category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
செம்மொழி மாநாடு குறித்து அவதூறு பரப்பிய இருவர் கைது
திருநெல்வேலி : கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு குறித்து, மொபைல் போன் குறுந்தகவல் மூலம் அவதூறு பரப்பிய இருவரை, நெல்லையில் போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் சங்கரசுப்பிரமணியன் மகன் முருகன்(47). புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பாளரான இவர், கோவையில் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதிவரை நடக்கவு...
தமிழகம்
தேர்தல் ஆயத்த மாநாடு ஜூலை 6ல் நடக்கிறது
தேனி : அனைத்து மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கும் தேர்தல் ஆயத்த மாநாடு ஜூலை 6ல் சென்னையில் நடக்கிறது.தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் 2010ல் சுருக்க திருத்தப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதுபார்க்கப்பட்டு 100 சதவீதம் முழு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.புதிதாக சேர்க்கப...
General
ஆஸ்திரேலியாவில் வயலார் ரவி
கான்பரா: வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி, 3 நாள் பயணமாக ஆஸ்திரேலியா வந்துள்ளார். ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித், குடியேற்றத்துறை அமைச்சர் செனட்டர் ஈவான்ஸ் ஆகியோரை சந்திக்கும் வயலார் ரவி, ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்களின் விசா நிலை குறித்து ஆலோசனை நடத்துகிறார். சிட்...
தமிழகம்
டி.ஜி.பி.,யானார் திலகவதி
சென்னை : கூடுதல் டி.ஜி.பி., திலகவதிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலர் ஞானதேசிகன் பிறப்பித்துள்ள உத்தரவு:பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி.,யாக பணியாற்றி வரும் திலகவதிக்கு டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் ...
தமிழகம்
ஆத்தூர் அருகே சோலார் பேனல் திருட்டு
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் மரவள்ளி ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க பயன்படும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சோலார் பேனல் பொருத்தப்பட்டிருந்தது. இதனை கடந்த 10ம் தேதி இரவு மர்மநபர்கள் சிலர் இதனை திருடி சென்ற...
General
உலக கோப்பை கால்பந்து : ஸ்பெயின் தோல்வி
டர்பன் : தென் ஆப்பரிக்காவில்நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் சுற்றில் எச் பிரிவில் இடம்பெற்றிருக்கும் சுவிட்சர்லாந்து அணியும் ஸ்பெயின் அணியும் மோதின. இந்த போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சுவிட்சர்லாந்தின் பெர்ணான்டஸ் ஒரு கோல் அடித்து அணி வெற்றி பெற உதவினார்.
தமிழகம்
ஜெ.,வுடன் எம்.பி.,க்கள் சந்திப்பு
சென்னை : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை முன்னாள் அமைச்சர், எம்.பி.,க்கள் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை, பார்லிமென்ட் பொது கணக்குக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தம்பிதுரை, மதிப்பீட்டுக்குழு <உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட செ...
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள அரசு ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்பு
சென்னை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பும் அரசு ஊழியர்களுக்கு, சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம் என, முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோவையில் வரும் 23 முதல் 27ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள, தங்...
இந்தியா
மத்திய அமைச்சருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
புதுடில்லி : ராஜஸ்தான் பா.ஜ., எம்.எல்.ஏ., தொடர்ந்த வழக்கில், மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் சி.பி.ஜோஷி மற்றும் தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ல் ராஜஸ்தானில் நடந்த சட்டசபைத் தேர்தலின் போது, நாதுபுரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சி.பி.ஜோஷியும், பா.ஜ., சார்பில் கல்...
தமிழகம்
நிலக்கரி சாம்பலை இலவசமாக வழங்க கட்டணமா? எதிர்த்த மனு மீது ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு
சென்னை : நிலக்கரி சாம்பலை பயன்படுத்தி, செங்கல் தயாரிப்பவர்களிடம் இருந்து சேவை கட்டணம் விதிப்பதற்கு தடை விதிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை முடிந்து, தீர்ப்பு தள்ளி வைக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு நிலக்கரி சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலர் துளசிராமன் தாக்கல் ச...
தமிழகம்
சென்னை மாணவருக்கு டிகிரி சர்டிபிகேட் : திருச்சி பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு
மதுரை : சென்னையைச் சேர்ந்த மாணவருக்கு டிகிரி சர்டிபிகேட் வழங்குவது குறித்து, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. சென்னையைச் சேர்ந்த வெங்கட்ராமன் தாக்கல் செய்த ரிட் மனு: நான் பாரதிதாசன் பல்கலைக்குட்பட்ட அங்காளம்மன் பொறியியல் கல்லூரியில், 2003ல் பி.இ., முடித்தேன். இறுதித் தேர்வில் வெற்றி பெற்ற...
இந்தியா
பறவை மோதியதால் விமானம் தரையிறக்கம்
இந்தூர் : மும்பையிலிருந்து டில்லி சென்ற ஏர்-இந்தியா விமானத்தில் பறவை மோதியதால், இந்தூரில் விமானம் தரையிறக்கப்பட்டது.ஏர்-இந்தியா விமானம் மும்பையிலிருந்து 140 பயணிகளுடன் இந்தூர், போபால் வழியாக டில்லி புறப்பட்டது. மும்பையிலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியது. இதனால், விமானம் அவசரமாக மத்திய பிரதேசத்த...
இந்தியா
அமெரிக்காவில் ரஞ்சிதா தலைமறைவு: நித்யானந்தா ஆசிரமம் மீது வழக்கு
பெங்களூரு : நித்யானந்தா வழக்கில் தேடப்பட்டு வந்த நடிகை ரஞ்சிதா, போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு, அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றுள்ளார். நித்யானந்தா நடத்தும் தபசு பூஜைக்கு ரேஷன் மண்ணெண்ணெய் பயன்படுத்தியதால், ஆசிரமத்தில் ரெய்டு நடத்தப்பட்டு, 180 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து,ஆசிரமம் மீது வழ...
