category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | அய்யம்பாளையம் வாரச்சந்தை மாற்றி அமைக்க கோரிக்கை | அய்யம்பாளையம்: அய்யம்பாளையம் வாரச்சந்தை இடத்தை மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.அய்யம்பாளையம் வாரச்சந்தை 4வது வார்டு ஆஸ்பத்திரி தெருவில் உள்ளது. திங்கள் தோறும் காலை முதல் மாலை வரை சந்தை நடக்கிறது. இந்த இடத்தை சிலர் கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள் ளது. இடம் சுத்தமில்லாமல் முட்செடிகள் வளர்ந்து ... |
தமிழகம் | எரியோடு அருகே கோஷ்டி மோதல் | வடமதுரை: எரியோடு செல்லக் குட்டியூரில் வீட்டின் வழி யே மின்வயர் கொண்டு செல்வது தொடர்பாக பிச்சைமுத்து தரப்பினருக்கும், வெங்கடேசன் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இப்பிரச்னை குறித்து பேச நேற்று காலை இரு தரப்பு பெரியவர்கள் முன்னிலையில் கூடியிருந்தனர். அப்போது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பும் அடி-தடியில் ஈடுபட்ட... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டு வாகன பிரசாரம் துவக்கம் | திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத் தில் செம்மொழி மாநாட்டு விழிப்புணர்வு பிரசார வாகனம் துவக்கி வைக்கப் பட்டது. கோவையில் நடக் கும் செம்மொழி மாநாட் டை வலியுறுத்தும் இந்த பிரச்சார வாகனம் திண்டுக் கல்லின் முக்கிய வீதிகள் வழியாக வரும். கலெக்டர் வள்ளலார் துவக்கி வைத்தார். திட்ட அதிகாரி அருண் மணி, நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியா... |
General | ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் தடை | வாஷிங்டன்: அமெரிக்காவில் இயங்கும் ஈரான் நிறுவனங்களுக்கு தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.அமெரிக்காவில் இயங்கும் ஈரானிய நிறுவனங்கள், ஈரான் நாட்டு அணுசக்தி திட்டங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டவையாக உள்ளன. அமெரிக்காவில் வசிக்கும் ஈரானிய வர்த்தகர்களுக்கும் இதில் தொடர்பு உண்டு. ஏற்கனவே ஈரானின் அணு ஆயுத திட்டங்களை எத... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | பழநி: பழநியில் மார்க். கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஆஸ்பத்திரிக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும். தனியார் பஸ்களில் கூடுதல் பஸ்கட்டணம் வசூலிப் பதை தடை செய்ய வேண் டும். கூடுதல் கல்வி கட்டணம் வாங்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்தப் பட்டது. நகராட்சி தலைவர் ராஜம... |
தமிழகம் | மாணவியிடம் சில்மிஷம் | திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த போலீஸ் ஏட்டு மகள் சுதா(14), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் திண்டுக் கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவரிடம் பள்ளி ஆசிரியர் வில்லியம், குப்பை யை அள்ள சொல்லியுள்ளார். மாணவி மறுக்கவே,அவரிடம் ஆசிரியர் சில்மிஷம் செய்ததாக புகார் எழுந் தது. இது குறித்து நகர... |
தமிழகம் | கற்பழித்ததாக புகார் | திண்டுக்கல்: தூத்துக்குடி அருகேயுள்ள கயத்தாறைச் சேர்ந்தவர் சுடலைமணி(25). இவர் இதே பகுதியை சேர்ந்த எஸ்தர்மேரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்து வந்துள்ளார்.திண்டுக்கல்லில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து தன்னை கற்பழித்ததாக நகர் வடக்கு போலீசில் அந்த பெண் புகார் செய்துள்ளார்.இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்... |
தமிழகம் | 24ம் தேதி சந்திப்பு கசப்புணர்வு நீங்குமா? | இஸ்லாமாபாத்: வரும் 24ம் தேதி இஸ்லாமாபாத்தில் வெளியுறவு செயலர்கள் சந்திப்பு நடக்கிறது. இக் கூட்டத்தின் மூலம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நிலவும் முக்கிய பிரச்னைகளை தீர்க்க விடிவு காலம் ஏற்படும் என நம்பப்படுகிறது.சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் கூட்டம் வரும் 26ம் தேதியும்,வெளியுறவு அமைச்சர் களின் கூட்டம் ... |
தமிழகம் | வாலிபருக்கு மிரட்டல் | திண்டுக்கல்: திண்டுக்கல் எம்.ஜி. ஆர்., நகரைச் சேர்ந்தவர் முத்து லட்சுமி (45).இவரது கணவர் நல்லதம்பி இறந்து விட்டார். இந்நிலையில் திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்த ரவி(28), நட்பு ரீதியாக முத்துலட்சுமி வீட்டிற்கு வந்துள்ளார். இதை பயன்படுத்தி, முத்துலட்சுமி தனக்கும், ரவிக்கும் திருமணம் நடந்த தாக போலி ஆதாரம் தயாரித்து,... |
தமிழகம் | மின்சக்தி செலவை குறைக்க சீனா அதிரடி நடவடிக்கை | பீஜிங்:கடுமையான மின்பற்றாக்குறைப் பிரச்னையால் திண்டாடி வரும் சீனா, அதைச் சமாளிக்க, அதிகளவில் மின் சக்தியைப் பயன்படுத்தும் நிறுவனங்களின் உற்பத்தியை குறைப்பது குறித்தும், அந்நிறுவனங்களை இழுத்து மூடும் முயற்சிகளில் ஈடுபடுவது குறித்தும் ஆலோசித்து வருகிறது.சீனாவின் தென்மேற்கு மாநிலங்களான சிச்சுவான், குவான்ஜி போன்றவற்றில் மி... |
தமிழகம் | எல்.கே.ஜி., மாணவர் செப்டிக் டாங்கில் விழுந்து பலி: உறவினர்கள் முற்றுகை | திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தனியார் பள்ளி வளாகத்திலிருந்த செப்டிக் டாங்கில் மூன்று வயது சிறுவன் தவறி விழுந்து இறந்தான். திண்டுக்கல் அருகேயுள்ள வெள்ளமரத்துப்பட்டியை சேர்ந்தவர் அழகுமலை. இவரது மனைவி ஜோதிமணி. இவர்களது 3 வயது மகன் அபிலேஷ், முத்தனம்பட்டியில் உள்ள சுரபி பிரைமரி அன்ட் நர்சரி பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வந... |
தமிழகம் | அரசு ஆஸ்பத்திரிகளில் காப்பீட்டு திட்டம் நவீன வசதிகள் ஏற்படுத்த உத்தரவு | திண்டுக்கல்: தமிழகத்திலுள்ள 29 தலைமை அரசு ஆஸ்பத்திரிகளில் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் இவற்றின் தரத்தை உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான தனியார் ஆஸ்பத்திரிகளில் அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளவர்கள் சிகிச்சை பெற வசதி... |
