category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | கள்ளிக்குடி:கள்ளிக்குடி நான்குவழிச்சாலையில் விதி மீறல்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. | பயணிகள் பாதுகாப்பாக ரோட்டை கடக்க சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். கள்ளிக்குடி நான்குவழிச்சாலை வழியாக மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நாகர்கோவில், கன்னியாகுமரிக்கு வாகனங்கள் சென்றுவருகின்றன. கள்ளிக்குடியிலிருந்து டி.கல்லுப்பட்டி, காரியாபட்டிக்கு போக்குவரத்து வசதி உள்ளது. கள்ளிக்குடி மக்களின் வசதிக்காக நான்குவழிச்... |
தமிழகம் | சென்னை செல்லும் ரயில்களில் பொதுப்பிரிவு:பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா | மதுரை:தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்களில், பொதுப்பிரிவு பெட்டிகளின் எண்ணிக் கையை அதிகரிக்க வேண்டும் என பயணிகளிடையே கோரிக்கை வலுத்துள்ளது.கடந்த 2007 - 08 ரயில்வே பட்ஜெட்டில், "அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், ஏழைகள் மற்றும் நடுத்தர பயணிகள் நலன் கருதி, ஆறு எண்ணிக்கையில் பொதுப்பிரிவு பெட்டிகள் இணைக்கப்பட... |
தமிழகம் | இந்திய கடற்படைக்கு ஆட்கள் சேர்ப்பு | மதுரை:இந்தியன் நேவியில் (கடற்படை) ஸ்டூவர்ட்ஸ் குக் மற்றும் டோபாஸஸ் பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கப்படுகின்றனர்.1.4.2011 அன்று 17 முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். ஸ்டூவர்ட்ஸ் மற்றும் குக் பணிக்கு மெட்ரிக்., தேர்ச்சியும், டோபாஸஸ் பணிக்கு 6ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை சம்பளம் 6700. பயிற்சிக்கு பின... |
தமிழகம் | செம்மொழி மாநாடு ஆசிரியர்கள் முடிவு | மதுரை:தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. கவுரவ தலைவர் டி.சுப்ரமணியன், சட்ட ஆலோசகர் சிதம்பரஹரி முன்னிலை வகித்தனர். செயலாளர் அன்பழகன் வரவேற்றார். கூட்டத்தில் கோவையில் நடக்க உள்ள செம்மொழி தமிழ்மாநாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் குடும்பத்துடன... |
தமிழகம் | மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பயிற்சி | மதுரை:இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளை மற்றும் ஐ.டி.ஐ., நிறுவனம் சார்பில் இரண்டு ஆண்டுகால டர்னர் மற்றும் டிராப்ட்ஸ்மேன் தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 14 முதல் 40 வயதுக்குட் பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு ... |
தமிழகம் | ஹெலிகாப்டர் போக்குவரத்தை எதிர்பார்க்கும் சுற்றுலா பயணிகள் | பெருங்குடி:சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக, ஹெலிகாப்டர் போக்குவரத்து என்ற கனவு திட்டம், நனவாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மதுரைக்கு வருவது அதிகரிக்கிறது. விமானத்தில் மதுரை வரும், இவர்கள் சுற்றுலா பகுதிகளுக்கு வாடகை காரில் செல்கின்றனர். இதனால் காலவிரயம் ஏற்படுகிறது.
இத... |
தமிழகம் | முன்னோடி மனுநீதி நாள் | பரவை:மதுரை வடக்கு வட்ட தாலூகா சார்பில் முன்னோடி மனுநீதிநாள் முகாம் தேனூர் வருவாய்த்துறை அலுவலகத்தில் நடந்தது. வடக்கு வட்ட தாசில்தார் உதயகுமார் தலைமை வகித்தார். கூழப்பாண்டி மண்டல தாசில்தார் மணிமேகலை, தேனூர் ஊராட்சி தலைவர் பா.மாலதி, துணைதலைவர் பீர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமயநல்லூர் ஆர்.ஐ.,அம்பத்தலரசு வரவேற்றார... |
தமிழகம் | இளையோர் தொழிற்பயிற்சிஇன்று நேர்காணல் | மதுரை:மதுரையில் இளையோர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதற்கான ஆட்கள் தேர்வு மற்றும் நேர்காணல், சின்னசொக்கி குளத்தில் உள்ள மதுரை கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் நடக்கிறது. குறைந்தது 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தாண்டு மொத்தம் 650 பேர் தேர்வு செய்யப... |
தமிழகம் | பாஸ்போர்ட் புரோக்கர் கைது | மதுரை:மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் புதுப்பிக்க நோட்டரி பப்ளிக் கையெழுத்தை முன்கூட்டியே வாங்கி வைத்திருந்த புரோக்கர் கைது செய்யப்பட்டார்.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் அப்துல்மாலிக். இவரது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க, புரோக்கர் முகமது ரபீக்(30), ஆயிரத்து ஐநூறு ரூபாய் கேட்டுள்ளார். முன்பணமாக ஆயிரம் வாங்கிய இவர், ஏற்கன... |
தமிழகம் | ஆக்கிரமிப்புகளை அகற்ற தடைகோரிய மனு: ஐகோர்ட் தள்ளுபடி | மதுரை:திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்சத்திரத்தில் அரசுக்கு சொந்தமான இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு தடை கோரிய மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.ஓட்டன்சத்திரத்தை சேர்ந்த சரோஜா தாக்கல் செய்த ரிட் மனு:ஓட்டன்சத்திரம் சர்வே எண் 14/2பி ல் உள்ள 7,819 சதுரடி இடத்தை சுப்ரமணியன் என்பவரிடம் 11 லட்சம் ரூபாய்க்... |
தமிழகம் | அரக்கன்கோட்டை பாசனத்தில் நெல் சாகுபடி ஜோர் டி.என்.பாளையம்: | அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில் குருவை நெல் சாகுபடி பணி மும்முரமாக நடக்கிறது. கொடிவேரி அணையில் இருந்து பிரியும் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்கள் மூலம், டி.என்.பாளையம், கோபி வட்டாரங்களை சேர்ந்த 24 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏப்ரல் 15ம் தேதி குருவை சாகுபடிக்காக கொடிவேரி அணையிலிருந்து தண்ணீர் த... |