இந்தியா
மும்பையில் கனமழைக்கு 9 பேர் பலி : சுவர் இடிந்து விழுந்து பரிதாபம்
தானே : மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, சுவர்கள் இடிந்து விழுந்து, ஆறு பெண்கள் உட்பட ஒன்பது பேர் பலியாயினர்; நான்கு பேர் படுகாயமடைந்தனர். மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி, சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், மும்பையிலும், அதையொட்டிய பக...
இந்தியா
பாதுகாப்பு படையினருடன் சண்டை : மாவோயிஸ்டுகள் எட்டு பேர் பலி
சல்போனி(மே.வங்கம்) : மேற்கு வங்கத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், மூன்று பெண்கள் உள்ளிட்ட எட்டு மாவோயிஸ்டுகள் பலியாயினர். மேற்கு வங்க மாநிலம், மேற்கு மிட்னாபூர் மாவட்டம் ரஞ்சா காட்டுப் பகுதியில், பாதுகாப்புப் படை வீரர்கள் மாவோயிஸ்ட் ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன...
இந்தியா
பறவை மோதியதால் விமானம் தரையிறக்கம்
இந்தூர் : மும்பையிலிருந்து டில்லி சென்ற ஏர்-இந்தியா விமானத்தில் பறவை மோதியதால், இந்தூரில் விமானம் தரையிறக்கப்பட்டது. ஏர்-இந்தியா விமானம் நேற்று மும்பையிலிருந்து 140 பயணிகளுடன் இந்தூர், போபால் வழியாக டில்லி புறப்பட்டது. மும்பையிலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியது. இதனால், விமானம் அவசரமாக மத்திய ப...
General
ஆயுத பேர வழக்கில் ஆஜராக பொன்சேகாவுக்கு உத்தரவு
கொழும்பு : ஆயுத பேர வழக்கில் வரும் 23ம் தேதி ஆஜராகும்படி இலங்கை முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகாவுக்கு கொழும்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஆண்டு புலிகளுக்கும், அரசு படைகளுக்கும் இடையே இறுதிக் கட்ட சண்டை நடந்தபோது, வெளிநாட்டிலிருந்து அரசு படைகளுக்காக ஆயுதங்கள் வாங்கப்பட்டன. அப்போது, ராணுவத் தளபதியாக இருந்தவர...
தமிழகம்
தண்டவாளம் தகர்த்த பிறகு ரயில் கடந்ததா? சாத்தியமில்லை என்கிறது ரயில்வே தரப்பு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி கிராமத்தில் சென்னை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் கடப்பதற்கு முன்னதாக தண்டவாளம் தகர்த்ததாகக் கூறும் கருத்துக்களுக்கு ரயில்வேத் துறையினர் பலமான மறுப்பு தெரிவிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே கடந்த 12ம் தேதி ரயில் பாதை வெடி வைத்த...
தமிழகம்
இலங்கைக்கு ஜப்பான் நிதியுதவி
கொழும்பு : இலங்கையில் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஜப்பான் நிதியுதவி அளிக்க உள்ளது. ஜப்பானிய தூதர் யாஷுஷி அகாஷி நேற்று, கொழும்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பீரிசை சந்தித்து பேசினார். இலங்கையில் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஜப்பான் 3,...
General
இலங்கைக்கு ஜப்பான் நிதியுதவி
கொழும்பு : இலங்கையில் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஜப்பான் நிதியுதவி அளிக்க உள்ளது.ஜப்பானிய தூதர் யாஷுஷி அகாஷி , கொழும்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பீரிசை சந்தித்து பேசினார்.இலங்கையில் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஜப்பான் 3,900 கோடி...
தமிழகம்
ரயில் தண்டவாளம் தகர்ப்பு வழக்கில் விசாரிக்கப்பட்டவர்கள் விடுவிப்பு
விழுப்புரம் : சித்தணி அருகே ரயில் தண்டவாளம் தகர்ப்பு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கைத் தமிழர் ஆதரவு அமைப்பினர் எட்டு பேரை போலீசார் நேற்று முன்தினம் இரவு விடுவித்தனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே கடந்த 12ம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் சிலர் ரயில்வே தண்டாவளத்தை வெடி குண்டு வைத...
தமிழகம்
செம்மொழி மாநாட்டுக்கு மிரட்டல்
தஞ்சாவூர் : தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை மற்றும் கோவையில் நடக்கவுள்ள செம்மொழி மாநாட்டுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலை பதிவாளர் சரவணனுக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் வந்தது. அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ள விவரம் வருமாறு: எச்சரிக்கை: நாம் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறோம். அதை நினைத்து...
தமிழகம்
மனித உருவில் ஆட்டுக்குட்டி காண மக்கள் கூட்டம்
ஆத்தூர் : ஆத்தூர் அருகே, மனித உருவில் இறந்தே பிறந்த ஆட்டுக்குட்டியை ஏராளமானோர் பார்த்து வியந்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி பைத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். 50க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நிறைமாத சினையாக இருந்த ஆடு, நேற்று அதிகாலை 5 மணியளவில் கடும் சிரமத்துடன் குட்டியை ஈன்றது. பிற...
தமிழகம்
இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 21பேர் கைது
மண்டபம் : இந்திய கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்த, இலங்கை மீனவர்கள் 21 பேரை இந்திய கடலோர காவல் படையினர் பிடித்தனர். இன்று அவர்கள் மண்டபம் கொண்டு வரப்படுகின்றனர். சமீபகாலமாக, இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து இலங்கை மீனவர்கள், மீன்பிடிப்பதை வாடிக்கையாகி வருகிறது. இந்திய மீனவர்கள், அந்நாட்டு எல்லைக்குள் சென்றா...
தமிழகம்
பணத்திற்காக கடத்தப்பட்டவரை போலீசார் மீட்டனர்: 4 பேர் கைது
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் பணத்திற்காக கடத்தப்பட்டவரை போலீசார் மீட்டு, நான்கு பேரை கைது செய்தனர். ராஜபாளையம் அருகே, ஜமீன்கொல்லங்கொண்டானை சேர்ந்தவர் முருகன். இவர் ராஜபாளையம் மங்காபுரம் தெருவை சேர்ந்த காளிராஜிடம்(28) போலீஸ் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வாங்கி மோசடி செய்தார். காளிராஜ் புக...
