category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
செம்மொழி மாநாடு நாட்களில் மதுக்கடை மூட வக்கீல்கள் மனு
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நெருங்கி வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டு நாட்களில் அரசின் தடையை மீறி, கள் விற்பனை செய்யப்போவதாக சில அமைப்புகள் அறிவித்துள்ளன. இதை தடுப்பதற்கான வேலைகளில் காவல்துறை இறங்கியுள்ளது.இந்நிலையில், கள் மற்றும் போதை எதிர்ப்பு அணி என்ற அமைப்பின் பெயரில...
தமிழகம்
செம்மொழி மாநாட்டுக்கு வருபவர்களுக்கு ரயில், விமான நிலையங்களில் வரவேற்பு
சென்னை : கோவையில், வரும் 23ம் தேதியிலிருந்து 27ம் தேதி வரை நடக்கும் செம்மொழி மாநாட்டிற்கு, வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் வரும் அறிஞர்களுக்கு, தமிழ் ஆர்வலர்களுக்கு, செல்ல வேண்டிய இடங்கள் குறித்து வழிகாட்ட ஏதுவாக, சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களிலும், மீனம்பாக்கம் உள்நாட்டு மற்றும் ...
தமிழகம்
ஜனாதிபதி, முதல்வர் தங்கும் மாளிகை புதுப்பிப்பு
கோவை : செம்மொழி மாநாட்டுக்கு வரும் ஜனாதிபதி மற்றும் முதல்வர் தங்கும் சுற்றுலா மாளிகை புதுப்பிக்கப்படும் பணிகளை, துணை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகளை ஆய்வு செய்ய, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் கோவை வந்தார். ஜனாதிபதி, முதல்வர் உள்ளிட்ட பலரும் தங்குவதற்காக, இரண்டு கோடி ...
தமிழகம்
செம்மொழி மாநாட்டை ஒட்டி கடலோரங்களில் கண்காணிப்பு
மண்டபம் : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி, கடலோரப் பகுதிகளில் 24 மணி நேரம் கண்காணிப்பு பணியை மரைன் எஸ்.பி., நேற்று துவக்கி வைத்தார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் வரும் 23, 24, 25ம் தேதிகளில் நடக்க உள்ளது. ராமநாதபுரம் கடல் பகுதி இலங்கைக்கு அருகில் உள்ளதால், செம்மொழி மாநாட்டை ஒட்டி 24 மணி நேர கடல் வழி கண...
தமிழகம்
செம்மொழி மாநாட்டுக்கு மிரட்டல்
தஞ்சாவூர் : தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை மற்றும் கோவையில் நடக்கவுள்ள செம்மொழி மாநாட்டுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலை பதிவாளர் சரவணனுக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் வந்தது. அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ள விவரம் வருமாறு: எச்சரிக்கை: நாம் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறோம். அதை நினைத்து...
தமிழகம்
பள்ளிகளில் தினமும் செம்மொழி மையநோக்கு பாடல் ஒலிபரப்பு
சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், காலை நேர வழிபாட்டு நேரத்தில், செம்மொழி மையநோக்கு பாடலை இசைக்க பள்ளி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதையடுத்து, ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை தமிழக அரசு நடத்துகிறது. மாநாட்டின் சிறப்பு மற்றும் நோக்க...
தமிழகம்
செம்மொழி மாநாடு: போக்குவரத்து வசதி எப்படி? வெளியூர் மக்களுக்கு வழிகாட்ட உதவி மையம்
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் கோவைக்கு வருவோர், எந்தெந்த சாலைகள் வழியே வரலாம்; நகரில் வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் எந்தெந்த இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன, என்ற விபரங்களை மாநகர போலீசார் நேற்று வெளியிட்டனர். வெளியூர் மக்களுக்கு வழிகாட்ட விமான நிலைய...
இந்தியா
ஞானேஸ்வரி ரயில் விபத்து : 3 பேர் முக்கிய குற்றவாளிகளாக அறிவிப்பு
புதுடில்லி : மேற்குவங்கத்தில் 148 பேரை பலிவாங்கிய ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து சம்பவத்துக்கு பி.சி.பி.ஏ., இயக்கத்தைச் ‌சேர்ந்த 3 பேர் தான் காரணம் என சி.பி.ஐ., அறிவித்துள்ளது. உமாகாந்த் மஹதோ, பபி மஹதோ, ஆசித் மஹதோ ஆகிய 3 பேர் குறித்து முக்கிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையாக அளிக்கப்படும் எனவும்...
தமிழகம்
போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றம்
சென்னை : சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி., துரைராஜ், சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் ரவிக்குமார் உள்ளிட்ட ஆறு ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் முதன்மை செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக உள்ள துரைராஜ், தமிழ்நாடு போலீஸ் அகடமி ஐ.ஜி.,யாக இடமாற்றம் ச...
தமிழகம்
நெல்லை அல்வாக்கடைக்கு சீல்
திருநெல்வேலி : நெல்லையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த அல்வாக்கடைக்கு சுகாதாரத்துறையினர் சீல் வைத்தனர். நெல்லை ஜங்ஷன் பகுதியில் உள்ள தனியார் அல்வா கடை ஒன்றின் உற்பத்தி மையம் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வருவதாக வந்த தகவலையடுத்து, மாநகராட்சி சுகாதாரத்துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது உற்பத்தி மையம் சுகாதாரமற்...
தமிழகம்
முதல்வர் வீட்டு முன் உண்ணாவிரதம் : தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு
திருநெல்வேலி : ஆதி திராவிடர் பட்டியலில் இருந்து நீக்கி, தனிப்பட்டியலில் இணைக்க கோரி, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் வரும் ஜூன் 28ம் தேதி சென்னையில் முதல்வர் வீட்டின் முன், சுமார் ஆயிரம் பேருடன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக, அக்கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழகம்
விவசாயி கொலை : மூவருக்கு ஆயுள் தண்டனை
விருதுநகர் : விருதுநகர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயியை கொலை செய்த மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து விருதுநகர் விரைவு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் வரலொட்டியைச் சேர்ந்தவர் செல்வம். விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி ராஜாத்தி. ராஜாத்திக்கும் செல்வத்துக்கும் இடையே கள்ளத்தொட...
தமிழகம்
மதுரை அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 2 பேர் பலி
திருமங்கலம் : மதுரை அருகே இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி நிகழ்ந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்சும், அருப்புக்கோட்டையிலிருந்து மதுரை நோக்கி வந்த பஸ்சும், பாறைப்பட்டி விலக்கு என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதியது. இ...