தமிழகம் | காஸ் சிலிண்டர் கேட்டு மக்கள் சாலை மறியல் | பெருந்துறை: பெருந்துறை அருகே காஸ் சிலிண்டர் வழங்க கோரி மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையத்தில் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தை நாளன்று லாரியில் கொண்டு வரப்படும் காஸ் சிலிண்டர், ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்படும். 11ம் தேதி சி... |
தமிழகம் | பெண்ணை தாக்கிய3 பேருக்கு சிறை | திருமங்கலம்:திருமங்கலம் அருகே பெண்ணை தாக்கிய வழக்கில் பெண் உட்பட 3 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.திருமங்கலம் தாலுகா ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி செல்வி. இவர்களுக்கும் அதே ஊரைச் சேர்ந்த மலைச்சாமி குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.மலைச்சாமி, அவரது மனைவி ஜமுனா தேவி, மகன் முத்துக்குமார் 200... |
தமிழகம் | கதம்ப வண்டுகளின் தாக்குதலில் இருந்துதப்ப கிணற்றில் குதித்தவர் பலி | நாகமலைபுதுக்கோட்டை:நாகமலைபுதுக்கோட்டை அருகே கதம்ப வண்டுகளின் தாக்குதலில் இருந்து தப்ப எண்ணி கிணற்றில் குதித்தவர் பலியானார். நாகமலைபுதுக்கோட்டை அருகே அச்சம்பத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(51). இவரும் இதே ஊரைச் சேர்ந்த மகாராஜன்(60) மற்றும் சிலரும் இங்குள்ள வயலில் நேற்று காலை 9.30 மணியளவில் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்தனர... |
தமிழகம் | மரக்கன்று நட வலியுறுத்தி ஊர்வலம் | அலங்காநல்லூர்:அலங்காநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பசுமைப்படை பாதுகாப்பு அமைப்பு சார்பில் ஊர்வலம் நடந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வலியுறுத்தி, அட்டைகள் ஏந்தி சென்ற மாணவிகளின் ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் அழகு உமாதேவி துவக்கி வைத்தார். துணைத்தலைவர் செல்வராணி, நிர்வாக அதிக... |
தமிழகம் | கோயில் திருவிழா | சோழவந்தான்:சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று இரவு 9.30 மணிக்கு பூஜாரிகணேசன் பூர்ணகும்பமெடுத்து, அறங்காவலர் குழுவினர் வெள்ளி தட்டில் அம்மன் படமுள்ள கொடியை சுமந்து பக்தர்களுடன் ஊர்வலமாக கோயில் வந்தனர். பேரூராட்சி தலைவர் கலாவதி, துணைதலைவர் அண்ணாத்துரை, ஜெனகை நற்பணி மன்ற ... |
தமிழகம் | விவசாயிகள்குறைதீர் கூட்டம் | மதுரை:மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜூன் 18 காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, கலெக்டர் காமராஜ் தெரிவித்துள்ளார். |
தமிழகம் | விழிப்புணர்வு ஊர்வலம் | மதுரை:மாடக்குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வட்டார ஆசிரியர் பயிற்றுனர் மாலதி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஆரோக்கியராஜா ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் விளக்க பிரதிகளை பொதுமக்களுக்கு வழங்கினர். |
தமிழகம் | தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் | மதுரை:மதுரையில் இம்மாதம் ஜூன் 9ல் ஒரு கிராம் தங்கம் 1780 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஜூன் 10ல் எட்டு ரூபாய் குறைந்து 1772 ரூபாய்க்கும், 11ல் 19 ரூபாய் குறைந்து 1753 ரூபாய்க்கும், ஜூன் 12ல் 15 ரூபாய் அதிகரித்து 1768 ரூபாய்க்கும், 14ல் ஆறு ரூபாய் குறைந்து 1762 ரூபாய்க்கும் விற்கப் பட்டது. நேற்று ஒன்பது ரூபாய் குறைந்து 1753... |
தமிழகம் | களை கட்டும் மாம்பழ விற்பனை | மதுரை:மதுரையில் மாம்பழங்கள் வரத்து அதிகரிப்பால், விலை சீராக உள்ளது. மழை சீசன் ஆரம்பித்த போதிலும் பழ விற்பனை களை கட்டுகிறது.பழங்கள் விலை குறித்து, யானைக்கல் வியாபாரி செந்தில் கூறியதாவது : மாம்பழ வகைகளில் இமாம்பசந்த் 80 ரூபாய், சப்பட்டை 60, பாலாமணி 50, காசாலட்டு 50, மல்கோவா 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆப்பிள் 130-110 ... |
தமிழகம் | குடும்பம் நடத்த மறுத்த மனைவி:கொலை செய்த கணவருக்கு ஆயுள் | மதுரை:மதுரையில் குடும்பம் நடத்த மறுத்த மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது.மதுரை பொதும்பை சேர்ந்தவர் சோமன் (56) மனைவி செல்வி (50). இவர்களுக்கு இரண்டு மகள்கள், மகன் உள்ளனர். மது போதையில் சோமன் மனைவியை அடித்து, உதைத்து வந்தார். இதனால், கோயில்பாப்பாகுடியில் வசிக்கும் இரண்டாவது மகள் வீட்ட... |
தமிழகம் | வாரிதாரர்களுக்கு பணி நியமன ஆணை:கலெக்டர் வழங்கினார் | வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பணியின் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வி.ஏ.ஓ. பணிக்கான ஆணையினை கலெக்டர் ராஜேந்திரன் வழங்கினார். இதற்கான விழா கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. வருவாய்த்துறையில் மொத்தம் 22 பேருக்கு கருணை அடிப்படையிலும் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.இவர்களில் 10 பேர் ராணிப்பேட்டை கோட்ட வர... |
தமிழகம் | காங்கேயம் விவசாயி கொலையில் 4 பேர் கைது | தாராபுரம்: காங்கேயத்தில் பூமி தொடர்பாக முன் விரோதத்தில் விவசாயியை கொலை செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தாராபுரம் நஞ்சியம்பாளையம் கிராமத்தில் 4ம் தேதி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார். இறந்தவரின் பெரு விரலில் மை பதிக்கப்பட்டு இருந்தது. அருகில், காலி மது பாட்டில் கிடந்த... |