தமிழகம்
கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி : ராமநாதபுரம் கல்வி அதிகாரி விசாரணை
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பள்ளி கழிவறையில், 10ம் வகுப்பு மாணவி ஒருவர், பெண் குழந்தை பெற்றது குறித்து விசாரணை நடத்த, மாவட்ட கல்வித் துறை அதிகாரி தலைமையில், விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி சுரிதா(மாணவி நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது). ...
தமிழகம்
கேரள சிறையில் இருந்து தப்பி குன்னூரில் பதுங்கிய இருவர் கைது
குன்னூர் : கேரள சிறையில் இருந்து தப்பி, குன்னூர் வெலிங்டன் அருகே பதுங்கியிருந்த குற்றவாளிகள் இருவரை, அம்மாநில போலீசார் நேற்று பிடித்துச் சென்றனர். அவர்கள் பிடிபட்ட இடம், வெலிங்டன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 100 மீ., தூரத்தில் மட்டுமே இருந்தது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரேப்பர் ஜெயின் எ...
தமிழகம்
வருஷநாடு மலையில் வைரக்கல் இருப்பதாக ஏமாற்றி மோசடி : ஊராட்சி தலைவர் மீது வழக்கு
தேனி : வருஷநாடு மலையில் வைரக்கல்-நாகரத்தினக்கல் இருப்பதாகக் கூறி கிராம மக்களிடம் பல கோடி ரூபாய் நகை-பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், ஊராட்சி தலைவர் உட்பட மேலும் எட்டு பேரை தேடுகின்றனர். மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, துள்ளுக்குட்டி நாயக்கனூரை சேர்ந்தவர் கிருஷ்ணன்(60). ஒன்றரை ஆண்ட...
தமிழகம்
தீப்பெட்டி ஆலை அதிபர் நடுரோட்டில் படுகொலை
தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே நேற்று மாலை, பைக்கில் சென்ற தீப்பெட்டி ஆலை அதிபர், நடுரோட்டில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கோவில்பட்டி, ஓ.சரவணபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(38).கட்டாலங்குளத்தில் சிறிய தீப்பெட்டி ஆலை நடத்தி வந்தார். இவர், நேற்று மாலை 5.30 மணியளவில் கட்டாலங்குளம் மெயின் ரோட்டில்...
தமிழகம்
மதுரையில் தொடரும் வக்கீல்கள் உண்ணாவிரதம்
மதுரை : ஐகோர்ட்டில் தமிழை வழக்காடும் மொழியாக்க கோரி, மதுரையில் வக்கீல்கள் நேற்று எட்டாவது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். நாளை வரை போராட்டத்தை தொடர முடிவு செய்தனர். வக்கீல் பகத்சிங் உட்பட ஆறு பேர், மதுரை ஐகோர்ட் கிளையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று எட்டாவது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. நேற்று உண்ணாவ...
தமிழகம்
கொலையாளி சகோதரர்களின் வீடுகளுக்கு தீ வைப்பு
தூத்துக்குடி : திருச்செந்தூர் அடுத்த காயல்பட்டணம், தேங்காய் பண்டகசாலை பகுதியைச் சேர்ந்தவர் உதயசூரியன்(26). இவரது தங்கை, கண்ணகி குளித்ததை ஆறுமுகநேரி செல்வம், எட்டிப்பார்த்து உள்ளார். இதனால் உதயசூரியன், செல்வத்தை கண்டித்து உள்ளார். இதில், ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, சாகுபுரம் பஸ் ஸ்டாப்பில் நேற்று முன்தினம் மாலையில் நின...
தமிழகம்
விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடி : தூத்துக்குடி, லூர்தம்மாள்புரம் மீனவர் டைட்டஸ்(35). நேற்று முன்தினம் சகமீனவர்களோடு மீன்பிடிக்கச்சென்ற இவர், தூத்துக்குடி அருகே நடுக்கடலில் விசைப்படகில் ஏற்பட்ட விபத்து காரணமாக இறந்தார். இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்குச் செல்லவில்லை. 250க்கும் மேற்பட்ட ...
தமிழகம்
மினிபஸ் - பைக் மோதல்: பலி 1
தூத்துக்குடி : தூத்துக்குடியில் பைக் மீது, மினிபஸ் மோதிய விபத்தில், தனியார் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் பலியானார். தூத்துக்குடி, பண்டாரம்பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(28). தனியார் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளரான இவர், நேற்று மதியம் இரண்டு மணியளவில் உறவினர் வசந்தாவுடன், பைக்கில் பண்டாரம் பட்டியிலிருந்து தூத்துக் குடி வந்த...
தமிழகம்
கணவரின் குடிப்பழக்கம் : மனைவி தற்கொலை
நாகர்கோவில் : கணவரின் தீராத குடிப்பழக்கத்தால் மனமுடைந்த இரண்டு குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்தார். கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே ஹெலன் காலணியை சேர்ந்தவர் சகாயகிளாடிஸ். இவரது மனைவி மெர்சி பெர்சித் (33). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மீன் பிடி தொழிலாளியான சகாய கிளாடிசுக்கு தீராத குடிப்பழக்க...
தமிழகம்
குத்தகை பாக்கி : மத்திய அதிகாரக்குழு ஆய்வு
கொடைக்கானல் : வனத்துறைக்கு செலுத்த வேண்டிய குத்தகை பாக்கி விவகாரம் குறித்து, மத்திய குழு, டி.எப்.ஓ., ஆய்வு செய்தனர். கொடைக்கானலில் நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமையான கோல்ப் கிளப் உள்ளது. இந்த கிளப் உறுப்பினர்கள் விளையாடுவதற்காக,வனத்துறைக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து, மைதானமாக்கி விளையாடி வருகின்றனர்.பல ஆண்டுகளாக...
தமிழகம்
மரங்கள் கடத்தப்படுவதை தடுக்க மர அறுவை ஆலையில் ஆய்வு
ராமநாதபுரம் : தென்மாவட்ட வனப்பகுதியின் மரங்கள் கடத்தப்படுவதை தடுக்க மர அறுவை மில்களில் ஆய்வு நடந்து வருகிறது. தென்மாவட்டத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் வனப்பகுதிகள் நிறைய உள்ளன. காடுகளில் உள்ள அடர்த்தியை பயன்படுத்தி தொடர்ந்து அங்குள்ள மரங்கள் கடத்தப்படுகின்றன. புவி வெப்பமயமாகி வரும் ...
