category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
General | ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் தடை | வாஷிங்டன்: அமெரிக்காவில் இயங்கும் ஈரான் நிறுவனங்களுக்கு தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் இயங்கும் ஈரானிய நிறுவனங்கள், ஈரான் நாட்டு அணுசக்தி திட்டங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டவையாக உள்ளன. அமெரிக்காவில் வசிக்கும் ஈரானிய வர்த்தகர்களுக்கும் இதில் தொடர்பு உண்டு. ஏற்கனவே ஈரானின் அணு ஆயுத திட்டங்களை எ... |
இந்தியா | ஜூலை 19ம் தேதி பார்லிமென்ட் கூட்டத்தொடர் | புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், அடுத்த மாதம் 19ம் தேதி துவங்குகிறது. இந்த கூட்டத்தொடர் ஒரு மாதம் காலம் நடைபெறும். ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி வரை லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் நடைபெறும். மழைக்கால கூட்டத்தொடரில் பொதுவாக அரசின் சட்டங்களுக்கு, பார்லிமென்டில் அனுமதி கோரப்படுமென, விஷயமறிந்த வட்டாரங்கள் தெரி... |
தமிழகம் | பாளை., சிறைக் கைதிகளின் படைப்புகள் செம்மொழி மாநாட்டில் பங்கெடுப்பு | திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறைவாசிகளின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள்தண்டனை கைதிகளாக இருக்கும் 71 பேரின் குழந்தைகள், விடுதலையான கைதிகள் 12 பேரின் குழந்தைகள், குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் 22 பேரின் குழந்தைகள் என மொத்தம் 241 மாணவ, மாணவியருக்கு பெத்தேல் தொண்... |
இந்தியா | கேரளாவில் பன்றிக்காய்ச்சல் எதிரொலி: தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் | திருவனந்தபுரம்: இந்தியாவில் மீண்டும் பன்றிக்காய்ச்சல் நோய் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதன்எதிரொலியாக கேரளாவில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு 17பேர் பலியாகியுள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்நோய் காரணமாக தமிழக எல்லைகளி... |
தமிழகம் | பிரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி | சந்திப்பூர்: அணுஆயுதங்களை தாங்கி செல்லும் இந்தியாவின் பிரித்வி-2 ஏவுகனை சோதனை வெற்றி பெற்றது. ஒரிசாவின் சந்திப்பூரில் இருந்து இன்று ஏவப்பட்ட இந்த ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது. இந்த ஏவுகணை சுமார் 350கி.மீ., தூரத்திற்கு சென்று துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. |
தமிழகம் | சிறுதாவூர் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம்: தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்; போலீஸ் குவிப்பு | காஞ்சிபுரம்: சிறுதாவூர் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக, சிவசுப்ரமணியம் கமிட்டியின் அறிக்கை படி நிலத்தை மீண்டும் திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் தி.மு.க.,வினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். ஆர்ப்பாட்டம் காரணமாக அ.தி.மு.க., சார்பிலும் சிறுதாவூர் பங்களாவில் சுமார் 200 அ.தி.மு.க., நிர்வாகிகள் பாதுகாப்பில் ஈ... |
இந்தியா | பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம் | மும்பை : இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கியது. காலை 9.05 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 43.14 புள்ளிகள் அதிகரித்து 17659 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 10.50 புள்ளிகள் அதிகரித்து 5285.35 புள்ளிகளாக வர்த்தகமா... |
தமிழகம் | தமிழக, புதுச்சேரி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு | சென்னை : ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாகவும், அலுவல் மொழியாகவும் அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் போது , தமிழக முதல்வர் கருணாநிதி ஐகோர்ட் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அங்கீகரித்து அறிவிக்க வேண்டும் ... |
தமிழகம் | கிர்கிஸ்தானில் சிக்கிய இந்தியர்கள் தாயகம் திரும்பினர் | புதுடில்லி : கிர்கிஸ்தானில் மூண்ட கலவரத்தில் இந்தியர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கிர்கிஸ்தானில் சிக்கியிருந்தனர். மத்திய அரசின் நடவடிக்கையிலன் பேரில் கலவரப் பகுதியில் இருந்து 105 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். முதல்கட்டமாக அவர்களில் 21 பேர் இந்தியா திரும்பினர். |
தமிழகம் | ரயிலை கவிழ்க்க மீண்டும் சதி :பாறாங்கல் மீது ரயில் மோதியது | சென்னிமலை : சென்னிமலை அருகே ரயிலை கவிழ்க்க மீண்டும் சதி வேலை நடந்துள்ளது. தண்டவாளத்தில் இருந்த பாறாங்கல் மீது சரக்கு ரயில் மோதியதில் கல் நொறுங்கியது.கோவையில் இருந்து ஈரோடு நோக்கி நேற்று இரவு 8.30 மணிக்கு சரக்கு ரயில் ஒன்று வந்தது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை யூனியன் ஈங்கூர் - விஜயமங்கலம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே வாய்ப... |
General | நிதின் கார்க் கொலை வழக்கு : மேலும் ஒருவர் கைது | கான்பரா : ஆஸ்திரேலியாவில் கடந்த ஜனவரி மாதம் நிதின் கார்க் என்ற இந்தியர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அண்மையில் விக்டோரியா மாகாண போலீசார் 15 வயது சிறுவன் ஒருவனை கைது செய்தனர். இந்நிலையில் மேலும் ஒரு சிறுவன் நிதின் கார்க் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான். |