தமிழகம் | இந்திய மாணவர் கொலை 15 வயது சிறுவன் திடீர் கைது | மெல்போர்ன்:ஆஸ்திரேலியாவில் கடந்த ஜனவரி மாதம் இந்திய மாணவர் நிதின் கார்க் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் பலர் படித்து கொண்டே ஓட்டல்களிலும், பெட்ரோல் "பங்க்'குகளிலும் பகுதி நேரம் வேலை செய்கின்றனர். வேலை செய்து ... |
தமிழகம் | புதரில் மறைத்து வைத்திருந்த வெடி மருந்து மூட்டை பறிமுதல் : விக்கிரவாண்டி அருகே மீண்டும் பரபரப்பு | விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே மதுரப்பாக்கம் கிராமத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்து மூட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர். சித்தணி ரயில் தண்டவாளம் தகர்ப்பு சம்பவத்திற்கு பயன்படுத்தியவையா என, கியூ பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் மதுரப்பாக்கம் காலனி பகு... |
தமிழகம் | பொதுமக்கள் முன்இளைஞர் கொலை தலிபான் ஸ்டைல் | இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள், இளைஞர் ஒருவரை பொதுமக்கள் முன் சுட்டுக் கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர். இவர்களுக்கு பழங்குடியினரின் ஆதரவும் உள்ள தாகக் கூறப்படுகிறது.பல்வேறு... |
தமிழகம் | பட்டாசு ஆலையில் வெடி விபத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு | சிவகாசி : சிவகாசி அருகே, பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை உரிமையாளர், மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி - எம்.புதுப்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் வடபட்டியில் உள்ள பி.ஆர்.சி., பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் வெடி விபத்து நடந்தது. நான்கு பே... |
தமிழகம் | கள்ளக்காதலி மூலம் தம்பியை கொன்ற அண்ணன் : திருப்பூர் தொழிலதிபர் கொலையில் அம்பலம் | திருப்பூர் : பழநி - கொடைக்கானல் மலைப்பாதையில் பிணமாக கிடந்த திருப்பூர் தொழிலதிபர் கொலையில், அண்ணனே, தன் கள்ளக்காதலி மூலம் விஷம் கொடுத்து தம்பியை கொன்றது, விசாரணையில் தெரியவந்துள்ளது; நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் எஸ்.வி., காலனி எட்டாவது வீதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் நாகராஜ்(42). கடந்த ஏப்., 13ல் வீட்டை வ... |
தமிழகம் | தமிழ் பயன்பாடு செம்மொழி மாநாடு தீர்வு காணுமா | அரசு துறைகளுக்குள் சிக்கல் நீடிப்பு: காவல் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட 36 துறைகள் சென்னை தலைமை செயலகத்தில் உள்ளது.இந்த துறைகள் அனைத்தும் ஆங்கில கால நடைமுறைகளை பின்பற்றி வருகின்றன.இவற்றில் காவல்துறை உட்பட பல துறைகளில் தமிழ் ஆட்சி மொழியாக பயன்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.நகராட்சி தலைவர் பதவியை"சேர்மன... |
தமிழகம் | எல்.கே.ஜி., மாணவர் செப்டிக் டாங்கில் விழுந்து பலி: உறவினர்கள் முற்றுகை | திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே தனியார் பள்ளி வளாகத்திலிருந்த செப்டிக் டாங்கில் மூன்று வயது சிறுவன் தவறி விழுந்து இறந்தான். திண்டுக்கல் அருகேயுள்ள வெள்ளமரத்துப்பட்டியை சேர்ந்தவர் அழகுமலை. இவரது மனைவி ஜோதிமணி. இவர்களது 3 வயது மகன் அபிலேஷ், முத்தனம்பட்டியில் உள்ள சுரபி பிரைமரி அன்ட் நர்சரி பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வ... |
தமிழகம் | மாற்றுத் திறனாளிகள் பட்டியல் தயாரிப்பில் மேல்நிலைபள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் | பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி ஒதுக்கப்பட்டுள்ளதால் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்வே சமீபத்தில் நடந்தது. சுமார் 85 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் இருப்பது தெரிய வந்தது. இவர்களது கல்வித்தரம், வ... |
தமிழகம் | உத்தப்புரத்தில் மீண்டும் மோதல் கல்வீச்சில் 3 போலீசார் காயம் | எழுமலை : உத்தப்புரத்தில் சாக்கடையை சுத்தம் செய்ததில் இரு பிரிவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சராமாரியாக நடந்த கல்வீச்சில் எஸ்.ஐ., உட்பட 3 போலீசார் காயமடைந்தனர். மதுரை மாவட்டம், உத்தப்புரத்தில் இரண்டு பிரிவினருக்கிடையே தகராறு இருந்து வருகிறது. இதனால் அங்கு, புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து பாதுகாப... |
தமிழகம் | அதிகமதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நிதியுதவி | தேனி: பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப் பெண் பெற்ற பத்து மாணவர்களுக்கு பிளஸ் டூ படிக்க இரண்டு ஆண்டுகளுக்கு தலா 56 ஆயிரம் வீதம் நிதி உதவிக்கான ஆணை வழங்கப்பட்டது. அரசு பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற் றும் சீர்மரபை சேர்ந்த ப... |
தமிழகம் | கேரள மருத்துவ கழிவுகளால் தேனியில் நோய் பரவும் அபாயம் | தேனி: கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து தேனி மாவட்டத்தின் பல இடங்களிலும் கொட்டி விட்டுச் செல்கின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது பன்றிக்காய்ச்சல் நோய் பரவி பலர் பலியாகி உள்ளனர். கேரளாவில் இருந்து இந்த கிருமிகள் தேனி மாவட்டத்திற்குள் பரவுவதை தடுக்க சுகாதாரத் துறை பல்வேறு... |
தமிழகம் | மருத்துவ மாணவர் ஆர்ப்பாட்டம் | திருநெல்வேலி : சித்தா, இந்திய மருத்துவ டாக்டர்களை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை சித்தா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சித்த மருத்துவம், இந்திய மருத்துவம் பயின்று டாக்டர் தொழில் செய்யும் மருத்துவர்கள் அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவம் மேற்கொண்டார்கள் எனக் கூறி கைது செய்யப்படுகி... |
தமிழகம் | போடியை குப்பை இல்லா நகரமாக்க விழிப்புணர்வு | போடி: போடி யை குப்பையில்லா நகரமாக்க குப்பை வண்டிகளுடன் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. போடி நகராட்சி பகுதியில் குப்பைகளின் தேக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குப்பைகளை அகற்றும் வகையில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக் குறை ஒருபுறமிருக்க ஓரிடத்திலிருந்து அள்ளப்படும் குப்பைகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு வண்டிக... |