தமிழகம்
வள்ளுவர் கண்ட ஒப்புரவு ஒரு புதிய தத்துவம்
- பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரனார் - திருவள்ளுவர் மனித வாழ்க்கையை ஆழமாக அலசி, தெளிவாக உணர்ந்து மக்களின் நல்வாழ்வுக்காகப் பல வழிகளை நமக்குக் குறளமுத வடிவில் தந்துள்ளார். அவ்வாறு தந்த பலவகைக் கருத்துகளில் ஒப்புரவு என்பது மிக உயர்ந்த ஒரு கருத்தாக உள்ளது. உலக மொழிகளிலுள்ள பலவகையான நூல்களிலும் காணப்படாத ஒரு பெரிய உண்மையை ...
தமிழகம்
பட்டினப்பாலை வழங்கும் காட்சிகள்
- டாக்டர் சி.பாலசுப்பிரமணியன் - கற்பனைக்கு இயைந்த காட்சிகளை மாட்சி பெற விளக்கி நிற்கும் பாட்டுகளில் தலையாயது பட்டினப் பாலையாகும். கடியலூர் உருத்திரங்கண்ணார் என்னும் சங்க காலப் புலவரின் காட்சியோவியங்கள் மாட்சியுடன் தீட்டப்பெற்றிருக்கும் பாங்கினைப் பட்டினப்பாலை பறைசாற்றி நிற்கிறது. பட்டினப்பாலையின் பாட்டுடைத் தலைவன் சோழன...
தமிழகம்
தமிழரின் நோன்பு
- தவத்திரு குன்றக்குடி அடிகளார் - தமிழினம் , காலத்தால் மூத்த இனம்; வாழ்வியல் பண்பிலும் வளர்ந்த இனம். சான்றாண்மை, பண்பாடு, ஆகியவற்றிற்கு உரைகல்லாக - எடுத்துக்காட்டாக வாழ்ந்த இனம்- தமிழினம்! தமிழினத்தின் நாகரிகம், நயத்தக்க நாகரிகம், காலத்தையும் தூரத்தையும் வென்று இன்றைய பூத பவுதிக உலகம் நெருங்கி இருக்கிறது. இந்த வாய்ப்ப...
இந்தியா
பொம்மைகளில் அபாயகரமான பொருட்கள் : கண்காணிக்க மத்திய அரசு தீவிரம்
புதுடில்லி : பொம்மைகள் உற்பத்தி செய்யப்படும் போது, அவற்றில் அபாயகரமான பொருட்கள் சேர்க்கப்படுவதை தடுக்க கண்காணிப்பு முறைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய மெடிக்கல் ரிசர்ச் கவுன்சில் ஆலோசனையின் பேரில், பொம்மைகளில் ஆபத்தான, காட்மியம், குரோமியம், ஆர்சனிக், மெர்க்குரி மற்றும் காரியம் ஆகிய 5 பொருட்கள் ...
தமிழகம்
நட்பின் இயல்பு
-  கி.ஆ.பெ. விசுவநாதம் - வாழ்வுக்கு இன்றியமையாதது நட்பென்றும், நண்பர்களோடு பழகுவதும், பேசுவதும், வாழ்வதும், எவர்க்கும் மகிழ்ச்சியை அளிக்குமென்றும் அறிஞர்கள் கூறுவது உண்டு. எவருடனாவது நட்புக் கொள்ளுமுன், அவரைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும். அல்லது,""நாம் கூறுவதையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார்; நம்முடைய கொள்கைகளையும...
தமிழகம்
உலகத் தமிழ் மாநாடு: சில நினைவுகள்
- மால்கம் ஆதிசேசய்யா - தமிழ் ஆராய்ச்சியாளர்கள் சிலர், 1966ஆம் ஆண்டில் தமிழ்மொழி, இலக்கியம், கவிதை என்பவற்றில், தம்மைப்போன்று, மற்ற நாடுகளில் - அதாவது செக்கசுலோவாக்கியா, சுவீடன், பிரான்சு, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் - வசிக்கும் , தமிழ்மொழி ஆராய்ச்சியாளர்களுடன் கூடி, தமிழ் ஆராய்ச்சியைத் திடப்படுத்த, தாங்கள் ஒவ்வொர...
தமிழகம்
உலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், தஞ்சாவூரில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பின், தற்போது முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடக்கிறது. தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்தவும், தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கவும் நடத்தப்படுவதுதான் உலகத் தமிழ் மாநாடு. தமிழ் இலக்கிய, இலக்கணத்தின் சிறப்புகள், பண்பாடு, தமிழ் மொழி வரலாறு, தொல்லி...
இந்தியா
மும்பை விமான நிலையத்தில் 21 நிமிட பதட்டம்
மும்பை : மும்பை விமான நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தொழில்நுட்ப பிரச்னை காரணமாக 21 நிமிடங்கள் ஏர் டிராபிக் கண்ட்ரோல் எனப்படும் விமான கண்காணிப்பு அமைப்பு செயல்படவில்லை. இதன் காரணமாக விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்கள் மற்றும் தரையிறங்க வேண்டிய 4 விமானங்கள் தங்கள் பணியை செய்ய முடியாமல் தவிக்க வேண்...
General
உலக கோப்பை கால்பந்து : அர்ஜென்டினா வெற்றி
ஜோகனஸ்பர்க் : தென் ஆப்ரிக்காவில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின், பி பிரிவு ஆட்டம் ஒன்றில், அர்ஜென்டினா மற்றும் தென் கொரிய அணிகள் மோதின. ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய அர்ஜென்டினா அணி, 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.
இந்தியா
ராஜ்யசபா தேர்தல் : ராம் ஜெத்மலானி, ஆனந்த் சர்மா வெற்றி
ஜெய்ப்பூர் : மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தேர்தலில், ராம் ஜெத்மலானி வெற்றி பெற்று, ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜஸ்தானிலிருந்து 4 ராஜ்ய சபா உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இத்தேர்தலில் பா.ஜ., சார்பில் சார்பில் ராம் ஜெத்மலானி மற்றும் காங்கிரஸ் சார்பில் ஆனந்த் சர்மா ஆகி...
தமிழகம்
வழுதூர் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வழுதூர் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதால், மின்உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் இயற்கை எரிவாயு மின்உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதற்காக தேர்வான ஒப்பந்த பணியாளர்கள், தங்களை நிரந்தரமாக்க கோர...