இந்தியா | காஷ்மீரி்ல் என்கவுன்டர் : 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை | ஸ்ரீநகர் : காஷ்மீரில் வடக்கு பகுதியில், பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். |
தமிழகம் | திருச்சியில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து : ஒருவர் பலி | திருச்சி : திருச்சியில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். திருச்சி சீராத்தோப்பு பகுதியில் தனியார் பஸ் ஒன்று வயலில் கவிழ்ந்தது. இதில் பஸ் பயணி ஒருவர் இறந்தார். 50 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
தமிழகம் | திராவிட மொழிகள் என்னென்ன? | இந்தியாவில் தற்காலத்தில் 1,700 மொழிகள் பேசப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் பல தனிமொழிகளாகவும், சில கிளை மொழிகளாகவும் உள்ளன. இந்தியாவில் வழங்கி வரும் மொழிகளை, 1. இந்தோ ஆரியமொழிகள்(இந்தோ ஐரோப்பிய மொழிகள்), 2. திபெத்தியபர்மிய மொழிகள், 3.ஆஸ்டிரிக் மொழிகள், திராவிட மொழிகள் என, மூவகையாக பிரிப்பர்.இந்தோ ஆரிய மொழிகளை 7... |
தமிழகம் | இன்ஜி., கல்லூரி மாணவர் சேர்க்கை : தரவரிசைப்பட்டியல் வெளியீடு | சென்னை : இன்ஜினியரிங் படிப்பில் சேர விண்ணப்பித்திருந்த மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் நந்தகுமார் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2 மாணவிகள், 8 மாணவர்கள் என மொத்தம் 10 பேர் 200க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற மாண... |
தமிழகம் | தாலி கட்டும் நேரத்தில் மணமகனை புறக்கணித்த மணப்பெண் | விழுப்புரம் : மணமேடையில் அமர்ந்து தாலி கட்டும் நேரத்தி்ல் திருமணத்தை இளம் பெண் புறக்கணித்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் , சங்கராபுரம், மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த அழகவேல் - அஞ்சலை தம்பதியினரின் மகன் உத்திராபதி (26). இவருக்கும் இவரது அக்காள் மகள் சுதா (24) என்பவருக்கும் இன்று காலை 6.30... |
தமிழகம் | வலைப்பூக்களில் சொட்டுகிறது தமிழ்த்தேன்! | இணையதளம் வலுவான ஊடகமாக திகழ்ந்து வருகிறது. தொழில் நுட்பத்தின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் அதனுடன் இணைந்து நடக்கும் துறைகள் தாக்குப்பிடிப்பதும் மற்றவை தேங்கி விடுவதும் இயல்பானது. எனவே, தமிழியல் ஆராய்ச்சியும் இணையவழி நடப்பது தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது. ஓலைச்சுவடியில் இருந்து மென்பொருள் வரை தன் எல்லையை வியாபித்துள்ளது... |
தமிழகம் | உலகச் செம்மொழியாம் தமிழ் வளர்த்த திருப்பூர் | - சோ.ராமகிருஷ்ணன்- செம்மொழித் தமிழ் உலகமெலாம் பரவியிருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. தமிழ் வளர்த்த மதுரை என சிறப்பிக்கப்பட்ட போதும், கொங்கு மண்டலமும் தமிழ் வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றி இருக்கிறது. திருப்பூருக்கும் தமிழ் மொழிக்கும் நிறைய தொடர்புகள் உள்ளதை ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாயிலாக அறிய இயலுகிறது.
பாரதத்துடன் தி... |
தமிழகம் | கொடைக்கானலில் காஸ் வெடித்து 4 பேர் படுகாயம் | கொடைக்கானல் : கொடக்கானலில் காஸ் வெடித்து 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் வீடு ஒன்றில் இன்று காலையில் காஸ் வெடித்தது. இதில் வீட்டில் இருந்த 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
தமிழகம் | 30 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் | மாநாட்டையொட்டி தீ தடுப்பு நடவடிக்கைகளுக்காக 30 இடங்களில் தற்காலிக தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வயர்லெஸ் கருவி பொருத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட சுமார் 60 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. |
தமிழகம் | விமானநிலையங்களில் வரவேற்பு மையங்கள் | செம்மொழி மாநாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு கட்டுரையாளர்கள், சிறப்பு விருந்தினர்களை ஒருங்கிணைத்து அழைத்து வருவதற்காக, சென்னை, மதுரை, திருச்சி, கோவை விமானநிலையங்களில் வரவேற்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. |
தமிழகம் | மாநாட்டுத் தலைவர் முதல்வர் | செம்மொழி மாநாட்டுக்கு தலைவராக முதல்வர் மு.கருணாநிதியும், ஆய்வரங்க அமைப்புக்குழுவுக்கு தலைவராக இலங்கையை சேர்ந்த பேராசியர் கா.சிவத்தம்பியும், ஆய்வரங்க ஒருங்கிணைப்பாளராக மு.ராசேந்திரனும் உள்ளனர். |
தமிழகம் | தயார் நிலையில் மருத்துவக்குழு | மாநாட்டுக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு மருத்துவமனைகளிலும் ,கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலும் 24 மணி நேரமும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ன. "108' ஆம்புலன்ஸ்கள் 33 தயாராக உள்ளன. |
தமிழகம் | செம்மொழிக்கான தகுதிகள் | ஒரு மொழி செம்மொழியாக இருக்கிறது எனில், சில பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும் என, அறிஞர்கள் கூறுகின்றனர்.அவை,1.தொன்மையானதாகவும், தனித்தன்மை உடையதாகவும் இருத்தல் வேண்டும்.2.பொதுமைப்பண்பும், நடுநிலையான சிறப்பும் கொண்டதாக இருத்தல் வேண்டும்.3.பலமொழிகளுக்குத் தாய்மொழியாக இருத்தல்.4.பண்பாடு, கலை முதலியவற்றைப் பெற்றிருத்தல்.5.பி... |
தமிழகம் | ஈரோட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் | ஈரோடு : தமிழை ஐகோர்ட் வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி மதுரையில் உண்ணாவிரதம் இருக்கும் வக்கீல்களுக்கு ஆதரவாக ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் 2000 வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டமும் நடத்தினர். |