தமிழகம் | தெருவிளக்குகள் அமைப்பு | ஆண்டிபட்டி: தேசிய நெடுஞ்சாலை- கிராம சாலை இணைப்பு திட்டத்தின்கீழ் டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் 3.75 லட்சம் ரூபாய் செலவில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. பாப்பம்மாள்புரத்தில் இருந்து டி.வி.ரங்கநாதபுரம் செல்லும் ரோடு மூன்று கி.மீ.,தூரம் உள் ளது. இப்பகுதியில் புதிதாக 39 மின் கம்பங்கள் அமைக் கப்பட்டு 27 தெரு விளக்... |
தமிழகம் | நகராட்சி சந்தை வரி வசூல் மோசடி : அதிகாரிகள் தொடர்பு அம்பலம் | சிவகங்கை : சிவகங்கை வாரச்சந்தையில் ரசீதுக்கான அடிக்கட்டை(நகல்) இன்றி, பல லட்ச ரூபாய் வரை சுருட்டியிருப்பது, லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இங்குள்ள கடைகளில் வரி வசூல் முறைகேடு குறித்த புகாரின்படி, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். வசூலில் ஈடுபட்ட வருவாய் உதவியாளர்களிடம் இருந்து ... |
தமிழகம் | நாளை காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் | தேனி: தேனி மாவட்ட காஸ் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது. கலெக்டர் முத்துவீரன் கூறியதாவது; காஸ் நுகர்வோருக்கு சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம், முறைகேடுகள் குறித்த குறை தீர்க்கும் நாள் கூட்டம் டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. அன... |
தமிழகம் | இந்திய கடலில் நுழைந்த இலங்கை மீனவர்கள் கைது | தூத்துக்குடி : இலங்கை, நீர்க்கொழும்பு அடுத்த திட்டப் பனை பகுதியைச் சேர்ந்த இலங்கை மீனவர்கள் இம்மானுவேல் மார்க்கஸ் (52), வில்பிரட்(52), லலித்(28), சுனில்(55), மிதுன்(20) ஆகியோர், கடந்த 15ம் தேதி ஒரு மோட்டார் படகில் மீன்பிடிக்க வந்தனர்.
நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில், கன்னியாகுமரியில் இருந்து 62 கி. மீ., தென்கிழக்கே இ... |
தமிழகம் | தற்கொலை | கம்பம்: தேவாரம் அருகே உள்ள மூணான்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் மகன் குமார் (26). மூன்று மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இவர், கம்பம் ஏகலூத்து ரோட்டில் உள்ள புளியந்தோப்பி ல் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். எஸ்.ஐ., நிர்மலா விசாரிக்கிறார். |
தமிழகம் | ஊறுகாய்க்கு ஏற்றுமதியாகும் பெரியகுளம் மாங்காய்கள் | பெரியகுளம்: பெரியகுளம் மாங் காய்கள் பதப்படுத்தப் பட்டு ஊறுகாய், ஜூஸ் க் காக வெளிநாடுகளுக்கு ஏற் றுமதி செய்யப்படுகிறது. பெரியகுளம் பகுதியில் நடப்பு ஆண்டு மாங்காய் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இங்கிருந்து மதுரை மாவட் டத்திற்கும், கேரள மாநிலத்திற்குள் மாங்காய்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது ஆந்திரா, க... |
இந்தியா | 12 கிலோ தங்கக்கட்டி, 30 லட்ச ரூபாய் சிக்கியது : மதுரையில் இருந்து கடத்திய ஏழு பேர் சிக்கினர் | அங்கமாலி : சுற்றுலா பஸ்சில் மதுரையில் இருந்து 12 கிலோ தங்கக் கட்டிகளையும், 30 லட்ச ரூபாயையும் கடத்தி வந்த ஏழு பேர் சிக்கினர். அவர்களிடம் தங்கக் கட்டிகளுக்கோ அல்லது ரூபாய் நோட்டுகளுக்கோ எந்தவித ஆதாரமும் இல்லை.
எர்ணாகுளம் மாவட்டம் காலடி பகுதியில் கோவிலில் உள்ள விக்ரகங்கள் களவு போன வழக்கு குறித்து, போலீசார் விசாரித்து வரு... |
தமிழகம் | ஏ.டி.எம்., கார்டு வழங்கல் | பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டியிலுள்ள பி.டி.ஆர்., ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு, சிட்டி யூனியன் வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தி ஏ.டி.எம்., கார்டுகள் வழங்கினார். தாளாளர் முத்துமாணிக்கம் தலைமை வகித்தார். செயலாளர் நவுஷாத் முன்னிலை வகித்தார். முதல்வர் பிரகாசம் நன்றி கூறினார். |
இந்தியா | தெலுங்கு தேச பிரமுகர் காரில் ரூ.7 கோடி: வரித்துறை அதிரடி | திருப்பதி : தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய பிரமுகரின் காரில் இருந்து ஏழு கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதை அடுத்து, அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் ஹரிபாபு; சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய பதவியையும் இவர் வ... |
இந்தியா | கேரள முதல்வரின் ஆலோசகர் ஆக்கிரமித்த அரசு நிலம் மீட்பு | மூணாறு : கேரள முதல்வரின் ஆலோசகர் ஆக்கிரமித்து இருந்த மின்வாரிய நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர். மூணாறு காலனிக்கு செல்லும் ரோட்டில் குரூஸ் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலின் பின் பகுதியில் கட்டுமானப்பணிகள் நடந்து வந்தன. சட்டவிரோதமாக கட்டுமானப்பணிகள் நடப்பதாக கூறி வருவாய்த்துறை சிறப்பு அதிகாரி ஆபரகாம் மைக்கேல்... |
தமிழகம் | கிராம மக்களுக்கு ஊரக வேலை உறுதி திட்டம் மழையில்லாததால் விவசாய பணிகள் இல்லை கை கொடுக்கிறது | தேனி: தேனி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் தொடர்ந்து மூன்று சாகுபடியும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. இருப்பினும் வேலை உறுதி திட்டம் கிராம மக்களுக்கு கை கொடுத்து வருகிறது. தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், சின்னமனூர், ஆண்டிபட்டி ஒன்றியங்களில் மானாவாரி நிலங்கள் அதிகம் உள்ளன. கடந்த ஆண்டு மழையில்லாததாலும், தற்போது வரை ... |
தமிழகம் | மாவட்ட எல்லையில் செம்மொழி மாநாட்டு சுடருக்கு வரவேற்பு | தேனி: கோவை செல்லும் வழியில் தேனி மாவட்டம் வந்த உலக செம்மொழி மாநாட்டு சுடருக்கு கலெக்டர் முத்துவீரன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து உலக செம்மொழி மாநாட்டு சுடர் நேற்று தேனி மாவட்டத்திற்கு வந் தது. உசிலம்பட்டி முத்துராமலிங்கதேவர் கல்லூரி மாணவர்கள் சுடரை ஏந்தி வந்தனர். ஆண்டிபட்டியில் மாவட்ட எல... |
