category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
தேசிய நெடுஞ்சாலை முதல் உள்ளூர் சாலைகள் வரை ஆக்கிரமிப்பு: ஆக்கிரமிப்பு கடைகள் மூலம் சமூக விரோத
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை முதல் உள்ளூர் சாலைகள் வரை ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் சமூக விரோத செயல்களும் அதிகரிக்க துவங்கிவிட்டது. மாவட்டத்தில் முக்கிய வீதிகள், ரோடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதாக கூறி பெயரளவில்,...
தமிழகம்
ஆக்கிரமிப்பு அகற்றலில் பாரபட்சம்: கால்வாய் பணிகள் திடீரென நிறுத்தம்
கோத்தகிரி: கோத்தகிரி மார்க்கெட் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றியதில் பார பட்சம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோத்தகிரி மார்க்கெட் சாலையில் இருப்புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பு காரணமாக சாலையின் அகலம் குறைந்து, பொதுமக்கள் நடந்து செல்லவும் சிரமம் நீடித்தது. தன்னார்வ அமைப்புகள் உட்பட பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்...
General
ரிக்ஷா குண்டு வெடித்து பாகிஸ்தானில் 12 பேர் பலி
இஸ்லாமாபாத் :பாகிஸ்தானில் தேரா இஸ்மாயில்கான் பகுதியில் ரிக்ஷா வெடிகுண்டு வெடித்ததில், போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 12 பேர் பலியாயினர்.பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில்கான் நகரத்தருகே கச்சி பெய்ன்த்கான் என்ற ஊரில், ரிக்ஷாவில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த சாலையை போலீஸ் வாகனம் கடக்க...
General
காபூலில் தற்கொலைப்படைதாக்குதலில் 20 பேர் பலி
காபூல் : ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தியதில் நேட்டோ படை வீரர்கள் ஏழு பேர் உட்பட, 20 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் நேட்டோ படைகள் தங்கியுள்ள இடத்தை தகர்க்கும் பொருட்டு தற்கொலைப் படையினர் தருலமான் பேலஸ் என்ற இடத்தருகே நேட்டோ வாகனத்தின் மீது தாக்க...
General
தொடர்கிறது போராட்டம் : ஒரு வாரத்திற்கு விடுமுறை
பாங்காக் : தாய்லாந்து தலைநகர் பாங் காக்கில் நிலைமை இன்னும் சீரடையாததால், அங்கு ஒருவார பொது விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.தாய்லாந்தில், 2006ம் ஆண்டு பிரதமராக இருந்த ஷினவத்ரே பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அங்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப் பட்டது. 2008ல் நடந்த தேர்தலில், ராணுவத்தின் ஆதரவுடன் அபிசித் வெஜ்ஜஜிவ...
General
வெற்றி விழாவை மழை தடுத்ததுஇலங்கையில் 2 லட்சம் பேர் தவிப்பு
கொழும்பு:இலங்கையில் பெய்து வரும் பலத்த மழையால், பார்லிமென்ட் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுதலை புலிகளை வெற்றி கொண்ட முதலாமாண்டு விழாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இலங்கையில் யாழ்பாணத்துக்கு அருகே மையம் கொண்டிருக்கும் புயல் சின்னத்தின் காரணமாக, பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்கள், வெள்ளத்தில் மூழ்கியுள...
General
அமெரிக்க ராணுவ பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்த 2 பேர் கைது
வாஷிங்டன் : அமெரிக்க ஏற்றுமதிச் சட்டத்தை மீறி, சீன ராணுவத்துக்கு, அமெரிக்க ராணுவத்தில் பயன்படும் எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றுமதி செய்ததாக இரண்டு சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் மாசாசூயட்ஸ் நகரில், சிட்ரோன் எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்த ஜென் ஜோ வூ மற்றும் அந்நிறுவனத்தின் மேலாள...
General
போர்க்களத்திற்கு காண்டம் எடுத்துச் செல்ல பிரிட்டிஷ் வீரர்களுக்கு அறிவுரை
சிட்னி: போர்க் களத்திற்குச் செல்லும் ராணுவ வீரர்களுக்கு போதிய ஆயுதங்களையும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பெ?ருட்களையும் எடுத்துச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்துவது வழக்கம. ஆனால் பிரிட்டிஷ் வீரர்கள் மறக்காமல் காண்டம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர்களுடைய அதிகாரிகள் அறிவுரை கூறியுள்ளனர். ஆபகன் மற்றும் ஈராக்கில் ப...
தமிழகம்
விருந்தோம்பல் குழுவின் ரகசிய கூட்டம் : அமைச்சர் பேச மறுப்பு
கோவை : செம்மொழி மாநாட்டுக்கான விருந்தோம்பல் குழு, ரகசிய ஆய்வுக் கூட்டம் நடத்தியதோடு, அமைச்சரும் வாய் திறக்க மறுத்து விட்டார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் விருந்தோம்பல் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர், உணவுத்துறை அமைச்சர் வேலு. இக்குழுவில் உணவுத்துறை தொடர்பான பொறுப்புகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஓட்டல் அதிப...
தமிழகம்
தமிழக தொழிலதிபர்களுடன் கர்நாடக முதல்வர் திடீர் சந்திப்பு
சென்னை : கர்நாடகாவில் தொழில் துவங்க வருமாறு, தமிழக தொழிலதிபர்களை நேரில் சந்தித்து, கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று அழைப்பு விடுத்தார்.கர்நாடகாவில் தொழில் துவங்க அளிக்கப்படும் வசதி வாய்ப்புகளையும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளையும் எடுத்துக் கூறி, தங்கள் மாநிலத்தில் தொழில் ...
தமிழகம்
மேலவை தொகுதி வரையறை பணிகளை தேர்தல் கமிஷனே மேற்கொள்ளும்
சென்னை :மேலவை வாக்காளர் பட்டியல், தொகுதி வரையறை உள்ளிட்ட பணிகளை தேர்தல் கமிஷனே மேற்கொள் ளும் என கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் மேலவையை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு, தனி அலுவலரை அரசு நியமித்துள்ளது. இந்த தனி அலுவலர் நியமனத்தில், தேர்தல் கமிஷனை தமிழக அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என கூறி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ...
தமிழகம்
மறைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.கே., உடலுக்கு முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா மலர் அஞ்சலி
சென்னை : மறைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமியின் உடலுக்கு  முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் வசித்து வந்தவர் கே.ஏ.கிருஷ்ணசாமி. வயது (78). திராவிட இயக்கத்தின் மு...