தமிழகம் | முப்பாலையும் குறிக்கும் திருவள்ளுவர் சிலை | உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சின்னம் அக்டோபர் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. இச்சின்னத்தில் திருவள்ளுவர் சிலை அறம், பொருள், இன்பம் என்ற மூன்றை குறிக்கும் விதத்தில் மூன்று விரல்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | கோவைக்கு கூடுதல் போக்குவரத்து வசதி | கோவையில் நடக்க உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக கூடுதல் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டள்ளன. லட்சக்கணக்கான பேர் மாநாட்டுக்கு வருவார்கள் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. |
தமிழகம் | கண்காட்சியில் 30 அரங்குகள்! | உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு கண்காட்சியில் 30 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இசைத்தமிழ் அரங்கம், நாடகத்தமிழ் அரங்கம், திரைத்தமிழ் அரங்கம், கலைஞர் தமிழரங்கம், ஓவியத் தமிழரங்கம் என 30 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. |
தமிழகம் | பொதுமக்களுக்கு உணவு வசதிகள் | மாநாட்டில் பங்கேற்க வரும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள்,சிறப்பு விருந்தினர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. |
General | ஆசிய கோப்பை கிரிக்கெட் : இலங்கை வெற்றி | தம்புலா : தம்புலாவில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 126 ரன்னில் அபார வெற்றி பெற்றது.நான்கு நாடுகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையின் தம்புல்லாவில் நடந்து வருகிறது. 3-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை ... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டுப் பாடல் | சங்கத் தமிழர் வரலாற்றை விவரிக்கும் விதமாக செம்மொழி மாநாட்டுப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. கலைஞரின் பாடல் வரிகளுக்கு, ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த "சிடி' வெளியிடப்பட்டுள்ளது. |
தமிழகம் | பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேம்ரூன் இந்தியா வருகிறார் | லண்டன் : பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேம்ரூன் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருகிறார். வருகிற 27ம் தேதி டொரன்டோவில் நடைபெறும் ஜி - 20 மாநாட்டில் டேவிட் கேம்ரூனும் - பிரதமர் மன்மோகன்சிங்கும் சந்தித்துப் பேசுகின்றனர். கேம்ரூன் பிரதமராக பதவியேற்றப் பிறகு மன்மோகன்சிங்கை முதல் முறையாக சந்திக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக... |
தமிழகம் | தங்கம் விலை பவுனுக்கு ரூ. 80 அதிகரிப்பு | சென்னை : தங்கம் விலை பவுனுக்கு ரூ. 80 அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 748க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ. 80 அதிகரித்து ஒரு பவுன் தங்கம் ரூ. 13 ,984க்கு விற்கப்படுகிறது. |
தமிழகம் | தலைவாசலில் சாலை மறியல் : எம்.பி., கார் முற்றுகை | தலைவாசல் : சேலம் மாவட்டம் தலைவாசல் பட்டுதுறை கிராமத்தில் தேசிய ஊராக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை பார்த்தவர்களுக்கு கூலி குறைவாக கொடுத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தலைவாசல் பி.டி.ஓ., வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவ்வழியாக வந்த கள்ளக்குறிச்சி எம்.பி., ஆதிசங்கரின் காரை முற... |
இந்தியா | சங்கர்ராமன் கொலை வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு | புதுச்சேரி : சங்கர்ராமன் கொலை வழக்கு விசாரணை ஜூலை 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. புதுச்சேரி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | சீன தொழிலாளர்கள் வருகையால் தமிழர்களுக்கு ஆபத்து : ஜெ., | சென்னை : இலங்கையில் வந்திறங்கியுள்ள 25,000 சீன கைதிகளால் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் பெரும் ஆபத்து காத்திருப்பதாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் : இலங்கையில் நெடுஞ்சாலைப் பணிகளையும், ரயில்வே பணிகளையும் மேற்கொள்வதற்காக, சிறைக் கைதிகளாக இருந்த 25,000 தொழிலாளர்கள் ... |
தமிழகம் | நெல்லையில் மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் | திருநெல்வேலி : நெல்லையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. வேலை வாய்ப்பு முகாமில் வேலை கிடைத்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் வழங்கினார். பாளையங்கோட்டையில் காது கேளாதோர் பள்ளி இருக்கிறது. மாவட்ட மாற்று திறனாளிகள் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகள் சிலர் பணிக... |
இந்தியா | கட்சி மாறி ஓட்டு : 3 எம்.எல்.ஏ., க்கள் சஸ்பெண்ட் | புதுடில்லி : பீகார், ஒரிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நேற்று நடந்த ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் நேற்று பா.ஜ., எம்.எல்.ஏ., க்கள் 3 பேர் கட்சி மாறி ஓட்டுப் போட்டனர். கட்சி மாறி ஓட்டளித்த எம்.எல்.ஏ., க்கள் 3 பேரையும் கட்சித் தலைவர் நிதின் காட்காரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். |