தமிழகம் | ஆக்கிரமிப்பு அகற்றம் | மதுரை:மதுரை கீழ ஆவணி மூல வீதி, பெரியார் பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ்ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நேற்று மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனர் தேவதாஸ் தலைமையில், நகரமைப்பு அலுவலர்கள் நல்லதம்பி, சுகாதார அலுவலர் ஜெகதீசன் மற்றும் ஊழியர்கள் அகற்றினர். |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | மதுரை:மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள தொழிலாளர் நல அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்டட தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.கட்டட தொழிலாளர் வாரியத்தில் பதிவு செய்து, பல மாதங்களாக உறுப்பினர் அட்டை வழங்கவில்லை; 2008 முதல் விபத்தில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு நிவாரண நிதி வழங்கவில்லை; மத்திய அ... |
தமிழகம் | விடையளிப்பு விழா | மதுரை:மதுரை ஏனாதி விக்ரம் பொறியியல் கல்லூரியில், விடையளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் கதிர்வேலு வரவேற்றார். இயக்குனர் சீனிவாசஸ் தலைமை வகித்தார். மாணவர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த பேராசிரியர்கள் விடையளித்தனர். கல்லூரி டீன் பழனிகுமார், மேலாண்மை அலுவலர் நாகராஜன் பேசினர். |
தமிழகம் | விபத்தில் டெய்லர் பலி | நாகமலை:அச்சம்பத்து காந்திநகரைச் சேர்ந்தவர் குண்டுமலை(55). டெய்லராக உள்ளார். நேற்று காலை 9.45 மணியளவில் சாப்பிட வீட்டிற்கு சென்ற இவர், மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது மதுரையில் இருந்து பல்கலைக்கழகம் நோக்கி வந்த அரைபாடி லாரி மோதி பலியானார். நாகமலைபுதுக்கோட்டை போலீசார் க.புதூரைச் சேர்ந்த லாரி டிரைவர... |
தமிழகம் | மின் நுகர்வோர்குறைதீர் முகாம் | மதுரை:மதுரை மின் வாரிய மெட்ரோ தெற்கு செயற்பொறியாளர் அ. மணி அறிவிப்பு: தெற்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில், நாளை காலை 11 முதல் மதியம் 1 மணி வரை நுகர்வோர் குறைதீர் முகாம் நடக்கிறது. இதில் சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், எல்லீஸ்நகர், மகாளிபட்டி, மகால், ஜான்சிராணி பூங்கா, ... |
தமிழகம் | திருட்டு, நகை பறிப்புகளை தடுக்ககுடியிருப்போர் நலச் சங்கம் ஆலோசனை | ஊமச்சிகுளம்:திருப்பாலை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் திருட்டு, வழிப்பறி தடுப்பது பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். பொருளாளர் மனோகர்வரவேற்றார். திருப்பாலை பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. பூட்டிய வீட்டை நோட்டமிடும் திருடர்கள் இரவில் த... |
தமிழகம் | ரூ.5.84 லட்சத்துக்கு கருப்பட்டி விற்பனை | கோபிசெட்டிபாளையம்: குன்னத்தூர் கூட்டுறவு சங்கத்தில் பனை மற்றும் தென்னை கருப்பட்டி ஐந்து லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பில் விற்றது. கோபி, சிறுவலூர், நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளில் பனை மற்றும் தென்னை கருப்பட்டிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை கோபி அருகே குன்னத்தூர் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடக்கும... |
தமிழகம் | தபால் துறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் | மதுரை:தென்மண்டல அளவிலான தபால் துறை ஓய்வூதியர்களுக்கான, ஓய்வூதிய குறைதீர் மன்றக்கூட்டம், ஜூலை 21ல் காலை 11 மணிக்கு, மதுரை தென் மண்டல அலுவலகத்தில் நடக்கிறது.தபால் துறை பணி ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்குவதில் குறையிருந்தால், எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். இரண்டு நகல் எடுத்து, ஓய்வூதிய ஆணை எண்ணை குறிப்பிட்டு, " அ... |
தமிழகம் | அவதி நேரம்அறிவிப்பு | மதுரை:மதுரை மின் வாரிய திருமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் மா.ரா. முருகேசன் அறிவிப்பு: கப்பலூர், தியாகராஜர் மில், உச்சபட்டி, தனக்கன்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லைநகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம், கரடிக்கல் ஆகிய பகுதிகளில் வரும் 18ம் தேதி காலை 9 முதல் மாலை 6 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவித்துள்ளார்.ஏற்கனவே, அ... |
தமிழகம் | தேர்வு முடிவு | மதுரை:மதுரை யாதவா கல்லூரி தேர்வு முடிவுகள் குறித்து கல்லூரித் தேர்வாணையர் பழனிச் சாமி கூறியதாவது:இளநிலை பி.ஏ., பி.எஸ்.சி., பி.சி.ஏ., பி.பி.ஏ., முதுநிலை எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம்., எம்.பில்., சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புக்களின் தேர்வு முடிவுகள் www.yadavacollegemdu.org என்ற இணையதளத்திலும், கல்லூரி அறிக்கைப் பலக... |
தமிழகம் | அரசு மருத்துவமனைக்கு ஜெனரேட்டர் வசதி | பெருந்துறை: பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு தமிழக அரசு ஜெனரேட்டர் வழங்கி உள்ளது. பெருந்துறை நகரில் 1955ல் சிறிய அரசு மருத்துவ ஆலோசனை மையம் ஆரம்பிக்கப்பட்டது. 1957ல் ஆறு படுக்கையுடன் ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. 1998ல் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தாலுகா தலைமை மருத்துவமனையான இங்கு பிரசவம், க... |
தமிழகம் | முகாசிபிடாரியூர் கோவில் கும்பாபிஷேகம் | சென்னிமலை: சென்னிமலை முகாசி பிடாரியூர் அருகே சரவணபுரி கருப்பணசாமி, முனியப்ப ஸ்வாமி கோவில் ம்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 11ம் தேதி பவானி கூடுதுறையில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. விநாயகர் பூஜை, தனபூஜை, அனுக்ஞை, மகாகணபதி ஹோமம், தீபாராதனை, கண் திறத்தல், கோபுர கலசங்கள் வைத்தல், அஷ்டபந்தன மருந்து ... |