தமிழகம்
சட்டவிரோதமாக மணல் கொள்ளையை கரூரில் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
கரூர்: கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமராவதியில் சட்ட விரோதமாக மணல் எடுக்கப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்காத மாநில அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கரூரில் நடந்தது.  கரூர் மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி வரவேற்றார். தலைமை வகித்து கட்சி பொருளாளர் பன்னீர்செல்வம் பேசியதாவது:தி.மு.க., ஆட்சிக்கு வ...
இந்தியா
பா.ஜ., ஜோஷிக்கு சிறப்பு விருது
புதுடில்லி : பார்லிமென்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, சமாஜ்வாடி கட்சியின் மோகன் சிங் ஆகியோருக்கு விருது வழங்கப்படவுள்ளது.பார்லிமென்டில் சிறப்பாக செயல்படும் உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த, "பார்லிமென்டேரியன்' விருது வழங்கப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ., மூத்த தலைவ...
இந்தியா
மாயாவதியுடன் உடன்பாடா? மறுக்கிறார் ராகுல்
மிர்சாபூர் : உத்தரபிரதேச முதல்வர் மாயாவதியுடன், உடன்பாடு ஏதும் செய்து கொள்ளவில்லை. வரும் 2012ம் ஆண்டு தேர்தலை தனித்தே சந்திப்போம் என, காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த கட்சி கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:மத்திய அரசுக்கு எதிராக வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்த ப...
இந்தியா
மந்திரிக்கே ஆப்பு பாஸ்போர்ட்டுக்கு தடா
மும்பை : ஒரு மாநில அமைச்சரின் குற்றப் பின்னணிக்காக அவருக்குப் பாஸ்போர்ட் மறுக்கப்பட்டு விட்டது. என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? இந்தியாவில்தான் இப்படி ஒரு அதிசய சம்பவம் நடந்துள்ளது.மகாராஷ்டிர மாநில உள்துறை இணை அமைச்சர் ரமேஷ் பாக்வே. புனே கன்டோன்மென்ட் தொகுதி எம்.எல்.ஏ., ஆன இவர், அம்மாநில அரசியலில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக...
இந்தியா
ரயில்வேக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு ஆவணங்கள் பராமரிக்காதது ஏன் என பார்லி குழு கேள்வி
புதுடில்லி : பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதை மீட்காதது, அதனால் கோடிக்கணக்கில் இழப்பு, கால விரயம், ஆவணங்களை முறையாகப் பராமரிக்காதது என, ரயில்வே மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது, பார்லிமென்ட் குழு. பார்லிமென்டின் பொதுக் கணக்குக் குழு, சமீபத்தில் ஓர் அறிக்கை தாக்கல் செய்தது. அதில்குறி...
தமிழகம்
தமிழக உள்துறை, நிதித்துறை செயலர்கள் மாற்றம் : சட்டசபை தொடர் முடிந்ததும் அரசு அதிரடி
சென்னை : சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த நிலையில், முக்கிய பதவிகளில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். உள்துறை செயலர், நிதித்துறை செயலர் போன்றவர்கள் இதில் அடங்குவர். இதுதவிர, மேலும் பல ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட உள்ளனர். தலைமைச் செயலர் ஸ்ரீபதி கடந்த மாதமே ஓய்வு பெற இருந்தார். அவர் ஓய்வு பெற...
தமிழகம்
கல்விக் கட்டண விவரம் தெரியாததால் பெற்றோர் குழப்பம்
இன்னும் இரண்டு வாரங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் பள்ளி கட்டணம் குறித்து தெளிவான அறிவிப்பு இல்லாததால், பெற்றோர் கடும் குழப்பம் அடைந்து உள்ளனர். பல பள்ளிகளில் பழைய கட்டணம் வசூலித்து முடித்த நிலையில், பல பள்ளிகள் பழைய கட்டணத்தையும் வசூலிக்காமல், அரசு நிர்ணயித்த கட்டணத்தையும் வசூலிக்காமல் தாமதப்படுத்தி ...
தமிழகம்
மாவோயிஸ்டுகளை ஒடுக்க மத்திய அரசு புது வியூகம்: சத்திஸ்கர் சம்பவத்தால் அதிர்ச்சி
புதுடில்லி : மாவோயிஸ்ட் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், மத்திய அரசு புது வியூகத்தை வகுக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் சிதம்பரம், "மாவோயிஸ்டுகளுக்கு எதிரான அரசின் தற்போதைய கொள்கை, மறு பரிசீலனை செய்யப்படும். அதே நேரத்தில் வன்முறையை கைவிட்டால், அவர்களுடன் பேச்சு நடத்தவும் தயாராக உள்ள...
இந்தியா
சோனியா வாகனத்தை நிறுத்திய ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பெண்ட்
ரேபரேலி : உ.பி.,யில் காங்., தலைவர் சோனியாவின் பாதுகாப்பு வாகனங்களை நிறுத்தியது தொடர்பாக ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர், ரயில்வே கேட் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, உ.பி., ரேபரேலி தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தலமு என்ற இடத்தில் இருந்து உன்சாகருக்கு சோனியா சென்று கொண்டிருந்தார். அவர...
தமிழகம்
எல்லாமே அவசரம்; செம்மொழி மாநாட்டுப்பணிகள் எதிலுமில்லை தரம்!
கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவை மாநகரில், அவசர கதியில், தரமற்றதாக மேற்கொள்ளப்படும் பணிகள், பெரும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளன. பணிகளின் தரத்தை உறுதிப்படுத்த, தக்க நடவடிக்கைகளை, அரசு உடனடியாக செய்ய வேண்டியது அவசியம். கோவையில் நடக்கவுள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக, பல்வேறு அரசுத் துறை...
தமிழகம்
10 ஆண்டுகளில் மட்டும் அரசியல்வாதிகள் மீதான 51 வழக்குகள் வாபஸ்
பெங்களூரு : கர்நாடகாவில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அரசியல்வாதிகள் மீது போடப்பட்ட 51 வழக்குகள் அரசால் வாபஸ் பெறப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. வழக்கு வாபஸ் பெறப்பட்டவர்களில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களும் அடக்கம். கர்நாடகாவில் கடந்த 10 ஆண்டுகளில் அரசியல்வாதிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக...
தமிழகம்
கோடை விடுமுறைக்கு போலீஸ் ஸ்டேஷன் வந்த சிறுவன்
பெரம்பலூர் : கோடை விடுமுறையைக் கழிக்க, பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளான் சிறுவன் ஒருவன். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா, பாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு(50); இவரது மகன் மணிகண்டன்(14). ராஜு, 2008ம் ஆண்டு, மணிகண்டனை, பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் கிராமத்தில் தங்கி, கூலியாட்கள் வைத்து ஆடுகளை மேய்...