தமிழகம் | பள்ளி புனரமைப்பு திட்டத்தில் 155 பணிகள் மேற்கொள்ள முடிவு | தேனி: ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப்பள்ளி புனரமைப்பு திட்டத்தில் 155 பணிகளை மேற் கொள்ள நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. கலெக்டர் முத்துவீரன் கூறியுள்ளதாவது; அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல் படுத்தப்படும் ஊராட்சிகளில் ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப்பள்ளி புனரமைப்பு திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட் ... |
தமிழகம் | அமைச்சர் பெயரில் போலி கடிதம் கைதானவர் மீது மோசடி புகார் | கோவை : அமைச்சர் பெயரில் போலி சிபாரிசு கடிதம் கொடுத்து கைதானவர் மீது, அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.1.5 லட்சம் மோசடி செய்ததாக மேலும் ஒரு புகார் செய்யப்பட்டுள்ளது.கோவை, செல்வபுரத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன்(52); ரியல் எஸ்டேட் உரிமையாளர். சமீபத்தில், மாணவியை பள்ளியில் சேர்க்கும்படி அமைச்சர் பெயரில் சிபாரிசு கடிதம் கொட... |
தமிழகம் | பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது | விழுப்புரம் : கணவன் இறந்ததால் உழவர் பாதுகாப்புத் திட்ட நிவாரண நிதியை பெற, சான்றிதழ் கேட்டு வந்த பெண்ணிடம், லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆனாத்தூரைச் சேர்ந்தவர் பாலு(35). விவசாயி. இவர் கடந்தாண்டு வாகன விபத்தில் இறந்தார். தமிழக அரசின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில்... |
தமிழகம் | 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது | செங்கல்பட்டு : கூடுவாஞ்சேரியில் நிலத்தை உட்பிரிவு செய்து பட்டா வழங்க, 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சென்னை கே.கே., நகர் அப்பாதுரை தெருவைச் சேர்ந்தவர் மோகன்; கட்டட கான்ட்ராக்டர்; இவரது மனைவி செங்கேணி. இவருக்கு சொந்தமான 2,000 சதுரடி காலி மனை கூடுவாஞ்சேரியில் உள்ளது. அந்த இடத்தை... |
தமிழகம் | ரேஷன் விற்பனையாளர்கள் 4 பேர் சஸ்பெண்ட் | தேனி: முறைகேடுகள் கண்டறியப்பட்டதால் நான்கு ரேஷன் கடை விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் சின்னமனூர், கூடலூர் பகுதிகளில் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் மண்டல இணைபதிவாளர் குருமூர்த்தி தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில் சின்னமனூர் கடை எண் மூன்றில் 10607 ரூபாய் முறைகேடு கண்டறியப்பட்ட... |
தமிழகம் | புதிய அழ்குழாய்கள் அதிகாரிகள் ஆய்வு | தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியப் பகுதியில் புதிதாக போடப்பட்டுள்ள ஆழ்குழாய்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு தேனி மாவட் டத்தில் கோடை காலத்தில் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பிரச்னை ஏற்படும் கிராமங்களில் குடிநீர் நிலைகள் பற்றி ஆய்வு செய்யப் பட்டது. தொடர் நடவடிக்கையாக பெரியகுளம் ஒன்றியத்தில் மேல்மங்கல... |
தமிழகம் | மன்றங்கள் துவக்கவிழா | தேனி: கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், நுகர்வோர் பாதுகாப்பு சுற்றுச்சூழல் தொன்மை பாதுகாப்பு மன்றங்களின் துவக்கவிழா நடந்தது. தமிழ் மன்றத்திற்கு விஜயராணி, ஆங்கில மன்றத் துக்கு பாக்கியலட்சுமி, கணித மன்றத்திற்கு துரைராஜ், அறிவியல் மன்றத் திற்கு வேல்முருகன் செயலாளராக தேர்வ... |
தமிழகம் | ஊரக வேலை உறுதி திட்டத்தில் பதிவு செய்வோர் அதிகரிப்பு | தேவதானப்பட்டி: தேனி மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் வேலை கேட்டு பதிவு செய்வோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளாக தேனி மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் 130 கிராம ஊராட்சிகளில் நீர் வரத்து வாய்க்கால், கண்மாய், ஊரணி ஆகியவை தூர்வார்தல் பணிகள் நடந்து வருகிறது. ... |
தமிழகம் | அரிசி கடத்தல்: பஸ் டிரைவர் மீது வழக்கு | தேனி: பஸ்சில் ரேஷன் அரிசி கடத்தியதற்கு துணை புரிந்ததாக அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய் துள்ளனர். குமுளி சோதனை சாவடியில் ராயப்பன்பட்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது குமுளி சென்ற அரசு பஸ்சை சோதனையிட்டனர். அதில் 25 ரேஷன் அரிசி மூடைகள் இருந்த... |
தமிழகம் | கார் மரத்தில் மோதி விபத்து | கோம்பை: தேவாரத்தை சேர்ந்த மகாராஜன்(26). இவர், தனது காரில் கம்பத்திலிருந்து தேவாரம் வந்தார். கோம்பை சிக்கச்சியம்மன் மேடு பகுதியில் வண்டி நிலை தடுமாறி புளிய மரத்தில் மோதியது. இதில் பயணம் செய்த தேவாரம் நகர காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜசேகரன்(56), நாகராஜ்(48), முருகேசன்(45) மற்றும் மகாரஜன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். ராஜசேகர... |
தமிழகம் | தற்கொலை | தேனி: தேனி பவர்ஹவுஸ் தெருவில் வசிக்கும் மதிவாணன் மனைவி மாரிச் செல்வம் (24). இவர்களுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள் ளனர். இந்நிலையில் நேற்று மாரிச்செல்வம் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். பெரியகுளம் ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி வருகிறார். |
தமிழகம் | பாளை., சிறைக் கைதிகளின் படைப்புகள் செம்மொழி மாநாட்டில் பங்கெடுப்பு | திருநெல்வேலி : பாளையங்கோட்டை மத்திய சிறைவாசிகளின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள்தண்டனை கைதிகளாக இருக்கும் 71 பேரின் குழந்தைகள், விடுதலையான கைதிகள் 12 பேரின் குழந்தைகள், குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் 22 பேரின் குழந்தைகள் என மொத்தம் 241 மாணவ, மாணவியருக்கு பெத்தேல் தொண... |
தமிழகம் | யானை தாக்கி ஒருவர் பலி | மூணாறு: மறையூர் அருகே கம்மாலன்குடியை சேர்ந்த ஆதிவாசி முருகன் (38). இவர், இருட்டலைக்குடியில் கோயில் விழாவிற்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது முருகனை காட்டு யானை தாக்கியதில் இறந்தார். ஆதிவாசி மக்கள் மறையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து போலீசார் உடலை மீட்டனர். |
