்கள் தாமதம்: தியாகிகள் பரிதவிப்பு | தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தியாகிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிகிச்சை முகாமுக்கு குறித்த நேரத்தில் டாக்டர்கள் வராததால், தியாகிகள் பெரும் பரிதவிப்புக்குள்ளாகினர். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலை சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாமுக... |
தமிழகம் | தடை நேரத்தில் நகருக்குள் நுழைந்த லாரிகளுக்கு அபராதம் | திருப்பூர் : திருப்பூரில் தடை செய் யப்பட்ட நேரத்தில் நுழைந்த எட்டு லாரிகள் மீது, போக்குவரத்து போலீ சார் நடவடிக்கை எடுத் தனர்.திருப்பூரில் காலை 8.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி, மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, கர பகுதிக்குள் வந்து செல்ல லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நகர பகுதிக்குள் லாரி போக்குவரத்து இரு... |
தமிழகம் | பாப்பாரப்பட்டி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கல் | தர்மபுரி: பாப்பாரப்பட்டி அரசு கலை அறிவியில் கல்லூரியில் இந்தாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடக்கிறது. மாணவர் சேர்க்கை விண்ணப்பம் இன்று (ஜூன் 16) முதல் வழங்கப்படுகிறது. பாப்பாரப்பட்டி அரசு கலை கல்லூரி கட்டிட பணிகளை பார்வையிட்ட கலெக்டர் அமுதா கூறியாதவது: இக்கலைக் கல்லூரியில் இந்தாண்டு பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.கா... |
தமிழகம் | விவசாயி கொலை;4 பேர் கைது | தாராபுரம் : காங்கயத்தில் சொத்து தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில், விவசாயியை கொலை செய்த நான்கு பேரை, தாராபுரம் போலீசார் கைது செய்தனர்; இருவரை தேடி வருகின்றனர்.தாராபுரம் அருகே நஞ்சியம் பாளையம் கிராமத்தில் கடந்த 4ம் தேதி தனியார் பாலிடெக்னிக் கல் லூரி அருகே அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடப் பதாக, போலீசாருக்கு தகவல் கி... |
தமிழகம் | டெலிபோன் பழுதால் அவதி ! | கீழக்கரை: கீழக்கரையில் அடிக்கடி டெலிபோன் இணைப்பு துண்டிக்கப்படுவதால் மக்களும், வியாபாரிகளும் பெரும் அவதியடைகின்றனர். கீழக்கரையில் இரண்டு ஆயிரத்திற்கும் அதிகமான டெலிபோன் இணைப்புகள் உள்ளன. தரைவழி தொடர்பு இணைப்பை பல் வேறு பணிகளுக்காக வியாபாரிகள், பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நாள் தோறும் பல்வேறு இடங்களில் இணைப்புகள... |
தமிழகம் | அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சியால் பீதி | அரூர்: மொரப்பூர் அருகே ஐந்து வீடுகளில் அடுத்தடுத்து நள்ளிரவில் கொள்ளையர்கள் திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொரப்பூர் அடுத்த தாசரஅள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தீபன், வெங்கடாசலம், செண்பகம், துரைசாமி, சண்முகம் இவர்கள் ஐந்து பேரும் ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றனர். நேற்று முன்தின... |
தமிழகம் | ஆண்டு விழா | கீழக்கரை: கீழக்கரை குரு ஸ்டார் ஆடவர் சுயஉதவிக்குழு சார்பில் ஐந்தாம் ஆண்டு விழா வெங்கடேஸ்வரா திருமண மகாலில் நடந் தது. நகராட்சி தலை வர் பசீர் அகமது தலைமை வகித்து ஏழை குழந்தை களுக்கு பரிசு வழங்கினார். ஆணையாளர் சுந்தரம் முன்னிலையில் நடந்தது.குழு ஆலோசகர் பாண்டியன் வரவேற்றார். ஐ.ஓ.பி.,வங்கி மேலாளர் சாத்தப்பன் மாணவ, மாணவிகளுக... |
தமிழகம் | சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் நிறுத்தம் | அரூர்: அரூர் அருகே 14வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அரூர் அடுத்த இருளப்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சேது. இவரது மகள் செல்வி (14) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் மாலக்கல் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் பெருமாள் என்பவருக்கும் திருமணம் நடப்பதாக இருந்தது. சிறுமிக்கு திர... |
தமிழகம் | போதை பானம் குடித்த 3 வாலிபர்கள் மயக்கம் | தர்மபுரி: பாப்பாரப்பட்டியில் போதை பானம் குடித்த மூன்று பேர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் தந்தகிரி (25). இவரது நண்பர்கள் சந்திரதாசன் (22), வெங்கடேஷ் (19). இவர்கள் மூன்று பேரும் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்தனர்.