இந்தியா | ரயில்வே தேர்வு முறைகேடு : 8 பேர் கைது | மும்பை : ரயில்வே தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக மும்பை ரயில்வே தேர்வு வாரிய தலைவர் மகன் உள்ளபட 8 பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். |
தமிழகம் | செம்மொழி : ஜார்ஜ் எல்.ஹார்ட் | செம்மொழி என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும், பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு எனப்படும். செம்மொழியாக ஒரு மொழியைத் தேர்வு செய்ய அதன் இலக்கிய படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும். |
தமிழகம் | தனித்து இயங்கும் ஆற்றல்: கால்டுவெல் | 19ஆம் நுõற்றாண்டின் பிற்பகுதியில் டாக்டர் ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பத்தின் சிறப்பியல்புகளை ஆராய்ந்து, அவற்றுள் தமிழ் மொழியின் தொன்மையையும், வடமொழியினின்று தனித்து இயங்கும் ஆற்றலையும் உலகறிய நிலைநாட்டினார். இவருடைய ஆராய்ச்சியின் அடிப்படையில் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை "தமிழ்த் தெய்வ வணக்கம்' பாடியதும், ப... |
தமிழகம் | கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் | சென்னை : கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்பதை வலியுறத்தியும், தென் பெண்ணை ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி மாவட்ட கோட்டாச்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஓ. ப... |
தமிழகம் | சங்கச் செய்யுள் செவ்வியல் இலக்கியம் : கமில் சுவலபில் | சங்கச்செய்யுள் என்பது மொழியியல் , யாப்பியல், நடையியல் ஆகியவற்றின் முழுமைபெற்ற வெளிப்பாடாகத் திகழ்வதாகும் என அறிஞர் கமில் சுவலபில் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், தமிழர் பண்பாட்டின் சிறந்த கூறாக திகழும் சங்கச் செய்யுள் பிற மொழியாளர்களால் படியெடுக்க முடியாத விழுமிய இலக்கிய வெளிப்பாடாக இருப்பதுடன், முழுமை வாய்ந்த ... |
தமிழகம் | தொன்று தொட்டு வழங்கிவரும் சிறப்புக்குரியது : ஏ.கே.ராமானுஜன் | உலகப் புகழ் பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஏ.கே.ராமானுஜன் இந்தியச் செம்மொழிகள் இரண்டினில் வடமொழி வழக்கில் இல்லை என்றும், தமிழ்மொழி தொன்று தொட்டு வழங்கி வரும் சிறப்புக்குரியது என்றும் கூறியுள்ளார். |
இந்தியா | போபால் விஷவாயு சம்பவம் ; நிவாரணம் - எதிர் நடவடிக்கை குறித்து அமைச்சரவை ஆலோசனை | புதுடில்லி : போபால் விஷவாயு கசிவில் சிக்கி இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் மற்றும் உதவி தொகை குறித்தும், எதிர்காலத்தில் இது போன்ற விபத்து ஏற்படாமல் இருக்க கம்பெனிகளுக்கு கிடுக்கிப்பிடி போடுவது தொடர்பாகவும் விவாதிக்க அமைச்சர் குழு இன்று கூடியது. மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், வீரப்பமொய... |
தமிழகம் | சென்னை மெட்ரோ ரயில் மேம்பால பணி : ஸ்டாலின் ஆய்வு | சென்னை : சென்னை மெட்ரோ ரயில் மேம்பால பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் ரூ. 14,500 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் இந்த மேம்பால பணிகள் 2015ம் ஆண்டில் முழுமையாக முடிவு பெறும் என்றார். மெட்ரோ ரயில் சேவையை திருவொற்றியூர் வரை நீட்டிப்பது குறித்து அரசு பரி... |
தமிழகம் | கள் இறக்க அனுமதி அளிக்கும் விவகாரம் : ஜூலை மாத இறுதிக்குள் முடிவு | சென்னை : கள் இறக்க அனுமதி அளிக்கும் விவகாரத்தில் ஜூலை மாத இறுதிக்குள் அரசு தரப்பில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி உறுதியளித்துள்ளதாக கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இன்று காலையில் கொங்கு நாடு முன்னேறக்க கழகத்தினர் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்தனர். பின்னர்... |
தமிழகம் | பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 27 பேருக்கு லேப்டாப் | சென்னை : பிளஸ் 2 தேர்வில் மாநகராட்சி பள்ளியில் படித்து அதிக மதி்ப்பெண் பெற்ற 27 பேருக்கு துணை முதல்வர் ஸ்டாலின் லேப்டாப் வழங்கினார். 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் காட்டிய 3 மாநகராட்சி பள்ளிகளுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார். |
தமிழகம் | என்று தீரும் நோ பார்க்கிங் நோய் | எப்போதும் எதிர்மறையாக செயல்படுவதே சிலருக்கு வாடிக்கையாக உள்ளது. அதிலும், போக்குவரத்து விதிமுறைகளை பலர், கண்டுகொள்வதே இல்லை. சிவகங்கை போன்ற பின்தங்கிய மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற மனப்போக்கும், பின்தங்கியே உள்ளது. "நோ என்ட்ரி'க்குள் வாகனத்துடன் நுழைவது; மருத்துவமனை பள்ளி அருகே "ஹாரனை' அலற வ... |
இந்தியா | போபால் விவகாரத்தில் திங்கள் கிழமை அறிக்கை : சிதம்பரம் | புதுடில்லி : போபால் வழக்கு விவகாரம் குறித்து டில்லியில் இன்று அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனை நாளையும், நாளை மறுநாளும் தொடர்ந்து நடைபெறுகிறது. அமைச்சர்கள் ஆலோசனைக்குப் பிறகு திங்கள் கிழமையன்று இறுதி அறிக்கை பிரதமரிடம் தாக்கல் செய்யப்படும் என உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். |
இந்தியா | அனில் அம்பானிக்கு இயற்கை எரிவாயு வழங்க முகேஷ் உறுதி | மும்பை : ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் சேர்மன் முகேஷ் அம்பானி, தனது சகோதரர் அனில் அம்பானி அமைத்து வரும் மின் உற்பத்தி நிலையத்தற்கு இயற்கை எரிவாயு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். முகேஷ் அம்பானிக்கும், அவரது இளைய சகோதரர் அனில் அம்பானிக்கும் இடையே , கிருஷ்ணா-கோதாவரி படுகையில் இருந்து எடுக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை, பங்கிட்டு ... |
