category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் முரண்டு : அத்தை மகளை கரம் பிடித்தார் மணமகன்
தியாகதுருகம் : தாலிகட்டும் நேரத்தில் மணமகனை பிடிக்கவில்லை என்று, சினிமா பாணியில் தாலியை தட்டிவிட்டு நடையை கட்டினார் மணப்பெண். அதே மணமேடையில் அத்தை மகளை மணந்தார் மணமகன். இச்சம்பவம் தியாகதுருகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோணான்குப்பம் கிராமத்தைச்சேர்ந்த சின்னதுரை- அன்னலட்சுமி த...
தமிழகம்
துணை நடிகை வழக்கில் சதீஷ்குமாருக்கு முன்ஜாமீன்
சென்னை : தன்னை துன்புறுத்தியதாக துணை நடிகை இந்திரா அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவர் சதீஷ்குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டது. சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்தவர் இந்திரா (30); "பம்பரக் கண்ணாலே', "ஆடுபுலி ஆட்டம்' உள்ளிட்ட சினிமாக்களில் து...
தமிழகம்
தமிழை வழக்கு மொழியாக்க கோரி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
கோவை : தமிழை, ஐகோர்ட் வழக்கு மொழியாக்க வலியுறுத்தி, கோவையில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்தனர்; ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஐகோர்ட் வழக்குகளில் வாதாட, தமிழை வழக்கு மொழியாக அறிவிக்க வேண்டுமென, நீண்ட நாட்களாக வக்கீல்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2006ல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு ...
தமிழகம்
எஸ்.ஐ., எழுத்துத் தேர்வில் போலீஸ் அல்லாதோரை கண்காணிப்பாளர்களாக நியமிக்க கோரி வழக்கு
மதுரை : தமிழகத்தில் வரும் ஜூலை 3ம் தேதி சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எஸ்.ஐ., எழுத்துத் தேர்வில் போலீஸ் அல்லாத பிற துறை அலுவலர்களை கண்காணிப்பாளர்களாக நியமிக்கக் கோரிய வழக்கில், கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த வக்கீல் முத்துவிஜயபாண்டி தாக்கல் செய்த பொ...
தமிழகம்
37 பேர் பலியான பஸ் விபத்து வழக்கு : மாஜி இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்
ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் சனவேலி பாலத்தில் நிகழ்ந்த பஸ் விபத்தில், 37 பேர் பலியான வழக்கில், ஆஜராகாத ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் பிறபிக்கப்பட்டது. திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலம் இடையில் அமைந்துள்ள சனவேலி பாலத்தில் 2005 ல் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் அதிகாலையில் வந்த பஸ் இழுத்து செல்லப்பட்டது. இதில...
தமிழகம்
வார இதழ் நிருபர் என மிரட்டி பணம் பறித்தவருக்கு சிறை
திட்டக்குடி : ராமநத்தம் அருகே டாஸ்மாக் ஊழியரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் கோரிய வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பாளையம் டாஸ்மாக் பார் சூப்பர்வைசர் கண்ணன் (35). இவரிடம் கடந்த 2ம் தேதி வாகையூர் கிருஷ்ணமேனன் (30), விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் செல்லதுரை (3...
தமிழகம்
ஆங்கில மோகத்தால் குழந்தையை பறிகொடுத்த பரிதாபம்
திண்டுக்கல் : தெருக்கள் தோறும் புற்றீசல் போல அதிகரித்து வரும் பெரும்பாலான நர்சரி,பிரைமரி பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. ஆங்கில மோகம் காரணமாக, குழந்தைகளை இப்பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர் இழப்பையே சந்திக்கும் நிலை நீடிக்கிறது. நாகரீகத்தோடு இணைந்த கல்வி வளர்ச்சியில், தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகள் அதிகளவு உரு...
இந்தியா
சங்கரராமன் கொலை வழக்கு ஒத்திவைப்பு
புதுச்சேரி : காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை, வரும் ஜூலை 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை, புதுச்சேரி முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 24 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்...
தமிழகம்
மற்றொருவர் விடைத்தாள் நகல் அனுப்பி தேர்வுத்துறை அலட்சியம்
பனமரத்துப்பட்டி:தேர்வுத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், ப்ளஸ் டூ விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பம் செய்த மாணவிக்கு, வேறு ஒருவரின் விடைத்தாள் நகல் அனுப்பப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் கிடைக்காததால், மருத்துவ கவுன்சலிங் துவங்கும் முன் மதிப்பெண் குறித்த முழு விவரம் அறிந்து கொள்ள முடியுமா என்று மாணவி தவித்து வருகிறார். சேல...
தமிழகம்
ராஜாதிராஜன் செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது என்ன?கருணாநிதி விளக்கம்
சென்னை:சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் ராஜாதிராஜன் கால செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கைநாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில், திருஇந்தளூர் எனும் ஊர் உள்ளது. அந்த ஊரின்...
தமிழகம்
டோல்கேட் ஊழியரை துப்பாக்கியால் மிரட்டிய மருங்காபுரி தி.மு.க., பிரமுகர்கள் மீது வழக்கு
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை டோல்கேட்டில் சுங்க வரி வசூல் செய்ய முயன்ற ஊழியர்களை துப்பாக்கியால் மிரட்டி, டோல்கேட் அறையை சேதப்படுத்திய மருங்காபுரி தி.மு.க., ஒன்றியச் செயலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் உட்பட ஆறு பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் மருங்காபுரி தி.மு.க., ஒன்றியச...
தமிழகம்
ஏ.ஐ.சி.டி.இ.,யின் கிடுக்கிப்பிடியால் மாணவர்கள் தவிப்பு
கோவை : தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஏறக்குறைய பூர்த்தி செய்யப்பட்டுவிட்ட நிலையில், கல்லூரி நடத்துவதற்கான தொடர் அனுமதி கிடைக்காததால், பணம் செலுத்திய மாணவர்கள் மட்டுமல்லாமல் கல்லூரி நிர்வாகிகளும் என்ன செய்வதென தெரியாமல் கையை பிசைந்தபடி உள்ளனர். தமிழக பொறியியல் கல்லூரிகளில் பி.இ., மாணவர் சேர்...
தமிழகம்
வயலில் பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி; 40 பேர் காயம்
திருச்சி : திருச்சி அருகே, தனியார் பஸ் வயலில் கவிழ்ந்ததில், ஒருவர் பலி; காயமடைந்த 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி மாவட்டம் நெய்தலூர் காலனியிலிருந்து, நேற்று காலை 8.30 மணிக்கு, சத்திரம் பஸ் ஸ்டாண்டுக்கு எஸ்.எம்.டி. என்ற தனியார் பஸ் கிளம்பியது. காலை நேரமானதால், கட்டட வேலை, தனியார் நிறுவனங்கள...