மூன்று பேரை... |
தமிழகம் | பாராட்டு விழா | தர்மபுரி: தர்மபுரி அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம், உதவும் உள்ளங்கள் சார்பில் சமூக சிந்தனையாளர்கள் கூட்டம் மற்றும் முதியோர் இல்லம் துவங்கிட நிலம் வழங்கியவருக்கு பாராட்டு விழா தர்மபுரி மாதவாச்சாரி மண்டபத்தில் நடந்தது. மாணிக்கம் தலைமை வகித்தார். மாதவாச்சாரி ஈஸ்வரி அம்மாள் அறக்கட்டளை நஞ்சுண்டன், மாதர் சங்கத்தலைவி சந்திரா, ஆதி... |
தமிழகம் | முகப்பு புல் தரை மூடல் | ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவின் முகப்பு புல்தரை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதில், குறிப்பாக இங்குள்ள புல்தரை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. கோடை சீசனின் போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பத... |
தமிழகம் | மக்கள் தொடர்பு திட்ட முகாம் | பரமக்குடி: பரமக்குடி உள்வட்டத் தில் இருக்கும் பாம்பூர் கிராமத்தில் ஜூ23ல் காலை 10மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலரால் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறஉள்ளது. இத்துடன் தென் பொதுவக்குடி, என்.பெத்தனேந்தல் கிராமங்களும் இணைக்கப் பட்டுள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மாவட்ட ஆ... |
தமிழகம் | தென் மேற்கு பருவ மழை பொய்த்தால் ஊட்டியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் | ஊட்டி : ஊட்டி நகருக்கு குடிநீர் வினியோகம் செய்ய பயன்படும் நீர் தேக்கங்களில் தண்ணீர் குறைவாகவே காணப்படுகிறது.ஊட்டி நகராட்சி உட்பட்ட பகுதிகளுக்கு பார்சன்ஸ் வேலி, மார்லிமந்து, டைகர்ஹில், கோரிசோலை, மேல் தொட்டபெட்டா, கீழ் தொட்டபெட்டா, கோடப்பமந்து, ஓல்டு ஊட்டி மற்றும் கிளன்ராக் ஆகிய நீர்தேக்கங்களில் தண்ணீர் வினியோகம் செய்யப்... |
தமிழகம் | ஜனநாயக மாதர் சங்க கூட்டம் | திருவாடானை: திருவாடானையில் இந்திய ஜனநாயக மாதர் சங்க கூட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் விஜயா தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் வடகொரியா உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவாடானை தாலுகாவில் குடிநீர் தட்டுபாட்டை போக்க வேண்டும். 100 நாள் வேலைதிட்டத்தில் ஏற்பட்டுள்ள குறைகளை நீக்கி தொழிலாளர்களுக்கு ரூ100 முழுமையாக கிடைக்க நடவடிக... |
தமிழகம் | பாதி வழியிலேயே இறக்கிவிடப்படும் பயணிகள்: பந்தலூர் மக்களுக்கு பயம் | பந்தலூர் : பந்தலூர் பகுதியிலிருந்து சமவெளிக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள், கூடலூரிலிருந்து மாற்றப்படுவதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பந்தலூர் பகுதியிலிருந்து திருப்பூர், சேலம், கோவைக்கும், மாங்கோடு பகுதியிலிருந்து காலை 5மணிக்கு கோவைக்கும் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
சமவெளிப்பகுதிகளுக்கு செல்லும் பயணிகள்... |
தமிழகம் | நெசவாளர்களுக்கு உபகரணங்கள் | பரமக்குடி: பரமக்குடியில் மத்திய மாநில அரசுகளால் இயங்கும் கூட்டுறவுகள் அல்லாத மாஸ்டர் வீவர்கள் வசம் தறி நெய்து வரும் கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச தறி உபகரணங்கள் கொடுக்கப் பட்டன. இதன் நிகழ்ச்சியில் கைத்தறி குழும தலைவர் பாஸ்கரன், செயலர் சம்பத், இயக்குனர்கள் நாகராஜன், சங்கர், தி.மு.க., நகர் செயலர் கருணாநிதி, காங்கிரஸ் பேச்... |
தமிழகம் | வாலிபால் கழக பேரவை கூட்டம் | பரமக்குடி: பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட வாலிபால் கழகத்தின் பொதுப்பேரவைக் கூட்டம் உதவிச் செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. அப்போது 2010 முதல்2014 ஆண்டிற்காக புதிய நிர்வாகிகள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். டாக்டர் அரவிந்தராஜ், தேவராஜன், டாக்டர் சின்னத்துரை அப்துல்லா புரவலர்களாகவும், சேர்மன் டாக்டர் கியாதுதீன், தல... |