இந்தியா | ரூ1000 லஞ்சம் வாங்கிய மின் வாரிய பொறியாளர் கைது | திருநெல்வேலி : நெல்லையில் ரூ. 1000 லஞ்சம் வாங்கி மின் வாரிய பொறியாளர் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் கடயம் மின் வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றுபவர் மாடசாமி . இவர் மின் இணைப்பு வழங்க மாரியப்பன் என்பவரிடம் ரூ. 1000 லஞ்சம் கேட்டுள்ளார். மாரியப்பன் நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., மனோகர குமாரிடம் புகா... |
தமிழகம் | ராமேஸ்வரம் கோவில் நடை 20ம் தேதி சாத்தப்படும் | ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோவில் நடை நடை 20ம் தேதி சத்தப்படுகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நாளை முதல் மூன்று நாட்கள் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடைபெறுகிறது. ராமேஸ்வரத்தின் வரலாற்று நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு, ஜூன் 20ம் தேதி கோதண்டராமர் கோவிலில் விபீஷனர் பட்டாபிஷேக வைபவம் நடக்க உள... |
தமிழகம் | பிரசவத்திற்காக வந்தவர் குழந்தை திருடினாரா? மதுரை அரசு மருத்துவமனையில் மீண்டும் சர்ச்சை | மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை, பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் திருடிச் சென்றாரா என, போலீசார் விசாரிக்கின்றனர். ஆறு மாதத்தில் மீண்டும் குழந்தை திருட்டு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் பாப்பாபட்டி அருகேயுள்ள மின்னாம்பட்டியைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர... |
தமிழகம் | சித்தணி ரயில் விபத்து : விழுப்புரத்தில் மர்ம போஸ்டரால் பரபரப்பு | விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் சித்தணி அருகே கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக விழுப்புரத்தில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரில், ரயில் விபத்துக்... |
இந்தியா | வனத்துறையினர் ஆதிவாசிகள் மோதலில் துப்பாக்கி சூடு | மூணாறு : கேரள மாநிலம் மறையூரில் வனத்துறையினருக்கும் ஆதிவாசி மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. மறையூர் அருகே காந்தலூர் ரேஞ்சுக்கு உட்பட்ட பகுதியில் ரேஞ்சர் ஜோசில் தலைமையிலான வனக்காவலர்கள் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொங்கம்பிள்ளி ஆதிவாசி காலனியை சேர்ந்த இருவர் இரவு 11.30 மணி ... |
General | உலக கோப்பை கால்பந்து : செர்பியா வெற்றி | போர்ட் எலிசபெத் : தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் உலக கோப்பை தொடரில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள ஜெர்மனி செர்பியா அணிகள் மோதின. செர்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. |
தமிழகம் | சங்க ஆண்டு விழா | மதுரை: தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் 12ம் ஆண்டின் துவக்க விழா, மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் நடந்தது. ஆலோசகர்கள் காசிவிஸ்வநாதன், ராஜகோபாலன் முன்னிலை வகித்தார். செயலாளர் பஞ்சரத்தினம் வரவேற்றார். ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்தல், விடுபட்ட சலுகைகளை வழங்க... |
தமிழகம் | நன்கொடை | மதுரை: மதுரை காமராஜ் பல்கலை வளாகத்தை பசுமையாக்கும் திட்டத்திற்கு, பாரத ஸ்டேட் வங்கி மண்டல அலுவலர் ராமானுஜம், 6.23 லட்சம் ரூபாயை, துணைவேந்தர் கற்பககுமாரவேலிடம் நன்கொடையாக வழங்கினார். அருகில் அலுவலர்கள் ராஜன், சேகர், பதிவாளர் அழகப்பன், பேராசிரியர் பார்த்தசாரதி. |
தமிழகம் | பரிசளிப்பு விழா | மதுரை: மதுரை மேலமாசி வீதி ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரி, வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசு திட்டத்தில் வெற்றி பெற்றவருக்கு, உதவி மேலாளர் ஜோஸ், ரியோ பரிசு வழங்கினர். |
தமிழகம் | கூட்டம் | மதுரை: மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் நடத்திய கூட்டத்தில் ஒன் வேர்ல்ட் அகாடமி பேராசிரியை சுமிதா பேசினார். அருகில் செயலாளர் சண்முகசுந்தரம், தலைவர் நடராஜன். |
தமிழகம் | கலைவிழா | மதுரை: மதுரை பாரதி பண்பாட்டு கழக கலைவிழாவில், மதுரை சங்கீத வித்யாலயா பள்ளி முதல்வர் லதாவர்மாவுக்கு, கழகப் பொருளாளர் விஜயலட்சுமி நினைவுப்பரிசு வழங்கினார். உடன் மாநில அமைப்பாளர் குருசாமி. |
தமிழகம் | நிர்வாகிகள் தேர்வு | மதுரை: மதுரையில் ஏர்போர்ஸ் அசோசியேஷன் பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் தேசிகன், பொதுச் செயலாளர் கணேசன், பொருளாளர் சார்லஸ் வில்சன் மற்றும் 18 செயற்குழு உறுப்பினர்கள், ஆலோசகர்கள், தணிக்கையாளர் தேர்வு செய்யப் பட்டனர். நிர்வாகி அழகர்சாமி தொகுத்து வழங்கினார். |
தமிழகம் | செம்மொழி மாநாடு; ஆசிரியர்கள் முடிவு | மதுரை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. கவுரவ தலைவர் டி.சுப்ரமணியன், சட்ட ஆலோசகர் சிதம்பரஹரி முன்னிலை வகித்தனர். செயலாளர் அன்பழகன் வரவேற்றார். கூட்டத்தில் கோவையில் நடக்க உள்ள செம்மொழி தமிழ்மாநாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் குடும்பத்துட... |
தமிழகம் | குளத்தை தூர்வாறும் போது கிடைத்த மீனாட்சி அம்மன் சிலை | தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே கிராமத்தில், தொழிலாளர்கள் குளத்தை தூர்வாறும் போது, பித்தளையால் ஆன மீனாட்சி அம்மன் சிலை கிடைத்தது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ளது சூளைவாய்க்கால் கிராமம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டப்படி, இங்குள்ள குளத்தை தொழிலாளர்கள் தூர்வாறிக் கொண்டிருந்தனர். சின்... |