தமிழகம் | அமராவதியில் மணல் கடத்திய இருவர் கைது | தாராபுரம்: தாராபுரம் அமராவதி ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் கடத்திய இருவரை கைது செய்து, லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். தாராபுரம் அமராவதி ஆற்றில் திருட்டுத்தனமாக லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. நேற்று காலை, தாராபுரம் - பொள்ளாச்சி ரோட்டில் எஸ்.ஐ., கோமதி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அதிவேகமாக வந்த லாரியை விரட்டிச்... |
இந்தியா | மாவோயிஸ்ட் தலைவர் கைது | கயா: பீகாரில், நக்சலைட்களின் முகாம்களை போலீசார் கண்டுபிடித்து வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களைக் கைப்பற்றினர். மேலும் மாவோயிஸ்ட் தலைவர் ஹிராலால் மகதோ கைது செய்யப்பட்டிருக்கிறார். பீகார் மாநிலத்தில் உள்ள லோவார் வனப்பகுதியில், நக்சலைட்களின் முகாம் செயல்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, துணை ராணுவப்படையினர்... |
தமிழகம் | தொழிலாளர்கள் தட்டுப்பாடால் தூத்துக்குடியில் உப்பள தொழில் பாதிப்பு | தூத்துக்குடி: போதிய தொழிலாளர்கள் கிடைக்காததால் தூத்துக்குடியில் உப்பள உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உப்பு தயாரிப்பில் தூத்துக்குடி மாவட்டமே முதன்மை வகிக்கிறது. இம்மாவட்டத்தில் தான் சுமார் 3000 உப்பளங்கள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் உப்பு இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ்,கொரியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்க... |
தமிழகம் | கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு: கணக்கில் வராத பணம் பறிமுதல் | கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஓழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் 43 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் தங்கராஜ், தலைமையில் துணை ஆய்வாளர் நாராயணன், இன்ஸ்பெகர்டர் ராஜூ ஆகியோர் கோவில்பட... |
தமிழகம் | வெண்டைக்காய் சாகுபடி அதிகரிப்பு | ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மூன்று மாதப்பயிரான வெண்டைக்காயை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கத்தரி, வெண்டை, பூசணி போன்ற காய்கறிப் பயிர்களை விவசாயிகள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது வெண்டைக்காய் சீஸனாக இருப்பதால் மாவட்டத்தின் பல இடங்களில் வெண்டைக்காய் பயிரிட்டுள்ளனர். கோபி... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.ஸி., சான்று வழங்கல் | ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., கல்வித் தகுதியை வேலைவாய்ப்புக்காக பதிவு செய்ய அந்தந்த பள்ளியிலேயே மாணவ, மாணவியர் நேற்று குவிந்தனர். ஈரோடு மாவட்டத்தில் 278 பள்ளியை சேர்ந்த 29 ஆயிரத்து 178 மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். மெட்ரிக் பாடப்பிரிவில் ஈரோடு மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தை பிடித்தது. ம... |
தமிழகம் | முத்துசாமியை வரவேற்க கட்சியினர்க்கு ராஜா அழைப்பு | ஈரோடு: அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வில் இணைந்த முத்துசாமியை வரவேற்க தி.மு.க.,வினர் தயாராகும்படி ஈரோடு எம்.எல்.ஏ., ராஜா கூறியுள்ளார். அவரது அறிக்கை: அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்த முத்துசாமி முதன் முறையாக சென்னையில் இருந்து ஈரோடு வருகிறார். நாளை மாலை 5 மணிக்கு "வெஸ்ட்கோஸ்ட்' ரயிலில் முத்துச்சாமி... |
தமிழகம் | ஐகோர்ட் கிளை வக்கீல்கள் 7வது நாளாக உண்ணாவிரதம் | மதுரை:தமிழை ஐகோர்ட் அலுவல் மொழியாக்க வலியுறுத்தி மதுரை ஐகோர்ட் கிளையில் நேற்று 7வதுநாளாக வக்கீல்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.வக்கீல் பகத்சிங் உட்பட ஆறு பேர் இந்த காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றும் காந்தி சிலை உட்பட பல இடங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டன. ஐகோர்ட் கிளை வளாகத்திலுள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகத்... |
தமிழகம் | கட்டுமான தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் | ஈரோடு: கட்டுமான நலவாரியத்தை சீர்படுத்த கோரி கட்டுமான சங்கம் சார்பில் ஈரோடு மாவட்ட கட்டுமான நல வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. வாரியத்தில் உறுப்பினராக்கும் தொழிலாளியை அலைக்கழிக்கும் கிராம நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் பெறும் முறையை கைவிடவேண்டும். மாவட்ட அலுவலகங்களில் தேவைக்கேற்ப நிரந்தரமாக ஊழியர்களை வேலைக்கு அம... |
தமிழகம் | உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்க நிகழ்ச்சிகள் | சென்னை:கோவையில், வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது. இதில், ஆய்வரங்க நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் பேசுகின்றனர்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு துவங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இதையடுத்து, மாநாட்டு ஏற்பாடுகள் உச்ச கட்டத்தை எட்டியுள்ளன. பல்வேறு ... |
தமிழகம் | நக்சல் பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு | ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில், நக்சல் ஆதிக்க பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கியது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 24 மாவட்டங்களில், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்கள், இடதுசாரி பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், இம்மாநிலத்தில் நக்சலைட்கள் நடத்திய தாக்குதல்களில், பொதுமக்கள் 3,50... |