தமிழகம் | தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல் 3 பேர் பலி; 58 பேர் படுகாயம் | திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் பலியாயினர்; 58 பேர் காயமடைந்தனர். மதுரையில் இருந்து நேற்று அருப்புக்கோட்டைக்கு பழனி (டி.என்.,67ஏஏ, 5604) என்ற தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை செக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த டிரைவர் பாலசந்திரன் ஓட்டிச் ... |
தமிழகம் | கடையை உடைத்து திருட்டு | தேனி: கடமலைக்குண்டை சேர்ந்தவர் ரவி (41). இவர், வருஷநாட்டில் உள்ள மெயின் ரோட்டில் லேத் வைத்துள்ளார். இந்த லேத் கதவினை நேற்று முன்தினம் உடைத்து டேப், வி.சி.டி., பிளேயர் உட்பட பொருட் களை திருடிச் சென்று விட்டனர். வருஷநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
தமிழகம் | வரதட்சணை கொடுமை மாமியார் கைது | தேனி: ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டி வேலாண்டி கவுண்டர் தெருவை சேர்ந்த குமார் மனைவி கவிதா (25). இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. திருமணத்தின் போது 15 பவுன் நகை மற்றும் சீர்வரிசை செய்துள்ளனர். இந்நிலையில் கவிதாவை அவரது கணவர் குமார்(27), மாமியார் பழனியம்மாள் (48), உறவினர் லட்சுமி (24) ஆகியோர் வரதட்சணை கேட்... |
தமிழகம் | வீடு புகுந்து திருட்டு | தேனி: அல்லிநகரம் மேற்கு விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் கையுபீகான் (34). இவர், வெளியூர் சென்றிருந்த நேரத்தில் யாரோ வீட்டை உடைத்து பீரோவில் இருந்த இரண்டேமுக்கால் பவுன் நகையினை திருடிச் சென்று விட்டனர். அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
தமிழகம் | வேன் கவிழ்ந்து விபத்து | தேவதானப்பட்டி:காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் திருமணத்திற்கு சுக்குவாடன்பட்டியில் இருந்து ஒரு வேனில் 15 பேர் பயணம் செய்தனர். தேவதானப் பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே வேன் வந்த போது ரோட்டை கடந்தவர் மீது மோதுவதை தவிர்க்க முயன்றபோது வேன் கவிழ்ந்தது. வேனில் பயணம் செய்த மணமகன் அழகேசன் சிறிய காயத்துடன் தப்பினார். பின் இவர், கோயி... |
தமிழகம் | மாணவி மாயம் | தேனி: அல்லிநகரம் பொம்மையகவுண்டன்பட்டி பள்ளி ஒடைத்தெருவை சேர்ந்த ராஜா மகள் மீனா (17). இங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த மீனா, பள்ளிச்சீருடை வாங்கி வருவதாக கூறி பஜாருக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. ராஜா புகாரில் அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். |
தமிழகம் | மறியல் செய்த 12 பேர் மீது வழக்கு | தேனி:வீரபாண்டி அருகே காமராஜபுரம் இந்திரா காலனியில் ஒரு வாரமாக குடிநீர் சப்ளை கிடைக்கவில்லை. குடிநீர் கேட்டு 12 பேர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். |
தமிழகம் | கடியப்பட்டணத்தில் கடல் சீற்றம் அதிகரிப்பு வீடுகள் இடிந்து விழும் அபாயம் | மணவாளக்குறிச்சி: கடியப்பட்டணம் கடலில் நேற்று அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. ராட்ஷச அலையால் வீட்டிற்குள் கடல் நீர் புகுவதால் வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கு கடற்கரை பகுதியில் ஓரள... |
தமிழகம் | சுடுகாட்டில் தகராறு செய்த மூவர் கைது | தேனி:உத்தமபாளையத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் (28). இவரது தாத்தா இறந்து விட்டார். இறுதிச்சடங்கின் போது ஸ்டாலின் கொல்லி வைத்தார். அப்போது இவரது உறவினர்கள் முத்துகிருஷ்ணன் (39), முருகன் (26), மாரியப்பன் ஆகியோர் சொத்துப்பிரச்னைக்காக தகராறு செய்து ஸ்டாலினை தாக்கினர். காயமடைந்த ஸ்டாலின் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்ப... |
தமிழகம் | தென்னந்தோப்பில் கார் கவிழ்ந்து 8 பேர் படுகாயம் | கன்னியாகுமரி: கொட்டாரம் அருகே அதிகாலையில் கார் தென்னந்தோப்பில் கவிழ்ந்த விபத்தில் எட்டு பேர் படுகாயம் அடைந்தனர்.கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தை சேர்ந்த ஒருவர் நேற்று வெளிநாட்டிற்க சென்றார். அவரை திருவனந்தபுரம் ஏர்போர்டில் கொண்டு விடுவதற்காக கோவளத்தை சேர்ந்த பத்து பேர் அம்பாஸிட்டர் கார் மூலம் திருவனந்தபுரம் சென்று விட்டு... |
தமிழகம் | லாரி மோதி ஒருவர் பலி | ஆண்டிபட்டி: திம்மரசநாயக்கனூரை சேர்ந்தவர் காளிராஜ் (29). இவர், தனது இருசக்கர வாகனத்தில் ஹெல் மெட் அணியாமல் ஆண்டிபட்டியில் இருந்து திம்மரசநாயக்கனூர் சென்றார். தனியார் பொறியியல் கல்லூரி அருகே செல்லும் போது எதிரே வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்து இறந்தார். |
தமிழகம் | தேனி மாவட்டத்தில் மீண்டும் காலரா அபாயம்: போடியில் பாதிப்பு | போடி: போடியில் வாந்தி, வயிற்று போக்கு காரணமாக 50 க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பத்து பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். போடியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நகராட்சி பகுதியில் குடிநீர் கலங்கலாகவும், குளோரினேசன் செய்யப்படாமலும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. நகரில் ... |
தமிழகம் | கேரள முதல்வரின் ஆலோசகர் ஆக்கிரமித்த அரசு நிலம் மீட்பு | மூணாறு: கேரள முதல்வரின் ஆலோசகர் ஆக்கிரமித்து இருந்த மின்வாரிய நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர். மூணாறு காலனிக்கு செல்லும் ரோட்டில் குரூஸ் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலின் பின் பகுதியில் கட்டுமானப்பணிகள் நடந்து வந்தன. சட்டவிரோதமாக கட்டுமானப்பணிகள் நடப்பதாக கூறி வருவாய்த்துறை சிறப்பு அதிகாரி ஆபரகாம் மைக்கேல் ... |
தமிழகம் | முதல் போக நெல் சாகுபடிக்கு பெரியாறு அணை இன்று திறப்பு | கூடலூர்: கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக பெரியாறு அணையில் இருந்து இன்று நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் முதல் தேதி திறப்பது வழக்கம். சில ஆண்டுகளில் அணையின் நீர்மட்... |