தமிழகம் | வயல் வெளியாக இருந்த சாலையை சீரமைக்க களம் இறங்கிய மக்கள் | கூடலூர் : கூடலூர் அருகே பழுதடைந்து சேறும் சகதியுமாக இருந்த வேடன்வயல் - மணல்கொல்லி சாலையை அப்பகுதி மக்களே சீரமைத்தனர்.கூடலூர் வேடன்வயல் பகுதியிலிருந்து மணல்கொல்லிக்கு சுமார் ஒரு கி.மீ., சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை 9 ஆண்டுகளுக்கு முன் சிமெண்ட் சாலையாக மாற்றப்பட்டு சீரமைக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக போதிய பராமரிப்ப... |
தமிழகம் | விழிப்புணர்வு ஊர்வலம் | கீழக்கரை: கீழக்கரை இஸ்லாமியா துவக்கப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி திட்ட வழிகாட்டுதலின் பேரில் கல்வி விழிப்புணர்வு மற்றும் மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடந்தது. நிர்வாக அலுவலர் மலைச்சாமி முன்னிலையில் தலைமை ஆசிரியர் ரவி துவக்கி வைத்தார்.தலைமை ஆசிரியர் ஜோசப் சார்த்தோ தலைமையில் ஆசிரியர்கள் வழி நடத்தினர். |
தமிழகம் | வேலை உறுதியளிப்பு திட்ட பணியில் தொய்வு.., மீண்டும் கூலி தருவதில் குளறுபடியால் மேம்போக்கு ! | ராமநாதபுரம்: கூலி தருவதில் குளறுபடிகள் நிலவிவருவதால் வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளில் மீண்டும் தொய்வு ஏற்பட்டுள்ளது. கிராம மக்களின் பொருளாதார உதவிக்காக வேலை உறுதியளிப்பு திட்டம் தொடங்கப்பட்டது. கிராமத்தை சேர்ந்தவர்கள் அப்பகுதியின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள கூலி தருவது இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் ஆகும். "நூறு நாள் வேல... |
தமிழகம் | கி.புரம் யூனியன் பஞ்., கிராமசபை கூட்டம் | லாலாப்பேட்டை: கிருஷ்ணராயபுரம் யூனியன் உட்பட்ட 23 பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடந்தது.லாலாப்பேட்டை அடுத்துள்ள பிள்ளப்பாளையம் பஞ்சாயத்து கூட்டம் வல்லம் பஞ்சாயத்து துவக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் மணி தலைமை வகித்தார். துணை தலைவர் லட்சுமி முன்னிலை வகித்தார். மக்கள் நலப்பணியாளர் கணேசன், எழு... |
தமிழகம் | தொடர் வயிற்று வலி பெண் தற்கொலை | குளித்தலை: தோகமலையில் தொடர் வயிற்றுவலி காரணமாக எலி மருந்து சாப்பிட்டு பெண் ஒருவர் இறந்தார். குளித்தலை அருகே கழுகூர் ஈச்சங்காட்டுப்பட்டியை சேர்ந்த ராஜலிங்கம் மனைவி விஜயலட்சுமி (25). இவர் தொடர்ந்து பல காலமாக வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார். சம்பவ தினத்தன்று மீண்டும் வயிற்று வலி வந்ததால் வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை ... |
தமிழகம் | பி.எம்.எஸ்., பெண்கள் அமைப்பு துவக்க விழா | கரூர்: பாரதீய மஸ்தூர் பெண்கள் அமைப்பு துவக்க விழா மாவட்ட தலைவர் துரைரவி தலைமையில் நடந்தது.தலைவர் கலைவாணி, துணை தலைவர்கள் நவமணி, ஷீலா, செயலாளர் புவனேஸ்வரி, துணை செயலாளர்கள் பரமேஸ்வரி, ஆனந்தி, பொருளாளர் சாந்தி, அமைப்பு செயலாளர் வாசுகி, செயற்குழு உறுப்பினர்கள் இசபெல்லா, வெண்ணிலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பெண்களின் ... |
தமிழகம் | சாய்ந்த வாழை மரங்கள் | பந்தலூர் : பந்தலூர் பகுதியில் பெய்து வரும் கனமழையினால் நேந்திரன் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தது.பந்தலூர் பகுதியில் பருவமழை தீவிரமைந்துள்ளது. இதனால் பந்தலூர், தேவாலா, நீர்மட்டம், எலியாஸ்கடை உள்ளிட்ட பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டு வாகனங்ளை இயக்க வேண்டியுள்ளது.அத்துடன் பலத்த கா... |
தமிழகம் | கல் கடத்திய லாரிக்கு அபராதம் விதிப்பு | குளித்தலை: குளித்தலை அருகே அனுமதியின்றி கருங்கல் கடத்திய லாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. குளித்தலை - தோகமலை சாலையில் அரசு பணிக்குறித்து பார்வையிட தாசில்தார் ஜெயமூர்த்தி சென்றுகொண்டிருந்தார். அப்போது கருங்கல் ஏற்றிய லாரி ஒன்று கூடுதல் வேகத்தில் ஜீப்பை முந்தி சென்றது. சந்தேகமடைந்த தாசில்தார், லாரியை விரட்டி சென்று பிடி... |