தமிழகம்
செம்மொழி மாநாடு முடிந்ததும் கள் இறக்கும் பிரச்னைக்கு தீர்வு
சென்னை:செம்மொழி மாநாடு முடிந்ததும், கள் இறக்கும் பிரச்னைக்கு தீர்வு காணப்படுமென முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.கொங்குநாடு முன்னேற்றக் கழக நிர்வாகிகள், முதல்வர் கருணாநிதியை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது, கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக முதல்வரிடம் உறுதியளித்தனர். இ...
தமிழகம்
ஆனித்திருமஞ்சன தேரோட்டம் : சிதம்பரத்தில் கோலாகலம்
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான நேற்று (18ம் தேதி) காலை தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்...
இந்தியா
பிரணாப் தலைமையில் தொழிலதிபர்கள் அமெரிக்கா பயணம்
புதுடில்லி : அமெரிக்காவில் அடுத்த வாரம் ஜூன் 22ம் தேதி நடைபெறும் இந்திய-அமெரிக்கா தொழிலதிபர்கள் மாநாட்டிற்கு இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் தொழிலதிபர்கள் செல்கின்றனர். இந்த குழுவில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, திட்டக்குழு துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் இடம் ப...
General
சிறையில் வாடும் சூகியைவிடுவிக்க வற்புறுத்தல்
ஐ.நா., சபை:மியான்மரில் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ள நோபல் பரிசு பெற்ற அரசியல் தலைவர் ஆங்சான் சூகியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஐ.நா., சபையின் மனித உரிமை அமைப்பு அந்நாட்டு அரசை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.மியான்மரில் ஜனநாயக ஆட்சி மலர போராடி வரும் மியான்மர் நாட்டு எதிர்க்கட்சித் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு ப...
இந்தியா
அழிவின் விளிம்பில் கொனார்க் சூரியன் கோவில் புதிய கோவில் கட்ட மக்கள் வற்புறுத்தல்
புவனேஸ்வர் : உலக புகழ்பெற்ற கொனார்க் சூரியன் கோவில், அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதால், அதை போலவே புதிய சூரியன் கோவில் ஒன்றை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து கட்ட வேண்டுமென்ற கோரிக்கை, நாடு முழுவதும் எழுப்பப்பட்டு வருகிறது. ஒரிசா மாநிலம் கொனார்க் பகுதியில் அமைந்துள்ள சூரியன் கோவில், தன் கட்டுமான சிறப்பாலும், சிற்ப சிறப...
தமிழகம்
நியூயார்க்கில் கார் குண்டு வைத்தஷசாத் மீது மேலும் குற்றச்சாட்டு
நியூயார்க்:அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் காரில் குண்டு வைத்த பைசல் ஷசாத் மீது, கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த மாதம் 1ம் தேதி காரில் குண்டு வைத்து விட்டு, துபாய்க்கு விமானத்தில் தப்பிச் செல்ல முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பைசல் ஷசாத்தை, அமெரிக்க போலீசார் கைது...
இந்தியா
மே.வங்கத்துக்கு இடம் பெயரும் நக்சலைட்கள் : ஜார்க்கண்டில் ஜனாதிபதி ஆட்சியால் கலக்கம்
புதுடில்லி : ஜார்க்கண்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை அடுத்து, நக்சலைட்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தங்களின் முக்கிய முகாம்களை ஜார்க்கண்டில் இருந்து, மேற்கு வங்கத்துக்கு மாற்றுவது என, அவர்கள் முடிவு செய்துள்ளனர். ஜார்க்கண்டில் ஏற்பட்ட நிலையற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக, அங்கு தற்போது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட...
General
முறைகேடாக மருத்துவம்: இந்திய டாக்டர் கைது
பாஸ்டன்:முறைகேடாக மருத்துவம் செய்த இந்திய டாக்டர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் இன்டியானாபொலீஸ் மாகாணத்தில் உள்ள ப்ளூமிங்டனில், டாக்டராக வேலை பார்த்தவர் கமல் திவாரி(58). இவரிடம் வந்த நோயாளிகளுக்கு தேவையில்லாமல் ஊசி போடுவது, மருந்தே தேவையில்லாத பட்சத்தில் கூட ஏராளமான மருந்துகளை கொடுப்பது போன்ற செயல...
இந்தியா
மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது எப்போது? மே.வங்க டி.ஜி.பி., தகவல்
கோல்கட்டா : மாவோயிஸ்டுகளை ஒடுக்க நீண்ட கால நடவடிக்கை தேவையென, மேற்கு வங்க காவல்துறை தலைவர் பூபிந்தர் சிங் கூறியுள்ளார். மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படையினரின் பசுமை வேட்டை நடவடிக்கை துவங்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி, கோல்கட்டாவில் அம்மாநில டி.ஜி.பி., பூபிந்தர் சிங் அள...
இந்தியா
பிருத்வி ஏவுகணை சோதனை வெற்றி
சந்திப்பூர் : ஒரிசாவின் சந்திப்பூர் கடலோர பகுதியில் பிருத்வி -2 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. கடந்த எட்டு மாதங்களில் பிருத்வி ஏவுகணை நான்கு முறை சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு 500 கிலோ ஆயுதத்தை சுமந்து 350 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கும் திறன் படைத்தது பிருத்வி ஏவுகணை. ஒ...
இந்தியா
விவசாய தொழிலில் இருந்து 12 கோடி இளைஞர்கள் மாறுவர்
மும்பை : இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில், இந்தியா மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது என்று ரிசர்வ் வங்கி துணைக் கவர்னர் சபீர் கோகர்ன் கூறியுள்ளார். அதே சமயம், விவசாயத்தில் இருந்து தொழில் துறை மற்றும் சர்வீசஸ் துறைகளுக்கு அவர்கள் மாற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். மும்பையில் நடைபெற்ற நிகழ்...
தமிழகம்
வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற பெண் கைது
தாம்பரம் : வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து, கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. கமிஷனர் உத்தரவுப்படி, மதுவிலக்கு கூடுதல் துணை கமிஷ...
தமிழகம்
உஷார் நிலையில் 300 வெடிகுண்டு நிபுணர்கள் உச்ச கட்ட பாதுகாப்பில் கோவை செம்மொழி மாநாடு
தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்துள்ள ரயில் கவிழ்ப்பு முயற்சி சதிவேலைகளை தொடர்ந்து, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடுக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. வெடிகுண்டு ஊடுருவலை தடுக்க, அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களுடன் 300 நிபுணர்கள், தமிழகம் முழுவதும் இருந்து நேற்று கோவை வந்தனர். முக்கிய தலைவர்கள், வெளிநாட்டு விருந்தினர் த...