இந்தியா
சொல்கிறார்கள்
வீட்டின் குளிர்ச்சிக்கு மாடித் தோட்டம்: ஹோம் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் இந்திர குமார்: நல்ல காற்று, நல்ல உணவு, நல்ல தண்ணீர் இந்த மூன்றும் தான் மனிதனுக்கு முக்கியம். இவற்றை நம் வீட்டிலேயே செய்யலாம். ஒரு தொட்டி அமைத்து, மழை நீரைச் சேமிக்கலாம். மிகக் குறைந்த பரப் புள்ள மொட்டை மாடியில், ஆறாயிரம் லிட் டர் மழை நீரைச் சேமிக்க...
தமிழகம்
தமிழகத்தை நோக்கி வருகிறது 'லைலா' புயல்:தமிழகம், ஆந்திராவில் பலத்த மழை பெய்யும்
சென்னை:வங்கக்கடலில் உருவாகியுள்ள 'லைலா' புயல் காரணமாக, வடக்கு தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிக்கு 65 முதல் 75 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்...
இந்தியா
காலடியில் சங்கர ஜெயந்தி:பாரதி தீர்த்த சுவாமி பங்கேற்பு
காலடி:ஆதிசங்கரர் பிறந்த இடமான கேரள மாநிலம் காலடியில் நேற்று, சங்கர ஜெயந்தி கொண்டாடப்பட்டது. விழாவில், சிருங்கேரி பாரதி தீர்த்த சுவாமி சிறப்பு பூஜைகள் செய்தார்.ஆதிசங்கரர், காலடியில் அவதரித்ததின் நினைவாக, சிருங்கேரி மடத்தின் 33வது மடாதிபதி சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம சுவாமியால், 1910ம் ஆண்டு இங்குள்ள சிருங்கேரி மடத்தில்...
தமிழகம்
பழநியில் வைகாசி விழா: மே 21 ல் ஆரம்பம்
பழநி:பழநியில் வைகாசி விசாகத் திருவிழா வரும் 21-ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.'வசந்தோற்சவம்' என அழைக்கப்படும் வைகாசி விசாகத் திருவிழா வரும் 21ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடைபெறும்.கொடியேற்றம் மற்றும் சுவாமி புறப்பாடு உள்ளிட்டவை பெரியநாயகியம்மன் கோயிலில் நடைபெறும். 21ம்தேதி காலை 8.30 மணிக்கு மேல் கொட...
தமிழகம்
செஞ்சிக்கோட்டையில் ஆக்கிரமித்து வைத்திருந்த சிலைகள் அகற்றத்தால் பதட்டம்: போலீஸ் குவிப்பு
செஞ்சி:செஞ்சியில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையார், அந்தோணியார் சிலைகள், போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்த கிறிஸ்தவர்கள் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், 13ம் நூற்றாண்டை சேர...
தமிழகம்
சிவகங்கையில் எஸ்.ஐ., -போலீஸ் மோதல்: டூ வீலர்கள் எரிப்பு
சிவகங்கை:சிவகங்கை ஆயுதப்படை எஸ்.ஐ., முத்துகிருஷ்ணராஜா (32)வுக்கும், போலீஸ்காரர் கண்ணனுக்கும் (30) இடையே ஏற்பட்ட மோதலில், இரு டூவீலர்களுக்கு தீ வைக்கப்பட்டது. எஸ்.ஐ., தற்போது, 'சஸ்பென்ஷனில்' உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், மோதிரத்தை அடகு வைத்து தருமாறு, போலீஸ்காரரிடம் கொடுத்தார். தனக்கும் பணம் தேவைப்படுவதால், கூடுத...
இந்தியா
மாவோயிஸ்டுகள் பந்த்: ரயில்கள் திடீர் ரத்து
புதுடில்லி:பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் இரண்டு நாள் பந்த் நடத்துவதால், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.மேற்கு வங்கம், சத்திஸ்கர், ஒரிசா, பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இரண்டு நாள் பந்த் அனுசரிக்க மாவோயிஸ்டுகள் முடிவு செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் இவர்கள் பந்த் நடத்திய போது, ராஜ்...
இந்தியா
நிதிஷ் குமார் மீது அவதூறு:கோர்ட்டில் ரப்ரி தேவி சரண்
சாப்ரா(பீகார்):பீகார் முதல்வர் நிதிஷ் குமாரைத் தகாத வார்த்தைகளால் அவதூறாகப் பேசிய வழக்கில், பீகார் முன்னாள் முதல்வரும், லாலுவின் மனைவியுமான ரப்ரி தேவி, கோர்ட்டில் சரணடைந்தார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், கார்கா என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ரப்ரி தேவி, லாலுவுக...
இந்தியா
சானியா மீதான வழக்கு தள்ளி வைப்பு
முசாபர்நகர் (உ.பி.,):தேசிய கீதத்தை அவமதித்ததாக, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மீதான வழக்கு விசாரணையை, ஜூன் 25ம் தேதிக்கு கோர்ட் தள்ளி வைத்துள்ளது.முசாபர்நகரில் 2008ல் நடந்த போட்டிகளின் முடிவில் நடந்த நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, சானியா தன் கைகளைப் பின்புறத்தில் கட்டிக் கொண்டு நின்றதால், தேசிய கீதத்தை...
தமிழகம்
கூலித்தொழிலாளிக்கு தவறான சிகிச்சை: மதுரை டாக்டருக்கு கோர்ட் அபராதம்
மதுரை:மதுரையில் கூலித்தொழிலாளிக்கு, கிட்னியில் கல் அகற்ற தவறான சிகிச்சை அளித்ததாக, ராஜிவ் ஆஸ்பத்திரி டாக்டர் வி.ரவீந்திரநாத்திற்கு 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.மதுரை கூடல்புதூரை சேர்ந்த தெய்வநாயகம் மகன் குணராஜ் (29). இவர் திருப்பூரில் டெய்லர். இவருக்கு கிட்னியில் கல் இருந்தது. அதற்கு சிகிச்சை ப...
தமிழகம்
ஸ்ரீபிரியா கணவர் மீதான புகாரை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை:நடிகை ஸ்ரீபிரியாவின் கணவருக்கு எதிரான புகாரை பதிவு செய்து விசாரிக்க, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் குன்றுக்காடு கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சன் என்பவர் தாக்கல் செய்த மனு:திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் எனது பெரியப்பா, பாளையம் என்பவர் பெயரில்...
தமிழகம்
சிலை திருட்டு வழக்கு: ஐந்து பேர் விடுதலை
சென்னை:சிலை திருட்டு வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரை, சென்னை ஐகோர்ட் விடுதலை செய்தது.அரியலூர் அருகில் விக்கிரமங்கலம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்டது ஸ்ரீபுரந்தன் கிராமம். இங்கு, வேதநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு இரண்டு வாட்ச்மேன்கள் உள்ளனர். 1986ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதியன்று நள்ள...