தமிழகம்
கருத்தரங்கு
மதுரை: மதுரையில் வங்கியாளர்களுக்கான கருத்தரங்கில், கனரா வங்கி துணைப்பொது மேலாளர் பாலசுந்தர் பேசினார். அருகில் இடமிருந்து முன்னோடி வங்கி அலுவலர் சுப்ரமணியன், டி.ஆர்.டி.ஏ., திட்ட அலுவலர் பிச்சை, நபார்டு வங்கி உதவிப்பொது மேலாளர் சங்கர்நாராயணன், மகளிர்த் திட்ட அலுவலர் தங்கவேலு.
தமிழகம்
ஆலோசனை கூட்டம்
மதுரை: மதுரையில் நடந்த தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் ஆல் இந்தியா மோட்டார் சங்க காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா பேசினார். அருகில் நிர்வாகிகள் தங்கராஜ், கோபால்நாயுடு, நல்லதம்பி.
தமிழகம்
விடையளிப்பு விழா
மதுரை: மதுரை ஏனாதி விக்ரம் பொறியியல் கல்லூரியில், விடையளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் கதிர்வேலு வரவேற்றார். இயக்குனர் சீனிவாசஸ் தலைமை வகித்தார். மாணவர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த பேராசிரியர்கள் விடையளித்தனர். கல்லூரி டீன் பழனிகுமார், மேலாண்மை அலுவலர் நாகராஜன் பேசினர்.
தமிழகம்
லட்சியமாக வாழ்வதால் என்ன பயன்
மதுரை: மதுரை மதன கோபால சுவாமி கோயிலில் நடந்து வரும் சங்கீத உபன்யாசம் நிகழ்ச்சியில் முரளீதர சர்மா பேசியதாவது: ஒருவனிடம் எளிமை இல்லாவிட்டால், அவனிடம் எந்த குணமும் பிரகாசம் அடைய முடியாது. எளிமை என்பது கையாலாகாதனம் அல்ல. லட்சியம் இல்லாத வாழ்க்கை மிருகப்பிறவி போல அமைந்து விடும். லட்சியம் இருந்தாலே வாழ்க்கையில் பல ரகசியங்களை...
தமிழகம்
ஆலோசனை கூட்டம்
மதுரை: மதுரை, திருப்பாலை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் திருட்டு, வழிப்பறி தடுப்பது பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். பொருளாளர் மனோகர் வரவேற்றார். திருப்பாலை பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. பூட்டிய வீட்டை நோட்டமிடும் திருடர்கள் இரவில...
தமிழகம்
பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
சிவகாசி : சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை உரிமையாளர், மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி அருகேயுள்ள வடபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். எட்டு பேர் காயமடைந்தனர்....
இந்தியா
உலககோப்பை கால்பந்து போட்டி பி பிரிவில் கிரீஸ் வெற்றி
உலககோப்பை கால்பந்து போட்டி பி பிரிவில் கிரீஸ், நைஜீரியா அணிகள் மோதின. கிரீஸ், நைஜீரியாவை 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உலக கோப்பை போட்டிகளில் கிரீஸ் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.
தமிழகம்
செம்மொழி மாநாட்டுத் தகவல்கள்: தனி இணையதளம் துவக்கியது தினமலர்
கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு இம்மாதம் 23ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ் வளர்ச்சிக்குப் பணி ஆற்றுவதில் எவருக்கும் சளைத்ததல்ல தினமலர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த உலகப்புகழ் பெற்ற மாநாட்டுச் செய்திகள் மற்றும் தகவல்களை உரிய புகைப்படங்களுடன் வெளியிட தினமலர் புதிய இணையதளத்தை துவக்கியுள்ளது...
தமிழகம்
தி.மு.க.,வுக்கு அடுத்த வரவு அழகு திருநாவுக்கரசு
சென்னை : முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர் அ.தி.மு.க.,விலிருந்து விலகி, முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.,வில் இன்று இணைந்தனர். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் செல்வகணபதி, அனிதா ராதாகிருஷ்ணன், சத்தியமூர்த்தி, முத்துசாமி, சின்னசாமி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்க...
தமிழகம்
ரயில் மறியலுக்கு முயன்ற 88 பேருக்கு ஜாமீன்
மதுரை : மதுரையில் ஐகோர்ட்டில் தமிழை வழக்காடும் மொழியாக்க கோரி ரயில் மறியல் செய்ய முயன்று கைதான ஐந்து வக்கீல்கள் உட்பட 88 பேருக்கு 2வது மாஜிஸ்திரேட் கோர்ட் ஜாமீன் வழங்கியது. மதுரையில் நேற்று ரயில் மறியல் செய்ய முயன்ற பல அமைப்புகளை சேர்ந்த 95 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஆறு பேர் அன்றே ஜாமீனில் விடுவிக்கப்பட்டன...
தமிழகம்
தி.மு.க.,வுக்கு அடுத்த வரவு அழகு திருநாவுக்கரசு
சென்னை:முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர் அ.தி.மு.க., வி லிருந்து விலகி, முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.,வில் நேற்று இணைந்தனர்.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் செல்வகணபதி, அனிதா ராதாகிருஷ்ணன்,சத்தியமூர்த்தி,முத்துசாமி,சின்னசாமி மற்றும்முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ச...
தமிழகம்
தத்தளித்த வேளாண்மை, ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு புத்துயிர் : ரூ.2,700 கோடி மறு முதலீட்டு நிதி
மத்திய அரசு அறிவித்த நிதி கிடைக்காமல் ஐந்தாண்டுகளாக தள்ளாடிய வேளாண்மை, ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு விரைவில் புத்துயிர் கிடைக்க இருக்கிறது. நாடு முழுவதுமுள்ள 1,680 வங்கிகளையும் நஷ்டத்திலிருந்து மீட்டு, திறம்பட செயல்பட வைக்கும் வகையில் மத்திய அரசு, 2,700 கோடி ரூபாய் மறு முதலீட்டு நிதி வழங்க முடிவு செய்துள்ளது. விவசாய கட்டம...
தமிழகம்
தர்மபுரியில் லாரிகள் மோதி பயங்கர விபத்து : 18 பேர் பலி; 34 பேர் படுகாயம்
தர்மபுரி : தர்மபுரி அருகே திருமண கோஷ்டியினர் சென்ற மினி லாரி, இன்னொரு லாரி மீது மோதி கவிழ்ந்ததில், 18 பேர் பலியாயினர்; 34 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா பெல்ரம்பட்டியை அடுத்த திருமல்வாடியைச் சேர்ந்தவர் கணேசன், சுகந்தி தம்பதி. இவர்களது மகள் நித்யா(22). ஆசிரிய...