தமிழகம்
கைவிலங்குடன் தப்பிய கைதி மீண்டும் சிக்கினார்
நாகர்கோவில் : நாகர்கோவிலில் கைவிலங்குடன் தப்பி ஒடிய கைதி மீண்டும் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி தெற்கு குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் என்ற ஞானசேகர். இவரை திருட்டு வழக்கில் பணக்குடி போலீசார் கைது செய்தனர். ஒரு வழக்கில் கைதி ஒருவரை அடையாளம் காட்டுவதற்காக கோர்ட் உத்தரவு படி அவரை, போலீசார் ந...
தமிழகம்
மாயமான அரசு பள்ளி ஆசிரியர் உடல் கண்டெடுப்பு
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே, காணாமல்போன அரசு பள்ளி ஆசிரியரின் உடல் 13 நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் கிராமத்தைச்சேர்ந்தவர் வெங்கடேசன்(45). விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த, பாதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர...
இந்தியா
செலவை சமாளிக்க முடியவில்லை கர்நாடகா எம்.எல்.ஏ.,க்கள் புலம்பல்
பெங்களூரு : கர்நாடகாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், தற்போதுள்ள சம்பளத்தை வைத்து, செலவுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என, புலம்பி வருகின்றனர். போக்குவரத்து மற்றும் தினச் செலவுகளுக்கான உதவித் தொகையை அதிகரித்துத் தர வேண்டும் என்று, போர்க்கொடி தூக்கியுள்ளனர். கர்நாடகாவில் உள்ள சில எம்.எல்.ஏ.,க்கள், அரசுக்கு எதிராக திடீரென போ...
இந்தியா
தமிழகத்தில் 300 இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு சிக்கல் : தொழில் நுட்ப கவுன்சில் அனுமதி இல்லை
சென்னை :ஏ.ஐ.சி.டி.இ.,யின் புதிய விதிமுறைகள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், 300க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கவில்லை. அக்கல்லூரிகளில் ஆய்வுப் பணிகள் கூட மேற்கொள்ளவில்லை. இதனால், அக்கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சிக்கலாகி உள்ளது. தம...
தமிழகம்
தண்டவாளம் தகர்த்த பிறகு ரயில் கடந்ததா?ரயில்வே புதுவிளக்கம்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி கிராமத்தில் சென்னை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் கடப்பதற்கு முன்னதாக தண்டவாளம் தகர்த்ததாகக் கூறும் கருத்துக்களுக்கு ரயில்வேத் துறையினர் பலமான மறுப்பு தெரிவிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே கடந்த 12ம் தேதி ரயில் பாதை வெடி வைத்த...
தமிழகம்
நடப்பது செம்மொழி மாநாடு; மது எதற்கு?
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது மதுக்கடைகள் செயல்படுவதால், சாலை விபத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் நேரிடும் அபாயம் உள்ளது. மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிமாவட்ட மக்களின் பாதுகாப்பு கருதி, "டாஸ்மாக்' மதுக்கடைகளை ஐந்து நாட்கள் மூட, தமிழக அரசு உத்தரவிட வேண்டும். கோவையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, வரும் ...
தமிழகம்
சிக்கனமா என்ன விலை ?மின்தட்டுப்பாட்டிற்கு அரசு ஊழியரும் காரணம்
சிவகங்கை : மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகளில் மின் சிக்கனத்தை ஊழியர்கள் கடைபிடிக்காததும் மின்தட்டுப்பாட்டிற்கு ஒரு காரணம் என மின்வாரிய அதிகாரிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் தேவையற்ற மின் செலவை குறைக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு அலுவலர்கள், ஊழியர்கள் அறையில...
தமிழகம்
விழுதுகள் விலக்கியதால் வீதிக்கு வந்த முதியோர்
ஜூன் 15ம் தேதி முதியோர் கொடுமை எதிர்ப்பு நாள். ஆனால் அவர்களின் நிலை மதுரையில் நேற்று எப்படி இருந்தது? கண்ணீர் வரவழைக்கும் வகையில் பரிதாபமான அவர்களின் நிலையை நமது போட்டோகிராபர்கள் "கிளிக்' செய்தனர். சந்து பொந்துகளிலும், சாலையோரங்களிலும் குந்தியிருக்கும் பலரை உற்று நோக்கினால், அவர்களில் ஆதரவற்ற முதியோரே அதிகம் உள்ளனர். ...
இந்தியா
சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம் : வழிமுறைகளை வெளியிட்டது அரசு
சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை தயாரிக்கும் திட்டத்தை நாடு முழுவதும் பரவலாக்கும் நடவடிக்கைகளில், மத்திய அரசு தீவிரமாக களம் இறங்கியுள்ளது. இது குறித்த ஆலோசனைகள் நடந்து முடிந்துவிட்ட நிலையில், சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை தயாரிக்கும் திட்டங்களுக்கான வழிமுறைகள் குறித்த விவரங்கள், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் ...
தமிழகம்
அமெரிக்காவில் ரஞ்சிதா தலைமறைவு: நித்யானந்தா ஆசிரமம் மீது வழக்கு
பெங்களூரு : நித்யானந்தா வழக்கில் தேடப்பட்டு வந்த நடிகை ரஞ்சிதா, போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு, அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றுள்ளார். நித்யானந்தா நடத்தும் தபசு பூஜைக்கு ரேஷன் மண்ணெண்ணெய் பயன்படுத்தியதால், ஆசிரமத்தில் ரெய்டு நடத்தப்பட்டு, 180 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து,ஆசிரமம் மீது வழ...
தமிழகம்
நான்கு சதவீத வட்டியில் மாணவர்களுக்கு கல்வி கடன்: தேசிய கல்வி நிதி கழகம் அமைக்க திட்டம்
புதுடில்லி : பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு, 4 சதவீத வட்டியில் கல்விக் கடன் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தேசிய கல்வி நிதி கழகம் அமைக்கவும் பரிசீலித்து வருகிறது. மாநில கல்வி அமைச்சர்களின் மாநாடு, டில்லியில் நாளை நடக்கிறது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ள விஷயங்கள் தொடர்பாக, மத்...