General | உலககோப்பை கால்பந்து: பிரான்ஸ் அதிர்ச்சி தோல்வி | போலோக்வானி: உலககோப்பை கால்பந்து போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பிரான்ஸ்- மெக்சிகோ இடையிலான போட்டியில், மெக்சிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை தோற்கடித்தது. ஏற்கனவே முதல் போட்டியிலும் தோற்ற பிரான்ஸ் அணி, இரண்டாவது போட்டியிலும் தோல்வியடைந்ததால் அந்நாட்டு ரசிகர... |
தமிழகம் | பட்டாவை மாற்றி மோசடி ஒருவருக்கு 2 ஆண்டு சிறை | சிவகங்கை: மானாமதுரையில் பட் டாவை மாற்றி மோசடி செய்தவருக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மானாமதுரை அருகே கீழப்பசலையை சேர்ந்தவர் விவசாயி பாலுச்சாமி (62). அதே ஊரை சேர்ந்தவர் முருகேசன் (42). இவரது மனைவி கீழப்பசலை ஊராட்சி தலைவராக இருந்தார். கடந்த 2006 ஜூலை 31 ம் தேதி, வங்கி கடன் வாங்க முருகேசனிடம், நில பட்டாவை... |
தமிழகம் | டிரைவர்களுக்கு தியான பயிற்சி | சிவகங்கை: சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், டிரைவர்களுக் கான தியான பயிற்சி நடந்தது.பிரம்ம குமாரிகள் அமைப்பு பொறுப்பாளர் விமலா பயிற்சி அளித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார் பேசுகையில், ""வாகனம் ஓட்டும் போது குடும்ப பிரச்னைகளை நினைக்க கூடாது. குடிபோதை, மொபைல் போனில் பேசி கொண்டு வாகனம் ஓட்டுவது குற... |
தமிழகம் | சந்தேக ரேஷன் கார்டுகளுக்கு சிக்கல்,ஆய்வு பணி மந்தம் | சிவகங்கை: சந்தேக அடிப்படையில் பொருள் வினியோகம் நிறுத்தப்பட்ட ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நடந்த போலிகளை கண்டறியும் பணியில், 34 ஆயிரத்து 577 கார்டுகள் சந்தேக பட்டியலில் வைக்கப்பட்டு, பொருள் நிறுத்தம் செய்யப் பட்டது. மேல்முறையீடு செய்ய அளிக்கப்பட்ட வாய்ப் பில், 13 ஆயிரத்து 400... |
தமிழகம் | 6 மாணவருக்கு ஒரு பள்ளி; கட்டடம் பழுதால் கிராமத்தினர் அச்சம் | காளையார்கோவில்: காளையார்கோவில் அருகே இலந்தக்கரை தொடக்கப்பள்ளியில் ஆறு மாணவர், ஒரு தலைமை ஆசிரியர் மட்டுமே உள்ளனர். கட்டடம் சேதம் அடைந்துள்ளதால், மாணவர் எண்ணிக்கை சரிந்துள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம் போன்ற திட்டங்கள் மூலம் மத்திய, மாநில அரசுகள் கல்வித்துறைக்கு ஏராளமான நிதி ஒதுக்குகின்றன. இதன்மூலம் ஆங்கிலம், அறிவியல் ... |
தமிழகம் | சூரிய ஒளி மின் சக்தியை பயன்படுத்த மனமாற்றம் அவசியம்... விழிப்புணர்வு இன்றி அரைகுறை நிலை! | சிவகங்கை: சாதனங்கள் கூடுதல் விலை, விழிப்புணர்வு இல்லாததால் சூரிய ஒளி மின் சக்தி திட்டம் அரைகுறை நிலையிலேயே உள்ளது. சாதனங்களுக்கு அரசு வழகும் மானியத்தை அதிகரிப்பதோடு, அதிகாரிகளும் களத்தில் இறங்கி செயல்பட்டால் தான் இத்திட்டத்தின் நோக்கம் முழுமை அடையும். தமிழகத்தில் மின் உற்பத்தி குறைந்ததால், பற்றாக்குறை ஏற்பட்டு கடும் பா... |
தமிழகம் | அவமதிப்பு எதிர்ப்பு தினம் | சிவகங்கை: சோழபுரம் சு.பா.தே., மேல்நிலைப்பள்ளியில், உலக முதியோர் அவமதிப்பு எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் கண்ணப்பன் தலைமை வகித்தார். ஆசிரியர் வெங்கட்ராமன் வரவேற்றார். முதியோர் அவமதிப்பு செய்வோரை எதிர்ப்பது, அவர்களை ஆதரிப்பது என உறுதிமொழி எடுத்தனர். ஆசிரியர் ஆறுமுகம் நன்றி கூறினார். |
தமிழகம் | நிர்வாகிகள் தேர்வு | சிவகங்கை: சிவகங்கையில், முன் னாள் ராணுவத்தினர் சங்க நிர்வாகிகள் தேர்வு நடந்தது. வட்டார தலைவர் லட்சுமணன், செயலாளர் அந்தோணி, பொருளாளர் மனோகரன் தேர்வு செய்யப்பட்டனர். வீட்டுமனைக்கு நடவடிக்கை எடுப்பது; 1996 க்கு முன் ஓய்வு பெற்றோரை பங்களிப்பு தொகை இன்றி, உறுப்பினராக சேர்ப்பதென முடிவு செய்யப்பட் டது. |
தமிழகம் | சங்க கூட்டம் | காரைக்குடி: காரைக்குடியில் முற் போக்கு எழுத்தாளர் சங்க கூட்டம் நடந்தது. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நிர்வாகி ஜனநேசன் வரவேற்றார். பேராசிரியர்கள் குமார், ஆவுடையம்மாள், ஜீவசிந்தன், கவிஞர் அன்னபூரணி பங்கேற்றனர். ஜூன் 26ம் தேதி புத்தக மதிப்புரை கூட்டம் நடத்துவது என தீர்மானித்தனர். எழுத்தாளர் கந்தசாமி நன்றி கூறினார். |
தமிழகம் | திருக்கோளக்குடியில் ஆனி திருவிழா துவக்கம் | திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே திருக்கோளக்குடி ஆத்மநாயகி அம்பாள் கோயில் ஆனி தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆனித்திருவிழாவை முன்னிட்டு கடந்த 16ம் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கோளபுரீஸ்வரர், ஆத்மநாயகி அம்பாள் மலையில் இருந்து மண்டபத்தில் எழுந்தருளினர். அன்று இரவு 7 மணிக்கு காப்பு கட்டுதல்... |
தமிழகம் | காதலியை கொன்றவருக்கு ஆயுள் | சிவகங்கை: காதலியை கொன்ற கீழமேல்குடியை சேர்ந்த சுப்பிரமணியனுக்கு (25), ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது. இவர் அதே ஊரை சேர்ந்த நாச்சியப்பன் மகள் மீனாட்சியை (22) காதலித்தார். திருமணம் முடிக்க விரும்புவதாக கூறி, பெண்ணின் பெற் றோரிடம் கேட்டுள்ளார். அவர்கள் சம்மதிக்கவில்லை. இதற்கிடையில், வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தன... |
தமிழகம் | இடப்பிரச்னையில் இருவர் கைது | சிங்கம்புணரி: சிங்கம்புணரி கீழத்தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் மனோகரன். இவரது உறவினர் குகன். இருவருக்கும் கீழகாட்டுரோட்டில் காலி இடம் அருகருகே உள்ளது. இக்காலி இடத்திற்கான பாதை தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. இதன் காரணமாக, இடத்தை அளக்க நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு சர்வேயர் வரவழைக்கப்பட்டார்.... |
தமிழகம் | அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கை | சிவகங்கை: கலெக்டர் மகேசன் காசிராஜன் அறிக்கை: மாவட் டத்தில் பிற்பட் டோர், மிக பிற்பட்டோர், சீர்மரபினர் நல (பள்ளி, கல்லூரி) விடுதிகளில், மாணவர் சேர்க்கை நடக்கிறது. தகுதி: நான்காம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர் விண்ணப்பிக்கலாம். பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மாணவரின் இருப்ப... |