இந்தியா
சொல்கிறார்கள்
அரசுத் தேர்வில் ஜெயிக்க எளிய வழி...! வங்கித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் சகாயபிராங்க்: வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் நடத்திய தேர்வை எழுதி, இந்தியன் வங்கியில் எழுத்தர் பணி பெற்றேன். கள்ளக்குறிச்சியில் பணியமர்த்தப்பட்ட நான், அந்த ஊரில் உள்ள படித்த இளைஞர்களிடம், அரசு வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த...
இந்தியா
அக்கம் பக்கம்
தலைவர் பதவியில் நீடிப்பாரா கட்காரி? : பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி பதவியேற்று ஆறுமாதங்களுக்குள் பல்வேறு குழப்படிகள், நெருக்கடிகள், உட்கட்சிப் பூசல்களில் அக்கட்சி சிக்கித் தவிக்கிறது. இதனால், அவர் பதவியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ., தலைவராக நிதின் கட்காரி பொறுப்பேற்றவுடன், கட்சித் தலைவர்கள் யாரும் அனாவச...
தமிழகம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம் குறைவு: பயிற்சி நிறுவனங்கள் தவிப்பு
சென்னை : இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் மத்தியில் மவுசு குறைந்துவிட்டதால், இந்த ஆண்டு வெறும் 17 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். கவுன்சிலிங் மூலமே 19 ஆயிரத்து 292 இடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், இதைவிட குறைவாக விண்ணப்பங்கள் வந்திருப்பதைக் கண்டு, தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி நிர்வாகங்கள் அத...
தமிழகம்
தசைச் சிதைவு நோயால் பாதிப்பு 6 இடங்களில் பராமரிப்பு மையம்
சென்னை:தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆறு இடங்களில் பகல் நேர பராமரிப்பு மையங்கள் துவங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பு: தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழக அரசு மாதம் தோறும் 500 ரூபாய் உதவித் தொகை அளித்து வருகிறது. தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட அன...
தமிழகம்
இது உங்கள் இடம்
தண்டனையை அதிகரிக்க முடியும்! அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரியிலிருந்து எழுதுகிறார்: நீண்ட, நெடிய நீதிமன்ற வழக்குகளில் ஒன்றான, போபால் விஷவாயு வழக்கு, 26 வருடங்களுக்குப் பிறகு, நீதிமன்றத்தால் தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது. அனேகமாக, இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, கீழமை நீதிமன்றத்தில் தீர்ப்பு...
இந்தியா
ரேஷன் பொருள் கிடைக்காத ஏழைகளுக்கு ரொக்கம்: மத்திய அரசு திட்டம்
புதுடில்லி : உணவு உத்தரவாத மசோதாவின் கீழ், ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும்பட்சத்தில், பணமாக வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நாடு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு, உணவுக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் அமல்படுத்தப்படுமென, காங்கிரஸ் கட்சி க...
இந்தியா
கசாப் கையில் சித்திவிநாயகர் கோவில் கயிறு
மும்பை : ­மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட கசாப் உள்ளிட்ட 10 பயங்கரவாதிகளின் கைகளிலும், ஹெட்லி வாங்கிக் கொடுத்த சித்திவிநாயகர் கோவில் கயிறு கட்டப்பட்டிருந்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2008, நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த தாக்குதலில் கசாப் உள்ளிட்ட 10 பயங்கரவாதிகள் ஈடுபட்டு நாட்டை அதிர வைத்தனர். இவர்களில் கசா...
இந்தியா
பேச்சு, பேட்டி, அறிக்கை
அ.தி.மு.க., பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு: ஜெயலலிதா ஆட்சியில், மொத்தக் கடன் 59 ஆயிரம் கோடி ரூபாய் தான். அந்த கடன், கடந்த நான்காண்டு தி.மு.க., ஆட்சியில், 90 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேச்சு: தாய்ப்பால் கூட விஷமாக மாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், ரசாயன வேளாண் முறை. இதை...
தமிழகம்
கருக்கலைப்பு செய்த மாணவி : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில், பள்ளியில் குழந்தை பெற்ற 10ம் வகுப்பு மாணவி, ஏற்கனவே இருமுறை கருக்கலைப்பு செய்தவர் என தெரிந்ததை தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. ராமநாதபுரத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவி சுரிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கர்...
தமிழகம்
சினிமா நடிகை - அ.தி.மு.க., நிர்வாகி: போலீஸ் கமிஷனரிடம் மாறி மாறி புகார்
சென்னை : நடிகையிடம் இருந்து தன்னை காப்பாற்றக் கோரி அ.தி.மு.க., பிரமுகரும், உயிருக்கு பாதுகாப்பு கேட்டு சினிமா நடிகையும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் மாறி மாறி புகார் மனு அளிக்க வந்ததால், நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, சாலிகிராமம், தசரதபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(28), அ.தி.மு.க., இளைஞர் பாசறை விருகம்பாக்க...
தமிழகம்
அ.தி.மு.க., அலுவலகத்தில் தினமும் 200 மனுக்கள் தாக்கல்
சென்னை:அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், தமிழகம் முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்களிடம் இருந்து தினமும் மனுக்கள் குவிகின்றன.சென்னை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் கடந்த 9ம் தேதி, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா, கட்சித் தொண்டர்களிடம் மனு பெற்றார். கட்சி அலுவலகத்திற்கு ஜெயலலிதா வராத நாட்களில் கட்சி நிர்வாகிகள் அடங்கிய க...
இந்தியா
300 ஆண்டுகள் பழமையான நூலகம் 40 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்டது
அவுரங்காபாத் : முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் தன் கையால் எழுதிய குரான் நூல் வைக்கப்பட்டுள்ள, 300 ஆண்டுகள் பழமையான நூலகம், 40 ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்தில், கி.பி.17 ம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட நூலகம் ஒன்று உள்ளது. இதில் தற்போது, இஸ்லாமிய சட்டம், மருத்துவம், சூபிய...
தமிழகம்
ஐதராபாத் பல்கலையில் ரகசிய கண்காணிப்பு கேமரா : மாணவர்கள் எதிர்ப்பு
ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு காரணங்கள் கருதி, முக்கிய இடங்களில் ரகசிய கேமரா மூலம் கண்காணிப்பு மேற்கொள்ள, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு, மாணவர்கள், பல்கலை ஊழியர்கள் மற்றும் பேராசியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஐதராபாத்தில் உள்ள ஐதராபாத் பல்கலைக் கழகம் மிகவும் புகழ் பெற்றது. இங்கு ஏராளமான...