தமிழகம்
முதல் போக நெல் சாகுபடிக்கு பெரியாறு அணை திறப்பு
கூடலூர் : பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத் தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு, 200 கன அடி தண்ணீர் நேற்று திறந்து விடப்பட்டது. பெரியாறு அணையில் இருந்து திறந்து விடும் தண்ணீரின் மூலம் கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நடந்து வருகிறது. முதல் போக நெல் சாகுபடிக்கு வழக்கமாக ஜூன...
தமிழகம்
மருத்துவப் பேராசிரியர் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
தேனி : மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களுக்கு கவுன்சிலிங் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களுக்கு பிப்.,ல் கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும். கடந்த முறை கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டு, பின் காரணம் ஏதுமின்றி ஒத்திவைக்கப்பட்டது. பின் மாறுதல் கேட்பவர்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு மாறுதல் வழங்கப்படுவ...
தமிழகம்
தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அமைப்பு
சென்னை, : தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எம்.எஸ்.பழனிச்சாமி, கவுன்சிலின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் ஒருங்க...
தமிழகம்
லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கியது
கூடலூர் : பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, லோயர்கேம்ப் மின்நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கியது. கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல் சாகுபடி கடந்த மார்ச் 7ல் முடிவடைந்தது. அப்போது பெரியாறு அணையில் இருந்து நீர் நிறுத்தப்பட்டது. அணையில் நீர் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, லோயர்கேம்ப் மின்நிலையத...
தமிழகம்
சான்றிதழ்கள் பல்கலை அறிவிப்பு
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தொலைக்கல்வி இயக்ககத்தில் கோரப்படாத, தபால் துறையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட மதிப்பெண் பட்டியல்கள், தற்காலிக சான்றிதழ்கள், படிப்பு நிறைவு சான்றிதழ்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர் தொலைக்கல்வி அடையாள அட்டையுடன் நேரில் வந்து சான்றிதழ்கள் விவரம் கூறி பெற்று கொள்ளலாமென இயக்குனர் முத்து...
தமிழகம்
விவசாயத்துறையில் நடக்கும் முறைகேடு கேரளா செல்லும் தமிழக அரசு மானியம்
தேனி : விவசாயத்துறையில் நடக்கும் முறைகேடு காரணமாக, தமிழக விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானியம் கேரள விவசாயிகளுக்கு சென்றடைகிறது. பருத்தி, பயறுவகை, நிலக்கடலை விளைச்சலை அதிகரிக்க அரசு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் தெளிப்புநீர் பாசன கருவிகள் வழங்குகிறது. இத்திட்டத்தில் தேனி, திண்டுக்கல், கோவை, நாகர்கோயில், நெல்லை, ஈர...
தமிழகம்
வார்த்தை பிறழாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு பயிற்சி பெறும் பள்ளி மாணவியர்
கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடல்கள் டேப் ரிக்கார்டரில் ஒலிக்கச் செய்யாமல், வாய் திறந்து உணர்வு பொங்க பாட மாநகராட்சிப் பள்ளி மாணவியர் பயிற்சி பெற்று வருகின்றனர். பள்ளி, கல்லூரி, பல்கலைகளில் நடைபெறும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆ...
தமிழகம்
எம்.எஸ்சி., செய்முறை தேர்வு தேதி மாற்றம்
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தொலைக் கல்வியில் எம்.எஸ்சி., இயற்பியல், வேதியியல் (நான்- செமஸ்டர்) செய்முறை தேர்வு தேதிகள் மாறுதல் செய்யப்பட்டுள்ளன. இப்பாடப் பிரிவுகளில் அனுமதி பெற்ற முதலாண்டு (10ஏ), இரண்டாமாண்டு (ஏ9ஏ) மாணவர்களுக்கு மதுரை யாதவா கல்லூரி மற்றும் சென்னை கிரஸன்ட் பொறியியற் கல்லூரியில் இத்தேர்வு நடக்க உள்ளது. ...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் அறிக்கை: கல்விக் கட்டணம் செலுத்தி, தற்போது பள்ளிகள் இயங்கத் துவங்கிய பின், பெற்றோர் - மாணவர்கள் நலனுக்கு எதிராக கல்விக் கட்டணங்களை உயர்த்த நீதிபதி கோவிந்தராஜன் குழு முயற்சிப்பது நியாயமற்றது. இது, கல்விக் கட்டணச் சுரண்டலுக்கு துணை போகும் செயல். அ.தி.மு.க., பொருளாளர் ஓ...
இந்தியா
திருமலையில் இந்தாண்டு இரண்டு பிரம்மோற்சவம்
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் இந்தாண்டு இரண்டு பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதாக, திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி கிருஷ்ணராவ் தெரிவித்தார். பிரம்மோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் திருமலையில் நடந்தது. பின், நிருபர்களிடம் பேசிய நிர்வாக அதிகாரி கூறுகையில்: ...
இந்தியா
சபரிமலை நடை இன்று அடைப்பு அடுத்த மாதம் 16ம் தேதி திறப்பு
சபரிமலை : ஆனி மாத பூஜைகள் முடிந்து, சபரிமலை அய்யப்பசுவாமி நடை இன்றிரவு அடைக்கப்படும். ஆடி மாத பூஜைகளுக்காக, நடை அடுத்த மாதம் 16ம் தேதி மாலை திறக்கப்படும். ஒவ்வொரு மாதமும், மாத பூஜைகளுக்காக தமிழ் மாதம் முதல் தேதி அன்று சபரிமலை அய்யப்ப சுவாமி நடை திறக்கப்படுவது வழக்கம். அதேபோல், ஆனி மாத பூஜைகளுக்காக கோவில் நடை 14ம் தேதி ...
தமிழகம்
கழுகுமலை கோயிலில் ஜூலை 1ல் கும்பாபிஷேகம்
தூத்துக்குடி : தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கழுகுமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம், ஜூலை 1ம் தேதி நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள கழுகாசலமூர்த்தி கோயில், சோழர், பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழமையானது. இந்த முருகன் கோயில் கும்பாபிஷேகம் கடைசியாக, கடந்த 1994ம் ஆண்டில் நடந்தது. 16 ஆண்டிற்குப்பின...
தமிழகம்
செம்மொழி மாநாடு தொடர் ஓட்டம் : சிதம்பரத்தில் துவங்கியது
சிதம்பரம் : அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களின் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தொடர் ஓட்டம் சிதம்பரத்தில் நேற்று துவங்கியது. கோவையில் 23 முதல் 27ம் தேதி வரை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாநாட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த ஏப். 20ம் தேதி மாணவ, மாணவியர் பங்கேற்ற மினி மராத்தா...