தமிழகம் | சுற்றுச்சூழல் தினம் | திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே இரணியூர் செண்பகம்பேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் நடந்தது. தலைமை ஆசிரியர் சுடலை தலைமை வகித்தார். ஆசிரியை நித்யா வரவேற்றார். சுகாதாரப் பணியாளர் வெங்கடலெட்சுமி முன்னிலை வகித்தார். ஏ.சி., முத்தையா சுகாதார நிலைய அலுவலர்கள் மலர், அபிராமி பங்கேற்றனர். ஆசிரியை கண்ணம்ம... |
தமிழகம் | கிராம செயற்குழு கூட்டம் | காளையார்கோவில்: அல்லூர் கிராம செயற்குழு கூட்டம், அங்கன்வாடி மையத்தில் நடந்தது. காளையார்கோவில் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீனாட்சி தலைமை வகித்தார். இரண்டு வயது குழந்தைகளை கண்டறிந்து மையத்திற்கு அழைத்து வர தீர்மானிக்கப்பட்டது. கவுன்சிலர் சரோஜா, ஊராட்சி தலைவர் செந்தில்வேல், வார்டு உறுப்பினர்கள், பயிற்றுனர் ப... |
தமிழகம் | தமிழகத்தில் பெண்களுக்கு 120 பண்ணைகள் : அமைச்சர் மதிவாணன் பேட்டி | நாகர்கோவில்: -ஒருங்கிணைந்த பால்பண்ணை திட்டத்தில் தமிழகம் முழுவதும் பெண்களுக்கு மானியத்தில் 120 பால்பண்ணைகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மதிவாணன் தெரிவித்தார்.நாகர்கோவிலில் பால் உற்பத்தியாளர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் மதிவாணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;... |
தமிழகம் | நாசரேத்தில் தெருமுனை பிரசாரம் | நாசரேத்,: நாசரேத் பஸ்ஸ்டாண்ட் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆட்சியாளர்கள் மற்றும் கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை போன்ற பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து தெருமுனை பிரசாரம் நடந்தது.ஆறுமுகப்பெருமாள் தலைமை வகித்தார். நகர செயலாளர் ஞானபால் முன்னிலை வகித்தார். மாவட... |
தமிழகம் | தமிழக சிமென்ட் இலங்கைக்கு ஏற்றுமதி | நாகப்பட்டினம்: நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் சிமென்ட் அனுப்பும் பணி துவங்கியது. நாகை துறைமுகம் சுனாமியால் பாதிக்கப்பட்டு சீரமைக்கப்பட்ட பின் இந்தோனேசியாவில் இருந்து குருடு பாமாயில், தேங்காய் எண்ணெய், பிண்ணாக்கு போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. துறைமுகத்தில் இருந்து முதன்முறையாக இலங... |
தமிழகம் | கல்வி விழிப்புணர்வு பேரணி | பேய்க்குளம், ஜூன் 18- பேய்க்குளம் அருகே நெல்லையப்பபுரம் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு மாணவர் ஞானப்பிரகாசம் தலைமை வகித்தார். மாணவர்கள் கல்வி பற்றிய சிறப்புக்களை பாடலாக பாடி ஊர்வலமாக சென்றனர். 100 சதவீதம் மாணவர்களை பள்ளியில் சேர்ப்போம், குழந்தைகள் வருமானம் பெற்றோருக்கு அவமானம் உள்ளிட்ட கோஷங்களை எ... |
தமிழகம் | ஏரல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டட திறப்பு விழா | ஏரல்,: - ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.பி நிதியிலிருந்து ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட கட்டட திறப்பு விழா நடந்தது.விழாவில் ஏரல் சேர்மன் கண்ணன் தலைமை வகித்தார். ஸ்ரீவை.,தொகுதி எம்.எல்.ஏ.,சுடலையாண்டி முன்னிலை வகித்தார். ஏரல் வட்டார மருத்துவ அலுவலர் வேலரசி வரவேற்றார். ஏரல் நகர காங்.,தலைவர் பாக்கர் அ... |
தமிழகம் | புதுக்கிணறு தொகுப்பு வீடுகளை சீரமைக்க கோரிக்கை | சாத்தான்குளம், : சாத்தான்குளம் அருகேயுள்ள புதுக்கிணறு தொகுப்பு வீடுகளை சரி செய்ய கோரிக்கை விடப்பட்டுள்ளது.பன்னம்பாறை பஞ்.,புதுக்கிணறில் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட 20 வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. அதை பழுது பார்த்து தரவேண்டும் என சாத்தான்குளம் எம்.எல்.ஏ ராணி வெங்கடேசனிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர... |
தமிழகம் | முத்தையாபுரம் கே.டி.கோசல்ராம் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி | தூத்துக்குடி : தூத்துக்குடி முத்தையாபுரம் கே.டி.கோசல்ராம் உயர்நிலைப்பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.மாணவ, மாணவிகள் 117 பேர் தேர்வு எழுதியதில் 116 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 99 சதவீதம் தேர்ச்சியாகும். மாணவி மாரியம்மாள் 469 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தையும், மாணவன் கணேஷ் 458 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாவது இட... |
தமிழகம் | ஆண்களுக்கான நவீன குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் | தூத்துக்குடி : தென்திருப்பேரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல சிகிச்சை முகாம் நடந்தது.தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் தென்திருப்பேரையில் ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.பேரூராட்சி தலைவர் சந்திரா தலைமை வகித்தார்... |
தமிழகம் | ஒரு வாரத்திற்குள் பதில் இல்லை என்றால்கல்வித்துறையை கண்டித்து தொடர் போராட்டம் | தூத்துக்குடி,: ஒரு வாரத்திற்குள் கோரிக்கைக்கு பதில் கிடைக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்த தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.அழகாபுரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியை கங்காஈஸ்வரி பணிப்பதிவேட்டை பார்வைக்கு சமர்பிக்க வேண்டும். அரசாணைப்படி மாத இறுதி நாளில் சம்பளம் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்குரிய... |
தமிழகம் | தூத்துக்குடியில் 20ல் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் | தூத்துக்குடி, : தூத்துக்குடியில் வரும் 20ம் தேதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம். எல்.ஏ பங்கேற்கிறார். கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் திரளாக அதிமுகவினர் கலந்து கொள்ளுமாறு மா வட்ட செயலாளர் பள்ளத்தூர் முருகேசன் அழைப்பு விடுத்துள்ளார்.தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு அதிமுக... |