General
காம்பிர் அதிரடி: இந்தியா வெற்றி : வங்கதேசம் சோகமான துவக்கம்
தம்புலா : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை, தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. நேற்றைய லீக் போட்டியில் காம்பிர் 82 ரன்கள் விளாச, வங்கதேச அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வீழ்த்தியது. ஆசிய கோப்பை கிரிக் கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. நேற்று தம்புலாவில் நடந்த போட்டியில், இந்திய அணி, வங்கதேச அணியை எத...
இந்தியா
பெட்ரோல், டீசல் விலை 24ம் தேதி ஆலோசனை
புதுடில்லி : பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது குறித்து விவாதிக்க, மத்திய அமைச்சர்களின் கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதற்கு ஏற்ப நம்நாட்டில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலையை உயர்த்த எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆளும் ...
தமிழகம்
1,000 ஆண்டுக்கு முற்பட்ட சமணர் சிலை கண்டெடுப்பு
ஈரோடு : சங்ககிரி அருகே கிடையூரில், 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, கிடையூர் என அழைக்கப்படும் தேவண்ண கவுண்டனூர் உள்ளது. இங்கு, ஈரோடு கொங்கு ஆய்வு மையத் தலைவர் புலவர் ராசு, சங்ககிரி ஆய்வாளர்கள் கருணாகரன், சிங்காரவேல் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அப்போது, கி.பி., ...
தமிழகம்
டி.ஜி.பி.,யானார் திலகவதி
சென்னை : கூடுதல் டி.ஜி.பி., திலகவதிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலர் ஞானதேசிகன் பிறப்பித்துள்ள உத்தரவு: பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி.,யாக பணியாற்றி வரும் திலகவதிக்கு டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர், தமிழ்நாடு சீருடை பணியாளர...
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள அரசு ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்பு
சென்னை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பும் அரசு ஊழியர்களுக்கு, சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம் என, முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோவையில் வரும் 23 முதல் 27ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள, தங...
இந்தியா
மீண்டும் பா.ஜ.,வில் சேருகிறாரா உமாபாரதி?
ராய்ப்பூர் : மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமாபாரதி மீண்டும் பா.ஜ.,வில் சேருவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்வானி, ராஜ்நாத்சிங்குடன் அவர் சிறப்பு விமானத்தில் ராய்ப்பூர் வந்திறங்கியது இது தொடர்பாக யூகங்களை அதிகரிக்கச் செய்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியில் இருந்து பிரிந்து தனிக்கட்சி துவக்கியவர் உமாபாரதி. இவர் மீண்டும்...
தமிழகம்
ஜனாதிபதி, முதல்வர் தங்கும் மாளிகை புதுப்பிப்பு
கோவை : செம்மொழி மாநாட்டுக்கு வரும் ஜனாதிபதி மற்றும் முதல்வர் தங்கும் சுற்றுலா மாளிகை புதுப்பிக்கப்படும் பணிகளை, துணை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகளை ஆய்வு செய்ய, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் கோவை வந்தார். ஜனாதிபதி, முதல்வர் உள்ளிட்ட பலரும் தங்குவதற்காக, இரண்டு கோடி ...
இந்தியா
ராஜஸ்தான் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களிடையே பிளவு : ராம்ஜெத்மலானி வெற்றி பெறுவதில் சிக்கல்
புதுடில்லி : பிரபல சட்ட நிபுணர் ராம்ஜெத்மலானிக்கு எதிராக ராஜஸ்தான் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளதால், அவர் அங்கு நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல், கர்நாடகாவில், தொழிலதிபர் மல்லையாவை ஆதரிப்பதிலும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களிடையே குழப்பம் நிலவுகிறது. ராஜஸ்...
தமிழகம்
போலி சான்றிதழுடன் 3 பேர் கைது
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நடந்து வரும் ராணுவ ஆள் சேர்க்கும் முகாமில், போலி சான்றிதழ் கொடுத்த மூன்று பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரத்தில், 15 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் ஜூன் 14ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சிப்பாய் பொதுப்பணிக்கு புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், வ...
தமிழகம்
ஜெ.,வுடன் எம்.பி.,க்கள் சந்திப்பு
சென்னை : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை முன்னாள் அமைச்சர், எம்.பி.,க்கள் நேற்று நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை, பார்லிமென்ட் பொது கணக்குக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தம்பிதுரை, மதிப்பீட்டுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப...
தமிழகம்
செம்மொழி மாநாட்டுக்கு வருபவர்களுக்கு ரயில், விமான நிலையங்களில் வரவேற்பு மையம்
சென்னை : கோவையில், வரும் 23ம் தேதியிலிருந்து 27ம் தேதி வரை நடக்கும் செம்மொழி மாநாட்டிற்கு, வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் வரும் அறிஞர்களுக்கு, தமிழ் ஆர்வலர்களுக்கு, செல்ல வேண்டிய இடங்கள் குறித்து வழிகாட்ட ஏதுவாக, சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களிலும், மீனம்பாக்கம் உள்நாட்டு மற்றும் ...
தமிழகம்
தேர்தல் ஆயத்த மாநாடு
தேனி : தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் 2010 ல் சுருக்க திருத்தப்பணிகள் நடந்து வருகின்றன. புதிதாக சேர்க்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள், இடம் மாறியவர்கள் போன்ற விபரங்களுடன் புதிய வாக்காளர் வரைவு பட்டியல் ஜூலை முதல் தேதி வெளியிடப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் ஆயத்த மாநாடு சென்னையில் ஜூலை 6 ல் நடத்தப்பட உள்ளது. இது குறித்...
தமிழகம்
10 டன் காணாங்கழுத்தை மீன்கள் கடலூர் துறைமுகத்தில் பிடிபட்டது
கடலூர்: கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் காணாங் கழுத்தை மீன் சீசன் துவங்கியுள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீன்பிடி தடை காலம் முடிந்து கடந்த 28ம் தேதி முதல் மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருகின்றனர். கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 10 நாட்களாக அதிகளவில் மத்தி மீன்கள் பிடிக்கப் பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வ...