தமிழகம்
ராமநாதபுரம் கடலோர பகுதியில் பலத்த காற்று *ரயில் தாமதம்; 227 படகுகள் சேதம்
ராமநாதபுரம் : வங்ககடல் தென்கிழக்கே லைலா புயல் உருவாகியதை தொடர்ந்து ,நேற்று முன்தினம் இரவில் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. பலத்த காற்றால் மண்டபம், பாம்பன், திருப்பாலைக்குடி பகுதி கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த விசை படகு மற்றும் நாட்டுப்படகுகள் காற்றில் அடித்து செல்லபட்டு ,ஒன்ற...
General
மதுபான பாரில் டான்ஸ் ஆடியவர் மிஸ் யு.எஸ்.ஏ.,வாக தேர்வா...?
வாஷிங்டன் : அரபு நாட்டைச் சேர்ந்த பெண், முதல் முறையாக மிஸ் யு.எஸ்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். அவர் மதுபான பாரில் டான்ஸ் ஆடியவர் என பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால், மிஸ் யு.எஸ்.ஏ.,விற்கு சிக்கலோ சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரபு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டில் பிறந்தவர் ரீமா பாக்கி(24). இவர், தற்போது மிஸ் யு.எ...
General
தாய்லாந்தில் திருப்பம் : போராட்டக்காரர்கள் சரண் * ராணுவ அடக்குமுறை தொடர்கிறது
பாங்காக் : தாய்லாந்தில் அரசை எதிர்த்து, போராட்டம் நடத்தி வந்த நான்கு போராட்டத்தலைவர்கள் சரணடைந்துள்ளனர். இருப்பினும் போராட்டக்காரர்களின் வன்முறை குறையாததால்  பாங்காக்கில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.தாய்லாந்து பிரதமராக இருந்த ஷினவத்ரே  2006ம் ஆண்டு ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு ஆட்சியிலிருந்து நீக்கப்ப...
General
பைசல் ஷசாத் கோர்ட்டில் ஆஜர்
நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் டைம் சதுக்கத்தில் கடந்த 1ம் தேதி, காரில் குண்டு வைத்த பைசல் ஷசாத், கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டான்.நியூயார்க் டைம் சதுக்கத்தில் கடந்த 1ம் தேதி, காரில் வெடிமருந்து பொருளை வைத்து விட்டு துபாய்க்கு தப்பிச்செல்ல முயன்ற ஷசாத் கைது செய்யப்பட்டான். பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி பெற...
General
தலிபான் பகுதியில் போர்: 62 பேர் பலி
பெஷாவர் : பாகிஸ்தானின் வாசிரிஸ்தான் பகுதியில் தலிபான்களுக்கும்,  ராணுவத்தினருக்கும் இடையே நடந்த சண்டையில், 62 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள ஒரக்சாய் பகுதியில் தபோரி மற்றும் சாம் ஆகிய இடங்களில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இப்பகுதியில் தங்கியுள்ள தலிபான்களை அப்புறப்படுத்த பாகிஸ்தான...
இந்தியா
மாவோயிஸ்டுகளை தண்டியுங்கள் : அரசுக்கு யெச்சூரி யோசனை
புதுடில்லி :திவாலான கொள்கையை வைத்து கொண்டு பொதுமக்களுக்கு எதிராக செயல்படும் மாவோயிஸ்டுகளை தண்டிக்க கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலீட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு மேற்கு வங் கத்தில் மூன்று மா...
இந்தியா
பீகார் காங்கிரசில் உட்கட்சி பூசல் : 8 பேர் என்ற நிலை மாறிடுமா?
புதுடில்லி : பீகாரில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், அம்மாநில காங்கிரசில் உட்கட்சிக் குடுமிப்பிடி பூசல் கொடிகட்டிப் பறக்கிறது.பீகார் மாநில காங்கிரஸ் தலைவராக அனில் சர்மா உள்ளார். அகில இந்திய காங்கிரசின் அம்மாநிலப் பொறுப்பாளராக ஜெகதீஷ் டைட்லர் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் நீண்ட காலமாகவே ...
இந்தியா
பெட்ரோல், டீசல் விலை இனி எந்தநேரமும் உயரும்
புதுடில்லி : இதுவரை பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்கள் விலை நிர்ணயத்தை மத்திய அரசு முடிவு செய்து வந்த வழக்கத்தை, இனி அக்கம்பெனிகள் முடிவு செய்யும். இதற்கான ஒப்புதலை நேற்று மத்திய அமைச்சரவை அளித்தது. ஆகவே, பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு  விரைவில் அறிவிக்கப்படலாம். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய்  மற்றும் சமை...
தமிழகம்
அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் முன் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா
சென்னை : அம்பத்தூர் நகராட்சியிலுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பு, வேலை இழப்புக்கு காரணமான தி.மு.க., அரசை கண்டித்து, அம்பத் தூர் தாசில்தார் அலுவலகம் முன் அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:தி.மு.க., ஆட்சி...
தமிழகம்
நெல்லையில் ஒரு லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் : ஜூலையில் கனிமொழி நடத்துகிறார்
திருநெல்வேலி : நெல்லையில் ஒரு லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த, கனிமொழி எம்.பி.,முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடத்தியது போல, தனியார் வேலைவாய்ப்பு சந்தையை, நெல்லை மாவட்டத்திலும் நடத்த, கனிமொழி எம்.பி., ஏற்பாடு மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து நெல்லை மா...
தமிழகம்
மேலவை அமைக்க ஜனாதிபதி ஒப்புதல்
சென்னை : தமிழகத்தில் மேலவை அமைக்க ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் மீண்டும் மேலவை கொண்டு வருவதற்கான தீர்மானம், சட்டசபை கூட்டத் தொடரில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.மேலவை அமைப்பதற்கான தீர்மானம், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் ...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை ஒன்றிணைத்து, சுயாட்சி அதிகாரம் பெற்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும். அந்த சுயாட்சி என்பது, இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரத்தைப் போல் இருக்க வேண்டும். இதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் குரல் கொ...
இந்தியா
நக்சல் தாக்குதலில் மே.வங்கத்தில் 4 பேர் பலி: அதிகம் பாதித்த சத்திஸ்கர் முதல்வர் புது கருத்து
மிட்னாப்பூர்: மேற்கு வங்க மாநிலத்தில் நக்சலைட்கள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில், மத்திய ரிசர்வ் படை போலீசார் (சி.ஆர்.பி.எப்.,) நான்கு பேர் பலியாயினர்; இரண்டு பேர் காயமடைந்தனர். இதே நேரத்தில் சத்திஸ்கர் முதல்வர் ராமன் சிங், டில்லியில் நேற்று அளித்த பேட்டியில், "விமானப்படை கொண்டு நக்சல்களை தாக்க முடியாது' என்று கருத்து...