தமிழகம் | மண்டல கடலில் சூறாவளி காற்றினால் இந்திய கடல் எல்லைக்குள் படகு புகுந்தது | தூத்துக்குடி,: தூத்துக்குடி மண்டல கடலில் திடீரென ஏற்பட்ட சூறாவளி காற்றினால், கடலில் உருவான ராட்சத அலையால் இழுத்து, அடித்துச் செல்லப்பட்ட எங்களது படகு இந்திய கடல் எல்லைக்குள் தள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.கன்னியாகுமரி கடலில் இருந்து சுமார் 62 நாட்டில்கல் மைல் தொலைவில் இலங்கைக்... |
தமிழகம் | ஸ்ரீவி., வனப்பகுதியில் பிடிப்பட்டவர் மனநோயாளி: விசாரணையில் தகவல் | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., செண்பகதோப்பு பகுதியில் பிடிபட்டவர் மனநோயாளி என கியூ பிரிவு போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து விடுதலை செய்யப்பட்டார். ஸ்ரீவி., மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செண்பகதோப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து வனத்துறையினர் வெளியாட்கள் காட்டிற்குள் செல்ல தடை விதித்தனர். இந்நில... |
தமிழகம் | காஸ் அடுப்பு வழங்கும் விழா | கோவில்பட்டி : கோவில்பட்டி அருகேயுள்ள உருளைகுடியில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது.கோவில்பட்டி யூனியன் உருளைகுடி கிராமத்தில் இலவச கேஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கோவில்பட்டி யூனியன் சேர்மன் முருகேசன் தலைமை வகித்து, தமிழக அரசின் இலவச கேஸ் அடுப்பு வழங்கி பேசினார். பஞ்., துணை தலைவர் சுப்புலட்சுமி, வ... |
தமிழகம் | இன்று இலவச காய்கறி விதை வழங்கும் விழா | தூத்துக்குடி : - ஓட்டப்பிடாரம் பகுதி விவசாயிகளுக்கு இன்று இலவசமாக காய்கறி விதைகள் வழங்கப்படுகிறது. திசு வாழைக்கன்று உள்ளிட்டவையும் சுமார் 5 லட்சத்தில் வழங்கப்பட உள்ளன.தூத்துக்குடி மாவட்ட தோட்டக்கலைத்துறையும், ஸ்டெர்லைட் நிறுவனமும் இணைந்து இன்று ஓட்டப்பிடாரத்தில் வாழை மற்றும் காய்கறி சாகுபடியில் நவீன முறைகளை புகுத்தி நல... |
தமிழகம் | பட்டாசு ஆலையில் வெடி விபத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு உரிமையாளர், மேலாளர் மீது வழக்கு | சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை உரிமையாளர், மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி - எம்.புதுப்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் வடபட்டியில் உள்ள பி.ஆர்.சி., பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் வெடி விபத்து ஏற்பட்டதில் நான்கு ... |
தமிழகம் | கல்வி விழிப்புணர்வு பேரணி | தூத்துக்குடி: - கோவில்பட்டி வணிக வைசிய நடுநிலைப் பள்ளியின் சார்பில் அனைவருக்கும் கல்வி இயக்கம், கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.கோவில்பட்டி நகர திமுக., செயலாளர் ராமர் தலைமை வகித்தார். உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் செல்வலட்சுமி, பள்ளிச் செயலாளர் சுப்பிரமணியன், பள்ளிக்குழ... |
தமிழகம் | தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,1901 பணியிடங்கள் ஒதுக்கி உத்தரவு. | விருதுநகர்: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்காக தனிப்பிரிவு அமைக்கப்பட்டு 1,901 பணியிடங்களை ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறையில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. அரசு தினமும் புது, புது திட்டங்களை அறிவிப்பதால் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் பணிச்சுமையில் திண்டாடி வந்தனர். மேலும் புதிய திட்டங்களுக... |
தமிழகம் | நெல்லை-நாகர்கோவில், குமரி-நெல்லை பாசஞ்சர் ரயில்களை தூத்துக்குடி வரை நீடிக்க கோரிக்கை | தூத்துக்குடி ஃ திருநெல்வேலி-நாகர்கோவில் பாசஞ்சர் மற்றும் கன்னியாகுமரி-திருநெல்வேலி பாசஞ்சர் ரயில்களை தூத்துக்குடி வரையிலும் நீடிக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் சார்பில் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாநகரம் ரயில் வசதியில் மட்டும் மிகவும் பின்தங்கிய மாநகரமாக காணப்படுகிறது. ஆதலால், வண்டி ... |
தமிழகம் | தூத்துக்குடி மாவட்டத்தில் நான்கு மையத்தில் உடனடி தேர்வு | தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி உடனடி தேர்வு நான்கு தேர்வு மையங்களில் நடக்கும் என்று முதன்மை கல்வி அதிகாரி விஷ்ணுபிரசாத் தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் மூன்று பாடங்களில் பெயில் ஆனவர்கள் படிப்பு பாதிக்காமல் இருக்க உடனடி தேர்வு நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் இந்த தேர்வு... |
தமிழகம் | அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் 29ம் தேதி கலந்தாய்வு | தூத்துக்குடி : தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முழுநேர டிப்ளமோ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு கூட்டம் வரும் 29ம் தேதி முதல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை நடக்கிறது.இது குறித்து தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஐயப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; 2010-11ம் கல்வியாண்டில் தூத்து... |
தமிழகம் | 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ. 100 : தூத்துக்குடி மாநகராட்சி புது ஸ்டைல் | தூத்துக்குடி : 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நூறு ரூபாயிற்கு விற்பனை செய்யும் புதிய திட்டத்தை தூத்துக்குடி மாநகராட்சி அறிமுகம் செய்கிறது. இன்று நடக்கும் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படுகிறது.தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் இன்று காலை பத்து மணிக்கு மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் நடக்கிறது. கமிஷனர் குபேந்திரன், துணை... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.