தமிழகம்
நடன பாதேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம்
நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடன பாதேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் மன்னர்களால் கட்டப்பட்ட பழமையான ஹஸ்த தாளாம்பிகை சமேத நடன பாதேஸ்வரர் கோவிலில் 10 நாள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுட...
தமிழகம்
வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் இன்று துவக்கம்
கடலூர்: கடலூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவம் இன்று துவங்குகிறது. கடலூர் திருப்பாதிரிபுலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவம் இன்று 17ம் தேதி துவங்கி வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. அதனையொட்டி இன்று காலை திருமஞ்சனமும், 18ம் தேதி காலை 10 மணிக்கு சுவாமி வீதிபுறப்பாடு, இரவு ஹம்ச வாகனத்தில் ...
தமிழகம்
பகலில் எரியும் தெரு விளக்குகளால் மின்சாரம் விரயமாகிறது : உள்ளாட்சி பிரதிநிதிகள்கவனிப்பார்களா?
கடலூர்: மின்சாரப் பற்றாக்குறை காரணமாக கட்டாய மின் வெட்டு அமல்படுத்தி வரும் இன்றைய சூழ்நிலையில் உள்ளாட்சி நிர்வாகிகளின் அலட்சியத்தால் பட்டப் பகலில் தெரு விளக்குகளை எரியவிட்டு மின்சாரம் விரயமாக்கப்பட்டு வருகிறது. நீரின்றி அமையாது உலகு என் பது போல் இன்றைய விஞ்ஞான உலகில் மின்சாரமின்றி மனித வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகி...
தமிழகம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை தேரோட்டம் நடக்கிறது
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி நாளை 18ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று 17ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதியுலா நடந்தது. நாளை 18ம் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது. தேர்...
தமிழகம்
இன்ஸ்பெக்டர் பணியிடம் காலி: வழக்கு விசாரணையில் தேக்கம்
விருத்தாசலம்: விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக் டர் பணியிடம் காலியாக இருப்பதால் பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. விருத்தாசலம் சப் டிவிஷனில் விருத்தாசலம், மங் கலம்பேட்டை, பெண்ணாடம் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தனித்தனி இன்ஸ் பெக்டர்கள் உள்ளனர். கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ் பெக்டர் இல்லாததால் ...
தமிழகம்
சென்னையில் விடுதலைபுலி ஆதரவாளர் கைது
சென்னை : கடந்த 2007ம் ஆண்டு நடந்த கடத்தல் வழக்க தொடர்பாக சென்னையில் கியூ பிராஞ்ச் போலீசார் விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
கோட்டை முன் மறியல் நடத்த சத்துணவு பணியாளர் சங்கம் முடிவு
விருத்தாசலம்: கோட்டை முன் மறியல் நடத்த தமிழ் மாநில சத்துணவு பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் விஜயபாண்டியன் விடுத்துள்ள அறிக்கை: பத்து ஆண்டுகள் பணி முடித்துள்ள அனைத்து சத்துணவு பணியாளர்களுக் கும் பள்ளி அலுவலகத்தில் கூடுதல் பணி தந்து முழு நேர பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலி பணியிடங்களில் ...
தமிழகம்
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
பண்ருட்டி: பிளாஸ்டிக், பாலித்தீன் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் பண்ருட் டியில் நேற்று நடந்தது. சேர்மன் பச்சையப்பன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் கோதண்டபாணி முன்னிலை வகித் தார். கலெக்டர் சீத்தாராமன் துவக்கி வைத்தார். கமிஷனர் உமாமகேஸ்வரி வரவேற்றார். எம்.எல்.ஏ., வேல்முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தாசில...
தமிழகம்
நிலுவை தொகையை உடனே வழங்க ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் வலியுறுத்தல்
கடலூர்: மத்திய அரசின் 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி நிலுவைத் தொகையை உடனே வழங் க வேண்டும் என ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாதாந்திரக் கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். கலைமணி வரவேற்றார். சென்ற கூட்ட நடவடிக்கையை வெங்கட் ராமன் ...
தமிழகம்
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி சாதனை மாணவர்களுக்கு பாராட்டு
சிதம்பரம்: சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர் வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பிளஸ் 2வில் மாவட் டத்தில் மூன்றாமிடம் மாணவி விசாலாட்சி, நான்காமிடம் பிடித்த பிரகதா, நகரில் மூன்றாமிடம் பெற்ற சுகாந் ஆகியோருக்கு வேளாண் துறை முதல்வர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாண...
தமிழகம்
கால்நடை வளர்ப்பு பயிற்சி
நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையத்தில் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். ஏரிப்பாசன விவசாய சங்க தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் டாக...
தமிழகம்
கட்டுமான நல வாரியத்தை சீர்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்
கடலூர்: கட்டுமான தொழிலா ளர் சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் சவரிமுத்து தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் சுகுமாறன், மாவட்ட தலைவர் கருப் பையன், துணைத் தலைவர் ஆளவந்தார், இணை செயலாளர் குமார், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பங் கேற்றனர். நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாள...
தமிழகம்
என்.சி.சி., மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு
சிதம்பரம்: சிதம்பரத்தில் 10 நாட் கள் நடந்த என்.சி.சி., மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் நிறைவு பெற்றது. அண்ணாமலைநகர் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த ஆண்டு பயிற்சி முகாம், குடியரசு தினவிழா அணி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்வதற்கான பயிற்சி முகாம் கடந்த 10 நாட்களாக சிதம்பரத்...
தமிழகம்
முப்பெரும் விழா
நெல்லிக்குப்பம்: உலக சுற்றுச்சூழல் தினம், உலகம் வெப்பமயமாதல் விழிப்புணர்வு தேசிய பசுமைப்படை துவக்க விழா ஆகிய முப் பெரும் விழா நெல்லிக்குப் பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தலைமையாசிரியர் சடமுத்து தலைமை தாங்கினார். ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனி பேசினார். ஆ...