தமிழகம் | கிணற்று நீரில் சுத்தமில்லை: மாணவர்கள் பாடு திண்டாட்டம் | பந்தலூர் : பந்தலூர் அடுத்துள்ள மேபீல்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடிநீர் மாசடைந்துள்ளது. மேபீல்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ் மற்றும் மலையாள வழியில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இங்கு 237 மாணவர்கள் படித்து வரும் இப்பள்ளியில் குடிநீர் தேவைக்காக ஊராட்சி மூலம் குடிநீர் கிணறு அமைக்கப்பட்டது. கிணறு ... |
தமிழகம் | கோவை செம்மொழி மாநாடு பிரச்சார வாகனம் கரூர் வருகை | கரூர்: கோவையில் வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கும் உலக செம்மொழி மாநாட்டியொட்டி மாநிலம் முழுவதும் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் பிரச்சார வாகனம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. பிரச்சாரத்தில் மாநாட்டின் சின்னம் பொறிக்கப்பட்டு முதல்வர் கருணாநிதி எழுதி, இசையமைப்பாளர் ரகுமான் இசையமைத்து வெளிவந்துள்ள மாநாட்டின் மைய... |
தமிழகம் | தொண்டியில் பெண்கள் விடுதி அமைச்சரிடம் வலியுறுத்தல் | தொண்டி: தொண்டியில் பெண்கள் தங்கும் விடுதி அமைக்க அமைச்சர் தங்கவேலனிடம் வலியுறுத்தபட்டது. தொண்டி ல் பெண்கள் உயர்நிலைபள்ளியில் நீண்ட தொலைவிலிருந்து மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி முடிந்து வீடு திரும்புவதில் சிரமபடுகின்றனர். பெண்கள் தங்கும் விடுதி அமைக்க மக்கள் நலசங்கம் சார்பில் பொருளாளர் அருள் சாமி, உறுப்பினர் கலந்த... |
தமிழகம் | மக்கள் குறைதீர் கூட்டம் | கரூர்: கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 18 உல... |
தமிழகம் | சுரங்க பாதையில் அதிகரிக்கும் சகதி: மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் | மஞ்சூர் : குந்தா அணையிலிருந்து கெத்தை அணைக்கு தண்ணீர் செல்லும் சுரங்க பாதையில் மழையின் காரணமாக சேறும் சகதியும் நிறைந்து வருகிறது; இதனால், மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளான அப்பர்பவானி, அலவாஞ்சி, எமரால்டு உள... |
தமிழகம் | தொடரும் போலி டாக்டர் பிரச்னை: கண்டுகொள்ளாத லோக்கல் போலீஸ் | குளித்தலை: குளித்தலை, தோகமலை பகுதிகளில் பிரபலமான போலி டாக்டர்கள் தொடர்ந்து இ யங்குவது தெரிந்தும் போலீஸார் கண்டுகொள்ளாமல்உள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் குளித்தலை, தோகமலை பகுதியில்தான் அதிகளவு போலி டாக்டர் கிளினிக் இயங்குகிறது. கிராமம்தோறும் வாகனத்தில் சென்றும், வசதியான மெடிக்கல் கிளினிக் அமைத்த... |
தமிழகம் | சமூக பணி உறுப்பினர்கள் நியமனம் தகுதியிருந்தால் உடனே விண்ணப்பிக்கலாம் | ஊட்டி : இளைஞர் நீதிக்குழுமம் மற்றும் குழந்தைகள் நலக் குழுக்களுக்கு சமூகப் பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக, தகுதி வாய்ந்த பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனாபட்நாயக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 2006-ம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுக... |
தமிழகம் | வேலை தேடும் படலத்தில் இளைஞர்கள், கல்வியில் தவறியதால் சோகம்! | ராமநாதபுரம்: முறையான கல்வி இல்லாததால் தமிழகத்தில் மீண்டும் இளைஞர்கள் வேலை தேடும் படலத்தை தொடங்கியுள்ளனர். குழந்தை, சிறுவன், இளைஞன், முதியவர் என மனிதனுக்கு பல்வேறு பருவங்கள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் இவற்றையெல்லாம் விட முக்கியமான பருவமாக வேலைவாய்ப்பு உள்ளது. கல்வி இருந்தால் நாடுகளை கடந்தும் நல்ல சம்பளம் பெறலாம் என்ற ந... |