தமிழகம்
பள்ளி அருகே பாழடைந்த பங்களா: மாணவிகளை குறிவைக்கும் கும்பல், விழித்துகொள்ளுமா பள்ளி நிர்வாகம்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பெண்கள் பள்ளி அருகில் உள்ள பாழடைந்த கட்டடத்தில், சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரிப்பதால் மாணவிகளின் வாழ்க்கை கேள்விகுறியாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. ராமநாதபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் கழிப்பறையில் குழந்தை பெற்றார். இந்த சம்பவம் பெரும...
தமிழகம்
மகளிர் ஸ்டேஷன் கட்ட இடம் தேர்வு
கீழக்கரை: கீழக்கரையில் விரைவில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் கட்டப்படுகிறது.முதற்கட்டமாக தற்போது இடத்தை தேர்வு செய்து தெரிவிக்குமாறு மாநில போலீஸ் ஹவுசிங் போர்டு பிரிவிலிருந்து தகவல் வந்துள்ளது.கீழக்கரையில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே வாடகை கட்டட மாடியில் இயங்கி வருகிறது.புகார் கொண்டு வரும் முதியவர்கள் மாடிக்...
தமிழகம்
மதுரை- தொண்டி சாலை பள்ளங்களால் அபாயம்
திருவாடானை: மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாøயில் பெரிய பள்ளங்களால் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது. மதுரை- தொண்டி தேசிய நெஞ்சாலையில் போக்குவரத்து அதிகமாக உள்ளது. இரவு நேர பஸ்கள் துவக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று மதுரையிலிருந்து தொண்டிக்கு இரவு 10.30 , ஒரு மணிக்கு பஸ்கள் விடபட்டன. தொண்டி, திருவாடானையில் வர்த்தகநிறுவனங்க...
தமிழகம்
செம்மொழி மாநாடு விளக்க கூட்டம்
சாயல்குடி: சாயல்குடி ஒன்றிய தி. மு.க .,சார்பாகி வாலிநோக்கத்தில் செம்மொழி மாநாடு விளக்க பொது கூட்டம் நடைபெற்றது. கடலாடி ஒன்றிய தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் வி.வி. எஸ். சுப்பிரமணியன் , மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் எம். எம். அலி அக்பர், ஊராட்சி தலைவர் பி. கே . வஹிதாசகுபர் முன்னிலை வகித்தனர். பேச் ...
தமிழகம்
தொண்டியில் 5 நாட்களாக தண்ணீர் வராததால் அவதி
தொண்டி: தொண்டியில் ஐந்து நாட்களாக தண்ணீர் வராததால் பொதுமக்கள் பாதிக்கபட்டுள்ளனர். தொண்டி பேரூராட்சியில் காவிரி தண்ணீர் சப்ளை செய்யபட்டு வருகிறது. போதுமான அளவில் தண்ணீர் கிடைத்து வந்ததால் பொதுமக்கள் பயன்பெற்று வந்தனர். கடந்த ஐந்து நாட்களாக காவிரி நீர் வராததால் தொண்டி பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். இதனால் மாட்...
தமிழகம்
நோட்டு,புத்தகம்வழங்கும் விழா
கீழக்கரை: கீழக்கரை மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் ஏழை மாணவர்களுக்கு நோட்டு,புத்தகம் வழங்கும் விழா சங்க கட்டடத்தில் நடந்தது.கீழக்கரையில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் ஏராளமான மாணவ,மாணவிகளுக்கு நகராட்சி தலைவர் பஷீர் அகமது,இன்ஸ்பெக்டர் சங்கு ஆகியோர் நோட்டு,புத்தகம் வழங்கி பேசினர். சங்க தலைவர் ஜமால் காதர்,செயலாளர் இஸ்மாயில்...
தமிழகம்
அங்குபஞ்சர் ஹெர்பல் கிளினிக் திறப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலை கழக அனுமதியுடன் அட்டாமா அங்குபஞ்சர் பயிற்சி மையம் மற்றும் ஆஷா அக்குபஞ்சர் ஹெர்பல் கிளினிக் திறப்பு விழா அட்டாமா மாநில தலைவர் டாக்டர் சபீர் அப்துல்லா தலைமையில் நடந்தது. ஏ.ஆர்.மருத்துவமனை டாக்டர் பாத்திமா சின்னத்துரை, லயன்ஸ் கிளப் தலைவர் ராமகிருஷ்ணன், மாநில ச...
தமிழகம்
தூர்வாரிய குளத்தில் மீனாட்சி அம்மன் சிலை
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகேயுள்ள கிராமத்தில், தொழிலாளர்கள் நேற்று குளத்தை தூர்வாறும் போது, பித்தளையாலான மீனாட்சி அம்மன் சிலை கிடைத்தது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள சூளைவாய்க்கால் கிராமத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நேற்று இங்குள்ள குளத்தை தொழிலாளர்கள் தூர்வாரி கொண்டிருந்தன...
தமிழகம்
திறந்தவெளியில் ஆடுகள் அறுப்பு
ஏர்வாடி: ஏர்வாடியில் திறந்தவெளியில் ஆடுகள் அறுக்கப்பட்டும், சுகாதாரத்துறைகண்டுகொள்ளாமல் உள்ளது . ஏர்வாடி தர்கா அருகே ஆடுகள் அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன்ரத்தம் ரோடுகளில் தேங்கி நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொள்ளப் படாததால் ஆட்டு இறைச்சி முதல் மீன்கள் வரை திறந்தவெளியில் விற்கப்ப...
தமிழகம்
கும்பாபிஷேகம்
சாயல்குடி:சாயல்குடியை அடுத்த மாரியூர் வடக்கு தெரு சந்தமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு பால், நெய் , பழரச அபிஷேகம் நடைபெற்றது. சுற்று வட்டாரத்தினர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழகம்
வழுதூரில் உண்ணாவிரதம் தொடக்கம் மின் உற்பத்தி பணிகளும் கடும் பாதிப்பு சமரச பேச்சை ஏற்க மறுப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் மின் உற்பத்திய நிலைய ஒப்பந்த பணியாளர்கள் உண்ணாவிரதம் தொடங்கிய நிலையில், மின் நிலைய பணிகளும் கடுமையாக பாதித்துள்ளன. வழுதூர் இயற்கை எரிவாயு மின்உற்பத்தி நிலையம் முதல் யூனிட்டில் ஒப்பந்த பணியாளராக 86 பேர் பணியாற்றுகின்றனர். 2006 ஜூலை மூன்றில் நடந்த இரண்டாவது யூனிட் திறப்பு விழாவில...