தமிழகம் | பட்டமளிப்பு விழா | சென்னை: ஆவடி, சத்யபாமா கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணைவேந்தர் பத்மநாபன், கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அனிதாவிற்கு பட்டத்தை வழங்கினார். உடன், கல்லூரி முதல்வர் விமலா, தலைவர் சுந்தராசன், டாக்டர் ஹரிகோவிந்த் மற்றும் டாக்டர் சுமதி. |
தமிழகம் | ரெப்கோ வங்கியின் சிறப்பு கடன் முகாம் | சென்னை: மத்திய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கியின் பல்லாவரம் கிளையில் சிறப்பு கடன் முகாம் நடைபெற்றது. முகாமை, இணை பொது மேலாளர் நமச்சிவாயம் துவங்கிவைத்தார். துணை பொதுமேலாளர் பஷீர் அகமது வரவேற்று பேசினார். இதில், தொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி கடன், வீடு மற்றும் வர்த்தக கட்டடம் சீரமைக்க, அசையா சொத்துக்கள் வாங்க, வாடகை வர... |
தமிழகம் | சர்வதேச நூலக மாநாடு | சென்னை: காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் சர்வதேச நூலக மாநாடு நடந்தது. மாநாட்டு விழா மலரை, மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தர் தல்வார் வெளியிட்டார். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து பெற்றுக் கொண்டார். |
தமிழகம் | தமிழ் இணைய தளம் | சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு சிறப்பு செய்யும் வகையில், சென்னை மாநகராட்சியின் தமிழ் இணைய தளத்தை மாநகர மேயர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். |
தமிழகம் | சாலை அமைக்கும் பணி | சென்னை: புதிய தார் சாலை அமைக்கும் போது, சாலை உயரமாவதை தடுக்கும் வகையில், பழைய தார் சாலையை இயந்திரம் மூலம் அகற்றி விட்டு புதிய தார் சாலை அமைக்கும் பணியை பெரியமேட்டில் மேயர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். |
இந்தியா | கடப்பா மாவட்டத்திற்கு ராஜசேகர ரெட்டி பெயர் | ஐதராபாத் : கடப்பா மாவட்டத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் பெயர் சூட்டுவதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது. ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். இதனைதொடர்ந்து கடப்பா மாவட்டத்திற்கு அவரின் பெயர் சூட்டுவதென முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்க... |
தமிழகம் | வனத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு | விழுப்புரம் : விழுப்புரம் வனத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. லஞ்ச புகார் வந்ததையடுத்து போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். |
General | இந்திய மாணவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது | சிட்னி: ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் சமீபத்தில் இந்திய மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்து தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரியில் நடைபெற்ற இந்த கொலை தொடர்பாக முதலில் 15 வயது மாணவரைப் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இ... |
தமிழகம் | காரில் கடத்திவரப்பட்ட புதுச்சேரி மதுபானம் பறிமுதல் *ஒருவர் கைது | தூத்துக்குடி : தூத்துக்குடிக்கு காரில் கடத்திவரப்பட்ட புதுச்சேரி மதுபாட்டில்கள் ,275 பறிமுதல் செய்யப்பட்டன. ஒருவர் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடிக்கு வெளிமாநில மதுபானம் கடத்திவரப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஏ.டி.எஸ்.பி.,ராஜராஜன், டி.எஸ்.பி.,எமி சுசீலா, போலீசார் அதிகாலை 3.30 மணிக்கு எட்டயபுரம் ரோ... |
தமிழகம் | மூலவைகை ஆற்றில் ஊற்று தோண்டி குடிநீர் எடுக்கும் மலை கிராமமக்கள் | தேனி : மூலவைகை உற்பத்தியாகும் இடத்திலேயே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் ஊற்று தோண்டி தண்ணீர் எடுக்கவேண்டிய பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது. வருஷநாடு அருகே உள்ள மலை கிராமம் வாலிப்பாறை. வைகை ஆறு இங்குள்ள மலை பகுதியில் மூலவைகை யாக உற்பத்தியாகி வைகை அணைக்கு செல்கிறது. எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது இங்கு அணை கட்ட ... |
தமிழகம் | மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம் | ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்திலிருந்து, கடந்த 16ம் தேதி 600க்கும் மேற்பட்ட படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், நேற்று காலையில் வழக்கம் போல் கரை திரும்பினர். இதில், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் வேல்முருகன் படகு மட்டும் இன்று வரை கரை திரும்பவில்லை. படகில் பாலவேச முத்து, ஜான், ரிச்சர்டு, முத்துகுமார் சென்றிருந்தனர். இது தொடர்பா... |
தமிழகம் | ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தம் | சோமனூர் : பஞ்சு நூல் ஏற்றுமதியை தடுக்க வலியுறுத்தியும் துணி விலை உயராததை கண்டித்தும் சோமனூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் 15நாள் ஜவுளி உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது. |
General | உலக கோப்பை கால்பந்து: சுலோவேனியா -அமெரிக்கா டிரா | ஜோகனஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள சுலோவேனியாவும், அமெரிக்காவும் மோதின. இந்த போட்டியில் சுலோவேனியாவும் அமெரிக்காவும் தலா 2 கோல்கள் போட்டதால் போட்டி டிராவில் முடிந்தது. |