தமிழகம்
கராத்தே பயிற்சி முகாம் நிறைவு
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் கியா காண்டோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் நடந்த கோடைகால கராத்தே பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது. விழாவிற்கு கராத்தே பயிற்சியாளர் சத்தியராஜ் தலைமை தாங்கினார். இளவரசன் வரவேற்றார். கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் ரங்கநாதன் ஷாய் மற்றும் கட்டா பிரிவில் வெற்றி பெற்ற கராத்தே பயிற்சியாளர்களுக்கு...
தமிழகம்
அரிமா சங்க முப்பெரும் விழா
கடலூர்: அரிமா சங்க முப்பெரும் விழா கடலூரில் நடந்தது. கடலூர் அரிமா சங்க 40வது ஆண்டை முன்னிட்டு டவுன்ஹாலில் நடந்த விழாவிற்கு தலைவர் வேலவன் தலைமை தாங்கினார். சங்க ஆளுனர் ரத்தினசபாபதி, தேர்வு ஆளுனர் குப்புசாமி, துணை ஆளுனர் கல்யாணகுமார் பேசினர். விழாவில் மேல்பட்டாம்பாக்கம் வின்னர் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவர்களுக்கு ப...
தமிழகம்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக்கரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. விருத்தாசலம் பாலக்கரையில் நெய்வேலி மனித நேய மேம்பாட்டு மையம், பவர் சிட்டி அரிமா சங்கம், மோட்டார் வாகன ஆய் வாளர் அலுவலகம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. மனித நேய மேம்பாட்டு தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார...
தமிழகம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் கொள்ளை! ரூ.3 லட்சம் ரொக்கம், 35 சவரன் நகை திருட்டு
சென்னை : சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் பஸ் பயணிகள், தனியாக நடந்து செல்வோர் மற்றும் வீடு புகுந்து திருட்டு சம்பவங்களில், 35 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மக்கள் இழந்துள்ளனர். தொடர் கொள்ளை குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். பஸ்களில் கொள்ளை: கிண்டி அடுத்த ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்...
தமிழகம்
பால் உற்பத்தியாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூர்: கால்நடை மருத்துவமனைகளை முறையாக செயல்படுத்தி சிகிச்சை அளிக்கக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங் கம் சார்பில் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுப்பாளையம் கால் நடை இயக்குனர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய செயலாளர் தட்சணாமூர்த்தி தலைமை தாங் கினார். மாவட்ட செயலா ளர் ரவிச்சந்திரன், ஒன்...
தமிழகம்
சமத்துவபுரம் கட்ட இடம்: டி.ஆர்.ஓ., நடராஜன் பார்வை
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே சமத்துவபுரம், பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு தேர்வு செய்ய உள்ள இடங்களை டி.ஆர்.ஓ., பார்வையிட்டார். ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த தேத்தாம்பட்டு கிராமத்தில் சமத்துவபுரம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த இடம் சமத்துவபுரம் கட்ட போதுமானதாக உள்ளதா என்பது குறித்தும் மண்ணின் தன்மை மற்றும் வ...
தமிழகம்
நியமனம்
சென்னை : சென்னை அம்பத்தூரில் அமைந்துள்ள எல்.ஐ.சி., தென்மண்டல பயிற்சி மையம், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில எல்.ஐ.சி., அலுவலகங்களில் பணியாற்றும் முகவர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு காப்பீடு, மேலாண்மை முதலியவற்றுக்கு பயிற்சி அளித்து வருகிறது. எல்.ஐ.சி., செயல் இயக்குனராக பணியாற்றிய வி.ஜே.சிங் பதவி உயர்வு ப...
தமிழகம்
கணவனை அரிவாளால் வெட்டிய மனைவி
புழல் : சென்னை புழல் அடுத்த புத்தகரம், அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு (50); ஆட்டோ டிரைவர்; இவரது மனைவி பத்மினி. மதுரவாயல் அடுத்த நெற்குன்றத்தில் வசித்து வந்த இவர்கள், கடந்த ஒரு மாதத்திற்கு முன்தான், மேற்கண்ட முகவரியில் குடிவந்தனர். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் அவர...
தமிழகம்
வரும்முன் காப்போம் முகாம்
புவனகிரி: வடதலைக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கிருஷ் ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. டாக்டர் சிவக்குமார் தலைமை தாங்கினார். சேர் மன் தனலட்சுமி துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் செந்தில் முன்னிலை வகித்தார். ராஜா முத்தையா மருத் துவக் கல்லூரி டாக்டர்கள் ச...
தமிழகம்
மதிய உணவு சாப்பிட்ட ஐந்து மாணவர்கள் மயக்கம்
புவனகிரி: புவனகிரி அருகே பள் ளியில் மதிய உணவு சாப்பிட்ட ஐந்து மாணவர்கள் மயக்கமடைந் தனர். புவனகிரி அருகே பூதவராயன்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 400 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 250 மாணவ, மாணவிகள் நேற்று மதிய உணவு சாப்பிட்டனர். இதில் மாணவிகள் அனுசுயா (12), அன்புக் கரசி (12), மாணவர்கள் பிரசன்னா (1...
தமிழகம்
கைதியிடம் மொபைல் போன் பறிமுதல்
புழல் : வேப்பேரி பெரியார் திடல், பத்மா நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் தினேஷ் (31). பல வழக்குகளில் சிக்கி, கடந்தாண்டு புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று அதிகாலை இவர் மொபைல்போனில் பேசினார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட சிறைக்காவலர் சதீஷ்குமார், தினேஷிடமிருந்து மொபைல் போனை பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளுக்கு...
தமிழகம்
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
குறிஞ்சிப்பாடி: வடலூரில் லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீசார் கைது செய்தனர். வடலூரில் நேற்று முன்தினம் மாலை இன்ஸ்பெக்டர் சந்திரன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வடலூர் - நெய்வேலி சாலையில் தடை செய்யப் பட்ட லாட்டரி சீட்டு விற்ற கடலூரைச் சேர்ந்த வடிவேலு (38) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 200 ரூபாய் மதிப்புள்ள...
தமிழகம்
சிறுவனை தாக்கிய முதியவர் கைது
ராமநத்தம்: ராமநத்தம் அருகே சிறுவனை தாக்கிய முதியவரை போலீசார் கைது செய்தனர். ராமநத்தம் அடுத்த ஒரங்கூர் காலனியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் வெங்கடேஷ் (13). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் அதே பகுதியில் கிட்டிப்புல் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பழனிமுத்து (53) மீது கிட்டிப்புல் விழுந் தது. ஆத்திரம் அட...