இந்தியா
பார்லிமென்டிற்கு குண்டு மிரட்டல்: மனநலம் பாதித்தவர் உ.பி.,யில் கைது
லக்னோ: பார்லிமென்ட் கட்டடத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த நபர், கடைசியாக உ.பி.,யில் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என, தெரிந்தது. கடந்த 17ம் தேதி லோக்சபா அலுவலகத்துக்கு ஒரு மர்ம போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், "பார்லிமென்ட் கட்டடத்தை குண்டு வைத்த...
இந்தியா
விவசாயியிடம் ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய புதுச்சேரி வேளாண் அதிகாரி கைது
புதுச்சேரி: ஆழ்குழாய் கிணறு அமைக்க விவசாயியிடம், 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய புதுச்சேரி வேளாண் அதிகாரியை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள நில நிலவியாளர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு தேவையான ஆழ்குழாய் கிணறு, மோட்டார் உட்பட பல்வேறு பொருட்கள், மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இங்கு விவச...
இந்தியா
மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது
பெங்களூரு: மனைவி அழகாக இல்லை என்பதற்காக கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, நாடகமாடிய நபரை கர்நாடகா போலீசார் கைது செய்தனர். கர்நாடகா, மத்குகிரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜு. ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், முத்தம்மா என்ற பெண்ணுக்கும் மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ம...
இந்தியா
ஓரினச் சேர்க்கையாளர்களின் குழந்தைகள் நாடு திரும்புவதில் சிக்கல்
மும்பை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு, வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகள்,  சட்டச் சிக்கல்கள் காரணமாக நாடு திரும்ப முடியாமல், இந்தியாவிலேயே தவித்து வருகின்றனர். ஓரினச் சேர்க்கையாளர்கள், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சில நாடுகளின் சட்டம் அனுமதி தருவதில்லை. ஆனால், இந்தியாவில்  அதற்கு அனுமதி உண்டு.  எனவே, ...
தமிழகம்
பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கியது மழை: பயிர்கள் சேதம், மீனவர்கள் மாயம்
தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் கடும் காற்று, மின்னல், இடியுடன் மழை பெய்தது. தஞ்சை காந்திஜி ரோட்டில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு, சினிமாவுக்காக வைக்கப்பட்டிருந்த "பிளக்ஸ்' விழுந்து, மின்சாரம் தடைபட்டது. இதையடுத்து, பல முறை 20, 30 நிமிடங்கள...
தமிழகம்
நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் சாலை மறியல்: செஞ்சி கமிட்டியில் தொடரும் அவலம்
செஞ்சி: செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், விவசாயிகளின் நெல் மூட்டைகள், வழக்கம் போல் மழையில் நனைந்தன. இதனால், நெல் விலை குறைந்ததால், விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, நேற்று 5,000 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. முந்தைய நாள் அதிகமாக வந்த 6,0...
தமிழகம்
எல்.ஜி., நிறுவன தலைவர் வரதராஜுலு காலமானார்
கோவை: எல்.ஜி., நிறுவனத்தின் தலைவர் வரதராஜுலு(82) உடல் நலமின்மை காரணமாக, கோவையில் நேற்று காலமானார். கோவை சூலூர் அருகே கலங்கல் கிராமத்தில், 1928ல் பிறந்த வரதராஜுலு, ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்தார். தந்தை எல்.ஆர்.ஜி. நாயுடுவின் பஸ் போக்குவரத்து தொழிலில் சேர்ந்தார். அதன்பின் ஆட்டோமொபைல் கேரேஜ் கருவிகள் மற்றும் ஏர் கம்ப்...
தமிழகம்
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மரணம்
மதுரை: அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., லட்சுமி நாராயணன்(67) நேற்று காலமானார். மதுரை மத்திய தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1977 முதல் 80 வரை எம்.எல்.ஏ.,வாக இருந்தார். மதுரை சின்னசொக்கிகுளத்தில், மனைவி தமிழரசி, மூன்று மகள்கள், ஒரு மகனுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக கல்லீரல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகி...
தமிழகம்
விஷம் கலந்த குளுகோஸ் ஏற்றி பெண் டாக்டர் தற்கொலை
மதுரை: மதுரை லாட்ஜில் தங்கிய பெண் டாக்டர், விஷம் கலந்த குளுக்கோசை உடலில் ஏற்றி தற்கொலை செய்து கொண்டார். சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலைச் சேர்ந்தவர் டாக்டர் அருள் தண்டபாணி; இவரது மனைவி டாக்டர் ஹேமலதா(44); சர்ஜிக்கல் கிளினிக் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை மதுரை தானப்ப முதலி தெருவில் உள்ள ஒரு லாட்ஜிற்கு வந...
தமிழகம்
உரிய பணியிட அட்டவணை வழங்காததால் எடுபிடி வேலை செய்யும் இன்ஜினியர்கள்
சேலம்: டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மூலம் அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இன்ஜினியர், டிப்ளமோ ஹோல்டர்கள், தங்களுக்கு உரிய பணியிட அட்டவணை, பதவி உயர்வு அளிக்கப்படாததால், ஊரக வளர்ச்சி அலுவலகங்களில் எடுபிடி வேலை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கிராமப்புற மக்களின் பொழுது போக்கிற்காக, ஊராட்சிகளுக்க...
தமிழகம்
மெட்ரிக் பள்ளி கல்விக் கட்டணத்தை உயர்த்த கோரி கோவையில் ஜூன் 1ல் நிர்வாகிகள் உண்ணாவிரதம்
கோவை: மெட்ரிக் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கோரி, கோவையில் ஜூன் முதல் தேதி உண்ணாவிரதம் இருக்க, தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நலச்சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை பள்ளிகள் நலச்சங்கத்தின் சார்பில், பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி சங்கத் தாளாளர்கள் கூட...
தமிழகம்
தீவிரவாதிகள் பதுங்கலா?: தீவுகளில் ஏ.டி.ஜி.பி., ஆய்வு
தூத்துக்குடி: தூத்துக்குடி, மன்னார்வளைகுடா தீவுகளில் தீவிரவாதிகள் பதுங்க வாய்ப்புள்ளதா என, ஏ.டி.ஜி.பி., லல்லாம் சங்கா, நேற்று ஆய்வு செய்தார். தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் ஏ.டி.ஜி.பி., லல்லாம் சங்கா, நேற்று காலை தூத்துக்குடி, தருவைக்குளம் கடற்கரையிலிருந்து போலீசாருடன் படகில் காசுவாரி தீவு, வான்தீவு, முயல்தீவு ஆகி...