தமிழகம் | மதுவில் விஷம் கலந்து குடித்து வியாபாரி தற்கொலை :உஷாரான நண்பர்கள் உயிர்தப்பினர் | தூத்துக்குடி : கோவில்பட்டியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, மதுவில் விஷம் கலந்து குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். உஷாரான, அவரது நண்பர்கள் அதை குடிக்காமல் உயிர்தப்பினர். கோவில்பட்டி, பூரணம்மாள் தெரு, லாயல் மில் காலனி, நவதானிய வியாபாரி சுப்புராஜ்(31). தொழில் நஷ்டம் ஏற்பட்டதால், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ... |
தமிழகம் | மதுரையில் உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்கள் கைது | மதுரை : தமிழை ஐகோர்ட் அலுவல் மொழியாக்க வலியுறுத்தி மதுரை ஐகோர்ட் கிளையில் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்கள் பகத்சிங், ராஜேந்திரன் உள்ளிட்ட 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். ஒருவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. |
தமிழகம் | குடிநீரில் சாக்கடை கலந்ததால் வாந்தி பேதிக்கு பலி 4 ஆனது | திருநெல்வேலி : ஏர்வாடியில் வாந்திபேதிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்துள்ள ஏர்வாடியில் தாமிரபரணியில் இருந்து வழங்கப்பட்ட குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததால் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகினர். ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட... |
தமிழகம் | தமிழ் இணைய மாநாட்டுப் போட்டிகள் : வெற்றி பெற்ற மாணவர்கள் அறிவிப்பு | சென்னை : செம்மொழி மாநாட்டையொட்டி நடத்தப்படும் தமிழ் இணைய மாநாட்டுக்காக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களது பட்டியலை, அமைச்சர் பூங்கோதை நேற்று வெளியிட்டார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடப்பதை ஒட்டி, மூன்று நாட்கள் உலகத் தமிழ் இணைய மாநாடும், உத்தமம் அமைப்புடன் இணைந்து... |
தமிழகம் | செம்மொழி மாநாடு வழித்தடம் : திருப்பூர் எஸ்.பி., ஆய்வு | உடுமலை : செம்மொழி மாநாட் டிற்கு , தென்மாவட்டங்களிலிருந்து கோவை வரும் வழித்தடத்தை திருப்பூர் எஸ்.பி., அருண் ஆய்வு செய்தார். கோவையில் நடக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து பல பகுதிகளிலிருந்து அதிகளவு வாகனங்கள் மூலம் முக்கிய விருந்தினர் கள் மற்றும் பொதுமக்கள் வரும் வாய்ப்புள்ளது. தென்மாவட்டங்களிலிருந்... |
தமிழகம் | செம்மொழி மாநாடு சிறக்க பேரூரில் வேள்வி வழிபாடு | பேரூர் : செம்மொழி மாநாடு சிறக்க வேண்டி, பேரூரில் நேற்று சிறப்பு வேள்வியாகம் நடந்தது. யாகவழிபாடுகள், பேரூர் சாந்தலிங்க அடிகள் திருமட வளாகத்திலுள்ள பள்ளி வழிபாட்டு மண்டபத்தில் நேற்று துவங்கியது. பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் தலைமை வகித்தார்; கலாமணி குத்துவிளக்கேற்றி னார். திருமுறை பண்ணிசை நிகழ்ச்சியுடன் நேற்று கா... |
தமிழகம் | செம்மொழி மாநாடுக்கு அழைப்பு விடுத்து தீவிர பிரசாரம் | அன்னூர் : செம்மொழி மாநாடுக்கு அழைப்பு விடுக்கும் சுவர் விளம்பரங்கள் அன்னூர் வட்டாரத்தில் 40 கிராமங்களில் எழுதப்பட்டுள்ளன. உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மற்றும் பல நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள் பங்கேற்கின்றனர். இதை முன்னிட்டு "சங்கமம்' கலை நிகழ்ச்ச... |
General | இந்திய மாணவர் கொலை: மேலும் ஒருவர் கைது | மெல்போர்ன்:ஆஸ்திரேலியாவில் கடந்த ஜனவரி மாதம் இந்திய மாணவர் நிதின் கார்க் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் பலர் படித்து கொண்டே ஓட்டல்களிலும், பெட்ரோல் "பங்க்'குகளிலும் பகுதி நேரம் வேலை செய்கின்றனர். வேலை செய்து விட்... |
தமிழகம் | வார்த்தை பிறழாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு பயிற்சி பெறும் பள்ளி மாணவியர் | கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடல்கள் டேப் ரிக்கார்டரில் ஒலிக்கச் செய்யாமல், வாய் திறந்து உணர்வு பொங்க பாட மாநகராட்சிப் பள்ளி மாணவியர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
பள்ளி, கல்லூரி, பல்கலைகளில் நடைபெறும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆ... |
தமிழகம் | உஷார் நிலையில் 300 வெடிகுண்டு நிபுணர்கள் : உச்ச கட்ட பாதுகாப்பில் கோவை செம்மொழி மாநாடு | தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்துள்ள ரயில் கவிழ்ப்பு முயற்சி சதிவேலைகளை தொடர்ந்து, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடுக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. வெடிகுண்டு ஊடுருவலை தடுக்க, அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களுடன் 300 நிபுணர்கள், தமிழகம் முழுவதும் இருந்து நேற்று கோவை வந்தனர். முக்கிய தலைவர்கள், வெளிநாட்டு விருந்தினர் த... |
இந்தியா | ராகுலுக்கு வயது 40:தொண்டர்கள் உற்சாகம் | புதுடில்லி:அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலரும், அமேதி தொகுதி எம்பி.,யுமான ராகுலுக்கு இன்று 40வது பிறந்தநாள். ராகுலின் பிறந்தநாளை காங்கிரசார் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், ராகுலின் பிறந்தநாள் விழா வழக்கமாக கொண்டாடப்படும். ஆனால், ராகுல் தற்போது டில்லியில் இல்லாததால், பிறந்தநாள் விழ... |