தமிழகம்
ஆக்கிரமிப்புகள் அகற்றம்வர்த்தக சங்கத்தினர் ஆதரவு
முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்புகள் வர்த்தக சங்கத்தினரின் முழு ஆதரவுடன் அகற்றப்பட்டது.முதுகுளத்தூர் பஜாரில் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது, முதுகுளத்தூரில் மீண்டும் அமைக்கப்பட்டது. இதனால் போக்குவரத...
தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பஜ்ரங்தாஸ் பாபா சேவா டிரஸ்ட் சார்பில் ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. சரஸ்வதி துவக்கப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சீதாராம்தாஸ் பாபா தலைமை வகித்தார். தேவதாஸ் வரவேற்றார். தாசில்தார் ராஜேந்திரன், டிரஸ்ட் சார்பில் துவங்கப...
தமிழகம்
கருத்தரங்கு
கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பிரிவு,மின்னணுவியல் துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மையம் சார்பில் இறுதியாண்டு பயிலும் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை மாணவ, மாணவிகளுக்கு "மொட்டிவேசன் டுவாட்ஸ் சக்ஸஸ்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அலாவுதீன் துவக்...
தமிழகம்
ராமேஸ்வரம் கோவில் நடை நாளை சாத்தப்படும்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோவில் நடை நாளை சத்தப்படுகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இன்று முதல் மூன்று நாட்கள் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடைபெறுகிறது. ராமேஸ்வரத்தின் வரலாற்று நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு, நாளை (ஜூன் 20) கோதண்டராமர் கோவிலில் விபீஷனர் பட்டாபிஷேக வைபவம் நடக்க உள்ளது. இத...
தமிழகம்
ராமேஸ்வரம் கோயில் நடை நாளை சாத்தப்படுகிறது
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் நடை நாளை சசாத்தப்படுகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று முதல் மூன்று நாட்கள் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடைபெறுகிறது. ராமேஸ்வரத்தின் வரலாற்று நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு நாளை (ஜூன் 20) கோதண்டராமர் கோயிலில் விபீஷனர் பட்டாபிஷேக வைபவம் நடக்க உள்ளது. இத...
தமிழகம்
தமிழக போலீசார் சைக்கிள் பயணம்
சென்னை : சமூக நீதி, மனித உரிமை, சுற்றுப்புற பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு குறிக்கோளைக் கொண்டு போலீஸ் நண்பர்கள் 14 ஆயிரத்து 600 கி.மீ., சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.இது குறித்து போலீஸ் நண்பர்கள் இயக்கத் தலைவர் பிரதீப் வி.பிலிப் வெளியிட்ட செய்தியில் "போலீஸ் நண்பர்களின் நான்கு பேர் கொண்ட குழுவினர், அகில இந்திய சைக்கிள் ப...
தமிழகம்
சனவேலி விபத்து வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டரை கைது செய்ய உத்தரவு
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் சனவேலி பாலம் பஸ் விபத்தில் பலியான 37 பேர் உயிரிழந்த வழக்கில், சாட்சியாக ஆஜராகாத ஓய்வு போலீஸ் இன்ஸ்பெக்டரை கைது செய்ய ராமேஸ்வரம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருவாடனை, ஆர்.எஸ்.மங்களம் இடையில் அமைந்துள்ள சனவேலிபாலத்தில் கடந்த 2005 ல் ஏற்பட்ட வெள்ளத்தினால், அதிகாலையில் வந்த பஸ் இழுத்து செல்லப...
தமிழகம்
கடலுக்கு சென்று மாயமான மீனவர்கள்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 16 ல் 600 க்கும் மேற்பட்ட படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் கரை திரும்பினர். இதில், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் வேல்முருகன் படகு மட்டும் நேற்று வரை கரை திரும்பவில்லை. படகில் சென்ற மீனவர்கள் பாலவேசமுத்து, ஜான், ரிச்சர்டு, முத்துகுமார் ஆகியோர...
தமிழகம்
வழுதூரில் மின் உற்பத்தி நிறுத்தம் மின் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வழுதூர் இயற்கை எரிவாயு சுழலி மின்நிலைய இரண்டு உற்பத்தி யூனிட்டுகளும் செயல்படாமல் இருப்பதால், மேலும் மின்தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், வழுதூரில் தமிழ்நாடு அரசு மின்வாரியத்தின் கீழ் இயற்கை எரிவாயு சுழலி மின்நிலையம் செயல்படுகிறது. 95 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட ப...
தமிழகம்
முன்னாள் படைவீரர்கள் தவிப்பு:
அமைச்சரின் பணிநிரந்தர அறிவிப்பை தொடர்ந்து 144 ஒப்பந்த பணியாளர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப் பட்டன. இதில் நிலையத்தின் காவலர்களான 29 முன்னாள் படைவீரர்களும் அடங்குவர். இவர்களையும் இதுவரை நிரந்தரம் செய்யாமல் இழுத்தடித்து வருகின்றனர். அமைச்சரின் அறிவிப்புக்கு பின்னும், தொடர்ந்து வரும் இந்த அசட்டைக்கு, தி.மு.க., தொழிற்சங்க...
தமிழகம்
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமிக்க கோரிக்கை
குஜிலியம்பாறை: சிறப்பு கல்வி திட்டத் தின் கீழ், தரம் உயர்த்தப் பட்ட நடுநிலை பள்ளிகளுக்கு தமிழாசிரியர் நியமனம் செய்யும் புதிய நடைமுறையை அரசு செயல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய அரசின் சிறப்பு கல்வி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய வாரியாக, தரம் உயர்த்துவதற்கான குறிப்பிட்ட தகுதியுடைய சில தொடக்க ...
தமிழகம்
பிரசவத்திற்காக வந்தவர் குழந்தை திருடினாரா? மதுரை அரசு மருத்துவமனையில் மீண்டும் சர்ச்சை
மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை, பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் திருடிச் சென்றாரா என, போலீசார் விசாரிக்கின்றனர். ஆறு மாதத்தில் மீண்டும் குழந்தை திருட்டு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பாப்பாபட்டி அருகேயுள்ள மின்னாம்பட்டியைச் சேர்ந்தவர் இளையராஜா. இவ...
தமிழகம்
மல்லணம்பட்டியில் குடிநீர் கேட்டு மறியல்
வத்தலக்குண்டு: மல்லணம்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், மல்லணம்பட்டி,அழகாபுரியில் இருபது நாட்களாக குடிநீர் கிடைக்கவில்லை. எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் கிராம மக்கள் காலி குடங்களுடன் துணை தலைவர் முருகன், வார்டு உறுப்பினர் ராஜேஷ் தலைமையில் வத்தலக் குண்டு-மதுரை...