இந்தியா
போலி சான்றிதழ் தயாரித்த ஐந்து பேர் கைது
காரைக்கால் : காரைக்காலில் கல்விச் சான்றிதழ்களை போலியாக தயாரித்துக் கொடுக்கும் ஐந்து பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் நகர காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். மதகடி அம்மாள்சத்திரம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை போலீசார் விசா...
தமிழகம்
ரயில் பயணிகளிடம் கொள்ளை குண்டூர் அருகே அட்டகாசம்
குண்டூர் : ஆந்திராவில் ரயில் பயணிகளின் நகைகளை கொள்ளையர்கள் துணிகரமாக பறித்து சென்றனர். இச்சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து செகந்திராபாத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. நேற்று அதிகாலை குண்டூர் அருகே நாடிக்குடி ரயில் நிலையம் அருகில் ரயில் ச...
இந்தியா
தொண்டையில் சிக்கியது மீன் அகற்றி டாக்டர்கள் சாதனை
மங்களூரு : மங்களூரில் தொண்டையில் மீன் சிக்கி, உயிருக்கு போராடியவரை ஆபரேஷன் செய்து டாக்டர்கள் காப்பாற்றினர். கங்கன்காட் என்ற இடத்தை சேர்ந்தவர் முகமது குஞ்சி.இவர் வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் அவர் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மீன் பிடிக்க சென்றார்.ஆர்வமா...
தமிழகம்
நெல்லையப்பர் தேரோட்டம் கொடியேற்றத்துடன் துவக்கம்
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோவில் தேரோட்ட விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றாக நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோவில் தேரோட்டம் வரும் 25ம் தேதி காலை நடக்கிறது. அதற்கான கொடியேற்றம் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட...
தமிழகம்
கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை:கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க கோரியும், தென் பெண்ணையாற்றில் மணல் கொள்ளையை தடுக்க கோரியும் அ.தி.மு.க., சார்பில் இன்று(18ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:"கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென் பெண்ணையாற்று படுகைகளில், தி.மு.க.,வ...
தமிழகம்
தமிழகத்தில் காலரா பரவுகிறது?
முசிறி : தமிழகத்தின் பல பகுதிகளில் வாந்தி, வயிற்றுப் போக்கால் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி அருகே கடும் வயிற்றுப்போக்கு காரணமாக 200க்கும் மேற்பட்டோர் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உட்...
தமிழகம்
முதல்வர் வீட்டு முன்பு உண்ணாவிரத முடிவு
திருநெல்வேலி:முதல்வர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் அறிவித்துள்ளார்.தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதிபாண்டியன் நேற்று நெல்லை யில் கூறியதாவது: தாழ்த்தப்பட்டவர்களில் மூன்று பிரிவினர்கள் உள்ளனர். ஆனால், தேவேந்திர குலவேளாளர்களான எங்களையும் ஆதிதிராவிடர் என்...
இந்தியா
தமிழக டி.ஜி.பி., கோவை வருகை
கோவை : செம்மொழி மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க டி.ஜி.பி.,ஏ.டி.ஜி.பி.,ஆகியோர் இன்று கோவை வருகின்றனர். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் வரும் 23ல் துவங்குகிறது. பல லட்சம் தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்க உள்ள மாநாட்டு பாதுகாப்புப்பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். பாதுகாப்புப்பணியில் ஈடுபடும் 7 டி.ஐ.ஜி.,மற்...
இந்தியா
மாநாட்டில் ஊடுருவல் தடுக்க 700 உளவு போலீசார்: கண்காணிப்பில் உஷார்
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது விடுதலைப்புலி ஆதரவாளர்கள், தமிழ்த்தீவிரவாத அமைப்பினர் ஊடுருவி பிரச்னை ஏற்படுத்திவிடாமல் தடுக்க, உளவுத்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பை பலப்படுத்த, தமிழகம் முழுவதும் இருந்தும் பல்வேறு உளவு அமைப்புகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் உட்பட 700 போலீச...
தமிழகம்
மேகமலையில் குடியிருப்பவர்களை வெளியேற்றுவதற்கான தடை நீட்டிப்பு : ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை : தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே மேகமலை மலைப் பகுதியில் இருந்து அப்பகுதியினரை வெளியேற்ற அரசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தேனி மாவட்ட அ.தி.மு.க., செயலர் தங்க தமிழ்செல்வன் தாக்கல் செய்த பொது நல வழக்கு: ஆண்டிப்பட்டி சட்டசபைக்கு உட்பட்ட மேகமலை, வருஷநாடு, தும்பைக்காடு ஊராட்சி...
தமிழகம்
ரயிலில் இருந்து கீழே விழுந்து வாலிபர் மரணம் : நான்கு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவு
சென்னை : ஓடும் ரயிலில் இருந்து, கீழே விழுந்து இறந்த வாலிபரின் பெற்றோருக்கு, நான்கு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க, ரயில்வே தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் கலையரசு. இவரது மகன் அருண்மொழி (28). வில்லிவாக்கத்தில் இருந்து அரக்கோணம் செல்ல, மின்சார ரயிலில் டிக்கெட் எடுத்திருந்தார். திருவள்ளூர்-கடம்பத்...
தமிழகம்
தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு அபராதம்
சென்னை : வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஒப்பந்தத்தை மீறிய தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம், பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு வழங்க, மாநில நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடலூர், அண்ணா நகர், பவளச் சாலையைச் சேர்ந்த பிரகாஷ், சென்னை தி.நகரில் உள்ள சுக்வர்ஷா வேலைவாய்ப்பு நிறுவனம், நந்தனத்தில் இயங்கிவரும் செஞ்சூரியன் ...
தமிழகம்
ஐகோர்ட்டில் தமிழ் வழக்கு மொழி கோரி இன்று கோர்ட் புறக்கணிப்பு போராட்டம்
சென்னை : ஐகோர்ட்டில் தமிழ் மொழியை வழக்கு மொழியாக ஆக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, இன்று கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபடுகின்றனர். ஐகோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக அறிவிக்க வேண்டும் என வக்கீல்கள் வைத்த கோரிக்கையை தொடர்ந்து, 2006ம் ஆண்டு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின் ஒப்புதலு...