தமிழகம்
ராமநாதபுரம் பகுதியில் சூறாவளி காற்று: 227 படகுகள் சேதம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் நேற்று சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததில், மண்டபம், பாம்பன், திருப்பாலைக்குடி பகுதி கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த, 227 விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகள் காற்றில் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்தன. வங்கக் கடலில் உருவாகியுள்ள லைலா புயலால், ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் ...
தமிழகம்
ஹைவேவிஸ் மலையில் பஸ் கவிழ்ந்து இருவர் பலி
சின்னமனூர்: தேனி அருகே ஹைவேவிஸ் மலையில், அரசு பஸ் கவிழ்ந்ததில் இரண்டு பேர் பலியாயினர். 48 பேர் காயமடைந்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கம்பத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு ஹைவேவிசிற்கு அரசு பஸ் சென்றது. சின்னமனூரிலிருந்து 70 பேர் பஸ்சில் ஏறினர். டிரைவர் பேயத்தேவன் ஓட்டிச்சென்றார். இரவு ...
தமிழகம்
வேடசந்தூர் அருகே காட்டுப்பகுதியில் வாலிபர் மர்மச்சாவு; போலீஸ் விசாரணை
கூம்பூர்: வேடசந்தூர் அருகே காட்டுப்பகுதியில், கார் டிரைவர் வடிவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகிலுள்ள நத்தப்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி மகன் வடிவேல்(30). ரெட்டியார் சத...
தமிழகம்
வாலிபர் வெட்டிக்கொலை
தூத்துக்குடி:  திருச்செந்தூர் அருகே முன்விரோதத்தில், நேற்று பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப் பட்டார். தூத்துக்குடி மாவட்டம், மறந்தலையைச் சேர்ந்தவர் சுயம்புராஜ்(31). அங்கு தனியார் வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பணிபுரிந்தார். அப்பகுதி நாடார் அமைப்பின் தலைவராக இருந்தார். இந்நிலையில், அதே ஊரைச் சேர...
தமிழகம்
சிறை கைதிகளுக்கு கால்சென்டர் வேலை
ஐதராபாத்: ஆந்திர சிறை கைதிகளுக்கு வங்கி தொடர்பான கால்சென்டர் வேலை கொடுக்கப்பட உள்ளது. ஐதராபாத்தில் உள்ள செர்லபள்ளி மத்திய சிறையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர்.  தண்டனை பெற்ற இந்த கைதிகளில் பலர் சோப்பு, பினாயில், மரச்சாமான்கள் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிறைத்துறை டி.ஜி.பி., கோபிந...
தமிழகம்
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் 97.11 சதவீதம் தேர்ச்சி: மாணவிகள் முதலிடம்
சென்னை: பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரை  97.11 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 96.82 சதவீதமும், மாணவியர் 97.51 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, கோவா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன...
தமிழகம்
புதிய காஸ் இணைப்பு பெற ரூ.5,300: அதிர்ச்சியில் நுகர்வோர்
மதுரை: புதிதாக காஸ் இணைப்பு பெறுவதற்கு, ஸ்டவ், சிலிண்டர், லைட்டர், டியூப் ஆகியவற்றுக்காகும் செலவைத்தவிர (3,800 ரூபாய்), கூடுதலாக 1,500 ரூபாய்க்கு, வேறு பொருட்கள் வாங்கினால் மட்டுமே இணைப்பு வழங்குகின்றனர். இதனால், நுகர்வோர் ஒரு இணைப்பு பெறுவதற்கு அதிகபட்சமாக 5,300 ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்த கூடுதல் தொகைக்கு,...
தமிழகம்
வயிற்றுப் போக்கால் இறந்தவர் குடும்பங்களுக்கு நிதியுதவி
சென்னை:  தேனி மாவட்டத்தில் வயிற்றுப் போக்கு நோயினால் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் மகள் பவித்ரா (10). கருப்...
தமிழகம்
மதுரை பன்னாட்டு விமான நிலைய பணிகள் இரு மாதங்களில் முடியும்
பெருங்குடி: மதுரையில் ஒருங்கிணைந்த பன்னாட்டு விமான நிலைய டெர்மினல் கட்டடப் பணிகள் வரும் ஜூலையில் முடிந்து, சில மாதங்களில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலைய ரன்வே, ஆறாயிரம் அடி நீளத்தில், 150 அடி அகலத்தில் இருந்தது. பெரிய ரக விமானப் போக்குவரத்திற்கு வாய்ப்பு குறைவாக இருந்தது. ரன்வே விரிவாக்கப் பணியில், ந...
தமிழகம்
ஸ்பிக் உரத்தொழிற்சாலை ஜூலையில் திறக்கப்படுகிறது
தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் உரத்தொழிற் சாலை வரும் ஜூலையில் மீண்டும் திறக்கப்படவுள்ளது. இங்கு உர உற்பத்தியை துவக்குவதற்கு ஏதுவாக, அமோனியா வேதிப்பொருள், தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது. ஸ்பிக் தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தி துவக்கப்படுவதன் மூலம், தமிழக விவசாயிகள் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஸ்பிக...
தமிழகம்
இமயமலையில் மாணவிகள் ஏற துணை முதல்வர் நிதி உதவி
சென்னை: இமயமலை தொடரிலுள்ள, அனுமன் டிப்பா சிகரத்தில் ஏறி சாதனை படைக்க இருக்கும் தமிழக மாணவிகளுக்கு, மூன்று லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க, துணை முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். துணை முதல்வரின் இணையதளத்திற்கு, இ-மெயிலில் வரும் கோரிக்கை மனுக்கள் தினமும் பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படு...
தமிழகம்
பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்
சேலம்: பால் கொள்முதல் விலையை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த உற்பத்தியாளர்கள், நேற்று மாலை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர். பால் கொள்முதல் விலையை ஐந்து ரூபாய் உயர்த்த வேண்டும், வறட்சி காலத்தை கருத்தில் கொண்டு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்பது உள் ளி...
தமிழகம்
ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு
சேலம்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 1 முதல் ஜூலை 15ம் தேதி வரை, மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி மேற் கொள்ளப்பட உள்ளது. டில்லியிலிருந்து மக்கள் தொகை கணக் கெடுப்பு படிவங்கள், கையேடுகள் அனுப்பி வைக்கப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி, அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக சென்றடையவும், நாட்டில் வசிக...
தமிழகம்
வனப்பரப்பை அதிகரிக்க திட்டம்
மதுரை: தமிழகத்தில் உள்ள வனப்பரப்பை மேலும் அதிகரிக்க, வனத்துறை சார்பில் இந்த ஆண்டு பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மாநிலத்தில் 23,338 சதுர கி.மீ., பரப்பில் வனம் உள்ளது. 4,968 சதுர கி.மீ., பரப்பில் வனங்களுக்கு வெளியே மரங்கள் அமைந்துள்ளன. இதன்படி மொத்த வனவளம் மற்றும் மரப்பரப்பு 28,306 சதுர.கி.மீ., உள்ளது. செயற்கைகோள்...