தமிழகம்
ஆட்டோ சக்கரம் கழன்று ஓடியது பள்ளிக் குழந்தைகள் காயம்
ஈரோடு : ஈரோட்டில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவின் முன்சக்கரம் கழன்று, ஆட்டோ கவிழ்ந்ததில் சிறிய காயங்களுடன் குழந்தைகள் தப்பினர். ஈரோட்டில் ஆட்டோக்களில் 15க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்வது இன்னும் தொடர்கிறது. ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறந்த போது, பள்ளி செல்லும் வேன், பஸ், ஆட்டோக்களை, ஈரோடு வட...
தமிழகம்
நிர்வாக அதிகாரி இல்லாத வேடசந்தூர் பேரூராட்சி
வேடசந்தூர்: வேடசந்தூர் பேரூராட்சியில் நிர்வாக அதிகாரி பணி நீண்ட காலமாக காலியாக உள்ளது.ஒட்டன்சத்திரம், தாடிக்கொம்பு, எரியோடு, அகரம், குஜிலியம்பாறை பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு ஒருவராக வேடசந்தூர் பேரூராட்சி நிர்வாக அதிகாரியாக பொறுப்பு வகித்து வருகின்றனர்.முக்கிய முடிவு எடுப்பதில் பிரச்னை ஏற்படும் என்...
தமிழகம்
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கக் கோரிக்கை
வேடசந்தூர்: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்று தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி தர கோரிக்கை எழுந்துள்ளது. அரசு இந்த ஆண்டு முதல் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்றிய பள்ளிகளில் தமிழில் உள்ள பாடங்கள், மெட்ரிக் பள்ளிகளில் ஆங் கில வழியில் கற்பிக்கப்படுகிறது. மெட்ரிக் பள்ளிகளுக்கு பாடத் திட...
தமிழகம்
ஆலோசனைக் கூட்டம்
திண்டுக்கல்: தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திண்டுக் கல்லில் நடந்தது. ஆர்.டி. ஓ., ராமசாமி தலைமை வகித்தார். தீயணைப்பு உதவிக் கோட்ட அலுவலர் மனோகரன் முன்னிலை வகித்தார். தீயணைப்பு, பொதுப்பணி, வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற் றனர். இதில் தென்மேற்கு பருவமழை விரைவில் துவங்க உள்ளதால், இ...
தமிழகம்
உத்தப்புரத்தில் மோதல்: 16 பேர் கைது
எழுமலை : உத்தப்புரத்தில், சாக்கடையை சுத்தம் செய்ததில் இருபிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 40 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், 16 பேரை கைது செய்தனர். மதுரை மாவட்டம், உத்தப்புரம் மாரியம்மன் கோவில் சுற்றுச் சுவரை ஒட்டி அமைந்துள்ள சாக்கடையை சுத்தம் செய்ததில், நேற்று முன்தினம் இருபிரிவினருக்கும் இடை...
தமிழகம்
நெய்க்காரபட்டி பேரூராட்சி கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
பழநி: கவுன்சிலர்கள் அஜன் டாவை வாங்காததால் நெய்க்காரபட்டி பேரூராட்சி கூட்டம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. நெய்க்காரபட்டி பேரூராட்சி தலைவர் முஸ்தபா(தி.மு.க.,) கூறியதாவது: கூட்டம் நடத்துவதற்கு தேவையான கவுன்சிலர்கள் வரவில்லை. அவர் கள் அஜன்டாவை வாங்காமல் கூட்டம் நடத்த முடியாததால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. என்றார...
இந்தியா
காஷ்மீரில் துப்பாக்கி சண்டை : 2 பயங்கரவாதிகள் பலி
ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் பலியானார்கள். காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் பலியானார்கள். இறந்தவர்களின் பெயர்கள் சாஜித் மற்றும் உமர் என்று சோதனையில் தெரியவந்தது. மேலும் அவர்களிட...
தமிழகம்
எரியோடு கோஷ்டி மோதல் சம்பவத்தில் 40 பேர் கைது
வடமதுரை: எரியோடு செல்லக் குட்டியூரில் வீட்டின் வழி யே மின்வயர் கொண்டு செல்வது தொடர்பாக பிச்சைமுத்து தரப்பினருக்கும், கோபால் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட் டது. இப்பிரச்னை குறித்து இரு தரப்பு பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த கூடியிருந்தனர். அப்போது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது. இச்சம்பவத்த...
தமிழகம்
ரோடு பணியில் மூடப்பட்ட ஓடை மழை நீரால் விவசாயிகள் பாதிப்பு
வடமதுரை: வடமதுரை அருகே நான்கு வழிச்சாலை பணியில் மூடப்பட்ட காட்டோடையில் நேற்று பெருக்கெடுத்து வந்த மழை நீர் கிணற்றில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. புத்தூர் ஊராட்சி கரிவாடன்செட்டிபட்டி மலையடிவாரத்தில் சேகரமாகும் மழை நீர் முட்டுகொம்பு காட்டோடையாக அப்பிநாயக்கன்பட்டி, மணியகாரன்பட்டி, பெருமாள்கோவில்பட்டி வழியே வரட் டாற்ற...
தமிழகம்
திறப்பு விழா
நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் ஸ்டேட் பாங்க் கிளை சார்பில் புதிய ஏ.டி.எம்., திறக்கப்பட்டது. மதுரை மண்டல மேலாளர் கண்ணன்ராஜா தலைமை வகித்து பேசினார். கிளை மேலாளர் முருகவேல் பூபதி முன்னிலை வகித்தார். உதவி மேலாளர் சத்யபிரபாகர் வரவேற்றார். டி.எஸ்.பி., புஷ்பம் திறந்து வைத்தார். உதவி மேலாளர் (கடன்) ஆறுமுகசாமி நன்றி கூறினார். தனி...
தமிழகம்
சிலிண்டர் வெடிப்பு 4 பேர் காயம்
கொடைக்கானல்: கொடைக்கானல் அண்ணாநகரைச் சேர்ந்த ரவி(45), மனைவி சின்னத் தாய்(35),மகன் ராஜீவ்(20), வேலைக்காரர் சுதேஷ்(20) ஆகியோருடன் வசித்து வந்தார். இரவு நேர கடைக்கு உணவுப்பொருள் தயார் செய்து கொண்டிருந்த போது, திடீரென காஸ் சிலிண்டர் வெடித்ததில் மனைவி, மகன் ராஜீவ் ஆகியோர் பலத்த காயமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சை பெற்ற...
தமிழகம்
ஆண்டு விழா
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தில், புனித செபஸ்தியார் கிளைச் சபை இரண்டாம் ஆண்டு விழா நடந்தது. மத்திய சபை தலைவர் ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தார். பாதிரியார் ஜான்போஸ்கோ முன்னிலை வகித்தார். கிளைச்சபை தலைவர் பென்ஹர் வரவேற்றார். கல்வி உதவித் தொகை, ஆடைகள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நகராட்சி உறுப்பினர் அழகர...