தமிழகம் | கார்நெல் சாகுபடிக்கு தாமிரபரணி நீர் திறப்பு | திருநெல்வேலி: விவசாயத்திற்கு கன்னடியன் கால்வாய் அணைக்கட்டு திறக்கப்பட்டது. திருநெல் வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணையில் இருந்து வெளியேறும் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சிறிய அணைக்கட்டுகள் மூலம், கால்வாய்கள் வழியாக தண்ணீர் பிரித்து வழங்கப்படுகிறது. நடப்பு கார்சாகுபடிக்கு பாபநாசம் அணையை ஒட்டியுள்ள பாசன பகுதிகளுக்கு ஜூன் முத... |
தமிழகம் | பிளஸ் 2 தனித்தேர்வு மாணவர்களுக்கு 21,22ல் ஹால் டிக்கெட் | சென்னை: பிளஸ் 2 தனித்தேர்வு மாணவர்களுக்கு வரும் 21, 22ம் தேதிகளில் ஹால் டிக்கெட் வழங்கப்படுமென, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. வரும் 29ம் தேதி தொடங்கி ஜூலை 9ம் தேதி வரை நடக்கவுள்ள பிளஸ் 2 தனித்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, வரும் 21, 22ம் ஆகிய இரண்டு நாட்கள் ஹால் டிக்கெட் வினியோகிக்கப்படும். தாங்கள் பயி... |
தமிழகம் | தேசிய பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் சென்னையில் நாளை துவக்கம் | சென்னை: தேசிய பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் நாளை துவங்குகிறது. இந்திய பிரிட்ஜ் விளையாட்டு ஒன்றியமும், தமிழக பிரிட்ஜ் விளையாட்டு கழகமும் இணைந்து மாநிலங்களுக்கிடையேயான தேசிய பிரிட்ஜ் விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறது. நாளை துவங்கும் இந்த போட்டிகள், வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை ஆந்த... |
General | ஐ.நா., உயரதிகாரி இலங்கை பயணம் | நியூயார்க்:இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஐ.நா., உயரதிகாரி லின் பாஸ்கோ இலங்கை புறப்பட்டுச் சென்றார். இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த இறுதிக் கட்ட போருக்கு பின், தமிழர்களை மறு குடியமர்த்தும் பணி தற்போது அங்கு தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கான அரசியல் தீர்வு, மறு குடிய... |
இந்தியா | செம்மொழி மாநாடு: புதுவை பள்ளி, கல்லூரிகளுக்கு நான்கு நாள் விடுமுறை | புதுச்சேரி: கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நான்கு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாநாட்டுக்கான அழைப்பிதழை அமை... |
இந்தியா | மே.வங்கத்தில் என்கவுன்டர் : 8 நக்சலைட்டுகள் கொலை | கோல்கட்டா : மேற்குவங்க மாநிலம் மேற்கு மித்னாபூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் - நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 8 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் பெண்கள். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். |
தமிழகம் | விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு சம்பவம் : 8 பேர் விடுவிப்பு | விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சித்தணி அருகே ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை தமிழர் ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 3 நாட்களாக புறநகர் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந... |
இந்தியா | தென்மேற்கு பருவமழை தீவிரம் : கேரளா, குஜராத், மகாராஷ்டிராவில் கனமழை | புதுடில்லி : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழை பெய்கிறது. மும்பையில் பல நகரங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சியான், அந்தேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. புறநகர் ரயில் போக்குவரத்தும், விமான போக்குவரத்தும் மும்பையில் பாதிக்கப்பட்டது. க... |
இந்தியா | தானேயில் சுவர் இடிந்து விழுந்து 8 பேர் பலி | மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் இறந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் , தியானேஸ்வர் நகரில் இருக்கும் பிர்லா கம்பெனியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அருகில் இருந்த வீடுகள் மீது சுவர் விழுந்தது. இதில் 8 பேர் இறந்தனர். ... |
General | உலககோப்பை கால்பந்து : தெ.ஆப்ரிக்கா - உருகுவே இன்று மோதல் | ஜோகனஸ்பர்க் : தென்ஆப்ரிக்காவில் ஜோகனஸ்பர்க் நகரில் 19வது சர்வதேச கால்பந்து போட்டிகள் நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகளில், ஏ பிரிவு ஆட்டத்தில் இன்று இரவு 12 மணிக்கு தென் ஆப்ரிக்க அணி உருகுவே அணியை எதிர்கொள்கிறது. மாலை 5 மணிக்கு நடைபெறும் எச் பிரிவு போட்டியில் ஹோண்டூராஸ் - சிலி அணிகள் மோதுகின்றன. 7 மணிக்கு நடைபெறும... |
தமிழகம் | ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பு | சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் லைட் ஸ்வீட் ரக கச்சா எண்ணெய்யின் ஜூலை டெலிவரிக்கான விலை பேரல் ஒன்றுக்கு 16 சென்டுகள் அதிகரித்து 77.10 அமெரிக்க டாலராக இருந்தது. பிரண்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய்யின் ஆகஸ்ட் டெலிவரிக்கான விலை 35 சென்டுகள் அதிகரித்து 77.45 அ... |
இந்தியா | போபால் வழக்கு : பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகை ? | புதுடில்லி : போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிவாரணத் தொகை அளிக்கும் வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. போபால் விஷவாயு கசிவு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவைக் குழு, வரும் 18ம் தேதி டில்லியில் கூடி ஆலோசனை நடத்... |
தமிழகம் | குஜராத்தில் ஆண் - பெண் விகிதம் உயர்வு | வதோதரா : குஜராத்தில் ஆண் - பெண் விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது. 2008ம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயின் படி, 1000 ஆண்களுக்கு 898 பெண்கள் உள்ளனர். இதுதொடர்பாக மாநில அரசு வெளி்யிட்டுள்ள அறிக்கையின்படி, மத்திய அரசின் ரிஜிஸ்டிரார் ஜெனரல் அவர்களின் தலைமையில் ஆன்வல் சென்ட்ரல் ரிஜிஸ்டிரேஷன் சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வே முடிவுக... |