இந்தியா | சொல்கிறார்கள் | துணிச்சல் வேண்டும் : துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வரும் மாலதி: புதுக்கோட்டை பக்கத்தில் பொன்னமராவதிதான் சொந்த ஊர். எங்க குடும்பத்தில் அப்பா, அண்ணன், தம்பி, சித்தப்பா எல்லாரும் இன்ஜினியர்ஸ். என்னையும் இன்ஜினியரிங்தான் படிக்க வச்சாங்க. ஆனா, எனக்கு சவாலா ஏதாவது செய்யணும்னு ஆசை. ஒரு முறை நான் டிடெக்டிவ் ஏஜன்சி பக்கம் போக வ... |
தமிழகம் | இது உங்கள் இடம் | குருட்டு நம்பிக்கை உதவாது! என்.ராகவன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் சட்டசபை தேர்தல், இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ நடைபெற இருக்கிறது. மதுரை மத்தியத் தொகுதியில் ஆரம்பித்து, பெண்ணாகரம் தொகுதி முடிய, நடந்து முடிந்த அனைத்து சட்டசபை இடைத் தேர்தல்களிலும், மெகா வெற்றி வாகை சூடி, எந்தத்... |
இந்தியா | 60 லட்சம் ஆசிரியர்களுக்கு வீட்டு வசதி | புதுடில்லி:நாடு முழுவதும் உள்ள 60 லட்சம் ஆசிரியர்களுக்கு, இன்சூரன்ஸ் மற்றும் வீட்டு வசதி சலுகையை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.டில்லியில் மாநில கல்வித் துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். ஆசிரியர் நல தேசிய அறக்கட்டளைய... |
இந்தியா | திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் தெப்ப உற்சவம் | நகரி : திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில், இம்மாதம் 22 முதல் 26ம் தேதி வரை ஆண்டு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.தெப்ப திருக்குளத்தில் 22ம் தேதி கிருஷ்ணராகவும், 23ம் தேதி சுந்தரராஜராகவும் உற்சவர் எழுந்தருளுவார். தொடர்ந்து 24, 25, 26ம் தேதிகளில் பத்மாவதி தாயார் தெப்பத்தில் வலம் வருவார். மேலும் வரும் 25ம் தேதி இரவு கஜவாகன ... |
இந்தியா | போபால் சம்பவம்:பஸ்வான் கருத்து | பாட்னா: போபால் விஷவாயு சம்பவத்திற்கும், யூனியன் கார்பைடு தலைமை செயல் அதிகாரி வாரன் ஆன்டர்சன் தப்பிச் சென்றதற்கும் மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று, லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.பீகார் மாநிலத்தில், ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலில் ராம்விலாஸ் பஸ்வான் வெற்றி பெற்றுள்ளார்.அப்போது... |
தமிழகம் | நோய்கள் குணமாக மூலிகை விற்பனை மையம் : மூன்று மாநில வனத்துறைகள் ஏற்பாடு | மதுரை : தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களின் வனத்துறை சார்பில், மூலிகை விற்பனை மையம் துவக்கப்பட்டுள்ளது. நோய் குணமாக இயற்கை மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டமாக அமைந்துள்ளது. மூலிகைகளை பாதுகாக்க "டானிடா' நிறுவனத்தின் உதவியுடன், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள "பாரம்பரிய மருத்துவ மரபுகள் மறுமலர்ச்ச... |
இந்தியா | கட்சி மாறி ஓட்டு:பா.ஜ., எம்.எல்.ஏ.,3 பேர் நீக்கம் | புதுடில்லி:ராஜ்யசபா தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போட்ட பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர், கட்சியிலிருந்து நேற்று நீக்கப்பட்டனர்.ராஜ்யசபா தேர்தலில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பன்வாரி ராம், ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பீம்சேன் சவுத்ரி மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராம் சந்திரா ஆகிய மூன்று பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களு... |
தமிழகம் | தமிழ் இணைய மாநாட்டுப் போட்டிகள்:வெற்றி பெற்ற மாணவர்கள் அறிவிப்பு | சென்னை:செம்மொழி மாநாட்டையொட்டி நடத்தப்படும் தமிழ் இணைய மாநாட்டுக்காக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களது பட்டியலை, அமைச்சர் பூங்கோதை நேற்று வெளியிட்டார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடப்பதை ஒட்டி, மூன்று நாட்கள் உலகத் தமிழ் இணைய மாநாடும், உத்தமம் அமைப்புடன் இணைந்து நட... |
தமிழகம் | அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த வருகிறார் செங்கோட்டையன் | தூத்துக்குடி: அ.தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட்டதால் அதிருப்தியிலுள்ள முக்கிய நிர்வாகிகள், தி.மு.க.,வில் இணையாமல் தடுக்க அவர்களை சந்தித்து சமாதானப்படுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நாளை தூத்துக்குடி வருகிறார்.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் அக்கட்சியிலிருந்து விலக... |
தமிழகம் | முழுநேர ஊழியர்களாக நியமிக்க கோரி 27 பேர் மனு பள்ளிக் கல்வி செயலருக்கு ஐகோர்ட் உத்தரவு | மதுரை : கரூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பல ஆண்டுகளாக பகுதி நேரமாக பணிபுரியும் 27 பேரை, முழு நேர ஊழியர்களாக்க பள்ளி கல்வித் துறை செயலருக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கரூரை சேர்ந்த அஸ்கர்அலி உட்பட 27 பேர் தாக்கல் செய்த ரிட் மனு: நாங்கள் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பல ஆண்டுகளாக தற்காலிகமாக பகுதி நேர ஊ... |
தமிழகம் | கழுகுமலை கோயிலில் ஜூலை 1ல் கும்பாபிஷேகம் | தூத்துக்குடி : தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கழுகுமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம், ஜூலை 1ம் தேதி நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ளது கழுகாசலமூர்த்தி கோயில். சோழர், பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழமையான இந்த முருகன் கோயில் கும்பாபிஷேகம் கடைசியாக கடந்த 1994ம் ஆண்டில் நடந்தது. 16 ஆண்டிற்குப்பின் ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.