தமிழகம்
செம்மொழி மாநாடு விழிப்புணர்வு சுடர் ஏந்தி திண்டுக்கல்லில் ஓட்டம்
திண்டுக்கல்: செம்மொழி மாநாடு விழிப்புணர்வு சுடர் ஓட் டக்குழு, நேற்று திண்டுக் கல் வழியே கோவைக்கு சென்றது.கோவை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில், ஐந்து குழுவினர் சுடர் ஏந்தும் தொடர் ஓட்டம் துவங்கியுள்ளது. கிருஷ்ணகிரி, சென்னை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருக்குவளை ஆகிய இடங்களில் இர...
தமிழகம்
ரோடு சீரமைப்பில் ரூ. பல லட்சம் மோசடி திண்டுக்கல் நகராட்சி கூட்டத்தில் புகார்
திண்டுக்கல்: ரோடு சீரமைப்பில் பல லட்ச ரூபாய் மோசடி நடந்ததாக புகார் கூறி திண்டுக்கல் நகராட்சி கூட்டத்திலிருந்து மா.கம்யூ., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். திண்டுக்கல் நகராட்சி கூட்டம், தலைவர் நடராஜன் தலைமையில் நடந்தது. கமிஷனர் லட்சுமி முன்னிலை வகித்தார். இதில் நடந்த விவாதம்: கல்யாணசுந்தரம் (துணைத்தலைவர்):...
தமிழகம்
திறப்பு விழா
பழநி: பழநி நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கக்கன் உருவ பட திறப்பு விழா நடந்தது. கக்கனின் மருமகள் பூமாலை தலைமை வகித் தார். மாவட்ட தலைவர் திருஞானசம்பந்தம் முன் னிலை வகித்தார். நகர தலைவர் சண்முகநாதன், வட்டார தலைவர் கனகசபாபதி, ராகுல் நற்பணி மன்ற நிர்வாகி கணபதி உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழகம்
விழிப்புணர்வு ஊர்வலம்
வேடசந்தூர்: தெத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க் கையை வலியுறுத்தி விழிப் புணர்வு ஊர்வலம் நடந்தது. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கருப்பணன் தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் ஜீவா வரவேற்றார். உதவி ஆசிரியர் ஜான் பீட்டர் நன்றி கூறினார்.
தமிழகம்
தமிழகத்தில் காங்., ஆட்சி கக்கன் மருமகள் எதிர்பார்ப்பு
பழநி: தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி ஏற்படுவது சாத்தியம் என முன்னாள் அமைச்சர் கக்கன் மருமகள் பூமாலை கூறினார். கக்கனின் மூன்றாவது மகன் காசி விஸ்வநாதன். புதுக்கோட்டை எஸ்.பி.,யாக பணியாற்றிய போது (1999ல்) இறந்தார். இவரது மனைவி பூமாலை(54) பழநி அருகே பாலசமுத்திரத்தில் முதியோர்க்காக ஆசிரமம் அமைத்து வருகிறார். பழநியில் இவர் கூறிய...
தமிழகம்
கணவன், மனைவியாக நடித்து போலி பாஸ்போர்ட் குஜராத்தை சேர்ந்த இருவர் சென்னையில் கைது
சென்னை : கணவன், மனைவி போல் நடித்து போலி பாஸ்போர்ட் தயாரித்து அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பித்த குஜராத்தை சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். குஜராத் மாநிலம், ஆமதாபாத் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர்கள் யோகேஷ்வர காசிராம் (53) மற்றும் சந்திரகலா யோகேஷ்வர் (50). கடந்த சில தினங்களுக்கு முன், சென்னையில் உள்ள அமெரிக...
தமிழகம்
ராஜபாளையம் மகளிர் அரபி கல்லூரி மீது தாக்குதல்
ராஜபாளையம் : ராஜபாளையம் சம்மந்தபுரத்தில் மகளிர் அரபிக் கல்லூரியில் கும்பல் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. ராஜபாளையம் சம்மந்தபுரம் அரபாத் நகரில் மகளிர் அரபிக் கல்லூரியில் சுற்றுச்சுவர் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடப்பதால், சில நாட்களாக மேலப்பள்ளி வாசல் தெருவில் உள்ள கட்டடத்தில் தற்காலிகமாக மாணவிகளுக்...
தமிழகம்
எல்.கே.ஜி., மாணவரை அடித்து கொன்றதாக புகார் பள்ளி தலைவர்,ஆசிரியை மீது வழக்கு
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பள்ளிக்குச் சென்ற மூன்று வயது மாணவரை,அடித்துக் கொன்றதாக உறவினர்கள் ரோடு மறியல் செய்தனர்.பள்ளி தலைவர், ஆசிரியை மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், பிரேத பரிசோதனையில் தாமதம் ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஸ்ரீராமபுரம் அருகேயுள்ள கரியகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் அழகுமலை. இவரது மகன் ...
தமிழகம்
பஸ்கள் மோதல் மேலும் 2 பேர் பலி
மதுரை : மதுரையிலிருந்து நேற்று முன்தினம் மாலை அருப்புக்கோட்டைக்கு பழனி என்ற தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அங்கிருந்து மதுரை நோக்கி வந்த ஸ்ரீராம் என்ற தனியார் பஸ், திருமங்கலம் அருகே பாரபத்தி விலக்கில் நேருக்கு நேர் மோதியதில், இருவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜான்சன் என...
தமிழகம்
நகை வியாபாரிகளிடம் 4 கிலோ தங்கம் திருட்டு
சென்னை : கேரளாவில் இருந்து சென்னைக்கு நகை விற்க வந்தவர்களிடம் இருந்து ரயிலில் 4 கிலோ தங்க நகைகளை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடுகின்றனர். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர்கள் சித்தார்த்தன் (45), தினேஷ் (30). இவர்கள் இருவரும் திருச்சூரில் உள்ள ஒரு நகை தயாரிப்பாளரிடம் பணியாற்றி வருகின்றனர். அங்கு தங்கத்தில் செய்யப்பட...
தமிழகம்
ஊரை விட்டு ஒதுக்கியதால் காதல் ஜோடி தற்கொலை
திருவண்ணாமலை : காதல் திருமணம் செய்ததற்காக ஊரை விட்டு ஒதுக்கியதால், திருமணம் செய்த தம்பதியர், தற்கொலை செய்து கொண்டனர். நாகர்கோவிலைச் சேர்ந்த மூர்த்தி, விஜயலட்சுமி (35) ஆகிய இருவரும், காதலித்து வந்தனர். இருவர் வீட்டிலும் வந்த எதிர்ப்பையும் மீறி, கடந்த மாதம் மதுரையில் ரகசியமாக திருமணம் செய்து, கடந்த வாரம் ஊருக்கு திரும்பி...