தமிழகம் | பொள்ளாச்சியில் கோயில் நகை கொள்ளை | பொள்ளாச்சி : பொள்ளாச்சி நெகமம் மாரியம்மன் கோயில் தர்மகர்தா வீட்டில் கோயில் நகை உள்பட 37 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நெகமம் மன்றம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மயில்சாமி. இவர் அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார். இவருக்கு மயிலாத்தாள் (45), என்ற மனைவியும், திலகவதி (21) என்ற மகளும், ஆனந்த்... |
தமிழகம் | ஸ்ரீவி., மலைப்பகுதியில் சிக்கியவரிடம் க்யூ., பிரிவு போலீஸ் விசாரணை | ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் சென்பகதோப்பு மலைப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்தவரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். முதல் கட்ட விசாரணையில் அவர் பெயர் முத்துசாமி என்பதும், ஊர் உசிலம்பட்டி என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. நக்சலைட்டு பயங்கரவா... |
தமிழகம் | திருச்சியில் 10ம் வகுப்பு மாணவர்கள் மார்க் ஷீட் கிடைத்தது ! | திருச்சி : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நேற்று முதல் மதிப்பெண் பட்டியல்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியது. திருச்சியில் எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள் 1,456 பேரின் மதிப்பெண் பட்டியல் காணாமல் போன சம்பவம், கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ச... |
தமிழகம் | சேலத்தில் அடி தடியில் ஈடுபட்ட மாநகராட்சி கவுன்சிலர் | சேலம் : சேலத்தில் முன்னாள் ராணுவ வீரரின் தந்தையை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். இவரது தந்தை தியாகராஜன். குடிநீர் இணைப்பு கேட்டு மாநகராட்சியில் விண்ணப்பித்திருந்தார். இதற்காக சேலம் மாநகராட்சி 29வது வார்டு கவுன... |
தமிழகம் | ஆத்தூரில் மரபணு குறைபாட்டால் அதிசய தோற்றத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி | ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் மரபணு குறைபாடு காரணமாக ரப்பர் பொம்மை போன்ற அதிசய தோற்றத்துடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்தது. ஆத்தூர் பைத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி. விவசாயியான இவர் ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரது பட்டியில் இருக்கும் ஆடு ஒன்றுக்கு இன்று காலையில் இறந்த நிலையில் ஒரு குட்டி பிறந்தது. அந்த ஆட... |
தமிழகம் | கேரள சிறையில் இருந்து தப்பிய 2 கைதிகள் குன்னூரில் கைது | ஊட்டி : கேரள மாநிலம் கண்ணூர் சிறையில் இருந்து 10 கைதிகள் நேற்று முன் தினம் தப்பினர். அவர்களில் 2 பேரை குன்னூரில் இருந்து கேரள போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக போலீசாருக்கு எவ்வித தகவலும் கொடுக்காமல் கேரள போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். |
தமிழகம் | சேலத்தில் நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : ஜெ., | சென்னை : சேலத்தில் நாளை அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம், கடுமையான மின் வெட்டு, நூல் விலை உயர்வு ஆகியவற்றிற்குக் காரணமான தி.மு.க. அரசைக் கண்டித்தும் , பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வலியுற... |
தமிழகம் | கோவையில் வக்கீல்கள் உண்ணாவிரதம் | கோவை : தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவையில் வக்கீல்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஆனந்த் ராஜ் என்ற வக்கீல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக 15 வக்கீல்கள் இன்று ஒரு நாள் மட்டும் உண்ணாவிரதம் இருக்கின்றனர். |
தமிழகம் | விழுப்புரம் போலீசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு | சென்னை : விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு விவகாரத்தில் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட 8 பேரும் இன்று காலையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டவர்கள் குறித்து நாளைக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சென்னை ஐகோர்ட் விழுப்புரம் போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது. |
தமிழகம் | தங்கம் விலை பவுனுக்கு ரூபாய் 40 அதிகரிப்பு | சென்னை : தங்கம் விலை பவுனுக்கு ரூபாய் 40 அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூபாய் ஆயிரத்து 742 க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ. 40 அதிகரித்து ஒரு பவுன் தங்கம் ரூ. 13 ஆயிரத்து 936க்கு விற்கப்படுகிறது. |
தமிழகம் | அத்வானி ராய்ப்பூர் பயணம் | ராய்ப்பூர் : பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியும், பா.ஜ., முன்னாள் முன்னணி தலைவருமான உமா பாரதியும் சட்டீஸ்கர் தலைநகர் ராய்ப்பூருக்கு செல்கின்றனர். |
தமிழகம் | கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? விசாரணை குழு அமைப்பு | ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பத்தாம் வகுப்பு மாணவி, பள்ளி கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று விசாரிக்க கல்வித்துறை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு மாண... |