தமிழகம் | இலவச கண் சிகச்சை முகாமில் 120 பேர் பயன் | பந்தலூர் : பந்தலூர் அருகே அம்பலமூலா பகுதியில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 120பேர் பங்கேற்று பயனடைந்தனர்.நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தமிழ்நாடு அறக்கட்டளை, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் மையம், நீலகிரி-வயநாடு ஆதிவாசிகள் நலச்சங்க மருத்துவமனை இணைந்து அம்பலமூலா பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாமை ந... |
தமிழகம் | பள்ளி மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகம் | ஊட்டி : ஊட்டி இருதய ஆண்டவர் பள்ளி மாணவர்களுக்கு தி.மு.க.,வின் சார்பில் இலவச சீருடை, நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.மாநில முதல்வரின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு, ஊட்டி நகர தி.மு.க., சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டியில் அரசு கலை கல்லூரி வளாகத்தில் 87 மரக்கன்றுகள் நடப்பட்டன. ... |
தமிழகம் | காய்கறி மார்க்கெட்டில் கூடுதல் சுங்கக் கட்டணம் வசூல்: விவசாயிகள் திடீர் சாலை மறியல் | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சந்தைபேட்டை காய்கறி மார்க்கெட்டில் கூடுதல் சுங்க கட்டணம் வசூலிப்பதை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி பழைய தபால் நிலையம் சந்தைபேட்டையில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 2,000 விவசாயிகள் தினம... |
தமிழகம் | தேவாலய திருவிழா | குன்னூர் : குன்னூர் புனித அந்தோணியார் தேவாலய திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. நீலகிரியில் பிரசித்தி பெற்ற குன்னூர் புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு விழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலை 5.15 மணிக்கு பல தேவாலய குருக்கள் சார்பில் சிறப்பு நவநாள் திருப்பலி, தேர்பவனி நடத்தப்பட்டது. விழா நாளன்று, க... |
தமிழகம் | பணம் வைத்து சூதாடிய 12 பேர் அதிரடி கைது | ஓசூர்: ஓசூரில் பணம் வைத்து சூதாடிய கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த எட்டு பேர் உள்ளிட்ட 12 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60,000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். ஓசூர் நகர பகுதியில் தனியார் கட்டிடங்களில் பணம் வைத்து சூதாடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, எஸ்.பி., பாபு உத்தரவின் பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் சுர... |
தமிழகம் | ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி | ஊத்தங்கரை: ஊத்தங்கரை யூனியன் வெங்கடதாம்பட்டி குறுவள கருத்தாய்வு மையத்தில் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சமச்சீர் கல்வி, முதல் வகுப்பு செயல் வழிக்கற்றல் அட்டைகளில் திருத்தம் பற்றிய பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் விஜயகுமாரன், ஒருங்கிணை... |
தமிழகம் | சமூக பணியாளர் பணி: விண்ணப்பம் வரவேற்பு | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் நீதிக் குழுமத்தில் சமூக பணியாளர் தலைவர் மற்றும் உறுப்பினராக நியமனம் செய்ய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கலெக்டர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2006ம் ஆண்டின் இளைஞர் நீதி திருத்தப்பட்ட சட்டம் மற்றும் விதிகளின்படி இளைஞர் நீதி குழும... |
தமிழகம் | மாரியம்மன் கோவில் திருவிழா | தர்மபுரி: தர்மபுரியை அடுத்த பாப்பாரப்பட்டியில் புத்து மாரியம்மன் கோவில் விழா நடந்தது. பாப்பாரப்பட்டி டவுன் பஞ்சாயத்து 13வது வார்டு காமராஜ்நகர் மாணிக்க முதலியார் தெருவில் உள்ள ஸ்ரீ புத்து மாரியம்மன் கோவில் விழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜகள் காலை, மாலையில் நடந்தது. அம்மனுக்கு பொங்கல் வ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.