தமிழகம்
நூலகர் பணிக்கான தேர்வு வாலிபருக்கு ஐகோர்ட் அனுமதி
மதுரை : முசிறி மொருபட்டியை சேர்ந்த புகழேந்தி ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த ரிட் மனு: தமிழக அரசு கல்லூரிகளில் 56 நூலகர் பணியிடங்களை நிரப்ப என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டது. 2010 மார்ச் 19 க்குள் விண்ணப்பங்களை அனுப்பவும் குறிப்பிடப்பட்டது. நான் மார்ச் 17 ல் முசிறி மேட்டுப்பாளையம் தபால் அலுவலகம் மூலம் விண்ணப்பத்தை அ...
தமிழகம்
கொலை வழக்கில் தம்பதிக்கு ஆயுள்
கடலூர் : வடலூர் அருகே நடந்த கொலை வழக்கில் கணவன், மனைவிக்கு கடலூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த அரங்கமங்கலம் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் தனபால்(37). இவரது மனைவி தனலட்சுமி. நாகை மாவட்டம் விழந்தன்மாவடி அடுத்த மணல்மேடு பகுதியைச் சேர்ந்த முருகையன்(60) அடிக்கடி தனலட்சுமி வீட்டிற்கு வ...
தமிழகம்
குழந்தைகள் கடத்தல் வழக்கு லலிதாவிடம் விசாரிக்க கோர்ட் அனுமதி
புதுச்சேரி : குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட லலிதா, புதுச்சேரி கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் வேலூருக்கு கொண்டு செல்லப்பட்டார். கிருஷ்ணகிரியில் நடந்த குழந்தைகள் கடத்தல் சம்பவம் தொடர்பாக, புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த லலிதா, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில்...
தமிழகம்
பொறியியல் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
சென்னை : பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. கடந்த ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில், 446 தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 870 இடங்கள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 7,850 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படும். இந்த ஆண்டு எத்தனை கல்லூரிகளுக்...
தமிழகம்
மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவி: வருவாய் உச்சவரம்பு ரத்து
சென்னை : மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான வருவாய் உச்சவரம்பு முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2010-11ம் ஆண்டு பட்ஜெட்டில், "மாற்றுத்திறன் படைத்தோர் உயர்கல்வி பயில ஏதுவாக, கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்த அரசு, வரும் கல்வியாண்டிலிருந்து தன...
இந்தியா
ஜூலை 19ம் தேதி பார்லிமென்ட் கூட்டத்தொடர்
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், அடுத்த மாதம் 19ம் தேதி துவங்குகிறது. இந்த கூட்டத்தொடர் ஒரு மாதம் காலம் நடைபெறும்.ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி வரை லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் நடைபெறும். மழைக்கால கூட்டத்தொடரில் பொதுவாக அரசின் சட்டங்களுக்கு, பார்லிமென்டில் அனுமதி கோரப்படுமென, விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. -...
தமிழகம்
விபசாரத்தில் மீட்கப்பட்டோரை சொந்த நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு
சென்னை : விபசார வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள், மீண்டும் நாடு திரும்புகின்றனர். கடந்தாண்டு மார்ச் மாதம் சென்னை நகரில், அரும்பாக்கம், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் விபசாரம் நடப்பதாக வந்த தகவலையடுத்து, போலீசார் வங்கதேசத்தைச் சேர்ந்த ஜெர்சிம் மோனிஷா (எ) ஷீலா (22), ஷபீனா(24), சோனியா...
தமிழகம்
தமிழக போலீசை கண்டித்து மருத்துவ மாணவர் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி: சித்தா, இந்திய மருத்துவ டாக்டர்களை போலீசார் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை சித்தா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சித்த மருத்துவம், இந்திய மருத்துவம் பயின்று டாக்டர் தொழில் செய்யும் மருத்துவர்கள் அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவம் மேற்கொண்டார்கள் என கூறி போலீசாரால் ...
தமிழகம்
அரசு ஆஸ்பத்திரிகளில் காப்பீட்டு திட்டம் : நவீன வசதிகள் ஏற்படுத்த உத்தரவு
திண்டுக்கல் : தமிழகத்திலுள்ள 29 தலைமை அரசு ஆஸ்பத்திரிகளில், காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் இவற்றின் தரத்தை உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான தனியார் ஆஸ்பத்திரிகளில் அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளவர்கள் சிகிச்சை பெற ...
தமிழகம்
பிஎச்.டி., பட்டதாரிகள் குறையை சரிசெய்ய புதிய அகடமி
விஞ்ஞானத்திலும், பொறியியலிலும் பிஎச்.டி., பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் சமீபகாலமாக மிகவும் குறைந்து வருகிறது. இந்த குறைபாட்டை சரிசெய்ய மத்திய அரசின் விஞ்ஞானம் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில், ஒரு புதிய அகடமியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த அகடமியை நிறுவதற்கு பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடிய மத்திய...
தமிழகம்
குடிசைகள் ஒழிப்பு திட்டத்தில் கிராமங்களில் ஜாதி வாரியாக பயனாளிகள் தேர்வு
சென்னை : பயனாளிகள் தேர்வின் போது, அனைத்து கிராம ஊராட்சிகளும், அங்கு வசிக்கும் அனைத்து ஜாதியினரும் பயனடையும் வகையில், திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தில், புதிதாக ஓலைக் குடிசைகள் அமைத்து ஒருவரே பல்வேறு வீடுகளுக்கான பயன்களை அபகரிக்க வாய்ப்புள்ளதால், ஆரம்ப கட்டத்திலேயே பயனாளிகள் பட்டியல் இறுதி செய்...
தமிழகம்
முதல் போக நெல் சாகுபடிக்கு பெரியாறு அணை இன்று திறப்பு
கூடலூர் : கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக பெரியாறு அணை இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் முதல் தேதி அணை திறப்பது வழக்கம். சில ஆண்டுகளில் அணையின் நீர்மட்டத்த...
தமிழகம்
பிசியோதெரபிஸ்ட் பணியிட பதிவுமூப்பு
மதுரை : மருத்துவம் மற்றும் நோய் தடுப்புத் துறையால் அறிவிக்கப்பட்டுள்ள இயன்முறை சிகிச்சையாளர் (பிசியோதெரபிஸ்ட்) பணிக்காலியிடங்களுக்கு பதிவு மூப்பு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. பதிவுமூப்பு, சிபாரிசு செய்யப்பட்டுள்ள பதிவுதாரர்களின் விபரம், www.employment.com என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான வய...