தமிழகம் | பள்ளி மாணவி குழந்தை பெற்ற விவகாரம் : விசாரணை குழு அமைப்பு | ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பள்ளி மாணவி, பள்ளிகூடத்திலேயே குழந்தை பெற்றெடுத்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரி ஒரு விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளார். ஹெப்சிபா பியூலா ஜெயராணி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழு இன்று காலை, சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தியது. பள்ளி தலைமை ஆசிரியர்... |
தமிழகம் | அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் தேர் மீது லாரி மோதி விபத்து | அவிநாசி : அவிநாசி லிங்கஸ்வேரர் கோயில் தேர் மீது லாரி மோதியது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் தேர் மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியதில் தேரின் பின்புற சக்கரத்தில் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக சாலைகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் தேரை சுற்றி கட்டப்பட்டிருந்த ஷெட் அக... |
General | ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்தியா வெற்றி | கொழும்பு : கொழும்பு தம்புலா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2 வது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 34.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 30.4 ஓவரில் 4 விக்க... |
தமிழகம் | ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஸ்டிரைக் : தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை | மதுரை : தென் மாநிலங்கள் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூட்டம் மதுரையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் இன்னும் 45 நாட்களுக்குள் சுங்க வரியை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆகஸ்ட் 2ம் தேதி முதல் காலவரையின்றி ஸ்டிரைக் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தென் மாநில லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் நல... |
தமிழகம் | சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் ரெய்டு | சிவகங்கை : சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு. வாரச் சந்தை கட்டண வசூலிப்பதில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்படுகிறது. |
இந்தியா | பா.ஜ., வில் மீண்டும் உமாபாரதி ! | புதுடில்லி : பா.ஜ., கட்சியில் இருந்து வெளியேறிய உமா பாரதி மீண்டும் அக்கட்சியில் சேரும் சூழல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ., வில் இருந்து வெளியேறிய உமாபாரதி பாரதிய ஜனசக்தி என்ற கட்சியை தொடங்கினார். கடந்த மார்ச் மாதம் அவர் கட்சி தலைமை பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவர் பா.ஜ., வில் சேர திட்டமிட்டுள்ளதாக டில்லி அரசியல் வட்... |
இந்தியா | பா.ஜ., வில் மீண்டும் உமாபாரதி ! | புதுடில்லி : பா.ஜ., கட்சியில் இருந்து வெளியேறிய உமா பாரதி மீண்டும் அக்கட்சியில் சேரும் சூழல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ., வில் இருந்து வெளியேறிய உமாபாரதி பாரதிய ஜனசக்தி என்ற கட்சியை தொடங்கினார். கடந்த மார்ச் மாதம் அவர் கட்சி தலைமை பதவியை ராஜினாமா செய்தார். அவர் பா.ஜ., வில் சேர திட்டமிட்டுள்ளதாக டில்லி அரசியல் வட்டாரத்தில் பர... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டுப் பணிகள் : ஸ்டாலின் ஆய்வு | கோவை : உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிகளை 2 வது நாளாக துணை முதல்வர் ஸ்டாலின் இன்றும் ஆய்வு செய்தார். மாநாட்டுப் பணிகளை விரைவில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் வலியுறுத்தினார். |
தமிழகம் | மரக்கன்று நடுவிழா | மதுரை: மதுரை பி.எஸ்.ஒய்., மெட்ரிக் பள்ளி சுற்றுச்சூழல் விழாவில், கல்வி நிறுவன தலைவர் பாண்டியன் மரக்கன்றுகளை வழங்கினார். |
தமிழகம் | பட்டமளிப்பு விழா | மதுரை: விக்ரம் கல்வியியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் அழகப்பன் பட்டமளித்தார். அருகில் கல்லூரி முதல்வர் பிரேமலதா, பொறியாளர் பாக்கியம், தாளாளர் சீனிவாசன், இயக்குனர் ராஜ் சந்தோஷ். |
தமிழகம் | சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து :4 பேர் பலி | சிவகாசி : சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் பலியாகினர். 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.சிவகாசி - எம்.புதுப்பட்டி செல்லும் மெயின் ரோடு வடபட்டியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பி.ஆர்.சி., பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். மாலை 4.30 மணிக்கு... |
தமிழகம் | இசை நிகழ்ச்சி | மதுரை: மதுரை சத்குரு சங்கீத சமாஜம் சார்பில் நடந்த இசை நிகழ்ச்சியில், பாடகி ரஞ்சனி சந்தான கோபாலன் பைரவி ராகத்தில் பாடி இசை ரசிகர்களை மகிழவைத்தார். பிரபல சங்கீத வித்வான் நெய்வேலி சந்தான கோபாலனின் மகள் ரஞ்சனி. தந்தையிடம் இசை பயின்று முன்னணி சபாக்களில் வலம் வரும் இளம் கலைஞர். சுத்தமான உச்சரிப்பு, நல்ல லயபாவனை இவரது கச்சேரி... |
தமிழகம் | பாராட்டு | மதுரை: மாநில ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற மதுரை டால்பின் பள்ளி மாணவர் அரவிந்த் சிதம்பரத்தை தாளாளர் ராமனாதன், முதல்வர் பத்மா பாராட்டினார். |
தமிழகம் | நூல் வெளியீடு | மதுரை: பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதல்வர் கண்ணன் எழுதிய சாய்பாபா நூலை, முன்னாள் எம்.பி., ராம்பாபு வெளியிட, கோயில் கமிட்டி தலைவர் பிரபு பெற்றுக் கொண்டார். |
தமிழகம் | பட்டமளிப்பு விழா | மதுரை: மதுரை சாயனார்புரம் எ.கே.ஆர்.சவுராஷ்டிரா ஆசிரியர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. சவுராஷ்டிரா வித்யா ரக்ஷக் ஏ.கே.ஆர்.கல்வி நிறுவன செயலாளர் ஏ.கே.ராமமூர்த்தி தலைமை வகித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்க கல்வியியல் துறை பேராசிரியர் முத்துமாணிக்கம் பட்டம் வழங்கினார். கல்லூரித் தலைவர் சங்கரன்... |