தமிழகம்
தூத்துக்குடி - கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க சர்வே பணிகள் துவக்கம்
தூத்துக்குடி:  தூத்துக்குடி- கன்னியாகுமரி இடையே 119 கி.மீ., தூர இருவழி கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்கான, சர்வே பணிகள் துவங்கியுள்ளன. சென்னையிலிருந்து கடலோர மாவட்டங்கள் வழியாக கன்னியாகுமரிக்கு செல்ல இரு வழி, கிழக்கு கடற்கரை சாலை அமைக்க தமிழக நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. அதன்படி, சென்னையிலிருந்து கடலோர மாவட்டங்க...
தமிழகம்
மாநில போலீஸ் துப்பாக்கிசுடும் போட்டி வல்லநாட்டில் துவக்கம்
தூத்துக்குடி:  தூத்துக்குடி, வல்லநாடு போலீஸ் துப்பாக்கி சுடுதளத்தில், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினருக்கான, மாநில துப்பாக்கிச்சுடும் போட்டிகள் நேற்று துவங்கியது. திருச்சி, ஆவடி, வீராபுரம், கோவை புதூர்,மதுரை, போச்சம் பள்ளி,டில்லி, மணிமுத்தாறு, உளுந்தூர் பேட்டை, பழநி,ராஜபாளையம் உள்ளிட்ட 15 சிறப்பு போலீஸ் படைகளைச் சேர்ந...
தமிழகம்
விழுப்புரம் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிரக் அறிமுகம்
விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில், சரக்குகளை ஏற்றி இறக்க பேட்டரியால் இயங்கும் பிளாட்பார்ம் டிரக் பயன்படுத்தப்படுகிறது. விழுப்புரம் ரயில்வே நிலையத்தின் பல்வேறு பணிகளுக்காக, இத்துறை மூலம் பேட்டரியால் இயங்கக்கூடிய பிளாட்பார்ம் டிரக் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இரண்டு டன் எடை ஏற்றக்கூடிய இந்த டிரக்கில் ர...
தமிழகம்
பச்சைக் கல் சிவலிங்கம் பாலாற்றில் மீட்டெடுப்பு
வேலூர்: பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த, ஆறு அடி உயரமுள்ள பச்சைக்கல் சிவலிங்கம், வேலூர் அருகே பாலாற்றில் கண்டெடுக்கப்பட்டது. வேலூர் அடுத்த கந்தனேரி அருகே பாலாற்றில், அரசு மணல் குவாரி உள்ளது. இங்கு  மணல் அள்ளிக் கொண்டிருந்த போது, அதிகளவு எடை கொண்ட சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. வேலூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட...
தமிழகம்
பெண் குழந்தையை தவிக்க விட்டுச் சென்ற தாய்: கண்டுபிடிக்க கோரி கோர்ட்டில் மாமனார் மனு
புதுடில்லி: தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை, கணவரின் சகோதரி வீட்டில் தவிக்க விட்டு, விட்டுச் சென்ற பெண்ணை தேடி கண்டுபிடிக்குமாறு, போலீசாருக்கு டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. டில்லியைச் சேர்ந்தவர் பல்தேவ் சிங். இவரது மகன் பிரீத்தம் சிங். ப்ரீத்தம் சிங்கிற்கும், ராஜிந்தர் கவுர் என்ற பெண்ணுக்கும் 2008 பிப்ரவரியில் திருமண...
தமிழகம்
சிங்கமுத்துவை ஜாமீனில் விடுவிக்க சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவு
சென்னை: சிரிப்பு நடிகர் வடிவேலுவின் மேனேஜரை மிரட்டிய வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் சிங்கமுத்துவை நிபந்தனையுடன் கூடிய ஜாமீனில் விடுவிக்க, சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சிங்கமுத்து மீது நிலமோசடி புகாரை போலீசில், நடிகர் வடிவேலு கொடுத்தார். பதிலுக்கு சிங்கமுத்துவும் புகார் கொடுத்தா...
தமிழகம்
கைதி மீது சேலம் சிறையில் தாக்குதல்: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: கோர்ட்டில் ஆஜர்படுத்த கொண்டு சென்ற கைதியை, சேலம் சிறையில் வைத்து தாக்கியதாக கூறப்படும் புகார் குறித்து பதிலளிக்குமாறு, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் இருப்பவர் மைனர் குரோஸ் என்கிற வேங்கடகிரியப்பா. சென்னை ஐகோர்ட்டில் இவர் தாக்கல் செய்த மனு: என் மீது மூன்று வ...
இந்தியா
ஆந்திர கடலோர பகுதியில் கனமழை; பயங்கர காற்று : புயல் வலுவிழந்தது
சென்னை : வங்ககடலில் உருவான லைலா புயல் வலுவிழந்த நிலையில், ஆந்திர கடற்கரையை தாக்கியது. இதன் காரணமாக அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கடும் காற்றும் வீசி வருகிறது. லைலா புயல் வலுவிழந்து விட்டதால் பெரும் மழை மட்டுமே இருக்கும் என்றும் பெரிய அளவில் சேதம் ஏதும் இருக்காது என தற்போதைய நிலவரப்படி வானிலை ஆராய்ச்சியாளர்கள் நம்...
தமிழகம்
மரண வாசலை தொட்டுத் திரும்பிய அதிர்ஷ்டக்கார ஜோசியர்
மதுரை : நேற்று காலை 11 மணி... வெயில் அனலாய் தகித்துக்கொண்டு இருந்தது... மதுரையின் மற்ற சாலைகளைப் போலவே, அழகர்கோவில் ரோடும் பரபரப்பாக இருந்தது. தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகே ஒரு முதியவர் திடீரென ரோட்டை கடக்க முயன்றார்.கண் இமைக்கும் நேரத்தில் அங்கு வந்தது ஒரு தாழ்தள பஸ். முதியவர் திடீரென ரோட்டை கடக்க முயல்வதை எதிர்பார...
தமிழகம்
இன்ஜினியரிங் கல்லூரியில் சேர தகுதி மதிப்பெண் 5 சதவீதம் குறைப்பு : கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று 5 சத
சென்னை : பொறியியல் படிப்பில் சேர பொதுப்பிரிவினர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரசு புது சலுகையை அறிவித்துள்ளது. குறைந்த பட்ச தகுதிமதிப்பெண் இந்த பிரிவினருக்கு 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: "தம...