தமிழகம்
குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு நடவடிக்கை தீவிரம்
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் பன்றிக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், அருகே உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரள கடற்கரைகளில் தற்போது மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலை...
தமிழகம்
கல்வி உதவி தொகை பா.ஜ., போராட்டம்
சிவகங்கை : பா.ஜ., மகளிர் அணி செயற்குழு கூட்டம், மானாமதுரையில் நடந்தது.மாவட்ட துணை தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் விமலாதேவி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் தமிழரசி பேசினார். சிறுபான்மையினருக்கு கல்வி உதவி தொகை வழங்குவது போல, அனைத்து மதத்தினருக்கும் வழங்க வேண்டும்; அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை மட...
தமிழகம்
பள்ளி, கல்லூரி செய்திகள் : ஆசிரியர், மாணவிகளுக்கு பாராட்டு
தேவகோட்டை: தேவகோட்டை பெத்தாளாச்சி மகளிர் பள்ளி, பத்தாம் வகுப்பு தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றது. இதற்கான பாராட்டு விழா நடந்தது. முதல் நாள் விழாவில், செயலாளர் ராமநாதன் தலைமை வகித்தார். சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் அருணாசலம், லோட்டஸ் பள்ளி ஆலோசகர் குமரப்பன், நகரத்தார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், விஞ்...
தமிழகம்
ஆனித்திருமஞ்சன தேரோட்டம் : சிதம்பரத்தில் கோலாகலம்
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது.கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.முக்கிய விழாவான நேற்று (18ம் தேதி) காலை தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ...
தமிழகம்
ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இன்ஜினியர் கைது
திருநெல்வேலி : ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இன்ஜினியர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் கடையம், லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன்; கறிக்கடை நடத்தி வருகிறார். இவர், புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு, கட்டேரிப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். வீட்டிற்கு மின் இணைப்...
தமிழகம்
ஆர்.ஐ., யை தேடி அலையும் மாணவர்கள்
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி பகுதி மாணவர்கள், சான்றிதழ் பெற வருவாய் ஆய்வாளரை தேடி, மானாமதுரை செல்கின்றனர். திருப்பாச்சேத்தி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் படமாத்தூர் ரோட்டில் உள்ளது. திருப்பாச்சேத்தி பிர்க்காவில் உள்ள லாடனேந்தல், செல்லப்பனேந்தல், வன்னிகோட்டை, வில்லியாரேந்தல், கொத்தங்குளம், பழையனூர் பகுதிகள் உள்ளன. இப...
தமிழகம்
வெட்ட வெளிச்சம் : விவசாய மானிய திட்டங்களில் முறைகேடு விசாரணையில் சிக்கப்போவது யார்?
சிவகங்கை : மாவட்டத்தில், விவசாயிகளுக்கான மானிய திட்டங்களில் பெரும் முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன. இதை விவசாய இணை இயக்குனரும் ஒத்துக்கொண்டுள்ள நிலையில், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் மகேசன் காசிராஜன் தலைமையில் சிவகங்கையில் நடந்தது. விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் சந்திரன் பே...
தமிழகம்
முதலிரவை தடுத்து நிறுத்திய கணவர் மீது மனைவி புகார்
ஓமலூர் : ஓமலூர் அருகே வரதட்சணை கொடுக்காததால், முதலிரவை தடுத்து நிறுத்திய கணவர் உட்பட ஆறு பேர் மீது போலீசில் மனைவி புகார் செய்தார். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கோட்டகவுண்டம்பட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. அவருடைய மகள் ஹேமலதா (27). அவருக்கும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச...
தமிழகம்
இன்ஜி., நேரடி 2ம் ஆண்டு சேர்க்கை : முதல் பட்டதாரிக்கு சலுகை
சிவகங்கை : பொறியியல் கல்லூரி நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கையிலும், குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில், குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவருக்கு, இலவச கல்வி வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, அண்ணா ...
தமிழகம்
7 செக்-போஸ்ட்கள் அமைத்து கண்காணிப்பு
தர்மபுரி : தர்மபுரியில், சரக்கு வாகனங்களில் ஆட்கள் ஏற்றிச் செல்வதை கட்டுப்படுத்தவும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்கவும், ஏழு இடங்களில் செக்-போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெல்ரம்பட்டி திருமல்வாடியை சேர்ந்த கணேசன் மகள் நித்யா (22). இவருக்கு பொம்மிடி அடுத்த பில்பருத்தியை ச...
தமிழகம்
அரசு மகளிர் கல்லூரியில் சேர்க்கை கவுன்சிலிங்
சிவகங்கை : சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில், மாணவிகள் சேர்க்கை இறுதி கட்ட கவுன்சிலிங், வரும் 28 ம் தேதி நடக்கிறது. இங்கு பி.பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், மனையியல் படிப்பிற்கான சேர்க்கை கவுன்சிலிங் நடந்து வருகிறது. முதற்கட்டமாக ஒரு "ஷிப்ட்' க்கு 60 மாணவிகள் வீதம், பி.பி.ஏ., பி.காம்., வகுப்புகளில் சேர...
தமிழகம்
தம்பியை துப்பாக்கியால் சுட்ட மாஜி ராணுவ வீரருக்கு வலை
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில், தம்பியை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரரை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி அடுத்த வள்ளுவர் புரத்தை சேர்ந்தவர், விவசாயி பெருமாள் (35). இவரது பெரியப்பா மகன் முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணன் (47). பெருமாள் அதே பகுதியை சேர்ந்த மகி என்பரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்...
தமிழகம்
நுகர்வோர் மன்றத்தினர் கவனத்திற்கு
சிவகங்கை : மாநில நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தில் மண்டல, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப் பட உள்ளனர். மாணவர் நுகர்வோர் மன்றம் நடத்தும் ஆர்வலர், மன்ற ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படும் ஆசிரியர், விரிவுரையாளர்கள் விண்ணப்பிக்கலாம். விண் ணப்பிக்க வரும் 30 ம் தேதி வரை கெடு நீடிக்கப்பட் டுள்ளது. விபரங்களுக்கு,"www.consumer....
தமிழகம்
இளையோருக்கு பயிற்சி நிறைவு
சிவகங்கை : நேரு யுவகேந்திரா இளையோர் படை தொண்டர்களுக்கான பயிற்சி முகாம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜவகர் தலைமையில் ஓ.புதூரில் நடந்தது. திறன் மேம்பாடு, அரசு நல திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அன்புத்துரை, பாரதிதாசன், கிறிஸ்துராஜ், மீனாட்சிசுந்தரம், கணேசன், ஆறுமுகம், தாரணி பயிற்சி வழங்கினார். நபார்டு வங்கி உதவி ...