தமிழகம் | விழிப்புணர்வு ஊர்வலம் | மதுரை: மதுரை சைக்கிள் வியாபாரிகள் சங்கம் நடத்திய விழிப்புணர்வு ஊர்வலத்தை, போலீஸ் உதவி கமிஷனர் குமாரவேல் துவக்கி வைத்தார். |
தமிழகம் | சட்ட விழிப்புணர்வு பயிற்சி | மதுரை: மதுரை மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், மத்திய அரசின் தேசிய பெண்கள் ஆணையத்தின் நிதியுதவியுடன் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. மகளிர் நுகர்வோர்பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கிரிஜா வரவேற்றார். செயலாளர் பாக்கியலட்சுமி தலைமை வகித்தார். பயிற்சியில், பெண்களுக்கான அடிப்படைச் சட்டம், குடும... |
தமிழகம் | நோட்டு, புத்தகம் வழங்கும் விழா | மதுரை: மதுரையில் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் நாகமலை பாலர் இல்லத்தில் இலவச நோட்டு, புத்தகம் வழங்கும் விழா நடந்தது. மன்ற தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரன் வரவேற்றார். தியாக தீபம் பாலு முன்னிலை வகித்தார். அல்ட்ரா பெண்கள் பொறியியல் கல்லூரி முதல்வர் கண்ணன் நோட்டு புத்தகங்களை வழங்கினார். மன்... |
தமிழகம் | ஆண்டு நிறைவு விழா | மதுரை: மதுரை உயர் மறைமாவட்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் 150வது ஆண்டு நிறைவு விழா புதூரில் நடந்தது. குருகுல முதல்வர் ஜோசப்செல்வராஜ் முன்னிலை வகித்தார். நொபிலி இயக்குனர் சேவியர்ராஜ் வரவேற்றார். மதுரை உயர் மறைமாவட்ட பிஷப் பீட்டர் பெர்னாண்டோ தலைமை வகித்து பேசுகையில், ""பாதிரியார் ஜான்மரிய வியான்னி மறைந்த ஆண்டை, பாதிரியார்கள் ஆண... |
தமிழகம் | வாழ்த்து | சென்னை: மனிதநேய ஐ.ஏ.எஸ்., அகடமியில் பயின்று, 2009ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் சிலர், தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவை சந்திந்து வாழ்த்து பெற்றனர். உடன், மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, துணைத் தலைவர் வெற்றி துரைசாமி, பயிற்சி இயக்குனர் வாவூசி, அபுல்ஹாசன் ஐ.ஏ.எஸ்., ஒருங்கிணைப்பாளர் கா... |
தமிழகம் | கோபி அருகே வெறிநாய் கடித்து 5 பேர் காயம் | கோபிசெட்டிபாளையம் : கோபிசெட்டிபாளையம் அருகே ஜெ எஸ் நகரில் வெறிநாய் ஒன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை கடித்தது. இதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். |
தமிழகம் | விமான சேவை அறிமுகம் | சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கும்,சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கும் சில்க் ஏர் விமானம் புதிதாக விடப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை அந்நிறுவன தலைமை நிர்வாகி சின் யு செங் சென்னையில் வெளியிட்டார்,அருகில் நிறுவன அதிகாரிகள் அகமத் ஷீகரி,கேல்வின் நியங். |
தமிழகம் | உலக முதியோர் பாதுகாப்பு விழிப்புணர்வு நாள் விழா | சென்னை: ஹெல்ப்ஏஜ் இந்தியா சார்பில் சென்னையில் நடந்த உலக முதியோர் பாதுகாப்பு விழிப்புணர்வு நாள் விழாவில் கேன்சரால் பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு உதவ ஹெல்ப்ஏஜ் இந்தியா சார்பில் ரூ 10லட்சத்தி 22ஆயிரத்திற்கான காசோலையே போலீஸ் இணை கமிஷனர் ரவிகுமார் அடையார் கேன்சர் மருத்துவமனை தலைவர் சாந்தாவிடம் வழங்கினார். |
தமிழகம் | ரயில் நிலையத்தில் இளைஞர் கொலை : 3 பேர் கோர்டில் சரண் | சென்னை : சென்னை அபிராமபுரம் அருகே ரயில் நிலையத்தில் சரவணன் என்பவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ராஜா, பால்சன்.ராஜூ ஆகியோர் ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் சரணடைந்தனர். |
தமிழகம் | செம்மொழி மாநாட்டுக்கு மிரட்டல் | தஞ்சாவூர் : தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை மற்றும் கோவையில் நடக்கவுள்ள செம்மொழி மாநாட்டுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.தஞ்சை தமிழ்ப் பல்கலை பதிவாளர் சரவணனுக்கு நேற்று ஒரு கடிதம் வந்தது. அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ள விவரம் வருமாறு: நாம் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறோம். அதை நினைத்து பார்க்கும்போது எங்களது... |
தமிழகம் | சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் | சென்னை : ஐகோர்ட்டில் தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் 6 பேர் நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். |
தமிழகம் | திருப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் ரெய்டு | திருப்பூர் : திருப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். |
General | உலக கோப்பை கால்பந்து : சிலி வெற்றி | நெல்ஸ்புரூட் : தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் எச் பிரில் இடம் பெற்றிருக்கும் ஹாண்டுராஸ் மற்றும் சிலி அணிகள் மோதின இந்த போட்டியில் சிலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஹாண்டுராஸ் அணியை வீழ்த்தியது. |
தமிழகம் | பணத்திற்காக கடத்தப்பட்டவரை போலீசார் மீட்டனர்: 4 பேர் கைது | ராஜபாளையம் : ராஜபாளையத்தில் பணத்திற்காக கடத்தப்பட்டவரை போலீசார் மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.ராஜபாளையம் அருகே ஜமீன்கொல்லங்கொண்டானை சேர்ந்தவர் முருகன். இவர் ராஜபாளையம் மங்காபுரம் தெருவை சேர்ந்த காளிராஜிடம்(28) போலீஸ் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வாங்கி ம... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.