தமிழகம்
வெடிகுண்டு கண்டறியும் 60 குழுவினர் செம்மொழி மாநாட்டு பணிக்காக வருகை
கோவை : செம்மொழி மாநாடு பாதுகாப்பு பணிக்காக, வெடிகுண்டு கண்டறியும் 60 குழுவினர், கோவை வந்துள்ளனர். இவர்களுடன் 18 துப்பறியும் மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரும் 23ல் கோவையில் துவங்குகிறது. 27ம் தேதி வரை நடக்கும் மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள்,...
இந்தியா
தொழிலதிபர் மல்லையா, வக்கீல் ஜெத்மலானி எம்.பி.,க்கள்*பீகாரில் பஸ்வான் வெற்றி
புதுடில்லி:கர்நாடகா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று நடந்த ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, லோக்ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், காங்கிரசின் ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். ராஜஸ்தானில் பா.ஜ., ஆதரவுடன் பிரபல வக்கீல் ஜெத்மலானி வெற்றி பெற்றார்.கர்நாடகா, பீகார், ஜார்க்கண...
தமிழகம்
உள்ளாட்சி நிர்வாகிகள் செனட்டுக்கு தேர்வு
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை செனட்டிற்கு, உள்ளாட்சி மன்ற அமைப்பில் இருந்து ஒரு உறுப்பினரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 30ல் நடக்கிறது. நகராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் இதில் ஓட்டளிப்பர். இத்தேர்தலுக்கான அறிவிப்பு ஜூலை 2ல் வெளியிடப்படும். ஜூலை 9ல் மனுத்தாக்கல் நடக்கும். பரிசீலனை அன்று மாலை 4.15 மணிக...
தமிழகம்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 1901 பணியிடங்கள் ஒதுக்கி உத்தரவு
விருதுநகர் : தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்காக தனிப்பிரிவு அமைக்கப்பட்டு 1,901 பணியிடங்களை ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறையில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. அரசு தினமும் புது, புது திட்டங்களை அறிவிப்பதால் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் பணிச்சுமையில் திண்டாடி வந்தனர். மேலும் புதிய திட்டங்களு...
தமிழகம்
மாற்றுத் திறனாளிகள் பட்டியல் தயாரிப்பு: மாணவர்கள் பாதிப்பு
பழநி : திண்டுக்கல் மாவட்டத்தில், கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி ஒதுக்கப்பட்டுள்ளதால் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்வே சமீபத்தில் நடந்தது. சுமார் 85 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் இருப்பது தெரிய வந்தது. இவர்களது கல்வித்தரம்,...
தமிழகம்
துணை மருத்துவ படிப்பு 9,000 பேர் விண்ணப்பம்
சென்னை : பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு, ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். பி.பார்ம், பி.எஸ்சி., நர்சிங், பி.பி.டி., பி.ஓ.டி., உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு, இம்மாதம் 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இப்படிப்பிற்கு 9,076 பேர் விண்ணப...
இந்தியா
போபால் விவகாரத்தில் பதிலளிக்க சி.பி.ஐ.,க்கு புதிதாக நெருக்கடி
புதுடில்லி : போபால் விஷவாயு கசிவு வழக்கு விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இன்று நடக்கவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் சி.பி.ஐ.,க்கு ஏற்பட்டுள்ளது. போபால் விஷவாயு கசிவு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து நாடு முழுவதும் கடும் சர்ச்சை நில...
இந்தியா
கதகளி ஆடி 74 வயது மூதாட்டி கலக்கல்
குருவாயூர் : பாஞ்சாலி வேடமணிந்து கதகளி அரங்கேற்றம் நிகழ்த்தி, 74 வயது மூதாட்டி கலக்கினார். கேரள மாநிலம் எர்ணாகுளம் ரவிபுரத்தைச் சேர்ந்தவர், கோவிந்தன் குட்டி மேனன்; இவரது மனைவி மாலதி(74). இவர், 25 ஆண்டுகளாக, "திருவாதிரை களி' எனும் நடனத்தை பலருக்கும் பயிற்றுவித்து வந்தார். கதகளி நடனம் பயில வேண்டும் என்ற ஆவலில், ஆறு மாதங்...
இந்தியா
ஞானேஸ்வரி ரயில் விபத்து பலி 3 பேர் காரணம் என அறிவிப்பு
கோல்கட்டா : ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு, பி.சி.பி.ஏ., (போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி) அமைப்பைச் சேர்ந்த மூன்று பேரே காரணம் என, சி.பி.ஐ., குற்றம் சாட்டியுள்ளது. நக்சலைட்களின் ஆதரவு பெற்ற இவர்களைப் பற்றி தகவல் கொடுப்போருக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இது தொடர்ப...
இந்தியா
முதல் போக நெல் சாகுபடிக்கு பெரியாறு அணை இன்று திறப்பு
கூடலூர் : கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக பெரியாறு அணையில் இருந்து இன்று நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் முதல் தேதி திறப்பது வழக்கம். இந்த ஆண்டு ஜூன் முதல் தேதி நீ...
தமிழகம்
வேகமாக இயக்கப்படும் வாகனங்களால் விபத்து
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் குறுகலான ரோடுகளில் வேகமாக பஸ்கள்,ஆட்டோக்கள் இயக்கப்படுவதை தடுக்க போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னாளபட்டியில் பஸ்கள் இயக்கப்படும் ரோடுகள் ஆக்கிரமிப்புகளால் குறுகலாக உள்ளன. சமீபத்தில் ரோடு அகலப்படுத்தும் பணி நடந்தது. அகலப்படுத்தப்பட்ட பகுதிகளில் வர்த்தக நிறுவனங்களுக்கு வரும...
தமிழகம்
வெள்ள நீர் அரித்த பகுதியில் தடுப்புச்சுவருக்கு கோரிக்கை
வடமதுரை: சித்துவார்பட்டி ஊராட்சி சீரங்ககவுண்டனூரில் வெள்ளத்தினால் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். அய்யலூர் அருகே சுக்காம்பட்டி ஊராட்சி பகுதியில் சேகரமாகும் மழை நீர் மாங்கோம்பை காட்டாறாக உருவாகி வருகிறது. சீரங்ககவுண்டனூர், வடுகபட்டி, சித்துவார்பட்டி, பிலாத்து மந்தை குளத்தை அடைகிறது. 2005ல் பெய்...
தமிழகம்
அடிப்படை வசதியில்லாத தந்திமேடு
கொடைக்கானல்: கொடைக்கானல் நகராட்சி 7 வது வார்டுக்குட் பட்ட தந்திமேடு, நகர்பகுதியில் இருந்தும் அடிப் படை வசதியில்லாமல் உள்ளது. கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டு தந்திமேட்டில் 500க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப்பகுதிக்கு செல்ல தற்போது வரை ரோடு வசதியில்லாததால் கரடு,முரடான செங்குத் தான மற...