தமிழகம்
கார் மோதி சிறுமி பலி
கடலூர்: கார் மோதி சிறுமி இறந்தார். விருத்தாசலம் அடுத்த சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் ஏழைமுத்து. இவர் நேற்று முன்தினம் தனது குழந்தையை தூக்கிக் கொண்டு, அதே கிராமத் தில் உள்ள தனது மைத் துனர் ரவிச்சந்திரன் மகள் முத்துலட்சுமி (5)யை அழைத்துக் கொண்டு கடலூர் - விருத்தாசலம் சாலையை கடக்க முயன் றார். அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்ற...
தமிழகம்
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு முகாம்
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள் ளியில் எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு முகாம் நடந்தது. எஸ்.எஸ்.எல்.சி., மற் றும் பிளஸ் 2 பொதுத் தேர் வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்து வந்தனர். இதனால் மாணவர்கள் பெரும் சிரமம் அடைவதால் அரசு அந்தந்த...
தமிழகம்
ஜி.எஸ்.டி., சாலையில் மரண பள்ளம் நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியம்
பரங்கிமலை : கிண்டி கத்திப்பாரா ஜி.எஸ்.டி., சாலையில் எட்டு மாதங்களுக்கு முன் தோண்டிய பள்ளத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை மூடாமல் போக்கு காட்டி வருவதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கிண்டி கத்திப்பாரா மேம்பாலம், ஆசர்கானா பஸ் நிறுத்தம், மீனம்பாக்கம், பட்ரோடு ஆகிய ...
தமிழகம்
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய மனித உரிமை கழகம் அரசுக்கு கோரிக்கை
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனித உரிமை கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பரங்கிப்பேட்டை நகர மனித உரிமைகள் கழக கூட்டம் நடந்தது. நகர அமைப்பாளர் முருகன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் செல் வராஜ், துணை ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் ...
தமிழகம்
குரோம்பேட்டையில் 19ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
குரோம்பேட்டை : குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வரும் 19ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாம் காலை 10 மணியிலிருந்து, மாலை 4 மணி வரை நடைபெறும். முகாமில் 18 வயதிலிருந்து 25 வயதிற்குட்பட்ட எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ...
தமிழகம்
போக்குவரத்து மாற்றத்தால் அவதி! பொதுமக்கள் மறியல் செய்ய முடிவு
கடலூர்: கடலூர் - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளதால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். கடலூர் - விருத்தாசலம் சாலையில் பச்சையாங்குப்பம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக க...
தமிழகம்
அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை : குடிசை மாற்று வாரிய வீடுகளை உரியவர்களுக்கு ஒதுக்காமலும், பொதுக்கழிப்பிடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும் அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட 10வது வட்டத்தில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட மனைகளுக்காக, 96 பொதுக்கழிப்பிடங்கள் உருவ...
தமிழகம்
எல்லோரும் உழைத்தால்தான் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும் : அமைச்சர் பன்னீர்செல்வம்பேச்சு
குறிஞ்சிப்பாடி: அரசின் நலத்திட் டங் கள் உள்ளது என இருமாப்புடன் இருந்து விடாமல் எல்லோரும் சேர்ந்து உழைத்தால் தான் மீண் டும் ஆட்சியை பிடிக்க முடியும் என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். கடலூர் மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட் டம் குறிஞ்சிப்பாடி தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு, தலைமை...
தமிழகம்
பராமரிப்பின்றி தடுப்பணை நீர் தேக்க முடியாத அவலம்
நெல்லிக்குப்பம்: வானமாதேவி கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் ஷட்டர்கள் பழுதாகி பராமரிப்பின்றி உள்ளதால் தண்ணீர் தேக்க முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் வானமாதேவியில் கெடிலம் ஆற் றின் குறுக்கே 50 ஆண்டுகளுக்கு முன் தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் தண்ணீர் தேங்கியதால் சுற்றியுள்ள இடங்களில் நிலத்தடி நீர்மட்...
தமிழகம்
அரசு பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு மரியாதை
சிதம்பரம்: கிள்ளை அரசு பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளிலேயே குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் விரும்புகின்றனர். ஆனால் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் ஜனாதிபதி வரை அனைத்து உயர் பதவிகளையும் வகித்துள்ளனர் என்பதை உதாரணத்துடன் சுட்டிக்காட்டிய...
தமிழகம்
பெண்கள் பள்ளிக்கான இடம்: கலெக்டர் நேரில் ஆய்வு
பண்ருட்டி: விழமங்கலம் நகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கான இடத்தை கலெக்டர் சீத்தாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பண்ருட்டி விழமங்கலம் நகராட்சி துவக்கப் பள்ளி பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. நேற்று பண்ருட்டிக்கு வருகை தந்த கலெக்டர் சீத்தாராமன் பள்ளிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்த...
தமிழகம்
மின்னல் தாக்கியதில் கம்ப்யூட்டர் பழுது
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் மின்னல் தாக்கியதில் கம்ப்யூட்டர் கள் செயல் இழந்ததால் வரிவசூல் பணிகள் பாதித்தது. நெல்லிக்குப்பத்தில் நேற்று முன்தினம் மாலை மின்னல், இடியுடன் பலத்த மழை பெய்தது. நகராட்சியில் மின்னல் தாக்கியதில் மின்சார ஒயர்கள் எரிந்து சேதமடைந்ததால் கம்ப் யூட்டர்கள் செயலிழந் தன. இதனல் நேற்று ம...
தமிழகம்
தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதிக்கு காத்திருக்கும் பாதாள சாக்கடை பணி
கடலூர்: கடலூர் நகர பாதாள சாக்கடைத் திட்டத்தில் முதுநகர் சாலையில் பணிகள் துவங்க தேசிய நெடுஞ்சாலை அனுமதி வழங்காததால் காலதாமதமாகி வருகிறது. கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்ட பணி 40 கோடி மதிப்பில் கடந்த 21.1.2007ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஒரே ஆண்டில் முடிக்க வேண்டிய இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை முடிக்க...