தமிழகம்
அதிகாரிகள் அலட்சியத்தால் வீதிக்கு வந்த மீனவ குடும்பங்கள்
நாகப்பட்டினம் : நாகையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு, நிரந்தர குடியிருப்புகளை வழங்கியதில், அதிகாரிகள் குளறுபடியால் 16 மீனவ குடும்பங்கள், குழந்தைகள், வீட்டு உபயோக பொருட்களுடன் இரண்டு நாட்களாக கொட்டும் மழையில் நனைந்து கொண்டிருக்கின்றனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில், தொண்டு நிறுவனங்கள் சார்பில் 1...
இந்தியா
ஆர்வம் இருந்தா நிறைய சம்பாதிக்கலாம் :
சிப்பியில் பொம்மை செய்யும் ரமணி: எனக்கு சின்ன வயசுல இருந்தே கை வேலைப்பாடுகள்ல ஆர்வம் அதிகம். அதனால் தான் பத்தாம் வகுப்பு முடிச்ச உடனே டெய்லரிங்ல டிப்ளமோ பண் ணேன்.எங்க வீட்டுப் பக்கம் உள்ள மகளிர் குழுவுல சேர்ந்தேன். அந்த குழுவுல தான் இந்த சிப்பி பொம் மைகள் செய்யும் தொழில் கத்துக்கிட் டேன்.இது ரொம்ப சுலபமான தொழில், நான்க...
General
லைலா புயலுக்கு பெயர் வைத்தது பாகிஸ்தான்
‌சென்னை : புயல் என்று வந்து விட்டால் நிஷா, கத்ரீனா, லைலா என பெண்கள் பெயர் தான் வைக்கப்படுகிறது. புயலுக்கு எப்படி பெயர் வைக்கிறார்கள் என்பது குறித்து ஸ்வாரஸ்‌ய தகவல் இதோ. சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் துணை இயக்குநர் ராஜ் கூறுகையில் : வங்கக் கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் வைக்கும் வழக்கம் கடந்த 2004 ...
இந்தியா
நெல்லையில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட எரிசாராயம் பறிமுதல்
திருநெல்வேலி : நெல்லையில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். நெல்லை மாவட்டம் புளியரை செக்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒர லாரியை சோதனை செய்தனர். ஈரோட்டில் இருந்து வந்த அந்த லாரியில் வெங்காயம் இருந்தது. வெங்காய மூடைகளுக்கு கீழ் 207 கேன்களில் எரிசாராயம் இருந்தது கண்ட...
இந்தியா
பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம்
மும்பை : பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் காணப்படுகிறது. காலை 9.30 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 129.16 புள்ளிகள் அதிகரித்து 16537.65 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 38.50 புள்ளிகள் அதிகரித்து 4958.15 புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது.
தமிழகம்
பாராட்டு விழா
சென்னை: சென்னை அண்ணா பல்கலைகழக்தின் சார்பில் தைவான் நாட்டு கவிஞர் யூ ஷிக்கு பாராட்டு விழா நடந்தது, நிகழ்ச்சியில் புத்தர் சிலையை கவிஞர் யூ ஷீக்கு பரிசளித்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடன் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி மோகன் மற்றும் அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மன்னர் ஜவகர்
தமிழகம்
பட்டமளிப்பு விழா
கோவை: கல்வி மிக முக்கியமானதாக கருதப்படுவதால், கட்டாயக் கல்வித் திட்டம் அடிப்படை மனித உரிமை என்ற அந்தஸ்தை அடைந்துள்ளது என்று சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் தெரிவித்தார். கோவை இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கி அவர் மேலும் பேசுகையில், அதே நேரத...
இந்தியா
திருவெண்ணைநல்லூரில் தீ : 15 கடைகள் எரிந்து சேதம்
திருவெண்ணைநல்லூர் : விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதி கூட்டு ரோட்டில் வரிசையாக நிறைய கடைகள் இருக்கின்றன. ‌இன்று அதிகாலை 1.30 மணியளவில் அங்கிருக்கும் 15 கடைகளில் தீ பிடித்தது. தீ மளமளவென எரிந்ததில் 15 கடைகளும் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் சம்பவம் குறித்து வழக்கு ப...
இந்தியா
ஆந்திராவில் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டது
ஐதராபாத் : லைலா புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆந்திராவில் மசூலிப்பட்டினம், ஓங்கோல் ஆகிய கரையோர பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 30,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆந்தி...
இந்தியா
பீகாரில் சரக்கு ரயிலுக்கு தீ வைப்பு : நக்சல்கள் அட்டகாசம்
பாட்னா : பீகாரில் மோதியாரி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் தண்டவாளத்தை குண்டு வைத்து தகர்த்ததோடு சரக்கு ரயில் பெட்டிக்கும் தீ வைத்தனர். தீ வைக்கப்பட்ட பெட்டியில் பெட்ரோல் இருந்ததால் தீ அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவியது. 15 டீசல் டேங்கர்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. தீ இன்னும் அணைக்கப்படவில்லை. இதனால் அந்த பாதையில் போக்...
இந்தியா
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பு
சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் ஜூன் டெலிவரிக்கான விலை பேரல் ஒன்றுக்கு 1 சென்டு அதிகரித்து 70.96 அமெரிக்க டாலராக இருந்தது. பிரண்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய்யின் விலை 37 சென்டுகள் அதிகரித்து 74.06 அமெரிக்க டாலராக இருந்தது.
இந்தியா
ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு
புதுடில்லி : நேற்று 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது உயர்ந்தது. இன்று காலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் அதிகரித்து 46.23 ஆக இருந்தது.
இந்தியா
மின் கட்டணம் உயரும் : அமைச்சர் ஷிண்டே அறிவிப்பு
புதுடில்லி : காஸ் விலை அதிகரித்துள்ளதால் மின் கட்டணம் யூனிட்டுக்கு 1 ரூபாய் வரை அதிகரிக்கும் என மத்திய மின்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
இந்தியா
இன்று மாலை கரையை கடக்கிறது லைலா புயல்
சென்னை : சென்னைக்கு கிழக்கு மற்றும் வடமேற்கு திசையில், 190 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ள லைலா புயல், இன்று மாலை நெல்லூருக்கும், காக்கிநாடாவிற்கும் இடையே கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக் கடலில் புதிதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது...
இந்தியா
கள் விற்பனைக்கான தடையை நீக்க கோரிக்கை
கோபி : தமிழகத்தில் கள் விற்பனைக்கு கடந்த 23 ஆண்டுகளாக தடை இருந்து வருகிறது. இந்நிலையில் கள் விற்பனைக்கான தடையை நீக்க வேண்டும் என தமிழக கள் விற்பனை ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக அரசு உடனடியாக கள் விற்பனை மீதான தடையை நீக்க வேண்டும். அவ்வாறு த...