தமிழகம்
எரியோட்டில் தி.மு.க., கூட்டம்
வடமதுரை: எரியோட்டில் ஒன்றிய தி.மு.க., சார்பில் கோவை உலக தமிழ் செம்மொழி மாநாடு விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., முத்துச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சித் தலைவர் கவிதா, ஒன்றிய தலைவர் நடராஜன், பேரூராட்சித் தலைவர் மஞ்சுளா முன் னிலை வகித்தனர். நகர செயலாளர் ஜீவா வரவேற்றார். ஒன்றிய அவைத்தலைவர் மருதநாயக...
தமிழகம்
கட்டடங்களை செப்பனிட நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் தேவை
செம்பட்டி: செம்பட்டி அருகே புதுக்கோடாங்கிபட்டி காலனியில் பாழடைந்த நிலையிலுள்ள அரசு கட்டடங்களை பயன் பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கு முன் செம் பட்டியை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் அரசுக்கு வழங்கப்பட்டது. இந்த இடத்தில் தொழுநோய் சிகிச்சைக்கான ஆஸ்பத்திரி கட்டப்...
தமிழகம்
டிரைவர் பணியில் ராணுவ வீரர் நியமனம் தொடர்வதால் மகிழ்ச்சி
திண்டுக்கல்: தமிழகத்தில் அரசுத்துறைகளில் ஓய்வு பெறும் வாகன ஓட்டுனர்களுக்கு பதிலாக புதிதாக நியமனங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இதற்கு பதிலாக முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இந்த வாய்ப்பளிக்கப்படுகிறது.இவர்களுக்கு 8 ஆயிரத்து 392 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. அரசுத்துறைகளில் வாகன ஓட்டுனர்களாக முன்னாள் ராணுவ வீரர்கள் ...
தமிழகம்
கிராமங்களில் வேலையில்லாதோர் விபரம்,சேகரிப்பு பணி தீவிரம்
திண்டுக்கல்: தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆறு கிராமங்களை தேர்வு செய்து மக்கள் என்ன வேலை செய்கிறார்கள், வேலையில்லாமல் இருப்பவர்கள் எத்தனை பேர் என்ற கணக்கெடுப்பை புள்ளியியல் துறையினர் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் புள்ளியியல் துறையினர் ஒவ் வொரு மாவட்டத்திலும் ஆறு கிராமங்களை மாதிரி கிராமங்களாக தேர்வு செய்து அங்குள...
தமிழகம்
பாராட்டு விழா
வடமதுரை: கொல்லப்பட்டி கிராம அளவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மார்க் பெற்ற மாணவர்களுக்கு வடமதுரை நகர தி.மு.க., இளைஞரணி சார்பில் பாராட்டு விழா நடந்தது. அமைப்பாளர் கணேசன் தலைமை வகித் தார். ஊர் பிரமுகர்கள் வெங் கடநாயக்கர், சுப்பையா, அழகுமலை முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார்.கார்த்திகா,விஜி,...
தமிழகம்
வரி கட்டாத வாகனங்கள் பறிமுதல்,ஆட்டோ டிரைவர்களுக்கு எச்சரிக்கை
திண்டுக்கல்: வரி கட்டாமல், அதிகளவு பள்ளிக்குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற ஆட்டோ உட்பட 36 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலர் பன்னீர் செல்வம் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வாளர் சண்முகம், தர்மானந்தம், சிவக்குமார், ராஜ்குமார், ஆனந்தன், பாஸ்கர் ஆகியோர் வாகனங்களை ஆய்வு செய்தனர். ஆய்வி...
தமிழகம்
ரயில் தண்டவாளத்தில் ஆய்வு
திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் ரயில்வே லைன் ஆய்வுக்குழு போலீசார்,வருவாய்த்துறையினர் இணைந்து செயல்படுகின்றனர். விழுப்புரத்தில் ரயில் வே தண்டவாளம் வெடிகுண்டு வைத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தகர்க்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்வே லைன் களிலும் கூடுதல் கண்காணிப்பு மற்றும் தண்டவாளத்த...
தமிழகம்
ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்திற்கு பூஜை
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே நான்கு ஊராட்சிகள் பயன்படும் வகையில் 65 லட்சம் ரூபாய் செலவில் அமைய உள்ள கூட்டு குடிநீர் திட்டத்திற்கு பூமி பூஜை போடப்பட்டது. காளாஞ்சிபட்டி, கே. அத்திக்கோம்பை, கொல்லபட்டி மற்றும் லெக்கையன்கோட்டை ஆகிய நான்கு ஊராட்சிகளில் மழை சரிவர பெய்யாவிட் டால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்...
தமிழகம்
வரதட்சணை கொடுமை சித்தா டாக்டர் மீது வழக்கு
வடமதுரை: வடமதுரை குஞ்சாகவுண்டனூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் சாந்தி(26). இவருக்கும், கோவை பீளமேட்டைச் சேர்ந்த சித்தா டாக்டர் செந்தில்குமாருக்கும் கடந்த ஜனவரியில் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 12 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப் பட்டுள்ளது. செந்தில்குமார் தனது மனைவியை, தனக்கு தகுதியானவர் இல்லை, எனக்கூறி பல்வேற...
தமிழகம்
உதவித்தொகைக்கு வழங்கிய செக் திரும்பியது
வேடசந்தூர்: வேடசந்தூரில் வறியோர் நிவாரண தாசில்தார் வழங்கிய உதவித்தொகைக்கான செக் திரும்பியது. குட்டத்தைச் சேர்ந்தவர் நதியா. இவரது கணவர் இறந்ததால் பத்தாயிரம் ரூபாய்க்கான ஐ.ஓ.பி., செக்கை வேடசந்தூர் தனித் தாசில்தார் கடந்த 11.03.10ல் வழங்கினார். வேடசந்தூர் தபால் அலுவலகத்தில் கணக்கை தொடங்கி 19.03.10 தேதியன்று செக்கை நதியா கல...
தமிழகம்
குண்டர் சட்டத்தில் கைது
திண்டுக்கல்: சின்னாளபட்டியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வள்ளலார் உத்தரவிட்டுள்ளார். சின்னாளபட்டியை சேர்ந்தவர் சரவணன்(31). இவர் செயின் பறிப்பு, வீடு புகுந்து திருட்டு, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது திருப்பூரில் 3 ...